4316. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قِيلَ لِلْبَرَاءِ وَأَنَا أَسْمَعُ، أَوَلَّيْتُمْ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ حُنَيْنٍ فَقَالَ أَمَّا النَّبِيُّ صلى الله عليه وسلم فَلاَ، كَانُوا رُمَاةً فَقَالَ "" أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ "".
பாடம் : 55 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல (போர்க்)களங்களில் உதவி புரிந்துள் ளான். “ஹ‚னைன்' (போர் நடைபெற்ற) நாளிலும் (உதவி புரிந்தான்). அப்போது நீங்கள் (எண்ணிக்கையில்) அதிகமாக இருந்தது உங்களுக்கு மிதப்பை தந்தது. ஆனால், அ(ந்த எண்ணிக்கையான)து உங்களுக்குச் சிறிதளவும் பயன் தரவில்லை. பூமி விசாலமானதாக இருந்தும் அது உங்களுக்குக் குறுகிவிட்டது. பின்னர் நீங்கள் புறமுதுகு காட்டியவாறு பின்வாங்கி (ஓடி)னீர்கள்... (9:25-27)344
4316. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம், “நீங்கள் ஹுனைன் போரின்போது நபி (ஸல்) அவர்களுடன் தோற்றுப் பின்வாங்கிச் சென்றீர்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “(எங்களில் சிலர் பின்வாங்கிச் சென்றது உண்மையே. ஆயினும்,) நபி (ஸல்) அவர்களோ பின்வாங்கிச் செல்லவில்லை. (எதிரிகளான) ஹவாஸின் குலத்தார் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தனர். நபி (ஸல்) அவர்கள்,

“நான் இறைத்தூதர்தான்;இது பொய்யல்ல.நான் அப்துல் முத்தலிபின்(மகனுடைய) மகன் ஆவேன்'

என்று (பாடியபடி) கூறிக்கொண்டிருந்தார்கள்.


அத்தியாயம் : 64
4317. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعَ الْبَرَاءَ ـ وَسَأَلَهُ رَجُلٌ مِنْ قَيْسٍ ـ أَفَرَرْتُمْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ حُنَيْنٍ فَقَالَ لَكِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَفِرَّ، كَانَتْ هَوَازِنُ رُمَاةً، وَإِنَّا لَمَّا حَمَلْنَا عَلَيْهِمِ انْكَشَفُوا، فَأَكْبَبْنَا عَلَى الْغَنَائِمِ، فَاسْتُقْبِلْنَا بِالسِّهَامِ، وَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى بَغْلَتِهِ الْبَيْضَاءِ، وَإِنَّ أَبَا سُفْيَانَ آخِذٌ بِزِمَامِهَا وَهْوَ يَقُولُ {أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ}. قَالَ إِسْرَائِيلُ وَزُهَيْرٌ نَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ بَغْلَتِهِ.
பாடம் : 55 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல (போர்க்)களங்களில் உதவி புரிந்துள் ளான். “ஹ‚னைன்' (போர் நடைபெற்ற) நாளிலும் (உதவி புரிந்தான்). அப்போது நீங்கள் (எண்ணிக்கையில்) அதிகமாக இருந்தது உங்களுக்கு மிதப்பை தந்தது. ஆனால், அ(ந்த எண்ணிக்கையான)து உங்களுக்குச் சிறிதளவும் பயன் தரவில்லை. பூமி விசாலமானதாக இருந்தும் அது உங்களுக்குக் குறுகிவிட்டது. பின்னர் நீங்கள் புறமுதுகு காட்டியவாறு பின்வாங்கி (ஓடி)னீர்கள்... (9:25-27)344
4317. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைஸ் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் என்னிடம், “நீங்கள் ஹுனைன் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (தனியே) விட்டுவிட்டு (புறமுதுகிட்டு) ஓடிவிட்டீர்களா?” என்று கேட்டார். நான், “(எங்களில் சிலர் அப்படி ஓடியது உண்மைதான்;) ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வாங்கி ஓடவில்லை. ஹவாஸின் குலத்தார் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தனர். நாங்கள் அவர்கள்மீது (முதலில்) தாக்குதல் நடத்தியபோது அவர்கள் தோற்று (சிதறியோடி)விட்டனர்.

ஆகவே, நாங்கள் போர்ச் செல்வங் களைச் சேகரிக்க விரைந்தோம். அப்போது நாங்கள் அம்புகளை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது “பைளா' எனும் வெள்ளைக் கோவேறு கழுதையின்மீது அமர்ந்துகொண்டிருக்கக் கண்டேன். அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள்,

“நான் இறைத்தூதர்தான்;இது பொய்யல்ல...”

என்று (பாடியபடி) கூறிக்கொண்டிருந் தார்கள்.346

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இஸ்ராயீல் பின் யூனுஸ் (ரஹ்), ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் தமது கோவேறு கழுதையிóருந்து இறங்கினார்கள்” என்று அறிவித்துள்ளனர்.347


அத்தியாயம் : 64
4318. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي لَيْثٌ، حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ،. وَحَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ،، قَالَ مُحَمَّدُ بْنُ شِهَابٍ وَزَعَمَ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ مَرْوَانَ، وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، أَخْبَرَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ حِينَ جَاءَهُ وَفْدُ هَوَازِنَ مُسْلِمِينَ، فَسَأَلُوهُ أَنْ يَرُدَّ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَسَبْيَهُمْ، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَعِي مَنْ تَرَوْنَ، وَأَحَبُّ الْحَدِيثِ إِلَىَّ أَصْدَقُهُ، فَاخْتَارُوا إِحْدَى الطَّائِفَتَيْنِ إِمَّا السَّبْىَ، وَإِمَّا الْمَالَ، وَقَدْ كُنْتُ اسْتَأْنَيْتُ بِكُمْ ". وَكَانَ أَنْظَرَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِضْعَ عَشْرَةَ لَيْلَةً، حِينَ قَفَلَ مِنَ الطَّائِفِ، فَلَمَّا تَبَيَّنَ لَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم غَيْرُ رَادٍّ إِلَيْهِمْ إِلاَّ إِحْدَى الطَّائِفَتَيْنِ قَالُوا فَإِنَّا نَخْتَارُ سَبْيَنَا. فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمُسْلِمِينَ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ " أَمَّا بَعْدُ، فَإِنَّ إِخْوَانَكُمْ قَدْ جَاءُونَا تَائِبِينَ، وَإِنِّي قَدْ رَأَيْتُ أَنْ أَرُدَّ إِلَيْهِمْ سَبْيَهُمْ، فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يُطَيِّبَ ذَلِكَ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَكُونَ عَلَى حَظِّهِ، حَتَّى نُعْطِيَهُ إِيَّاهُ مِنْ أَوَّلِ مَا يُفِيءُ اللَّهُ عَلَيْنَا، فَلْيَفْعَلْ ". فَقَالَ النَّاسُ قَدْ طَيَّبْنَا ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّا لاَ نَدْرِي مَنْ أَذِنَ مِنْكُمْ فِي ذَلِكَ مِمَّنْ لَمْ يَأْذَنْ فَارْجِعُوا حَتَّى يَرْفَعَ إِلَيْنَا عُرَفَاؤُكُمْ أَمْرَكُمْ ". فَرَجَعَ النَّاسُ فَكَلَّمَهُمْ عُرَفَاؤُهُمْ ثُمَّ رَجَعُوا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرُوهُ أَنَّهُمْ قَدْ طَيَّبُوا وَأَذِنُوا. هَذَا الَّذِي بَلَغَنِي عَنْ سَبْىِ هَوَازِنَ.
பாடம் : 55 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல (போர்க்)களங்களில் உதவி புரிந்துள் ளான். “ஹ‚னைன்' (போர் நடைபெற்ற) நாளிலும் (உதவி புரிந்தான்). அப்போது நீங்கள் (எண்ணிக்கையில்) அதிகமாக இருந்தது உங்களுக்கு மிதப்பை தந்தது. ஆனால், அ(ந்த எண்ணிக்கையான)து உங்களுக்குச் சிறிதளவும் பயன் தரவில்லை. பூமி விசாலமானதாக இருந்தும் அது உங்களுக்குக் குறுகிவிட்டது. பின்னர் நீங்கள் புறமுதுகு காட்டியவாறு பின்வாங்கி (ஓடி)னீர்கள்... (9:25-27)344
4318. மர்வான் பின் அல்ஹகம் மற்றும் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகியோர் கூறியதாவது:

ஹவாஸின் குலத்தின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (“ஜிஇர்ரானா' என்னும் இடத்திற்கு) முஸ்லிம்களாக வந்தபோது நபி (ஸல்) அவர்கள் எழுந்திருத்தார்கள். (வந்தவர்கள்) நபியவர்களிடம் (முஸ்லிம்கள் ஹுனைன் போரில் கைப்பற்றிய) தம் செல்வங்களையும் போர்க் கைதிகளையும் திருப்பித் தந்துவிடும்படி கேட்டார்கள். 

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னுடன் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இவர்களும் (இந்தப் போர் வீரர்களும்) இருக்கின்றனர். (இவர்களுக்கும் நான் போர்ச் செல்வத்தில் பங்கு தர வேண்டியுள்ளது.) பேச்சில் எனக்கு மிகவும் பிரியமானது உண்மையான பேச்சேயாகும். போர்க் கைதிகள் அல்லது (உங்கள்) செல்வங்கள் இரண்டில் நீங்கள் விரும்பியதைத் திரும்பப் பெற்றுக்கொள் ளுங்கள். நான் உங்களை எதிர்பார்த்து(க் கைதிகளைப் பங்கிடாமல்) இருந்தேன்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பியபோது பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் ஹவாஸின் குலத்தாரை எதிர்பார்த்துக் காத்திருந் தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டிலொன்றைத்தான் திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக் குத் தெளிவாகிவிட்டபோது, “எங்கள் கைதிகளையே நாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுக்கேற்ற முறையில்  புகழ்ந்துவிட்டு, “இறைவாழ்த்துக்குப்பின்! உங்களுடைய இந்தச் சகோதரர்கள் நம்மிடம்  மனம் திருந்தியவர்களாக வந்துள்ளனர். இவர்களில் (நம்மிடம்) போர்க் கைதிகளாக இருப்பவர்களை இவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவதை நான் உசிதமானதாகக் கருதுகிறேன். உங்களில் எவர் மனப்பூர்வமாக இதற்குச் சம்மதிக்கின்றாரோ அவர் திருப்பித் தந்துவிடட்டும்; அல்லாஹ், (இனிவரும் நாட்களில்) முதலாவதாக நமக்குத் தரவிருக்கும் (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வங்களிலிருந்து அவருக்கு நாம் தருகின்ற வரை அவற்றைத் தம்மிடமே வைத்திருக்க எவர் விரும்புகிறாரோ அவர் அவ்வாறே வைத்திருக்கட்டும்” என்று கூறினார்கள்.

மக்கள், “நாங்கள் மனப்பூர்வமாக (போர்க் கைதிகளைத்) திருப்பிக் கொடுக்கச் சம்மதிக்கின்றோம், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களில் இதற்கு யார் சம்மதிக்கிறார், யார் சம்மதிக்கவில்லை என்பது எமக்குத் தெரியாது. ஆகவே, நீங்கள் திரும்பிச் சென்றுவிடுங்கள். உங்களிடையேயுள்ள தலைவர்கள் உங்கள் முடிவை எனக்குத் தெரிவிக்கட்டும்” என்று  கூறினார்கள்.

மக்கள் திரும்பிச் செல்ல, அவர்களு டன் அவர்களின் தலைவர்கள் பேசினார் கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தலைவர்கள் திரும்பி வந்து, மக்கள் மனப்பூர்வமாகச் சம்மதித்து விட்டதாகத் தெரிவித்தார்கள்.

(அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் (ரஹ்) கூறுகிறார்கள்:)

இதுதான் ஹவாஸின் குலத்தாரின் போர்க் கைதிகள் குறித்து நமக்கு எட்டிய செய்தியாகும்.348

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
4320. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، أَنَّ عُمَرَ، قَالَ يَا رَسُولَ اللَّهِ. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا قَفَلْنَا مِنْ حُنَيْنٍ سَأَلَ عُمَرُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ نَذْرٍ كَانَ نَذَرَهُ فِي الْجَاهِلِيَّةِ اعْتِكَافٍ، فَأَمَرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِوَفَائِهِ. وَقَالَ بَعْضُهُمْ حَمَّادٌ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ. وَرَوَاهُ جَرِيرُ بْنُ حَازِمٍ وَحَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 55 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல (போர்க்)களங்களில் உதவி புரிந்துள் ளான். “ஹ‚னைன்' (போர் நடைபெற்ற) நாளிலும் (உதவி புரிந்தான்). அப்போது நீங்கள் (எண்ணிக்கையில்) அதிகமாக இருந்தது உங்களுக்கு மிதப்பை தந்தது. ஆனால், அ(ந்த எண்ணிக்கையான)து உங்களுக்குச் சிறிதளவும் பயன் தரவில்லை. பூமி விசாலமானதாக இருந்தும் அது உங்களுக்குக் குறுகிவிட்டது. பின்னர் நீங்கள் புறமுதுகு காட்டியவாறு பின்வாங்கி (ஓடி)னீர்கள்... (9:25-27)344
4320. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஹுனைன் போரிலிருந்து திரும்பி வந்தபோது உமர் (ரலி) அவர்கள், தாம் அறியாமைக் காலத்தில் நேர்ச்சை செய்திருந்த ஓர் “இஃதிகாஃப்' தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை நிறைவேற்றும்படி கட்டளையிட்டார்கள்.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.349


அத்தியாயம் : 64
4321. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ كَثِيرِ بْنِ أَفْلَحَ، عَنْ أَبِي مُحَمَّدٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَامَ حُنَيْنٍ، فَلَمَّا الْتَقَيْنَا كَانَتْ لِلْمُسْلِمِينَ جَوْلَةٌ، فَرَأَيْتُ رَجُلاً مِنَ الْمُشْرِكِينَ، قَدْ عَلاَ رَجُلاً مِنَ الْمُسْلِمِينَ، فَضَرَبْتُهُ مِنْ وَرَائِهِ عَلَى حَبْلِ عَاتِقِهِ بِالسَّيْفِ، فَقَطَعْتُ الدِّرْعَ، وَأَقْبَلَ عَلَىَّ فَضَمَّنِي ضَمَّةً وَجَدْتُ مِنْهَا رِيحَ الْمَوْتِ، ثُمَّ أَدْرَكَهُ الْمَوْتُ فَأَرْسَلَنِي، فَلَحِقْتُ عُمَرَ فَقُلْتُ مَا بَالُ النَّاسِ قَالَ أَمْرُ اللَّهِ عَزَّ وَجَلَّ. ثُمَّ رَجَعُوا وَجَلَسَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" مَنْ قَتَلَ قَتِيلاً لَهُ عَلَيْهِ بَيِّنَةٌ فَلَهُ سَلَبُهُ "". فَقُلْتُ مَنْ يَشْهَدُ لِي ثُمَّ جَلَسْتُ ـ قَالَ ـ ثُمَّ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِثْلَهُ فَقُمْتُ فَقُلْتُ مَنْ يَشْهَدُ لِي ثُمَّ جَلَسْتُ قَالَ ثُمَّ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِثْلَهُ، فَقُمْتُ فَقَالَ "" مَالَكَ يَا أَبَا قَتَادَةَ "". فَأَخْبَرْتُهُ. فَقَالَ رَجُلٌ صَدَقَ وَسَلَبُهُ عِنْدِي، فَأَرْضِهِ مِنِّي. فَقَالَ أَبُو بَكْرٍ لاَهَا اللَّهِ، إِذًا لاَ يَعْمِدُ إِلَى أَسَدٍ مِنْ أُسْدِ اللَّهِ يُقَاتِلُ عَنِ اللَّهِ وَرَسُولِهِ صلى الله عليه وسلم فَيُعْطِيَكَ سَلَبَهُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" صَدَقَ فَأَعْطِهِ "". فَأَعْطَانِيهِ فَابْتَعْتُ بِهِ مَخْرَفًا فِي بَنِي سَلِمَةَ، فَإِنَّهُ لأَوَّلُ مَالٍ تَأَثَّلْتُهُ فِي الإِسْلاَمِ.
பாடம் : 55 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல (போர்க்)களங்களில் உதவி புரிந்துள் ளான். “ஹ‚னைன்' (போர் நடைபெற்ற) நாளிலும் (உதவி புரிந்தான்). அப்போது நீங்கள் (எண்ணிக்கையில்) அதிகமாக இருந்தது உங்களுக்கு மிதப்பை தந்தது. ஆனால், அ(ந்த எண்ணிக்கையான)து உங்களுக்குச் சிறிதளவும் பயன் தரவில்லை. பூமி விசாலமானதாக இருந்தும் அது உங்களுக்குக் குறுகிவிட்டது. பின்னர் நீங்கள் புறமுதுகு காட்டியவாறு பின்வாங்கி (ஓடி)னீர்கள்... (9:25-27)344
4321. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் ஹுனைன் (போர் நடந்த) ஆண்டில் (போருக்காக) நாங்கள் புறப் பட்டோம். (எதிரிகளைப் போர்க் களத்தில்) நாங்கள் சந்தித்தபோது (ஆரம்பத்தில்) முஸ்லிம்கள் (சிலர்) இடையே உறுதியற்ற நிலை ஏற்பட்டது. நான் இணைவைப்பாளன் ஒருவனைப் பார்த்தேன். அவன் ஒரு முஸ்லிமின் மீது ஏறி உட்கார்ந்துகொண்டு அவரைக் கொல்ல முயன்றான். நான் அவன் பின்பக்கமாகச் சென்று வாளால் அவனது (கழுத்துக்குக் கீழே) தோள் நரம்பில் வெட்டி அவனது கவசத்தைத் துண்டித்துவிட்டேன்.

உடனே அவன் (அந்த முஸ்லிமை விட்டுவிட்டு) என்னை இறுக அணைத்துக் கொண்டான். அதனால்  நான் மரணக் காற்றை சுவாசிக்கலானேன். பிறகு மரணம் அவனைத் தழுவ அவன் என்னை விட்டு விட்டான்.

உடனே நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களைச் சென்றடைந்து, “மக்களுக்கு என்ன நேர்ந்தது? (இப்படிக் களத்திலிருந்து பின்வாங்கி ஓடுகிறார்களே)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(எல்லாம்) அல்லாஹ்வின் ஏற்பாடு” என்று பதிலளித்தார்கள். பிறகு, மக்கள் (அப்பாஸ் -ரலி அவர்கள் அழைத்ததால் போர்க் களத்திற்குத்) திரும்பி வந்தார்கள். (தீரத்துடன் போராடி வென்றார்கள்.) பிறகு, நபி (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டு, “போரில் (எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடóóருந்து எடுத்த பொருட்கள் உரியவை” என்று கூறினார்கள். அப்போது நான் எழுந்து நின்று, “எனக்கு எவர் சாட்சியம் சொல்வார்?” என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்துகொண்டேன்.

மீண்டும் நபி (ஸல்) அவர்கள், “போரில் (எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடóó ருந்து எடுத்த பொருட்கள் உரியவை” என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து நின்று, “எனக்கு யார் சாட்சியம் சொல்வார்?” என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்துவிட்டேன். பிறகு, (மூன்றாவது தடவையாக) அதே போன்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். உடனே நான் எழுந்தேன்.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூகத்தாதாவே! உங்களுக்கென்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். (நடந்த நிகழ்ச்சியை) நான் அவர்களிடம் எடுத்துரைத்தேன்.

ஒரு மனிதர், “இவர் உண்மையே சொன்னார், அல்லாஹ்வின் தூதரே! இவரால் கொல்லப்பட்டவரின் உடóó ருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் என்னிடம் உள்ளன. எனக்காக அவரை (ஏதாவது கொடுத்துத்) திருப்திப்படுத்திவிடுங்கள்” என்று சொன்னார். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் அரிமான்களில் ஓர் அரிமான் அல்லாஹ்வின் சார்பாகவும் அவனுடைய தூதரின் சார்பாகவும் போரிட்டு, (தம்மால்) கொல்லப்பட்ட வரின் உடóலிருந்து எடுத்த பொருளை உனக்குக் கொடுத்துவிடுவதை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்” என்று கூறினார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள், “(அபூபக்ர்) உண்மை சொன்னார்” என்று கூறிவிட்டு என்னிடம் கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அதை எனக்கே கொடுத்துவிட்டார்கள். நான் அந்தப் பொருளை விற்றுவிட்டு பனூ சலமா குலத்தார் வாழும் பகுதியில் ஒரு பேரீச்சந்தோட்டத்தை வாங்கினேன். அதுதான் இஸ்லாத்தைத் தழுவியபின் நான் தேடிய முதல் சொத்தாகும்.350


அத்தியாயம் : 64
4322. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ كَثِيرِ بْنِ أَفْلَحَ، عَنْ أَبِي مُحَمَّدٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ أَنَّ أَبَا قَتَادَةَ، قَالَ لَمَّا كَانَ يَوْمُ حُنَيْنٍ نَظَرْتُ إِلَى رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ يُقَاتِلُ رَجُلاً مِنَ الْمُشْرِكِينَ، وَآخَرُ مِنَ الْمُشْرِكِينَ يَخْتِلُهُ مِنْ وَرَائِهِ لِيَقْتُلَهُ، فَأَسْرَعْتُ إِلَى الَّذِي يَخْتِلُهُ فَرَفَعَ يَدَهُ لِيَضْرِبَنِي، وَأَضْرِبُ يَدَهُ، فَقَطَعْتُهَا، ثُمَّ أَخَذَنِي، فَضَمَّنِي ضَمًّا شَدِيدًا حَتَّى تَخَوَّفْتُ، ثُمَّ تَرَكَ فَتَحَلَّلَ، وَدَفَعْتُهُ ثُمَّ قَتَلْتُهُ، وَانْهَزَمَ الْمُسْلِمُونَ، وَانْهَزَمْتُ مَعَهُمْ، فَإِذَا بِعُمَرَ بْنِ الْخَطَّابِ فِي النَّاسِ، فَقُلْتُ لَهُ مَا شَأْنُ النَّاسِ قَالَ أَمْرُ اللَّهِ، ثُمَّ تَرَاجَعَ النَّاسُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ أَقَامَ بَيِّنَةً عَلَى قَتِيلٍ قَتَلَهُ فَلَهُ سَلَبُهُ "". فَقُمْتُ لأَلْتَمِسَ بَيِّنَةً عَلَى قَتِيلِي، فَلَمْ أَرَ أَحَدًا يَشْهَدُ لِي فَجَلَسْتُ، ثُمَّ بَدَا لِي، فَذَكَرْتُ أَمْرَهُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَجُلٌ مِنْ جُلَسَائِهِ سِلاَحُ هَذَا الْقَتِيلِ الَّذِي يَذْكُرُ عِنْدِي فَأَرْضِهِ مِنْهُ. فَقَالَ أَبُو بَكْرٍ كَلاَّ لاَ يُعْطِهِ أُصَيْبِغَ مِنْ قُرَيْشٍ، وَيَدَعَ أَسَدًا مِنْ أُسْدِ اللَّهِ يُقَاتِلُ عَنِ اللَّهِ وَرَسُولِهِ صلى الله عليه وسلم قَالَ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَدَّاهُ إِلَىَّ، فَاشْتَرَيْتُ مِنْهُ خِرَافًا فَكَانَ أَوَّلَ مَالٍ تَأَثَّلْتُهُ فِي الإِسْلاَمِ.
பாடம் : 55 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல (போர்க்)களங்களில் உதவி புரிந்துள் ளான். “ஹ‚னைன்' (போர் நடைபெற்ற) நாளிலும் (உதவி புரிந்தான்). அப்போது நீங்கள் (எண்ணிக்கையில்) அதிகமாக இருந்தது உங்களுக்கு மிதப்பை தந்தது. ஆனால், அ(ந்த எண்ணிக்கையான)து உங்களுக்குச் சிறிதளவும் பயன் தரவில்லை. பூமி விசாலமானதாக இருந்தும் அது உங்களுக்குக் குறுகிவிட்டது. பின்னர் நீங்கள் புறமுதுகு காட்டியவாறு பின்வாங்கி (ஓடி)னீர்கள்... (9:25-27)344
4322. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுனைன் போரின்போது முஸ்லிம்களில் ஒருவர் இணைவைப்பாளர்களில் ஒருவரோடு போரிட்டுக்கொண்டிருந்ததை நான் கண்டேன். இணைவைப்பாளர்களில் இன்னொருவர் அந்த முஸ்óமைக் கொல் வதற்காக அவருக்குப் பின்னாலிருந்து ஒளிந்து ஒளிந்து வந்துகொண்டிருப்பதையும் கண்டேன். ஒளிந்தபடி அவரைத் தாக்க வந்தவரை நோக்கி (அவரைத் தடுப்பதற்காக) நான் விரைந்தோட, அவர் என்னைத் தாக்குவதற்காகத் தமது கையை ஓங்கினார். நான் அவரது கையில் தாக்கி அதைத் துண்டித்துவிட்டேன். பிறகு அவர் என்னைப் பிடித்துக்கொண்டு, நான் (என் உயிர் பிரிந்துவிடுமோ என்று) அஞ்சும் அளவுக்குக் கடுமையாக என்னைக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டுப் பிடி தளர்ந்தார். பிறகு நான் அவரை(க் கீழே) தள்ளிக் கொன்றுவிட்டேன். (ஆனால்,) முஸ்óம்கள் தோற்றுவிட்டனர். நானும் அவர்களுடன் தோற்றுப்போனேன்.

நான் அப்போது (தோற்ற) மக்களி டையே உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இருப்பதைக் கண்டேன். நான் அவர்களிடம், “மக்களுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(எல்லாம்) அல்லாஹ்வின் ஏற்பாடு” என்று சொன்னார்கள். பிறகு மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து (தீரத்துடன் போரிட்டு வென்றார்கள். இறுதியில், தம் போர்ச் செல்வத்தைக் குறித்துக்) கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவர் தன்னால் கொல்லப்பட்ட (எதிரி) ஒருவரை, அவர்தான் கொன்றார் என்பதற்கு ஒரு சான்றைக் கொண்டுவருகிறாரோ அவருக்கே கொல்லப்பட்டவரின் உடóóருந்து எடுக்கப்படும் பொருட்கள் உரியன” என்று சொன்னார்கள்.

ஆகவே, என்னால் கொல்லப்பட்டவரை நான்தான் கொன்றேன் என்பதற்கு சான்று தேடுவதற்காக நான் எழுந்தேன். ஆனால், எனக்காகச் சாட்சியம் சொல்பவர் யாரையும் நான் காணவில்லை. ஆகவே, உட்கார்ந்துகொண்டேன்.

பிறகு ஏதோ தோன்ற, நான் ஒருவரைக் கொன்றதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், “(இவரால் கொல்லப்பட்டதாக) இவர் சொல்கின்ற அந்த மனிதரின் ஆயுதம் என்னிடம் இருக்கின்றது. நானே இதை எடுத்துக்கொள்ள அவரிடமிருந்து (எனக்கு) இசைவு பெற்றுத்தாருங்கள்” என்று சொன்னார்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், “அப்படி முடியாது. (கொல்லப்பட்டவரின்) அந்த உடைமைகளை, அல்லாஹ்வுக் காகவும் அவனுடைய தூதருக்காகவும் போரிடுகின்ற, அல்லாஹ்வின் அரிமாக் களில் ஓர் “அரிமா'வை விட்டுவிட்டு குறைஷியரின் (பலவீனமான) ஒரு குஞ்சுப் பறவைக்கு அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுக்கமாட்டார்கள்” என்று சொன்னார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து எனக்கு அந்தப் பொருளைக் கொடுத்தார்கள். நான் அதை விற்று பேரீச்சந்தோட்டம் ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதுதான் நான் இஸ்லாத்திற்கு வந்தபின் தேடிக்கொண்ட முதல் சொத்தாக அமைந்தது.

அத்தியாயம் : 64
4323. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا فَرَغَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ حُنَيْنٍ بَعَثَ أَبَا عَامِرٍ عَلَى جَيْشٍ إِلَى أَوْطَاسٍ فَلَقِيَ دُرَيْدَ بْنَ الصِّمَّةِ، فَقُتِلَ دُرَيْدٌ وَهَزَمَ اللَّهُ أَصْحَابَهُ. قَالَ أَبُو مُوسَى وَبَعَثَنِي مَعَ أَبِي عَامِرٍ فَرُمِيَ أَبُو عَامِرٍ فِي رُكْبَتِهِ، رَمَاهُ جُشَمِيٌّ بِسَهْمٍ فَأَثْبَتَهُ فِي رُكْبَتِهِ، فَانْتَهَيْتُ إِلَيْهِ فَقُلْتُ يَا عَمِّ مَنْ رَمَاكَ فَأَشَارَ إِلَى أَبِي مُوسَى فَقَالَ ذَاكَ قَاتِلِي الَّذِي رَمَانِي. فَقَصَدْتُ لَهُ فَلَحِقْتُهُ فَلَمَّا رَآنِي وَلَّى فَاتَّبَعْتُهُ وَجَعَلْتُ أَقُولُ لَهُ أَلاَ تَسْتَحِي، أَلاَ تَثْبُتُ. فَكَفَّ فَاخْتَلَفْنَا ضَرْبَتَيْنِ بِالسَّيْفِ فَقَتَلْتُهُ ثُمَّ قُلْتُ لأَبِي عَامِرٍ قَتَلَ اللَّهُ صَاحِبَكَ. قَالَ فَانْزِعْ هَذَا السَّهْمَ فَنَزَعْتُهُ فَنَزَا مِنْهُ الْمَاءُ. قَالَ يَا ابْنَ أَخِي أَقْرِئِ النَّبِيَّ صلى الله عليه وسلم السَّلاَمَ، وَقُلْ لَهُ اسْتَغْفِرْ لِي. وَاسْتَخْلَفَنِي أَبُو عَامِرٍ عَلَى النَّاسِ، فَمَكَثَ يَسِيرًا ثُمَّ مَاتَ، فَرَجَعْتُ فَدَخَلْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فِي بَيْتِهِ عَلَى سَرِيرٍ مُرْمَلٍ وَعَلَيْهِ فِرَاشٌ قَدْ أَثَّرَ رِمَالُ السَّرِيرِ بِظَهْرِهِ وَجَنْبَيْهِ، فَأَخْبَرْتُهُ بِخَبَرِنَا وَخَبَرِ أَبِي عَامِرٍ، وَقَالَ قُلْ لَهُ اسْتَغْفِرْ لِي، فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ ثُمَّ رَفَعَ يَدَيْهِ فَقَالَ "" اللَّهُمَّ اغْفِرْ لِعُبَيْدٍ أَبِي عَامِرٍ "". وَرَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ ثُمَّ قَالَ "" اللَّهُمَّ اجْعَلْهُ يَوْمَ الْقِيَامَةِ فَوْقَ كَثِيرٍ مِنْ خَلْقِكَ مِنَ النَّاسِ "". فَقُلْتُ وَلِي فَاسْتَغْفِرْ. فَقَالَ "" اللَّهُمَّ اغْفِرْ لِعَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ ذَنْبَهُ وَأَدْخِلْهُ يَوْمَ الْقِيَامَةِ مُدْخَلاً كَرِيمًا "". قَالَ أَبُو بُرْدَةَ إِحْدَاهُمَا لأَبِي عَامِرٍ وَالأُخْرَى لأَبِي مُوسَى.
பாடம் : 56 “அவ்த்தாஸ்' போர்351
4323. அபூமூசா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள், ஹுனைன் போரை முடித்துக்கொண்டு திரும்பிய போது, அபூஆமிர் (ரலி) அவர்களை (தளபதியாக்கி) “அவ்த்தாஸ்' பள்ளத்தாக்கிற்கு ஒரு படையை அனுப்பிவைத்தார்கள். அப்போது அபூஆமிர் அவர்கள் (கவிஞன்) “துரைத் பின் அஸ்ஸிம்மா'வைச் சந்தித்தார்கள். (அவர்கள் இருவருக்கு மிடையில் சண்டை நடந்தது. அதில்) துரைத் கொல்லப்பட்டான். அவனுடைய தோழர்களை அல்லாஹ் தோற்கடித்தான்.

அபூஆமிர் (ரலி) அவர்களுடன் என்னையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் போருக்கு) அனுப்பியிருந்தார்கள். அப்போரின்போது அபூஆமிர் அவர்களின் முழங்காலில் அம்பு பாய்ந்தது. ஜுஷம் குலத்தைச் சேர்ந்த ஒருவனே அந்த அம்பை எய்து, அதை அவர்களது முழங்காலில் நிறுத்தினான். உடனே நான் அவர்களுக்கு அருகில் சென்று, “என் தந்தையின் சகோதரரே! உங்கள்மீது அம்பெய்தவன் யார்?” என்று கேட்டேன். “என்மீது அம்பெய்து என்னைக் கொன்றவன் இதோ!” என்று (அவனை நோக்கி) என்னிடம் சைகை காட்டினார்கள். நான் அவனை நோக்கிச் சென்று, அவனை அடைந்தேன். என்னைக் கண்டதும் அவன் புறமுதுகிட்டு ஓடலானான். அவனைப் பின்தொடர்ந்து நானும் ஓடிக்கொண்டே, “(என்னைக் கண்டு ஓடுகிறாயே) உனக்கு வெட்கமில்லையா? நீ நிற்கமாட்டாயா?” என்று கேட்டேன். உடனே அவன் (ஓடுவதை) நிறுத்திக்கொண்டான். பிறகு நாங்கள் இருவரும் வாளால் மோதிக்கொண்டோம். அப்போது அவனை நான் கொன்றுவிட்டேன்.

பிறகு நான் அபூஆமிர் அவர்களிடம் (சென்று), “உங்களைக் கொல்ல முயன்ற ஆளை அல்லாஹ் (என் மூலம்) கொன்றுவிட்டான்” என்று கூறினேன். பிறகு, (“எனது முழங்காலில் பாய்ந்திருக்கும்) இந்த அம்பைப் பிடுங்கியெடு” என்று அவர்கள் கூற, உடனே நான் அதைப் பிடுங்கினேன். அதிலிருந்து நீர் கொட்டியது. “என் சகோதரரின் மகனே! நபி (ஸல்) அவர்களுக்கு (என்) சலாம் கூறி, எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கேட்கும்படி கோரு” என்று அபூஆமிர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். பிறகு என்னைத் தம் பிரதிநிதியாக மக்களுக்கு நியமித்துவிட்டு, சிறிது நேரத்திற்குப்பின் அபூஆமிர் (ரலி) அவர்கள் (வீர)மரணமடைந்தார்கள்.

பிறகு (அங்கிருந்து) நான் திரும்பி, நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் தமது வீட்டில் (பேரீச்சம் நாரால் வேயப்பட்ட) கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார்கள். அதன்மீது விரிப்பு ஒன்று இருந்தது.352 (எனினும்) கட்டிலின் கயிறு நபி (ஸல்) அவர்களின் முதுகிலும், இரு விலாப் புறங்களிலும் அடையாளம் பதித்திருந்தது. பிறகு அவர்களிடம் எங்கள் செய்தியையும் அபூஆமிர் அவர்களின் செய்தியையும் கூறி, தமக்காகப் பாவமன்னிப்புக் கேட்கும்படி அபூஆமிர் அவர்கள் வேண்டியிருக்கிறார்கள் என்பது பற்றிக் கூறினேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரும்படி கூறி, அதில் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி, “இறைவா! அபூஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக! மறுமை நாளில் உன் படைப்பினமான மனிதர்களில் பலரையும்விட (தகுதியில்) உயர்ந்தவராக அவரை ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களின் அக்குள்கள் இரண்டின் வெண்மையையும் நான் பார்த்தேன்.

உடனே நான், “எனக்காகவும் பாவமன்னிப்புக் கோருங்கள் (நபியே!)” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “இறைவா! அப்துல்லாஹ் பின் கைஸின் பாவத்தை மன்னித்து, மறுமை நாளில் கண்ணியம் நிறைந்த இருப்பிடத்திற்கு அவரை அனுப்புவாயாக” என்று பிரார்த்தித்தார்கள்.

அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(நபி (ஸல்) அவர்கள் புரிந்த இரு பிரார்த்தனைகளில்) ஒன்று அபூஆமிர் (ரலி) அவர்களுக்கும் மற்றொன்று அபூமூசா (ரலி) அவர்களுக்கும் உரியதாகும்.

அத்தியாயம் : 64
4324. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، سَمِعَ سُفْيَانَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّهَا أُمِّ سَلَمَةَ ـ رضى الله عنها ـ دَخَلَ عَلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم وَعِنْدِي مُخَنَّثٌ فَسَمِعْتُهُ يَقُولُ لِعَبْدِ اللَّهِ بْنِ أَبِي أُمَيَّةَ يَا عَبْدَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ فَتَحَ اللَّهُ عَلَيْكُمُ الطَّائِفَ غَدًا فَعَلَيْكَ بِابْنَةِ غَيْلاَنَ، فَإِنَّهَا تُقْبِلُ بِأَرْبَعٍ وَتُدْبِرُ بِثَمَانٍ. وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يَدْخُلَنَّ هَؤُلاَءِ عَلَيْكُنَّ "". قَالَ ابْنُ عُيَيْنَةَ وَقَالَ ابْنُ جُرَيْجٍ الْمُخَنَّثُ هِيتٌ. حَدَّثَنَا مَحْمُودٌ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ بِهَذَا، وَزَادَ وَهْوَ مُحَاصِرٌ الطَّائِفَ يَوْمَئِذٍ.
பாடம் : 57 ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடந்த “தாயிஃப்' போர்353 இது குறித்து மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4324. (நபி (ஸல்) அவர்களின் துணைவி யார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் அரவானி ஒருவர் அமர்ந்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த அரவானி (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவிடம், “அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர்மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால், நீ ஃகைலானின் மகளை மணமுடித்துக் கொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நான்கு (சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்” என்று சொல்வதை நான் செவியுற்றேன்.354

(இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், “இந்த அரவானிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒருபோதும் வர (அனுமதிக்க)க் கூடாது” என்று சொன்னார்கள்.

இப்னு உயைனா (ரஹ்), இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில் அந்த அரவானியின் பெயர் “ஹீத்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.355

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் “அப்போது நபி (ஸல்) அவர்கள் தாயிஃபை முற்றுகையிட்டுக்கொண்டிருந்தார்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம் : 64
4325. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي الْعَبَّاسِ الشَّاعِرِ الأَعْمَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ لَمَّا حَاصَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الطَّائِفَ فَلَمْ يَنَلْ مِنْهُمْ شَيْئًا قَالَ "" إِنَّا قَافِلُونَ إِنْ شَاءَ اللَّهُ "". فَثَقُلَ عَلَيْهِمْ وَقَالُوا نَذْهَبُ وَلاَ نَفْتَحُهُ ـ وَقَالَ مَرَّةً نَقْفُلُ ـ فَقَالَ "" اغْدُوا عَلَى الْقِتَالِ "". فَغَدَوْا فَأَصَابَهُمْ جِرَاحٌ فَقَالَ "" إِنَّا قَافِلُونَ غَدًا إِنْ شَاءَ اللَّهُ "". فَأَعْجَبَهُمْ فَضَحِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم، وَقَالَ سُفْيَانُ مَرَّةً فَتَبَسَّمَ. قَالَ قَالَ الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ الْخَبَرَ كُلَّهُ.
பாடம் : 57 ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடந்த “தாயிஃப்' போர்353 இது குறித்து மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4325. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:356

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்தை முற்றுகையிட்டபோது அவர்களால் அம்மக்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, “இறைவன் நாடினால் நாம் (நாளை மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்” என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் இப்படிச் சொன்னது நபித்தோழர்களுக்கு வருத்தமளித்தது. அவர்கள், “இதை வெற்றி கொள்ளாமல் நாம் திரும்பிச் செல்வதா?” என்று பேசிக்கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (மீண்டும்) ஒருமுறை, “நாம் திரும்பிச் செல்வோம்” என்று சொன்னார்கள். பிறகு (தோழர்களின் தயக்கத்தைக் கண்டு) முற்பகலிலேயே போர் புரியுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்கள் முற்பகலில் போர் புரிய, (அதனால்) (பலத்த) காயங்களுக்கு ஆளானார்கள்.357

அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைவன் நாடினால் நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னது நபித்தோழர்களுக்கு (இப்போது) மகிழ்ச்சியை அளித்தது. (அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு) நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.358

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் இதை அறிவித்தபோது ஒருமுறை, “நபி (ஸல்) அவர்கள் (சிரித்தார்கள்” என்பதற்குப் பதிலாக) புன்னகைத்தார்கள்” என்று அறிவித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
4326. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، قَالَ سَمِعْتُ أَبَا عُثْمَانَ، قَالَ سَمِعْتُ سَعْدًا ـ وَهْوَ أَوَّلُ مَنْ رَمَى بِسَهْمٍ فِي سَبِيلِ اللَّهِ ـ وَأَبَا بَكْرَةَ ـ وَكَانَ تَسَوَّرَ حِصْنَ الطَّائِفِ فِي أُنَاسٍ ـ فَجَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالاَ سَمِعْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ وَهْوَ يَعْلَمُ فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ "". وَقَالَ هِشَامٌ وَأَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي الْعَالِيَةِ، أَوْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ قَالَ سَمِعْتُ سَعْدًا، وَأَبَا، بَكْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. قَالَ عَاصِمٌ قُلْتُ لَقَدْ شَهِدَ عِنْدَكَ رَجُلاَنِ حَسْبُكَ بِهِمَا. قَالَ أَجَلْ أَمَّا أَحَدُهُمَا فَأَوَّلُ مَنْ رَمَى بِسَهْمٍ فِي سَبِيلِ اللَّهِ، وَأَمَّا الآخَرُ فَنَزَلَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ثَالِثَ ثَلاَثَةٍ وَعِشْرِينَ مِنَ الطَّائِفِ.
பாடம் : 57 ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடந்த “தாயிஃப்' போர்353 இது குறித்து மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4326. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தெரிந்துகொண்டே தம்மைத் தம் தந்தையல்லாத (வேறு) ஒருவருடன் இணைத்து, (“நான் அவருடைய மகன்தான்” என்று) வாதாடுகிறாரோ அவருக்குச் சொர்க்கம் (புகுவது) தடை செய்யப்பட்டதாகும்.

“அல்லாஹ்வின் பாதையில் ஓர் அம்பை முதன் முதலாக எய்தவரான சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தும் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய தாயிஃப் நகர மக்களின் அடிமைகள்) சிலரோடு தாயிஃப் கோட்டையின் மதில் சுவரைத் தாண்டிக் குதித்து நபி (ஸல்) அவர்களிடம் வந்த அபூபக்ரா (ரலி)359 அவர்களிடமிருந்தும் இதை நான் செவியுற்றேன்” என்று அபூஉஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் ஆஸிம் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள், (தமக்கு இதை அறிவித்த அபுல்ஆலியா, அல்லது அபூஉஸ்மான் (ரஹ்) அவர்களிடம்), “உங்களிடம் (இந்த நபிமொழிக்கு) இருவர் சாட்சியம் பகர்ந்துள்ளனர்; அவர்கள் இருவரும் உங்களுக்குப் போதும்” என்று சொன்னார்கள்.

அதற்கு அவர்கள், “ஆம்; அவ்விரு வரில் ஒருவர் அல்லாஹ்வின் பாதை யில் (முதன் முதலாக) ஓர் அம்பை எறிந்தவராவார். மற்றொருவரோ, நபி (ஸல்) அவர்களிடம் தாயிஃபிலிருந்து வந்த இருபத்து மூன்று பேரில் மூன்றாமவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் மொத்தம் ஆறு அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
4328. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ نَازِلٌ بِالْجِعْرَانَةِ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ وَمَعَهُ بِلاَلٌ، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم أَعْرَابِيٌّ فَقَالَ أَلاَ تُنْجِزُ لِي مَا وَعَدْتَنِي. فَقَالَ لَهُ "" أَبْشِرْ "". فَقَالَ قَدْ أَكْثَرْتَ عَلَىَّ مِنْ أَبْشِرْ. فَأَقْبَلَ عَلَى أَبِي مُوسَى وَبِلاَلٍ كَهَيْئَةِ الْغَضْبَانِ فَقَالَ "" رَدَّ الْبُشْرَى فَاقْبَلاَ أَنْتُمَا "". قَالاَ قَبِلْنَا. ثُمَّ دَعَا بِقَدَحٍ فِيهِ مَاءٌ فَغَسَلَ يَدَيْهِ وَوَجْهَهُ فِيهِ، وَمَجَّ فِيهِ، ثُمَّ قَالَ "" اشْرَبَا مِنْهُ، وَأَفْرِغَا عَلَى وُجُوهِكُمَا وَنُحُورِكُمَا، وَأَبْشِرَا "". فَأَخَذَا الْقَدَحَ فَفَعَلاَ، فَنَادَتْ أُمُّ سَلَمَةَ مِنْ وَرَاءِ السِّتْرِ أَنْ أَفْضِلاَ لأُمِّكُمَا. فَأَفْضَلاَ لَهَا مِنْهُ طَائِفَةً.
பாடம் : 57 ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடந்த “தாயிஃப்' போர்353 இது குறித்து மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4328. அபூமூசா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

மக்காவுக்கும் மதீனாவிற்குமிடையே “ஜிஅரானா' எனுமிடத்தில் பிலால் (ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்தபோது நான் அவர்களிடம் இருந்தேன்.360 அப்போது கிராமவாசி ஒருவர் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து, “நீங்கள் எனக்கு வாக்களித்ததைக் கொடுக்கமாட்டீர்களா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “நற்செய்தியைப் பெற்றுக்கொள்” என்று சொன்னார்கள்.361 அதற்கு அவர், “இந்த நற்செய்தியைத் தான் எனக்கு நீங்கள் நிறையச் சொல்லிவிட்டீர்களே!” என்று சொன்னார்.

உடனே நபி (ஸல்) அவர்கள் கோப மடைந்தவரைப் போன்று என்னையும் பிலால் (ரலி) அவர்களையும் நோக்கி வந்தார்கள். “இவர் (எனது) நற்செய்தியை ஏற்க மறுத்துவிட்டார். நீங்கள் இருவரும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். நாங்கள் இருவரும், “நாங்கள் ஏற்றுக் கொண்டோம்” என்று கூறினோம். பிறகு தண்ணீருள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டுவரச்சொல்லி, அதில் தம் இரு கைகளையும் தமது முகத் தையும் கழுவி, அதில் உமிழ்ந்தார்கள்.362

பிறகு (எங்களிடம்), “இதிóருந்து சிறிது அருந்திவிட்டு, உங்கள் முகங் களிலும் உங்கள் மார்புகளிலும் ஊற்றிக் கொள்ளுங்கள்; நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். ஆகவே, நாங்கள் இருவரும் அந்தப் பாத்திரத்தை எடுத்து அவ்வாறே செய்தோம்.

அப்போது (நபிகளாரின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் திரைக்குப் பின்னாலிருந்து எங்கள் இருவரையும் அழைத்து, “(இறைநம்பிக்கையாளர்களான) உங்களின் அன்னை(யான என)க்காகவும் அதிலிருந்து சிறிது (தண்ணீரை) மீதிவையுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் இருவரும் அவர்களுக்காக அதில் சிறிது மீதிவைத்தோம்.


அத்தியாயம் : 64
4329. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّ صَفْوَانَ بْنَ يَعْلَى بْنِ أُمَيَّةَ، أَخْبَرَ أَنَّ يَعْلَى كَانَ يَقُولُ لَيْتَنِي أَرَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ يُنْزَلُ عَلَيْهِ. قَالَ فَبَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْجِعْرَانَةِ وَعَلَيْهِ ثَوْبٌ قَدْ أُظِلَّ بِهِ، مَعَهُ فِيهِ نَاسٌ مِنْ أَصْحَابِهِ، إِذْ جَاءَهُ أَعْرَابِيٌّ عَلَيْهِ جُبَّةٌ مُتَضَمِّخٌ بِطِيبٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَرَى فِي رَجُلٍ أَحْرَمَ بِعُمْرَةٍ فِي جُبَّةٍ بَعْدَ مَا تَضَمَّخَ بِالطِّيبِ فَأَشَارَ عُمَرُ إِلَى يَعْلَى بِيَدِهِ أَنْ تَعَالَ. فَجَاءَ يَعْلَى فَأَدْخَلَ رَأْسَهُ، فَإِذَا النَّبِيُّ صلى الله عليه وسلم مُحْمَرُّ الْوَجْهِ، يَغِطُّ كَذَلِكَ سَاعَةً، ثُمَّ سُرِّيَ عَنْهُ فَقَالَ "" أَيْنَ الَّذِي يَسْأَلُنِي عَنِ الْعُمْرَةِ آنَفًا "". فَالْتُمِسَ الرَّجُلُ فَأُتِيَ بِهِ فَقَالَ "" أَمَّا الطِّيبُ الَّذِي بِكَ فَاغْسِلْهُ ثَلاَثَ مَرَّاتٍ، وَأَمَّا الْجُبَّةُ فَانْزِعْهَا، ثُمَّ اصْنَعْ فِي عُمْرَتِكَ كَمَا تَصْنَعُ فِي حَجِّكَ "".
பாடம் : 57 ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடந்த “தாயிஃப்' போர்353 இது குறித்து மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4329. ஸஃப்வான் பின் யஅலா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது அவர்களைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டாதா என்று நான் ஆசைப்பட்டுவந்தேன்” என்று கூறுவது வழக்கம். ஒருமுறை, நபி (ஸல்) அவர்கள் (தாயிஃபிலிருந்து திரும்பும் சமயம்) ஜிஅரானாவில் இருக்கும்போது அவர்களுக்குத் துணியால் (கூடாரம் அமைத்து) நிழல் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தத் துணிக் (கூடாரத்திற்)குள் நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் தோழர்கள் சிலரும் இருந்தனர்.

அப்போது வாசனைத் திரவியத்தில் தோய்ந்த, மேலங்கியொன்றை அணிந் திருந்த கிராமவாசியொருவர் வந்தார். அவர், “அல்லாஹ்வின் தூதரே! வாசனைத் திரவியத்தைப் பூசிக்கொண்டபின் மேலங்கியொன்றை அணிந்துகொண்டு உம்ராவுக்காக வந்த ஒரு மனிதரைக் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்.

உடனே உமர் (ரலி) அவர்கள் யஅலா (ரலி) அவர்களை, “(அருகில்) வாருங்கள்” என்று கைகளால் சைகை செய்து அழைத்தார்கள். யஅலா (ரலி) அவர்கள் தமது தலையை (கூடாரத்திற்கு) உள்ளே நுழைத்தார்கள். அப்போது (வேத அறிவிப்பு அருளப்பெற்றுக்கொண்டிருக்க) நபி (ஸல்) அவர்களின் முகம் சிவந்து, அவர்கள் அப்படியே சிறிது நேரம் குறட்டைவிட்டபடி இருந்தார்கள். பிறகு (சிறிது சிறிதாக) அந்த நிலை அவர்களைவிட்டு அகன்றது. பிறகு அவர்கள், “சற்று நேரத்திற்கு முன்பு என்னிடம் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்று கேட்டார்கள்.

உடனே அந்த மனிதர், தேடி அழைத்துவரப்பட்டார். நபி (ஸல்) அவர்கள், “உம்மீதுள்ள வாசனைத் திரவியத்தை மூன்று முறை கழுவுக! (தைக்கப்பட்டு அணிந்துள்ள) மேலங்கியைக் கழற்றிவிடுக! பிறகு உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்துகொள்க!” என்று பதிலளித்தார்கள்.363


அத்தியாயம் : 64
4330. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَاصِمٍ، قَالَ لَمَّا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم يَوْمَ حُنَيْنٍ قَسَمَ فِي النَّاسِ فِي الْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ، وَلَمْ يُعْطِ الأَنْصَارَ شَيْئًا، فَكَأَنَّهُمْ وَجَدُوا إِذْ لَمْ يُصِبْهُمْ مَا أَصَابَ النَّاسَ فَخَطَبَهُمْ فَقَالَ "" يَا مَعْشَرَ الأَنْصَارِ أَلَمْ أَجِدْكُمْ ضُلاَّلاً فَهَدَاكُمُ اللَّهُ بِي، وَكُنْتُمْ مُتَفَرِّقِينَ فَأَلَّفَكُمُ اللَّهُ بِي وَعَالَةً، فَأَغْنَاكُمُ اللَّهُ بِي "". كُلَّمَا قَالَ شَيْئًا قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَمَنُّ. قَالَ "" مَا يَمْنَعُكُمْ أَنْ تُجِيبُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم "". قَالَ كُلَّمَا قَالَ شَيْئًا قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَمَنُّ. قَالَ "" لَوْ شِئْتُمْ قُلْتُمْ جِئْتَنَا كَذَا وَكَذَا. أَتَرْضَوْنَ أَنْ يَذْهَبَ النَّاسُ بِالشَّاةِ وَالْبَعِيرِ، وَتَذْهَبُونَ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى رِحَالِكُمْ، لَوْلاَ الْهِجْرَةُ لَكُنْتُ امْرَأً مِنَ الأَنْصَارِ، وَلَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا وَشِعْبًا لَسَلَكْتُ وَادِيَ الأَنْصَارِ وَشِعْبَهَا، الأَنْصَارُ شِعَارٌ وَالنَّاسُ دِثَارٌ، إِنَّكُمْ سَتَلْقَوْنَ بَعْدِي أَثَرَةً فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي عَلَى الْحَوْضِ "".
பாடம் : 57 ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடந்த “தாயிஃப்' போர்353 இது குறித்து மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4330. அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹுனைன் நாளில் போர்ச் செல்வங்களை வழங்கியபோது உள்ளங் கள் தேற்றப்பட வேண்டிய (மக்கா வெற்றியின்போது புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய)வர்களிடையே (அவற்றைப்)பங்கிட்டார்கள். (மதீனாவாசிகளான) அன்சாரிகளுக்கு எதுவும் கொடுக்கவில்லை. மற்றவர்களுக்குக் கிடைத்ததுபோல் தமக்கும் கிடைக்காமல் போனதால் அவர்கள் கவலையடைந்தவர்களைப் போல் காணப்பட்டார்கள்.

ஆகவே, அவர்களிடையே (ஆறுதலாக) நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். (அவ்வுரையில்), “அன்சாரிகளே! உங்களை வழிதவறியவர்களாக நான் காணவில்லையா? அல்லாஹ் என் மூலமாக உங்களுக்கு நல்வழியை அளித்தான். நீங்கள் பிரிந்து (சிதறிக்) கிடந்தீர்கள். அப்போது அல்லாஹ் என் மூலமாக உங்களைப் பரஸ்பரம் நேசமுடையவர்களாக்கினான். நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள். அல்லாஹ், என் மூலமாக உங்களைத் தன்னிறைவுடையவர்களாய் ஆக்கினான் (அல்லவா?)” என்று சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (தம் வருகையால் அன்சாரிகள் அடைந்த நன்மைகளை) ஒவ்வொன்றாகச் சொல்லும்போதெல்லாம், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அதிகமாக உபகாரம் புரிந்தவர்கள்” என்று அன்சாரிகள் கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறிருக்க, அல்லாஹ்வின் தூதருக்கு நீங்கள் பதிலளிக்காமலிருப்பது எதனால்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒன்றைச் சொல்லும்போதெல்லாம் அவர்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே பேருபகாரிகள்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் விரும்பினால் இன்னின்னவாறெல்லாம் (நீங்கள் எனக்குச் செய்த உபகாரங்களை நினைவுபடுத்தும் வகையில்) சொல்ல முடியும். ஆனால், (இந்த) மக்கள் (நான் கொடுக்கும்) ஆடு களையும் ஒட்டகங்களையும் (ஓட்டிக்)கொண்டு போக, நீங்கள் உங்கள் இல்லங் களுக்கு இறைத்தூதரையே (என்னையே) உங்களுடன் கொண்டு செல்வதை விரும்பமாட்டீர்களா?

ஹிஜ்ரத் (நிகழ்ச்சி) மட்டும் நடந்திருக்கா விட்டால் நான் அன்சாரிகளில் ஒருவனாய் இருந்திருப்பேன். மக்களெல்லாரும் ஒரு கணவாயிலும் ஒரு பள்ளத்தாக்கிலும் சென்றாலும் நான் அன்சாரிகள் செல்லும் கணவாயிலும் பள்ளத்தாக்கிலும்தான் செல்வேன். அன்சாரிகள் (மேனியுடன் ஒட்டிய) உள்ளாடைகள் (போன்றவர்கள்) ஆவர். மற்றவர்கள் மேலாடை போன்றவர் கள்.364

நீங்கள் எனக்குப் பின்னால் விரைவிலேயே (ஆட்சியதிகாரத்தில்)உங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை தரப்படுவதைக் காண்பீர்கள். ஆகவே, (எனக்குச் சிறப்புப் பரிசாக மறுமையில் கிடைக்கவிருக்கும்) “ஹவ்ள் (அல்கவ்ஸர்' எனும்) தடாகம் அருகே என்னைச் சந்திக்கும்வரை (நிலைகுலையாமல்) பொறுமையுடன் இருங்கள்” என்று சொன்னார்கள்.365


அத்தியாயம் : 64
4331. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ نَاسٌ مِنَ الأَنْصَارِ حِينَ أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم مَا أَفَاءَ مِنْ أَمْوَالِ هَوَازِنَ، فَطَفِقَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْطِي رِجَالاً الْمِائَةَ مِنَ الإِبِلِ فَقَالُوا يَغْفِرُ اللَّهُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُعْطِي قُرَيْشًا وَيَتْرُكُنَا، وَسُيُوفُنَا تَقْطُرُ مِنْ دِمَائِهِمْ. قَالَ أَنَسٌ فَحُدِّثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمَقَالَتِهِمْ، فَأَرْسَلَ إِلَى الأَنْصَارِ فَجَمَعَهُمْ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ وَلَمْ يَدْعُ مَعَهُمْ غَيْرَهُمْ، فَلَمَّا اجْتَمَعُوا قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" مَا حَدِيثٌ بَلَغَنِي عَنْكُمْ "". فَقَالَ فُقَهَاءُ الأَنْصَارِ أَمَّا رُؤَسَاؤُنَا يَا رَسُولَ اللَّهِ فَلَمْ يَقُولُوا شَيْئًا، وَأَمَّا نَاسٌ مِنَّا حَدِيثَةٌ أَسْنَانُهُمْ فَقَالُوا يَغْفِرُ اللَّهُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُعْطِي قُرَيْشًا وَيَتْرُكُنَا، وَسُيُوفُنَا تَقْطُرُ مِنْ دِمَائِهِمْ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" فَإِنِّي أُعْطِي رِجَالاً حَدِيثِي عَهْدٍ بِكُفْرٍ، أَتَأَلَّفُهُمْ، أَمَا تَرْضَوْنَ أَنْ يَذْهَبَ النَّاسُ بِالأَمْوَالِ وَتَذْهَبُونَ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى رِحَالِكُمْ، فَوَاللَّهِ لَمَا تَنْقَلِبُونَ بِهِ خَيْرٌ مِمَّا يَنْقَلِبُونَ بِهِ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ قَدْ رَضِينَا. فَقَالَ لَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" سَتَجِدُونَ أُثْرَةً شَدِيدَةً، فَاصْبِرُوا حَتَّى تَلْقَوُا اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم فَإِنِّي عَلَى الْحَوْضِ "". قَالَ أَنَسٌ فَلَمْ يَصْبِرُوا.
பாடம் : 57 ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடந்த “தாயிஃப்' போர்353 இது குறித்து மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4331. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹவாஸின் குலத்தாரின் செல்வத்தை (வெற்றிப் பரிசாக) அளித்தபோது நபி (ஸல்) அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) மக்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுக்கலானார்கள். உடனே (அன்சாரிகளில்) சிலர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! (எதிரிகளான) குறைஷியரின் இரத்தம் நம் வாட்களில் சொட்டிக்கொண்டிருக்க, (நமக்குக் கொடுக்காமல்) இவர்களுக்குக் கொடுக்கிறார்களே; ஆனால், (தியாகங்கள் பல புரிந்த) நம்மை விட்டுவிடுகிறார் களே!” என்று (கவலையுடன்) சொன்னார் கள். அவர்களின் இந்தப் பேச்சு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

உடனே நபி (ஸல்) அவர்கள் அன்சாரி களுக்கு ஆளனுப்பி அவர்களைப் பதனிடப்பட்ட தோலால் ஆன ஒரு கூடாரத்தில் ஒன்று திரட்டினார்கள். அவர்களுடன் மற்றவர்களை நபி (ஸல்) அவர்கள் அழைக்கவில்லை. அவர்கள் ஒன்றுகூடியதும் நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, “உங்களைக் குறித்து எனக்கு எட்டியுள்ள செய்தி என்ன? (உண்மைதானா?)” என்று கேட்க அன்சாரிகளில் விவரமானவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் தலைவர்கள் எதுவும் சொல்லவில்லை. எங்களில் இளவயதுடைய மக்கள் சிலர்தான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! நம்முடைய வாட்களில் குறைஷியரின் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்க, நம்மை விட்டுவிட்டு அவர்களுக்குக் கொடுக்கிறார்களே!' என்று பேசிக்கொண்டனர்” என்று கூறினார்கள்.

அப்போது, நபி (ஸல்) அவர்கள், “இறைமறுப்பைவிட்டு இப்போதுதான் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சிலருக்கு நான் கொடுக்கிறேன். (அதன் வாயிலாக) அவர்களுடன் நான் இணக்கம் ஏற்படுத்திக்கொள்கிறேன். மக்கள் (பிற உலகச்) செல்வங்களை எடுத்துக் கொண்டு செல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைத்தூதரையே கொண்டு செல்வதை விரும்பவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் பெற்றுத் திரும்பும் செல்வங்களைவிட நீங்கள் பெற்றுத் திரும்புவதே சிறந்ததாகும்” என்றுசொன்னார்கள்.

அன்சாரிகள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (எங்களுடன் உங்களைக் கொண்டுசெல்வதையே) விரும்புகிறோம்” என்று சொன்னார்கள். அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “விரைவில் (உங்களைவிடப் பிறருக்கு ஆட்சியதிகாரத்தில்) அதிகமாக முன்னுரிமை வழங்கப்படுவதைக் காண்பீர்கள்.

ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (மறுமையில்) சந்திக்கும்வரை பொறுமையாயிருங்கள். ஏனெனில், அன்று நான் (எனக்கு வழங்கப்படவுள்ள சிறப்புப் பரிசான “அல்கவ்ஸர்' எனும்) தடாகத்தின் அருகே இருப்பேன்” என்று சொன்னார்கள். ஆனால், மக்கள் பொறுமையாக இருக்க வில்லை.366


அத்தியாயம் : 64
4332. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ، قَالَ لَمَّا كَانَ يَوْمَ فَتْحِ مَكَّةَ قَسَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم غَنَائِمَ بَيْنَ قُرَيْشٍ. فَغَضِبَتِ الأَنْصَارُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَمَا تَرْضَوْنَ أَنْ يَذْهَبَ النَّاسُ بِالدُّنْيَا، وَتَذْهَبُونَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم "". قَالُوا بَلَى. قَالَ "" لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا أَوْ شِعْبًا لَسَلَكْتُ وَادِيَ الأَنْصَارِ أَوْ شِعْبَهُمْ "".
பாடம் : 57 ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடந்த “தாயிஃப்' போர்353 இது குறித்து மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4332. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

மக்கா வெற்றியின்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியருக்கிடையே போர்ச் செல்வங்களைப் பங்கிட்டார்கள். ஆகவே, அன்சாரிகள் (தமக்குப் பங்கு தரவில்லையே என்று) கோபித்துக்கொண்டார்கள். (இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், “மக்கள் உலகச் செல்வத்தை எடுத்துக்கொண்டு செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரையே உங்களுடன் கொண்டுசெல்வதை விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அன்சாரிகள், “ஆம், (அதைத்தான் விரும்புகிறோம்)” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “மக்கள் ஒரு கணவாயிலோ பள்ளத்தாக்கிலோ சென்றால், நான் அன்சாரிகளின் கணவாயிலோ பள்ளத்தாக்கிலோதான் செல்வேன்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 64
4333. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَزْهَرُ، عَنِ ابْنِ عَوْنٍ، أَنْبَأَنَا هِشَامُ بْنُ زَيْدِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا كَانَ يَوْمَ حُنَيْنٍ الْتَقَى هَوَازِنُ وَمَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَشَرَةُ آلاَفٍ وَالطُّلَقَاءُ فَأَدْبَرُوا قَالَ "" يَا مَعْشَرَ الأَنْصَارِ "". قَالُوا لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ، لَبَّيْكَ نَحْنُ بَيْنَ يَدَيْكَ، فَنَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَنَا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ "". فَانْهَزَمَ الْمُشْرِكُونَ، فَأَعْطَى الطُّلَقَاءَ وَالْمُهَاجِرِينَ وَلَمْ يُعْطِ الأَنْصَارَ شَيْئًا فَقَالُوا، فَدَعَاهُمْ فَأَدْخَلَهُمْ فِي قُبَّةٍ فَقَالَ "" أَمَا تَرْضَوْنَ أَنْ يَذْهَبَ النَّاسُ بِالشَّاةِ وَالْبَعِيرِ، وَتَذْهَبُونَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ""، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ""لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا وَسَلَكَتِ الأَنْصَارُ شِعْبًا لاَخْتَرْتُ شِعْبَ الأَنْصَارِ ""
பாடம் : 57 ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடந்த “தாயிஃப்' போர்353 இது குறித்து மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4333. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுனைன் போரின்போது ஹவாஸின் குலத்தார் (நபி (ஸல்) அவர்களைப்) போர்க் களத்தில் சந்தித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களுடன், (அறப்போர் வீரர்கள்) பத்தாயிரம் பேர் இருந்தனர். (மக்கா வெற்றியின்போது) பொது மன்னிப்பு அளிக்கப்பட்டவர்களும் இருந்தனர்.367

அப்போது (ஹவாஸின் குலத்தாரின் அதிரடித் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல்) அவர்கள் பின்வாங்கிச் சென்ற னர். நபி (ஸல்) அவர்கள், “அன்சாரிகளே! (என்னாயிற்று உங்களுக்கு?)” என்று கேட்க, அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் அழைப்புக்குப் பதிலளித்து உங்களுக்கு அடிபணிந்தோம். இதோ, உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம். உங்கள் முன்னால் இருக்கின்றோம்” என்று பதிலளித்தனர்.

நபி (ஸல்) அவர்கள் (தமது வாகனத்தைவிட்டு) இறங்கி, “நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய துதருமாவேன்” என்று சொன்னார்கள். (பிறகு அந்தப் போரில்) இணைவைப்பாளர்கள் தோற்றுவிட்டனர். பின்னர், நபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியில்) மன்னிப்பளிக்கப்பட்டு (புதிய முஸ்லிம்களாக) இருந்தவர்களுக்கும் முஹாஜிர்களுக்கும் (போர்ச் செல்வத்தில் பங்கு) கொடுத்தார்கள்; அன்சாரிகளுக்கு எதையும் கொடுக்கவில்லை. அன்சாரிகள் (தமக்குக் கொடுக்காததைக் குறித்து அதிருப்தியுடன்) பேசினர்.

உடனே நபி (ஸல்) அவர்கள், அன்சாரிகளை அழைத்து (தாமிருந்த) கூடாரத்தினுள் இருக்கச் செய்து, “இந்த மக்கள் ஆடுகளையும் ஒட்டகங்களையும் கொண்டுசெல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரையே கொண்டுசெல்வதை விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், “மக்கள் ஒரு கணவாயில் நடந்து செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயில் சென்றால், நான் அன்சாரிகளின் கணவாயையே தேர்ந்தெடுப்பேன்” என்றும் சொன்னார்கள்.


அத்தியாயம் : 64
4334. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ جَمَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم نَاسًا مِنَ الأَنْصَارِ، فَقَالَ "" إِنَّ قُرَيْشًا حَدِيثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ وَمُصِيبَةٍ، وَإِنِّي أَرَدْتُ أَنْ أَجْبُرَهُمْ وَأَتَأَلَّفَهُمْ أَمَا تَرْضَوْنَ أَنْ يَرْجِعَ النَّاسُ بِالدُّنْيَا، وَتَرْجِعُونَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى بُيُوتِكُمْ "". قَالُوا بَلَى. قَالَ "" لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا وَسَلَكَتِ الأَنْصَارُ شِعْبًا لَسَلَكْتُ وَادِيَ الأَنْصَارِ أَوْ شِعْبَ الأَنْصَارِ "".
பாடம் : 57 ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடந்த “தாயிஃப்' போர்353 இது குறித்து மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4334. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் சிலரை ஒன்றுகூட்டி, “(இந்தக்) குறைஷி யர், அறியாமைக் கொள்கையை இப்போதுதான் கைவிட்டுப் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்கள்; (இஸ்லாத்தை ஏற்றதனால் நேரும்) சோதனைகளுக்குப் புதியவர்கள். ஆகவே, அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், (இஸ்லாத்துடன்) அவர்களுக்கு இணக்கத்தை ஏற்படுத்தவும் நான் விரும்பினேன். மக்கள் உலகச் செல்வத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிச் செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதருடனேயே உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை நீங்கள் விரும்ப வில்லையா?” என்று கேட்டார்கள்.

அன்சாரிகள், “ஆம் (அதைத்தான் விரும்புகிறோம்)” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “மக்கள் ஒரு கணவாயில் செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயில் செல்வார்களாயின், நான் “அன்சாரிகளின் கணவாயில்தான்' அல்லது “அன்சாரிகளின் பள்ளத்தாக்கில்தான்' செல்வேன்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 64
4335. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَمَّا قَسَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم قِسْمَةَ حُنَيْنٍ قَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ مَا أَرَادَ بِهَا وَجْهَ اللَّهِ. فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ، فَتَغَيَّرَ وَجْهُهُ ثُمَّ قَالَ "" رَحْمَةُ اللَّهِ عَلَى مُوسَى، لَقَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ "".
பாடம் : 57 ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடந்த “தாயிஃப்' போர்353 இது குறித்து மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4335. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை (மக்களிடையே) பங்கிட்டபோது அன்சாரிகளில் ஒரு மனிதர், “இந்தப் பங்கீட்டில் நபியவர்கள் இறைத் திருப்தியை நாடவில்லை” என்று (மனத்தாங்கலுடன்) பேசினார். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதைத் தெரிவித்தேன். உடனே அவர்களுடைய முகம் (கோபத்தால் நிறம்) மாறிவிட்டது. பிறகு அவர்கள், “(இறைத்தூதர்) மூசாவுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! அவர்கள் இதைவிட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள்; ஆயினும், சகித்துக் கொண்டார்கள்” என்று சொன்னார்கள்.368


அத்தியாயம் : 64