4891. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَمْتَحِنُ مَنْ هَاجَرَ إِلَيْهِ مِنَ الْمُؤْمِنَاتِ بِهَذِهِ الآيَةِ، بِقَوْلِ اللَّهِ {يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ} إِلَى قَوْلِهِ {غَفُورٌ رَحِيمٌ}. قَالَ عُرْوَةُ قَالَتْ عَائِشَةُ فَمَنْ أَقَرَّ بِهَذَا الشَّرْطِ مِنَ الْمُؤْمِنَاتِ قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قَدْ بَايَعْتُكِ ". كَلاَمًا وَلاَ وَاللَّهِ مَا مَسَّتْ يَدُهُ يَدَ امْرَأَةٍ قَطُّ فِي الْمُبَايَعَةِ، مَا يُبَايِعُهُنَّ إِلاَّ بِقَوْلِهِ " قَدْ بَايَعْتُكِ عَلَى ذَلِكَ ". تَابَعَهُ يُونُسُ وَمَعْمَرٌ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ عَنِ الزُّهْرِيِّ. وَقَالَ إِسْحَاقُ بْنُ رَاشِدٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ وَعَمْرَةَ.
பாடம்: 2 இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் புலம்பெயர்ந்து உங்களிடம் வந்தால் (என்று தொடங்கும் 60:10ஆவது இறைவசனம்)
4891. நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இந்த (60:10-12ஆவது) வசனங்களின் ஆணைக்கேற்ப அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிóருந்து) புலம்பெயர்ந்து தம்மிடம் வந்த இறைநம்பிக்கை கொண்ட பெண்களைப் பரிசோதனை செய்துவந்தார்கள்.

இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்தனையை இறைநம்பிக்கை கொண்ட பெண்களில் எவர் ஏற்றுக்கொண்டாரோ அவரிடம், ‘‘உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்” என்று பேச்சால் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களது கரம், விசுவாசப் பிரமாணம் வாங்கும்போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. பெண்களிடம், ‘‘நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்” என்று அவர்கள் வாய்மொழியாகவே தவிர வேறெந்த முறையிலும் விசுவாசப் பிராமணம் வாங்கியதில்லை.3

இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4892. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ بَايَعْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَرَأَ عَلَيْنَا {أَنْ لاَ يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا} وَنَهَانَا عَنِ النِّيَاحَةِ، فَقَبَضَتِ امْرَأَةٌ يَدَهَا فَقَالَتْ أَسْعَدَتْنِي فُلاَنَةُ أُرِيدُ أَنْ أَجْزِيَهَا. فَمَا قَالَ لَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم شَيْئًا فَانْطَلَقَتْ وَرَجَعَتْ فَبَايَعَهَا.
பாடம்: 3 நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தார்களாயின் (என்று தொடங்கும் 60:12ஆவது இறைவசனம்)
4892. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (மகளிர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிராமணம் செய்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர்கள் அல்லாஹ்வுடன் எதையும் இணைவைக்கமாட்டார்கள்” எனும் (60:12ஆவது) இறைவசனத்தை எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள். மேலும், (இறந்தவர்களுக்காக) ஒப்பாரிவைத்து அழ வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள்.

அப்போது (நபிகளாரிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக, அவர்களை நோக்கிச் சமிக்ஞை செய்யும் வகையில் கையை நீட்டிய) ஒரு பெண்மணி தமது கையைப் பின்னால் இழுத்துக்கொண்டார். மேலும், அவர், ‘‘இன்னவள் (என்னுடன் சேர்ந்து என் உறவினர் ஒருவருக்காக ஒப்பாரிவைத்து) எனக்கு உதவி புரிந்தாள். பதிலுக்கு (அவளுடன் சேர்ந்து நான் ஒப்பாரிவைத்து) அவளுக்கு உதவ விரும்புகிறேன்” என்று கூறினார். அவளுக்கு எந்தப் பதிலையும் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. அவள் சென்று (ஒப்பாரிவைத்து)விட்டுத் திரும்பி நபி (ஸல்) அவர்களிடம் வந்தாள். அப்போது, அவளிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றார்கள்.


அத்தியாயம் : 65
4893. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ الزُّبَيْرَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي قَوْلِهِ تَعَالَى {وَلاَ يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ} قَالَ إِنَّمَا هُوَ شَرْطٌ شَرَطَهُ اللَّهُ لِلنِّسَاءِ.
பாடம்: 3 நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தார்களாயின் (என்று தொடங்கும் 60:12ஆவது இறைவசனம்)
4893. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘எந்த ஒரு நற்செயலிலும், (நபியே!) உமக்கு அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்” எனும் (60:12ஆவது) இறைவசனத்தி(ன், விளக்கவுரையி)ல், ‘‘இதுவும் பெண்கள்மீது அல்லாஹ் விதித்த நிபந்தனைகளில் ஒன்றாகும்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.4


அத்தியாயம் : 65
4894. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ الزُّهْرِيُّ حَدَّثَنَاهُ قَالَ حَدَّثَنِي أَبُو إِدْرِيسَ، سَمِعَ عُبَادَةَ بْنَ الصَّامِتِ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " أَتُبَايِعُونِي عَلَى أَنْ لاَ تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا وَلاَ تَزْنُوا وَلاَ تَسْرِقُوا ". وَقَرَأَ آيَةَ النِّسَاءِ ـ وَأَكْثَرُ لَفْظِ سُفْيَانَ قَرَأَ الآيَةَ ـ " فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ فَهُوَ كَفَّارَةٌ لَهُ، وَمَنْ أَصَابَ مِنْهَا شَيْئًا مِنْ ذَلِكَ فَسَتَرَهُ اللَّهُ فَهْوَ إِلَى اللَّهِ، إِنْ شَاءَ عَذَّبَهُ وَإِنْ شَاءَ غَفَرَ لَهُ} ". تَابَعَهُ عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ فِي الآيَةِ.
பாடம்: 3 நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தார்களாயின் (என்று தொடங்கும் 60:12ஆவது இறைவசனம்)
4894. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள், ‘‘அல்லாஹ்விற்கு எதையும் இணை கற்பிக்கமாட்டீர்கள்; விபசாரம் புரியமாட்டீர்கள்; திருடமாட்டீர்கள் என்று எனக்கு உறுதிமொழி அளிப்பீர்களா?” என்று கேட்டுவிட்டுப் பெண்கள் பற்றிய (60:12ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களின் கூடுதலான அறிவிப்பில் ‘‘அந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள்” என்றே காணப்படுகிறது. (‘பெண்கள் பற்றிய வசனம்’ என்று காணப்படவில்லை.) தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் எவர் (இந்த உறுதிமொழியை) நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய பிரதிபலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். மேற்கூறப்பட்ட (விபசாரம் முதலான)வற்றில் எதையாவது ஒருவர் செய்து அதற்காக (இவ்வுலகில் இஸ்லாமியச் சட்டப்படி) அவர் தண்டிக்கப்பட்டுவிட்டால், அதுவே அவருக்குப் பரிகாரமாகிவிடும்.

மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால், அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரை வேதனை செய்வான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்” என்று சொன்னார்கள்.5

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 65
4895. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ وَأَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، أَنَّ الْحَسَنَ بْنَ مُسْلِمٍ، أَخْبَرَهُ عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ شَهِدْتُ الصَّلاَةَ يَوْمَ الْفِطْرِ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ فَكُلُّهُمْ يُصَلِّيهَا قَبْلَ الْخُطْبَةِ ثُمَّ يَخْطُبُ بَعْدُ، فَنَزَلَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم فَكَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ حِينَ يُجَلِّسُ الرِّجَالَ بِيَدِهِ، ثُمَّ أَقْبَلَ يَشُقُّهُمْ حَتَّى أَتَى النِّسَاءَ مَعَ بِلاَلٍ فَقَالَ {يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لاَ يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلاَ يَسْرِقْنَ وَلاَ يَزْنِينَ وَلاَ يَقْتُلْنَ أَوْلاَدَهُنَّ وَلاَ يَأْتِينَ بِبُهْتَانٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ} حَتَّى فَرَغَ مِنَ الآيَةِ كُلِّهَا ثُمَّ قَالَ حِينَ فَرَغَ " أَنْتُنَّ عَلَى ذَلِكَ ". وَقَالَتِ امْرَأَةٌ وَاحِدَةٌ لَمْ يُجِبْهُ غَيْرُهَا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ، لاَ يَدْرِي الْحَسَنُ مَنْ هِيَ. قَالَ " فَتَصَدَّقْنَ " وَبَسَطَ بِلاَلٌ ثَوْبَهُ فَجَعَلْنَ يُلْقِينَ الْفَتَخَ وَالْخَوَاتِيمَ فِي ثَوْبِ بِلاَلٍ.
பாடம்: 3 நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தார்களாயின் (என்று தொடங்கும் 60:12ஆவது இறைவசனம்)
4895. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அப்போது அவர்கள் அனைவரும் உரை (குத்பா) நிகழ்த்துவதற்குமுன் தொழுபவர்களாக இருந்தனர். அதன் பிறகே உரை நிகழ்த்துவார்கள். (உரை முடிந்தபின்) நபி (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையிலிருந்து) இறங்கி, மக்களைத் தமது கையால் அமரச் செய்ததை இன்றும் நான் (என் கண்ணெதிரே) காண்பதுபோல் உள்ளது. பிறகு ஆண்(களின் வரிசை)களைப் பிளந்துகொண்டு பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள்.

அப்போது, ‘‘நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்து, அவர்கள் அல்லாஹ்வுடன் எதையும் இணைவைக்கமாட்டார்கள் என்றும், திருடமாட்டார்கள் என்றும், விபசாரம் செய்யமாட்டார்கள் என்றும், தம்முடைய குழந்தைகளைக் கொல்லமாட்டார்கள் என்றும், தங்கள் கை கால்களுக்கிடையே எந்த அவதூறையும் இட்டுக்கட்டமாட்டார்கள் என்றும், எந்த ஒரு நற்செயலிலும் உமக்கு மாறு செய்யமாட்டார்கள் என்றும் வாக்குறுதி அளித்தால், அப்போது அவர்களிடமிருந்து விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொள்ளும். மேலும், அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரும். நிச்சயமாக, அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும், மிகுந்த கருணையாளனும் ஆவான்” எனும் (60:12ஆவது) இறைவசனம் முழுவதையும் ஓதிமுடித்துவிட்டு, ‘‘இந்த உறுதிமொழியில் நீங்கள் நிலையாக இருப்பீர்களா?” என்று கேட்டார்கள்.

ஒரேயொரு பெண்மணி மட்டும், ‘‘ஆம் (நீடிப்போம்), அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அவரைத் தவிர வேறெவரும் நபி (ஸல்) அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. -அந்தப் பெண் யாரென்று (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹசன் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்களுக்குத் தெரியவில்லை- அப்பெண்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் தர்மம் செய்யுங்கள்!” என்று சொன்னார்கள்.

பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையை விரித்தார்கள். அப்போது மோதிரங்களையும் மெட்டிகளையும் அப்பெண்கள் பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போடலானார்கள்.6

அத்தியாயம் : 65
4896. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ لِي أَسْمَاءً، أَنَا مُحَمَّدٌ، وَأَنَا أَحْمَدُ، وَأَنَا الْمَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِيَ الْكُفْرَ، وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي، وَأَنَا الْعَاقِبُ ".
பாடம்: 61. ‘அஸ்ஸஃப்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (61:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மன் அன்சாரீ இலல்லாஹ்’ (இறைவழியில் எனக்கு உதவி புரிபவர் யார்?) என்பதன் கருத்தாவது: இறைவழியில் என்னைப் பின்பற்றி நடப்பவர் யார்? இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (61:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மர்ஸூஸ்’ எனும் சொல்லுக்கு ‘ஒன்றோ டொன்று (வலுவுடன்) இணைக்கப்பட்டது” என்பது பொருள். மற்றவர்கள் கூறுகி றார்கள்: ‘மர்ஸூஸ்’ என்பதற்கு ‘ஈயத்தால் வார்க்கப்பட்டது’ என்பது பொருள். பாடம்: 1 ‘‘எனக்குப் பிறகு ‘அஹ்மத்’ எனும் பெயருடைய தூதர் ஒருவர் வருவார் (என ஈசா கூறினார்)” எனும் (61:6ஆவது) வசனத்தொடர்
4896. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்குப் பல பெயர்கள் உண்டு; நான் ‘முஹம்மத்’ (புகழப்பட்டவர்) ஆவேன். இன்னும் நான் ‘அஹ்மத்’ (இறைவனை அதிகம் புகழ்பவர்) ஆவேன். நான் ‘மாஹீ’ (அழிப்பவர்) ஆவேன்; அல்லாஹ் என் மூலம் இறைமறுப்பை அழிப்பான். நான் ‘ஹாஷிர்’ (ஒருங்கிணைப்பவர்) ஆவேன்; என் தலைமையின் கீழ் மக்கள் ஒருங்கிணைக்கப்படுவார்கள்; நான் ‘ஆகிப்’ (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன்.

இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2

அத்தியாயம் : 65
4897. حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ ثَوْرٍ، عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْجُمُعَةِ {وَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا بِهِمْ} قَالَ قُلْتُ مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ فَلَمْ يُرَاجِعْهُ حَتَّى سَأَلَ ثَلاَثًا، وَفِينَا سَلْمَانُ الْفَارِسِيُّ، وَضَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ عَلَى سَلْمَانَ ثُمَّ قَالَ " لَوْ كَانَ الإِيمَانُ عِنْدَ الثُّرَيَّا لَنَالَهُ رِجَالٌ ـ أَوْ رَجُلٌ ـ مِنْ هَؤُلاَءِ ".
பாடம்: 62. ‘அல்ஜுமுஆ’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) பாடம்: 1 ‘‘இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக் காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)” எனும் (62:3ஆவது) வசனத்தொடர் (62:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘ஃபஸ்அவ் இலா திக்ரில்லாஹ்’ -அல்லாஹ்வை நினைவுகூர விரையுங்கள் என்பதை) உமர் (ரலி) அவர்கள், ‘ஃபம்ளூ இலா திக்ரில்லாஹ்’ (அல்லாஹ்வை நினைவுகூரச் செல்லுங்கள்) என்று ஓதி னார்கள்.
4897. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒரு சமயம்) நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுக்கு ‘அல்ஜுமுஆ’ எனும் (62ஆவது) அத்தியாயத்தில், ‘‘இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)” எனும் (3ஆவது) வசனம் அருளப்பெற்றது.

அப்போது, ‘‘அந்த (ஏனைய) மக்கள் யார்?, அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கேட்டேன். நான் மூன்று முறை கேட்டும் அவர்கள் (எனக்கு) பதிலளிக்கவில்லை. எங்களிடையே சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சல்மான் (ரலி) அவர்கள் மீது தமது கரத்தை வைத்தார்கள். பிறகு, கிருத்திகா (ஸுரய்யா) நட்சத்திரக் கூட்டத்தின் அருகில் இறைநம்பிக்கை இருந்தாலும் ‘சில மனிதர்கள்’ அல்லது ‘இவர்களில் ஒருவர்’ அதை அடைந்தே தீருவார்” என்று கூறினார்கள்.2


அத்தியாயம் : 65
4898. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، أَخْبَرَنِي ثَوْرٌ، عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم " لَنَالَهُ رِجَالٌ مِنْ هَؤُلاَءِ ".
பாடம்: 62. ‘அல்ஜுமுஆ’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) பாடம்: 1 ‘‘இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக் காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)” எனும் (62:3ஆவது) வசனத்தொடர் (62:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘ஃபஸ்அவ் இலா திக்ரில்லாஹ்’ -அல்லாஹ்வை நினைவுகூர விரையுங்கள் என்பதை) உமர் (ரலி) அவர்கள், ‘ஃபம்ளூ இலா திக்ரில்லாஹ்’ (அல்லாஹ்வை நினைவுகூரச் செல்லுங்கள்) என்று ஓதி னார்கள்.
4898. அபுல்ஃகைஸ் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், ‘‘இவர்களில் சில மனிதர்கள் இதை அடைந்தே தீருவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 65
4899. حَدَّثَنِي حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حُصَيْنٌ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، وَعَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ أَقْبَلَتْ عِيرٌ يَوْمَ الْجُمُعَةِ وَنَحْنُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَثَارَ النَّاسُ إِلاَّ اثْنَا عَشَرَ رَجُلاً فَأَنْزَلَ اللَّهُ {وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا}
பாடம்: 2 அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கையையோ பார்த்துவிட்டால், அவற்றின் பக்கம் விரைந்து சென்றுவிடுகின்றனர் (எனும் 62:11ஆவது வசனத்தொடர்)
4899. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ தொழுகை யில்) இருந்தபோது, (வியாபாரத்திற்காக உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு) ஒட்டகக் குழு ஒன்று வந்தது. (அதைக் கண்ட மாத்திரத்தில், நபிகளாரின் முன்னிலையிலிருந்த மக்கள்) கலைந்து சென்றுவிட்டனர். பன்னிரண்டு பேரே எஞ்சியிருந்தனர்.

அப்போதுதான் ‘‘அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கையையோ கண்டுவிட்டால் அவற்றின் பக்கம் விரைந்து சென்றுவிடுகின்றனர்” எனும் (62:11ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.3

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4900. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ كُنْتُ فِي غَزَاةٍ فَسَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ، يَقُولُ لاَ تُنْفِقُوا عَلَى مَنْ عِنْدَ رَسُولِ اللَّهِ حَتَّى يَنْفَضُّوا مِنْ حَوْلِهِ وَلَوْ رَجَعْنَا مِنْ عِنْدِهِ لَيُخْرِجَنَّ الأَعَزُّ مِنْهَا. الأَذَلَّ فَذَكَرْتُ ذَلِكَ لِعَمِّي أَوْ لِعُمَرَ فَذَكَرَهُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَدَعَانِي فَحَدَّثْتُهُ فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى عَبْدِ اللَّهِ بْنِ أُبَىٍّ وَأَصْحَابِهِ فَحَلَفُوا مَا قَالُوا فَكَذَّبَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَصَدَّقَهُ فَأَصَابَنِي هَمٌّ لَمْ يُصِبْنِي مِثْلُهُ قَطُّ، فَجَلَسْتُ فِي الْبَيْتِ فَقَالَ لِي عَمِّي مَا أَرَدْتَ إِلَى أَنْ كَذَّبَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَقَتَكَ. فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ} فَبَعَثَ إِلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَرَأَ فَقَالَ " إِنَّ اللَّهَ قَدْ صَدَّقَكَ يَا زَيْدُ ".
பாடம்: 63. ‘அல்முனாஃபிகூன்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) பாடம்: 1 ‘‘(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வருகின்றபோது, ‘நிச்சயமாக, நீங்கள் அல்லாஹ் வின் தூதராவீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிக்கின்றோம்’ என்று கூறுகின்றனர். நிச்சயமாக, நீர் தன்னுடைய தூதர்தான் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயம் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சியம் அளிக்கின்றான்” எனும் (63:1ஆவது) இறைவசனம்
4900. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஓர் அறப்போரில் நான் இருந்து கொண்டிருந்தேன்.2 அப்போது, (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை (பின் சலூல்) என்பவன், ‘‘அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (முஹாஜிர்களுக்கு) செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்; அதனால், அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள்” என்று கூறிவிட்டுத் தொடர்ந்து, ‘‘நாம் இங்கிருந்து (மதீனாவுக்குத்) திரும்பினால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை மதீனாவிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்” என்று கூறினான்.

அவன் கூறியதை ‘(நான்) என் சிறிய தந்தை(யாக மதிக்கும் ஒருவர்) இடம்’ அல்லது ‘உமர் (ரலி) அவர்களிடம்’ கூறினேன். அவர் அதை நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். (நான் சென்று அவன் சொன்னதை) நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஆளனுப்பினார்கள். (அவர்கள் தம்மிடம் வந்தபோது அது குறித்து நபியவர்கள் வினவினார்கள்.) ‘‘நாங்கள் அவ்வாறு சொல்லவேயில்லை” என்று அவர்கள் சாதித்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் சென்னதை நம்ப மறுத்துவிட்டார்கள்; அப்துல்லாஹ் பின் உபை (சத்தியமிட்டுச்) சொன்னதை உண்மையென்று நம்பினார்கள். அப்போது, எனக்குக் கவலை ஏற்பட்டது. அது போன்ற கவலை (என் வாழ்நாளில்) ஒருபோதும் எனக்கு ஏற்பட்டதில்லை. பிறகு நான் என் வீட்டில் அமர்ந்துகொண்டிருந்தேன்.

அப்போது என் சிறிய தந்தை என்னிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன் மீது கோபம் கொள்ளும் அளவுக்குச் செல்வார்கள் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்று கூறினார்கள்.

அப்போது, ‘‘இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்றபோது” என்று தொடங்கும் இந்த (63:1ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது தம்மீது அருளப்பட்டிருந்த வசனத்தை எனக்கு) ஓதிக்காட்டினார்கள். பிறகு, ‘‘ஸைதே! அல்லாஹ் உம்மை உண்மைப்படுத்தி விட்டான் (நீர் சொன்னதை உண்மை என்று தெளிவுபடுத்திவிட்டான்)” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 65
4901. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ مَعَ عَمِّي فَسَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ ابْنَ سَلُولَ يَقُولُ لاَ تُنْفِقُوا عَلَى مَنْ عِنْدَ رَسُولِ اللَّهِ حَتَّى يَنْفَضُّوا. وَقَالَ أَيْضًا لَئِنْ رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ لَيُخْرِجَنَّ الأَعَزُّ مِنْهَا الأَذَلَّ. فَذَكَرْتُ ذَلِكَ لِعَمِّي فَذَكَرَ عَمِّي لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى عَبْدِ اللَّهِ بْنِ أُبَىٍّ وَأَصْحَابِهِ، فَحَلَفُوا مَا قَالُوا، فَصَدَّقَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَكَذَّبَنِي، فَأَصَابَنِي هَمٌّ لَمْ يُصِبْنِي مِثْلُهُ، فَجَلَسْتُ فِي بَيْتِي، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ} إِلَى قَوْلِهِ {هُمُ الَّذِينَ يَقُولُونَ لاَ تُنْفِقُوا عَلَى مَنْ عِنْدَ رَسُولِ اللَّهِ} إِلَى قَوْلِهِ {لَيُخْرِجَنَّ الأَعَزُّ مِنْهَا الأَذَلَّ} فَأَرْسَلَ إِلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَرَأَهَا عَلَىَّ ثُمَّ قَالَ " إِنَّ اللَّهَ قَدْ صَدَّقَكَ ".
பாடம்: 2 இவர்கள் தாங்கள் செய்யும் சத்தியங்களை (தங்களைத் தற்காத் துக்கொள்ளும்) கேடயமாக்கிக்கொண்டிருக்கின்றார்கள் (எனும் 63:2ஆவது வசனத்தொடர்)
4901. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சிறிய தந்தையாருடன் இருந்துகொண்டிருந்தேன். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பான், ‘‘அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (முஹாஜிர்களுக்கு) நீங்கள் செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் (அவரை விட்டு) விலகிச் சென்றுவிடுவார்கள்’ என்று சொல்வதையும், மேலும், ‘‘நாம் மதீனாவுக்குத் திரும்பினால் (எங்கள் இனத்தவர்களாகிய) கண்ணியவான்கள், இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை நகரிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்” என்று கூறுவதையும் நான் கேட்டேன்.

அதை நான் என் சிறிய தந்தையாரிடம் கூறினேன். அதை என் சிறிய தந்தை யார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபை மற்றும் அவனுடைய நண்பர்களுக்கு ஆளனுப்பினார்கள். அவர்கள் வந்து, ‘‘நாங்கள் அப்படிச் சொல்லவேயில்லை” என்று சத்தியம் செய்தனர். எனவே அவர்களை நம்பிவிட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (நம்ப) மறுத்துவிட்டார்கள்.

(என் வாழ்நாளில் அதற்குமுன்) இது போன்ற ஒரு கவலை ஏற்பட்டதேயில்லை எனும் அளவுக்கு என்னைக் கவலை ஆட்கொண்டது. ஆகவே, நான் எனது வீட்டில் (கவலையோடு) அமர்ந்திருந்தேன். அப்போது அல்லாஹ், ‘‘(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வருகின்றபோது” என்று தொடங்கி ‘‘ஆயினும், நயவஞ்சகர்கள் அறியமாட்டார்கள்” என்று முடியும் (63:1-8) வசனங்களை அருளினான்.

உடனே, எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். (நான் அவர்களிடம் சென்றபோது) அவற்றை எனக்கு ஓதிக்காட்டி, ‘‘ஸைதே! அல்லாஹ் உம்மை உண்மைப்படுத்திவிட்டான்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 65
4902. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ كَعْبٍ الْقُرَظِيَّ، قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ أَرْقَمَ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا قَالَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ لاَ تُنْفِقُوا عَلَى مَنْ عِنْدَ رَسُولِ اللَّهِ. وَقَالَ أَيْضًا لَئِنْ رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ. أَخْبَرْتُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَلاَمَنِي الأَنْصَارُ، وَحَلَفَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ مَا قَالَ ذَلِكَ، فَرَجَعْتُ إِلَى الْمَنْزِلِ فَنِمْتُ فَدَعَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَتَيْتُهُ فَقَالَ " إِنَّ اللَّهَ قَدْ صَدَّقَكَ ". وَنَزَلَ {هُمُ الَّذِينَ يَقُولُونَ لاَ تُنْفِقُوا} الآيَةَ. وَقَالَ ابْنُ أَبِي زَائِدَةَ عَنِ الأَعْمَشِ عَنْ عَمْرٍو عَنِ ابْنِ أَبِي لَيْلَى عَنْ زَيْدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 3 ‘‘இவை (அனைத்துக்கும் காரணம்), இவர்கள் (முதலில்) நம்பிக்கை கொண்டு பின்னர் மறுத்துவிட்டதுதான். இதனால் இவர்களின் உள்ளங்களில் முத்திரையிடப்பட்டுவிட்டது. இனி இவர்கள் எதையும் புரிந்துகொள்ள மாட்டார்கள்” எனும் (63:3ஆவது) இறைவசனம்
4902. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:.

(நயவஞ்கர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை, ‘‘அல்லாஹ் வின் தூதருடன் இருப்போருக்கு (முஹாஜிர்களுக்கு) நீங்கள் செலவழிக்காதீர் கள்” என்றும், ‘‘நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், ...” என்றும் கூறியபோது, அதை நான் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தேன். அப்போது என்னை அன்சாரிகள் கண்டித்தார்கள். அப்துல்லாஹ் பின் உபை, தான் அப்படிச் சொல்லவில்லை என்று சத்தியம் செய்தான். ஆகவே, நான் என் வீட்டிற்குத் திரும்பி வந்து தூங்கிவிட்டேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள் (எனத் தகவல் வந்தது). உடனே நான் அவர்களிடம் வந்தேன்.

அப்போது அவர்கள், ‘‘(ஸைதே!) அல்லாஹ் உம்மை உண்மைப்படுத்திவிட்டான்” என்று கூறினார்கள். மேலும், ‘‘இவர்கள்தான் ‘இறைத் தூதருடன் இருப்பவர்களுக்குச் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்’ என்று கூறினார்கள்...” எனும் (63:7ஆவது) வசனமும் அருளப்பெற்றது.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4903. حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ أَرْقَمَ، قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ أَصَابَ النَّاسَ فِيهِ شِدَّةٌ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ لأَصْحَابِهِ لاَ تُنْفِقُوا عَلَى مَنْ عِنْدَ رَسُولِ اللَّهِ حَتَّى يَنْفَضُّوا مِنْ حَوْلِهِ. وَقَالَ لَئِنْ رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ لَيُخْرِجَنَّ الأَعَزُّ مِنْهَا الأَذَلَّ. فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ فَأَرْسَلَ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ أُبَىٍّ فَسَأَلَهُ، فَاجْتَهَدَ يَمِينَهُ مَا فَعَلَ، قَالُوا كَذَبَ زَيْدٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَوَقَعَ فِي نَفْسِي مِمَّا قَالُوا شِدَّةٌ، حَتَّى أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ تَصْدِيقِي فِي {إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ} فَدَعَاهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم لِيَسْتَغْفِرَ لَهُمْ فَلَوَّوْا رُءُوسَهُمْ. وَقَوْلُهُ {خُشُبٌ مُسَنَّدَةٌ} قَالَ كَانُوا رِجَالاً أَجْمَلَ شَىْءٍ.
பாடம்: 4 (நபியே!) நீர் இவர்களைப் பார்த்தால், இவர்களின் உடல் அமைப்பு உம்மை வியப்பில் ஆழ்த்தும். இவர்கள் பேச ஆரம்பித்தால் நீர் இவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருந்துவிடுவீர். ஆனால், உண்மையில் இவர்கள் (சுவரில்) சாய்த்துவைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டைகளைப் போன்றவர்கள். இவர்கள் ஒவ்வோர் உரத்த சப்தத்தையும் தங்களுக்கு எதிரானதாய்க் கருதுகின்றனர். இவர்கள்தான் (கடும்) பகைவர்கள்; இவர்களைக் குறித்து எச்சரிக்கையோடு இருப்பீராக! அல்லாஹ் இவர்களை நாசமாக்கட்டும்! இவர்கள் எங்கே திசைமாறிச் சென்றுகொண்டிருக் கின்றனர்? (எனும் 63:4ஆவது இறைவசனம்)
4903. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திற்காகப் புறப்பட்டோம். அந்தப் பயணத்தில் (உணவுப் பற்றாக்குறையால்) மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை தம் நண்பர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதருடன் இருக்கும் இவர்களுக்கு நீங்கள் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள். அவர்கள் நபியிடமிருந்து விலகிச் சென்று விடுவார்கள்” என்றும், ‘‘நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள், இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர்” என்றும் சொன்னான்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, (அவன் சொன்னதை) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபைக்கு ஆளனுப்பினார்கள். (அவன் வந்தவுடன்,) அவனிடம் (அது குறித்துக்) கேட்டார்கள். தான் அப்படிச் செய்யவேயில்லை என்று அவன் சத்தியம் செய்து சாதித்தான்.

அன்சாரிகள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஸைத் பொய் சொல்லிவிட்டார்” என்று (என்னைப் பற்றிக்) கூறினார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதால் என் உள்ளத்தில் கடுமை(யான கவலை) ஏற்பட்டது.

அப்போது என் வாய்மையைக் குறிக்கும் வகையில், ‘‘(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வருகின்றபோது...” என்று தொடங்கும் (63:1ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த நயவஞ்சகர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர அவர்களை அழைத்தார்கள். (அவர்கள் அதற்கு இணங்காமல்) தங்கள் தலையைத் திருப்பிக்கொண்டார்கள்.

(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) ‘குஷுபும் முசன்னதா’ (சாய்த்துவைக்கப் பட்டிருக்கும் மரக்கட்டை) என்பது, அவர்கள் மிகவும் அழகானவர்களாக (வாட்டசாட்டமானவர்களாக) இருந்ததைக் குறிக்கிறது.

அத்தியாயம் : 65
4904. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ كُنْتُ مَعَ عَمِّي فَسَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ ابْنَ سَلُولَ، يَقُولُ لاَ تُنْفِقُوا عَلَى مَنْ عِنْدَ رَسُولِ اللَّهِ حَتَّى يَنْفَضُّوا، وَلَئِنْ رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ لَيُخْرِجَنَّ الأَعَزُّ مِنْهَا الأَذَلَّ. فَذَكَرْتُ ذَلِكَ لِعَمِّي، فَذَكَرَ عَمِّي لِلنَّبِيِّ صلى الله عليه وسلم {فَدَعَانِي فَحَدَّثْتُهُ، فَأَرْسَلَ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ أُبَىٍّ وَأَصْحَابِهِ فَحَلَفُوا مَا قَالُوا، وَكَذَّبَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم} وَصَدَّقَهُمْ، فَأَصَابَنِي غَمٌّ لَمْ يُصِبْنِي مِثْلُهُ قَطُّ، فَجَلَسْتُ فِي بَيْتِي وَقَالَ عَمِّي مَا أَرَدْتَ إِلَى أَنْ كَذَّبَكَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَمَقَتَكَ. فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ قَالُوا نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ} وَأَرْسَلَ إِلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَرَأَهَا وَقَالَ " إِنَّ اللَّهَ قَدْ صَدَّقَكَ ".
பாடம்: 5 ‘‘வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரி இறைஞ்சுவார் என்று அவர்களிடம் கூறப்பட்டால், (அவர்கள்) தங்களது தலையைத் திருப்பிக்கொள்கிறார்கள். மேலும், அவர்கள் பெரும் ஆணவத்தால் அலட்சியப்படுத்துவதை (நபியே!) நீர் காண்பீர்” எனும் (63:5ஆவது) இறைவசனம் (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லவ்வவ்’ (தலையைத் திருப்பிக்கொண்டார்கள்) எனும் சொல், ‘தங்கள் தலையை அசைத்த வண்ணம் அவர்கள் நபியைப் பரிகாசம் செய்ததைக் குறிக்கின்றது. (இதே சொல்லை இன்னோர் ஓதல் முறையில்) ‘லவய்த்து’ எனும் வினைச்சொல்óóருந்து அழுத்தமில்லாமல் (‘லவவ்’ என்று) ஓதப்படுகிறது.
4904. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சிறிய தந்தையாருடன் இருந்துகொண்டிருந்தேன். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பான், ‘‘அல்லாஹ்வின் தூதருடன் இருப்போருக்கு (முஹாஜிர்களுக்கு) நீங்கள் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள். அவர்கள் (அவரிடமிருந்து) விலகிச் சென்றுவிடுவர். நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து நிச்சயம் வெளியேற்றிவிடுவர்” என்று கூறுவதை நான் கேட்டேன்.

அதை நான் என் சிறிய தந்தையாரிடம் கூறினேன். என் சிறிய தந்தையார் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள். (ஆனால்,) அப்துல்லாஹ்வையும் அவனுடைய ஆட்களையும் உண்மையாளர்கள் என நபியவர்கள் நம்பினார்கள். பின்னர், என்னை அழைத்(து விசாரித்)தார்கள். நான் அவர்களிடம் (நடந்ததை) எடுத்துரைத்தேன்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபை மற்றும் அவனுடைய நண்பர்களுக்கு ஆளனுப்பினார்கள். அவர்கள் வந்து, ‘‘நாங்கள் அப்படிச் சொல்லவேயில்லை” என்று சத்தியம் செய்தனர். (அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நம்பினார்கள்.) என்னை நம்ப மறுத்துவிட்டார்கள். (என் வாழ்நாளில்) அதற்குமுன் இது போன்ற ஒரு கவலை ஏற்பட்டதே இல்லை எனும் அளவுக்கு என்னைக் கவலை ஆட்கொண்டது.

ஆகவே, நான் எனது வீட்டில் (கவலையோடு) அமர்ந்தேன். என் சிறிய தந்தையார் (என்னிடம்), ‘‘நபி (ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன்மீது கோபமடையும் அளவுக்குச் செல்வார்கள் என நான் நினைக்கவில்லை” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், ‘‘(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வருகின்றபோது, நிச்சயமாக, நீங்கள் அல்லாஹ்வின் தூதராவீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிக்கின்றோம் என்று கூறுகின்றனர்” எனும் (63:1ஆவது) வசனத்தை அருளினான்.

உடனே எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். (நான் அவர்களிடம் சென்றபோது) அந்த வசனத்தை எனக்கு ஓதிக்காட்டினார்கள். பிறகு, ‘‘ஸைதே! அல்லாஹ் உம்மை உண்மைப்படுத்திவிட்டான்” என்று கூறினார்கள்.3

அத்தியாயம் : 65
4905. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا فِي غَزَاةٍ ـ قَالَ سُفْيَانُ مَرَّةً فِي جَيْشٍ ـ فَكَسَعَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ رَجُلاً مِنَ الأَنْصَارِ فَقَالَ الأَنْصَارِيُّ يَا لَلأَنْصَارِ. وَقَالَ الْمُهَاجِرِيُّ يَا لَلْمُهَاجِرِينَ. فَسَمِعَ ذَاكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " مَا بَالُ دَعْوَى جَاهِلِيَّةٍ " قَالُوا يَا رَسُولَ اللَّهِ كَسَعَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ رَجُلاً مِنَ الأَنْصَارِ. فَقَالَ " دَعُوهَا فَإِنَّهَا مُنْتِنَةٌ ". فَسَمِعَ بِذَلِكَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ فَقَالَ فَعَلُوهَا، أَمَا وَاللَّهِ لَئِنْ رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ لَيُخْرِجَنَّ الأَعَزُّ مِنْهَا الأَذَلَّ. فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَامَ عُمَرُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ دَعْنِي أَضْرِبْ عُنُقَ هَذَا الْمُنَافِقِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " دَعْهُ لاَ يَتَحَدَّثُ النَّاسُ أَنَّ مُحَمَّدًا يَقْتُلُ أَصْحَابَهُ " وَكَانَتِ الأَنْصَارُ أَكْثَرَ مِنَ الْمُهَاجِرِينَ حِينَ قَدِمُوا الْمَدِينَةَ، ثُمَّ إِنَّ الْمُهَاجِرِينَ كَثُرُوا بَعْدُ. قَالَ سُفْيَانُ فَحَفِظْتُهُ مِنْ عَمْرٍو قَالَ عَمْرٌو سَمِعْتُ جَابِرًا كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 6 ‘‘(நபியே!) நீர் இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரினாலும் கோராவிட்டாலும் இவர்களைப் பொறுத்து (இரண்டும்) சமம்தான். அல்லாஹ் இவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டான். பாவிகளான மக்களை அல்லாஹ் ஒருபோதும் நல்வழியில் செலுத்தமாட்டான்” எனும் (63:6ஆவது) இறைவசனம்
4905. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ‘ஒரு போரில்’ அல்லது ‘ஒரு படையில்’ இருந்துகொண்டிருந்தோம். முஹாஜிர்களில் ஒரு மனிதர் அன்சாரிகளில் ஒருவரைப் புட்டத்தில் அடித்துவிட்டார்.4 அப்போது (அடி வாங்கிய) அன்சாரீ, ‘‘அன்சாரிகளே! (உதவுங்கள்.)” என்று கூறினார். அந்த முஹாஜிர், ‘‘முஹாஜிர்களே! உதவுங்கள்!” என்று கூறினார்.

இந்தப் பேச்சை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்று, ‘‘இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், அல்லாஹ்வின் தூதரே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் புட்டத்தில் அடித்துவிட்டார்” என்று கூறினர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (குலமோதல்களைத் தூண்டுகின்ற) இவை நாற்றம் பிடித்தவை” என்று கூறினார்கள்.

அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இதைக் கேட்டுவிட்டு, ‘‘இப்படியா அவர்கள் செய்துவிட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர்” என்று (அன்சாரிகளுக்குப் பரிந்துகொண்டு) கூறினான். நபி (ஸல்) அவர்களுக்கு இந்தக் தகவல் எட்டியது. மேலும், (தகவலறிந்த) உமர் (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘என்னை விடுங்கள், அல்லாஹ்வின் தூதரே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகின்றேன்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை விட்டுவிடுங்கள். முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது” என்று சொன்னார்கள்.

மக்காவாசிக(ளான முஹாஜிர்க)ள் மதீனாவிற்கு வந்தபோது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களைவிட) அதிகமாக இருந்தார்கள். பின்னர் (முஹாஜிர்கள்) அன்சாரிகளைவிட அதிகமாகிவிட்டனர்.

மற்றோர் அறிவிப்பில், ‘நாங்கள் ஒரு போரில் இருந்தோம்’ என்பதற்குப் பதிலாக ‘‘நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்துகொண்டிருந்தோம்” என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.

அத்தியாயம் : 65
4906. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ الْفَضْلِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ حَزِنْتُ عَلَى مَنْ أُصِيبَ بِالْحَرَّةِ فَكَتَبَ إِلَىَّ زَيْدُ بْنُ أَرْقَمَ وَبَلَغَهُ شِدَّةُ حُزْنِي يَذْكُرُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " اللَّهُمَّ اغْفِرْ لِلأَنْصَارِ وَلأَبْنَاءِ الأَنْصَارِ " ـ وَشَكَّ ابْنُ الْفَضْلِ فِي أَبْنَاءِ أَبْنَاءِ الأَنْصَارِ ـ فَسَأَلَ أَنَسًا بَعْضُ مَنْ كَانَ عِنْدَهُ فَقَالَ هُوَ الَّذِي يَقُولُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هَذَا الَّذِي أَوْفَى اللَّهُ لَهُ بِأُذُنِهِ ".
பாடம்: 7 ‘‘அல்லாஹ்வின் தூதருடன் இருப் போருக்குச் செலவழிப்பதை நிறுத்திவிடுங்கள். (அவரிட மிருந்து) அவர்கள் விலகிச் சென்றுவிடுவார்கள் என்று சொல் கின்றவர்கள் இவர்கள்தான். உண்மையில், வானங்கள் மற்றும் பூமியின் கருவூலங்கள் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள்” எனும் (63:7ஆவது) இறைவசனம் (இதன் மூலத்தில் இடம்பெற்றுள்ள) ‘யன்ஃபள்ளூ’ எனும் சொல்லுக்கு ‘பிரிந்து விடுவார்கள்’ என்பது பொருள்.
4906. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘அல்ஹர்ரா’ போரில் கொல்லப்பட்டோருக்காக நான் (பெரிதும்) துக்கப்பட்டேன்.5 நான் கடுமையாகத் துக்கப்படுவது பற்றிய செய்தி, ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களுக்கு எட்டியபோது எனக்கு அவர்கள் (பின்வருமாறு குறிப்பிட்டுக் கடிதம்) எழுதினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! அன்சாரிகளுக்கும் அன்சாரிகளின் மக்களுக்கும் நீ மன்னிப்பு அளிப்பாயாக” என்று பிரார்த்தித்ததை நான் செவியுற்றேன்.

அன்சாரிகளுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும் நபி (ஸல்) அவர்கள் (துஆவில்) குறிப்பிட்டார்களா; இல்லையா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் ஃபள்ல் (ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்தபோது அன்னாருடன் இருந்தவர்களில் சிலர், (ஸைத் பின் அர்கம் (ரலி) பற்றிக்) கேட்டனர். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், ‘‘(நயவஞ்சகர்களின் முறைகேடான பேச்சுக் குறித்து இவர் தெரிவித்த தகவலை நபிகளார் ஏற்க மறுத்துவிட்ட பின்னர், இவரை உண்மைப்படுத்தி அல்லாஹ் வசனத்தை அருளியபோது) ‘இவர் தம் காதால் கேட்டது உண்மையே என அல்லாஹ்வே அறிவித்துவிட்டான்’ என்று இவர் தொடர்பாகத்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” எனப் பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 65
4907. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَفِظْنَاهُ مِنْ عَمْرِو بْنِ دِينَارٍ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ كُنَّا فِي غَزَاةٍ فَكَسَعَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ رَجُلاً مِنَ الأَنْصَارِ فَقَالَ الأَنْصَارِيُّ يَا لَلأَنْصَارِ. وَقَالَ الْمُهَاجِرِيُّ يَا لَلْمُهَاجِرِينَ. فَسَمَّعَهَا اللَّهُ رَسُولَهُ صلى الله عليه وسلم قَالَ " مَا هَذَا ". فَقَالُوا كَسَعَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ رَجُلاً مِنَ الأَنْصَارِ فَقَالَ الأَنْصَارِيُّ يَا لَلأَنْصَارِ. وَقَالَ الْمُهَاجِرِيُّ يَالَلْمُهَاجِرِينَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " دَعُوهَا فَإِنَّهَا مُنْتِنَةٌ ". قَالَ جَابِرٌ وَكَانَتِ الأَنْصَارُ حِينَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَكْثَرَ، ثُمَّ كَثُرَ الْمُهَاجِرُونَ بَعْدُ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ أَوَقَدْ فَعَلُوا، وَاللَّهِ لَئِنْ رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ لَيُخْرِجَنَّ الأَعَزُّ مِنْهَا الأَذَلَّ. فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رضى الله عنه دَعْنِي يَا رَسُولَ اللَّهِ أَضْرِبْ عُنُقَ هَذَا الْمُنَافِقِ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " دَعْهُ لاَ يَتَحَدَّثُ النَّاسُ أَنَّ مُحَمَّدًا يَقْتُلُ أَصْحَابَهُ ".
பாடம்: 8 மேலும் அவர்கள், ‘‘நாங்கள் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால், கண்ணியவான்கள் அங்கிருந்து இழிந்தோரை வெளியேற்றி விடுவர்” என்றும் கூறுகிறார்கள். ஆயினும், கண்ணியம் என்பது, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கையாளர் களுக்குமே உரியதாகும். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் அறியமாட் டார்கள் (எனும் 63:8ஆவது இறைவசனம்)
4907. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு போரில் இருந்துகொண்டி ருந்தோம். முஹாஜிர்களில் ஒரு மனிதர் அன்சாரிகளில் ஒருவரைப் புட்டத்தில் அடித்துவிட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி, ‘‘அன்சாரிகளே! (உதவுங்கள்)” என்று கூறினார். முஹாஜிர், ‘‘முஹாஜிர்களே! (உதவுங்கள்)” என்று கூறினார்.

இந்தப் பேச்சை அல்லாஹ் தன்னுடைய தூதருக்கு எட்டச் செய்துவிட்டான். நபி (ஸல்) அவர்கள், ‘‘இது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ‘‘முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் புட்டத்தில் அடித்துவிட்டார். உடனே, அன்சாரி ‘அன்சாரிகளே, (உதவுங்கள்)’ என்று கூற, முஹாஜிரும், ‘முஹாஜிர்களே, (உதவுங்கள்)’ என்று கூறினார்” என்று பதிலளித்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இத்தகைய வாதங்களைக் கைவிடுங்கள். (குலமோதல்களைத் தூண்டுகின்ற) இவை நாற்றம் பிடித்தவை” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களைவிட) அதிகமாக இருந்தார் கள். அதன் பின்னர் முஹாஜிர்கள் (அன்சாரிகளைவிட) அதிகரித்துவிட்டனர். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை, ‘‘இப்படியா அவர்கள் செய்துவிட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக, நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தோரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர்” என்று கூறினான்.

அப்போது (செய்தி அறிந்த) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், ‘‘என்னை விடுங்கள்; இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகின்றேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை விட்டுவிடுங்கள். ‘முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார்’ என்று மக்கள் பேசிவிடக் கூடாது” என்று சொன்னார்கள்.6

அத்தியாயம் : 65
4908. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَالِمٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّهُ، طَلَّقَ امْرَأَتَهُ وَهْىَ حَائِضٌ، فَذَكَرَ عُمَرُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَتَغَيَّظَ فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ " لِيُرَاجِعْهَا ثُمَّ يُمْسِكْهَا حَتَّى تَطْهُرَ، ثُمَّ تَحِيضَ فَتَطْهُرَ، فَإِنْ بَدَا لَهُ أَنْ يُطَلِّقَهَا فَلْيُطَلِّقْهَا طَاهِرًا قَبْلَ أَنْ يَمَسَّهَا فَتِلْكَ الْعِدَّةُ كَمَا أَمَرَهُ اللَّهُ ".
பாடம்: 64. ‘அத்தஃகாபுன்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) ‘‘(64:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வமய் யுஃமின் பில்லாஹி யஹ்தி கல்பஹு’ (யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்கிறாரோ, அவரது உள்ளத்திற்கு அல்லாஹ் வழிகாட்டுதல் வழங்குகிறான்) என்பது, தமக்குத் துன்பம் நேரும்போது, அதைத் தாங்கி, திருப்தியடைந்து, அது அல்லாஹ்வின் தரப்பிலிருந்தே தமக்கு வந்தது என்று எண்ணும் இறைநம்பிக்கையாளரையே குறிக்கின்றது” என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக அல்கமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (64:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஃகாபுன்’ என்பதற்கு, ‘நரகவாசிகளுடன் சொர்க்கவாசிகள் போட்டியிடல்’ என்பது பொருள். பாடம்: 65. ‘அத்தலாக்’ அத்தியாயம்1 (65:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இனிர்த்தப்த்தும்’ (உங்களுக்குச் சந்தேகம் வந்தால்) என்பதற்கு, ‘‘(உங்கள் பெண்ணுக்கு) மாதவிலக்கு நின்றுவிட்டதா, இல்லையா என உங்களுக்குத் தெரியவில்லையென்றால்’ என்று பொருள். இந்த வசனம், மாதவிலக்கு நின்றுவிட்ட பெண்ணுக்கும், எந்தப் பெண்ணுக்கு இதுவரை மாதவிலக்கு வரவில்லையோ அவளுக்கும் ‘இத்தா’ காலம் மூன்று மாதங்களாகும் என்று குறிப்பிடுகின்றது. பாடம்: 1 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்: (65:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வபால்’ (விளைவு) எனும் சொல்லுக்கு ‘தண்டனை’ என்பது பொருள்.
4908. சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் துணைவியாரை விவாகரத்துச் செய்துவிட்டார்கள். அப்போது அவர்களுடைய துணைவியாருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது. எனவே, (என் பாட்டனார்) உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இதைத்) தெரிவித்தார்கள். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகவும் கோபப்பட்டார்கள்.

பிறகு, ‘‘அவர் (அப்துல்லாஹ் பின் உமர்) தம் மனைவியைத் திரும்ப அழைத்து, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும்வரை தம் மனைவியாகவே வைத்துக்கொள்ளட்டும்! பிறகு, (மீண்டும்) அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு (அதிலிருந்து) தூய்மையும் அடைந்துவிட்டால், அப்போது அவருக்குத் தோன்றினால் விவாகரத்துச் செய்யட்டும்! அதுவும் தாம்பத்திய உறவுக்கு முன்னால். (மாதவிலக்கிலிருந்து தூய்மையாகியிருக்கும்) இந்தக் காலமே, (பெண்களை விவாகரத்துச் செய்ய) ஆண்களுக்கு இறைவன் உத்தரவிட்ட காலமாகும்” என்றும் கூறினார்கள்.2

அத்தியாயம் : 65
4909. حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عَبَّاسٍ وَأَبُو هُرَيْرَةَ جَالِسٌ عِنْدَهُ فَقَالَ أَفْتِنِي فِي امْرَأَةٍ وَلَدَتْ بَعْدَ زَوْجِهَا بِأَرْبَعِينَ لَيْلَةً. فَقَالَ ابْنُ عَبَّاسٍ آخِرُ الأَجَلَيْنِ. قُلْتُ أَنَا {وَأُولاَتُ الأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ} قَالَ أَبُو هُرَيْرَةَ أَنَا مَعَ ابْنِ أَخِي ـ يَعْنِي أَبَا سَلَمَةَ ـ فَأَرْسَلَ ابْنُ عَبَّاسٍ غُلاَمَهُ كُرَيْبًا إِلَى أُمِّ سَلَمَةَ يَسْأَلُهَا فَقَالَتْ قُتِلَ زَوْجُ سُبَيْعَةَ الأَسْلَمِيَّةِ وَهْىَ حُبْلَى، فَوَضَعَتْ بَعْدَ مَوْتِهِ بِأَرْبَعِينَ لَيْلَةً فَخُطِبَتْ فَأَنْكَحَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ أَبُو السَّنَابِلِ فِيمَنْ خَطَبَهَا.
பாடம்: 2 மேலும், கர்ப்பிணிகளுக்கான ‘இத்தா’ காலம், அவர்கள் குழந்தை பெற்றெடுப்பது (வரையில்) ஆகும். யார் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறாரோ, அவரது காரியத்தை அவன் எளிதாக்குகின்றான் (எனும் 65:4ஆவது வசனத்தொடர்) (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உலாத்துல் அஹ்மால்’ (கர்ப்பிணிகள்) என்பதன் ஒருமை ‘ஃதாத்து ஹம்ல்’ (கர்ப்பிணி) என்பதாகும்.
4909. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார். அப்போது அவர்களுக்கு அருகில் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். (அங்கு வந்த) அந்த மனிதர், ‘‘தன் கணவன் இறந்து நாற்பது நாட்களுக்குப்பின் பிரசவித்த ஒரு பெண்(ணின் ‘இத்தா’ பிரசவத்தோடு முடிந்துவிடுமா என்பது) பற்றி எனக்குத் தீர்ப்பு வழங்குங்கள்” என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘இரு தவணைகளில் பிந்தியது” என்று கூறினார்கள்.3

உடனே நான் (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம்,) ‘‘கர்ப்பிணிகளுக்கான ‘இத்தா’ காலம் அவர்கள் குழந்தை பெற்றெடுக்கும் வரையிலாகும்” (என்று குர்ஆன் 65:4ஆவது வசனம் கூறுகிறதே!) என்று கேட்டேன்.

அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘நானும் என் சகோதரர் மகன் அபூசலமா(வின் கருத்துடன்) உடன்(பட்டு) இருக்கிறேன் என்று கூறினார்கள். அப்போது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம் பணியாளர் ‘குறைப்’ என்பவரை, (இது குறித்து) கேட்பதற்காக உம்மு சலமா (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். அதற்கு உம்மு சலமா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:

சுபைஆ (பின்த் அல்ஹாரிஸ்) அல்அஸ்லமிய்யா (ரலி) அவர்கள் கர்ப்பிணியாக இருந்த சமயத்தில், அவருடைய கணவர் (சஅத் பின் கவ்லா -ரலி) இறந்துவிட்டார். அவர் இறந்து நாற்பது நாட்களுக்குப் பின்னால், சுபைஆ (ரலி) குழந்தை பெற்றெடுத்தார். உடனே அவரைப் பெண் பேசப்பட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குத் திருமணம் முடித்துவைத்தார்கள். அவரைப் பெண் கேட்டவர்களில் அபுஸ்ஸனாபில் (பின் பஅக்கக் -ரலி) அவர்களும் ஒருவராவார். (எனவே, கர்ப்பிணிக்கு ‘இத்தா’, பிரசவம் வரையில்தான்.)


அத்தியாயம் : 65
4910. وَقَالَ سُلَيْمَانُ بْنُ حَرْبٍ وَأَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، قَالَ كُنْتُ فِي حَلْقَةٍ فِيهَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى وَكَانَ أَصْحَابُهُ يُعَظِّمُونَهُ، فَذَكَرَ آخِرَ الأَجَلَيْنِ فَحَدَّثْتُ بِحَدِيثِ سُبَيْعَةَ بِنْتِ الْحَارِثِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ قَالَ فَضَمَّزَ لِي بَعْضُ أَصْحَابِهِ. قَالَ مُحَمَّدٌ فَفَطِنْتُ لَهُ فَقُلْتُ إِنِّي إِذًا لَجَرِيءٌ إِنْ كَذَبْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ وَهْوَ فِي نَاحِيَةِ الْكُوفَةِ. فَاسْتَحْيَا وَقَالَ لَكِنَّ عَمَّهُ لَمْ يَقُلْ ذَاكَ. فَلَقِيتُ أَبَا عَطِيَّةَ مَالِكَ بْنَ عَامِرٍ فَسَأَلْتُهُ فَذَهَبَ يُحَدِّثُنِي حَدِيثَ سُبَيْعَةَ فَقُلْتُ هَلْ سَمِعْتَ عَنْ عَبْدِ اللَّهِ فِيهَا شَيْئًا فَقَالَ كُنَّا عِنْدَ عَبْدِ اللَّهِ فَقَالَ أَتَجْعَلُونَ عَلَيْهَا التَّغْلِيظَ وَلاَ تَجْعَلُونَ عَلَيْهَا الرُّخْصَةَ. لَنَزَلَتْ سُورَةُ النِّسَاءِ الْقُصْرَى بَعْدَ الطُّولَى {وَأُولاَتُ الأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ}.
பாடம்: 2 மேலும், கர்ப்பிணிகளுக்கான ‘இத்தா’ காலம், அவர்கள் குழந்தை பெற்றெடுப்பது (வரையில்) ஆகும். யார் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறாரோ, அவரது காரியத்தை அவன் எளிதாக்குகின்றான் (எனும் 65:4ஆவது வசனத்தொடர்) (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உலாத்துல் அஹ்மால்’ (கர்ப்பிணிகள்) என்பதன் ஒருமை ‘ஃதாத்து ஹம்ல்’ (கர்ப்பிணி) என்பதாகும்.
4910. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (மார்க்க அறிஞர்) அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் இருந்த அவையில் இருந்துகொண்டிருந்தேன். அவருடைய நண்பர்கள் அவரைக் கண்ணியப்படுத்திவந்தனர். (அப்போது அன்னாரின் நண்பர்களில் ஒருவர், கணவன் இறந்துவிட்ட கர்ப்பிணியின் ‘இத்தா’ காலம் குறித்துப் பேசினார்.) அப்போது அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள், ‘‘இரு தவணைகளில் பிந்தியது” என்று கூறினார்கள்.

உடனே நான், ‘‘அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் வாயிலாகக் கிடைத்த ‘சுபைஆ பின்த் அல்ஹாரிஸ்’ (ரலி) அவர்களின் (நிகழ்ச்சி குறித்த) அறிவிப்பைச் சொன்னேன். அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்களுடைய நண்பர்களில் சிலர் என்னை நோக்கி (அமைதியாக இருக்கும்படி) சைகை செய்தனர்.

நான் அதைச் சட்டெனப் புரிந்து கொண்டேன். ஆகவே, நான் ‘‘அப்துல்லாஹ் பின் உத்பா (தற்போது) ‘கூஃபா’வில்தான் இருக்கிறார். (அவர் சொல்லாத ஒன்றை) அவர்மீது நான் பொய்யாகச் சொல்வதானால் நான் துடுக்கானவன் ஆவேன்” என்று சொன்னேன். உடனே (என்னைப் பேசாமலிருக்கும்படி சைகை செய்தவர்) கூச்சப்பட்டார்.

மேலும், அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா அவர்கள், ‘‘ஆனால், அப்துல்லாஹ் பின் உத்பா அவர்களுடைய தந்தையின் சகோதரர் (இப்னு மஸ்ஊத்) அவர்கள் அப்படிக் கூறவில்லையே!” என்று சொன்னார்.

ஆகவே, நான் அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்) அவர்களைச் சந்தித்து இது குறித்துக் கேட்டேன். அவர்களும் சுபைஆ (ரலி) அவர்களின் (நிகழ்ச்சி குறித்த) அறிவிப்பைக் கூறலானார்கள். நான் (அவர்களிடம்), ‘‘இது குறித்து அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் ஏதேனும் கேட்டுள்ளீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் நாங்கள் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

(கணவர் இறந்து கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண் விஷயத்தில் ‘இத்தா’ காலத்தை நீட்டித்து) அவளுக்குச் சிரமத்தை அளிக்கிறீர்களா? அவளுக்குச் சலுகை காட்டக் கூடாதா? (உண்மை என்னவென்றால்,) பெண்கள் தொடர்பான (‘அத்தலாக்’ எனும்) சிறிய அத்தியாயம், பெண்கள் தொடர்பான (‘அல்பகரா’ எனும்) பெரிய அத்தியாயத்திற்குப் பின்னரே அருளப்பெற்றது.

(பின்னால் அருளப்பெற்ற அந்த வசனம் இதுதான்:) ‘‘மேலும் கர்ப்பிணிகளுக்கான ‘இத்தா’ காலம், அவர்கள் குழந்தை பெற்றெடுப்பது (வரையில்) ஆகும்” (65:4)4

அத்தியாயம் : 65