487. وَأَنَّ عَبْدَ اللَّهِ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَنْزِلُ تَحْتَ سَرْحَةٍ ضَخْمَةٍ دُونَ الرُّوَيْثَةِ عَنْ يَمِينِ الطَّرِيقِ، وَوِجَاهَ الطَّرِيقِ فِي مَكَانٍ بَطْحٍ سَهْلٍ، حَتَّى يُفْضِيَ مِنْ أَكَمَةٍ دُوَيْنَ بَرِيدِ الرُّوَيْثَةِ بِمِيلَيْنِ، وَقَدِ انْكَسَرَ أَعْلاَهَا، فَانْثَنَى فِي جَوْفِهَا، وَهِيَ قَائِمَةٌ عَلَى سَاقٍ، وَفِي سَاقِهَا كُثُبٌ كَثِيرَةٌ.
பாடம் : 89 (மக்காவி-ருந்து செல்லும்) மதீனாவின் சாலைகளில் உள்ள பள்ளிவாசல்களும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடங்களும்
487. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவி-ருந்து மக்கா செல்லும்) சாலையின் எதிர்த் திசையில் வலப் புறம் அமைந்துள்ள ‘ருவைஸா’ எனும் சிற்றூருக்குச் சற்று அருகில் உள்ள ஒரு பெரிய மரத்தின்கீழ் இறங்கித் தங்குவார்கள். அந்த இடம் விசாலமானதாகவும் பள்ளமானதாகவும் இருந்தது.

நபி (ஸல்) அவர்கள் தங்கிய அந்த இடம் அவ்வூரி-ருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது. அங்கிருந்த மேட்டுப் பகுதியிலிருந்தே நபியவர்கள் புறப்படுவார்கள். அந்த மரத்தின் மேற் கிளைகள் முறிந்து அதன் மையப் பகுதிக்குள் கவிழ்ந்து கிடந்தன. அதன் அடிமரம் நின்றுகொண்டிருந்தது, அந்த அடி மரத்தில் அதிகமான மணல் குவிந்திருந்தது.

இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 8
488. وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى فِي طَرَفِ تَلْعَةٍ مِنْ وَرَاءِ الْعَرْجِ وَأَنْتَ ذَاهِبٌ إِلَى هَضْبَةٍ عِنْدَ ذَلِكَ الْمَسْجِدِ قَبْرَانِ أَوْ ثَلاَثَةٌ، عَلَى الْقُبُورِ رَضْمٌ مِنْ حِجَارَةٍ عَنْ يَمِينِ الطَّرِيقِ، عِنْدَ سَلِمَاتِ الطَّرِيقِ، بَيْنَ أُولَئِكَ السَّلِمَاتِ كَانَ عَبْدُ اللَّهِ يَرُوحُ مِنَ الْعَرْجِ بَعْدَ أَنْ تَمِيلَ الشَّمْسُ بِالْهَاجِرَةِ، فَيُصَلِّي الظُّهْرَ فِي ذَلِكَ الْمَسْجِدِ.
பாடம் : 89 (மக்காவி-ருந்து செல்லும்) மதீனாவின் சாலைகளில் உள்ள பள்ளிவாசல்களும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடங்களும்
488. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“நீ (மதீனாவி-ருந்து) ‘ஹள்பா’ எனும் மலைக்குச் செல்லும் வழியில் ‘அர்ஜ்’ எனும் சிற்றூருக்குப் பின்புறத்திலுள்ள (மேலிருந்து பாயும்) நீரோடையின் ஓரத்தில் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள். அந்தத் தொழுமிடத்திற்கு அருகில் இரண்டோ மூன்றோ மண்ணறைகள் (கப்று) இருந்தன. அவற்றின்மேல் கற்பாறைகள் இருந்தன. அந்தப் பள்ளிவாசல் சாலையின் வலப் புறம் அமைந்திருந்தது. அந்தச் சாலையின் ஓரங்களில் மரங்கள் இருந்தன” என்று அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அந்த மரங்களுக்கு நடுவே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நண்பகலில் சூரியன் உச்சி சாய்ந்ததும் ‘அர்ஜ்’ எனும் சிற்றூரிலிருந்து புறப்பட்டு அந்தப் பள்ளிவாசலில் லுஹ்ர் தொழுவார்கள்.


அத்தியாயம் : 8
489. وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَزَلَ عِنْدَ سَرَحَاتٍ عَنْ يَسَارِ الطَّرِيقِ، فِي مَسِيلٍ دُونَ هَرْشَى، ذَلِكَ الْمَسِيلُ لاَصِقٌ بِكُرَاعِ هَرْشَى، بَيْنَهُ وَبَيْنَ الطَّرِيقِ قَرِيبٌ مِنْ غَلْوَةٍ، وَكَانَ عَبْدُ اللَّهِ يُصَلِّي إِلَى سَرْحَةٍ، هِيَ أَقْرَبُ السَّرَحَاتِ إِلَى الطَّرِيقِ وَهْىَ أَطْوَلُهُنَّ.
பாடம் : 89 (மக்காவி-ருந்து செல்லும்) மதீனாவின் சாலைகளில் உள்ள பள்ளிவாசல்களும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடங்களும்
489. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஷாம் செல்லும்) சாலையின் இடப் புறம் ‘ஹர்ஷா’ எனும் மலைக்கு அருகில் ஓடும் நீரோடையை ஒட்டியுள்ள மரங்களுக்குக் கீழே இறங்கித் தங்கினார்கள். அந்த நீரோடை ‘ஹர்ஷா’ எனும் மலையின் அடிவாரத்தை ஒட்டிச் செல்கிறது. (நபி (ஸல்) அவர்கள் தொழுத) அந்த இடத்திற்கும் சாலைக்கும் மத்தியில் கிட்டத்தட்ட அம்பெய்தால் சென்றடையும் தொலைவே இருந்தது. அங்கிருந்த மரங்களில் சாலைக்கு மிக நெருங்கியதும் மிக நெடியதுமான ஒரு மரத்திற்குப் பக்கத்தில் தொழுவது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் வழக்கம்.


அத்தியாயம் : 8
490. وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَنْزِلُ فِي الْمَسِيلِ الَّذِي فِي أَدْنَى مَرِّ الظَّهْرَانِ، قِبَلَ الْمَدِينَةِ حِينَ يَهْبِطُ مِنَ الصَّفْرَاوَاتِ يَنْزِلُ فِي بَطْنِ ذَلِكَ الْمَسِيلِ عَنْ يَسَارِ الطَّرِيقِ، وَأَنْتَ ذَاهِبٌ إِلَى مَكَّةَ، لَيْسَ بَيْنَ مَنْزِلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبَيْنَ الطَّرِيقِ إِلاَّ رَمْيَةٌ بِحَجَرٍ.
பாடம் : 89 (மக்காவி-ருந்து செல்லும்) மதீனாவின் சாலைகளில் உள்ள பள்ளிவாசல்களும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடங்களும்
490. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“ ‘மர்ருழ் ழஹ்ரான்’ எனும் சிற்றூருக்கு அருகிலுள்ள நீரோடையை ஒட்டி நபி (ஸல்) அவர்கள் தங்கி இளைப்பாறு வார்கள். அந்த நீரோடை (மக்காவி-ருந்து) மதீனா செல்லும்போது (மர்ருழ் ழஹ்ரான் தாண்டியதும்) ‘ஸஃப்ராவாத்’ எனும் இடத்தைக் கடந்ததும். மக்கா நோக்கிச் செல்லும் சாலையின் இடப்புறம் அமைந்துள்ளது. (நபி (ஸல்) அவர்கள் தங்கி இளைப்பாறிய) அந்த இடத்திற்கும் சாலைக்கும் இடையே கல்லெறியும் தொலைவே உண்டு” என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.


அத்தியாயம் : 8
491. وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَنْزِلُ بِذِي طُوًى وَيَبِيتُ حَتَّى يُصْبِحَ، يُصَلِّي الصُّبْحَ حِينَ يَقْدَمُ مَكَّةَ، وَمُصَلَّى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ذَلِكَ عَلَى أَكَمَةٍ غَلِيظَةٍ، لَيْسَ فِي الْمَسْجِدِ الَّذِي بُنِيَ ثَمَّ، وَلَكِنْ أَسْفَلَ مِنْ ذَلِكَ عَلَى أَكَمَةٍ غَلِيظَةٍ.
பாடம் : 89 (மக்காவி-ருந்து செல்லும்) மதீனாவின் சாலைகளில் உள்ள பள்ளிவாசல்களும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடங்களும்
491. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“நபி (ஸல்) அவர்கள் (மதீனாவி-ருந்து) மக்கா செல்லும்போது ‘தூத்துவா’ என்ற இடத்தில் இரவு நேரம் தங்கிவிட்டு, அங்கேயே காலையில் சுப்ஹு தொழுகையைத் தொழுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத இடம் அங்குள்ள கெட்டியான மேட்டின் மீது அமைந் துள்ளது. அங்கு (தற்போது) பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ள இடம் (நபி (ஸல்) அவர்கள் தொழுத) அந்த இடமன்று; அந்தப் பள்ளிவாசலுக்குக் கீழ்ப்புறமாக அமைந்துள்ள கெட்டியான மேடே (நபி (ஸல்) அவர்கள் தொழுத) அந்த இடமாகும்” என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.


அத்தியாயம் : 8
492. وَأَنَّ عَبْدَ اللَّهِ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اسْتَقْبَلَ فُرْضَتَىِ الْجَبَلِ الَّذِي بَيْنَهُ وَبَيْنَ الْجَبَلِ الطَّوِيلِ نَحْوَ الْكَعْبَةِ، فَجَعَلَ الْمَسْجِدَ الَّذِي بُنِيَ ثَمَّ يَسَارَ الْمَسْجِدِ بِطَرَفِ الأَكَمَةِ، وَمُصَلَّى النَّبِيِّ صلى الله عليه وسلم أَسْفَلَ مِنْهُ عَلَى الأَكَمَةِ السَّوْدَاءِ، تَدَعُ مِنَ الأَكَمَةِ عَشَرَةَ أَذْرُعٍ أَوْ نَحْوَهَا، ثُمَّ تُصَلِّي مُسْتَقْبِلَ الْفُرْضَتَيْنِ مِنَ الْجَبَلِ الَّذِي بَيْنَكَ وَبَيْنَ الْكَعْبَةِ.
பாடம் : 89 (மக்காவி-ருந்து செல்லும்) மதீனாவின் சாலைகளில் உள்ள பள்ளிவாசல்களும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடங்களும்
492. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், இரு மலைக் கணவாய்களை முன்னோக்கி (நின்று இறைவனை வணங்கி)னார்கள். அந்த இடத்திற்கும் உயரமான அந்த மலைக்கும் இடையே கஅபாவின் திசை அமைந் திருந்தது. எனவே, நான் (அந்த இடத்தில் தொழும்போது) அங்கு தற்போது கட்டப் பட்டுள்ள பள்ளிவாச-ன் இடப் பக்கத்தை அந்த மேட்டின் ஒரு பகுதியில் வரும்படி செய்தேன்.

நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அதைவிடக் கீழே ஒரு கறுப்பு மேட்டின் மீதே அமைந்திருந்தது. (நபி (ஸல்) அவர்கள் தொழுத அதே இடத்தில் நீ தொழ நினைத்தால் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள) அந்த மேட்டி-ருந்து பத்து முழம் அல்லது அதைப் போன்றதை விட்டுவிட்டு, உனக்கும் கஅபாவுக்கும் இடையே அமைந்துள்ள அந்த இரு மலைக் கணவாய்களை முன்னோக்கித் தொழுதுகொள்!”58

அத்தியாயம் : 8
493. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ أَقْبَلْتُ رَاكِبًا عَلَى حِمَارٍ أَتَانٍ، وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الاِحْتِلاَمَ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي بِالنَّاسِ بِمِنًى إِلَى غَيْرِ جِدَارٍ، فَمَرَرْتُ بَيْنَ يَدَىْ بَعْضِ الصَّفِّ، فَنَزَلْتُ وَأَرْسَلْتُ الأَتَانَ تَرْتَعُ، وَدَخَلْتُ فِي الصَّفِّ، فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَىَّ أَحَدٌ.
பாடம் : 90 (கூட்டுத் தொழுகையின்போது) இமாம் வைத்துக்கொள்ளும் தடுப்பே (சுத்ரா) பின்னா-ருப்போருக்கும் தடுப்பாகும்.
493. அப்துல்லாஹ் பின் அப்பாஸ்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) ‘மினா’வில் சுவர் அல்லாத (கைத்தடி போன்ற) ஒன்றை நோக்கி (திறந்தவெளியில்) மக்களுக்குத் தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது நான் பெட்டைக் கழுதை ஒன்றில் பயணித்தபடி (அவர்களை) நோக்கிச் சென்றேன் -அப்போது நான் பருவ வயதை நெருங்கியிருந்தேன்- (தொழுது கொண்டிருந்தவர்களின்) ஓர் அணியில் ஒரு பகுதியை நான் கடந்து சென்று (கழுதையி-ருந்து) இறங்கி அதை மேய விட்டுவிட்டு, (தொழுவோரின்) வரிசையினூடே புகுந்து (நின்று) கொண் டேன். அ(வ்வாறு நான் தொழுகை அணியைக் கடந்துசென்ற)தற்காக யாரும் என்னை ஆட்சேபிக்கவில்லை.


அத்தியாயம் : 8
494. حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا خَرَجَ يَوْمَ الْعِيدِ أَمَرَ بِالْحَرْبَةِ فَتُوضَعُ بَيْنَ يَدَيْهِ، فَيُصَلِّي إِلَيْهَا وَالنَّاسُ وَرَاءَهُ، وَكَانَ يَفْعَلُ ذَلِكَ فِي السَّفَرِ، فَمِنْ ثَمَّ اتَّخَذَهَا الأُمَرَاءُ.
பாடம் : 90 (கூட்டுத் தொழுகையின்போது) இமாம் வைத்துக்கொள்ளும் தடுப்பே (சுத்ரா) பின்னா-ருப்போருக்கும் தடுப்பாகும்.
494. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று (தொழுவிப்ப தற்காகத் தொழுகைத் திடல் நோக்கிப்) புறப்படும்போது, ஈட்டியை எடுத்துவருமாறு (தம் ஊழியரைப்) பணிப்பார்கள். (தடுப்புச் சுவர் இல்லாத திறந்த வெளியில்) நபியவர்களுக்கு முன்னால் அந்த ஈட்டி (தடுப்பாக நட்டு) வைக்கப்படும். பிறகு அதை நோக்கித் தொழுவார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னே இருப்பார்கள்.

பயணத்தின்போதும் (குறுக்குச் சுவரில்லாத திறந்தவெளியில் தொழ நேர்ந்தால்) இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்வார்கள். இதனால்தான் (நம்) தலைவர்களும் (திறந்தவெளியில் தொழும்போது தமக்கு முன்னால்) ஈட்டியை வைத்துக் கொள்கின்றனர்.


அத்தியாயம் : 8
495. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، قَالَ سَمِعْتُ أَبِي أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِهِمْ بِالْبَطْحَاءِ ـ وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ ـ الظُّهْرَ رَكْعَتَيْنِ، وَالْعَصْرَ رَكْعَتَيْنِ، تَمُرُّ بَيْنَ يَدَيْهِ الْمَرْأَةُ وَالْحِمَارُ.
பாடம் : 90 (கூட்டுத் தொழுகையின்போது) இமாம் வைத்துக்கொள்ளும் தடுப்பே (சுத்ரா) பின்னா-ருப்போருக்கும் தடுப்பாகும்.
495. அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (புறநகர் மக்காவிலுள்ள) ‘அல்பத்ஹா’ எனுமிடத்தில் எங்களுக்கு லுஹ்ரையும் அஸ்ரையும் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழு வித்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடி ஒன்று (தடுப்பாக) இருந்தது. அவர்களுக்கு முன்னால் (அந்தக் கைத்தடிக்கு அப்பால்) பெண்கள் மற்றும் கழுதைகள் நடந்துசென்றன.

அத்தியாயம் : 8
496. حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، قَالَ كَانَ بَيْنَ مُصَلَّى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبَيْنَ الْجِدَارِ مَمَرُّ الشَّاةِ.
பாடம் : 91 தொழுபவருக்கும் தடுப்புக்கும் இடையே எந்த அளவு இடை வெளி இருக்க வேண்டும்?
496. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று தொழும் இடத்திற்கும் (பள்ளி

வாச-ன் கிப்லா திசையில் அமைந்த) சுவருக்கும் இடையே ஆடு ஒன்று நடந்து செல்லும் அளவுக்கு இடைவெளி இருந்தது.


அத்தியாயம் : 8
497. حَدَّثَنَا الْمَكِّيُّ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، قَالَ كَانَ جِدَارُ الْمَسْجِدِ عِنْدَ الْمِنْبَرِ مَا كَادَتِ الشَّاةُ تَجُوزُهَا.
பாடம் : 91 தொழுபவருக்கும் தடுப்புக்கும் இடையே எந்த அளவு இடை வெளி இருக்க வேண்டும்?
497. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் (கிப்லா திசையில் அமைந்த) சுவருக்கும் சொற்பொழிவு மேடைக்கும் (மிம்பர்) இடையே ஆடு கடந்துசெல்லும் அளவுக்கு இடைவெளி இருந்தது.

அத்தியாயம் : 8
498. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُرْكَزُ لَهُ الْحَرْبَةُ فَيُصَلِّي إِلَيْهَا.
பாடம் : 92 (தடுப்பாக நட்டுவைக்கப்படும்) ஈட்டியை நோக்கித் தொழுவது
498. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்(கள் திறந்த வெளியில் தொழும்போது, அவர்)களுக்காக ஈட்டி (பூமியில்) நட்டுவைக்கப்படும். அவர்கள் அதை நோக்கித் தொழுவார்கள்.

அத்தியாயம் : 8
499. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ، قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْهَاجِرَةِ، فَأُتِيَ بِوَضُوءٍ فَتَوَضَّأَ فَصَلَّى بِنَا الظُّهْرَ وَالْعَصْرَ وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ، وَالْمَرْأَةُ وَالْحِمَارُ يَمُرُّونَ مِنْ وَرَائِهَا.
பாடம் : 93 (தடுப்பாக நட்டு வைக்கப்படும்) கைத்தடியை நோக்கித் தொழு வது
499. அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நண்பகல் வேளையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்காக அவர்களுக்குத் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அவர்கள் அங்கத் தூய்மை செய்துவிட்டு எங்க ளுக்கு லுஹ்ரையும் அஸ்ரையும் (சேர்த்து) தொழுவித்தார்கள்.

அப்போது அவர்களுக்கு முன்னால் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடி ஒன்று (தடுப்பாக) இருந்தது. பெண்மணிகள் மற்றும் கழுதைகள் அந்தக் கைத்தடிக்கு அப்பால் சென்றுகொண்டிருந்தன.


அத்தியாயம் : 8
500. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ بَزِيعٍ، قَالَ حَدَّثَنَا شَاذَانُ، عَنْ شُعْبَةَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا خَرَجَ لِحَاجَتِهِ تَبِعْتُهُ أَنَا وَغُلاَمٌ وَمَعَنَا عُكَّازَةٌ أَوْ عَصًا أَوْ عَنَزَةٌ وَمَعَنَا إِدَاوَةٌ، فَإِذَا فَرَغَ مِنْ حَاجَتِهِ نَاوَلْنَاهُ الإِدَاوَةَ.
பாடம் : 93 (தடுப்பாக நட்டு வைக்கப்படும்) கைத்தடியை நோக்கித் தொழு வது
500. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றால் நானும் இன்னொரு சிறுவரும் எங்களுடன் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடி, அல்லது (சாதாரண) கைத்தடி, அல்லது (சற்று) பெரிய கைத்தடியும் தண்ணீர் நிரம்பிய தோல் பையும் இருக்க, அவர்களைப் பின்தொடர்ந்து செல்வோம். அவர்கள் தமது தேவையை முடித்துக்கொண்டதும் நாங்கள் அவர்களிடம் அந்தத் தண்ணீர் பையைக் கொடுப்போம்.

அத்தியாயம் : 8
501. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْهَاجِرَةِ فَصَلَّى بِالْبَطْحَاءِ الظُّهْرَ وَالْعَصْرَ رَكْعَتَيْنِ، وَنَصَبَ بَيْنَ يَدَيْهِ عَنَزَةً، وَتَوَضَّأَ، فَجَعَلَ النَّاسُ يَتَمَسَّحُونَ بِوَضُوئِهِ.
பாடம் : 94 மக்கா உள்பட எல்லா இடங் களிலும் (திறந்தவெளியில் தொழும்போது) தடுப்பு வைத்துக்கொள்ளல்
501. அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நண்பகல் நேரத்தில் புறப்பட்டுவந்து (புறநகர் மக்காவிலுள்ள) ‘அல்பத்ஹா’ எனுமிடத்தில் லுஹ்ரையும் அஸ்ரையும் (சேர்த்து) இரண்டிரண்டு ரக்அத்களாக (எங்களுக்குத்) தொழுவித்தார்கள். தமக்கு முன்னால் கைத்தடி ஒன்றை (தடுப்பாக) நட்டுவைத்தார்கள். (தொழுகைக்காக) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அவர்கள் அங்கத் தூய்மை செய்த தண்ணீரில் எஞ்சியதை மக்கள் (தம் மேனியில்) தடவிக்கொண்டனர்.

அத்தியாயம் : 8
502. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، قَالَ كُنْتُ آتِي مَعَ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ فَيُصَلِّي عِنْدَ الأُسْطُوَانَةِ الَّتِي عِنْدَ الْمُصْحَفِ. فَقُلْتُ يَا أَبَا مُسْلِمٍ أَرَاكَ تَتَحَرَّى الصَّلاَةَ عِنْدَ هَذِهِ الأُسْطُوَانَةِ. قَالَ فَإِنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَحَرَّى الصَّلاَةَ عِنْدَهَا.
பாடம் : 95 தூண்களை நோக்கித் தொழுவது “(பள்ளிவாச-ல் உள்ள) தூண்களில் சாய்ந்து பேசிக்கொண்டிருப்பவர்களைவிட (அவற்றை நோக்கித்) தொழுபவர்களே அத்தூண்களுக்கு அதிக உரிமை படைத்த வர்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். இரண்டு தூண்களுக்கு நடுவில் தொழுதுகொண்டிருந்த ஒருவரை உமர் (ரலி) அவர்கள் கண்டபோது அவரை ஒரு தூணை நோக்கி நிறுத்தி, “இதை நோக்கித் தொழுவீராக!” என்று கூறினார்கள்.
502. யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (அபூமுஸ்-ம்) சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களுடன் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்கு) செல்வது வழக்கம். சலமா (ரலி) அவர்கள் குர்ஆன் பிரதிகள் (வைக்கப்படும் இடத்திற்கு) அருகிலுள்ள தூணருகே தொழுவார்கள். ஆகவே நான், “அபூமுஸ்-ம்! தாங்கள் இந்தத் தூணைத் தேர்ந்தெடுத்துத் தொழுவதையே காண்கி றேனே (என்ன காரணம்)?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் இந்தத் தூணைத் தேர்ந்தெடுத்து (அதை முன்னோக்கி நின்று) தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். (ஆகவேதான், நானும் இதைத் தேர்ந்தெடுத்துத் தொழுகி றேன்)” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 8
503. حَدَّثَنَا قَبِيصَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ عَامِرٍ، عَنْ أَنَسٍ، قَالَ لَقَدْ رَأَيْتُ كِبَارَ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَبْتَدِرُونَ السَّوَارِيَ عِنْدَ الْمَغْرِبِ. وَزَادَ شُعْبَةُ عَنْ عَمْرٍو عَنْ أَنَسٍ حَتَّى يَخْرُجَ النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம் : 95 தூண்களை நோக்கித் தொழுவது “(பள்ளிவாச-ல் உள்ள) தூண்களில் சாய்ந்து பேசிக்கொண்டிருப்பவர்களைவிட (அவற்றை நோக்கித்) தொழுபவர்களே அத்தூண்களுக்கு அதிக உரிமை படைத்த வர்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். இரண்டு தூண்களுக்கு நடுவில் தொழுதுகொண்டிருந்த ஒருவரை உமர் (ரலி) அவர்கள் கண்டபோது அவரை ஒரு தூணை நோக்கி நிறுத்தி, “இதை நோக்கித் தொழுவீராக!” என்று கூறினார்கள்.
503. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மஃக்ரிப் (தொழுகைக்காக பாங்கு சொல்லும்) நேரம் மூத்த நபித்தோழர்கள் (இரு ரக்அத்கள் முன்சுன்னத் தொழுவதற் காகப் பள்ளிவாச-லுள்ள) தூண்களை நோக்கி விரைவதை நான் பார்த்திருக்கிறேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘(மஃக்ரிப் தொழுகைக்காக பாங்கு சொல்லும் நேரம் முதல்) நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) வெளியேறும்வரை’ எனக் கூடுதலாக ஷுஅபா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

அத்தியாயம் : 8
504. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْبَيْتَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ وَبِلاَلٌ، فَأَطَالَ ثُمَّ خَرَجَ، وَكُنْتُ أَوَّلَ النَّاسِ دَخَلَ عَلَى أَثَرِهِ فَسَأَلْتُ بِلاَلاً أَيْنَ صَلَّى قَالَ بَيْنَ الْعَمُودَيْنِ الْمُقَدَّمَيْنِ.
பாடம் : 96 கூட்டுத் தொழுகை அல்லாதவற்றைத் தூண்களுக்கு இடையே தொழுவது59
504. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றி நாளில்) நபி (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி), பிலால் (ரலி) ஆகியோரும் இறையில்லம் கஅபாவுக் குள் நுழைந்தனர். நீண்ட நேரம் உள்ளே இருந்துவிட்டு நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள். (வெளியே வந்த வுடன்) நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் முதல் ஆளாக நானே கஅபா வினுள் நுழைந்தேன்.

பிலால் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் (கஅபாவுக்குள்) எங்கே (எந்த இடத்தில்) தொழுதார்கள்?” என்று கேட்டேன். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், ‘முன்னால் உள்ள இரண்டு தூண் களுக்கு இடையில்’ என்று பதிலளித் தார்கள்


அத்தியாயம் : 8
505. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ الْكَعْبَةَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَبِلاَلٌ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ الْحَجَبِيُّ فَأَغْلَقَهَا عَلَيْهِ وَمَكَثَ فِيهَا، فَسَأَلْتُ بِلاَلاً حِينَ خَرَجَ مَا صَنَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ جَعَلَ عَمُودًا عَنْ يَسَارِهِ، وَعَمُودًا عَنْ يَمِينِهِ، وَثَلاَثَةَ أَعْمِدَةٍ وَرَاءَهُ، وَكَانَ الْبَيْتُ يَوْمَئِذٍ عَلَى سِتَّةِ أَعْمِدَةٍ، ثُمَّ صَلَّى. وَقَالَ لَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنِي مَالِكٌ وَقَالَ عَمُودَيْنِ عَنْ يَمِينِهِ.
பாடம் : 96 கூட்டுத் தொழுகை அல்லாதவற்றைத் தூண்களுக்கு இடையே தொழுவது59
505. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றி நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத், பிலால், கஅபாவின் பொறுப்பாளரான உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் இறையில்லம் கஅபாவுக்குள் சென்று தாழிட்டுக்கொண்டார்கள். (நீண்ட நேரம்) உள்ளே இருந்தார்கள். வெளியே வந்(துகொண்டிருந்)த பிலால் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் (உள்ளே) என்ன செய்தார்கள்?” என்று கேட்டேன்.

அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “ஒரு தூணைத் தமக்கு இடப் பக்கமும் மற்றொரு தூணைத் தமக்கு வலப் பக்கமும் மூன்று தூண்களைத் தமக்குப் பின்புறமும் இருக்குமாறு செய்(து, தொழு)தார்கள்” என்று கூறினார்கள். அன்று இறையில்லம் கஅபாவினுள் ஆறு தூண்கள் இருந்தன.

(அபூஅப்தில்லாஹ் புகாரீ ஆகிய நான் கூறுகின்றேன்:)

(இதன் அறிவிப்பாளர்களின் ஒருவ ரான) மா-க் (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் “தமது வலப் பக்கம் இரண்டு தூண்கள் (இருக்குமாறு தொழுதார்கள்)” என்று இடம்பெற்றுள்ளதாக எம்மிடம் இஸ்மாயீல் பின் அபீஉவைஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.60

அத்தியாயம் : 8
506. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ، كَانَ إِذَا دَخَلَ الْكَعْبَةَ مَشَى قِبَلَ وَجْهِهِ حِينَ يَدْخُلُ، وَجَعَلَ الْبَابَ قِبَلَ ظَهْرِهِ، فَمَشَى حَتَّى يَكُونَ بَيْنَهُ وَبَيْنَ الْجِدَارِ الَّذِي قِبَلَ وَجْهِهِ قَرِيبًا مِنْ ثَلاَثَةِ أَذْرُعٍ، صَلَّى يَتَوَخَّى الْمَكَانَ الَّذِي أَخْبَرَهُ بِهِ بِلاَلٌ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى فِيهِ. قَالَ وَلَيْسَ عَلَى أَحَدِنَا بَأْسٌ إِنْ صَلَّى فِي أَىِّ نَوَاحِي الْبَيْتِ شَاءَ.
பாடம் : 97
506. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கஅபாவிற்குள் நுழையும்போது கஅபாவை நோக்கி நேராகச் சென்று, அதன் கதவு தமது முதுகுக்குப் பின்னால் இருக்குமாறு தமக்கும் எதிர் சுவருக்கு மிடையே சுமார் மூன்று முழ இடைவெளி விட்டு நெருக்கமாக நின்று தொழுவார்கள்.

(அதாவது,) நபி (ஸல்) அவர்கள் கஅபாவில் எந்த இடத்தில் நின்று தொழுததாகத் தமக்கு பிலால் (ரலி) அவர்கள் தெரிவித்தார்களோ அந்த இடத்தைத் தேடித் தொழுவார்கள். “நம்மில் ஒருவர் கஅபாவில் தாம் நாடிய எந்தப் பகுதியில் நின்று தொழுதாலும் தவறேது மில்லை” என்றும் கூறுவார்கள்.

அத்தியாயம் : 8