4549. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ حَلَفَ يَمِينَ صَبْرٍ لِيَقْتَطِعَ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ ". فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً أُولَئِكَ لاَ خَلاَقَ لَهُمْ فِي الآخِرَةِ} إِلَى آخِرِ الآيَةِ. قَالَ فَدَخَلَ الأَشْعَثُ بْنُ قَيْسٍ وَقَالَ مَا يُحَدِّثُكُمْ أَبُو عَبْدِ الرَّحْمَنِ قُلْنَا كَذَا وَكَذَا. قَالَ فِيَّ أُنْزِلَتْ كَانَتْ لِي بِئْرٌ فِي أَرْضِ ابْنِ عَمٍّ لِي قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " بَيِّنَتُكَ أَوْ يَمِينُهُ " فَقُلْتُ إِذًا يَحْلِفَ يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنْ حَلَفَ عَلَى يَمِينِ صَبْرٍ يَقْتَطِعُ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ وَهْوَ فِيهَا فَاجِرٌ، لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانٌ ".
பாடம் : 3
அல்லாஹ்வின் உடன்படிக்கைக் கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக யார் அற்ப விலையைப் பெறுகிறார்களோ அத்தகை யோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. மேலும், இறுதி நாளில் அவர்களிடம் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களைப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவு மாட்டான். இன்னும் அவர்களுக்கு வதைக்கும் வேதனை உண்டு (எனும் 3:77ஆவது இறைவசனம்)
எந்த நற்பேறும் (கலாக்) இல்லை. அதாவது எந்த நன்மையும் இல்லை.
(இவ்வசனத்தில் “ஃபஈல்' எனும் வாய் பாட்டில் அமைந்த “துன்பம் தரும்' என்ற பொருளைக் குறிக்கும்) “அலீம்' எனும் சொல்லுக்கு “முஃப்இல்' வாய்பாட்டில் அமைந்த “முஃலிம்' என்பதன் பொருளாகும். (அதாவது) “துன்புறுத்துகின்ற' (என்பது பொருள்.)
4549. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தை (அநியாயமாக)ப் பறித்துக்கொள்வதற்காக ஒரு பிரமாண (வாக்குமூல)த்தின்போது துணிந்து பொய்ச் சத்தியம் செய்பவர், தம்மீது கோபம்கொண்டிருக்கும் நிலையில்தான் அல்லாஹ்வை (மறுமையில்) சந்திப்பார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அ(ந்தக் கருத்)தை உறுதிப்படுத்தும் விதத்தில் அல்லாஹ், “அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக யார் அற்ப விலையைப் பெறுகிறார்களோ அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதி நாளில் அவர்களிடம் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களைப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான். இன்னும் அவர்களுக்கு வதைக்கும் வேதனை உண்டு” எனும் (3:77ஆவது) வசனத்தை அருளினான் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அப்பால், அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் (எங்களிடம்) வந்து, “அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்) உங்களிடம் என்ன சொல்கிறார்?” என்று கேட்க, நாங்கள், “இப்படி இப்படிச் சொன்னார்கள்” என்று பதிலளித்தோம்.
(அதற்கு) அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவர் சொன்னது உண்மைதான்.) என் தொடர்பாகத்தான் அந்த (3:77ஆவது) வசனம் அருளப்பெற்றது. என் தந்தையின் சகோதரர் மகன் ஒருவரின் நிலத்தில் எனது கிணறு (ஒன்று) இருந்தது. (அந்தக் கிணறு தொடர்பாக எனக்கும் யூதர் ஒருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் எங்கள் வழக்கைக் கொண்டுசென்றோம். நபி (ஸல்) அவர்கள், “ஒன்று உன் சாட்சி; அல்லது (பிரதிவாதியான) அவருடைய சத்தியம் (இவ்வழக்கில் தீர்ப்பளிக்கத் தேவைப்படுகிறது.)” என்று சொன்னார்கள்.
உடனே நான், “அப்படியென்றால், (யூதரான) இவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்வாரே! அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எவர் ஒரு பிரமாண (வாக்குமூல)த்தின்போது, அதன் மூலம் ஒரு முஸ்லிமான மனிதரின் சொத்தை (அநியாயமாக)ப் பறித்துக்கொள்வதற்காகத் திட்டமிட்டுப் பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர்மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில்தான் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்” என்று சொன்னார்கள்.8
அத்தியாயம் : 65

4551. حَدَّثَنَا عَلِيٌّ ـ هُوَ ابْنُ أَبِي هَاشِمٍ ـ سَمِعَ هُشَيْمًا، أَخْبَرَنَا الْعَوَّامُ بْنُ حَوْشَبٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً، أَقَامَ سِلْعَةً فِي السُّوقِ فَحَلَفَ فِيهَا لَقَدْ أَعْطَى بِهَا مَا لَمْ يُعْطَهُ. لِيُوقِعَ فِيهَا رَجُلاً مِنَ الْمُسْلِمِينَ، فَنَزَلَتْ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً} إِلَى آخِرِ الآيَةِ.
பாடம் : 3
அல்லாஹ்வின் உடன்படிக்கைக் கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக யார் அற்ப விலையைப் பெறுகிறார்களோ அத்தகை யோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. மேலும், இறுதி நாளில் அவர்களிடம் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களைப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவு மாட்டான். இன்னும் அவர்களுக்கு வதைக்கும் வேதனை உண்டு (எனும் 3:77ஆவது இறைவசனம்)
எந்த நற்பேறும் (கலாக்) இல்லை. அதாவது எந்த நன்மையும் இல்லை.
(இவ்வசனத்தில் “ஃபஈல்' எனும் வாய் பாட்டில் அமைந்த “துன்பம் தரும்' என்ற பொருளைக் குறிக்கும்) “அலீம்' எனும் சொல்லுக்கு “முஃப்இல்' வாய்பாட்டில் அமைந்த “முஃலிம்' என்பதன் பொருளாகும். (அதாவது) “துன்புறுத்துகின்ற' (என்பது பொருள்.)
4551. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கடைவீதியில் விற்பனைப் பொருட்களை ஒருவர் பரப்பினார். அப்போது அவர், தாம் அந்தப் பொருளை(க் கொள்முதல் செய்தபோது) கொடுக்காத (விலை) ஒன்றைக் கொடுத்து வாங்கியதாக (அல்லாஹ்வின் மீது) சத்தியம் செய்தார். (வாங்க வந்த) முஸ்óம்களில் ஒருவரைக் கவர்(ந்து அவரிடம் தமது பொருளை விற்பனை செய்)வதற்காக இப்படிச் செய்தார். அப்போது “அல்லாஹ்வின்உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக் கும் பதிலாக யார் அற்ப விலையைப் பெறுகிறார்களோ அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறு மில்லை” எனும் (3:77ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.9

4552. حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيِّ بْنِ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، أَنَّ امْرَأَتَيْنِ، كَانَتَا تَخْرِزَانِ فِي بَيْتٍ ـ أَوْ فِي الْحُجْرَةِ ـ فَخَرَجَتْ إِحْدَاهُمَا وَقَدْ أُنْفِذَ بِإِشْفًى فِي كَفِّهَا، فَادَّعَتْ عَلَى الأُخْرَى، فَرُفِعَ إِلَى ابْنِ عَبَّاسٍ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ يُعْطَى النَّاسُ بِدَعْوَاهُمْ لَذَهَبَ دِمَاءُ قَوْمٍ وَأَمْوَالُهُمْ ". ذَكِّرُوهَا بِاللَّهِ وَاقْرَءُوا عَلَيْهَا {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ}. فَذَكَّرُوهَا فَاعْتَرَفَتْ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " الْيَمِينُ عَلَى الْمُدَّعَى عَلَيْهِ ".
பாடம் : 3
அல்லாஹ்வின் உடன்படிக்கைக் கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக யார் அற்ப விலையைப் பெறுகிறார்களோ அத்தகை யோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. மேலும், இறுதி நாளில் அவர்களிடம் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களைப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவு மாட்டான். இன்னும் அவர்களுக்கு வதைக்கும் வேதனை உண்டு (எனும் 3:77ஆவது இறைவசனம்)
எந்த நற்பேறும் (கலாக்) இல்லை. அதாவது எந்த நன்மையும் இல்லை.
(இவ்வசனத்தில் “ஃபஈல்' எனும் வாய் பாட்டில் அமைந்த “துன்பம் தரும்' என்ற பொருளைக் குறிக்கும்) “அலீம்' எனும் சொல்லுக்கு “முஃப்இல்' வாய்பாட்டில் அமைந்த “முஃலிம்' என்பதன் பொருளாகும். (அதாவது) “துன்புறுத்துகின்ற' (என்பது பொருள்.)
4552. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இரு பெண்கள் “ஒரு வீட்டில்' அல்லது “ஓர் அறையில்' (காலுறை) தைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்விருவரில் ஒருவர் தம் கையில் (தைக்கும்) ஊசி குத்தப்பட்ட நிலையில் வெளியே வந்து மற்றொருவரின் மீது குற்றம் சாட்டினார். இந்த வழக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (தீர்ப்புக்காகக்) கொண்டுசெல்லப்பட்டது.
அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் வாதத்தை (முறையீட்டை) மட்டும் வைத்து அவர்களுக்கு (சாதகமாகத்) தீர்ப்பு அளிக்கப்பட்டுவிட்டால் பலருடைய உயிர்களும் செல்வங்களும் (வீணாகப் பலிகொள்ளப்பட்டுப்) போய்விடும்' என்று சொன்னார்கள்” எனக் கூறிவிட்டு, (பிரதிவாதியான) அந்த மற்றொருவருக்கு அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டி, அவருக்கு, “அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக யார் அற்ப விலையைப் பெறுகிறார்களோ அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை” எனும் (3:77ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டுங்கள்” என்று சொன்னார்கள்.
அவ்வாறே அவருக்கு மக்கள் அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டி னார்கள். அவரும் தம் (தோழியின் கையில் ஊசியால் குத்திய) குற்றத்தை ஒப்புக்கொண்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள், “பிரதிவாதி (தமது குற்றத்தை மறுத்தால்) சத்தியம் செய்ய வேண்டும்' என்று சொன்னார்கள்” எனக் கூறினார்கள்.

4553. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، عَنْ هِشَامٍ، عَنْ مَعْمَرٍ،. وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، قَالَ حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ، قَالَ حَدَّثَنِي أَبُو سُفْيَانَ، مِنْ فِيهِ إِلَى فِيَّ قَالَ انْطَلَقْتُ فِي الْمُدَّةِ الَّتِي كَانَتْ بَيْنِي وَبَيْنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ـ قَالَ ـ فَبَيْنَا أَنَا بِالشَّأْمِ إِذْ جِيءَ بِكِتَابٍ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى هِرَقْلَ قَالَ وَكَانَ دِحْيَةُ الْكَلْبِيُّ جَاءَ بِهِ فَدَفَعَهُ إِلَى عَظِيمِ بُصْرَى، فَدَفَعَهُ عَظِيمُ بُصْرَى إِلَى ـ هِرَقْلَ ـ قَالَ فَقَالَ هِرَقْلُ هَلْ هَا هُنَا أَحَدٌ مِنْ قَوْمِ هَذَا الرَّجُلِ الَّذِي يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ فَقَالُوا نَعَمْ. قَالَ فَدُعِيتُ فِي نَفَرٍ مِنْ قُرَيْشٍ فَدَخَلْنَا عَلَى هِرَقْلَ، فَأُجْلِسْنَا بَيْنَ يَدَيْهِ فَقَالَ أَيُّكُمْ أَقْرَبُ نَسَبًا مِنْ هَذَا الرَّجُلِ الَّذِي يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ فَقَالَ أَبُو سُفْيَانَ فَقُلْتُ أَنَا. فَأَجْلَسُونِي بَيْنَ يَدَيْهِ، وَأَجْلَسُوا أَصْحَابِي خَلْفِي، ثُمَّ دَعَا بِتُرْجُمَانِهِ فَقَالَ قُلْ لَهُمْ إِنِّي سَائِلٌ هَذَا عَنْ هَذَا الرَّجُلِ الَّذِي يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ، فَإِنْ كَذَبَنِي فَكَذِّبُوهُ. قَالَ أَبُو سُفْيَانَ وَايْمُ اللَّهِ، لَوْلاَ أَنْ يُؤْثِرُوا عَلَىَّ الْكَذِبَ لَكَذَبْتُ. ثُمَّ قَالَ لِتُرْجُمَانِهِ سَلْهُ كَيْفَ حَسَبُهُ فِيكُمْ قَالَ قُلْتُ هُوَ فِينَا ذُو حَسَبٍ. قَالَ فَهَلْ كَانَ مِنْ آبَائِهِ مَلِكٌ قَالَ قُلْتُ لاَ. قَالَ فَهَلْ كُنْتُمْ تَتَّهِمُونَهُ بِالْكَذِبِ قَبْلَ أَنْ يَقُولَ مَا قَالَ قُلْتُ لاَ. قَالَ أَيَتَّبِعُهُ أَشْرَافُ النَّاسِ أَمْ ضُعَفَاؤُهُمْ قَالَ قُلْتُ بَلْ ضُعَفَاؤُهُمْ. قَالَ يَزِيدُونَ أَوْ يَنْقُصُونَ قَالَ قُلْتُ لاَ بَلْ يَزِيدُونَ. قَالَ هَلْ يَرْتَدُّ أَحَدٌ مِنْهُمْ عَنْ دِينِهِ، بَعْدَ أَنْ يَدْخُلَ فِيهِ، سَخْطَةً لَهُ قَالَ قُلْتُ لاَ. قَالَ فَهَلْ قَاتَلْتُمُوهُ قَالَ قُلْتُ نَعَمْ. قَالَ فَكَيْفَ كَانَ قِتَالُكُمْ إِيَّاهُ قَالَ قُلْتُ تَكُونُ الْحَرْبُ بَيْنَنَا وَبَيْنَهُ سِجَالاً، يُصِيبُ مِنَّا وَنُصِيبُ مِنْهُ. قَالَ فَهَلْ يَغْدِرُ قَالَ قُلْتُ لاَ وَنَحْنُ مِنْهُ فِي هَذِهِ الْمُدَّةِ لاَ نَدْرِي مَا هُوَ صَانِعٌ فِيهَا. قَالَ وَاللَّهِ مَا أَمْكَنَنِي مِنْ كَلِمَةٍ أُدْخِلُ فِيهَا شَيْئًا غَيْرَ هَذِهِ. قَالَ فَهَلْ قَالَ هَذَا الْقَوْلَ أَحَدٌ قَبْلَهُ قُلْتُ لاَ. ثُمَّ قَالَ لِتُرْجُمَانِهِ قُلْ لَهُ إِنِّي سَأَلْتُكَ عَنْ حَسَبِهِ فِيكُمْ، فَزَعَمْتَ أَنَّهُ فِيكُمْ ذُو حَسَبٍ، وَكَذَلِكَ الرُّسُلُ تُبْعَثُ فِي أَحْسَابِ قَوْمِهَا، وَسَأَلْتُكَ هَلْ كَانَ فِي آبَائِهِ مَلِكٌ فَزَعَمْتَ أَنْ لاَ فَقُلْتُ لَوْ كَانَ مِنْ آبَائِهِ مَلِكٌ قُلْتُ رَجُلٌ يَطْلُبُ مُلْكَ آبَائِهِ، وَسَأَلْتُكَ عَنْ أَتْبَاعِهِ أَضُعَفَاؤُهُمْ أَمْ أَشْرَافُهُمْ فَقُلْتَ بَلْ ضُعَفَاؤُهُمْ، وَهُمْ أَتْبَاعُ الرُّسُلِ، وَسَأَلْتُكَ هَلْ كُنْتُمْ تَتَّهِمُونَهُ بِالْكَذِبِ قَبْلَ أَنْ يَقُولَ مَا قَالَ فَزَعَمْتَ أَنْ لاَ، فَعَرَفْتُ أَنَّهُ لَمْ يَكُنْ لِيَدَعَ الْكَذِبَ عَلَى النَّاسِ ثُمَّ يَذْهَبَ فَيَكْذِبَ عَلَى اللَّهِ، وَسَأَلْتُكَ هَلْ يَرْتَدُّ أَحَدٌ مِنْهُمْ عَنْ دِينِهِ بَعْدَ أَنْ يَدْخُلَ فِيهِ سَخْطَةً لَهُ فَزَعَمْتَ أَنْ لاَ، وَكَذَلِكَ الإِيمَانُ إِذَا خَالَطَ بَشَاشَةَ الْقُلُوبِ، وَسَأَلْتُكَ هَلْ يَزِيدُونَ أَمْ يَنْقُصُونَ فَزَعَمْتَ أَنَّهُمْ يَزِيدُونَ، وَكَذَلِكَ الإِيمَانُ حَتَّى يَتِمَّ، وَسَأَلْتُكَ هَلْ قَاتَلْتُمُوهُ فَزَعَمْتَ أَنَّكُمْ قَاتَلْتُمُوهُ فَتَكُونُ الْحَرْبُ بَيْنَكُمْ وَبَيْنَهُ سِجَالاً، يَنَالُ مِنْكُمْ وَتَنَالُونَ مِنْهُ، وَكَذَلِكَ الرُّسُلُ تُبْتَلَى، ثُمَّ تَكُونُ لَهُمُ الْعَاقِبَةُ، وَسَأَلْتُكَ هَلْ يَغْدِرُ فَزَعَمْتَ أَنَّهُ لاَ يَغْدِرُ، وَكَذَلِكَ الرُّسُلُ لاَ تَغْدِرُ، وَسَأَلْتُكَ هَلْ قَالَ أَحَدٌ هَذَا الْقَوْلَ قَبْلَهُ فَزَعَمْتَ أَنْ لاَ، فَقُلْتُ لَوْ كَانَ قَالَ هَذَا الْقَوْلَ أَحَدٌ قَبْلَهُ قُلْتُ رَجُلٌ ائْتَمَّ بِقَوْلٍ قِيلَ قَبْلَهُ. قَالَ ثُمَّ قَالَ بِمَ يَأْمُرُكُمْ قَالَ قُلْتُ يَأْمُرُنَا بِالصَّلاَةِ وَالزَّكَاةِ وَالصِّلَةِ وَالْعَفَافِ. قَالَ إِنْ يَكُ مَا تَقُولُ فِيهِ حَقًّا فَإِنَّهُ نَبِيٌّ، وَقَدْ كُنْتُ أَعْلَمُ أَنَّهُ خَارِجٌ، وَلَمْ أَكُ أَظُنُّهُ مِنْكُمْ، وَلَوْ أَنِّي أَعْلَمُ أَنِّي أَخْلُصُ إِلَيْهِ لأَحْبَبْتُ لِقَاءَهُ، وَلَوْ كُنْتُ عِنْدَهُ لَغَسَلْتُ عَنْ قَدَمَيْهِ، وَلَيَبْلُغَنَّ مُلْكُهُ مَا تَحْتَ قَدَمَىَّ. قَالَ ثُمَّ دَعَا بِكِتَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَرَأَهُ، فَإِذَا فِيهِ " بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ، إِلَى هِرَقْلَ عَظِيمِ الرُّومِ، سَلاَمٌ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى، أَمَّا بَعْدُ، فَإِنِّي أَدْعُوكَ بِدِعَايَةِ الإِسْلاَمِ، أَسْلِمْ تَسْلَمْ، وَأَسْلِمْ يُؤْتِكَ اللَّهُ أَجْرَكَ مَرَّتَيْنِ، فَإِنْ تَوَلَّيْتَ فَإِنَّ عَلَيْكَ إِثْمَ الأَرِيسِيِّينَ، وَ{يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَنْ لاَ نَعْبُدَ إِلاَّ اللَّهَ} إِلَى قَوْلِهِ {اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ}". فَلَمَّا فَرَغَ مِنْ قِرَاءَةِ الْكِتَابِ ارْتَفَعَتِ الأَصْوَاتُ عِنْدَهُ، وَكَثُرَ اللَّغَطُ، وَأُمِرَ بِنَا فَأُخْرِجْنَا قَالَ فَقُلْتُ لأَصْحَابِي حِينَ خَرَجْنَا لَقَدْ أَمِرَ أَمْرُ ابْنِ أَبِي كَبْشَةَ، أَنَّهُ لَيَخَافُهُ مَلِكُ بَنِي الأَصْفَرِ فَمَا زِلْتُ مُوقِنًا بِأَمْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ سَيَظْهَرُ حَتَّى أَدْخَلَ اللَّهُ عَلَىَّ الإِسْلاَمَ. قَالَ الزُّهْرِيُّ فَدَعَا هِرَقْلُ عُظَمَاءَ الرُّومِ فَجَمَعَهُمْ فِي دَارٍ لَهُ فَقَالَ يَا مَعْشَرَ الرُّومِ، هَلْ لَكُمْ فِي الْفَلاَحِ وَالرَّشَدِ آخِرَ الأَبَدِ، وَأَنْ يَثْبُتَ لَكُمْ مُلْكُكُمْ قَالَ فَحَاصُوا حَيْصَةَ حُمُرِ الْوَحْشِ إِلَى الأَبْوَابِ، فَوَجَدُوهَا قَدْ غُلِقَتْ، فَقَالَ عَلَىَّ بِهِمْ. فَدَعَا بِهِمْ فَقَالَ إِنِّي إِنَّمَا اخْتَبَرْتُ شِدَّتَكُمْ عَلَى دِينِكُمْ، فَقَدْ رَأَيْتُ مِنْكُمُ الَّذِي أَحْبَبْتُ. فَسَجَدُوا لَهُ وَرَضُوا عَنْهُ.
பாடம் : 4
(நபியே!) கூறுக: வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் மத்தி யிலுள்ள பொதுவான விஷயத்திற்கு வாருங்கள். (அது யாதெனில்:) “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நாம் வணங்கலாகாது; அவனுக்கு எதையும் நாம் இணை வைக்கலாகாது; அல்லாஹ்வை யன்றி நம்மில் யாரும் யாரையும் கடவுள்களாக ஆக்கிக்கொள்ள லாகாது. இதன் பிறகும் அவர்கள் ஏற்க மறுத்தால் “நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வுக்கு அடிபணிகின்ற) முஸ்லிம்கள்தான் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாக இருங்கள்' என்று கூறிவிடுங்கள் (எனும் 3:64ஆவது இறைவசனம்)
(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) “சவாஇன்' (பொதுவான) எனும் சொல்லுக்கு “நடுநிலையான' என்பது பொருள்.
4553. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் தம் வாய்ப்பட எனக்கு அறிவித்ததாவது:
(குறைஷியரின் முக்கிய தலைவராயிருந்த) எனக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இடையிலான (ஹுதைபியா சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த) காலகட்டத்தில் நான் (வியாபாரத்திற்காக வணிகக் குழுவினருடன் ஷாம் நாட்டிற்குச்) சென்றிருந்தேன். நான் ஷாம் (சிரியா) நாட்டில் இருந்துகொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்களிடமிருந்து (கிழக்கு ரோமானியப் பேரரசர் சீசர்) ஹிரக்ளீயஸிற்குக் கடிதமொன்று கொண்டுவரப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து “திஹ்யா அல்கல்பீ' அவர்கள் கொண்டுவந்து, “புஸ்ரா'வின் அரசரிடம் கொடுக்க, அவர் அதை ஹிரக்ளீயஸிடம் கொடுத்தனுப்பியிருந்தார்.
அப்போது ஹிரக்ளீயஸ் (தம்மைச் சூழ அமர்ந்திருந்த பிரதிநிதிகளிடம்) “தம்மை இறைவனின் தூதரெனக் கூறிக்கொண்டிருக்கும் இந்த மனிதரின் (முஹம்மதின்) சமுதாயத்தைச் சேர்ந்த எவரேனும் இங்கு (நம் நாட்டில்) இருக்கின்றார்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆம்' என்று பதிலளித் தார்கள். அப்போது (ஷாமில் வியாபாரத் திற்காகத் தங்கியிருந்த) நான் குறைஷியர் சிலருடன் அழைக்கப்பட்டேன்.
ஆகவே, நாங்கள் ஹிரக்ளீயஸிடம் சென்றோம். அவர் முன்னிலையில் (அரசவையில்) எங்களை அமரச் செய்தார்கள். அப்போது ஹிரக்ளீயஸ், “தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று சொல்óக்கொண்டிருக்கும் அந்த மனிதருக்கு உங்களில் நெருங்கிய உறவினர் யார்?” என்று கேட்டார். அதற்கு நான், “நான்(தான் நெருங்கிய உறவினன்)” என்று சென்னேன். ஆகவே, அவரது முன்னிலையில் என்னை அமரவைத்தனர். என் சகாக்களை எனக்குப் பின்னால் அமரவைத்தனர்.
பிறகு ஹிரக்ளீயஸ் தம் மொழிபெயர்ப்பாளரை அழைத்து (அவரிடம்), “தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்த மனிதரைப் பற்றி இவரிடம் கேட்கப்போகிறேன்; இவர் என்னிடம் பொய் சொன்னால் (நமக்குத்) தெரிவிக்கும்படி இவருடைய சகாக்களிடம் சொல்” என்றார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் பொய் சொன்னால் அதை என் சகாக்கள் தெரிவித்துவிடுவார்கள் என்பது (குறித்த அச்சம்) மட்டும் இல்லாதிருந்தால் (முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி) நான் பொய்(யான விவரங்களைச்) சொல்லியிருப்பேன்.
பிறகு, ஹிரக்ளீயஸ் தம் மொழிபெயர்ப் பாளரிடம், “உங்களிடையே அந்த மனிதரின் குடும்பப் பாரம்பரியம் எப்படிப் பட்டது? என்று இவரிடம் கேள்” என்று சென்னார். நான், “அவர் எங்களிடையே சிறந்த குடும்பப் பாரம்பரியத்தை உடைய வராவார்” என்று பதிலளித்தேன்.
ஹிரக்ளீயஸ், “அவருடைய முன்னோர்களில் அரசர் எவராவது இருந்திருக்கி றாரா?” என்று கேட்டார். நான் “இல்லை' என்று சொன்னேன். ஹிரக்ளீயஸ், “அவர் தம்மை “நபி' என வாதிப்பதற்குமுன் அவர் (மக்களிடம்) பொய் சொன்னார் என்று (எப்போதாவது) நீங்கள் சந்தேகம் கொண்டீர்களா?” என்று கேட்டார். நான், “இல்லை” என்று சொன்னேன். “அவரை மக்களில் மேட்டுக்குடியினர் பின்பற்றுகின்றனரா? அல்லது அவர்களில் பலவீனர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) பின்பற்றுகின்றனரா?” என்று கேட்டார். நான், “இல்லை; பலவீனமானவர்கள்தான் அவரைப் பின்பற்றுகின்றனர்” என்றேன். அவர், “அவரைப் பின்பற்றுவோர் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனரா? அல்லது குறைந்துகொண்டே போகின்றனரா?” என்று கேட்டார்.
நான், “இல்லை; அவர்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்” என்று சொன்னேன். அவர், “அவரது மார்க்கத்தில் இணைந்தபிறகு தம் புதிய மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து எவரேனும் தமது பழைய மதத்திற்கே திரும்பிச் செல்வதுண்டா?” என்று கேட்டார். நான், “இல்லை' என்று சொன்னேன்.
அவர், “அவருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?” என்று கேட்டார். நான், “உண்டு' என்று சொன்னேன். அவர், “அவ்வாறாயின், அவருடன் நீங்கள் நடத்திய போர்க(ளின் முடிவு)கள் எவ்வாறு இருந்தன?” என்று கேட்டார். நான், எங்களிடையேயான போர்கள் (கிணற்று) வாளிகள்தான். (அவை சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன. ஒருமுறை) அவர் எங்களை வெற்றி கொள்வார். (மறுமுறை) நாங்கள் அவரை வெற்றி கொள்வோம்” என்று சொன்னேன்.
அவர், “அந்த மனிதர் வாக்கு மீறுகின்றாரா?” என்று கேட்டார். நான், “இல்லை; (தற்போது நடைமுறையிலுள்ள ஹுதைபியா சமாதான உடன்படிக்கையின்) இந்தக் காலகட்டத்தில் நாங்கள் இருக் கின்றோம். இதில் அவர் எப்படி நடந்து கொள்வார் என்பது எங்களுக்குத் தெரியாது” என்று சொன்னேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! இதைத் தவிர (நபியவர்களைக் குறைசொல்வதற்கு) வேறு எந்த வார்த்தையையும் புகுத்த எனக்குவாய்ப்புக் கிடைக்கவில்லை.
(பிறகு) அவர், “இவருக்கு முன்னால் (குறைஷியரில்) வேறு எவரேனும் இப்படி (தம்மை “நபி' என) வாதித்ததுண்டா?” என்று கேட்டார். நான், “இல்லை” என்று சொன்னேன்.
பிறகு ஹிரக்ளீயஸ் தம் மொழி பெயர்ப்பாளரிடம் (இவ்வாறு) கூறினார்: “அவரிடம் கூறுங்கள்: நான் உம்மிடம் உங்களிடையே அவருடைய குடும்பப் பாரம்பரியம் குறித்துக் கேட்டேன். அவர் சிறந்த பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்று நீர் பதிலளித்தீர். இவ்வாறே இறைத் தூதர்கள் சிறந்த பாரம்பரியத்திóருந்தே தேர்ந்தெடுக்கப்படுவர். நான் உம்மிடம் அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கிறாரா என்று கேட்டேன். அதற்கு நீர் “இல்லை' என்றீர். அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருப்பாராயின், “தம் முன்னோர்களின் ஆட்சியதிகாரத்தை (தாமும் அடைய) விரும்பும் ஒரு மனிதர் இவர்' என்று நான் கூறியிருப்பேன்.
“மக்களில் அவரைப் பின்பற்றுபவர்கள் மேட்டுக்குடியினரா? அல்லது பலவீனமானவர்களா?” என்று அவரைப் பின்பற்றுபவர்களைக் குறித்துக் கேட்டேன். அதற்கு நீர் ஒடுக்கப்பட்ட மக்களே அவரைப் பின்பற்றுகின்றனர் என்று பதிலளித்தீர். (பெரும்பாலும்) அவர்கள்தான் இறைத்தூதர்களைப் பின்பற்றுவோர் ஆவர். நான் உம்மிடம், “அவர் தம்மை “நபி' என வாதிப்பதற்கு முன்பு (அவர் மக்களிடம்) பொய் பேசினார் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?” என்று கேட்டேன்.
அதற்கு நீர் “இல்லை' என்று பதிலளித்தீர். இதிலிருந்து மக்களிடம் பொய் பேச(த் துணிய)ôத அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்லமாட்டார் என்று நான் புரிந்துகொண்டேன். உம்மிடம் நான் “அவரது மார்க்கத்தை ஏற்றுக்கொண்டோரில் எவராவது தமது (புதிய) மார்க்கத்தின் மீது அதிருப்திகொண்டு அதிóருந்து வெளியேறிச் செல்வதுண்டா?” என்று கேட்டேன். அதற்கு “இல்லை' என்றீர். இறைநம்பிக்கை இத்தகையதே! உள்ளத்தின் எழிலோடு அது கலந்து விடும்போது (அதைக் குறித்து யாரும் வெறுப்படையமாட்டார்.) உம்மிடம் நான் “அவரைப் பின்பற்றுவோர் (நாளுக்கு நாள்) அதிகரித்துவருகின்றனரா? அல்லது குறைந்துவருகின்றனரா?” என்று கேட்டேன், நீர் “அதிகரித்தே வருகின்றனர்' என்று பதிலளித்தீர். இறைநம்பிக்கை அத்தகையதுதான். அது முழுமையடையும்வரை (அதிகரித்துக்கொண்டே செல்லும்).
மேலும் உம்மிடம் நான், “அவருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?” என்று கேட்டேன். அதற்கு நீங்கள் போர் புரிந்தீர்கள் என்றும், உங்களுக்கும் அவருக்கும் இடையே போர் கிணற்று வாளிகள்தான் (போரில் வெற்றியும் தோல்வியும் சுழல் முறையில் மாறி மாறிவருகின்றன) என்றும், (ஒருமுறை) அவர் உங்களை வெற்றிகொண்டால் (மறுமுறை) நீங்கள் அவரை வெற்றிகொள்கிறீர்கள் என்றும் பதிலளித்தீர். இறைத்தூதர்கள் அப்படித்தான் சோதிக்கப்படுவார்கள். ஆனால், இறுதி வெற்றி அவர்களுக்கே கிடைக்கும்.
“அவர் வாக்கு மீறுகின்றாரா?” என்று உம்மை நான் கேட்டதற்கு நீர், “அவர் வாக்கு மீறுவதில்லை' என்று கூறினீர். இறைத்தூதர்கள் இத்தகையவர்களே; அவர்கள் வாக்கு மீறுவதில்லை.
நான், “இவருக்குமுன் உங்களில் எவராவது இந்த வாதத்தை முன்வைத்த துண்டா?” என்று உம்மிடம் கேட்டபோது நீர் “இல்லை' என்று பதிலளித்தீர். அவருக்கு முன்னரும் எவரேனும் இந்த வாதத்தை முன்வைத்திருந்ததாக (நீர் கூறி) இருப்பின், “தமக்கு முன்னர் (சிலரால்) முன்வைக்கப்பட்ட ஒரு வாதத்தையே பின்பற்றிச் செல்கின்ற ஒரு மனிதர் இவர்' என நான் சொல்லியிருப்பேன்” என்று சொன்னார்.
பிறகு ஹிரக்ளீயஸ், “அவர் என்ன செய்யும்படி உங்களுக்குக் கட்டளையிடு கின்றார்?” என்று கேட்டார். நான், “தொழுகையை நிறைவேற்றும்படியும், தர்மம் செய்யும்படியும், உறவைக் காத்து வரும்படியும், ஒழுக்கமாக வாழும்படியும் அவர் எங்களுக்குக் கட்டளையிடுகின்றார்” என்று சொன்னேன்.
ஹிரக்ளீயஸ், “அவரைக் குறித்து நீர் சொன்னவை அனைத்தும் உண்மை யானால், அவர் இறைத்தூதர்தான். அவர் வரப்போகிறார் என்று நான் அறிந்துவைத்திருந்தேன். ஆனால், அவர் (குறைஷியராகிய) உங்களிலிருந்து வருவார் என்று நான் எண்ணியிருக்கவில்லை. நான் அவரைச் சென்றடைவேன் என அறிந்தால் அவரைச் சந்திக்க நான் விரும்புவேன். அவர் அருகில் நான் இருந்திருந்தால் அவரின் கால்களைக் கழுவியிருப்பேன். அவரது ஆட்சி (ஒரு காலத்தில்) என் இரு பாதங்களுக்குக் கீழுள்ள (இந்த) இடத்தையும் எட்டியே தீரும்” என்று சொன்னார்.
பிறகு ஹிரக்ளீயஸ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கடிதத்தைக் கொண்டுவரும்படி உத்தரவிட்டார். (அது கொண்டுவரப்பட்டது.) அதை அவர் வாசிக்கச் செய்தார். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப் பெயரால்... இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து கிழக்கு ரோமாபுரியின் அதிபர் ஹிரக்ளீயஸுக்கு (எழுதப்பட்ட கடிதம்:)
நல்வழியைப் பின்பற்றியவர்மீது (இறைவனின்) சாந்தி நிலவட்டும். இஸ்லாத்தை ஏற்குமாறு உங்களை நான் அழைக்கின்றேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். (ஏற்றுக்கொண்டால், ஈருலகிலும்) நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ் உங்க ளுக்குச் சேர வேண்டிய நன்மையை இரு மடங்காகத் தருவான். நீங்கள் புறக்கணித்தால், (குடிமக்களான) விவசாயி களின் பாவமும் (அவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல்போவதன் குற்றமும்) உங்களையே சாரும்.
வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள். (அது யாதெனில்:) “அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் நாம் வணங்கலாகாது; அவனுக்கு எதையும் நாம் இணை வைக்கலாகாது; அல்லாஹ்வையன்றி நம்மில் யாரும் யாரையும் கடவுள்களாக ஆக்கிக்கொள்ளலாகாது'. இதன் பிறகும் அவர்கள் ஏற்க மறுத்தால், “நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வுக்கு அடிபணிகின்ற) முஸ்óம்கள்தான் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாக இருங்கள்' என்று கூறிவிடுங்கள்.
ஹிரக்ளீயஸ் அந்தக் கடிதத்தைப் படித்து முடித்தபோது, அவருக்கு அருகிலேயே (அவரைச் சுற்றிலுமிருந்த கிழக்கு ரோமானிய ஆட்சியாளர்களின்) குரல்கள் உயர்ந்தன. கூச்சல் அதிகரித்தது. எங்களை வெளியே கொண்டுசெல்லும்படி உத்தரவிடப்பட்டது. உடனே நாங்கள் (அரசவையிலிருந்து) வெளியேற்றப்பட்டோம்.
நாங்கள் வெளியே வந்தபோது, நான் என் சகாக்களிடம், “இப்னு அபீகப்ஷா (முஹம்மது)வின் விவகாரம் வலிமை பெற்றுவிட்டது. மஞ்சள் நிற இனத்தாரின் (கிழக்கு ரோமரின்) மன்னரே அவருக்கு அஞ்சுகிறாரே!” என்று சொன்னேன். (அன்று முதல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மார்க்கம் விரைவில் வெற்றி பெறும் என்று உறுதி கொண்டவனாகவே நான் இருந்துவந்தேன். முடிவில் அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தைப் புகுத்தினான்.
ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (தமது அறிவிப்பில்) கூறியிருப்பதாவது: “பிறகு ஹிரக்ளீயஸ் கிழக்கு ரோமானிய ஆட்சியாளர்களுக்கு அழைப்பு விடுத்து, அவர்களைத் தமது மாளிகை ஒன்றில் ஒன்றுகூட்டி அவர்களிடையே, “அந்திமக் காலத்தில் உங்களுக்கு வெற்றியும் நல்வழியும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையும், உங்களது ஆட்சி உங்களிடமே நீடிக்க வேண்டும் என்ற எண்ணமும் உங்களுக்கு உண்டா? (அப்படியானால் இந்த இறுதித் தூதரை நம்புங்கள்)” என்று பேசினார்.
இதைக் கேட்டவுடனேயே காட்டுக் கழுதைகள் வெருண்டோடுவதுபோல வாயில்களை நோக்கி அவர்கள் வெருண் டோடி, வாயில் அருகில் சென்றதும், அவை தாளிடப்பட்டிருக்கக் கண்டனர். அப்போது மன்னர் ஹிரக்ளீயஸ், “அவர்களை என்னிடம் திருப்பிக் கொண்டுவாருங்கள்” என அவர்களுக்கு அழைப்புவிடுத்தார். (அவ்வாறே அழைத்துவரப்பட்டனர். அவர்களிடம்) “நீங்கள் உங்கள் மதத்தின் மீது எவ்வளவு பிடிப்புக் கொண்டுள்ளீர்கள் என்பதை நான் சோதிக்கவே இவ்வாறு செய்தேன். நான் விரும்பியதை இப்போது ஐயமற அறிந்துகொண்டேன்” என்று அவர் கூறியதும், அனைவரும் அவருக்குச் சிரம்பணிந்தனர். அவரைக் குறித்துத் திருப்தியும் அடைந்தனர்.10
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

4554. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ أَنْصَارِيٍّ بِالْمَدِينَةِ نَخْلاً، وَكَانَ أَحَبَّ أَمْوَالِهِ إِلَيْهِ بَيْرُحَاءٍ، وَكَانَتْ مُسْتَقْبِلَةَ الْمَسْجِدِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طَيِّبٍ، فَلَمَّا أُنْزِلَتْ {لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} قَامَ أَبُو طَلْحَةَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ يَقُولُ {لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} وَإِنَّ أَحَبَّ أَمْوَالِي إِلَىَّ بَيْرُحَاءٍ وَإِنَّهَا صَدَقَةٌ لِلَّهِ، أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ اللَّهِ، فَضَعْهَا يَا رَسُولَ اللَّهِ حَيْثُ أَرَاكَ اللَّهُ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " بَخْ، ذَلِكَ مَالٌ رَايِحٌ، ذَلِكَ مَالٌ رَايِحٌ، وَقَدْ سَمِعْتُ مَا قُلْتَ، وَإِنِّي أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ ". قَالَ أَبُو طَلْحَةَ أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ. فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَبَنِي عَمِّهِ. قَالَ عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ وَرَوْحُ بْنُ عُبَادَةَ " ذَلِكَ مَالٌ رَابِحٌ ". حَدَّثَنِي يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ " مَالٌ رَايِحٌ ".
பாடம் : 5
நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள். மேலும், நீங்கள் எப்பொருளை தானம் செய்தாலும், நிச்சயமாக அதை அல்லாஹ் அறிந்தவன் ஆவான் (எனும் 3:92ஆவது இறைவசனம்)
4554. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனா (முஸ்லிம்களான) அன்சாரிகளி லேயே அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல்-ரலி) அவர்கள் அதிகமான பேரீச்சந் தோட்டங்கள் உடையவராய் இருந்தார்கள். (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலுக்கு எதிரேயிருந்த “பீருஹா' (அல்லது “பைருஹா') எனும் தோட்டம் தம் சொத்துகளிலேயே அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாயிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்தத் தோட்டத்திற் குச் சென்று அதிலுள்ள நல்ல (சுவையான) நீரைப் பருகும் வழக்கமுடையவராய் இருந்தார்கள்.
“நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடைய மாட்டீர்கள்” எனும் (3:92ஆவது) இறைவசனம் அருளப்பட்டபோது அபூதல்ஹா (ரலி) அவர்கள் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! “நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்' என அல்லாஹ் கூறுகின்றான். என் சொத்துகளில் எனக்கு மிகவும் விருப்பமானது “பீருஹா' (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனிமேல்,) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். இதற்கான நன்மையையும் (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இது இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கிறேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தங்களுக்குக் காட்டியுள்ள வழியில் இதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நல்லது. அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே!” என்று சொல்லிவிட்டு, நீர் கூறியதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அ(ந்தத் தோட்டத்)தை உம்முடைய நெருங்கிய உறவினர்களிடையே (தர்மமாக) வழங்குவதையே நான் (பெரிதும்) விரும்புகிறேன்” என்றார்கள்.
அபூதல்ஹா (ரலி) அவர்கள், “அவ்வாறே செய்கிறேன் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டுத் தம் உறவினர்களுக்கும் தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் அந்தத் தோட்டத்தைப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல்லாஹ் பின் யூசுஃப், ரவ்ஹ் பின் உபாதா (ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில், (“அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே!' என்பதற்குப் பதிலாக) “அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம் தானே' என்று (நபிகளார் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.11
யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் மாலிக் (ரஹ்) அவர்களிடம், “அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே' என்று வாசித்துக்காட்டினேன். (அவர்கள் அதை மறுக்கவில்லை.)

4555. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ فَجَعَلَهَا لِحَسَّانَ وَأُبِيٍّ، وَأَنَا أَقْرَبُ إِلَيْهِ، وَلَمْ يَجْعَلْ لِي مِنْهَا شَيْئًا.
பாடம் : 5
நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள். மேலும், நீங்கள் எப்பொருளை தானம் செய்தாலும், நிச்சயமாக அதை அல்லாஹ் அறிந்தவன் ஆவான் (எனும் 3:92ஆவது இறைவசனம்)
4555. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஆகவே, அந்த (பைருஹா)த் தோட்டத்தை ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களுக்கும் உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்கும் (அபூதல்ஹா (ரலி) அவர்கள் தர்மமாக) வழங்கிவிட்டார்கள். ஆனால், நான்தான் (அவ்விருவரையும்விட) அவருக்கு நெருங்கிய உறவினராய் இருந்தேன். அதிலிருந்து எனக்கு அவர் சிறிதும் கொடுக்கவில்லை.12

4556. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ الْيَهُودَ، جَاءُوا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِرَجُلٍ مِنْهُمْ وَامْرَأَةٍ قَدْ زَنَيَا، فَقَالَ لَهُمْ " كَيْفَ تَفْعَلُونَ بِمَنْ زَنَى مِنْكُمْ ". قَالُوا نُحَمِّمُهُمَا وَنَضْرِبُهُمَا. فَقَالَ " لاَ تَجِدُونَ فِي التَّوْرَاةِ الرَّجْمَ ". فَقَالُوا لاَ نَجِدُ فِيهَا شَيْئًا. فَقَالَ لَهُمْ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ كَذَبْتُمْ {فَأْتُوا بِالتَّوْرَاةِ فَاتْلُوهَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ} فَوَضَعَ مِدْرَاسُهَا الَّذِي يُدَرِّسُهَا مِنْهُمْ كَفَّهُ عَلَى آيَةِ الرَّجْمِ، فَطَفِقَ يَقْرَأُ مَا دُونَ يَدِهِ وَمَا وَرَاءَهَا، وَلاَ يَقْرَأُ آيَةَ الرَّجْمِ، فَنَزَعَ يَدَهُ عَنْ آيَةِ الرَّجْمِ فَقَالَ مَا هَذِهِ فَلَمَّا رَأَوْا ذَلِكَ قَالُوا هِيَ آيَةُ الرَّجْمِ. فَأَمَرَ بِهِمَا فَرُجِمَا قَرِيبًا مِنْ حَيْثُ مَوْضِعُ الْجَنَائِزِ عِنْدَ الْمَسْجِدِ، فَرَأَيْتُ صَاحِبَهَا يَجْنَأُ عَلَيْهَا يَقِيهَا الْحِجَارَةَ.
பாடம் : 6
(நபியே!) கூறுக: (யூதர்களாகிய) நீங்கள் உண்மையாளர்களாயின் “தவ்ராத்'தைக் கொண்டுவந்து ஓதிக் காட்டுங்கள் (எனும் 3:93ஆவது வசனத்தொடர்)
4556. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் யூதர்கள் தம் சமுதாயத்தாரில் விபசாரம் புரிந்துவிட்டிருந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் அழைத்துவந்தார்கள். (தீர்ப்பளிக்கும்படி கேட்டார்கள்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்களில் விபசாரம் புரிந்தவரை நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அவர்கள், “நாங்கள் அவ்விருவரையும் (அவர்களின் முகங்களில்) கரி பூசி அவர்களை அடிப்போம்” என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், “(உங்கள் வேதமான) தவ்ராத்தில் (விபசாரம் செய்தவருக்கு) “ரஜ்ம்' (சாகும்வரை கல்லால் அடிக்கும் மரண) தண்டனையை நீங்கள் காணவில்லையா?” என்று கேட்க, யூதர்கள், “(அப்படி) ஒன்றும் அதில் நாங்கள் காணவில்லை” என்று பதிலளித்தனர்.
உடனே (யூத மார்க்க அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், யூதர்களிடம், “பொய் சொன்னீர்கள், நீங்கள் உண்மையாளர்களாயின் தவ்ராத்தைக் கொண்டுவந்து ஓதிக்காட்டுங்கள்” என்று சொன்னார்கள். (அவ்வாறே தவ்ராத் கொண்டுவரப்பட்டு ஓதப்பட்டது.) அப்போது அவர்களுக்கு வேதம் கற்பிக்கும் வேத ஓதுநர் “கல்லெறி தண்டனை' தொடர்பான வசனத்தின் மீது தமது கையை வைத்து (மறைத்துக்கொண்டு) தம் கைக்கு முன்னால் இருப்பதையும் அதற்கு அப்பால் உள்ளதையும் மட்டும் ஓதலானார். (கைக்குக் கீழே உள்ள) கல்லெறி தண்டனை பற்றிய வசனத்தை ஓதவில்லை.
உடனே அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் அந்த ஓதுநரின் கையை அந்த வசனத்தைவிட்டு இழுத்துவிட்டு, “இது என்ன?” என்று கேட்டார்கள். யூதர்கள் அதைப் பார்த்தபோது, “இது கல்லெறி தண்டனை பற்றிய வசனம்” என்று சொன்னார்கள். ஆகவே, (விபசாரம் புரிந்த) அவ்விருவருக்கும் (கல்லெறி)தண்டனை வழங்கும்படி நபியவர்கள் ஆணையிட்டார்கள். எனவே, அவ்விரு வருக்கும் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசóல் ஜனாஸாக்கள் (இறுதிப் பிரார்த்தனைக் காகச் சடலங்கள்) வைக்குமிடத்திற்கருகே கல்லெறி தண்டனை தரப்பட்டது.
அந்தப் பெண்ணின் அந்த நண்பன் அவளைக் கல்லடியிலிருந்து காப்பாற்றும் விதத்தில் அவள்மீது கவிழ்ந்துகொள்வதை நான் பார்த்தேன்.13

4557. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنْ سُفْيَانَ، عَنْ مَيْسَرَةَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَة َ ـ رضى الله عنه ـ {كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ} قَالَ خَيْرَ النَّاسِ لِلنَّاسِ، تَأْتُونَ بِهِمْ فِي السَّلاَسِلِ فِي أَعْنَاقِهِمْ حَتَّى يَدْخُلُوا فِي الإِسْلاَمِ.
பாடம் : 7
(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களுக்கென்று தோற்றுவிக்கப்பெற்ற சமூகத்தாரில் மிகச் சிறந்தவர்களாவீர் (எனும் 3:110ஆவது வசனத்தொடர்)
4557. அபூஹாஸிம் சுலைமான் அல்அஷ்ஜஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களுக்கென்று தோற்றுவிக்கப் பெற்ற சமூகத்தாரில் மிகச் சிறந்தவர்களாவீர்” எனும் (3:110ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில், “நீங்கள் மக்களில் சிலரை (போர்க் கைதிகளாகச் சிறைபிடித்து) அவர்களின் கழுத்தைச் சங்கிலிகளில் பிணைத்துக் கொண்டுவருகிறீர்கள். (இந்நிலையிலும் மனம் திருந்தி) முடிவாக அவர்கள் இஸ்லாத்தில் இணைகின்றனர். (இவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும் நீங்களே) மக்களிலேயே சிறந்தவர் களாவீர்கள்” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.14

4558. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ قَالَ عَمْرٌو سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّه ِ ـ رضى الله عنهما ـ يَقُولُ فِينَا نَزَلَتْ {إِذْ هَمَّتْ طَائِفَتَانِ مِنْكُمْ أَنْ تَفْشَلاَ وَاللَّهُ وَلِيُّهُمَا} قَالَ نَحْنُ الطَّائِفَتَانِ بَنُو حَارِثَةَ وَبَنُو سَلِمَةَ، وَمَا نُحِبُّ ـ وَقَالَ سُفْيَانُ مَرَّةً وَمَا يَسُرُّنِي ـ أَنَّهَا لَمْ تُنْزَلْ لِقَوْلِ اللَّهِ {وَاللَّهُ وَلِيُّهُمَا}
பாடம் : 8
உங்களில் இரு குழுவினருக்கு அல்லாஹ் பாதுகாவலனாக இருக்க, அவர்கள் தைரியமிழக்கத் தொடங் கிய நேரத்தையும் (நபியே! நீர்நினைவுகூருக!) இறைநம்பிக்கையாளர்கள் (எந்நேரமும்) அல்லாஹ் வையே சார்ந்திருக்கட்டும்! (எனும் 3:122ஆவது இறைவசனம்)
4558. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“உங்களில் இரு குழுவினருக்கு அல்லாஹ் பாதுகாவலனாக இருக்க, அவர்கள் தைரியமிழக்கத் தொடங்கிய நேரத்தையும் (நபியே! நீர் நினைவு கூர்க!)” எனும் (3:122ஆவது) இறைவசனம் (அன்சாரிகளாகிய) எங்கள் தொடர்பாகவே அருளப்பெற்றது. பனூ ஹாரிஸா மற்றும் பனூ சலிமா குலத்தாரான நாங்கள்தான் அந்த இரு பிரிவினர்.
இந்த இறைவசனம் (எங்கள் கோழைத்தனத்தை எடுத்துரைத்தாலும் அது) அருளப்பெறாமல் இருந்திருக்கக் கூடாதா என்று நாங்கள் விரும்பமாட்டோம். ஏனெனில், “அல்லாஹ் அவ்விரு பிரிவினருக்கும் பாதுகாவலனாக இருந்தான்” என்று (அதில்) அல்லாஹ் கூறியிருக்கின்றான்.
அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் மற்றொரு முறை அறிவிக்கும்போது, “இது அருளப்பெறாமல் இருந்திருந்தால் அது எனக்கு மகிழ்வைத் தந்திராது” என்று சொன்னார்கள்.15

4559. حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِنَ الْفَجْرِ يَقُولُ " اللَّهُمَّ الْعَنْ فُلاَنًا وَفُلاَنًا وَفُلاَنًا ". بَعْدَ مَا يَقُولُ " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ". فَأَنْزَلَ اللَّهُ {لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَىْءٌ} إِلَى قَوْلِهِ {فَإِنَّهُمْ ظَالِمُونَ}. رَوَاهُ إِسْحَاقُ بْنُ رَاشِدٍ عَنِ الزُّهْرِيِّ.
பாடம் : 9
அவர்களை அல்லாஹ் மன்னிக் கும்வரை, அல்லது அவர்கள் அநீதி யிழைத்தவர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உமக்கு எந்த உரிமையும் இல்லை (எனும் 3:128ஆவது இறைவசனம்)
4559. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(உஹுத் போரில் பலத்த காயமுற்ற பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூஉவிலிருந்து தமது தலையை உயர்த்தும்போது, “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹம்த்' (அல்லாஹ், தன்னைப் புகழ்வோரின் புகழுரையைச் செவிமடுக்கின்றான்; எங்கள் இறைவா! உனக்கே எல்லாப் புகழும்.) என்று சொன்ன பின்பு, “இறைவா! இன்னார், இன்னார், இன்னாரை உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!” என்று (சில எதிரிகளுக்கெதிராகப்) பிரார்த்திப்பதை நான் கேட்டிருக்கிறேன்.
அப்போது அல்லாஹ், “அவர்களை அல்லாஹ் மன்னிக்கும்வரை, அல்லது அவர்கள் அநீதியாளர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உமக்கு எந்த உரிமையும் இல்லை” எனும் (3:128 ஆவது) வசனத்தை அருளினான்.16

4560. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَرَادَ أَنْ يَدْعُوَ عَلَى أَحَدٍ أَوْ يَدْعُوَ لأَحَدٍ قَنَتَ بَعْدَ الرُّكُوعِ، فَرُبَّمَا قَالَ إِذَا قَالَ " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ، اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، وَسَلَمَةَ بْنَ هِشَامٍ، وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ وَاجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ ". يَجْهَرُ بِذَلِكَ وَكَانَ يَقُولُ فِي بَعْضِ صَلاَتِهِ فِي صَلاَةِ الْفَجْرِ " اللَّهُمَّ الْعَنْ فُلاَنًا وَفُلاَنًا ". لأَحْيَاءٍ مِنَ الْعَرَبِ، حَتَّى أَنْزَلَ اللَّهُ {لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَىْءٌ} الآيَةَ.
பாடம் : 9
அவர்களை அல்லாஹ் மன்னிக் கும்வரை, அல்லது அவர்கள் அநீதி யிழைத்தவர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உமக்கு எந்த உரிமையும் இல்லை (எனும் 3:128ஆவது இறைவசனம்)
4560. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) எவருக்கேனும் எதிராகவோ ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் ருகூஉவுக்குப் பிறகு “குனூத்' (எனும் சிறப்பு துஆ) ஓதுவார்கள். சில வேளை, “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்த்' என்று சொன்ன பின்பு, “இறைவா! வலீத் பின் அல்வலீத், சலமா பின் ஹிஷாம் மற்றும் அய்யாஷ் பின் அபீரபீஆ ஆகியோரைக் காப்பாற்றுவாயாக!17 இறைவா! முளர் குலத்தாரின்மீது உன் பிடியை இறுக்குவாயாக! (இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர்களின் சமுதாயத் தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் அவர்களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்திப்பார்கள்.18 அதைச் சப்தமாகச் சொல்வார்கள்.
தமது ஃபஜ்ர் தொழுகைகள் சிலவற்றில், “இறைவா! இன்னார், இன்னாரை உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக” என்று சில அரபுக் குலங்களைக் குறிப்பிட்டுப் பிரார்த் திப்பார்கள்.
அல்லாஹ், “அவர்களை அல்லாஹ் மன்னிக்கும்வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உமக்கு எந்த உரிமையும் இல்லை” எனும் (3:128ஆவது) வசனத்தை அருளும்வரை இப்படிப் பிரார்த்தித்துவந்தார்கள்.19
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

4561. حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ جَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى الرَّجَّالَةِ يَوْمَ أُحُدٍ عَبْدَ اللَّهِ بْنَ جُبَيْرٍ، وَأَقْبَلُوا مُنْهَزِمِينَ، فَذَاكَ إِذْ يَدْعُوهُمُ الرَّسُولُ فِي أُخْرَاهُمْ، وَلَمْ يَبْقَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم غَيْرُ اثْنَىْ عَشَرَ رَجُلاً.
பாடம் : 10
“இறைத்தூதர் உங்கள் பின்னால் இருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் யாரையும் திரும்பிப் பார்க்காமல் வெகுதூரம் சென்றுகொண்டிருந்ததை (நினைத்துப்பாருங்கள்). இதனால் (அல்லாஹ்) உங்களுக்குத் துக்கத்திற்குமேல் துக்கத்தைக் கொடுத்தான்” எனும் (3:153ஆவது) வசனத்தொடர்
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “உக்ராக்கும்' (உங்கள் பின்னால்) எனும் சொல், “ஆகிரிக்கும்' எனும் சொல்லின் பெண்பாலாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(உஹுத் போர் குறித்துப் பேசும் 9:52ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஹ்தல் ஹுஸ்னயைன்' (இவ்விரு நன்மைகளில் ஒன்றை) எனும் சொற்றொடர், வெற்றி அல்லது வீரமரணத்தைக் குறிக்கிறது.
4561. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உஹுத் போரின் போது அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களைக் காலாட்படையினருக்கு(த் தளபதியாக) நியமித்தார்கள். அப்படையினர் தோற்று ஓடினர். (அப்போது நடந்த) அந்தச் சம்பவத்தைத்தான், “இறைத்தூதர் உங்கள் பின்னால் இருந்து உங்களை அழைத்துக்கொண்டிருக்க, நீங்கள் யாரையும் திரும்பிப் பார்க்காமல் வெகுதூரம் சென்றுகொண்டிருந்ததை (நினைத்துப்பாருங்கள்)” எனும் இந்த (3:153ஆவது) இறைவசனம் குறிப்பிடு கின்றது.
அப்போது நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு பேரைத் தவிர வேறெவரும் எஞ்சியிருக்கவில்லை.20

4562. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَبُو يَعْقُوبَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسٌ، أَنَّ أَبَا طَلْحَةَ، قَالَ غَشِيَنَا النُّعَاسُ وَنَحْنُ فِي مَصَافِّنَا يَوْمَ أُحُدٍ ـ قَالَ ـ فَجَعَلَ سَيْفِي يَسْقُطُ مِنْ يَدِي وَآخُذُهُ، وَيَسْقُطُ وَآخُذُهُ.
பாடம் : 11
“பின்னர் இந்தத் துக்கத்திற்குப் பிறகு (மன)அமைதி தருகின்ற சிற்றுறக்கத்தை அவன் உங்களுக்கு அருளினான்” எனும் (3:154 ஆவது) வசனத்தொடர்
4562. அபூதல்ஹா ஸைத் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போர் நடந்த நாளில் எங்கள் அணிகள் (நின்றிருந்த) இடத்தில் நாங்கள் இருந்தபோது எங்களைச் சிற்றுறக்கம் ஆட்கொண்டது. அதனால் எனது வாள் என் கையிலிருந்து (நழுவி) விழத் தொடங்க, நான் அதை எடுப்பேன். (மீண்டும்) அது விழ, நானும் அதை எடுப்பேன்.21

4563. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ ـ أُرَاهُ قَالَ ـ حَدَّثَنَا أَبُو بَكْرٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنِ ابْنِ عَبَّاسٍ، {حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ} قَالَهَا إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلاَمُ حِينَ أُلْقِيَ فِي النَّارِ، وَقَالَهَا مُحَمَّدٌ صلى الله عليه وسلم حِينَ قَالُوا {إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ}
பாடம் : 12
“அவர்கள் (எத்தகைய இறைநம்பிக்கையாளர்கள் என்றால், போரில்) தமக்குப் படுகாயங்கள் ஏற்பட்ட பின்னரும்கூட அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்புக்கு இணங்கினர். நன்மை புரிந்து, தீமையிலிருந்து தம்மைக் தற்காத்துக்கொண்ட இத்தகை யோருக்கு மகத்தான பிரதிபலன் உண்டு” எனும் (3:172ஆவது) இறைவசனம்22
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “அல்கர்ஹ்' எனும் சொல்லுக்கு “படுகாயம்' என்பது பொருள். “இஸ்த்த—ôபூ' (“இணங்கினர்') எனும் சொல்லுக்கு “பதிலளித்தார்கள்' என்பது பொருள். (இதன் எதிர்கால வினைச் சொல்லான) “யஸ்த்தஜீபு' என்பதற்கு, “பதிலளிப்பார்' என்பது பொருள்.
பாடம் : 13
“இவர்களிடம், “நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த் தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணிதிரண்டுள்ளனர்; எனவே, அவர்களுக்கு அஞ்சுங்கள்' என்று மக்கள் (சிலர்) கூறினர். ஆனால், இது இவர்களுக்கு இறை நம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக்கொள்வோரில் சிறந்தவன்' என்றும் இவர்கள் கூறினார்கள்” எனும் (3:173ஆவது) இறைவசனம்
4563. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் தீயில் தூக்கி எறியப்பட்டபோது, “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக்கொள்வோரில் சிறந்தவன்” என்று கூறினார்கள். இதே வார்த்தைகளை முஹம்மத் (ஸல்) அவர்கள், “நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த்தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணிதிரண்டுள்ளனர்; எனவே, அவர்களுக்கு அஞ்சுங்கள்” என மக்கள் (சிலர்) கூறியபோது சொன்னார்கள்.
இ(வ்வாறு அச்சுறுத்திய)து அவர்களுக்கு இறைநம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனே பொறுப் பேற்றுக்கொள்வோரில் சிறந்தவன்” என்றும் அவர்கள் கூறினார்கள்.23

4564. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ آخِرَ قَوْلِ إِبْرَاهِيمَ حِينَ أُلْقِيَ فِي النَّارِ حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ.
பாடம் : 12
“அவர்கள் (எத்தகைய இறைநம்பிக்கையாளர்கள் என்றால், போரில்) தமக்குப் படுகாயங்கள் ஏற்பட்ட பின்னரும்கூட அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்புக்கு இணங்கினர். நன்மை புரிந்து, தீமையிலிருந்து தம்மைக் தற்காத்துக்கொண்ட இத்தகை யோருக்கு மகத்தான பிரதிபலன் உண்டு” எனும் (3:172ஆவது) இறைவசனம்22
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “அல்கர்ஹ்' எனும் சொல்லுக்கு “படுகாயம்' என்பது பொருள். “இஸ்த்த—ôபூ' (“இணங்கினர்') எனும் சொல்லுக்கு “பதிலளித்தார்கள்' என்பது பொருள். (இதன் எதிர்கால வினைச் சொல்லான) “யஸ்த்தஜீபு' என்பதற்கு, “பதிலளிப்பார்' என்பது பொருள்.
பாடம் : 13
“இவர்களிடம், “நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த் தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணிதிரண்டுள்ளனர்; எனவே, அவர்களுக்கு அஞ்சுங்கள்' என்று மக்கள் (சிலர்) கூறினர். ஆனால், இது இவர்களுக்கு இறை நம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக்கொள்வோரில் சிறந்தவன்' என்றும் இவர்கள் கூறினார்கள்” எனும் (3:173ஆவது) இறைவசனம்
4564. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்பில் எறியப்பட்டபோது, “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக்கொள்வோரில் சிறந்தவன்” (ஹஸ்பியல்லாஹ‚ வ நிஅமல் வக்கீல்) என்பதே அவர்களின் கடைசி வார்த்தையாக இருந்தது.

4565. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، سَمِعَ أَبَا النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ ـ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ـ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ آتَاهُ اللَّهُ مَالاً فَلَمْ يُؤَدِّ زَكَاتَهُ، مُثِّلَ لَهُ مَالُهُ شُجَاعًا أَقْرَعَ، لَهُ زَبِيبَتَانِ يُطَوَّقُهُ يَوْمَ الْقِيَامَةِ، يَأْخُذُ بِلِهْزِمَتَيْهِ ـ يَعْنِي بِشِدْقَيْهِ ـ يَقُولُ أَنَا مَالُكَ أَنَا كَنْزُكَ ". ثُمَّ تَلاَ هَذِهِ الآيَةَ {وَلاَ يَحْسِبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ} إِلَى آخِرِ الآيَةِ.
பாடம் : 14
“அல்லாஹ் தனது பேருதவியிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் யார் கருமித்தனம் செய்கிறார்களோ அவர்கள் தமக்கு அதை நல்லதென எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீங்கேயாகும். அவர்கள் எதை வழங்காது வைத்திருந்தார்களோ அது மறுமையில் அவர்களது கழுத்தில் மாலையாக மாட்டப்படும். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாகும். மேலும், நீங்கள் செய்கின்ற வற்றை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிபவன்” எனும் (3:180ஆவது) இறைவசனம்
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “ச யு(த்)தவ்வக்கூன' (அவர்களது கழுத்தில் மாலையாக மாட்டப்படும்) எனும் சொற்றொடர் “தவ்வக்துஹு பி தவ்கின்' (நான் அவனுக்கு மாலையிட்டேன்) எனும் வாக்கியத்திற்கு நிகரானதாகும்.
4565. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரது செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாகக் காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கறுப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாகச்) சுற்றப்படும். அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை -அதாவது அவரது இரு தாடைகளைப்- பிடித்துக்கொண்டு, “நான்தான் உனது செல்வம்; நான்தான் உனது கருவூலம்' என்று சொல்லும்” எனக் கூறினார்கள்.
பிறகு, “அல்லாஹ் தனது பேருதவியிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் யார் கருமித்தனம் செய்கிறார்களோ அவர்கள் தமக்கு அதை நல்லதென எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீங்கேயாகும். அவர்கள் எதை வழங்காது வைத்திருந்தார்களோ அது மறுமையில் அவர்களது கழுத்தில் மாலையாக மாட்டப்படும். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாகும். மேலும் நீங்கள் செய்கின்றவற்றை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிபவன்” எனும் இந்த (3:180ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.24

4566. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَكِبَ عَلَى حِمَارٍ عَلَى قَطِيفَةٍ فَدَكِيَّةٍ، وَأَرْدَفَ أُسَامَةَ بْنَ زَيْدٍ وَرَاءَهُ، يَعُودُ سَعْدَ بْنَ عُبَادَةَ فِي بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ قَبْلَ وَقْعَةِ بَدْرٍ ـ قَالَ ـ حَتَّى مَرَّ بِمَجْلِسٍ فِيهِ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ، ابْنُ سَلُولَ، وَذَلِكَ قَبْلَ أَنْ يُسْلِمَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ فَإِذَا فِي الْمَجْلِسِ أَخْلاَطٌ مِنَ الْمُسْلِمِينَ وَالْمُشْرِكِينَ عَبَدَةِ الأَوْثَانِ وَالْيَهُودِ وَالْمُسْلِمِينَ، وَفِي الْمَجْلِسِ عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ، فَلَمَّا غَشِيَتِ الْمَجْلِسَ عَجَاجَةُ الدَّابَّةِ خَمَّرَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ أَنْفَهُ بِرِدَائِهِ، ثُمَّ قَالَ لاَ تُغَبِّرُوا عَلَيْنَا. فَسَلَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَيْهِمْ ثُمَّ وَقَفَ فَنَزَلَ فَدَعَاهُمْ إِلَى اللَّهِ، وَقَرَأَ عَلَيْهِمُ الْقُرْآنَ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ ابْنُ سَلُولَ أَيُّهَا الْمَرْءُ، إِنَّهُ لاَ أَحْسَنَ مِمَّا تَقُولُ، إِنْ كَانَ حَقًّا، فَلاَ تُؤْذِينَا بِهِ فِي مَجْلِسِنَا، ارْجِعْ إِلَى رَحْلِكَ، فَمَنْ جَاءَكَ فَاقْصُصْ عَلَيْهِ. فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ بَلَى يَا رَسُولَ اللَّهِ، فَاغْشَنَا بِهِ فِي مَجَالِسِنَا، فَإِنَّا نُحِبُّ ذَلِكَ. فَاسْتَبَّ الْمُسْلِمُونَ وَالْمُشْرِكُونَ وَالْيَهُودُ حَتَّى كَادُوا يَتَثَاوَرُونَ، فَلَمْ يَزَلِ النَّبِيُّ صلى الله عليه وسلم يُخَفِّضُهُمْ حَتَّى سَكَنُوا، ثُمَّ رَكِبَ النَّبِيُّ صلى الله عليه وسلم دَابَّتَهُ فَسَارَ حَتَّى دَخَلَ عَلَى سَعْدِ بْنِ عُبَادَةَ، فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " يَا سَعْدُ أَلَمْ تَسْمَعْ مَا قَالَ أَبُو حُبَابٍ ". يُرِيدُ عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ " قَالَ كَذَا وَكَذَا ". قَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ يَا رَسُولَ اللَّهِ، اعْفُ عَنْهُ وَاصْفَحْ عَنْهُ، فَوَالَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ، لَقَدْ جَاءَ اللَّهُ بِالْحَقِّ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ، لَقَدِ اصْطَلَحَ أَهْلُ هَذِهِ الْبُحَيْرَةِ عَلَى أَنْ يُتَوِّجُوهُ فَيُعَصِّبُونَهُ بِالْعِصَابَةِ، فَلَمَّا أَبَى اللَّهُ ذَلِكَ بِالْحَقِّ الَّذِي أَعْطَاكَ اللَّهُ شَرِقَ بِذَلِكَ، فَذَلِكَ فَعَلَ بِهِ ما رَأَيْتَ. فَعَفَا عَنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ يَعْفُونَ عَنِ الْمُشْرِكِينَ وَأَهْلِ الْكِتَابِ كَمَا أَمَرَهُمُ اللَّهُ، وَيَصْبِرُونَ عَلَى الأَذَى قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ {وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا أَذًى كَثِيرًا } الآيَةَ، وَقَالَ اللَّهُ {وَدَّ كَثِيرٌ مِنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُمْ مِنْ بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا حَسَدًا مِنْ عِنْدِ أَنْفُسِهِمْ} إِلَى آخِرِ الآيَةِ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتَأَوَّلُ الْعَفْوَ مَا أَمَرَهُ اللَّهُ بِهِ، حَتَّى أَذِنَ اللَّهُ فِيهِمْ، فَلَمَّا غَزَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَدْرًا، فَقَتَلَ اللَّهُ بِهِ صَنَادِيدَ كُفَّارِ قُرَيْشٍ قَالَ ابْنُ أُبَىٍّ ابْنُ سَلُولَ، وَمَنْ مَعَهُ مِنَ الْمُشْرِكِينَ، وَعَبَدَةِ الأَوْثَانِ هَذَا أَمْرٌ قَدْ تَوَجَّهَ. فَبَايَعُوا الرَّسُولَ صلى الله عليه وسلم عَلَى الإِسْلاَمِ فَأَسْلَمُوا.
பாடம் : 15
(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் உங்களுக்குமுன் வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும், இணைவைத்தோரிடமிருந்தும் ஏராளமான நிந்தனைகளை நிச்சயம் கேட்பீர்கள். (அப்போதெல்லாம்) நீங்கள் பொறுமை காத்துத் தீமையிலிருந்து விலகி நடந்தால் அதுவே உறுதிமிக்க செயல்களில் ஒன்றாகும் (எனும் 3:186ஆவது வசனத்தொடர்)
4566. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஃபதக்' நகர முரட்டுத் துணி விரிக்கப்பட்ட கழுதையொன்றின் மீது அமர்ந்து தமக்குப் பின் வாகனத்தில் என்னை அமர்த்திக் கொண்டு ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றார்கள். -இது பத்ர் போருக்கு முன்னால் நடந்தது. -அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அதில் (நயவஞ்சகர்களின் தலைவர்) “அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல்' இருந்தார். -அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக்கொள்வதற்கு முன்பு இது நடந்தது.-
அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வழிபாடு செய்யும் இணைவைப்பாளர்கள், யூதர்கள், இறைநம்பிக்கையாளர்கள் ஆகிய பல்வேறு பிரிவினரும் கலந்து இருந்தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களும் இருந்தார்கள். (எங்கள்) வாகனப் பிராணியினால் கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்திருந்தபோது (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை தனது மேல்துண்டால் தன் மூக்கைப் பொத்திக்கொண்டார். பிறகு, “எங்கள்மீது புழுதி கிளப்பாதீர்” என்று சொன்னார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவையோருக்கு சலாம் (முகமன்) சொன்னார்கள். பிறகு தமது வாகனத்தை நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டினார்கள்.
இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் (நபி (ஸல்) அவர்களிடம்) “மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனால்,) அதை எங்களுடைய (இந்த) அவையில் (வந்து) சொல்லி எங்களுக்குத் தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள். உம்மிடம் வருபவர்களிடம் (அதை) எடுத்துச்சொல்லுங்கள்” என்றார். இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், “இல்லை; அல்லாஹ்வின் தூதரே! (இந்த) அவையிலேயே இதை எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகின்றோம்” என்றார். இதைக் கேட்ட முஸ்óம்களும் இணைவைப்பாளர்களும் யூதர்களும் (ஒருவரையொருவர்) ஏசத் தொடங்கி பரஸ்பரம் தாக்கிக்கொள்ளும் அளவுக்குச் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், மக்கள் மௌனமாகும்வரை அவர்களை அமைதிப்படுத்திக்கொண்டேயிருந்தார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறி சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, அவரிடம் “சஅதே! அபூஹுபாப் - அப்துல்லாஹ் பின் உபை - சொன்னதை நீங்கள் கேள்விப்பட வில்லையா? அவர் இன்னின்னவாறு கூறினார்” என்றார்கள்.
சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவரை மன்னித்து விட்டுவிடுங்கள். உங்களுக்கு வேதம் அருளிய (இறை)வன் மீதாணை யாக! இந்த (மதீனா) ஊர்வாசிகள் அவருக்கு முடிசூட்டித் தலைவராக்க முடிவு செய்திருந்த வேளையில், அல்லாஹ் உங்களுக்கு அருளிய சத்திய (வேத)த்தைக் கொண்டுவந்துவிட்டான்.
எனவே, அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்திய (மார்க்க)த்தின் மூலம் அ(ந்த முடிவு)தனை அவன் நிராகரித்ததால் அவர் ஆத்திரமடைந்துள்ளார். இதுதான் உங்களுக்கு முன்னால் அவ்வாறு அவர் நடந்துகொண்டதற்குக் காரணம்” என்று கூறினார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்துவிட்டார்கள்.
நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் அல்லாஹ்வின் ஆணைக் கொப்ப இணைவைப்பாளர்களையும் வேதக்காரர்களையும் மன்னிப்பவர்களாகவும் (அவர்களின்) நிந்தனைகளைப் பொறுத்துக்கொள்பவர்களாகவும் இருந்தனர்.
அல்லாஹ் கூறுகின்றான்:
(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் உங்களுக்குமுன் வேதம் அருளப்பட்ட வர்களிடமிருந்தும் இணைவைப்போரிடமிருந்தும் ஏராளமான நிந்தனைகளை நிச்சயம் கேட்பீர்கள். (அப்போதெல்லாம்) நீங்கள் பொறுமை காத்துத் தீமையிó ருந்து விலகி நடந்தால், அதுதான் உறுதிமிக்க செயல்களில் ஒன்றாகும். (3:186)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் இறைநம்பிக்கை கொண்டதற்குப்பின் உங்களை இறைமறுப்பாளர்களாக மாற்றிவிட வேண்டும் என்று வேதக் காரர்களில் பலர் விரும்புகின்றனர். (இது) அவர்களுக்கு உண்மை தெளிவாகி விட்ட பின்னர் அவர்களின் உள்ளத்துள் எழுந்த பொறாமையினாலேயாம். ஆயினும், அல்லாஹ் தன் ஆணையைப் பிறப்பிக்கும்வரை (அவர்களை) நீங்கள் மன்னியுங்கள். நிச்சயமாக! அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றல் உள்ளவன். (2:109)
அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் (நடவடிக்கையெடுக்க) அனுமதிக்கும்வரை நபி (ஸல்) அவர்கள் மன்னிக்கும் போக்கையே கைக்கொள்பவர்களாக இருந்தார்கள். அப்பால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ர் போருக்குச் சென்றபோது அன்னாரின் மூலம் அல்லாஹ் குறைஷி இறைமறுப்பாளர் களின் தலைவர்களைக் கொன்றான். அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலும் அவருடனிருந்த இணை வைப்பாளர்களும், சிலை வழிபாடு செய்வோரும் “(இஸ்லாம் எனும்) இந்த விஷயம் மேலோங்கிவிட்டது. ஆகவே, இந்த (இறை)த்தூதரிடம் இஸ்லாத்தை ஏற்றோமென உறுதிமொழியளித்துவிடுங்கள்” என்று கூறி (வெளித் தோற்றத்தில்) இஸ்லாத்தை ஏற்றனர்.

4567. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رِجَالاً مِنَ الْمُنَافِقِينَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الْغَزْوِ تَخَلَّفُوا عَنْهُ، وَفَرِحُوا بِمَقْعَدِهِمْ خِلاَفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم اعْتَذَرُوا إِلَيْهِ وَحَلَفُوا، وَأَحَبُّوا أَنْ يُحْمَدُوا بِمَا لَمْ يَفْعَلُوا، فَنَزَلَتْ {لاَ يَحْسِبَنَّ الَّذِينَ يَفْرَحُونَ} الآيَةَ.
பாடம் : 16
தாம் செய்த (தீய)வை குறித்து மகிழ்ந்துகொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக்கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடு வார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்கு வதைக்கும் வேதனை உண்டு (எனும் 3:188ஆவது இறைவசனம்)
4567. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் காலத்தில் நயவஞ்சகர்கள் சிலர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறப்போருக்குப் புறப்பட்டுச் சென்றால், அவர்களுடன் செல்லாமல் ஊரிலேயே தங்கிவிடுவார்கள். (அவ்வாறு) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல் தாம் தங்கிவிட்டதைப் பற்றி மகிழ்ச்சியும் அடைவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பி வரும்போது அவர்களிடம் (போய், தாம் கலந்துகொள்ளாமல்போனதற்குப் பொய்யான) சாக்குப்போக்குகளைக் கூறி, (பொய்ச்) சத்தியம் செய்வார்கள். தாம் செய்யாத (நற்)செயல்களுக்காகத் தாம் புகழப்பட வேண்டுமென்றும் விரும்புவார்கள்.
அப்போதுதான், “தாம் செய்த (தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக் கொண்டும் இருப்போர் வேதனை யிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்கு வதைக்கும் வேதனை உண்டு” எனும் (3:188ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

4568. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، أَنَّ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ، أَخْبَرَهُ أَنَّ مَرْوَانَ قَالَ لِبَوَّابِهِ اذْهَبْ يَا رَافِعُ إِلَى ابْنِ عَبَّاسٍ فَقُلْ لَئِنْ كَانَ كُلُّ امْرِئٍ فَرِحَ بِمَا أُوتِيَ، وَأَحَبَّ أَنْ يُحْمَدَ بِمَا لَمْ يَفْعَلْ، مُعَذَّبًا، لَنُعَذَّبَنَّ أَجْمَعُونَ. فَقَالَ ابْنُ عَبَّاسٍ وَمَا لَكُمْ وَلِهَذِهِ إِنَّمَا دَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَهُودَ فَسَأَلَهُمْ عَنْ شَىْءٍ، فَكَتَمُوهُ إِيَّاهُ، وَأَخْبَرُوهُ بِغَيْرِهِ، فَأَرَوْهُ أَنْ قَدِ اسْتَحْمَدُوا إِلَيْهِ بِمَا أَخْبَرُوهُ عَنْهُ فِيمَا سَأَلَهُمْ، وَفَرِحُوا بِمَا أُوتُوا مِنْ كِتْمَانِهِمْ، ثُمَّ قَرَأَ ابْنُ عَبَّاسٍ {وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ} كَذَلِكَ حَتَّى قَوْلِهِ {يَفْرَحُونَ بِمَا أَتَوْا وَيُحِبُّونَ أَنْ يُحْمَدُوا بِمَا لَمْ يَفْعَلُوا}. تَابَعَهُ عَبْدُ الرَّزَّاقِ عَنِ ابْنِ جُرَيْجٍ.
حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا الْحَجَّاجُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ مَرْوَانَ بِهَذَا.
பாடம் : 16
தாம் செய்த (தீய)வை குறித்து மகிழ்ந்துகொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக்கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடு வார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்கு வதைக்கும் வேதனை உண்டு (எனும் 3:188ஆவது இறைவசனம்)
4568. அல்கமா பின் வக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(மதீனா ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகம்25 தம் காவலரிடம், “ராஃபிஉ! நீர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று, “தமக்கு அளிக்கப்பட்டவை குறித்து மகிழ்ச்சி அடைகின்ற, தாம் செய்யாத (சாதனைகள் முதலிய)வற்றுக்காகத் தாம் புகழப்பட வேண்டுமென்று விரும்புகின்ற மனிதர் ஒவ்வொருவரும் வேதனை செய்யப்படுவர் என்றிருப்பின், நாம் அனைவருமே வேதனை செய்யப்பட வேண்டி வருமே!' என்று (நான் வினவியதாகக்) கேள்” என்று சொன்னார்.
(அவ்வாறே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று ராஃபிஉ கேட்ட போது) “உங்களுக்கு இது தொடர்பாக என்ன (குழப்பம்) நேர்ந்தது? (இதன் உண்மை என்னவென்றால்,) நபி (ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து அவர்களிடம் ஒரு விஷயம் (தவ்ராத்தில் உள்ளதா என்பது) குறித்துக் கேட்டார்கள்.
அப்போது யூதர்கள் அதை மறைத்து விட்டு (உண்மைக்குப் புறம்பான) வேறொன்றை நபியவர்களிடம் தெரிவித்தார்கள். தங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வினவியது தொடர்பாகத் தாங்கள் அன்னாரிடம் (தகவல்) தெரிவித்ததற்காகப் பாராட்டை எதிர்பார்ப்பதுபோல் அவர்கள் காட்டிக்கொண்டார்கள். தங்களுக்கு (இறைவன் மூலம்) வழங்கப்பெற்ற (உண்மை)தனைத் தாங்கள் மறைத்துவிட்டது குறித்து அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்” என்று கூறிவிட்டு (பின்வரும்) இந்த வசனங்களை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதினார்கள்:
வேதம் வழங்கப்பட்டவர்களிடம் “நீங்கள் அதை மக்களுக்குத் தெளிவாக்கிட வேண்டும்; அதனை மறைக்கக் கூடாது' என அல்லாஹ் உறுதிமொழி வாங்கி னான். ஆனால், அதை அவர்கள், தம் முதுகுக்குப் பின்னே எறிந்துவிட்டு, அதற்குப் பதிலாக அற்ப விலையை வாங்கிக்கொண்டனர் என்பதை (நபியே! அவர்களுக்கு நினைவூட்டுவீராக!) அவர்கள் வாங்கிக்கொண்டது மிக மோசமானதாகும். தாம் செய்த (தீய)வை குறித்து மகிழ்ந்துகொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக்கொண்டும் இருப்போர் வேதனையிóருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்கு வதைக்கும் வேதனை உண்டு. (3:187, 188).26
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.