4827. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، قَالَ كَانَ مَرْوَانُ عَلَى الْحِجَازِ اسْتَعْمَلَهُ مُعَاوِيَةُ، فَخَطَبَ فَجَعَلَ يَذْكُرُ يَزِيدَ بْنَ مُعَاوِيَةَ، لِكَىْ يُبَايِعَ لَهُ بَعْدَ أَبِيهِ، فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ شَيْئًا، فَقَالَ خُذُوهُ. فَدَخَلَ بَيْتَ عَائِشَةَ فَلَمْ يَقْدِرُوا {عَلَيْهِ} فَقَالَ مَرْوَانُ إِنَّ هَذَا الَّذِي أَنْزَلَ اللَّهُ فِيهِ {وَالَّذِي قَالَ لِوَالِدَيْهِ أُفٍّ لَكُمَا أَتَعِدَانِنِي}. فَقَالَتْ عَائِشَةُ مِنْ وَرَاءِ الْحِجَابِ مَا أَنْزَلَ اللَّهُ فِينَا شَيْئًا مِنَ الْقُرْآنِ إِلاَّ أَنَّ اللَّهَ أَنْزَلَ عُذْرِي.
பாடம்: 46. ‘அல்அஹ்காஃப்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (46:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துஃபீளூன’ எனும் சொல்லுக்கு ‘நீங்கள் கூறுவதை’ என்று பொருள். சிலர் கூறுகின்றனர்: (46:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸாரத்’ எனும் சொல்லுக்கும் (இன்ன பிற ஓதல்களில் வந்துள்ள) ‘உஸ்ரத்’, ‘அஸரத்’ ஆகிய சொற்களுக்கும் ‘எஞ்சியுள்ள ஏதேனும் ஞானம்’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (46:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பித்அம் மினர் ருசுலி’ எனும் சொற்றொடருக்கு ‘நான் ஒன்றும் முதன் முதலாய் வந்த இறைத்தூதர் அல்லன்’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாதோர் கூறுகின்றனர்: (46:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அ ரஅய்த்தும்’ (நீங்கள் கவனித்தீர்களா?) என்பதிலுள்ள (வினாப் பொருளைத் தரும்) ‘அ’ எனும் இடைச் சொல், (அல்லாஹ் அல்லாத கற்பனைக் கடவுள்களை வழிபடுவது நியாயம்தான் என்று வாதிட்டுவந்த மக்கா நகர இறைமறுப்பாளர்களுக்கு) எச்சரிக்கையாகவே கூறப்பட்டுள்ளது: (மறுப்பாளர்களே!) உங்களது வாதம் உண்மை என வைத்துக்கொண்டாலும் அந்தக் கடவுள்கள் வழிபடத் தகுதியானவர்கள் அல்லர். (படைத்தவனே வழிபடுவதற்குத் தகுதியானவன் ஆவான். படைக்கப்பட்ட பொருள்கள் அல்ல) என்பது இவ்வசனத்தின் கருத்தாகும். ‘அரஅய்த்தும்’ (நீங்கள் கவனித்தீர்களா) என்பதற்கு ‘நீங்கள் கண்ணால் கண்டீர்களா?’ என்பது பொருளன்று. நீங்கள் வழிபட்டுவரும் அல்லாஹ் அல்லாதவை ஏதேனும் ஒன்றைப் படைத்தன என்பதை நீங்கள் அறிவீர்களா? (நிலைமை இவ்வாறிருக்க, அந்த இயக்கமற்ற கற்பனைக் கடவுள்களை வழிபட்டுவரும் நீங்கள் அநியாயக்காரர்கள் அல்லவா? உங்களது இந்தப் பகுத்தறிவற்ற நிலையை நீங்களே யோசித்துப் பார்த்ததுண்டா?)” என்றே பொருள். பாடம்: 1 ஒருவன் தன் பெற்றோரிடம் ‘‘சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (நான் இறந்த பின்னர் மண்ணறையிலிருந்து உயிரோடு) வெளிக் கொணரப்படுவேன் என்று என்னை அச்சுறுத்துகின்றீர்களா? எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறை’னர் வாழ்ந்து சென்றுள்ளார்களே! (அவர்களில் எவரும் மண்ணறையிலிருந்து எழுந்து வரவில்லையே!)” என்று கூறுகிறான். பெற்றோர் இருவரும் (மகனுக் காக) அல்லாஹ்வின் உதவியை வேண்டியவர்களாக, ‘‘உனக்குக் கேடுதான்! நம்பிக்கை கொள்! அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது” என்று கூறகின்றார்கள். ஆனால், அவனோ ‘‘இவையெல்லாம் முன்னோர்களின் கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை” என்று கூறுகின்றான் (எனும் 46:17ஆவது இறைவசனம்)
4827. யூசுஃப் பின் மாஹக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மர்வான் பின் அல்ஹகமை ஹிஜாஸ் மாகாணத்தின் ஆளுனராக முஆவியா (ரலி) அவர்கள் நியமித்திருந்தார்கள். மர்வான் (ஒருநாள் மக்களை ஒன்றுகூட்டி,) உரை நிகழ்த்தினார். அப்போது, முஆவியா (ரலி) அவர்களுடைய புதல்வர் யஸீத் குறித்துப் பேசியவாறு முஆவியாவுக்குப் பின்னர் யஸீதுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) செய்ய வேண்டுமெனக் கூறினார்.

அப்போது அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் மர்வானுக்கு (மறுப்புத் தெரிவித்து) ஏதோ கூறினார். உடனே மர்வான் ‘‘அவரைப் பிடியுங்கள்!” என்று (தம் சிப்பாய்களுக்கு) உத்தரவிட்டார். உடனே அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் தம் சகோதரி ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லத்திற்குள் நுழைந்துகொண்டார்கள். ஆகவே, அவரைப் பிடிக்க அவர்களுக்குத் துணிச்சல் ஏற்படவில்லை.

அப்போது மர்வான், ‘‘ஒருவன் தன் பெற்றோரிடம் ‘‘சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (நான் இறந்த பின்னர் (மண்ணறையிலிருந்து உயிரோடு) வெளிக்கொணரப்படுவேன் என்று என்னை அச்சுறுத்துகிறீர்களா?...” எனும் (46:17ஆவது) வசனத்தை இவர் (போன்றவர்களின்) விஷயத்தில்தான் அல்லாஹ் அருளினான்” என்று கூறினார்.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் திரைக்கப்பால் இருந்துகொண்டு, ‘‘(அபூபக்ர் (ரலி) அவர்களின் குடும்பத்தாராகிய) எங்கள் விஷயத்தில், என் கற்பொழுக்கத்தை அறிவிக்கும் வசனத்தைத் தவிர, வேறு எந்த வசனத்தையும் குர்ஆனில் அல்லாஹ் அருளவில்லை” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 65
4828. حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرٌو، أَنَّ أَبَا النَّضْرِ، حَدَّثَهُ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ضَاحِكًا حَتَّى أَرَى مِنْهُ لَهَوَاتِهِ، إِنَّمَا كَانَ يَتَبَسَّمُ.
பாடம்: 2 ‘‘ஆனால், அவர்கள் (தங்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) தாங்கள் வசித்துவந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், ‘இது நமக்கு மழையைப் பொழிவிக்கக்கூடிய மேகமாகும்’ என்று கூறினார்கள். ‘அப்படியல்ல! மாறாக, நீங்கள் எதற்காக அவசரப்பட்டுக்கொண்டிருந்தீர்களோ அதுதான் இது! இது (புயல்) காற்று; இதில் வதைக்கும் வேதனை உண்டு’ (எனக் கூறப்பட்டது)” எனும் (46:24 ஆவது) இறைவசனம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆரிள்’ எனும் சொல்லுக்கு ‘மேகம்’ என்பது பொருள்.
4828. நபி (ஸல்) அவர்களுடைய துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உள்நாக்குத் தெரியும் அளவுக்குச் சிரிப்பவர்களாகக் கண்ட தில்லை. அவர்கள் புன்னகைப்பவர்களா கவே இருந்தார்கள்.2

அத்தியாயம் : 65
4829. قَالَتْ وَكَانَ إِذَا رَأَى غَيْمًا أَوْ رِيحًا عُرِفَ فِي وَجْهِهِ. قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ النَّاسَ إِذَا رَأَوُا الْغَيْمَ فَرِحُوا، رَجَاءَ أَنْ يَكُونَ فِيهِ الْمَطَرُ، وَأَرَاكَ إِذَا رَأَيْتَهُ عُرِفَ فِي وَجْهِكَ الْكَرَاهِيَةُ. فَقَالَ " يَا عَائِشَةُ مَا يُؤْمِنِّي أَنْ يَكُونَ فِيهِ عَذَابٌ عُذِّبَ قَوْمٌ بِالرِّيحِ، وَقَدْ رَأَى قَوْمٌ الْعَذَابَ فَقَالُوا {هَذَا عَارِضٌ مُمْطِرُنَا}"
பாடம்: 2 ‘‘ஆனால், அவர்கள் (தங்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) தாங்கள் வசித்துவந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், ‘இது நமக்கு மழையைப் பொழிவிக்கக்கூடிய மேகமாகும்’ என்று கூறினார்கள். ‘அப்படியல்ல! மாறாக, நீங்கள் எதற்காக அவசரப்பட்டுக்கொண்டிருந்தீர்களோ அதுதான் இது! இது (புயல்) காற்று; இதில் வதைக்கும் வேதனை உண்டு’ (எனக் கூறப்பட்டது)” எனும் (46:24 ஆவது) இறைவசனம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆரிள்’ எனும் சொல்லுக்கு ‘மேகம்’ என்பது பொருள்.
4829. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி (ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒருநாள்) நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும்போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘‘ஆயிஷா! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. (‘ஆத்’ எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்துவிட்டு, ‘இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்’ என்றே கூறினர்” எனப் பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 65
4830. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ أَبِي مُزَرَّدٍ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " خَلَقَ اللَّهُ الْخَلْقَ، فَلَمَّا فَرَغَ مِنْهُ قَامَتِ الرَّحِمُ فَأَخَذَتْ بِحَقْوِ الرَّحْمَنِ فَقَالَ لَهَا مَهْ. قَالَتْ هَذَا مَقَامُ الْعَائِذِ بِكَ مِنَ الْقَطِيعَةِ. قَالَ أَلاَ تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ. قَالَتْ بَلَى يَا رَبِّ. قَالَ فَذَاكِ لَكِ ". قَالَ أَبُو هُرَيْرَةَ اقْرَءُوا إِنْ شِئْتُمْ {فهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ}
பாடம்: 47. ‘முஹம்மத்’ அத்தியாயம்1 (47:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அவ்ஸாரஹா’ எனும் சொல்லுக்கு ‘எதிரணியின் பாவங்கள் முற்றுப்பெற்று அல்லாஹ்விற்குக் கீழ்ப்படிந்தவர் தவிர வேறெவரும் எஞ்சாத வரையில்’ என்று பொருள். (47:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ரஃபஹா’ எனும் சொல்லுக்கு ‘எந்த சொர்க்கத்தை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறானோ’ என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (47:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மவ்லல்லதீன ஆமனூ’ எனும் சொற்றொடருக்கு, ‘‘நம்பிக்கையாளர்களுக்கு உதவிபுரிந்து பாதுகாப்பவன்’ என்று பொருள். (47:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸமல் அம்ர்’ எனும் சொற்றொட ருக்கு ‘கட்டளை முடிவானது’ என்று பொருள். (47:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபலா தஹினூ’ எனும் சொல்லுக்கு ‘எனவே, நீங்கள் பலவீனமடைந்துவிடாதீர்கள்’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (47:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அள்ஃகானஹும்’ எனும் சொல்லுக்கு ‘அவர்களின் குரோதங்கள்’ என்று பொருள். (47:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆசின்’ எனும் சொல்லுக்கு ‘சுவை மாறுகின்ற’ என்று பொருள். (இதன்படி, ‘ஃகைரி ஆசினின்’ என்பதற்கு ‘சுவை மாறாத’ என்று பொருள் அமையும்). பாடம்: 1 மேலும், நீங்கள் உங்கள் (இரத்த பந்த) உறவுகளைத் துண்டித்துவிட முனைகிறீர்களா? (எனும் 47:22ஆவது வசனத்தொடர்)
4830. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து அருளாளன் அல்லாஹ்வின் அரியணையின் கால்களில் ஒன்றைப் பற்றி(க்கொண்டு மன்றாடி)யது. அப்போது அல்லாஹ், ‘‘என்ன?” என்று கேட்டான். அதற்கு உறவு, ‘‘உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரி நிற்கிறேன்” என்று கூறியது. ‘‘உன்னை (உறவை)ப் பேணி நல்ல முறையில் நடந்துகொள்பவருடன் நானும் நல்ல முறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்துவிடுகின்றவரை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?” என்று கேட்டான். அதற்கு உறவு, ‘‘ஆம் (திருப்தியே) என் இறைவா!” என்று கூறியது. அல்லாஹ் ‘‘இது (அவ்வாறுதான்) நடக்கும்” என்று கூறினான்.

அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘நீங்கள் விரும்பினால், ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக்கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?’ எனும் (47:22ஆவது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 65
4831. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ مُعَاوِيَةَ، قَالَ حَدَّثَنِي عَمِّي أَبُو الْحُبَابِ، سَعِيدُ بْنُ يَسَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ، بِهَذَا، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم اقْرَءُوا إِنْ شِئْتُمْ {فَهَلْ عَسَيْتُمْ}
பாடம்: 47. ‘முஹம்மத்’ அத்தியாயம்1 (47:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அவ்ஸாரஹா’ எனும் சொல்லுக்கு ‘எதிரணியின் பாவங்கள் முற்றுப்பெற்று அல்லாஹ்விற்குக் கீழ்ப்படிந்தவர் தவிர வேறெவரும் எஞ்சாத வரையில்’ என்று பொருள். (47:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ரஃபஹா’ எனும் சொல்லுக்கு ‘எந்த சொர்க்கத்தை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறானோ’ என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (47:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மவ்லல்லதீன ஆமனூ’ எனும் சொற்றொடருக்கு, ‘‘நம்பிக்கையாளர்களுக்கு உதவிபுரிந்து பாதுகாப்பவன்’ என்று பொருள். (47:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸமல் அம்ர்’ எனும் சொற்றொட ருக்கு ‘கட்டளை முடிவானது’ என்று பொருள். (47:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபலா தஹினூ’ எனும் சொல்லுக்கு ‘எனவே, நீங்கள் பலவீனமடைந்துவிடாதீர்கள்’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (47:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அள்ஃகானஹும்’ எனும் சொல்லுக்கு ‘அவர்களின் குரோதங்கள்’ என்று பொருள். (47:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆசின்’ எனும் சொல்லுக்கு ‘சுவை மாறுகின்ற’ என்று பொருள். (இதன்படி, ‘ஃகைரி ஆசினின்’ என்பதற்கு ‘சுவை மாறாத’ என்று பொருள் அமையும்). பாடம்: 1 மேலும், நீங்கள் உங்கள் (இரத்த பந்த) உறவுகளைத் துண்டித்துவிட முனைகிறீர்களா? (எனும் 47:22ஆவது வசனத்தொடர்)
4831. சயீத் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மேற்கண்ட இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்து விட்டுப் பிறகு, ‘‘நீங்கள் விரும்பினால், ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக்கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?’ எனும் (47:22ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 65
4832. حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مُعَاوِيَةُ بْنُ أَبِي الْمُزَرَّدِ، بِهَذَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ {فَهَلْ عَسَيْتُمْ}
பாடம்: 47. ‘முஹம்மத்’ அத்தியாயம்1 (47:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அவ்ஸாரஹா’ எனும் சொல்லுக்கு ‘எதிரணியின் பாவங்கள் முற்றுப்பெற்று அல்லாஹ்விற்குக் கீழ்ப்படிந்தவர் தவிர வேறெவரும் எஞ்சாத வரையில்’ என்று பொருள். (47:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ரஃபஹா’ எனும் சொல்லுக்கு ‘எந்த சொர்க்கத்தை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறானோ’ என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (47:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மவ்லல்லதீன ஆமனூ’ எனும் சொற்றொடருக்கு, ‘‘நம்பிக்கையாளர்களுக்கு உதவிபுரிந்து பாதுகாப்பவன்’ என்று பொருள். (47:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸமல் அம்ர்’ எனும் சொற்றொட ருக்கு ‘கட்டளை முடிவானது’ என்று பொருள். (47:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபலா தஹினூ’ எனும் சொல்லுக்கு ‘எனவே, நீங்கள் பலவீனமடைந்துவிடாதீர்கள்’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (47:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அள்ஃகானஹும்’ எனும் சொல்லுக்கு ‘அவர்களின் குரோதங்கள்’ என்று பொருள். (47:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆசின்’ எனும் சொல்லுக்கு ‘சுவை மாறுகின்ற’ என்று பொருள். (இதன்படி, ‘ஃகைரி ஆசினின்’ என்பதற்கு ‘சுவை மாறாத’ என்று பொருள் அமையும்). பாடம்: 1 மேலும், நீங்கள் உங்கள் (இரத்த பந்த) உறவுகளைத் துண்டித்துவிட முனைகிறீர்களா? (எனும் 47:22ஆவது வசனத்தொடர்)
4832. மேற்சொன்ன இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(47:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆசின்’ எனும் சொல்லுக்கு ‘மாறுகின்ற’ என்பது பொருள்.

அத்தியாயம் : 65
4833. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَسِيرُ فِي بَعْضِ أَسْفَارِهِ وَعُمَرُ بْنُ الْخَطَّابِ يَسِيرُ مَعَهُ لَيْلاً، فَسَأَلَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ عَنْ شَىْءٍ، فَلَمْ يُجِبْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ سَأَلَهُ فَلَمْ يُجِبْهُ، ثُمَّ سَأَلَهُ فُلَمْ يُجِبْهُ، فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ثَكِلَتْ أُمُّ عُمَرَ، نَزَرْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَ مَرَّاتٍ، كُلَّ ذَلِكَ لاَ يُجِيبُكَ. قَالَ عُمَرُ فَحَرَّكْتُ بَعِيرِي، ثُمَّ تَقَدَّمْتُ أَمَامَ النَّاسِ، وَخَشِيتُ أَنْ يُنْزَلَ فِيَّ الْقُرْآنُ، فَمَا نَشِبْتُ أَنْ سَمِعْتُ صَارِخًا يَصْرُخُ بِي فَقُلْتُ لَقَدْ خَشِيتُ أَنْ يَكُونَ نَزَلَ فِيَّ قُرْآنٌ. فَجِئْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَسَلَّمْتُ عَلَيْهِ فَقَالَ " لَقَدْ أُنْزِلَتْ عَلَىَّ اللَّيْلَةَ سُورَةٌ لَهِيَ أَحَبُّ إِلَىَّ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ ". ثُمَّ قَرَأَ "{إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا}"
பாடம்: 48. ‘அல்ஃபத்ஹ்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (48:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பூறா’ எனும் சொல்லுக்கு ‘அழிவிற்குள்ளானவர்கள்’ என்பது பொருள். (48:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சீமாஹும் ஃபீ வுஜூஹிஹிம்’ (அவர்களின் முகங்களில் உள்ள அடையாளம்) என்பது, முகமலர்ச்சியைக் குறிக்கும் என்று முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஓர் அறிவிப்பில் காணப்படுகிறது. மன்ஸூர் பின் முஃதமிர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘‘அது பணிவைக் குறிக்கும்” என்று முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது. (மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஷத்அஹு’ எனும் சொல்லுக்கு, ‘அதன் தளிர்’ என்பது பொருள். ‘ஃபஸ்தஃக்லழ’ எனும் சொல்லுக்கு ‘அது பருத்துக் கனமாகிறது’ என்று பொருள். ‘சூக்’ எனும் சொல்லுக்கு ‘பயிரைத் தாங்கி நிற்கும் தண்டு’ என்பது பொருள் . (48:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தாயிரத்துஸ் ஸவ்ஃ’ எனும் சொல்லுக்கு ‘தீமையின் சுழற்சி’ என்று பொருள். ‘ரஜ்லுஸ் ஸவ்ஃ’ (தீய மனிதன்) என்று சொல்லப்படுவதுபோல் இங்கு (தீமையின் சுழற்சி என்று சொல்லப்பட்டுள்ளது.) ‘தீமையின் சுழற்சி’ என்பது (இறைவன் அளிக்கும்) வேதனையைக் குறிக்கும். (48:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துஅஸ்ஸிரூஹு’ எனும் சொல்லுக்கு, ‘நீங்கள் அவருக்கு உதவி புரிவீர்கள்’ என்று பொருள். (48:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஷத்அஹு’ (அதன் தளிர்) என்பது, கதிரின் தளிரைக் குறிக்கும். அந்தக் கதிர் பத்து, அல்லது எட்டு, அல்லது ஏழு தானிய விதையைத் தந்து ஒன்றை மற்றொன்றுடன் சேர்த்து பலப்படுத்துகிறது. இதைத்தான் அல்லாஹ், ‘ஃபஆஸரஹு’ (அதனைப் பலப்படுத்தியது) என்று கூறுகின்றான். அந்தக் கதிர் ஒன்றே ஒன்றாக இருக்குமானால், ஒரு தண்டின் மீது நிலைத்து நிற்க முடியாது. இது நபி (ஸல்) அவர்கள் குறித்து அல்லாஹ் கூறியுள்ள உவமையாகும். (இஸ்லாமிய அழைப்புப் பணிக்காக,) நபி (ஸல்) அவர்கள் தன்னந்தனியாகப் புறப்பட்டார்கள். முளைத்துவரும் தளிரின் மூலம் விதைக்கு வலுவூட்டுவது போல், அவர்களுடைய தோழர்கள் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வலுவூட்டினான். பாடம்: 1 நபியே! நாம் உமக்கு வெளிப்படை யான வெற்றியை அளித்துள் ளோம் (எனும் 48:1ஆவது இறைவசனம்)
4833. அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் நபி அவர் களுடன் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் ஏதோ ஒன்றைக் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. பிறகு (மீண்டும்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை.

பிறகு (மூன்றாம் முறையாக) உமர் கேட்டார்கள். அப்போதும் நபிகளார் பதிலளிக்கவில்லை. பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தம்மைத் தாமே கடிந்து கொண்டவர்களாக), ‘‘உம்மை உமரின் தாய் இழக்கட்டும்! மூன்று முறை (கேள்வி கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை வற்புறுத்தினாய். அந்த ஒவ்வொரு முறையும் அவர்கள் உனக்கு பதிலளிக்கவில்லையே” என்று கூறினார்கள்.

மேலும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதற்குப் பிறகு நான் எனது ஒட்டகத்தைச் செலுத்தி மக்களுக்கு முன்னால் வந்தேன். (அல்லாஹ்வின் தூதரிடம் இப்படி நான் நடந்துகொண்டதற்காக) என் விஷயத்தில் ஏதாவது குர்ஆன் (வசனம்) அருளப்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சினேன்.

சற்று நேரத்திற்குள் என்னை ஒருவர் சப்தமிட்டு அழைப்பதைக் கேட்டேன். நான் நினைத்தபடி என் விஷயத்தில் குர்ஆன் (வசனம்) இறங்கிவிட்டிருக்கும் என அஞ்சினேன் என்று சொல்லிக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் சொன்னேன்.

அப்போது அவர்கள், ‘‘இந்த இரவு எனக்கு ஒரு (குர்ஆன்) அத்தியாயம் அருளப்பட்டுள்ளது. சூரியன் எதன்மீது உதயமாகிறதோ அ(ந்த உலகத்)தைவிட எனக்கு அந்த அத்தியாயம் மிகவும் விருப்பமானதாகும்” என்று கூறிவிட்டு, ‘‘உமக்கு நாம் வெளிப்படையான வெற்றியை அளித்துள்ளோம்” என்று (தொடங்கும் 48:1ஆவது இறைவசனத்தை) ஓதினார்கள்.2

அத்தியாயம் : 65
4834. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ {إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا} قَالَ الْحُدَيْبِيَةُ.
பாடம்: 48. ‘அல்ஃபத்ஹ்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (48:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பூறா’ எனும் சொல்லுக்கு ‘அழிவிற்குள்ளானவர்கள்’ என்பது பொருள். (48:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சீமாஹும் ஃபீ வுஜூஹிஹிம்’ (அவர்களின் முகங்களில் உள்ள அடையாளம்) என்பது, முகமலர்ச்சியைக் குறிக்கும் என்று முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஓர் அறிவிப்பில் காணப்படுகிறது. மன்ஸூர் பின் முஃதமிர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘‘அது பணிவைக் குறிக்கும்” என்று முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது. (மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஷத்அஹு’ எனும் சொல்லுக்கு, ‘அதன் தளிர்’ என்பது பொருள். ‘ஃபஸ்தஃக்லழ’ எனும் சொல்லுக்கு ‘அது பருத்துக் கனமாகிறது’ என்று பொருள். ‘சூக்’ எனும் சொல்லுக்கு ‘பயிரைத் தாங்கி நிற்கும் தண்டு’ என்பது பொருள் . (48:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தாயிரத்துஸ் ஸவ்ஃ’ எனும் சொல்லுக்கு ‘தீமையின் சுழற்சி’ என்று பொருள். ‘ரஜ்லுஸ் ஸவ்ஃ’ (தீய மனிதன்) என்று சொல்லப்படுவதுபோல் இங்கு (தீமையின் சுழற்சி என்று சொல்லப்பட்டுள்ளது.) ‘தீமையின் சுழற்சி’ என்பது (இறைவன் அளிக்கும்) வேதனையைக் குறிக்கும். (48:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துஅஸ்ஸிரூஹு’ எனும் சொல்லுக்கு, ‘நீங்கள் அவருக்கு உதவி புரிவீர்கள்’ என்று பொருள். (48:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஷத்அஹு’ (அதன் தளிர்) என்பது, கதிரின் தளிரைக் குறிக்கும். அந்தக் கதிர் பத்து, அல்லது எட்டு, அல்லது ஏழு தானிய விதையைத் தந்து ஒன்றை மற்றொன்றுடன் சேர்த்து பலப்படுத்துகிறது. இதைத்தான் அல்லாஹ், ‘ஃபஆஸரஹு’ (அதனைப் பலப்படுத்தியது) என்று கூறுகின்றான். அந்தக் கதிர் ஒன்றே ஒன்றாக இருக்குமானால், ஒரு தண்டின் மீது நிலைத்து நிற்க முடியாது. இது நபி (ஸல்) அவர்கள் குறித்து அல்லாஹ் கூறியுள்ள உவமையாகும். (இஸ்லாமிய அழைப்புப் பணிக்காக,) நபி (ஸல்) அவர்கள் தன்னந்தனியாகப் புறப்பட்டார்கள். முளைத்துவரும் தளிரின் மூலம் விதைக்கு வலுவூட்டுவது போல், அவர்களுடைய தோழர்கள் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வலுவூட்டினான். பாடம்: 1 நபியே! நாம் உமக்கு வெளிப்படை யான வெற்றியை அளித்துள் ளோம் (எனும் 48:1ஆவது இறைவசனம்)
4834. கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘(நபியே!) நாம் உமக்கு வெளிப்படை யான வெற்றியை அளித்துள்ளோம்” எனும் (48:1ஆவது) இறைவசனம் ஹுதைபியா உடன்படிக்கையையே குறிக்கிறது” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.3

அத்தியாயம் : 65
4835. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ قُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ قَرَأَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ فَتْحِ مَكَّةَ سُورَةَ الْفَتْحِ فَرَجَّعَ فِيهَا. قَالَ مُعَاوِيَةُ لَوْ شِئْتُ أَنْ أَحْكِيَ لَكُمْ قِرَاءَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم لَفَعَلْتُ.
பாடம்: 48. ‘அல்ஃபத்ஹ்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (48:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பூறா’ எனும் சொல்லுக்கு ‘அழிவிற்குள்ளானவர்கள்’ என்பது பொருள். (48:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சீமாஹும் ஃபீ வுஜூஹிஹிம்’ (அவர்களின் முகங்களில் உள்ள அடையாளம்) என்பது, முகமலர்ச்சியைக் குறிக்கும் என்று முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஓர் அறிவிப்பில் காணப்படுகிறது. மன்ஸூர் பின் முஃதமிர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘‘அது பணிவைக் குறிக்கும்” என்று முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது. (மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஷத்அஹு’ எனும் சொல்லுக்கு, ‘அதன் தளிர்’ என்பது பொருள். ‘ஃபஸ்தஃக்லழ’ எனும் சொல்லுக்கு ‘அது பருத்துக் கனமாகிறது’ என்று பொருள். ‘சூக்’ எனும் சொல்லுக்கு ‘பயிரைத் தாங்கி நிற்கும் தண்டு’ என்பது பொருள் . (48:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தாயிரத்துஸ் ஸவ்ஃ’ எனும் சொல்லுக்கு ‘தீமையின் சுழற்சி’ என்று பொருள். ‘ரஜ்லுஸ் ஸவ்ஃ’ (தீய மனிதன்) என்று சொல்லப்படுவதுபோல் இங்கு (தீமையின் சுழற்சி என்று சொல்லப்பட்டுள்ளது.) ‘தீமையின் சுழற்சி’ என்பது (இறைவன் அளிக்கும்) வேதனையைக் குறிக்கும். (48:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துஅஸ்ஸிரூஹு’ எனும் சொல்லுக்கு, ‘நீங்கள் அவருக்கு உதவி புரிவீர்கள்’ என்று பொருள். (48:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஷத்அஹு’ (அதன் தளிர்) என்பது, கதிரின் தளிரைக் குறிக்கும். அந்தக் கதிர் பத்து, அல்லது எட்டு, அல்லது ஏழு தானிய விதையைத் தந்து ஒன்றை மற்றொன்றுடன் சேர்த்து பலப்படுத்துகிறது. இதைத்தான் அல்லாஹ், ‘ஃபஆஸரஹு’ (அதனைப் பலப்படுத்தியது) என்று கூறுகின்றான். அந்தக் கதிர் ஒன்றே ஒன்றாக இருக்குமானால், ஒரு தண்டின் மீது நிலைத்து நிற்க முடியாது. இது நபி (ஸல்) அவர்கள் குறித்து அல்லாஹ் கூறியுள்ள உவமையாகும். (இஸ்லாமிய அழைப்புப் பணிக்காக,) நபி (ஸல்) அவர்கள் தன்னந்தனியாகப் புறப்பட்டார்கள். முளைத்துவரும் தளிரின் மூலம் விதைக்கு வலுவூட்டுவது போல், அவர்களுடைய தோழர்கள் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வலுவூட்டினான். பாடம்: 1 நபியே! நாம் உமக்கு வெளிப்படை யான வெற்றியை அளித்துள் ளோம் (எனும் 48:1ஆவது இறைவசனம்)
4835. அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் (தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி) ‘அல்ஃபத்ஹ்’ எனும் (48ஆவது) அத்தியாயத்தைத் ‘தர்ஜீஉ’ செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக்கொண்டிருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஓதியதைப் போன்று உங்களிடம் நான் ஓதிக்காட்ட நினைத்தால் (அவ்வாறு) நான் செய்திருப்பேன்.4

அத்தியாயம் : 65
4836. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا زِيَادٌ، أَنَّهُ سَمِعَ الْمُغِيرَةَ، يَقُولُ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى تَوَرَّمَتْ قَدَمَاهُ فَقِيلَ لَهُ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ قَالَ " أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا ".
பாடம்: 2 ‘‘(நபியே!) உம்முடைய முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதற்காகவும் அவன் தனது அருட்கொடையை உமக்கு நிறைவு செய்து, உமக்கு நல்வழி காட்டுவதற்காகவும்தான் (அந்த வெற்றியை அவன் வழங்கினான்)” எனும் (48:2ஆவது) இறைவசனம்
4836. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவுக்கு நின்று (அல்லாஹ்வைத்) தொழுதார்கள். அப்போது அவர்களிடம் ‘‘தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே! (பிறகு ஏன் நீங்கள் இந்த அளவுக்கு சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டும்?)” என்று கேட்கப்பட்டது. (அதற்கு அவர்கள்,) ‘‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?” என்று கேட்டார்கள்.5

அத்தியாயம் : 65
4837. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا حَيْوَةُ، عَنْ أَبِي الأَسْوَدِ، سَمِعَ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقُومُ مِنَ اللَّيْلِ حَتَّى تَتَفَطَّرَ قَدَمَاهُ فَقَالَتْ عَائِشَةُ لِمَ تَصْنَعُ هَذَا يَا رَسُولَ اللَّهِ وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ قَالَ " أَفَلاَ أُحِبُّ أَنْ أَكُونَ عَبْدًا شَكُورًا ". فَلَمَّا كَثُرَ لَحْمُهُ صَلَّى جَالِسًا فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ قَامَ، فَقَرَأَ ثُمَّ رَكَعَ.
பாடம்: 2 ‘‘(நபியே!) உம்முடைய முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதற்காகவும் அவன் தனது அருட்கொடையை உமக்கு நிறைவு செய்து, உமக்கு நல்வழி காட்டுவதற்காகவும்தான் (அந்த வெற்றியை அவன் வழங்கினான்)” எனும் (48:2ஆவது) இறைவசனம்
4837. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவுக்கு நின்று வழிபடுவார்கள். ஆகவே நான், ‘‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே! தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்ப வேண்டாமா?” என்று கேட்டார்கள்.

(தம் வாழ்நாளின் கடைசிக் காலத்தில்) நபி (ஸல்) அவர்களின் உடல் சதை போட்டபோது அமர்ந்து தொழுதார்கள். ‘ருகூஉ’ செய்ய நினைக்கும்போது, எழுந்து (சிறிது நேரம்) ஓதுவார்கள். பிறகு, ‘ருகூஉ’ செய்வார்கள்.6

அத்தியாயம் : 65
4838. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ هِلاَلِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ـ رضى الله عنهما ـ أَنَّ هَذِهِ، الآيَةَ الَّتِي فِي الْقُرْآنِ {يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا} قَالَ فِي التَّوْرَاةِ يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَحِرْزًا لِلأُمِّيِّينَ، أَنْتَ عَبْدِي وَرَسُولِي سَمَّيْتُكَ الْمُتَوَكِّلَ لَيْسَ بِفَظٍّ وَلاَ غَلِيظٍ وَلاَ سَخَّابٍ بِالأَسْوَاقِ وَلاَ يَدْفَعُ السَّيِّئَةَ بِالسَّيِّئَةِ وَلَكِنْ يَعْفُو وَيَصْفَحُ وَلَنْ يَقْبِضَهُ اللَّهُ حَتَّى يُقِيمَ بِهِ الْمِلَّةَ الْعَوْجَاءَ بِأَنْ يَقُولُوا لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ فَيَفْتَحَ بِهَا أَعْيُنًا عُمْيًا وَآذَانًا صُمًّا وَقُلُوبًا غُلْفًا.
பாடம்: 3 (நபியே!) நிச்சயமாக நாம் உம்மை சான்று வழங்குபவராகவும், நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம் (எனும் 48:8ஆவது இறைவசனம்)
4838. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘(நபியே!) நிச்சயமாக நாம் உம்மை (விசுவாசிகளின் விசுவாசம் குறித்து) சான்று பகர்பவராகவும், (அவர்களுக்கு) நற்செய்தி அறிவிப்பவராகவும், (பாவிகளுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம்” எனும் இந்த (48:8ஆவது) குர்ஆன் வசனத்தையே ‘தவ்ராத்’ வேதத்தில் (இறைவன்) பின்வருமாறு கூறினான்:

‘‘நபியே! நிச்சயமாக நாம் உம்மை சான்று பகர்பவராகவும், நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், எழுத வாசிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம். நீர் என் அடியாரும் என் தூதருமாவீர். தம் காரியங்கள் அனைத்திலும் அல்லாஹ் வையே சார்ந்திருப்பவர் (‘முத்தவக்கில்’) என்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன் (என அவரிடம் கூறுவோம்).

(என் தூதரான) அவர் கடின சித்தமுடையவராகவோ, முரட்டுத்தனம் கொண்டவராகவோ, கடைவீதியில் கூச்சலிட்டுச் சச்சரவு செய்பவராகவோ இருக்கமாட்டார். ஒரு தீமைக்கு இன்னொரு தீமையால் தீர்வு காணமாட்டார். மாறாக, மன்னித்து விட்டுவிடுவார். வளைந்த சமுதாயத்தை அவர் மூலம் நிமிர்த்தும்வரை அல்லாஹ் அவரது உயிரைக் கைப்பற்றமாட்டான்.

மக்கள் ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று கூறுவார்கள். (ஓரிறைக் கோட்பாடான) அதன் மூலம் அவர் குருட்டுக் கண்களையும், செவிட்டுக் காதுகளையும், திரையிடப்பட்ட உள்ளங்களையும் திறப்பார்.7

அத்தியாயம் : 65
4839. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَمَا رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَقْرَأُ، وَفَرَسٌ لَهُ مَرْبُوطٌ فِي الدَّارِ، فَجَعَلَ يَنْفِرُ، فَخَرَجَ الرَّجُلُ فَنَظَرَ فَلَمْ يَرَ شَيْئًا، وَجَعَلَ يَنْفِرُ، فَلَمَّا أَصْبَحَ ذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " تِلْكَ السَّكِينَةُ تَنَزَّلَتْ بِالْقُرْآنِ ".
பாடம்: 4 அவன்தான் இறைநம்பிக்கை யாளர்களின் இதயங்களில் அமைதியை அருளினான் (எனும் 48:4ஆவது வசனத்தொடர்)
4839. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபித்தோழர்களில் ஒருவர் (குர்ஆன்) ஓதிக்கொண்டிருந்தார். அவரது குதிரை அவர் வீட்டில் கட்டப்பட்டிருந்தது.

அப்போது அது மிரளத் தொடங்கியது. அவர் வெளியே வந்து பார்த்தபோது, ஒன்றையும் அவர் காணவில்லை. (அப்போதும்) அது மிரண்டுகொண்டி ருந்தது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் அந்த விஷயத்தைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது” என்று கூறினர்கள்.8

அத்தியாயம் : 65
4840. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرٍ، قَالَ كُنَّا يَوْمَ الْحُدَيْبِيَةِ أَلْفًا وَأَرْبَعَمِائَةٍ.
பாடம்: 5 ‘‘(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்துகொண்டிருந்தபோது அவர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தி அடைந்துகொண்டான்” எனும் (48:18ஆவது) வசனத்தொடர்
4840. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுதைபியா நாளன்று நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம்.9

அத்தியாயம் : 65
4841. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ عُقْبَةَ بْنَ صُهْبَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ، إِنِّي مِمَّنْ شَهِدَ الشَّجَرَةَ، نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الْخَذْفِ.
பாடம்: 5 ‘‘(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்துகொண்டிருந்தபோது அவர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தி அடைந்துகொண்டான்” எனும் (48:18ஆவது) வசனத்தொடர்
4841. அந்த மரத்தின்கீழ் நடைபெற்ற (‘பைஅத்துர் ரிள்வான்’ எனும்) சத்தியப் பிரமாணத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான அப்துல்லாஹ்பின் முகஃப்பல் அல்முஸ்னீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பொடிக்கற்களை இரு விரல்களால் எறிந்து விளையாடும்) ‘கத்ஃப்’ எனும் கல் சுண்டு விளையாட்டிற்குத் தடை விதித்தார்கள்.10

அத்தியாயம் : 65
4842. وَعَنْ عُقْبَةَ بْنِ صُهْبَانَ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الْمُغَفَّلِ الْمُزَنِيِّ، فِي الْبَوْلِ فِي الْمُغْتَسَلِ.
பாடம்: 5 ‘‘(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்துகொண்டிருந்தபோது அவர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தி அடைந்துகொண்டான்” எனும் (48:18ஆவது) வசனத்தொடர்
4842. உக்பா பின் ஸுஹ்பான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

குளியலறையில் சிறுநீர் கழிப்பது தொடர்பாக அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன். (நபி (ஸல்) அவர்கள் அதற்குத் தடை விதித்ததாக அன்னார் தெரிவித்தார்கள்.)11

அத்தியாயம் : 65
4843. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ ـ رضى الله عنه ـ وَكَانَ مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ.
பாடம்: 5 ‘‘(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்துகொண்டிருந்தபோது அவர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தி அடைந்துகொண்டான்” எனும் (48:18ஆவது) வசனத்தொடர்
4843. அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அந்த மரத்(தின்கீழ் சத்தியப் பிரமாணம் செய்)தவர்களில் ஒருவரான ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் (கூறினார்கள்:)12

அத்தியாயம் : 65
4844. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ السُّلَمِيُّ، حَدَّثَنَا يَعْلَى، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ سِيَاهٍ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، قَالَ أَتَيْتُ أَبَا وَائِلٍ أَسْأَلُهُ فَقَالَ كُنَّا بِصِفِّينَ فَقَالَ رَجُلٌ أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يُدْعَوْنَ إِلَى كِتَابِ اللَّهِ. فَقَالَ عَلِيٌّ نَعَمْ. فَقَالَ سَهْلُ بْنُ حُنَيْفٍ اتَّهِمُوا أَنْفُسَكُمْ فَلَقَدْ رَأَيْتُنَا يَوْمَ الْحُدَيْبِيَةِ ـ يَعْنِي الصُّلْحَ الَّذِي كَانَ بَيْنَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالْمُشْرِكِينَ ـ وَلَوْ نَرَى قِتَالاً لَقَاتَلْنَا، فَجَاءَ عُمَرُ فَقَالَ أَلَسْنَا عَلَى الْحَقِّ وَهُمْ عَلَى الْبَاطِلِ أَلَيْسَ قَتْلاَنَا فِي الْجَنَّةِ وَقَتْلاَهُمْ فِي النَّارِ قَالَ " بَلَى ". قَالَ فَفِيمَ أُعْطِي الدَّنِيَّةَ فِي دِينِنَا، وَنَرْجِعُ وَلَمَّا يَحْكُمِ اللَّهُ بَيْنَنَا. فَقَالَ " يَا ابْنَ الْخَطَّابِ إِنِّي رَسُولُ اللَّهِ وَلَنْ يُضَيِّعَنِي اللَّهُ أَبَدًا ". فَرَجَعَ مُتَغَيِّظًا، فَلَمْ يَصْبِرْ حَتَّى جَاءَ أَبَا بَكْرٍ فَقَالَ يَا أَبَا بَكْرٍ أَلَسْنَا عَلَى الْحَقِّ وَهُمْ عَلَى الْبَاطِلِ قَالَ يَا ابْنَ الْخَطَّابِ إِنَّهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَنْ يُضَيِّعَهُ اللَّهُ أَبَدًا. فَنَزَلَتْ سُورَةُ الْفَتْحِ.
பாடம்: 5 ‘‘(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்துகொண்டிருந்தபோது அவர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தி அடைந்துகொண்டான்” எனும் (48:18ஆவது) வசனத்தொடர்
4844. ஹுபைப் பின் அபீஸாபித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம் (‘காரிஜிய்யா’ எனும் கிளர்ச்சியாளர்கள் குறித்து) கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்:

நாங்கள் ‘ஸிஃப்பீன்’ எனுமிடத்தில் இருந்தோம். அப்போது (‘அப்துல்லாஹ் பின் அல்கவ்வா’ என்றழைக்கப்படும்) ஒரு மனிதர், ‘‘அல்லாஹ்வின் வேதத்தின்பால் (தீர்ப்புக்காக) அழைக்கப்படுகின்றவர்களை நீங்கள் காணவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அலீ (ரலி) அவர்கள், ‘‘ஆம். (அல்லாஹ்வின் வேதம் கூறுகின்ற தீர்ப்புப்படி செயல்பட அழைப்பு விடுக்கப் பெற்றால் அதை நான் ஏற்றுக்கொள்வேன்”) என்று கூறினார்கள். அப்போது சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

(இப்போரில் கலந்துகொள்ளாததற்காக யார்மீதும் குற்றம் சாட்டாதீர்கள். மாறாக,) உங்களையே குற்றம் சாட்டிக்கொள்ளுங்கள். நபி (ஸல்) அவர்களுக்கும் இணைவைப்பாளர்களுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை நடைபெற்ற ஹுதைபியா நாளில் எங்களை நான் பார்த்திருக்கிறேன். அன்று, நாங்கள் போர் புரிவது உசிதமென்று கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். (ஆனால், போர் புரியாமல் இணைவைப்பாளர்கள் விதித்த பாதகமான நிபந்தனைகளைக்கூட ஏற்றுக்கொண்டோம்).

அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா? (சத்தியத்திற்காகப் போராடி) போரில் கொலையுண்டுவிடும்போது நம் வீரர்கள் சொர்க்கத்திலும் எதிரிகளுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘ஆம்” என்று பதிலளித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள், ‘‘அப்படியிருக்க, நாம் நமது மார்க்கத்தின் விஷயத்தில் எதற்காகத் தாழ்ந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்கும் இடையில் தீர்ப்பளிக்காமல் இருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்பிச் செல்ல வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘கத்தாபின் புதல்வரே! நான் அல்லாஹ்வுடைய தூதராவேன். என்னை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்” என்று கூறினார்கள்.

(முஸ்லிம்களை இழிவுக்குள்ளாக்க நினைக்கும் இணைவைப்பாளர்கள்மீது) உமர் (ரலி) அவர்கள் கோபம் கொண்ட நிலையில் திரும்பிச் சென்றார்கள். தாங்கிக்கொள்ள முடியாமல் அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து ‘‘அபூபக்ர் அவர்களே! நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா?” என்று (நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதைப் போன்றே) கேட்டார்கள்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் ‘‘கத்தாபின் புதல்வரே! நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்” என்று கூறினார்கள். அப்போது ‘அல்ஃபத்ஹ்’ எனும் (48ஆவது) அத்தியாயம் இறங்கிற்று.13

அத்தியாயம் : 65
4845. حَدَّثَنَا يَسَرَةُ بْنُ صَفْوَانَ بْنِ جَمِيلٍ اللَّخْمِيُّ، حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ كَادَ الْخَيِّرَانِ أَنْ يَهْلِكَا ـ أَبَا بَكْرٍ وَعُمَرَ ـ رضى الله عنهما ـ رَفَعَا أَصْوَاتَهُمَا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ قَدِمَ عَلَيْهِ رَكْبُ بَنِي تَمِيمٍ، فَأَشَارَ أَحَدُهُمَا بِالأَقْرَعِ بْنِ حَابِسٍ أَخِي بَنِي مُجَاشِعٍ، وَأَشَارَ الآخَرُ بِرَجُلٍ آخَرَ ـ قَالَ نَافِعٌ لاَ أَحْفَظُ اسْمَهُ ـ فَقَالَ أَبُو بَكْرٍ لِعُمَرَ مَا أَرَدْتَ إِلاَّ خِلاَفِي. قَالَ مَا أَرَدْتُ خِلاَفَكَ. فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا فِي ذَلِكَ، فَأَنْزَلَ اللَّهُ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَرْفَعُوا أَصْوَاتَكُمْ} الآيَةَ. قَالَ ابْنُ الزُّبَيْرِ فَمَا كَانَ عُمَرُ يُسْمِعُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ هَذِهِ الآيَةِ حَتَّى يَسْتَفْهِمَهُ. وَلَمْ يَذْكُرْ ذَلِكَ عَنْ أَبِيهِ، يَعْنِي أَبَا بَكْرٍ.
பாடம்: 49. ‘அல்ஹுஜுராத்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (49:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா துக்கத்திமூ’ (முந்தாதீர்கள்) எனும் சொல்லுக்கு ‘தன்னுடைய தூதரின் நாவால் அல்லாஹ் தீர்ப்பளிப்பதற்கு முன்பாக, முந்திக்கொண்டு நீங்களாகத் தீர்ப்பு வழங்க முற்படாதீர்கள்’ என்று பொருள். (49:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இம்தஹன’ (பரிசோதித்தான்) எனும் சொல்லுக்கு ‘தூய்மைப்படுத்தினான்’ என்று பொருள். (49:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா தனாபஸூ’ (புனைபெயர் சூட்டாதீர்கள்) என்பது இஸ்லாத்தை எற்றுக்கொண்ட பின்னர், ஒருவரை (அவரது பழைய) இறைமறுப்பு (மதத்து)டன் இணைத்து அழைப்பதைக் குறிக்கும். (49:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா யலித்கும்’ எனும் சொல்லுக்கு ‘குறைக்கமாட்டான்’ என்று பொருள். (இதன் இறந்தகால வினைச்சொல்லும், 52:21ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றதுமான) ‘வ மா அலத்னாஹும்’ எனும் சொல்லுக்கு ‘‘அவர்களுக்கு நாம் குறைத்துவிடமாட்டோம்” என்று பொருள். பாடம்: 1 ‘‘இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்குமேல் உயர்த்தாதீர்கள். மேலும், ஒருவர் மற்றவரிடம் உரத்த குரலில் பேசுவதைப் போல் நபியிடம் உரத்த குரலில் பேசாதீர்கள். நீங்கள் செய்த செயல்களெல்லாம், நீங்களே உணராத வகையில் வீணாகிவிடக் கூடும்” எனும் (49:2ஆவது) இறை வசனம் (இந்த வசனத்திலுள்ள) ‘நீங்கள் அறியாத நிலையில்’ என்பது (மூலத்திலுள்ள) ‘லா தஷ்உரூன்’ எனும் சொல்லின் பொருளாகும். இதன் அடிப்படையில்தான் ‘அஷ்ஷாஇர்’ (கவிஞர்) எனும் சொல்லுக்கு ‘அறிஞர்’ என்றும் பொருள் சொல்லப் படுகிறது.
4845. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நல்லவர்களான அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக்கொள்ள இருந்தார்கள். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பயணக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசினார்கள்.

அந்த இருவரில் ஒருவர் (உமர்), பனூ முஜாஷிஉ குலத்தாரான அக்ரஃ பின் ஹாபிஸ் அவர்களை நோக்கி (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார்.

மற்றொருவர் (அபூபக்ர்), இன்னொருவரை (கஅகாஉ பின் மஅபத்) நோக்கி, (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். -”அந்த இன்னொரு வருடைய பெயர் எனக்குத் தெரியாது” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.-

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், ‘‘எனக்கு மாறுசெய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள்” என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள், ‘‘தங்களுக்கு மாறுசெய்வது என் விருப்பமன்று” என்று சொன்னார்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போது, ‘‘இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் குரலை நபியின் குரலுக்குமேல் உயர்த்தாதீர்கள்!” எனும் (49:2ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.2

இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த வசனம் அருளப்பெற்றபின் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இந்த அளவுக்கு மெதுவாகப் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்துகொள்வார்கள்.

இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் இந்த ஹதீஸில் தம் பாட்டனார் அபூபக்ர் (ரலி) அவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை.

அத்தியாயம் : 65
4846. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَزْهَرُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنَا ابْنُ عَوْنٍ، قَالَ أَنْبَأَنِي مُوسَى بْنُ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم افْتَقَدَ ثَابِتَ بْنَ قَيْسٍ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَنَا أَعْلَمُ لَكَ عِلْمَهُ. فَأَتَاهُ فَوَجَدَهُ جَالِسًا فِي بَيْتِهِ مُنَكِّسًا رَأْسَهُ فَقَالَ لَهُ مَا شَأْنُكَ. فَقَالَ شَرٌّ. كَانَ يَرْفَعُ صَوْتَهُ فَوْقَ صَوْتِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَدْ حَبِطَ عَمَلُهُ، وَهْوَ مِنْ أَهْلِ النَّارِ. فَأَتَى الرَّجُلُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ أَنَّهُ قَالَ كَذَا وَكَذَا ـ فَقَالَ مُوسَى ـ فَرَجَعَ إِلَيْهِ الْمَرَّةَ الآخِرَةَ بِبِشَارَةٍ عَظِيمَةٍ فَقَالَ " اذْهَبْ إِلَيْهِ فَقُلْ لَهُ إِنَّكَ لَسْتَ مِنْ أَهْلِ النَّارِ، وَلَكِنَّكَ مِنْ أَهْلِ الْجَنَّةِ ".
பாடம்: 49. ‘அல்ஹுஜுராத்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (49:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா துக்கத்திமூ’ (முந்தாதீர்கள்) எனும் சொல்லுக்கு ‘தன்னுடைய தூதரின் நாவால் அல்லாஹ் தீர்ப்பளிப்பதற்கு முன்பாக, முந்திக்கொண்டு நீங்களாகத் தீர்ப்பு வழங்க முற்படாதீர்கள்’ என்று பொருள். (49:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இம்தஹன’ (பரிசோதித்தான்) எனும் சொல்லுக்கு ‘தூய்மைப்படுத்தினான்’ என்று பொருள். (49:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா தனாபஸூ’ (புனைபெயர் சூட்டாதீர்கள்) என்பது இஸ்லாத்தை எற்றுக்கொண்ட பின்னர், ஒருவரை (அவரது பழைய) இறைமறுப்பு (மதத்து)டன் இணைத்து அழைப்பதைக் குறிக்கும். (49:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா யலித்கும்’ எனும் சொல்லுக்கு ‘குறைக்கமாட்டான்’ என்று பொருள். (இதன் இறந்தகால வினைச்சொல்லும், 52:21ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றதுமான) ‘வ மா அலத்னாஹும்’ எனும் சொல்லுக்கு ‘‘அவர்களுக்கு நாம் குறைத்துவிடமாட்டோம்” என்று பொருள். பாடம்: 1 ‘‘இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்குமேல் உயர்த்தாதீர்கள். மேலும், ஒருவர் மற்றவரிடம் உரத்த குரலில் பேசுவதைப் போல் நபியிடம் உரத்த குரலில் பேசாதீர்கள். நீங்கள் செய்த செயல்களெல்லாம், நீங்களே உணராத வகையில் வீணாகிவிடக் கூடும்” எனும் (49:2ஆவது) இறை வசனம் (இந்த வசனத்திலுள்ள) ‘நீங்கள் அறியாத நிலையில்’ என்பது (மூலத்திலுள்ள) ‘லா தஷ்உரூன்’ எனும் சொல்லின் பொருளாகும். இதன் அடிப்படையில்தான் ‘அஷ்ஷாஇர்’ (கவிஞர்) எனும் சொல்லுக்கு ‘அறிஞர்’ என்றும் பொருள் சொல்லப் படுகிறது.
4846. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(49:2ஆவது வசனம் அருளப்பெற்ற நாளிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒரு மனிதர், ‘‘அவரைக் குறித்த செய்தியைத் தங்களுக்காக நான் அறிந்து வருகிறேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அவரிடம் அந்த மனிதர் சென்றார்.

அப்போது அவர் தமது தலையைக் கவிழ்த்தபடி (கவலையோடு) தமது வீட்டில் அமர்ந்துகொண்டிருக்கக் கண்டார். அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்.

அதற்கு ஸாபித் (ரலி) அவர்கள், ‘‘(எனது நிலை) மோசம்தான். நான் நபி (ஸல்) அவர்களின் குரலுக்குமேல் எனது குரலை உயர்த்தி(ப் பேசி)வந்தேன். என் (நற்)செயல்கள் அழிந்துவிட்டன; நான் நரகவாசிகளில் ஒருவன்தான்” என்று கூறினார். (செய்தியறிந்த) அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘ஸாபித் பின் கைஸ் இப்படி இப்படிச் சொன்னார்” என்று தெரிவித்தார்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து,) மகத்தான நற்செய்தியை வாங்கிக்கொண்டு மீண்டும் ஒருமுறை சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘ஸாபித் பின் கைஸ் அவர்களிடம் சென்று ‘நிச்சயம் நீர் நரகவாசிகளில் ஒருவரல்லர். சொர்க்கவாசிகளில் ஒருவரே’ என்று சொல்!” என்று கூறினார்கள்.3

அத்தியாயம் : 65