4531. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا شِبْلٌ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، {وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا} قَالَ كَانَتْ هَذِهِ الْعِدَّةُ تَعْتَدُّ عِنْدَ أَهْلِ زَوْجِهَا وَاجِبٌ، فَأَنْزَلَ اللَّهُ {وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا وَصِيَّةً لأَزْوَاجِهِمْ مَتَاعًا إِلَى الْحَوْلِ غَيْرَ إِخْرَاجٍ فَإِنْ خَرَجْنَ فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنْفُسِهِنَّ مِنْ مَعْرُوفٍ} قَالَ جَعَلَ اللَّهُ لَهَا تَمَامَ السَّنَةِ سَبْعَةَ أَشْهُرٍ وَعِشْرِينَ لَيْلَةً وَصِيَّةً، إِنْ شَاءَتْ سَكَنَتْ فِي وَصِيَّتِهَا، وَإِنْ شَاءَتْ خَرَجَتْ، وَهْوَ قَوْلُ اللَّهِ تَعَالَى {غَيْرَ إِخْرَاجٍ فَإِنْ خَرَجْنَ فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ} فَالْعِدَّةُ كَمَا هِيَ وَاجِبٌ عَلَيْهَا. زَعَمَ ذَلِكَ عَنْ مُجَاهِدٍ. وَقَالَ عَطَاءٌ قَالَ ابْنُ عَبَّاسٍ نَسَخَتْ هَذِهِ الآيَةُ عِدَّتَهَا عِنْدَ أَهْلِهَا، فَتَعْتَدُّ حَيْثُ شَاءَتْ، وَهْوَ قَوْلُ اللَّهِ تَعَالَى {غَيْرَ إِخْرَاجٍ}. قَالَ عَطَاءٌ إِنْ شَاءَتِ اعْتَدَّتْ عِنْدَ أَهْلِهِ وَسَكَنَتْ فِي وَصِيَّتِهَا، وَإِنْ شَاءَتْ خَرَجَتْ لِقَوْلِ اللَّهِ تَعَالَى {فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ}. قَالَ عَطَاءٌ ثُمَّ جَاءَ الْمِيرَاثُ فَنَسَخَ السُّكْنَى فَتَعْتَدُّ حَيْثُ شَاءَتْ، وَلاَ سُكْنَى لَهَا. وَعَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ حَدَّثَنَا وَرْقَاءُ عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ عَنْ مُجَاهِدٍ بِهَذَا. وَعَنِ ابْنِ أَبِي نَجِيحٍ عَنْ عَطَاءٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ نَسَخَتْ هَذِهِ الآيَةُ عِدَّتَهَا فِي أَهْلِهَا، فَتَعْتَدُّ حَيْثُ شَاءَتْ لِقَوْلِ اللَّهِ {غَيْرَ إِخْرَاجٍ} نَحْوَهُ.
பாடம் 41
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டுவிட்டு இறந்துபோயிருந் தால், அவர்(களின் மனைவி)கள் நான்கு மாதம் பத்து நாட்கள் தங்கள் விஷயத்தில் காத்திருப்பார்கள். அவர்கள் தங்களது (காத்திருப்புத்) தவணையின் இறுதியை எட்டிவிட்டால் தங்கள் விஷயத்தில் அவர்கள் முறையோடு செய்துகொள்கின்ற (அலங்காரம் முதலான)வற்றில் (உறவினர்களே! நீங்கள் தலையிடாமல் இருப்பதால்) உங்கள்மீது எவ்விதக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான் (எனும் 2:234ஆவது இறைவசனம்)
(2:237ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “யஅஃபூன' (விட்டுக் கொடுத்தால்) எனும் சொல்லுக்கு “அன்பளிப்பாகக் கொடுத்தால்' என்று பொருள்.
4531. அப்துல்லாஹ் பின் அபீநஜீஹ் அல்மக்கீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“உங்களில் எவரேனும் மனைவியரை விட்டுவிட்டு இறந்துபோயிருந்தால், அவர்(களுடைய மனைவி)கள் நான்கு மாதம் பத்து நாட்கள் தங்கள் விஷயத்தில் காத்திருப்பார்கள்” (எனும் 2:234ஆவது வசனத்தின் விளக்கத்தில்) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
(கணவன் இறந்துபோன) அந்தப்பெண் (நான்கு மாதம், பத்து நாட்கள் காத்திருத்தல் எனும்) இந்த “இத்தா'வைத் தம் கணவனு டைய குடும்பத்தாரிடம் மேற்கொள்வது கட்டாயமாக இருந்தது.
இந்நிலையில், “உங்களில் மனைவியரை விட்டுவிட்டு இற(க்கும் தறுவாயில்இரு)ப்பவர்கள் தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதிவிருப்பம் தெரிவிப்பார்களாக. ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள்மீது எந்தக் குற்றமும் கிடையாது.” எனும் (2:240 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
(இதன் மூலம்) ஒரு முழு ஆண்டில் (நான்கு மாதம், பத்து நாட்கள் போக மீதியுள்ள) ஏழு மாதம், இருபது நாட்களை(க் கணவனின்) இறுதி விருப்ப(த்தை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்ப)மாக அல்லாஹ் ஆக்கினான். அவள் விரும்பினால் (அந்த ஏழு மாதம் இருபது நாட்களில்) தம் கணவனின் இறுதி விருப்பப்படி (கணவனின் வீட்டிலேயே) தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் (நான்கு மாதம் பத்து நாட்களுக்குப்பின்) வெளியேறிக்கொள்ளலாம்.
இதைத்தான், “வெளியேற்றிவிடாமல் ஓராண்டுக் காலம்வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதிவிருப்பம் தெரிவிப்பார்களாக. ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள்மீது எந்தக் குற்றமும் கிடையாது” என்று இவ்வசனம் (2:240) குறிப்பிடுகின்றது.
ஆக, (நான்கு மாதம் பத்து நாட்கள் எனும்) “இத்தா' கால வரம்பு கணவனை இழந்த கைம்பெண்ணின் மீது கட்டாயமானதே ஆகும்.65
(ஆகவே, 2:234ஆவது வசனம், 2:240ஆவது வசனத்தை மாற்றிடவில்லை என்ற) இந்தக் கருத்தையே முஜாஹித் (ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு அபீநஜீஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இந்த வசனம் (2:240), அவள் தன்னுடைய கணவனது வீட்டில்தான் “இத்தா' இருக்க வேண்டும் என்பதை மாற்றிவிட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் “இத்தா' இருப்பாள். இதையே, “(தானாக விரும்பி வெளியேறினால் தவிர, கட்டாயப்படுத்தி) வெளியேற்றிவிடாமல் ஓராண்டுக் காலம்வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதி விருப்பம் தெரிவிப்பார்களாக” எனும் இந்த இறை வசனத்தொடர் குறிக்கின்றது என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்தைச் சற்றுத் தெளிவுபடுத்தும் விதத்தில்) அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அவள் விரும்பினால் தன் கணவனின் வீட்டில் “இத்தா' இருப்பாள். தனக்காகத் தெரிவிக்கப்பட்ட இறுதி விருப்பத்தில் கண்டுள்ளபடி தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் வெளியேறி (வேறு எங்கேனும் தங்கி)க்கொள்வாள். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: ஆயினும் அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை.
தொடர்ந்து அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு சொத்துரிமைச் சட்டம் (குறித்த 4:12ஆவது வசனம்) வந்து, தங்கும் வசதி (செய்து தர கணவன் இறுதி விருப்பம் தெரிவிக்க வேண்டுமென்ற முறை)யை மாற்றிவிட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் “இத்தா' இருக்கலாம். அவளுக்குத் தங்கும் வசதி செய்து கொடுக்க வேண்டியது (கணவனின் உறவினர்களுக்குக் கடமையாக) இல்லை.66
இதையே முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாகவும் ஓர் அறிவிப்பாளர்தொடர் வழியாக இப்னு அபீநஜீஹ் (ரஹ்) அவர் களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களிடமிருந்து அதாஉ (ரஹ்) அவர்கள் வழியாக முஜாஹித் (ரஹ்) அவர்கள் அறிவித்த மேற்சொன்ன கருத்தைப் போலவே அதாஉ (ரஹ்) அவர்கள் வழியாக இப்னு அபீநஜீஹ் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65

4532. حَدَّثَنَا حِبَّانُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ جَلَسْتُ إِلَى مَجْلِسٍ فِيهِ عُظْمٌ مِنَ الأَنْصَارِ وَفِيهِمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى، فَذَكَرْتُ حَدِيثَ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ فِي شَأْنِ سُبَيْعَةَ بِنْتِ الْحَارِثِ، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ وَلَكِنَّ عَمَّهُ كَانَ لاَ يَقُولُ ذَلِكَ. فَقُلْتُ إِنِّي لَجَرِيءٌ إِنْ كَذَبْتُ عَلَى رَجُلٍ فِي جَانِبِ الْكُوفَةِ. وَرَفَعَ صَوْتَهُ، قَالَ ثُمَّ خَرَجْتُ فَلَقِيتُ مَالِكَ بْنَ عَامِرٍ أَوْ مَالِكَ بْنَ عَوْفٍ قُلْتُ كَيْفَ كَانَ قَوْلُ ابْنِ مَسْعُودٍ فِي الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا وَهْىَ حَامِلٌ فَقَالَ قَالَ ابْنُ مَسْعُودٍ أَتَجْعَلُونَ عَلَيْهَا التَّغْلِيظَ، وَلاَ تَجْعَلُونَ لَهَا الرُّخْصَةَ لَنَزَلَتْ سُورَةُ النِّسَاءِ الْقُصْرَى بَعْدَ الطُّولَى. وَقَالَ أَيُّوبُ عَنْ مُحَمَّدٍ لَقِيتُ أَبَا عَطِيَّةَ مَالِكَ بْنَ عَامِرٍ.
பாடம் 41
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டுவிட்டு இறந்துபோயிருந் தால், அவர்(களின் மனைவி)கள் நான்கு மாதம் பத்து நாட்கள் தங்கள் விஷயத்தில் காத்திருப்பார்கள். அவர்கள் தங்களது (காத்திருப்புத்) தவணையின் இறுதியை எட்டிவிட்டால் தங்கள் விஷயத்தில் அவர்கள் முறையோடு செய்துகொள்கின்ற (அலங்காரம் முதலான)வற்றில் (உறவினர்களே! நீங்கள் தலையிடாமல் இருப்பதால்) உங்கள்மீது எவ்விதக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான் (எனும் 2:234ஆவது இறைவசனம்)
(2:237ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “யஅஃபூன' (விட்டுக் கொடுத்தால்) எனும் சொல்லுக்கு “அன்பளிப்பாகக் கொடுத்தால்' என்று பொருள்.
4532. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் முக்கியமானவர்கள் பலர் அமர்ந்திருந்த அவையொன்றில் நான் அமர்ந்தேன். அவர்களிடையே அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அப்போது நான், சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் (ரலி) தொடர்பான அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்களின் ஹதீஸை எடுத்துரைத்தேன்.67
அப்போது அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்) அவர்கள், “அப்துல்லாஹ் பின் உத்பாவின் தந்தையுடைய சகோதரர் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்கள்) இதை ஏற்றுக்கொண்டதில்லையே” என்று சொன்னார்.
உடனே நான் உரத்த குரலில், “கூஃபா நகரத்திற்கு அருகிலுள்ள (அப்துல்லாஹ் பின் உத்பா என்ற) மனிதரின் தவற்றை நான் வெளிப்படுத்துகிறேன் என்றால் நான் மிகக் துணிச்சலுடையவன்தான்” என்று சொன்னேன்.68
பிறகு நான் (அந்த அவையிலிருந்து) வெளியேறிவிட்டேன். (செல்லும் வழியில்) “மாலிக் பின் ஆமிர்' அல்லது “மாóக் பின் அவ்ஃப்' (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். (அவரிடம்) நான், “தான் கர்ப்பிணியாயிருக்க, தன்னைவிட்டு (கணவன்) இறந்துவிட்ட பெண் விஷயத்தில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் கருத்து என்னவாக இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர், “இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், “(கணவன் இறந்துவிட்ட கர்ப்பிணியான) அவளுக்குச் சலுகை அளிக்காமல் கடும் சிரமத்தை (மட்டும்) அளிக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். (இந்நிலையில்தான்) பெண்கள் தொடர்பான (சட்டங்கள் இடம்பெற்றுள்ள “அல்பகரா' எனும்) பெரிய அத்தியாயத்திற்குப் பிறகு (“அத்தலாக்' எனும்) சிறிய அத்தியாயம் அருளப்பெற்றது” என்று கூறினார்கள்.69
மற்றோர் அறிவிப்பில் முஹம்மத் பின் சீரின் (ரஹ்) அவர்கள், “(வழியில்) நான் அபூஅதிய்யா மாலிக் பின் ஆமிர் அவர்களைச் சந்தித்தேன்” என்று (சந்தேக மின்றி ஒருவர் பெயரை மட்டும்) கூறியதாக வந்துள்ளது.

4533. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم. حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ هِشَامٌ حَدَّثَنَا قَالَ حَدَّثَنَا مُحَمَّدٌ عَنْ عَبِيدَةَ عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ يَوْمَ الْخَنْدَقِ " حَبَسُونَا عَنْ صَلاَةِ الْوُسْطَى حَتَّى غَابَتِ الشَّمْسُ مَلأَ اللَّهُ قُبُورَهُمْ وَبُيُوتَهُمْ أَوْ أَجْوَافَهُمْ ـ شَكَّ يَحْيَى ـ نَارًا ".
பாடம் : 42
(இறைநம்பிக்கை கொண்டவர் களே!) அனைத்துத் தொழுகை களையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள் (எனும் 2:238ஆவது வசனத்தொடர்)
4533. அலீ (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அகழ்ப் போரின்போது நபி (ஸல்) அவர்கள், “நம்மை நடுத்தொழுகையைத் தொழ விடாமல் சூரியன் மறையும்வரை எதிரிகள் தடுத்துவிட்டார்கள். அவர்களின் புதைகுழிகளையும் “வீடுகளையும்' அல்லது அவர்களின் “வயிறுகளையும்' அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக!” என்று சொன்னார்கள்.70
அறிவிப்பாளர் யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்களே சந்தேகத் துடன் “அல்லது அவர்களுடைய வயிறு களையும்” என்று சொன்னார்கள்.71
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களின் வழியாக வந்துள்ளது.

4534. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنِ الْحَارِثِ بْنِ شُبَيْلٍ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ كُنَّا نَتَكَلَّمُ فِي الصَّلاَةِ يُكَلِّمُ أَحَدُنَا أَخَاهُ فِي حَاجَتِهِ حَتَّى نَزَلَتْ هَذِهِ الآيَةُ {حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلاَةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ} فَأُمِرْنَا بِالسُّكُوتِ.
பாடம் : 43
மேலும், நீங்கள் உள்ளச்சம் உடைய வர்களாக நின்று அல்லாஹ்வை வழிபடுங்கள் (எனும் 2:238ஆவது வசனத்தொடர்)
(இதில், “உள்ளச்சம் உடையவர்களாக” எனும் பொருளைச் சுட்டும் “கானித்தீன்' எனும் சொல்லுக்கு “கீழ்படிந்தவர்களாக' என்பது பொருள்.
4534. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஆரம்பக் காலத்தில்) நாங்கள் தொழுகையில் பேசிக்கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். “அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள். மேலும், நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வழிபடுங்கள்” எனும் (2:238ஆவது) வசனம் அருளப்பெறும்வரை (நாங்கள் இவ்வாறே தொழுகையில் பேசிவந்தோம்). இந்த வசனம் அருளப்பெற்றவுடன் பேசாமலிருக்கும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டது.72

4535. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ إِذَا سُئِلَ عَنْ صَلاَةِ الْخَوْفِ قَالَ يَتَقَدَّمُ الإِمَامُ وَطَائِفَةٌ مِنَ النَّاسِ فَيُصَلِّي بِهِمِ الإِمَامُ رَكْعَةً، وَتَكُونُ طَائِفَةٌ مِنْهُمْ بَيْنَهُمْ وَبَيْنَ الْعَدُوِّ لَمْ يُصَلُّوا، فَإِذَا صَلَّوُا الَّذِينَ مَعَهُ رَكْعَةً اسْتَأْخَرُوا مَكَانَ الَّذِينَ لَمْ يُصَلُّوا وَلاَ يُسَلِّمُونَ، وَيَتَقَدَّمُ الَّذِينَ لَمْ يُصَلُّوا فَيُصَلُّونَ مَعَهُ رَكْعَةً، ثُمَّ يَنْصَرِفُ الإِمَامُ وَقَدْ صَلَّى رَكْعَتَيْنِ، فَيَقُومُ كُلُّ وَاحِدٍ مِنَ الطَّائِفَتَيْنِ فَيُصَلُّونَ لأَنْفُسِهِمْ رَكْعَةً بَعْدَ أَنْ يَنْصَرِفَ الإِمَامُ، فَيَكُونُ كُلُّ وَاحِدٍ مِنَ الطَّائِفَتَيْنِ قَدْ صَلَّى رَكْعَتَيْنِ، فَإِنْ كَانَ خَوْفٌ هُوَ أَشَدَّ مِنْ ذَلِكَ صَلَّوْا رِجَالاً، قِيَامًا عَلَى أَقْدَامِهِمْ، أَوْ رُكْبَانًا مُسْتَقْبِلِي الْقِبْلَةِ أَوْ غَيْرَ مُسْتَقْبِلِيهَا. قَالَ مَالِكٌ قَالَ نَافِعٌ لاَ أُرَى عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ذَكَرَ ذَلِكَ إِلاَّ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 44
நீங்கள் (சூழ்நிலை குறித்து) அச்சம் கொண்டால் நடந்தவர்களாகவோ, அல்லது வாகனத்தில் இருந்தவர் களாகவோ (தொழுங்கள்). அச்சம் அகன்றுவிடின், அல்லாஹ் உங்களுக்கு நீங்கள் அறியாதவற்றைக் கற்றுக்கொடுத்தபடி அவனை(த் தொழுது) நினைவுகூருங்கள் (எனும் 2:239ஆவது இறைவசனம்)
இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:73
(2:255ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “குர்சிய்யுஹு' (அவனது அரசாட்சி) எனும் சொல்லுக்கு “அவனது அறிவு' என்பது பொருள்.
(2:247ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “பஸ்தத்தன்' (அதிகம்) எனும் சொல்லுக்கு “கூடுதல்', “சிறப்பு' என்பது பொருள்.
(2:250ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “அஃப்ரிஃக்' (பொழி வாயாக!) எனும் சொல்லுக்கு “இறக்கியருள்' என்பது பொருள்.
(2:255ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “வ லா யஊதுஹு' (அவனுக்குச் சுமையாகாது) எனும் சொற்றொடருக்கு “(வானங்கள் பூமியைப் பாதுகாப்பது) அவனுக்குப் பளுவானதல்ல' என்பது பொருள். (இதன் இறந்த கால வினைச்சொல் இடம்பெற்றுள்ள) “ஆதனீ' என்பதற்கு “எனக்குப் பளுவாகிவிட்டது' என்பது பொருள். “ஆது' என்பதற்கும் “அய்த்' என்பதற்கும் “பலம்' என்று பொருள்.
(அதே வசனத்தில் இடம்பெற்றுள்ள) “சினா' எனும் சொல்லுக்கு “சிற்றுறக்கம்' என்பது பொருள்.
(2:259ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “யதசன்னஹ்' (கெட்டுப் போனது) எனும் சொல்லுக்கு “(இயல்பு) மாறிவிட்டது' என்பது பொருள்.
(2:258ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “ஃப புஹித்த' (வாயடைத் துப்போனான்) என்பதற்கு “அவனது ஆதாரம் (பொய்த்துப்) போய்விட்டது' என்பது பொருள். (2:259ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “காவியா' (விழுந்து கிடந்தது) எனும் சொல்லுக்கு, “மனித சஞ்சாரமற்ற' என்பது பொருள். “உரூஷிஹா' (அதன் முகடுகள்) என்பதற்கு “அதன் கட்டடங்கள்' என்பது பொருள்.
(2:259ஆவது வசனத்தின் மூலத்தில் ஓர் ஓதல் முறைப்படி இடம்பெற்றுள்ள) “நுன்ஷிருஹா' எனும் சொல்லுக்கு “அதை வெளிப்படுத்துகிறோம்' என்பது பொருள்.
(2:266ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “இஃஸார்' (சூறாவளி) எனும் சொல்லுக்கு “தூணைப் போன்று பூமியிலிருந்து வானத்தை நோக்கி வீசுகின்ற நெருப்புடன் கூடிய சூறாவளிக் காற்று' என்பது பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(2:264ஆவது வசனத்தின் மூலத் திலுள்ள) “ஸல்தா' (வெறும் பாறை) எனும் சொல்லுக்கு “மேலே எதுவும் இல்லாத (எதுவும் வளராத வழுக்குப் பாறை)' என்பது பொருள்.
இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(2:265ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) “வாபில்' என்பது பெருமழையும் “தல்லு' என்பது தூறலும் ஆகும். இது இறைநம்பிக்கையாளரின் செயலுக்கு உவமையாகும்.
(2:259ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “யதசன்னஹ்' (கெட்டுப்போனது) என்பதற்கு “(இயல்பு) மாறிவிட்டது' என்று பொருள்.
4535. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் அச்ச நேரத் தொழுகை குறித்து கேட்கப்பட்டால் (இப்படிக்) கூறுவார்கள்:
(முதலில்) இமாமும் மக்களில் ஒரு பிரிவினரும் (ஓர் இடத்திற்கு) முன்னேறிச் செல்வார்கள். மக்களுக்கு இமாம் ஒரு ரக்அத் தொழுவிப்பார். மக்களில் மற்றொரு பிரிவினர் தொழாமல் மக்களுக்கும் எதிரிகளுக்கும் இடையில் (பாதுகாப்பு அரணாக) இருப்பார்கள். இமாமுடன் இருப்பவர்கள் ஒரு ரக்அத் தொழுது முடித்துவிட்டால், சலாம் கொடுக்காமலேயே இதுவரை தொழாதவர்களின் இடத்திற்குச் சென்றுவிடுவர். இப்போது இதுவரை தொழாதவர்கள், முன்சென்று இமாமுடன் ஒரு ரக்அத்தைத் தொழுதுகொள்வர்.
பிறகு, இமாம் இரண்டு ரக்அத்களைத் தொழுது முடித்த நிலையில் திரும்பிச் சென்றுவிட, அதன் பிறகு இரு பிரிவினரில் ஒவ்வொருவரும் நின்று தனித்தனியாக ஒரு ரக்அத் தொழுவார்கள். இப்படியாக, இரு பிரிவினரில் ஒவ்வொருவரும் இரு ரக்அத்களைத் தொழுதுவிட்டிருப்பார்கள். இதைவிடக் கடுமையான அச்ச நிலை ஏற்பட்டால் அவர்கள் நடந்தவர்களாகவோ, தம் கால்களால் நின்ற நிலையிலோ, வாகனத்தில் பயணம் செய்தவர்களாகவோ கிப்லா திசையை முன்னோக்கியபடி, அல்லது முன்னோக்காமல் தொழலாம்.
இதன் அறிவிப்பாளரான மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டே இதை அறிவித்திருப்பதாக நான் கருதுகிறேன் என்று நாஃபிஉ (ரஹ்) கூறினார்கள்.74

4536. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ الأَسْوَدِ، وَيَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالاَ حَدَّثَنَا حَبِيبُ بْنُ الشَّهِيدِ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ قَالَ ابْنُ الزُّبَيْرِ قُلْتُ لِعُثْمَانَ هَذِهِ الآيَةُ الَّتِي فِي الْبَقَرَةِ {وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا} إِلَى قَوْلِهِ {غَيْرَ إِخْرَاجٍ} قَدْ نَسَخَتْهَا الأُخْرَى، فَلِمَ تَكْتُبُهَا قَالَ تَدَعُهَا. يَا ابْنَ أَخِي لاَ أُغَيِّرُ شَيْئًا مِنْهُ مِنْ مَكَانِهِ. قَالَ حُمَيْدٌ أَوْ نَحْوَ هَذَا.
பாடம் : 45
உங்களில் மனைவியரை விட்டுவிட்டு இற(க்கும் தருணத் தில் இரு)ப்பவர்கள், தங்கள் மனைவியரை (வீட்டிóருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதிவிருப்பம் (வஸிய்யத்) தெரிவிப்பார்களாக! (எனும் 2:240ஆவது வசனத்தொடர்)
4536. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம், “உங்களில் மனைவியரை விட்டுவிட்டு இற(க்கும் தருணத்தில் இரு)ப்பவர்கள், தங்கள் மனைவியரை (வீட்டிóருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டுவரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதிவிருப்பம் (வஸிய்யத்) தெரிவிப்பார்களாக!” எனும் இந்த (2:240ஆவது) இறைவசனத்(தின் சட்டத்)தை மற்றோர் (2:234ஆவது) இறைவசனம் மாற்றிவிட்டதே! இதை ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்?” என்று கேட்டேன்.
உஸ்மான் (ரலி) அவர்கள், இதை (நீக்காமல் குர்ஆனில் அப்படியே) விட்டு விடுவீராக! என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்றமாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.75
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹுமைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அல்லது அதைப் போன்று' என இடம் பெற்றுள்ளது.

4537. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَسَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " نَحْنُ أَحَقُّ بِالشَّكِّ مِنْ إِبْرَاهِيمَ إِذْ قَالَ {رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي}"
பாடம் 46
இப்ராஹீம் (இறைவனை நோக்கி), “இறைவா! மரித்தவர்களை நீ எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என் பதை எனக்குக் காட்டுவாயாக!” எனக் கூறியபோது, அவன், “நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?” என்று கேட்டான். (அதற்கு) அவர் “அவ்வாறன்று! (நம்பியிருக்கிறேன்.) ஆயினும், என் உள்ளம் நிம்மதியடைவதற்காகவே கேட்கிறேன்” என்று கூறினார். (அதற்கு இறைவன்) “நான்கு பறவைகளைப் பிடித்து, அவற்றை உம்மிடம் வைத்து(ப் பல துண்டுகளாக்கி) பின்னர் அவற்றில் ஒவ்வொரு பாகத்தையும், ஒவ்வொரு மலையின் மீது வைத்துவிட்டு அவற்றை நீர் அழைப்பீராக! அவை உம்மிடம் விரைந்து வந்துசேரும். நிச்சயமாக அல்லாஹ், வல்லமை மிக்கவனும் நுண்ணறிவு உள்ளோனும் ஆவான் என்பதை நீர் அறிந்துகொள்வீராக!” என்றான் (எனும் 2:260ஆவது இறைவசனம்)
(இவ்வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “ஸுர்ஹுன்ன' (“அவற்றை உம்மிடம் வைத்துக்கொள்வீராக') எனும் சொல்லுக்கு “அவற்றைப் பல துண்டுகளாக்கி வைத்துக்கொள்வீராக' என்று பொருள்.
4537. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறந்துபோனவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால் இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர் களைவிடவும் நாமே சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். (ஆகவே, சந்தேகப்பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை.)
ஏனெனில், “என் இறைவா! மரித்தவர் களை நீ எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக!” என்று அன்னார் கேட்டார்கள். இறைவன்,”நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “அவ்வாறன்று (நம்பியிருக்கிறேன்)! ஆயினும், என் உள்ளம் நிம்மதியடைவதற் காகவே கேட்கிறேன்” என்று பதிலளித் தார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.76
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

4538. حَدَّثَنَا إِبْرَاهِيمُ، أَخْبَرَنَا هِشَامٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي مُلَيْكَةَ، يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ،. قَالَ وَسَمِعْتُ أَخَاهُ أَبَا بَكْرِ بْنَ أَبِي مُلَيْكَةَ، يُحَدِّثُ عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، قَالَ قَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ يَوْمًا لأَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيمَ تَرَوْنَ هَذِهِ الآيَةَ نَزَلَتْ {أَيَوَدُّ أَحَدُكُمْ أَنْ تَكُونَ لَهُ جَنَّةٌ} قَالُوا اللَّهُ أَعْلَمُ. فَغَضِبَ عُمَرُ فَقَالَ قُولُوا نَعْلَمُ أَوْ لاَ نَعْلَمُ. فَقَالَ ابْنُ عَبَّاسٍ فِي نَفْسِي مِنْهَا شَىْءٌ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ. قَالَ عُمَرُ يَا ابْنَ أَخِي قُلْ وَلاَ تَحْقِرْ نَفْسَكَ. قَالَ ابْنُ عَبَّاسٍ ضُرِبَتْ مَثَلاً لِعَمَلٍ. قَالَ عُمَرُ أَىُّ عَمَلٍ قَالَ ابْنُ عَبَّاسٍ لِعَمَلٍ. قَالَ عُمَرُ لِرَجُلٍ غَنِيٍّ يَعْمَلُ بِطَاعَةِ اللَّهِ عَزَّ وَجَلَّ، ثُمَّ بَعَثَ اللَّهُ لَهُ الشَّيْطَانَ فَعَمِلَ بِالْمَعَاصِي حَتَّى أَغْرَقَ أَعْمَالَهُ. {فَصُرْهُنَّ} قَطِّعْهُنَّ.
பாடம் : 47
“நீரருவிகள் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கின்ற திராட்சை மற்றும் பேரீச்சந்தோட்டம் ஒருவருக்கு இருந்து, அதில் எல்லா வகையான கனிகளும் அவருக்குக் கிடைக்கின்றன. அவரை முதுமை வந்தடை கிறது. வலுவில்லாத குழந்தைகளும் அவருக்கு உள்ளனர். (இந்நிலை யில்) நெருப்புடன் கூடிய சூறாவளி தாக்கி அது கரிந்துபோவதை உங்களில் எவரேனும் விரும்புவாரா? இவ்வாறு அல்லாஹ் தன் வசனங்களை, நீங்கள் சிந்திக்கும் பொருட்டு (உதாரணங்களின் மூலம்) உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்” எனும் (2:266ஆவது) இறைவசனம்
4538. (அப்துல் அஸீஸ் பின் அப்தில் மலிக்) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தும், அவர்களுடைய சகோதரர் அபூபக்ர் பின் அபீமுளைக்கா அவர்கள், உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களிடமிருந்தும் (கேட்டு) அறிவித் தார்கள்:
உமர் (ரலி) அவர்கள் ஒருநாள் நபித் தோழர்களிடம், “நீரருவிகள் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கின்ற திராட்சை மற்றும் பேரீச்சந்தோட்டம் ஒருவருக்கு இருந்து...” (என்று தொடங்கும்) இந்த (2:266ஆவது) வசனம் எது தொடர்பாக அருளப்பெற்றது என நீங்கள் கருதுகிறீர்கள்?” என்று கேட்க, அவர்கள், “அல்லாஹ்வே அறிந்தவன்” என்று பதிலளித்தார்கள்.
உடனே உமர் (ரலி) அவர்கள் கோப மடைந்து, “எங்களுக்குத் தெரியும்; அல்லது தெரியாது என்று (இரண்டில் ஒன்றைத் தெளிவாகச்) சொல்லுங்கள்” என்று கேட்க, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அதைப் பற்றி என் உள்ளத்தில் ஒரு கருத்து உள்ளது, இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே!” என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், “என் சகோதரர் மகனே! சொல்லுங்கள்; உங்களை நீங்களே அற்பமாகக் கருதிக்கொள்ளாதீர்கள்” என்று சொன்னார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இது, ஒரு செயலுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், “என்ன செயல்?” என்று கேட்க, இப்னு அப்பாஸ், “ஒரு செயலுக்கு” என்று (மீண்டும்) கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள், “செல்வந்தனாகிய ஒரு மனிதன் வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நற்செயல் புரிந்துவந்தான். பிறகு அல்லாஹ் அவனிடம் ஷைத்தானை அனுப்ப, (அவனுடைய தூண்டுதலால்) அந்த மனிதன் பாவங்கள் புரிய, அது அவனுடைய (முந்தைய நற்)செயல்களை மூழ்கடித்துவிட்டது; (அதைத்தான் இங்கு இறைவன் இப்படி உவமித்துக் கூறுகிறான்)” என்று சொன்னார்கள்.77

4539. حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنِي شَرِيكُ بْنُ أَبِي نَمِرٍ، أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ، وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي عَمْرَةَ الأَنْصَارِيَّ، قَالاَ سَمِعْنَا أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَيْسَ الْمِسْكِينُ الَّذِي تَرُدُّهُ التَّمْرَةُ وَالتَّمْرَتَانِ وَلاَ اللُّقْمَةُ وَلاَ اللُّقْمَتَانِ. إِنَّمَا الْمِسْكِينُ الَّذِي يَتَعَفَّفُ وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ يَعْنِي قَوْلَهُ {لاَ يَسْأَلُونَ النَّاسَ إِلْحَافًا}"
பாடம் : 48
(பொருளீட்ட முடியாதவாறு) அல்லாஹ்வின் வழியில் ஈடுபடுத்தப்பட்ட ஏழைகளுக்கே (தர்மங்கள்) உரியவையாகும். அவர்கள் (பொருளீட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவர்கள். அவர்களது சுய மரியாதையின் காரணத்தால், அறியாதோர் அவர்களைச் செல்வர் கள் என எண்ணுவர். அவர்களின் (எளிமையான) தோற்றத்தைக்கொண்டு அவர்களை (நபியே!) நீர் அறிந்துகொள்ளலாம். அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்கமாட்டார்கள் (எனும் 2:273ஆவது வசனத்தொடர்)
“(தர்மம்) கேட்டு என்னைத் தொந்தரவு செய்தான்; என்னை நச்சரித்தான்” என்று சொல்வதற்கு “அல்ஹஃப அலய்ய' என்று (அரபுகள்) கூறுவர். இச்சொல்லின் வேர்ச்சொல்லே மேற்காணும் வசனத்தின் மூலத்தில் “இல்ஹாஃப்' (வற்புறுத்தல்) என இடம்பெற்றுள்ளது.
(47:37ஆம் வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃபயுஹ்ஃபிகும்” எனும் சொல்லுக்கும் “வற்புறுத்தல்', “நெருக்கடி கொடுத்தல்' என்பதே பொருளாகும்.
4539. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம்பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில், அவன் (தன் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந்துகொள்வான். நீங்கள் விரும்பினால், “அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்கமாட்டார்கள்” எனும் (இந்த 2:273ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4539. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம்பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில், அவன் (தன் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந்துகொள்வான். நீங்கள் விரும்பினால், “அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்கமாட்டார்கள்” எனும் (இந்த 2:273ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4540. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا مُسْلِمٌ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا نَزَلَتِ الآيَاتُ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ فِي الرِّبَا قَرَأَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى النَّاسِ، ثُمَّ حَرَّمَ التِّجَارَةَ فِي الْخَمْرِ.
பாடம் : 49
வட்டியை (வாங்கி) விழுங்குகிறவர் கள் ஷைத்தானின் தீண்டலால் பைத்தியம் பிடித்தவன் எழுவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழமாட்டர். இது ஏனெனில், நிச்சயமாக அவர்கள் “வணிகம் என்பதே வட்டியைப் போன்றதுதானே” எனக் கூறிய தனாலேயாம். அல்லாஹ் வணி கத்தை அனுமதித்தும் வட்டியை விலக்கியும் இருக்கிறான் (எனும் 2:275ஆவது வசனத்தொடர்)
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “அல்மஸ்ஸு' (தீண்டல்) எனும் சொல்லுக்கு “பைத்தியம்' என்பது பொருள்.
4540. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) வட்டி தொடர்பாக அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அவற்றை (பள்ளிவாசலில் வைத்து) ஓதிக்காட்டினார்கள். பிறகு, மது வியாபாரத் தைத் தடை செய்தார்கள்.78

4541. حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، سَمِعْتُ أَبَا الضُّحَى، يُحَدِّثُ عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ لَمَّا أُنْزِلَتِ الآيَاتُ الأَوَاخِرُ مِنْ سُورَةِ الْبَقَرَةِ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَتَلاَهُنَّ فِي الْمَسْجِدِ، فَحَرَّمَ التِّجَارَةَ فِي الْخَمْرِ.
பாடம் : 50
அல்லாஹ் வட்டிக்கு அழிவையும் தான தர்மங்களுக்கு வளர்ச்சியையும் அளிக்கின் றான் (எனும் 2:276ஆவது வசனத்தொடர்)
(அதாவது) வட்டியைப் பயனற்றுப் போகச் செய்துவிடுகின்றான்.
4541. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
“அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டுச் சென்று அவற்றைப் பள்ளிவாசலில் (மக்களுக்கு) ஓதிக்காட்டினார்கள். மேலும், மது வியாபாரத்திற்குத் தடை விதித்தார்கள்.

4542. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا أُنْزِلَتِ الآيَاتُ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ قَرَأَهُنَّ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ، وَحَرَّمَ التِّجَارَةَ فِي الْخَمْرِ.
பாடம் : 51
“(வட்டியில் எஞ்சியுள்ளவற்றையும் நீங்கள் விட்டுவிடவில்லையாயின்) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் நீங்கள் போர் செய்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் (எனும் 2:279ஆவது வசனத்தொடர்)
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “ஃபஃதனூ' எனும் சொல்லுக்கு “அறிந்துகொள்ளுங்கள்' என்று பொருள்.79
4542. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) அருளப்பெற்ற போது அவற்றை நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வைத்து (மக்களுக்கு) ஓதிக்காட்டினார்கள். மேலும், மது வியாபாரத்தைத் தடை செய்தார்கள்.

4543. وَقَالَ لَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، وَالأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا أُنْزِلَتِ الآيَاتُ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَرَأَهُنَّ عَلَيْنَا، ثُمَّ حَرَّمَ التِّجَارَةَ فِي الْخَمْرِ.
பாடம் : 52
(உங்களிடம் கடன் வாங்கியவர் நிதி) நெருக்கடி உள்ளவராக இருந்தால், வசதி வருகின்றவரை எதிர்பார்(த்து பொறுத்திரு)த்தல் வேண்டும். நீங்கள் (தர்மத்தின் பலனை) அறிந்தவர்களாக இருப்பின், தர்ம மாக வழங்கிவிடுவதே மிகவும் மேலானதாகும் (எனும் 2:280ஆவது இறைவசனம்)
4543. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று அவற்றை எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள். பிறகு மதுபான வியாபாரத்தைத் தடை செய்தார்கள்.80
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4543. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று அவற்றை எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள். பிறகு மதுபான வியாபாரத்தைத் தடை செய்தார்கள்.80
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4544. حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ آخِرُ آيَةٍ نَزَلَتْ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم آيَةُ الرِّبَا.
பாடம் : 53
ஒருநாளைப் பற்றி அஞ்சுங்கள். அந்நாளில் அல்லாஹ்விடமே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். ஒவ்வொரு மனிதரும் அவரவர் செய்தவற்றுக்கு நிறை வாக(ப் பிரதிபலன்) அளிக்கப் படுவார். இன்னும் அவர்கள் (எந்த வகையிலும்) அநீதி இழைக்கப்பட மாட்டார்கள் (எனும் 2:281ஆவது இறைவசனம்)
4544. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற இறுதி வசனம் வட்டியைக் குறித்த (இந்த 2:281ஆவது) வசனம் ஆகும்.81
அத்தியாயம் : 65
4544. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற இறுதி வசனம் வட்டியைக் குறித்த (இந்த 2:281ஆவது) வசனம் ஆகும்.81
அத்தியாயம் : 65
4545. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مِسْكِينٌ، عَنْ شُعْبَةَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ مَرْوَانَ الأَصْفَرِ، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ ابْنُ عُمَرَ أَنَّهَا قَدْ نُسِخَتْ {وَإِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ} الآيَةَ.
பாடம் : 54
உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக்கொண் டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்வான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களை வேதனை செய்வான். இன்னும் அல்லாஹ் அனைத்துப் பொருள்கள்மீதும் ஆற்றல் மிக்கவன் ஆவான் (எனும் 2:284ஆவது வசனத்தொடர்)
4545. மர்வான் அல்அஸ்ஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் - அவர் இப்னு உமர் (ரலி) அவர்கள்தான் - “உங்கள் மனத்திலுள்ள வற்றை நீங்கள் வெளியிட்டாலும், அல்லது அவற்றை மறைத்துக்கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களி டம் விசாரணை செய்வான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களை வேதனை செய்வான். இன்னும் அல்லாஹ் அனைத்துப் பொருள்கள்மீதும் ஆற்றல் மிக்கவன் ஆவான்” எனும் இந்த (2:284ஆவது) இறைவசன(த்தின் சட்ட)ம் மாற்றப்பட்டுவிட்டது என்று சொன்னார்கள்.82

4546. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا رَوْحٌ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ مَرْوَانَ الأَصْفَرِ، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ـ قَالَ أَحْسِبُهُ ابْنَ عُمَرَ ـ {إِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ} قَالَ نَسَخَتْهَا الآيَةُ الَّتِي بَعْدَهَا.
பாடம் : 55
(மனிதர்களே! நம்முடைய) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்ற (வேதத்)தை நம்புகின்றார். இறைநம்பிக்கையாளர்களும் (நம்புகின்றனர்). (இவர்கள்) யாவரும், அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். (மேலும் கூறுகின்றனர்:) அவனுடைய தூதர்கள் எவருக்கிடையிலும் (சிலரை ஏற்றுச் சிலரை மறுத்து) நாங்கள் வேற்றுமை காட்டமாட்டோம். “எங்கள் இறைவா! நாங்கள் செவியுற்றோம்; வழிப்பட்டோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகிறோம். இன்னும் உன்னிடமே (எங்களின்) மீட்சியும் உள்ளது” என்றும் வேண்டுகிறார்கள் (எனும் 2:285ஆவது இறைவசனம்)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(2:286ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “இஸ்ரன்' (பளு, சுமை) எனும் சொல்லுக்கு “பொறுப்பு' என்பது பொருள்.
இவ்வசனத்தில், “உன்னிடம் மன்னிப் புக் கோருகிறோம்” என்பதைச் சுட்ட, “ஃகுஃப்ரானக” எனும் சொற்றொடர் ஆளப்பட்டுள்ளது. இதற்கு, “இறைவா! எங்களை மன்னிப்பாயாக” என்பது பொருளாகும்.
4546. மர்வான் அல்அஸ்ஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் ஒருவர் -அவர் இப்னு உமர் (ரலி) அவர்கள்தான் என்று எண்ணுகிறேன்- “உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அல்லது அவற்றை மறைத்துக்கொண்டாலும், அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்வான்” எனும் இந்த (2:284ஆவது) இறைவசனத்(தின் சட்டத்)தை இதற்குப் பின்னுள்ள (“அல்லாஹ், எந்த ஆன்மாவுக்கும் அதன் சக்திக்கு மீறிய பொறுப்புகளைச் சுமத்துவதில்லை” எனும் 2:286ஆவது) இறைவசனம் மாற்றிவிட்டது” என்று கூறினார்கள்.83

4547. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ التُّسْتَرِيُّ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ تَلاَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم هَذِهِ الآيَةَ {هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ} إِلَى قَوْلِهِ {أُولُو الأَلْبَابِ} قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ، فَأُولَئِكَ الَّذِينَ سَمَّى اللَّهُ، فَاحْذَرُوهُمْ ".
பாடம்:
3. “ஆலு இம்ரான்' அத்தியாயம்1
(3:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “துக்காத்தன்' எனும் (வேர்ச்)சொல்லும் (மற்றொரு வேர்ச்சொல்லான) “தகிய்யத்தன்' எனும் சொல்லும் (“தற்காத்துக்கொள்ளல்' எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.
(3:117ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஸிர்ருன்' எனும் சொல்லுக்கு “கடுங்குளிர்' என்பது பொருள்.
(3:103ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஷஃபா ஹுஃப்ரத்' (நெருப்புக் கிடங்கின் விளிம்பு) எனும் செற்றொடர் “ஷஃபா அர்ரக்கியத்' (கிணற்றின் விளிம்பு) போன்றதாகும். “ஷஃபா' என்பதற்கு “விளிம்பு' என்பது பொருள்.
(3:121ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “துபவ்விஉ(ல் முஃமினீன மகாஇத லில்கிதால்)' (நம்பிக்கையாளர்களை உரிய இடங்களில் நிறுத்தும் பொருட்டு) என்பதற்கு “நீங்கள் களம் அமைக்கும் பொருட்டு' என்பது பொருள்.
(3:125ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “அல்முசவ்விமீன்' (இனங்காட்டக்கூடிய) எனும் சொல்லின் ஒருமையான) “அல்முசவ்விம்' (அல்லது “அல்முசவ்வம்) எனும் சொல்லுக்கு ஒரு தோற்றக் குறியால், அல்லது கம்பளியால், அல்லது அதிலுள்ள ஏதேனும் ஒன்றால் அடையாளம் உள்ளது என்று பொருள்.
(3:146ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ரிப்பிய்யூன்' (இறைபக்தர்கள்) எனும் சொல் பன்மையாகும். அதன் ஒருமை “ரிப்பிய்யுன்' என்பதாகும்.
(3:152ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஃத் தஹுஸ்ஸூனஹும்' எனும் சொற்றொடருக்கு “நீங்கள் அவர்களை (பகைவர்களை) வெட்டி வீழ்த்திக்கொண்டிருந்தபோது...” என்று பொருள்.
(3:156ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃகுஸ்ஸின்' (போர் புரிபவர்கள்) என்பதன் ஒருமை “ஃகாஸின்' என்பதாகும்.
(3:181ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “சநக்த்துபு' (நாம் பதிவு செய்வோம்) எனும் சொல்லுக்கு “நாம் பாதுகாப்போம்' என்று பொருள்.
(3:198ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “நுஸுல்' எனும் சொல்லுக்கு “நற்பலன்' என்பது பொருள். அல்லாஹ்விடமிருந்து கிடைத்த “விருந்தோம்பல்' என்றும் பொருள் கொள்ளலாம். இது “அன்ஸல்த்துஹு' (அவனை நான் உபசரித்தேன்) என்பதைப் போன்றதாகும்.
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(3:125ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “முசவ்விமீன்' எனும் சொல் போன்ற) “அல்கைலுல் முசவ்வமா' என்பதற்கு “நிறையழகுக் குதிரைகள்' என்று பொருள்.
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(3:39ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹஸூர்' (பற்றற்றவர்) எனும் சொல்லுக்கு “பெண்களிடம் செல்லாதவர்' என்று பொருள்.
இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(3:125ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மின் ஃபவ்ரிஹிம்' (இதே நேரத்தில் -திடீர்த் தாக்குதல் தொடுக்க- உங்களிடம் அவர்கள் வந்தாலும்) எனும் சொல்லுக்கு, “பத்ர் நாளில் அவர்கள் கோபத்துடன் உங்களிடம் வந்தாலும்' என்று பொருள்.
(“உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை நீ வெளியாக்குகிறாய். உயிருள்ள திóருந்து உயிரற்றதையும் நீ வெளியாக்குகிறாய்' எனும் 3:27ஆவது வசனத்தின் விளக்கவுரையில்) முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள், “இறைவன் (உயிரற்றதிóருந்து) உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான். விந்து உயிரற்றதாக (உடóóருந்து) வெளியேறுகிறது; ஆனால், அதிலிருந்து உயிரினம் வெளிப்படுகிறது” என்று கூறினார்கள்.2
(3:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்இப்கார்' எனும் சொல்லுக்கு “அதிகாலை' என்பது பொருள். “அல்அஷிய்யு' என்பதற்குச் “சூரியன் மறையப்போகும் நேரம்' என்று பொருள்.
பாடம் : 1
இ(ந்த வேதத்)தில் தெளிவான கருத்துள்ள வசனங்களும் இருக் கின்றன (எனும் 3:7ஆவது வசனத் தொடர்)
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(தெளிவான கருத்துள்ள வசனங் கள் என்பது) “ஹலால், ஹராம்' (“அனுமதிக்கப்பட்டவை, தடை செய்யப் பட்டவை' பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்) ஆகும்.
(3:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ உகரு முதாஷாபிஹாத்” (ஒன்றையொன்று ஒத்த வேறு வசனங்களும் உள்ளன) எனும் தொடருக்கு “ஒன்றையொன்று உறுதிப்படுத்துகின்ற வசனங்கள்” என்பது பொருள்.
எடுத்துக்காட்டாக, “இன்னும் துன்மார்க்கர்களைத் தவிர (வேறு எவரையும்) அவன் வழிதவறச் செய்வதில்லை” என்று (ஒரு வசனத்தில் -2:26) அல்லாஹ் கூறுகின்றான். (மற்றொரு வசனத்தில்-10:100) “சிந்தித்துணராதவர்கள்மீதே அவன் பாவச் சுமையை வைக்கின்றான்” என்று அல்லாஹ் கூறுகின்றான்.
(இன்னுமொரு வசனத்தில்-47:17) “எவர் நல்வழி பெற்றிருக்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் நல்வழியை இன்னும் அதிகமாக அளிக்கின்றான்” என்று அல்லாஹ் கூறுகின்றான். (இவ்வசனங்களில் ஒன்று மற்றொன்றின் கருத்தை வலியுறுத்துகின்றன.)3
(3:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஸைஃக்' (கோணல்) எனும் சொல்லுக்கு “சந்தேகம்' என்பது பொருள்.
(இதே வசனத்திலுள்ள) “இப்திஃகாஅல் ஃபித்னத்' எனும் சொல்லுக்குக் “குழப்பம் செய்ய விரும்புதல்' என்று பொருள்.
(இதே வசனத்திலுள்ள) “அர்ராஸிகூன ஃபில்இல்மி' எனும் தொடரின் பொரு ளாவது: அறிவில் முதிர்ந்தவர்களும் அவற்றின் விளக்கத்தை அறிவார்கள். “இவற்றை நாங்கள் நம்பினோம்' என்றும் கூறுவார்கள்.4
4547. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(நபியே!) அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உமக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய வேறுசில (முத்தஷாபிஹாத்) வசனங்களும் (இதில்) உள்ளன. யாருடைய இதயங்களில் “கோணல்' உள்ளதோ அவர்கள் குழப்பம் செய்ய விரும்பியதாலும், (சுய) விளக்கம் அளிக்க நாடியதாலும் பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய (வசனத்)தையே பின்தொடர்கின்றனர்.
ஆனால், அவற்றின் (உண்மை) விளக்கத்தை அல்லாஹ்வையன்றி வேறெவரும் அறியார். அறிவில் முதிர்ந்தவர்களோ, “இவற்றை நாங்கள் நம்பினோம். (இவ்விரு வகையான வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே வந்துள்ளன' என்று கூறுகின்றனர். (எதையும்) அறிவாளிகளன்றி எவரும் (சரியாக) உணர்வதில்லை” எனும் (3:7ஆவது) வசனத்தை ஓதிவிட்டு, “பல பொருள்களுக்கு இடமளிக்கின்ற வசனங்களைத் தேடித் திரிபவர்களை நீங்கள் பார்த்தால் அவர்கள்தான் (இந்த வசனத்தில்) அல்லாஹ்வால் குறிப்பிடப்பட்டவர்கள் (என்பதைப் புரிந்துகொண்டு) அவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்” என்று சொன்னார்கள்.5

4548. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَا مِنْ مَوْلُودٍ يُولَدُ إِلاَّ وَالشَّيْطَانُ يَمَسُّهُ حِينَ يُولَدُ، فَيَسْتَهِلُّ صَارِخًا مِنْ مَسِّ الشَّيْطَانِ إِيَّاهُ، إِلاَّ مَرْيَمَ وَابْنَهَا ". ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ {وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ }
பாடம் : 2
இன்னும் நான் இந்தக் குழந்தை யையும் இதன் வழித்தோன்றல் களையும் சபிக்கப்பட்ட ஷைத் தானிடமிருந்து காக்குமாறு உன்னி டம் வேண்டுகிறேன் (என இறை வனை வேண்டினார் இம்ரானின் துணைவியார்- எனும் 3:36ஆவது வசனத்தொடர்)6
4548. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“(புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும்போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தான் தீண்டுவதால் அக்குழந்தை உடனே கூக்குரலெழுப்பும். (ஆனால்,) மர்யமையும் அவருடைய புதல்வரையும் தவிர!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நீங்கள் விரும்பினால், “இந்தக் குழந்தையையும் இதன் வழித்தோன்றல்களையும் சபிக்கப்பட்ட ஷைத்தானிட மிருந்து காக்குமாறு உன்னிடம் நான் வேண்டுகிறேன் (என இம்ரானின் துணைவியார் இறைவனை வேண்டினார்)” எனும் (3:36ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.7

4549. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ حَلَفَ يَمِينَ صَبْرٍ لِيَقْتَطِعَ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ ". فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً أُولَئِكَ لاَ خَلاَقَ لَهُمْ فِي الآخِرَةِ} إِلَى آخِرِ الآيَةِ. قَالَ فَدَخَلَ الأَشْعَثُ بْنُ قَيْسٍ وَقَالَ مَا يُحَدِّثُكُمْ أَبُو عَبْدِ الرَّحْمَنِ قُلْنَا كَذَا وَكَذَا. قَالَ فِيَّ أُنْزِلَتْ كَانَتْ لِي بِئْرٌ فِي أَرْضِ ابْنِ عَمٍّ لِي قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " بَيِّنَتُكَ أَوْ يَمِينُهُ " فَقُلْتُ إِذًا يَحْلِفَ يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنْ حَلَفَ عَلَى يَمِينِ صَبْرٍ يَقْتَطِعُ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ وَهْوَ فِيهَا فَاجِرٌ، لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانٌ ".
பாடம் : 3
அல்லாஹ்வின் உடன்படிக்கைக் கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக யார் அற்ப விலையைப் பெறுகிறார்களோ அத்தகை யோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. மேலும், இறுதி நாளில் அவர்களிடம் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களைப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவு மாட்டான். இன்னும் அவர்களுக்கு வதைக்கும் வேதனை உண்டு (எனும் 3:77ஆவது இறைவசனம்)
எந்த நற்பேறும் (கலாக்) இல்லை. அதாவது எந்த நன்மையும் இல்லை.
(இவ்வசனத்தில் “ஃபஈல்' எனும் வாய் பாட்டில் அமைந்த “துன்பம் தரும்' என்ற பொருளைக் குறிக்கும்) “அலீம்' எனும் சொல்லுக்கு “முஃப்இல்' வாய்பாட்டில் அமைந்த “முஃலிம்' என்பதன் பொருளாகும். (அதாவது) “துன்புறுத்துகின்ற' (என்பது பொருள்.)
4549. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தை (அநியாயமாக)ப் பறித்துக்கொள்வதற்காக ஒரு பிரமாண (வாக்குமூல)த்தின்போது துணிந்து பொய்ச் சத்தியம் செய்பவர், தம்மீது கோபம்கொண்டிருக்கும் நிலையில்தான் அல்லாஹ்வை (மறுமையில்) சந்திப்பார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அ(ந்தக் கருத்)தை உறுதிப்படுத்தும் விதத்தில் அல்லாஹ், “அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக யார் அற்ப விலையைப் பெறுகிறார்களோ அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதி நாளில் அவர்களிடம் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களைப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான். இன்னும் அவர்களுக்கு வதைக்கும் வேதனை உண்டு” எனும் (3:77ஆவது) வசனத்தை அருளினான் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அப்பால், அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் (எங்களிடம்) வந்து, “அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்) உங்களிடம் என்ன சொல்கிறார்?” என்று கேட்க, நாங்கள், “இப்படி இப்படிச் சொன்னார்கள்” என்று பதிலளித்தோம்.
(அதற்கு) அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவர் சொன்னது உண்மைதான்.) என் தொடர்பாகத்தான் அந்த (3:77ஆவது) வசனம் அருளப்பெற்றது. என் தந்தையின் சகோதரர் மகன் ஒருவரின் நிலத்தில் எனது கிணறு (ஒன்று) இருந்தது. (அந்தக் கிணறு தொடர்பாக எனக்கும் யூதர் ஒருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் எங்கள் வழக்கைக் கொண்டுசென்றோம். நபி (ஸல்) அவர்கள், “ஒன்று உன் சாட்சி; அல்லது (பிரதிவாதியான) அவருடைய சத்தியம் (இவ்வழக்கில் தீர்ப்பளிக்கத் தேவைப்படுகிறது.)” என்று சொன்னார்கள்.
உடனே நான், “அப்படியென்றால், (யூதரான) இவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்வாரே! அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எவர் ஒரு பிரமாண (வாக்குமூல)த்தின்போது, அதன் மூலம் ஒரு முஸ்லிமான மனிதரின் சொத்தை (அநியாயமாக)ப் பறித்துக்கொள்வதற்காகத் திட்டமிட்டுப் பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர்மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில்தான் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்” என்று சொன்னார்கள்.8