4423. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَجَعَ مِنْ غَزْوَةِ تَبُوكَ فَدَنَا مِنَ الْمَدِينَةِ فَقَالَ "" إِنَّ بِالْمَدِينَةِ أَقْوَامًا مَا سِرْتُمْ مَسِيرًا وَلاَ قَطَعْتُمْ وَادِيًا إِلاَّ كَانُوا مَعَكُمْ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَهُمْ بِالْمَدِينَةِ قَالَ "" وَهُمْ بِالْمَدِينَةِ، حَبَسَهُمُ الْعُذْرُ "".
பாடம் : 82
4423. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போரிலிருந்து திரும்பி (வருகையில்) மதீனாவை நெருங்கியபோது, “மதீனாவில்மக்கள் சிலர் இருக்கின்றனர். (அவர்களால் உங்களுடன் அறப்போரில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும்) நீங்கள் செல்லும் பாதை, அல்லது நீங்கள் கடந்து செல்லும் பள்ளத்தாக்கு எதுவாயினும் அவர்களும் (தம் உள்ளத்தாலும் எண்ணங்களாலும்) உங்களுடன் இருக்கிறார்கள்” என்று சொன்னார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் மதீனாவில்தானே இருக்கிறார் கள்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் மதீனாவில்தான் இருக்கிறார்கள்; அத்தியாவசியக் காரணங்கள்தான் அவர்களை (இந்த அறப்போரில் கலந்துகொள்ள விடாமல்) தடுத்துவிட்டன. (ஆயினும், அவர்களது உள்ளம் நம்முடன்தான் உள்ளது)” என்று பதிலளித்தார்கள்.465

அத்தியாயம் : 64
4424. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ بِكِتَابِهِ إِلَى كِسْرَى مَعَ عَبْدِ اللَّهِ بْنِ حُذَافَةَ السَّهْمِيِّ، فَأَمَرَهُ أَنْ يَدْفَعَهُ إِلَى عَظِيمِ الْبَحْرَيْنِ، فَدَفَعَهُ عَظِيمُ الْبَحْرَيْنِ إِلَى كِسْرَى، فَلَمَّا قَرَأَهُ مَزَّقَهُ ـ فَحَسِبْتُ أَنَّ ابْنَ الْمُسَيَّبِ قَالَ ـ فَدَعَا عَلَيْهِمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُمَزَّقُوا كُلَّ مُمَزَّقٍ.
பாடம் : 83 நபி (ஸல்) அவர்கள் கிஸ்ரா மற்றும் கைஸருக்கு எழுதிய கடிதம்466
4424. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாரசீக மன்னர் “குஸ்ரூ' எனும்) கிஸ்ராவுக்குத் தாம் எழுதிய கடிதத்தை அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்களிடம் கொடுத்து, (அதை கிஸ்ராவிடம் கொடுத்துவிடச் சொல்லி) பஹ்ரைனின் ஆளுநரிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டு அனுப்பினார்கள்.467

பஹ்ரைன் ஆளுநர் அக்கடிதத்தை கிஸ்ராவிடம் ஒப்படைத்தார். கிஸ்ரா அதைப் படித்ததும் அதை(த் துண்டு துண்டாக)க் கிழித்துப் போட்டுவிட்டார்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கிஸ்ரா' ஆட்சியாளர்கள் முற்றாகச் சிதறடிக்கப்பட வேண்டுமென அவர்களுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்” என்று சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் சொன்னதாக நினைக்கிறேன்.468

அத்தியாயம் : 64
4425. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ، حَدَّثَنَا عَوْفٌ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ لَقَدْ نَفَعَنِي اللَّهُ بِكَلِمَةٍ سَمِعْتُهَا مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَيَّامَ الْجَمَلِ، بَعْدَ مَا كِدْتُ أَنْ أَلْحَقَ بِأَصْحَابِ الْجَمَلِ فَأُقَاتِلَ مَعَهُمْ قَالَ لَمَّا بَلَغَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّ أَهْلَ فَارِسَ قَدْ مَلَّكُوا عَلَيْهِمْ بِنْتَ كِسْرَى قَالَ "" لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمُ امْرَأَةً "".
பாடம் : 83 நபி (ஸல்) அவர்கள் கிஸ்ரா மற்றும் கைஸருக்கு எழுதிய கடிதம்466
4425. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

ஜமல் போர் சமயத்தில், அதில் ஈடுபட்டவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டு (ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆதரவாகப்) போரிட முற்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிட மிருந்து நான் செவியுற்றிருந்த ஒரு சொல் மூலம் அல்லாஹ் எனக்குப் பயனளித்தான்.

பாரசீகர்கள் கிஸ்ராவின் மகளைத் தங்களுக்கு அரசியாக்கிவிட்டார்கள் எனும் செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அவர்கள் “தம் ஆட்சியதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் உருப்படாது” என்று சொன்னார்கள்.469

(இதுதான் எனக்குப் பயனளித்த நபி (ஸல்) அவர்களின் சொல்).

அத்தியாயம் : 64
4426. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، يَقُولُ أَذْكُرُ أَنِّي خَرَجْتُ مَعَ الْغِلْمَانِ إِلَى ثَنِيَّةِ الْوَدَاعِ نَتَلَقَّى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم. وَقَالَ سُفْيَانُ مَرَّةً مَعَ الصِّبْيَانِ.
பாடம் : 83 நபி (ஸல்) அவர்கள் கிஸ்ரா மற்றும் கைஸருக்கு எழுதிய கடிதம்466
4426. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (தபூக் போரிலிருந்து திரும்பி வந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிர்கொண்டு வரவேற்பதற்காக “வதா' மலைக் குன்றுக்கு சிறுவர்களுடன் சென்றதை நினைவுகூர்கின்றேன்.

அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(“சிறுவர்கள்' என்பதைக் குறிக்க “ஃகில்மான்' என்பதற்குப் பதிலாக) “ஸிப்யான் என்று சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் மற்றொருமுறை (இதை அறிவிக்கும்போது) கூறினார்கள்.

அத்தியாயம் : 64
4427. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ السَّائِبِ، أَذْكُرُ أَنِّي خَرَجْتُ مَعَ الصِّبْيَانِ نَتَلَقَّى النَّبِيَّ صلى الله عليه وسلم إِلَى ثَنِيَّةِ الْوَدَاعِ مَقْدَمَهُ مِنْ غَزْوَةِ تَبُوكَ.
பாடம் : 83 நபி (ஸல்) அவர்கள் கிஸ்ரா மற்றும் கைஸருக்கு எழுதிய கடிதம்466
4427. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தபூக் போரிலிருந்து வந்தபோது, அவர்களை வழியிலேயே சந்தித்து வரவேற்க சிறுவர்களுடன் சேர்ந்து நான் “வதா' மலைக் குன்றுக்குச் சென்றதை (இப்போது) நினைவுகூர்கின்றேன்.470

அத்தியாயம் : 64
4428. وَقَالَ يُونُسُ عَنِ الزُّهْرِيِّ، قَالَ عُرْوَةُ قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ "" يَا عَائِشَةُ مَا أَزَالُ أَجِدُ أَلَمَ الطَّعَامِ الَّذِي أَكَلْتُ بِخَيْبَرَ، فَهَذَا أَوَانُ وَجَدْتُ انْقِطَاعَ أَبْهَرِي مِنْ ذَلِكَ السَّمِّ "".
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4428. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின் போது, “ஆயிஷாவே! கைபரில் (யூதப் பெண்ணொருத்தியால் விஷம் கலந்து தரப்பட்ட) அந்த உணவை நான் உண்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்துவருகிறேன்.472

அந்த விஷத்தின் காரணத்தால் என் இருதய இரத்தக் குழாய் அறுந்துபோவதை நான் உணரும் நேரமாகும் இது” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 64
4429. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنْ أُمِّ الْفَضْلِ بِنْتِ الْحَارِثِ، قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِ ـ {الْمُرْسَلاَتِ عُرْفًا} ثُمَّ مَا صَلَّى لَنَا بَعْدَهَا حَتَّى قَبَضَهُ اللَّهُ.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4429. உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில் இறுதியாகத் தொழுத) மஃக்ரிப் தொழுகை யில், “வல்முர்சலாத்தி உர்ஃபன்' எனும் (குர்ஆனின் 77ஆவது) அத்தியாயத்தை ஓதுவதைச் செவியுற்றேன். அதன் பிறகு அவர்களின் உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை அவர்கள் எங்களுக்குத் தொழுவிக்கவில்லை.473

அத்தியாயம் : 64
4430. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ يُدْنِي ابْنَ عَبَّاسٍ فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ إِنَّ لَنَا أَبْنَاءً مِثْلَهُ. فَقَالَ إِنَّهُ مِنْ حَيْثُ تَعْلَمُ. فَسَأَلَ عُمَرُ ابْنَ عَبَّاسٍ عَنْ هَذِهِ الآيَةِ {إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ} فَقَالَ أَجَلُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَعْلَمَهُ إِيَّاهُ، فَقَالَ مَا أَعْلَمُ مِنْهَا إِلاَّ مَا تَعْلَمُ.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4430. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், என்னைத் தமக்கு அருகிலேயே (எப்போதும்) அமர்த்திக்கொள்வது வழக்கம். ஆகவே, (ஒருநாள்) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “எங்களுக்கு இப்னு அப்பாஸைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்கின்றனர்” என்று சொன்னார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அவரது (கல்வித்) தகுதி உங்களுக்கே தெரியும்” என்று (என்னைக் குறித்துச்) சொன்னார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தம் சகாக்களின் மத்தியில் வைத்து) என்னிடம், “(நபியே!) அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து மக்கள் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதை நீங்கள் பார்க்கும்போது” எனும் (110:1,2ஆவது) இறைவசனத்தைப் பற்றி (விளக்கம்) கேட்டார்கள்.

அதற்கு நான், “(இவ்வசனத்தின் வாயிலாக) அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்களின் ஆயுள் முடிந்து (இறப்பு நெருங்கி)விட்டதை அறிவித்தான்” என்று பதிலளித்தேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் இந்த வசனத்திலிருந்து அறிந்துகொண்டதையே நானும் அறிந்துகொண்டேன்” என்று சொன்னார்கள்.474

அத்தியாயம் : 64
4431. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُلَيْمَانَ الأَحْوَلِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ يَوْمُ الْخَمِيسِ وَمَا يَوْمُ الْخَمِيسِ اشْتَدَّ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَجَعُهُ فَقَالَ "" ائْتُونِي أَكْتُبْ لَكُمْ كِتَابًا لَنْ تَضِلُّوا بَعْدَهُ أَبَدًا "". فَتَنَازَعُوا، وَلاَ يَنْبَغِي عِنْدَ نَبِيٍّ تَنَازُعٌ، فَقَالُوا مَا شَأْنُهُ أَهَجَرَ اسْتَفْهِمُوهُ فَذَهَبُوا يَرُدُّونَ عَلَيْهِ. فَقَالَ "" دَعُونِي فَالَّذِي أَنَا فِيهِ خَيْرٌ مِمَّا تَدْعُونِي إِلَيْهِ "". وَأَوْصَاهُمْ بِثَلاَثٍ قَالَ "" أَخْرِجُوا الْمُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ الْعَرَبِ، وَأَجِيزُوا الْوَفْدَ بِنَحْوِ مَا كُنْتُ أُجِيزُهُمْ "". وَسَكَتَ عَنِ الثَّالِثَةِ، أَوْ قَالَ فَنَسِيتُهَا.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4431. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(அன்று) வியாழக்கிழமை! எந்த வியாழக்கிழமை (தெரியுமா?)” என்று கேட்டுவிட்டுச் சொன்னார்கள்: (வியாழக்கிழமையன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (நோயின்) வேதனை கடுமையாயிற்று. அப்போது அவர்கள், “என்னிடம் (எலும்பைக்) கொண்டுவாருங்கள். உங்களுக்கு ஒரு மடலை நான் எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்” என்று கூறினார்கள்.

அப்போது மக்கள் (கருத்து வேறுபாடு கொண்டு) சச்சரவிட்டுக்கொண்டனர். ஆனால், ஓர் இறைத்தூதரின் முன்னால் சச்சரவு செய்வது முறையல்ல (என்று நபியவர்கள் குறிப்பிட்டார்கள்). மக்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் பலவீனத் தில் பேசுகிறார்களா? அவர்களிடமே விளக்கம் கேளுங்கள்” என்று கூறினர்.

ஆகவே, நபி (ஸல்) அவர்கள், “என்னை விட்டுவிடுங்கள். நீங்கள் எதற்கு என்னை அழைக்கிறீர்களோ அந்த (மரண சாசனம் எழுதும்) பணியைவிட நான் இப்போதுள்ள (இறைநினைவில் லயித்திருக்கும் இந்த) நிலையே சிறந்தது” என்று சொல்லிவிட்டார்கள். (எதையும் எழுதித் தரவில்லை.) மேலும், அவர்கள் தம் தோழர்களுக்கு (தம் மரணத் தறுவாயில்) மூன்று விஷயங்களைக் கட்டளையிட்டார்கள்.

“அரபு தீபகற்பத்திலிருந்து இணைவைப்பாளர்களை வெளியேற்றுங்கள். (அயல் நாடுகள் மற்றும் குலங்களின்) தூதுக் குழுவினருக்கு நான் கொடுத்துவந்ததைப் போல் நீங்களும் பரிசுப் பொருள்களை வழங்குங்கள்” என்று சொன்னார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் பின் அபில்முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் (நபி (ஸல்) அவர்களின்) “மூன்றாவது கட்டளையைச் சொல்லாமல் மௌன மாயிருந்துவிட்டார்கள்' அல்லது “(அதை அவர்கள் அறிவித்திருக்கலாம்; ஆனால்,) நான் அதை மறந்துவிட்டேன்'.475

அத்தியாயம் : 64
4432. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا حُضِرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَفِي الْبَيْتِ رِجَالٌ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" هَلُمُّوا أَكْتُبْ لَكُمْ كِتَابًا لاَ تَضِلُّوا بَعْدَهُ "". فَقَالَ بَعْضُهُمْ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ غَلَبَهُ الْوَجَعُ وَعِنْدَكُمُ الْقُرْآنُ، حَسْبُنَا كِتَابُ اللَّهِ. فَاخْتَلَفَ أَهْلُ الْبَيْتِ وَاخْتَصَمُوا، فَمِنْهُمْ مَنْ يَقُولُ قَرِّبُوا يَكْتُبُ لَكُمْ كِتَابًا لاَ تَضِلُّوا بَعْدَهُ. وَمِنْهُمْ مَنْ يَقُولُ غَيْرَ ذَلِكَ، فَلَمَّا أَكْثَرُوا اللَّغْوَ وَالاِخْتِلاَفَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قُومُوا "". قَالَ عُبَيْدُ اللَّهِ فَكَانَ يَقُولُ ابْنُ عَبَّاسٍ إِنَّ الرَّزِيَّةَ كُلَّ الرَّزِيَّةِ مَا حَالَ بَيْنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبَيْنَ أَنْ يَكْتُبَ لَهُمْ ذَلِكَ الْكِتَابَ لاِخْتِلاَفِهِمْ وَلَغَطِهِمْ.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4432. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது வீட்டில் மக்கள் பலரும் இருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது நபி (ஸல்) அவர்கள், “வாருங்கள். நான் உங்களுக்கு ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்” என்று சொன்னார்கள்.

அப்போது மக்களில் சிலர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (நோயின்) வேதனை மிகைத்துவிட்டது. (அவர்களை எழுதித் தரச் சொல்லித் தொந்தரவு செய்யாதீர்கள்.) உங்களிடம்தான் குர்ஆன் இருக்கின்றதே. நமக்கு அல்லாஹ்வின் வேதமே போதும்” என்று சொன்னார்கள்.

உடனே அங்கு வீட்டிலிருந்தோர், கருத்து வேறுபாடு கொண்டு சச்சரவிட்டுக் கொண்டார்கள். அவர்களில் சிலர், “(நபியவர்கள் கேட்ட எழுது பொருளை அவர்களிடம்) கொண்டுபோய்க் கொடுங்கள். உங்களுக்கு ஒரு மடலை அவர்கள் எழுதுவார்கள். அதன் பிறகு நீங்கள் வழிதவறிச் செல்லமாட்டீர்கள்” என்று சொன்னார்கள். மற்றச் சிலர் வேறு விதமாகச் சொன்னார்கள். அவர்களின் கூச்சலும் சச்சரவும் அதிகரித்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எழுந்திருங்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு கூச்சலிட்டுக்கொண்டதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் அந்த மடலை எழுத முடியாமல்போனதுதான் சோதனை யிலும் பெரும் சோதனையாகும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள்.476

அத்தியாயம் : 64
4433. حَدَّثَنَا يَسَرَةُ بْنُ صَفْوَانَ بْنِ جَمِيلٍ اللَّخْمِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ فِي شَكْوَاهُ الَّذِي قُبِضَ فِيهِ، فَسَارَّهَا بِشَىْءٍ، فَبَكَتْ، ثُمَّ دَعَاهَا فَسَارَّهَا بِشَىْءٍ فَضَحِكَتْ فَسَأَلْنَا عَنْ ذَلِكَ. فَقَالَتْ سَارَّنِي النَّبِيُّ صلى الله عليه وسلم أَنَّهُ يُقْبَضُ فِي وَجَعِهِ الَّذِي تُوُفِّيَ فِيهِ فَبَكَيْتُ، ثُمَّ سَارَّنِي فَأَخْبَرَنِي أَنِّي أَوَّلُ أَهْلِهِ يَتْبَعُهُ فَضَحِكْتُ.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4433. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், எந்த நோயில் இருக்கையில் அவர்களின் உயிர் கைப்பற் றப்பட்டதோ அந்த நோயின்போது (தம் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்து (அவர்களது காதில்) இரகசியமாக ஏதோ சொல்ல, ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு (மீண்டும்) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்து இரகசியமாக ஏதோ சொல்ல, அவர்கள் சிரித்தார்கள்.

நாங்கள் அதைப் பற்றி (ஃபாத்திமா (ரலி) அவர்களிடம்) விசாரித்தோம். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் (முதல் முறை அழைத்தபோது), தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே தாம் இறந்துவிடப்போவதாக இரகசியமாக என்னிடம் சொன்னார்கள். ஆகவே, நான் அழுதேன்.

பிறகு (இரண்டாம் முறையில்), “அவர்களுடைய குடும்பத்தாரிலேயே நான்தான் முதலாவதாக அவர்களைப் பின்தொடர்ந்து (உலகைப் பிரிந்து) செல்லவிருப்பவள்' என்று இரகசியமாக என்னிடம் தெரிவித்தார்கள். ஆகவே, நான் சிரித்தேன்” என்று சொன்னார்கள்.477

அத்தியாயம் : 64
4435.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4435. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

“உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில், தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை” என்று நான் (நபி (ஸல்) அவர்களிடமிருந்தே) செவியுற்றிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களின் தொண்டை கட்டிக் கொண்டுவிட (கம்மிய, கரகரப்பான குரலில்), “அல்லாஹ் அருள் புரிந்துள்ள இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த் தியாகம் புரிந்தவர் கள் மற்றும் நல்லடியார்களுடன்” எனும் (4:69) இறைவாக்கைச் சொல்லத் தொடங்கினார்கள்.

ஆகவே, “இவ்வுலகம், மறுமை ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கும் வழங்கப்பட்டது' என்று நான் எண்ணிக்கொண்டேன்.478

அத்தியாயம் :
4436. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا مَرِضَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَرَضَ الَّذِي مَاتَ فِيهِ جَعَلَ يَقُولُ "" فِي الرَّفِيقِ الأَعْلَى "".
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4436. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின் போது, “(இறைவா!) உயர்ந்த தோழர்க(ளான இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள் மற்றும் நல்லடியார்க)ளுடன் (என்னைச் சேர்த்தருள்)” என்று சொல்லத் தொடங்கினார்கள்.

அத்தியாயம் : 64
4437. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ إِنَّ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ صَحِيحٌ يَقُولُ "" إِنَّهُ لَمْ يُقْبَضْ نَبِيٌّ قَطُّ حَتَّى يَرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ ثُمَّ يُحَيَّا أَوْ يُخَيَّرَ "". فَلَمَّا اشْتَكَى وَحَضَرَهُ الْقَبْضُ وَرَأْسُهُ عَلَى فَخِذِ عَائِشَةَ غُشِيَ عَلَيْهِ، فَلَمَّا أَفَاقَ شَخَصَ بَصَرُهُ نَحْوَ سَقْفِ الْبَيْتِ ثُمَّ قَالَ "" اللَّهُمَّ فِي الرَّفِيقِ الأَعْلَى "". فَقُلْتُ إِذًا لاَ يُجَاوِرُنَا. فَعَرَفْتُ أَنَّهُ حَدِيثُهُ الَّذِي كَانَ يُحَدِّثُنَا وَهْوَ صَحِيحٌ.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4437. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்தபோது, “சொர்க்கத்தில் தமது இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம்) உயிர் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப்படாத வரை' அல்லது “(உலக வாழ்வு, மறுமை ஆகிய இரண்டில் ஒன்றைத்) தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாதவரை' எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப் படவில்லை என்று சொல்லிவந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்களது தலை என் மடியின் மீதிருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் மூர்ச்சையடைந்துவிட்டார்கள். மூர்ச்சை தெளிந்தபோது அவர்களது பார்வை வீட்டின் முகட்டை நோக்கி நிலைகுத்தி நின்றது.

பிறகு அவர்கள், “இறைவா! (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்ந்தருள்)” என்று பிரார்த் தித்தார்கள். உடனே நான், “இனி (நபி (ஸல்) அவர்கள்) நம்முடன் இருக்க மாட்டார்கள்” என்று சொன்னேன்.ஏனெனில், அவர்கள் ஆரோக்கியத்துடன் இருந்தபோது சொன்ன (இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்) செய்தி இதுதான் என்று (அவர்களின் மரண வேளையான இப்போது) நான் அறிந்துகொண்டேன்.

அத்தியாயம் : 64
4438. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا عَفَّانُ، عَنْ صَخْرِ بْنِ جُوَيْرِيَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، دَخَلَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَنَا مُسْنِدَتُهُ إِلَى صَدْرِي، وَمَعَ عَبْدِ الرَّحْمَنِ سِوَاكٌ رَطْبٌ يَسْتَنُّ بِهِ، فَأَبَدَّهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَصَرَهُ، فَأَخَذْتُ السِّوَاكَ فَقَصَمْتُهُ وَنَفَضْتُهُ وَطَيَّبْتُهُ، ثُمَّ دَفَعْتُهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَاسْتَنَّ بِهِ، فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اسْتَنَّ اسْتِنَانًا قَطُّ أَحْسَنَ مِنْهُ، فَمَا عَدَا أَنْ فَرَغَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَفَعَ يَدَهُ أَوْ إِصْبَعَهُ ثُمَّ قَالَ "" فِي الرَّفِيقِ الأَعْلَى "". ثَلاَثًا ثُمَّ قَضَى، وَكَانَتْ تَقُولُ مَاتَ بَيْنَ حَاقِنَتِي وَذَاقِنَتِي.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4438. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களை என் நெஞ்சின் மீது சாய்த்து அணைத்துக்கொண்டிருந்தேன். அப்துர் ரஹ்மானுடன், அவர் பல் துலக்கும் ஈரமான (பேரீச்சங்)குச்சி இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பார்வையை அவர் பக்கம் செலுத்த, நான் அந்தப் பல் துலக்கும் குச்சியை எடுத்து அதை (வாயில் வைத்து என் பற்களால் அதன் முனையை) மென்றேன். அதை உதறிப் பக்குவப்படுத்தியபின் நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அதனால் பல் துலக்கினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைவிட அழகாகப் பல் துலக்கியதை அதற்குமுன் நான் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கி முடித்தவுடன் “தம் கையை' அல்லது “தம் விரலை' உயர்த்திப் பிறகு, “(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)” என மும்முறை பிரார்த்தித்தார்கள். பிறகு (தம் ஆயுளை) முடித்துக்கொண்டார்கள்.

அறிவிப்பாளர் உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“என் முகவாய்க்கும் என் நெஞ்சுக்குமிடையே நபி (ஸல்) அவர்களின் தலை (சாய்ந்தபடி) இருந்தபோது அவர்கள் இறந்தார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள்.

அத்தியாயம் : 64
4439. حَدَّثَنِي حِبَّانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا اشْتَكَى نَفَثَ عَلَى نَفْسِهِ بِالْمُعَوِّذَاتِ وَمَسَحَ عَنْهُ بِيَدِهِ فَلَمَّا اشْتَكَى وَجَعَهُ الَّذِي تُوُفِّيَ فِيهِ طَفِقْتُ أَنْفِثُ عَلَى نَفْسِهِ بِالْمُعَوِّذَاتِ، الَّتِي كَانَ يَنْفِثُ، وَأَمْسَحُ بِيَدِ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنْهُ.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4439. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுவிட்டால் பாதுகாப்புக் கோரும் வசனங்களை(க் கொண்ட குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை) ஓதித் தம்மீது ஊதி, தமது கையை (தம் உடல்மீது) தடவிக்கொள்வார்கள்.479

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின் போது, அவர்கள் (ஓதி) ஊதிக்கொள்ளும் பாதுகாப்பு வசனங்களை நான் அவர்கள் மீது (ஓதி) ஊதலானேன். அதை நபி (ஸல்) அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்களின் (உடல்)மீது தடவலானேன்.

அத்தியாயம் : 64
4440.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4440. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்பு அவர்கள் என் பக்கம் தம் முதுகைச் சாய்த்தபடி (என் அரவணைப்பில்) இருக்க, அவர்கள் பக்கம் நான் காது தாழ்த்திக் கேட்டுக்கொண்டிருந்தபோது, அவர்கள், “இறைவா! என்னை மன்னித்து எனக்குக் கருணை புரிவாயாக! (சொர்க்கத்தில்) என்னை (உயர்ந்த) தோழர்களுடன் சேர்த்தருள்வாயாக!” என்று பிரார்த்திப்பதை நான் செவியுற்றேன்.

அத்தியாயம் :
4441. حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ هِلاَلٍ الْوَزَّانِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي مَرَضِهِ الَّذِي لَمْ يَقُمْ مِنْهُ "" لَعَنَ اللَّهُ الْيَهُودَ، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ "". قَالَتْ عَائِشَةُ لَوْلاَ ذَلِكَ لأُبْرِزَ قَبْرُهُ. خَشِيَ أَنْ يُتَّخَذَ مَسْجِدًا.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4441. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள், எந்த நோயிலிருந்து எழுந்திராமல் போய்விட்டார்களோ அந்த நோயின்போது, “அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தட்டும். அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் இந்த அறிவிப்பு (மட்டும்) இல்லாவிட்டால் அவர்களின் அடக்கத் தலம் (அனைவருக்கும் தெரியும்படி) வெளிப்படையாக அமைக்கப்பட்டிருக்கும். ஆயினும், “தமது அடக்கத் தலம் எங்கே வழிபாட்டுத் தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ' என்று அவர்கள் அஞ்சினார்கள்.480

அத்தியாயம் : 64
4442. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَاشْتَدَّ بِهِ وَجَعُهُ اسْتَأْذَنَ أَزْوَاجَهُ أَنْ يُمَرَّضَ فِي بَيْتِي، فَأَذِنَّ لَهُ، فَخَرَجَ وَهْوَ بَيْنَ الرَّجُلَيْنِ تَخُطُّ رِجْلاَهُ فِي الأَرْضِ، بَيْنَ عَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ وَبَيْنَ رَجُلٍ آخَرَ. قَالَ عُبَيْدُ اللَّهِ فَأَخْبَرْتُ عَبْدَ اللَّهِ بِالَّذِي قَالَتْ عَائِشَةُ، فَقَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ هَلْ تَدْرِي مَنِ الرَّجُلُ الآخَرُ الَّذِي لَمْ تُسَمِّ عَائِشَةُ قَالَ قُلْتُ لاَ. قَالَ ابْنُ عَبَّاسٍ هُوَ عَلِيٌّ. وَكَانَتْ عَائِشَةُ زَوْجُ النَّبِيِّ صلى الله عليه وسلم تُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا دَخَلَ بَيْتِي وَاشْتَدَّ بِهِ وَجَعُهُ قَالَ "" هَرِيقُوا عَلَىَّ مِنْ سَبْعِ قِرَبٍ لَمْ تُحْلَلْ أَوْكِيَتُهُنَّ لَعَلِّي أَعْهَدُ إِلَى النَّاسِ "". فَأَجْلَسْنَاهُ فِي مِخْضَبٍ لِحَفْصَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم، ثُمَّ طَفِقْنَا نَصُبُّ عَلَيْهِ مِنْ تِلْكَ الْقِرَبِ، حَتَّى طَفِقَ يُشِيرُ إِلَيْنَا بِيَدِهِ أَنْ قَدْ فَعَلْتُنَّ قَالَتْ ثُمَّ خَرَجَ إِلَى النَّاسِ فَصَلَّى لَهُمْ وَخَطَبَهُمْ.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4442. நபி (ஸல்) அவர்களுடைய துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் வேதனை அதிகரித்தபோது, என் வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற்றிட, தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு அனுமதி அளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் கால்கள் பூமியில் இழுபட, அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில் தொங்கியபடி (என் வீட்டிற்குப்) புறப்பட்டார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் தெரிவித்தபோது அவர்கள், “ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாத அந்த வேறொரு மனிதர் யார் என்று தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், “தெரியாது' என்று பதிலளித்தேன். “அவர்தான் அலீ பின் அபீதாலிப்” என்று அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நோய்க்காலப் பராமரிப்புக்காக) என் இல்லத்திற்கு வந்து, அவர்களின் நோய் கடுமையாகிவிட்டபோது அவர்கள், “வாய்ப் பகுதி அவிழ்க்கப்படாத ஏழு தோல் பைகளிலிருந்து (நீரை) என்மீது ஊற்றுங்கள். (அதன் குளிர்ச்சியால்) மக்களுக்கு நான் உபதேசம் செய்யக்கூடும்” என்று கூறினார்கள்.

எனவே, நாங்கள் அவர்களை ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்குச் சொந்த மான துணி அலசும் பாத்திரத்தின்மேல் அமரவைத்தோம். பிறகு அவர்கள்மீது தோல் பைகளிலிருந்து (நீரை) ஊற்றத் தொடங்கினோம். அவர்கள், “(சொன்னபடி) செய்துவிட்டீர்கள் (போதும்)” என்று கையால் சைகை செய்யலானார்கள். பிறகு மக்களை நோக்கிப் புறப்பட்டுச் சென்று அவர்களுக்குத் தொழுவித்தார்கள்; பிறகு அவர்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.481

அத்தியாயம் : 64