4698. حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " أَخْبِرُونِي بِشَجَرَةٍ تُشْبِهُ أَوْ كَالرَّجُلِ الْمُسْلِمِ لاَ يَتَحَاتُّ وَرَقُهَا وَلاَ وَلاَ وَلاَ، تُؤْتِي أُكْلَهَا كُلَّ حِينٍ ". قَالَ ابْنُ عُمَرَ فَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ، وَرَأَيْتُ أَبَا بَكْرٍ وَعُمَرَ لاَ يَتَكَلَّمَانِ، فَكَرِهْتُ أَنْ أَتَكَلَّمَ، فَلَمَّا لَمْ يَقُولُوا شَيْئًا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هِيَ النَّخْلَةُ ". فَلَمَّا قُمْنَا قُلْتُ لِعُمَرَ يَا أَبَتَاهُ وَاللَّهِ لَقَدْ كَانَ وَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ فَقَالَ مَا مَنَعَكَ أَنْ تَكَلَّمَ قَالَ لَمْ أَرَكُمْ تَكَلَّمُونَ، فَكَرِهْتُ أَنْ أَتَكَلَّمَ أَوْ أَقُولَ شَيْئًا. قَالَ عُمَرُ لأَنْ تَكُونَ قُلْتَهَا أَحَبُّ إِلَىَّ مِنْ كَذَا وَكَذَا.
பாடம்:
14. “இப்ராஹீம்' அத்தியாயம்1
(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(13:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹாதின்' (வழிகாட்டி) எனும் சொல்லுக்கு “(நல்வழிக்கு) அழைப்பவர்' என்பது பொருள்.
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(14:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஸதீத்' எனும் சொல்லுக்கு “சீழும் இரத்தமும்' என்று பொருள்.
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
“உங்கள்மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள்' எனும் (5:20ஆவது) வசனத்தொடரின் கருத்தாவது: உங்கள் வசமுள்ள அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் அவன் (நிகழ்த்திக்காட்டிய) சம்பவங்களையும் நினைத்துப்பாருங்கள்.
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
“நீங்கள் கேட்ட அனைத்தையும் அவன் உங்களுக்கு அளித்தான்” எனும் (13:34ஆவது) வசனத்தொடரின் கருத்தாவது: அவனிடம் நீங்கள் விரும்பி ஆசைப்பட்டதையெல்லாம் அவன் உங்களுக்கு வழங்கினான்.
(14:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யப்ஃகூனஹா இவஜா' என்பதற்கு “அல்லாஹ்வுடைய வழியில் கோணலைத் தேடுகின்றனர்' என்பது பொருள்.
(14:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஃத் தஅஃத்தன ரப்பு(க்)கும்' என்பதற்கு “உங்கள் இறைவன் அறிவிப்புச் செய்ததை' என்று பொருள்.
(14:9ஆவது வசனத்தில்) “அவர்கள் தம் கைகளை வாய்களின் பக்கம் கொண்டு செல்கின்றனர்' என்று கூறப்பட்டிருப்பது, தங்களுக்குக் கட்டளையிடப்பட்டதை நிறைவேற்றாமல் தம்மைத் தாமே தடுத்துக்கொண்டதற்கு ஓர் உதாரணமாகும்.
(14:14ஆவது வசனத்தின மூலத்திலுள்ள) “மகாமீ' (எனக்கு முன்னால்) என்பது, (விசாரணைக்காக மறுமை நாளில்) மனிதனை அல்லாஹ் தனக்கு முன்னால் நிறுத்திவைக்கும் இடத்தைக் குறிக்கும்.
(14:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மின் வராயிஹி' எனும் சொற்றொடருக்கு “அவர்களுக்கு முன்பாக' என்பது பொருள்.
(14:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லகும் தபஅன்' எனும் சொற்றொடருக்கு “உங்களைப் பின்பற்றியோர்' என்பது பொருள். இதிலுள்ள “தபஉ' என்பதன் ஒருமை “தாபிஉ' என்பதாகும். “ஃகயப்' (மறைந்தோர்), “ஃகாயிப்' (மறைந்தவன்) ஆகியவற்றைப் போல.
(14:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “பி முஸ்ரிகிக்கும்' என்பதற்கு “உங்களுக்கு உதவி செய்யக்கூடியவனாக' என்பது பொருள். இது “ஸுராக்' (அபயக் குரல்) எனும் வேர்ச்சொல்லில் இருந்து பிறந்ததாகும்.
(14:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ லா கிலால' எனும் சொற்றொடருக்கு, “எந்த நட்பும் இல்லாத' என்பது பொருள். இது, “காலல்துஹு கிலாலன்' (நான் அவனுடன் மிக நெருக்கமான நேசம் பாராட்டினேன்) எனும் (வினைச்சொல்லின் வேர்ச்சொல்லாகும். “கிலால்' எனும் இச்சொல் “குல்லத்' (நண்பன்) என்பதன் பன்மையாகவும் இருக்கலாம்.
(14:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “உஜ்துஸ்ஸத்' எனும் சொல்லுக்கு “வேரோடு பிடுங்கப்பட்டது' என்பது பொருள்.
பாடம் : 1
“நல்ல வார்த்தை (கலிமா தய்யிபாவு)க்கு அல்லாஹ் எவ்வாறு உவமை கூறுகின்றான் என்பதை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வேர் பூமியில் ஆழப் பதிந் திருக்கின்றது; அதன் கிளைகள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன; எந்நேரமும் அம்மரம் தன் இறை வனின் ஆணைக்கேற்பக் கனி களை வழங்கிக்கொண்டிருக்கின் றது” எனும் (14:24, 25) இறை வசனங்கள்
4698. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், “ “ஒரு முஸ்லிமான மனிதரை ஒத்திருக்கும்' அல்லது “(அவரைப்) போன்றிருக்கும்' ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள். அதன் இலை உதிராது. மேலும் இப்படி... இப்படி... இப்படியெல்லாம் இராது. அது தன் கனிகளை எல்லாப் பருவங்களிலும் கொடுத்துக்கொண்டிருக்கும். (அத்தகைய ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள்)” என்று சொன்னார்கள். அப்போது என் மனத்தில், “அது பேரீச்ச மரம்தான்” என்று தோன்றியது.
அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) (போன்றவர்களே பதில்) பேசாமல் இருப்பதை நான் கண்டேன். ஆகவே, நான் பேச விரும்பவில்லை. (அங்கிருந்த) மக்கள் ஒன்றும் சொல்லாமலிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தாமே), “அது பேரீச்சமரம்” என்று கூறினார்கள். நாங்கள் (புறப்பட) எழுந்தபோது நான் உமர் (ரலி) அவர்களிடம், “என் அன்புத் தந்தையே! அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனத்தில் அது பேரீச்சமரம்தான் என்று தோன்றியது” என்றேன்.
அதற்கு அவர்கள், “(அப்துல்லாஹ்!) நீ ஏன் (மனத்தில் தோன்றியதைக்) கூறாமலிருந்தாய்?” என்று கேட்டார்கள். நான், “நீங்களெல்லாரும் பேசாமலிருப்பதைப் பார்த்தேன். எனவே, நான் பேசவோ எதுவும் சொல்லவோ விரும்பவில்லை” என்று பதிலளித்தேன். உமர் (ரலி) அவர்கள், “நீ அதைச் சொல்லியிருந்தால் அதுவே இன்ன இன்ன (செல்வம் கிடைப்ப)தைவிட எனக்கு மிகவும் பிரியமானதாய் இருந்திருக்கும்” என்று சொன்னார்கள்.2
அத்தியாயம் : 65

4699. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَلْقَمَةُ بْنُ مَرْثَدٍ، قَالَ سَمِعْتُ سَعْدَ بْنَ عُبَيْدَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْمُسْلِمُ إِذَا سُئِلَ فِي الْقَبْرِ يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَذَلِكَ قَوْلُهُ {يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الآخِرَةِ}"
பாடம் : 2
இறைநம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும் மறுமையிலும் உறுதிப்படுத்துகின் றான் (எனும் 14:27ஆவது வசனத்தொடர்)
4699. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் (இறந்தபின்) அடக்கத் தலத்தில் விசாரிக்கப்படும்போது, அவர், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்” என்று உறுதிமொழி கூறுவார்.
இதுதான், “(இறை)நம்பிக்கை கொண் டோரை, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும் மறுமையிலும் உறுதிப்படுத்துகின்றான்' எனும் (14:27ஆவது) இறைவசனத்தின் கருத்தாகும்.
இதை பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3

4700. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ عَطَاءٍ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ، {أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ بَدَّلُوا نِعْمَةَ اللَّهِ كُفْرًا} قَالَ هُمْ كُفَّارُ أَهْلِ مَكَّةَ.
பாடம் : 3
அல்லாஹ்வின் அருட்கொடையை இறைமறுப்பாக மாற்றி (தம்முடன்) தம் சமூகத்தாரையும் அழிவுக் கிடங்கில் (நரகில்) தள்ளியவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? (எனும் 14:28ஆவது இறைவசனம்)
(இவ்வசனத்திலுள்ள) “நீர் பார்க்கவில் லையா?' (அலம் தர) எனும் சொற்றொடருக்கு “நீர் அறியவில்லையா?' என்பது பொருள். “அலம் தர கைஃப' (14:24; 89:6; 105:1) மற்றும் “அலம் தர இலல்லஃதீன கரஜூ' (2:243) ஆகிய வசனங்களிலும் இதே பொருள்தான்.
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்பவார்' எனும் சொல்லுக்கு “அழிவு' என்பது பொருள். (25:18; 48:12 ஆகிய வசனங்களின் மூலத்திலுள்ள) “கவ்மன் பூரா' என்பதன் பொருள் “அழிந்துவிடும் சமுதாயம்' என்பதாகும்.
4700. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் அருட்கொடையை இறைமறுப்பாக மாற்றி (தம்முடன்) தம் சமூகத்தாரையும் அழிவுக் கிடங்கில் தள்ளி விட்டவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? எனும் (14:28ஆவது) இறைவசனம், மக்காவாசிகளில் இருந்த இறைமறுப்பாளர்களைக் குறிக்கிறது” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.4

4701. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا قَضَى اللَّهُ الأَمْرَ فِي السَّمَاءِ ضَرَبَتِ الْمَلاَئِكَةُ بِأَجْنِحَتِهَا خُضْعَانًا لِقَوْلِهِ كَالسِّلْسِلَةِ عَلَى صَفْوَانٍ ـ قَالَ عَلِيٌّ وَقَالَ غَيْرُهُ صَفْوَانٍ ـ يَنْفُذُهُمْ ذَلِكَ فَإِذَا فُزِّعَ عَنْ قُلُوبِهِمْ قَالُوا مَاذَا قَالَ رَبُّكُمْ، قَالُوا لِلَّذِي قَالَ الْحَقَّ وَهْوَ الْعَلِيُّ الْكَبِيرُ، فَيَسْمَعُهَا مُسْتَرِقُو السَّمْعِ، وَمُسْتَرِقُو السَّمْعِ هَكَذَا وَاحِدٌ فَوْقَ آخَرَ ـ وَوَصَفَ سُفْيَانُ بِيَدِهِ، وَفَرَّجَ بَيْنَ أَصَابِعِ يَدِهِ الْيُمْنَى، نَصَبَهَا بَعْضَهَا فَوْقَ بَعْضٍ ـ فَرُبَّمَا أَدْرَكَ الشِّهَابُ الْمُسْتَمِعَ، قَبْلَ أَنْ يَرْمِيَ بِهَا إِلَى صَاحِبِهِ، فَيُحْرِقَهُ وَرُبَّمَا لَمْ يُدْرِكْهُ حَتَّى يَرْمِيَ بِهَا إِلَى الَّذِي يَلِيهِ إِلَى الَّذِي هُوَ أَسْفَلُ مِنْهُ حَتَّى يُلْقُوهَا إِلَى الأَرْضِ ـ وَرُبَّمَا قَالَ سُفْيَانُ حَتَّى تَنْتَهِيَ إِلَى الأَرْضِ ـ فَتُلْقَى عَلَى فَمِ السَّاحِرِ، فَيَكْذِبُ مَعَهَا مِائَةَ كَذْبَةٍ فَيَصْدُقُ، فَيَقُولُونَ أَلَمْ يُخْبِرْنَا يَوْمَ كَذَا وَكَذَا يَكُونُ كَذَا وَكَذَا، فَوَجَدْنَاهُ حَقًّا لِلْكَلِمَةِ الَّتِي سُمِعَتْ مِنَ السَّمَاءِ "".
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، إِذَا قَضَى اللَّهُ الأَمْرَ. وَزَادَ الْكَاهِنِ. وَحَدَّثَنَا سُفْيَانُ فَقَالَ قَالَ عَمْرٌو سَمِعْتُ عِكْرِمَةَ حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ قَالَ إِذَا قَضَى اللَّهُ الأَمْرَ وَقَالَ عَلَى فَمِ السَّاحِرِ. قُلْتُ لِسُفْيَانَ قَالَ سَمِعْتُ عِكْرِمَةَ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ. قَالَ نَعَمْ. قُلْتُ لِسُفْيَانَ إِنَّ إِنْسَانًا رَوَى عَنْكَ عَنْ عَمْرٍو عَنْ عِكْرِمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ وَيَرْفَعُهُ أَنَّهُ قَرَأَ فُزِّعَ. قَالَ سُفْيَانُ هَكَذَا قَرَأَ عَمْرٌو. فَلاَ أَدْرِي سَمِعَهُ هَكَذَا أَمْ لاَ. قَالَ سُفْيَانُ وَهْىَ قِرَاءَتُنَا.
பாடம்:
15. “அல்ஹிஜ்ர்' அத்தியாயம்1
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
“அதுதான் என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழி” எனும் (15:41ஆவது) வசனத்தின் கருத்தாவது: சத்திய வழி அல்லாஹ்விடமே உண்டு; அதன்படி நடப்பதே அல்லாஹ்வை அடைவதற்கான பாதையாகும்.
(15:79ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லபி இமாமிம் முபீன்' எனும் சொற்றொடருக்கு “(அனைவருக்கும்) தெரிந்த பாதையில்' என்பது பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(15:72ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ல அம்ருக்க' எனும் சொல்லுக்கு “உமது ஆயுள்மீது சத்தியமாக' என்பது பொருள்.
“நீங்கள் புதிரானவர்களாக இருக்கிறீர்களே!' எனும் (15:62ஆவது) வசனத்தின் கருத்தாவது: “லூத் (அலை) அவர்கள் (தம்மிடம் மனிதர்கள் தோற்றத்தில் வந்த) வானவர்களை அறிமுகமில்லாத அந்நியர்களாகக் கண்டார்கள்.
மற்றவர்கள் கூறுகிறார்கள்:
(15:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கிதாபும் மஅலூம்' என்பதற்கு “குறிப்பிட்ட தவணை' என்பது பொருள்.
(15:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லவ் மா தஃதீனா' எனும் சொற்றொ டருக்கு “நீர் எம்மிடம் (வானவர்களை) அழைத்துக்கொண்டு வரவேண்டாமா?' என்பது பொருள்.
(15:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஷியஉ' எனும் சொல்லுக்கு “சமுதாயங்கள்' என்பது பொருள். (இறை)அன்பர்களுக்கும் “ஷியஉன்' எனும் சொல் ஆளப்படுவதுண்டு.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (“ஹூத்' அத்தியாயத்தில் 11:78ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யுஹ்ரஊன' எனும் சொல்லுக்கு “விரைந்தவர்களாக' என்பது பொருள்.
(15:75ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லில் முத்தவஸ்ஸிமீன்' எனும் சொல்லுக்கு “சிந்திப்போருக்கு' என்பது பொருள்.
(15:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “சுக்கிரத்' எனும் சொல்லுக்கு “திரையிடப்பட்டது' என்பது பொருள்.
(15:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “புரூஜ்' எனும் சொல்லுக்கு “சூரியன் மற்றும் சந்திரனுக்குள்ள நீள்வட்டப் பாதைகள்' என்பது பொருள்.
(15:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லவாகிஹ்' எனும் சொல்லுக்கு “மேகத்தைச் சூல் கொள்ளச் செய்யக்கூடியவை' (மலாகிஹ்) என்பது பொருள். “மலாகிஹ்' எனும் சொல் “முல்கிஹா' என்பதன் பன்மையாகும்.
(15:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹமஉ' எனும் சொல், “ஹம்அத்' என்பதன் பன்மையாகும். அதற்கு “(நீண்ட நாட்கள் நீரோடு சேர்ந்திருந்ததால் குழைந்து கறுப்பு நிறத்தில்) மாறிவிட்ட (பிசுபிசுப்பான) களிமண்' என்பது பொருள்.
(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) “மஸ்னூன்' எனும் சொல்லுக்கு “அச்சில் வார்க்கப்பட்டது' என்பது பொருள்.
(15:53ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தவ்ஜல்' எனும் சொல்லுக்கு “பயப்படுதல்' என்பது பொருள்.
(15:66ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தாபிர்' எனும் சொல்லுக்கு “கடைசி நபர்' என்பது பொருள்.
(15:79ஆவது வசனத்தின் மூலத்தில்) “ல பி இமாமிம் முபீன்' என்பதிலுள்ள “இமாம்' எனும் சொல் “நீ எதையெல்லாம் பின்பற்றி நல்வழியடைவாயோ' அவற்றைக் குறிக்கும்.
(15:83ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஸைஹத்' (பயங்கர சப்தம்) என்பது, அழிவைக் குறிக்கும்.
பாடம் : 1
விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் வான் வெளியை நாம் காத்தோம்; திருட்டுத்தனமாக (வானவர்களின் உரையாடலை) ஒட்டுக்கேட்கும் ஷைத்தானைத் தவிர. அதையும் ஒளிரும் தீச்சுவாலை பின்தொடரும் (எனும் 15:17, 18 ஆகிய வசனங்கள்)
4701. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால், வானவர்கள் தம் சிறகுகளை இறைக்கட்டளைக்குப் பணிந்தவர்களாக அடித்துக்கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை) பாறையின் மீது சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள்.)
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(சுஃப்யான் (ரஹ்) அல்லாத) மற்றவர் களின் அறிவிப்பில், “(அந்த ஓசையின் மூலம்) அல்லாஹ் தன் கட்டளையை வானவர்களுக்கு எட்டச்செய்வான்” என்று (கூடுதலாகக்) காணப்படுகிறது.
(இறைக்கட்டளையைச் செவியுறும் வானவர்கள் பீதிக்குள்ளாகிறார்கள். பின்னர்) அவர்களின் இதயத்தைவிட்டுப் பீதி அகற்றப்படும்போது அவ்வானவர்கள், (அல்லாஹ்விற்கு நெருக்கமாயிருக்கும்) வானவர்களிடம், “நம் இறைவன் என்ன சொன்னான்?” என்று வினவுகின்றனர். அவர்கள் வினவியோரிடம், “(நம் இறைவன் இன்னின்ன) உண்மை(யான கட்டளை)யைச் சொன்னான். அவன் உயர்ந்தவன்; பெரியவன்” என்று பதிலளிப்பர். உடனே, (இறைவனின் கட்டளை குறித்த) அந்த உரையாடலை ஒட்டுக்கேட்பவர்கள் செவியேற்றுவிடுகின்றனர். ஒருவர் மற்றவர் மேலே இருந்துகொண்டு இவ்வாறாக (கடைசி ஆள்வரை) ஒட்டுக்கேட்கின்றனர்.
சுஃப்யான் (ரஹ்) அவர்கள் (தமது அறிவிப்பில், அவர்களில் ஒருவர் மற்றவர் மேல் இருக்கும் விதத்தை) தமது வலக் கையின் விரல்களை விரித்துவைத்து அவற்றில் ஒன்றை மற்றொன்றின் மீது அடுக்கி வைத்து (சைகையால்) விளக்கிக் காட்டினார்கள்.
அந்த உரையாடலை ஒட்டுக்கேட்கும் ஒருவர் அதைத் தம் சகாவிடம் தெரிவிப்ப தற்கு முன்பாகவே சில சமயங்களில் அவரைத் தீச்சுவாலை தாக்கிக் கரித்து விடுவதுண்டு. இன்னும் சில நேரங்களில் (தீச்சுவாலை) அவரைச் சென்றடைவதற் குள்ளாகவே (அந்த உரையாடலை) அவர் தமக்கு அடுத்துள்ளவரிடமும், அவர் தமக்குக் கீழுள்ளவரிடமும் தெரிவித்து இறுதியாகப் பூமிவரை அதைச் சேர்த்துவிடுகிறார்கள்.
சுஃப்யான் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “கடைசியில் அது பூமிக்கு வந்துசேர்ந்து சூனியக்காரனின் வாயில் இடப்படுகிறது. உடனே அவன் அதனுடன் நூறு பொய்களைக் கலந்து சில உண்மைகளை (மட்டும்) கூறுகின்றான். (இதைக் கேட்கும்) மக்கள், “இன்னின்ன நாளில் இன்னின்னவாறு நடக்குமென சூனியக்காரர்கள் நம்மிடம் கூற, அதை நாம் உண்மையானதாகவே காணவில்லையா?' என்று கூறுவார்கள். வானிலிருந்து ஒட்டுக்கேட்கப்பட்ட தகவலினாலேயே இவ்வாறு அவர்கள் கூறுகிறார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.
அபூஹுரைரா (ரலி) அவர்களிட மிருந்து வந்துள்ள மற்றோர் அறிவிப்பில், “சூனியக்காரன் மற்றும் சோதிடனின் வாயில் இடப்படுகிறது” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் இந்த ஹதீஸை அம்ர் பின் தீனாரிடம் கேட்டபோது, அன்னார் இக்ரிமாவிடமும், இக்ரிமா அபூஹுரைரா (ரலி) அவர்களிடமும் கேட்டதாகத் தெரிவித்தாரா?” என வினவினேன். அதற்கு சுஃப்யான், “ஆம்' என்று பதிலளித் தார்கள்.
மேலும், நான் சுஃப்யான் அவர்களிடம், “இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள “ஃபுஸ்ஸிஅ' (பீதி அகற்றப்படும்போது) எனும் சொல்லை நபி (ஸல்) அவர்கள் அவ்வாறுதான் (“ஃபுஸ்ஸிஅ' என்று) ஓதினார்கள் என நீங்கள் குறிப்பிட்டதாக ஒருவர் அறிவித்தாரே! (அது சரிதானா?)” என்று வினவினேன்.
அதற்கு அன்னார், “அம்ர் பின் தீனார் அவர்கள் இவ்வாறுதான் ஓதினார்கள். ஆனால், அம்ர் (இக்ரிமாவிடமிருந்து) இவ்வாறுதான் செவியுற்றாரா என்பது எனக்குத் தெரியாது. இதுவே எங்களது ஓதல் முறையாகும்” என்று பதிலளித்தார்கள்.2

4702. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مَعْنٌ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لأَصْحَابِ الْحِجْرِ " لاَ تَدْخُلُوا عَلَى هَؤُلاَءِ الْقَوْمِ إِلاَّ أَنْ تَكُونُوا بَاكِينَ فَإِنْ لَمْ تَكُونُوا بَاكِينَ فَلاَ تَدْخُلُوا عَلَيْهِمْ أَنْ يُصِيبَكُمْ مِثْلُ مَا أَصَابَهُمْ ".
பாடம் : 2
“ஹிஜ்ர்'வாசிகளும் இறைத்தூதர் களைப் பொய்யர்களெனக் கூறி னார்கள் எனும் (15:80ஆவது) இறைவசனம்
4702. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹிஜ்ர்'வாசிகளைக் குறித்து, “இந்தச் சமுதாயத்தாரின் (வசிப்பிடங்கள்) வழியாகச் செல்லும்போது அழுதுகொண்டே செல்லுங்கள். நீங்கள் அழுதபடி செல்லப் போவதில்லையென்றால், அவர்களைத் தீண்டிய வேதனை உங்களையும் தீண்டி விடாமலிருக்க அவர்(களின் வசிப்பிடங்)களைக் கடந்துசெல்லாதீர்கள்” என்று சொன்னார்கள்.3

4703. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي سَعِيدِ بْنِ الْمُعَلَّى، قَالَ مَرَّ بِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَنَا أُصَلِّي فَدَعَانِي فَلَمْ آتِهِ حَتَّى صَلَّيْتُ ثُمَّ أَتَيْتُ فَقَالَ " مَا مَنَعَكَ أَنْ تَأْتِيَ ". فَقُلْتُ كُنْتُ أُصَلِّي. فَقَالَ " أَلَمْ يَقُلِ اللَّهُ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ} ثُمَّ قَالَ أَلاَ أُعَلِّمُكَ أَعْظَمَ سُورَةٍ فِي الْقُرْآنِ قَبْلَ أَنْ أَخْرُجَ مِنَ الْمَسْجِدِ " فَذَهَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِيَخْرُجَ مِنَ الْمَسْجِدِ فَذَكَّرْتُهُ فَقَالَ "{الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} هِيَ السَّبْعُ الْمَثَانِي وَالْقُرْآنُ الْعَظِيمُ الَّذِي أُوتِيتُهُ ".
பாடம் : 3
“திரும்பத் திரும்ப ஓதப்படக்கூடிய ஏழு வசனங்களையும் மகத்துவ மிக்க குர்ஆனையும் நிச்சயமாக நாம் உமக்கு வழங்கியுள்ளோம்” எனும் (15:87ஆவது) இறைவசனம்
4703. அபூசயீத் பின் அல்முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நான் தொழுதுகொண்டிருக்கும் நிலையில் என்னைக்கடந்து சென்றார்கள். அப்போது என்னை அவர்கள் அழைத்தார்கள். நான் தொழுது முடிக்கும்வரை அவர்களிடம் செல்லவில்லை. (தொழுது முடித்த) பிறகு சென்றேன். அவர்கள், “(நான் அழைத்த வுடன்) நீர் ஏன் என்னிடம் வரவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு, “நான் தொழுதுகொண்டிருந்தேன்” என்று சொன்னேன். அப்போது அவர்கள், “இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும் இறைத்தூதருக்கும் நீங்கள் பதிலளியுங்கள்” என்று (8:24ஆவது வசனத்தில்) அல்லாஹ் சொல்லவில்லையா?” என்று கேட்டார்கள். பிறகு, “நீர் பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்லும் முன்பாக குர்ஆனிலேயே மகத்தான அத்தியாயமொன்றை உமக்கு நான் கற்றுத் தர வேண்டாமா?” என்று கேட்டார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறப் போனார்கள். நான் அவர்களுக்கு (அவர்கள் சொன்னதை) நினைவுபடுத்தினேன். அவர்கள், “அகிலத் தாரின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” (என்று தொடங்கும் “அல்ஃபாத்திஹா' அத்தியாயம்தான்.) அது திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்களும் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த மகத்தான குர்ஆனும் ஆகும்” என்று சொன்னார்கள்.4

4704. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أُمُّ الْقُرْآنِ هِيَ السَّبْعُ الْمَثَانِي وَالْقُرْآنُ الْعَظِيمُ ".
பாடம் : 3
“திரும்பத் திரும்ப ஓதப்படக்கூடிய ஏழு வசனங்களையும் மகத்துவ மிக்க குர்ஆனையும் நிச்சயமாக நாம் உமக்கு வழங்கியுள்ளோம்” எனும் (15:87ஆவது) இறைவசனம்
4704. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்கள் (“அல்ஃபாத்திஹா' அத்தியாயம்) குர்ஆனின் அன்னையும் மகத்தான குர்ஆனும் ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 65
4704. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்கள் (“அல்ஃபாத்திஹா' அத்தியாயம்) குர்ஆனின் அன்னையும் மகத்தான குர்ஆனும் ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 65
4705. حَدَّثَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رضى الله عنهما {الَّذِينَ جَعَلُوا الْقُرْآنَ عِضِينَ} قَالَ هُمْ أَهْلُ الْكِتَابِ، جَزَّءُوهُ أَجْزَاءً، فَآمَنُوا بِبَعْضِهِ وَكَفَرُوا بِبَعْضِهِ.
பாடம் : 4
“அவர்களோ (தமது) வேதத்தைப் பல கூறுகளாக ஆக்கிவிட்டார்கள்” எனும் (15:91ஆவது) இறைவசனம்
(15:90ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்முக்தசிமீன்' எனும் சொல்லுக்கு “சத்தியம் செய்தவர்கள்' என்பது பொருள்.5
இதே இனத்தில் உள்ளதுதான் (90:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லா உக்சிமு' எனும் சொல்லும். இதற்கு “சத்தியம் செய்கிறேன்' என்பது பொருள். இதனை “ல உக்சிமு' (உறுதியாகச் சத்தியம் செய்கிறேன்) எனவும் ஓதலாம்.
(7:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “காசமஹுமா' எனும் சொல்லுக்கு, “(ஆதம், ஹவ்வா ஆகிய) அவ்விருவரிடமும் ஷைத்தான் சத்தியம் செய்தான். ஆனால், அவ்விருவரும் அவனிடம் சத்தியம் செய்யவில்லை' என்று பொருள்.6
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(27:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தகாசமூ' எனும் சொல்லுக்கு “ஒருவருக் கொருவர் சத்தியம் செய்துகொள்ளுங்கள்' என்று பொருள்.
4705. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அவர்களோ (தமது) வேதத்தைப் பல கூறுகளாக ஆக்கிவிட்டார்கள்” எனும் (15:91ஆவது) வசனம் வேதக்காரர்களைக் குறிக்கிறது. அவர்கள் (தமது) வேதத்தைப் பல கூறுகளாகப் பிரித்துக்கொண்டு, அதில் (தமக்கு இசைவான) சிலவற்றை நம்பி ஏற்றுக்கொண்டார்கள். (இசைவில்லாத) சிலவற்றை ஏற்க மறுத்துவிட்டார்கள்.
இதை சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4706. حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي ظَبْيَانَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ {كَمَا أَنْزَلْنَا عَلَى الْمُقْتَسِمِينَ} قَالَ آمَنُوا بِبَعْضٍ وَكَفَرُوا بِبَعْضٍ، الْيَهُودُ وَالنَّصَارَى.
பாடம் : 4
“அவர்களோ (தமது) வேதத்தைப் பல கூறுகளாக ஆக்கிவிட்டார்கள்” எனும் (15:91ஆவது) இறைவசனம்
(15:90ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்முக்தசிமீன்' எனும் சொல்லுக்கு “சத்தியம் செய்தவர்கள்' என்பது பொருள்.5
இதே இனத்தில் உள்ளதுதான் (90:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லா உக்சிமு' எனும் சொல்லும். இதற்கு “சத்தியம் செய்கிறேன்' என்பது பொருள். இதனை “ல உக்சிமு' (உறுதியாகச் சத்தியம் செய்கிறேன்) எனவும் ஓதலாம்.
(7:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “காசமஹுமா' எனும் சொல்லுக்கு, “(ஆதம், ஹவ்வா ஆகிய) அவ்விருவரிடமும் ஷைத்தான் சத்தியம் செய்தான். ஆனால், அவ்விருவரும் அவனிடம் சத்தியம் செய்யவில்லை' என்று பொருள்.6
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(27:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தகாசமூ' எனும் சொல்லுக்கு “ஒருவருக் கொருவர் சத்தியம் செய்துகொள்ளுங்கள்' என்று பொருள்.
4706. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“(தம்) வேதத்தைப் பலவாறாகப் பிரித்தோர்மீது (முன்னர்) நாம் (வேதனையை) இறக்கியதைப் போன்றே” எனும் (15:90ஆவது) வசனம் (வேதக்காரர்களான) யூதர்கள் மற்றும் கிறித்தவர்களைக் குறிக்கிறது. அவர்கள் (தமது வேதத்தில்) சிலவற்றை நம்பி ஏற்று, சிலவற்றை மறுத்தார்கள்.
இதை அபூழப்யான் ஹுஸைன் பின் ஜுன்துப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4707. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَارُونُ بْنُ مُوسَى أَبُو عَبْدِ اللَّهِ الأَعْوَرُ، عَنْ شُعَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ. أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَدْعُو " أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْكَسَلِ، وَأَرْذَلِ الْعُمُرِ، وَعَذَابِ الْقَبْرِ، وَفِتْنَةِ الدَّجَّالِ، وَفِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ ".
பாடம் : 5
“உறுதி உங்களிடம் வரும்வரை (நபியே!) நீர் உம்முடைய இறைவனை வழிபடுவீராக!” எனும் (15:99ஆவது) இறைவசனம்
“இவ்வசனத்திலுள்ள “உறுதி' (யகீன்) எனும் சொல் இறப்பைக் குறிக்கிறது” என்று சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
பாடம்:
16. “அந்நஹ்ல்' அத்தியாயம்1
(16:102ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ரூஹுல் குத்ஸ்' (பரிசுத்த ஆவி) என்பது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களைக் குறிக்கும். “(எமது கட்டளைப்படி) “ரூஹுல் அமீன்' (நம்பிக்கையாளரான ஆவி எனப்படும் ஜிப்ரீல்) இதை உமது இருதயத்தில் இறக்கிவைத்தார்” எனும் (26:193ஆவது) இறைவசனம் இதை உறுதிப்படுத்துகின்றது.
(16:127ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ளைகின்' எனும் சொல்லுக்கு “நெருக்கடியானது' என்பது பொருள். “அம்ருன் ளைகுன்' என்பதற்கும், “ளய்யிகுன்' என்பதற்கும் (“நெருக்கடி நிலை' என்ற) ஒரே பொருள்தான்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(16:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தத்தஃபய்யஉ' எனும் சொல்லுக்கு “தயாராகும்' என்பது பொருள்.2
(16:69ஆவது வசனத்திலுள்ள) “உன்னுடைய இறைவன் ஏற்படுத்தியுள்ள வழிகளில் எளிதாகச் சென்றுகொண்டேயிரு” எனும் தொடர், “அது செல்லும் எந்த இடமும் அதற்கு இடராக இராது' என்பதைக் காட்டுகிறது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(16:46ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தகல்லுப்' எனும் சொல்லுக்கு “நடமாட்டம்' என்பது பொருள்.
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(16:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தமீத' எனும் சொல்லுக்கு “அசைதல்' என்பது பொருள்.
(16:62ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முஃப்ரத்தூன்' எனும் சொல்லுக்கு “மறக்கடிக்கப்பட்டவர்கள்' (கேட்பாரற்றவர்கள்) என்பது பொருள். (இதற்கு, “முதன்முதலில் விரட்டப்படுகின்றவர்கள்' என்றும் பொருள் செய்யப்படுவதுண்டு.)
முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்:
(16:98ஆவது வசனத்திலுள்ள) “(நபியே!) நீர் குர்ஆனை ஓதினால் விரட்டியடிக்கப்பட்ட ஷைத்தானைவிட்டுப் பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் கோருவீராக!” என்பது (வெளிப்படையில் பார்க்குமிடத்து) முன் பின்னாகக் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால், “(ஷைத்தானைவிட்டுப்) பாதுகாப்புக் கோருதல்' என்பது குர்ஆன் ஓதுவதற்கு முன்பு செய்ய வேண்டியதாகும். (ஆனால், இந்த வசனத்தில் “நீர் குர்ஆனை ஓதினால் பாதுகாப்புக் கோரும்' என்றிருப்பது, நீர் குர்ஆனை ஓதிய பின்னர் பாதுகாப்புக் கோரும்' என்று கூறுவதுபோல் இருக்கிறது. உண்மையில் அது கருத்தல்ல.)
மேலும், “பாதுகாப்புக் கோருதல்' என்பதற்கு “(ஷைத்தானின் ஊசலாட்டங்களை விட்டுத் தப்ப) அல்லாஹ்வைப் பலமாகப் பற்றிக்கொள்ளல்' என்று பொருளாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(16:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “துசீமூன்' எனும் சொல்லுக்கு “(கால் நடைகளை) நீங்கள் மேய்க்கிறீர்கள்” என்பது பொருள்.
(17:84ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஷாக்கிலத்திஹி' எனும் சொற்றொடருக்கு “தன் தரப்பில்' என்பது பொருள்.
(16:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கஸ்துஸ் ஸபீல்' என்பதற்கு “வழிகாட்டுதல்' என்பது பொருள்.
(16:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “திஃப்உ' எனும் சொல், குளிர்காயப் பயன்படும் பொருளைக் குறிக்கும்.
(16:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “துரீஹூன்' எனும் சொல்லுக்கு “மாலையில் திரும்புதல்' என்றும், “தஸ்ரஹூன்' எனும் சொல்லுக்கு “காலையில் செல்லுதல்' என்றும் பொருளாகும்.
(16:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஷிக்கு' எனும் சொல்லுக்கு “கஷ்டம்' என்பது பொருள்.
(16:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தகவ்வுஃப்' எனும் சொல்லுக்கு “இழப்புக்குமேல் இழப்பு' என்று பொருள். (இதற்கு “திகிலுக்குமேல் திகில்' என்றும், “அச்சுறுத்தல்' என்றும், “படிப்படியான வீழ்ச்சி' என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)
(16:66ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்அன்ஆம்' (கால்நடைகள்) எனும் சொல் பெண்பாலுக்கும் ஆண்பாலுக்கும் பொருந்தும். “அந்நஅம்' எனும் சொல்லும் இதைப் போன்றதுதான். “அல்அன்ஆம்' எனும் சொல் “அந்நஅம்' எனும் சொல்லின் பன்மையாகும்.
(16:81ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அக்னான்' (தங்குமிடங்கள்) எனும் சொல்லின் ஒருமை “கின்னு' என்பதாகும். “ஹிம்ல்' (சுமை-ஒருமை) “அஹ்மால்' (சுமைகள்-பன்மை) ஆகியவற்றைப் போல. “சராபீல தகீகுமுல் ஹர்ர' எனும் சொற்றொடருக்கு “வெப்பம் காக்கும் சட்டைகள்' என்பது பொருள். “சராபீல தகீகும் பஃசகும்' (போரில் உங்களைக் காக்கும் சட்டைகள்) என்பது போர்க் கவசங்களைக் குறிக்கும்.
(16:92, 16:94 ஆகிய வசனங்களின் மூலத்திலுள்ள) “தகல்' (காரணம்) எனும் சொல், நேர்மையற்ற, அனுமதிக்கப்பெறாத எல்லாவற்றையும் குறிக்கும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(16:72ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹஃபதா' (பேரர்கள்) எனும் சொல் “மகனின் குழந்தைகளைக்' குறிக்கும்.
(16:67ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஸக்ர்' (போதைப் பொருள்) எனும் சொல், (பேரீச்சம்பழம், திராட்சை ஆகிய) பழங்களிலிருந்து (தயாரிக்கப்படும்) தடை விதிக்கப்பட்ட (போதைப்) பொருளைக் குறிக்கும். “ரிஸ்குன் ஹசன்' (நல்ல உணவு) என்பது, அல்லாஹ் அனுமதித்துள்ள பொருளைக் குறிக்கும்.
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(16:92ஆவது வசனத்தில்) “தான் நூற்ற நூலைத் தானே துண்டுதுண்டாக ஆக்குபவள்' என்று கூறப்பட்டிருப்பது, (மக்காவில் வாழ்ந்த மனநிலை சரியில்லாத) “கர்காஉ' எனும் பெண்ணைக் குறிக்கிறது. அவள் (தன் தோழியருடன் சேர்ந்து காலையிலிருந்து நண்பகல்வரை) தான் நூற்ற நூலை (நண்பகலுக்குப்பின்) தானே துண்டித்துவிடுபவளாக இருந்தாள் என்று அபூஹுதைல் ஸதக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
(16:120ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “உம்மத்தன்' எனும் சொல்லுக்கு “நல்லவற்றைக் கற்பிப்பவர்' என்பது பொருள். (இதற்கு வழிகாட்டும் தலைவர், சமுதாயம் எனும் பொருள்களும் உண்டு.)
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்கானித்' எனும் சொல்லுக்கு “கீழ்ப்படிந்து நடப்பவர்' என்று பொருள்.
பாடம் : 1
“தள்ளாத வயதுவரை (வாழ)விடப் படுகின்றவர்களும் உங்களில் உள்ளனர்” எனும் (16:70ஆவது) வசனத்தொடர்
4707. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“(இறைவா!) நான் உன்னிடம் கஞ்சத் தனத்திலிருந்தும் சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், அடக்கத் தலத்தின் (கப்ரின்) வேதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும், வாழ்வு மற்றும் மரண வேளையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்துவந்தார்கள்.

4708. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ، قَالَ سَمِعْتُ ابْنَ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ فِي بَنِي إِسْرَائِيلَ وَالْكَهْفِ وَمَرْيَمَ إِنَّهُنَّ مِنَ الْعِتَاقِ الأُوَلِ، وَهُنَّ مِنْ تِلاَدِي. قَالَ ابْنُ عَبَّاسٍ {فَسَيُنْغِضُونَ} يَهُزُّونَ. وَقَالَ غَيْرُهُ نَغَضَتْ سِنُّكَ أَىْ تَحَرَّكَتْ.
பாடம்:
17. “பனூ இஸ்ராயீல்' அத்தியாயம்1
பாடம் : 1
4708. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், பனூ இஸ்ராயீல், அல்கஹ்ஃப் மற்றும் மர்யம் ஆகிய அத்தியாயங்கள் குறித்துக் கூறுகையில், “இவை அதிசயமான முதல் தர அத்தியாயங்களில் உள்ளவையாகும். மேலும், இவை நான் மனனம் செய்த பழைய அத்தியாயங்களில் அடங்கும்” என்று குறிப்பிட்டார்கள்.2
(இந்த அத்தியாயத்தில் 56ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃபஸயுன் ஃகிளூன' எனும் சொல்லுக்கு, “(தலையை) அசைப்பார்கள்” என்பது பொருள்.
(இதே வார்த்தையின் இறந்தகால வினைச்சொல்லான) “நஃகளத் சின்னுக்க' என்பதற்கு “உன் பல் அசைந்தது' என்று பொருள்- என மற்றவர்கள் கூறுகிறார்கள்.

4709. حَدَّثَنَا عَبْدَانُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَنْبَسَةُ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ ابْنُ الْمُسَيَّبِ قَالَ أَبُو هُرَيْرَةَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةَ أُسْرِيَ بِهِ بِإِيلِيَاءَ بِقَدَحَيْنِ مِنْ خَمْرٍ وَلَبَنٍ، فَنَظَرَ إِلَيْهِمَا فَأَخَذَ اللَّبَنَ قَالَ جِبْرِيلُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَاكَ لِلْفِطْرَةِ، لَوْ أَخَذْتَ الْخَمْرَ غَوَتْ أُمَّتُكَ.
பாடம் : 2
(17:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “களைனா இலா பனீ இஸ்ராயீல' எனும் தொடருக்கு “இஸ்ராயீலின் வழித்தோன்றல் கள் குழப்பம் விளைவிப்பார்கள் என அவர்களிடம் (அவர்களின் வேதத்தில்) நாம் தெரிவித்துள்ளோம்” என்று பொருள். (இத்தொடரில் இடம்பெற்றுள்ள) “களா' எனும் சொல்லுக்குப் பல்வேறு பொருள்கள் உண்டு:
1. “களா ரப்புக்க' என்பதற்கு “உம்முடைய இறைவன் உத்தரவிட்டான்' என்று பொருள். (17:23)
2. “தீர்ப்பு' எனும் பொருளும் அதற்கு உண்டு. (அல்லாஹ் கூறுகின்றான்:) “உம்முடைய இறைவன் அவர்களிடையே தீர்ப்பளிப்பான்.” (10:93)
3. “படைத்தல்' எனும் பொருளும் அதற்கு உண்டு. (அல்லாஹ் கூறுகின்றான்:) “பின்னர் அவன் இரண்டு நாட்களில் ஏழு வானங்களாக அவற்றைப் படைத்தான்.” (41:12)
(17:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “நஃபீர்' (கூட்டத்தார்) எனும் சொல், ஒருவருக்குப் பக்கபலமாக வருவோரைக் குறிக்கும்.
(17:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மைசூர்' எனும் சொல்லுக்கு “மென்மை யானது' என்பது பொருள்.
(17:7ஆவது வசனத்தின் முலத்திலுள்ள) “வ லியுத்தப்பிரூ' எனும் சொல்லுக்குத் “தம் கைக்கு எட்டியவற்றையெல்லாம் அழிப்பதற்காக” என்பது பொருள்.
(17:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹஸீர்' எனும் சொல்லுக்கு “சிறைக் கூடம்' என்பது பொருள்.
(17:16ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) “ஹக்க' எனும் சொல்லுக்கு “உறுதியாகிவிட்டது' என்பது பொருள்.
(17:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கித்உ' எனும் சொல்லுக்கு “பாவம்' என்று பொருள். இது “கதிஃத்து' (நான் பாவம் செய்தேன்) எனும் வினைச்சொல்லின் பெயர்ச்சொல்லாகும். “கத்தஉ' (குற்றமிழைத்தல்) என்பது “கதிஃத்து' என்பதன் வேர்ச்சொல்லாகும். இதற்கு “குற்றமிழைத்தேன்' (அக்தஃத்து) என்று பொருள்.
(17:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தக்ரிக்க' எனும் சொல்லுக்கு “பிளந்து விடுவீர்' என்பது பொருள்.
(17:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ இஃத் ஹும் நஜ்வா' (அவர்கள் இரகசியம் பேசிக்கொள்ளும்போது) எனும் சொற்றொடரில் “நஜ்வா' என்பது “நாஜைத்து' (நான் இரகசியம் பேசினேன்) என்பதன் வேர்ச்சொல்லாகும். வேர்ச் சொல்லே இங்கு (பயனிலையில்) அடைமொழியாக இருந்து வினைச்சொல்லின் பொருள் தருகிறது.
(17:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ருஃபாத்' எனும் சொல்லுக்கு “துகள் துகளாக' என்பது பொருள். (இதற்கு “மக்கிப்போனது', “மண்' ஆகிய பொருள்களும் உண்டு.)
(17:64ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வஸ்தஃப்ஸிஸ்' எனும் சொல்லுக்கு “ஆட்டங்காணச்செய்; வழிபிறழச் செய்!' என்று பொருள். “பி கைலிக்க' எனும் சொல்லுக்கு “உனது குதிரைப் படை' என்பது பொருள்.
“அர்ரஜ்ல்' எனும் சொல்லுக்கு “காலாட்படை' என்று பொருள். இதன் ஒருமை “அர்ராஜில்' என்பதாகும். இது “ஸாஹிப்' (நண்பன்), “ஸஹ்ப்' (நண்பர்கள்) என்பனவற்றையும், “தாஜிர்' (வியாபாரி), “தஜ்ர்' (வியாபாரிகள்) என்பனவற்றையும் போன்றதாகும்.
(17:68ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹாஸிப்' எனும் சொல்லுக்கு “கடுமையாக வீசும் புயல் காற்று' என்று பொருள். காற்று வாரியிறைக்கும் பொடிக் கற் களுக்கும் “ஹாஸிப்' என்பர். இதிலிருந்து வந்ததுதான் “ஹஸபு ஜஹன்னம்' (நரகத்தின் எரிபொருள்) என்ற சொல்லும். நரகத்தில் வீசப்படும் பொருள்களையே இது குறிக்கிறது. பூமிக்குள் செல்வது “ஹஸப' எனப்படும். “ஹஸப்' எனும் சொல், “ஹஸ்பாஉ' (குறுங்கற்கள்) எனும் சொல்லிலிருந்து மருவியதாகும்.
(17:69ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தாரத்' எனும் சொல்லுக்கு “மீண்டும் ஒருமுறை' என்பது பொருள். “தியரத்', “தாராத்' ஆகியன இதன் பன்மைகளாகும்.
(17:62ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ல அஹ்த்தனிக்கன்ன' எனும் சொல்லுக்கு “அவர்களை நான் (வழிகெடுத்து) வேரறுத்துவிடுவேன்' என்பது பொருளாகும். “இஹ்த்தனக்க' என்பதற்கு, ஒருவர் மற்றவரிடமிருந்து எல்லா அறிவையும் தமதாக்கிக்கொண்டார் என்று (மொழி வழக்கில்) பொருள் கொள்ளப்படும்.
(17:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தாயிரஹு' எனும் சொல்லுக்கு “அவனுக்குரிய பங்கு' என்பது பொருள். (இச்சொல்லுக்குச் செயல்கள் பற்றிய குறிப்பு, செயல், சகுனம் ஆகிய பொருள்களும் உண்டு.)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
குர்ஆனில் எங்கெல்லாம் “சுல்த்தான்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளதோ அங் கெல்லாம் “ஆதாரம்' (அல்லது அதிகாரம்) என்றே பொருள் கொள்ளப்படும்.3
(17:111ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வலிய்யும் மினஃத் துல்லி' என்பதன் கருத்தாவது: “(இடர் ஏற்பட்டு, அதிலிருந்து தன்னைக் காக்க) அவன் யாரையும் நண்பராக்கிக்கொள்வதில்லை. (காரணம், இறைவனுக்கு இடர் ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை.)
பாடம் : 3
“அல்லாஹ் தூயவன். அவன் தன்னுடைய அடியாரை (கஅபா வாகிய) புனிதப் பள்ளிவாசலிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் மக்திசிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்” எனும் (17:1ஆவது) வசனத்தொடர்
4709. அபூஹுரைரா (ரலி) அவர்கள், கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஈலியா' (எனும் ஜெரூசலத்து)க்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அவர்களிடம் மது மற்றும் பால் கோப்பைகள் இரண்டு கொண்டுவரப்பட்டன. அவ்விரண்டையும் அவர்கள் கூர்ந்து நோக்கிவிட்டு, பால் கோப்பையை எடுத்துக்கொண்டார்கள்.
அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள், “உங்களை இயற்கை நெறியின் பக்கம் செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! மதுக் கோப்பையை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழிதவறிப்போயிருக்கும்” என்று சொன் னார்கள்.4
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

4710. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَبُو سَلَمَةَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " لَمَّا كَذَّبَنِي قُرَيْشٌ قُمْتُ فِي الْحِجْرِ، فَجَلَّى اللَّهُ لِي بَيْتَ الْمَقْدِسِ فَطَفِقْتُ أُخْبِرُهُمْ عَنْ آيَاتِهِ وَأَنَا أَنْظُرُ إِلَيْهِ ". زَادَ يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ عَنْ عَمِّهِ " لَمَّا كَذَّبَنِي قُرَيْشٌ حِينَ أُسْرِيَ بِي إِلَى بَيْتِ الْمَقْدِسِ ". نَحْوَهُ. {قَاصِفًا} رِيحٌ تَقْصِفُ كُلَّ شَىْءٍ.
பாடம் : 2
(17:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “களைனா இலா பனீ இஸ்ராயீல' எனும் தொடருக்கு “இஸ்ராயீலின் வழித்தோன்றல் கள் குழப்பம் விளைவிப்பார்கள் என அவர்களிடம் (அவர்களின் வேதத்தில்) நாம் தெரிவித்துள்ளோம்” என்று பொருள். (இத்தொடரில் இடம்பெற்றுள்ள) “களா' எனும் சொல்லுக்குப் பல்வேறு பொருள்கள் உண்டு:
1. “களா ரப்புக்க' என்பதற்கு “உம்முடைய இறைவன் உத்தரவிட்டான்' என்று பொருள். (17:23)
2. “தீர்ப்பு' எனும் பொருளும் அதற்கு உண்டு. (அல்லாஹ் கூறுகின்றான்:) “உம்முடைய இறைவன் அவர்களிடையே தீர்ப்பளிப்பான்.” (10:93)
3. “படைத்தல்' எனும் பொருளும் அதற்கு உண்டு. (அல்லாஹ் கூறுகின்றான்:) “பின்னர் அவன் இரண்டு நாட்களில் ஏழு வானங்களாக அவற்றைப் படைத்தான்.” (41:12)
(17:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “நஃபீர்' (கூட்டத்தார்) எனும் சொல், ஒருவருக்குப் பக்கபலமாக வருவோரைக் குறிக்கும்.
(17:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மைசூர்' எனும் சொல்லுக்கு “மென்மை யானது' என்பது பொருள்.
(17:7ஆவது வசனத்தின் முலத்திலுள்ள) “வ லியுத்தப்பிரூ' எனும் சொல்லுக்குத் “தம் கைக்கு எட்டியவற்றையெல்லாம் அழிப்பதற்காக” என்பது பொருள்.
(17:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹஸீர்' எனும் சொல்லுக்கு “சிறைக் கூடம்' என்பது பொருள்.
(17:16ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) “ஹக்க' எனும் சொல்லுக்கு “உறுதியாகிவிட்டது' என்பது பொருள்.
(17:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கித்உ' எனும் சொல்லுக்கு “பாவம்' என்று பொருள். இது “கதிஃத்து' (நான் பாவம் செய்தேன்) எனும் வினைச்சொல்லின் பெயர்ச்சொல்லாகும். “கத்தஉ' (குற்றமிழைத்தல்) என்பது “கதிஃத்து' என்பதன் வேர்ச்சொல்லாகும். இதற்கு “குற்றமிழைத்தேன்' (அக்தஃத்து) என்று பொருள்.
(17:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தக்ரிக்க' எனும் சொல்லுக்கு “பிளந்து விடுவீர்' என்பது பொருள்.
(17:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ இஃத் ஹும் நஜ்வா' (அவர்கள் இரகசியம் பேசிக்கொள்ளும்போது) எனும் சொற்றொடரில் “நஜ்வா' என்பது “நாஜைத்து' (நான் இரகசியம் பேசினேன்) என்பதன் வேர்ச்சொல்லாகும். வேர்ச் சொல்லே இங்கு (பயனிலையில்) அடைமொழியாக இருந்து வினைச்சொல்லின் பொருள் தருகிறது.
(17:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ருஃபாத்' எனும் சொல்லுக்கு “துகள் துகளாக' என்பது பொருள். (இதற்கு “மக்கிப்போனது', “மண்' ஆகிய பொருள்களும் உண்டு.)
(17:64ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வஸ்தஃப்ஸிஸ்' எனும் சொல்லுக்கு “ஆட்டங்காணச்செய்; வழிபிறழச் செய்!' என்று பொருள். “பி கைலிக்க' எனும் சொல்லுக்கு “உனது குதிரைப் படை' என்பது பொருள்.
“அர்ரஜ்ல்' எனும் சொல்லுக்கு “காலாட்படை' என்று பொருள். இதன் ஒருமை “அர்ராஜில்' என்பதாகும். இது “ஸாஹிப்' (நண்பன்), “ஸஹ்ப்' (நண்பர்கள்) என்பனவற்றையும், “தாஜிர்' (வியாபாரி), “தஜ்ர்' (வியாபாரிகள்) என்பனவற்றையும் போன்றதாகும்.
(17:68ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹாஸிப்' எனும் சொல்லுக்கு “கடுமையாக வீசும் புயல் காற்று' என்று பொருள். காற்று வாரியிறைக்கும் பொடிக் கற் களுக்கும் “ஹாஸிப்' என்பர். இதிலிருந்து வந்ததுதான் “ஹஸபு ஜஹன்னம்' (நரகத்தின் எரிபொருள்) என்ற சொல்லும். நரகத்தில் வீசப்படும் பொருள்களையே இது குறிக்கிறது. பூமிக்குள் செல்வது “ஹஸப' எனப்படும். “ஹஸப்' எனும் சொல், “ஹஸ்பாஉ' (குறுங்கற்கள்) எனும் சொல்லிலிருந்து மருவியதாகும்.
(17:69ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தாரத்' எனும் சொல்லுக்கு “மீண்டும் ஒருமுறை' என்பது பொருள். “தியரத்', “தாராத்' ஆகியன இதன் பன்மைகளாகும்.
(17:62ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ல அஹ்த்தனிக்கன்ன' எனும் சொல்லுக்கு “அவர்களை நான் (வழிகெடுத்து) வேரறுத்துவிடுவேன்' என்பது பொருளாகும். “இஹ்த்தனக்க' என்பதற்கு, ஒருவர் மற்றவரிடமிருந்து எல்லா அறிவையும் தமதாக்கிக்கொண்டார் என்று (மொழி வழக்கில்) பொருள் கொள்ளப்படும்.
(17:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தாயிரஹு' எனும் சொல்லுக்கு “அவனுக்குரிய பங்கு' என்பது பொருள். (இச்சொல்லுக்குச் செயல்கள் பற்றிய குறிப்பு, செயல், சகுனம் ஆகிய பொருள்களும் உண்டு.)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
குர்ஆனில் எங்கெல்லாம் “சுல்த்தான்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளதோ அங் கெல்லாம் “ஆதாரம்' (அல்லது அதிகாரம்) என்றே பொருள் கொள்ளப்படும்.3
(17:111ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வலிய்யும் மினஃத் துல்லி' என்பதன் கருத்தாவது: “(இடர் ஏற்பட்டு, அதிலிருந்து தன்னைக் காக்க) அவன் யாரையும் நண்பராக்கிக்கொள்வதில்லை. (காரணம், இறைவனுக்கு இடர் ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை.)
பாடம் : 3
“அல்லாஹ் தூயவன். அவன் தன்னுடைய அடியாரை (கஅபா வாகிய) புனிதப் பள்ளிவாசலிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் மக்திசிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்” எனும் (17:1ஆவது) வசனத்தொடர்
4710. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இரவின் ஒரு சிறு பகுதியில் நான் புனித கஅபாவிலிருந்து பைத்துல் மக்திஸ்வரை சென்றுவந்த தகவலைச் சொன்ன சமயம்) குறைஷியர் என்னை நம்ப மறுத்தனர். அப்போது நான் (கஅபாவின்) “ஹிஜ்ர்'எனும் (வளைந்த) பகுதியில் நின்றிருந்தேன். அல்லாஹ் எனக்கு அப்போது பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். உடனே நான் அதைப் பார்த்தபடியே அதன் அடையாளங்களை அவர்களுக்கு விவரிக்கலானேன்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.5
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், “இரவில் நான் பைத்துல் மக்திசிற்கு அழைத்துச் செல்லப்பட்ட சமயத்தில் குறைஷியர் என்னை நம்ப மறுத்தனர். (அப்போது நான் “ஹிஜ்ர்' பகுதியில் நின்றிருந்தேன்.)” என்று (நபியவர்கள் கூறியதாகக்) கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
(17:68ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “காஸிஃப்' எனும் சொல்லுக்கு “எல்லாவற்றையும் பிடுங்கி எறியும் பலத்த காற்று' என்பது பொருள்.

4711. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، أَخْبَرَنَا مَنْصُورٌ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا نَقُولُ لِلْحَىِّ إِذَا كَثُرُوا فِي الْجَاهِلِيَّةِ أَمِرَ بَنُو فُلاَنٍ. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ وَقَالَ أَمِرَ.
பாடம் : 4
ஆதமுடைய மக்களை (மனிதர்களை) நாம் மேன்மைப்படுத்தினோம் (எனும் 17:70ஆவது வசனத்தொடர்)
(17:70ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கர்ரம்னா' எனும் சொல்லும் (இதே வகையிலான) “அக்ரம்னா' எனும் சொல்லும் (“கண்ணியப்படுத்தினோம்' என்ற) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.
(17:75ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ளிஅஃபல் ஹயாத்தி வ ளிஅஃபல் மமாத்தி' எனும் சொற்றொடருக்கு “உலக வாழ்விலும் இரு மடங்கு வேதனை, மரணத்திற்குப் பின்பும் இரு மடங்கு வேதனை' என்று பொருள்.
(17:76ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃகிலாஃபக்க' எனும் சொல்லும் (மற்றோர் ஓதல்முறைப்படியிலான) “கல்ஃபக்க' எனும் சொல்லும் (“உமக்குப் பின்னர்' எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.
(17:83ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “நஆ' எனும் சொல்லுக்கு “ஒதுங்கிக் கொண்டான்' என்பது பொருள்.
(17:84ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஷாகிலத்திஹி' எனும் சொல்லுக்கு “தன் தரப்பில்' என்பது பொருள். இச்சொல் “ஷக்ல்' (நிகர்) எனும் சொல்லிலிருந்து பிரிந்ததாகும்.
(17:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஸர்ரஃப்னா' எனும் சொல்லுக்கு “முன் வைத்துள்ளோம்' என்பது பொருள்.
(17:92ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கபீல்' எனும் சொல்லுக்கு “நேரடியாக; கண்ணெதிரே' என்று பொருள். (இச்சொல்லிலிருந்து பிறந்ததே) “அல்காபிலா' (“மகப்பேறு பெண் மருத்துவர்') எனும் சொல்லும். ஏனெனில், இந்தப் பெண் மருத்துவர், பிரசவிக்கும் பெண்ணுக்கெதிரில் இருந்து அவளுடைய குழந்தையை எதிர்நோக்குகின்றார்.
(17:100ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கஷ்யத்தல் இன்ஃபாக்' எனும் சொல்லுக்கு “செலவாகிவிடுமோ என்ற அச்சம்' என்பது பொருள். “இன்ஃபாக்' என்பதற்கு “வறுமை' என்றும், “நஃபிக' என்பதற்கு “போய்விட்டது' என்றும் பொருள். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “கத்தூர்' எனும் சொல்லுக்கு “கஞ்சன்' என்பது பொருள்.
(17:107ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்அஃத்கான்' எனும் சொல்லுக்கு “முகத் தாடைகள் இரண்டும் இணையுமிடங்கள்' (முகவாய்கள்) என்பது பொருள். இதன் ஒருமை “ஃதகன்' என்பதாகும்.
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(17:63ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மவ்ஃபூர்' (நிறைவாக்கப்பட்டது) எனும் (செயப்பாட்டு எச்சவினைப் பெயர்ச்)சொல் லுக்கு (வினையாலணையும் பெயரான) “வாஃபிர்' (நிறைவானது) என்பதன் பொருளாகும்.
(17:69ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) “தபீஉன்' எனும் சொல்லுக்கு “பழிவாங்குபவன்' என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “உதவியாளர்' எனப் பொருள் கொள்கிறார்கள். (இதற்கு “குற்றம்சாட்டுவோர்', “விசாரணை செய்யக்கூடியவர்' என்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது.)
(17:97ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கபத்' எனும் சொல்லுக்கு “தணிந்தது' என்று பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(17:26ஆவது வசனத்திலுள்ள) “வீண் செலவு செய்ய வேண்டாம்' என்பதன் கருத்தாவது: (மார்க்கம் அனுமதிக்காத) தீய வழியில் செலவு செய்ய வேண்டாம்.
(17:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ரஹ்மத்' (அருள்) எனும் சொல், (வாழ்க்கைக்குத் தேவைப்படும்) வாழ்வாதாரத்தைக் குறிக்கும்.
(17:102ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மஸ்பூர்' எனும் சொல்லுக்கு “சபிக்கப்பட்டவன்' என்பது பொருள்.
(17:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லா தக்ஃபு' எனும் சொல்லுக்கு “பேசாதீர்கள்' என்பது பொருள்.
(17:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃப ஜாஸூ' எனும் சொல்லுக்கு “திட்டமிட்டனர்' என்பது பொருள்.
(17:66ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யுஸ்ஜீ' எனும் சொல்லுக்கு “செலுத்துகின்றான்' என்பது பொருள்.
(17:107ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) “அல்அஃத்கான்' எனும் சொல்லுக்கு “முகங்கள்' என்று பொருள்.
பாடம்:
“(அக்கிரமக்காரர்கள் வாழ்கின்ற) ஏதேனும் ஓர் ஊரை நாம் அழிக்க விரும்பினால், அங்கு சொகுசாக வாழ்வோருக்கு நாம் கட்டளையிடு கின்றோம்; அதில் அவர்கள் பாவம் இழைக்கின்றார்கள். அதையடுத்து அவ்வூரின் மீது நமது ஆணை உறுதியாகி, அதை நாம் அடியோடு அழித்துவிடுகின்றோம்” எனும் (17:16ஆவது) இறைவசனம்
4711. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலத்தில், ஒரு குலத்தாரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டால், “அமிர பனூ ஃபுலான்” (இன்ன குலத்தார் எண்ணிக்கையில் பெருகிவிட்டனர்) என்று கூறிவந்தோம்.
மற்றோர் அறிவிப்பில் “(அமிர என்பதற்குப் பதிலாக) “அமர' என்று காணப் படுகிறது.6

4712. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِلَحْمٍ، فَرُفِعَ إِلَيْهِ الذِّرَاعُ، وَكَانَتْ تُعْجِبُهُ، فَنَهَسَ مِنْهَا نَهْسَةً ثُمَّ قَالَ " أَنَا سَيِّدُ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ، وَهَلْ تَدْرُونَ مِمَّ ذَلِكَ يُجْمَعُ النَّاسُ الأَوَّلِينَ وَالآخِرِينَ فِي صَعِيدٍ وَاحِدٍ، يُسْمِعُهُمُ الدَّاعِي، وَيَنْفُذُهُمُ الْبَصَرُ، وَتَدْنُو الشَّمْسُ، فَيَبْلُغُ النَّاسَ مِنَ الْغَمِّ وَالْكَرْبِ مَا لاَ يُطِيقُونَ وَلاَ يَحْتَمِلُونَ فَيَقُولُ النَّاسُ أَلاَ تَرَوْنَ مَا قَدْ بَلَغَكُمْ أَلاَ تَنْظُرُونَ مَنْ يَشْفَعُ لَكُمْ إِلَى رَبِّكُمْ فَيَقُولُ بَعْضُ النَّاسِ لِبَعْضٍ عَلَيْكُمْ بِآدَمَ فَيَأْتُونَ آدَمَ عليه السلام فَيَقُولُونَ لَهُ أَنْتَ أَبُو الْبَشَرِ خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ. وَنَفَخَ فِيكَ مِنْ رُوحِهِ، وَأَمَرَ الْمَلاَئِكَةَ فَسَجَدُوا لَكَ، اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ، أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ أَلاَ تَرَى إِلَى مَا قَدْ بَلَغَنَا فَيَقُولُ آدَمُ إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ، وَإِنَّهُ نَهَانِي عَنِ الشَّجَرَةِ فَعَصَيْتُهُ، نَفْسِي نَفْسِي نَفْسِي، اذْهَبُوا إِلَى غَيْرِي، اذْهَبُوا إِلَى نُوحٍ، فَيَأْتُونَ نُوحًا فَيَقُولُونَ يَا نُوحُ إِنَّكَ أَنْتَ أَوَّلُ الرُّسُلِ إِلَى أَهْلِ الأَرْضِ، وَقَدْ سَمَّاكَ اللَّهُ عَبْدًا شَكُورًا اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ، أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ فَيَقُولُ إِنَّ رَبِّي عَزَّ وَجَلَّ قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ، وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ، وَإِنَّهُ قَدْ كَانَتْ لِي دَعْوَةٌ دَعَوْتُهَا عَلَى قَوْمِي نَفْسِي نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى غَيْرِي، اذْهَبُوا إِلَى إِبْرَاهِيمَ، فَيَأْتُونَ إِبْرَاهِيمَ، فَيَقُولُونَ يَا إِبْرَاهِيمُ، أَنْتَ نَبِيُّ اللَّهِ وَخَلِيلُهُ مِنْ أَهْلِ الأَرْضِ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ فَيَقُولُ لَهُمْ إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ، وَإِنِّي قَدْ كُنْتُ كَذَبْتُ ثَلاَثَ كَذَبَاتٍ ـ فَذَكَرَهُنَّ أَبُو حَيَّانَ فِي الْحَدِيثِ ـ نَفْسِي نَفْسِي نَفْسِي، اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى مُوسَى، فَيَأْتُونَ مُوسَى، فَيَقُولُونَ يَا مُوسَى أَنْتَ رَسُولُ اللَّهِ، فَضَّلَكَ اللَّهُ بِرِسَالَتِهِ وَبِكَلاَمِهِ عَلَى النَّاسِ، اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ فَيَقُولُ إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ، وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ، وَإِنِّي قَدْ قَتَلْتُ نَفْسًا لَمْ أُومَرْ بِقَتْلِهَا، نَفْسِي نَفْسِي نَفْسِي، اذْهَبُوا إِلَى غَيْرِي، اذْهَبُوا إِلَى عِيسَى، فَيَأْتُونَ عِيسَى فَيَقُولُونَ يَا عِيسَى أَنْتَ رَسُولُ اللَّهِ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَى مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ، وَكَلَّمْتَ النَّاسَ فِي الْمَهْدِ صَبِيًّا اشْفَعْ لَنَا أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ فَيَقُولُ عِيسَى إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ، وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ ـ وَلَمْ يَذْكُرْ ذَنْبًا ـ نَفْسِي نَفْسِي نَفْسِي، اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى مُحَمَّدٍ صلى الله عليه وسلم فَيَأْتُونَ مُحَمَّدًا صلى الله عليه وسلم فَيَقُولُونَ يَا مُحَمَّدُ أَنْتَ رَسُولُ اللَّهِ وَخَاتَمُ الأَنْبِيَاءِ، وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ، اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ فَأَنْطَلِقُ فَآتِي تَحْتَ الْعَرْشِ، فَأَقَعُ سَاجِدًا لِرَبِّي عَزَّ وَجَلَّ ثُمَّ يَفْتَحُ اللَّهُ عَلَىَّ مِنْ مَحَامِدِهِ وَحُسْنِ الثَّنَاءِ عَلَيْهِ شَيْئًا لَمْ يَفْتَحْهُ عَلَى أَحَدٍ قَبْلِي ثُمَّ يُقَالُ يَا مُحَمَّدُ ارْفَعْ رَأْسَكَ، سَلْ تُعْطَهْ، وَاشْفَعْ تُشَفَّعْ، فَأَرْفَعُ رَأْسِي، فَأَقُولُ أُمَّتِي يَا رَبِّ، أُمَّتِي يَا رَبِّ فَيُقَالُ يَا مُحَمَّدُ أَدْخِلْ مِنْ أُمَّتِكَ مَنْ لاَ حِسَابَ عَلَيْهِمْ مِنَ الْبَابِ الأَيْمَنِ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ وَهُمْ شُرَكَاءُ النَّاسِ فِيمَا سِوَى ذَلِكَ مِنَ الأَبْوَابِ، ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ مَا بَيْنَ الْمِصْرَاعَيْنِ مِنْ مَصَارِيعِ الْجَنَّةِ كَمَا بَيْنَ مَكَّةَ وَحِمْيَرَ، أَوْ كَمَا بَيْنَ مَكَّةَ وَبُصْرَى ".
பாடம் : 5
நாம் நூஹுடன் கப்பலில் ஏற்றியிருந்த மக்களின் வழித் தோன்றல்களே நீங்கள். நிச்சயமாக, நூஹ் நன்றியுள்ள ஓர் அடியாரா கவே திகழ்ந்தார் (எனும் 17:3ஆவது இறைவசனம்)
4712. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஒரு விருந்தில்) இறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது (சமைக்கப்பட்ட) முன்கால் சப்பை ஒன்று அவர்களிடம் வழங்கப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. (அதை) நபி (ஸல்) அவர்கள் தம் பற்களால் கடித்து அதிலிருந்து சிறிது உண்டார்கள்.
பிறகு கூறினார்கள்: நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன். (அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எதன் மூலம் ஒன்றுதிரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதை அவர்கள் செவியுற முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை (நன்கு) சூழ்ந்துகொண்டிருக்கும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்களிடம், அவர்களால் தாங்கிக்கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்துசேரும்.
அப்போது மனிதர்கள் (சிலர் வேறுசிலரை நோக்கி) “உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த் தேடிப்) பார்க்கமாட்டீர் களா?” என்று கேட்பார்கள். அப்போது மனிதர்களில் சிலர் வேறுசிலரிடம், “(உங்களுடைய ஆதி பிதா) ஆதம் (அலை) அவர்களை அணுகுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்) என்பர்.
ஆகவே மனிதர்கள், ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, “நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்; உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும்படி உத்தர விட்டான். அவ்வாறே அவர்கள் உங்களுக்குச் சிரம்பணிந்தார்கள். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக் காகப் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப)நிலையையும் நீங்கள் கவனிக்க வில்லையா?” என்று கேட்பார்கள்.
அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “(நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் இன்று (கடும்) கோபம் கொண்டிருக்கிறான். இதற்குமுன் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது” என்று கூறிவிட்டு, “நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம் செல்லுங்கள்” என்று சொல்வார்கள்.
உடனே மக்களும் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று, “நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பெற்ற) முதலாவது (முக்கிய) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான்.7 எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கேட்பார்கள்.
அதற்கு நூஹ் (அலை) அவர்கள், “என் இறைவன் இன்று (கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்குமுன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப்போல் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. (எல்லா நபிமார்களுக்கும் இருப்பதுபோல் விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத்தாருக்கு எதிராகப் பயன்படுத்திவிட்டேன்.8 நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது!” என்று கூறிவிட்டு, “நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள்; (இறைவனின் உற்ற நண்பர்) இப்ராஹீமிடம் செல்லுங்கள்” என்பார்கள்.
(அவ்வாறே மக்களும் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று,) “இப்ராஹீமே! நீங்கள் இறைத்தூதரும் பூமியில் வசிப்பவர்களில் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கேட்பார்கள்.
அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், “என் இறைவன் இன்று (கடுங்)கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப்போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. நான் மூன்று பொய்களைச் சொல்லியுள்ளேன். -அம்மூன்றையும் அறிவிப்பாளர் அபூ ஹய்யான் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.9- நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) மூசாவிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள்.
அவ்வாறே மக்களும் மூசா (அலை) அவர்களிடம் சென்று, “மூசாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். தனது தூதுத்துவத்தை வழங்கியும் உங்களிடம் உரையாடியும் மக்கள் அனைவரையும்விட உங்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தி யுள்ளான். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கூறுவார்கள்.
அதற்கு மூசா (அலை) அவர்கள், “இன்று என் இறைவன் (என்மீது கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப்போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பின்பும் இதைப்போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்படாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்துவிட்டிருக்கிறேன்.10 நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது. (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) ஈசாவிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள்.
அவ்வாறே மக்கள் ஈசா (அலை) அவர்களிடம் சென்று, “ஈசாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனது வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டிலில் குழந்தை யாய் இருந்தபோதே மனிதர்களிடம் பேசினீர்கள். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங் கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா?” என்று கேட்பார்கள்.
அதற்கு ஈசா (அலை) அவர்கள், “என் இறைவன் இன்று (என்மீது கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை.- (தாம் புரிந்து விட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல்- நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! (ஆகவே,) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள்; நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள்.
அப்போது மக்கள் என்னிடம் வந்து “முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர். இறைத்தூதர்களில் இறுதியானவர். உங்களது முன், பின் பாவங்களை இறைவன் மன்னித்துவிட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கூறுவர்.
அப்போது நான் நடந்து இறைவனின் அரியணைக்குக் கீழே சென்று, என் இறைவனுக்கு (பணிந்து) சஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்குமுன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான்.
பிறகு, “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி, “இறைவா! என் சமுதாயம். இறைவா! என் சமுதாயம்' என்பேன். அதற்கு “முஹம்மதே! சொர்க்கத் தின். வாயில்களில் வலப் பக்க வாயில் வழியாக எந்த விதக் கேள்விக் கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்; அவர்கள் மற்ற வாயில்களிலும் மக்களுடன் இணைந்து நுழையலாம்' என்று கூறப்படும்.
என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்க வாயிலின் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் “மக்காவிற்கும் (யமனிலுள்ள) “ஹிம்யர்' எனும் ஊருக்கும் இடையிலுள்ள' அல்லது “மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள' தூரமாகும்.11

4713. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " خُفِّفَ عَلَى دَاوُدَ الْقِرَاءَةُ، فَكَانَ يَأْمُرُ بِدَابَّتِهِ لِتُسْرَجَ، فَكَانَ يَقْرَأُ قَبْلَ أَنْ يَفْرُغَ ". يَعْنِي الْقُرْآنَ.
பாடம் : 6
“மேலும், நாம் தாவூதுக்கு ஸபூர் வேதத்தை வழங்கினோம்” எனும் (17:55ஆவது) வசனத்தொடர்
4713. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தாவூத் (அலை) அவர்களுக்கு வேதம் ஓதுவது இலேசாக்கப்பட்டிருந்தது. அவர்கள் தம் வாகனப் பிராணிக்குச் சேணம் பூட்டக் கட்டளையிடுவார்கள். (பணியாள்) சேணம் பூட்டி முடிப்பதற்குள் -வேதம்- முழுவதையும் ஓதிவிடுவார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.12

4714. حَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي سُلَيْمَانُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ، {إِلَى رَبِّهِمِ الْوَسِيلَةَ} قَالَ كَانَ نَاسٌ مِنَ الإِنْسِ يَعْبُدُونَ نَاسًا مِنَ الْجِنِّ، فَأَسْلَمَ الْجِنُّ، وَتَمَسَّكَ هَؤُلاَءِ بِدِينِهِمْ. زَادَ الأَشْجَعِيُّ عَنْ سُفْيَانَ عَنِ الأَعْمَشِ. {قُلِ ادْعُوا الَّذِينَ زَعَمْتُمْ}
பாடம் : 7
(நபியே!) இவர்களிடம் கூறுக: அல்லாஹ்வை விடுத்து (உங்கள் தேவைகளை நிறைவேற்றும் கடவுளர்களாய்) யாரை நீங்கள் கருதுகிறீர்களோ அவர்களை அழைத்துப் பாருங்கள்! உங்களின் எந்தத் துன்பத்தையும் அவர்களால் அகற்றிவிடவோ மாற்றிவிடவோ முடியாது (எனும் 17:56ஆவது இறைவசனம்)
4714. அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “இந்த இணைவைப்பாளர்கள் யாரை(க் கடவுளராக) அழைக்கின்றனரோ அவர்களேகூடத் தங்களுடைய (உண்மை யான) இறைவனுக்கு அதிகம் நெருக்கமான வராய் ஆவது யார் என்பதற்காக அவனது நெருக்கத்தை அடைவதற்குரிய வழியைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” எனும் (17:57ஆவது) வசனம் குறித்து விளக்கம் அளிக்கையில் பின்வருமாறு கூறினார்கள்:
மனிதர்களில் சிலர் “ஜின்' இனத்தாரில் சிலரை வழிபட்டுக்கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த ஜின்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்(டு அல்லாஹ்வை வழிபட்)டனர். (அப்படியிருந்தும்,) இந்த மனிதர்கள் தமது (இணைவைக்கும்) மார்க்கத்தையே (தொடர்ந்து) பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
மற்றோர் அறிவிப்பில், “17:56ஆவது வசனம் குறித்து விளக்கமளிக்கையில்...” என்று காணப்படுகிறது.

4715. حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ فِي هَذِهِ الآيَةِ {الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَى رَبِّهِمِ الْوَسِيلَةَ} قَالَ نَاسٌ مِنَ الْجِنِّ {كَانُوا} يُعْبَدُونَ فَأَسْلَمُوا.
பாடம் : 8
“இந்த இணைவைப்பாளர்கள் யாரை(க் கடவுளராக) அழைக்கின்ற னரோ அவர்களேகூடத் தங்களுடைய (உண்மையான) இறைவனின் நெருக்கத்தை அடைவதற்குரிய வழியைத் தேடிக்கொண்டிருக்கின் றனர்” எனும் (17:57ஆவது) இறைவசனம்
4715. அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “இந்த இணைவைப்பாளர் கள் யாரை(க் கடவுளராய்) அழைக்கின் றனரோ அவர்களேகூடத் தங்களுடைய (உண்மையான) இறைவனது நெருக் கத்தை அடைவதற்கான வழியைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்” எனும் (17:57ஆவது) வசனம் தொடர்பாக(ப் பின்வருமாறு) விளக்கம் அளித்தார்கள்: “ஜின்' இனத்தாரில் சிலர் (மனிதர்கள் சிலரால்) வணங்கப்பட்டுவந்தனர். பின்னர் அந்த ஜின்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டனர்.

4716. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنه ـ {وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلاَّ فِتْنَةً لِلنَّاسِ} قَالَ هِيَ رُؤْيَا عَيْنٍ أُرِيَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةَ أُسْرِيَ بِهِ {وَالشَّجَرَةَ الْمَلْعُونَةَ} شَجَرَةُ الزَّقُّومِ.
பாடம் : 9
(நபியே!) உமக்கு நாம் காண்பித்த (இக்)காட்சியையும், சபிக்கப்பட்ட (கள்ளி) மரத்தை (அது மறுமையில் பாவிகளுக்கு உணவாகும் என) குர்ஆனில் நாம் கூறியிருப்பதையும் இம்மக்களுக்கு ஒரு சோதனை யாகவே ஆக்கியுள்ளோம் (எனும் 17:60ஆவது வசனத்தொடர்)
4716. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“(நபியே!) உமக்கு நாம் காண்பித்த (இக்)காட்சியையும், சபிக்கப்பட்ட மரத்தை (அது மறுமையில் பாவிகளுக்கு உணவாகும் என) குர்ஆனில் நாம் கூறியிருப்பதையும் இம்மக்களுக்கு ஒரு சோதனையாகவே ஆக்கியுள்ளோம்” எனும் (17:60ஆவது) வசனம் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸிற்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அன்னாருக்குக் காட்டப்பட்ட கண்கூடான காட்சியைக் குறிக்கிறது. “சபிக்கப்பட்ட மரம்' என்பது “சப்பாத்திக் கள்ளி' செடியைக் குறிக்கிறது.13

4717. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، وَابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " فَضْلُ صَلاَةِ الْجَمِيعِ عَلَى صَلاَةِ الْوَاحِدِ خَمْسٌ وَعِشْرُونَ دَرَجَةً، وَتَجْتَمِعُ مَلاَئِكَةُ اللَّيْلِ وَمَلاَئِكَةُ النَّهَارِ فِي صَلاَةِ الصُّبْحِ ". يَقُولُ أَبُو هُرَيْرَةَ اقْرَءُوا إِنْ شِئْتُمْ {وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا}
பாடம் : 10
“நிச்சயமாக அதிகாலையில் ஓதுவது சாட்சியம் சொல்லப்படக் கூடியதாகும்” எனும் (17:78ஆவது) வசனத்தொடர்
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: (“அதிகாலையில் ஓதுவது' என்பது) அதிகாலை (ஃபஜ்ர்) தொழுகையைக் குறிக்கும்.
4717. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். அதிகாலைத் தொழுகையில் இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவர்களும் ஒன்றுசேர்கின்றனர்.
இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நீங்கள் விரும்பினால், “(நபியே!) அதிகாலையில் ஓதுவதைக் கடைப்பிடியுங்கள். (ஏனெனில்,) அதி காலையில் ஓதுவது (வானவர்களால்) சாட்சியம் சொல்லப்படக்கூடியதாகும்” எனும் (17:78ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்று சொன் னார்கள்.14