4216. حَدَّثَنِي يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ اللَّهِ، وَالْحَسَنِ، ابْنَىْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ عَنْ أَبِيهِمَا، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ مُتْعَةِ النِّسَاءِ يَوْمَ خَيْبَرَ، وَعَنْ أَكْلِ الْحُمُرِ الإِنْسِيَّةِ.
பாடம் : 39 கைபர் போர்258
4216. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முத்ஆ' (தவணை முறை) திருமணம் செய்ய வேண்டாம் எனவும், நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாம் எனவும் தடை விதித்தார்கள்.275

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
4217. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى يَوْمَ خَيْبَرَ عَنْ لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ.
பாடம் : 39 கைபர் போர்258
4217. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை (உண்ண வேண்டாமென)த் தடை செய்தார்கள்.


அத்தியாயம் : 64
4218. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، وَسَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ أَكْلِ لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ.
பாடம் : 39 கைபர் போர்258
4218. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
4219. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرٍو، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ خَيْبَرَ عَنْ لُحُومِ الْحُمُرِ، وَرَخَّصَ فِي الْخَيْلِ.
பாடம் : 39 கைபர் போர்258
4219. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது (நாட்டுக்) கழுதை களின் இறைச்சியை உண்ண வேண்டாம் எனத் தடை விதித்தார்கள். குதிரைகளை (அவற்றின் இறைச்சியை உண்ணலாமென) அவர்கள் அனுமதித்தார்கள்.


அத்தியாயம் : 64
4220. حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا عَبَّادٌ، عَنِ الشَّيْبَانِيِّ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ أَصَابَتْنَا مَجَاعَةٌ يَوْمَ خَيْبَرَ، فَإِنَّ الْقُدُورَ لَتَغْلِي ـ قَالَ وَبَعْضُهَا نَضِجَتْ ـ فَجَاءَ مُنَادِي النَّبِيِّ صلى الله عليه وسلم لاَ تَأْكُلُوا مِنْ لُحُومِ الْحُمُرِ شَيْئًا وَأَهْرِيقُوهَا. قَالَ ابْنُ أَبِي أَوْفَى فَتَحَدَّثْنَا أَنَّهُ إِنَّمَا نَهَى عَنْهَا لأَنَّهَا لَمْ تُخَمَّسْ. وَقَالَ بَعْضُهُمْ نَهَى عَنْهَا الْبَتَّةَ، لأَنَّهَا كَانَتْ تَأْكُلُ الْعَذِرَةَ.
பாடம் : 39 கைபர் போர்258
4220. இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் போர் அன்று எங்களுக்குப் பசியேற்பட்டது. அப்போது (சமையல் செய்யப்பட்டுக்கொண்டிருந்த) பாத்திரங்கள் கொதித்துக்கொண்டிருந்தன. அவற்றில் சில பாத்திரங்களில் (இருந்த இறைச்சி) வெந்தும்விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர் வந்து, “கழுதைகளின் இறைச்சியில் சிறிதும் உண்ணாதீர்கள். அதைக் கொட்டிவிடுங்கள்” என்று கூறினார்.

இதன் அறிவிப்பாளர் கூறுகிறார்:

அப்போது நாங்கள், “அதை (உண்ண வேண்டாமென) நபி (ஸல்) அவர்கள் தடை விதித்ததற்குக் காரணம், அதில் (நபி (ஸல்) அவர்களுக்குச் சேர வேண்டிய) “குமுஸ்' நிதி எடுக்கப்பட்டிருக்கவில்லை; (அதனால், தாற்காலிகமாகத் தடை விதித்துள்ளார்கள்)” என்று பேசிக்கொண்டோம். எங்களில் சிலர், “அறவே (நிரந்தரமாக உண்ண வேண்டாமென்றே) தடை விதித்தார்கள். ஏனெனில், அவை மலத்தைத் தின்கின்றன” என்று கூறினர்.276


அத்தியாயம் : 64
4221. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ، وَعَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، رضى الله عنهم أَنَّهُمْ كَانُوا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَصَابُوا حُمُرًا فَطَبَخُوهَا، فَنَادَى مُنَادِي النَّبِيِّ صلى الله عليه وسلم أَكْفِئُوا الْقُدُورَ.
பாடம் : 39 கைபர் போர்258
4221. (கைபர் போரில்) மக்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கு(நாட்டு)க் கழுதைகள் கிடைத்தன. உடனே அவற்றை மக்கள் சமைத்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், “பாத்திரங்களைக் கவிழ்த்துவிடுங்கள்” என்று பொதுஅறிவிப்புச் செய்தார்.

இதை பராஉ (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 64
4223. حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَدِيُّ بْنُ ثَابِتٍ، سَمِعْتُ الْبَرَاءَ، وَابْنَ أَبِي أَوْفَى، يُحَدِّثَانِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ يَوْمَ خَيْبَرَ وَقَدْ نَصَبُوا الْقُدُورَ أَكْفِئُوا الْقُدُورَ.
பாடம் : 39 கைபர் போர்258
4223. கைபர் போரின்போது மக்கள் (அடுப்புகளில்) பாத்திரங்களை வைத்து (நாட்டுக் கழுதை இறைச்சியை சமைத்து)விட்டிருக்க நபி (ஸல்) அவர்கள், “பாத்திரங்களைக் கவிழ்த்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.

இதை பராஉ (ரலி) அவர்களும் இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 64
4225. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ، قَالَ غَزَوْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ.
பாடம் : 39 கைபர் போர்258
4225. “நாங்கள் நபி (ஸல்) அவர் களுடன் (கைபர்) போருக்குச் சென்றோம்...” (என்று தொடங்கும்) முந்தைய ஹதீஸின் கருத்தில் அமைந்த பராஉ (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம் : 64
4226. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، أَخْبَرَنَا عَاصِمٌ، عَنْ عَامِرٍ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم فِي غَزْوَةِ خَيْبَرَ أَنْ نُلْقِيَ الْحُمُرَ الأَهْلِيَّةَ نِيئَةً وَنَضِيجَةً، ثُمَّ لَمْ يَأْمُرْنَا بِأَكْلِهِ بَعْدُ.
பாடம் : 39 கைபர் போர்258
4226. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், கைபர் போரின்போது நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை-அது பச்சையாயிருந்தாலும் சமைக்கப்பட்டிருந்தாலும்-எறிந்துவிடுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அதற்குப்பின் அதை உண்ண (அனுமதி யளித்து) எங்களுக்கு அவர்கள் உத்தர விடவேயில்லை.


அத்தியாயம் : 64
4227. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي الْحُسَيْنِ، حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ عَاصِمٍ، عَنْ عَامِرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لاَ أَدْرِي أَنَهَى عَنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَجْلِ أَنَّهُ كَانَ حَمُولَةَ النَّاسِ، فَكَرِهَ أَنْ تَذْهَبَ حَمُولَتُهُمْ، أَوْ حَرَّمَهُ فِي يَوْمِ خَيْبَرَ، لَحْمَ الْحُمُرِ الأَهْلِيَّةِ.
பாடம் : 39 கைபர் போர்258
4227. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாட்டுக் கழுதைகளின் இறைச்சியைப் புசிக்க வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்ததற்குக் காரணம், அது மக்களைச் சுமந்து செல்லும் வாகனமாக இருப்பதால் (அது உண்ணப் படும் பட்சத்தில்) அவர்களுக்கு வாகனம் இல்லாமல் போய்விடுவதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள் என்பதாலா? அல்லது கைபர் போரின் போது நாட்டுக் கழுதைகளை (புசிக்க வேண்டாமென) அவர்கள் (நிரந்தரமாகத்) தடை செய்துவிட்டார்களா என்பது எனக்குத் தெரியாது.


அத்தியாயம் : 64
4228. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ، حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَسَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ خَيْبَرَ لِلْفَرَسِ سَهْمَيْنِ، وَلِلرَّاجِلِ سَهْمًا. قَالَ فَسَّرَهُ نَافِعٌ فَقَالَ إِذَا كَانَ مَعَ الرَّجُلِ فَرَسٌ فَلَهُ ثَلاَثَةُ أَسْهُمٍ، فَإِنْ لَمْ يَكُنْ لَهُ فَرَسٌ فَلَهُ سَهْمٌ.
பாடம் : 39 கைபர் போர்258
4228. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது (போர்ச் செல்வத்திலிருந்து) குதிரைக்கு இரு பங்குகளையும் காலாட்படை வீரருக்கு ஒரு பங்கையும் கொடுத்தார்கள்.

இந்த அறிவிப்பிற்கு நாஃபிஉ (ரஹ்) அவர்கள், “(போரில் கலந்துகொண்ட) ஒரு மனிதருடன் ஒரு குதிரையிருந்தால் (குதிரைக்காக இரு பங்குகளும், உரிமை யாளருக்காக ஒரு பங்கும் சேர்த்து) அவருக்கு மூன்று பங்குகள் கிடைக்கும். அவருடன் குதிரை இல்லாவிட்டால் அவருக்கு ஒரு பங்கு கிடைக்கும்” என்று விளக்கம் அளித்தார்கள்.277


அத்தியாயம் : 64
4229. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ جُبَيْرَ بْنَ مُطْعِمٍ، أَخْبَرَهُ قَالَ مَشَيْتُ أَنَا وَعُثْمَانُ بْنُ عَفَّانَ، إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقُلْنَا أَعْطَيْتَ بَنِي الْمُطَّلِبِ مِنْ خُمْسِ خَيْبَرَ، وَتَرَكْتَنَا، وَنَحْنُ بِمَنْزِلَةٍ وَاحِدَةٍ مِنْكَ. فَقَالَ "" إِنَّمَا بَنُو هَاشِمٍ وَبَنُو الْمُطَّلِبِ شَىْءٌ وَاحِدٌ "". قَالَ جُبَيْرٌ وَلَمْ يَقْسِمِ النَّبِيُّ صلى الله عليه وسلم لِبَنِي عَبْدِ شَمْسٍ وَبَنِي نَوْفَلٍ شَيْئًا.
பாடம் : 39 கைபர் போர்258
4229. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “(அல்லாஹ்வின் தூதரே!) கைபர் (போரில் கிடைத்த போர்ச் செல்வத்தின்) “குமுஸ்' (ஐந்தில் ஒரு பாகம்) நிதியிலிருந்து பனுல் முத்தலிப் கிளையினருக்குக் கொடுத்தீர்கள்; எங்களுக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டீர்கள். நாங்களும் அவர்களும் உங்களுடன் ஒரே மாதிரியான உறவு முறை உடையவர்கள்தானே?” என்று கேட்டோம். அப்போது (அல்லாஹ்வின் தூதர் -ஸல்) அவர்கள், “பனுல் முத்தóபும் பனூ ஹாஷிமும் ஒருவர்தான்” என்று கூறினார்கள்.

(மற்றோர் அறிவிப்பில்,) “பனூ அப்தி ஷம்ஸ் கிளையாருக்கும் பனூ நவ்ஃபல் கிளையாருக்கும் நபி (ஸல்) அவர்கள் (குமுஸில்) சிறிதும் பங்கு தரவில்லை” என்று ஜுபைர் (ரலி) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.278


அத்தியாயம் : 64
4230. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا بُرَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ بَلَغَنَا مَخْرَجُ النَّبِيِّ صلى الله عليه وسلم وَنَحْنُ بِالْيَمَنِ، فَخَرَجْنَا مُهَاجِرِينَ إِلَيْهِ أَنَا، وَأَخَوَانِ لِي أَنَا أَصْغَرُهُمْ، أَحَدُهُمَا أَبُو بُرْدَةَ، وَالآخَرُ أَبُو رُهْمٍ ـ إِمَّا قَالَ بِضْعٌ وَإِمَّا قَالَ ـ فِي ثَلاَثَةٍ وَخَمْسِينَ أَوِ اثْنَيْنِ وَخَمْسِينَ رَجُلاً مِنْ قَوْمِي، فَرَكِبْنَا سَفِينَةً، فَأَلْقَتْنَا سَفِينَتُنَا إِلَى النَّجَاشِيِّ بِالْحَبَشَةِ، فَوَافَقْنَا جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ فَأَقَمْنَا مَعَهُ حَتَّى قَدِمْنَا جَمِيعًا، فَوَافَقْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم حِينَ افْتَتَحَ خَيْبَرَ، وَكَانَ أُنَاسٌ مِنَ النَّاسِ يَقُولُونَ لَنَا ـ يَعْنِي لأَهْلِ السَّفِينَةِ ـ سَبَقْنَاكُمْ بِالْهِجْرَةِ، وَدَخَلَتْ أَسْمَاءُ بِنْتُ عُمَيْسٍ، وَهْىَ مِمَّنْ قَدِمَ مَعَنَا، عَلَى حَفْصَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم زَائِرَةً، وَقَدْ كَانَتْ هَاجَرَتْ إِلَى النَّجَاشِيِّ فِيمَنْ هَاجَرَ، فَدَخَلَ عُمَرُ عَلَى حَفْصَةَ وَأَسْمَاءُ عِنْدَهَا، فَقَالَ عُمَرُ حِينَ رَأَى أَسْمَاءَ مَنْ هَذِهِ قَالَتْ أَسْمَاءُ بِنْتُ عُمَيْسٍ. قَالَ عُمَرُ الْحَبَشِيَّةُ هَذِهِ الْبَحْرِيَّةُ هَذِهِ قَالَتْ أَسْمَاءُ نَعَمْ. قَالَ سَبَقْنَاكُمْ بِالْهِجْرَةِ، فَنَحْنُ أَحَقُّ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْكُمْ. فَغَضِبَتْ وَقَالَتْ كَلاَّ وَاللَّهِ، كُنْتُمْ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُطْعِمُ جَائِعَكُمْ، وَيَعِظُ جَاهِلَكُمْ، وَكُنَّا فِي دَارِ أَوْ فِي أَرْضِ الْبُعَدَاءِ الْبُغَضَاءِ بِالْحَبَشَةِ، وَذَلِكَ فِي اللَّهِ وَفِي رَسُولِهِ صلى الله عليه وسلم وَايْمُ اللَّهِ، لاَ أَطْعَمُ طَعَامًا، وَلاَ أَشْرَبُ شَرَابًا حَتَّى أَذْكُرَ مَا قُلْتَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ كُنَّا نُؤْذَى وَنُخَافُ، وَسَأَذْكُرُ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم وَأَسْأَلُهُ، وَاللَّهِ لاَ أَكْذِبُ وَلاَ أَزِيغُ وَلاَ أَزِيدُ عَلَيْهِ.
பாடம் : 39 கைபர் போர்258
4230. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்) புறப் பட்டுவிட்ட செய்தி, நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது எங்களுக்குத் தெரியவந்தது. உடனே நானும் என் இரு சகோதரர்களும் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டோம். அந்த என் இரு சகோதரர்களில் ஒருவர் அபூபுர்தா ஆவார்; மற்றொருவர் அபூருஹ்ம் ஆவார். நான்தான் அவர்களில் வயதில் சிறியவன் ஆவேன்.

-அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூபுர்தா ஆமிர் பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“எனது (அஷ்அரீ) குலத்தாரில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுடன் சேர்ந்து நாங்கள் சென்றோம்” என்றோ “ஐம்பத்திரண்டு பேர்களுடன் அல்லது ஐம்பத்து மூன்று பேர்களுடன் சேர்ந்து சென்றோம்” என்றோ (என் தந்தை அபூமூசா (ரலி) அவர்கள்) சொன்னார்கள்-

நாங்கள் ஒரு கப்பலில் ஏறி (மதீனா நோக்கிப்) பயணித்தோம். எங்கள் கப்பல் (திசை மாறி) அபிசீனியாவில் (மன்னர்) நஜாஷீயிடம் எங்களை (கொண்டுசென்று) இறக்கிவிட்டது. (அபிசீனியாவில்) ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களைத் தற்செயலாகச் சந்தித்தோம். (ஏற்கெனவே அவர் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்து, அவர் தம் சகாக்களுடன் அபிசீனியாவில் தங்கியிருந்தார்.) பிறகு (அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க) அவருடன் நாங்களும் தங்கினோம். இறுதியில், நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனா) வந்து சேர்ந்தோம். நபி (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்டபோது அவர்களைச் சென்றடைந்தோம்.279

அப்போது சிலர், கப்பலில் வந்தவர்களான எங்களை நோக்கி, “உங்களுக்கு முன்பே நாங்கள் ஹிஜ்ரத் செய்துவிட்டோம்” என்று கூறலாயினர். எங்களுடன் (மதீனாவிற்கு) வந்தவர்களில் ஒருவரான (ஜஅஃபர் (ரலி) அவர்களின் துணைவியார்) அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றார்கள்.நஜாஷீ மன்னரை நோக்கி (அபீசீனியாவிற்கு) ஹிஜ்ரத் செய்தவர்களில் அஸ்மா (ரலி) அவர்களும் ஒருவராவார்.

பிறகு உமர் (ரலி) அவர்கள் (தம்முடைய மகள்) ஹஃப்ஸா (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்கள். அப்போது ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்கு அருகில் அஸ்மா அவர்கள் இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அஸ்மா (ரலி) அவர்களைக் கண்டபோது, “இவர் யார்?” என்று (தமது மகள் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம்) கேட்டார்கள். “(இவர்) அஸ்மா பின்த் உமைஸ்” என்று ஹஃப்ஸா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள், “இவர், அபிசீனியரா? இவர் கடல் மார்க்கமாக (மதீனா) வந்தவரா?” என்று கேட்டார்கள். அதற்கு, “ஆம்' என்று அஸ்மா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், “உங்களுக்கு முன்பே நாங்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் வந்துவிட்டோம். ஆகவே, உங்களைவிட நாங்களே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் உரியவர்கள் என்று கூறினார்கள்.

இதைக் கேட்டு அஸ்மா (ரலி) அவர்கள் கோபப்பட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! அப்படியில்லை. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தீர்கள். உங்களில் பசித்தவருக்கு அவர்கள் உணவளித்தார்கள். உங்களில் அறியாதவர்களுக்கு அவர்கள் அறிவூட்டினார்கள். (உடல் மற்றும் அறிவு ரீதியாக நபியவர்களிடமிருந்து நீங்கள் உதவி பெற்றுவந்தீர்கள்.) நாங்களோ வெகு தொலைவி லிருக்கும், பகைவர்கள் உள்ள அபிசீனிய “நாட்டில்' அல்லது “பூமியில்' இருந்தோம்.

அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே இதைச் செய்தோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் சொன்னதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்காமல் நான் எதையும் உண்ணவோ குடிக்கவோ மாட்டேன். நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; அச்சுறுத்தப்பட்டோம். நான் இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறி, அவர்களிடம் (நியாயம்) கேட்கப்போகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்லமாட்டேன்; திரித்துப் பேசவுமாட்டேன். நீங்கள் சொன்னதைவிடக் கூட்டிச் சொல்லவுமாட்டேன்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 64
4231. فَلَمَّا جَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَتْ يَا نَبِيَّ اللَّهِ إِنَّ عُمَرَ قَالَ كَذَا وَكَذَا. قَالَ "" فَمَا قُلْتِ لَهُ "". قَالَتْ قُلْتُ لَهُ كَذَا وَكَذَا. قَالَ "" لَيْسَ بِأَحَقَّ بِي مِنْكُمْ، وَلَهُ وَلأَصْحَابِهِ هِجْرَةٌ وَاحِدَةٌ، وَلَكُمْ أَنْتُمْ أَهْلَ السَّفِينَةِ هِجْرَتَانِ "". قَالَتْ فَلَقَدْ رَأَيْتُ أَبَا مُوسَى وَأَصْحَابَ السَّفِينَةِ يَأْتُونِي أَرْسَالاً، يَسْأَلُونِي عَنْ هَذَا الْحَدِيثِ، مَا مِنَ الدُّنْيَا شَىْءٌ هُمْ بِهِ أَفْرَحُ وَلاَ أَعْظَمُ فِي أَنْفُسِهِمْ مِمَّا قَالَ لَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم. قَالَ أَبُو بُرْدَةَ قَالَتْ أَسْمَاءُ فَلَقَدْ رَأَيْتُ أَبَا مُوسَى وَإِنَّهُ لَيَسْتَعِيدُ هَذَا الْحَدِيثَ مِنِّي.
பாடம் : 39 கைபர் போர்258
4231. நபி (ஸல்) அவர்கள் வந்தபோது, அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உமர் அவர்கள் இன்னின்னவாறு சொன்னார்கள்” என்று கூறினார்கள். “அவருக்கு நீ என்ன பதிலளித்தாய்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, “அவருக்கு இன்னின்னவாறு பதிலளித்தேன்” என்று அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்களைவிட அவர் எனக்கு உரியவர் அல்லர். அவருக்கும் அவருடைய சகாக்களுக்கும் ஒரேயொரு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு)தான் உண்டு. (அபிசீனியா விலிருந்து) கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு (அபிசீனியாவிற்கு ஒன்றும், மதீனாவிற்கு ஒன்றுமாக) இரண்டு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) உண்டு” என்று கூறினார்கள்.

அஸ்மா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அபூமூசாவும் அவர்களுடைய கப்பல் சகாக்களும் கூட்டங்கூட்டமாக என்னிடம் வந்து, இந்த ஹதீஸ் குறித்துக் கேட்டனர். அவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய இந்தப் பொன்மொழியைவிட இந்த உலகத்தில் வேறெதுவும் அவர்களின் மகிழ்ச்சிக்குரியதாகவோ, அவர்களின் மனதில் பெருமைக்குரியதாகவோ இருக்கவில்லை.


அத்தியாயம் : 64
4232. قَالَ أَبُو بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنِّي لأَعْرِفُ أَصْوَاتَ رُفْقَةِ الأَشْعَرِيِّينَ بِالْقُرْآنِ، حِينَ يَدْخُلُونَ بِاللَّيْلِ، وَأَعْرِفُ مَنَازِلَهُمْ مِنْ أَصْوَاتِهِمْ بِالْقُرْآنِ بِاللَّيْلِ، وَإِنْ كُنْتُ لَمْ أَرَ مَنَازِلَهُمْ حِينَ نَزَلُوا بِالنَّهَارِ، وَمِنْهُمْ حَكِيمٌ، إِذَا لَقِيَ الْخَيْلَ ـ أَوْ قَالَ الْعَدُوَّ ـ قَالَ لَهُمْ إِنَّ أَصْحَابِي يَأْمُرُونَكُمْ أَنْ تَنْظُرُوهُمْ "".
பாடம் : 39 கைபர் போர்258
4232. (தொடர்ந்து) அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

என்னிடம் அபூமூசா (ரலி) அவர்கள் இந்த ஹதீஸைத் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டேயிருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் அஷ்அரீ (குல) நண்பர்கள் இரவில் (தம் தங்குமிடங்களில்) நுழையும் போது அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையை நான் அறிவேன். பகல் நேரத்தில் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் பார்த்திருக்காவிட்டாலும், இரவில் அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையைக் கேட்டு அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் அடையாளம் கண்டு கொள்கிறேன்.

மேலும், அவர்களில் விவேகம் மிக்க ஒருவர் இருக்கிறார். “அவர் குதிரைப் படையினரைச் சந்தித்தால்' அல்லது “எதிரிகளைச் சந்தித்தால்' அவர்களைப் பார்த்து, “என் தோழர்கள், தங்களுக்காகக் காத்திருக்கும்படி உங்களுக்கு உத்தரவிடு கின்றனர் என்று (துணிவோடு) கூறுவார்” என்று கூறினார்கள்.280

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 64
4233. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ حَفْصَ بْنَ غِيَاثٍ، حَدَّثَنَا بُرَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَدِمْنَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بَعْدَ أَنِ افْتَتَحَ خَيْبَرَ، فَقَسَمَ لَنَا، وَلَمْ يَقْسِمْ لأَحَدٍ لَمْ يَشْهَدِ الْفَتْحَ غَيْرَنَا.
பாடம் : 39 கைபர் போர்258
4233. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அபிசீனியாவிலிருந்து அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த) நாங்கள் கைபர் வெற்றிக்குப்பின் (ஜஅஃபர் (ரலி) அவர்களுடன்) நபி (ஸல்) அவர்களிடம் வந்தோம். அப்போது அவர்கள் (போர்ச் செல்வத்திலிருந்து) எங்களுக்கும் பங்கு தந்தார்கள். எங்களைத் தவிர (கைபர்) வெற்றியின்போது (படையில்) இருக்காத வேறெவருக்கும் நபி (ஸல்) அவர்கள் பங்கு தரவில்லை.


அத்தியாயம் : 64
4234. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، قَالَ حَدَّثَنِي ثَوْرٌ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ، مَوْلَى ابْنِ مُطِيعٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ افْتَتَحْنَا خَيْبَرَ، وَلَمْ نَغْنَمْ ذَهَبًا وَلاَ فِضَّةً، إِنَّمَا غَنِمْنَا الْبَقَرَ وَالإِبِلَ وَالْمَتَاعَ وَالْحَوَائِطَ، ثُمَّ انْصَرَفْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى وَادِي الْقُرَى، وَمَعَهُ عَبْدٌ لَهُ يُقَالُ لَهُ مِدْعَمٌ، أَهْدَاهُ لَهُ أَحَدُ بَنِي الضِّبَابِ، فَبَيْنَمَا هُوَ يَحُطُّ رَحْلَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذْ جَاءَهُ سَهْمٌ عَائِرٌ حَتَّى أَصَابَ ذَلِكَ الْعَبْدَ، فَقَالَ النَّاسُ هَنِيئًا لَهُ الشَّهَادَةُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" بَلَى وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنَّ الشَّمْلَةَ الَّتِي أَصَابَهَا يَوْمَ خَيْبَرَ مِنَ الْمَغَانِمِ لَمْ تُصِبْهَا الْمَقَاسِمُ لَتَشْتَعِلُ عَلَيْهِ نَارًا "". فَجَاءَ رَجُلٌ حِينَ سَمِعَ ذَلِكَ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِشِرَاكٍ أَوْ بِشِرَاكَيْنِ، فَقَالَ هَذَا شَىْءٌ كُنْتُ أَصَبْتُهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" شِرَاكٌ أَوْ شِرَاكَانِ مِنْ نَارٍ "".
பாடம் : 39 கைபர் போர்258
4234. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் கைபரை வெற்றி கொண்டோம். அப்போது நாங்கள் பொன்னையோ வெள்ளியையோ போர்ச் செல்வமாகப் பெறவில்லை. மாடு, ஒட்டகம், (வீட்டு) உபயோகப்பொருட்கள், தோட்டங்கள் ஆகியவற்றையே போர்ச் செல்வமாகப் பெற்றோம். பிறகு நாங்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிற்கு அருகிலுள்ள) “வாதில் குரா' எனுமிடத்தை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தோம்.

நபியவர்களுடன் “மித்அம்' எனப்படும் ஓர் அடிமையும் இருந்தார். அவரை “பனுள் ளிபாப்' குலத்தாரில் (ரிஃபாஆ பின் ஸைத் என்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் சிவிகையை அந்த அடிமை இறக்கிக்கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த ஓர் அம்பு அவர்மீது பாய்ந்தது. “அவருக்கு இறைவழியில் உயிர்த் தியாகம் செய்யும் பேறு கிடைத்துவிட்டது. வாழ்த்துகள்!” என்று மக்கள் கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை. எனது உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும்முன் அவர் எடுத்துக்கொண்ட போர்வையே அவருக்கு நரக நெருப்பாகி எரிந்துகொண்டிருக்கிறது” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதைக் கேட்டபோது ஒரு மனிதர், “ஒரு செருப்பு வாரை' அல்லது “இரண்டு செருப்பு வார்களைக்' கொண்டுவந்து, “இது (போர்ச் செல்வம் பங்கிடப்படும்முன்) நான் எடுத்துக்கொண்ட பொருள்” என்று கூறினார்.

அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இது சாதாரண செருப்பு வார் அல்ல. இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் இதுவே) நரகத்தின் “செருப்பு வார்' அல்லது “இரு வார்கள்' ஆகும்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 64
4235. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي زَيْدٌ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ يَقُولُ أَمَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَوْلاَ أَنْ أَتْرُكَ آخِرَ النَّاسِ بَبَّانًا لَيْسَ لَهُمْ شَىْءٌ، مَا فُتِحَتْ عَلَىَّ قَرْيَةٌ إِلاَّ قَسَمْتُهَا كَمَا قَسَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْبَرَ، وَلَكِنِّي أَتْرُكُهَا خِزَانَةً لَهُمْ يَقْتَسِمُونَهَا.
பாடம் : 39 கைபர் போர்258
4235. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் உயிர் யார் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! பின்னால்வரும் மக்களை ஏதுமில்லாத வறியவர்களாக விட்டுச்சென்றுவிடுவேனோ என்ற அச்சம் எனக்கில்லையாயின், எனது ஆட்சிக் காலத்தில் எந்த ஊர் வெற்றி கொள்ளப்பட்டாலும் அதை, கைபர் நிலங் களை நபி (ஸல்) அவர்கள் பங்கிட்டுக் கொடுத்ததுபோல (தனி மனிதருக்கான வருவாய் மானியமாக) பங்கிட்டுக் கொடுத்திருப்பேன். எனினும், அவற்றை (எதிர்கால) மக்களுக்குக் கருவூலமாக (அறக்கொடையாக்கி)விட்டுச் செல்கிறேன். அதில் அவரவர் தத்தமது பங்கைப் பெற்றுக்கொள்வர்.


அத்தியாயம் : 64