3949. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَهْبٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، كُنْتُ إِلَى جَنْبِ زَيْدِ بْنِ أَرْقَمَ، فَقِيلَ لَهُ كَمْ غَزَا النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ غَزْوَةٍ قَالَ تِسْعَ عَشْرَةَ. قِيلَ كَمْ غَزَوْتَ أَنْتَ مَعَهُ قَالَ سَبْعَ عَشْرَةَ. قُلْتُ فَأَيُّهُمْ كَانَتْ أَوَّلَ قَالَ الْعُسَيْرَةُ أَوِ الْعُشَيْرُ. فَذَكَرْتُ لِقَتَادَةَ فَقَالَ الْعُشَيْرُ.
பாடம் : 1 “அல்உஷைரா' அல்லது “அல் உசைரா' போர் முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் புரிந்த முதலாவது அறப்போர் “அல்அப்வா' ஆகும்; பிறகு “புவாத்' ஆகும்; பிறகு “அல்உஷைரா' ஆகும்.2
3949. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்தபோது, “நபி (ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?” என்று அவர்களிடம் வினவப்பட்டது. “பத்தொன்பது” என்று அவர்கள் பதிலளித்தார்கள். “நபி (ஸல்) அவர்களுடன் நீங்களும் கலந்துகொண்ட போர்கள் எத்தனை?” என்று வினவப் பட்டபோது, “பதினேழு” என்றார்கள்.

“இவற்றில் முதல் போர் எது?” என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், “அல்உஸைரா அல்லது அல்உஷைர்” என்று பதிலளித்தார்கள்.

க(த்)தாதா (ரஹ்) அவர்களிடம் நான் கேட்டபோது அவர்கள், “அல்உஷைராதான் (சரியான உச்சரிப்பு)” என்றார்கள்.


அத்தியாயம் : 64
3950. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ مَيْمُونٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ حَدَّثَ عَنْ سَعْدِ بْنِ مُعَاذٍ، أَنَّهُ قَالَ كَانَ صَدِيقًا لأُمَيَّةَ بْنِ خَلَفٍ، وَكَانَ أُمَيَّةُ إِذَا مَرَّ بِالْمَدِينَةِ نَزَلَ عَلَى سَعْدٍ، وَكَانَ سَعْدٌ إِذَا مَرَّ بِمَكَّةَ نَزَلَ عَلَى أُمَيَّةَ، فَلَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ انْطَلَقَ سَعْدٌ مُعْتَمِرًا، فَنَزَلَ عَلَى أُمَيَّةَ بِمَكَّةَ، فَقَالَ لأُمَيَّةَ انْظُرْ لِي سَاعَةَ خَلْوَةٍ لَعَلِّي أَنْ أَطُوفَ بِالْبَيْتِ. فَخَرَجَ بِهِ قَرِيبًا مِنْ نِصْفِ النَّهَارِ فَلَقِيَهُمَا أَبُو جَهْلٍ فَقَالَ يَا أَبَا صَفْوَانَ، مَنْ هَذَا مَعَكَ فَقَالَ هَذَا سَعْدٌ. فَقَالَ لَهُ أَبُو جَهْلٍ أَلاَ أَرَاكَ تَطُوفُ بِمَكَّةَ آمِنًا، وَقَدْ أَوَيْتُمُ الصُّبَاةَ، وَزَعَمْتُمْ أَنَّكُمْ تَنْصُرُونَهُمْ وَتُعِينُونَهُمْ، أَمَا وَاللَّهِ لَوْلاَ أَنَّكَ مَعَ أَبِي صَفْوَانَ مَا رَجَعْتَ إِلَى أَهْلِكَ سَالِمًا. فَقَالَ لَهُ سَعْدٌ وَرَفَعَ صَوْتَهُ عَلَيْهِ أَمَا وَاللَّهِ لَئِنْ مَنَعْتَنِي هَذَا لأَمْنَعَنَّكَ مَا هُوَ أَشَدُّ عَلَيْكَ مِنْهُ طَرِيقَكَ عَلَى الْمَدِينَةِ. فَقَالَ لَهُ أُمَيَّةُ لاَ تَرْفَعْ صَوْتَكَ يَا سَعْدُ عَلَى أَبِي الْحَكَمِ سَيِّدِ أَهْلِ الْوَادِي. فَقَالَ سَعْدٌ دَعْنَا عَنْكَ يَا أُمَيَّةُ، فَوَاللَّهِ لَقَدْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ إِنَّهُمْ قَاتِلُوكَ. قَالَ بِمَكَّةَ قَالَ لاَ أَدْرِي. فَفَزِعَ لِذَلِكَ أُمَيَّةُ فَزَعًا شَدِيدًا، فَلَمَّا رَجَعَ أُمَيَّةُ إِلَى أَهْلِهِ قَالَ يَا أُمَّ صَفْوَانَ، أَلَمْ تَرَىْ مَا قَالَ لِي سَعْدٌ قَالَتْ وَمَا قَالَ لَكَ قَالَ زَعَمَ أَنَّ مُحَمَّدًا أَخْبَرَهُمْ أَنَّهُمْ قَاتِلِيَّ، فَقُلْتُ لَهُ بِمَكَّةَ قَالَ لاَ أَدْرِي. فَقَالَ أُمَيَّةُ وَاللَّهِ لاَ أَخْرُجُ مِنْ مَكَّةَ، فَلَمَّا كَانَ يَوْمَ بَدْرٍ اسْتَنْفَرَ أَبُو جَهْلٍ النَّاسَ قَالَ أَدْرِكُوا عِيرَكُمْ. فَكَرِهَ أُمَيَّةُ أَنْ يَخْرُجَ، فَأَتَاهُ أَبُو جَهْلٍ فَقَالَ يَا أَبَا صَفْوَانَ، إِنَّكَ مَتَى مَا يَرَاكَ النَّاسُ قَدْ تَخَلَّفْتَ وَأَنْتَ سَيِّدُ أَهْلِ الْوَادِي تَخَلَّفُوا مَعَكَ، فَلَمْ يَزَلْ بِهِ أَبُو جَهْلٍ حَتَّى قَالَ أَمَّا إِذْ غَلَبْتَنِي، فَوَاللَّهِ لأَشْتَرِيَنَّ أَجْوَدَ بَعِيرٍ بِمَكَّةَ ثُمَّ قَالَ أُمَيَّةُ يَا أُمَّ صَفْوَانَ جَهِّزِينِي. فَقَالَتْ لَهُ يَا أَبَا صَفْوَانَ وَقَدْ نَسِيتَ مَا قَالَ لَكَ أَخُوكَ الْيَثْرِبِيُّ قَالَ لاَ، مَا أُرِيدُ أَنْ أَجُوزَ مَعَهُمْ إِلاَّ قَرِيبًا. فَلَمَّا خَرَجَ أُمَيَّةُ أَخَذَ لاَ يَنْزِلُ مَنْزِلاً إِلاَّ عَقَلَ بَعِيرَهُ، فَلَمْ يَزَلْ بِذَلِكَ حَتَّى قَتَلَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ بِبَدْرٍ.
பாடம் : 2 பத்ர் போரில் கொல்லப்படவிருந்த ஒருவன் குறித்து நபி (ஸல்) அவர்கள் (முன்னறிவிப்பாகக்) கூறியது
3950. சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் வாயிலாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் (அறியாமைக் காலத்தில் இணை வைப்போரின் முக்கிய தலைவர்களில் ஒருவனான) உமய்யா பின் கலஃபுக்கு நண்பராயிருந்தார். உமய்யா, மதீனா வழியாக (ஷாம் நாட்டிற்கு வியாபாரத்திற்காக)ச் செல்லும்போது (மதீனாவில்) சஅத் (ரலி) அவர்களிடம் தங்குவார். (அதே போல்) மக்கா வழியாக சஅத் (ரலி) அவர்கள் சென்றால் உமய்யாவிடம் தங்குவார்கள்.

(ஹிஜ்ரத் நடைபெற்று) நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்த சமயம், உம்ரா செய்யும் நோக்கத்தில் சஅத் (ரலி) அவர்கள் மக்காவிற்குச் சென்றபோது உமய்யாவிடம் தங்கினார்கள். (அப்போது நடந்ததை சஅத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:)

“இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதற்கு (ஏதுவாக) ஆள் நடமாட்டமில்லாத (அமைதியான) ஒரு நேரத்தை எனக்குக் கூறுவீராக” என்று நான் உமய்யாவிடம் கேட்டேன். (மக்கள் ஓய்வெடுக்கும்) நண்பகலுக்கு நெருக்கமான நேரத்தில் என்னுடன் உமய்யா புறப்பட்டார். (நான் தவாஃப் செய்துகொண்டிருந்தபோது) எங்களை அபூஜஹ்ல் சந்தித்து (உமய்யாவின் குறிப்புப் பெயரைச் சொல்லி), “அபூஸஃப்வானே! உம்மோடு இருக்கும் இவர் யார்?” என்று கேட்டார்.

உமய்யா, “இவர்தான் சஅத்” என்றார். அப்போது என்னிடம் அபூஜஹ்ல், “மதம் மாறிச் சென்றவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிவதாக நினைத்துக்கொண்டு (அவர்களுக்கு மதீனாவில்) தஞ்ச மளித்த நீங்கள் கொஞ்சமும் அஞ்சாமல் மக்கா(விற்குள்) வந்து (கஅபாவை) சுற்றிக்கொண்டிருப்பதை நான் காண்பதா? அல்லாஹ்வின் மீதாணையாக! அபூஸஃப்வானோடு (மட்டும்) நீ இல்லா விட்டால் நீ உன் வீட்டாரிடம் சுகமாகப் போய்ச் சேர்ந்திருக்கமாட்டாய்” என்று சொன்னார்.

அதற்கு அபூஜஹ்லைப் பார்த்து, நான் உரத்த குரலில், “அல்லாஹ்வின் மீதாணையாக! (கஅபாவைச்) சுற்ற விடாமல் மட்டும் என்னை நீ தடுத்தால், நீ (வாணிபக் குழுவுடன் கடந்து) செல்லும்மதீனாவின் தடத்தை நான் இடை மறிப்பேன். இதைவிட அது உனக்கு மிகவும் கடினமானதாயிருக்கும்” என்று சொன்னேன்.

அப்போது என்னிடம் உமய்யா, “சஅதே! இந்த (மக்கா) பள்ளத்தாக்கில் வசிப்பவர்களின் தலைவரான அபுல் ஹகம் (அபூஜஹ்ல்) எதிரில் சப்தமிட்டுப் பேசாதீர்!” என்று சொன்னார்.

அதற்கு நான், “உமய்யாவே! (அபூஜஹ்லுக்கு வக்காலத்து வாங்காமல்) எம்மை விட்டுவிடுவீராக! ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் (நபித்தோழர்கள்) உம்மைக் கொலை செய்வார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்” என்று சொன்னேன்.

“மக்காவிலா (நான் கொல்லப்படுவேன்)?” என்று உமய்யா கேட்டார். அதற்கு, “எனக்குத் தெரியாது” என்று நான் பதிலளித்தேன்.

இதனால் உமய்யா மிகவும் பீதியடைந்தார். தம் வீட்டாரிடம் திரும்பி வந்தபோது, (தம் மனைவியிடம்), “உம்மு ஸஃப்வானே! என்னைப் பார்த்து சஅத் என்ன சொன்னார் தெரியுமா?” என்று கேட்டார்.

“அவர் (அப்படி) என்ன சொன்னார்?” என்று அவள் கேட்டதற்கு உமய்யா, “அவர்கள் (நபித்தோழர்கள்) என்னைக் கொலை செய்வார்கள் என்று அவர்களிடம் முஹம்மது தெரிவித்தாராம். நான், “மக்காவிலா?' என்று (சஅதிடம்) கேட்டேன். “தெரியாது' என்று சஅத் சொன்னார்” (என்று கூறிவிட்டு,) “அல்லாஹ்வின் மீதாணையாக! நான், “மக்கா'வைவிட்டு (இனிமேல்) வெளியேறப்போவதில்லை” என்றும் கூறினார்.

பத்ர் போர் நாள் வந்தபோது, போருக்குப் புறப்படும்படி மக்களைத் தூண்டிக்கொண்டிருந்த அபூஜஹ்ல், “உங்கள் வணிகக் குழுவைச் சென்ற டையுங்கள் (அதைக் காப்பாற்றுங்கள்)” என்று கூறினார்.

ஆனால், உமய்யா (மக்காவிலிருந்து) வெளியே செல்வதை வெறுத்தார். (இதை அறிந்த) அபூஜஹ்ல் அவரிடம் வந்து, “அபூஸஃப்வானே! (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவரான நீங்களே (போருக்குச் செல்லாமல்) பின்வாங்குவதை மக்கள் கண்டால் உங்களுடன் அவர்களும் பின்வாங்கி (போருக்குச் செல்லாமல் இருந்து)விடுவார்களே” என்று சொன்னார். அபூஜஹ்ல், உமய்யாவிடம் இதை (வலியுறுத்திச்) சொல்லிக்கொண்டே இருந்தார்.

முடிவாக, உமய்யா, “இப்போது நீ என்னை வென்றுவிட்டாய் (உன் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்). ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நான் மக்கா நகரத்தின் உயர்ரக ஒட்டகம் ஒன்றை வாங்கப்போகிறேன்” என்று சொன்னார்; (தமக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் நிலை வந்தால் தப்பி வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒட்டகம் ஒன்றும் வாங்கினார்.) பிறகு (தம் மனைவியிடம் வந்து) “உம்மு ஸஃப்வானே! (போருக்குச் செல்லத் தேவையான சாதனங்களை) எனக்குத் தயார் செய்” என்றார் உமய்யா.

அப்போது அவள், “அபூஸஃப்வானே! உங்கள் யஸ்ரிப் (மதீனா) நண்பர் (சஅத், நீங்கள் கொல்லப்படுவது குறித்து) உங்களிடம் சொன்னதை மறந்துவிட்டீர்களா?” என்று கேட்டாள். அதற்கு உமய்யா, “இல்லை. (மறக்கவில்லை.) இவர்களுடன் சிறிதளவு தூரம் செல்வதைத் தவிர வேறெந்த எண்ணமும் எனக்கில்லை” என்றார்.

(பத்ர் போருக்கு) உமய்யா புறப்பட்டுச் சென்றபோது (படையினர் முகாமிட்டுத்) தங்கும் ஒவ்வோர் இடத்திலும் (தப்பியோட ஆயத்தமாக தமக்கு அருகிலேயே) தமது ஒட்டகத்தைக் கட்டிவைத்துக்கொள்ளலானார். அவர் இவ்வாறே தொடர்ந்து செய்துவந்தார். இறுதியில் பத்ர் போர்க்களத்தில் உமய்யாவை வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (முஸ்லிம் படையால்) கொலை செய்தான்.3

அத்தியாயம் : 64
3951. حَدَّثَنِي يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ، قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ لَمْ أَتَخَلَّفْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزْوَةٍ غَزَاهَا إِلاَّ فِي غَزْوَةِ تَبُوكَ، غَيْرَ أَنِّي تَخَلَّفْتُ عَنْ غَزْوَةِ بَدْرٍ، وَلَمْ يُعَاتَبْ أَحَدٌ تَخَلَّفَ عَنْهَا، إِنَّمَا خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُرِيدُ عِيرَ قُرَيْشٍ، حَتَّى جَمَعَ اللَّهُ بَيْنَهُمْ وَبَيْنَ عَدُوِّهِمْ عَلَى غَيْرِ مِيعَادٍ.
பாடம் : 3 பத்ர் போர் சம்பவம்4 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (இதற்குமுன்) நீங்கள் வலுவிழந்தவர் களாக இருந்தும் பத்ர் போரில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருந்தான். ஆகவே, அல்லாஹ்வை அஞ்சி (நடந்து) கொள்ளுங்கள். நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்தியவர்களாகலாம். “உங்களுடைய இறைவன் மூவாயிரம் வானவர்களை இறக்கி உங்களுக்கு (பத்ரில்) உதவி செய்திருந்தது போதுமான தில்லையா?” என்று (நபியே!) நீர் இறைநம்பிக்கையாளர்களிடம் கேட்டதை நினைவுகூருவீராக! - ஆம், நீங்கள் நிலை குலையாமலிருந்து இறைவனுக்கு அஞ்சி நடந்தால் எந்தக் கணத்தில் பகைவர்கள் உங்கள்மீது படையெடுத்து வருகிறார்களோ, அந்தக் கணத்தில் உங்கள் இறைவன் (மூவாயிரம் என்ன) போர் அடையாளமுடைய ஐயாயிரம் வானவர்களின் மூலம் உங்களுக்கு உதவி செய்வான். நீங்கள் மகிழ்ச்சி அடைவதற்காகவும் உங்கள் இதயங்கள் அமைதி பெற வேண்டும் என்பதற்காகவுமே இதனை அல்லாஹ் ஆக்கினான்! வெற்றி என்பது மிக்க வல்லமை மிக்கவனும், நுண்ணறிவாளனுமான அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. (அல்லாஹ் இத்தகைய உதவியை உங்களுக்குச் செய்வதெல்லாம்,) இறைமறுப்பாளர்களில் ஒரு பகுதியினரை அழிப்பதற்காக, அல்லது அவர்களைப் படுதோல்வியில் ஆழ்த்தி அவர்கள் ஏமாற்றமடைந்தவர்களாய் திரும்பிச் செல்வதற்காகத்தான். (3:123-127) வஹ்ஷீ பின் ஹர்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போர் தினத்தன்று ஹம்ஸா (ரலி) அவர்கள் துஅய்மா பின் அதீ பின் அல்கியாரைக் கொன்றார்கள்.5 மேலும், அல்லாஹ் அல்லாஹ் கூறுகின்றான்: இன்னும் இதனையும் நினைத்துப் பாருங்கள்: “இரு கூட்டத்தாரில் ஒரு கூட்டத்தார் நிச்சயம் உங்கள் கைக்குக் கிடைத்துவிடுவர்' என்று அல்லாஹ் உங்களிடம் வாக்குறுதி அளித்தான்.ஆனால், நிராயுதபாணிகளான கூட்டத்தி னர் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என நீங்கள் விரும்பினீர்கள்.(8:7)6
3951. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தபூக் போரைத் தவிர, நபி (ஸல்) அவர்கள் புரிந்த எந்தப் போரிலும் நான் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை. இது தவிர, நான் பத்ர் போரிலும் கலந்துகொள்ளவில்லை. அதில் கலந்து கொள்ளாத எவரும் (அல்லாஹ்வால்) கண்டிக்கப்படவுமில்லை.

(ஏனெனில்) நபி (ஸல்) அவர்கள் குறைஷியரின் வாணிபக் குழுவை (வழிமறிக்க) எண்ணியே போனார்கள். (போன இடத்தில்) போர் செய்யும் எண்ணம் இல்லாமலேயே அவர்களையும் எதிரிகளையும் அல்லாஹ் (பத்ர் களத்தில்) சந்திக்கும்படி செய்துவிட்டான்.

அத்தியாயம் : 64
3952. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ مُخَارِقٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَ سَمِعْتُ ابْنَ مَسْعُودٍ، يَقُولُ شَهِدْتُ مِنَ الْمِقْدَادِ بْنِ الأَسْوَدِ مَشْهَدًا، لأَنْ أَكُونَ صَاحِبَهُ أَحَبُّ إِلَىَّ مِمَّا عُدِلَ بِهِ، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ يَدْعُو عَلَى الْمُشْرِكِينَ فَقَالَ لاَ نَقُولُ كَمَا قَالَ قَوْمُ مُوسَى {اذْهَبْ أَنْتَ وَرَبُّكَ فَقَاتِلاَ} وَلَكِنَّا نُقَاتِلُ عَنْ يَمِينِكَ وَعَنْ شِمَالِكَ وَبَيْنَ يَدَيْكَ وَخَلْفَكَ. فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَشْرَقَ وَجْهُهُ وَسَرَّهُ. يَعْنِي قَوْلَهُ.
பாடம் : 4 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: உங்கள் இறைவனிடம் நீங்கள் உதவி தேடி முறையிட்டுக்கொண்டிருந்ததையும் நினைத்துப்பாருங்கள். அப்போது அவன் “ஓராயிரம் வானவர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி, நிச்சயமாக உங்களுக்கு நான் உதவி செய்வேன்” எனப் பதிலளித்தான். அல்லாஹ் இதை, உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவும் இதன் மூலம் உங்கள் இதயங்கள் நிம்மதியடைவதற்காகவுமே ஆக்கினான்! தவிர, வெற்றி (என்றைக்கும்) அல்லாஹ்விடமிருந்துதான் ஏற்படுகிறது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவாளனுமாவான். (மேலும், இதையும்) நினைத்துப்பாருங்கள்: அல்லாஹ் உங்களைச் சிற்றுறக் கம் கொள்ளச்செய்து தன்னிடமிருந்து உங்களுக்கு (மன) அமைதியை ஏற்படுத்தினான். மேலும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தான் ஏற்படுத்திய அசுத்தங்களை உங்களைவிட்டு அகற்றுவதற்காகவும், உங்கள் இதயங்களை வலுப்படுத்துவதற்காகவும், அதன் மூலம் உங்கள் பாதங்களை நிலைப்படுத்துவதற்காகவும் வானத்திலிருந்து உங்கள்மீது மழையையும் பொழியச் செய்தான். (நபியே! இதனையும்) நினைவுகூருங்கள்: உம்முடைய இறைவன் வானவர்களிடம் அறிவித்துக்கொண்டிருந்தான்: நிச்சயமாக நான் உங்களோடு இருக்கின்றேன். எனவே நம்பிக்கையாளர்களை நீங்கள் உறுதியாக இருக்கச்செய்யுங்கள். இதோ! மறுத்துவிட்டவர்களின் உள்ளங்களில் நான் பீதியை ஏற்படுத்திவிடுகின்றேன். எனவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அவர்களுடைய பிடரிகளில் தாக்குங்கள். அவர்களின் ஒவ்வொரு விரல் மூட்டு களிலும் அடியுங்கள். (என்று கூறுங்கள்.) இதற்குக் காரணம், (இறைமறுப்பாளர் களான) அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துக் கொண்டிருந்ததுதான். மேலும், அல்லாஹ் வையும் அவனுடைய தூதரையும் யார் எதிர்க்கிறார்களோ (அவர்களை) நிச்சயமாக அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவனாய் இருக்கின்றான். (8:9-13)
3952. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களது அவைக்குச் சென்றேன். நான் அவர்களது அவையில் (கலந்துகொண்டு, அவர்கள் கூறும் விஷயங்களை எடுத்துரைப்பவனாக) இருப்பது, அதற்கு நிகரான (மற்ற அனைத்)தைவிடவும்எனக்கு விருப்பானதாயிருக்கும்.

(மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்:)

நான், நபி (ஸல்) அவர்கள் இணைவைப்போருக்கெதிராகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது சென்றேன். அப்போது நான், “(இறைத்தூதர்) மூசாவின் சமுதாயத்தார், “நீங்களும் உங்கள் இறைவனும் போய்ப் போர் செய்யுங்கள்' என்று (நகைப்பாகக்) கூறியதுபோல நாங்கள் கூறமாட்டோம். மாறாக, நாங்கள் தங்களின் வலப் பக்கமும், இடப் பக்கமும், முன்னாலும், பின்னாலும் நின்று (தங்கள் எதிரிகளுடன்) போரிடுவோம்” என்று சொன்னேன்.

(இதைக் கேட்டதும்,) நபி (ஸல்) அவர்களின் முகம் ஒளிர்ந்ததை நான் கண்டேன். (எனது சொல்) அவர்களை மகிழச்செய்தது.7


அத்தியாயம் : 64
3953. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَوْشَبٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ بَدْرٍ "" اللَّهُمَّ أَنْشُدُكَ عَهْدَكَ وَوَعْدَكَ، اللَّهُمَّ إِنْ شِئْتَ لَمْ تُعْبَدْ "". فَأَخَذَ أَبُو بَكْرٍ بِيَدِهِ فَقَالَ حَسْبُكَ. فَخَرَجَ وَهْوَ يَقُولُ {سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ}
பாடம் : 4 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: உங்கள் இறைவனிடம் நீங்கள் உதவி தேடி முறையிட்டுக்கொண்டிருந்ததையும் நினைத்துப்பாருங்கள். அப்போது அவன் “ஓராயிரம் வானவர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி, நிச்சயமாக உங்களுக்கு நான் உதவி செய்வேன்” எனப் பதிலளித்தான். அல்லாஹ் இதை, உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவும் இதன் மூலம் உங்கள் இதயங்கள் நிம்மதியடைவதற்காகவுமே ஆக்கினான்! தவிர, வெற்றி (என்றைக்கும்) அல்லாஹ்விடமிருந்துதான் ஏற்படுகிறது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவாளனுமாவான். (மேலும், இதையும்) நினைத்துப்பாருங்கள்: அல்லாஹ் உங்களைச் சிற்றுறக் கம் கொள்ளச்செய்து தன்னிடமிருந்து உங்களுக்கு (மன) அமைதியை ஏற்படுத்தினான். மேலும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தான் ஏற்படுத்திய அசுத்தங்களை உங்களைவிட்டு அகற்றுவதற்காகவும், உங்கள் இதயங்களை வலுப்படுத்துவதற்காகவும், அதன் மூலம் உங்கள் பாதங்களை நிலைப்படுத்துவதற்காகவும் வானத்திலிருந்து உங்கள்மீது மழையையும் பொழியச் செய்தான். (நபியே! இதனையும்) நினைவுகூருங்கள்: உம்முடைய இறைவன் வானவர்களிடம் அறிவித்துக்கொண்டிருந்தான்: நிச்சயமாக நான் உங்களோடு இருக்கின்றேன். எனவே நம்பிக்கையாளர்களை நீங்கள் உறுதியாக இருக்கச்செய்யுங்கள். இதோ! மறுத்துவிட்டவர்களின் உள்ளங்களில் நான் பீதியை ஏற்படுத்திவிடுகின்றேன். எனவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அவர்களுடைய பிடரிகளில் தாக்குங்கள். அவர்களின் ஒவ்வொரு விரல் மூட்டு களிலும் அடியுங்கள். (என்று கூறுங்கள்.) இதற்குக் காரணம், (இறைமறுப்பாளர் களான) அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துக் கொண்டிருந்ததுதான். மேலும், அல்லாஹ் வையும் அவனுடைய தூதரையும் யார் எதிர்க்கிறார்களோ (அவர்களை) நிச்சயமாக அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவனாய் இருக்கின்றான். (8:9-13)
3953. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பத்ருடைய தினத்தன்று (மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்ட தமது படையினரையும் மிகப் பெருந் தொகையினரான எதிரிகளையும் கண்ட) நபி (ஸல்) அவர்கள், “இறைவா! (இறைமறுப்பாளர்களுக்கெதிராக எங்களுக்கு வெற்றியளிப்பதாக நீ அளித்த) உனது உறுதிமொழியையும் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) நான் கோருகிறேன். (இறைவா! இந்த இறைநம்பிக்கையாளர்களை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் (இப்புவியில்) இல்லாமல்போய்விடுவர்” என்று கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் கரத்தைப் பற்றிக்கொண்டு, “போதும் (அல்லாஹ்வின் தூதரே!)” என்று சொன்னார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் (தாம் தங்கியிருந்த கூடாரத்திலிருந்து) “விரைவில் அந்தப் படையினர் தோற்கடிக்கப்படுவர். அவர்கள் புறமுதுகிட்டு ஓடுவர்” என்று (54:45ஆவது குர்ஆன் வசன வாசகத்தைக்) கூறிக்கொண்டே வெளியேறி வந்தார்கள்.

அத்தியாயம் : 64
3954. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي عَبْدُ الْكَرِيمِ، أَنَّهُ سَمِعَ مِقْسَمًا، مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ {لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ} عَنْ بَدْرٍ، وَالْخَارِجُونَ، إِلَى بَدْرٍ.
பாடம் : 5
3954. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைநம்பிக்கையாளர்களில் யார் இடையூறு எதுவுமின்றி அறப்போரில் கலந்துகொள்ளாமல் (தமது இருப்பிடத்திலேயே) தங்கிவிடுகிறார்களோ அவர்களும், யார் தமது உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் போராடுகிறார்களோ அவர்களும் (தகுதியில்) சமமாகமாட்டார்கள்” எனும் (4:95ஆம்) இறைவசனம், பத்ர் போருக்குச் செல்லாதவர்களையும் அதில் கலந்துகொள்ளச் சென்றவர்களையும் குறிப்பிடுகின்றது.

அத்தியாயம் : 64
3955. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ اسْتُصْغِرْتُ أَنَا وَابْنُ، عُمَرَ.
பாடம் : 6 பத்ர் போரில் கலந்துகொண்டவர் களின் எண்ணிக்கை
3955. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் இப்னு உமர் (ரலி) அவர்களும் (பத்ர் போரின்போது) சிறுவர்களாகக் கருதப்பட்டோம். (அதனால் எனக்கும் அவருக்கும் பத்ர் போரில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.)


அத்தியாயம் : 64
3956. حَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا وَهْبٌ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ اسْتُصْغِرْتُ أَنَا وَابْنُ عُمَرَ يَوْمَ بَدْرٍ، وَكَانَ الْمُهَاجِرُونَ يَوْمَ بَدْرٍ نَيِّفًا عَلَى سِتِّينَ، وَالأَنْصَارُ نَيِّفًا وَأَرْبَعِينَ وَمِائَتَيْنِ.
பாடம் : 6 பத்ர் போரில் கலந்துகொண்டவர் களின் எண்ணிக்கை
3956. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் இப்னு உமர் (ரலி) அவர்களும் பத்ர் போரின்போது சிறுவர்களாகக் கருதப் பட்டோம். பத்ர் போரில் அறுபதுக்கும் சற்றுக் கூடுதலான முஹாஜிர்களும் இரு நூற்று நாற்பதுக்கும் சற்றுக் கூடுதலான அன்சாரிகளும் இருந்தனர்.8


அத்தியாயம் : 64
3957. حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ يَقُولُ حَدَّثَنِي أَصْحَابُ، مُحَمَّدٍ صلى الله عليه وسلم مِمَّنْ شَهِدَ بَدْرًا أَنَّهُمْ كَانُوا عِدَّةَ أَصْحَابِ طَالُوتَ الَّذِينَ جَازُوا مَعَهُ النَّهَرَ، بِضْعَةَ عَشَرَ وَثَلاَثَمِائَةٍ. قَالَ الْبَرَاءُ لاَ وَاللَّهِ مَا جَاوَزَ مَعَهُ النَّهَرَ إِلاَّ مُؤْمِنٌ.
பாடம் : 6 பத்ர் போரில் கலந்துகொண்டவர் களின் எண்ணிக்கை
3957. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பத்ர் போரில் கலந்துகொண்ட நபித் தோழர்கள் என்னிடம் கூறினார்கள்: தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்றவர்களான முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலான அவர்களுடைய தோழர்களின் எண்ணிக்கையில் நாங்கள் இருந்தோம்.9

மேலும், பராஉ (ரலி) அவர்கள் கூறி னார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! தாலூத் அவர்களுடன் இறைநம்பிக்கை யாளர்களைத் தவிர வேறெவரும் ஆற்றைக் கடக்கவில்லை.


அத்தியாயம் : 64
3958. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ كُنَّا أَصْحَابَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم نَتَحَدَّثُ أَنَّ عِدَّةَ أَصْحَابِ بَدْرٍ عَلَى عِدَّةِ أَصْحَابِ طَالُوتَ الَّذِينَ جَاوَزُوا مَعَهُ النَّهَرَ، وَلَمْ يُجَاوِزْ مَعَهُ إِلاَّ مُؤْمِنٌ، بِضْعَةَ عَشَرَ وَثَلاَثَمِائَةٍ.
பாடம் : 6 பத்ர் போரில் கலந்துகொண்டவர் களின் எண்ணிக்கை
3958. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர் களான நாங்கள் பேசிக்கொள்வோம்:

பத்ர் போரில் கலந்துகொண்டவர் களின் எண்ணிக்கையும், தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்ற அவர்களுடைய தோழர்களின் எண்ணிக்கையும் முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலேயாகும். அவர்களுடன் இறைநம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் ஆற்றைக் கடக்கவில்லை.


அத்தியாயம் : 64
3959. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ،. وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا نَتَحَدَّثُ أَنَّ أَصْحَابَ بَدْرٍ ثَلاَثُمِائَةٍ وَبِضْعَةَ عَشَرَ، بِعِدَّةِ أَصْحَابِ طَالُوتَ الَّذِينَ جَاوَزُوا مَعَهُ النَّهَرَ، وَمَا جَاوَزَ مَعَهُ إِلاَّ مُؤْمِنٌ.
பாடம் : 6 பத்ர் போரில் கலந்துகொண்டவர் களின் எண்ணிக்கை
3959. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலாயிருந்த பத்ர் போர் வீரர்களின் எண்ணிக்கை, தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்ற அவர்களுடைய தோழர்களின் எண்ணிக்கையே ஆகும். இறைநம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் அவர்களுடன் ஆற்றைக் கடக்கவில்லை” என்று நாங்கள் பேசிக் கொள்வது வழக்கம்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 64
3960. حَدَّثَنِي عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ اسْتَقْبَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْكَعْبَةَ فَدَعَا عَلَى نَفَرٍ مِنْ قُرَيْشٍ، عَلَى شَيْبَةَ بْنِ رَبِيعَةَ، وَعُتْبَةَ بْنِ رَبِيعَةَ وَالْوَلِيدِ بْنِ عُتْبَةَ، وَأَبِي جَهْلِ بْنِ هِشَامٍ. فَأَشْهَدُ بِاللَّهِ لَقَدْ رَأَيْتُهُمْ صَرْعَى، قَدْ غَيَّرَتْهُمُ الشَّمْسُ، وَكَانَ يَوْمًا حَارًّا.
பாடம் : 7 குறைஷி குல இறைமறுப்பாளர் க(ளின் தலைவர்க)ளான ஷைபா, உத்பா, வலீத், அபூஜஹ்ல் பின் ஹிஷாம் போன்றோர்க்கெதிராக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்ததும் அவர்கள் (அனைவரும்) அழிந்துபோனதும்10
3960. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவை நோக்கி, குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஷைபா பின் ரபீஆ, உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, அபூஜஹ்ல் பின் ஹிஷாம் போன்ற சிலருக்கெதிராகப் பிரார்த்தனை புரிந்தார்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் (நால்வரும்) சூரிய வெப்பத்தால் (உடல் உப்பி, நிறம் மாறி) உருமாறி (பத்ர் போர்க்களத்தில்) மாண்டு கிடந்ததை நான் கண்டேன். அன்றைய தினம் வெப்பம் நிறைந்த நாளாக இருந்தது.11

அத்தியாயம் : 64
3961. حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، أَخْبَرَنَا قَيْسٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه أَنَّهُ أَتَى أَبَا جَهْلٍ وَبِهِ رَمَقٌ يَوْمَ بَدْرٍ، فَقَالَ أَبُو جَهْلٍ هَلْ أَعْمَدُ مِنْ رَجُلٍ قَتَلْتُمُوهُ
பாடம் : 8 அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3961. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பத்ர் போரில் அபூஜஹ்லின் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தபோது நான் அவனிடம் வந்தேன். அப்போது அவன், “நீங்கள் எவனைக் கொலை செய்தீர்களோ அவனைவிடச் சிறந்தவன் ஒருவன் உண்டா?” என்று (தன்னைத்தானே புகழ்ந்தபடி) சொன்னான்.13


அத்தியாயம் : 64
3962. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُمْ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ح وَحَدَّثَنِي عَمْرُو بْنُ خَالِدٍ حَدَّثَنَا زُهَيْرٌ عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ يَنْظُرُ مَا صَنَعَ أَبُو جَهْلٍ "" فَانْطَلَقَ ابْنُ مَسْعُودٍ، فَوَجَدَهُ قَدْ ضَرَبَهُ ابْنَا عَفْرَاءَ حَتَّى بَرَدَ قَالَ آأَنْتَ أَبُو جَهْلٍ قَالَ فَأَخَذَ بِلِحْيَتِهِ. قَالَ وَهَلْ فَوْقَ رَجُلٍ قَتَلْتُمُوهُ أَوْ رَجُلٍ قَتَلَهُ قَوْمُهُ? قَالَ أَحْمَدُ بْنُ يُونُسَ أَنْتَ أَبُو جَهْلٍ?
பாடம் : 8 அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3962. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அபூஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் (பத்ர் போர் முடிந்தபோது) கேட்டார்கள். உடனே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அவனைப் பார்த்து வரச்) சென்றார்கள்.

அப்போது அவனை அஃப்ராவின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாகத்) தாக்கிவிடவே, அவன் குற்றுயிராகக் கிடக்கக் கண்டார் கள். அப்போது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அவனது தாடியைப் பிடித்துக் கொண்டு, “அபூஜஹ்ல் நீதானே!” என்று கேட்டார்கள்.

“நீங்கள் கொன்றுவிட்ட ஒரு மனித னுக்கு மேலாக' அல்லது “தன்னுடைய (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப் பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக' ஒருவன் உண்டா?” என்று (தன்னைத் தானே பெருமைப்படுத்தியபடி) அவன் கேட்டான்.14

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
3963. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسٍ، رضى الله عنه قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ بَدْرٍ "" مَنْ يَنْظُرُ مَا فَعَلَ أَبُو جَهْلٍ "". فَانْطَلَقَ ابْنُ مَسْعُودٍ، فَوَجَدَهُ قَدْ ضَرَبَهُ ابْنَا عَفْرَاءَ حَتَّى بَرَدَ، فَأَخَذَ بِلِحْيَتِهِ فَقَالَ أَنْتَ أَبَا جَهْلٍ قَالَ وَهَلْ فَوْقَ رَجُلٍ قَتَلَهُ قَوْمُهُ أَوْ قَالَ قَتَلْتُمُوهُ.
பாடம் : 8 அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3963. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பத்ர் போர் (நடந்த) நாளில், “அபூஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அவனைப் பார்த்து வரப்) போனார்கள். அவனை அஃப்ராவின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாகத்) தாக்கிவிடவே அவன் குற்றுயிராகக் கிடக்கக் கண்டார்கள். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அவனது தாடியைப் பிடித்துக்கொண்டு, “அபூஜஹ்லே! நீயா?” என்று கேட்டார்கள்.

(அப்போது) அவன், “ “தம் (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக' அல்லது “நீங்களே கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக' ஒருவன் உண்டா?” என்று கேட்டான்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
3964. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ كَتَبْتُ عَنْ يُوسُفَ بْنِ الْمَاجِشُونِ، عَنْ صَالِحِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، فِي بَدْرٍ. يَعْنِي حَدِيثَ ابْنَىْ عَفْرَاءَ.
பாடம் : 8 அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3964. பத்ர் போரில் அஃப்ராவின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகியோர் அபூஜஹ்லைக் கொன்றது) தொடர்பான தகவல் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் வாயிலாகவும் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
3965. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الرَّقَاشِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ، حَدَّثَنَا أَبُو مِجْلَزٍ، عَنْ قَيْسِ بْنِ عُبَادٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ أَنَا أَوَّلُ، مَنْ يَجْثُو بَيْنَ يَدَىِ الرَّحْمَنِ لِلْخُصُومَةِ يَوْمَ الْقِيَامَةِ. وَقَالَ قَيْسُ بْنُ عُبَادٍ وَفِيهِمْ أُنْزِلَتْ {هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ} قَالَ هُمُ الَّذِينَ تَبَارَزُوا يَوْمَ بَدْرٍ حَمْزَةُ وَعَلِيٌّ وَعُبَيْدَةُ أَوْ أَبُو عُبَيْدَةَ بْنُ الْحَارِثِ وَشَيْبَةُ بْنُ رَبِيعَةَ وَعُتْبَةُ وَالْوَلِيدُ بْنُ عُتْبَةَ.
பாடம் : 8 அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3965. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இறைமறுப்பாளர்கள் போரிட்டது தொடர்பாக) மறுமை நாளில் (பெருங் கருணையாளன்) ரஹ்மானுக்கு முன்னால் வழக்காடுவதற்காக மண்டியிடுபவர்களில் (இந்தச் சமுதாயத்திலேயே) நான்தான் முதல் நபராக இருப்பேன்.15

கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

“இவர்கள் தம்முடைய இறைவனின் (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரு பிரிவினர் ஆவர்” எனும் (22:19) இறைவசனம், பத்ர் போரின்போது (களத்தில் இறங்கித்) தனித்து நின்று போராடிய (இஸ்லாமிய வீரர்களான) அலீ, ஹம்ஸா, உபைதா பின் அல்ஹாரிஸ் (ரலி) ஆகியோர் மற்றும் (இறைமறுப்பாளர்களான) ஷைபா பின் ரபீஆ, உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா ஆகியோர் தொடர்பாகவே அருளப்பட்டது.16


அத்தியாயம் : 64
3966. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ قَيْسِ بْنِ عُبَادٍ، عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ قَالَ نَزَلَتْ {هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ} فِي سِتَّةٍ مِنْ قُرَيْشٍ عَلِيٍّ وَحَمْزَةَ وَعُبَيْدَةَ بْنِ الْحَارِثِ وَشَيْبَةَ بْنِ رَبِيعَةَ وَعُتْبَةَ بْنِ رَبِيعَةَ وَالْوَلِيدِ بْنِ عُتْبَةَ.
பாடம் : 8 அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3966. அபூதர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஆறு நபர்களான அலீ, ஹம்ஸா, உபைதா பின் அல்ஹாரிஸ் (ரலி- ஆகிய முஸ்லிம்கள்), மற்றும் ஷைபா பின் ரபீஆ, உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா (ஆகிய இறைமறுப்பாளர்கள்) தொடர்பாகவே, “இவர்கள் தம் இறைவனின் (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக்கொண்ட இரு பிரிவினர் ஆவர்” எனும் (22:19) இறைவசனம் அருளப்பட்டது.


அத்தியாயம் : 64
3967. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الصَّوَّافُ، حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ ـ كَانَ يَنْزِلُ فِي بَنِي ضُبَيْعَةَ وَهْوَ مَوْلًى لِبَنِي سَدُوسَ ـ حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ قَيْسِ بْنِ عُبَادٍ، قَالَ قَالَ عَلِيٌّ ـ رضى الله عنه فِينَا نَزَلَتْ هَذِهِ الآيَةُ {هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ }
பாடம் : 8 அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3967. அலீ (ரலி) அவர்கள் கூறிய தாவது:

“இவர்கள் தம் இறைவனின் (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக்கொண்ட இரு பிரிவினர் ஆவர்” எனும் இந்த (22:19) இறைவசனம் எங்கள் தொடர்பாகவே அருளப்பட்டது.


அத்தியாயம் : 64
3968. حَدَّثَنَا يَحْيَى بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ قَيْسِ بْنِ عُبَادٍ، سَمِعْتُ أَبَا ذَرٍّ ـ رضى الله عنه ـ يُقْسِمُ لَنَزَلَتْ هَؤُلاَءِ الآيَاتُ فِي هَؤُلاَءِ الرَّهْطِ السِّتَّةِ يَوْمَ بَدْرٍ. نَحْوَهُ.
பாடம் : 8 அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3968. கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“இந்த வசனங்கள் (22: 19, 20, 21) பத்ர் போரின்போது (முன்னின்று போரிட்ட) ஆறு பேர்கள் குறித்து அருளப்பட்டன” என்று அபூதர் (ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் மீது) ஆணையிட்டுச் சொன்னார்கள்.17


அத்தியாயம் : 64