4778. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ " مَفَاتِيحُ الْغَيْبِ خَمْسٌ " ثُمَّ قَرَأَ {إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ}.
பாடம்: 2
‘‘நிச்சயமாக மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது” எனும் (31:34 ஆவது) வசனத்தொடர்
4778. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ‘‘மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும்” என்று கூறிவிட்டு, பிறகு ‘‘நிச்சயமாக, மறுமை(நாள் எப்போது வரும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது” என்று தொடங்கும் (31:34 ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.5
அத்தியாயம் : 65

4779. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ، وَلاَ أُذُنٌ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ ". قَالَ أَبُو هُرَيْرَةَ اقْرَءُوا إِنْ شِئْتُمْ {فَلاَ تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ}. وَحَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ اللَّهُ مِثْلَهُ. قِيلَ لِسُفْيَانَ رِوَايَةً. قَالَ فَأَىُّ شَىْءٍ قَالَ أَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ قَرَأَ أَبُو هُرَيْرَةَ قُرَّاتِ أَعْيُنٍ.
பாடம்:
32. ‘அஸ்ஸஜ்தா’ அத்தியாயம்1
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(32:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஹீன்’ எனும் சொல்லுக்கு ‘பலவீனமானது’ என்று பொருள். இது ஆணுடைய விந்தைக் குறிக்கிறது.
(32:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ளலல்னா’ எனும் சொல்லுக்கு ‘நாங்கள் அழிந்துபோனோம்’ என்பது பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(32:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஜுருஸ்’ எனும் சொல் பயனேதுமில்லாத வகையில் மிகக் குறைவாகவே மழை பெய்யும் (வறண்ட களர்) நிலத்தைக் குறிக்கின்றது.
(32:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘யஹ்தி’ எனும் சொல் மற்றோர் ஓதலில் ‘நஹ்தி’ என்று ஓதப்பட்டுள்ளது. அந்த) ‘நஹ்தி’ எனும் சொல்லுக்கு ‘நாம் தெளிவுபடுத்தினோம்’ என்பது பொருள்.
பாடம்: 1
‘‘அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்” எனும் (32:17ஆவது) இறைவசனம்
4779. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அருள் வளமும் உயர்வும் உடைய அல்லாஹ், ‘‘என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் மனத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்திருக்கிறேன்” என்று கூறுகின்றான்.
இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘நீங்கள் விரும்பினால், ‘‘அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்” எனும் (32:17ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.2
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் (ரஹ்) அவர்களிடம் ‘‘இது நபிமொழியா? (அல்லது உங்களின் கருத்தா?)” என வினவப்பட, அன்னார் ‘‘(இது நபிமொழி இல்லாமல்) வேறென்ன?” என்று (திருப்பிக்) கேட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

4780. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الأَعْمَشِ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم " يَقُولُ اللَّهُ تَعَالَى أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ، وَلاَ أُذُنٌ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ، ذُخْرًا، بَلْهَ مَا أُطْلِعْتُمْ عَلَيْهِ ". ثُمَّ قَرَأَ {فَلاَ تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ}
பாடம்:
32. ‘அஸ்ஸஜ்தா’ அத்தியாயம்1
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(32:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஹீன்’ எனும் சொல்லுக்கு ‘பலவீனமானது’ என்று பொருள். இது ஆணுடைய விந்தைக் குறிக்கிறது.
(32:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ளலல்னா’ எனும் சொல்லுக்கு ‘நாங்கள் அழிந்துபோனோம்’ என்பது பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(32:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஜுருஸ்’ எனும் சொல் பயனேதுமில்லாத வகையில் மிகக் குறைவாகவே மழை பெய்யும் (வறண்ட களர்) நிலத்தைக் குறிக்கின்றது.
(32:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘யஹ்தி’ எனும் சொல் மற்றோர் ஓதலில் ‘நஹ்தி’ என்று ஓதப்பட்டுள்ளது. அந்த) ‘நஹ்தி’ எனும் சொல்லுக்கு ‘நாம் தெளிவுபடுத்தினோம்’ என்பது பொருள்.
பாடம்: 1
‘‘அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்” எனும் (32:17ஆவது) இறைவசனம்
4780. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ‘‘உயர்ந்தோன் அல்லாஹ், ‘என் நல்லடியார்களின் சேமிப்பாக எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் மனத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளேன். (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளவை, (அங்கே கிடைக்கவிருக்கும் இன்பங்களுக்கு முன்னே) சொற்பமானவையே ஆகும்’ எனக் கூறுகின்றான்” என்று சொன்னார்கள்.
பிறகு, ‘‘அவர்கள் செய்துகொண்டி ருந்த (நற்)செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்” எனும் (32:17ஆவது) இறைவசனத்தை ஒதினார்கள்.
மற்றோர் அறிவிப்பில், அபூஹுரைரா (ரலி) அவர்கள் (32:17ஆவது வசனத்தின் மூலத்தில் உள்ள ‘குர்ரத்’ (குளிர்ச்சி) எனும் ஒருமையான சொல்லை) ‘குர்ராத்’ என(ப் பன்மையாக) வாசித்தார்கள் என்று காணப்படுகிறது.

4781. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا مِنْ مُؤْمِنٍ إِلاَّ وَأَنَا أَوْلَى النَّاسِ بِهِ فِي الدُّنْيَا وَالآخِرَةِ، اقْرَءُوا إِنْ شِئْتُمْ {النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ} فَأَيُّمَا مُؤْمِنٍ تَرَكَ مَالاً فَلْيَرِثْهُ عَصَبَتُهُ مَنْ كَانُوا، فَإِنْ تَرَكَ دَيْنًا أَوْ ضِيَاعًا فَلْيَأْتِنِي وَأَنَا مَوْلاَهُ ".
பாடம்:
33. ‘அல்அஹ்ஸாப்’ அத்தியாயம்1
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(33:26ஆவது வசனத்திலுள்ள) ‘அவர்களின் கோட்டைகள்’ எனும் பொருள், மூலத்திலுள்ள ‘ஸயாஸீஹிம்’ எனும் சொல்லுக்குரியதாகும்.
பாடம்: 1
நிச்சயமாக, இறைநம்பிக்கையாளர் களுக்கு அவர்களின் உயிரைவிட நபிதான் முன்னுரிமை பெற்றவ ராவார் (எனும் 33:6ஆவது வசனத்தொடர்)
4781. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்த ஓர் இறைநம்பிக்கையாளருக்கும், இந்த உலகிலும் மறுமையிலும் நானே மக்களில் மிக நெருக்கமானவன் ஆவேன். நீங்கள் விரும்பினால், ‘‘நிச்சயமாக, இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரைவிட நபிதான் முன்னுரிமை பெற்றவராவார்” எனும் (33:6ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.
ஓர் இறைநம்பிக்கையாளர் (அவர் எவராயினும் சரி, இறந்துபோய்) செல்வத்தை விட்டுச்சென்றால் அவருடைய தந்தை வழி உறவினர்கள் -அவர்கள் எவ்வகையினராயினும் சரி -அதற்கு அவர்கள் வாரிசாகட்டும்!
எவர் (இறக்கும்போது) ஒரு கடனை (அடைக்காமல்) விட்டுச்செல்கின்றாரோ, அல்லது (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) மனைவி மக்களை விட்டுச்செல்கிறாரோ அவர்கள் என்னிடத்தில் வரட்டும். நானே அவர்களுக்குரிய காப்பாளன் (பொறுப்பேற்றுப் பராமரிப்பவன்) ஆவேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2

4782. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ زَيْدَ بْنَ حَارِثَةَ، مَوْلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا كُنَّا نَدْعُوهُ إِلاَّ زَيْدَ ابْنَ مُحَمَّدٍ حَتَّى نَزَلَ الْقُرْآنُ {ادْعُوهُمْ لآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ}.
பாடம்: 2
வளர்ப்புப் புதல்வர்களை அவர் களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும் (எனும் 33:5ஆவது வசனத்தொடர்)
4782. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘‘வளர்ப்புப் புதல்வர்களை அவர் களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும்” எனும் (33:5ஆவது) குர்ஆன் வசனம் அருளப்படும்வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை ‘ஸைத் பின் முஹம்மத்’ (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்துவந்தோம்.3

4783. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ نُرَى هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِي أَنَسِ بْنِ النَّضْرِ {مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ}.
பாடம் : 3
அவர்களில் சிலர் (தாம் வீரமரணம் அடைய வேண்டும் என்ற) தமது நோக்கத்தை அடைந்துவிட் டார்கள். இன்னும் அவர்களில் சிலர் (தமக்குரிய வாய்ப்பை) எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தமது வாக்குறுதியை ஒருபோதும் அவர்கள் மாற்றிக்கொள்ளவில்லை (எனும் 33:23ஆவது வசனத் தொடர்)
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நஹ்பஹு’ எனும் சொல்லுக்கு ‘தமது வாக்குறுதி’ என்பது பொருள். (இதற்கு இலட்சியம், நோக்கம், நேர்ச்சை ஆகிய பொருள்களும் உண்டு.)
(33:14ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘அக்தாரிஹா’ எனும் சொல்லுக்கு ‘அதன் பல பாகங்கள்’ என்பது பொருள். ‘அல்ஃபித்னத்த ல ஆத்தவ்ஹா’ எனும் சொற்றொடருக்கு ‘குழப்பத்தைத் தந்திருப்பார்கள்’ என்று பொருள்.
4783. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘‘இறைநம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்துகொண்டார்கள்” என்று தொடங்கும் (33:23ஆவது) வசனம், அனஸ் பின் நள்ர் (ரலி) அவர்கள் தொடர்பாக அருளப்பெற்றதென்றே நாங்கள் கருதுகிறோம்.4

4784. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ، قَالَ لَمَّا نَسَخْنَا الصُّحُفَ فِي الْمَصَاحِفِ فَقَدْتُ آيَةً مِنْ سُورَةِ الأَحْزَابِ، كُنْتُ أَسْمَعُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَؤُهَا، لَمْ أَجِدْهَا مَعَ أَحَدٍ إِلاَّ مَعَ خُزَيْمَةَ الأَنْصَارِيِّ، الَّذِي جَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَهَادَتَهُ شَهَادَةَ رَجُلَيْنِ {مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ}
பாடம் : 3
அவர்களில் சிலர் (தாம் வீரமரணம் அடைய வேண்டும் என்ற) தமது நோக்கத்தை அடைந்துவிட் டார்கள். இன்னும் அவர்களில் சிலர் (தமக்குரிய வாய்ப்பை) எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தமது வாக்குறுதியை ஒருபோதும் அவர்கள் மாற்றிக்கொள்ளவில்லை (எனும் 33:23ஆவது வசனத் தொடர்)
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நஹ்பஹு’ எனும் சொல்லுக்கு ‘தமது வாக்குறுதி’ என்பது பொருள். (இதற்கு இலட்சியம், நோக்கம், நேர்ச்சை ஆகிய பொருள்களும் உண்டு.)
(33:14ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘அக்தாரிஹா’ எனும் சொல்லுக்கு ‘அதன் பல பாகங்கள்’ என்பது பொருள். ‘அல்ஃபித்னத்த ல ஆத்தவ்ஹா’ எனும் சொற்றொடருக்கு ‘குழப்பத்தைத் தந்திருப்பார்கள்’ என்று பொருள்.
4784. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்,) குர்ஆனுக்குப் பிரதிகள் எடுத்தபோது ‘அல்அஹ்ஸாப்’ எனும் (33ஆவது) அத்தியாயத்தின் ஒரு வசனத்தை நான் காணவில்லை. அதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதக் கேட்டிருந்தேன். குஸைமா அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம் தவிர வேறு யாரிடமும் அது எனக்குக் கிடைக்கவில்லை. இந்த குஸைமாவின் சாட்சியத்தைத் தான் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு பேரின் சாட்சியத்திற்குச் சமமானதாக ஆக்கினார்கள்.5
(அந்த வசனம் இதுதான்:) ‘‘இறை நம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்துகொண்டார்கள்.” (33:23)6

4785. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ، رضى الله عنها زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَاءَهَا حِينَ أَمَرَ اللَّهُ أَنْ يُخَيِّرَ أَزْوَاجَهُ، فَبَدَأَ بِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " إِنِّي ذَاكِرٌ لَكِ أَمْرًا فَلاَ عَلَيْكِ أَنْ تَسْتَعْجِلِي حَتَّى تَسْتَأْمِرِي أَبَوَيْكِ "، وَقَدْ عَلِمَ أَنَّ أَبَوَىَّ لَمْ يَكُونَا يَأْمُرَانِي بِفِرَاقِهِ، قَالَتْ ثُمَّ قَالَ " إِنَّ اللَّهَ قَالَ {يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لأَزْوَاجِكَ} ". إِلَى تَمَامِ الآيَتَيْنِ فَقُلْتُ لَهُ فَفِي أَىِّ هَذَا أَسْتَأْمِرُ أَبَوَىَّ فَإِنِّي أُرِيدُ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الآخِرَةَ.
பாடம்: 4
‘‘நபியே! உம்முடைய துணைவி யரிடம் கூறுவீராக: நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துவிடுகிறேன்” (எனும் 33:28ஆவது இறைவசனம்)
மஅமர் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(33:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தபர்ருஜ்’ எனும் சொல், ஒரு பெண் தன் அழகை (அந்நிய ஆடவர்களுக்கு) வெளிக்காட்டுவதைக் குறிக்கும்.
(33:38ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘சுன்னத்தல்லாஹ்’ எனும் சொல்லுக்கு ‘அல்லாஹ்வின் வழிமுறை (மரபு)’ என்பது பொருள். (இதன் வினைச் சொல்லான) ‘இஸ்தன்ன’ என்பதற்கு ‘வழிமுறையாக்கினான்’ என்பது பொருள்.
4785. நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமை அளித்திடுமாறு தன் தூதருக்கு அல்லாஹ் கட்டளையிட்டபோது, நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்.7
என்னிடம்தான் முதன்முதலாக விஷயத்தைச் சொன்னார்கள்: ‘‘(ஆயிஷாவே)! நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். (என்று அதைச் சொல்லிவிட்டு,) நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக்கொள்ளும்வரை அவசரப்பட வேண்டாம்” என்று சொன்னார்கள். என்னுடைய பெற்றோர் நபி (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடும்படி எனக்கு உத்தரவிடப்போவதில்லை என்று நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்திருந்தது.
பிறகு அவர்கள், ‘‘நபியே! உம்முடைய துணைவியரிடம் கூறுவீராக” என்று தொடங்கும் (33:28, 29) இரு வசனங்களை முழுமையாகச் சொன்னார்கள். அப்போது நான், ‘‘இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் என்ன அனுமதி கேட்பது? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமை இல்லத்தையுமே விரும்புகிறேன்” என்று நபியவர்களிடம் சொன்னேன்.8

4786. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ لَمَّا أُمِرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِتَخْيِيرِ أَزْوَاجِهِ بَدَأَ بِي فَقَالَ " إِنِّي ذَاكِرٌ لَكِ أَمْرًا فَلاَ عَلَيْكِ أَنْ لاَ تَعْجَلِي حَتَّى تَسْتَأْمِرِي أَبَوَيْكِ ". قَالَتْ وَقَدْ عَلِمَ أَنَّ أَبَوَىَّ لَمْ يَكُونَا يَأْمُرَانِي بِفِرَاقِهِ، قَالَتْ ثُمَّ قَالَ " إِنَّ اللَّهَ جَلَّ ثَنَاؤُهُ قَالَ {يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لأَزْوَاجِكَ إِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا} إِلَى {أَجْرًا عَظِيمًا} ". قَالَتْ فَقُلْتُ فَفِي أَىِّ هَذَا أَسْتَأْمِرُ أَبَوَىَّ فَإِنِّي أُرِيدُ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الآخِرَةَ، قَالَتْ ثُمَّ فَعَلَ أَزْوَاجُ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَ مَا فَعَلْتُ. تَابَعَهُ مُوسَى بْنُ أَعْيَنَ عَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ. وَقَالَ عَبْدُ الرَّزَّاقِ وَأَبُو سُفْيَانَ الْمَعْمَرِيُّ عَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ.
பாடம்: 5
‘‘ஆனால், நீங்கள் அல்லாஹ்வை யும் அவனுடைய தூதரையும் மறு உலகையும் விரும்புவீர்களா னால், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள (இத்தகைய) நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனைத் தயார் செய்து வைத் துள்ளான்” எனும் (33:29ஆவது) இறைவசனம்
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:
‘‘உங்கள் வீடுகளில் ஓதப்படுகின்ற இறைவசனங்களையும், ஞான (வாக்கிய)ங்களையும் நினைவில் வையுங்கள்” எனும் (33:34ஆவது வசனத்திலுள்ள) ‘இறைவசனங்கள்’ என்பது குர்ஆனையும், ‘ஞானங்கள்’ என்பது நபிவழியையும் குறிக்கிறது.
4786. நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமையளித்திடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கட்டளை யிடப்பட்டபோது, அவர்கள் என்னிடம்தான் முதன்முதலாக விஷயத்தைச் சொன்னார் கள்: ‘‘(ஆயிஷா!) நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். (என்று அதைச் சொல்லிவிட்டு,) நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக் கொள்ளும்வரை அவசரப்பட வேண்டாம்” என்று சொன்னார்கள்.
என் பெற்றோர் நபி (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடும்படி உத்தரவிடப்போவ தில்லை என்று நபியவர்களுக்குத் தெரிந்திருந்தது.
பிறகு அவர்கள், ‘‘நபியே! உம்முடைய துணைவியரிடம் கூறுவீராக: நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களது வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துவிடுகிறேன். ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுஉலகையும் விரும்புவீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள (இத்தகைய) நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை தயார் செய்துவைத்துள்ளான்” எனும் (33:28,29) வசனங்களை ஓதினார்கள்.
அப்போது நான், ‘‘இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் என்ன அனுமதி கேட்பது? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமை வீட்டையுமே விரும்புகிறேன்” என்று சொன்னேன். பிறகு நபி (ஸல்) அவர்களின் இதரத் துணைவியரும் என்னைப் போன்றே செயல்பட்டனர்.9
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

4787. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا مُعَلَّى بْنُ مَنْصُورٍ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ هَذِهِ، الآيَةَ {وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ} نَزَلَتْ فِي شَأْنِ زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ وَزَيْدِ بْنِ حَارِثَةَ.
பாடம் : 6
‘‘(நபியே!) நீர் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியி ருந்த விஷயத்தை உமது உள்ளத்தில் மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர். மேலும், நீர் மனிதர்களுக்கு அஞ்சிக்கொண்டிருந்தீர். ஆனால், அல்லாஹ்தான் நீர் அஞ்சுவதற்கு அதிகத் தகுதியுடையவன்” எனும் (33:37ஆவது) வசனத்தொடர்
4787. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘(நபியே!) நீர் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உமது உள்ளத்தில் மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர்...” எனும் இந்த (33:37ஆவது) வசனம் (நபி (ஸல்) அவர்களின் அத்தை மகளான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) மற்றும் (நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் தொடர்பாக அருளப்பெற்றது.10

4788. حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ هِشَامٌ حَدَّثَنَا عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كُنْتُ أَغَارُ عَلَى اللاَّتِي وَهَبْنَ أَنْفُسَهُنَّ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَقُولُ أَتَهَبُ الْمَرْأَةُ نَفْسَهَا فَلَمَّا أَنْزَلَ اللَّهُ تَعَالَى {تُرْجِئُ مَنْ تَشَاءُ مِنْهُنَّ وَتُؤْوِي إِلَيْكَ مَنْ تَشَاءُ وَمَنِ ابْتَغَيْتَ مِمَّنْ عَزَلْتَ فَلاَ جُنَاحَ عَلَيْكَ} قُلْتُ مَا أُرَى رَبَّكَ إِلاَّ يُسَارِعُ فِي هَوَاكَ.
பாடம்: 7
‘‘(நபியே! உம்முடைய துணைவி யரான) அவர்களில் நீர் விரும்பி யவர்களை (விரும்பும் காலம் வரை) ஒதுக்கிவைக்கலாம். நீர் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) உம்முடன் இருக்க வைக்கலாம். நீர் ஒதுக்கிவைத்தவர்களில் யாரை விரும்புகிறீரோ அவர்களை (மறுபடியும்) உம்முடன் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் உம்மீது குற்றம் ஏதுமில்லை” எனும் (33:51ஆவது) வசனத்தொடர்.11
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துர்ஜீ’ எனும் சொல்லுக்கு ‘ஒதுக்கி வைக்கலாம்’ என்பது பொருள். (இதன் ஏவல் வினைச்சொல்லும், 7:111 மற்றும் 26:36 ஆகிய வசனங்களின் மூலத்தி லுள்ளதுமான) ‘அர்ஜிஹ்’ எனும் சொல்லுக்கு ‘அவரை விட்டுப்பிடி’ என்பது பொருள்.
4788. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தங்களையே கொடையாக (மணக்கொடையின்றி) வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டிருந்தேன். மேலும் நான், ‘‘ஒரு பெண் தன்னைத் தானே (ஓர் ஆணுக்கு) கொடையாக வழங்கவும் செய்வாளா?” என்று சொல்லிக்கொண்டேன்.
‘‘(நபியே! உம்முடைய துணைவியரான) அவர்களில் நீர் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கிவைக்கலாம். நீர் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) உம்முடன் இருக்க வைக்கலாம். நீர் ஒதுக்கிவைத்தவர்களில் யாரை விரும்புகிறீரோ அவர்களை (மறுபடியும்) உம்முடன் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் உம்மீது குற்றம் ஏதுமில்லை” எனும் (33:51ஆவது) இறைவசனத்தை அல்லாஹ் அருளியபோது, நான் ‘‘உங்கள் இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாகப் பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன்” என்று (நபியவர்களிடம்) சொன்னேன்.12

4789. حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمٌ الأَحْوَلُ، عَنْ مُعَاذَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَسْتَأْذِنُ فِي يَوْمِ الْمَرْأَةِ مِنَّا بَعْدَ أَنْ أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ {تُرْجِئُ مَنْ تَشَاءُ مِنْهُنَّ وَتُؤْوِي إِلَيْكَ مَنْ تَشَاءُ وَمَنِ ابْتَغَيْتَ مِمَّنْ عَزَلْتَ فَلاَ جُنَاحَ عَلَيْكَ}. فَقُلْتُ لَهَا مَا كُنْتِ تَقُولِينَ قَالَتْ كُنْتُ أَقُولُ لَهُ إِنْ كَانَ ذَاكَ إِلَىَّ فَإِنِّي لاَ أُرِيدُ يَا رَسُولَ اللَّهِ أَنْ أُوثِرَ عَلَيْكَ أَحَدًا. تَابَعَهُ عَبَّادُ بْنُ عَبَّادٍ سَمِعَ عَاصِمًا.
பாடம்: 7
‘‘(நபியே! உம்முடைய துணைவி யரான) அவர்களில் நீர் விரும்பி யவர்களை (விரும்பும் காலம் வரை) ஒதுக்கிவைக்கலாம். நீர் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) உம்முடன் இருக்க வைக்கலாம். நீர் ஒதுக்கிவைத்தவர்களில் யாரை விரும்புகிறீரோ அவர்களை (மறுபடியும்) உம்முடன் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் உம்மீது குற்றம் ஏதுமில்லை” எனும் (33:51ஆவது) வசனத்தொடர்.11
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துர்ஜீ’ எனும் சொல்லுக்கு ‘ஒதுக்கி வைக்கலாம்’ என்பது பொருள். (இதன் ஏவல் வினைச்சொல்லும், 7:111 மற்றும் 26:36 ஆகிய வசனங்களின் மூலத்தி லுள்ளதுமான) ‘அர்ஜிஹ்’ எனும் சொல்லுக்கு ‘அவரை விட்டுப்பிடி’ என்பது பொருள்.
4789. முஆதா பின்த் அப்தில்லாஹ் அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
‘‘(நபியே! உங்கள் துணைவி யரான) அவர்களில் நீர் விரும்பி யவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கிவைக்கலாம். நீர் விரும்பிய வர்களை (விரும்பும் காலம்வரை) உம்முடன் இருக்க வைக்கலாம். நீர் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீரோ அவர்களை (மறுபடியும்) உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உம்மீது குற்றம் ஏதுமில்லை” எனும் (33:51 ஆவது) இறைவசனம் அருளப்பட்ட பிறகும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களில் ஒரு மனைவியின் நாளில் மற்றொரு மனைவியிடம் செல்ல விரும்பினால், அந்நாளை விட்டுக்கொடுக்கும்படி அனுமதி கேட்பார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
நான், ‘‘அதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! (வேறொரு மனைவிக்காக எனது நாளை விட்டுக்கொடுக்கும்படி,) நீங்கள் என்னிடம் அனுமதி கேட்பதாயிருந்தால், நான் யாருக்காகவும் தங்களை விட்டுக்கொடுக்க விரும்பமாட்டேன்’ என்று சொல்வேன்” என்றார்கள்.13
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

4790. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، يَدْخُلُ عَلَيْكَ الْبَرُّ وَالْفَاجِرُ، فَلَوْ أَمَرْتَ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ بِالْحِجَابِ، فَأَنْزَلَ اللَّهُ آيَةَ الْحِجَابِ.
பாடம்: 8
‘‘இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப் பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், அப்போதும்கூட உணவு தயாரா வதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக, உங்களது இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. இதை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை.
நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்க வேண்டுமென்றால், திரைக்குப் பின்னாóருந்து கேளுங்கள். உங்களுடையவும் அவர்களுடையவும் உள்ளங்களின் தூய்மைக்கு இதுவே ஏற்ற முறையாகும்.
அல்லாஹ்வுடைய தூதருக்குத் தொல்லை தருவது உங்களுக்குத் தகாது. அவருக்குப் பின்னர் அவருடைய துணைவியரை நீங்கள் மணந்துகொள்வதும் ஒருபோதும் கூடாது. அவ்வாறு செய்வது அல்லாஹ்விடம் நிச்சயமாகப் பெரும் பாவமாகும்” எனும் (33:53ஆவது) இறைவசனம்
(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இனாஹு’ எனும் சொல்லுக்கு ‘தயாராகுதல்’ என்று பொருள். அனா, யஃனீ, அனாத்தன் (என இதன் வாய்பாடு அமையும்.)
‘‘உங்களுக்குத் தெரியுமா? அது (மறுமை நாள்), சமீபமாகவும் இருக்கக் கூடும்” எனும் (33:63ஆவது) வசனத் தொடர்.
(இவ்வசனத்தில் ‘சமீபமாக’ என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள) ‘கரீப்’ எனும் சொல் அடைமொழியாக இருப்பின் (அடைமொழிக்குரிய ‘சாஅத்’ எனும் பெண்பால் வார்த்தைக்கேற்ப) ‘கரீபத்’ என்றே வரவேண்டும். அதை இடப்பெயர், அல்லது காலப்பெயராகக் கருதுகையில் ‘கரீப் என (ஆண்பாலாகவே) வரும். இந்நிலையில் ஆண்பால், பெண்பால், ஒருமை, இருமை, பன்மை அனைத்திலும் ஒரே மாதிரியாகவே சொல் அமையும்.
4790. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். ஆகவே, தாங்கள் (தங்களுடைய துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும்படி கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே!” என்று சொன்னேன். அப்போது அல்லாஹ் பர்தா (சட்டம்) தொடர்பான வசனத்தை அருளினான்.14

4791. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الرَّقَاشِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ، حَدَّثَنَا أَبُو مِجْلَزٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا تَزَوَّجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَيْنَبَ ابْنَةَ جَحْشٍ دَعَا الْقَوْمَ، فَطَعِمُوا ثُمَّ جَلَسُوا يَتَحَدَّثُونَ وَإِذَا هُوَ كَأَنَّهُ يَتَهَيَّأُ لِلْقِيَامِ فَلَمْ يَقُومُوا، فَلَمَّا رَأَى ذَلِكَ قَامَ، فَلَمَّا قَامَ قَامَ مَنْ قَامَ، وَقَعَدَ ثَلاَثَةُ نَفَرٍ فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِيَدْخُلَ فَإِذَا الْقَوْمُ جُلُوسٌ ثُمَّ إِنَّهُمْ قَامُوا، فَانْطَلَقْتُ فَجِئْتُ فَأَخْبَرْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنَّهُمْ قَدِ انْطَلَقُوا، فَجَاءَ حَتَّى دَخَلَ، فَذَهَبْتُ أَدْخُلُ فَأَلْقَى الْحِجَابَ بَيْنِي وَبَيْنَهُ فَأَنْزَلَ اللَّهُ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ} الآيَةَ
பாடம்: 8
‘‘இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப் பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், அப்போதும்கூட உணவு தயாரா வதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக, உங்களது இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. இதை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை.
நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்க வேண்டுமென்றால், திரைக்குப் பின்னாóருந்து கேளுங்கள். உங்களுடையவும் அவர்களுடையவும் உள்ளங்களின் தூய்மைக்கு இதுவே ஏற்ற முறையாகும்.
அல்லாஹ்வுடைய தூதருக்குத் தொல்லை தருவது உங்களுக்குத் தகாது. அவருக்குப் பின்னர் அவருடைய துணைவியரை நீங்கள் மணந்துகொள்வதும் ஒருபோதும் கூடாது. அவ்வாறு செய்வது அல்லாஹ்விடம் நிச்சயமாகப் பெரும் பாவமாகும்” எனும் (33:53ஆவது) இறைவசனம்
(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இனாஹு’ எனும் சொல்லுக்கு ‘தயாராகுதல்’ என்று பொருள். அனா, யஃனீ, அனாத்தன் (என இதன் வாய்பாடு அமையும்.)
‘‘உங்களுக்குத் தெரியுமா? அது (மறுமை நாள்), சமீபமாகவும் இருக்கக் கூடும்” எனும் (33:63ஆவது) வசனத் தொடர்.
(இவ்வசனத்தில் ‘சமீபமாக’ என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள) ‘கரீப்’ எனும் சொல் அடைமொழியாக இருப்பின் (அடைமொழிக்குரிய ‘சாஅத்’ எனும் பெண்பால் வார்த்தைக்கேற்ப) ‘கரீபத்’ என்றே வரவேண்டும். அதை இடப்பெயர், அல்லது காலப்பெயராகக் கருதுகையில் ‘கரீப் என (ஆண்பாலாகவே) வரும். இந்நிலையில் ஆண்பால், பெண்பால், ஒருமை, இருமை, பன்மை அனைத்திலும் ஒரே மாதிரியாகவே சொல் அமையும்.
4791. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஸைனப் பின்த் ஜஹ்ஷ்’ (ரலி) அவர்களை மணமுடித்துக்கொண்டபோது மக்களை அவர்கள் (வலீமா விருந்துக்கு) அழைத்தார்கள்.15
மக்கள் (விருந்து) உண்டுவிட்டு, பிறகு பேசிக்கொண்டே அமர்ந்துவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்து போகத் தயாராயிருப்பதுபோல் (பல முறை) காட்டினார்கள். ஆனால், மக்கள் எழுந் திருக்கவில்லை. அதைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் (ஒரேயடியாக) எழுந்துவிட்டார்கள். அவர்கள் எழுந்து விடவே (அவர்களுடன்) மற்றவர்களும் எழுந்துவிட்டனர்.
ஆனால், மூன்று பேர் மட்டும் அமர்ந்து (பேசிக்)கொண்டேயிருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (ஸைனப் (ரலி) அவர்களிடம்) செல்லப்போனார்கள். அப்போதும் அவர்கள் அமர்ந்து(கொண்டு பேசிக்)கொண்டேயிருந்தார்கள். பிறகு அவர்கள் (மூவரும்) எழுந்து சென்று விட்டார்கள். நான் உடனே உள்ளே சென்று நபி (ஸல்) அவர்களிடம், அவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள் என்று தெரிவித்தேன். மீண்டும் (வெளியே) வந்து பார்த்துவிட்டு நபி (ஸல்) அவர்கள் உள்ளே சென்றுவிட்டார்கள். நானும் அவர்களுடன் உள்ளே செல்லப்போனேன். அதற்குள் நபி (ஸல்) அவர்கள் எனக்கும் தமக்குமிடையே திரையைப் போட்டுவிட்டார்கள்.
அப்போதுதான் அல்லாஹ், ‘‘இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள்” என்று தொடங்கும் இந்த (33:53ஆவது) வசனத்தை அருளினான்.

4792. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ أَنَا أَعْلَمُ النَّاسِ، بِهَذِهِ الآيَةِ آيَةِ الْحِجَابِ، لَمَّا أُهْدِيَتْ زَيْنَبُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَانَتْ مَعَهُ فِي الْبَيْتِ، صَنَعَ طَعَامًا، وَدَعَا الْقَوْمَ، فَقَعَدُوا يَتَحَدَّثُونَ، فَجَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْرُجُ، ثُمَّ يَرْجِعُ، وَهُمْ قُعُودٌ يَتَحَدَّثُونَ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلاَّ أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ} إِلَى قَوْلِهِ {مِنْ وَرَاءِ حِجَابٍ} فَضُرِبَ الْحِجَابُ، وَقَامَ الْقَوْمُ.
பாடம்: 8
‘‘இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப் பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், அப்போதும்கூட உணவு தயாரா வதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக, உங்களது இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. இதை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை.
நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்க வேண்டுமென்றால், திரைக்குப் பின்னாóருந்து கேளுங்கள். உங்களுடையவும் அவர்களுடையவும் உள்ளங்களின் தூய்மைக்கு இதுவே ஏற்ற முறையாகும்.
அல்லாஹ்வுடைய தூதருக்குத் தொல்லை தருவது உங்களுக்குத் தகாது. அவருக்குப் பின்னர் அவருடைய துணைவியரை நீங்கள் மணந்துகொள்வதும் ஒருபோதும் கூடாது. அவ்வாறு செய்வது அல்லாஹ்விடம் நிச்சயமாகப் பெரும் பாவமாகும்” எனும் (33:53ஆவது) இறைவசனம்
(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இனாஹு’ எனும் சொல்லுக்கு ‘தயாராகுதல்’ என்று பொருள். அனா, யஃனீ, அனாத்தன் (என இதன் வாய்பாடு அமையும்.)
‘‘உங்களுக்குத் தெரியுமா? அது (மறுமை நாள்), சமீபமாகவும் இருக்கக் கூடும்” எனும் (33:63ஆவது) வசனத் தொடர்.
(இவ்வசனத்தில் ‘சமீபமாக’ என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள) ‘கரீப்’ எனும் சொல் அடைமொழியாக இருப்பின் (அடைமொழிக்குரிய ‘சாஅத்’ எனும் பெண்பால் வார்த்தைக்கேற்ப) ‘கரீபத்’ என்றே வரவேண்டும். அதை இடப்பெயர், அல்லது காலப்பெயராகக் கருதுகையில் ‘கரீப் என (ஆண்பாலாகவே) வரும். இந்நிலையில் ஆண்பால், பெண்பால், ஒருமை, இருமை, பன்மை அனைத்திலும் ஒரே மாதிரியாகவே சொல் அமையும்.
4792. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பர்தா (சட்டம்) தொடர்பான இந்த இறைவசனத்தை மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான். (நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மணப்பெண்ணாக அனுப்பிவைக்கப்பட்டு அவர்களுடன் வீட்டில் இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (‘வலீமா’ விருந்துக்கான) உணவைத் தயாரித்து மக்களை அழைத்தார்கள். மக்கள் (சாப்பிட்டுவிட்டு) பேசிக்கொண்டே அமர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வெளியே வரவும் திரும்பச் செல்லவுமாக இருந்தார்கள்.
மக்களோ பேசிக்கொண்டே அமர்ந்திருந்தனர். அப்போதுதான் அல்லாஹ், ‘‘இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும்கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்து விடாதீர்கள்.
நிச்சயமாக உங்களது இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. ஆயினும், இதை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை. நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்க வேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள்” எனும் (33:53ஆவது) வசனத்தை அருளினான். இதையடுத்துத் திரை போடப்பட்டது. மக்களும் எழுந்துவிட்டனர்.

4793. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ بُنِيَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِزَيْنَبَ ابْنَةِ جَحْشٍ بِخُبْزٍ وَلَحْمٍ فَأُرْسِلْتُ عَلَى الطَّعَامِ دَاعِيًا فَيَجِيءُ قَوْمٌ فَيَأْكُلُونَ وَيَخْرُجُونَ، ثُمَّ يَجِيءُ قَوْمٌ فَيَأْكُلُونَ وَيَخْرُجُونَ، فَدَعَوْتُ حَتَّى مَا أَجِدُ أَحَدًا أَدْعُو فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ مَا أَجِدُ أَحَدًا أَدْعُوهُ قَالَ ارْفَعُوا طَعَامَكُمْ، وَبَقِيَ ثَلاَثَةُ رَهْطٍ يَتَحَدَّثُونَ فِي الْبَيْتِ، فَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَانْطَلَقَ إِلَى حُجْرَةِ عَائِشَةَ فَقَالَ " السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الْبَيْتِ وَرَحْمَةُ اللَّهِ ". فَقَالَتْ وَعَلَيْكَ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ، كَيْفَ وَجَدْتَ أَهْلَكَ بَارَكَ اللَّهُ لَكَ فَتَقَرَّى حُجَرَ نِسَائِهِ كُلِّهِنَّ، يَقُولُ لَهُنَّ كَمَا يَقُولُ لِعَائِشَةَ، وَيَقُلْنَ لَهُ كَمَا قَالَتْ عَائِشَةُ، ثُمَّ رَجَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَإِذَا ثَلاَثَةُ رَهْطٍ فِي الْبَيْتِ يَتَحَدَّثُونَ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم شَدِيدَ الْحَيَاءِ، فَخَرَجَ مُنْطَلِقًا نَحْوَ حُجْرَةِ عَائِشَةَ فَمَا أَدْرِي آخْبَرْتُهُ أَوْ أُخْبِرَ أَنَّ الْقَوْمَ خَرَجُوا، فَرَجَعَ حَتَّى إِذَا وَضَعَ رِجْلَهُ فِي أُسْكُفَّةِ الْبَابِ دَاخِلَةً وَأُخْرَى خَارِجَةً أَرْخَى السِّتْرَ بَيْنِي وَبَيْنَهُ، وَأُنْزِلَتْ آيَةُ الْحِجَابِ.
பாடம்: 8
‘‘இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப் பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், அப்போதும்கூட உணவு தயாரா வதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக, உங்களது இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. இதை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை.
நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்க வேண்டுமென்றால், திரைக்குப் பின்னாóருந்து கேளுங்கள். உங்களுடையவும் அவர்களுடையவும் உள்ளங்களின் தூய்மைக்கு இதுவே ஏற்ற முறையாகும்.
அல்லாஹ்வுடைய தூதருக்குத் தொல்லை தருவது உங்களுக்குத் தகாது. அவருக்குப் பின்னர் அவருடைய துணைவியரை நீங்கள் மணந்துகொள்வதும் ஒருபோதும் கூடாது. அவ்வாறு செய்வது அல்லாஹ்விடம் நிச்சயமாகப் பெரும் பாவமாகும்” எனும் (33:53ஆவது) இறைவசனம்
(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இனாஹு’ எனும் சொல்லுக்கு ‘தயாராகுதல்’ என்று பொருள். அனா, யஃனீ, அனாத்தன் (என இதன் வாய்பாடு அமையும்.)
‘‘உங்களுக்குத் தெரியுமா? அது (மறுமை நாள்), சமீபமாகவும் இருக்கக் கூடும்” எனும் (33:63ஆவது) வசனத் தொடர்.
(இவ்வசனத்தில் ‘சமீபமாக’ என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள) ‘கரீப்’ எனும் சொல் அடைமொழியாக இருப்பின் (அடைமொழிக்குரிய ‘சாஅத்’ எனும் பெண்பால் வார்த்தைக்கேற்ப) ‘கரீபத்’ என்றே வரவேண்டும். அதை இடப்பெயர், அல்லது காலப்பெயராகக் கருதுகையில் ‘கரீப் என (ஆண்பாலாகவே) வரும். இந்நிலையில் ஆண்பால், பெண்பால், ஒருமை, இருமை, பன்மை அனைத்திலும் ஒரே மாதிரியாகவே சொல் அமையும்.
4793. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ரொட்டியும் இறைச்சியும் விருந்தாக அளித்து, ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். (வலீமா விருந்து) உணவுக்காக மக்களை அழைப்பதற்கு நான் அனுப்பப்பட்டேன். ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் உண்பார்கள்; புறப்பட்டுவிடுவார்கள். பிறகு மற்றொரு கூட்டத்தார் வருவார்கள். உண்பார்கள்; போய்விடுவார்கள். இனி அழைப்பதற்கு ஒருவரும் இல்லை என்பதுவரை நான் மக்களை அழைத்தேன்.
பிறகு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அழைப்பதற்கு இனி ஒருவரும் இல்லை” என்றேன். அவர்கள், ‘‘உங்கள் உணவை எடுத்துச் செல்லுங்கள்!” என்றார்கள். (விருந்து முடிந்தும்) மூன்று பேர் மட்டும் வீட்டில் பேசிக்கொண்டே இருந்து விட்டனர்.
நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக்குச் சென்று ‘‘வீட்டாரே! அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் (உங்கள்மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்!)” என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘வ அலைக்குமுஸ் ஸலாம், வ ரஹ்மத்துல்லாஹ் (தங்கள்மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்!) தங்களின் (புதிய) துணைவியாரை எப்படிக் கண்டீர்கள்? பாரக்கல்லாஹ் (அல்லாஹ் தங்களுக்கு வளம் வழங்கட்டும்!)” என்று (மணவாழ்த்துச்) சொன்னார்கள்.
பிறகு, நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியர் அனைவரின் அறைகளையும் தேடிச்சென்று ஆயிஷா (ரலி) அவர்களுக்குச் சொன்னதைப் போன்றே (முகமன்) சொல்ல, அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதைப் போன்றே (பிரதி முகமனும் மணவாழ்த்தும்) கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் (புதுமணப் பெண் ஸைனப் (ரலி) அவர்களிடம்) திரும்பி வர, அப்போதும் வீட்டில் அந்த மூன்று பேரும் பேசிக்கொண்டிருந்தனர்.நபி (ஸல்) அவர்களோ அதிக வெட்க (சுபாவ)ம் உடையவர்களாய் இருந்தார்கள். ஆகவே, (அவர்களை விரைவாகப் போகச் சொல்லாமல்,) ஆயிஷா (ரலி) அவர்களின் அறையை நோக்கி நடந்தபடி (மீண்டும்) புறப்பட்டார்கள். அந்த மூவரும் வெளியேறிவிட்டார்கள் என்று ‘நான் அவர்களுக்குத் தெரிவித்தேனா?’ அல்லது, ‘(மற்றவர் மூலம்) தெரிவிக்கப்பட்டதா?’ என்பது எனக்குத் தெரியவில்லை.
(இதைக் கேட்ட உடன்) நபி (ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்கு) திரும்பி வந்தார்கள். அவர்கள் ஒரு காலை வாசற்படியிலும் மற்றொன்றை வெளியேயும் வைத்தபோது, எனக்கும் தமக்குமிடையே திரையைத் தொங்க விட்டார்கள். (அப்போதுதான்) பர்தா (சட்டம்) தொடர்பான இறைவசனம் அருளப்பெற்றது.

4794. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَكْرٍ السَّهْمِيُّ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ أَوْلَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ بَنَى بِزَيْنَبَ ابْنَةِ جَحْشٍ فَأَشْبَعَ النَّاسَ خُبْزًا وَلَحْمًا ثُمَّ خَرَجَ إِلَى حُجَرِ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ كَمَا كَانَ يَصْنَعُ صَبِيحَةَ بِنَائِهِ فَيُسَلِّمُ عَلَيْهِنَّ وَيَدْعُو لَهُنَّ وَيُسَلِّمْنَ عَلَيْهِ وَيَدْعُونَ لَهُ فَلَمَّا رَجَعَ إِلَى بَيْتِهِ رَأَى رَجُلَيْنِ جَرَى بِهِمَا الْحَدِيثُ، فَلَمَّا رَآهُمَا رَجَعَ عَنْ بَيْتِهِ، فَلَمَّا رَأَى الرَّجُلاَنِ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم رَجَعَ عَنْ بَيْتِهِ وَثَبَا مُسْرِعَيْنِ، فَمَا أَدْرِي أَنَا أَخْبَرْتُهُ بِخُرُوجِهِمَا أَمْ أُخْبِرَ فَرَجَعَ حَتَّى دَخَلَ الْبَيْتَ، وَأَرْخَى السِّتْرَ بَيْنِي وَبَيْنَهُ وَأُنْزِلَتْ آيَةُ الْحِجَابِ. وَقَالَ ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا يَحْيَى حَدَّثَنِي حُمَيْدٌ سَمِعَ أَنَسًا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 8
‘‘இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப் பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், அப்போதும்கூட உணவு தயாரா வதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக, உங்களது இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. இதை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை.
நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்க வேண்டுமென்றால், திரைக்குப் பின்னாóருந்து கேளுங்கள். உங்களுடையவும் அவர்களுடையவும் உள்ளங்களின் தூய்மைக்கு இதுவே ஏற்ற முறையாகும்.
அல்லாஹ்வுடைய தூதருக்குத் தொல்லை தருவது உங்களுக்குத் தகாது. அவருக்குப் பின்னர் அவருடைய துணைவியரை நீங்கள் மணந்துகொள்வதும் ஒருபோதும் கூடாது. அவ்வாறு செய்வது அல்லாஹ்விடம் நிச்சயமாகப் பெரும் பாவமாகும்” எனும் (33:53ஆவது) இறைவசனம்
(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இனாஹு’ எனும் சொல்லுக்கு ‘தயாராகுதல்’ என்று பொருள். அனா, யஃனீ, அனாத்தன் (என இதன் வாய்பாடு அமையும்.)
‘‘உங்களுக்குத் தெரியுமா? அது (மறுமை நாள்), சமீபமாகவும் இருக்கக் கூடும்” எனும் (33:63ஆவது) வசனத் தொடர்.
(இவ்வசனத்தில் ‘சமீபமாக’ என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள) ‘கரீப்’ எனும் சொல் அடைமொழியாக இருப்பின் (அடைமொழிக்குரிய ‘சாஅத்’ எனும் பெண்பால் வார்த்தைக்கேற்ப) ‘கரீபத்’ என்றே வரவேண்டும். அதை இடப்பெயர், அல்லது காலப்பெயராகக் கருதுகையில் ‘கரீப் என (ஆண்பாலாகவே) வரும். இந்நிலையில் ஆண்பால், பெண்பால், ஒருமை, இருமை, பன்மை அனைத்திலும் ஒரே மாதிரியாகவே சொல் அமையும்.
4794. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கியபோது ‘வலீமா’ (மணவிருந்து) கொடுத்தார்கள். மக்களுக்கு ரொட்டியும் இறைச்சியும் வயிறு நிரம்ப உண்ணக் கொடுத்தார்கள். பிறகு, துணைவியாருடன் தாம்பத்தியத்தைத் தொடங்கும் நாளின் காலையில் வழக்கமாகத் தாம் செய்து வந்ததைப் போன்று (தம் துணைவியரான) இறைநம்பிக்கையாளர்களுடைய அன்னை யரின் அறைகளுக்கு (அன்றும்) சென்றார்கள். அவர்களுக்கு சலாம் (முகமன்) சொல்லி, அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். துணைவியரும் நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் (பிரதி முகமன்) சொல்லி, அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள்.
(ஸைனப் (ரலி) அவர்களிருந்த) தம் இல்லத்திற்குத் திரும்பி வந்தபோது, (விருந்துண்ட) இருவர் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். அவ்விருவரைக் கண்டதும் அவர்கள் வீட்டிலிருந்து திரும்பிச் சென்றுவிட்டார்கள். அவ்விருவரும் அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டிலிருந்து திரும்பிச் சென்றதைப் பார்த்தபோது, வேகமாக (வெளியே) சென்றுவிட்டனர். அவ்விருவரும் வெளியே சென்றுவிட்டதாக ‘நானே நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தேனா,’ அல்லது ‘அவர்களுக்கு (இச்செய்தி வேறு யார் மூலமும்) தெரிவிக்கப்பட்டதா?’ என்பது எனக்குத் தெரியவில்லை.
(இதையறிந்த) உடனே, நபி (ஸல்) அவர்கள் வீட்டினுள் சென்று, (அவர்களைத் தொடர்ந்து வீட்டிற்குள் செல்ல முயன்ற) எனக்கும் தமக்குமிடையே திரையைத் தொங்கவிட்டார்கள். அப்போதுதான் பர்தா தொடர்பான இறைவசனம் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் அனஸ் (ரலி) அவர் களிடமிருந்து இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

4795. حَدَّثَنِي زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ خَرَجَتْ سَوْدَةُ بَعْدَ مَا ضُرِبَ الْحِجَابُ لِحَاجَتِهَا، وَكَانَتِ امْرَأَةً جَسِيمَةً لاَ تَخْفَى عَلَى مَنْ يَعْرِفُهَا، فَرَآهَا عُمَرُ بْنُ الْخَطَّابِ فَقَالَ يَا سَوْدَةُ أَمَا وَاللَّهِ مَا تَخْفَيْنَ عَلَيْنَا، فَانْظُرِي كَيْفَ تَخْرُجِينَ، قَالَتْ فَانْكَفَأَتْ رَاجِعَةً، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَيْتِي، وَإِنَّهُ لَيَتَعَشَّى. وَفِي يَدِهِ عَرْقٌ فَدَخَلَتْ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي خَرَجْتُ لِبَعْضِ حَاجَتِي فَقَالَ لِي عُمَرُ كَذَا وَكَذَا. قَالَتْ فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ ثُمَّ رُفِعَ عَنْهُ وَإِنَّ الْعَرْقَ فِي يَدِهِ مَا وَضَعَهُ فَقَالَ " إِنَّهُ قَدْ أُذِنَ لَكُنَّ أَنْ تَخْرُجْنَ لِحَاجَتِكُنَّ ".
பாடம்: 8
‘‘இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப் பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், அப்போதும்கூட உணவு தயாரா வதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக, உங்களது இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. இதை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை.
நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்க வேண்டுமென்றால், திரைக்குப் பின்னாóருந்து கேளுங்கள். உங்களுடையவும் அவர்களுடையவும் உள்ளங்களின் தூய்மைக்கு இதுவே ஏற்ற முறையாகும்.
அல்லாஹ்வுடைய தூதருக்குத் தொல்லை தருவது உங்களுக்குத் தகாது. அவருக்குப் பின்னர் அவருடைய துணைவியரை நீங்கள் மணந்துகொள்வதும் ஒருபோதும் கூடாது. அவ்வாறு செய்வது அல்லாஹ்விடம் நிச்சயமாகப் பெரும் பாவமாகும்” எனும் (33:53ஆவது) இறைவசனம்
(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இனாஹு’ எனும் சொல்லுக்கு ‘தயாராகுதல்’ என்று பொருள். அனா, யஃனீ, அனாத்தன் (என இதன் வாய்பாடு அமையும்.)
‘‘உங்களுக்குத் தெரியுமா? அது (மறுமை நாள்), சமீபமாகவும் இருக்கக் கூடும்” எனும் (33:63ஆவது) வசனத் தொடர்.
(இவ்வசனத்தில் ‘சமீபமாக’ என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள) ‘கரீப்’ எனும் சொல் அடைமொழியாக இருப்பின் (அடைமொழிக்குரிய ‘சாஅத்’ எனும் பெண்பால் வார்த்தைக்கேற்ப) ‘கரீபத்’ என்றே வரவேண்டும். அதை இடப்பெயர், அல்லது காலப்பெயராகக் கருதுகையில் ‘கரீப் என (ஆண்பாலாகவே) வரும். இந்நிலையில் ஆண்பால், பெண்பால், ஒருமை, இருமை, பன்மை அனைத்திலும் ஒரே மாதிரியாகவே சொல் அமையும்.
4795. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி (நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு ‘‘சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீஙகள் யார் என்பது எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகின்ற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள்!” என்று சொன்னார்கள்.
சவ்தா (ரலி) அவர்கள் உடனே அங்கிருந்து திரும்பிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களது கரத்தில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. அப்போது சவ்தா (ரலி) அவர்கள் வீட்டினுள் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் என் தேவை ஒன்றுக்காக வெளியே சென்றேன். உமர் (ரலி) அவர்கள் என்னிடம் இவ்வாறெல்லாம் சொன்னார்கள்” என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளினான். பிறகு அந்நிலை அவர்களைவிட்டு நீக்கப்பட்டது. எலும்புத் துண்டு அவர்களது கரத்தில் அப்படியே இருந்தது; அதை அவர்கள் (கீழே) வைத்துவிடவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள்.16

4796. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اسْتَأْذَنَ عَلَىَّ أَفْلَحُ أَخُو أَبِي الْقُعَيْسِ بَعْدَ مَا أُنْزِلَ الْحِجَابُ، فَقُلْتُ لاَ آذَنُ لَهُ حَتَّى أَسْتَأْذِنَ فِيهِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَإِنَّ أَخَاهُ أَبَا الْقُعَيْسِ لَيْسَ هُوَ أَرْضَعَنِي، وَلَكِنْ أَرْضَعَتْنِي امْرَأَةُ أَبِي الْقُعَيْسِ، فَدَخَلَ عَلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقُلْتُ لَهُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَفْلَحَ أَخَا أَبِي الْقُعَيْسِ اسْتَأْذَنَ، فَأَبَيْتُ أَنْ آذَنَ حَتَّى أَسْتَأْذِنَكَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " وَمَا مَنَعَكِ أَنْ تَأْذَنِي عَمُّكِ ". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الرَّجُلَ لَيْسَ هُوَ أَرْضَعَنِي، وَلَكِنْ أَرْضَعَتْنِي امْرَأَةُ أَبِي الْقُعَيْسِ. فَقَالَ " ائْذَنِي لَهُ فَإِنَّهُ عَمُّكِ، تَرِبَتْ يَمِينُكِ ". قَالَ عُرْوَةُ فَلِذَلِكَ كَانَتْ عَائِشَةُ تَقُولُ حَرِّمُوا مِنَ الرَّضَاعَةِ مَا تُحَرِّمُونَ مِنَ النَّسَبِ.
பாடம்: 9
‘‘நீங்கள் எதையேனும் வெளிப் படுத்தினாலும், அல்லது அதனை மறைத்தாலும் நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (நபியின் துணைவியரான) அவர்கள்மீது தம்முடைய தந்தையர், தம்முடைய புதல்வர்கள், தம்முடைய சகோதரர்கள், தம்முடைய சகோதரர்களின் புதல்வர்கள், தம்முடைய சகோதரிகளின் புதல்வர்கள், தம்முடைய (மார்க்கத் தோழியரான) பெண்கள் மற்றும் தம் வலக்கரம் உடைமையாக்கிக்கொண்டவர்கள்(ஆன அடிமைகள்) ஆகியோர் விஷயத்தில் (பர்தாவைக் கைவிடுவதில்) குற்றமில்லை.
அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் அனைத்தையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்” எனும் (33:54, 55) வசனங்கள்
4796. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பர்தா தொடர்பான வசனம் அருளப் பெற்ற பிறகு, என் வீட்டினுள் வருவதற்கு அபுல் குஅய்ஸின் சகோதரர் ‘அஃப்லஹ்’ (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அப்போது, ‘‘நபி (ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கேட்டுப் பெறாத வரை உள்ளே வர அவருக்கு நான் அனுமதி தரமாட்டேன்” என்று கூறிவிட்டேன்.
ஏனெனில், எனக்குப் பாலூட்டியவர், அஃப்லஹின் சகோதரரான அபுல் குஅய்ஸ் அல்லர். அபுல் குஅய்ஸின் மனைவிதான் எனக்குப் பாலூட்டியவர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்.
நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அபுல் குஅய்ஸின் சகோதரரான ‘அஃப்லஹ்’ என்னிடம் (வீட்டினுள் வர) அனுமதி கேட்டார். தங்களிடம் அனுமதி கேட்காத வரை அவருக்கு நான் அனுமதி தரமாட்டேன் என்று மறுத்துவிட்டேன்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘உன் (பால்குடித்) தந்தையின் சகோதரருக்கு நீ ஏன் அனுமதி தரவில்லை?” என்று கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குப் பாலூட்டியவர் அந்த (அபுல் குஅய்ஸ் என்ற) ஆண் அல்லவே? மாறாக, அபுல் குஅய்ஸின் மனைவிதானே எனக்குப் பாலூட்டினார்!” என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அவருக்கு (அஃப்லஹுக்கு) அனுமதி கொடு! ஏனென்றால், அவர் உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர்தான். உன் வலக்கரம் மண்ணாகட்டும்” என்று சொன்னார்கள்.17
(இதன் அறிவிப்பாளரான) உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இதனால்தான் ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘பிறப்பால் (ஏற்படும் நெருங்கிய உறவுகளில்) யாரை மணப்பதற்குத் தடை விதிக்கிறீர்களோ, அவர்களை மணக்கப் பால்குடி உறவாலும் தடை விதியுங்கள்” என்று கூறுவார்கள்.

4797. حَدَّثَنِي سَعِيدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنِ الْحَكَمِ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ ـ رضى الله عنه ـ قِيلَ يَا رَسُولَ اللَّهِ، أَمَّا السَّلاَمُ عَلَيْكَ فَقَدْ عَرَفْنَاهُ فَكَيْفَ الصَّلاَةُ قَالَ " قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ".
பாடம் : 10
‘‘அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபியின்மீது ஸலவாத் சொல்கிறார்கள். நம்பிக்கை கொண்டவர்களே! நீங்களும் அவர்மீது ஸலவாத்தும் சலாமும் சொல்லுங்கள்” எனும் (33:56ஆவது) இறைவசனம்
அபுல்ஆலியா பின் மிஹ்ரான் அர்ரியாஹீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நபியின் மீது அல்லாஹ் ‘ஸலவாத்’ கூறுவதன் பொருளாவது, வானவர்களிடம் அவன் நபியைப் புகழ்ந்து பேசுகின்றான் என்பதாகும். வானவர்களின் ‘ஸலவாத்’ என்பது (நபிக்காக அவர்கள் இறைவனிடம்) வேண்டுவதாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுஸல்லூன’ எனும் சொல்லுக்கு ‘நபியின் வளத்திற்காகப் பிரார்த்திக்கிறார்கள்’ என்பது பொருள்.
(33:60ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ல நுஃக்ரியன்னக்க’ எனும் சொல்லுக்கு ‘நாம் உம்மை ஏவிவிடுவோம்’ என்று பொருள்.
4797. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ் வின் தூதரே! தங்கள்மீது ‘சலாம்’ கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம்.18 (தங்கள்மீது) ‘ஸலவாத்’ கூறுவது எப்படி?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம, இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்” என்று சொல்லுங்கள்!” எனப் பதிலளித்தார்கள்.19