4079. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَجْمَعُ بَيْنَ الرَّجُلَيْنِ مِنْ قَتْلَى أُحُدٍ فِي ثَوْبٍ وَاحِدٍ ثُمَّ يَقُولُ " أَيُّهُمْ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ ". فَإِذَا أُشِيرَ لَهُ إِلَى أَحَدٍ، قَدَّمَهُ فِي اللَّحْدِ، وَقَالَ " أَنَا شَهِيدٌ عَلَى هَؤُلاَءِ يَوْمَ الْقِيَامَةِ ". وَأَمَرَ بِدَفْنِهِمْ بِدِمَائِهِمْ، وَلَمْ يُصَلِّ عَلَيْهِمْ، وَلَمْ يُغَسَّلُوا.
பாடம் : 27
உஹுத் நாளில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள்147
ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப், யமான், அனஸ் பின் அந்நள்ர், முஸ்அப் பின் உமைர் (ரலி) ஆகியோர் அவர்களில் அடங்குவர்.148
4079. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரில் (உயிர்த் தியாகிகளாகக்) கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு பேராக ஒரே துணியில் சேர்த்து வைத்து (கஃபனிட்டு) “இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” என நபி (ஸல்) அவர்கள் கேட்பார்கள். ஒருவர் சுட்டிக்காட்டப்பட்டதும் அவரது உடலை உட்குழியில் முதலில் வைப்பார்கள்.
மேலும், “மறுமை நாளில் இவர்களுக்கு நானே சாட்சியாவேன்” என்று கூறிவிட்டு, அவர்களுடைய இரத்தத்துடனேயே அவர்களை அடக்கம் செய்யும்படி உத்தரவிட்டார்கள். அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸா தொழுகை) தொழவுமில்லை; அவர்கள் நீராட்டப்படவுமில்லை.151
அத்தியாயம் : 64

4080. وَقَالَ أَبُو الْوَلِيدِ عَنْ شُعْبَةَ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرًا، قَالَ لَمَّا قُتِلَ أَبِي جَعَلْتُ أَبْكِي وَأَكْشِفُ الثَّوْبَ عَنْ وَجْهِهِ،، فَجَعَلَ أَصْحَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم يَنْهَوْنِي وَالنَّبِيُّ صلى الله عليه وسلم لَمْ يَنْهَ، وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ تَبْكِيهِ أَوْ مَا تَبْكِيهِ، مَا زَالَتِ الْمَلاَئِكَةُ تُظِلُّهُ بِأَجْنِحَتِهَا حَتَّى رُفِعَ ".
பாடம் : 27
உஹுத் நாளில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள்147
ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப், யமான், அனஸ் பின் அந்நள்ர், முஸ்அப் பின் உமைர் (ரலி) ஆகியோர் அவர்களில் அடங்குவர்.148
4080. ஜாபிர் (பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (அப்துல்லாஹ் உஹுத் போரில்) கொல்லப்பட்டபோது நான் அழ ஆரம்பித்தேன். மேலும், அவரது முகத்திலிருந்த துணியை விலக்க முனைந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் என்னைத் தடுக்கத் தொடங்கினர். நபி (ஸல்) அவர்கள் (என்னைத்) தடுக்கவில்லை. மேலும் நபி (ஸல்) அவர்கள், “அவருக்காக நீ அழ வேண்டாம்' அல்லது “அவருக்காக நீ ஏன் அழுகின்றாய்?' ஜனாஸா (அந்த இடத்திலிருந்து) தூக்கப்படும்வரை, வானவர்கள் தம் இறக்கைகளை விரித்து அவருக்கு நிழல் கொடுத்துக்கொண்டிருப்பார்கள் என்று கூறினார்கள்.152

4081. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ أُرَى عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" رَأَيْتُ فِي رُؤْيَاىَ أَنِّي هَزَزْتُ سَيْفًا فَانْقَطَعَ صَدْرُهُ، فَإِذَا هُوَ مَا أُصِيبَ مِنَ الْمُؤْمِنِينَ يَوْمَ أُحُدٍ، ثُمَّ هَزَزْتُهُ أُخْرَى فَعَادَ أَحْسَنَ مَا كَانَ، فَإِذَا هُوَ مَا جَاءَ بِهِ اللَّهُ مِنَ الْفَتْحِ وَاجْتِمَاعِ الْمُؤْمِنِينَ، وَرَأَيْتُ فِيهَا بَقَرًا وَاللَّهُ خَيْرٌ، فَإِذَا هُمُ الْمُؤْمِنُونَ يَوْمَ أُحُدٍ "".
பாடம் : 27
உஹுத் நாளில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள்147
ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப், யமான், அனஸ் பின் அந்நள்ர், முஸ்அப் பின் உமைர் (ரலி) ஆகியோர் அவர்களில் அடங்குவர்.148
4081. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஒரு கனவு கண்டேன். (அதில்) நான் ஒரு வாளை அசைத்தேன். அதன் முனை முறிந்துவிட்டது. உஹுத் போரின் போது இறைநம்பிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பை அது குறித்தது. பிறகு மீண்டுமொரு முறை அதை நான் அசைத்தேன். அது முன்பிருந்ததைவிட மிக அழகாக மாறிவிட்டது. அது அல்லாஹ் (அதே உஹுத் போரில்) கொணர்ந்த உறுதிப்பாட்டையும், (சிதறி ஓடிய) இறைநம்பிக்கையாளர்கள் (மீண்டும்) ஒன்றுதிரண்டதையும் குறித்தது.
அந்தக் கனவில் நான் சில காளை மாடுகளை (அவை அறுக்கப்படுவது போல்) கண்டேன். (உஹுத் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு) அல்லாஹ் வழங்கிய தகுதி (அவர்கள் இவ்வுலகில் இருந்த நிலையைவிட அவர்களுக்குச்) சிறந்தது ஆகும். எனவே, (அந்த மாடுகள்) உஹுத் நாளில் கொல்லப்பட்ட இறைநம்பிக்கையாளர்களைக் குறிப்பவை யாகும்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.153

4082. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ خَبَّابٍ ـ رضى الله عنه ـ قَالَ هَاجَرْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَنَحْنُ نَبْتَغِي وَجْهَ اللَّهِ، فَوَجَبَ أَجْرُنَا عَلَى اللَّهِ، فَمِنَّا مَنْ مَضَى أَوْ ذَهَبَ لَمْ يَأْكُلْ مِنْ أَجْرِهِ شَيْئًا، كَانَ مِنْهُمْ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ قُتِلَ يَوْمَ أُحُدٍ، فَلَمْ يَتْرُكْ إِلاَّ نَمِرَةً كُنَّا إِذَا غَطَّيْنَا بِهَا رَأْسَهُ خَرَجَتْ رِجْلاَهُ، وَإِذَا غُطِّيَ بِهَا رِجْلاَهُ خَرَجَ رَأْسُهُ، فَقَالَ لَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم "" غَطُّوا بِهَا رَأْسَهُ، وَاجْعَلُوا عَلَى رِجْلَيْهِ الإِذْخِرَ "". أَوْ قَالَ "" أَلْقُوا عَلَى رِجْلَيْهِ مِنَ الإِذْخِرِ "". وَمِنَّا مَنْ أَيْنَعَتْ لَهُ ثَمَرَتُهُ فَهْوَ يَهْدِبُهَا.
பாடம் : 27
உஹுத் நாளில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள்147
ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப், யமான், அனஸ் பின் அந்நள்ர், முஸ்அப் பின் உமைர் (ரலி) ஆகியோர் அவர்களில் அடங்குவர்.148
4082. கப்பாப் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நாங்கள் அல்லாஹ்வின் அன்பை நாடியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்குரிய பிரதிபலன் அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதிபலனில் எதையுமே (இவ்வுலகத்தில்) அனுபவிக்காமல் சென்று விட்டனர். அவர்களில் ஒருவர்தான், முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள். அவர் உஹுத் நாளில் கொல்லப்பட்டார். அவர் கோடுபோட்ட வண்ணத் துணி ஒன்றை மட்டுமே விட்டுச்சென்றார். அவரது தலையை நாங்கள் அதன் மூலம் மறைத்தால் அவருடைய இரு கால்கள் வெளியில் தெரிந்தன; கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது.
அப்போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், “அவரது தலையைத் துணியால் மறைத்துவிட்டு அவர்மீது “இத்கிர்' புல்லையிடுங்கள்- அல்லது அவரது கால்மீது “இத்கிர்' புல்லைப் போடுங்கள்” என்று கூறினார்கள்.
(உஹுத் போரில் கலந்துகொண்ட) எங்களில் வேறுசிலரும் உள்ளனர். அவர்களின் (பிரதிபலன் இந்த உலகிலும்) கனிந்துவிட்டது. அதை அவர்கள் (இவ்வுலகிலும்) பறித்து (அனுபவித்துக்கொண்டார்கள்.154

4083. حَدَّثَنِي نَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ قُرَّةَ بْنِ خَالِدٍ، عَنْ قَتَادَةَ، سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ "".
பாடம் : 28
உஹுத் மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம் எனும் நபிமொழி
இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுமைத் (ரலி) அவர்களும், அபூஹுமைத் (ரலி) அவர்களிடமிருந்து அப்பாஸ் பின் சஹ்ல் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள்.155
4083. அனஸ் (பின் மாலிக்-ரலி) அவர்கள் கூறியதாவது:
“இந்த (உஹுத்) மலை நம்மை நேசிக்கிறது. நாமும் அதை நேசிக்கி றோம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.156

4084. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَمْرٍو، مَوْلَى الْمُطَّلِبِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم طَلَعَ لَهُ أُحُدٌ فَقَالَ "" هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ، اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ، وَإِنِّي حَرَّمْتُ مَا بَيْنَ لاَبَتَيْهَا "".
பாடம் : 28
உஹுத் மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம் எனும் நபிமொழி
இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுமைத் (ரலி) அவர்களும், அபூஹுமைத் (ரலி) அவர்களிடமிருந்து அப்பாஸ் பின் சஹ்ல் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள்.155
4084. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கைபர் போரிலிருந்து நாங்கள் திரும்பி வந்துகொண்டிருந்தபோது) உஹுத் (மலை) நபி (ஸல்) அவர்களுக்குத் தென்பட்டது. அப்போது அவர்கள், “இந்த மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனிதமானதாக அறிவித்தார்கள். நான் இரு (கருங்கற்கள் நிறைந்த) மலைகளுக்கிடையிலுள்ள பகுதியை (மதீனாவை)ப் புனிதமானதாக அறிவிக்கிறேன்” என்று கூறினார்கள்.157

4085. حَدَّثَنِي عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ يَوْمًا فَصَلَّى عَلَى أَهْلِ أُحُدٍ صَلاَتَهُ عَلَى الْمَيِّتِ، ثُمَّ انْصَرَفَ إِلَى الْمِنْبَرِ فَقَالَ "" إِنِّي فَرَطٌ لَكُمْ، وَأَنَا شَهِيدٌ عَلَيْكُمْ، وَإِنِّي لأَنْظُرُ إِلَى حَوْضِي الآنَ، وَإِنِّي أُعْطِيتُ مَفَاتِيحَ خَزَائِنِ الأَرْضِ ـ أَوْ مَفَاتِيحَ الأَرْضِ ـ وَإِنِّي وَاللَّهِ مَا أَخَافُ عَلَيْكُمْ أَنْ تُشْرِكُوا بَعْدِي، وَلَكِنِّي أَخَافُ عَلَيْكُمْ أَنْ تَنَافَسُوا فِيهَا "".
பாடம் : 28
உஹுத் மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம் எனும் நபிமொழி
இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுமைத் (ரலி) அவர்களும், அபூஹுமைத் (ரலி) அவர்களிடமிருந்து அப்பாஸ் பின் சஹ்ல் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள்.155
4085. உக்பா பிர் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸா தொழுகை) தொழுவித்ததைப் போன்று உஹுத் போர் உயிர்த் தியாகிகளுக்காக (ஜனாஸா தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவு மேடைக்கு (மிம்பருக்கு) வந்து, “நிச்சயமாக, நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். மேலும், நான் இப்போது (“அல்கவ்ஸர்' எனும்) எனது தடாகத்தைக் காண்கிறேன். எனக்கு “பூமியினுடைய கருவூலங்களின் திறவுகோல்கள்' அல்லது “பூமியின் திறவு கோல்கள்' கொடுக்கப்பட்டுள்ளன.
அல்லாஹ்வின் மீதாணையாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணை வைப்பாளர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் பயப்படவில்லை; ஆனால், (உலகத்திற்காக) நீங்கள் ஒருவரோடொருவர் (போட்டியிட்டுக்கொண்டு) மோதிக்கொள் வீர்களோ என்றுதான் பயப்படுகின்றேன்” என்று கூறினார்கள்.158

4086. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَمْرِو بْنِ أَبِي سُفْيَانَ الثَّقَفِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَرِيَّةً عَيْنًا، وَأَمَّرَ عَلَيْهِمْ عَاصِمَ بْنَ ثَابِتٍ ـ وَهْوَ جَدُّ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ فَانْطَلَقُوا حَتَّى إِذَا كَانَ بَيْنَ عُسْفَانَ وَمَكَّةَ ذُكِرُوا لَحِيٍّ مِنْ هُذَيْلٍ، يُقَالُ لَهُمْ بَنُو لَحْيَانَ، فَتَبِعُوهُمْ بِقَرِيبٍ مِنْ مِائَةِ رَامٍ، فَاقْتَصُّوا آثَارَهُمْ حَتَّى أَتَوْا مَنْزِلاً نَزَلُوهُ فَوَجَدُوا فِيهِ نَوَى تَمْرٍ تَزَوَّدُوهُ مِنَ الْمَدِينَةِ فَقَالُوا هَذَا تَمْرُ يَثْرِبَ. فَتَبِعُوا آثَارَهُمْ حَتَّى لَحِقُوهُمْ، فَلَمَّا انْتَهَى عَاصِمٌ وَأَصْحَابُهُ لَجَئُوا إِلَى فَدْفَدٍ، وَجَاءَ الْقَوْمُ فَأَحَاطُوا بِهِمْ، فَقَالُوا لَكُمُ الْعَهْدُ وَالْمِيثَاقُ إِنْ نَزَلْتُمْ إِلَيْنَا أَنْ لاَ نَقْتُلَ مِنْكُمْ رَجُلاً. فَقَالَ عَاصِمٌ أَمَّا أَنَا فَلاَ أَنْزِلُ فِي ذِمَّةِ كَافِرٍ، اللَّهُمَّ أَخْبِرْ عَنَّا نَبِيَّكَ. فَقَاتَلُوهُمْ حَتَّى قَتَلُوا عَاصِمًا فِي سَبْعَةِ نَفَرٍ بِالنَّبْلِ، وَبَقِيَ خُبَيْبٌ، وَزَيْدٌ وَرَجُلٌ آخَرُ، فَأَعْطَوْهُمُ الْعَهْدَ وَالْمِيثَاقَ، فَلَمَّا أَعْطَوْهُمُ الْعَهْدَ وَالْمِيثَاقَ نَزَلُوا إِلَيْهِمْ، فَلَمَّا اسْتَمْكَنُوا مِنْهُمْ حَلُّوا أَوْتَارَ قِسِيِّهِمْ فَرَبَطُوهُمْ بِهَا. فَقَالَ الرَّجُلُ الثَّالِثُ الَّذِي مَعَهُمَا هَذَا أَوَّلُ الْغَدْرِ. فَأَبَى أَنْ يَصْحَبَهُمْ فَجَرَّرُوهُ وَعَالَجُوهُ عَلَى أَنْ يَصْحَبَهُمْ، فَلَمْ يَفْعَلْ، فَقَتَلُوهُ، وَانْطَلَقُوا بِخُبَيْبٍ وَزَيْدٍ حَتَّى بَاعُوهُمَا بِمَكَّةَ، فَاشْتَرَى خُبَيْبًا بَنُو الْحَارِثِ بْنِ عَامِرِ بْنِ نَوْفَلٍ، وَكَانَ خُبَيْبٌ هُوَ قَتَلَ الْحَارِثَ يَوْمَ بَدْرٍ، فَمَكَثَ عِنْدَهُمْ أَسِيرًا حَتَّى إِذَا أَجْمَعُوا قَتْلَهُ اسْتَعَارَ مُوسَى مِنْ بَعْضِ بَنَاتِ الْحَارِثِ أَسْتَحِدَّ بِهَا فَأَعَارَتْهُ، قَالَتْ فَغَفَلْتُ عَنْ صَبِيٍّ لِي فَدَرَجَ إِلَيْهِ حَتَّى أَتَاهُ، فَوَضَعَهُ عَلَى فَخِذِهِ، فَلَمَّا رَأَيْتُهُ فَزِعْتُ فَزْعَةً عَرَفَ ذَاكَ مِنِّي، وَفِي يَدِهِ الْمُوسَى فَقَالَ أَتَخْشَيْنَ أَنْ أَقْتُلَهُ مَا كُنْتُ لأَفْعَلَ ذَاكِ إِنْ شَاءَ اللَّهُ. وَكَانَتْ تَقُولُ مَا رَأَيْتُ أَسِيرًا قَطُّ خَيْرًا مِنْ خُبَيْبٍ، لَقَدْ رَأَيْتُهُ يَأْكُلُ مِنْ قِطْفِ عِنَبٍ، وَمَا بِمَكَّةَ يَوْمَئِذٍ ثَمَرَةٌ، وَإِنَّهُ لَمُوثَقٌ فِي الْحَدِيدِ، وَمَا كَانَ إِلاَّ رِزْقٌ رَزَقَهُ اللَّهُ، فَخَرَجُوا بِهِ مِنَ الْحَرَمِ، لِيَقْتُلُوهُ فَقَالَ دَعُونِي أُصَلِّي رَكْعَتَيْنِ. ثُمَّ انْصَرَفَ إِلَيْهِمْ فَقَالَ لَوْلاَ أَنْ تَرَوْا أَنَّ مَا بِي جَزَعٌ مِنَ الْمَوْتِ، لَزِدْتُ. فَكَانَ أَوَّلَ مَنْ سَنَّ الرَّكْعَتَيْنِ عِنْدَ الْقَتْلِ هُوَ، ثُمَّ قَالَ اللَّهُمَّ أَحْصِهِمْ عَدَدًا ثُمَّ قَالَ مَا أُبَالِي حِينَ أُقْتَلُ مُسْلِمًا عَلَى أَىِّ شِقٍّ كَانَ لِلَّهِ مَصْرَعِي وَذَلِكَ فِي ذَاتِ الإِلَهِ وَإِنْ يَشَأْ يُبَارِكْ عَلَى أَوْصَالِ شِلْوٍ مُمَزَّعِ ثُمَّ قَامَ إِلَيْهِ عُقْبَةُ بْنُ الْحَارِثِ فَقَتَلَهُ، وَبَعَثَ قُرَيْشٌ إِلَى عَاصِمٍ لِيُؤْتَوْا بِشَىْءٍ مِنْ جَسَدِهِ يَعْرِفُونَهُ، وَكَانَ عَاصِمٌ قَتَلَ عَظِيمًا مِنْ عُظَمَائِهِمْ يَوْمَ بَدْرٍ، فَبَعَثَ اللَّهُ عَلَيْهِ مِثْلَ الظُّلَّةِ مِنَ الدَّبْرِ، فَحَمَتْهُ مِنْ رُسُلِهِمْ، فَلَمْ يَقْدِرُوا مِنْهُ عَلَى شَىْءٍ.
பாடம் : 29
ரஜீஉ, ரிஅல், தக்வான், பிஃரு மஊனா ஆகிய போர்களும் அளல், காரா குலத்தார் குறித்த செய்தியும் ஆஸிம் பின் ஸாபித் (ரலி), குபைப் (ரலி) மற்றும் அவர்களின் தோழர்கள் குறித்த செய்தியும்159
“ரஜீஉ' போர், உஹுத் போருக்குப் பின்னால் நடைபெற்றது' என ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
4086. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (பத்துப் பேர் கொண்ட) உளவுப் படையொன்றை (ஓரிடத்திற்கு) அனுப்பினார்கள். உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் புதல்வர் ஆஸிமின் (தாய்வழிப்) பாட்டனார் ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்களை அப்படையினருக்குத் தலைவராக்கி னார்கள். அவர்கள் (மதீனாவிலிருந்து புறப்பட்டு வந்து) மக்காவுக்கும் உஸ்ஃபானுக்கும் இடையிலுள்ள (“ஹத்தா' என்ற) இடத்தில் இருந்தபோது “ஹுதைல்' குலத்தைச் சேர்ந்த பனூ லிஹ்யான் என்றழைக்கப்பட்ட கிளையினருக்கு அவர்களைப் பற்றித் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள், அம்பெய்யும் வீரர்கள் சுமார் நூறு பேருடன் (கிளம்பி, உளவுப் படையினரைப் பிடிப்பதற்காக) அவர்களின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்தனர். உளவுப் படையினர் இறங்கித் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். படையினர் மதீனாவிóருந்து உணவாகக் கொண்டுவந்திருந்த பேரீச்சம் பழங்களின் கொட்டைகளை அங்கே கண்டனர். அப்போது, “இது “யஸ்ரிப்' (மதீனா நகரின்) பேரீச்சம்பழம்” என்று சொல்லிக்கொண்டனர். எனவே, உளவுப் படையினரின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்து, இறுதியில் அவர் களை அடைந்தேவிட்டனர். ஆஸிம் (ரலி) அவர்களும், அவர்களுடைய நண்பர்களும் இதை அறிந்தபோது (மலைப் பாங்கான) உயரமான ஓரிடத்தில் தஞ்சம் புகுந்தனர்.
அப்போது (துரத்தி வந்த) அந்தக் கிளையினர் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்து, “நீங்கள் எங்களிடம் இறங்கிவந்துவிட்டால், உங்களில் யாரையும் நாங்கள் கொலை செய்யமாட்டோம் என்று உங்களுக்கு உறுதிமொழியும் வாக்குறுதியும் தருகிறோம்” என்று கூறினர்.
அப்போது ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “நான் ஓர் இறைமறுப்பாளரின் (வாக்குறுதியை நம்பி அவரது) பாதுகாப்பில் இறங்கிச் செல்லமாட்டேன். இறைவா! எங்களைப் பற்றிய செய்தியை உன் தூதருக்குத் தெரிவித்துவிடு” என்று கூறினார்கள். அப்போது அக்கிளையினர் உளவுப் படையினருடன் சண்டையிட்டு ஆஸிம் (ரலி) அவர்கள் உட்பட ஏழுபேரை அம்பெய்து கொன்றுவிட்டனர்.
இறுதியில் குபைப் (ரலி), ஸைத் (ரலி), மற்றொருவர் மட்டுமே160 எஞ்சியிருந்தனர். இம்மூவருக்கும் உறுதிமொழியும் வாக்குறுதியும் (எதிரிகள்) அளித்தனர். அவர்களது உறுதிமொழி மற்றும் வாக்குறுதியின்பேரில் இறங்கிவந்தனர்.
அவர்கள் (மூவரும்) தம் கையில் கிடைத்தவுடன் (எதிரிகள்) தம் அம்பின் நாணை அவிழ்த்து அதன் மூலம் அவர்களைப் பிணைத்தனர். (இதைக் கண்ட) அந்த மூன்றாம் மனிதர், “இது முதலாவது நம்பிக்கைத் துரோகம்” என்று கூறி, அவர்களுடன் வர மறுத்துவிட்டார்,எனவே, அவரை (அடித்து)த் துன்புறுத்தி தம்முடன் வரும்படி நிர்பந்தித்தனர். ஆனால், அவர் உடன்படவில்லை.எனவே, அவரை அவர்கள் கொலை செய்துவிட்டனர்.
பிறகு, குபைப் (ரலி) அவர்களையும், ஸைத் பின் அத்தஸினா (ரலி) அவர்களை யும் கொண்டுசென்று மக்காவில் விலைக்கு விற்றுவிட்டனர். ஹாரிஸ் பின் ஆமிர் பின் நவ்ஃபல் என்பவருடைய மக்கள், குபைப் (ரலி) அவர்களை (பழிதீர்ப்பதற்காக) விலைக்கு வாங்கிக்கொண்டனர். (ஏனெனில்,) குபைப் (ரலி) அவர்கள் ஹாரிஸ் பின் ஆமிரை பத்ர் போரின்போது கொன்றிருந்தார். ஹாரிஸின் மக்களிடம் குபைப் (ரலி) அவர்கள் (புனித மாதங்கள் முடிந்து) அவரைக் கொல்ல அவர்கள் ஒன்றுதிரளும் (நாள் வரும்)வரையில் கைதியாக இருந்துவந்தார்.
(கொல்லப்படும் நாள் நெருங்கியபோது தம்முடைய மறைவான உறுப்புகளிóருந்த முடிகளை) மழிப்பதற்காக ஹாரிஸின் மகள் ஒருத்தியிடம் சவரக்கத்தி ஒன்றை குபைப் (ரலி) அவர்கள் இரவலாகக் கேட்டார். அவளும் அவருக்கு இரவலாகத் தந்தாள். (அதற்குப்பின் நடந்ததை அப்பெண்மணியே விளக்கிக்) கூறுகிறார்:
நான் என்னுடைய சிறிய மகனைக் கவனிக்காமல் இருந்துவிடவே, அவன் (விளையாடிக்கொண்டே) தவழ்ந்து குபைப் அவர்களிடம் வந்து சேர்ந்தான். அவனை குபைப் அவர்கள் தமது மடியில் வைத்துக்கொண்டார்கள். (இந்நிலையில்) அவரை நான் பார்த்தபோது பலமாக அதிர்ந்தேன். இதை அவர் புரிந்துகொண்டார். அவரது கையில் கத்தி இருந்தது. அப்போது அவர், “இவனை நான் கொன்றுவிடுவேன் என்று அஞ்சுகிறாயா? அல்லாஹ்வின் நாட்டப்படி நான் அப்படிச் செய்பவன் அல்லன்” என்று கூறினார்.
குபைபைவிடச் சிறந்த ஒரு கைதியை நான் (என் வாழ்நாளில்) கண்டதில்லை. ஒருநாள் அவர் தம் கையிலிருந்த திராட்சைப் பழக் குலையிலிருந்து (பழங்களைப் பறித்துச்) சாப்பிட்டுக்கொண்டிருக்கக் கண்டேன். அந்நாளில் மக்காவில் எந்தப் பழவகையும் இருக்கவில்லை. மேலும், அப்போது அவர் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார். (பிற்காலத்தில் அந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து) “அது குபைபுக்கு அல்லாஹ் வழங்கிய உணவு” என்று அந்தப் பெண் கூறிவந்தார்- (அவரைக் கொல்வதற்காக - மக்காவின்) புனித எல்லைக்கு வெளியே அவரை அவர்கள் கொண்டுவந்தபோது, “இரண்டு ரக்அத்கள் நான் தொழுதுகொள்ள என்னை விடுங்கள்” என்று குபைப் கேட்டார். (அவர்களும் அனுமதிக்க, குபைப் (ரலி) இரண்டு ரக்அத்கள் தொழுதார்.) பிறகு, அவர்களின் பக்கம் திரும்பி, “நான் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறேன் என்று நீங்கள் எண்ணிவிடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் (தொழுகையை) அதிகமாக்கியிருப்பேன்” என்று கூறினார்.
அவர்தான் (இறைவழியில்) கொல்லப்படுவதற்குமுன் இரண்டு ரக்அத்கள் தொழுவதை முன்மாதிரியாக்கியவர் ஆவார். பிறகு, “இறைவா! இவர்களை நீ எண்ணி வைத்துக்(கொண்டு, தனித் தனியாக இவர்களைக் கவனித்துக்கொள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்.
அதன் பிறகு,
நான்முஸ்óமாகக் கொல்லப்படுகையில்எதைப் பற்றியும்பொருட்படுத்தப்போவதில்லை.
எந்த இடத்தில்நான் இறந்தாலும்இறைவனுக்காகக்கொல்லப்படுகிறேன் (என்பதில் மகிழ்ச்சியே)!
நான் கொல்லப்படுவதுஇறையன்புக்காக எனும்போது,அவன் நாடினால்துண்டிக்கப்பட்டஎன் உறுப்புகளின்இணைப்புகள்மீதுகூடவளம் வழங்குவான்
என்று (கவியாகக்) கூறினார்கள். பிறகு, உக்பா பின் அல்ஹாரிஸ் என்பவன் குபைப் (ரலி) அவர்களிடம் வந்து, அவர்களைக் கொன்றுவிட்டான்.
மேலும், (ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டுவிட்ட செய்தி குறைஷியருக்குக் கிடைத்தபோது) அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்வதற்காக அவரது உடலில் ஓர் உறுப்பை எடுத்து வரும்படி ஆளனுப்பினார்கள். (ஏனெனில்,) ஆஸிம் (ரலி) அவர்கள் பத்ர் போரின்போது அவர்களின் தலைவர்களில் ஒருவரைக் கொலை செய்திருந்தார். (அவரது உடலின் ஒரு முக்கிய உறுப்பை வெட்ட அவர்கள் போனபோது) ஆஸிம் (ரலி) அவர்களுக்குமேல் (அன்னாரைப் பாதுகாக்கும் நோக்கில்) அல்லாஹ் மேகத்தைப் போன்று ஆண் தேனீக்களை அனுப்பினான். குறைஷியரின் தூதர்களிடமிருந்து ஆஸிம் (ரலி) அவர்களை (சூழ்ந்துகொண்டு) அவை பாதுகாத்தன. ஆகவே, அவரிடமிருந்து எதையும் எடுக்க அவர்களால் இயலவில்லை.161

4087. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرًا، يَقُولُ الَّذِي قَتَلَ خُبَيْبًا هُوَ أَبُو سِرْوَعَةَ.
பாடம் : 29
ரஜீஉ, ரிஅல், தக்வான், பிஃரு மஊனா ஆகிய போர்களும் அளல், காரா குலத்தார் குறித்த செய்தியும் ஆஸிம் பின் ஸாபித் (ரலி), குபைப் (ரலி) மற்றும் அவர்களின் தோழர்கள் குறித்த செய்தியும்159
“ரஜீஉ' போர், உஹுத் போருக்குப் பின்னால் நடைபெற்றது' என ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
4087. ஜாபிர் (பின் அப்தில்லாஹ் -ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூசிர்வஆ (உக்பா பின் அல்ஹாரிஸ்) என்பவனே குபைப் (ரலி) அவர்களைக் கொன்றான்.

4088. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَبْعِينَ رَجُلاً لِحَاجَةٍ يُقَالُ لَهُمُ الْقُرَّاءُ، فَعَرَضَ لَهُمْ حَيَّانِ مِنْ بَنِي سُلَيْمٍ رِعْلٌ وَذَكْوَانُ، عِنْدَ بِئْرٍ يُقَالُ لَهَا بِئْرُ مَعُونَةَ، فَقَالَ الْقَوْمُ وَاللَّهِ مَا إِيَّاكُمْ أَرَدْنَا، إِنَّمَا نَحْنُ مُجْتَازُونَ فِي حَاجَةٍ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم، فَقَتَلُوهُمْ فَدَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْهِمْ شَهْرًا فِي صَلاَةِ الْغَدَاةِ، وَذَلِكَ بَدْءُ الْقُنُوتِ وَمَا كُنَّا نَقْنُتُ. قَالَ عَبْدُ الْعَزِيزِ وَسَأَلَ رَجُلٌ أَنَسًا عَنِ الْقُنُوتِ أَبَعْدَ الرُّكُوعِ، أَوْ عِنْدَ فَرَاغٍ مِنَ الْقِرَاءَةِ قَالَ لاَ بَلْ عِنْدَ فَرَاغٍ مِنَ الْقِرَاءَةِ.
பாடம் : 29
ரஜீஉ, ரிஅல், தக்வான், பிஃரு மஊனா ஆகிய போர்களும் அளல், காரா குலத்தார் குறித்த செய்தியும் ஆஸிம் பின் ஸாபித் (ரலி), குபைப் (ரலி) மற்றும் அவர்களின் தோழர்கள் குறித்த செய்தியும்159
“ரஜீஉ' போர், உஹுத் போருக்குப் பின்னால் நடைபெற்றது' என ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
4088. அனஸ் (பின் மாலிக் -ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எழுபது பேரை ஒரு தேவைக்காக அனுப்பிவைத்தார்கள். -அவர்கள் “குர்ராஉ' (குர்ஆனை நன்கறிந்த வர்கள்) என்று அழைக்கப்பட்டனர்- அப்போது பனூ சுலைம் குலத்தைச் சேர்ந்த ரிஅல் மற்றும் தக்வான் ஆகிய இரு கூட்டத்தார், “பிஃரு மஊனா' என்றழைக்கப்படும் ஒரு கிணற்றுக்கு அருகில் அவர்களை இடைமறித்தனர்.
அப்போது அந்த நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (உங்க ளிடம் போரிடுவதற்காக) உங்களை நாடி நாங்கள் வரவில்லை. நபி (ஸல்) அவர்களின் ஒரு தேவைக்காகவே நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம்” என்று கூறினர். ஆயினும், அவர்கள் அந்த நபித்தோழர்களைக் கொன்றுவிட்டனர்.
ஆகவே, அவர்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் அதிகாலைத் தொழுகையில் பிரார்த்தித்தார்கள். இதுவே (தொழுகையில்) “குனூத்' (எனும் சிறப்பு துஆ ஓதுவ)தின் துவக்கமாகும். நாங்கள் அதற்குமுன் “குனூத்' ஓதுபவர்களாக இருக்கவில்லை.162
அறிவிப்பாளர் அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்:
ஒரு மனிதர் அனஸ் (ரலி) அவர்களிடம், குனூத் குறித்து, “அது ருகூவிற்குப் பின்பா? அல்லது கிராஅத் ஓதி முடித்த பின்பா? (எப்போது அதை ஓத வேண்டும்?)” என்று கேட்டார். அதற்கு, “அல்ல; கிராஅத் ஓதி முடித்த பின்புதான்” என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

4089. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَهْرًا بَعْدَ الرُّكُوعِ يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنَ الْعَرَبِ.
பாடம் : 29
ரஜீஉ, ரிஅல், தக்வான், பிஃரு மஊனா ஆகிய போர்களும் அளல், காரா குலத்தார் குறித்த செய்தியும் ஆஸிம் பின் ஸாபித் (ரலி), குபைப் (ரலி) மற்றும் அவர்களின் தோழர்கள் குறித்த செய்தியும்159
“ரஜீஉ' போர், உஹுத் போருக்குப் பின்னால் நடைபெற்றது' என ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
4089. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மாதம் (ஃபஜ்ர் தொழுகையில்) ருகூஉவிற்குப் பின்னால் அரபுக் குலத்தார் பலருக்கெதிராகப் பிரார்த்தித்து “குனூத்' (எனும் சிறப்பு துஆ) ஓதினார்கள்.

4090. حَدَّثَنِي عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رِعْلاً، وَذَكْوَانَ وَعُصَيَّةَ وَبَنِي لَحْيَانَ اسْتَمَدُّوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى عَدُوٍّ، فَأَمَدَّهُمْ بِسَبْعِينَ مِنَ الأَنْصَارِ، كُنَّا نُسَمِّيهِمُ الْقُرَّاءَ فِي زَمَانِهِمْ، كَانُوا يَحْتَطِبُونَ بِالنَّهَارِ وَيُصَلُّونَ بِاللَّيْلِ، حَتَّى كَانُوا بِبِئْرِ مَعُونَةَ قَتَلُوهُمْ، وَغَدَرُوا بِهِمْ، فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم، فَقَنَتَ شَهْرًا يَدْعُو فِي الصُّبْحِ عَلَى أَحْيَاءٍ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ، عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ وَبَنِي لَحْيَانَ. قَالَ أَنَسٌ فَقَرَأْنَا فِيهِمْ قُرْآنًا ثُمِّ إِنَّ ذَلِكَ رُفِعَ بَلِّغُوا عَنَّا قَوْمَنَا، أَنَّا لَقِينَا رَبَّنَا، فَرَضِيَ عَنَّا وَأَرْضَانَا. وَعَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ حَدَّثَهُ أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم قَنَتَ شَهْرًا فِي صَلاَةِ الصُّبْحِ يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ، عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ وَبَنِي لَحْيَانَ. زَادَ خَلِيفَةُ حَدَّثَنَا ابْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسٌ، أَنَّ أُولَئِكَ السَّبْعِينَ، مِنَ الأَنْصَارِ قُتِلُوا بِبِئْرِ مَعُونَةَ، قُرْآنًا كِتَابًا. نَحْوَهُ.
பாடம் : 29
ரஜீஉ, ரிஅல், தக்வான், பிஃரு மஊனா ஆகிய போர்களும் அளல், காரா குலத்தார் குறித்த செய்தியும் ஆஸிம் பின் ஸாபித் (ரலி), குபைப் (ரலி) மற்றும் அவர்களின் தோழர்கள் குறித்த செய்தியும்159
“ரஜீஉ' போர், உஹுத் போருக்குப் பின்னால் நடைபெற்றது' என ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
4090. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ரிஅல், தக்வான், உஸய்யா மற்றும் பனூ லிஹ்யான் குலத்தார்163 (வந்து தம்முடைய) பகைவர்களுக்கு எதிராக (படை தந்து) உதவும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கோரினர். அப்போது அவர்களுக்கு அன்சாரிகளில் எழுபது பேரை அனுப்பி வைத்து நபி (ஸல்) அவர்கள் உதவினார்கள். அந்தக் காலத்தில் அவர்களை (அந்த எழுபது பேர்களை) நாங்கள் “குர்ராஉ' (குர்ஆனை நன்கறிந்தவர்கள்) என்று பெயரிட்டு அழைத்துவந்தோம். அவர்கள் பகலில் (பிழைப்பிற்காக) விறகு சேகரிப்பவர்களாகவும் இரவில் தொழக்கூடியவர்களாகவும் இருந்துவந்தனர். இவர்கள் (பயணம் செய்து) “பிஃரு மஊனா' எனுமிடத்தை அடைந்தபோது (பனூ சுலைம் குலத்தைச் சேர்ந்த) அவர்கள், இவர்களை வஞ்சித்துக் கொன்றுவிட்டனர்.
இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டியபோது ஒரு மாத காலம் சுப்ஹ் தொழுகையில் அரபுக் குலங்களான ரிஅல், தக்வான், உஸய்யா மற்றும் பனூ லிஹ்யான் ஆகிய குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்து “குனூத்' (எனும் சிறப்பு துஆ) ஓதினார்கள். இவர்கள் குறித்து (அருளப்பட்டிருந்த) குர்ஆன் (வசனமொன்றை) ஓதிவந்தோம். பின்னாளில் அது (இறைவனால்) நீக்கப்பட்டுவிட்டது.
நாங்கள் எங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டோம். அவன் எங்கள் மீது அன்பு கொண்டான்; எங்களை அவன் அன்பு கொள்ளச்செய்தான்' என்று எங்களைப் பற்றி எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்துவிடுங்கள்” என்பதே அந்த வசனமாகும்.164
அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதகாலம்வரையில் சுப்ஹ் தொழுகையில் அரபுக் குலங்களைச் சேர்ந்த ரிஅல், தக்வான், உஸய்யா, மற்றும் பனூ லிஹ்யான் ஆகிய கூட்டத்தாருக்கு எதிராக “குனூத்' பிரார்த்தனை புரிந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் கலீஃபா பின் கய்யாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அன்சாரிகளான அந்த எழுபது பேரும் பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டார்கள்” என்று காணப்படுகிறது.

4091. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، قَالَ حَدَّثَنِي أَنَسٌ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ خَالَهُ أَخٌ لأُمِّ سُلَيْمٍ فِي سَبْعِينَ رَاكِبًا، وَكَانَ رَئِيسَ الْمُشْرِكِينَ عَامِرُ بْنُ الطُّفَيْلِ خَيَّرَ بَيْنَ ثَلاَثِ خِصَالٍ فَقَالَ يَكُونُ لَكَ أَهْلُ السَّهْلِ، وَلِي أَهْلُ الْمَدَرِ، أَوْ أَكُونُ خَلِيفَتَكَ، أَوْ أَغْزُوكَ بِأَهْلِ غَطَفَانَ بِأَلْفٍ وَأَلْفٍ، فَطُعِنَ عَامِرٌ فِي بَيْتِ أُمِّ فُلاَنٍ فَقَالَ غُدَّةٌ كَغُدَّةِ الْبَكْرِ فِي بَيْتِ امْرَأَةٍ مِنْ آلِ فُلاَنٍ ائْتُونِي بِفَرَسِي. فَمَاتَ عَلَى ظَهْرِ فَرَسِهِ، فَانْطَلَقَ حَرَامٌ أَخُو أُمِّ سُلَيْمٍ هُوَ {وَ} رَجُلٌ أَعْرَجُ وَرَجُلٌ مِنْ بَنِي فُلاَنٍ قَالَ كُونَا قَرِيبًا حَتَّى آتِيَهُمْ، فَإِنْ آمَنُونِي كُنْتُمْ، وَإِنْ قَتَلُونِي أَتَيْتُمْ أَصْحَابَكُمْ. فَقَالَ أَتُؤْمِنُونِي أُبَلِّغْ رِسَالَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَجَعَلَ يُحَدِّثُهُمْ وَأَوْمَئُوا إِلَى رَجُلٍ، فَأَتَاهُ مِنْ خَلْفِهِ فَطَعَنَهُ ـ قَالَ هَمَّامٌ أَحْسِبُهُ حَتَّى أَنْفَذَهُ ـ بِالرُّمْحِ، قَالَ اللَّهُ أَكْبَرُ فُزْتُ وَرَبِّ الْكَعْبَةِ. فَلُحِقَ الرَّجُلُ، فَقُتِلُوا كُلُّهُمْ غَيْرَ الأَعْرَجِ كَانَ فِي رَأْسِ جَبَلٍ، فَأَنْزَلَ اللَّهُ عَلَيْنَا، ثُمَّ كَانَ مِنَ الْمَنْسُوخِ إِنَّا قَدْ لَقِينَا رَبَّنَا فَرَضِيَ عَنَّا وَأَرْضَانَا. فَدَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْهِمْ ثَلاَثِينَ صَبَاحًا، عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَبَنِي لَحْيَانَ وَعُصَيَّةَ، الَّذِينَ عَصَوُا اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم.
பாடம் : 29
ரஜீஉ, ரிஅல், தக்வான், பிஃரு மஊனா ஆகிய போர்களும் அளல், காரா குலத்தார் குறித்த செய்தியும் ஆஸிம் பின் ஸாபித் (ரலி), குபைப் (ரலி) மற்றும் அவர்களின் தோழர்கள் குறித்த செய்தியும்159
“ரஜீஉ' போர், உஹுத் போருக்குப் பின்னால் நடைபெற்றது' என ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
4091. அனஸ் (பின் மாலிக் - ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தாயார்) உம்மு சுலைம் அவர்களின் சகோதரர், என் தாய் மாமா (ஹராம் பின் மில்ஹான் - ரலி) அவர்களை (குர்ஆனை நன்கறிந்தவர்களான எழுபது) பயணிகளில் ஒருவராக நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். இணைவைப்பாளர்களின் தலைவன் ஆமிர் பின் துஃபைல், பின்வரும் மூன்று விஷயங்களில் ஒன்றைத் தேர்ந் தெடுக்கும்படி (நபி (ஸல்) அவர்களிடம்) கூறினான்:
கிராமப்புற மக்கள் உங்களுக்குச் சொந்தம்; (அவர்களுக்கு ஆட்சியாளராக நீங்கள் இருங்கள்;) நகர்ப்புற மக்கள் எனக்குச் சொந்தம். (நான் அவர்களுக்கு ஆட்சியாளராக இருப்பேன்.) அல்லது நான் உங்களுக்கு கலீஃபாவாக (பிரதிநிதியாக) இருப்பேன். அல்லது ஆயிரக்கணக்கான ஃகதஃபான் குலத்தாருடன் (வந்து) உங்களோடு போர் தொடுப்பேன்” என்று கூறினான்.
பிறகு இன்னாரின் தாய் வீட்டில் “ஆமிர்' கொள்ளை நோயால் பீடிக்கப்பட்டான். அப்போது அவன், “இன்னாரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டில் இளம் ஒட்டகத்திற்கு ஏற்படும் கொள்ளை நோய் போன்று (எனக்கும்) ஏற்பட்டுவிட்டது. எனவே, எனது குதிரையை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று கூறினான். பிறகு அவன் தனது குதிரையின் முதுகின் மீதே இறந்துபோனான்.165
(என் தாய்) உம்மு சுலைம் அவர்களின் சகோதரர் ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்களும், கால் ஊனமுற்றவர் ஒருவரும், இன்னாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரும்166 (நபி (ஸல்) அவர்களின் ஆணையின் பேரில் பனூ ஆமிர் குலத்தாரை நோக்கி) நடந்தார்கள். அப்போது ஹராம் அவர்கள் (தம்மிரு சகாக்களை நோக்கி), “நீங்கள் இருவரும் (எனக்கு) அருகிலேயே இருங்கள். நான் பனூ ஆமிர் குலத்தாரிடம் செல்கிறேன். அவர்கள் எனக்குப் பாதுகாப்பளித்தால் நீங்கள் (அப்படியே) இருங்கள். என்னை அவர்கள் கொன்றுவிட்டால் நீங்கள் உங்கள் சகாக்களிடம் சென்று (தெரிவித்து)விடுங்கள்” என்று கூறி னார்கள்.
(பிறகு, பனூ ஆமிர் குலத்தாரிடம் சென்று, அவர்களை நோக்கி,) “எனக்குப் பாதுகாப்புத் தருவீர்களா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தூதுச் செய்தியைத் தெரிவிக்கிறேன்” என்று கேட்டுவிட்டு அவர்களிடம் (அந்தச் செய்தியைப்) பேசலானார்கள். அப்போது அக்குலத்தார் ஒருவனுக்குச் சைகை செய்ய, அவன் ஹராம் (ரலி) அவர்களுக்குப் பின்னால் வந்து அவர்களை (ஈட்டியால்) குத்திவிட்டான். -அறிவிப்பாளர் ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) கூறுகிறார்கள்: “ஈட்டியால் குத்தி (மறுபக்கம்வரை) செலுத்தினான்' என்று கூறியதாக எண்ணுகிறேன்.- உடனே ஹராம் அவர்கள், “அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்). கஅபாவின் அதிபதி மீதாணையாக! நான் வெற்றி பெற்றுவிட்டேன்” என்று கூறினார்கள். பிறகு அன்னாரின் உயிர் பிரிந்தது. கால் ஊனமுற்றவரைத் தவிர மற்ற அனைவரும் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் அந்த ஊனமுற்றவர் மலை உச்சியில் இருந்தார்.
பிறகு, (இச்சம்பவத்தில் உயிர்நீத்தவர்கள் தொடர்பாக) அல்லாஹ் எங்கள்மீது (ஒரு வசனத்தை) அருளினான். பிறகு அந்த வசனம் (அல்லாஹ்வின் ஆணையின்படி) நீக்கப்பட்டுவிட்டது. “நாங்கள் எங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டோம். அவன் எங்கள்மீது அன்பு கொண்டான். (அருள் வளங்களை அள்ளித் தந்து) எங்களை அவன் அன்பு கொள்ளச் செய்தான்” (என்பதே அந்த வசனம்).
ஆகவே, நபி (ஸல்) அவர்கள், ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக் கும் விரோதமாக நடந்துகொண்ட உஸய்யா ஆகிய குலத்தாருக்கெதிராக முப்பது நாள் அதிகாலை(த் தொழுகை)யில் பிரார்த்தனை புரிந்தார்கள்.167

4092. حَدَّثَنِي حِبَّانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، قَالَ حَدَّثَنِي ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ لَمَّا طُعِنَ حَرَامُ بْنُ مِلْحَانَ ـ وَكَانَ خَالَهُ ـ يَوْمَ بِئْرِ مَعُونَةَ قَالَ بِالدَّمِ هَكَذَا، فَنَضَحَهُ عَلَى وَجْهِهِ وَرَأْسِهِ، ثُمَّ قَالَ فُزْتُ وَرَبِّ الْكَعْبَةِ.
பாடம் : 29
ரஜீஉ, ரிஅல், தக்வான், பிஃரு மஊனா ஆகிய போர்களும் அளல், காரா குலத்தார் குறித்த செய்தியும் ஆஸிம் பின் ஸாபித் (ரலி), குபைப் (ரலி) மற்றும் அவர்களின் தோழர்கள் குறித்த செய்தியும்159
“ரஜீஉ' போர், உஹுத் போருக்குப் பின்னால் நடைபெற்றது' என ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
4092. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“பிஃரு மஊனா' சம்பவத்தின்போது, என் தாய்மாமன் ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்கள் (ஈட்டியால்) குத்தப்பட்ட சமயத்தில், தமது காயத்திலிருந்து - இதோ இப்படி - இரத்தத்தை அள்ளித் தமது முகத்தின் மீதும் தலையின் மீதும் தெளித்துக்கொண்டு, “கஅபாவின் அதிபதி மீதாணையாக! நான் வெற்றி பெற்றுவிட்டேன்” என்று சொன்னார்கள்.

4093. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اسْتَأْذَنَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَبُو بَكْرٍ فِي الْخُرُوجِ حِينَ اشْتَدَّ عَلَيْهِ الأَذَى، فَقَالَ لَهُ "" أَقِمْ "". فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَتَطْمَعُ أَنْ يُؤْذَنَ لَكَ، فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنِّي لأَرْجُو ذَلِكَ "" قَالَتْ فَانْتَظَرَهُ أَبُو بَكْرٍ فَأَتَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ ظُهْرًا فَنَادَاهُ فَقَالَ "" أَخْرِجْ مَنْ عِنْدَكَ "". فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّمَا هُمَا ابْنَتَاىَ. فَقَالَ "" أَشَعَرْتَ أَنَّهُ قَدْ أُذِنَ لِي فِي الْخُرُوجِ "". فَقَالَ يَا رَسُولَ اللَّهِ الصُّحْبَةُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الصُّحْبَةُ "". قَالَ يَا رَسُولَ اللَّهِ عِنْدِي نَاقَتَانِ قَدْ كُنْتُ أَعْدَدْتُهُمَا لِلْخُرُوجِ. فَأَعْطَى النَّبِيَّ صلى الله عليه وسلم إِحْدَاهُمَا وَهْىَ الْجَدْعَاءُ، فَرَكِبَا فَانْطَلَقَا حَتَّى أَتَيَا الْغَارَ، وَهْوَ بِثَوْرٍ، فَتَوَارَيَا فِيهِ، فَكَانَ عَامِرُ بْنُ فُهَيْرَةَ غُلاَمًا لِعَبْدِ اللَّهِ بْنِ الطُّفَيْلِ بْنِ سَخْبَرَةَ أَخُو عَائِشَةَ لأُمِّهَا، وَكَانَتْ لأَبِي بَكْرٍ مِنْحَةٌ، فَكَانَ يَرُوحُ بِهَا وَيَغْدُو عَلَيْهِمْ، وَيُصْبِحُ فَيَدَّلِجُ إِلَيْهِمَا ثُمَّ يَسْرَحُ، فَلاَ يَفْطُنُ بِهِ أَحَدٌ مِنَ الرِّعَاءِ، فَلَمَّا خَرَجَ خَرَجَ مَعَهُمَا يُعْقِبَانِهِ حَتَّى قَدِمَا الْمَدِينَةَ، فَقُتِلَ عَامِرُ بْنُ فُهَيْرَةَ يَوْمَ بِئْرِ مَعُونَةَ. وَعَنْ أَبِي أُسَامَةَ قَالَ قَالَ هِشَامُ بْنُ عُرْوَةَ فَأَخْبَرَنِي أَبِي قَالَ لَمَّا قُتِلَ الَّذِينَ بِبِئْرِ مَعُونَةَ وَأُسِرَ عَمْرُو بْنُ أُمَيَّةَ الضَّمْرِيُّ قَالَ لَهُ عَامِرُ بْنُ الطُّفَيْلِ مَنْ هَذَا فَأَشَارَ إِلَى قَتِيلٍ، فَقَالَ لَهُ عَمْرُو بْنُ أُمَيَّةَ هَذَا عَامِرُ بْنُ فُهَيْرَةَ. فَقَالَ لَقَدْ رَأَيْتُهُ بَعْدَ مَا قُتِلَ رُفِعَ إِلَى السَّمَاءِ حَتَّى إِنِّي لأَنْظُرُ إِلَى السَّمَاءِ بَيْنَهُ وَبَيْنَ الأَرْضِ، ثُمَّ وُضِعَ. فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم خَبَرُهُمْ فَنَعَاهُمْ فَقَالَ "" إِنَّ أَصْحَابَكُمْ قَدْ أُصِيبُوا، وَإِنَّهُمْ قَدْ سَأَلُوا رَبَّهُمْ، فَقَالُوا رَبَّنَا أَخْبِرْ عَنَّا إِخْوَانَنَا بِمَا رَضِينَا عَنْكَ وَرَضِيتَ عَنَّا. فَأَخْبَرَهُمْ عَنْهُمْ "". وَأُصِيبَ يَوْمَئِذٍ فِيهِمْ عُرْوَةُ بْنُ أَسْمَاءَ بْنِ الصَّلْتِ، فَسُمِّيَ عُرْوَةُ بِهِ، وَمُنْذِرُ بْنُ عَمْرٍو سُمِّيَ بِهِ مُنْذِرًا.
பாடம் : 29
ரஜீஉ, ரிஅல், தக்வான், பிஃரு மஊனா ஆகிய போர்களும் அளல், காரா குலத்தார் குறித்த செய்தியும் ஆஸிம் பின் ஸாபித் (ரலி), குபைப் (ரலி) மற்றும் அவர்களின் தோழர்கள் குறித்த செய்தியும்159
“ரஜீஉ' போர், உஹுத் போருக்குப் பின்னால் நடைபெற்றது' என ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
4093. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
(மக்கா இறைமறுப்பாளர்கள் கொடுத்த) தொல்லை கடுமையானபோது (மதீனாவுக்கு ஹிஜ்ரத்) புறப்பட அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(சற்று) பொறுங்கள்” என்று கூறினார்கள். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து நீங்கள் ஹிஜ்ரத் செல்ல) தங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்பார்க்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (“ஆம்') நான் அதை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்” என்று கூறிவந்தார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். பின்பு ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், லுஹ்ர் நேரத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து அவர்களை அழைத்தார்கள். மேலும், “(அபூபக்ர் அவர்களே! நான் இரகசியம் பேச வேண்டும்) உங்களுடன் இருப்பவர்களை வெளியே செல்லும்படி கூறுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னுடனிருக்கும்) இந்த இருவரும் என்னிரு பெண்மக்கள் (ஆயிஷாவும், அஸ்மாவும்)தான்” என்று பதிலளித்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து, மக்காவிலிருந்து) புறப்பட எனக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது உங்களுக்குத் தெரிந்ததா?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நானும் உடன் வருவதை விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு, “(ஆம்) உடன் வருவதை விரும்புகிறேன்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் இரண்டு ஒட்டகங்கள் இருக்கின்றன. அவற்றை முன்கூட்டியே (ஹிஜ்ரத்) புறப்பட்டுச் செல்வதற்கென தயார் நிலையில் வைத்துள்ளேன்” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். பின்பு, அவற்றில் ஒன்றை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்தார்கள். அந்த ஒட்டகத்திற்கு “ஜத்ஆ' என்று பெயர்.
பிறகு இருவரும் பயணம் புறப்பட்டுச் சென்று, ஸவ்ர் (மலைக்) குகைக்கு வந்து அதில் அவர்கள் இருவரும் ஒளிந்துகொண்டனர். ஆமிர் பின் ஃபுஹைரா, என் தாய்வழிச் சகோதரர் துஃபைல் பின் அப்தில்லாஹ் பின் சக்பரா அவர்களின் அடிமையாக இருந்தார். மேலும், (என் தந்தை) அபூபக்ர் அவர்களிடம் பால் தரும் ஒட்டகம் ஒன்றிருந்தது. ஆமிர் பின் ஃபுஹைரா அந்த ஒட்டகத்தை மக்காவாசிகளுடன் மதிய வேளையிலும் காலை வேளையிலும் ஓட்டிச் செல்லக் கூடியவராக இருந்தார்.
காலை நேரத்தில் மக்காவாசிகளுடன் இருக்கும் அவர், இரவின் கடைசி நேரத்தில் நபி (ஸல்) அவர்களிடமும் அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் (அவர்களுக்கு ஒட்டகப் பால் தருவதற்காகச்) சென்றுவிடுவார். பிறகு அந்த ஒட்டகத்தை (மேய்ப்பதற்கு) ஓட்டிச் செல்வார்.
ஆனால், இடையர்களில் யாருக்கும் இது தெரியாது. நபி (ஸல்) அவர்கள் (குகையிலிருந்து அபூபக்ருடன்) புறப்பட்டபோது அவ்விருவருடன் ஆமிர் பின் ஃபுஹைராவும் புறப்பட்டார். மதீனா போய்ச் சேரும்வரையில் அவர்கள் இருவரும் (முறைமாற்றி) ஆமிரைத் தமக்குப்பின் அமர்த்திக்கொண்டனர். (பின்பு) பிஃரு மஊனா நாளில் ஆமிர் பின் ஃபுஹைரா கொல்லப்பட்டார்.168
உர்வா (பின் அஸ்ஸுபைர் -ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பிஃரு மஊனாவில் இருந்த (குர்ஆனை நன்கறிந்த)வர்கள் கொல்லப்பட்டு அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி) அவர்கள் கைது செய்யப்பட்டபோது அன்னாரைப் பார்த்து ஆமிர் பின் துஃபைல், கொல்லப்பட்டுக் கிடந்த (உயிர்த் தியாகிகளில்) ஒருவரைச் சுட்டிக்காட்டி, “இவர் யார்?” என்று கேட்டான். அதற்கு அம்ர் பின் உமய்யா (ரலி) அவர்கள், “இவர் ஆமிர் பின் ஃபுஹைரா” என்று கூறினார். அதற்கு ஆமிர் பின் துஃபைல், “இவர் கொல்லப்பட்ட பின்பு இவர் வானத்திற்கு உயர்த்தப்படுவதை நான் கண்டேன். எந்த அளவுக்கென்றால் வானத்தை நான் நோக்கியபோது, வானத்திற்கும் பூமிக்கும் இடையில் அவர் இருந்தார். பிறகு அவர் (பூமியில்) வைக்கப்பட்டார்” என்று கூறினான்.
(கொல்லப்பட்ட) அவர்களின் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு (வானவர் ஜிப்ரீல் மூலம்) எட்டியது. அவர்கள் கொல்லப்பட்ட செய்தியைத் தம் தோழர்களுக்கு (பின்வருமாறு) நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்: உங்கள் தோழர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்கள் தம் இறைவனிடம், “இறைவா! நாங்கள் உன்மீது அன்பு கொண்டோம். நீ எங்கள்மீது அன்பு கொண்டாய்; எங்களைப் பற்றிய இந்தச் செய்தியை எங்கள் சகோதரர்களுக்குத் தெரிவித்துவிடுவாயாக!” என்று கூறினர். எனவே இறைவன் அவர்களைப் பற்றிய செய்தியை நமக்கு அறிவித்தான்.
அறிவிப்பாளர் உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) கூறுகிறார்கள்:
(பிஃரு மஊனா நிகழ்ச்சி நடந்த) அந்நாளில் அவர்களில் உர்வா பின் அஸ்மா பின் அஸ்ஸல்த் (ரலி) அவர்களும் கொல்லப்பட்டார்கள். எனவேதான், (ஸுபைர் (ரலி) அவர்களின் மகனாகிய) எனக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. (அன்று) முன்திர் பின் அம்ர் (ரலி) அவர்களும் கொல்லப்பட்டார்கள். எனவேதான், (என் சகோதரர் முன்திர் பின் ஸுபைருக்கு) “முன்திர்' எனப் பெயரிடப்பட்டது.

4094. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَنَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَعْدَ الرُّكُوعِ شَهْرًا يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَيَقُولُ "" عُصَيَّةُ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ "".
பாடம் : 29
ரஜீஉ, ரிஅல், தக்வான், பிஃரு மஊனா ஆகிய போர்களும் அளல், காரா குலத்தார் குறித்த செய்தியும் ஆஸிம் பின் ஸாபித் (ரலி), குபைப் (ரலி) மற்றும் அவர்களின் தோழர்கள் குறித்த செய்தியும்159
“ரஜீஉ' போர், உஹுத் போருக்குப் பின்னால் நடைபெற்றது' என ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
4094. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் (தொழுகையில்) ருகூவிற்குப் பின்னால் “குனூத்' (எனும் சிறப்பு துஆ) ஓதினார்கள். (அதில்) ரிஅல், தக்வான் ஆகிய குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும், “உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து விட்டனர்” என்றும் கூறுவார்கள்.

4095. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ دَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى الَّذِينَ قَتَلُوا ـ يَعْنِي ـ أَصْحَابَهُ بِبِئْرِ مَعُونَةَ ثَلاَثِينَ صَبَاحًا حِينَ يَدْعُو عَلَى رِعْلٍ وَلِحْيَانَ وَعُصَيَّةَ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم. قَالَ أَنَسٌ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى لِنَبِيِّهِ صلى الله عليه وسلم فِي الَّذِينَ قُتِلُوا أَصْحَابِ بِئْرِ مَعُونَةَ قُرْآنًا قَرَأْنَاهُ حَتَّى نُسِخَ بَعْدُ بَلِّغُوا قَوْمَنَا فَقَدْ لَقِينَا رَبَّنَا فَرَضِيَ عَنَّا وَرَضِينَا عَنْهُ.
பாடம் : 29
ரஜீஉ, ரிஅல், தக்வான், பிஃரு மஊனா ஆகிய போர்களும் அளல், காரா குலத்தார் குறித்த செய்தியும் ஆஸிம் பின் ஸாபித் (ரலி), குபைப் (ரலி) மற்றும் அவர்களின் தோழர்கள் குறித்த செய்தியும்159
“ரஜீஉ' போர், உஹுத் போருக்குப் பின்னால் நடைபெற்றது' என ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
4095. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பிஃரு மஊனாவில் தம் தோழர்களைக் கொலை செய்தவர்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் முப்பது நாள் அதிகாலை(த் தொழுகை)யில் பிரார்த்தித்தார்கள். அப்போது, ரிஅல், தக்வான், (பனூ) லிஹ்யான், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்த உஸய்யா ஆகிய குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
ஆகவே, இறைவன் தன்னுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கு பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் விஷயத்தில் குர்ஆன் வசனம் ஒன்றை அருளினான். அதை நாங்கள் ஓதிவந்தோம். பின்னர் (இறைவனால் அந்த வசனம்) காலாவதியாக் கப்பட்டது.
(அந்த வசனம் இதுதான்:) “நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்துவிட்டோம். அவன் எங்கள்மீது அன்பு கொண்டான். நாங்களும் அவன்மீது அன்பு கொண் டோம்' என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்துவிடுங்கள்.169

4096. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ الْقُنُوتِ، فِي الصَّلاَةِ فَقَالَ نَعَمْ. فَقُلْتُ كَانَ قَبْلَ الرُّكُوعِ أَوْ بَعْدَهُ قَالَ قَبْلَهُ. قُلْتُ فَإِنَّ فُلاَنًا أَخْبَرَنِي عَنْكَ أَنَّكَ قُلْتَ بَعْدَهُ، قَالَ كَذَبَ إِنَّمَا قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ الرُّكُوعِ شَهْرًا، أَنَّهُ كَانَ بَعَثَ نَاسًا يُقَالُ لَهُمُ الْقُرَّاءُ، وَهُمْ سَبْعُونَ رَجُلاً إِلَى نَاسٍ مِنَ الْمُشْرِكِينَ، وَبَيْنَهُمْ وَبَيْنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَهْدٌ قِبَلَهُمْ، فَظَهَرَ هَؤُلاَءِ الَّذِينَ كَانَ بَيْنَهُمْ وَبَيْنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَهْدٌ، فَقَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ الرُّكُوعِ شَهْرًا يَدْعُو عَلَيْهِمْ.
பாடம் : 29
ரஜீஉ, ரிஅல், தக்வான், பிஃரு மஊனா ஆகிய போர்களும் அளல், காரா குலத்தார் குறித்த செய்தியும் ஆஸிம் பின் ஸாபித் (ரலி), குபைப் (ரலி) மற்றும் அவர்களின் தோழர்கள் குறித்த செய்தியும்159
“ரஜீஉ' போர், உஹுத் போருக்குப் பின்னால் நடைபெற்றது' என ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
4096. ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான், அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் தொழுகையில் குனூத் (எனும் சிறப்பு துஆ நபிகளார் காலத்தில் இருந்ததா என்பது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்' என்று பதிலளித்தார்கள். அப்போது நான், “ருகூவிற்கு முன்பா? அல்லது பின்பா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ருகூஉவிற்கு முன்புதான்” என்று பதிலளித்தார்கள். உடனே நான், “தாங்கள் ருகூஉவிற்குப் பின்னால்தான் என்று சொன்னதாக இன்னார் எனக்குத் தெரிவித்தாரே” என்று கேட்டேன். அதற்கு, “அவர் தவறாகக் கூறியிருக்கிறார். நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்குப் பிறகு(ம்கூட) ஒரு மாத காலம்தான் குனூத் ஓதினார்கள்.
(அது எப்போது நடந்ததென்றால்,) நபி (ஸல்) அவர்கள் “குர்ரா' (குர்ஆனை நன்கறிந்தவர்கள்) என்று கூறப்பட்டுவந்த சிலரை -அவர்கள் எழுபது பேர் ஆவர்- இணைவைப்பவர்கள் சிலரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்களது தரப்பிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே (பரஸ்பர பாதுகாப்பு) ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (இவ்வாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த இவர்களது கை ஓங்கிவிட்டது. (அந்த 70 பேரையும் கொன்றுவிட்டனர்.)
“எனவேதான், அவர்களுக்கெதிராக ஒரு மாத காலம் ருகூவிற்குப் பின்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “குனூத்' ஓதினார்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.170

4097. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم عَرَضَهُ يَوْمَ أُحُدٍ وَهْوَ ابْنُ أَرْبَعَ عَشْرَةَ فَلَمْ يُجِزْهُ، وَعَرَضَهُ يَوْمَ الْخَنْدَقِ وَهْوَ ابْنُ خَمْسَ عَشْرَةَ فَأَجَازَهُ.
பாடம் : 30
அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171
இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4097. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரின்போது (படை வீரர்களைப் பார்வையிட்டு ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்களிடம் நானாக முன்சென்று(என்னைப் படையில் சேர்த்துக்கொள்ளும் படி) கேட்டேன். அப்போது எனக்குப் பதினான்கு வயது. எனவே, என்னை நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. பிறகு (அடுத்த ஆண்டு) அகழ்ப் போரின் போது நானாக முன்சென்று கேட்டேன். அப்போது எனக்கு வயது பதினைந்து. எனவே, என்னை அனுமதித்தார்கள்.172

4098. حَدَّثَنِي قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْخَنْدَقِ، وَهُمْ يَحْفِرُونَ، وَنَحْنُ نَنْقُلُ التُّرَابَ عَلَى أَكْتَادِنَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اللَّهُمَّ لاَ عَيْشَ إِلاَّ عَيْشُ الآخِرَهْ، فَاغْفِرْ لِلْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ "".
பாடம் : 30
அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171
இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4098. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போர் சமயத்தில் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்தோம். நபித்தோழர்கள் அகழ் தோண்டிக்கொண்டிருந்தனர். நாங்கள் எங்கள் தோள்மீது மண் சுமந்துகொண்டிருந்தோம். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
“இறைவா!மறுமை வாழ்வு தவிரவேறுவாழ்வு கிடையாது.
(அதற்காக உழைக்கும்)முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும்வழங்குவாய் மன்னிப்பு!”
என்று (பாடியபடி) கூறினார்கள்.173