4475. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا قَالَ الإِمَامُ {غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ} فَقُولُوا آمِينَ. فَمَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ".
பாடம் : 2
“(அவர்கள் உனது) கோபத்திற்குள் ளானவர்களும் அல்லர்; வழிதவறிச் சென்றவர்களும் அல்லர்” (எனும் 1:7ஆவது இறைவசனம்)9
4475. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) இமாம், “ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள்ளால்லீன்” என்று ஓதியவுடன் நீங்கள், “ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்)” என்று சொல்லுங் கள். ஏனெனில், எவர் “ஆமீன்' கூறு(ம் நேரமா)வது வானவர்கள் “ஆமீன்' கூறுகின்ற (நேரத்)துடன் ஒத்தமைந்துவிடுகின்றதோ அவருக்கு, அதற்குமுன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.10
அத்தியாயம் : 65

4476. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " يَجْتَمِعُ الْمُؤْمِنُونَ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُونَ لَوِ اسْتَشْفَعْنَا إِلَى رَبِّنَا فَيَأْتُونَ آدَمَ فَيَقُولُونَ أَنْتَ أَبُو النَّاسِ، خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ وَأَسْجَدَ لَكَ مَلاَئِكَتَهُ، وَعَلَّمَكَ أَسْمَاءَ كُلِّ شَىْءٍ، فَاشْفَعْ لَنَا عِنْدَ رَبِّكَ حَتَّى يُرِيحَنَا مِنْ مَكَانِنَا هَذَا. فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ ـ وَيَذْكُرُ ذَنْبَهُ فَيَسْتَحِي ـ ائْتُوا نُوحًا فَإِنَّهُ أَوَّلُ رَسُولٍ بَعَثَهُ اللَّهُ إِلَى أَهْلِ الأَرْضِ. فَيَأْتُونَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ. وَيَذْكُرُ سُؤَالَهُ رَبَّهُ مَا لَيْسَ لَهُ بِهِ عِلْمٌ فَيَسْتَحِي، فَيَقُولُ ائْتُوا خَلِيلَ الرَّحْمَنِ. فَيَأْتُونَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ، ائْتُوا مُوسَى عَبْدًا كَلَّمَهُ اللَّهُ وَأَعْطَاهُ التَّوْرَاةَ. فَيَأْتُونَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ. وَيَذْكُرُ قَتْلَ النَّفْسِ بِغَيْرِ نَفْسٍ فَيَسْتَحِي مِنْ رَبِّهِ فَيَقُولُ ائْتُوا عِيسَى عَبْدَ اللَّهِ وَرَسُولَهُ، وَكَلِمَةَ اللَّهِ وَرُوحَهُ. فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ، ائْتُوا مُحَمَّدًا صلى الله عليه وسلم عَبْدًا غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ. فَيَأْتُونِي فَأَنْطَلِقُ حَتَّى أَسْتَأْذِنَ عَلَى رَبِّي فَيُؤْذَنُ {لِي} فَإِذَا رَأَيْتُ رَبِّي وَقَعْتُ سَاجِدًا، فَيَدَعُنِي مَا شَاءَ اللَّهُ ثُمَّ يُقَالُ ارْفَعْ رَأْسَكَ، وَسَلْ تُعْطَهْ، وَقُلْ يُسْمَعْ، وَاشْفَعْ تُشَفَّعْ. فَأَرْفَعُ رَأْسِي فَأَحْمَدُهُ بِتَحْمِيدٍ يُعَلِّمُنِيهِ، ثُمَّ أَشْفَعُ، فَيَحُدُّ لِي حَدًّا، فَأُدْخِلُهُمُ الْجَنَّةَ، ثُمَّ أَعُودُ إِلَيْهِ، فَإِذَا رَأَيْتُ رَبِّي ـ مِثْلَهُ ـ ثُمَّ أَشْفَعُ، فَيَحُدُّ لِي حَدًّا، فَأُدْخِلُهُمُ الْجَنَّةَ {ثُمَّ أَعُودُ الثَّالِثَةَ} ثُمَّ أَعُودُ الرَّابِعَةَ فَأَقُولُ مَا بَقِيَ فِي النَّارِ إِلاَّ مَنْ حَبَسَهُ الْقُرْآنُ وَوَجَبَ عَلَيْهِ الْخُلُودُ ". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ " إِلاَّ مَنْ حَبَسَهُ الْقُرْآنُ ". يَعْنِي قَوْلَ اللَّهِ تَعَالَى {خَالِدِينَ فِيهَا}.
பாடம் : 1
அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....
“அவன் ஆதமுக்குப் பெயர்கள் அனைத்தையும் கற்றுக்கொடுத் தான்” (எனும் 2:31ஆவது வசனத் தொடர்)2
4476. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர் கள் ஒன்றுகூடி, “(நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றா யிருக்கும்!)” என்று (தங்களிடையே) பேசிக்கொள்வார்கள்.
பிறகு, அவர்கள் (ஆதிமனிதர்) ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, “நீங்கள் மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத்தந்தான். எனவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திóருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந் துரை செய்யுங்கள்” என்று சொல்வார்கள்.
அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை” என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப்பார்த்து வெட்கப்படுவார்கள்.3 “நீங்கள் (நபி) நூஹ் அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர், (எனக்குப்பின்) பூமியிலுள்ளவர் களுக்கு அல்லாஹ் அனுப்பிவைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவர் ஆவார்” என்று சொல்வார்கள்.
உடனே இறைநம்பிக்கையாளர்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவரும், “(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை” என்று கூறிவிட்டு, தாம் அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனிடத்தில் கேட்டதை நினைத்து வெட்கப்படுவார்கள்.4
பிறகு, “நீங்கள் கருணையாளனின் உற்ற நண்பரிடம் (இப்ராஹீம் (அலை) அவர்களிடம்) செல்லுங்கள்” என்று சொல்வார்கள். உடனே, இறைநம்பிக்கை யாளர்கள் (இப்ராஹீம் -அலை) அவர்களி டம் செல்வார்கள். அப்போது அவர்களும், “(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. அல்லாஹ் உரையாடிய, தவ்ராத் (வேதத்)தையும் அளித்த அடி யாரான (நபி) மூசாவிடம் நீங்கள் செல்லுங்கள்” என்று சொல்வார்கள்.
உடனே அவர்கள் மூசா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், “(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை” என்று கூறிவிட்டு, (தம் வாழ்நாளில் ஒருமுறை) எந்த உயிருக்கும் ஈடாக இல்லாமல் ஒரு (மனித) உயிரைக் கொன்றதை நினைவு கூர்ந்து தம் இறைவனுக்குமுன் வெட்கப்படுவார்கள்.5
பிறகு, “நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈசாவிடம் செல்லுங்கள்” என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், “(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்” என்று சொல்வார்கள்.
உடனே அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், “என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான் விரும்பிய வரையில் (அப்படியே) என்னை அவன் விட்டுவிடுவான். பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து) “உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று சொல்லப்படும். அப்போது நான் எனது தலையை உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான்.
பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக் காணும்போது நான் முன்பு போலவே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன். பிறகு மூன்றாம் முறையாக (இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன்.
(இறுதியாக) நான், “குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகி விட்டவர்(களான இறைமறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை” என்று சொல்வேன்.6
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்:
உயர்ந்தோனான அல்லாஹ் (திருக்குர் ஆனில் யாரைக் குறித்து), “நரகத்தில் இவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்' என்று குறிப்பிட்டுள்ளானோ அவர்களையே “குர்ஆன் தடுத்துவிட்டவர்கள்' எனும் சொற்றொடர் குறிக்கிறது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

4477. حَدَّثَنِي عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَىُّ الذَّنْبِ أَعْظَمُ عِنْدَ اللَّهِ قَالَ " أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهْوَ خَلَقَكَ ". قُلْتُ إِنَّ ذَلِكَ لَعَظِيمٌ، قُلْتُ ثُمَّ أَىُّ قَالَ " وَأَنْ تَقْتُلَ وَلَدَكَ تَخَافُ أَنْ يَطْعَمَ مَعَكَ ". قُلْتُ ثُمَّ أَىُّ قَالَ " أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ ".
பாடம் : 2
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:7
(2:14ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “இலா ஷயாத்தீனிஹிம்' (தங்களுடைய ஷைத்தான்களை) எனும் சொல்லுக்கு, “நயவஞ்சகர்களும் இணை வைப்பாளர்களுமான தங்களுடைய தோழர்கள்' என்பது பொருள்.
(2:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முஹீத்துன் பில்காஃபிரீன்' (இந்த இறைமறுப்பாளர்களை அல்லாஹ் சூழ்ந்து கொண்டிருக்கிறான்) எனும் சொற் றொடருக்கு, “இறைமறுப்பாளர்களான அவர்களை அல்லாஹ் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறான். (அவர்களால் தப்ப முடியாது)” என்பது பொருள்.
(2:138ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஸிப்ஃகத்' (வர்ணம்) எனும் சொல்லுக்கு “தீன்' (மார்க்கம்) என்பது பொருள்.
(2:45ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அலல் காஷியீன்' (“உள்ளச்சமுடையோர் மீது') எனும் சொற்றொடருக்கு “உண்மையான இறைநம்பிக்கையாளர்கள்மீது” என்பது பொருள்.
(2:63ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “பி குவ்வத்தின்' (உறுதியாக) எனும் சொல்லுக்கு, “வேதத்திலுள்ளபடி செயல்படுங்கள்” என்பது பொருள்.
அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:8
(2:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மரள்' (நோய்) எனும் சொல்லுக்கு “சந்தேகம்' என்பது பொருள்.
(2:66ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வமா கல்ஃபஹா' (பின்னால் உள்ளவர்களுக்கு) எனும் சொல்லுக்கு, “அவர்களுக்குப் பின்னால் வருபவர்களுக்கும் (படிப்பினையாக நாம் ஆக்கினோம்)' என்பது பொருள்.
(2:71ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லா ஷியத்த' (வடு இல்லாதது) எனும் சொல்லுக்கு, “வெண்மையில்லாதது' என்பது பொருள்.
அபுல்ஆலியா (ரஹ்) அல்லாதோர் கூறுகிறார்கள்:
(2:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யசூமூனக்கும்' (கொடிய வேதனையில் ஆழ்த்திக்கொண்டிருந்தார்கள்) எனும் சொல்லுக்கு, “உங்களை ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்தனர்' (யூலூனகும்) என்று பொருள். (இப்பொருளின் மூலச் சொல்லான) “அல்வலாயா' எனும் சொல், “அல்வலாஉ' என்பதன் வேர்ச்சொல்லாகும். இதற்கு “இறையாண்மை' என்பது பொருள். “அல்விலாயா' என்று அதை வாசித்தால், அதற்கு “ஆட்சியதிகாரம்' என்று பொருள்.
(2:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃபூம்' (கோதுமை) எனும் சொல், உண்ணப் படுகின்ற தானியங்கள் அனைத்தையுமே குறிக்கும்” என்று சிலர் கூறுகின்றனர்.
கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.9
(2:90ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃப பாஊ' (இறைகோபத்துக்கு ஆளாகி விட்டார்கள்) எனும் சொல்லுக்கு, “அவர்கள் (இறைகோபத்துடன்) திரும்பினார்கள்' என்று பொருள்.
கத்தாதா (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகின்றனர்:
(2:89ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யஸ்த்தஃப்திஹூன' (வெற்றியளிக்கும் படி வேண்டினர்) எனும் சொல்லுக்கு, “உதவி தேடினர்' என்பது பொருள்.
(2:102ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “வாங்கினார்கள்' என்ற சொற்பொருள் கொண்ட) “ஷரவ்' எனும் சொல்லுக்கு, “விற்றார்கள்' என்பது பொருள்.
(2:104ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ராஇனா' எனும் சொல், “ருஊனத்' (மடமை) எனும் சொல்லிலிருந்து பிறந்ததாகும். அவர்கள் ஒரு மனிதனை மடையனாக்க விரும்பினால் அவனை நோக்கி, “ராஇனா' (மடையனே) என்று சொல்வார்கள்.
(2:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “போதாது' எனும் சொற்பொருள் கொண்ட) “லா தஜ்ஸீ' எனும் சொல்லுக்கு “பயன ளிக்க முடியாது' என்பது பொருள்.
(2:168ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “அடிச்சுவடுகள்' எனும் சொற்பொருள் கொண்ட) “குத்வாத்' எனும் சொல், “கத்வ்' எனும் (மூலச்) சொல்லிலிருந்து பிறந்ததாகும். இதற்கு “கால் சுவடுகள்' என்பது பொருள்.
(2:124ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “கஷ்டம் கொடுத்தான்' எனும் சொற்பொருள் கொண்ட) “இப்த்தலா' எனும் சொல்லுக்கு “சோதித்தான்' என்பது பொருள்.
பாடம் : 3
“ஆகவே, நீங்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு இணைகளைக் கற்பிக்காதீர்கள்” எனும் (2:22ஆவது) வசனத்தொடர்
4477. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது” என்று சொன்னார்கள்.
நான், “நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான்” என்று சொல்லிவிட்டு, “பிறகு எது?” என்று கேட்டேன். “உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீர் கொல்வது” என்று சொன்னார்கள். நான், “பிறகு எது?” என்று கேட்க, அவர்கள், “உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது” என்று சொன்னார்கள்.10

4478. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْكَمْأَةُ مِنَ الْمَنِّ، وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ ".
பாடம் : 4
“மேலும், நாம் உங்கள்மீது மேகங்களை நிழலிடச் செய்தோம். உங்களுக்கு மன்னு, சல்வா (எனும் உணவுகளை) இறக்கி வைத்தோம். “நாம் உங்களுக்கு உணவாக அருளியுள்ள நல்ல பொருள்களைப் புசியுங்கள்' (என்றும் உங்களிடம் கூறினோம். இக்கட்டளைகளை மீறியதால்) எமக்கொன்றும் அவர்கள் அநீதி இழைத்துவிடவில்லை. மாறாக, தமக்குத் தாமே அவர்கள் தீங்கி ழைத்துக்கொண்டார்கள்” எனும் (2:57ஆவது) இறைவசனம்
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
“மன்னு' என்பது வேலம் பசை ஆகும். “சல்வா' என்பது பறவை ஆகும்.11
4478. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் (தானாக வளர்வதில்) “மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.12
இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4479. حَدَّثَنِي مُحَمَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنِ ابْنِ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " قِيلَ لِبَنِي إِسْرَائِيلَ {ادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ} فَدَخَلُوا يَزْحَفُونَ عَلَى أَسْتَاهِهِمْ، فَبَدَّلُوا وَقَالُوا حِطَّةٌ، حَبَّةٌ فِي شَعَرَةٍ ".
பாடம் : 5
மேலும், “(அங்கிருக்கும்) இந்த ஊருக்குள் நுழையுங்கள். பிறகு அங்கு (கிடைப்பவற்றை) நீங்கள் விரும்பியவாறு தாராளமாகப் புசியுங்கள். (ஊருக்குள் நுழையும் போது) அதன் தலைவாயில் வழியாகப் பணிவாக நுழையுங்கள். “மன்னிப்பாயாக!' என்று கூறுங்கள். உங்கள் குற்றங்களை உங்களுக்கு நாம் மன்னித்துவிடுவோம். மேலும், நல்லவர்களுக்கு அதிகமாக வழங்கு வோம்” என நாம் கூறியதையும் எண்ணிப்பாருங்கள் (எனும் 2:58 ஆவது இறைவசனம்)
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “ரஃகதன்' (தாராளமாக) எனும் சொல்லுக்கு “விசாலமாகவும் அதிகமாகவும்' என்று பொருள்.
4479. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல்களுக்கு, “(ஊருக்குள் நுழையும்போது) அதன் தலைவாயிலில் பணிவாக நுழையுங்கள். “மன்னிப்பாயாக!' (ஹித்தத்துன்) என்று கூறுங்கள்” (2:58) எனக் கூறப்பட்டது. ஆனால், அவர்கள் தங்கள் புட்டங்களால் தவழ்ந்து சென்றபடி (நகருக்குள்) நுழைந்தார்கள். (கட்டளையிடப்பட்டதை) அவர்கள் மாற்றி, “ஹித்தத்துன்; ஹப்பத்துன் ஃபீ ஷஅரத்தின் (இறைவா! மன்னிப்பாயாக! தொலி நீக்கப்படாத ஒரு கோதுமைக்குள் ஒரு தானிய வித்து)” எஎன்று (பரிகாசமாகச்) சொன்னார்கள்.13
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4480. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ بَكْرٍ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، قَالَ سَمِعَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ، بِقُدُومِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ فِي أَرْضٍ يَخْتَرِفُ، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي سَائِلُكَ عَنْ ثَلاَثٍ لاَ يَعْلَمُهُنَّ إِلاَّ نَبِيٌّ فَمَا أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ وَمَا أَوَّلُ طَعَامِ أَهْلِ الْجَنَّةِ وَمَا يَنْزِعُ الْوَلَدُ إِلَى أَبِيهِ أَوْ إِلَى أُمِّهِ قَالَ " أَخْبَرَنِي بِهِنَّ جِبْرِيلُ آنِفًا ". قَالَ جِبْرِيلُ قَالَ " نَعَمْ ". قَالَ ذَاكَ عَدُوُّ الْيَهُودِ مِنَ الْمَلاَئِكَةِ. فَقَرَأَ هَذِهِ الآيَةَ {مَنْ كَانَ عَدُوًّا لِجِبْرِيلَ فَإِنَّهُ نَزَّلَهُ عَلَى قَلْبِكَ} أَمَّا أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ فَنَارٌ تَحْشُرُ النَّاسَ مِنَ الْمَشْرِقِ إِلَى الْمَغْرِبِ، وَأَمَّا أَوَّلُ طَعَامِ أَهْلِ الْجَنَّةِ فَزِيَادَةُ كَبِدِ حُوتٍ، وَإِذَا سَبَقَ مَاءُ الرَّجُلِ مَاءَ الْمَرْأَةِ نَزَعَ الْوَلَدَ، وَإِذَا سَبَقَ مَاءُ الْمَرْأَةِ نَزَعَتْ ". قَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ. يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْيَهُودَ قَوْمٌ بُهُتٌ، وَإِنَّهُمْ إِنْ يَعْلَمُوا بِإِسْلاَمِي قَبْلَ أَنْ تَسْأَلَهُمْ يَبْهَتُونِي. فَجَاءَتِ الْيَهُودُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَىُّ رَجُلٍ عَبْدُ اللَّهِ فِيكُمْ ". قَالُوا خَيْرُنَا وَابْنُ خَيْرِنَا، وَسَيِّدُنَا وَابْنُ سَيِّدِنَا. قَالَ " أَرَأَيْتُمْ إِنْ أَسْلَمَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ ". فَقَالُوا أَعَاذَهُ اللَّهُ مِنْ ذَلِكَ. فَخَرَجَ عَبْدُ اللَّهِ فَقَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ. فَقَالُوا شَرُّنَا وَابْنُ شَرِّنَا. وَانْتَقَصُوهُ. قَالَ فَهَذَا الَّذِي كُنْتُ أَخَافُ يَا رَسُولَ اللَّهِ.
பாடம் : 6
“(நபியே!) நீர் கூறுவீராக: எவர் ஜிப்ரீலுக்குப் பகைவரோ (அவர் அல்லாஹ்வுக்கும் பகைவரே). ஏனெனில், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் ஆணைக்கிணங்கவே இ(வ்வேதத்)தை உமது இதயத் தில் இறக்கிவைத்தார். (இவ்வேதம்) தனக்கு முன்னிருந்த வேதங்களை உண்மைப்படுத்துவதுடன், இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு நல்வழியாகவும் நற்செய்தியாகவும் விளங்குகிறது” எனும் (2:97ஆவது) இறைவசனம்
இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.14
(ஜிப்ரீல், மீக்காயில், இஸ்ராஃபீல் ஆகிய வானவர்களின் பெயர்களில் தொடக்கத்திலுள்ள) ஜப்ர், மீக், சராஃப் ஆகியன “அடிமை' எனும் பொருளுடையவை. இறுதியில் உள்ள “ஈல்' எனும் சொல்லுக்கு “அல்லாஹ்' என்பது பொருள். (அதாவது “அல்லாஹ்வின் அடியார்' என்பது இவற்றின் பொருளாகும்.)15
4480. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்திருக்கும் செய்தி (யூத அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்களுக்கு, அவர்கள் ஒரு (தோட்ட) நிலத்தில் பழம் பறித்துக்கொண்டிருந்த சமயம் எட்டியது. உடனே அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப்போகிறேன். அவற்றை ஓர் இறைத் தூதர் மட்டுமே அறிவார்” என்று கூறினார்கள்.
பிறகு, “1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையின் சாயலில், அல்லது தாயின் சாயலில் இருப்பது எதனால்?” என்று கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், “சற்று முன்புதான் ஜிப்ரீல் (அலை) எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்” என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், “ஜிப்ரீலா (தங்களுக்குத் தெரிவித்தார்!)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஆம்' என்று பதிலளிக்க, “வானவர்களிலேயே ஜிப்ரீல்தான் யூதர் களுக்குப் பகைவராயிற்றே!” என்று அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(நபியே!) நீர் கூறுவீராக: எவர் ஜிப்ரீலுக்குப் பகைவரோ (அவர் அல்லாஹ்வுக்கும் பகைவரே). ஏனெனில், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் ஆணைக்கிணங்கவே இ(வ்வேதத்)தை உமது இதயத்தில் இறக்கிவைத்தார்” எனும் இந்த (2:97ஆவது) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
பிறகு, “அறிக! இறுதி நாளின் அடை யாளங்களில் முதலாவது அடையாளம், ஒரு நெருப்பாகும். அது கிழக்கிலிருந்து மக்களை(த் துரத்திக்கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்றுதிரட்டும். அறிக! சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு, பெரிய மீனின் ஈரல் பகுதியிலுள்ள கூடுதலான சதையாகும்.
(குழந்தை தந்தையின் சாயலில், அல்லது தாயின் சாயலில் அமையக் காரணம், ஓர் ஆண் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது) ஆணின் நீர் (விந்து உயிரணு) பெண்ணின் நீரை (கருமுட்டை உயிரணுவை) முந்திவிட்டால் குழந்தை அவனது சாயலைப் பெறுகிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக்கொண்டால் குழந்தை அவளது சாயலைப் பெறுகிறது” என்று பதிலளித்தார்கள்.
(உடனே) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் உறுதிமொழிகிறேன். தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்றும் நான் உறுதிமொழிகிறேன்” என்று கூறினார்கள். பிறகு, “அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தார் ஆவர். தாங்கள் (என்னைப் பற்றி) அவர்களிடம் விசாரித்து (அறிந்து)கொள்வதற்கு முன்பாக, நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை அவர்கள் அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்” என்று கூறினார்கள்.
அப்போது யூதர்கள் வந்தனர். (உடனே, அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் அறைக்குள் சென்று மறைந்துகொண்டார்கள்.) பிறகு, நபி (ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), “உங்களில் அப்துல்லாஹ் பின் சலாம் எத்தகைய மனிதர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அவர் எங்களில் நல்லவரும், எங்களில் நல்லவரின் புதல்வருமாவார்; எங்கள் தலைவரும், எங்கள் தலைவரின் புதல்வருமாவார்” என்று பதிலளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் பின் சலாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், “அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!” என்று சொன்னார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வெளியே வந்து, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் நான் உறுதிமொழிகிறேன்” என்று சொன்னார்கள்.
உடனே யூதர்கள், “இவர் எங்களில் கெட்டவரும் எங்களில் கெட்டவரின் மகனுமாவார்” என்று அப்துல்லாஹ் பின் சலாமைக் குறித்துக் குறைகூறினர். அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “இதைத்தான் நான் அஞ்சிக்கொண்டி ருந்தேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள்.16

4481. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ أَقْرَؤُنَا أُبَىٌّ، وَأَقْضَانَا عَلِيٌّ، وَإِنَّا لَنَدَعُ مِنْ قَوْلِ أُبَىٍّ، وَذَاكَ أَنَّ أُبَيًّا يَقُولُ لاَ أَدَعُ شَيْئًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى {مَا نَنْسَخْ مِنْ آيَةٍ أَوْ نَنْسَأْهَا}
பாடம் : 7
“நாம் ஒரு வசனத்தை மாற்றினால், அல்லது மறக்கச் செய்தால் அதைவிடச் சிறந்ததையோ, அதற்கு நிகரானதையோ கொண்டு வருவோம். நிச்சயமாக, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன் என்பது உமக்குத் தெரியாதா?” எனும் (2:106ஆவது)இறைவசனம்17
4481. உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை பின் கஅப் (ரலி) ஆவார். எங்களில் நன்கு தீர்ப்பு வழங்கும் ஞானமுடையவர் அலீ (ரலி) ஆவார். நாங்கள் உபை அவர்களின் சொற்களில் சிலவற்றை விட்டுவிடுவோம். ஏனெனில் அவர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற எதையும் கைவிடமாட்டேன்” என்று சொல்வார்.
ஆனால், அல்லாஹ்வோ, “நாம் ஒரு வசனத்தை மாற்றினால், அல்லது மறக்கச் செய்தால் அதைவிடச் சிறந்ததையோ, அதற்கு நிகரானதையோ கொண்டுவருவோம் என்று கூறியுள்ளான்.18
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4482. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي حُسَيْنٍ، حَدَّثَنَا نَافِعُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " قَالَ اللَّهُ كَذَّبَنِي ابْنُ آدَمَ وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، وَشَتَمَنِي وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، فَأَمَّا تَكْذِيبُهُ إِيَّاىَ فَزَعَمَ أَنِّي لاَ أَقْدِرُ أَنْ أُعِيدَهُ كَمَا كَانَ، وَأَمَّا شَتْمُهُ إِيَّاىَ فَقَوْلُهُ لِي وَلَدٌ، فَسُبْحَانِي أَنْ أَتَّخِذَ صَاحِبَةً أَوْ وَلَدًا ".
பாடம் : 8
“அல்லாஹ் (தனக்குக்) குழந்தையை ஏற்படுத்திக்கொண்டான்' என்று அவர்கள் கூறுகின்றனர். அவன் (அதிலிருந்து) தூய்மையானவன்” (எனும் 2:116ஆவது வசனத் தொடர்)19
4482. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஆதமின் மகன் (மனிதன்) என்னை நம்ப மறுத்தான். ஆயினும், அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் ஏசினான். ஆயினும், அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் நம்ப மறுத்தது, “அவனை நான் முன்பிருந்தது போன்றே மீண்டும் உயிர் கொடுத்து எழுப்ப என்னால் முடியாது' என்று அவன் எண்ணியதேயாகும்.
அவன் என்னை ஏசியது, “எனக்குக் குழந்தை உண்டு' என்று அவன் சொன்னதேயாகும். ஆனால், நான் ஒரு துணைவியையோ குழந்தையையோ பெற்றுக்கொள்வதிலிருந்து தூய்மையானவன் ஆவேன்” என்று அல்லாஹ் கூறினான்.20
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 65
4482. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஆதமின் மகன் (மனிதன்) என்னை நம்ப மறுத்தான். ஆயினும், அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் ஏசினான். ஆயினும், அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் நம்ப மறுத்தது, “அவனை நான் முன்பிருந்தது போன்றே மீண்டும் உயிர் கொடுத்து எழுப்ப என்னால் முடியாது' என்று அவன் எண்ணியதேயாகும்.
அவன் என்னை ஏசியது, “எனக்குக் குழந்தை உண்டு' என்று அவன் சொன்னதேயாகும். ஆனால், நான் ஒரு துணைவியையோ குழந்தையையோ பெற்றுக்கொள்வதிலிருந்து தூய்மையானவன் ஆவேன்” என்று அல்லாஹ் கூறினான்.20
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 65
4483. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ عُمَرُ وَافَقْتُ اللَّهَ فِي ثَلاَثٍ ـ أَوْ وَافَقَنِي رَبِّي فِي ثَلاَثٍ ـ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، لَوِ اتَّخَذْتَ مَقَامَ إِبْرَاهِيمَ مُصَلًّى وَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ يَدْخُلُ عَلَيْكَ الْبَرُّ وَالْفَاجِرُ، فَلَوْ أَمَرْتَ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ بِالْحِجَابِ فَأَنْزَلَ اللَّهُ آيَةَ الْحِجَابِ قَالَ وَبَلَغَنِي مُعَاتَبَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم بَعْضَ نِسَائِهِ، فَدَخَلْتُ عَلَيْهِنَّ قُلْتُ إِنِ انْتَهَيْتُنَّ أَوْ لَيُبَدِّلَنَّ اللَّهُ رَسُولَهُ صلى الله عليه وسلم خَيْرًا مِنْكُنَّ. حَتَّى أَتَيْتُ إِحْدَى نِسَائِهِ، قَالَتْ يَا عُمَرُ، أَمَا فِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا يَعِظُ نِسَاءَهُ حَتَّى تَعِظَهُنَّ أَنْتَ فَأَنْزَلَ اللَّهُ {عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبَدِّلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ مُسْلِمَاتٍ} الآيَةَ.
وَقَالَ ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنِي حُمَيْدٌ سَمِعْتُ أَنَسًا عَنْ عُمَرَ.
பாடம் : 9
இந்த (கஅபா எனும்) ஆலயத்தை ஒன்றுகூடும் இடமாகவும் அபய பூமியாகவும் மக்களுக்கு நாம் ஆக்கியதை எண்ணிப்பாருங்கள். இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழும் இடமாக ஆக்கிக்கொள்ளுங்கள்” எனும் (2:125ஆவது) வசனத்தொடர்
(இவ்வசனத்தின் மூலத்தில் “ஒன்று கூடும் இடம்' எனும் பொருளைக் குறிக்கும்) “மஸாபத்தன்' எனும் சொல்லுக்கு “மீளுமிடம்' என்பது பொருள். (அதன் எதிர்கால வினைச்சொல்லான) “யஸூபூன' எனும் சொல்லுக்கு “மீண்டு(ம் மீண்டும்) வருவார்கள்' என்று பொருள்.21
4483. உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
“மூன்று விஷயங்களில் நான் அல்லாஹ்வுக்கு இசைவான கருத்துக் கொண்டேன்' அல்லது “என் இறைவன் மூன்று விஷயங்களில் எனக்கு இசைவாகக் கருத்துக் கொண்டான்'. நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் (கஅபாவைக் கட்டும்போது) நின்ற இடத்தைத் தொழுமிடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளலாமே!” என்று கேட்டேன். (அவ்வாறே ஆக்கிக்கொள்ளும்படி அல்லாஹ்வும் வசனத்தை அருளினான்.)
மேலும் நான், (அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் (எல்லா வகை மனிதர்களும்) வருகின்றனர். ஆகவே, (தங்கள் துணைவியரான) இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும்படி தாங்கள் கட்டளையிடலாமே!” என்று கேட்டேன். அவ்வாறே, அல்லாஹ் பர்தா (சட்டம்) குறித்த வசனத்தை அருளினான்.
நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலர்மீது அதிருப்தி அடைந்திருப்பதாக எனக்குச் செய்தி எட்டியது. ஆகவே, அவர்களிடம் நான் சென்று, “நீங்கள் (நபி (ஸல்) அவர்களுக்குச் சங்கடம் ஏற்படுத்துவதை) நிறுத்திக்கொள்ள வேண்டும்! இல்லையென்றால், அல்லாஹ் தன் தூதருக்கு உங்களைவிடச் சிறந்தவர் களை (உங்களுக்கு)ப் பதிலாகத் தருவான்” என்று சொன்னேன்.
இந்நிலையில் அவர்களுடைய துணைவியரில் ஒருவரிடம் நான் சென்றபோது, “உமரே! தம்முடைய துணைவியருக்கு அறிவுரை கூற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக் குத் தெரியாதா? நீங்கள் ஏன் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டும்!” என்று கேட்டார். அப்போது அல்லாஹ், “இறைத்தூதர் உங்களை மணவிலக்குச் செய்துவிட்டால், உங்களைவிடச் சிறந்த முஸ்லிமான துணைவியரை (உங்களுக்குப் பதிலாக) அல்லாஹ் அவருக்கு வழங்க லாம்” எனும் (66:5ஆவது) வசனத்தை அருளினான்.22
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

4484. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ، أَخْبَرَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " أَلَمْ تَرَىْ أَنَّ قَوْمَكِ بَنَوُا الْكَعْبَةَ وَاقْتَصَرُوا عَنْ قَوَاعِدِ إِبْرَاهِيمَ ". فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَلاَ تَرُدُّهَا عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ قَالَ " لَوْلاَ حِدْثَانُ قَوْمِكِ بِالْكُفْرِ ". فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ لَئِنْ كَانَتْ عَائِشَةُ سَمِعَتْ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا أُرَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَرَكَ اسْتِلاَمَ الرُّكْنَيْنِ اللَّذَيْنِ يَلِيَانِ الْحِجْرَ، إِلاَّ أَنَّ الْبَيْتَ لَمْ يُتَمَّمْ عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ.
பாடம் : 10
“மேலும், (நபியே! நீர் நினைவுகூருவீராக!) இப்ராஹீமும் இஸ்மாயீலும் அந்த (இறை) இல்லத்தின் அடித்தளங்களை உயர்த்திக்கொண்டிருந்த பொழுது, “எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே (அனைத்தையும்) செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவாய்' (எனப் பிரார்த்தித்தார்கள்)” எனும் (2:127ஆவது) இறைவசனம்
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “அல்கவாஇத்' (அடித்தளங்கள்) எனும் சொல், அந்த இ(றையி)ல்லத்தின் அஸ்திவாரத்தைக் குறிக்கும். இதன் ஒருமை: “காஇதா' ஆகும். (மாதவிடாய் நின்றுபோன முதிய) பெண்களைக் குறிக்கின்ற “அல்கவாஇத்' எனும் சொல்லின் ஒருமை, “காஇத்' என்பதாகும்.
4484. நபி (ஸல்) அவர்களின் துணைவி யாராகிய ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), “உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்)கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டி இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களைவிடச் சுருக்கி (சற்று உள்ளடக்கி)விட்டதை நீ காணவில்லையா?” என்று கேட்டார்கள்.
அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களின் மீது அதைத் தாங்கள் மீண்டும் கட்டக் கூடாதா?” எனக் கேட்டேன். “உன் சமுதாயத்தார் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயில்லாவிட்டால் (அவ்வாறே நான் செய்திருப்பேன்)” என்றார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்:
ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து மேற்சொன்னவற்றைக் கேட்டிருந்தால் அது சரியே! ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் (எனும் கஅபாவின் வளைந்த) பகுதியை அடுத்துள்ள (கஅபாவின்) இரு மூலைகளையும் தொட்டு முத்தமிடாததற்குக் காரணம், இறையில்லம் (கஅபா) இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் முழுமையாக அமைக்கப்படாமல் (சற்றுத் தள்ளி அமைக்கப்பட்டு) இருப்பதே ஆகும்.23

4485. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ أَهْلُ الْكِتَابِ يَقْرَءُونَ التَّوْرَاةَ بِالْعِبْرَانِيَّةِ، وَيُفَسِّرُونَهَا بِالْعَرَبِيَّةِ لأَهْلِ الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تُصَدِّقُوا أَهْلَ الْكِتَابِ وَلاَ تُكَذِّبُوهُمْ، وَقُولُوا {آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ} الآيَةَ".
பாடம் : 11
(இறைநம்பிக்கை கொண்டோரே!) “அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்ற (இவ்வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் மற்றும் (இவர்களின்) சந்ததியினர்(களான நபிமார்கள்)மீது அருளப்பெற்றதையும் மூசாவுக்கும் ஈசாவுக்கும் அருளப்பட்டவற்றையும், (இதர) அனைத்து இறைத்தூதர்களுக்கும் அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் நம்புகிறோம். அவர்களில் எவருக்கிடையிலும் நாங்கள் பாகுபாடு காட்டமாட்டோம். நாங்கள் அல்லாஹ்வுக்கே அடிபணிபவர்களாக இருக்கின்றோம்” என்று கூறுங்கள்! (எனும் 2:136ஆவது இறைவசனம்)
4485. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
வேதக்காரர்(களான யூதர்)கள், தவ்ராத்தை ஹீப்ரூ (எபிரேயு) மொழியில் ஓதி, அதை இஸ்லாமியர்களுக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்துவந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம்.
(மாறாக, முஸ்லிம்களே!) நீங்கள் சொல்லுங்கள்: நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும், யஅகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பெற்றதையும் மூசாவுக்கும் ஈசாவுக்கும் வழங்கப்பெற்றதையும் மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து அருளப்பெற்றவற்றையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களில் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டமாட்டோம். நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறோம்” (2:136) என்று கூறினார்கள்.24

4486. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، سَمِعَ زُهَيْرًا، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى إِلَى بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ شَهْرًا أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا، وَكَانَ يُعْجِبُهُ أَنْ تَكُونَ قِبْلَتُهُ قِبَلَ الْبَيْتِ، وَإِنَّهُ صَلَّى ـ أَوْ صَلاَّهَا ـ صَلاَةَ الْعَصْرِ، وَصَلَّى مَعَهُ قَوْمٌ، فَخَرَجَ رَجُلٌ مِمَّنْ كَانَ صَلَّى مَعَهُ، فَمَرَّ عَلَى أَهْلِ الْمَسْجِدِ وَهُمْ رَاكِعُونَ قَالَ أَشْهَدُ بِاللَّهِ لَقَدْ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم قِبَلَ مَكَّةَ، فَدَارُوا كَمَا هُمْ قِبَلَ الْبَيْتِ، وَكَانَ الَّذِي مَاتَ عَلَى الْقِبْلَةِ قَبْلَ أَنْ تُحَوَّلَ قِبَلَ الْبَيْتِ رِجَالٌ قُتِلُوا لَمْ نَدْرِ مَا نَقُولُ فِيهِمْ، فَأَنْزَلَ اللَّهُ {وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَحِيمٌ }
பாடம் : 12
மனிதர்களில் சில மதியீனர்கள், “ஏற்கனவே (முஸ்லிம்கள் முன் னோக்கித் தொழுதுகொண்டு) இருந்த அவர்களது “கிப்லா'விó ருந்து (வேறு திசைக்கு) அவர்களைத் திருப்பியது எது?” என்று வினவு வார்கள். “கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடுபவரை அவன் நல்வழியில் செலுத்துவான்” என்று (நபியே!) கூறுக! (எனும் 2:142ஆவது இறைவசனம்)
4486. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஜெரூசலத்திலுள்ள) பைத்துல் மக்திஸை நோக்கி “பதினாறு மாதங்கள்' அல்லது “பதினேழு மாதங்கள்' தொழுதார்கள். (மக்காவிலுள்ள) இறை யில்லம் கஅபாவே தாம் முன்னோக்கும் திசையாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. (ஆகவே, தொழுகையில் கஅபாவையே முன்னோக்கும்படி ஆணையிட்டு அல்லாஹ் 2:144ஆவது வசனத்தை அருளி னான்.) உடனே அவர்கள் அஸ்ர் தொழுகையை (கஅபாவை முன்னோக்கி)த் தொழுதார்கள். அவர்களுடன் மக்கள் சிலரும் தொழுதனர்.
பிறகு அவர்களுடன் தொழுதிருந்தவர்களில் ஒரு மனிதர் புறப்பட்டு, (மற்றொரு) பள்ளிவாசலில் (தொழுதுகொண்டு) இருந்தவர்களைக் கடந்து சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் “ருகூஉ' செய்துகொண்டிருந்தனர். அவர், “அல்லாஹ்வை முன்வைத்து நான் சொல்கின்றேன். நான், நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து மக்கா(விலுள்ள கஅபா)வை நோக்கித் தொழுதேன்” என்று சொல்ல, அவர்கள், அப்படியே (தொழுகையில் ருகூவிலிருந்தபடியே சுற்றி) கஅபாவை நோக்கித் திரும்பிக்கொண்டார்கள்.
(புதிய கிப்லாவான) கஅபாவை நோக்கி கிப்லா மாற்றப்படுவதற்கு முன்பாக (பழைய பைத்துல் மக்திஸ்) கிப்லாவைப் பின்பற்றித் தொழுத சிலர் (இறைவழியில்) கொல்லப்பட்டு இறந்துவிட்டிருந்தனர். அவர்கள் விஷயத்தில் நாங்கள் என்ன கூறுவதென்பது எங்களுக்குத் தெரியவில்லை. அப்போது, “அல்லாஹ், உங்கள் இறைநம்பிக்கையைப் பாழ்படுத்து பவன் அல்லன். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களிடம் பரிவு மிகுந்தோனும் கருணையுடையோனுமாவான்” எனும் (2:143ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.25

4487. حَدَّثَنَا يُوسُفُ بْنُ رَاشِدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، وَأَبُو أُسَامَةَ ـ وَاللَّفْظُ لِجَرِيرٍ ـ عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، وَقَالَ أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يُدْعَى نُوحٌ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ لَبَّيْكَ وَسَعْدَيْكَ يَا رَبِّ. فَيَقُولُ هَلْ بَلَّغْتَ فَيَقُولُ نَعَمْ. فَيُقَالُ لأُمَّتِهِ هَلْ بَلَّغَكُمْ فَيَقُولُونَ مَا أَتَانَا مِنْ نَذِيرٍ. فَيَقُولُ مَنْ يَشْهَدُ لَكَ فَيَقُولُ مُحَمَّدٌ وَأُمَّتُهُ. فَتَشْهَدُونَ أَنَّهُ قَدْ بَلَّغَ ". {وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا} فَذَلِكَ قَوْلُهُ جَلَّ ذِكْرُهُ {وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا} وَالْوَسَطُ الْعَدْلُ.
பாடம் : 13
இவ்வாறே, உங்களை நாம் நடுநிலைச் சமுதாயமாக ஆக்கி னோம். நீங்கள் மக்களுக்குச் சான்று பகர்வோராகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று பகர்பவராக வும் திகழ வேண்டும் என்பதே இதற்குக் காரணம் (எனும் 2:143ஆவது வசனத்தொடர்)
4487. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் (நபி) நூஹ் (அலை) அவர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள், “இதோ வந்துவிட்டேன்; என் இறைவா! கட்டளையிடு; காத்திருக்கிறேன்” என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், “(நமது செய்தியை மக்களுக்கு) நீங்கள் எடுத்துரைத்துவிட்டீர்களா?” என்று இறைவன் கேட்பான். அவர்கள், “ஆம் (எடுத்துரைத்துவிட்டேன்)” என்று சொல்வார்கள். அப்போது அவர்களுடைய சமுதாயத்தாரிடம், “உங்களுக்கு இவர் (நம் செய்தியை) எடுத்துரைத்தாரா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “எங்களிடம் எச்சரிப்பவர் எவரும் வரவில்லை” என்று சொல்வார்கள்.
அப்போது அல்லாஹ், “உங்களுக்குச் சாட்சியம் சொல்கின்றவர் யார்?” என்று (நூஹிடம்) கேட்க அவர்கள், “முஹம்மதும் அவருடைய சமுதாயத்தாரும்” என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே அவர்களும், “நூஹ் (அலை) அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு இறைச் செய்தியை) எடுத்துரைத்துவிட்டார்கள்” என்று சாட்சியம் அளிப்பார்கள். மேலும், இறைத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருப்பார்.
இதையே, “இவ்வாறே, உங்களை நாம் நடுநிலைச் சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று பகர்வோராகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று பகர்பவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதே இதற்குக் காரணம்” எனும் (2:143) இறைவசனம் குறிக்கிறது.
“நடுநிலையான' (வசத்) என்பதற்கு “நீதியான' என்பது பொருள்.26
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4488. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ بَيْنَا النَّاسُ يُصَلُّونَ الصُّبْحَ فِي مَسْجِدِ قُبَاءٍ إِذْ جَاءَ جَاءٍ فَقَالَ أَنْزَلَ اللَّهُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قُرْآنًا أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ فَاسْتَقْبِلُوهَا. فَتَوَجَّهُوا إِلَى الْكَعْبَةِ.
பாடம் : 14
இறைத்தூதரைப் பின்பற்றுகின்ற வர் யார்; தம் குதிகால் புறமாக (வந்த வழியே) திரும்பிவிடுகின்றவர் யார் என்பதைப் பிரித்தறிவதற்காகவே நீங்கள் முன்பிருந்த கிப்லாவை(த் தொழும் திசையாக) ஆக்கி (பின்பு மாற்றி)னோம். அல்லாஹ் நல்வழியில் செலுத்தியவர்களுக் கேயன்றி (மற்றவர்களுக்கு) இது நிச்சயம் பளுவாகவே இருந்தது. அல்லாஹ் உங்களது இறை நம்பிக்கையைப் பாழ்படுத்துபவன் அல்லன். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களிடம் பரிவு மிகுந்தோனும் கருணையுடையோனும் ஆவான் (எனும் 2:143ஆவது வசனத்தொடர்)
4488. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் “சுப்ஹ்' தொழுகையை “மஸ்ஜிது குபா'வில் தொழுதுகொண்டிருந்தபோது ஒரு மனிதர் வந்து, “கஅபாவை (தொழுகையில்) முன்னோக்கும்படி கட்டளையிட்டு நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆ(னின் ஒரு வசனத்தி)னை அல்லாஹ் அருளியுள்ளான்” என்று சொன்னார். உடனே, (பைத்துல் மக்திஸின் திசையை நோக்கித் தொழுதுகொண்டிருந்த) அம்மக்கள், கஅபாவை நோக்கித் (தங்கள் முகங்களைத்) திருப்பிக்கொண்டனர்.27

4489. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمْ يَبْقَ مِمَّنْ صَلَّى الْقِبْلَتَيْنِ غَيْرِي.
பாடம் : 15
(நபியே!) உமது முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம். எனவே, நீர் விரும்புகின்ற கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் நிச்சயமாக (இதோ) உம்மை நாம் திரும்பச் செய்கின்றோம். ஆகவே, உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் (புனிதப் பள்ளிவாசலை) நோக்தித் திருப்புவீராக! மேலும், நீங்கள் எங்கிருந்தாலும் அதன் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள்! நிச்சயமாக வேதம் அருளப்பெற்றவர்கள் அது தங்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நன்கு அறிவர். அவர்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை (எனும் 2:144ஆவது இறைவசனம்)
4489. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பைத்துல் மக்திஸ், கஅபா ஆகிய) இரண்டு கிப்லாக்களையும் நோக்கித் தொழுதவர்களில் என்னைத் தவிர வேறெவரும் இப்போது உயிரோடில்லை.28

4490. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ بَيْنَمَا النَّاسُ فِي الصُّبْحِ بِقُبَاءٍ جَاءَهُمْ رَجُلٌ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَأُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ أَلاَ فَاسْتَقْبِلُوهَا. وَكَانَ وَجْهُ النَّاسِ إِلَى الشَّأْمِ فَاسْتَدَارُوا بِوُجُوهِهِمْ إِلَى الْكَعْبَةِ.
பாடம் : 16
(நபியே!) வேதம் வழங்கப்பட்டவர்களிடம் நீர் எத்தனைச் சான்றுகளைக் கொண்டுவந்தாலும் உமது கிப்லாவை அவர்கள் பின்பற்றப்போவதில்லை. நீரும் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவரல்லர். அவர்களில் ஒரு பிரிவினர் மற்றப் பிரிவினரின் கிப்லாவைப் பின்பற்றுவோராயும் இல்லை. எனவே, உமக்கு (வஹீ மூலம்) மெய்யறிவு வந்த பின்னரும் அவர்களின் மனவிருப்பங்களை நீர் பின்பற்றினால் நிச்சயம் நீரும் அநீதியாளர்களில் ஒருவராகி விடுவீர் (எனும் 2:145ஆவது இறைவசனம்)
4490. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் குபாவில் “சுப்ஹ்' தொழுகையில் இருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “சென்ற இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பெற்றுள்ளது. (தொழுகையில் இதுவரை முன்னோக்கிவந்த பைத்துல் மக்திஸைவிட்டு) இனிமேல் இறையில்லம் கஅபாவை முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, (மக்களே!) கஅபாவையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள்” என்று சொன்னார்.
அப்போது மக்களின் முகம் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே மக்கள் தங்கள் முகங்களை (அப்படியே) கஅபாவின் பக்கம் திருப்பிக்கொண்டார்கள்.29

4491. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ بَيْنَا النَّاسُ بِقُبَاءٍ فِي صَلاَةِ الصُّبْحِ إِذْ جَاءَهُمْ آتٍ فَقَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ فَاسْتَقْبِلُوهَا. وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّأْمِ فَاسْتَدَارُوا إِلَى الْكَعْبَةِ.
பாடம் : 17
எவருக்கு நாம் வேதம் அருளியிருக்கிறோமோ அவர்கள் தங்களுடைய பிள்ளைகளை (இனம் கண்டு) அறிந்துகொள்வதைப் போல் அதை/ அவரை (கஅபாவை அல்லது நபி முஹம்மதை) நன்கு அறிவார்கள். எனினும், அவர் களில் ஒரு பிரிவினர் நன்கு அறிந்திருந்தும் உண்மையை மறைக்கிறார்கள். இந்த உண்மை, உங்கள் இறைவனிடமிருந்து வந்தது ஆகும். எனவே, (இது பற்றி) ஐயம் கொண்டோரில் நீங்களும் (ஒருவராக) ஆகிவிட வேண்டாம் (எனும் 2:146, 147 ஆகிய இறைவசனங்கள்)
4491. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் குபாவில் சுப்ஹ் தொழுகை தொழுதுகொண்டிருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, “சென்ற இரவு நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பெற்றுள்ளது. (அதில்) அவர்கள் (தொழுகையில் இதுவரை தாம் முன்னோக்கிவந்த பைத்துல் மக்திஸை விட்டுவிட்டு இனிமேல் மக்காவிலுள்ள இறையில்லம்) கஅபாவை தொழுகையில் முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, நீங்களும் கஅபாவையே முன்னோக்குங்கள்” என்று சொன்னார்.
அப்போது மக்களின் முகங்கள் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியபடி இருந்தன. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே மக்கள் வட்டமடித்து கஅபாவை நோக்கித் திரும்பிக்கொண்டார்கள்.

4492. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّيْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ ـ أَوْ سَبْعَةَ عَشَرَ ـ شَهْرًا، ثُمَّ صَرَفَهُ نَحْوَ الْقِبْلَةِ.
பாடம் : 18
ஒவ்வொரு (மதத்த)வருக்கும் அவரவர் முன்னோக்கக்கூடிய ஒரு திசையிருக்கிறது. நீங்கள் நன்மைகள் புரிய முந்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்றுதிரட்டிக் கொண்டுவருவான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவனாய் இருக்கின்றான் (எனும் 2:148ஆவது இறைவசனம்)30
4492. பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் பைத்துல் மக்திஸை நோக்கி “பதினாறு' அல்லது “பதினேழு' மாதங்கள் தொழுதோம். பிறகு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை (தற்போதைய கஅபா எனும்) இந்தக் கிப்லாவை நோக்கித் திருப்பிவிட்டான்.31

4493. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ بَيْنَا النَّاسُ فِي الصُّبْحِ بِقُبَاءٍ إِذْ جَاءَهُمْ رَجُلٌ فَقَالَ أُنْزِلَ اللَّيْلَةَ قُرْآنٌ، فَأُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ، فَاسْتَقْبِلُوهَا. وَاسْتَدَارُوا كَهَيْئَتِهِمْ، فَتَوَجَّهُوا إِلَى الْكَعْبَةِ وَكَانَ وَجْهُ النَّاسِ إِلَى الشَّأْمِ.
பாடம் : 19
மேலும், நீங்கள் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் (தொழும் வேளையில்) உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்புங்கள். இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மை (யான கட்டளை)யாகும். அல்லாஹ் நீங்கள் செய்கின்றவை பற்றிக் கவனமற்றவன் அல்லன் (எனும் 2:149ஆவது இறைவசனம்)
இந்த வசனத்தில் (“நோக்கி' எனும் பொருளைத் தரும்) “ஷத்ர்' எனும் சொல் “திசையில்' எனும் பொருளைச் சுட்டும்.
4493. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் “குபா'வில் “சுப்ஹ்' தொழுகை யிலிருந்தபோது, ஒரு மனிதர் வந்து, “சென்ற இரவு (நபி (ஸல்) அவர்களுக்கு) குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பெற்றுள்ளது. (அதில் இனி தொழுகையில்) கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, நீங்கள் கஅபாவை நோக்கித் தொழுங்கள்” என்று சொன்னார். உடனே மக்கள் தாம் இருந்த அதே நிலையிலேயே வட்டமடித்து கஅபாவை நோக்கி முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். (அதற்குமுன்) மக்களின் முகம் (பைத்துல் மக்திஸின் திசையில்) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது.32

4494. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ بَيْنَمَا النَّاسُ فِي صَلاَةِ الصُّبْحِ بِقُبَاءٍ إِذْ جَاءَهُمْ آتٍ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ، فَاسْتَقْبِلُوهَا. وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّأْمِ فَاسْتَدَارُوا إِلَى الْقِبْلَةِ.
பாடம் : 20
மேலும், (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் (தொழும் வேளையில்) உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் பக்கமாகவே திருப்புங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை (தொழுகையின்போது) அதன் பக்கமே திருப்புங்கள் (எனும் 2:150ஆவது வசனத்தொடர்)33
4494. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் குபாவில் “சுப்ஹ்' தொழுகையில் இருந்தபோது ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சென்ற இரவு (குர்ஆன் வசனம்) அருளப்பெற்றுள்ளது. (அதில்) கஅபாவை நோக்கித் தொழ வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஆகவே, அ(ந்த இறையில்லத்)தை நீங்களும் முன்னோக்கித் தொழுங்கள்” என்று சொன்னார்.
அப்போது அவர்களின் முகங்கள் (பைத்துல் மக்திஸ் திசையில்) ஷாம் நாட்டை நோக்கியபடி இருந்தன. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே அவர்கள் வட்டமிட்டு (தற்போதைய) கிப்லா(வான கஅபா)வை நோக்கித் திரும்பினார்கள்.