4563. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ ـ أُرَاهُ قَالَ ـ حَدَّثَنَا أَبُو بَكْرٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنِ ابْنِ عَبَّاسٍ، {حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ} قَالَهَا إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلاَمُ حِينَ أُلْقِيَ فِي النَّارِ، وَقَالَهَا مُحَمَّدٌ صلى الله عليه وسلم حِينَ قَالُوا {إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ}
பாடம் : 12
“அவர்கள் (எத்தகைய இறைநம்பிக்கையாளர்கள் என்றால், போரில்) தமக்குப் படுகாயங்கள் ஏற்பட்ட பின்னரும்கூட அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்புக்கு இணங்கினர். நன்மை புரிந்து, தீமையிலிருந்து தம்மைக் தற்காத்துக்கொண்ட இத்தகை யோருக்கு மகத்தான பிரதிபலன் உண்டு” எனும் (3:172ஆவது) இறைவசனம்22
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “அல்கர்ஹ்' எனும் சொல்லுக்கு “படுகாயம்' என்பது பொருள். “இஸ்த்த—ôபூ' (“இணங்கினர்') எனும் சொல்லுக்கு “பதிலளித்தார்கள்' என்பது பொருள். (இதன் எதிர்கால வினைச் சொல்லான) “யஸ்த்தஜீபு' என்பதற்கு, “பதிலளிப்பார்' என்பது பொருள்.
பாடம் : 13
“இவர்களிடம், “நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த் தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணிதிரண்டுள்ளனர்; எனவே, அவர்களுக்கு அஞ்சுங்கள்' என்று மக்கள் (சிலர்) கூறினர். ஆனால், இது இவர்களுக்கு இறை நம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக்கொள்வோரில் சிறந்தவன்' என்றும் இவர்கள் கூறினார்கள்” எனும் (3:173ஆவது) இறைவசனம்
4563. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் தீயில் தூக்கி எறியப்பட்டபோது, “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக்கொள்வோரில் சிறந்தவன்” என்று கூறினார்கள். இதே வார்த்தைகளை முஹம்மத் (ஸல்) அவர்கள், “நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த்தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணிதிரண்டுள்ளனர்; எனவே, அவர்களுக்கு அஞ்சுங்கள்” என மக்கள் (சிலர்) கூறியபோது சொன்னார்கள்.
இ(வ்வாறு அச்சுறுத்திய)து அவர்களுக்கு இறைநம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனே பொறுப் பேற்றுக்கொள்வோரில் சிறந்தவன்” என்றும் அவர்கள் கூறினார்கள்.23
அத்தியாயம் : 65

4564. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ آخِرَ قَوْلِ إِبْرَاهِيمَ حِينَ أُلْقِيَ فِي النَّارِ حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ.
பாடம் : 12
“அவர்கள் (எத்தகைய இறைநம்பிக்கையாளர்கள் என்றால், போரில்) தமக்குப் படுகாயங்கள் ஏற்பட்ட பின்னரும்கூட அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்புக்கு இணங்கினர். நன்மை புரிந்து, தீமையிலிருந்து தம்மைக் தற்காத்துக்கொண்ட இத்தகை யோருக்கு மகத்தான பிரதிபலன் உண்டு” எனும் (3:172ஆவது) இறைவசனம்22
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “அல்கர்ஹ்' எனும் சொல்லுக்கு “படுகாயம்' என்பது பொருள். “இஸ்த்த—ôபூ' (“இணங்கினர்') எனும் சொல்லுக்கு “பதிலளித்தார்கள்' என்பது பொருள். (இதன் எதிர்கால வினைச் சொல்லான) “யஸ்த்தஜீபு' என்பதற்கு, “பதிலளிப்பார்' என்பது பொருள்.
பாடம் : 13
“இவர்களிடம், “நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த் தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணிதிரண்டுள்ளனர்; எனவே, அவர்களுக்கு அஞ்சுங்கள்' என்று மக்கள் (சிலர்) கூறினர். ஆனால், இது இவர்களுக்கு இறை நம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக்கொள்வோரில் சிறந்தவன்' என்றும் இவர்கள் கூறினார்கள்” எனும் (3:173ஆவது) இறைவசனம்
4564. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்பில் எறியப்பட்டபோது, “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக்கொள்வோரில் சிறந்தவன்” (ஹஸ்பியல்லாஹ‚ வ நிஅமல் வக்கீல்) என்பதே அவர்களின் கடைசி வார்த்தையாக இருந்தது.

4565. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، سَمِعَ أَبَا النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ ـ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ـ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ آتَاهُ اللَّهُ مَالاً فَلَمْ يُؤَدِّ زَكَاتَهُ، مُثِّلَ لَهُ مَالُهُ شُجَاعًا أَقْرَعَ، لَهُ زَبِيبَتَانِ يُطَوَّقُهُ يَوْمَ الْقِيَامَةِ، يَأْخُذُ بِلِهْزِمَتَيْهِ ـ يَعْنِي بِشِدْقَيْهِ ـ يَقُولُ أَنَا مَالُكَ أَنَا كَنْزُكَ ". ثُمَّ تَلاَ هَذِهِ الآيَةَ {وَلاَ يَحْسِبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ} إِلَى آخِرِ الآيَةِ.
பாடம் : 14
“அல்லாஹ் தனது பேருதவியிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் யார் கருமித்தனம் செய்கிறார்களோ அவர்கள் தமக்கு அதை நல்லதென எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீங்கேயாகும். அவர்கள் எதை வழங்காது வைத்திருந்தார்களோ அது மறுமையில் அவர்களது கழுத்தில் மாலையாக மாட்டப்படும். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாகும். மேலும், நீங்கள் செய்கின்ற வற்றை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிபவன்” எனும் (3:180ஆவது) இறைவசனம்
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “ச யு(த்)தவ்வக்கூன' (அவர்களது கழுத்தில் மாலையாக மாட்டப்படும்) எனும் சொற்றொடர் “தவ்வக்துஹு பி தவ்கின்' (நான் அவனுக்கு மாலையிட்டேன்) எனும் வாக்கியத்திற்கு நிகரானதாகும்.
4565. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரது செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாகக் காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கறுப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாகச்) சுற்றப்படும். அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை -அதாவது அவரது இரு தாடைகளைப்- பிடித்துக்கொண்டு, “நான்தான் உனது செல்வம்; நான்தான் உனது கருவூலம்' என்று சொல்லும்” எனக் கூறினார்கள்.
பிறகு, “அல்லாஹ் தனது பேருதவியிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் யார் கருமித்தனம் செய்கிறார்களோ அவர்கள் தமக்கு அதை நல்லதென எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீங்கேயாகும். அவர்கள் எதை வழங்காது வைத்திருந்தார்களோ அது மறுமையில் அவர்களது கழுத்தில் மாலையாக மாட்டப்படும். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாகும். மேலும் நீங்கள் செய்கின்றவற்றை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிபவன்” எனும் இந்த (3:180ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.24

4566. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَكِبَ عَلَى حِمَارٍ عَلَى قَطِيفَةٍ فَدَكِيَّةٍ، وَأَرْدَفَ أُسَامَةَ بْنَ زَيْدٍ وَرَاءَهُ، يَعُودُ سَعْدَ بْنَ عُبَادَةَ فِي بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ قَبْلَ وَقْعَةِ بَدْرٍ ـ قَالَ ـ حَتَّى مَرَّ بِمَجْلِسٍ فِيهِ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ، ابْنُ سَلُولَ، وَذَلِكَ قَبْلَ أَنْ يُسْلِمَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ فَإِذَا فِي الْمَجْلِسِ أَخْلاَطٌ مِنَ الْمُسْلِمِينَ وَالْمُشْرِكِينَ عَبَدَةِ الأَوْثَانِ وَالْيَهُودِ وَالْمُسْلِمِينَ، وَفِي الْمَجْلِسِ عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ، فَلَمَّا غَشِيَتِ الْمَجْلِسَ عَجَاجَةُ الدَّابَّةِ خَمَّرَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ أَنْفَهُ بِرِدَائِهِ، ثُمَّ قَالَ لاَ تُغَبِّرُوا عَلَيْنَا. فَسَلَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَيْهِمْ ثُمَّ وَقَفَ فَنَزَلَ فَدَعَاهُمْ إِلَى اللَّهِ، وَقَرَأَ عَلَيْهِمُ الْقُرْآنَ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ ابْنُ سَلُولَ أَيُّهَا الْمَرْءُ، إِنَّهُ لاَ أَحْسَنَ مِمَّا تَقُولُ، إِنْ كَانَ حَقًّا، فَلاَ تُؤْذِينَا بِهِ فِي مَجْلِسِنَا، ارْجِعْ إِلَى رَحْلِكَ، فَمَنْ جَاءَكَ فَاقْصُصْ عَلَيْهِ. فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ بَلَى يَا رَسُولَ اللَّهِ، فَاغْشَنَا بِهِ فِي مَجَالِسِنَا، فَإِنَّا نُحِبُّ ذَلِكَ. فَاسْتَبَّ الْمُسْلِمُونَ وَالْمُشْرِكُونَ وَالْيَهُودُ حَتَّى كَادُوا يَتَثَاوَرُونَ، فَلَمْ يَزَلِ النَّبِيُّ صلى الله عليه وسلم يُخَفِّضُهُمْ حَتَّى سَكَنُوا، ثُمَّ رَكِبَ النَّبِيُّ صلى الله عليه وسلم دَابَّتَهُ فَسَارَ حَتَّى دَخَلَ عَلَى سَعْدِ بْنِ عُبَادَةَ، فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " يَا سَعْدُ أَلَمْ تَسْمَعْ مَا قَالَ أَبُو حُبَابٍ ". يُرِيدُ عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ " قَالَ كَذَا وَكَذَا ". قَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ يَا رَسُولَ اللَّهِ، اعْفُ عَنْهُ وَاصْفَحْ عَنْهُ، فَوَالَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ، لَقَدْ جَاءَ اللَّهُ بِالْحَقِّ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ، لَقَدِ اصْطَلَحَ أَهْلُ هَذِهِ الْبُحَيْرَةِ عَلَى أَنْ يُتَوِّجُوهُ فَيُعَصِّبُونَهُ بِالْعِصَابَةِ، فَلَمَّا أَبَى اللَّهُ ذَلِكَ بِالْحَقِّ الَّذِي أَعْطَاكَ اللَّهُ شَرِقَ بِذَلِكَ، فَذَلِكَ فَعَلَ بِهِ ما رَأَيْتَ. فَعَفَا عَنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ يَعْفُونَ عَنِ الْمُشْرِكِينَ وَأَهْلِ الْكِتَابِ كَمَا أَمَرَهُمُ اللَّهُ، وَيَصْبِرُونَ عَلَى الأَذَى قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ {وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا أَذًى كَثِيرًا } الآيَةَ، وَقَالَ اللَّهُ {وَدَّ كَثِيرٌ مِنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُمْ مِنْ بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا حَسَدًا مِنْ عِنْدِ أَنْفُسِهِمْ} إِلَى آخِرِ الآيَةِ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتَأَوَّلُ الْعَفْوَ مَا أَمَرَهُ اللَّهُ بِهِ، حَتَّى أَذِنَ اللَّهُ فِيهِمْ، فَلَمَّا غَزَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَدْرًا، فَقَتَلَ اللَّهُ بِهِ صَنَادِيدَ كُفَّارِ قُرَيْشٍ قَالَ ابْنُ أُبَىٍّ ابْنُ سَلُولَ، وَمَنْ مَعَهُ مِنَ الْمُشْرِكِينَ، وَعَبَدَةِ الأَوْثَانِ هَذَا أَمْرٌ قَدْ تَوَجَّهَ. فَبَايَعُوا الرَّسُولَ صلى الله عليه وسلم عَلَى الإِسْلاَمِ فَأَسْلَمُوا.
பாடம் : 15
(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் உங்களுக்குமுன் வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும், இணைவைத்தோரிடமிருந்தும் ஏராளமான நிந்தனைகளை நிச்சயம் கேட்பீர்கள். (அப்போதெல்லாம்) நீங்கள் பொறுமை காத்துத் தீமையிலிருந்து விலகி நடந்தால் அதுவே உறுதிமிக்க செயல்களில் ஒன்றாகும் (எனும் 3:186ஆவது வசனத்தொடர்)
4566. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஃபதக்' நகர முரட்டுத் துணி விரிக்கப்பட்ட கழுதையொன்றின் மீது அமர்ந்து தமக்குப் பின் வாகனத்தில் என்னை அமர்த்திக் கொண்டு ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றார்கள். -இது பத்ர் போருக்கு முன்னால் நடந்தது. -அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அதில் (நயவஞ்சகர்களின் தலைவர்) “அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல்' இருந்தார். -அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக்கொள்வதற்கு முன்பு இது நடந்தது.-
அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வழிபாடு செய்யும் இணைவைப்பாளர்கள், யூதர்கள், இறைநம்பிக்கையாளர்கள் ஆகிய பல்வேறு பிரிவினரும் கலந்து இருந்தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களும் இருந்தார்கள். (எங்கள்) வாகனப் பிராணியினால் கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்திருந்தபோது (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை தனது மேல்துண்டால் தன் மூக்கைப் பொத்திக்கொண்டார். பிறகு, “எங்கள்மீது புழுதி கிளப்பாதீர்” என்று சொன்னார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவையோருக்கு சலாம் (முகமன்) சொன்னார்கள். பிறகு தமது வாகனத்தை நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டினார்கள்.
இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் (நபி (ஸல்) அவர்களிடம்) “மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனால்,) அதை எங்களுடைய (இந்த) அவையில் (வந்து) சொல்லி எங்களுக்குத் தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள். உம்மிடம் வருபவர்களிடம் (அதை) எடுத்துச்சொல்லுங்கள்” என்றார். இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், “இல்லை; அல்லாஹ்வின் தூதரே! (இந்த) அவையிலேயே இதை எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகின்றோம்” என்றார். இதைக் கேட்ட முஸ்óம்களும் இணைவைப்பாளர்களும் யூதர்களும் (ஒருவரையொருவர்) ஏசத் தொடங்கி பரஸ்பரம் தாக்கிக்கொள்ளும் அளவுக்குச் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், மக்கள் மௌனமாகும்வரை அவர்களை அமைதிப்படுத்திக்கொண்டேயிருந்தார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறி சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, அவரிடம் “சஅதே! அபூஹுபாப் - அப்துல்லாஹ் பின் உபை - சொன்னதை நீங்கள் கேள்விப்பட வில்லையா? அவர் இன்னின்னவாறு கூறினார்” என்றார்கள்.
சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவரை மன்னித்து விட்டுவிடுங்கள். உங்களுக்கு வேதம் அருளிய (இறை)வன் மீதாணை யாக! இந்த (மதீனா) ஊர்வாசிகள் அவருக்கு முடிசூட்டித் தலைவராக்க முடிவு செய்திருந்த வேளையில், அல்லாஹ் உங்களுக்கு அருளிய சத்திய (வேத)த்தைக் கொண்டுவந்துவிட்டான்.
எனவே, அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்திய (மார்க்க)த்தின் மூலம் அ(ந்த முடிவு)தனை அவன் நிராகரித்ததால் அவர் ஆத்திரமடைந்துள்ளார். இதுதான் உங்களுக்கு முன்னால் அவ்வாறு அவர் நடந்துகொண்டதற்குக் காரணம்” என்று கூறினார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்துவிட்டார்கள்.
நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் அல்லாஹ்வின் ஆணைக் கொப்ப இணைவைப்பாளர்களையும் வேதக்காரர்களையும் மன்னிப்பவர்களாகவும் (அவர்களின்) நிந்தனைகளைப் பொறுத்துக்கொள்பவர்களாகவும் இருந்தனர்.
அல்லாஹ் கூறுகின்றான்:
(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் உங்களுக்குமுன் வேதம் அருளப்பட்ட வர்களிடமிருந்தும் இணைவைப்போரிடமிருந்தும் ஏராளமான நிந்தனைகளை நிச்சயம் கேட்பீர்கள். (அப்போதெல்லாம்) நீங்கள் பொறுமை காத்துத் தீமையிó ருந்து விலகி நடந்தால், அதுதான் உறுதிமிக்க செயல்களில் ஒன்றாகும். (3:186)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் இறைநம்பிக்கை கொண்டதற்குப்பின் உங்களை இறைமறுப்பாளர்களாக மாற்றிவிட வேண்டும் என்று வேதக் காரர்களில் பலர் விரும்புகின்றனர். (இது) அவர்களுக்கு உண்மை தெளிவாகி விட்ட பின்னர் அவர்களின் உள்ளத்துள் எழுந்த பொறாமையினாலேயாம். ஆயினும், அல்லாஹ் தன் ஆணையைப் பிறப்பிக்கும்வரை (அவர்களை) நீங்கள் மன்னியுங்கள். நிச்சயமாக! அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றல் உள்ளவன். (2:109)
அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் (நடவடிக்கையெடுக்க) அனுமதிக்கும்வரை நபி (ஸல்) அவர்கள் மன்னிக்கும் போக்கையே கைக்கொள்பவர்களாக இருந்தார்கள். அப்பால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ர் போருக்குச் சென்றபோது அன்னாரின் மூலம் அல்லாஹ் குறைஷி இறைமறுப்பாளர் களின் தலைவர்களைக் கொன்றான். அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலும் அவருடனிருந்த இணை வைப்பாளர்களும், சிலை வழிபாடு செய்வோரும் “(இஸ்லாம் எனும்) இந்த விஷயம் மேலோங்கிவிட்டது. ஆகவே, இந்த (இறை)த்தூதரிடம் இஸ்லாத்தை ஏற்றோமென உறுதிமொழியளித்துவிடுங்கள்” என்று கூறி (வெளித் தோற்றத்தில்) இஸ்லாத்தை ஏற்றனர்.

4567. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رِجَالاً مِنَ الْمُنَافِقِينَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الْغَزْوِ تَخَلَّفُوا عَنْهُ، وَفَرِحُوا بِمَقْعَدِهِمْ خِلاَفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم اعْتَذَرُوا إِلَيْهِ وَحَلَفُوا، وَأَحَبُّوا أَنْ يُحْمَدُوا بِمَا لَمْ يَفْعَلُوا، فَنَزَلَتْ {لاَ يَحْسِبَنَّ الَّذِينَ يَفْرَحُونَ} الآيَةَ.
பாடம் : 16
தாம் செய்த (தீய)வை குறித்து மகிழ்ந்துகொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக்கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடு வார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்கு வதைக்கும் வேதனை உண்டு (எனும் 3:188ஆவது இறைவசனம்)
4567. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் காலத்தில் நயவஞ்சகர்கள் சிலர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறப்போருக்குப் புறப்பட்டுச் சென்றால், அவர்களுடன் செல்லாமல் ஊரிலேயே தங்கிவிடுவார்கள். (அவ்வாறு) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல் தாம் தங்கிவிட்டதைப் பற்றி மகிழ்ச்சியும் அடைவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பி வரும்போது அவர்களிடம் (போய், தாம் கலந்துகொள்ளாமல்போனதற்குப் பொய்யான) சாக்குப்போக்குகளைக் கூறி, (பொய்ச்) சத்தியம் செய்வார்கள். தாம் செய்யாத (நற்)செயல்களுக்காகத் தாம் புகழப்பட வேண்டுமென்றும் விரும்புவார்கள்.
அப்போதுதான், “தாம் செய்த (தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக் கொண்டும் இருப்போர் வேதனை யிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்கு வதைக்கும் வேதனை உண்டு” எனும் (3:188ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

4568. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، أَنَّ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ، أَخْبَرَهُ أَنَّ مَرْوَانَ قَالَ لِبَوَّابِهِ اذْهَبْ يَا رَافِعُ إِلَى ابْنِ عَبَّاسٍ فَقُلْ لَئِنْ كَانَ كُلُّ امْرِئٍ فَرِحَ بِمَا أُوتِيَ، وَأَحَبَّ أَنْ يُحْمَدَ بِمَا لَمْ يَفْعَلْ، مُعَذَّبًا، لَنُعَذَّبَنَّ أَجْمَعُونَ. فَقَالَ ابْنُ عَبَّاسٍ وَمَا لَكُمْ وَلِهَذِهِ إِنَّمَا دَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَهُودَ فَسَأَلَهُمْ عَنْ شَىْءٍ، فَكَتَمُوهُ إِيَّاهُ، وَأَخْبَرُوهُ بِغَيْرِهِ، فَأَرَوْهُ أَنْ قَدِ اسْتَحْمَدُوا إِلَيْهِ بِمَا أَخْبَرُوهُ عَنْهُ فِيمَا سَأَلَهُمْ، وَفَرِحُوا بِمَا أُوتُوا مِنْ كِتْمَانِهِمْ، ثُمَّ قَرَأَ ابْنُ عَبَّاسٍ {وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ} كَذَلِكَ حَتَّى قَوْلِهِ {يَفْرَحُونَ بِمَا أَتَوْا وَيُحِبُّونَ أَنْ يُحْمَدُوا بِمَا لَمْ يَفْعَلُوا}. تَابَعَهُ عَبْدُ الرَّزَّاقِ عَنِ ابْنِ جُرَيْجٍ.
حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا الْحَجَّاجُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ مَرْوَانَ بِهَذَا.
பாடம் : 16
தாம் செய்த (தீய)வை குறித்து மகிழ்ந்துகொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக்கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடு வார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்கு வதைக்கும் வேதனை உண்டு (எனும் 3:188ஆவது இறைவசனம்)
4568. அல்கமா பின் வக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(மதீனா ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகம்25 தம் காவலரிடம், “ராஃபிஉ! நீர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று, “தமக்கு அளிக்கப்பட்டவை குறித்து மகிழ்ச்சி அடைகின்ற, தாம் செய்யாத (சாதனைகள் முதலிய)வற்றுக்காகத் தாம் புகழப்பட வேண்டுமென்று விரும்புகின்ற மனிதர் ஒவ்வொருவரும் வேதனை செய்யப்படுவர் என்றிருப்பின், நாம் அனைவருமே வேதனை செய்யப்பட வேண்டி வருமே!' என்று (நான் வினவியதாகக்) கேள்” என்று சொன்னார்.
(அவ்வாறே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று ராஃபிஉ கேட்ட போது) “உங்களுக்கு இது தொடர்பாக என்ன (குழப்பம்) நேர்ந்தது? (இதன் உண்மை என்னவென்றால்,) நபி (ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து அவர்களிடம் ஒரு விஷயம் (தவ்ராத்தில் உள்ளதா என்பது) குறித்துக் கேட்டார்கள்.
அப்போது யூதர்கள் அதை மறைத்து விட்டு (உண்மைக்குப் புறம்பான) வேறொன்றை நபியவர்களிடம் தெரிவித்தார்கள். தங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வினவியது தொடர்பாகத் தாங்கள் அன்னாரிடம் (தகவல்) தெரிவித்ததற்காகப் பாராட்டை எதிர்பார்ப்பதுபோல் அவர்கள் காட்டிக்கொண்டார்கள். தங்களுக்கு (இறைவன் மூலம்) வழங்கப்பெற்ற (உண்மை)தனைத் தாங்கள் மறைத்துவிட்டது குறித்து அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்” என்று கூறிவிட்டு (பின்வரும்) இந்த வசனங்களை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதினார்கள்:
வேதம் வழங்கப்பட்டவர்களிடம் “நீங்கள் அதை மக்களுக்குத் தெளிவாக்கிட வேண்டும்; அதனை மறைக்கக் கூடாது' என அல்லாஹ் உறுதிமொழி வாங்கி னான். ஆனால், அதை அவர்கள், தம் முதுகுக்குப் பின்னே எறிந்துவிட்டு, அதற்குப் பதிலாக அற்ப விலையை வாங்கிக்கொண்டனர் என்பதை (நபியே! அவர்களுக்கு நினைவூட்டுவீராக!) அவர்கள் வாங்கிக்கொண்டது மிக மோசமானதாகும். தாம் செய்த (தீய)வை குறித்து மகிழ்ந்துகொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக்கொண்டும் இருப்போர் வேதனையிóருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்கு வதைக்கும் வேதனை உண்டு. (3:187, 188).26
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

4569. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ، فَتَحَدَّثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَعَ أَهْلِهِ سَاعَةً ثُمَّ رَقَدَ، فَلَمَّا كَانَ ثُلُثُ اللَّيْلِ الآخِرُ قَعَدَ فَنَظَرَ إِلَى السَّمَاءِ فَقَالَ {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالأَرْضِ وَاخْتِلاَفِ اللَّيْلِ وَالنَّهَارِ لآيَاتٍ لأُولِي الأَلْبَابِ}، ثُمَّ قَامَ فَتَوَضَّأَ وَاسْتَنَّ، فَصَلَّى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، ثُمَّ أَذَّنَ بِلاَلٌ فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ خَرَجَ فَصَلَّى الصُّبْحَ.
பாடம் : 17
“திண்ணமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்(பு அமைப்)பிலும், இரவு-பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்று கள் உள்ளன” எனும் (3:190ஆவது) இறைவசனம்
4569. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருநாள்) நான் என் சிறிய தாயார் (அவர்களும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான) மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் இரவில் தங்கியிருந் தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியாருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு உறங்கிவிட்டார்கள்.
இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி வந்தபோது (எழுந்து) அமர்ந்துகொண்டு வானத்தை நோக்கியவாறு, “நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்(பு அமைப்)பிலும், இரவு-பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன” எனும் (3:190ஆவது) வசனத்தை ஓதினார்கள். பின்னர் எழுந்து (சென்று) அங்கத் தூய்மை செய்தார்கள்; பல் துலக்கினார்கள். பதினொன்று ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னபோது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று (மக்களுடன்) “சுப்ஹ்' தொழுதார்கள்.27

4570. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ فَقُلْتُ لأَنْظُرَنَّ إِلَى صَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَطُرِحَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وِسَادَةٌ، فَنَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي طُولِهَا، فَجَعَلَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ، ثُمَّ قَرَأَ الآيَاتِ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ آلِ عِمْرَانَ حَتَّى خَتَمَ، ثُمَّ أَتَى شَنًّا مُعَلَّقًا، فَأَخَذَهُ فَتَوَضَّأَ، ثُمَّ قَامَ يُصَلِّي، فَقُمْتُ فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ ثُمَّ جِئْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ، فَوَضَعَ يَدَهُ عَلَى رَأْسِي، ثُمَّ أَخَذَ بِأُذُنِي، فَجَعَلَ يَفْتِلُهَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ.
பாடம் : 18
அவர்கள் நின்றவர்களாகவும், அமர்ந்தவர்களாகவும், ஒருக் களித்துப் படுத்தவர்களாகவும் அல்லாஹ்வை நினைக்கிறார்கள். மேலும், வானங்கள் மற்றும் பூமியின் படைப்புக் குறித்துச் சிந்திக்கிறார்கள். (சிந்தித்துவிட்டு இவ்வாறு பிரார்த்திக்கிறார்கள்:) எங்கள் இறைவனே! இதை (யெல்லாம்) நீ வீணாகப் படைக்க வில்லை. நீ தூயவன். எனவே, நரக வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாயாக! (எனும் 3:191ஆவது இறைவசனம்)
4570. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருநாள்) நான் என் சிறிய தாயார் (அவர்களும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான) மைமூனா (ரலி) அவர்கள் வீட்டில் இரவு தங்கினேன். அப்போது நான் “நிச்சயம் (இன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகையை பார்ப்பேன்” என்று சொல்லிக்கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தலையணையொன்று போடப்பட்டது. அவர்கள் அதன் நீளவாட்டில் (தலை வைத்து) உறங்கினார்கள். அவர்கள் (விழித்தெழுந்து) தம் முகத்திலிருந்து தூக்க(க் கலக்க)த்தைத் துடைக்கலானார்கள். பிறகு (குர்ஆனின் மூன்றாவது அத்தியாயமான) ஆலு இம்ரானிலிருந்து கடைசிப் பத்து வசனங்களை ஓதி முடித்தார்கள். பிறகு (கட்டித்) தொங்கவிடப்பட்டிருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே சென்று, அதை எடுத்து அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு தொழுவதற்காக எழுந்தார்கள்.
நானும் எழுந்து அவர்கள் செய்ததைப் போன்றே செய்தேன். பிறகு சென்று அவர்களுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டேன். நபி (ஸல்) அவர்கள் தமது (வலக்) கரத்தை என் தலைமீது வைத்தார்கள். பிறகு, என் காதைப் பிடித்துத் திருகி (உஷார்படுத்தி)னார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார் கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, பிறகு “வித்ர்' தொழுதார்கள்.28

4571. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّهُ، بَاتَ عِنْدَ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْىَ خَالَتُهُ قَالَ فَاضْطَجَعْتُ فِي عَرْضِ الْوِسَادَةِ، وَاضْطَجَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَهْلُهُ فِي طُولِهَا، فَنَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى انْتَصَفَ اللَّيْلُ، أَوْ قَبْلَهُ بِقَلِيلٍ، أَوْ بَعْدَهُ بِقَلِيلٍ، ثُمَّ اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَجَعَلَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ بِيَدَيْهِ، ثُمَّ قَرَأَ الْعَشْرَ الآيَاتِ الْخَوَاتِمَ مِنْ سُورَةِ آلِ عِمْرَانَ، ثُمَّ قَامَ إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ فَتَوَضَّأَ مِنْهَا، فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ قَامَ يُصَلِّي، فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ، ثُمَّ ذَهَبْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ، فَوَضَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي، وَأَخَذَ بِأُذُنِي بِيَدِهِ الْيُمْنَى يَفْتِلُهَا، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ، ثُمَّ اضْطَجَعَ حَتَّى جَاءَهُ الْمُؤَذِّنُ، فَقَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ، ثُمَّ خَرَجَ فَصَلَّى الصُّبْحَ.
பாடம் : 19
எங்கள் இறைவா! நீ யாரை நரகத்தில் நுழையவைக்கிறாயோ, நிச்சயமாக அவரை நீ இழிவுக் குள்ளாக்கிவிட்டாய். மேலும், (இத்தகைய) அநீதியாளர்களுக்கு உதவி புரிவோர் எவருமிலர் (எனும் 3:192ஆவது இறைவசனம்)
4571. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா (ரலி) அவர்களிடம் (ஒருநாள்) இரவில் தங்கினேன். நான் தலையணையின் அகல வாட்டில் (தலைவைத்துப்) படுத்துக்கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய வீட்டாரும் அதன் நீளவாட்டில் (தலைவைத்துப்) படுத்துக்கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடுஇரவு நேரம்வரை, அல்லது அதற்குச் சற்று முன்புவரை, அல்லது அதற்குச் சற்றுப் பின்புவரை உறங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்தெழுந்து தமது முகத்திóருந்து தம் இரு கரங்களால் தூக்க(க் கலக்க)த்தைத் துடைக்கலானார்கள்.
பிறகு ஆலு இம்ரான் அத்தியாயத்தின் இறுதிப் பத்து வசனங்களை (3:190-200) ஓதினார்கள். பிறகு (கட்டித்) தொங்கவிடப்பட்டிருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே சென்று (அதைச் சாய்த்து) அதிலிருந்து அங்கத் தூய்மை செய்தார்கள். தமது உளூவை அவர்கள் செம்மையாகச் செய்து கொண்டு தொழுவதற்காக நின்றார்கள். அவர்கள் செய்ததைப் போன்றே நானும் செய்துவிட்டுப் பிறகு அவர்களுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டேன்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வலக் கரத்தை என் தலைமீது வைத்து என் வலக் காதைத் திருகினார்கள். (பிறகு) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு “வித்ர்' தொழுதார்கள்.
பிறகு பாங்கு சொல்பவர் (தொழுகை அறிவிப்பாளரான பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொல்லிவிட்டு) தம்மிடம் வரும்வரை ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு வெளியே புறப்பட்டுச் சென்று சுப்ஹ் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள்.

4572. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَنَّ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّهُ، بَاتَ عِنْدَ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْىَ خَالَتُهُ قَالَ فَاضْطَجَعْتُ فِي عَرْضِ الْوِسَادَةِ، وَاضْطَجَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَهْلُهُ فِي طُولِهَا، فَنَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى إِذَا انْتَصَفَ اللَّيْلُ، أَوْ قَبْلَهُ بِقَلِيلٍ، أَوْ بَعْدَهُ بِقَلِيلٍ، اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَجَلَسَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ بِيَدِهِ، ثُمَّ قَرَأَ الْعَشْرَ الآيَاتِ الْخَوَاتِمَ مِنْ سُورَةِ آلِ عِمْرَانَ، ثُمَّ قَامَ إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ فَتَوَضَّأَ مِنْهَا، فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ قَامَ يُصَلِّي. قَالَ ابْنُ عَبَّاسٍ فَقُمْتُ فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ، ثُمَّ ذَهَبْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ، فَوَضَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي، وَأَخَذَ بِأُذُنِي الْيُمْنَى يَفْتِلُهَا، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ ثُمَّ، اضْطَجَعَ حَتَّى جَاءَهُ الْمُؤَذِّنُ، فَقَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ، ثُمَّ خَرَجَ فَصَلَّى الصُّبْحَ.
பாடம் : 20
“எங்கள் இறைவா! உங்கள் இறைவனை நம்புங்கள்- என்று இறைநம்பிக்கைக்கு அழைப்பு விடுத்த ஒருவரின் அழைப்பினை நாங்கள் செவியேற்று, உறுதியாக நம்பிக்கை கொண்டோம். எனவே, எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! இன்னும் எங்களைவிட்டுத் தீமைகளை அகற்றுவாயாக! மேலும் நல்லோருடன் எங்களை மரணிக்கச் செய்வாயாக!” (எனும் 3:193ஆவது இறைவசனம்)
4572. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா (ரலி) அவர்களிடம் (ஒருநாள்) இரவில் தங்கினேன். நான் தலையணையின் அகலவாட்டில் (தலைவைத்துப்) படுத்துக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய வீட்டாரும் அதன் நீளவாட்டில் (தலைவைத்துப்) படுத்துக்கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடுஇரவு நேரம் வரை, அல்லது அதற்குச் சற்று முன்பு வரை, அல்லது அதற்குச் சற்றுப் பின்புவரை உறங்கினார்கள்.
பிறகு அவர்கள் விழித்தெழுந்து தமது முகத்திலிருந்து தம் கரத்தால் தூக்க(க் கலக்க)த்தைத் துடைக்கலானார்கள். பிறகு ஆலு இம்ரான் அத்தியாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை (3:190-200) ஓதினார்கள். பிறகு (கட்டித்) தொங்கவிடப்பட்டிருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே எழுந்து சென்று (அதைச் சாய்த்து) அதிலிருந்து அங்கத் தூய்மை செய்தார்கள். தமது உளூவை அவர்கள் செம்மையாகச் செய்துகொண்டு தொழுவதற்காக நின்றார்கள்.
அவர்கள் செய்ததைப் போன்றே நானும் செய்துவிட்டுப் பிறகு அவர்களுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டேன். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வலக் கரத்தை என் தலைமீது வைத்து என் வலக்காதைத் திருகலானார்கள்.
(பிறகு) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு “வித்ர்' தொழுதார்கள். பிறகு பாங்கு சொல்பவர் (தொழுகை அறிவிப்புச் செய்பவரான பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொல்லிவிட்டுத்) தம்மிடம் வரும் வரை ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள்.
(அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு வெளியே புறப்பட்டுச் சென்று சுப்ஹ் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள்.29

4573. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَجُلاً، كَانَتْ لَهُ يَتِيمَةٌ فَنَكَحَهَا، وَكَانَ لَهَا عَذْقٌ، وَكَانَ يُمْسِكُهَا عَلَيْهِ، وَلَمْ يَكُنْ لَهَا مِنْ نَفْسِهِ شَىْءٌ فَنَزَلَتْ فِيهِ {وَإِنْ خِفْتُمْ أَنْ لاَ تُقْسِطُوا فِي الْيَتَامَى} أَحْسِبُهُ قَالَ كَانَتْ شَرِيكَتَهُ فِي ذَلِكَ الْعَذْقِ وَفِي مَالِهِ.
பாடம்:
4. “அந்நிசா' அத்தியாயம்1
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(4:172ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “யஸ்தன்கிஃப்' (குறைவாக/இழிவாகக் கருதுகிறார்) எனும் சொல்லுக்கு, “(அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிய மறுத்து) அகந்தை கொள்கிறார்' என்பது பொருள்.
(4:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கிவா(யா)ம்' (ஆதாரமான/அடிப்படை யான) எனும் சொல்லுக்கு “உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான' என்பது பொருள்.
(4:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லஹுன்ன சபீலா' (அவர்களுக்கு ஒரு வழியை) எனும் சொற்றொடரில் உள்ள “சபீல்' (வழி) என்பது, (விபசாரம் செய்த) கன்னி கழிந்த பெண்ணைக் கல்லெறிந்து கொல்வதையும், கன்னிப் பெண்ணுக்கு (நூறு) சாட்டையடி வழங்குவதையும் குறிக்கிறது.
இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாதவர்கள் கூறுகின்றனர்:
(4:3ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “மஸ்னா, வ ஸுலாஸ, வ ருபாஅ' எனும் சொற்களுக்கு இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக என்பது பொருள். “ருபாஉ' (நான்கு நான்காக) என்பதைத் தாண்டி (குமாஸ் - ஐந்து ஐந்தாக, சுதாஸ்-ஆறு ஆறாக என்றெல்லாம்) அரபியர் செ(ô)ல்வதில்லை.
பாடம் : 1
அநாதை(ப் பெண்களை மணந்து கொண்டு அவர்)கள் விஷயத்தில் நீங்கள் நீதி செலுத்த இயலாது என அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண் டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக நீங்கள் மணந்துகொள்ளலாம் (எனும் 4:3ஆவது வசனத்தொடர்)
4573. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
ஒரு மனிதரின் பராமரிப்பில் அநாதைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளை அவர் மணம் முடித்துக்கொண்டார். அவளுக்குப் பேரீச்சமரம் ஒன்று (சொந்தமாக) இருந்தது. அந்தப் பேரீச்சமரத்திற்காகவே அந்தப் பெண்ணை அவர் தம்மிடம் வைத்திருந்தார். மற்றபடி அவளுக்கு அவரது உள்ளத்தில் (இடம்) ஏதுமிருக்கவில்லை.
ஆகவே அவர் விஷயத்தில்தான், “அநாதை(ப் பெண்களை மணந்துகொண்டு அவர்)கள் விஷயத்தில் நீங்கள் நீதி செலுத்த இயலாது என அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக நீங்கள் மணந்துகொள்ளலாம்” எனும் (4:3ஆவது) வசனம் அருளப்பெற்றது.
அறிவிப்பாளர் (ஹிஷாம் பின் யூசுஃப், அல்லது ஹிஷாம் பின் உர்வா-ரஹ்) கூறுகிறார்:
(இதை அறிவித்தபோது) உர்வா (ரஹ்) அவர்கள், “அந்தப் பேரீச்சமரத்திலும் அவரது செல்வத்திலும் அப்பெண் அவருக்குப் பங்காளியாய் இருந்தாள்” என்று அறிவித்தார் என நான் எண்ணு கிறேன்.2

4574. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ عَنْ قَوْلِ اللَّهِ، تَعَالَى {وَإِنْ خِفْتُمْ أَنْ لاَ تُقْسِطُوا فِي الْيَتَامَى}. فَقَالَتْ يَا ابْنَ أُخْتِي، هَذِهِ الْيَتِيمَةُ تَكُونُ فِي حَجْرِ وَلِيِّهَا، تَشْرَكُهُ فِي مَالِهِ وَيُعْجِبُهُ مَالُهَا وَجَمَالُهَا، فَيُرِيدُ وَلِيُّهَا أَنْ يَتَزَوَّجَهَا، بِغَيْرِ أَنْ يُقْسِطَ فِي صَدَاقِهَا، فَيُعْطِيَهَا مِثْلَ مَا يُعْطِيهَا غَيْرُهُ، فَنُهُوا عَنْ أَنْ يَنْكِحُوهُنَّ، إِلاَّ أَنْ يُقْسِطُوا لَهُنَّ، وَيَبْلُغُوا لَهُنَّ أَعْلَى سُنَّتِهِنَّ فِي الصَّدَاقِ، فَأُمِرُوا أَنْ يَنْكِحُوا مَا طَابَ لَهُمْ مِنَ النِّسَاءِ سِوَاهُنَّ. قَالَ عُرْوَةُ قَالَتْ عَائِشَةُ وَإِنَّ النَّاسَ اسْتَفْتَوْا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ هَذِهِ الآيَةِ فَأَنْزَلَ اللَّهُ {وَيَسْتَفْتُونَكَ فِي النِّسَاءِ} قَالَتْ عَائِشَةُ وَقَوْلُ اللَّهِ تَعَالَى فِي آيَةٍ أُخْرَى {وَتَرْغَبُونَ أَنْ تَنْكِحُوهُنَّ} رَغْبَةُ أَحَدِكُمْ عَنْ يَتِيمَتِهِ حِينَ تَكُونُ قَلِيلَةَ الْمَالِ وَالْجَمَالِ قَالَتْ فَنُهُوا أَنْ يَنْكِحُوا عَنْ مَنْ رَغِبُوا فِي مَالِهِ وَجَمَالِهِ فِي يَتَامَى النِّسَاءِ، إِلاَّ بِالْقِسْطِ، مِنْ أَجْلِ رَغْبَتِهِمْ عَنْهُنَّ إِذَا كُنَّ قَلِيلاَتِ الْمَالِ وَالْجَمَالِ.
பாடம்:
4. “அந்நிசா' அத்தியாயம்1
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(4:172ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “யஸ்தன்கிஃப்' (குறைவாக/இழிவாகக் கருதுகிறார்) எனும் சொல்லுக்கு, “(அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிய மறுத்து) அகந்தை கொள்கிறார்' என்பது பொருள்.
(4:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கிவா(யா)ம்' (ஆதாரமான/அடிப்படை யான) எனும் சொல்லுக்கு “உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான' என்பது பொருள்.
(4:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லஹுன்ன சபீலா' (அவர்களுக்கு ஒரு வழியை) எனும் சொற்றொடரில் உள்ள “சபீல்' (வழி) என்பது, (விபசாரம் செய்த) கன்னி கழிந்த பெண்ணைக் கல்லெறிந்து கொல்வதையும், கன்னிப் பெண்ணுக்கு (நூறு) சாட்டையடி வழங்குவதையும் குறிக்கிறது.
இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாதவர்கள் கூறுகின்றனர்:
(4:3ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “மஸ்னா, வ ஸுலாஸ, வ ருபாஅ' எனும் சொற்களுக்கு இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக என்பது பொருள். “ருபாஉ' (நான்கு நான்காக) என்பதைத் தாண்டி (குமாஸ் - ஐந்து ஐந்தாக, சுதாஸ்-ஆறு ஆறாக என்றெல்லாம்) அரபியர் செ(ô)ல்வதில்லை.
பாடம் : 1
அநாதை(ப் பெண்களை மணந்து கொண்டு அவர்)கள் விஷயத்தில் நீங்கள் நீதி செலுத்த இயலாது என அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண் டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக நீங்கள் மணந்துகொள்ளலாம் (எனும் 4:3ஆவது வசனத்தொடர்)
4574. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அநாதை(ப் பெண்களை மணந்துகொண்டு அவர்)கள் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக நீங்கள் மணந்துகொள்ளலாம்” எனும் (4:3ஆவது) இறைவசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்:
என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் பொறுப்பில் வளர்கின்ற- அவருடைய செல்வத்தில் பங்காளியாக இருக்கின்ற அநாதைப் பெண் ஆவாள். அவளது செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளுடைய காப்பாளர் அவளது மஹ்ர் (மணக்கொடை) விஷயத்தில் நீதியுடன் நடக்காமல் - மற்றவர்கள் அவளுக்கு அளிப்பது போன்ற மஹ்ரை அவளுக்கு அளிக்காமல்-அவளை மணமுடித்துக்கொள்ள விரும்புகிறார் எனும் நிலையில் இருப்பவள் ஆவாள்.
இவ்விதம் காப்பாளர்கள் தம் பொறுப்பி லிருக்கும் அநாதைப் பெண்களை அவர்களுக்கு நீதி செலுத்தாமல், அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும் மஹ்ரில் மிக உயர்ந்த மஹ்ர் எதுவோ அதை அவர்களுக்கு அளிக்காமல் அவர்களை மணமுடித்துக்கொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக)த் தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்றப் பெண்களில் தங்களுக்கு விருப்பமான பெண்களை மணமுடித்துக்கொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது.
இந்த இறைவசனம் அருளப்பெற்ற பின்பும் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு வரலாயினர். ஆகவே அல்லாஹ், “பெண்கள் விஷயத்தில் விளக்கம் கூறுமாறு (நபியே!) உம்மிடம் அவர்கள் கோருகின்றனர்” என்று தொடங்கும் (4:127ஆவது) வசனத்தை அருளினான்.
மேலும் (இந்த) பிந்திய வசனத்தில் (4:127) உயர்ந்தோன் அல்லாஹ் “மேலும் யாரை நீங்கள் மணந்துகொள்ள விரும்புவதில்லையோ...” என்று கூறியிருப்பது, உங்களில் (காப்பாளராயிருக்கும்) ஒருவர் தம் (பராமரிப்பில் இருந்துவரும்) அநாதைப் பெண்ணை அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருக்கும்போது அவளை (மணந்துகொள்ள) விரும்பாமலிருப்பதைக் குறிப்பதாகும்.
அப்பெண்கள் செல்வத்திலும் அழகிலும் குறைந்தவர்களாக இருக்கும்போது அவர்களை மணந்துகொள்ள காப்பாளர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால், அவர்கள் எந்த அநாதைப் பெண்களின் செல்வத்திற்கும் அழகிற்கும் ஆசைப்பட்டார்களோ அந்தப் பெண்களையும் “நீதியான முறையிலேயே அல்லாமல் வேறு எந்த வகையிலும் மணமுடித்துக்கொள்ளலாகாது' என்று அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.3

4575. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ فِي قَوْلِهِ تَعَالَى {وَمَنْ كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ وَمَنْ كَانَ فَقِيرًا فَلْيَأْكُلْ بِالْمَعْرُوفِ} أَنَّهَا نَزَلَتْ فِي مَالِ الْيَتِيمِ إِذَا كَانَ فَقِيرًا، أَنَّهُ يَأْكُلُ مِنْهُ مَكَانَ قِيَامِهِ عَلَيْهِ، بِمَعْرُوفٍ.
பாடம் : 2
(அநாதைகளைப் பராமரிப்பவராகிய) அவர் செல்வராக இருந்தால் (பராமரிப்புக்கான சன்மானம் எதையும் பெறாமல்) தவிர்த்து விடட்டும்! அவர் ஏழையாக இருந்தால் முறைப்படி உண் ணட்டும்! அநாதைகளிடம் அவர்களுடைய செல்வங்களை நீங்கள் ஒப்படைக்கும்போது அவர்களுக்காகச் சாட்சிகளை ஏற் படுத்திக்கொள்ளுங்கள். கணக்குக் கேட்க அல்லாஹ் போதுமானவன் (எனும் 4:6ஆவது வசனத்தொடர்)
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “பிதாரன்' எனும் சொல்லுக்கு “அவசரமாக' என்பது பொருள்.
(4:18ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “அஃதத்னா' எனும் சொல்லுக்கு “தயார்படுத்திவைத்துள்ளோம்' என்பது பொருள். இச்சொல், “இத்தாத்' (ஆயத்தம்) எனும் வேர்ச்சொல்லிலிருந்து “அஃப்அல்னா' எனும் வாய்பாட்டில் வந்ததாகும்.
4575. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அநாதைகளைப் பராமரிப்பவர் செல்வராக இருந்தால், அவர் (அநாதை களின் சொத்துகளிலிருந்து உண்பதைத்) தவிர்த்துக்கொள்ளட்டும். அவர் ஏழையாக இருந்தால் முறைப்படி உண்ணட்டும்!” எனும் (4:6ஆவது) இறைவசனம் அநாதையின் செல்வம் தொடர்பாக அருளப்பட்டது. (அதைப்) பராமரிப்பவர் ஏழையாக இருந்தால், அதைப் பராமரிப்பதற்குப் பகரமாக நியாயமான அளவு அதிலிருந்து (எடுத்து) உண்ணலாம். (இதுதான் அதன் பொருள்.)4

4576. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ الأَشْجَعِيُّ، عَنْ سُفْيَانَ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ {وَإِذَا حَضَرَ الْقِسْمَةَ أُولُو الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينُ} قَالَ هِيَ مُحْكَمَةٌ وَلَيْسَتْ بِمَنْسُوخَةٍ. تَابَعَهُ سَعِيدٌ عَنِ ابْنِ عَبَّاسٍ.
பாடம் : 3
பாகப்பிரிவினையின்போது உற வினர்கள், அநாதைகள், ஏழைகள் ஆகியோர் வந்துவிட்டால் அவர்களுக்கும் அதிóருந்து (சிறிது) அளியுங்கள். மேலும், அவர்களி டம் கனிவான வார்த்தைகளைக் கூறி (அனுப்பி)விடுங்கள் (எனும் 4:8ஆவது இறைவசனம்)
4576. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பாகப்பிரிவினையின்போது உற வினர்கள், அநாதைகள், ஏழைகள் ஆகியோர் வந்துவிட்டால் அவர்களுக் கும் அதிலிருந்து (சிறிது) அளியுங்கள். மேலும், அவர்களிடம் கனிவான வார்த்தை களைக் கூறி (அனுப்பி)விடுங்கள்” எனும் (4:8ஆவது) வசனம், (சட்டம்) நடை முறையிலுள்ள வசனமாகும்; காலாவதியாக்கப்பட்ட வசனமன்று.5
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.6

4577. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي ابْنُ مُنْكَدِرٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ عَادَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ فِي بَنِي سَلِمَةَ مَاشِيَيْنِ فَوَجَدَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ أَعْقِلُ، فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ مِنْهُ، ثُمَّ رَشَّ عَلَىَّ، فَأَفَقْتُ فَقُلْتُ مَا تَأْمُرُنِي أَنْ أَصْنَعَ فِي مَالِي يَا رَسُولَ اللَّهِ فَنَزَلَتْ {يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلاَدِكُمْ}
பாடம் : 4
அல்லாஹ் உங்கள் பிள்ளைகளின் (பாகப்பிரிவினை) விஷயத்தில் (இவ்வாறு) கட்டளையிடுகின் றான்... (என்று தொடங்கும் 4:11ஆவது வசனம்)
4577. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (என்) பனூ சலிமா குலத்தாரிடையே நான் (நோயுற்றுத் தங்கி) இருந்தபோது நடந்தே வந்து என்னை நலம் விசாரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், நான் (நோயின் கடுமையால்) சுயநினைவு இழந்தவனாக இருந்த நிலையில் என்னைக் கண்டார்கள்.
ஆகவே, சிறிது தண்ணீரைக் கொண்டு வரச்சொல்லி அதிலிருந்து அங்கத் தூய்மை செய்து என்மீது தெளித்தார்கள். நான் மூர்ச்சை தெளிந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் என் செல்வத்தை என்ன செய்ய வேண்டுமென்று எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்!” என்று கேட்டேன்.
அப்போதுதான், “அல்லாஹ் உங்கள் பிள்ளைகளின் (பாகப்பிரிவினை) விஷயத்தில் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகின்றான்” என்று தொடங்கும் (4:11ஆவது) வசனம் அருளப்பெற்றது.7

4578. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنْ وَرْقَاءَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ الْمَالُ لِلْوَلَدِ، وَكَانَتِ الْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ، فَنَسَخَ اللَّهُ مِنْ ذَلِكَ مَا أَحَبَّ، فَجَعَلَ لِلذَّكَرِ مِثْلَ حَظِّ الأُنْثَيَيْنِ، وَجَعَلَ لِلأَبَوَيْنِ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا السُّدُسَ وَالثُّلُثَ، وَجَعَلَ لِلْمَرْأَةِ الثُّمُنَ وَالرُّبُعَ، وَلِلزَّوْجِ الشَّطْرَ وَالرُّبُعَ.
பாடம் : 5
(இறந்துபோன) உங்கள் மனைவியர் விட்டுச்சென்ற (சொத்)தில், அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை யெனில் பாதிப் பங்கு உங்களுக் குரியதாகும் (எனும் 4:12ஆவது வசனத்தொடர்)
4578. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இறந்தவரின்) சொத்து (அவருடைய) பிள்ளைகளுக்குரியதாக இருந்தது; (இறந்தவரின்) இறுதிவிருப்பம் (மூலம் கிடைப்பது) மட்டுமே தாய் தந்தையருக்கு உரியதாக இருந்துவந்தது.
அல்லாஹ் அதிலிருந்து, தான் விரும்பி யதை மாற்றி(யமைத்து), ஆணுக்கு இரு பெண்களின் பங்கை நிர்ணயித்துத் தாய் தந்தையரில் (தலா) ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கையும் மூன்றில் ஒரு பங்கையும் நிர்ணயித்தான். மனைவிக்கு எட்டில் ஒரு பங்கையும் நான்கில் ஒரு பங்கையும் கணவனுக்குப் பாதிப் பங்கையும் நான்கில் ஒரு பங்கையும் நிர்ணயித்தான்.8

4579. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، حَدَّثَنَا أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ،. قَالَ الشَّيْبَانِيُّ وَذَكَرَهُ أَبُو الْحَسَنِ السُّوَائِيُّ وَلاَ أَظُنُّهُ ذَكَرَهُ إِلاَّ عَنِ ابْنِ عَبَّاسٍ، {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ يَحِلُّ لَكُمْ أَنْ تَرِثُوا النِّسَاءَ كَرْهًا وَلاَ تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُوا بِبَعْضِ مَا آتَيْتُمُوهُنَّ} قَالَ كَانُوا إِذَا مَاتَ الرَّجُلُ كَانَ أَوْلِيَاؤُهُ أَحَقَّ بِامْرَأَتِهِ، إِنْ شَاءَ بَعْضُهُمْ تَزَوَّجَهَا، وَإِنْ شَاءُوا زَوَّجُوهَا، وَإِنْ شَاءُوا لَمْ يُزَوِّجُوهَا، فَهُمْ أَحَقُّ بِهَا مِنْ أَهْلِهَا، فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ فِي ذَلِكَ.
பாடம் : 6
“இறைநம்பிக்கையாளர்களே! (விதவைப்) பெண்களை நீங்கள் பலவந்தமாக அடைவது அனுமதிக் கப்பட்டதன்று. மேலும், அவர்கள் வெளிப்படையான இழிசெயல் எதையும் செய்தாலன்றி, அவர்களுக்கு நீங்கள் வழங்கிய (மஹ்ர் போன்ற)வற்றில் ஒரு பகுதியைப் பறித்துக்கொள்வதற்காக அவர் களை நீங்கள் கட்டாயப்படுத் தாதீர்கள்” எனும் (4:19ஆவது) இறைவசனம்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(4:19ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “லா தஅளுலூஹுன்ன' எனும் சொற்றொடருக்கு “அவர்களைப் பலவந்தப்படுத்தாதீர்கள்' என்பது பொருள்.
(4:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹூப்' எனும் சொல்லுக்கு “பாவம்' என்பது பொருள்.
(4:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தஊலூ' (பேதம் பாராட்டுவது/நீதி தவறுவது) எனும் சொல்லுக்கு “(ஓரவஞ்சனையாக) நீங்கள் சாய்ந்துவிடுவது' என்று பொருள்.
(4:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “நிஹ்லா' எனும் சொல்லுக்கு “மஹ்ர்' (மணாளன் மணாளிக்கு வழங்க வேண்டிய மணக்கொடை) என்று பொருள்.
4579. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
“(அறியாமைக் காலத்தில்) ஒரு மனிதர் இறந்துவிட்டால் அவருடைய வாரிசுகளே அவருடைய மனைவியின் மீது அதிக உரிமை உடையவர்களாக இருந்துவந்தனர். அவர்களில் சிலர் விரும்பினால் அவளைத் தாமே மணமுடித்துக்கொள்ளவும் செய்வார்கள். விரும்பினால் (வேறெவருக்காவது) அவளை மணமுடித்துக் கொடுத்துவிடுவார்கள். விரும்பினால் மணமுடித்துக் கொடுக்க(ôது அப்படியே விட்டுவிடுவார்கள்; வாழ அனுமதிக்க)மாட்டார்கள். ஆக, அவளுடைய வீட்டாரை விட (இறந்த கணவனின் வாரிசுகளான) அவர்கள்தான் அவள்மீது அதிக உரிமையுடையவர்களாக இருந்தார்கள்.
அப்போதுதான் இது தொடர்பாக, “இறைநம்பிக்கையாளர்களே! (விதவைப்) பெண்களை நீங்கள் பலவந்தமாக அடைவது அனுமதிக்கப்பட்டதன்று. மேலும், அவர்கள் வெளிப்படையான இழிசெயல் எதையும் செய்தாலன்றி, அவர்களுக்கு நீங்கள் வழங்கிய (மஹ்ர் போன்ற)வற்றில் ஒரு பகுதியைப் பறித்துக்கொள்வதற்காக அவர்களை நீங்கள் கட்டாயப்படுத்தாதீர்கள்” எனும் (4:19ஆவது) வசனம் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

4580. حَدَّثَنِي الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ إِدْرِيسَ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاس ٍ ـ رضى الله عنهما ـ {وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِيَ} قَالَ وَرَثَةً. {وَالَّذِينَ عَاقَدَتْ أَيْمَانُكُمْ} كَانَ الْمُهَاجِرُونَ لَمَّا قَدِمُوا الْمَدِينَةَ يَرِثُ الْمُهَاجِرُ الأَنْصَارِيَّ دُونَ ذَوِي رَحِمِهِ لِلأُخُوَّةِ الَّتِي آخَى النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَهُمْ فَلَمَّا نَزَلَتْ {وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِيَ} نُسِخَتْ، ثُمَّ قَالَ {وَالَّذِينَ عَاقَدَتْ أَيْمَانُكُمْ } مِنَ النَّصْرِ، وَالرِّفَادَةِ وَالنَّصِيحَةِ، وَقَدْ ذَهَبَ الْمِيرَاثُ وَيُوصِي لَهُ. سَمِعَ أَبُو أُسَامَةَ إِدْرِيسَ، وَسَمِعَ إِدْرِيسُ طَلْحَةَ.
பாடம் : 7
“தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச்சென்ற (சொத்)திலிருந்து (பங்கு பெறுகின்ற) வாரிசுக்காரர்களை நாம் ஒவ்வொருவருக்கும் நிர்ணயித்துள்ளோம். நீங்கள் யாரோடு உடன்படிக்கை செய்துள்ளீர்களோ அவர்களுக்கும் அவர்களது பங்கை அளித்துவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்” எனும் (4:33ஆவது) இறைவசனம்
மஅமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறர்கள்:9
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “மவாலிய' எனும் சொல்லுக்கு “வாரிசுகள் எனும் நேசர்கள்' என்பது பொருள்.
(ஒரு ஓதல் முறைப்படி) “ஆகதத் அய்மானுக்கும்' (நீங்கள் யாரோடு உடன்படிக்கை செய்துள்ளீர்களோ அவர்கள்) என்பது நட்புறவு ஒப்பந்தக் காரர்களைக் குறிக்கின்றது.
(“மவாலி' என்பதன் ஒருமையான) “மவ்லா' என்பது தந்தையின் சகோதரர் மகனையும் குறிக்கும்; (அடிமையை) விடுதலை செய்து, உபகாரம் புரியும் எசமான்; விடுதலை செய்யப்பட்ட அடிமை; அரசன் ஆகியோரையும் குறிக்கும். மார்க்கத் தோழன் என்ற பொருளும் உண்டு.
4580. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இந்த (4:33ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள “மவாலிய' எனும் சொல்லுக்கு “வாரிசுகள்' என்பது பொருள். இவ்வசனத்தின் விவரமாவது:
முஹாஜிர்கள் மதீனாவுக்கு வந்தபோது (ஆரம்பத்தில்) அன்சாரி (ஒருவர் இறந்து விட்டால் அவரு)க்கு அவருடைய உறவினர்கள் அன்றி (அவருடைய) முஹாஜிர் (நண்பர்) வாரிசாகிவந்தார். நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் இடையே (இஸ்லாமிய) சகோதரத்துவத்தை ஏற்படுத்தியிருந்ததே இதற்குக் காரணம். (பின்னர்) “தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச்சென்ற (சொத்)திலிருந்து (பங்கு பெறுகின்ற) வாரிசுகளை நாம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்தியுள்ளோம்” எனும் (4:33ஆவது) வசனம் அருளப்பெற்றபோது இந்த நியதி (இறைவனால்) மாற்றப்பட்டுவிட்டது.
பின்னர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் யாருடன் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ அவர்களுக்கு வாரிசுரிமை போய், உதவி புரிதல், ஒத்துழைப்பு நல்குதல், அறிவுரை பகர்தல் ஆகியவைதான் உள்ளன. உடன்படிக்கை செய்துகொண்டவருக்காக இறுதிவிருப்பம் (வேண்டுமானால்) தெரிவிக்கலாம்.10
இதன் அறிவிப்பாளர்களான அபூ உசாமா (ரஹ்) அவர்கள் இத்ரீஸ் (ரஹ்) அவர்களிடமும், இத்ரீஸ் (ரஹ்) அவர்கள் தல்ஹா பின் முஸர்ரிஃப் (ரஹ்) அவர்களி டமும் ஹதீஸைக் கேட்டுள்ளார்கள்.11

4581. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنَا أَبُو عُمَرَ، حَفْصُ بْنُ مَيْسَرَةَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ أُنَاسًا فِي زَمَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالُوا يَا رَسُولَ اللَّهِ، هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " نَعَمْ، هَلْ تُضَارُّونَ فِي رُؤْيَةِ الشَّمْسِ بِالظَّهِيرَةِ، ضَوْءٌ لَيْسَ فِيهَا سَحَابٌ ". قَالُوا لاَ. قَالَ " وَهَلْ تُضَارُّونَ فِي رُؤْيَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، ضَوْءٌ لَيْسَ فِيهَا سَحَابٌ ". قَالُوا لاَ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَا تُضَارُّونَ فِي رُؤْيَةِ اللَّهِ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ، إِلاَّ كَمَا تُضَارُّونَ فِي رُؤْيَةِ أَحَدِهِمَا، إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ أَذَّنَ مُؤَذِّنٌ تَتْبَعُ كُلُّ أُمَّةٍ مَا كَانَتْ تَعْبُدُ. فَلاَ يَبْقَى مَنْ كَانَ يَعْبُدُ غَيْرَ اللَّهِ مِنَ الأَصْنَامِ وَالأَنْصَابِ إِلاَّ يَتَسَاقَطُونَ فِي النَّارِ، حَتَّى إِذَا لَمْ يَبْقَ إِلاَّ مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ، بَرٌّ أَوْ فَاجِرٌ وَغُبَّرَاتُ أَهْلِ الْكِتَابِ، فَيُدْعَى الْيَهُودُ فَيُقَالُ لَهُمْ مَنْ كُنْتُمْ تَعْبُدُونَ قَالُوا كُنَّا نَعْبُدُ عُزَيْرَ ابْنَ اللَّهِ. فَيُقَالُ لَهُمْ كَذَبْتُمْ، مَا اتَّخَذَ اللَّهُ مِنْ صَاحِبَةٍ وَلاَ وَلَدٍ، فَمَاذَا تَبْغُونَ فَقَالُوا عَطِشْنَا رَبَّنَا فَاسْقِنَا. فَيُشَارُ أَلاَ تَرِدُونَ، فَيُحْشَرُونَ إِلَى النَّارِ كَأَنَّهَا سَرَابٌ، يَحْطِمُ بَعْضُهَا بَعْضًا فَيَتَسَاقَطُونَ فِي النَّارِ، ثُمَّ يُدْعَى النَّصَارَى، فَيُقَالُ لَهُمْ مَنْ كُنْتُمْ تَعْبُدُونَ قَالُوا كُنَّا نَعْبُدُ الْمَسِيحَ ابْنَ اللَّهِ. فَيُقَالُ لَهُمْ كَذَبْتُمْ، مَا اتَّخَذَ اللَّهُ مِنْ صَاحِبَةٍ وَلاَ وَلَدٍ. فَيُقَالُ لَهُمْ مَاذَا تَبْغُونَ فَكَذَلِكَ مِثْلَ الأَوَّلِ، حَتَّى إِذَا لَمْ يَبْقَ إِلاَّ مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ مِنْ بَرٍّ أَوْ فَاجِرٍ، أَتَاهُمْ رَبُّ الْعَالَمِينَ فِي أَدْنَى صُورَةٍ مِنَ الَّتِي رَأَوْهُ فِيهَا، فَيُقَالُ مَاذَا تَنْتَظِرُونَ تَتْبَعُ كُلُّ أُمَّةٍ مَا كَانَتْ تَعْبُدُ. قَالُوا فَارَقْنَا النَّاسَ فِي الدُّنْيَا عَلَى أَفْقَرِ مَا كُنَّا إِلَيْهِمْ، وَلَمْ نُصَاحِبْهُمْ، وَنَحْنُ نَنْتَظِرُ رَبَّنَا الَّذِي كُنَّا نَعْبُدُ. فَيَقُولُ أَنَا رَبُّكُمْ، فَيَقُولُونَ لاَ نُشْرِكُ بِاللَّهِ شَيْئًا. مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا ".
பாடம் : 8
நிச்சயமாக அல்லாஹ் எவருக்கும் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான் (எனும் 4:40ஆவது வசனத்தொடர்)
அதாவது அணுவின் எடையளவுகூட (மனிதர்கள் செய்த நன்மைகளுக்கான பிரதிபலனைக் குறைத்தோ, பாவங்களுக் கான தண்டனையைக் கூட்டியோ) அநீதி இழைக்கமாட்டான்.
4581. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் சிலர், “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஆம்! (காண்பீர்கள்.) மேகமே இல்லாத நண்பகல் வெளிச்சத்தில் சூரியனைப் பார்க்க ஒருவரை ஒருவர் முண்டியடிப்பீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “இல்லை' என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “மேகமே இல்லாத பௌர்ணமி இரவின் வெளிச்சத்தில் நிலவைக் காண்பதற்காக நீங்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக்கொள்வீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள் (அப்போதும்) “இல்லை' என்று பதிலளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், “இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொள்ளாததைப் போன்றே மறுமை நாளில் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வைக் காணவும் நீங்கள் முண்டியடித்துக் கொள்ளமாட்டீர்கள்” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு விளக்கி னார்கள்:
மறுமை நாள் ஏற்படும்போது அறிவிப் பாளர் ஒருவர், “ஒவ்வொரு சமுதாய மும் (உலக வாழ்வில்) தாம் வழிபட்டுக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்” என்று அறிவிப்பார். அப்போது அல்லாஹ்வை விடுத்துக் கற்பனைக் கடவுளர்களையும் கற்சிலைகளையும் வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் ஒருவர்(கூட) எஞ்சாமல் (அனைவரும்) நரக நெருப்பில் விழுவர். முடிவில் அல்லாஹ்வை வழிபட்டுக்கொண்டு நன்மைகளும் புரிந்துகொண்டிருந்தவர்கள், அல்லது (அல்லாஹ்வையும் வழிபட்டுக்கொண்டு பாவங்களும் புரிந்துவந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள் ஆகியோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் (வேதக்காரர்களான) யூதர்கள் அழைக்கப்படுவர். அவர்களிடம், “யாரை நீங்கள் வழிபட்டுக்கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்கப்படும். அவர்கள், “அல்லாஹ்வின் மைந்தர் உஸைர் அவர்களை நாங்கள் வழிபட்டுக் கொண்டிருந்தோம்” என்று பதிலளிப்பார்கள்.
அப்போது அவர்களிடம், “நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை” என்று கூறப் படும். மேலும், “இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக!” என்பார்கள்.
உடனே நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக் கூடாதா என (ஒரு திசையைச்) சுட்டிக்காட்டப்படும். பிறகு (அத்திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டுசெல்லப்படுவார்கள். அது கானலைப் போலக் காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக்கொண்டிருக்கும். அப்போது அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.
பிறகு கிறித்தவர்கள் அழைக்கப்பட்டு, “நீங்கள் எதை வழிபட்டுக்கொண்டிருந் தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் மசீஹை (ஈசாவை) வழிபட்டுக்கொண்டிருந்தோம்” என்று கூறுவர். அப்போது அவர்களிடம், “நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் (தனக்கு) எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை” என்று கூறப்பட்ட பின் அவர்களைப் பார்த்து, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கப்படும். முன்பு (யூதர்கள்) கூறியதைப் போன்று இவர்களும் கூறுவர்.
இறுதியில் அல்லாஹ்வை வழிபட்டுக்(கொண்டு நன்மைகளும் புரிந்து)கொண்டிருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வழிபட்டுக்கொண்டு பாவங்களும் புரிந்துவந்த) தீயோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் அவர்களிடம் அகிலத்தாரின் இரட்சகன் வருவான்.
(அவனின் தன்மைகளை முன்பே அறிந்திருந்ததன் மூலம் தம் உள்ளத்தில்) அவனைப் பற்றி அவர்கள் எண்ணிவைத்திருந்த தோற்றங்களில் (அடையாளம் கண்டுகொள்வதற்கு) மிக நெருக்கமானதொரு தோற்றத்தில் (அவன் வருவான்).12
அப்போது, “எதை நீங்கள் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? ஒவ்வாரு சமுதாயமும் (உலகில்) தாம் வழிபட்டுக் கொண்டிருந்தவற்றைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருக்கின்றனரே!” என்று கேட்கப்படும். அவர்கள், “உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவை யுள்ளவர்களாக இருந்தும், அவர்களுடன் ஒட்டி உறவாடிக்கொண்டிராமல் அவர் களைப் பிரிந்திருந்தோம். (அப்படி யிருக்க, இப்போதா அவர்களைப் பின்தொடர்வோம்?) நாங்கள் வழிபட்டுக் கொண்டிருந்த எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்” என்று பதிலளிப்பர்.
அதற்கு அல்லாஹ், “நானே உங்கள் இறைவன்” என்பான். அதற்கு அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கமாட்டோம்” என்று இரண்டு தடவையோ அல்லது மூன்று தடவையோ கூறுவர்.13

4582. حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ يَحْيَى بَعْضُ الْحَدِيثِ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم " اقْرَأْ عَلَىَّ ". قُلْتُ آقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ " فَإِنِّي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي ". فَقَرَأْتُ عَلَيْهِ سُورَةَ النِّسَاءِ حَتَّى بَلَغْتُ {فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلاَءِ شَهِيدًا} قَالَ " أَمْسِكْ ". فَإِذَا عَيْنَاهُ تَذْرِفَانِ.
பாடம் : 9
ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்போதும், (நபியே!) உம்மை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும்போதும் (இவர் களின் நிலை) எப்படியிருக்கும்? (எனும் 4:41ஆவது இறைவசனம்)
(4:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முக்த்தால்' எனும் சொல்லும், (இதே மூலத்திலிருந்து வந்த) “கத்தால்' எனும் சொல்லும் (“கர்வம் பிடித்தவன்' எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.
(4:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “நத்மிச வு—þஹன்' (முகங்களை மாற்றி விடுவோம்) எனும் சொற்றொடருக்கு “அவர்களுடைய பிடரியைப் போல முகங்களையும் (தடவி) சம மட்டமாக மாற்றிவிடுவோம்' என்பது பொருள்.
(இதன் இறந்த கால வினைச்சொல்லான) “தமசல் கி(த்)தாப' என்பதற்கு “எழுத்தை அழித்தான்' என்பது பொருள்.
(4:55ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “சஈர்' (கொழுந்துவிட்டெரிகின்ற) எனும் சொல்லுக்கு “எரிபொருள்' என்பது அர்த்தம்.
4582. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள். நான், “தங்கள்மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஏனெனில், நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்” என்று சொன்னார்கள்.
ஆகவே, நான் அவர்களுக்கு “அந்நிசா' அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். “ஒவ்வொரு சமுதாயத்தாரிலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்போதும், (நபியே!) உம்மை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?” எனும் (4:41ஆவது) வசனத்தை நான் அடைந்தபோது நபி (ஸல்) அவர்கள், “நிறுத்துங்கள்” என்று சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்துகொண்டிருந்தன.14