4683. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، قَالَ قَرَأَ ابْنُ عَبَّاسٍ {أَلاَ إِنَّهُمْ يَثْنُونَ صُدُورَهُمْ لِيَسْتَخْفُوا مِنْهُ أَلاَ حِينَ يَسْتَغْشُونَ ثِيَابَهُمْ} وَقَالَ غَيْرُهُ عَنِ ابْنِ عَبَّاسٍ {يَسْتَغْشُونَ} يُغَطُّونَ رُءُوسَهُمْ {سِيءَ بِهِمْ} سَاءَ ظَنُّهُ بِقَوْمِهِ. {وَضَاقَ بِهِمْ} بِأَضْيَافِهِ {بِقِطْعٍ مِنَ اللَّيْلِ} بِسَوَادٍ. وَقَالَ مُجَاهِدٌ {أُنِيبُ} أَرْجِعُ.
பாடம்: 11. “ஹூத்' அத்தியாயம்1 அபூமைசரா அம்ர் பின் ஷுரஹ்பீல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (11:75ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்அவ்வாஹ்' எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் “இரக்க சிந்தனையுடையவர்' என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (11:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “பாதியர் ரஃயி' (எங்கள் பார்வையில்) எனும் சொற்றொடருக்கு “எங்களுக்குத் தென்பட்ட வகையில்' என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (11:44ஆவது வசனத்திலுள்ள) “ஜூதீ' என்பது (இப்னு உமர்) தீவிலுள்ள ஒரு மலையாகும்.2 ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (11:87ஆவது வசனத்திலுள்ள) “நிச்சயமாக நீர் கருணைமிக்க நேர்மையாளர்தான்' எனும் வாக்கியத்தை (மத்யன் நகர மக்கள்) ஷுஐப் (அலை) அவர்களிடம் பரிகாசமாகவே கூறினர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (11:44ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அக்லிஈ' எனும் சொல்லுக்கு “(வானமே!) நிறுத்திக்கொள்' என்பது பொருள். (11:77ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஸீப்' எனும் சொல்லுக்கு “கடுமையானது' என்பது பொருள். (11:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லா ஜரம' எனும் சொற்றொடருக்கு “ஆம் (மெய்யாகவே)' என்று பொருள். (11:40ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ ஃபாரத் தன்னூர்' (அடுப்பு பொங்கியது) எனும் வாக்கியத்திற்கு “வெள்ளம் பீறிட்டது' என்று பொருள். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (“அத்தன்னூர்' எனும்) இச்சொல்லுக்கு “பூமியின் மேற்பரப்பு' என்பது பொருள். பாடம் : 1 இதோ! அவர்கள் (தம் தீய எண்ணங்களை) அல்லாஹ்விட மிருந்து மறைப்பதற்காகத் தம் நெஞ்சங்களைத் திருப்பிக்கொள் கிறார்கள். தெரிந்துகொள்ளுங்கள்: இவர்கள் ஆடைகளால் தங்களைமூடி மறைத்துக் கொண்டபோதி லும் அவர்கள் மறைக்கின்றவற்றையும் அவர்கள் வெளிப்படுத்துகின்ற வற்றையும் அல்லாஹ் நன்கறி கின்றான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் (எனும் 11:5ஆவது இறைவசனம்) (11:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹாக்க' எனும் சொல்லுக்கு “இறங்கியது' என்று பொருள். (அதன் எதிர்கால வினைச் சொல்லான) “யஹீக்கு' என்பதற்கு “இறங்கும்' என்று பொருள். (11:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யஊஸுன்' (நம்பிக்கையிழந்தவன்) எனும் சொல் “யஇஸ்த்து (நம்பிக்கையிழந்தேன்) என்பதிலிருந்து “பஃஊல்' எனும் வாய்பாட்டில் வந்ததாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: (11:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தப்தயிஸ்' எனும் சொல்லுக்கு “கவலைப் படுதல்' என்று பொருள். (11:5ஆவது வசனத்திலுள்ள) “அவனிடமிருந்து மறைப்பதற்காகத் தம் நெஞ்சங்களைத் திருப்பிக்கொள்கிறார் கள்” என்பதன் கருத்தாவது: முடிந்தால் அல்லாஹ்விடமிருந்து மறைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் சத்தியத்தில் சந்தேகம் கொள்கிறார்கள்.
4683. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இதோ! அவர்கள் (தம் தீய எண்ணங் களை) அல்லாஹ்விடமிருந்து மறைப்ப தற்காகத் தம் நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கிறார்கள்” எனும் (11:5ஆவது) இறைவசனத்தை (பிரபல ஓதல் முறையின் படி) “அலா இன்னஹும் யஸ்னூன ஸுதூரஹும்' என்றே ஓதினார்கள்.

அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களல்லாத மற்றச் சிலர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்:

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “யஸ்தஃக்ஷூன' எனும் சொல்லுக்கு, “அவர்கள் தங்கள் தலைகளை மூடிக்கொள்கிறார்கள்” என்று பொருள்.

(11:77ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “சீஅ பிஹிம்' என்பதற்கு “லூத் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தாரைக் குறித்த நல்லெண்ணத்தை இழந்தார்கள்' என்று பொருள். “ளாக்க பிஹிம்' என்பதற்கு “தம் விருந்தினர்களைக் குறித்து (அவர்களைத் தீய செயலுக்குப் பயன்படுத்திக்கொள்ளத் தம் சமுதாயத்தார் முயல்வார்களோ எனும்) சங்கடம் லூத் (அலை) அவர்களுக்கு ஏற்பட்டது” என்று பொருள்.

(11:81ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “பிகித்இம் மினல் லைல்' என்பதற்கு “இரவின் இருட்டு இருக்கும்போதே' என்பது பொருள்.

(11:88ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இலைஹி உனீப்' எனும் வாக்கியத்திற்கு “அவன் பக்கமே நான் திரும்புகிறேன்' என்பது பொருள்.

அத்தியாயம் : 65
4684. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ أَنْفِقْ أُنْفِقْ عَلَيْكَ ـ وَقَالَ ـ يَدُ اللَّهِ مَلأَى لاَ تَغِيضُهَا نَفَقَةٌ، سَحَّاءُ اللَّيْلَ وَالنَّهَارَ ـ وَقَالَ ـ أَرَأَيْتُمْ مَا أَنْفَقَ مُنْذُ خَلَقَ السَّمَاءَ وَالأَرْضَ فَإِنَّهُ لَمْ يَغِضْ مَا فِي يَدِهِ، وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ، وَبِيَدِهِ الْمِيزَانُ يَخْفِضُ وَيَرْفَعُ "". {اعْتَرَاكَ} افْتَعَلْتَ مِنْ عَرَوْتُهُ أَىْ أَصَبْتُهُ، وَمِنْهُ يَعْرُوهُ وَاعْتَرَانِي {آخِذٌ بِنَاصِيَتِهَا} أَىْ فِي مِلْكِهِ وَسُلْطَانِهِ. عَنِيدٌ وَعَنُودٌ وَعَانِدٌ وَاحِدٌ، هُوَ تَأْكِيدُ التَّجَبُّرِ، {اسْتَعْمَرَكُمْ} جَعَلَكُمْ عُمَّارًا، أَعْمَرْتُهُ الدَّارَ فَهْىَ عُمْرَى جَعَلْتُهَا لَهُ. {نَكِرَهُمْ} وَأَنْكَرَهُمْ وَاسْتَنْكَرَهُمْ وَاحِدٌ {حَمِيدٌ مَجِيدٌ} كَأَنَّهُ فَعِيلٌ مِنْ مَاجِدٍ. مَحْمُودٌ مِنْ حَمِدَ. سِجِّيلٌ الشَّدِيدُ الْكَبِيرُ. سِجِّيلٌ وَسِجِّينٌ وَاللاَّمُ وَالنُّونُ أُخْتَانِ، وَقَالَ تَمِيمُ بْنُ مُقْبِلٍ وَرَجْلَةٍ يَضْرِبُونَ الْبَيْضَ ضَاحِيَةً ضَرْبًا تَوَاصَى بِهِ الأَبْطَالُ سِجِّينَا
பாடம் : 2 “(அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) நீரின் மீதிருந்தது” எனும் (11:7ஆவது) வசனத்தொடர்
4684. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “நீ (என் அன்பை அடைந்திட) (அறவழியில்) செலவு செய். உனக்காக நான் செலவு செய்வேன்” என்று சொன்னான்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

அல்லாஹ்வின் கரம் நிரம்பியுள் ளது. செலவிடுவதால் அது வற்றிப் போய்விடுவதில்லை. அது இரவிலும் பகலிலும் (அருள் மழையைப்) பொழிந்து கொண்டேயிருக்கின்றது. வானத்தையும் பூமியையும் அவன் படைத்தது முதல் அவன் செலவிட்டது எதுவும் அவனது கைவசமுள்ள (செல்வத்)தைக் குறைத்துவிடவில்லை பார்த்தீர்களா! (வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு முன்னர்) அவனது அரியணை (அர்ஷ்) நீரின் மேóருந்தது. அவனது கரத்திலேயே தராசு உள்ளது. அவனே (அதைத்) தாழ்த்துகின்றான்; உயர்த்துகின்றான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(11:54ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஉதராக்க' எனும் சொல் “அரவ்த்துஹு' எனும் (வினைச்)சொல்லிலிருந்து “இஃப்தஅல்த்த' எனும் வாய்பாட்டு வினையெச்சத்தில் அமைந்துள்ளது. “அரவ்த்துஹு' என்பதற்கு “அவனுக்கு நான் கேடு உண்டாக்கினேன்' என்று பொருள். இ(ந்த மூலத்)திலிருந்துதான் “யஉரூஹு' (அவனுக்குப் பாதிப்பை உண்டாக்குவான்), “இஉதரானீ' (எனக்கு அவன் பாதிப்பை உண்டாக்கினான்) ஆகிய வினைச்சொற்கள் பிறந்தன.

“ஒவ்வோர் உயிரினத்தின் குடுமியும் அவனது பிடியிலேயே இருக்கிறது” எனும் (11:56ஆவது) வசனத்தின் கருத்தாவது: அவனது ஆட்சியதிகாரத்திலேயே உள்ளது.

(11:59ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அநீத்' எனும் சொல்லும் (அதே போன்ற) “அநூத்', “ஆநித்' ஆகிய சொற்களும் (“இறுக்கமான பிடிவாதக்காரன்' என்ற) ஒரே பொருள் கொண்டவையாகும்.

(11:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யகூலுல் அஷ்ஹாத்' (சாட்சியாளர்கள் கூறுவர்) எனும் தொடரில் “அல்அஷ்ஹாத்' என்பதன் ஒருமை “ஷாஹித்'; “அஸ்ஹாப்' என்பதன் ஒருமை “ஸாஹிப்' (நண்பன்) என்பதைப் போல.

(11:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஸ்தஅமரக்கும்' எனும் சொல்லுக்கு “உங்களை (அதில்) வசிப்பவர்களாக ஆக்கினான்' என்று பொருள். இதே வகையைச் சேர்ந்ததே “அஉமர்த்துஹுத் தார' என்பதும். இதன் பொருள்: அவனுக்கு இவ்வீட்டை (அவன் வாழ்நாள் முழுவதும்) உடைமையாக்கிக் கொடுத்தேன்.

(11:70ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “நகிரஹும்' எனும் சொல்லும், (அதே போன்ற) “அன்கரஹும்', “இஸ்தன்கரஹும்' ஆகிய சொற்களும் (“அவர்களைப் புதிராகப் பார்த்தார்' என்ற) ஒரே பொருள் கொண்டவையாகும்.

(11:73ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹமீதுன் மஜீத்' என்பதில் “மஜீத்' (மாட்சிமை மிகுந்தவன்) எனும் சொல் “மாஜித்' எனும் (வினையாலணையும் பெயர்ச்) சொல்லில் இருந்து “ஃபஈல்' எனும் வாய்பாட்டில் அமைந்ததாகும்.

“ஹமீத்' (புகழுக்குரியவன்) எனும் சொல் “ஹமித' எனும் (வினைச்)சொல்லிலிருந்து செயப்பாட்டு எச்சவினையின் (மஹ்மூத்) பொருள் கொண்டதாகும்.

(11:82ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “சிஜ்ஜீல்' எனும் சொல்லுக்கு “கெட்டியான, பெரிய' என்று பொருள். “சிஜ்ஜீல்', “சிஜ்ஜீன்' இரண்டுக்கும் பொருள் ஒன்றே. (இச்சொற்களின் இறுதியிலுள்ள) “லாம்', நூன்' ஆகிய எழுத்துகள் (உச்சரிப்பில்) நெருக்கமானவையாகும்.

(கவிஞர்) தமீம் பின் முக்பில் கூறினார்:

எத்தனையோகாலாட் படையினர்முற்பகல் வேளையில்கடுமையாக (சிஜ்ஜீன்)தாக்கிவிடுகின்றனர்தலைக் கவசங்களில்!மாபெரும் வீரர்கள்கூடஅதைப் பற்றி அறிவுறுத்துவர்இறுதி மூச்சின்போது.3

அத்தியாயம் : 65
4685. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، وَهِشَامٌ، قَالاَ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ، قَالَ بَيْنَا ابْنُ عُمَرَ يَطُوفُ إِذْ عَرَضَ رَجُلٌ فَقَالَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ ـ أَوْ قَالَ يَا ابْنَ عُمَرَ ـ سَمِعْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي النَّجْوَى فَقَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " يُدْنَى الْمُؤْمِنُ مِنْ رَبِّهِ ـ وَقَالَ هِشَامٌ يَدْنُو الْمُؤْمِنُ ـ حَتَّى يَضَعَ عَلَيْهِ كَنَفَهُ، فَيُقَرِّرُهُ بِذُنُوبِهِ تَعْرِفُ ذَنْبَ كَذَا يَقُولُ أَعْرِفُ، يَقُولُ رَبِّ أَعْرِفُ مَرَّتَيْنِ، فَيَقُولُ سَتَرْتُهَا فِي الدُّنْيَا وَأَغْفِرُهَا لَكَ الْيَوْمَ ثُمَّ تُطْوَى صَحِيفَةُ حَسَنَاتِهِ، وَأَمَّا الآخَرُونَ أَوِ الْكُفَّارُ فَيُنَادَى عَلَى رُءُوسِ الأَشْهَادِ هَؤُلاَءِ الَّذِينَ كَذَبُوا عَلَى رَبِّهِمْ ". وَقَالَ شَيْبَانُ عَنْ قَتَادَةَ حَدَّثَنَا صَفْوَانُ.
பாடம் : 3 “மத்யனுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நம் தூதராக நியமித்தோம்)” (எனும் 11:84ஆவது வசனத்தொடர்) அதாவது “மத்யன்வாசிகளுக்கு (நாம் நியமித்தோம்)” என்று பொருள்.ஏனென்றால், “மத்யன்' என்பது ஓர் ஊராகும். இதைப் போன்றுதான் (12:82ஆவது வசனத்திலுள்ள), “அந்த ஊரைக் கேளுங்கள்; அந்த ஒட்டகக் கூட்டத்தைக் கேளுங்கள்” என்பதற்கு அந்த ஊர்வாசிகளையும் ஒட்டகக் கூட்டத்தாரையும் (கேளுங்கள்)” என்று பொருள். (11:92ஆவது வசனத்திலுள்ள) “நீங்கள் அவனைப் புறக்கணித்துவிட்டீர்கள்” என்பதற்கு, “இறைவனின் பக்கம் நீங்கள் திரும்பவில்லை என ஷுஐப் (அலை) அவர்கள் (அந்த மத்யன்வாசிகளிடம்) சொன்னார்கள்” என்று பொருள். (இதன் மூலத்திலுள்ள “ழிஹ்ரிய்யு' என்பதற்கு “முதுகுக்கப்பால்' என்பது பொருள். பொதுவாக) ஒரு மனிதன் தன் தேவை நிறைவேறாதபோது “ழஹர்த்த பி ஹாஜத்தீ' (என் தேவையைப் புறக்கணித்துவிட்டாய்) என்றும், “வ ஜஅல்த்தனீ ழிஹ்ரிய்யன்' (என்னை முதுகுக்கப்பால் ஆக்கிவிட்டாய்) என்றும் கூறுவதுண்டு. ஒரு வாகனப் பிராணியை, அல்லது ஒரு பையை உதவிக்காக உடன் எடுத்துச் செல்வதற்கும் “ழிஹ்ரிய்யு' என்பர். (11:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அராஃதில்' எனும் சொல்லுக்கு “தரம் தாழ்ந்தோர்' என்பது பொருள். (11:35ஆவது வசனத்தின் மூலத் திலுள்ள) “இஜ்ராமீ' (என் குற்றம்) என்பது “அஜ்ரம்த்து' எனும் (வினைச்)சொல்லின் வேர்ச்சொல்லாகும். “ஜரம்த்து' எனும் (வினைச்)சொல்(லின் வேர்ச்சொல்) என்றும் சிலர் கூறுகின்றனர். (11:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்ஃபுல்க்' எனும் சொல்லே ஒருமைக்கும் பன்மைக்கும் உரியதாகும். பொருள்: மரக்கலம், மரக்கலங்கள். (11:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முஜ்ராஹா' எனும் சொல்லுக்கு “அது ஓடுகின்றபோது' என்று பொருள். இச்சொல் “அஜ்ரைத்து' எனும் (வினைச்)சொல்லின் வேர்ச்சொல்லாகும். (இதிலுள்ள “முர்சாஹா' (நிறுத்தும்போது) எனும் சொல்) “அர்சைத்து' எனும் (வினைச்)சொல்லின் (வேர்ச்சொல்லாகும். இதன்) பொருள்: நிறுத்தினேன். (இதே சொல் இன்னோர் ஓதல் முறையில்) “மர்சாஹா' என்றும் ஓதப்படுகிறது. (இப்போது அச்சொல்) “ரசத் ஹிய' (அது அசையாமல் நின்றது) என்ற வினைச் சொல்லிலிருந்து பிரிந்ததாகும் “மஜ்ராஹா' என்பது “ஜரத் ஹிய' (அது ஓடியது) என்பதிலிருந்து திரிபுற்றதாகும். முஜ்ரீஹா, முர்சீஹா எனும் சொற்கள், செயப்பாட்டு வினைச்சொற்களாகும். “அர்ராசியாத்' எனும் சொல்லுக்கு “அசையாத' என்பது பொருள்.4 பாடம் : 4 “அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்து கூறுபவர்களைவிடக் கொடிய அக்கிரமக்காரர்கள் யார்? இத்தகையோர் தம் இறைவனின் திருமுன் கொண்டுவரப்படுவார்கள். அப்போது சாட்சியாளர்கள், “இவர் கள்தான் தம் இறைவன்மீது பொய்யைப் புனைந்துரைத்த வர்கள்” என்று கூறுவார்கள். எச்ச ரிக்கை! இத்தகைய அநீதியாளர் கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்” எனும் (11:18ஆவது) இறைவசனம் (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “அஷ்ஹாத்' (சாட்சியாளர்கள்) எனும் சொல்லின் ஒருமை “ஷாஹித்' என்பதாகும். இது (வாய்பாட்டில்) ஸாஹிப், அஸ்ஹாப் (தோழர்கள்) போன்றதாகும்.
4685. ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(அபூஅப்திர் ரஹ்மான்) இப்னு உமர் (ரலி) அவர்கள் (கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்தபோது ஒரு மனிதர் குறுக்கிட்டு, “அபூஅப்திர் ரஹ்மானே!' அல்லது “இப்னு உமரே!' (மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் இடையே நடைபெறும்) இரகசிய உரையாடல் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “இறைநம்பிக்கையாளர் “அவருடைய இறைவனுக்கருகில் கொண்டுவரப்படுவார்.' அல்லது “இறைநம்பிக்கையாளர் தம் இறைவனுக்கருகில் வருவார்.' அப்போது அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு மறைத்துவிடுவான்.

அப்போது அவர் தாம் செய்த பாவங்களை ஒப்புக்கொள்வார். (அவரிடத்தில் இறைவன்), “நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா” என்(று கேட்)பான். அவர், “(ஆம்) அறிவேன். என் இறைவா!” என்று இரண்டு முறை கூறுவார்.

அப்போது இறைவன், “இவற்றை யெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகின்றேன்” என்று கூறுவான். பிறகு அவரது நற்செயல்களின் பதிவேடு (அவரிடத்தில் வழங்கப்பட்டுச்) சுருட் டப்படும். “மற்றவர்கள்' அல்லது “இறைமறுப்பாளர்கள்' சாட்சியாளர்கள் முன்னிலையில் அழைக்கப்பட்டு, “இவர் கள்தான், தம் இறைவன்மீது பொய் யைப் புனைந்துரைத்தவர்கள்” என அறிவிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் என்றார்கள்.5

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4686. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا بُرَيْدُ بْنُ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ لَيُمْلِي لِلظَّالِمِ حَتَّى إِذَا أَخَذَهُ لَمْ يُفْلِتْهُ ". قَالَ ثُمَّ قَرَأَ {وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهْىَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ}
பாடம் : 5 “அநீதி இழைக்கும் ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும் போது அவனது பிடி இப்படித்தானிருக்கும். நிச்சயமாக அவனது பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதும் ஆகும்” எனும் (11:102ஆவது) இறைவசனம் (11:99ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அர்ரிஃப்த்' எனும் சொல்லுக்கு “உதவி' என்பது பொருள். “அல்மர்ஃபூத்' எனும் சொல்லுக்கு “உதவியாளர்' என்பது பொருள். (அதன் இறந்த கால வினைச்சொல்லான) “ரஃபத்துஹு' எனும் சொல்லுக்கு “அவனுக்கு நான் உதவி புரிந்தேன்' என்பது பொருள். (11:113ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தர்கனூ' எனும் சொல்லுக்கு “சாய்ந்து விடுதல்' என்பது பொருள். (11:116ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃப லவ் லா கான' எனும் சொற்றொட ருக்கு “இருந்திருக்க வேண்டாமா' என்று பொருள். “உத்ரிஃபூ' என்பதற்கு “(ஆசாபாசங்களைப் பின்பற்றி) அழிந்துபோயினர்' என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (11:106ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஸஃபீர்' எனும் சொல்லுக்கு “கடுமையான (கூச்சல்)' என்பது பொருள். “ஷஹீக்' எனும் சொல்லுக்கு “பலவீனமான குரல்' என்பது பொருள்.
4686. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அநீதியாளனுக்கு விட்டுக்கொடுத்து அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால் அவனை விடவேமாட்டான்” என்று கூறிவிட்டு, பிறகு,”அநீதி இழைக்கும் ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும்போது அவனது பிடி இப்படித்தானிருக்கும். நிச்சயமாக அவனது பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதும் ஆகும்” எனும் (11:102ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

அத்தியாயம் : 65
4687. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ ـ هُوَ ابْنُ زُرَيْعٍ ـ حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، أَصَابَ مِنَ امْرَأَةٍ قُبْلَةً، فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ فَأُنْزِلَتْ عَلَيْهِ {وَأَقِمِ الصَّلاَةَ طَرَفَىِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ}. قَالَ الرَّجُلُ أَلِيَ هَذِهِ قَالَ " لِمَنْ عَمِلَ بِهَا مِنْ أُمَّتِي ".
பாடம் : 6 “பகலின் இரு முனைகளிலும் இரவின் சில பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுங்கள். நிச்சய மாக, நன்மைகள் தீமைகளைக் களைந்துவிடுகின்றன. (அல்லாஹ்வை) நினைவுகூர்கின்றவர்களுக்கு இது ஒரு நினைவூட்டல் ஆகும்” எனும் (11:114ஆவது) இறைவசனம் (இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “ஸுலஃப்' எனும் சொல்லுக்கு “ஒரு நேரத்திற்குப்பின் ஒரு நேரம்' என்று பொருள். “ஸுலஃப்' எனும் சொல்லிலிருந்துதான் “அல்முஸ்தலிஃபா' (இரவில் சிறிது நேரம் மக்கள் கூடுமிடம்) என்ற பெயர் (மக்காவிலுள்ள ஓரிடத்திற்கு) வந்தது. “அஸ்ஸுலஃப்' எனும் இச்சொல்லுக்கு “ஒரு நிலைக்குப்பின் ஒரு நிலை' என்ற பொருளும் உண்டு. (38:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஸுல்ஃபா' என்பது “நெருக்கம்' என்ற பொருள் கொண்ட வேர்ச்சொல்லாகும். “இஸ்தலஃபூ' எனும் சொல்லுக்கு “ஒன்றுகூடினர்' என்பது பொருள். (26:64ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) “அஸ்லஃப்னா' எனும் சொல்லுக்கு “நாம் ஒன்றுகூட்டினோம்' என்பது பொருள்.
4687. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (அந்நியப்) பெண் ஒருவரை முத்தமிட்டுவிட்டார். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு), இந்த விவரத்தைச் சொன்னார்.

அப்போது “பகலின் இரு முனைகளிலும் இரவின் சில பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுங்கள். நிச்சயமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்துவிடுகின்றன. (அல்லாஹ்வை) நினைவுகூர்கின்றவர்களுக்கு இது ஒரு நினைவூட்டல் ஆகும்” எனும் (11:114ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

அந்த மனிதர், “இது எனக்கு மட்டுமா? (அல்லது அனைவருக்குமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் இதன்படி செயல்படும் அனைவருக்கும்தான்” என்று பதிலளித்தார்கள்.6

அத்தியாயம் : 65
4688. وَقَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْكَرِيمُ بْنُ الْكَرِيمِ بْنِ الْكَرِيمِ بْنِ الْكَرِيمِ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ ".
பாடம்: 12. “யூசுஃப்' அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (12:31ஆவது வசனத்தின் மூலத்தில் ஓர் ஓதல்முறைப்படி இடம்பெற்றுள்ள) “முத்கஅன்' எனும் சொல்லுக்கு “நாரத்தை பழம்' (அல்உத்ருஜ்ஜு) என்று பொருள். இதை “ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான்' (ரஹ்) அவர்களிடமிருந்து “ஃபுளைல் பின் இயாள்' (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். மேலும் (பெயர் குறிப்பிடாத) ஒருவரிடமிருந்து சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள். ஃபுளைல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அபிசீனிய மொழியில் நாரத்தைப் பழத்திற்கு “முத்கன்' எனப்படும். கத்தியால் வெட்டப்(பட்டு உண்ணப்)படும் எல்லாப் பொருள்களுக்கும் “முத்கன்' எனறு சொல்லப்படும். கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (12:68ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ல ஃதூ இல்ம்' எனும் சொற்றொடருக்கு “அறிந்தபடி செயலாற்றுபவர்' என்பது பொருள். சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (12:72ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஸுவாஉ' எனும் சொல், (மேற்)பாகங்கள் இணைந்த (குறுகலான) பாரசீகர்களின் மரக்கால் அளவையைக் குறிக்கும்; அரபியரல்லாதோர் அதை (நீர்) அருந்துவதற்குப் பயன்படுத்திவந்தனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (12:94ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “துஃபன்னிதூன்' எனும் சொல்லுக்கு “என்னை நீங்கள் முட்டாளாக்கிவிடுவீர்கள்' என்பது பொருள். மற்றவர்கள் கூறுகின்றனர்: (12:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃகயாபத்' எனும் சொல் பொதுவாக, உனது கண்ணைவிட்டு ஒன்றை மறைக்கின்ற யாவற்றையும் குறிக்கும். சுற்றுச் சுவர் எழுப்பப்படாத (பாழுங்)கிணறு “ஜுப்பு' எனப்படும். (12:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வமா அன்த்த பி முஃமினின் லனா' எனும் வாக்கியத்திற்கு, “எங்களை நீங்கள் நம்பவேமாட்டீர்கள்” என்பது பொருள். (12:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஷுத்தஹு' எனும் சொல், ஒருவருக்கு (முதுமையின்) பலவீனம் தொடங்கும் முன்புள்ள பருவத்தைக் குறிக்கும். “பலஃக அஷுத்தஹு' (அவன் தன் வாலிபத்தை அடைந்தான்), “பலஃகூ அஷுத்தஹும்' (அவர்கள் தம் வாலிபத்தை அடைந்தனர்) என்று (ஒருமை, பன்மை இரண்டுக்குமே “அஷுத்து' என்றே) கூறப்படுகிறது. “அஷுத்து' எனும் சொல்லின் ஒருமை “ஷத்துன்' என்றும் சிலர் கூறுவர். (12:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முத்தகஅன்' எனும் சொல், “உண்ண, பருக, உரையாட நீ எதன்மீது சாய்ந்து அமர்ந்தாயோ அ(ந்தப் பொருள்)தனைக் குறிக்கும். “(“முத்தகஅன்' என்பதற்கு) “நாரத்தைப் பழம்' என்று பொருள் கொள்பவர்களின் கருத்துப் பொருத்தமற்றதாகும். அரபியரின் மொழி வழக்கில் “நாரத்தைப் பழம்' எனும் பொருளில் இச்சொல் வரவேயில்லை. “முத்தகஉ' என்பதற்கு “சாய்ந்துகொள்ளப் பயன்படும் திண்டு' என்பதே பொருள் என நிரூபிக்கப்பட்டவுடன், (மாற்றுப் பொருள் கூறுவோர்) “எலுமிச்சை' என்பதைக் குறிப்பது “முத்க்' எனும் சொல்லே என்று கூறி, அதைவிட மோசமானதொரு பொரு ளுக்கு ஓடுகிறார்கள். ஏனெனில் “முத்க்' எனும் சொல் பெண்குறியின் ஓரத்தையே குறிக்கும். இதனாலேயே பெண்ணை “மத்கா' (நுனித்தோல் அகற்றப்படாதவள்) என்றும், அவளுடைய மகனை “இப்னுல் மத்கா' என்றும் கூறுவர். அப்படி ஒருகால் அங்கே (12:31ஆவது வசனம் கூறுகின்ற நிகழ்ச்சியில்) நாரத்தைப் பழம் இருந்திருப்பின், அது சாய்வுத் திண்டு (வைக்கப்பட்டது)க்குப் பிறகே இருந்திருக்கும். (12:30ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “ஷஃகஃபஹா' எனும் சொல்லுக்கு, “அவளது இதயத்திரைவரை காதல் வந்துவிட்டது” என்பது பொருள். (இதே சாயலில் உள்ள) “ஷஅஃபஹா' எனும் சொல்லுக்கு, “அவளது இதயத்தைக் காதல் எரித்துவிட்டது' என்று பொருள். (12:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஸ்பு' எனும் சொல்லுக்கு “சாய்ந்து விடுவேன்' என்பது பொருள். (12:44ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அள்ஃகாஸு அஹ்லாம்' எனும் சொற்றொடருக்கு “விளக்கம் கூற முடியாத (வீண்) கனவுகள்' என்பது பொருள். இதன் ஒருமை “ளிஃக்ஸ்' என்பதாகும். (எனினும்,) “ஒரு பிடி (புல்) கற்றையை கையில் எடுங்கள்” எனும் (38:44ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள “ளிஃக்ஸ்' எனும் சொல் இதன் ஒருமையன்று. “ஒரு கைப்பிடி புல் போன்றது' என்பதே இதன் பொருளாகும். (12:65ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “நமீரு' (நாம் உணவு தானியங்கள் வாங்கி வருவோம்) எனும் (வினைச்)சொல், “மீரத்' எனும் வேர்ச்சொல்லில் இருந்து பிறந்ததாகும். “நஸ்தாது கைல பஈர்' எனும் வாக்கியத்திற்கு “ஓர் ஒட்டகம் சுமக்கும் அளவுக்குக் கூடுதலாக தானியம் பெற்று வருவோம்' என்று பொருள். (12:69ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஆவா இலைஹி' எனும் வாக்கியத்திற்கு “தம்முடன் சேர்த்துக்கொண்டார்' என்பது பொருள். (12:70ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஸ்ஸிக்காயா' எனும் சொல்லுக்கு “அளவைப் படி' என்று பொருள். (12:80ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஸ்தய்அஸூ' எனும் சொல்லுக்கு “யஇஸூ' (அவர்கள் நம்பிக்கையிழந்துவிட்டனர்) என்று பொருள். (12:87ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ லா தைஅஸூ மின் ரவ்ஹில்லாஹ்' எனும் வாக்கியத்திற்கு “அல்லாஹ்வின் அருளில் நீங்கள் நம்பிக்கையிழந்துவிடாதீர்கள்' என்று பொருள். (12:80ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கலஸூ நஜிய்யா' எனும் வாக்கியத்திற்கு “அவர்கள் இரகசியமாக ஒப்புக்கொண்டனர்' என்பது பொருள். (“நஜிய்யு' எனும் சொல்லின்) பன்மை: “அன்ஜியா' என்பதாகும். (அதன் எதிர்கால வினைச்சொல்:) “யத்தனாஜூன' என்பதாகும். ஒருமை, இருமை, பன்மை ஆகிய அனைத்திலும் “நஜிய்யு' என்பர். பன்மையில் “அன்ஜியா' என்றும் கூறுவர். (12:85ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தஃப்தஉ (தஃத்குரு)' எனும் சொல்லுக்கு “எப்போதும் (நினைத்துக்கொண்டே) இருப்பீர்' என்று பொருள். “ஹரள்' எனும் (வேர்ச்சொல்லுக்கு “முஹ்ரள்' (உடல் இளைத்துப்போனவர்) எனும் (செயப்பாட்டு வினை எச்சத்தின்) பொருளாகும். “கவலை உங்களை உருக்கிவிடும்' என இதற்குப் பொருள் விரியும். (12:87ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தஹஸ்ஸஸூ' எனும் சொல்லுக்கு “தகவல் அறிந்து வாருங்கள்' என்று பொருள். (12:88ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முஸ்ஜாத்' எனும் சொல்லுக்கு “அற்பமானது' என்பது பொருள். (12:107ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃகாஷியா' எனும் சொல்லுக்கு “நன்கு சூழ்ந்துகொள்ளக்கூடியது' என்று பொருள். பாடம் : 1 “இதற்கு முன்னர் உம்முடைய மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகியோர்மீது தன் அருட்கொடையை அவன் நிறைவு செய்ததைப் போன்று உம்மீதும், யஅகூபின் குடும்பத்தார்மீதும் நிறைவுசெய்வான்” எனும் (12:6ஆவது) வசனத்தொடர்
4688. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வர்தான் கண்ணியத்திற்குரியவர். அவர், இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக் (அலை) அவர்களின் புதல்வரான யஅகூப் (அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப் (அலை) அவர்களேயாவார்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2

அத்தியாயம் : 65
4689. حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَىُّ النَّاسِ أَكْرَمُ قَالَ " أَكْرَمُهُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاهُمْ ". قَالُوا لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ. قَالَ " فَأَكْرَمُ النَّاسِ يُوسُفُ نَبِيُّ اللَّهِ ابْنُ نَبِيِّ اللَّهِ ابْنِ نَبِيِّ اللَّهِ ابْنِ خَلِيلِ اللَّهِ ". قَالُوا لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ. قَالَ " فَعَنْ مَعَادِنِ الْعَرَبِ تَسْأَلُونِي ". قَالُوا نَعَمْ. قَالَ " فَخِيَارُكُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُكُمْ فِي الإِسْلاَمِ إِذَا فَقِهُوا ". تَابَعَهُ أَبُو أُسَامَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ.
பாடம் : 2 “திண்ணமாக, (நம் தூதர்) யூசுஃப் மற்றும் அவருடைய சகோதரர் களி(ன் வரலாற்றி)ல் (அது குறித்து) வினவுகின்றவர்களுக்குப் படிப் பினைகள் பல உள்ளன” எனும் (12:7ஆவது) இறைவசனம்
4689. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம், “மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்விடம் மக்களிலேயே கண்ணியத்திற்குரியவர் அல்லாஹ்வுக்கு அதிகமாக அஞ்சுபவர்தான்” என்று பதிலளித்தார்கள். அதற்கு மக்கள், “நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால், அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய புதல்வரான அல்லாஹ்வின் நபி (இஸ்ஹாக்) உடைய புதல்வரான அல்லாஹ்வின் நபி (யஅகூப்) உடைய புதல்வரான அல்லாஹ்வின் நபி யூசுஃப் அவர்கள்தான்” என்று பதிலளித்தார்கள்.

மக்கள், “இதைப் பற்றியும் நாங்கள் தங்களிடம் கேட்கவில்லை” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள், “அரபியரின் மூலகங்கள் (எனப்படும் அரபியரின் பரம்பரைகள்) குறித்தா என்னிடம் கேட்கிறீர்கள்? என்றார்கள். மக்கள், “ஆம்' என்றனர். நபி (ஸல்) அவர்கள், “அறியாமைக் காலத்தில் உங்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள்தான் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் சிறந்தவர் களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றுக்கொண்டால்” என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.3

அத்தியாயம் : 65
4690. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ،. قَالَ وَحَدَّثَنَا الْحَجَّاجُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ النُّمَيْرِيُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ يَزِيدَ الأَيْلِيُّ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، وَسَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، وَعَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ، وَعُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، عَنْ حَدِيثِ، عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ مَا قَالُوا فَبَرَّأَهَا اللَّهُ، كُلٌّ حَدَّثَنِي طَائِفَةً مِنَ الْحَدِيثِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنْ كُنْتِ بَرِيئَةً فَسَيُبَرِّئُكِ اللَّهُ، وَإِنْ كُنْتِ أَلْمَمْتِ بِذَنْبٍ فَاسْتَغْفِرِي اللَّهَ وَتُوبِي إِلَيْهِ ". قُلْتُ إِنِّي وَاللَّهِ لاَ أَجِدُ مَثَلاً إِلاَّ أَبَا يُوسُفَ {فَصَبْرٌ جَمِيلٌ وَاللَّهُ الْمُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ} وَأَنْزَلَ اللَّهُ {إِنَّ الَّذِينَ جَاءُوا بِالإِفْكِ} الْعَشْرَ الآيَاتِ.
பாடம் 3 “இல்லை; உங்கள் மனம் ஒரு (மாபாவச்) செயலை(க்கூட) உங்களுக்குக் கவர்ச்சியாக்கிவிட்டது. ஆகவே, அழகான பொறுமைதான் (எனக்கு நன்று)” எனும் (12:18ஆவது) வசனத்தொடர் (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “சவ்வலத்' எனும் சொல்லுக்கு “அலங்கரித்துக் காட்டியது' என்று பொருள்.
4690. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள்மீது அவதூறு கற்பித்தவர்கள், தாம் சொன்னதைச் சொல்லிக்கொண்டிருந்தபோது ஆயிஷா (ரலி) குற்றமற்றவர்கள் என்று அல்லாஹ் அறிவித்ததைப் பற்றி நான், உர்வா பின் அஸ்ஸுபைர், சயீத் பின் அல்முசய்யப், அல்கமா பின் வக்காஸ், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோரிட மிருந்து செவியுற்றுள்ளேன். இவர்களில் ஒவ்வொருவரும் அந்தச் சம்பவத்தின் ஒரு பகுதியை எனக்கு எடுத்துரைத்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா (ரலி) அவர்களிடம்), “நீ நிரபராதி என்றால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்ற மற்றவள் என்று அறிவித்துவிடுவான். நீ குற்றமேதும் புரிந்திருந்தால் அல்லாஹ் விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு” என்று சொன்னார்கள்.

அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! யூசுஃப் (அலை) அவர்களுடைய தந்தையை விட(ச் சிறந்த) முன்னுதாரணம் எனக்குக் கிடைக்கப்போவதில்லை. எனவே, அழகான பொறுமைதான் (எனக்கு நன்று.) நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் உதவி கோர வேண்டும்” (12:18) என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், “இந்த அவதூறைப் புனைந்து கொண்டுவந்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான்...” என்று (தொடங்கும் 24:11 முதல் 20 வரையுள்ள) பத்து வசனங்களை அருளினான்.4

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 65
4691. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ حُصَيْنٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ حَدَّثَنِي مَسْرُوقُ بْنُ الأَجْدَعِ، قَالَ حَدَّثَتْنِي أُمُّ رُومَانَ، وَهْىَ أُمُّ عَائِشَةَ قَالَتْ بَيْنَا أَنَا وَعَائِشَةُ أَخَذَتْهَا الْحُمَّى، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَعَلَّ فِي حَدِيثٍ تُحُدِّثَ ". قَالَتْ نَعَمْ وَقَعَدَتْ عَائِشَةُ قَالَتْ مَثَلِي وَمَثَلُكُمْ كَيَعْقُوبَ وَبَنِيهِ وَاللَّهُ الْمُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ.
பாடம் 3 “இல்லை; உங்கள் மனம் ஒரு (மாபாவச்) செயலை(க்கூட) உங்களுக்குக் கவர்ச்சியாக்கிவிட்டது. ஆகவே, அழகான பொறுமைதான் (எனக்கு நன்று)” எனும் (12:18ஆவது) வசனத்தொடர் (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “சவ்வலத்' எனும் சொல்லுக்கு “அலங்கரித்துக் காட்டியது' என்று பொருள்.
4691. ஆயிஷா (ரலி) அவர்களின் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் ஆயிஷாவும் வீட்டில் (அமர்ந்து கொண்டு) இருந்தபோது ஆயிஷாவுக்கு காய்ச்சல் கண்டுவிட்டது. (இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், “(அவரைப் பற்றிப்) பேசப்பட்டுவரும் பேச்சின் காரணத்தால் (காய்ச்சல் வந்து) இருக்கலாம்!” என்று கூறினார்கள். நான், “ஆம்! (அப்படித்தான்)” என்றேன்.

ஆயிஷா எழுந்து உட்கார்ந்து கொண்டு, எனக்கும் உங்களுக்கும் உரிய முன்னுதாரணம் யஅகூப் (அலை) அவர்களும் அவர்களுடைய பிள்ளை களும் ஆவர். இல்லை; உங்கள் மனம் ஒரு (பெரிய) காரியத்தை உங்களுக்குக் கவர்ச்சியாக்கிவிட்டது. எனவே, அழகான பொறுமையே (எனக்கு நன்று.) நீங்கள் புனைந்துரைப்பவற்றிலிருந்து அல்லாஹ்விடமே உதவி கோர வேண்டும்” (12:18) என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 65
4692. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ هَيْتَ لَكَ قَالَ وَإِنَّمَا نَقْرَؤُهَا كَمَا عُلِّمْنَاهَا {مَثْوَاهُ} مُقَامُهُ {أَلْفَيَا} وَجَدَا {أَلْفَوْا آبَاءَهُمْ} {أَلْفَيْنَا} وَعَنِ ابْنِ مَسْعُودٍ {بَلْ عَجِبْتَ وَيَسْخَرُونَ}
பாடம் : 4 “அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ அந்தப் பெண் தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அவரிடம் கோரி, வாயில்களையெல்லாம் அடைத் துத் தாழிட்டுவிட்டு, “வாரும்' என்று அழைத்தாள்” எனும் (12:23ஆவது) வசனத்தொடர் இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹய்த்த லக்க' என்பதற்கு “ஹவ்ரானியா' (ஓரான்டீஸ்) எனும் (சிரியா) மொழியில் “இங்கே வா!' என்று பொருள். இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்களும், இச்சொல்லின் பொருள் “வா!' என்பதுதான் என்று கூறுகிறார்கள்.
4692. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(12:23ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) “காலத் ஹைத்த லக்க' எனும் தொடரை, அது நமக்கு எப்படிக் கற்றுத் தரப்பட்டுள்ளதோ அப்படியே நாம் ஓதுகிறோம் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(12:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மஸ்வாஹு' எனும் சொல்லுக்கு “இவரைத் தங்கவைத்தல்' என்பது பொருள்.

(12:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்ஃபயா' எனும் சொல்லுக்கு “அவர்கள் இருவரும் கண்டனர்' என்று பொருள்.

(37:69ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள “அல்ஃபவ் ஆபாஅஹும்' என்பதற்கு “அவர்கள் தம் மூதாதையரைக் கண்டார்கள்' என்று பொருள்.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், (37:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “பல் அஜிப்த்த வ யஸ்கரூன்' என்பதை) “பல் அஜிப்த்து வ யஸ்கரூன்' (நான் ஆச்சரியப்படுகின்றேன்; அவர்களோ பரிகசிக்கின்றனர்) என்று ஓதினார்கள்.


அத்தியாயம் : 65
4693. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ قُرَيْشًا لَمَّا أَبْطَئُوا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالإِسْلاَمِ قَالَ " اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِسَبْعٍ كَسَبْعِ يُوسُفَ " فَأَصَابَتْهُمْ سَنَةٌ حَصَّتْ كُلَّ شَىْءٍ حَتَّى أَكَلُوا الْعِظَامَ حَتَّى جَعَلَ الرَّجُلُ يَنْظُرُ إِلَى السَّمَاءِ فَيَرَى بَيْنَهُ وَبَيْنَهَا مِثْلَ الدُّخَانِ قَالَ اللَّهُ {فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ} قَالَ اللَّهُ {إِنَّا كَاشِفُو الْعَذَابِ قَلِيلاً إِنَّكُمْ عَائِدُونَ} أَفَيُكْشَفُ عَنْهُمُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ، وَقَدْ مَضَى الدُّخَانُ وَمَضَتِ الْبَطْشَةُ.
பாடம் : 4 “அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ அந்தப் பெண் தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அவரிடம் கோரி, வாயில்களையெல்லாம் அடைத் துத் தாழிட்டுவிட்டு, “வாரும்' என்று அழைத்தாள்” எனும் (12:23ஆவது) வசனத்தொடர் இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹய்த்த லக்க' என்பதற்கு “ஹவ்ரானியா' (ஓரான்டீஸ்) எனும் (சிரியா) மொழியில் “இங்கே வா!' என்று பொருள். இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்களும், இச்சொல்லின் பொருள் “வா!' என்பதுதான் என்று கூறுகிறார்கள்.
4693. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடமிருந்து குறைஷியர் இஸ்லாத்தை ஏற்கக் காலம் தாழ்த்தியபோது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் (காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட) ஏழாண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏற்படுத்தி என்னை இவர்களிடமிருந்து பாதுகாத்திடுவாயாக!” என்று (அவர்களுக்கெதிராகப்) பிரார்த்தித்தார்கள். அவ்வாறே அவர்களுக்குப் பஞ்சம் வந்து (வளங்கள்) அனைத் தையும் அழித்துவிட்டது.

எந்த அளவுக்கென்றால், அவர்கள் எலும்புகளைச் சாப்பிட்டனர்; (கடும் பசி, பட்டினியால் கண் பஞ்சடைந்து பார்வை மங்கி அவர்களில்) ஒருவர் வானத்தை நோக்கினால், அவர் தமக்கும் வானத்திற்குமிடையே புகை போன்ற ஒன்றையே காண்பார்.

அல்லாஹ் கூறுகின்றான்: “இனி ஒரு நாளை எதிர்பார்த்திருப்பீராக! அந்நாளில் வானம் வெளிப்படையான புகையைக் கொண்டுவரும்” (44:10).

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: “நாம் சற்று வேதனையை அகற்றி விடுகின்றோம். (ஆனால், அப்போதும்) நீங்கள் (பழைய நிலைக்கே) திரும்புகிறீர்கள் (44:15). இந்நிலையில், மறுமை நாளில் இறைமறுப்பாளர்களைவிட்டு வேதனை நீக்கப்படுமா என்ன? (நிச்சயம் நீக்கப்படப் போவதில்லை.)

ஆக, (கடுமையான பசி, பட்டினி ஏற்பட்டதன் மூலம்) அந்தப் புகையும் வந்துவிட்டது; பத்ர் போரில் (இறைவனின்) தண்டனையும் வந்துவிட்டது.5

அத்தியாயம் : 65
4694. حَدَّثَنَا سَعِيدُ بْنُ تَلِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ بَكْرِ بْنِ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَرْحَمُ اللَّهُ لُوطًا، لَقَدْ كَانَ يَأْوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ، وَلَوْ لَبِثْتُ فِي السِّجْنِ مَا لَبِثَ يُوسُفُ لأَجَبْتُ الدَّاعِيَ، وَنَحْنُ أَحَقُّ مِنْ إِبْرَاهِيمَ إِذْ قَالَ لَهُ {أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي}"
பாடம் : 5 “அரசர், அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார். (அரசரின்) தூதுவர் யூசுஃபிடம் வந்தபோது, யூசுஃப் அவரிடம், “நீர் உம் எசமானிடம் திரும்பிச் சென்று, தம் கரங்களை அறுத்துக்கொண்ட பெண்களின் நிலை என்னவாயிற்று? என்று கேட்டு வாரும். நிச்சய மாக, என் இறைவன் அப்பெண்களின் சூழ்ச்சியை நன்கு அறிந்த வனாவான்' என்று கூறினார். பிறகு அரசர் அப்பெண்களிடம், “நீங்கள் யூசுஃபை உங்கள் ஆசைக்கு இணங்கவைக்க முயன்றபோது உங்களுக்கு ஏற்பட்ட அனு பவம் என்ன?' என்று வினவினார். அதற்கு அப்பெண்கள், “அல்லாஹ் தூய்மையானவன்! நாங்கள் அவரிடம் எந்தத் தீய அம்சத்தையும் காணவில்லை' என்று கூறினர்” எனும் (12:50, 51 ஆகிய) வசனங்கள் (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹாஷ' மற்றும் “ஹாஷா' ஆகிய சொற்களுக்கு “தூயவன்' என்றும் “தவிர' என்றும் (அரபி மொழி வழக்கில்) பொருள். “ஹஸ்ஹஸ' எனும் சொல்லுக்கு “தெளிவாகிவிட்டது' என்று பொருள்.
4694. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைத்தூதர்) “லூத்' (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டு வானாக! அன்னார் வலுவான ஓர் ஆதர வாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் கழித்த காலம் அளவுக்கு நான் சிறையில் காலம் கழித்திருந்தால் (என்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்ய) அழைப்பு விடுத்தவரை ஏற்று (விடுதலை பெற்று)க்கொண்டிருப்பேன். இப்ராஹீம் (அலை) அவர்களைவிட நாமே (இறைவனின் படைப்பாற்றலைக் கண்கூடாகக் கண்டு உறுதி பெற) அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம்.

அவர்களிடம் அல்லாஹ், “நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?” என்று கேட்டபோது அவர்கள், “ஆம்; (நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது.) ஆயினும், என் நெஞ்சம் நிம்மதியடைவதற்காகத்தான் (இறந்துபோனதை உயிர்ப்பித்துக் காட்டும்படி) கேட்டேன்” என்று பதிலளித்தார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4695. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَهُ وَهُوَ يَسْأَلُهَا عَنْ قَوْلِ اللَّهِ تَعَالَى {حَتَّى إِذَا اسْتَيْأَسَ الرُّسُلُ} قَالَ قُلْتُ أَكُذِبُوا أَمْ كُذِّبُوا قَالَتْ عَائِشَةُ كُذِّبُوا. قُلْتُ فَقَدِ اسْتَيْقَنُوا أَنَّ قَوْمَهُمْ كَذَّبُوهُمْ فَمَا هُوَ بِالظَّنِّ قَالَتْ أَجَلْ لَعَمْرِي لَقَدِ اسْتَيْقَنُوا بِذَلِكَ. فَقُلْتُ لَهَا وَظَنُّوا أَنَّهُمْ قَدْ كُذِبُوا قَالَتْ مَعَاذَ اللَّهِ لَمْ تَكُنِ الرُّسُلُ تَظُنُّ ذَلِكَ بِرَبِّهَا. قُلْتُ فَمَا هَذِهِ الآيَةُ. قَالَتْ هُمْ أَتْبَاعُ الرُّسُلِ الَّذِينَ آمَنُوا بِرَبِّهِمْ وَصَدَّقُوهُمْ، فَطَالَ عَلَيْهِمُ الْبَلاَءُ، وَاسْتَأْخَرَ عَنْهُمُ النَّصْرُ حَتَّى اسْتَيْأَسَ الرُّسُلُ مِمَّنْ كَذَّبَهُمْ مِنْ قَوْمِهِمْ وَظَنَّتِ الرُّسُلُ أَنَّ أَتْبَاعَهُمْ قَدْ كَذَّبُوهُمْ جَاءَهُمْ نَصْرُ اللَّهِ عِنْدَ ذَلِكَ.
பாடம் : 6 “(முந்தைய இறைத்தூதர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டது. அவர்கள் நீண்ட காலம் மக்களுக்கு நல்லுரை புகன்றுவந்தார்கள். ஆனால், மக்கள் அதைக் கேட்கவில்லை) எதுவரையெனில், (மக்கள் இனி நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று) இறைத்தூதர்கள் நிராசையடைந்துவிட்டார்கள்; மேலும், தங்களிடம் பொய்தான் சொல்லப் பட்டது என்று மக்களும் கருதலானார்கள். அப்பொழுது, நம் உதவி அவர்களை வந்தடைந்தது” எனும் (12:110ஆவது) வசனத்தொடர்
4695. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “(நிராகரிக்கும் மக்கள் இனி நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று) இறைத்தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும், தங்களிடம் (இறைஉதவி வரும் என்று) பொய்யுரைக்கப்பட்டது என (நம்பிக்கை கொண்ட மக்களும்கூட)க்கருதலானார்கள். இந்நிலையில் நமது உதவி அவர்களை வந்தடைந்தது” என்று அல்லாஹ் கூறுகின்றான் (12:110).

இவ்வசனத்தின் மூலத்தில் (“பொய் யுரைக்கப்பட்டது என்பதைக் குறிப்ப தற்குரிய சொல்லை) “குஃத்திபூ' (தாம் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டோம் என்று இறைத்தூதர்கள் கருதலானார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? அல்லது “குஃதிபூ' (மக்கள் தங்களிடம் பொய்யுரைக்கப்பட்டது எனக் கருதலானார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? என்று நான் கேட்டேன்.

“குஃத்திபூ (தாம் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டோம் என்று இறைத்தூதர்கள் கருதலானார்கள்) என்றுதான் வாசிக்க வேண்டுமென ஆயிஷா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

உடனே, “தங்களுடைய சமுதாயத்தார் தங்களைப் பொய்ப்பித்திருக்கிறார் கள் என்று இறைத்தூதர்கள் சந்தேகிக்கவில்லையே! உறுதியாக நம்பித்தானே இருந்தார்கள். (ஆனால், “ழன்னூ- நபிமார்கள் சந்தேகித்தார்கள்' என்றுதானே குர்ஆனின் இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ளது. அவ்வாறிருக்க, நீங்கள் கூறுகின்றவாறு எப்படிப் பொருள் கொள்ள முடியும்?)” என்று நான் கேட்டேன்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “ஆம்! என் ஆயுளின் (இரட்சகன்) மீதாணையாக! அதை அவர்கள் உறுதியாக நம்பியே இருந்தார்கள். (எனவே, இந்த வசனத்தில், “ழன்னூ' என்பதற்கு “நபிமார்கள் உறுதியாக நம்பினார்கள்' என்றே பொருள் கொள்ள வேண்டும்; “சந்தேகித்தார்கள்' என்று பொருள் கொள்ளக் கூடாது)” என்று பதிலளித்தார்கள்.

(தொடர்ந்து) அவர்களிடம் நான், “ “கத் குஃதிபூ' (தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டது என்று நபிமார்கள் கருதலானார்கள்) என்று இருக்கலாமோ!” என்று கேட்டேன்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் காப்பற்றட்டும்! நபிமார்கள் தங்கள் இறைவனைப் பற்றி அப்படி (தங்களிடம் இறைவன் பொய் சொல்லிவிட்டதாக) நினைக்கவில்லை” என்றார்கள்.

உடனே நான், “இந்த வசனம் (கூறும் பொருள்)தான் என்ன?” என்று கேட்டேன். ஆயிஷா (ரலி) அவர்கள், “இறைத் தூதர்களைப் பின்பற்றிய சமுதாயத்தார் தங்கள் இறைவனை நம்பி, இறைத் தூதர்களை உண்மையாளர்கள் என்று ஏற்று, அதன் பிறகு (தாம் ஏற்றுக்கொண்ட மார்க்கத்தின் பாதையில் நேரிட்ட) துன்பங்கள் தொடர்ந்து நீடித்துக்கொண்டே போய், இறைஉதவியும் தள்ளிப் போய்க்கொண்டிருந்த அந்த(ச் சூழ்) நிலையில்தான், அந்த இறைத்தூதர்கள், தம் சமுதாயத்தாரில் தமது செய்தியை பொய்யென்று கருதி, தம்மை ஏற்காமலிருந்துவிட்டவர்களைக் குறித்து நிராசையடைந்துவிட்டனர்.

மேலும், தம்மை ஏற்றுப் பின்பற்றியவர்கள்கூட (இறைஉதவி வரத் தாமதமான தாலும், துன்பமும் துயரமும் நீண்டுகொண்டே சென்ற காரணத்தாலும்) நமது செய்தியைப் பொய்யென்று கருதுகின்றார்கள் என்றும் அந்த இறைத்தூதர்கள் எண்ணலானார்கள். அப்போதுதான் நமது உதவி அவர்களை வந்தடைந்தது” (என்பதே அந்த வசனத்தின் பொருள்) எனப் பதிலளித்தார்கள்.7


அத்தியாயம் : 65
4696. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، فَقُلْتُ لَعَلَّهَا {كُذِبُوا} مُخَفَّفَةً. قَالَتْ مَعَاذَ اللَّهِ نَحْوَهُ.
பாடம் : 6 “(முந்தைய இறைத்தூதர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டது. அவர்கள் நீண்ட காலம் மக்களுக்கு நல்லுரை புகன்றுவந்தார்கள். ஆனால், மக்கள் அதைக் கேட்கவில்லை) எதுவரையெனில், (மக்கள் இனி நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று) இறைத்தூதர்கள் நிராசையடைந்துவிட்டார்கள்; மேலும், தங்களிடம் பொய்தான் சொல்லப் பட்டது என்று மக்களும் கருதலானார்கள். அப்பொழுது, நம் உதவி அவர்களை வந்தடைந்தது” எனும் (12:110ஆவது) வசனத்தொடர்
4696. உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (ஆயிஷா (ரலி) அவர்களிடம்), “அது அழுத்தல் குறி இல்லாமல் “குஃதிபூ' என்றிருக்கலாம் அல்லவா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் காப்பாற்றட்டும்' என்று மேற்கண்டபடி சொன்னார்கள்.

அத்தியாயம் : 65
4697. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مَعْنٌ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَفَاتِيحُ الْغَيْبِ خَمْسٌ لاَ يَعْلَمُهَا إِلاَّ اللَّهُ لاَ يَعْلَمُ مَا فِي غَدٍ إِلاَّ اللَّهُ، وَلاَ يَعْلَمُ مَا تَغِيضُ الأَرْحَامُ إِلاَّ اللَّهُ وَلاَ يَعْلَمُ مَتَى يَأْتِي الْمَطَرُ أَحَدٌ إِلاَّ اللَّهُ، وَلاَ تَدْرِي نَفْسٌ بِأَىِّ أَرْضٍ تَمُوتُ، وَلاَ يَعْلَمُ مَتَى تَقُومُ السَّاعَةُ إِلاَّ اللَّهُ ".
பாடம்: 13. “அர்ரஅத்' அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) “தண்ணீரை நோக்கித் தன் இரு கரங்களையும் நீட்டிக்கொண்டிருப்பவனைப் போன்று” எனும் (13:14ஆவது) வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (விளக்கம்) கூறுகிறார்கள்: அல்லாஹ்வுடன் அவன் அல்லாத (பொய்யான) தெய்வங்களை வழிபடுகின்ற இணைவைப்பாளரின் நிலை, தாகத்திலுள்ள ஒருவர் தண்ணீரைக் கற்பனை செய்துகொண்டு அதை அடைய விரும்பி, தொலைவிலிருந்து தன் கைகளை நீட்டிக்கொண்டிருப்பதைப் போன்றதாகும். ஆனால், அவரால் (அதை அடைய) முடியாது. மற்றவர்கள் கூறுகின்றனர்: (13:2ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “ஸக்கர' எனும் சொல்லுக்கு “தனக்குப் பணியவைத்துள்ளான்' என்று பொருள். (13:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முத்தஜாவிராத்' எனும் சொல்லுக்கு “அருகருகே அமைந்துள்ளவை' என்பது பொருள். (13:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மஸுலாத்' (முன்னுதாரணங்கள்) எனும் சொல்லின் ஒருமை “மஸுலா' என்பதாகும். அதற்கு “ஒப்பானவை', “நிகரானவை' என்று பொருள். அல்லாஹ் கூறுகின்றான்: தங்களுக்குமுன் சென்றவர்களுக்கு வந்த (வேதனை நிறைந்த) நாட்கள் போன்றதைத் தவிர வேறு எதை இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? (10:102).2 (13:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “பி மிக்தார்' எனும் சொல்லுக்கு “காலக் கெடு' என்பது பொருள். (13:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முஅக்கிபாத்' (அடுத்தடுத்து வரக்கூடியவர்கள்) எனும் சொல்லானது, (மனிதப்) பாதுகாப்பில் ஈடுபடும் வானவர்களைக் குறிக்கும்; இவர்கள் ஒருவர்பின் ஒருவராக (காலை மாலையில் முறைவைத்து) வருகின்றனர். இச்சொல்லி(ன் வேர்ச்சொல்)லிருந்துதான் “அல்அகீப்' (பின்தொடர்பவன்) எனும் சொல் பிறந்ததாகக் கூறப்படுகிறது. “அக்கப்து ஃபீ அஸரிஹி' எனும் வாக்கியத்திற்கு “அவனது அடிச்சுவட்டைப் பின்பற்றிச் சென்றேன்” என்பது பொருள். (13:13ஆவது வசனத்தின் மூலத்தின் இறுதியிலுள்ள) “அல்மிஹால்' என்பதற்கு “தண்டனை' என்று பொருள். (13:14ஆவது வசனத்திலுள்ள) “தண்ணீரை நோக்கித் தன் இரு கைகளையும் நீட்டிக்கொண்டிருப்பவனைப் போன்று' என்பதற்கு “தண்ணீரைப் பெறுவதற்காக (கையை நீட்டிக்கொண்டு இருப்பவன்)' என்று பொருள். (13:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ராபியா' எனும் சொல் ரபா, யர்பூ (உயர்ந்தது, உயரும்) எனும் (வினைச்)சொற்களிலிருந்து பிரிந்ததாகும். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “அவ் மத்தாஇன் ஸபதும் மிஸ்லுஹு' (அல்லது அதைப் போன்ற சாமான்களுக்காவோ) எனும் சொற்றொடரில் “மத்தாஉ' (“சாமான்கள்') எனும் சொல், “நீ எதனைப் பயன்படுத்திவருகிறாயோ அ(த்தகைய தட்டுமுட்டுச் சாமான்கள், வேளாண் கருவிகள், போர்த் தளவாடங்கள் முதலிய)வற்றைக் குறிக்கும். மேலும், “ஜுஃபாஅன்' எனும் சொல், “(அடுப்பிலுள்ள) பாத்திரம் பொங்கி நுரையெழுந்து, பிறகு அது அடங்கியபோது அந்த நுரை எந்தப் பயனுமில்லாமல் (நொடியில்) மறைந்துபோவதை'க் குறிக்கும். இவ்வாறுதான் பொய்மையிலிருந்து உண்மை பாகுபடுத்தப்படுகிறது. (13:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்மிஹாத்' எனும் சொல்லுக்கு “படுக்கை விரிப்பு' என்று பொருள். (13:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யத்ரஊன' எனும் சொல்லுக்கு “தடுப்பார்கள்' என்று பொருள். (இதன் இறந்தகால வினைச்சொல் இடம்பெற்றுள்ள) “தரஃதுஹு அன்னீ' எனும் வாக்கியத்திற்கு, “என்னைவிட்டு அவனைத் தடுத்தேன்” என்று பொருள். (13:24ஆவது வசனத்திலுள்ள) “உங்களுக்குச் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக' எனும் வாக்கியத்திற்கு “உங்களுக்குச் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்று கூறுவார்கள்' என்று பொருள். (13:30ஆவது வசனத்திலுள்ள) “அவனிடமே நான் மீளுவேன்' எனும் வாக்கியத்திற்கு “அவனிடமே நான் பாவமன்னிப்புக் கோரி மீளுவேன்' என்று பொருள். (13:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஃபலம் யய்அஸ்' எனும் சொற்றொ டருக்கு “தெளிவாகவில்லையா' என்று பொருள். (அதே வசனத்தின் மூலத்திலுள்ள) “காரிஆ' எனும் சொல்லுக்கு “திடுக்கிடச் செய்கின்ற' என்பது பொருள். (13:32ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃப அம்லைத்து' எனும் சொல்லுக்கு “நீட்டித்தேன்' என்பது பொருள். இது, “மலிய்யு' மற்றும் “முலாவா' எனும் (வேர்ச்) சொற்களிலிருந்து பிறந்ததாகும். இதிலிருந்துதான் (19:46ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மலிய்யா' (வெகு காலம்) எனும் சொல் பிறந்தது. பூமியின் விசாலமான பகுதி “மலன்' எனப்படும். (13:34ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஷக்கு' எனும் சொல்லுக்கு “கடுமையானது' என்பது பொருள். இச்சொல் “மஷக்கத்' (துன்பம்) எனும் (வேர்ச்) சொல்லிலிருந்து பிறந்ததாகும். (13:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முஅக்கிப்' எனும் சொல்லுக்கு “மாற்றக் கூடியவன்' என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (13:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முத்தஜாவிராத்' எனும் சொல், பூமியில் அடுத்துடுத்துள்ள விளைநிலத்தையும் தரிசு நிலத்தையும் குறிக்கும். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “ஸின்வான்' எனும் சொல் ஒரே அடித்தண்டைக் கொண்ட இரண்டு, அல்லது அதற்கு மேற்பட்ட பேரீச்சமரங்களையும், “ஃகைரு ஸின்வான்' எனும் சொல் ஒரே மரத்தையும் குறிக்கும். இவ்வாறுதான் ஒரே தந்தையான ஆதமுடைய மக்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் உள்ளனர். (13:12ஆவது வசனத்திலுள்ள) “கனமான மேகம்' என்பது “மழை நீருள்ள மேகத்தை'க் குறிக்கும். (13:14ஆவது வசனத்தில் வரும் “தண்ணீரை நோக்கித் தன் இரு கரங்களையும் நீட்டிக்கொண்டிருப்பவனைப் போன்று' என்பதன் கருத்தாவது: (எங்கோ இருக்கின்ற) தண்ணீரை நோக்கித் தன்னிடம் வருமாறு நாவால் அழைத்து, கையால் அதற்கு சைகை செய்வான். ஆனால், அது ஒருபோதும் அவனிடம் வரப்போவதில்லை. (13:17ஆவது வசனத்திலுள்ள) “நீருக்குத் தக்கவாறு ஓடைகளாக ஓடுகிறது' என்பதற்கு “ஓடை நிரம்பி வழிகிறது' என்று பொருள். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “ஸபதர் ராபியா' எனும் சொல் “ஓடும் வெள்ளத்தின் நுரையைக்' குறிக்கும். (“ஸபதும் மிஸ்லுஹு-அதைப் போன்ற நுரை' என்பது) இரும்பு மற்றும் ஆபரணங்களின் அழுக்கு நுரையைக் குறிக்கிறது. பாடம் : 1 “ஒவ்வொரு கர்ப்பிணியும் (தன் கருப்பையில்) சுமந்துகொண்டி ருப்பவற்றையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான். மேலும், கருப்பைகளில் ஏற்படுகின்ற குறைவையும் கூடுதலையும் அவன் அறிகின்றான். அவன் ஒவ்வொன்றுக்கும் ஓர் அளவை நிர்ணயித்துள்ளான்” எனும் (13:8ஆவது) இறைவசனம் (இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) “தஃகீளு' எனும் சொல்லுக்கு “குறைகின்ற' என்பது பொருள்.
4697. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கவிருக்கிறது என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். (பெண்களின்) கருப்பைகளில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். எந்த உயிரும் தான் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது. மேலும், மறுமை (நாள்) எப்போது நிகழும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3

அத்தியாயம் : 65
4698. حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " أَخْبِرُونِي بِشَجَرَةٍ تُشْبِهُ أَوْ كَالرَّجُلِ الْمُسْلِمِ لاَ يَتَحَاتُّ وَرَقُهَا وَلاَ وَلاَ وَلاَ، تُؤْتِي أُكْلَهَا كُلَّ حِينٍ ". قَالَ ابْنُ عُمَرَ فَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ، وَرَأَيْتُ أَبَا بَكْرٍ وَعُمَرَ لاَ يَتَكَلَّمَانِ، فَكَرِهْتُ أَنْ أَتَكَلَّمَ، فَلَمَّا لَمْ يَقُولُوا شَيْئًا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هِيَ النَّخْلَةُ ". فَلَمَّا قُمْنَا قُلْتُ لِعُمَرَ يَا أَبَتَاهُ وَاللَّهِ لَقَدْ كَانَ وَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ فَقَالَ مَا مَنَعَكَ أَنْ تَكَلَّمَ قَالَ لَمْ أَرَكُمْ تَكَلَّمُونَ، فَكَرِهْتُ أَنْ أَتَكَلَّمَ أَوْ أَقُولَ شَيْئًا. قَالَ عُمَرُ لأَنْ تَكُونَ قُلْتَهَا أَحَبُّ إِلَىَّ مِنْ كَذَا وَكَذَا.
பாடம்: 14. “இப்ராஹீம்' அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (13:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹாதின்' (வழிகாட்டி) எனும் சொல்லுக்கு “(நல்வழிக்கு) அழைப்பவர்' என்பது பொருள். முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (14:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஸதீத்' எனும் சொல்லுக்கு “சீழும் இரத்தமும்' என்று பொருள். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “உங்கள்மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள்' எனும் (5:20ஆவது) வசனத்தொடரின் கருத்தாவது: உங்கள் வசமுள்ள அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் அவன் (நிகழ்த்திக்காட்டிய) சம்பவங்களையும் நினைத்துப்பாருங்கள். முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “நீங்கள் கேட்ட அனைத்தையும் அவன் உங்களுக்கு அளித்தான்” எனும் (13:34ஆவது) வசனத்தொடரின் கருத்தாவது: அவனிடம் நீங்கள் விரும்பி ஆசைப்பட்டதையெல்லாம் அவன் உங்களுக்கு வழங்கினான். (14:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யப்ஃகூனஹா இவஜா' என்பதற்கு “அல்லாஹ்வுடைய வழியில் கோணலைத் தேடுகின்றனர்' என்பது பொருள். (14:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஃத் தஅஃத்தன ரப்பு(க்)கும்' என்பதற்கு “உங்கள் இறைவன் அறிவிப்புச் செய்ததை' என்று பொருள். (14:9ஆவது வசனத்தில்) “அவர்கள் தம் கைகளை வாய்களின் பக்கம் கொண்டு செல்கின்றனர்' என்று கூறப்பட்டிருப்பது, தங்களுக்குக் கட்டளையிடப்பட்டதை நிறைவேற்றாமல் தம்மைத் தாமே தடுத்துக்கொண்டதற்கு ஓர் உதாரணமாகும். (14:14ஆவது வசனத்தின மூலத்திலுள்ள) “மகாமீ' (எனக்கு முன்னால்) என்பது, (விசாரணைக்காக மறுமை நாளில்) மனிதனை அல்லாஹ் தனக்கு முன்னால் நிறுத்திவைக்கும் இடத்தைக் குறிக்கும். (14:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மின் வராயிஹி' எனும் சொற்றொடருக்கு “அவர்களுக்கு முன்பாக' என்பது பொருள். (14:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லகும் தபஅன்' எனும் சொற்றொடருக்கு “உங்களைப் பின்பற்றியோர்' என்பது பொருள். இதிலுள்ள “தபஉ' என்பதன் ஒருமை “தாபிஉ' என்பதாகும். “ஃகயப்' (மறைந்தோர்), “ஃகாயிப்' (மறைந்தவன்) ஆகியவற்றைப் போல. (14:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “பி முஸ்ரிகிக்கும்' என்பதற்கு “உங்களுக்கு உதவி செய்யக்கூடியவனாக' என்பது பொருள். இது “ஸுராக்' (அபயக் குரல்) எனும் வேர்ச்சொல்லில் இருந்து பிறந்ததாகும். (14:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ லா கிலால' எனும் சொற்றொடருக்கு, “எந்த நட்பும் இல்லாத' என்பது பொருள். இது, “காலல்துஹு கிலாலன்' (நான் அவனுடன் மிக நெருக்கமான நேசம் பாராட்டினேன்) எனும் (வினைச்சொல்லின் வேர்ச்சொல்லாகும். “கிலால்' எனும் இச்சொல் “குல்லத்' (நண்பன்) என்பதன் பன்மையாகவும் இருக்கலாம். (14:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “உஜ்துஸ்ஸத்' எனும் சொல்லுக்கு “வேரோடு பிடுங்கப்பட்டது' என்பது பொருள். பாடம் : 1 “நல்ல வார்த்தை (கலிமா தய்யிபாவு)க்கு அல்லாஹ் எவ்வாறு உவமை கூறுகின்றான் என்பதை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வேர் பூமியில் ஆழப் பதிந் திருக்கின்றது; அதன் கிளைகள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன; எந்நேரமும் அம்மரம் தன் இறை வனின் ஆணைக்கேற்பக் கனி களை வழங்கிக்கொண்டிருக்கின் றது” எனும் (14:24, 25) இறை வசனங்கள்
4698. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், “ “ஒரு முஸ்லிமான மனிதரை ஒத்திருக்கும்' அல்லது “(அவரைப்) போன்றிருக்கும்' ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள். அதன் இலை உதிராது. மேலும் இப்படி... இப்படி... இப்படியெல்லாம் இராது. அது தன் கனிகளை எல்லாப் பருவங்களிலும் கொடுத்துக்கொண்டிருக்கும். (அத்தகைய ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள்)” என்று சொன்னார்கள். அப்போது என் மனத்தில், “அது பேரீச்ச மரம்தான்” என்று தோன்றியது.

அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) (போன்றவர்களே பதில்) பேசாமல் இருப்பதை நான் கண்டேன். ஆகவே, நான் பேச விரும்பவில்லை. (அங்கிருந்த) மக்கள் ஒன்றும் சொல்லாமலிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தாமே), “அது பேரீச்சமரம்” என்று கூறினார்கள். நாங்கள் (புறப்பட) எழுந்தபோது நான் உமர் (ரலி) அவர்களிடம், “என் அன்புத் தந்தையே! அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனத்தில் அது பேரீச்சமரம்தான் என்று தோன்றியது” என்றேன்.

அதற்கு அவர்கள், “(அப்துல்லாஹ்!) நீ ஏன் (மனத்தில் தோன்றியதைக்) கூறாமலிருந்தாய்?” என்று கேட்டார்கள். நான், “நீங்களெல்லாரும் பேசாமலிருப்பதைப் பார்த்தேன். எனவே, நான் பேசவோ எதுவும் சொல்லவோ விரும்பவில்லை” என்று பதிலளித்தேன். உமர் (ரலி) அவர்கள், “நீ அதைச் சொல்லியிருந்தால் அதுவே இன்ன இன்ன (செல்வம் கிடைப்ப)தைவிட எனக்கு மிகவும் பிரியமானதாய் இருந்திருக்கும்” என்று சொன்னார்கள்.2

அத்தியாயம் : 65
4699. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَلْقَمَةُ بْنُ مَرْثَدٍ، قَالَ سَمِعْتُ سَعْدَ بْنَ عُبَيْدَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْمُسْلِمُ إِذَا سُئِلَ فِي الْقَبْرِ يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَذَلِكَ قَوْلُهُ {يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الآخِرَةِ}"
பாடம் : 2 இறைநம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும் மறுமையிலும் உறுதிப்படுத்துகின் றான் (எனும் 14:27ஆவது வசனத்தொடர்)
4699. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் (இறந்தபின்) அடக்கத் தலத்தில் விசாரிக்கப்படும்போது, அவர், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்” என்று உறுதிமொழி கூறுவார்.

இதுதான், “(இறை)நம்பிக்கை கொண் டோரை, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும் மறுமையிலும் உறுதிப்படுத்துகின்றான்' எனும் (14:27ஆவது) இறைவசனத்தின் கருத்தாகும்.

இதை பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3

அத்தியாயம் : 65
4700. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ عَطَاءٍ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ، {أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ بَدَّلُوا نِعْمَةَ اللَّهِ كُفْرًا} قَالَ هُمْ كُفَّارُ أَهْلِ مَكَّةَ.
பாடம் : 3 அல்லாஹ்வின் அருட்கொடையை இறைமறுப்பாக மாற்றி (தம்முடன்) தம் சமூகத்தாரையும் அழிவுக் கிடங்கில் (நரகில்) தள்ளியவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? (எனும் 14:28ஆவது இறைவசனம்) (இவ்வசனத்திலுள்ள) “நீர் பார்க்கவில் லையா?' (அலம் தர) எனும் சொற்றொடருக்கு “நீர் அறியவில்லையா?' என்பது பொருள். “அலம் தர கைஃப' (14:24; 89:6; 105:1) மற்றும் “அலம் தர இலல்லஃதீன கரஜூ' (2:243) ஆகிய வசனங்களிலும் இதே பொருள்தான். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்பவார்' எனும் சொல்லுக்கு “அழிவு' என்பது பொருள். (25:18; 48:12 ஆகிய வசனங்களின் மூலத்திலுள்ள) “கவ்மன் பூரா' என்பதன் பொருள் “அழிந்துவிடும் சமுதாயம்' என்பதாகும்.
4700. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் அருட்கொடையை இறைமறுப்பாக மாற்றி (தம்முடன்) தம் சமூகத்தாரையும் அழிவுக் கிடங்கில் தள்ளி விட்டவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? எனும் (14:28ஆவது) இறைவசனம், மக்காவாசிகளில் இருந்த இறைமறுப்பாளர்களைக் குறிக்கிறது” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.4

அத்தியாயம் : 65
4701. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا قَضَى اللَّهُ الأَمْرَ فِي السَّمَاءِ ضَرَبَتِ الْمَلاَئِكَةُ بِأَجْنِحَتِهَا خُضْعَانًا لِقَوْلِهِ كَالسِّلْسِلَةِ عَلَى صَفْوَانٍ ـ قَالَ عَلِيٌّ وَقَالَ غَيْرُهُ صَفْوَانٍ ـ يَنْفُذُهُمْ ذَلِكَ فَإِذَا فُزِّعَ عَنْ قُلُوبِهِمْ قَالُوا مَاذَا قَالَ رَبُّكُمْ، قَالُوا لِلَّذِي قَالَ الْحَقَّ وَهْوَ الْعَلِيُّ الْكَبِيرُ، فَيَسْمَعُهَا مُسْتَرِقُو السَّمْعِ، وَمُسْتَرِقُو السَّمْعِ هَكَذَا وَاحِدٌ فَوْقَ آخَرَ ـ وَوَصَفَ سُفْيَانُ بِيَدِهِ، وَفَرَّجَ بَيْنَ أَصَابِعِ يَدِهِ الْيُمْنَى، نَصَبَهَا بَعْضَهَا فَوْقَ بَعْضٍ ـ فَرُبَّمَا أَدْرَكَ الشِّهَابُ الْمُسْتَمِعَ، قَبْلَ أَنْ يَرْمِيَ بِهَا إِلَى صَاحِبِهِ، فَيُحْرِقَهُ وَرُبَّمَا لَمْ يُدْرِكْهُ حَتَّى يَرْمِيَ بِهَا إِلَى الَّذِي يَلِيهِ إِلَى الَّذِي هُوَ أَسْفَلُ مِنْهُ حَتَّى يُلْقُوهَا إِلَى الأَرْضِ ـ وَرُبَّمَا قَالَ سُفْيَانُ حَتَّى تَنْتَهِيَ إِلَى الأَرْضِ ـ فَتُلْقَى عَلَى فَمِ السَّاحِرِ، فَيَكْذِبُ مَعَهَا مِائَةَ كَذْبَةٍ فَيَصْدُقُ، فَيَقُولُونَ أَلَمْ يُخْبِرْنَا يَوْمَ كَذَا وَكَذَا يَكُونُ كَذَا وَكَذَا، فَوَجَدْنَاهُ حَقًّا لِلْكَلِمَةِ الَّتِي سُمِعَتْ مِنَ السَّمَاءِ "". حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، إِذَا قَضَى اللَّهُ الأَمْرَ. وَزَادَ الْكَاهِنِ. وَحَدَّثَنَا سُفْيَانُ فَقَالَ قَالَ عَمْرٌو سَمِعْتُ عِكْرِمَةَ حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ قَالَ إِذَا قَضَى اللَّهُ الأَمْرَ وَقَالَ عَلَى فَمِ السَّاحِرِ. قُلْتُ لِسُفْيَانَ قَالَ سَمِعْتُ عِكْرِمَةَ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ. قَالَ نَعَمْ. قُلْتُ لِسُفْيَانَ إِنَّ إِنْسَانًا رَوَى عَنْكَ عَنْ عَمْرٍو عَنْ عِكْرِمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ وَيَرْفَعُهُ أَنَّهُ قَرَأَ فُزِّعَ. قَالَ سُفْيَانُ هَكَذَا قَرَأَ عَمْرٌو. فَلاَ أَدْرِي سَمِعَهُ هَكَذَا أَمْ لاَ. قَالَ سُفْيَانُ وَهْىَ قِرَاءَتُنَا.
பாடம்: 15. “அல்ஹிஜ்ர்' அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “அதுதான் என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழி” எனும் (15:41ஆவது) வசனத்தின் கருத்தாவது: சத்திய வழி அல்லாஹ்விடமே உண்டு; அதன்படி நடப்பதே அல்லாஹ்வை அடைவதற்கான பாதையாகும். (15:79ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லபி இமாமிம் முபீன்' எனும் சொற்றொடருக்கு “(அனைவருக்கும்) தெரிந்த பாதையில்' என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (15:72ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ல அம்ருக்க' எனும் சொல்லுக்கு “உமது ஆயுள்மீது சத்தியமாக' என்பது பொருள். “நீங்கள் புதிரானவர்களாக இருக்கிறீர்களே!' எனும் (15:62ஆவது) வசனத்தின் கருத்தாவது: “லூத் (அலை) அவர்கள் (தம்மிடம் மனிதர்கள் தோற்றத்தில் வந்த) வானவர்களை அறிமுகமில்லாத அந்நியர்களாகக் கண்டார்கள். மற்றவர்கள் கூறுகிறார்கள்: (15:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கிதாபும் மஅலூம்' என்பதற்கு “குறிப்பிட்ட தவணை' என்பது பொருள். (15:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லவ் மா தஃதீனா' எனும் சொற்றொ டருக்கு “நீர் எம்மிடம் (வானவர்களை) அழைத்துக்கொண்டு வரவேண்டாமா?' என்பது பொருள். (15:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஷியஉ' எனும் சொல்லுக்கு “சமுதாயங்கள்' என்பது பொருள். (இறை)அன்பர்களுக்கும் “ஷியஉன்' எனும் சொல் ஆளப்படுவதுண்டு. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (“ஹூத்' அத்தியாயத்தில் 11:78ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யுஹ்ரஊன' எனும் சொல்லுக்கு “விரைந்தவர்களாக' என்பது பொருள். (15:75ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லில் முத்தவஸ்ஸிமீன்' எனும் சொல்லுக்கு “சிந்திப்போருக்கு' என்பது பொருள். (15:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “சுக்கிரத்' எனும் சொல்லுக்கு “திரையிடப்பட்டது' என்பது பொருள். (15:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “புரூஜ்' எனும் சொல்லுக்கு “சூரியன் மற்றும் சந்திரனுக்குள்ள நீள்வட்டப் பாதைகள்' என்பது பொருள். (15:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லவாகிஹ்' எனும் சொல்லுக்கு “மேகத்தைச் சூல் கொள்ளச் செய்யக்கூடியவை' (மலாகிஹ்) என்பது பொருள். “மலாகிஹ்' எனும் சொல் “முல்கிஹா' என்பதன் பன்மையாகும். (15:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹமஉ' எனும் சொல், “ஹம்அத்' என்பதன் பன்மையாகும். அதற்கு “(நீண்ட நாட்கள் நீரோடு சேர்ந்திருந்ததால் குழைந்து கறுப்பு நிறத்தில்) மாறிவிட்ட (பிசுபிசுப்பான) களிமண்' என்பது பொருள். (மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) “மஸ்னூன்' எனும் சொல்லுக்கு “அச்சில் வார்க்கப்பட்டது' என்பது பொருள். (15:53ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தவ்ஜல்' எனும் சொல்லுக்கு “பயப்படுதல்' என்பது பொருள். (15:66ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தாபிர்' எனும் சொல்லுக்கு “கடைசி நபர்' என்பது பொருள். (15:79ஆவது வசனத்தின் மூலத்தில்) “ல பி இமாமிம் முபீன்' என்பதிலுள்ள “இமாம்' எனும் சொல் “நீ எதையெல்லாம் பின்பற்றி நல்வழியடைவாயோ' அவற்றைக் குறிக்கும். (15:83ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஸைஹத்' (பயங்கர சப்தம்) என்பது, அழிவைக் குறிக்கும். பாடம் : 1 விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் வான் வெளியை நாம் காத்தோம்; திருட்டுத்தனமாக (வானவர்களின் உரையாடலை) ஒட்டுக்கேட்கும் ஷைத்தானைத் தவிர. அதையும் ஒளிரும் தீச்சுவாலை பின்தொடரும் (எனும் 15:17, 18 ஆகிய வசனங்கள்)
4701. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால், வானவர்கள் தம் சிறகுகளை இறைக்கட்டளைக்குப் பணிந்தவர்களாக அடித்துக்கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை) பாறையின் மீது சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள்.)

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(சுஃப்யான் (ரஹ்) அல்லாத) மற்றவர் களின் அறிவிப்பில், “(அந்த ஓசையின் மூலம்) அல்லாஹ் தன் கட்டளையை வானவர்களுக்கு எட்டச்செய்வான்” என்று (கூடுதலாகக்) காணப்படுகிறது.

(இறைக்கட்டளையைச் செவியுறும் வானவர்கள் பீதிக்குள்ளாகிறார்கள். பின்னர்) அவர்களின் இதயத்தைவிட்டுப் பீதி அகற்றப்படும்போது அவ்வானவர்கள், (அல்லாஹ்விற்கு நெருக்கமாயிருக்கும்) வானவர்களிடம், “நம் இறைவன் என்ன சொன்னான்?” என்று வினவுகின்றனர். அவர்கள் வினவியோரிடம், “(நம் இறைவன் இன்னின்ன) உண்மை(யான கட்டளை)யைச் சொன்னான். அவன் உயர்ந்தவன்; பெரியவன்” என்று பதிலளிப்பர். உடனே, (இறைவனின் கட்டளை குறித்த) அந்த உரையாடலை ஒட்டுக்கேட்பவர்கள் செவியேற்றுவிடுகின்றனர். ஒருவர் மற்றவர் மேலே இருந்துகொண்டு இவ்வாறாக (கடைசி ஆள்வரை) ஒட்டுக்கேட்கின்றனர்.

சுஃப்யான் (ரஹ்) அவர்கள் (தமது அறிவிப்பில், அவர்களில் ஒருவர் மற்றவர் மேல் இருக்கும் விதத்தை) தமது வலக் கையின் விரல்களை விரித்துவைத்து அவற்றில் ஒன்றை மற்றொன்றின் மீது அடுக்கி வைத்து (சைகையால்) விளக்கிக் காட்டினார்கள்.

அந்த உரையாடலை ஒட்டுக்கேட்கும் ஒருவர் அதைத் தம் சகாவிடம் தெரிவிப்ப தற்கு முன்பாகவே சில சமயங்களில் அவரைத் தீச்சுவாலை தாக்கிக் கரித்து விடுவதுண்டு. இன்னும் சில நேரங்களில் (தீச்சுவாலை) அவரைச் சென்றடைவதற் குள்ளாகவே (அந்த உரையாடலை) அவர் தமக்கு அடுத்துள்ளவரிடமும், அவர் தமக்குக் கீழுள்ளவரிடமும் தெரிவித்து இறுதியாகப் பூமிவரை அதைச் சேர்த்துவிடுகிறார்கள்.

சுஃப்யான் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “கடைசியில் அது பூமிக்கு வந்துசேர்ந்து சூனியக்காரனின் வாயில் இடப்படுகிறது. உடனே அவன் அதனுடன் நூறு பொய்களைக் கலந்து சில உண்மைகளை (மட்டும்) கூறுகின்றான். (இதைக் கேட்கும்) மக்கள், “இன்னின்ன நாளில் இன்னின்னவாறு நடக்குமென சூனியக்காரர்கள் நம்மிடம் கூற, அதை நாம் உண்மையானதாகவே காணவில்லையா?' என்று கூறுவார்கள். வானிலிருந்து ஒட்டுக்கேட்கப்பட்ட தகவலினாலேயே இவ்வாறு அவர்கள் கூறுகிறார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்களிட மிருந்து வந்துள்ள மற்றோர் அறிவிப்பில், “சூனியக்காரன் மற்றும் சோதிடனின் வாயில் இடப்படுகிறது” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் இந்த ஹதீஸை அம்ர் பின் தீனாரிடம் கேட்டபோது, அன்னார் இக்ரிமாவிடமும், இக்ரிமா அபூஹுரைரா (ரலி) அவர்களிடமும் கேட்டதாகத் தெரிவித்தாரா?” என வினவினேன். அதற்கு சுஃப்யான், “ஆம்' என்று பதிலளித் தார்கள்.

மேலும், நான் சுஃப்யான் அவர்களிடம், “இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள “ஃபுஸ்ஸிஅ' (பீதி அகற்றப்படும்போது) எனும் சொல்லை நபி (ஸல்) அவர்கள் அவ்வாறுதான் (“ஃபுஸ்ஸிஅ' என்று) ஓதினார்கள் என நீங்கள் குறிப்பிட்டதாக ஒருவர் அறிவித்தாரே! (அது சரிதானா?)” என்று வினவினேன்.

அதற்கு அன்னார், “அம்ர் பின் தீனார் அவர்கள் இவ்வாறுதான் ஓதினார்கள். ஆனால், அம்ர் (இக்ரிமாவிடமிருந்து) இவ்வாறுதான் செவியுற்றாரா என்பது எனக்குத் தெரியாது. இதுவே எங்களது ஓதல் முறையாகும்” என்று பதிலளித்தார்கள்.2

அத்தியாயம் : 65
4702. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مَعْنٌ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لأَصْحَابِ الْحِجْرِ " لاَ تَدْخُلُوا عَلَى هَؤُلاَءِ الْقَوْمِ إِلاَّ أَنْ تَكُونُوا بَاكِينَ فَإِنْ لَمْ تَكُونُوا بَاكِينَ فَلاَ تَدْخُلُوا عَلَيْهِمْ أَنْ يُصِيبَكُمْ مِثْلُ مَا أَصَابَهُمْ ".
பாடம் : 2 “ஹிஜ்ர்'வாசிகளும் இறைத்தூதர் களைப் பொய்யர்களெனக் கூறி னார்கள் எனும் (15:80ஆவது) இறைவசனம்
4702. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹிஜ்ர்'வாசிகளைக் குறித்து, “இந்தச் சமுதாயத்தாரின் (வசிப்பிடங்கள்) வழியாகச் செல்லும்போது அழுதுகொண்டே செல்லுங்கள். நீங்கள் அழுதபடி செல்லப் போவதில்லையென்றால், அவர்களைத் தீண்டிய வேதனை உங்களையும் தீண்டி விடாமலிருக்க அவர்(களின் வசிப்பிடங்)களைக் கடந்துசெல்லாதீர்கள்” என்று சொன்னார்கள்.3

அத்தியாயம் : 65