4587. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ كُنْتُ أَنَا وَأُمِّي، مِنَ الْمُسْتَضْعَفِينَ.
பாடம் : 14 “(அடக்கி ஒடுக்கப்பட்டு) பலவீனர்களாக்கப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்காக அல்லாஹ்வின் வழியில் நீங்கள் போர் புரியாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களோ, “எங்கள் இறைவா! அநீதியாளர்கள் வசிக்கும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றிடுவாயாக! இன்னும் எங்களுக்குப் பாதுகாவலரையும் உதவியாளரையும் உன்னிடமிருந்து வழங்குவாயாக!' எனப் பிரார்த்தித் துக் கொண்டிருக்கின்றனர்” எனும் (4:75ஆவது) இறைவசனம்
4587. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் என் தாயாரும் (மக்காவில் இஸ்லாத்தை ஏற்றிருந்த) ஒடுக்கப்பட்ட பலவீனமான பிரிவினரைச் சேர்ந்தவர் களாயிருந்தோம்.19


அத்தியாயம் : 65
4588. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، تَلاَ {ِلاَّ الْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ} قَالَ كُنْتُ أَنَا وَأُمِّي مِمَّنْ عَذَرَ اللَّهُ. وَيُذْكَرُ عَنِ ابْنِ عَبَّاسٍ {حَصِرَتْ} ضَاقَتْ {تَلْوُوا} أَلْسِنَتَكُمْ بِالشَّهَادَةِ. وَقَالَ غَيْرُهُ الْمُرَاغَمُ الْمُهَاجَرُ. رَاغَمْتُ هَاجَرْتُ قَوْمِي. {مَوْقُوتًا} مُوَقَّتًا وَقْتَهُ عَلَيْهِمْ.
பாடம் : 14 “(அடக்கி ஒடுக்கப்பட்டு) பலவீனர்களாக்கப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்காக அல்லாஹ்வின் வழியில் நீங்கள் போர் புரியாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களோ, “எங்கள் இறைவா! அநீதியாளர்கள் வசிக்கும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றிடுவாயாக! இன்னும் எங்களுக்குப் பாதுகாவலரையும் உதவியாளரையும் உன்னிடமிருந்து வழங்குவாயாக!' எனப் பிரார்த்தித் துக் கொண்டிருக்கின்றனர்” எனும் (4:75ஆவது) இறைவசனம்
4588. இப்னு அபீமுளைக்கா (அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “எந்த உத்தியையும் கையாள முடியாமல், எந்த வழியும் தெரியாமல் பலவீனமான நிலையில் இருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரைத் தவிர” எனும் (4:98ஆவது) இறைவசனத்தை ஓதிவிட்டு, “(ஹிஜ்ரத் செய்ய இயலாததால்) அல்லாஹ் மன்னிப்பளித்த (பலவீனமான)வர்களில் நானும் என் தாயாரும் இருந்தோம்” என்று சொன்னார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(4:90ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹஸிரத்' (மனம் ஒப்பாது) எனும் சொல்லுக்கு, “(அவர்களின் உள்ளங்கள் இடம் கொடுக்காமல்) குறுகிக்கொண்டன' என்பது பொருள்.

(4:135ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தல்வூ' (தவறாகச் சாட்சியம் கூறினால்) எனும் சொல்லுக்கு, “நீங்கள் (உண்மைக்குப் புறம்பாகச்) சாட்சியம் சொல்ல நாக்கைச் சுழற்றினால்” என்பது பொருள்.

மற்றவர்கள் கூறுகின்றனர்:

(4:100ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முராஃகம்' எனும் சொல்லுக்கு “புலம்பெயரும் இடம்' (தஞ்சம் புகுமிடம்) என்று பொருள். (இதன் இறந்த கால வினைச் சொல்லான) “ராஃகம்த்து' எனும் சொல்லுக்கு, “நான் என் சமுதாயத்தைத் துறந்துவிட்டேன்” என்பது பொருள்.

(4:103ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மவ்கூத்' எனும் சொல்லுக்கு “அவர்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட (கடமை)' என்பது பொருள்.

அத்தியாயம் : 65
4589. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، وَعَبْدُ الرَّحْمَنِ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ زَيْدِ بْنِ ثَابِت ٍ ـ رضى الله عنه ـ {فَمَا لَكُمْ فِي الْمُنَافِقِينَ فِئَتَيْنِ} رَجَعَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ أُحُدٍ، وَكَانَ النَّاسُ فِيهِمْ فِرْقَتَيْنِ فَرِيقٌ يَقُولُ اقْتُلْهُمْ. وَفَرِيقٌ يَقُولُ لاَ فَنَزَلَتْ {فَمَا لَكُمْ فِي الْمُنَافِقِينَ فِئَتَيْنِ} وَقَالَ " إِنَّهَا طَيْبَةُ تَنْفِي الْخَبَثَ كَمَا تَنْفِي النَّارُ خَبَثَ الْفِضَّةِ ".
பாடம் : 15 உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் இரு (வேறு கருத்துகள் கொண்ட) குழுவினராய் ஆகிவிட்டீர்களே! அல்லாஹ்வோ அவர்களை, அவர்கள் சம்பாதித்துக்கொண்ட (தீய)வற்றின் காரணத்தால் தலைகுனியச் செய்துவிட்டான் (எனும் 4:88ஆவது வசனத்தொடர்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “அர்கச' எனும் சொல்லுக்கு “பிரித்துத் தனித் தனியாக அவர்களின் கூட்டமைப்பைச் சிதறடித்துவிட்டான்' என்பது பொருள். “ஃபிஅத்' எனும் சொல்லுக்கு “குழுவினர்' என்பது பொருள்.
4589. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் 4:88ஆவது இறைவசனம் குறித்துக் கூறியதாவது:

(உஹுத் போருக்காக) நபி (ஸல்) அவர்களுடன் (சென்று) இருந்தவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) உஹுதிலிருந்து (வழியிலேயே) திரும்பி வந்துவிட்டனர். இவர்கள் விஷயத்தில் (என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாகக் கருத்து வேறுபாடு கொண்டு) மக்கள் இரு பிரிவினராக ஆகிவிட்டனர். ஒரு பிரிவினர், “(நயவஞ்சகர்களாகிய) அவர்களைக் கொன்றுவிடுங்கள் (அல்லாஹ்வின் தூதரே!)” என்று கூறினர். மற்றொரு பிரிவினர், “(வெளிப்படையில் முஸ்லிம்களாகிய அவர்களைக் கொல்ல) வேண்டாம்” என்று கூறினர்.

அப்போதுதான், “உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் இரு (வேறு கருத்துகள் கொண்ட) குழுவினராய் ஆகிவிட்டீர்களே! அல்லாஹ்வோ அவர்களை, அவர்கள் சம்பாதித்துக்கொண்ட (தீய)வற்றின் காரணத்தால் தலைகுனியச் செய்துவிட்டான்” எனும் (4:88ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

மேலும், நபி (ஸல்) அவர்கள், “மதீனா தூய்மையானது; நெருப்பு, வெள்ளியின் அழுக்கை நீக்கிவிடுவதைப் போல் அது தீமையை அகற்றிவிடும்” என்றுசொன்னார்கள்.20

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அமைதியளிக்கக்கூடிய அல்லது அச்சம் தரக்கூடிய ஏதேனும் செய்தி அவர்களிடம் வந்தால் அதை அவர்கள் பரப்பிவிடுகிறார்கள். ஆனால், அதைத் தூதரிடமும் அவர்களில் பொறுப்புள்ளவர்களிடமும் தெரிவித்திருப்பார் களாயின், நுணுகி ஆராயும் திறனுடையவர்கள் அ(ச்செய்தியின் உண்மை நிலை)தனை நன்கு அறிந்திருப்பார்கள் (எனும் 4:83ஆவது வசனத்தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “அஃதாஊ' எனும் சொல்லுக்கு “பரப்பிவிடுவார்கள்' என்பது பொருள். “யஸ்தன்பித்தூன' எனும் சொல்லுக்கு “ஆராய்ந்து முடிவு செய்கிறார்கள்' என்பது பொருள்.

(4:86ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) “ஹசீப்' எனும் சொல்லுக்கு “போதுமானவன்' என்பது பொருள்.

(4:117ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இனாஸ்' எனும் சொல் கல், மண் போன்ற உயிரற்ற பொருட்களைக் குறிக்கும். “மரீத்' எனும் சொல்லுக்கு “(தீமையில்) பிடிவாதமாக இருப்பவன்' என்பது பொருள்.

(4:119ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃபலயுபத்திகுன்ன' எனும் சொற்றொடருக்கு “அவர்கள் (தம் கால்நடைகளின் காதுகளைக்) கிழித்துத் துண்டிப்பார்கள்” என்பது பொருள்.

(4:122ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கீல்' எனும் பதமும் “கவ்ல்' எனும் பதமும் (பேச்சு, சொல் எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.

(4:155ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “தபஅ' எனும் சொல்லின் செயப்பாட்டு வினைச்சொல்லான) “துபிஅ' எனும் சொல்லுக்கு “முத்திரையிடப்பட்டது' என்பது பொருள்.

அத்தியாயம் : 65
4590. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ النُّعْمَانِ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، قَالَ {آيَةٌ} اخْتَلَفَ فِيهَا أَهْلُ الْكُوفَةِ، فَرَحَلْتُ فِيهَا إِلَى ابْنِ عَبَّاسٍ فَسَأَلْتُهُ عَنْهَا فَقَالَ نَزَلَتْ هَذِهِ الآيَةُ {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ} هِيَ آخِرُ مَا نَزَلَ وَمَا نَسَخَهَا شَىْءٌ.
பாடம் : 16 ஓர் இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்கின்றவனுக்குரிய தண்டனை நரகமேயாகும் (எனும் 4:93ஆவது வசனத்தொடர்)
4590. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இது (4:93ஆவது வசனம், இராக்கைச் சேர்ந்த) கூஃபாவாசிகள் (அதன் சட்டம் மாற்றப்பட்டுவிட்டதா இல்லையா என்பது தொடர்பாகக்) கருத்து வேறுபாடு கொண்டிருந்த வசனமாகும். நான் இந்த வசனம் குறித்து விளக்கம் கேட்பதற்காக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கேட்டேன்.

அவர்கள், “ஓர் இறைநம்பிக்கை யாளரை வேண்டுமென்றே கொலை செய்கின்றவனுக்குரிய தண்டனை நரகமேயாகும்” எனும் இந்த (4:93ஆவது) வசனம் அருளப்பெற்றது.

இதுதான் (இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்யும் குற்றம் தொடர்பாக) இறங்கிய கடைசி வசனமாகும்; இதை எதுவும் காலாவதியாக்கவில்லை” என்று கூறினார்கள்.21

அத்தியாயம் : 65
4591. حَدَّثَنِي عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ {وَلاَ تَقُولُوا لِمَنْ أَلْقَى إِلَيْكُمُ السَّلاَمَ لَسْتَ مُؤْمِنًا}. قَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ كَانَ رَجُلٌ فِي غُنَيْمَةٍ لَهُ فَلَحِقَهُ الْمُسْلِمُونَ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ، فَقَتَلُوهُ وَأَخَذُوا غُنَيْمَتَهُ، فَأَنْزَلَ اللَّهُ فِي ذَلِكَ إِلَى قَوْلِهِ {عَرَضَ الْحَيَاةِ الدُّنْيَا} تِلْكَ الْغُنَيْمَةُ. قَالَ قَرَأَ ابْنُ عَبَّاسٍ السَّلاَمَ.
பாடம் : 17 (தம்மை இறைநம்பிக்கையாளர் என்று உங்களுக்குக் காட்ட) உங்களுக்கு முகமன் (சலாம்) கூறிய வரிடம், நீர் இறைநம்பிக்கையாளர் அல்லர் என்று சொல்லாதீர்கள் (எனும் 4:94ஆவது வசனத்தொடர்) (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “சலாம்' எனும் சொல்லும் (இன்னும் இரு வகையான ஓதல் முறையில் வந்துள்ள) சில்ம், சலம் ஆகிய சொற்களும் (“சாந்தி' எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.
4591. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 4:94ஆவது வசனம் குறித்துக் கூறியதாவது:

ஒரு மனிதர் தமது சிறு ஆட்டு மந்தை(யை மேய்த்துக்கொண்டு அதன்) உடனிருந்தார். அப்போது (ஒரு படைப் பிரிவில் வந்த) முஸ்லிம்கள் அவரை (வழியில்) கண்டனர். அவர், “அஸ்ஸலாமு அலைக்கும்” (உங்கள்மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறினார். அவர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். அவரது ஆட்டுமந்தையையும் எடுத்துக்கொண்டனர். அப்போது இது தொடர்பாக (பின்வரும்) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இறைவழியில் (அறப்போருக் காக) புறப்படுவீர்களாயின் (பகைவரையும் நண்பரையும்) தெளிவாகப் பிரித்தறிந்துகொள்ளுங்கள். இவ்வுலகப் பொருளை நீங்கள் அடைய விரும்பி, (தம்மை இறைநம்பிக்கையாளர் என்று காட்ட) உங்களுக்கு முகமன் (சலாம்) கூறியவரிடம், நீர் இறைநம்பிக்கையாளர் அல்லர் என்று சொல்லாதீர்கள். (4:94)

(இங்கே “உலகப் பொருள்' என்பது) அந்த ஆட்டு மந்தைதான்.22

அறிவிப்பாளர் அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (இந்த வசனத்தில் “சலாம்' எனும் வார்த்தையை) சலாம் என்றே ஓதினார்கள். (சலம் என்று உச்சரிக்கவில்லை.)

அத்தியாயம் : 65
4592. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي سَهْلُ بْنُ سَعْدٍ السَّاعِدِيُّ، أَنَّهُ رَأَى مَرْوَانَ بْنَ الْحَكَمِ فِي الْمَسْجِدِ، فَأَقْبَلْتُ حَتَّى جَلَسْتُ إِلَى جَنْبِهِ، فَأَخْبَرَنَا أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمْلَى عَلَيْهِ لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ فَجَاءَهُ ابْنُ أُمِّ مَكْتُومٍ وَهْوَ يُمِلُّهَا عَلَىَّ قَالَ يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ لَوْ أَسْتَطِيعُ الْجِهَادَ لَجَاهَدْتُ ـ وَكَانَ أَعْمَى ـ فَأَنْزَلَ اللَّهُ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم وَفَخِذُهُ عَلَى فَخِذِي، فَثَقُلَتْ عَلَىَّ حَتَّى خِفْتُ أَنْ تُرَضَّ فَخِذِي، ثُمَّ سُرِّيَ عَنْهُ، فَأَنْزَلَ اللَّهُ {غَيْرَ أُولِي الضَّرَرِ}
பாடம் : 18 இநைம்பிக்கையாளர்களில்- இடை யூறு உள்ளவர்கள் தவிர- அறப் போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப் போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள் (எனும் 4:95ஆவது வசனத்தொடர்)
4592. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் மர்வான் பின் அல்ஹகமைப் பள்ளிவாசலில் பார்த்தேன். அவரை நோக்கிச் சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்துகொண்டேன். அப்போது அவர், ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) தமக்குத் தெரிவித்ததாக எங்களிடம் கூறினார்:

“இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள்” எனும் (4:95ஆவது) வசனத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நான் எழுதிப் பதிவு செய்வதற்காக) என்னிடம் ஓதிக்காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னிடம் ஓதிக்காட்டிக்கொண்டிருக்கும்போது, இப்னு உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக, என்னால் அறப்போர் புரிய முடிந்திருந்தால் அறப்போர் புரிந் திருப்பேன்” என்று சொன்னார்கள். அவர் கண்பார்வையற்றவராக இருந்தார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொடை என் தொடை மீதிருக்க, அவர்கள்மீது அல்லாஹ் (வேத அறிவிப்பை) அருளினான். ஆகவே, என் தொடை நசுங்கிப்போய்விடுமோ என்று நான் அஞ்சும் அளவுக்கு நபி (ஸல்) அவர்களின் தொடை என்மீது கனத்து (அழுத்தத் தொடங்கி)விட்டது. பிறகு அந்நிலை அகன்றது. அப்போதுதான் அல்லாஹ் “இடையூறு உள்ளவர்கள் தவிர' எனும் சொற்றொடரை (மேற்கண்ட வசனத்துடன் சேர்த்து) அருளியிருந்தான்.23


அத்தியாயம் : 65
4593. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا نَزَلَتْ {لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ} دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَيْدًا فَكَتَبَهَا، فَجَاءَ ابْنُ أُمِّ مَكْتُومٍ فَشَكَا ضَرَارَتَهُ، فَأَنْزَلَ اللَّهُ {غَيْرَ أُولِي الضَّرَرِ}
பாடம் : 18 இநைம்பிக்கையாளர்களில்- இடை யூறு உள்ளவர்கள் தவிர- அறப் போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப் போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள் (எனும் 4:95ஆவது வசனத்தொடர்)
4593. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப் போர் புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள்” எனும் (4:95ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களை அழைக்க, அவர் (வந்து) அதை எழுதினார்.

அப்போது இப்னு உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் வந்து தமது ஊனத்தைப் பற்றி முறையிட்டார். அப்போதுதான் அல்லாஹ், “இடையூறு உள்ளவர்கள் தவிர' எனும் சொற்றொடரை அருளினான்.24


அத்தியாயம் : 65
4594. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ لَمَّا نَزَلَتْ {لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ} قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " ادْعُوا فُلاَنًا ". فَجَاءَهُ وَمَعَهُ الدَّوَاةُ وَاللَّوْحُ أَوِ الْكَتِفُ فَقَالَ " اكْتُبْ لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ ". وَخَلْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم ابْنُ أُمِّ مَكْتُومٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَنَا ضَرِيرٌ. فَنَزَلَتْ مَكَانَهَا {لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ أُولِي الضَّرَرِ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ }
பாடம் : 18 இநைம்பிக்கையாளர்களில்- இடை யூறு உள்ளவர்கள் தவிர- அறப் போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப் போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள் (எனும் 4:95ஆவது வசனத்தொடர்)
4594. பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது:

“இறைநம்பிக்கையாளர்களில் அறப் போரில் கலந்துகொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தமது உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்” எனும் (4:95ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள், “இன்னாரைக் கூப்பிடுங்கள்” என்று சொன்னார்கள். (ஸைத் பின் ஸாபித்) அவர்கள், மைக் கூட்டையும் “பலகையையும்' அல்லது “அகலமான எலும்பையும்' தம்முடன் கொண்டுவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் “இந்த (4:95ஆவது) வசனத்தை எழுதிக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்களுக்குப் பின்புறம் இப்னு உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் கண் பார்வையற்றவன் ஆயிற்றே!” என்று கேட்டார்கள். அப்போது அதே இடத்தில், “இறைநம்பிக்கையாளர்களில் இடையூறு உள்ளவர்கள் தவிர அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள்” என்ற இவ்வசனம் (4:95- முழுமையாக) அருளப்பெற்றது.


அத்தியாயம் : 65
4595. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ ح، وَحَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَبْدُ الْكَرِيمِ، أَنَّ مِقْسَمًا، مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ أَخْبَرَهُ أَنَّ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ {لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ} عَنْ بَدْرٍ وَالْخَارِجُونَ إِلَى بَدْرٍ.
பாடம் : 18 இநைம்பிக்கையாளர்களில்- இடை யூறு உள்ளவர்கள் தவிர- அறப் போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப் போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள் (எனும் 4:95ஆவது வசனத்தொடர்)
4595. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள்” எனும் வசனம் (4:95) பத்ர் போர் பற்றியும், பத்ருக்காகப் புறப்பட்டவர்கள் பற்றியும் குறிப்பிடுகிறது.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4596. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، حَدَّثَنَا حَيْوَةُ، وَغَيْرُهُ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَبُو الأَسْوَدِ، قَالَ قُطِعَ عَلَى أَهْلِ الْمَدِينَةِ بَعْثٌ فَاكْتُتِبْتُ فِيهِ، فَلَقِيتُ عِكْرِمَةَ مَوْلَى ابْنِ عَبَّاسٍ فَأَخْبَرْتُهُ، فَنَهَانِي عَنْ ذَلِكَ أَشَدَّ النَّهْىِ، ثُمَّ قَالَ أَخْبَرَنِي ابْنُ عَبَّاسٍ أَنَّ نَاسًا مِنَ الْمُسْلِمِينَ كَانُوا مَعَ الْمُشْرِكِينَ يُكَثِّرُونَ سَوَادَ الْمُشْرِكِينَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَأْتِي السَّهْمُ فَيُرْمَى بِهِ، فَيُصِيبُ أَحَدَهُمْ فَيَقْتُلُهُ أَوْ يُضْرَبُ فَيُقْتَلُ، فَأَنْزَلَ اللَّهُ {إِنَّ الَّذِينَ تَوَفَّاهُمُ الْمَلاَئِكَةُ ظَالِمِي أَنْفُسِهِمْ} الآيَةَ. رَوَاهُ اللَّيْثُ عَنْ أَبِي الأَسْوَدِ.
பாடம் : 19 “(மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாதவாறு இறைமறுப்பாளர்களின் ஊரில் இருந்துகொண்டு) தமக்குத் தாமே அநீதி இழைத்துக்கொண்டிருந்தவர் களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது, (அவர்களை நோக்கி, “மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற முடியாத இந்த ஊரில்) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்?” என வினவுவார்கள். அதற்கு அவர்கள், “பூமியில் நாங்கள் பலவீன மானவர்களாய் இருந்தோம்” எனப் பதிலளிப்பார்கள். “அல்லாஹ் வின் பூமி விசாலமானதாய் இருக்கவில்லையா? அதில் நீங்கள் புலம் பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா?” என வானவர்கள் வினவுவார்கள். இவர்களின் இருப்பிடம் நரகம்தான். மேலும், அது மோசமான இருப்பிடமாகும்” எனும் (4:97ஆவது) இறைவசனம்
4596. முஹம்மத் பின் அப்திர் ரஹ்மான் அபுல்அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:

மதீனாவாசிகள் ஒரு படைப்பிரிவை அனுப்ப வேண்டும் எனக் கட்டாயப் படுத்தப்பட்டனர்.25 அந்தப் படைப்பிரிவில் என் பெயரும் பதிவு செய்யப்பட்டது. அப்போதுதான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான இக்ரிமா (ரஹ்) அவர்களைச் சந்தித் தேன். அவர்களிடம் இதைப் பற்றித் தெரிவித்தேன். அவர்கள் என்னை வன்மை யாகத் தடுத்தார்கள். பிறகு தமக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்ததாகக் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்களது காலத்தில் முஸ்óம்களில் சிலர் இணைவைப்பாளர் களுடன் இருந்தனர். அவர்கள் (பத்ர் போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கெதிராக இணைவைப் பாளர்களின் கூட்டத்தை அதிகப்படுத்தி(க் காட்டக் காரணமாக இருந்த)னர். ஆகவே, (முஸ்óம்களின் அணியிலிருந்து அவர்களை நோக்கி) எய்யப்படும் அம்பு செல்லும். அது அவர்களில் ஒருவரைத் தாக்கிக் கொன்றுவிடும்; அல்லது அவர் (வாளால்) அடிபட்டுக் கொல்லப்படுவார். (இது தொடர்பாகவே) அல்லாஹ் இவ்வசனத்தை (4:97) அருளினான்:

(மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாதவாறு இறை மறுப்பாளர்களின் ஊரில் இருந்துகொண்டு) தமக்குத் தாமே அநீதி இழைத்துக்கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது (அவர்களை நோக்கி, “இந்த ஊரில்) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்?” என வினவுவார்கள். அதற்கு அவர்கள், “பூமியில் நாங்கள் பலவீனமானவர்களாய் இருந்தோம்” எனப் பதிலளிப்பார்கள். “அல்லாஹ்வின் பூமி விசாலமானதாய் இருக்கவில்லையா? அதில் நீங்கள் புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா?” என வானவர்கள் வினவுவார்கள். இவர்களின் இருப்பிடம் நரகம்தான். மேலும், அது மோசமான இருப்பிடமாகும்.26

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4597. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ {إِلاَّ الْمُسْتَضْعَفِينَ} قَالَ كَانَتْ أُمِّي مِمَّنْ عَذَرَ اللَّهُ.
பாடம் : 20 ஆனால், எவ்வித உபாயத்தையும் மேற்கொள்ள முடியாமல், எந்த வழிவகையும் பெறாமல் உண்மையி லேயே இயலாதவர்களாயிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர! (எனும் 4:98ஆவது வசனம்)27
4597. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“இயலாதவர்களாயிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தை களைத் தவிர!” எனும் (4:98ஆவது) இறை வசனத்தைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

இயலாதவர்கள் என அல்லாஹ் அறிவித்தவர்களில் என் தாயார் (உம்முல் ஃபள்ல்) அவர்களும் ஒருவராயிருந்தார்.28

அத்தியாயம் : 65
4598. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي الْعِشَاءَ إِذْ قَالَ " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ". ثُمَّ قَالَ قَبْلَ أَنْ يَسْجُدَ " اللَّهُمَّ نَجِّ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، اللَّهُمَّ نَجِّ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ نَجِّ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، اللَّهُمَّ نَجِّ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ ".
பாடம் : 21 “அத்தகையோரின் பிழைகளை அல்லாஹ் பொறுக்கக்கூடும். அல்லாஹ் மிகவும் பிழை பொறுப் பவனும், மன்னிப்பு வழங்குபவனும் ஆவான்” எனும் (4:99ஆவது) இறைவசனம்
4598. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுது கொண்டிருந்தபோது, “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' என்று சொல்லிவிட்டு, பிறகு சஜ்தா செய்வதற்கு முன்பாக, “இறைவா! (மக்காவில் சிக்கித் தவிக்கும்) அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்று வாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக!

இறைவா! முளர் குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்கிக் கடுமைப்படுத்துவாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை அளிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.29

அத்தியாயம் : 65
4599. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ، أَخْبَرَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي يَعْلَى، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ {إِنْ كَانَ بِكُمْ أَذًى مِنْ مَطَرٍ أَوْ كُنْتُمْ مَرْضَى} قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفِ كَانَ جَرِيحًا.
பாடம் : 22 “(ஆயினும்,) மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அல்லது நீங்கள் நோயுற்றவர்களாயிருந்தால் ஆயுதங்களைக் கீழே வைத்துவிடுவதில் உங்கள்மீது தவறேதுமில்லை. ஆனாலும் எச்சரிக் கையாகவே இருங்கள்” எனும் (4:102ஆவது) இறைவசனம்
4599. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(ஆயினும்,) மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அல்லது நீங்கள் நோயுற்றவர்களாயிருந்தால் ஆயுதங்களைக் கீழே வைத்துவிடுவதில் உங்கள்மீது தவறேதுமில்லை” எனும் (4:102ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கும்போது, “அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் காயமுற்றுக் கிடந்தார்கள். (அப்போது இந்த வசனம் அருளப்பட்டது)” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 65
4600. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ {وَيَسْتَفْتُونَكَ فِي النِّسَاءِ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ} إِلَى قَوْلِهِ {وَتَرْغَبُونَ أَنْ تَنْكِحُوهُنَّ}. قَالَتْ هُوَ الرَّجُلُ تَكُونُ عِنْدَهُ الْيَتِيمَةُ، هُوَ وَلِيُّهَا وَوَارِثُهَا، فَأَشْرَكَتْهُ فِي مَالِهِ حَتَّى فِي الْعِذْقِ، فَيَرْغَبُ أَنْ يَنْكِحَهَا، وَيَكْرَهُ أَنْ يُزَوِّجَهَا رَجُلاً، فَيَشْرَكُهُ فِي مَالِهِ بِمَا شَرِكَتْهُ فَيَعْضُلَهَا فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ.
பாடம் : 23 “(நபியே!) பெண்கள் விஷயத்தில் விளக்கம் அளிக்கும்படி உம்மிடம் அவர்கள் கோருகின்றனர். நீர் கூறுவீராக: அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் உங்களுக்கு விளக்கம் அளிக்கின்றான். மேலும், எந்த அநாதைப் பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட (மஹ்ர் போன்ற)வற்றை நீங்கள் கொடுக்காமல், அவர்களை நீங்களே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர் களோ அந்தப் பெண்கள் விஷயத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு இவ்வேதத்தில் எடுத்துரைக்கப்பட்டுவருகின்ற சட்டமும் (உங்களுக்கு விளக்கம் அளிக்கின்றது)” எனும் (4:127 ஆவது) வசனத்தொடர்
4600. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த வசனத்திற்கு (4:127) விளக்கமளிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: (அறியாமைக் காலத்தில்) ஒருவர் தம்மிடமுள்ள அநாதைப் பெண்ணுக்குத் தாமே காப்பாளராகவும் வாரிசாகவும் இருந்துவருவார். பேரீச்சமரம் உள்பட அவரது செல்வத்தில் அவள் பங்காளியாக இருந்துவரும் நிலையில் அப்பெண்ணை அவரே மணமுடித்துக்கொள்ள விரும்புவார். மேலும், அவளை வேறோர் ஆணுக்கு மணமுடித்துக் கொடுத்து, அவள் (ஏற்கெனவே) பங்காளியாக இருப்பதன் மூலம் அவ(ளுக்குக் கணவனாக வருகின்ற வ)னும் தம் சொத்தில் பங்காளியாக மாறுவதை அவர் (காப்பாளர்) வெறுத்து வந்தார். எனவே, அவளை (வேறொருவன் மணமுடிக்க விடாமல்) காப்பாளர் தடுத்துவந்தார்.

அப்போதுதான், “ஒரு பெண் தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்துகொள்ளமாட்டான் என்றோ, புறக்கணித்துவிடுவான் என்றோ அஞ்சினால் கணவன்- மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில் தவறேதும் இல்லை; (எந்நிலையிலும்) சமாதானம் செய்துகொள்வதே நலம் தரக்கூடியதாகும்” எனும் (4:128ஆவது) வசனம் அருளப்பெற்றது.30

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(4:35ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “ஷிகாக்' எனும் சொல்லுக்கு “பரஸ்பரப் பிணக்கு' என்பது பொருள்.

அத்தியாயம் : 65
4601. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ {وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا}. قَالَتِ الرَّجُلُ تَكُونُ عِنْدَهُ الْمَرْأَةُ لَيْسَ بِمُسْتَكْثِرٍ مِنْهَا يُرِيدُ أَنْ يُفَارِقَهَا فَتَقُولُ أَجْعَلُكَ مِنْ شَأْنِي فِي حِلٍّ. فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ فِي ذَلِكَ.
பாடம் : 24 மனித உள்ளங்கள் உலோபித்தனத்திற்கு(ம் குறுகிய எண்ணத்திற்கும் விரைவாக) உட்பட்டுவிடுகின்றன (எனும் 4:128ஆவது வசனத் தொடர்) (இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “அஷ்ஷுஹ்ஹு' எனும் சொல், மனிதன் ஒன்றின் மீது பேராசை கொண்டு அதிகமாக விரும்புவதைக் குறிக்கும். (4:129ஆவது வசனத்திலுள்ள)”கல்முஅல்லகா' (அந்தரத்தில் தொங்கவிடப் பட்டவள் போல) எனும் சொல், அவள் விதவையாகவும் இல்லாமல் கணவன் உடையவளாகவும் இல்லாமல் இருக்கும் (தொங்கு) நிலையைக் குறிக்கும். (4:128ஆவது வசனத்தின் மூலத் திலுள்ள) “நுஷுஸ்' (நல்ல விதமாக நடந்துகொள்ளாமை) எனும் சொல்லுக்கு “வெறுப்பு கொள்ளல்' என்பது பொருள்.
4601. ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள், “ஒரு பெண் தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்துகொள்ளமாட்டான் என்றோ புறக்கணித்துவிடுவான் என்றோ அஞ்சினால், கணவன்-மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில் தவறேதுமில்லை” எனும் (4:128 ஆவது) வசனம் குறித்துக் கூறுகையில், “தம்மிடம் இருந்துவரும் மனைவியுடன் முறையாக இல்லறம் நடத்த விரும்பாத ஓர் ஆண் அவளைப் பிரிந்துவிட விரும்புகிறான். (இந்நிலையில் கணவனிடம்) அவள், “எனது (செலவுத் தொகை உள்ளிட்ட) உரிமையை உனக்கு நான் விட்டுக்கொடுத்துவிடுகிறேன்; (என்னை மணவிலக்குச் செய்து விடாமல் தொடர்ந்து மனைவியாகவே இருக்க அனுமதிக்க வேண்டும்)' என்று கோருகிறாள்.

இது தொடர்பாகவே இவ்வசனம் (4:128) அருளப்பெற்றது” என்று குறிப்பிட்டார்கள்.31

அத்தியாயம் : 65
4602. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنِ الأَسْوَدِ، قَالَ كُنَّا فِي حَلْقَةِ عَبْدِ اللَّهِ فَجَاءَ حُذَيْفَةُ حَتَّى قَامَ عَلَيْنَا، فَسَلَّمَ ثُمَّ قَالَ لَقَدْ أُنْزِلَ النِّفَاقُ عَلَى قَوْمٍ خَيْرٍ مِنْكُمْ. قَالَ الأَسْوَدُ سُبْحَانَ اللَّهِ، إِنَّ اللَّهَ يَقُولُ {إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرَكِ الأَسْفَلِ مِنَ النَّارِ} فَتَبَسَّمَ عَبْدُ اللَّهِ، وَجَلَسَ حُذَيْفَةُ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ، فَقَامَ عَبْدُ اللَّهِ فَتَفَرَّقَ أَصْحَابُهُ، فَرَمَانِي بِالْحَصَا، فَأَتَيْتُهُ فَقَالَ حُذَيْفَةُ عَجِبْتُ مِنْ ضَحِكِهِ، وَقَدْ عَرَفَ مَا قُلْتُ، لَقَدْ أُنْزِلَ النِّفَاقُ عَلَى قَوْمٍ كَانُوا خَيْرًا مِنْكُمْ، ثُمَّ تَابُوا فَتَابَ اللَّهُ عَلَيْهِمْ.
பாடம் : 25 நிச்சயமாக நயவஞ்சகர்கள் நரகத்தின் கீழ்த்தட்டிலேயே இருப்பார்கள். (அங்கு) அவர்களுக்கு உதவியாளர் எவரையும் ஒருபோதும் நீர் காணமாட்டீர் (எனும் 4:145ஆவது வசனம்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “அத்தர்க்குல் அஸ்ஃபல்' எனும் சொல்லுக்கு “நரகத்தின் கீழ்த்தட்டு' என்பது பொருள். (6:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “நஃபக்' (சுரங்கப் பாதை) எனும் சொல்லுக்கு “வழி' என்பது பொருள்.
4602. அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் அவையில் இருந்தோம். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள் வந்து எங்கள் அருகே நின்று சலாம் (முகமன்) சொன்னார்கள். பிறகு, “உங்களைவிடச் சிறந்த கூட்ட(த்தாரான நபிகளார் கால)த்தவர் மத்தியிலேகூட நயவஞ்சகம் இறக்கிவைக்கப்(பட்டுச் சோதிக்கப்)பட்டது” என்று சொன்னார்கள். நான், “சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூய்மையானவன்.) “நயவஞ்சகர்கள் நரகத்தின் கீழ்த்தட்டில் இருப்பார்கள்' என்று அல்லாஹ் கூறுகிறானே!” என்று சொல்ல, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் புன்னகைத்தார்கள்.

ஹுதைஃபா (ரலி) அவர்கள் பள்ளிவாசலின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எழுந்து நிற்க, அவர்களுடைய தோழர்கள் கலைந்து சென்றுவிட்டனர். உடனே ஹுதைஃபா (ரலி) அவர்கள் பொடிக் கற்களை என்மீது எறிந்(து என்னை அழைத்)தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள், “நான் அப்துல்லாஹ்வின் சிரிப்பைக் கண்டு வியப்படைந்தேன். ஆனால், நான் சொன்னதை அவர்கள் நன்கு அறிந்துகொண்டார்கள். உங்களைவிடச் சிறந்தவர்களாயிருந்த ஒரு சமுதாயத்தார் மீதும் நயவஞ்சகம் இறக்கிவைக்கப்பட்டது. பிறகு அவர்கள் பாவமன்னிப்புக் கோரினர்; அவர்களின் குற்றங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான்” என்றார்கள்.32

அத்தியாயம் : 65
4603. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي الأَعْمَشُ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا يَنْبَغِي لأَحَدٍ أَنْ يَقُولَ أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى ".
பாடம் : 26 “(நபியே!) நூஹுக்கும் அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வேத அறிவிப்புச் செய்ததைப் போன்றே நிச்சயமாக உமக்கும் நாம் வேத அறிவிப்புச் செய்துள்ளோம். மேலும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக் கும் மற்றும் யஅகூப் உடைய வழித்தோன்றல்களுக்கும் ஈசா, அய்யூப், யூனுஸ், ஹாரூன் மற்றும் சுலைமான் ஆகியோருக்கும் நாம் வேத அறிவிப்புச் செய்தோம். தாவூதுக்கு ஸபூர் (எனும் வேதம்)தனை வழங்கினோம்” எனும் (4:163ஆவது) இறைவசனம்
4603. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நான் (இறைத்தூதர்) யூனுஸ் பின் மத்தா அவர்களைவிடச் சிறந்தவன்' என்று (என்னைப் பற்றி) எவரும் கூறுவது அவருக்குத் தகாது.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.33


அத்தியாயம் : 65
4604.
பாடம் : 26 “(நபியே!) நூஹுக்கும் அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வேத அறிவிப்புச் செய்ததைப் போன்றே நிச்சயமாக உமக்கும் நாம் வேத அறிவிப்புச் செய்துள்ளோம். மேலும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக் கும் மற்றும் யஅகூப் உடைய வழித்தோன்றல்களுக்கும் ஈசா, அய்யூப், யூனுஸ், ஹாரூன் மற்றும் சுலைமான் ஆகியோருக்கும் நாம் வேத அறிவிப்புச் செய்தோம். தாவூதுக்கு ஸபூர் (எனும் வேதம்)தனை வழங்கினோம்” எனும் (4:163ஆவது) இறைவசனம்
4604. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றிக்) கூறியவர் பொய் சொல்லிவிட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் :
4605. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ قَالَ آخِرُ سُورَةٍ نَزَلَتْ بَرَاءَةَ، وَآخِرُ آيَةٍ نَزَلَتْ {يَسْتَفْتُونَكَ }
பாடம் : 27 (நபியே!) “கலாலா' (அதாவது மூல வாரிசுகளோ கிளை வாரிசுகளோ இல்லாத நிலை) பற்றி உம்மிடம் அவர்கள் விளக்கம் கேட்கிறார்கள். (அவர்களிடம்) கூறுக: “கலாலா' பற்றி அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) விளக்கம் கூறுகின்றான்: குழந்தை இல்லாத ஒருவர் இறந்து, அவருக்கு ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால், அவர் விட்டுச்சென்ற (சொத்)தில் பாதி அவளுக்குக் கிடைக்கும். குழந்தை இல்லாத ஒருத்தி (இறந்து, அவளுக்கு ஒரு சகோதரர் மட்டும் இருந்தால் அவளு)க்கு அவர் (முழு) வாரிசாவார். சகோதரிகள் இருவராக இருந்தால் அவ்விருவருக்கும் அவர் விட்டுச்சென்ற (சொத்)தில் மூன்றில் இரு பங்கு கிடைக்கும். சகோதர சகோதரிகளாகப் பலர் இருந்தால் அவர்களில் இரு பெண்களின் பங்குக்குச் சமமான (பங்கான)து ஓர் ஆணுக்குக் கிடைக்கும் (எனும் 4:176ஆவது வசனத்தொடர்) (இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள) “கலாலா' எனும் சொல், யாருக்கு வாரிசாகத் தந்தையோ மகனோ இல்லையோ அவரைக் குறிக்கும். இது “தகல்லலஹுந் நசபு' (வமிசாவளி அற்றவன்) எனும் வினைச்சொல்லின் வேர்ச்சொல்லாகும்.
4605. பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது:

(நபி (ஸல்) அவர்களுக்கு) இறுதியாக அருளப்பெற்ற (குர்ஆன்) அத்தியாயம் “பாராஅத்' எனும் (9ஆவது) அத்தியாயமாகும். (பாகப்பிரிவினை தொடர்பாக) இறுதியாக அருளப்பெற்ற வசனம், “(நபியே!) உங்களிடம் மக்கள் விளக்கம் கேட்கிறார்கள்” எனும் (இந்த 4:176ஆவது) வசனமாகும்.34

அத்தியாயம் : 65
4606. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ قَيْسٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَتِ الْيَهُودُ لِعُمَرَ إِنَّكُمْ تَقْرَءُونَ آيَةً لَوْ نَزَلَتْ فِينَا لاَتَّخَذْنَاهَا عِيدًا. فَقَالَ عُمَرُ إِنِّي لأَعْلَمُ حَيْثُ أُنْزِلَتْ، وَأَيْنَ أُنْزِلَتْ، وَأَيْنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ أُنْزِلَتْ يَوْمَ عَرَفَةَ، وَإِنَّا وَاللَّهِ بِعَرَفَةَ ـ قَالَ سُفْيَانُ وَأَشُكُّ كَانَ يَوْمَ الْجُمُعَةِ أَمْ لاَ – {الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ}
பாடம்: 5. “அல்மாயிதா' அத்தியாயம்1 பாடம் : 1 “அல்மாயிதா' அத்தியாயத்தின் பதவுரை (5:1ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “ஹுரும்' (இஹ்ராம் கட்டியவர்கள்) எனும் சொல்லின் ஒருமை “ஹராம்' என்பதாகும். (5:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃப பிமா நக்ளிஹிம் மீஸாக்கஹும்' என்பதற்கு “அவர்கள் தம் வாக்குறுதியை முறித்துவிட்ட காரணத்தால்' என்று பொருள். (5:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்லத்தீ க(த்)தபல்லாஹு' எனும் வாக்கியத்திற்கு “அல்லாஹ் உங்களுக்காக அமைத்து (வைத்)துள்ள (புனித பூமியினுள் நுழையுங்கள்)' என்று பொருள். (5:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தபூஅ' எனும் சொல்லுக்கு “நீயே சுமந்து கொண்டு' என்பது பொருள். (5:52ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தாயிரத்துன்' எனும் சொல்லுக்கு “ஏதேனும் துன்பம்' என்பது பொருள். மற்றவர்கள் கூறுகின்றனர்: (5:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஃக்ரய்னா' (ஊட்டினோம்) எனும் வினைச்சொல்லின் வேர்ச்சொல்லான) “இஃக்ராஉ' என்பதற்கு “சாட்டுதல்' என்பது பொருள். (5:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “உ—þரஹுன்ன' எனும் சொல்லுக்கு “அப்பெண்களுக்குரிய மஹ்ர் (மணக் கொடை)களை' என்பது பொருள். (5:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்முஹைமின்' எனும் சொல்லுக்கு “நம்பகமான காவலன்' (அல்அமீன்) என்பது பொருள். அதாவது இந்த குர்ஆன் தனக்கு முந்தியுள்ள வேதம் ஒவ்வொன்றையும் நம்பகமான முறையில் பாதுகாக்கக் கூடியது. சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: குர்ஆனிலுள்ள, “வேதக்காரர்களே! தவ்ராத்தையும் இன்ஜீலையும் மற்றும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பெற்ற (இதர வேதங்கள் யா)வற்றையும் முழுமையாகச் செயல்படுத்தாத வரை, நீங்கள் எந்த அடிப்படையிலும் இல்லை” என்று (நபியே! தெளிவாகக்) கூறிவிடுவீராக!” எனும் (5:68) வசனத்தைவிட எனக்குக் கடுமையானது வேறெதுவுமில்லை.2 (5:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மஃக்மஸா' எனும் சொல்லுக்கு “பசி' என்பது பொருள். (5:32ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மன் அஹ்யாஹா' (யார் ஓர் உயிரை வாழவைக்கிறாரோ...) என்பதற்கு, “நியாயமான காரணம் இருந்தால் அன்றி, ஓர் உயிரைக் கொலை செய்வதிலிருந்து விலகிக்கொள்கின்றவர் மக்கள் அனைவரையுமே வாழவைத்தவர் ஆவார்' என்பது இதன் கருத்தாகும். (5:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஷிர்அத்தன் வ மின்ஹா—ன்' என்பதற்கு “பாதை மற்றும் நடைமுறை' என்பது பொருள். (5:107ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃப இன் உஸிர' எனும் சொல்லுக்கு “வெளிப்பட்டால், - தெரியவந்தால்' என்பது பொருள். (5:107ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்அவ்லயானி' (அதிகத் தகுதி வாய்ந்த இருவர்) எனும் சொல்லின் ஒருமை “(அல்)அவ்லா' என்பதாகும். பாடம் : 2 “இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள்மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை (உங்களது மார்க்கமாக ஏற்றுக்கொண்டுவிட்டேன்” எனும் (5:3ஆவது) வசனத்தொடர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “மஃக்மஸா' எனும் சொல்லுக்கு “பசி' என்பது பொருள்.
4606. தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

யூதர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் ஓர் இறைவசனத்தை ஓது கிறீர்கள், அந்த வசனம் மட்டும் எங்க ளிடையே அருளப்பெற்றிருந்தால் அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக்கொண்டிருப்போம்” என்று கூறினர்.

உமர் (ரலி) அவர்கள், “அது எப்போது அருளப்பெற்றது? எங்கே அருளப்பெற்றது? அது அருளப்பெற்ற வேளையில் அரஃபா (ஃதுல்ஹிஜ்ஜா ஒன்பதாம்) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேயிருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அப்போது அரஃபாவில் இருந்தோம்” என்று கூறினார்கள்.3

(இதன் மூன்றாம்) அறிவிப்பாளர் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன்” எனும் (5:3ஆவது) வசனம் அருளப்பெற்ற நாள் (சிலரின் அறிவிப்பிலுள்ளது போல்) வெள்ளிக் கிழமையாக இருந்ததா? அல்லது (வெள்ளிக் கிழமையாக) இல்லையா என்று நான் (தீர்மானிக்க முடியாமல்) சந்தேகப்படுகின்றேன்.4

அத்தியாயம் : 65