4823. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، قَالَ دَخَلْتُ عَلَى عَبْدِ اللَّهِ ثُمَّ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا دَعَا قُرَيْشًا كَذَّبُوهُ وَاسْتَعْصَوْا عَلَيْهِ فَقَالَ " اللَّهُمَّ أَعِنِّي عَلَيْهِمْ بِسَبْعٍ كَسَبْعِ يُوسُفَ ". فَأَصَابَتْهُمْ سَنَةٌ حَصَّتْ ـ يَعْنِي ـ كُلَّ شَىْءٍ حَتَّى كَانُوا يَأْكُلُونَ الْمَيْتَةَ فَكَانَ يَقُومُ أَحَدُهُمْ فَكَانَ يَرَى بَيْنَهُ وَبَيْنَ السَّمَاءِ مِثْلَ الدُّخَانِ مِنَ الْجَهْدِ وَالْجُوعِ ثُمَّ قَرَأَ {فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ * يَغْشَى النَّاسَ هَذَا عَذَابٌ أَلِيمٌ} حَتَّى بَلَغَ {إِنَّا كَاشِفُو الْعَذَابِ قَلِيلاً إِنَّكُمْ عَائِدُونَ} قَالَ عَبْدُ اللَّهِ أَفَيُكْشَفُ عَنْهُمُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ قَالَ وَالْبَطْشَةُ الْكُبْرَى يَوْمَ بَدْرٍ.
பாடம்: 4
(அந்நேரத்தில்) இவர்கள் உணர்வு பெறுவது எவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும்? (நம்முடைய) வெளிப்படையான தூதர் (முன்பே) அவர்களிடம் வந்திருந்தார் (எனும் 44:13ஆவது இறைவசனம்)
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘திக்ரா’ என்பதற்கும், ‘திக்ர்’ என்பதற்கும் (‘உணர்வு பெறுதல்’ என்ற) ஒரே பொருளாகும்.
4823. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். (சிறு உரையாடலுக்குப்) பிறகு அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மை நம்ப மறுத்துத் தமக்கு மாறுசெய்த குறைஷியருக்கெதிராக, ‘‘இறைவா! யூசுஃப் (அலை) அவர்களது (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப்போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்ச) ஆண்டுகளைக் கொடுத்து, இவர்களுக்கெதிராக எனக்கு உதவி செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
அப்போது அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு, எல்லாவற்றையும் அழித்துவிட்டது. எந்த அளவுக்கென்றால், அவர்கள் (பசியால்) செத்த பிராணிகளைப் புசிக்கலாயினர். அவர்களில் ஒருவர் பசியாலும் களைப்பாலும் எழுந்து (பார்த்தால் கண் பஞ்சடைந்துபோய்) தமக்கும் வானுக்குமிடையே புகை போன்ற ஒன்றையே காண்பார்.
பிறகு, ‘‘(நபியே!) வெளிப்படையான தொரு புகை வானிலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருப்பீராக!” என்று தொடங்கி, ‘‘மெய்யாகவே (நீங்கள் உணர்வு பெறக்கூடுமென்று) அவ்வேதனையை இன்னும் சிறிது காலத்திற்கு நீக்கி வைத்தோம். எனினும், நீங்கள் (பாவத்திற்கே) திரும்பச் செல்கிறீர்கள்” என்று முடியும் (44:10-15) வசனங்களை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதினார்கள்.
பிறகு அன்னார், ‘‘மறுமை நாளில் அவர்களைவிட்டு வேதனை அகற்றப் படுமா என்ன?” என்று கேட்டுவிட்டு, ‘பலமாக பிடிக்கும் நாள்’ என்பது, ‘பத்ர் போர் தினமாகும்’ என்று (44:16ஆவது வசனத்திற்கு விளக்கம்) கூறினார்கள்.
அத்தியாயம் : 65

4824. حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، أَخْبَرَنَا مُحَمَّدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، وَمَنْصُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ إِنَّ اللَّهَ بَعَثَ مُحَمَّدًا صلى الله عليه وسلم وَقَالَ {قُلْ مَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ وَمَا أَنَا مِنَ الْمُتَكَلِّفِينَ} فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا رَأَى قُرَيْشًا اسْتَعْصَوْا عَلَيْهِ فَقَالَ " اللَّهُمَّ أَعِنِّي عَلَيْهِمْ بِسَبْعٍ كَسَبْعِ يُوسُفَ ". فَأَخَذَتْهُمُ السَّنَةُ حَتَّى حَصَّتْ كُلَّ شَىْءٍ حَتَّى أَكَلُوا الْعِظَامَ وَالْجُلُودَ ـ فَقَالَ أَحَدُهُمْ حَتَّى أَكَلُوا الْجُلُودَ وَالْمَيْتَةَ ـ وَجَعَلَ يَخْرُجُ مِنَ الأَرْضِ كَهَيْئَةِ الدُّخَانِ فَأَتَاهُ أَبُو سُفْيَانَ فَقَالَ أَىْ مُحَمَّدُ إِنَّ قَوْمَكَ قَدْ هَلَكُوا فَادْعُ اللَّهَ أَنْ يَكْشِفَ عَنْهُمْ فَدَعَا ثُمَّ قَالَ " تَعُودُوا بَعْدَ هَذَا ". فِي حَدِيثِ مَنْصُورٍ ثُمَّ قَرَأَ {فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ} إِلَى {عَائِدُونَ} أَيُكْشَفُ عَذَابُ الآخِرَةِ فَقَدْ مَضَى الدُّخَانُ وَالْبَطْشَةُ وَاللِّزَامُ وَقَالَ أَحَدُهُمُ الْقَمَرُ وَقَالَ الآخَرُ الرُّومُ.
பாடம்: 5
பின்னர் அவர்கள் அவரைப் புறக்கணித்தது மட்டுமன்றி, ‘பயிற்று விக்கப்பட்ட பைத்தியக்காரர்’ என்றும் கூறினார்கள் (எனும் 44:14ஆவது இறைவசனம்)
4824. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களை (நபியாக) அனுப்பி ‘‘(நபியே!) கூறிவிடுவீராக: இந்த (அழைப்பு)ப்பணிக்காக உங்களிடம் நான் எந்தப் பிரதிபலனையும் கோரவில்லை. மேலும், நான் (இல்லாததைச் சொல்லி) பாவனை செய்வோரில் ஒருவன் அல்லன்” என்று கூறினான். (36:86). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்குக் குறைஷியர் மாறுசெய்ததைக் கண்டபோது ‘‘இறைவா! யூசுஃப் (அலை) அவர்களது (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப்போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்ச) ஆண்டுகளைக் கொடுத்து இவர்களுக்கெதிராக எனக்கு உதவி செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
உடனே அவர்களைப் பஞ்சம் வாட்டியது; அனைத்துப் பொருட்களையும் அழித்துவிட்டது. அவர்கள் (பசியால்) எலும்புகளையும் தோல்களையும் புசிக்க நேர்ந்தது.
அறிவிப்பாளர்களில் ஒருவர், ‘‘அவர்கள் தோல்களையும், செத்தவற்றையும் சாப்பிட்டனர்” என்று கூறினார்.
(அப்போது) பூமியிலிருந்து புகையின் தோற்றத்தைப்போல் வெளியேறத் தொடங்கியது. அப்போது அபூ சுஃப்யான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘‘முஹம்மதே! உம் சமுதாயத்தார் அழிந்துவிட்டனர். அவர்களைவிட்டு (பஞ்சம்) விலகப் பிரார்த்தனை புரியுங்கள்!” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (பஞ்சமும் அகன்றது.) பிறகு ‘‘இதற்குப்பின் நீங்கள் (இறைமறுப்புக்கே) திரும்பிவிடுவீர்கள்” என்று சொன்னார்கள்.
மன்ஸூர் பின் முஃதமிர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘‘பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ‘‘(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானிலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருப்பீராக!” என்று தொடங்கி ‘‘திரும்பச் செல்கிறீர்கள்” என்று முடியும் (44:10-15) வசனங்களை ஓதினார்கள்” என்றும், ‘‘(அவர்களைவிட்டு) மறுமையின் வேதனை அகற்றப்படுமா என்ன? புகை, பலமான பிடி, வேதனை ஆகியன நடந்து முடிந்துவிட்டன” என்றும் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவர் சந்திரன் பிளந்தது பற்றியும், இன்னொருவர் (கிழக்கு) ரோமர்கள் (தோற்கடிக்கப்பட்டு, பிறகு வென்றது) குறித்தும் குறிப்பிட்டுள்ளனர்.5
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

4825. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ خَمْسٌ قَدْ مَضَيْنَ اللِّزَامُ وَالرُّومُ وَالْبَطْشَةُ وَالْقَمَرُ وَالدُّخَانُ.
பாடம்: 6
மிக பலமாக அவர்களை நாம் பிடிக்கும் நாளில் நிச்சயம் நாம் பழிவாங்கியே தீருவோம் (எனும் 44:16ஆவது இறைவசனம்)
4825. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மறுமை நாளின் அடையாளங்களில்) ஐந்து அடையாளங்கள் நடந்து (முடிந்து) விட்டன. ஒன்று, (பத்ர் போரில் எதிரிகளுக்குக் கிடைத்த) தண்டனை. இரண்டாவது, (கிழக்கு) ரோமர்கள் (பாரசீகர்களால் தோற்கடிக்கப்பட்டு மீண்டும் வெற்றி கண்டது). மூன்றாவது, இறைவனின் தண்டனைப் பிடி. நான்காவது, சந்திரன் பிளந்தது. ஐந்தாவது, புகை.6

4826. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ يُؤْذِينِي ابْنُ آدَمَ، يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ، بِيَدِي الأَمْرُ، أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ ".
பாடம்:
45. ‘அல்ஜாஸியா’ அத்தியாயம்1
(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)
(45:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜாஸியா’ எனும் சொல்லுக்கு, ‘முழந்தாளிட்டு நிம்மதியற்ற நிலையில் இருப்பவர்கள்’ என்பது பொருள்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
(45:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நஸ்தன்ஸிகு’ எனும் சொல்லுக்கு ‘நாம் பதிவுச் செய்துகொண்டிருந்தோம்’ என்று பொருள்.
(45:34ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நன்ஸாக்கும்’ எனும் சொல்லுக்கு ‘நாம் உங்களை (நினைக்காது) விட்டுவிடுகிறோம்’ என்று பொருள்.
பாடம்: 1
காலம் தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை என (மறுமையை நம்பாத) அவர்கள் கூறுகிறார்கள் (எனும் 45:24ஆவது வசனத் தொடர்)
4826. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகின்றான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறிமாறி வரச் செய்கிறேன்.2
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4827. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، قَالَ كَانَ مَرْوَانُ عَلَى الْحِجَازِ اسْتَعْمَلَهُ مُعَاوِيَةُ، فَخَطَبَ فَجَعَلَ يَذْكُرُ يَزِيدَ بْنَ مُعَاوِيَةَ، لِكَىْ يُبَايِعَ لَهُ بَعْدَ أَبِيهِ، فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ شَيْئًا، فَقَالَ خُذُوهُ. فَدَخَلَ بَيْتَ عَائِشَةَ فَلَمْ يَقْدِرُوا {عَلَيْهِ} فَقَالَ مَرْوَانُ إِنَّ هَذَا الَّذِي أَنْزَلَ اللَّهُ فِيهِ {وَالَّذِي قَالَ لِوَالِدَيْهِ أُفٍّ لَكُمَا أَتَعِدَانِنِي}. فَقَالَتْ عَائِشَةُ مِنْ وَرَاءِ الْحِجَابِ مَا أَنْزَلَ اللَّهُ فِينَا شَيْئًا مِنَ الْقُرْآنِ إِلاَّ أَنَّ اللَّهَ أَنْزَلَ عُذْرِي.
பாடம்:
46. ‘அல்அஹ்காஃப்’ அத்தியாயம்1
(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(46:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துஃபீளூன’ எனும் சொல்லுக்கு ‘நீங்கள் கூறுவதை’ என்று பொருள்.
சிலர் கூறுகின்றனர்: (46:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸாரத்’ எனும் சொல்லுக்கும் (இன்ன பிற ஓதல்களில் வந்துள்ள) ‘உஸ்ரத்’, ‘அஸரத்’ ஆகிய சொற்களுக்கும் ‘எஞ்சியுள்ள ஏதேனும் ஞானம்’ என்று பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(46:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பித்அம் மினர் ருசுலி’ எனும் சொற்றொடருக்கு ‘நான் ஒன்றும் முதன் முதலாய் வந்த இறைத்தூதர் அல்லன்’ என்று பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாதோர் கூறுகின்றனர்:
(46:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அ ரஅய்த்தும்’ (நீங்கள் கவனித்தீர்களா?) என்பதிலுள்ள (வினாப் பொருளைத் தரும்) ‘அ’ எனும் இடைச் சொல், (அல்லாஹ் அல்லாத கற்பனைக் கடவுள்களை வழிபடுவது நியாயம்தான் என்று வாதிட்டுவந்த மக்கா நகர இறைமறுப்பாளர்களுக்கு) எச்சரிக்கையாகவே கூறப்பட்டுள்ளது: (மறுப்பாளர்களே!) உங்களது வாதம் உண்மை என வைத்துக்கொண்டாலும் அந்தக் கடவுள்கள் வழிபடத் தகுதியானவர்கள் அல்லர். (படைத்தவனே வழிபடுவதற்குத் தகுதியானவன் ஆவான். படைக்கப்பட்ட பொருள்கள் அல்ல) என்பது இவ்வசனத்தின் கருத்தாகும்.
‘அரஅய்த்தும்’ (நீங்கள் கவனித்தீர்களா) என்பதற்கு ‘நீங்கள் கண்ணால் கண்டீர்களா?’ என்பது பொருளன்று. நீங்கள் வழிபட்டுவரும் அல்லாஹ் அல்லாதவை ஏதேனும் ஒன்றைப் படைத்தன என்பதை நீங்கள் அறிவீர்களா? (நிலைமை இவ்வாறிருக்க, அந்த இயக்கமற்ற கற்பனைக் கடவுள்களை வழிபட்டுவரும் நீங்கள் அநியாயக்காரர்கள் அல்லவா? உங்களது இந்தப் பகுத்தறிவற்ற நிலையை நீங்களே யோசித்துப் பார்த்ததுண்டா?)” என்றே பொருள்.
பாடம்: 1
ஒருவன் தன் பெற்றோரிடம் ‘‘சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (நான் இறந்த பின்னர் மண்ணறையிலிருந்து உயிரோடு) வெளிக் கொணரப்படுவேன் என்று என்னை அச்சுறுத்துகின்றீர்களா? எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறை’னர் வாழ்ந்து சென்றுள்ளார்களே! (அவர்களில் எவரும் மண்ணறையிலிருந்து எழுந்து வரவில்லையே!)” என்று கூறுகிறான்.
பெற்றோர் இருவரும் (மகனுக் காக) அல்லாஹ்வின் உதவியை வேண்டியவர்களாக, ‘‘உனக்குக் கேடுதான்! நம்பிக்கை கொள்! அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது” என்று கூறகின்றார்கள். ஆனால், அவனோ ‘‘இவையெல்லாம் முன்னோர்களின் கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை” என்று கூறுகின்றான் (எனும் 46:17ஆவது இறைவசனம்)
4827. யூசுஃப் பின் மாஹக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மர்வான் பின் அல்ஹகமை ஹிஜாஸ் மாகாணத்தின் ஆளுனராக முஆவியா (ரலி) அவர்கள் நியமித்திருந்தார்கள். மர்வான் (ஒருநாள் மக்களை ஒன்றுகூட்டி,) உரை நிகழ்த்தினார். அப்போது, முஆவியா (ரலி) அவர்களுடைய புதல்வர் யஸீத் குறித்துப் பேசியவாறு முஆவியாவுக்குப் பின்னர் யஸீதுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) செய்ய வேண்டுமெனக் கூறினார்.
அப்போது அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் மர்வானுக்கு (மறுப்புத் தெரிவித்து) ஏதோ கூறினார். உடனே மர்வான் ‘‘அவரைப் பிடியுங்கள்!” என்று (தம் சிப்பாய்களுக்கு) உத்தரவிட்டார். உடனே அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் தம் சகோதரி ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லத்திற்குள் நுழைந்துகொண்டார்கள். ஆகவே, அவரைப் பிடிக்க அவர்களுக்குத் துணிச்சல் ஏற்படவில்லை.
அப்போது மர்வான், ‘‘ஒருவன் தன் பெற்றோரிடம் ‘‘சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (நான் இறந்த பின்னர் (மண்ணறையிலிருந்து உயிரோடு) வெளிக்கொணரப்படுவேன் என்று என்னை அச்சுறுத்துகிறீர்களா?...” எனும் (46:17ஆவது) வசனத்தை இவர் (போன்றவர்களின்) விஷயத்தில்தான் அல்லாஹ் அருளினான்” என்று கூறினார்.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் திரைக்கப்பால் இருந்துகொண்டு, ‘‘(அபூபக்ர் (ரலி) அவர்களின் குடும்பத்தாராகிய) எங்கள் விஷயத்தில், என் கற்பொழுக்கத்தை அறிவிக்கும் வசனத்தைத் தவிர, வேறு எந்த வசனத்தையும் குர்ஆனில் அல்லாஹ் அருளவில்லை” என்று கூறினார்கள்.

4828. حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرٌو، أَنَّ أَبَا النَّضْرِ، حَدَّثَهُ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ضَاحِكًا حَتَّى أَرَى مِنْهُ لَهَوَاتِهِ، إِنَّمَا كَانَ يَتَبَسَّمُ.
பாடம்: 2
‘‘ஆனால், அவர்கள் (தங்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) தாங்கள் வசித்துவந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், ‘இது நமக்கு மழையைப் பொழிவிக்கக்கூடிய மேகமாகும்’ என்று கூறினார்கள். ‘அப்படியல்ல! மாறாக, நீங்கள் எதற்காக அவசரப்பட்டுக்கொண்டிருந்தீர்களோ அதுதான் இது! இது (புயல்) காற்று; இதில் வதைக்கும் வேதனை உண்டு’ (எனக் கூறப்பட்டது)” எனும் (46:24 ஆவது) இறைவசனம்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆரிள்’ எனும் சொல்லுக்கு ‘மேகம்’ என்பது பொருள்.
4828. நபி (ஸல்) அவர்களுடைய துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உள்நாக்குத் தெரியும் அளவுக்குச் சிரிப்பவர்களாகக் கண்ட தில்லை. அவர்கள் புன்னகைப்பவர்களா கவே இருந்தார்கள்.2

4829. قَالَتْ وَكَانَ إِذَا رَأَى غَيْمًا أَوْ رِيحًا عُرِفَ فِي وَجْهِهِ. قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ النَّاسَ إِذَا رَأَوُا الْغَيْمَ فَرِحُوا، رَجَاءَ أَنْ يَكُونَ فِيهِ الْمَطَرُ، وَأَرَاكَ إِذَا رَأَيْتَهُ عُرِفَ فِي وَجْهِكَ الْكَرَاهِيَةُ. فَقَالَ " يَا عَائِشَةُ مَا يُؤْمِنِّي أَنْ يَكُونَ فِيهِ عَذَابٌ عُذِّبَ قَوْمٌ بِالرِّيحِ، وَقَدْ رَأَى قَوْمٌ الْعَذَابَ فَقَالُوا {هَذَا عَارِضٌ مُمْطِرُنَا}"
பாடம்: 2
‘‘ஆனால், அவர்கள் (தங்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) தாங்கள் வசித்துவந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், ‘இது நமக்கு மழையைப் பொழிவிக்கக்கூடிய மேகமாகும்’ என்று கூறினார்கள். ‘அப்படியல்ல! மாறாக, நீங்கள் எதற்காக அவசரப்பட்டுக்கொண்டிருந்தீர்களோ அதுதான் இது! இது (புயல்) காற்று; இதில் வதைக்கும் வேதனை உண்டு’ (எனக் கூறப்பட்டது)” எனும் (46:24 ஆவது) இறைவசனம்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆரிள்’ எனும் சொல்லுக்கு ‘மேகம்’ என்பது பொருள்.
4829. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி (ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒருநாள்) நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும்போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)?” என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், ‘‘ஆயிஷா! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. (‘ஆத்’ எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்துவிட்டு, ‘இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்’ என்றே கூறினர்” எனப் பதிலளித்தார்கள்.

4830. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ أَبِي مُزَرَّدٍ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " خَلَقَ اللَّهُ الْخَلْقَ، فَلَمَّا فَرَغَ مِنْهُ قَامَتِ الرَّحِمُ فَأَخَذَتْ بِحَقْوِ الرَّحْمَنِ فَقَالَ لَهَا مَهْ. قَالَتْ هَذَا مَقَامُ الْعَائِذِ بِكَ مِنَ الْقَطِيعَةِ. قَالَ أَلاَ تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ. قَالَتْ بَلَى يَا رَبِّ. قَالَ فَذَاكِ لَكِ ". قَالَ أَبُو هُرَيْرَةَ اقْرَءُوا إِنْ شِئْتُمْ {فهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ}
பாடம்:
47. ‘முஹம்மத்’ அத்தியாயம்1
(47:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அவ்ஸாரஹா’ எனும் சொல்லுக்கு ‘எதிரணியின் பாவங்கள் முற்றுப்பெற்று அல்லாஹ்விற்குக் கீழ்ப்படிந்தவர் தவிர வேறெவரும் எஞ்சாத வரையில்’ என்று பொருள்.
(47:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ரஃபஹா’ எனும் சொல்லுக்கு ‘எந்த சொர்க்கத்தை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறானோ’ என்று பொருள்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(47:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மவ்லல்லதீன ஆமனூ’ எனும் சொற்றொடருக்கு, ‘‘நம்பிக்கையாளர்களுக்கு உதவிபுரிந்து பாதுகாப்பவன்’ என்று பொருள்.
(47:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸமல் அம்ர்’ எனும் சொற்றொட ருக்கு ‘கட்டளை முடிவானது’ என்று பொருள்.
(47:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபலா தஹினூ’ எனும் சொல்லுக்கு ‘எனவே, நீங்கள் பலவீனமடைந்துவிடாதீர்கள்’ என்று பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(47:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அள்ஃகானஹும்’ எனும் சொல்லுக்கு ‘அவர்களின் குரோதங்கள்’ என்று பொருள்.
(47:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆசின்’ எனும் சொல்லுக்கு ‘சுவை மாறுகின்ற’ என்று பொருள். (இதன்படி, ‘ஃகைரி ஆசினின்’ என்பதற்கு ‘சுவை மாறாத’ என்று பொருள் அமையும்).
பாடம்: 1
மேலும், நீங்கள் உங்கள் (இரத்த பந்த) உறவுகளைத் துண்டித்துவிட முனைகிறீர்களா? (எனும் 47:22ஆவது வசனத்தொடர்)
4830. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து அருளாளன் அல்லாஹ்வின் அரியணையின் கால்களில் ஒன்றைப் பற்றி(க்கொண்டு மன்றாடி)யது. அப்போது அல்லாஹ், ‘‘என்ன?” என்று கேட்டான். அதற்கு உறவு, ‘‘உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரி நிற்கிறேன்” என்று கூறியது. ‘‘உன்னை (உறவை)ப் பேணி நல்ல முறையில் நடந்துகொள்பவருடன் நானும் நல்ல முறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்துவிடுகின்றவரை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?” என்று கேட்டான். அதற்கு உறவு, ‘‘ஆம் (திருப்தியே) என் இறைவா!” என்று கூறியது. அல்லாஹ் ‘‘இது (அவ்வாறுதான்) நடக்கும்” என்று கூறினான்.
அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘நீங்கள் விரும்பினால், ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக்கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?’ எனும் (47:22ஆவது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

4831. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ مُعَاوِيَةَ، قَالَ حَدَّثَنِي عَمِّي أَبُو الْحُبَابِ، سَعِيدُ بْنُ يَسَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ، بِهَذَا، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم اقْرَءُوا إِنْ شِئْتُمْ {فَهَلْ عَسَيْتُمْ}
பாடம்:
47. ‘முஹம்மத்’ அத்தியாயம்1
(47:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அவ்ஸாரஹா’ எனும் சொல்லுக்கு ‘எதிரணியின் பாவங்கள் முற்றுப்பெற்று அல்லாஹ்விற்குக் கீழ்ப்படிந்தவர் தவிர வேறெவரும் எஞ்சாத வரையில்’ என்று பொருள்.
(47:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ரஃபஹா’ எனும் சொல்லுக்கு ‘எந்த சொர்க்கத்தை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறானோ’ என்று பொருள்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(47:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மவ்லல்லதீன ஆமனூ’ எனும் சொற்றொடருக்கு, ‘‘நம்பிக்கையாளர்களுக்கு உதவிபுரிந்து பாதுகாப்பவன்’ என்று பொருள்.
(47:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸமல் அம்ர்’ எனும் சொற்றொட ருக்கு ‘கட்டளை முடிவானது’ என்று பொருள்.
(47:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபலா தஹினூ’ எனும் சொல்லுக்கு ‘எனவே, நீங்கள் பலவீனமடைந்துவிடாதீர்கள்’ என்று பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(47:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அள்ஃகானஹும்’ எனும் சொல்லுக்கு ‘அவர்களின் குரோதங்கள்’ என்று பொருள்.
(47:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆசின்’ எனும் சொல்லுக்கு ‘சுவை மாறுகின்ற’ என்று பொருள். (இதன்படி, ‘ஃகைரி ஆசினின்’ என்பதற்கு ‘சுவை மாறாத’ என்று பொருள் அமையும்).
பாடம்: 1
மேலும், நீங்கள் உங்கள் (இரத்த பந்த) உறவுகளைத் துண்டித்துவிட முனைகிறீர்களா? (எனும் 47:22ஆவது வசனத்தொடர்)
4831. சயீத் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மேற்கண்ட இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்து விட்டுப் பிறகு, ‘‘நீங்கள் விரும்பினால், ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக்கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?’ எனும் (47:22ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று சொன்னார்கள்.

4832. حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مُعَاوِيَةُ بْنُ أَبِي الْمُزَرَّدِ، بِهَذَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ {فَهَلْ عَسَيْتُمْ}
பாடம்:
47. ‘முஹம்மத்’ அத்தியாயம்1
(47:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அவ்ஸாரஹா’ எனும் சொல்லுக்கு ‘எதிரணியின் பாவங்கள் முற்றுப்பெற்று அல்லாஹ்விற்குக் கீழ்ப்படிந்தவர் தவிர வேறெவரும் எஞ்சாத வரையில்’ என்று பொருள்.
(47:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ரஃபஹா’ எனும் சொல்லுக்கு ‘எந்த சொர்க்கத்தை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறானோ’ என்று பொருள்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(47:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மவ்லல்லதீன ஆமனூ’ எனும் சொற்றொடருக்கு, ‘‘நம்பிக்கையாளர்களுக்கு உதவிபுரிந்து பாதுகாப்பவன்’ என்று பொருள்.
(47:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸமல் அம்ர்’ எனும் சொற்றொட ருக்கு ‘கட்டளை முடிவானது’ என்று பொருள்.
(47:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபலா தஹினூ’ எனும் சொல்லுக்கு ‘எனவே, நீங்கள் பலவீனமடைந்துவிடாதீர்கள்’ என்று பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(47:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அள்ஃகானஹும்’ எனும் சொல்லுக்கு ‘அவர்களின் குரோதங்கள்’ என்று பொருள்.
(47:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆசின்’ எனும் சொல்லுக்கு ‘சுவை மாறுகின்ற’ என்று பொருள். (இதன்படி, ‘ஃகைரி ஆசினின்’ என்பதற்கு ‘சுவை மாறாத’ என்று பொருள் அமையும்).
பாடம்: 1
மேலும், நீங்கள் உங்கள் (இரத்த பந்த) உறவுகளைத் துண்டித்துவிட முனைகிறீர்களா? (எனும் 47:22ஆவது வசனத்தொடர்)
4832. மேற்சொன்ன இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(47:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆசின்’ எனும் சொல்லுக்கு ‘மாறுகின்ற’ என்பது பொருள்.

4833. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَسِيرُ فِي بَعْضِ أَسْفَارِهِ وَعُمَرُ بْنُ الْخَطَّابِ يَسِيرُ مَعَهُ لَيْلاً، فَسَأَلَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ عَنْ شَىْءٍ، فَلَمْ يُجِبْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ سَأَلَهُ فَلَمْ يُجِبْهُ، ثُمَّ سَأَلَهُ فُلَمْ يُجِبْهُ، فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ثَكِلَتْ أُمُّ عُمَرَ، نَزَرْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَ مَرَّاتٍ، كُلَّ ذَلِكَ لاَ يُجِيبُكَ. قَالَ عُمَرُ فَحَرَّكْتُ بَعِيرِي، ثُمَّ تَقَدَّمْتُ أَمَامَ النَّاسِ، وَخَشِيتُ أَنْ يُنْزَلَ فِيَّ الْقُرْآنُ، فَمَا نَشِبْتُ أَنْ سَمِعْتُ صَارِخًا يَصْرُخُ بِي فَقُلْتُ لَقَدْ خَشِيتُ أَنْ يَكُونَ نَزَلَ فِيَّ قُرْآنٌ. فَجِئْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَسَلَّمْتُ عَلَيْهِ فَقَالَ " لَقَدْ أُنْزِلَتْ عَلَىَّ اللَّيْلَةَ سُورَةٌ لَهِيَ أَحَبُّ إِلَىَّ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ ". ثُمَّ قَرَأَ "{إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا}"
பாடம்:
48. ‘அல்ஃபத்ஹ்’ அத்தியாயம்1
(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(48:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பூறா’ எனும் சொல்லுக்கு ‘அழிவிற்குள்ளானவர்கள்’ என்பது பொருள்.
(48:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சீமாஹும் ஃபீ வுஜூஹிஹிம்’ (அவர்களின் முகங்களில் உள்ள அடையாளம்) என்பது, முகமலர்ச்சியைக் குறிக்கும் என்று முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஓர் அறிவிப்பில் காணப்படுகிறது.
மன்ஸூர் பின் முஃதமிர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘‘அது பணிவைக் குறிக்கும்” என்று முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.
(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஷத்அஹு’ எனும் சொல்லுக்கு, ‘அதன் தளிர்’ என்பது பொருள். ‘ஃபஸ்தஃக்லழ’ எனும் சொல்லுக்கு ‘அது பருத்துக் கனமாகிறது’ என்று பொருள். ‘சூக்’ எனும் சொல்லுக்கு ‘பயிரைத் தாங்கி நிற்கும் தண்டு’ என்பது பொருள் .
(48:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தாயிரத்துஸ் ஸவ்ஃ’ எனும் சொல்லுக்கு ‘தீமையின் சுழற்சி’ என்று பொருள். ‘ரஜ்லுஸ் ஸவ்ஃ’ (தீய மனிதன்) என்று சொல்லப்படுவதுபோல் இங்கு (தீமையின் சுழற்சி என்று சொல்லப்பட்டுள்ளது.) ‘தீமையின் சுழற்சி’ என்பது (இறைவன் அளிக்கும்) வேதனையைக் குறிக்கும்.
(48:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துஅஸ்ஸிரூஹு’ எனும் சொல்லுக்கு, ‘நீங்கள் அவருக்கு உதவி புரிவீர்கள்’ என்று பொருள்.
(48:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஷத்அஹு’ (அதன் தளிர்) என்பது, கதிரின் தளிரைக் குறிக்கும். அந்தக் கதிர் பத்து, அல்லது எட்டு, அல்லது ஏழு தானிய விதையைத் தந்து ஒன்றை மற்றொன்றுடன் சேர்த்து பலப்படுத்துகிறது.
இதைத்தான் அல்லாஹ், ‘ஃபஆஸரஹு’ (அதனைப் பலப்படுத்தியது) என்று கூறுகின்றான். அந்தக் கதிர் ஒன்றே ஒன்றாக இருக்குமானால், ஒரு தண்டின் மீது நிலைத்து நிற்க முடியாது.
இது நபி (ஸல்) அவர்கள் குறித்து அல்லாஹ் கூறியுள்ள உவமையாகும். (இஸ்லாமிய அழைப்புப் பணிக்காக,) நபி (ஸல்) அவர்கள் தன்னந்தனியாகப் புறப்பட்டார்கள். முளைத்துவரும் தளிரின் மூலம் விதைக்கு வலுவூட்டுவது போல், அவர்களுடைய தோழர்கள் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வலுவூட்டினான்.
பாடம்: 1
நபியே! நாம் உமக்கு வெளிப்படை யான வெற்றியை அளித்துள் ளோம் (எனும் 48:1ஆவது இறைவசனம்)
4833. அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் நபி அவர் களுடன் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் ஏதோ ஒன்றைக் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. பிறகு (மீண்டும்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை.
பிறகு (மூன்றாம் முறையாக) உமர் கேட்டார்கள். அப்போதும் நபிகளார் பதிலளிக்கவில்லை. பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தம்மைத் தாமே கடிந்து கொண்டவர்களாக), ‘‘உம்மை உமரின் தாய் இழக்கட்டும்! மூன்று முறை (கேள்வி கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை வற்புறுத்தினாய். அந்த ஒவ்வொரு முறையும் அவர்கள் உனக்கு பதிலளிக்கவில்லையே” என்று கூறினார்கள்.
மேலும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதற்குப் பிறகு நான் எனது ஒட்டகத்தைச் செலுத்தி மக்களுக்கு முன்னால் வந்தேன். (அல்லாஹ்வின் தூதரிடம் இப்படி நான் நடந்துகொண்டதற்காக) என் விஷயத்தில் ஏதாவது குர்ஆன் (வசனம்) அருளப்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சினேன்.
சற்று நேரத்திற்குள் என்னை ஒருவர் சப்தமிட்டு அழைப்பதைக் கேட்டேன். நான் நினைத்தபடி என் விஷயத்தில் குர்ஆன் (வசனம்) இறங்கிவிட்டிருக்கும் என அஞ்சினேன் என்று சொல்லிக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் சொன்னேன்.
அப்போது அவர்கள், ‘‘இந்த இரவு எனக்கு ஒரு (குர்ஆன்) அத்தியாயம் அருளப்பட்டுள்ளது. சூரியன் எதன்மீது உதயமாகிறதோ அ(ந்த உலகத்)தைவிட எனக்கு அந்த அத்தியாயம் மிகவும் விருப்பமானதாகும்” என்று கூறிவிட்டு, ‘‘உமக்கு நாம் வெளிப்படையான வெற்றியை அளித்துள்ளோம்” என்று (தொடங்கும் 48:1ஆவது இறைவசனத்தை) ஓதினார்கள்.2

4834. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ {إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا} قَالَ الْحُدَيْبِيَةُ.
பாடம்:
48. ‘அல்ஃபத்ஹ்’ அத்தியாயம்1
(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(48:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பூறா’ எனும் சொல்லுக்கு ‘அழிவிற்குள்ளானவர்கள்’ என்பது பொருள்.
(48:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சீமாஹும் ஃபீ வுஜூஹிஹிம்’ (அவர்களின் முகங்களில் உள்ள அடையாளம்) என்பது, முகமலர்ச்சியைக் குறிக்கும் என்று முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஓர் அறிவிப்பில் காணப்படுகிறது.
மன்ஸூர் பின் முஃதமிர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘‘அது பணிவைக் குறிக்கும்” என்று முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.
(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஷத்அஹு’ எனும் சொல்லுக்கு, ‘அதன் தளிர்’ என்பது பொருள். ‘ஃபஸ்தஃக்லழ’ எனும் சொல்லுக்கு ‘அது பருத்துக் கனமாகிறது’ என்று பொருள். ‘சூக்’ எனும் சொல்லுக்கு ‘பயிரைத் தாங்கி நிற்கும் தண்டு’ என்பது பொருள் .
(48:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தாயிரத்துஸ் ஸவ்ஃ’ எனும் சொல்லுக்கு ‘தீமையின் சுழற்சி’ என்று பொருள். ‘ரஜ்லுஸ் ஸவ்ஃ’ (தீய மனிதன்) என்று சொல்லப்படுவதுபோல் இங்கு (தீமையின் சுழற்சி என்று சொல்லப்பட்டுள்ளது.) ‘தீமையின் சுழற்சி’ என்பது (இறைவன் அளிக்கும்) வேதனையைக் குறிக்கும்.
(48:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துஅஸ்ஸிரூஹு’ எனும் சொல்லுக்கு, ‘நீங்கள் அவருக்கு உதவி புரிவீர்கள்’ என்று பொருள்.
(48:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஷத்அஹு’ (அதன் தளிர்) என்பது, கதிரின் தளிரைக் குறிக்கும். அந்தக் கதிர் பத்து, அல்லது எட்டு, அல்லது ஏழு தானிய விதையைத் தந்து ஒன்றை மற்றொன்றுடன் சேர்த்து பலப்படுத்துகிறது.
இதைத்தான் அல்லாஹ், ‘ஃபஆஸரஹு’ (அதனைப் பலப்படுத்தியது) என்று கூறுகின்றான். அந்தக் கதிர் ஒன்றே ஒன்றாக இருக்குமானால், ஒரு தண்டின் மீது நிலைத்து நிற்க முடியாது.
இது நபி (ஸல்) அவர்கள் குறித்து அல்லாஹ் கூறியுள்ள உவமையாகும். (இஸ்லாமிய அழைப்புப் பணிக்காக,) நபி (ஸல்) அவர்கள் தன்னந்தனியாகப் புறப்பட்டார்கள். முளைத்துவரும் தளிரின் மூலம் விதைக்கு வலுவூட்டுவது போல், அவர்களுடைய தோழர்கள் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வலுவூட்டினான்.
பாடம்: 1
நபியே! நாம் உமக்கு வெளிப்படை யான வெற்றியை அளித்துள் ளோம் (எனும் 48:1ஆவது இறைவசனம்)
4834. கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
‘‘(நபியே!) நாம் உமக்கு வெளிப்படை யான வெற்றியை அளித்துள்ளோம்” எனும் (48:1ஆவது) இறைவசனம் ஹுதைபியா உடன்படிக்கையையே குறிக்கிறது” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.3

4835. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ قُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ قَرَأَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ فَتْحِ مَكَّةَ سُورَةَ الْفَتْحِ فَرَجَّعَ فِيهَا. قَالَ مُعَاوِيَةُ لَوْ شِئْتُ أَنْ أَحْكِيَ لَكُمْ قِرَاءَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم لَفَعَلْتُ.
பாடம்:
48. ‘அல்ஃபத்ஹ்’ அத்தியாயம்1
(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(48:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பூறா’ எனும் சொல்லுக்கு ‘அழிவிற்குள்ளானவர்கள்’ என்பது பொருள்.
(48:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சீமாஹும் ஃபீ வுஜூஹிஹிம்’ (அவர்களின் முகங்களில் உள்ள அடையாளம்) என்பது, முகமலர்ச்சியைக் குறிக்கும் என்று முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஓர் அறிவிப்பில் காணப்படுகிறது.
மன்ஸூர் பின் முஃதமிர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘‘அது பணிவைக் குறிக்கும்” என்று முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.
(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஷத்அஹு’ எனும் சொல்லுக்கு, ‘அதன் தளிர்’ என்பது பொருள். ‘ஃபஸ்தஃக்லழ’ எனும் சொல்லுக்கு ‘அது பருத்துக் கனமாகிறது’ என்று பொருள். ‘சூக்’ எனும் சொல்லுக்கு ‘பயிரைத் தாங்கி நிற்கும் தண்டு’ என்பது பொருள் .
(48:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தாயிரத்துஸ் ஸவ்ஃ’ எனும் சொல்லுக்கு ‘தீமையின் சுழற்சி’ என்று பொருள். ‘ரஜ்லுஸ் ஸவ்ஃ’ (தீய மனிதன்) என்று சொல்லப்படுவதுபோல் இங்கு (தீமையின் சுழற்சி என்று சொல்லப்பட்டுள்ளது.) ‘தீமையின் சுழற்சி’ என்பது (இறைவன் அளிக்கும்) வேதனையைக் குறிக்கும்.
(48:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துஅஸ்ஸிரூஹு’ எனும் சொல்லுக்கு, ‘நீங்கள் அவருக்கு உதவி புரிவீர்கள்’ என்று பொருள்.
(48:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஷத்அஹு’ (அதன் தளிர்) என்பது, கதிரின் தளிரைக் குறிக்கும். அந்தக் கதிர் பத்து, அல்லது எட்டு, அல்லது ஏழு தானிய விதையைத் தந்து ஒன்றை மற்றொன்றுடன் சேர்த்து பலப்படுத்துகிறது.
இதைத்தான் அல்லாஹ், ‘ஃபஆஸரஹு’ (அதனைப் பலப்படுத்தியது) என்று கூறுகின்றான். அந்தக் கதிர் ஒன்றே ஒன்றாக இருக்குமானால், ஒரு தண்டின் மீது நிலைத்து நிற்க முடியாது.
இது நபி (ஸல்) அவர்கள் குறித்து அல்லாஹ் கூறியுள்ள உவமையாகும். (இஸ்லாமிய அழைப்புப் பணிக்காக,) நபி (ஸல்) அவர்கள் தன்னந்தனியாகப் புறப்பட்டார்கள். முளைத்துவரும் தளிரின் மூலம் விதைக்கு வலுவூட்டுவது போல், அவர்களுடைய தோழர்கள் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வலுவூட்டினான்.
பாடம்: 1
நபியே! நாம் உமக்கு வெளிப்படை யான வெற்றியை அளித்துள் ளோம் (எனும் 48:1ஆவது இறைவசனம்)
4835. அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் (தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி) ‘அல்ஃபத்ஹ்’ எனும் (48ஆவது) அத்தியாயத்தைத் ‘தர்ஜீஉ’ செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக்கொண்டிருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஓதியதைப் போன்று உங்களிடம் நான் ஓதிக்காட்ட நினைத்தால் (அவ்வாறு) நான் செய்திருப்பேன்.4

4836. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا زِيَادٌ، أَنَّهُ سَمِعَ الْمُغِيرَةَ، يَقُولُ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى تَوَرَّمَتْ قَدَمَاهُ فَقِيلَ لَهُ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ قَالَ " أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا ".
பாடம்: 2
‘‘(நபியே!) உம்முடைய முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதற்காகவும் அவன் தனது அருட்கொடையை உமக்கு நிறைவு செய்து, உமக்கு நல்வழி காட்டுவதற்காகவும்தான் (அந்த வெற்றியை அவன் வழங்கினான்)” எனும் (48:2ஆவது) இறைவசனம்
4836. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவுக்கு நின்று (அல்லாஹ்வைத்) தொழுதார்கள். அப்போது அவர்களிடம் ‘‘தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே! (பிறகு ஏன் நீங்கள் இந்த அளவுக்கு சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டும்?)” என்று கேட்கப்பட்டது. (அதற்கு அவர்கள்,) ‘‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?” என்று கேட்டார்கள்.5

4837. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا حَيْوَةُ، عَنْ أَبِي الأَسْوَدِ، سَمِعَ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقُومُ مِنَ اللَّيْلِ حَتَّى تَتَفَطَّرَ قَدَمَاهُ فَقَالَتْ عَائِشَةُ لِمَ تَصْنَعُ هَذَا يَا رَسُولَ اللَّهِ وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ قَالَ " أَفَلاَ أُحِبُّ أَنْ أَكُونَ عَبْدًا شَكُورًا ". فَلَمَّا كَثُرَ لَحْمُهُ صَلَّى جَالِسًا فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ قَامَ، فَقَرَأَ ثُمَّ رَكَعَ.
பாடம்: 2
‘‘(நபியே!) உம்முடைய முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதற்காகவும் அவன் தனது அருட்கொடையை உமக்கு நிறைவு செய்து, உமக்கு நல்வழி காட்டுவதற்காகவும்தான் (அந்த வெற்றியை அவன் வழங்கினான்)” எனும் (48:2ஆவது) இறைவசனம்
4837. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவுக்கு நின்று வழிபடுவார்கள். ஆகவே நான், ‘‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே! தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்ப வேண்டாமா?” என்று கேட்டார்கள்.
(தம் வாழ்நாளின் கடைசிக் காலத்தில்) நபி (ஸல்) அவர்களின் உடல் சதை போட்டபோது அமர்ந்து தொழுதார்கள். ‘ருகூஉ’ செய்ய நினைக்கும்போது, எழுந்து (சிறிது நேரம்) ஓதுவார்கள். பிறகு, ‘ருகூஉ’ செய்வார்கள்.6

4838. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ هِلاَلِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ـ رضى الله عنهما ـ أَنَّ هَذِهِ، الآيَةَ الَّتِي فِي الْقُرْآنِ {يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا} قَالَ فِي التَّوْرَاةِ يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَحِرْزًا لِلأُمِّيِّينَ، أَنْتَ عَبْدِي وَرَسُولِي سَمَّيْتُكَ الْمُتَوَكِّلَ لَيْسَ بِفَظٍّ وَلاَ غَلِيظٍ وَلاَ سَخَّابٍ بِالأَسْوَاقِ وَلاَ يَدْفَعُ السَّيِّئَةَ بِالسَّيِّئَةِ وَلَكِنْ يَعْفُو وَيَصْفَحُ وَلَنْ يَقْبِضَهُ اللَّهُ حَتَّى يُقِيمَ بِهِ الْمِلَّةَ الْعَوْجَاءَ بِأَنْ يَقُولُوا لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ فَيَفْتَحَ بِهَا أَعْيُنًا عُمْيًا وَآذَانًا صُمًّا وَقُلُوبًا غُلْفًا.
பாடம்: 3
(நபியே!) நிச்சயமாக நாம் உம்மை சான்று வழங்குபவராகவும், நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம் (எனும் 48:8ஆவது இறைவசனம்)
4838. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘‘(நபியே!) நிச்சயமாக நாம் உம்மை (விசுவாசிகளின் விசுவாசம் குறித்து) சான்று பகர்பவராகவும், (அவர்களுக்கு) நற்செய்தி அறிவிப்பவராகவும், (பாவிகளுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம்” எனும் இந்த (48:8ஆவது) குர்ஆன் வசனத்தையே ‘தவ்ராத்’ வேதத்தில் (இறைவன்) பின்வருமாறு கூறினான்:
‘‘நபியே! நிச்சயமாக நாம் உம்மை சான்று பகர்பவராகவும், நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், எழுத வாசிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம். நீர் என் அடியாரும் என் தூதருமாவீர். தம் காரியங்கள் அனைத்திலும் அல்லாஹ் வையே சார்ந்திருப்பவர் (‘முத்தவக்கில்’) என்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன் (என அவரிடம் கூறுவோம்).
(என் தூதரான) அவர் கடின சித்தமுடையவராகவோ, முரட்டுத்தனம் கொண்டவராகவோ, கடைவீதியில் கூச்சலிட்டுச் சச்சரவு செய்பவராகவோ இருக்கமாட்டார். ஒரு தீமைக்கு இன்னொரு தீமையால் தீர்வு காணமாட்டார். மாறாக, மன்னித்து விட்டுவிடுவார். வளைந்த சமுதாயத்தை அவர் மூலம் நிமிர்த்தும்வரை அல்லாஹ் அவரது உயிரைக் கைப்பற்றமாட்டான்.
மக்கள் ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று கூறுவார்கள். (ஓரிறைக் கோட்பாடான) அதன் மூலம் அவர் குருட்டுக் கண்களையும், செவிட்டுக் காதுகளையும், திரையிடப்பட்ட உள்ளங்களையும் திறப்பார்.7

4839. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَمَا رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَقْرَأُ، وَفَرَسٌ لَهُ مَرْبُوطٌ فِي الدَّارِ، فَجَعَلَ يَنْفِرُ، فَخَرَجَ الرَّجُلُ فَنَظَرَ فَلَمْ يَرَ شَيْئًا، وَجَعَلَ يَنْفِرُ، فَلَمَّا أَصْبَحَ ذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " تِلْكَ السَّكِينَةُ تَنَزَّلَتْ بِالْقُرْآنِ ".
பாடம்: 4
அவன்தான் இறைநம்பிக்கை யாளர்களின் இதயங்களில் அமைதியை அருளினான் (எனும் 48:4ஆவது வசனத்தொடர்)
4839. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபித்தோழர்களில் ஒருவர் (குர்ஆன்) ஓதிக்கொண்டிருந்தார். அவரது குதிரை அவர் வீட்டில் கட்டப்பட்டிருந்தது.
அப்போது அது மிரளத் தொடங்கியது. அவர் வெளியே வந்து பார்த்தபோது, ஒன்றையும் அவர் காணவில்லை. (அப்போதும்) அது மிரண்டுகொண்டி ருந்தது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் அந்த விஷயத்தைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது” என்று கூறினர்கள்.8

4840. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرٍ، قَالَ كُنَّا يَوْمَ الْحُدَيْبِيَةِ أَلْفًا وَأَرْبَعَمِائَةٍ.
பாடம்: 5
‘‘(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்துகொண்டிருந்தபோது அவர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தி அடைந்துகொண்டான்” எனும் (48:18ஆவது) வசனத்தொடர்
4840. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபியா நாளன்று நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம்.9
அத்தியாயம் : 65
4840. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபியா நாளன்று நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம்.9
அத்தியாயம் : 65
4841. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ عُقْبَةَ بْنَ صُهْبَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ، إِنِّي مِمَّنْ شَهِدَ الشَّجَرَةَ، نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الْخَذْفِ.
பாடம்: 5
‘‘(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்துகொண்டிருந்தபோது அவர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தி அடைந்துகொண்டான்” எனும் (48:18ஆவது) வசனத்தொடர்
4841. அந்த மரத்தின்கீழ் நடைபெற்ற (‘பைஅத்துர் ரிள்வான்’ எனும்) சத்தியப் பிரமாணத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான அப்துல்லாஹ்பின் முகஃப்பல் அல்முஸ்னீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (பொடிக்கற்களை இரு விரல்களால் எறிந்து விளையாடும்) ‘கத்ஃப்’ எனும் கல் சுண்டு விளையாட்டிற்குத் தடை விதித்தார்கள்.10

4842. وَعَنْ عُقْبَةَ بْنِ صُهْبَانَ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الْمُغَفَّلِ الْمُزَنِيِّ، فِي الْبَوْلِ فِي الْمُغْتَسَلِ.
பாடம்: 5
‘‘(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்துகொண்டிருந்தபோது அவர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தி அடைந்துகொண்டான்” எனும் (48:18ஆவது) வசனத்தொடர்
4842. உக்பா பின் ஸுஹ்பான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
குளியலறையில் சிறுநீர் கழிப்பது தொடர்பாக அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன். (நபி (ஸல்) அவர்கள் அதற்குத் தடை விதித்ததாக அன்னார் தெரிவித்தார்கள்.)11