4629. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا نَزَلَتْ {وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} قَالَ أَصْحَابُهُ وَأَيُّنَا لَمْ يَظْلِمْ فَنَزَلَتْ {إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ}
பாடம் : 3
எவர் (இறை)நம்பிக்கை கொண்டு பிறகு தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலக்கவில்லையோ அவர்களுக்கு உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நல்வழி அடைந்தவர்கள் ஆவர் (எனும் 6:82ஆவது இறைவசனம்)
4629. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“எவர் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலக்கவில்லையோ அவர்களுக்கு உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நல்வழி பெற்றவர்கள் ஆவர்” எனும் (6:82ஆவது) வசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்கள், “எங்களில் எவர்தான் (தமக்குத் தாமே) அநீதியிழைக்கவில்லை?” என்று கேட்டனர். அப்போது, “இணைவைப்புத்தான் மாபெரும் அநீதியாகும்” எனும் (31:13ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.8
அத்தியாயம் : 65

4630. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، قَالَ حَدَّثَنِي ابْنُ عَمِّ، نَبِيِّكُمْ يَعْنِي ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى ".
பாடம் : 4
“(நம் தூதர்களாகிய) இஸ்மாயீல், அல்யசஉ, யூனுஸ், லூத் (ஆகியோரையும் நாம் நல்வழியில் செலுத்தினோம்). அகிலத்தார் அனைவரையும்விட இவர்கள் ஒவ்வொருவரையும் நாம் மேன்மை யாக்கினோம்” எனும் (6:86ஆவது) இறைவசனம்
4630. அபுல்ஆலியா ருஃபைஉ பின் மிஹ்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உங்கள் நபியினுடைய தந்தையின் சகோதரருடைய புதல்வர், அதாவது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எனக்கு அறிவித்தார்கள்:
“நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன்” என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது.9

4631. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ سَمِعْتُ حُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى ".
பாடம் : 4
“(நம் தூதர்களாகிய) இஸ்மாயீல், அல்யசஉ, யூனுஸ், லூத் (ஆகியோரையும் நாம் நல்வழியில் செலுத்தினோம்). அகிலத்தார் அனைவரையும்விட இவர்கள் ஒவ்வொருவரையும் நாம் மேன்மை யாக்கினோம்” எனும் (6:86ஆவது) இறைவசனம்
4631. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன்” என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த மனிதருக்கும் முறையாகாது.10
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4632. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي سُلَيْمَانُ الأَحْوَلُ، أَنَّ مُجَاهِدًا، أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ ابْنَ عَبَّاسٍ أَفِي " ص " سَجْدَةٌ فَقَالَ نَعَمْ. ثُمَّ تَلاَ {وَوَهَبْنَا} إِلَى قَوْلِهِ {فَبِهُدَاهُمُ اقْتَدِهْ} ثُمَّ قَالَ هُوَ مِنْهُمْ. زَادَ يَزِيدُ بْنُ هَارُونَ وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ وَسَهْلُ بْنُ يُوسُفَ عَنِ الْعَوَّامِ عَنْ مُجَاهِدٍ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ فَقَالَ نَبِيُّكُمْ صلى الله عليه وسلم مِمَّنْ أُمِرَ أَنْ يَقْتَدِيَ بِهِمْ.
பாடம் : 5
“(நபியே!) அல்லாஹ்வால் நல்வழியில் செலுத்தப்பட்டவர்கள்தான் இவர்கள். ஆகவே, இவர்களின் நல்வழியையே நீரும் பின்பற்று வீராக!” எனும் (6:90ஆவது) வசனத்தொடர்
4632. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “ஸாத் (எனும் 38ஆவது) அத்தியாயத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா உண்டா?” என்று கேட்டேன். அவர்கள், “ஆம் (38:24ஆவது வசனத்தில் சஜ்தா உண்டு)” என்று கூறிவிட்டு, “நாம் இப்ராஹீமுக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் (சந்ததி களாக) வழங்கினோம்” என்று தொடங்கி, “இவர்களுடைய நல்வழியையே நீரும் பின்பற்றுவீராக!” என்பதுவரை (6:84-90 வசனங்களை) ஓதினார்கள்.
பிறகு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “தாவூத் (அலை) அவர்கள் இந்த (வசனத் தில் கூறப்பட்டுள்ள) இறைத்தூதர்களில் ஒருவர்தான்” என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் பிந்திய மூன்று தொடர்களில் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூடுதலாகக் கூறுகிறார்கள்:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (மேற்கண்டவாறு) கேட்டேன். அதற்கு அவர்கள், “முந்தைய இறைத்தூதர்களைப் பின்பற்றும்படி கட்டளையிடப் பட்டவர்களில் உங்கள் நபி (ஸல்) அவர்களும் ஒருவர்தான்” என்று சொன்னார்கள்.11

4633. حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، قَالَ عَطَاءٌ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" قَاتَلَ اللَّهُ الْيَهُودَ، لَمَّا حَرَّمَ اللَّهُ عَلَيْهِمْ شُحُومَهَا جَمَلُوهُ ثُمَّ بَاعُوهُ فَأَكَلُوهَا "".
وَقَالَ أَبُو عَاصِمٍ حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ، حَدَّثَنَا يَزِيدُ، كَتَبَ إِلَىَّ عَطَاءٌ سَمِعْتُ جَابِرًا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 6
நகமுடைய பிராணிகள் ஒவ்வொன்றையும் யூதர்களுக்கு நாம் தடை செய்திருந்தோம். அவர்களுக்கு ஆடு மாடுகளின் கொழுப்பையும் தடை செய்திருந்தோம் (எனும் 6:146ஆவது இறைவசனம்)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நகமுடைய ஒவ்வொரு பிராணியும் என்பது, ஒட்டகத்தையும் தீக்கோழியையும் குறிக்கும். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹவாயா' என்பது குடல்களைக் குறிக்கும்.12
மற்றவர்கள் கூறுகின்றனர்:
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹாதூ' என்பதற்கு “யூதர்களாய் ஆகிவிட்டவர்கள்' என்பது பொருள்.
(இதே சொல்லிலிருந்து பிறந்த 7:156ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹுத்னா' என்பதற்கு “பாவமன்னிப்புக் கோரினோம்' என்பது பொருள். (இதன் வினையாலணையும் பெயரான) “ஹாயித்' என்பதற்கு “பாவமன்னிப்புக் கோருகின்றவர்' என்பது பொருள்.
4633. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் யூதர்களைத் தன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்கு அல்லாஹ் செத்த பிராணி களின் கொழுப்புகளை (ஹராமாக்கித்) தடை செய்தபோது அதை அவர்கள் உருக்கி அத(ன் விலையி)னை உட்கொண்டார்கள்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.13

4634. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ " لاَ أَحَدَ أَغْيَرُ مِنَ اللَّهِ، وَلِذَلِكَ حَرَّمَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَلاَ شَىْءَ أَحَبُّ إِلَيْهِ الْمَدْحُ مِنَ اللَّهِ، لِذَلِكَ مَدَحَ نَفْسَهُ ". قُلْتُ سَمِعْتَهُ مِنْ عَبْدِ اللَّهِ قَالَ نَعَمْ. قُلْتُ وَرَفَعَهُ قَالَ نَعَمْ.
பாடம் : 7
“மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, மறைவா னவை எதையும் நெருங்காதீர் கள்” எனும் (6:151ஆவது) வசனத்தொடர்
4634. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர். அதனால் தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, அந்தரங்க மானவை அனைத்திற்கும் அல்லாஹ் தடை விதித்துள்ளான். தன்னைப் புகழ்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. ஆகவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்” (என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்).
அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம், “இதை நீங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகக் கேட்டீர்களா?” என்று கேட்க, அவர்கள், “ஆம்' என்று பதிலளித்தார்கள். நான், “இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்களா?” என்று கேட்க, அவர்கள், “ஆம்' என்று பதில் சொன்னார்கள்.

4635. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا عُمَارَةُ، حَدَّثَنَا أَبُو زُرْعَةَ، حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا، فَإِذَا رَآهَا النَّاسُ آمَنَ مَنْ عَلَيْهَا، فَذَاكَ حِينَ لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا، لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ ".
பாடம் : 8
(6:102ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ(க்)கீல்' எனும் சொல்லுக்கு “கண்காணித்துப் பாதுகாப்பவன்' என்பது பொருள்.
(6:111ஆவது வசனத்தின் மூலத்திலுள்) “குபுல்' எனும் சொல் கபீல் எனும் சொல்லின் பன்மையாகும். “பல வகை வேதனைகள்' என்பது அதன் பொருளாகும். ஒவ்வொரு வகையும் “கபீல்' எனப்படும்.
(6:112ஆவது வசனத்தின் மூலத் திலுள்ள) “ஸுக்ருஃபுல் கவ்ல்' எனும் சொற்றொடரானது, எழிலூட்டி அலங் கரித்துக்காட்டும் எல்லா போலிகளையும் குறிக்கும்.
(6:138ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) “ஹிஜ்ர்' எனும் சொல்லுக்கு “தடுக்கப்பட்டது' என்பது பொருள். தடை விதிக்கப்பட்ட எல்லாப் பொருட்களுக்கும் “ஹிஜ்ருன் மஹ்ஜூர்' எனப்படும். நீ கட்டி முடித்த கட்டடங்களுக்கும் “அல்ஹிஜ்ர்' எனலாம். பெட்டைக் குதிரையும் “ஹிஜ்ர்' எனப்படுகிறது. (அதைப் போன்று) அறிவுக்கும் “ஹிஜ்ர்' என்றும், “ஹிஜா' என்றும் சொல்லப்படுவதுண்டு.
“ஸமூத்' குலத்தார் வாழ்ந்த பகுதியும் “ஹிஜ்ர்' எனப்படுவதுண்டு.
தரையில் நீ பிரித்துவிட்ட பகுதியும் “ஹிஜ்ர்' எனப்படும். இதனால்தான், இறையில்லம் கஅபாவை ஒட்டியுள்ள “ஹத்தீம்' (எனும் வில் வடிவ அமைப்பிலுள்ள கால் வட்டச் சுவரும்) “ஹிஜ்ர்' (பிரிக்கப்பட்டது) எனப்படுகிறது.
(“ஃபஈல்' எனும் வாய்பாட்டில் அமைந்த இந்த) “ஹத்தீம்' எனும் சொல் (செயப்பாட்டுவினை எச்சமான) “மஹ்த்தூம்' (பிரிக்கப்பட்டது) என்ற பொருள் கொண்டதாகும். “கத்தீல்' என்பதற்கு “மக்த்தூல்' (கொல்லப்பட்டவன்) உடைய பொருள் இருப்பதைப் போல.
யமாமாவின் “ஹஜ்ர்' என்பது, (யமனுக்கும் ஹிஜாஸுக்கும் இடையிலுள்ள) ஒரு பகுதியாகும்.
பாடம் : 9
“உங்கள் சாட்சிகளைக் கொண்டுவாருங்கள்” எனும் (6:150ஆவது) வசனத்தொடர்
(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹலும்ம' (கொண்டுவாருங்கள்) எனும் சொல் ஹிஜாஸ்வாசிகளின் மொழி வழக்குப்படி ஒருமைக்கும் இருமைக்கும் பன்மைக்கும் ஆக, அனைத்துக்குமே பயன்படுத்தப்படுவதாகும்.
பாடம் : 10
உம்முடைய இறைவனின் சான்றுகள் சில வெளிப்படும் (யுகமுடிவு) நாளன்று, முன்னரே இறைநம்பிக்கை கொள்ளா திருந்த மனிதருக்கோ, அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந் தாலும் அதற்கேற்ப நன்மை புரியாதிருந்த மனிதருக்கோ அவர் (அப்போது) இறைநம்பிக்கை கொள்வது எவ்விதப் பயனையும் அளிக்காது (எனும் 6:158ஆவது வசனத்தொடர்)
4635. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு மேற்கில் உதயமாவதை மக்கள் பார்க்கும்போது, பூமியின் மீதிருப்பவர்கள் இறைநம்பிக்கை கொள்வார்கள். அதற்கு முன் இறைநம்பிக்கை கொள்ளாமலிருந்த எந்த மனிதருக்கும் அவர் (அப்போது) கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காத வேளையாய் அது இருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 65
4635. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு மேற்கில் உதயமாவதை மக்கள் பார்க்கும்போது, பூமியின் மீதிருப்பவர்கள் இறைநம்பிக்கை கொள்வார்கள். அதற்கு முன் இறைநம்பிக்கை கொள்ளாமலிருந்த எந்த மனிதருக்கும் அவர் (அப்போது) கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காத வேளையாய் அது இருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 65
4636. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا فَإِذَا طَلَعَتْ وَرَآهَا النَّاسُ آمَنُوا أَجْمَعُونَ، وَذَلِكَ حِينَ لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا ". ثُمَّ قَرَأَ الآيَةَ.
பாடம் : 8
(6:102ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ(க்)கீல்' எனும் சொல்லுக்கு “கண்காணித்துப் பாதுகாப்பவன்' என்பது பொருள்.
(6:111ஆவது வசனத்தின் மூலத்திலுள்) “குபுல்' எனும் சொல் கபீல் எனும் சொல்லின் பன்மையாகும். “பல வகை வேதனைகள்' என்பது அதன் பொருளாகும். ஒவ்வொரு வகையும் “கபீல்' எனப்படும்.
(6:112ஆவது வசனத்தின் மூலத் திலுள்ள) “ஸுக்ருஃபுல் கவ்ல்' எனும் சொற்றொடரானது, எழிலூட்டி அலங் கரித்துக்காட்டும் எல்லா போலிகளையும் குறிக்கும்.
(6:138ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) “ஹிஜ்ர்' எனும் சொல்லுக்கு “தடுக்கப்பட்டது' என்பது பொருள். தடை விதிக்கப்பட்ட எல்லாப் பொருட்களுக்கும் “ஹிஜ்ருன் மஹ்ஜூர்' எனப்படும். நீ கட்டி முடித்த கட்டடங்களுக்கும் “அல்ஹிஜ்ர்' எனலாம். பெட்டைக் குதிரையும் “ஹிஜ்ர்' எனப்படுகிறது. (அதைப் போன்று) அறிவுக்கும் “ஹிஜ்ர்' என்றும், “ஹிஜா' என்றும் சொல்லப்படுவதுண்டு.
“ஸமூத்' குலத்தார் வாழ்ந்த பகுதியும் “ஹிஜ்ர்' எனப்படுவதுண்டு.
தரையில் நீ பிரித்துவிட்ட பகுதியும் “ஹிஜ்ர்' எனப்படும். இதனால்தான், இறையில்லம் கஅபாவை ஒட்டியுள்ள “ஹத்தீம்' (எனும் வில் வடிவ அமைப்பிலுள்ள கால் வட்டச் சுவரும்) “ஹிஜ்ர்' (பிரிக்கப்பட்டது) எனப்படுகிறது.
(“ஃபஈல்' எனும் வாய்பாட்டில் அமைந்த இந்த) “ஹத்தீம்' எனும் சொல் (செயப்பாட்டுவினை எச்சமான) “மஹ்த்தூம்' (பிரிக்கப்பட்டது) என்ற பொருள் கொண்டதாகும். “கத்தீல்' என்பதற்கு “மக்த்தூல்' (கொல்லப்பட்டவன்) உடைய பொருள் இருப்பதைப் போல.
யமாமாவின் “ஹஜ்ர்' என்பது, (யமனுக்கும் ஹிஜாஸுக்கும் இடையிலுள்ள) ஒரு பகுதியாகும்.
பாடம் : 9
“உங்கள் சாட்சிகளைக் கொண்டுவாருங்கள்” எனும் (6:150ஆவது) வசனத்தொடர்
(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹலும்ம' (கொண்டுவாருங்கள்) எனும் சொல் ஹிஜாஸ்வாசிகளின் மொழி வழக்குப்படி ஒருமைக்கும் இருமைக்கும் பன்மைக்கும் ஆக, அனைத்துக்குமே பயன்படுத்தப்படுவதாகும்.
பாடம் : 10
உம்முடைய இறைவனின் சான்றுகள் சில வெளிப்படும் (யுகமுடிவு) நாளன்று, முன்னரே இறைநம்பிக்கை கொள்ளா திருந்த மனிதருக்கோ, அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந் தாலும் அதற்கேற்ப நன்மை புரியாதிருந்த மனிதருக்கோ அவர் (அப்போது) இறைநம்பிக்கை கொள்வது எவ்விதப் பயனையும் அளிக்காது (எனும் 6:158ஆவது வசனத்தொடர்)
4636. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை யுக முடிவு நாள் வராது. சூரியன் (மேற்குத் திசையில்) உதயமாகி மக்கள் அதைப் பார்க்கும்போது அவர்கள் அனைவருமே இறைநம்பிக்கை கொள்வார்கள். அது, எந்த மனிதருக்கும் அவரது (அப்போதைய புதிய) இறைநம்பிக்கை பயனளிக்காத நேரமாகும்” என்று கூறிவிட்டு, “உம்முடைய இறைவனின் சான்றுகள் சில வெளிப்படும் (யுகமுடிவு) நாளில் முன்னரே இறைநம்பிக்கை கொள்ளாதிருந்த மனிதருக்கும், அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தும் அதற்கேற்ப நன்மை புரியாதிருந்த மனிதருக்கும் அவர் (அப்போது) இறைநம்பிக்கை கொள்வது எவ்விதப் பயனையும் அளிக்காது” எனும் இந்த (6:158ஆவது) வசனத்தை ஓதினார்கள்.14

4637. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قُلْتُ أَنْتَ سَمِعْتَ هَذَا مِنْ عَبْدِ اللَّهِ قَالَ نَعَمْ، وَرَفَعَهُ. قَالَ " لاَ أَحَدَ أَغْيَرُ مِنَ اللَّهِ، فَلِذَلِكَ حَرَّمَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَلاَ أَحَدَ أَحَبُّ إِلَيْهِ الْمِدْحَةُ مِنَ اللَّهِ، فَلِذَلِكَ مَدَحَ نَفْسَهُ ".
பாடம்:
7. “அல்அஃராஃப்' அத்தியாயம்1
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(7:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “ரீஷ்' எனும் சொல், மற்றோர் ஓதல் முறையில் “ரியாஷ்' என்று வந்துள்ளது. அந்த) “ரியாஷ்' எனும் சொல்லுக்கு “செல்வச் செழிப்பு' என்பது பொருள்.
(7:55ஆவது வசனத்தில் இடம்பெற்றுள்ள) “நிச்சயமாக அவன் எல்லை மீறுவோரை நேசிப்பதில்லை” எனும் தொடருக்கு, துஆ (பிரார்த்தனை) முதலானவற்றில் வரம்பு மீறுவோரை என்பது பொருள்.
(7:95ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஃபவ்' எனும் சொல்லுக்கு, “அவர்களின் எண்ணிக்கையும் அவர்களது சொத்து பத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது” என்று பொருள்.
(7:89ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஃப்தஹ் பைனனா' எனும் சொற்றொடருக்கு, “எங்களிடையே தீர்ப்பளி' என்று பொருள். (இச்சொல்லில் இருந்து வந்த 34:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்ஃபத்தாஹ்' எனும் சொல்லுக்கு “தீர்ப்பளிப்பவன்' என்பது பொருள்.
(7:171ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “நத்தக்னல் ஜபல' எனும் வாக்கியத்திற்கு “அந்த (சினாய்) மலையை நாம் உயர்த்தினோம்' என்று பொருள்.
(7:160ஆவது வசனத்தில்) “பீறிட்டோடின' என்று குறிப்பிடப்பட்டுள்ள பொருள், மூலத்திலுள்ள “ஃபம்பஜஸத்' எனும் சொல்லுக்குரியதாகும்.
(7:139ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முத்தப்பர்' எனும் சொல்லுக்கு “இழப்புக்குரியது' என்று பொருள்.
(7:93ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஆசா' எனும் சொல்லுக்கு “கவலைப்படுவேன்' என்று பொருள். (இதே இனச் சொல்லும், 5:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ளதுமான) “தஃஸ' எனும் சொல்லுக்கு “கவலைப்படுதல்' என்பது பொருள்.
(இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாத) மற்றவர்கள் கூறுகிறார்கள்:
(7:12ஆவது வசனத்தில்) “நீ சிரம் பணியாதிருக்கும்படி உன்னைத் தடுத்தது எது?' என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கு “நீ ஏன் சிரம் பணியவில்லை?' என்று பொருள்.
(7:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யஃக்ஸிஃபானி' எனும் சொல்லுக்கு “அச்சோலையின் இலைகளை எடுத்துத் தங்களை மூடிக்கொள்ள அவர்கள் இருவரும் முயன்றனர்' என்று பொருள். அதாவது அந்த இலைகளில் ஒன்றோ டொன்றைக் கோத்துத் தங்க(ள் மறைவிடங்)களை மறைத்துக்கொள்ள முயன்றனர்'எனப் பொருள் விரியும்.
(இதே வசனத்திலுள்ள) “சவ்ஆத்' (மறைவிடங்கள்) எனும் சொல், அவர்களின் பிறவி உறுப்புகளைக் குறிப்பிடுகிறது.
(7:24ஆவது வசனத்திலுள்ள) “ஒரு காலம்வரை சுகம்' என்பது அப்போதிருந்து மறுமை நாள்வரை உள்ள காலத்தைக் குறிக்கிறது. “அல்ஹீன்' (காலம், நேரம்) எனும் சொல் அரபுகளிடம் சிறிது நேரம் முதல் எண்ணிறந்த காலம்வரை (எல்லா நேரத்தையும்) குறிக்கும்.
“ரியாஷ்' எனும் சொல்லும் (7:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ரீஷ்' எனும் சொல்லும் (“வெளிப்புற ஆடை' என்ற) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.
(7:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கபீலுஹு' (அவனுடைய இனத்தார்) எனும் சொல், ஷைத்தானுடைய தலைமுறையைக் குறிக்கும்.
(7:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இத்தாரகூ' எனும் சொல்லுக்கு “அவர்கள் குழுமினர்' என்பது பொருள்.
(7:40ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “சம்மு' எனும் சொல்லுக்கு “துவாரம்' என்பது பொருள். இதன் பன்மை “சுமூம்' என்பதாகும். மனிதன் மற்றும் கால்நடைகளின் (உடலிலுள்ள) அனைத்துத் துவாரங்களையும் இது குறிக்கும். அவையாவன: இரு கண்கள், நாசியின் இரு துளைகள், வாய், இரு காதுகள், ஆசனவாய், பிறவி உறுப்பு (ஆகிய உறுப்புகளின் துவாரங்கள்) ஆகும்.
(7:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃகவாஷ்' எனும் சொல்லுக்கு “அவர்களுக்குப் போர்த்தப்படும் போர்வை' என்பது பொருள்.
(7:57ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “புஷ்ரா- நற்செய்தி' எனும் சொல், மற்றோர் ஓதல் முறையில் “நுஷ்ரா' என்று வந்துள்ளது. அந்த) “நுஷ்ரா' எனும் சொல்லுக்கு “பரவலானது' என்று பொருள்.
(7:58ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “நகிதா' எனும் சொல்லுக்கு “சொற்பமானது' என்று பொருள்.
(7:92ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யஃக்னவ்' எனும் சொல்லுக்கு “வாழ்வார்கள்' என்பது பொருள்.
(7:105ஆவது வசனத்தில்) “கடமை' என்று குறிப்பிடப்பட்டுள்ள பொருள், மூலத்திலுள்ள “ஹகீக்' எனும் சொல்லுக்குரியதாகும்.
(7:116ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஸ்தர்ஹபூஹும்' (அவர்களைத் திடுக்கிடச் செய்தனர்) என்பது “ரஹ்பத்' (திடுக்கம்) எனும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும்.
(7:117ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “தல்கஃபு' எனும் சொல் மற்றோர் ஓதல் முறையில் “தலக்கஃபு' என்று வந்துள்ளது. அந்த) “தலக்கஃபு' எனும் சொல்லுக்கு, “விழுங்கிவிட்டது' என்று பொருள்.
(7:131ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தாயிருஹும்' எனும் சொல்லுக்கு “அவர்களுக்கேற்பட்ட கதி' என்று பொருள்.
(7:133ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தூஃபான்' எனும் சொல்லுக்கு “வெள்ளப் பெருக்கு' என்று பொருள். ஏராளமான உயிர்ச் சேதமும் “தூஃபான்' எனப்படுவதுண்டு.
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “கும்மல்' எனும் சொல், சிறு பூச்சி வகையான செடிப்பேனைக் குறிக்கும்.
(7:137ஆவது வசனத்தில் “மா கானூ யஅரிஷூன்' என்பதற்கு “அவர்கள் கட்டியிருந்த' என்பது பொருள். “யஅரிஷூன்' எனும் சொல்லின் பெயர்ச் சொற்களான) “உரூஷ்', “அரீஷ்' ஆகிய சொற்களுக்கு “கட்டடம்' என்பது பொருள்.
(7:149ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “சுகி(த்)த (ஃபீ அய்தீஹிம்)' எனும் சொல்லுக்கு “வருந்தினான்' என்பது பொருள். வருத்தப்படும் ஒவ்வொருவரையும் “சுகித்த ஃபீ யதிஹி' (கையில் தலையைக் கவிழ்த்தவன்) எனப்படும்.
(7:160ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஸ்பாத்' எனும் சொல், இஸ்ராயீல் சந்ததிகளின் (பன்னிரு) குலங்களைக் குறிக்கும்.
(7:163ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யஅதூன ஃபிஸ்ஸப்தி' என்பதற்கு “சனிக்கிழமையன்று எல்லை மீறிக்கொண்டிருந்தனர்' என்று பொருள். “தஅது' எனும் சொல்லுக்கு “நீ எல்லை மீறுகிறாய்' என்று பொருள்.
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “ஷுர்ரஅன்' எனும் சொல்லுக்கு “நீர் மட்டம்' என்பது பொருள்.
(7:165ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “பயீஸ்' எனும் சொல்லுக்கு “கடுமையானது' என்று பொருள்.
(7:176ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அக்லத இலல் அர்ள்' எனும் சொற்றொடருக்கு “அவன் இவ்வுலக (ஆசாபாச)த்தின்பால் சரிந்து முடங்கிக் கிடந்தான்' என்று பொருள்.
(7:182ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ச நஸ்தத்ரிஜுஹும்' எனும் சொல்லுக்கு, “அவர்கள் அச்சமற்று இருக்குமிடத்தில் நாம் அவர்களை (அழிக்க) வந்தோம்' என்று பொருள். “அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அல்லாஹ் அவர்களிடம் வந்(து அழித்)தான்” எனும் (59:2) வசனம் இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
(7:184ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மின் ஜின்னத்' எனும் சொல்லுக்கு “பைத்தியம்' என்று பொருள்.
(7:187ஆவது வசத்தின் மூலத்திலுள்ள) “அய்யான முர்சாஹா' எனும் வாக்கியத்திற்கு, “மறுமையின் வருகை எப்போது?' என்று பொருள்.
(7:189ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃப மர்ரத் பிஹி' எனும் வாக்கியத்திற்கு “அவர் (ஹவ்வா) கர்ப்பத்தைச் சுமந்துகொண்டேயிருந்து பூர்த்தி செய்தார்” என்று பொருள்.
(7:200ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யன்ஸஃகன்னக்க' எனும் சொல்லுக்கு “உம்மைக் குழப்பமடையச் செய்தான்' என்று பொருள்.
(7:201ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “தாயிஃப்' எனும் சொல் மற்றோர் ஓதல் முறையில் “தய்ஃப்' என்று வந்துள்ளது. அந்த) “தய்ஃப்' எனும் சொல்லுக்கு “ஷைத்தானின் தீண்டுதல்' என்று பொருள். (“தய்ஃப்' என்ற இச்சொல்) தாயிஃப் என்றும் ஓதப்படுகிறது. இதற்கும் அதற்கும் ஒரே பொருள்தான்.
(7:202ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யமுத்தூனஹும்' எனும் சொல்லுக்கு “அவர்களுக்கு (சாத்தானின் சகோதரர்கள் தவறான வழிகளை) அலங்கரித்துக் காட்டுகிறார்கள்” என்று பொருள்.
(7:205ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ கீஃபத்' எனும் சொல்லுக்கு “பயம்' என்று பொருள். (கிட்டத்தட்ட இதே சாடையிலமைந்த) “குஃப்யத்' எனும் சொல் “இக்ஃபா' (மறைத்தல்) என்பதிலிருந்து பிறந்ததாகும்.
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “வல் ஆஸால்' (மாலை) என்பதற்கு “அஸ்ருக்கும் மஃக்ரிபுக்கும் இடைப்பட்ட நேரம்' என்று பொருள். இதன் ஒருமை “அஸீல்' என்பதாகும். “புக்ரத்தன் வ அஸீலா' (காலை, மாலை) என்ற சொல்லாடல் இதற்கு எடுத்துக்காட்டாகும்.
பாடம் : 1
என் இறைவன் வெளிப்படை யாகவும் மறைவாகவும் உள்ள மானக்கேடான செயல்களையே தடை செய்துள்ளான் என்று (நபியே!) நீர் கூறுவீராக! (எனும் 7:33ஆவது வசனத்தொடர்)
4637. அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் (பின்வரும்) இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகச் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அவர்கள், “ஆம்! அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அவர்கள் சொன்னார்கள்” என்று பதிலளித்தார்கள்.
“அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுடையவர் வேறெவருமிலர். ஆகவேதான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, மறைவானவை அனைத்தையும் அவன் தடை செய்துள்ளான். மேலும், அல்லாஹ்வைவிட அதிகமாகப் புகழ்ச்சியை விரும்பக்கூடியவர் வேறெவரும் இலர். ஆகவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டுள்ளான்” என்று கூறினார்கள்.2

4638. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ رَجُلٌ مِنَ الْيَهُودِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَدْ لُطِمَ وَجْهُهُ وَقَالَ يَا مُحَمَّدُ إِنَّ رَجُلاً مِنْ أَصْحَابِكَ مِنَ الأَنْصَارِ لَطَمَ وَجْهِي. قَالَ " ادْعُوهُ ". فَدَعَوْهُ قَالَ " لِمَ لَطَمْتَ وَجْهَهُ ". قَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي مَرَرْتُ بِالْيَهُودِ فَسَمِعْتُهُ يَقُولُ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْبَشَرِ. فَقُلْتُ وَعَلَى مُحَمَّدٍ وَأَخَذَتْنِي غَضْبَةٌ فَلَطَمْتُهُ. قَالَ " لاَ تُخَيِّرُونِي مِنْ بَيْنِ الأَنْبِيَاءِ، فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ يَوْمَ الْقِيَامَةِ فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ، فَإِذَا أَنَا بِمُوسَى آخِذٌ بِقَائِمَةٍ مِنْ قَوَائِمِ الْعَرْشِ، فَلاَ أَدْرِي أَفَاقَ قَبْلِي أَمْ جُزِيَ بِصَعْقَةِ الطُّورِ ".
பாடம் : 2
நாம் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு மூசா வந்ததும் அவருடைய இறைவன் அவருடன் உரையாடிய போது, “என் இறைவா! எனக்கு நீ காட்சியளிப்பாயாக! நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்” என்று வேண்டினார். அதற்கு இறைவன், “என்னை நீர் ஒருபோதும் காண முடியாது. ஆயினும் (எதிரிலுள்ள) மலையைப் பாரும்! அது தனது இருப்பிடத்தில் நிலைத்திருந்தால் என்னை நீர் காண முடியும்” என்று கூறினான்.
அவ்வாறே அவருடைய இறைவன் அம்மலையின் மீது வெளிப்பட்டபோது அது சுக்குநூறாகிவிட்டது; மூசாவும் மூர்ச்சையாகிச் சரிந்தார். பிறகு மூர்ச்சை தெளிந்தபோது, “(இறைவா!) நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். மேலும், நான் இறைநம்பிக்கை கொண்டோரில் முதன்மையான வனாக இருக்கின்றேன்” என்று கூறினார் (எனும் 7:143ஆவது வசனம்)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “அரினீ' எனும் சொல்லுக்கு “எனக்கு வழங்குவாயாக' என்பது பொருள்.
4638. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் ஒருவர் (அன்சாரி ஒருவரிடம்) தமது முகத்தில் அறைவாங்கிக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “அவரைக் கூப்பிடுங்கள்” என்று சொன்னார்கள். உடனே மக்கள் அவரை அழைத்(து வந்)தனர்.
நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இவர் முகத்தில் ஏன் அறைந்தீர்கள்?” என்று கேட்க அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் யூதர்களைக் கடந்து சென்றேன். அப்போது இவர், “மனிதர்கள் அனைவரிலும் மூசாவை (சிறந்தவராக)த்தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக!” என்று சொல்லக் கேட்டேன். உடனே நான், “முஹம்மதை விடவுமா?” என்று கேட்டேன். எனக்குக் கோபம் மேலிட, நான் இவரை அறைந்துவிட்டேன்” என்று சொன்னார்.
நபி (ஸல்) அவர்கள், “இறைத்தூதர் களுக்கிடையே என்னைச் சிறந்தவர் ஆக்காதீர்கள். ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையாகிவிடுவார்கள். மூர்ச்சை தெளிந்து எழுகின்றவர்களில் முதல் ஆளாக நான் இருப்பேன். அப்போது நான் மூசாவின் அருகே இருப்பேன். அவர் இறைவனுடைய அரியணையின் (அர்ஷின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக்கொண்டிருப்பார். அவர் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டாரா, அல்லது “தூர்சீனா' மலையில் (இறைவனைச் சந்திக்கச் சென்றபோது) அடைந்த மூர்ச்சைக்குப் பதிலாக இங்கு (மூர்ச்சையாக்கப்படாமல்) விட்டுவிடப்பட்டாரா என்பது எனக்குத் தெரியாது” என்று சொன்னார்கள்.3
மன்னும் சல்வாவும்4

4639. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْكَمْأَةُ مِنَ الْمَنِّ وَمَاؤُهَا شِفَاءُ الْعَيْنِ ".
பாடம் : 2
நாம் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு மூசா வந்ததும் அவருடைய இறைவன் அவருடன் உரையாடிய போது, “என் இறைவா! எனக்கு நீ காட்சியளிப்பாயாக! நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்” என்று வேண்டினார். அதற்கு இறைவன், “என்னை நீர் ஒருபோதும் காண முடியாது. ஆயினும் (எதிரிலுள்ள) மலையைப் பாரும்! அது தனது இருப்பிடத்தில் நிலைத்திருந்தால் என்னை நீர் காண முடியும்” என்று கூறினான்.
அவ்வாறே அவருடைய இறைவன் அம்மலையின் மீது வெளிப்பட்டபோது அது சுக்குநூறாகிவிட்டது; மூசாவும் மூர்ச்சையாகிச் சரிந்தார். பிறகு மூர்ச்சை தெளிந்தபோது, “(இறைவா!) நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். மேலும், நான் இறைநம்பிக்கை கொண்டோரில் முதன்மையான வனாக இருக்கின்றேன்” என்று கூறினார் (எனும் 7:143ஆவது வசனம்)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “அரினீ' எனும் சொல்லுக்கு “எனக்கு வழங்குவாயாக' என்பது பொருள்.
4639. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் (தானாக வளர்வதில்) “மன்னு'வின் வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.5

4640. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَمُوسَى بْنُ هَارُونَ، قَالاَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلاَءِ بْنِ زَبْرٍ، قَالَ حَدَّثَنِي بُسْرُ بْنُ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي أَبُو إِدْرِيسَ الْخَوْلاَنِيُّ، قَالَ سَمِعْتُ أَبَا الدَّرْدَاءِ، يَقُولُ كَانَتْ بَيْنَ أَبِي بَكْرٍ وَعُمَرَ مُحَاوَرَةٌ، فَأَغْضَبَ أَبُو بَكْرٍ عُمَرَ، فَانْصَرَفَ عَنْهُ عُمَرُ مُغْضَبًا، فَاتَّبَعَهُ أَبُو بَكْرٍ يَسْأَلُهُ أَنْ يَسْتَغْفِرَ لَهُ، فَلَمْ يَفْعَلْ حَتَّى أَغْلَقَ بَابَهُ فِي وَجْهِهِ، فَأَقْبَلَ أَبُو بَكْرٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أَبُو الدَّرْدَاءِ وَنَحْنُ عِنْدَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمَّا صَاحِبُكُمْ هَذَا فَقَدْ غَامَرَ ". قَالَ وَنَدِمَ عُمَرُ عَلَى مَا كَانَ مِنْهُ فَأَقْبَلَ حَتَّى سَلَّمَ وَجَلَسَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَصَّ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْخَبَرَ. قَالَ أَبُو الدَّرْدَاءِ وَغَضِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَجَعَلَ أَبُو بَكْرٍ يَقُولُ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ لأَنَا كُنْتُ أَظْلَمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هَلْ أَنْتُمْ تَارِكُو لِي صَاحِبِي هَلْ أَنْتُمْ تَارِكُو لِي صَاحِبِي إِنِّي قُلْتُ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا فَقُلْتُمْ كَذَبْتَ. وَقَالَ أَبُو بَكْرٍ صَدَقْتَ قَالَ أَبُو عَبْد اللَّهِ غَامَرَ سَبَقَ بِالْخَيْر".
பாடம் : 3
(நபியே!) கூறுக: மனிதர்களே! நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி எவனுக்குரியதோ அந்த அல்லாஹ்வின் தூதராக நான் உங்கள் அனைவருக்காகவும் அனுப்பப்பட்டுள்ளேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனே உயிரளிக்கின்றான்; இறக்கச் செய்கின்றான்.
எனவே, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவனால் அனுப்பப்பட்ட “உம்மீ' (எழுத்தறிவற்ற) தூதர்மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். அவரோ அல்லாஹ்வையும் அவனது வேத வாக்குகளையும் நம்புகின்றார். ஆகவே, அவரைப் பின்பற்றுங்கள்; அதனால் நீங்கள் நல்வழி பெறக்கூடும் (எனும் 7:158ஆவது இறைவசனம்)
4640. அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு சமயம்) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை கோபப்படுத்திவிட்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் கோபத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்குப் பின்னாலேயே சென்று தம்மை மன்னித்துவிடுமாறு வேண்டினார்கள். ஆனால், உமர் (ரலி) அவர்கள் மன்னிக்காமல் அபூபக்ர் (ரலி) அவர்களின் முகத்திற்கு முன்னால்(தம் வீட்டுக்) கதவைச் சாத்தினார்கள். ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வந்தார்கள்.
(அப்போது) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அபூபக்ர் (ரலி) அவர்கள் வருவதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதோ உங்கள் தோழர் வழக்காடிவிட்டு வந்திருக்கிறார்” என்று சொன்னார்கள். (பிறகு) உமர் (ரலி) அவர்களும் தம்மால் ஏற்பட்டுவிட்ட செயலுக்கு வருந்தியவராக நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்து சலாம் (முகமன்) கூறி அமர்ந்தார்கள்; (நடந்த) செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தார்கள்.
(அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபப்பட்டார்கள். (இதைக் கண்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (வாக்குவாதத்தை தொடங்கிவைத்ததால் உமரைவிட) நானே அதிகம் அநீதியிழைத்தவனாகிவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறலானார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(மக்களே!) என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டுவிடுவீர்களா? என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டுவிடுவீர்களா? (ஒரு காலத்தில்) “மக்களே! நான் உங்கள் அனைவருக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்' என்று சொன்னேன். அப்போது நீங்கள், “பொய் சொல்கிறீர்' என்று கூறினீர்கள். ஆனால் அபூபக்ர் அவர்களோ, “நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்” என்றார்கள்.6
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்:
(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) “ஃகாமர' எனும் சொல்லுக்கு “நன்மையில் முந்திக்கொண்டார்' என்பது பொருள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

4641. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قِيلَ لِبَنِي إِسْرَائِيلَ {ادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ} فَبَدَّلُوا فَدَخَلُوا يَزْحَفُونَ عَلَى أَسْتَاهِهِمْ وَقَالُوا حَبَّةٌ فِي شَعَرَةٍ ".
பாடம் : 4
“ஹித்தத்துன் (எங்கள் பாவச் சுமையை இறக்குவாயாக!) என்று சொல்(லியவாறே செல்)லுங்கள்” எனும் (7:161ஆவது) வசனத்தொடர்
4641. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்ரவேலர்களிடம், “ஹித்ததுன்' (எங்கள் பாவச் சுமையை இறக்குவாயாக!) என்று கூறிக்கொண்டே அதன் வாயிலில் சிரம் தாழ்த்தியவர்களாய் நுழையுங்கள். நாம் உங்களுடைய குற்றங்களை மன்னித்துவிடுவோம்” என்று கூறப்பட்டது.
ஆனால், (அவர்கள் தமக்குக் கூறப்பட்ட வார்த்தையை) மாற்றி(க் கூறி)யபடி தம் புட்டங்களால் தவழ்ந்த வண்ணம் சென்றார்கள். மேலும் (உள்ளே நுழையும்போது) “ஹப்பத்துன் ஃபீ ஷஅரத்தின்” (ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானிய வித்து) என்று (பரிகாசமாகச்) சொன்னார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.7

4642. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ عُيَيْنَةُ بْنُ حِصْنِ بْنِ حُذَيْفَةَ فَنَزَلَ عَلَى ابْنِ أَخِيهِ الْحُرِّ بْنِ قَيْسٍ، وَكَانَ مِنَ النَّفَرِ الَّذِينَ يُدْنِيهِمْ عُمَرُ، وَكَانَ الْقُرَّاءُ أَصْحَابَ مَجَالِسِ عُمَرَ وَمُشَاوَرَتِهِ كُهُولاً كَانُوا أَوْ شُبَّانًا. فَقَالَ عُيَيْنَةُ لاِبْنِ أَخِيهِ يَا ابْنَ أَخِي، لَكَ وَجْهٌ عِنْدَ هَذَا الأَمِيرِ فَاسْتَأْذِنْ لِي عَلَيْهِ. قَالَ سَأَسْتَأْذِنُ لَكَ عَلَيْهِ. قَالَ ابْنُ عَبَّاسٍ فَاسْتَأْذَنَ الْحُرُّ لِعُيَيْنَةَ فَأَذِنَ لَهُ عُمَرُ، فَلَمَّا دَخَلَ عَلَيْهِ قَالَ هِيْ يَا ابْنَ الْخَطَّابِ، فَوَاللَّهِ مَا تُعْطِينَا الْجَزْلَ، وَلاَ تَحْكُمُ بَيْنَنَا بِالْعَدْلِ. فَغَضِبَ عُمَرُ حَتَّى هَمَّ بِهِ، فَقَالَ لَهُ الْحُرُّ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِنَّ اللَّهَ تَعَالَى قَالَ لِنَبِيِّهِ صلى الله عليه وسلم {خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ} وَإِنَّ هَذَا مِنَ الْجَاهِلِينَ. وَاللَّهِ مَا جَاوَزَهَا عُمَرُ حِينَ تَلاَهَا عَلَيْهِ، وَكَانَ وَقَّافًا عِنْدَ كِتَابِ اللَّهِ.
பாடம் : 5
(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! அறிவீனர்களைவிட்டு விலகியிருப்பீராக! (எனும் 7:199ஆவது இறைவசனம்)
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “உர்ஃப்' எனும் சொல் “நன்மை'யைக் குறிக்கும்.
4642. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்களிடம் தங்கினார். உமர் (ரலி) அவர்கள் தம் அருகில் அமர்த்திக்கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு பின் கைஸ் இருந்தார். முதியவர்களோ இளைஞர் களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்த வர்களே உமர் (ரலி) அவர்களின் அவை யினராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர்.
ஆகவே, உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், “என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடத்தில் செல்வாக்கு உள்ளது. ஆகவே, அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத் தா” என்று சொன்னார். அதற்கு அவர், “உமர் (ரலி) அவர்களிடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்” என்று சொன்னார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹுர்ரு அவர்கள் அனுமதி கேட்டார். உமர் (ரலி) அவர்களும் அவருக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி கொடுத்தார்கள்.
உயைனா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் சென்றபோது, “கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை” என்று சொன்னார். உமர் (ரலி) அவர்கள் கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள். உடனே ஹுர்ரு (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உயர்ந்தோன் அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, “(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக!” (7:199) என்று கூறியுள்ளான். இவர் அறியாதவர்களில் ஒருவர்” என்று சொன்னார்.
அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு (ரலி) அவர்கள் இந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களுக்கு ஓதிக்காட்டியபோது உமர் (ரலி) அவர்கள் அதை மீறவில்லை. (பொதுவாக) உமர் (ரலி) அவர்கள் இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக் கூடியவர்களாய் இருந்தார்கள்.

4643. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، {خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ} قَالَ مَا أَنْزَلَ اللَّهُ إِلاَّ فِي أَخْلاَقِ النَّاسِ.
பாடம் : 5
(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! அறிவீனர்களைவிட்டு விலகியிருப்பீராக! (எனும் 7:199ஆவது இறைவசனம்)
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “உர்ஃப்' எனும் சொல் “நன்மை'யைக் குறிக்கும்.
4643. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக!” எனும் (7:199ஆவது) வசனத்தை, மக்களின் நற்குணங்களில் ஒன்றாகவே அல்லாஹ் அருளினான்.

4644. وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، قَالَ أَمَرَ اللَّهُ نَبِيَّهُ صلى الله عليه وسلم أَنْ يَأْخُذَ الْعَفْوَ مِنْ أَخْلاَقِ النَّاسِ. أَوْ كَمَا قَالَ.
பாடம் : 5
(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! அறிவீனர்களைவிட்டு விலகியிருப்பீராக! (எனும் 7:199ஆவது இறைவசனம்)
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “உர்ஃப்' எனும் சொல் “நன்மை'யைக் குறிக்கும்.
4644. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்களின் நற்குணங்களில் ஒன்றான மன்னிக்கும் போக்கை மேற்கொள்ளும்படி தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு (இவ்வசனத்தில்- 7:199) அல்லாஹ் கட்டளையிட் டுள்ளான்.8

4645. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، أَخْبَرَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ سُورَةُ الأَنْفَالِ قَالَ نَزَلَتْ فِي بَدْرٍ. الشَّوْكَةُ الْحَدُّ {مُرْدَفِينَ} فَوْجًا بَعْدَ فَوْجٍ، رَدِفَنِي وَأَرْدَفَنِي جَاءَ بَعْدِي {ذُوقُوا} بَاشِرُوا وَجَرِّبُوا وَلَيْسَ هَذَا مِنْ ذَوْقِ الْفَمِ {فَيَرْكُمَهُ} يَجْمَعُهُ. {شَرِّدْ} فَرِّقْ {وَإِنْ جَنَحُوا} طَلَبُوا {يُثْخِنَ} يَغْلِبَ. وَقَالَ مُجَاهِدٌ {مُكَاءً} إِدْخَالُ أَصَابِعِهِمْ فِي أَفْوَاهِهِمْ وَ{تَصْدِيَةً} الصَّفِيرُ {لِيُثْبِتُوكَ} لِيَحْبِسُوكَ.
பாடம்:
8. “அல்அன்ஃபால்' அத்தியாயம்1
பாடம் :
“(நபியே!) போரில் கிடைத்த பொருட்கள் குறித்து அவர்கள் உம்மிடம் வினவுகிறார்கள். கூறுவீராக: போரில் கிடைத்த பொருட்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியனவாகும். எனவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள். மேலும், உங்களுக்கிடையே (உள்ள உறவுகளைச்) சீராக்கிக்கொள்ளுங்கள். மேலும், நீங்கள் நம்பிக்கை கொண்டோராயின் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்” எனும் (8:1ஆவது) இறைவசனம்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) “அன்ஃபால்' எனும் சொல்லுக்கு “போரில் கிடைத்த பொருள்கள் (ஃகனீமத்கள்)' என்பது பொருள்.
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(8:46ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ரீஹுக்கும்' எனும் சொல்லுக்கு “உங்கள் போர் (வலிமை)' என்பது பொருள்.
நன்கொடைக்கும் “நாஃபிலா' என்று சொல்லப்படும்.
4645. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “அல்அன்ஃபால்' அத்தியாயம் (எது தொடர்பாக அருளப்பெற்றது என்பது) குறித்து வினவினேன். (அதற்கு) அவர்கள், “அது பத்ர் போர் தொடர்பாக அருளப்பெற்றது” என்று சொன்னார்கள்.
(மேலும், இந்த அத்தியாயத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள கீழ்க்கண்ட சொற்களுக்குப் பின்வருமாறு விளக்க மளிக்கப்பட்டுள்ளது:)
(8:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஷ்ஷவ்கத்' எனும் சொல்லுக்கு “(ஆயுத) முனை' என்பது பொருள்.
(8:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முர்திஃபீன்' எனும் சொல்லுக்கு “படை படையாக' என்பது பொருள். (இதன் வினைச்சொல்லான) “ரதிஃபனீ' மற்றும் “அர்தஃபனீ' என்பதற்கு “என்னைத் தொடர்ந்துவந்தான்' என்று பொருள்.
(8:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃதூகூ' (சுவைத்துப் பாருங்கள்) எனும் சொல்லுக்கு “அனுபவித்துப் பாருங்கள்' என்பது பொருள். வாயால் சுவைப்பதை இது குறிக்காது.
(8:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃபயர்குமஹு' எனும் சொல்லுக்கு “தீயோரை அவன் ஒன்றுசேர்ப்பான்' என்று பொருள்.
(8:57ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஷர்ரித்' எனும் சொல்லுக்கு “சிதறி(யோ)டச்செய்யுங்கள்' என்பது பொருள்.
(8:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ இன் ஜனஹூ' எனும் சொற்றொடருக்கு “அவர்கள் (சமாதானத்தைக்) கோரினால்' என்று பொருள்.
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “அஸ்ஸில்ம்' எனும் சொல்லும் “அஸ்ஸல்ம், அஸ்ஸலாம் ஆகிய சொற்களும் (“சமாதானம்' எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.
(8:67ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யுஸ்கின' எனும் சொல்லுக்கு “முறியடிப்பார்' என்று பொருள்.
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(8:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முகாஃ' எனும் சொல் “அவர்கள் தங்கள் விரல் (நுனி)களைத் தங்கள் வாய் களுக்குள் நுழைத்துக்கொள்வதைக்' குறிக்கும். “தஸ்தியா' எனும் சொல்லுக்கு “சீட்டியடித்தல்' என்று பொருள்.
(8:30ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லி யுஸ்பித்தூக்க' எனும் சொல்லுக்கு “உங்களை அடைத்துவைக்க' என்பது பொருள்.

4646. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا وَرْقَاءُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، {إِنَّ شَرَّ الدَّوَابِّ عِنْدَ اللَّهِ الصُّمُّ الْبُكْمُ الَّذِينَ لاَ يَعْقِلُونَ} قَالَ هُمْ نَفَرٌ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ.
பாடம் : 1
உயிரினங்களிலேயே அல்லாஹ்விடம் மோசமானவர்கள், (உண்மையை) விளங்கிக்கொள்ளாத செவிடரும் ஊமையரும்தான் (எனும் 8:22ஆவது இறைவசனம்)
4646. முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உயிரினங்களிலேயே அல்லாஹ்விடம் மோசமானவர்கள், (உண்மையை) விளங்கிக்கொள்ளாத செவிடரும் ஊமையரும்தான் எனும் (8:22ஆவது) இறைவசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், “பனூ அப்தித் தார் குலத்தைச் சேர்ந்த சிலர்தான் அவர்கள்” என்று சொன்னார்கள்.2

4647. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا رَوْحٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، سَمِعْتُ حَفْصَ بْنَ عَاصِمٍ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدِ بْنِ الْمُعَلَّى ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ أُصَلِّي فَمَرَّ بِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَدَعَانِي فَلَمْ آتِهِ حَتَّى صَلَّيْتُ، ثُمَّ أَتَيْتُهُ فَقَالَ "" مَا مَنَعَكَ أَنْ تَأْتِيَ أَلَمْ يَقُلِ اللَّهُ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ} ثُمَّ قَالَ لأُعَلِّمَنَّكَ أَعْظَمَ سُورَةٍ فِي الْقُرْآنِ قَبْلَ أَنْ أَخْرُجَ "". فَذَهَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِيَخْرُجَ فَذَكَرْتُ لَهُ.
وَقَالَ مُعَاذٌ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُبَيْبٍ، سَمِعَ حَفْصًا، سَمِعَ أَبَا سَعِيدٍ، رَجُلاً مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا، وَقَالَ هِيَ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} السَّبْعُ الْمَثَانِي.
பாடம் : 2
இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், உங்களுக்குப் புத்துயிரளிக்கும் (உண்மை) வழிக்கு உங்களை அழைக்கும்போது இத்தூதருக்கும் பதிலளியுங்கள். மனிதனுக்கும் அவனது மனத்துக்கும் இடையே அல்லாஹ் குறுக்கிடுகின்றான் என்பதையும், அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங் கள் (எனும் 8:24ஆவது இறை வசனம்)
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “இஸ்த்தஜீபூ' எனும் சொல்லுக்கு “பதிலளியுங்கள்' என்று பொருள். “லிமா யுஹ்யீக்கும்' (உங்களுக்குப் புத்துயிரளிக்கும்) என்பதற்கு “உங்களைச் சீராக்குகின்ற' என்பது பொருள்.
4647. அபூசயீத் பின் அல்முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (“மஸ்ஜிதுந் நபவீ' பள்ளிவாசலில்) தொழுதுகொண்டிருந்தேன். அப்போது என்னைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழு(து முடிக்கு)ம்வரை அவர்களிடம் செல்லவில்லை. பிறகு நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம், “நீங்கள் ஏன் என்னிடம் உடனே வரவில்லை? அல்லாஹ், “இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அவனுடைய தூதருக்கும் பதில் அளியுங்கள்' என்று கூறவில்லையா?” எனக் கேட்டார்கள்.
பிறகு, “நான் (பள்ளிவாசலிலிருந்து) புறப்படுவதற்கு முன்பாக குர்ஆனில் மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை உமக்குக் கற்பிக்கிறேன்” என்று கூறினார்கள். பின்னர் நபி அவர்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறப்போனார்கள். அப்போது நான் அவர்களுக்கு (அவர்கள் வாக்களித்ததை) நினைவூட்டினேன். நபி (ஸல்) அவர்கள், “அது அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' எனும் (அல்ஃபாத்திஹா அத்தியாயத்தின்) திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்தான்” என்று சொன்னார்கள்.3

4648. حَدَّثَنِي أَحْمَدُ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْحَمِيدِ ـ هُوَ ابْنُ كُرْدِيدٍ صَاحِبُ الزِّيَادِيِّ ـ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ أَبُو جَهْلٍ {اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوِ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ} فَنَزَلَتْ {وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ * وَمَا لَهُمْ أَنْ لاَ يُعَذِّبَهُمُ اللَّهُ وَهُمْ يَصُدُّونَ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ} الآيَةَ.
பாடம் : 3
மேலும், அவர்கள் இவ்வாறு கூறிய தையும் (நபியே!) நீர் நினைத்துப் பார்ப்பீராக: “இறைவா! இது உன்னிடமிருந்து அருளப்பெற்ற சத்தியம்தான் என்றிருப்பின், எங்கள்மீது வானத்திலிருந்துகல்மாரி பொழிந்துவிடு; அல்லது வதைக்கும் வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!” எனும் (8:32ஆவது) இறைவசனம்
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
குர்ஆனில் அல்லாஹ் “மத்(த)ர்' எனக் குறிப்பிட்டிருப்பது (பெரும்பாலும்) “வேதனை(க்காகப் பெய்த மழை)'யையே குறிக்கும். (பொதுவான மழையைக் குறிக்காது.) பொதுவான மழையைக் குறிக்க அரபியர் “அல்ஃகைஸ்' எனும் சொல்லையே பயன்படுத்துவர். “அவர்கள் நம்பிக்கையிழந்த பின்னரும் அவனே மழையைப் பொழிவிக்கின்றான்” எனும் (42:28ஆவது) வசனத்தில் இவ்வாறே (மழை என்பதைக் குறிக்க “அல்ஃகைஸ்' எனும் சொல்லே) ஆளப்பட்டுள்ளது.
4648. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூஜஹ்ல், “இறைவா! இது (குர்ஆன்) உன்னிடமிருந்து வந்த சத்தியம்தான் என்றிருப்பின் எங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையைஎங்களுக்குக் கொண்டுவா!” என்று சொன்னான்.
அப்போது “(நபியே!) நீர் அவர் களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்கள்மீது வேதனையைஇறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக்கொண்டி ருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப்போவதில்லை. அவர்கள் (கஅபா உள்ளிட்ட) மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்கு செல்ல விடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனைக்குள்ளாக்காமல் ஏன் இருக்க வேண்டும்? இறையச்சமுடையவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாக ஆக முடியும்! எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்” எனும் வசனங்கள் (8:33,34) அருளப்பெற்றன.