3680. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذْ قَالَ "" بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُنِي فِي الْجَنَّةِ، فَإِذَا امْرَأَةٌ تَتَوَضَّأُ إِلَى جَانِبِ قَصْرٍ، فَقُلْتُ لِمَنْ هَذَا الْقَصْرُ قَالُوا لِعُمَرَ فَذَكَرْتُ غَيْرَتَهُ فَوَلَّيْتُ مُدْبِرًا "". فَبَكَى وَقَالَ أَعَلَيْكَ أَغَارُ يَا رَسُولَ اللَّهِ
பாடம் : 6 அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3680. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தபோது அவர்கள், “நான் தூங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) என்னைச் சொர்க்கத்தில் கண்டேன். அப்போது அரண்மனையொன்றின் பக்கத்தில் ஒரு பெண் அங்கத் தூய்மை செய்து கொண்டிருந்தாள். நான் (ஜிப்ரீலிடம்), “இந்த அரண்மனை யாருக்குரியது?' என்று கேட்டேன். அவர், “உமர் அவர்களுக்குரியது' என்று பதிலளித்தார்.

அப்போது (அதில் நுழைந்து பார்க்க எண்ணினேன். ஆனால்,) எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. ஆகவே, (அதில் நுழையாமல்) திரும்பி வந்து விட்டேன்” என்று சொன்னார்கள். இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு, “தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள்.41


அத்தியாயம் : 62
3681. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الصَّلْتِ أَبُو جَعْفَرٍ الْكُوفِيُّ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي حَمْزَةُ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" بَيْنَا أَنَا نَائِمٌ شَرِبْتُ ـ يَعْنِي اللَّبَنَ ـ حَتَّى أَنْظُرُ إِلَى الرِّيِّ يَجْرِي فِي ظُفُرِي أَوْ فِي أَظْفَارِي، ثُمَّ نَاوَلْتُ عُمَرَ "". فَقَالُوا فَمَا أَوَّلْتَهُ قَالَ "" الْعِلْمَ "".
பாடம் : 6 அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3681. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“நான் தூங்கிக்கொண்டிருந்தபோது (கனவில் என்னிடம் ஒரு பால் பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அந்தப்) பாலை நான் (தாகம் தீருமளவு) அருந்தினேன். இறுதியில், என் நகக்கண்- அல்லது, நகக்கண்கள்- ஊடே (பால்) பொங்கி வருவதைக் கண்டேன். பிறகு (நான் அருந்தியதுபோக இருந்த மிச்சத்தை) உமர் அவர்களுக்குக் கொடுத்தேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

மக்கள், “இதற்கு (இந்தப் பாலுக்கு) நீங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்க, அதற்கு அவர்கள், “அறிவு' என்று பதிலளித்தார்கள்.42


அத்தியாயம் : 62
3682. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، قَالَ حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ سَالِمٍ، عَنْ سَالِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" أُرِيتُ فِي الْمَنَامِ أَنِّي أَنْزِعُ بِدَلْوِ بَكْرَةٍ عَلَى قَلِيبٍ، فَجَاءَ أَبُو بَكْرٍ فَنَزَعَ ذَنُوبًا أَوْ ذَنُوبَيْنِ نَزْعًا ضَعِيفًا، وَاللَّهُ يَغْفِرُ لَهُ، ثُمَّ جَاءَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَاسْتَحَالَتْ غَرْبًا، فَلَمْ أَرَ عَبْقَرِيًّا يَفْرِي فَرِيَّهُ حَتَّى رَوِيَ النَّاسُ وَضَرَبُوا بِعَطَنٍ "". قَالَ ابْنُ جُبَيْرٍ الْعَبْقَرِيُّ عِتَاقُ الزَّرَابِيِّ. وَقَالَ يَحْيَى الزَّرَابِيُّ الطَّنَافِسُ لَهَا خَمْلٌ رَقِيقٌ {مَبْثُوثَةٌ} كَثِيرَةٌ.
பாடம் : 6 அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3682. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கனவில் இப்படி எனக்குக் காட்டப்பட்டது: நான் ஒரு சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றின் மீதிருந்த ஒரு வாளியால் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ர் அவர்கள் வந்து ஒரு வாளி- அல்லது இரு வாளிகள்- தண்ணீரை (சற்று) சோர்வான நிலையில் இறைத்தார்கள். அவரை அல்லாஹ் மன்னிப்பானாக!

பிறகு உமர் பின் அல்கத்தாப் அவர்கள் வந்தார்கள். உடனே அந்த வாளி மிகப்பெரிய வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) அவரைப்போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக்கூடிய புத்திசாலியான ஒரு (அபூர்வத்) தலைவரை நான் கண்டதில்லை. மக்கள் தாகம் தீர்ந்து, (தங்கள் ஒட்டகங்களுக்கும் நீர் புகட்டி, நீர்நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவுக்கு (அவர் நீர் இறைத்தார்).43

அறிவிப்பாளர்களில் ஒருவரான சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், “இந்த ஹதீஸி(ன் மூலத்தி)ல் இடம்பெற்றுள்ள “அப்கரிய்யு' எனும் சொல், “உயர் தரமான விரிப்பு' என (அகராதியில்) பொருள்படும்” என்று கூறுகிறார்கள். மற்றோர் அறிவிப்பாளரான யஹ்யா பின் ஸியாத் (ரஹ்) அவர்கள், “மென்மையான குஞ்சம் வைத்த விரிப்பு' என்று (பொருள்) கூறுகிறார்.

“ஸராபிய்யு மப்ஸƒஸா' (88:16) என்ப தற்கு “விரிக்கப்பட்ட அதிகமான கம்பளங் கள்' என்பது பொருள்.


அத்தியாயம் : 62
3683. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عَبْدُ الْحَمِيدِ، أَنَّ مُحَمَّدَ بْنَ سَعْدٍ، أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ قَالَ ح حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، قَالَ اسْتَأْذَنَ عُمَرُ بْنُ الْخَطَّابِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَعِنْدَهُ نِسْوَةٌ مِنْ قُرَيْشٍ يُكَلِّمْنَهُ وَيَسْتَكْثِرْنَهُ، عَالِيَةً أَصْوَاتُهُنَّ عَلَى صَوْتِهِ فَلَمَّا اسْتَأْذَنَ عُمَرُ بْنُ الْخَطَّابِ قُمْنَ فَبَادَرْنَ الْحِجَابَ فَأَذِنَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَدَخَلَ عُمَرُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَضْحَكُ، فَقَالَ عُمَرُ أَضْحَكَ اللَّهُ سِنَّكَ يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" عَجِبْتُ مِنْ هَؤُلاَءِ اللاَّتِي كُنَّ عِنْدِي فَلَمَّا سَمِعْنَ صَوْتَكَ ابْتَدَرْنَ الْحِجَابِ "". فَقَالَ عُمَرُ فَأَنْتَ أَحَقُّ أَنْ يَهَبْنَ يَا رَسُولَ اللَّهِ. ثُمَّ قَالَ عُمَرُ يَا عَدُوَّاتِ أَنْفُسِهِنَّ، أَتَهَبْنَنِي وَلاَ تَهَبْنَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْنَ نَعَمْ، أَنْتَ أَفَظُّ وَأَغْلَظُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِيهًا يَا ابْنَ الْخَطَّابِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا لَقِيَكَ الشَّيْطَانُ سَالِكًا فَجًّا قَطُّ إِلاَّ سَلَكَ فَجًّا غَيْرَ فَجِّكَ "".
பாடம் : 6 அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3683. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். அப்போது (நபியவர்களின் துணைவியரான) குறைஷிப் பெண்கள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் பேசிக்கொண்டும் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி கேட்டுக்கொண்டும் இருந்தனர். அவர்களின் குரல்கள் நபி (ஸல்) அவர்களின் குரலைவிட உயர்ந்திருந்தன. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் உள்ளே வர அனுமதி கேட்டவுடன் அப்பெண்கள் எழுந்து அவசர அவசரமாக பர்தா அணிந்துகொண்டனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உமர் (ரலி) அவர்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள். (தம் வீட்டுப் பெண்கள் உமர் அவர்களுக்கு அஞ்சு வதைக் கண்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்துக்கொண்டிருக்க, உமர் (ரலி) அவர்கள் உள்ளே நுழைந்தார் கள். “அல்லாஹ் உங்களை ஆயுள் முழுவதும் சிரித்தபடி (மகிழ்ச்சியுடன்) வாழவைப்பானாக! அல்லாஹ்வின் தூதரே!” என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்னிடமிருந்த இந்தப் பெண் களைக் குறித்து நான் வியப்படைகிறேன். உங்கள் குரலைக் கேட்டவுடன் அவசர அவசரமாக பர்தா அணிந்துகொண்டார் களே” என்று சொன்னார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “இந்தப் பெண்கள் அஞ்சுவதற்கு நீங்களே மிகவும் தகுதியுடையவர்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (அப்பெண்களை நோக்கி), “தமக்குத்தாமே பகைவர்களாயிருப்பவர் களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அஞ்சாமல் எனக்கு நீங்கள் அஞ்சுகிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம், நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட கடுமை காட்டுபவரும் கடின சித்தமுடையவரும் ஆவீர்கள்” என்று பதிலளித்தார்கள்.

இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சரி! விடுங்கள், கத்தாபின் புதல்வரே! என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒரு தெருவில் நீங்கள் (நடந்து) செல்வதை ஷைத்தான் கண்டால், அவன் உங்கள் தெருவை விட்டுவிட்டு வேறொரு தெருவில்தான் செல்வான்” என்று சொன் னார்கள்.44

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 62
3684. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا قَيْسٌ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ مَا زِلْنَا أَعِزَّةً مُنْذُ أَسْلَمَ عُمَرُ.
பாடம் : 6 அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3684. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற நேரத்திலிருந்து நாங்கள் வலிமையும் கண்ணியமும் உடையவர்களாகத் திகழலானோம்.

இதை கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 62
3685. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا عُمَرُ بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ وُضِعَ عُمَرُ عَلَى سَرِيرِهِ، فَتَكَنَّفَهُ النَّاسُ يَدْعُونَ وَيُصَلُّونَ قَبْلَ أَنْ يُرْفَعَ، وَأَنَا فِيهِمْ، فَلَمْ يَرُعْنِي إِلاَّ رَجُلٌ آخِذٌ مَنْكِبِي، فَإِذَا عَلِيٌّ فَتَرَحَّمَ عَلَى عُمَرَ، وَقَالَ مَا خَلَّفْتَ أَحَدًا أَحَبَّ إِلَىَّ أَنْ أَلْقَى اللَّهَ بِمِثْلِ عَمَلِهِ مِنْكَ، وَايْمُ اللَّهِ، إِنْ كُنْتُ لأَظُنُّ أَنْ يَجْعَلَكَ اللَّهُ مَعَ صَاحِبَيْكَ، وَحَسِبْتُ أَنِّي كُنْتُ كَثِيرًا أَسْمَعُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ذَهَبْتُ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ، وَدَخَلْتُ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ، وَخَرَجْتُ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ.
பாடம் : 6 அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3685. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் (இறந்தவுடன்) கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார்கள். அப்போது மக்கள், அவரைச் சுற்றிலும் சூழ்ந்துகொண்டு பிரார்த்திக்கலாயினர். அவரது ஜனாஸா (சடலம்) எடுக்கப்படு வதற்கு முன்பாக அவருக்காக இறுதித் தொழுகை தொழலாயினர். அப்போது நான் அவர்களிடையே இருந்தேன். என் தோளைப் பிடித்துக்கொண்டிருந்த ஒரு மனிதர்தான் என்னை திடுக்கிடச்செய்தார். (யாரென்று திரும்பிப் பார்த்தபோது) அது அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள்தான்.

அவர்கள், “உமர் (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!” என்று பிரார்த்தித்துவிட்டு, “(உமரே!) உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்மாதிரியாக, நான் விரும்பி ஏற்கத் தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. (நீங்கள்தான் அத்தகைய மனிதர்.) அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உங்களை உங்கள் தோழர்க(ளான நபி (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்)கள் இருவருடனும்தான் (அவர்களின் மண்ணறைக்கு அருகில்தான்) இருக்கச்செய்வான் என்று எண்ணியிருந் தேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், “நானும் அபூபக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்' என்றும் “நானும் அபூபக்ரும் உமரும் (இந்த இடத்திற்கு) உள்ளே சென்றோம்' என்றும் “நானும் அபூபக்ரும் உமரும் புறப்பட்டோம்” என்றும் சொல்வதை நான் அதிகமாகச் செவியுற் றுள்ளேன் என்றார்கள்.45


அத்தியாயம் : 62
3686. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، وَقَالَ، لِي خَلِيفَةُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَوَاءٍ، وَكَهْمَسُ بْنُ الْمِنْهَالِ، قَالاَ حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ صَعِدَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى أُحُدٍ وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ فَرَجَفَ بِهِمْ، فَضَرَبَهُ بِرِجْلِهِ، قَالَ "" اثْبُتْ أُحُدُ فَمَا عَلَيْكَ إِلاَّ نَبِيٌّ أَوْ صِدِّيقٌ أَوْ شَهِيدَانِ "".
பாடம் : 6 அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3686. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோர் தம்முட னிருக்க, நபி (ஸல்) அவர்கள் உஹுத் மலைமீது ஏறினார்கள். அப்போது அது அவர்களுடன் நடுங்கியது. உடனே நபி (ஸல்) அவர்கள் அதைத் தமது காலால் உதைத்து, “ “உஹுதே! அசையாமல் இரு! உன்மீது ஓர் இறைத்தூதரும் (நானும்), ஒரு சித்தீக்கும், இரு உயிர்த் தியாகிகளும்தான் உள்ளனர்” என்று சொன்னார்கள்.46

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 62
3687. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي عُمَرُ، هُوَ ابْنُ مُحَمَّدٍ أَنَّ زَيْدَ بْنَ أَسْلَمَ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، قَالَ سَأَلَنِي ابْنُ عُمَرَ عَنْ بَعْضِ، شَأْنِهِ ـ يَعْنِي عُمَرَ ـ فَأَخْبَرْتُهُ. فَقَالَ، مَا رَأَيْتُ أَحَدًا قَطُّ بَعْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ حِينَ قُبِضَ كَانَ أَجَدَّ وَأَجْوَدَ حَتَّى انْتَهَى مِنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ.
பாடம் : 6 அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3687. அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:47

இப்னு உமர் (ரலி) அவர்கள் என்னிடம் உமர் (ரலி) அவர்களின் பண்புகள் சிலவற்றைப் பற்றிக் கேட்டார்கள். நான் அவர்களுக்கு அவற்றைத் தெரிவித்தேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த நேரத்திலிருந்து உமர் (ரலி) அவர்களைவிட அதிகம் உழைக்கக் கூடியவர்களாகவும் அதிகம் வாரி வழங்குபவர்களாகவும் வேறெவரையும் நான் காணவில்லை. அவர்கள் தமது வாழ்நாளின் இறுதிவரை அவ்வாறே இருந்தார்கள்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 62
3688. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ السَّاعَةِ، فَقَالَ مَتَى السَّاعَةُ قَالَ "" وَمَاذَا أَعْدَدْتَ لَهَا "". قَالَ لاَ شَىْءَ إِلاَّ أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم. فَقَالَ "" أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ "". قَالَ أَنَسٌ فَمَا فَرِحْنَا بِشَىْءٍ فَرَحَنَا بِقَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ "". قَالَ أَنَسٌ فَأَنَا أُحِبُّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ، وَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ بِحُبِّي إِيَّاهُمْ، وَإِنْ لَمْ أَعْمَلْ بِمِثْلِ أَعْمَالِهِمْ.
பாடம் : 6 அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3688. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, “மறுமை நாள் எப்போது வரும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்?” என்று (திருப்பிக்) கேட்டார்கள். அம்மனிதர், “எதுவுமில்லை; நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பதைத் தவிர” என்று பதிலளித்தார்.48

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ நேசித்தவர்களுடன்தான் (மறுமையில்) நீ இருப்பாய்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்” என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன்தான் இருப்பேன் என்று நான் நம்புகிறேன்; அவர்களுடைய நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே!49


அத்தியாயம் : 62
3689. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَقَدْ كَانَ فِيمَا قَبْلَكُمْ مِنَ الأُمَمِ مُحَدَّثُونَ، فَإِنْ يَكُ فِي أُمَّتِي أَحَدٌ فَإِنَّهُ عُمَرُ "". زَادَ زَكَرِيَّاءُ بْنُ أَبِي زَائِدَةَ عَنْ سَعْدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَقَدْ كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ مِنْ بَنِي إِسْرَائِيلَ رِجَالٌ يُكَلَّمُونَ مِنْ غَيْرِ أَنْ يَكُونُوا أَنْبِيَاءَ، فَإِنْ يَكُنْ مِنْ أُمَّتِي مِنْهُمْ أَحَدٌ فَعُمَرُ "".
பாடம் : 6 அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3689. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன்பிருந்த சமுதாயங் களில், (பல்வேறு பிரச்சினைகளில் சரியான தீர்வு எது என்பது குறித்து இறையருளால்) முன்கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். என் சமுதாயத்தாரில் அப்படிப்பட்டவர் எவரேனும் இருந்தால் அது உமராகத்தான் இருப்பார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.50

மற்றோர் அறிவிப்பில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியிருப்பதாவது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன்பிருந்த இஸ்ரவேலர் களில் இறைத்தூதர்களாக இல்லாமலேயே (வானவர்களால்) அறிவிப்புச் செய்யப் பட்டவர்கள் இருந்துள்ளனர். அத்தகை யவர்களில் எவரேனும் என் சமுதாயத்தில் இருந்தால் அது உமராகத்தான் இருப்பார்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (குர்ஆனின் 22:52ஆவது வசனத்தில்) “வலா முஹத்தஸின்' (முன்கூட்டியே அறிவிக்கப்பட்டவரானாலும்) என்று (சேர்த்து) வாசித்துள்ளார்கள்.


அத்தியாயம் : 62
3690. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنَا عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالاَ سَمِعْنَا أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" بَيْنَمَا رَاعٍ فِي غَنَمِهِ عَدَا الذِّئْبُ فَأَخَذَ مِنْهَا شَاةً، فَطَلَبَهَا حَتَّى اسْتَنْقَذَهَا، فَالْتَفَتَ إِلَيْهِ الذِّئْبُ فَقَالَ لَهُ مَنْ لَهَا يَوْمَ السَّبُعِ، لَيْسَ لَهَا رَاعٍ غَيْرِي"". فَقَالَ النَّاسُ سُبْحَانَ اللَّهِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" فَإِنِّي أُومِنُ بِهِ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ "" وَمَا ثَمَّ أَبُو بَكْرٍ وَعُمَرُ.
பாடம் : 6 அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3690. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இஸ்ரவேலர்களில்) ஓர் ஆட்டிடையர் தம் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த போது ஓர் ஓநாய், ஆடு ஒன்றைக் கவ்விக்கொண்டு ஓடலாயிற்று. ஆட்டை மேய்த்துக்கொண்டிருந்தவர் அந்த ஓநாயைத் துரத்திச் சென்றார். அப்போது ஓநாய் அவரைப் பார்த்து, “மன் லஹா யவ்மஸ் ஸபுஇ? (கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் உலக முடிவு நாளில் இதைப் பாதுகாக்கக்கூடியவர் யார்?) அப்போது என்னைத் தவிர இதற்கு மேய்ப்பாளன் (பொறுப்பாளன்) எவனும் இருக்கமாட்டானே' என்று கூறியது.

(இதைக் கேட்டு வியந்தவர்களாக) “சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என மக்கள் கூறினர். அப்போது நானும், அபூபக்ரும் உமரும் இந்த நிகழ்ச்சியை நம்புகிறோம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபியவர்கள் இதைக் கூறிய சமயம்) அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அங்கு இருக்கவில்லை.51

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 62
3691. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو أُمَامَةَ بْنُ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُ النَّاسَ عُرِضُوا عَلَىَّ وَعَلَيْهِمْ قُمُصٌ، فَمِنْهَا مَا يَبْلُغُ الثَّدْىَ، وَمِنْهَا مَا يَبْلُغُ دُونَ ذَلِكَ، وَعُرِضَ عَلَىَّ عُمَرُ وَعَلَيْهِ قَمِيصٌ اجْتَرَّهُ "". قَالُوا فَمَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ "" الدِّينَ "".
பாடம் : 6 அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3691. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை), “நான் தூங்கிக்கொண்டிருந்தபோது, (கனவில்) மக்கள் (பலவிதமான) சட்டைகளை அணிந்தவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள். அவற்றில் (அவர்களுடைய) மார்பை எட்டக்கூடியவையும் இருந்தன. அவற்றில் (அவர்களுடைய) மார்பை எட்டாதவை யும் இருந்தன. உமர் அவர்கள், (தரையில்) இழுத்துக்கொண்டே செல்லும் அளவுக்கு (நீளமான) சட்டையொன்றை அணிந்தவராக எனக்குக் காட்டப்பட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

மக்கள், “இதற்கு நீங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(அந்தச் சட்டைகள்) அவர் களது மார்க்கத்தை (மார்க்க உணர்வையும் செயல்பாடுகளையும்) குறிக்கும்” என்று (விளக்கம் காண்பதாக) பதில் சொன்னார் கள்.52


அத்தியாயம் : 62
3692. حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، قَالَ لَمَّا طُعِنَ عُمَرُ جَعَلَ يَأْلَمُ، فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ ـ وَكَأَنَّهُ يُجَزِّعُهُ ـ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، وَلَئِنْ كَانَ ذَاكَ لَقَدْ صَحِبْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَحْسَنْتَ صُحْبَتَهُ، ثُمَّ فَارَقْتَهُ وَهْوَ عَنْكَ رَاضٍ، ثُمَّ صَحِبْتَ أَبَا بَكْرٍ فَأَحْسَنْتَ صُحْبَتَهُ، ثُمَّ فَارَقْتَهُ وَهْوَ عَنْكَ رَاضٍ، ثُمَّ صَحِبْتَ صَحَبَتَهُمْ فَأَحْسَنْتَ صُحْبَتَهُمْ، وَلَئِنْ فَارَقْتَهُمْ لَتُفَارِقَنَّهُمْ وَهُمْ عَنْكَ رَاضُونَ. قَالَ أَمَّا مَا ذَكَرْتَ مِنْ صُحْبَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَرِضَاهُ، فَإِنَّمَا ذَاكَ مَنٌّ مِنَ اللَّهِ تَعَالَى مَنَّ بِهِ عَلَىَّ، وَأَمَّا مَا ذَكَرْتَ مِنْ صُحْبَةِ أَبِي بَكْرٍ وَرِضَاهُ، فَإِنَّمَا ذَاكَ مَنٌّ مِنَ اللَّهِ جَلَّ ذِكْرُهُ مَنَّ بِهِ عَلَىَّ، وَأَمَّا مَا تَرَى مِنْ جَزَعِي، فَهْوَ مِنْ أَجْلِكَ وَأَجْلِ أَصْحَابِكَ، وَاللَّهِ لَوْ أَنَّ لِي طِلاَعَ الأَرْضِ ذَهَبًا لاَفْتَدَيْتُ بِهِ مِنْ عَذَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ قَبْلَ أَنْ أَرَاهُ. قَالَ حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا أَيُّوبُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، دَخَلْتُ عَلَى عُمَرَ بِهَذَا.
பாடம் : 6 அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3692. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்டபோது அவர்கள் வேதனையடையலானார்கள்.53

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களுக்கு ஆறுதல் கூறுவதைப் போல, “நம்பிக்கையாளர்களின் தலைவரே! இதைப் பெரிதுபடுத்திக் கொள்ளாதீர்கள்; நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டு அத்தோழமையில் நல்லவிதமாக நடந்துகொண்டீர்கள். பிறகு, அவர்கள் உங்களைக் குறித்துத் திருப்தியடைந்திருந்த நிலையிலேயே (அவர்கள் இறந்துவிட,) அவர்களைப் பிரிந்தீர்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுடன் தோழமை கொண்டு அந்தத் தோழமையிலும் நல்ல விதமாக நடந்துகொண்டீர்கள். பிறகு உங்கள்மீது அவர்கள் திருப்தியடைந்திருந்த நிலையிலேயே (அவர்கள் இறந்துவிட,) அவர்களைப் பிரிந்தீர்கள். பிறகு அவர் களுடைய மற்ற தோழர்களுடன் தோழமை கொண்டு அந்தத் தோழமையிலும் நல்ல விதமாக நடந்துகொண்டீர்கள். அவர்களை நீங்கள் பிரிவதாயிருந்தால் நிச்சயம் அவர்கள் உங்களைக் குறித்துத் திருப்தி யடைந்திருக்கும் நிலையிலேயே பிரிவீர்கள்” என்று சொன்னார்கள்.

உமர் (ரலி) அவர்கள், “(இப்னு அப்பாஸே!) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் கொண்டிருந்ததாக நீங்கள் சொன்ன தோழமை, அவர்கள் என்மீது கொண்டிருந்த அன்பு ஆகியவையெல்லாம் அல்லாஹ் என்மீது பொழிந்த அருட்கொடையாகும். மேலும், அபூபக்ர் (ரலி) அவர்களுடன் நான் கொண்டிருந்ததாக நீங்கள் சொன்ன தோழமை, அவர்கள் என்மீது கொண்டி ருந்த அன்பு ஆகியனவும் உயர்ந்தோன் அல்லாஹ் என்மீது பொழிந்த அருட் கொடையாகும்.

என்னிடம் நீங்கள் காண்கின்ற பதற்றமோ (பிற்காலத்தில் குழப்பங்களில் சிக்கவிருக்கும்) உங்களுக்காகவும் உங்கள் தோழர்களுக்காவும்தான். அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஒரு பூமி நிரம்பத் தங்கம் இருந்தால்கூட, வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் வேதனையை நான் காண்பதற்கு முன்பாகவே அதற்குப் பகரமாக அந்தத் தங்கத்தைப் பிணைத்தொகையாகத் தந்து விடுவேன்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்றேன்...” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.


அத்தியாயம் : 62
3693. حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ حَدَّثَنِي عُثْمَانُ بْنُ غِيَاثٍ، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ النَّهْدِيُّ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي حَائِطٍ مِنْ حِيطَانِ الْمَدِينَةِ، فَجَاءَ رَجُلٌ فَاسْتَفْتَحَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" افْتَحْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ "". فَفَتَحْتُ لَهُ، فَإِذَا أَبُو بَكْرٍ، فَبَشَّرْتُهُ بِمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَحَمِدَ اللَّهَ، ثُمَّ جَاءَ رَجُلٌ فَاسْتَفْتَحَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" افْتَحْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ "". فَفَتَحْتُ لَهُ، فَإِذَا هُوَ عُمَرُ، فَأَخْبَرْتُهُ بِمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَحَمِدَ اللَّهَ، ثُمَّ اسْتَفْتَحَ رَجُلٌ، فَقَالَ لِي "" افْتَحْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ عَلَى بَلْوَى تُصِيبُهُ "". فَإِذَا عُثْمَانُ، فَأَخْبَرْتُهُ بِمَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَحَمِدَ اللَّهَ ثُمَّ قَالَ اللَّهُ الْمُسْتَعَانُ.
பாடம் : 6 அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3693. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவின் தோட்டங்களில் ஒன்றில் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து (வாயிற் கதவைத்) திறக்கும்படி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அவருக்காகத் திறவுங்கள்; அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். நான் அவருக்காக (வாயிற் கதவைத்) திறந்தேன். அவர் அபூபக்ர் (ரலி) அவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன நற்செய்தியைத் தெரிவித்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள்.

பிறகு ஒரு மனிதர் வந்து (கதவைத்) திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள், “அவருக்குத் திறந்து விடுங்கள்; அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். அவருக்கு நான் கதவைத் திறந்துவிட்டேன். அம்மனிதர் உமர் (ரலி) அவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் நான் நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்தியைத் தெரிவித்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள்.

பிறகு ஒரு மனிதர் கதவைத் திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் சென்று அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள், “அவருக்கும் திறந்துவிடுங்கள்; அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து சொர்க்கம் அவருக்குக் கிடைக்கும் என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். (நானும் சென்று கதவைத் திறக்க) அம்மனிதர் உஸ்மான் (ரலி) அவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, “(எனக்கு நேரவிருக்கும் அந்தத் துன்பத்தின்போது) அல்லாஹ்வே (பொறுமையைத் தந்து) உதவி புரிபவன் ஆவான்” என்று சொன்னார்கள்.54


அத்தியாயம் : 62
3694. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي حَيْوَةُ، قَالَ حَدَّثَنِي أَبُو عَقِيلٍ، زُهْرَةُ بْنُ مَعْبَدٍ أَنَّهُ سَمِعَ جَدَّهُ عَبْدَ اللَّهِ بْنَ هِشَامٍ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ آخِذٌ بِيَدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ.
பாடம் : 6 அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3694. அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண் டிருக்க, நாங்கள் நபி (ஸல்) அவர் களுடன் இருந்தோம்...55

அத்தியாயம் : 62
3695. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ حَائِطًا وَأَمَرَنِي بِحِفْظِ باب الْحَائِطِ، فَجَاءَ رَجُلٌ يَسْتَأْذِنُ، فَقَالَ "" ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ "". فَإِذَا أَبُو بَكْرٍ، ثُمَّ جَاءَ آخَرُ يَسْتَأْذِنُ فَقَالَ "" ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ "". فَإِذَا عُمَرُ، ثُمَّ جَاءَ آخَرُ يَسْتَأْذِنُ، فَسَكَتَ هُنَيْهَةً ثُمَّ قَالَ "" ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ عَلَى بَلْوَى سَتُصِيبُهُ "". فَإِذَا عُثْمَانُ بْنُ عَفَّانَ. قَالَ حَمَّادٌ وَحَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، وَعَلِيُّ بْنُ الْحَكَمِ، سَمِعَا أَبَا عُثْمَانَ، يُحَدِّثُ عَنْ أَبِي مُوسَى، بِنَحْوِهِ، وَزَادَ فِيهِ عَاصِمٌ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ قَاعِدًا فِي مَكَانٍ فِيهِ مَاءٌ، قَدِ انْكَشَفَتْ عَنْ رُكْبَتَيْهِ أَوْ رُكْبَتِهِ، فَلَمَّا دَخَلَ عُثْمَانُ غَطَّاهَا.
பாடம் : 7 அபூஅம்ர் உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ (ரலி) அவர்களின் சிறப்புகள்56 “ரூமா (என்னும் மதீனாவில் உள்ள சுவை நீர்) கிணற்றை (தூர் வாரி) எவர் தோண்டுகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல உஸ்மான் (ரலி) அவர்கள் அதைத் தோண்டினார்கள். “எவர் வசதியற்ற (தபூக் போருக்கான) படைக்கு வேண்டிய வசதிகளைச் செய்து (தயார்படுத்தித்) தருகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல, உஸ்மான் (ரலி) அவர்கள் அப்படைக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுத்தார்கள்.57
3695. அபூமூசா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத் தினுள் நுழைந்தார்கள். தோட்டத்தின் வாயிற்கதவைக் காவல் புரியும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார். (நான் நபி (ஸல்) அவர்களிடம் அவருக்காக அனுமதி கேட்க) அவர்கள், “அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்தியும் சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். (நான் அவரிடம் சொல்லச் சென்றபோது) அம்மனிதர் அபூபக்ர் (ரலி) அவர்களாக இருந்தார்கள்.

பிறகு மற்றொருவர் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார். (நான் சென்று நபியவர்களிடம் அனுமதி கேட்க), “அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்தியும் சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். (நான் அவ்வாறே சொல்லச் சென்றபோது) அந்த மனிதர் உமர் (ரலி) அவர்களாக இருந்தார்கள்.

பிறகு இன்னொரு மனிதர் வந்து உள்ளே வர அனுமதி கேட்டார். (நான் சென்று நபியவர்களிடம் கதவைத் திறக்க அனுமதி கேட்டபோது) அவர்கள் சிறிது நேரம் மௌனமாயிருந்துவிட்டுப் பிறகு, “அவருக்கு அனுமதி கொடுங்கள்; (வருங்காலத்தில்) அவருக்கு நேரவிருக்கும் துன்பத்தையடுத்து அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். (நான் சென்று கதவைத் திறந்தபோது) அவர் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களாக இருந்தார்கள்.58

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஆஸிம் பின் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் தம்மிரு முழங்கால்களும்- அல்லது தமது முழங்கால்- தெரிய தண்ணீர் உள்ள இடத்திற்கருகே அமர்ந்திருந்தார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் உள்ளே வந்தபோது தமது முழங்காலை மூடிக்கொண்டார்கள்” எனக் கூடுதலாக அறிவித்துள்ளார்கள்.


அத்தியாயம் : 62
3696. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ شَبِيبِ بْنِ سَعِيدٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ يُونُسَ، قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَدِيِّ بْنِ الْخِيَارِ، أَخْبَرَهُ أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الأَسْوَدِ بْنِ عَبْدِ يَغُوثَ قَالاَ مَا يَمْنَعُكَ أَنْ تُكَلِّمَ عُثْمَانَ لأَخِيهِ الْوَلِيدِ فَقَدْ أَكْثَرَ النَّاسُ فِيهِ. فَقَصَدْتُ لِعُثْمَانَ حَتَّى خَرَجَ إِلَى الصَّلاَةِ، قُلْتُ إِنَّ لِي إِلَيْكَ حَاجَةً، وَهِيَ نَصِيحَةٌ لَكَ. قَالَ يَا أَيُّهَا الْمَرْءُ ـ قَالَ مَعْمَرٌ أُرَاهُ قَالَ ـ أَعُوذُ بِاللَّهِ مِنْكَ. فَانْصَرَفْتُ، فَرَجَعْتُ إِلَيْهِمْ إِذْ جَاءَ رَسُولُ عُثْمَانَ فَأَتَيْتُهُ، فَقَالَ مَا نَصِيحَتُكَ فَقُلْتُ إِنَّ اللَّهَ سُبْحَانَهُ بَعَثَ مُحَمَّدًا صلى الله عليه وسلم بِالْحَقِّ، وَأَنْزَلَ عَلَيْهِ الْكِتَابَ، وَكُنْتَ مِمَّنِ اسْتَجَابَ لِلَّهِ وَلِرَسُولِهِ، فَهَاجَرْتَ الْهِجْرَتَيْنِ، وَصَحِبْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَرَأَيْتَ هَدْيَهُ، وَقَدْ أَكْثَرَ النَّاسُ فِي شَأْنِ الْوَلِيدِ. قَالَ أَدْرَكْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قُلْتُ لاَ وَلَكِنْ خَلَصَ إِلَىَّ مِنْ عِلْمِهِ مَا يَخْلُصُ إِلَى الْعَذْرَاءِ فِي سِتْرِهَا. قَالَ أَمَّا بَعْدُ فَإِنَّ اللَّهَ بَعَثَ مُحَمَّدًا صلى الله عليه وسلم بِالْحَقِّ، فَكُنْتُ مِمَّنِ اسْتَجَابَ لِلَّهِ وَلِرَسُولِهِ وَآمَنْتُ بِمَا بُعِثَ بِهِ، وَهَاجَرْتُ الْهِجْرَتَيْنِ كَمَا قُلْتَ، وَصَحِبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَبَايَعْتُهُ، فَوَاللَّهِ مَا عَصَيْتُهُ وَلاَ غَشَشْتُهُ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ أَبُو بَكْرٍ مِثْلُهُ، ثُمَّ عُمَرُ مِثْلُهُ، ثُمَّ اسْتُخْلِفْتُ، أَفَلَيْسَ لِي مِنَ الْحَقِّ مِثْلُ الَّذِي لَهُمْ قُلْتُ بَلَى. قَالَ فَمَا هَذِهِ الأَحَادِيثُ الَّتِي تَبْلُغُنِي عَنْكُمْ أَمَّا مَا ذَكَرْتَ مِنْ شَأْنِ الْوَلِيدِ، فَسَنَأْخُذُ فِيهِ بِالْحَقِّ إِنْ شَاءَ اللَّهُ، ثُمَّ دَعَا عَلِيًّا فَأَمَرَهُ أَنْ يَجْلِدَهُ فَجَلَدَهُ ثَمَانِينَ.
பாடம் : 7 அபூஅம்ர் உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ (ரலி) அவர்களின் சிறப்புகள்56 “ரூமா (என்னும் மதீனாவில் உள்ள சுவை நீர்) கிணற்றை (தூர் வாரி) எவர் தோண்டுகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல உஸ்மான் (ரலி) அவர்கள் அதைத் தோண்டினார்கள். “எவர் வசதியற்ற (தபூக் போருக்கான) படைக்கு வேண்டிய வசதிகளைச் செய்து (தயார்படுத்தித்) தருகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல, உஸ்மான் (ரலி) அவர்கள் அப்படைக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுத்தார்கள்.57
3696. உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:59

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்தி யகூஸ் (ரஹ்) அவர்களும் என்னிடம், “உஸ்மான் (ரலி) அவர்களிடம் நீங்கள் அவர்களுடைய (தாய்வழிச்) சகோதரர் வலீத் (பின் உக்பா) பற்றிப் பேசாமலிருப்பது ஏன்? மக்கள் வலீத் விஷயத்தில் மிக அதிகமாகக் குறை கூறுகிறார்களே!” என்று கேட்டார்கள்.60

ஆகவே, நான் உஸ்மான் (ரலி) அவர்கள் தொழுகைக்காகப் புறப்பட்ட நேரத்தில் அவர்களைத் தேடிச் சென்றேன். அவர்களிடம், எனக்கு உங்களிடம் சற்று(ப் பேச வேண்டிய) தேவை உள்ளது. அது உங்களுக்கு (நான் கூற விரும்பும்) அறிவுரை” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “ஏ மனிதரே! உம்மிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று சொன்னார்கள். உடனே, நான் திரும்பி அவ்விருவரிடமும் வந்தேன். அப்போது உஸ்மான் (ரலி) அவர்களுடைய தூதுவர் (என்னைத் தேடி) வர, நான் அவர்களிடம் (மீண்டும்) சென்றேன்.

உஸ்மான் (ரலி) அவர்கள், “உங்கள் அறிவுரை என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ், முஹம்மத் (ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பி அவர்கள்மீது (தன்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்புக்குப் பதிலளித்தவர்களில் நீங்களும் ஒருவராயிருந்தீர்கள். ஆகவே, (மக்காவைத் துறந்து அபிசீனியாவுக்கும், அதன்பின் மதீனாவுக்குமாக) இரண்டு ஹிஜ்ரத்கள் மேற்கொண்டீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதருடன் தோழமை கொண்டு அவர்களுடைய வழிமுறையைப் பார்த்திருக்கிறீர்கள். மக்களோ வலீத் பின் உக்பாவைப் பற்றி நிறையக் குறைபேசுகிறார்கள் (நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?)” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்க நான், “இல்லை. ஆனால், திரைக்கப்பால் இருக்கும் கன்னிப் பெண்களிடம்(கூட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கல்வி சென்றடைந்துகொண்டிருக்கும்(போது, அந்த) அளவு (கல்வி) என்னிடமும் வந்து சேர்ந்துள்ளது (குறித்து வியப் பில்லை.)” என்று பதில் சொன்னேன்.

அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், “இறைவாழ்த்துக்குப்பின் கூறுகிறேன்: அல்லாஹ், முஹம்மத் (ஸல்) அவர்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பி வைத்தான். அப்போது, அல்லாஹ்வின் அழைப்புக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அழைப்புக்கும் பதிலளித்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். மேலும், அவர்கள் எ(ந்த வேதத்)தைக் கொடுத்தனுப்பப்பட்டார்களோ அதை நான் நம்பி ஏற்றுக்கொண்டேன். நான் இரு ஹிஜ்ரத்துகளை மேற் கொண்டேன். - நீங்கள் சொன்னதைப் போல்- நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டேன்; அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தேன். ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை மரணிக்கச் செய்யும்வரை நான் அவர்களுக்கு மாறு செய்யவுமில்லை; அவர்களை ஏமாற்றவுமில்லை. பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் அதைப் போலவே (நடந்துகொண்டேன்.) பிறகு உமர் அவர்களிடமும் அதைப் போலவே (நடந்துகொண்டேன்.) பிறகு நான் கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கப்பட்டேன். ஆகவே, அவர்களுக்கிருந்தது போன்ற அதே உரிமை எனக்கில்லையா?” என்று கேட்டார்கள்.

நான், “ஆம் (உங்களுக்கும் அதே போன்ற உரிமை இருக்கிறது)” என்று சொன்னேன். அவர்கள், “அப்படியென்றால் உங்களைக் குறித்து எனக்கு எட்டுகின்ற (என்னைக் குறைகூறும்) இந்தப் பேச்சுகளெல்லாம் என்ன? நீங்கள் வலீத் பின் உக்பா விஷயமாகச் சொன்னவற்றில் விரைவில் இறைவன் நாடினால் சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்” என்று சொன்னார்கள்.

பிறகு அலீ (ரலி) அவர்களை அழைத்து வலீத் பின் உக்பாவுக்கு (எதிராகச் சாட்சிகள் கிடைத்ததால் அவருக்கு) கசையடிகள் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்களும் வலீதுக்கு எண்பது கசையடிகள் கொடுத்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 62
3697. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ بَزِيغٍ، حَدَّثَنَا شَاذَانُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ الْمَاجِشُونُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا فِي زَمَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم لاَ نَعْدِلُ بِأَبِي بَكْرٍ أَحَدًا ثُمَّ عُمَرَ ثُمَّ عُثْمَانَ، ثُمَّ نَتْرُكُ أَصْحَابَ النَّبِيِّ صلى الله عليه وسلم لاَ نُفَاضِلُ بَيْنَهُمْ. تَابَعَهُ عَبْدُ اللَّهِ عَنْ عَبْدِ الْعَزِيزِ.
பாடம் : 7 அபூஅம்ர் உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ (ரலி) அவர்களின் சிறப்புகள்56 “ரூமா (என்னும் மதீனாவில் உள்ள சுவை நீர்) கிணற்றை (தூர் வாரி) எவர் தோண்டுகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல உஸ்மான் (ரலி) அவர்கள் அதைத் தோண்டினார்கள். “எவர் வசதியற்ற (தபூக் போருக்கான) படைக்கு வேண்டிய வசதிகளைச் செய்து (தயார்படுத்தித்) தருகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல, உஸ்மான் (ரலி) அவர்கள் அப்படைக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுத்தார்கள்.57
3697. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோர் தம்முடனிருக்க, நபி (ஸல்) அவர்கள் உஹுத் மலைமீது ஏறினார்கள். அது (அவர்களுடன்) நடுங்கியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன்மீது ஓர் இறைத்தூதரும் ஒரு “சித்தீக்'கும் இரு உயிர்த்தியாகிகளும் உள்ளனர்” என்று சொன்னார்கள். (இதைக் கூறியபோது) நபியவர்கள் தமது காலால் மலையை (ஓங்கி) அடித்தார்கள் என எண்ணுகிறேன்.61


அத்தியாயம் : 62
3698. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عُثْمَانُ ـ هُوَ ابْنُ مَوْهَبٍ ـ قَالَ جَاءَ رَجُلٌ مَنْ أَهْلِ مِصْرَ حَجَّ الْبَيْتَ فَرَأَى قَوْمًا جُلُوسًا، فَقَالَ مَنْ هَؤُلاَءِ الْقَوْمُ قَالَ هَؤُلاَءِ قُرَيْشٌ. قَالَ فَمَنِ الشَّيْخُ فِيهِمْ قَالُوا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ. قَالَ يَا ابْنَ عُمَرَ إِنِّي سَائِلُكَ عَنْ شَىْءٍ فَحَدِّثْنِي هَلْ تَعْلَمُ أَنَّ عُثْمَانَ فَرَّ يَوْمَ أُحُدٍ قَالَ نَعَمْ. قَالَ تَعْلَمُ أَنَّهُ تَغَيَّبَ عَنْ بَدْرٍ وَلَمْ يَشْهَدْ قَالَ نَعَمْ. قَالَ تَعْلَمُ أَنَّهُ تَغَيَّبَ عَنْ بَيْعَةِ الرُّضْوَانِ فَلَمْ يَشْهَدْهَا قَالَ نَعَمْ. قَالَ اللَّهُ أَكْبَرُ. قَالَ ابْنُ عُمَرَ تَعَالَ أُبَيِّنْ لَكَ أَمَّا فِرَارُهُ يَوْمَ أُحُدٍ فَأَشْهَدُ أَنَّ اللَّهَ عَفَا عَنْهُ وَغَفَرَ لَهُ، وَأَمَّا تَغَيُّبُهُ عَنْ بَدْرٍ، فَإِنَّهُ كَانَتْ تَحْتَهُ بِنْتُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَتْ مَرِيضَةً، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ لَكَ أَجْرَ رَجُلٍ مِمَّنْ شَهِدَ بَدْرًا وَسَهْمَهُ "". وَأَمَّا تَغَيُّبُهُ عَنْ بَيْعَةِ الرُّضْوَانِ فَلَوْ كَانَ أَحَدٌ أَعَزَّ بِبَطْنِ مَكَّةَ مِنْ عُثْمَانَ لَبَعَثَهُ مَكَانَهُ فَبَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عُثْمَانَ وَكَانَتْ بَيْعَةُ الرُّضْوَانِ بَعْدَ مَا ذَهَبَ عُثْمَانُ إِلَى مَكَّةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ الْيُمْنَى "" هَذِهِ يَدُ عُثْمَانَ "". فَضَرَبَ بِهَا عَلَى يَدِهِ، فَقَالَ "" هَذِهِ لِعُثْمَانَ "". فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ اذْهَبْ بِهَا الآنَ مَعَكَ.
பாடம் : 7 அபூஅம்ர் உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ (ரலி) அவர்களின் சிறப்புகள்56 “ரூமா (என்னும் மதீனாவில் உள்ள சுவை நீர்) கிணற்றை (தூர் வாரி) எவர் தோண்டுகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல உஸ்மான் (ரலி) அவர்கள் அதைத் தோண்டினார்கள். “எவர் வசதியற்ற (தபூக் போருக்கான) படைக்கு வேண்டிய வசதிகளைச் செய்து (தயார்படுத்தித்) தருகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல, உஸ்மான் (ரலி) அவர்கள் அப்படைக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுத்தார்கள்.57
3698. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்குச் சமமாக எவரையும் கருதுவதில்லை. பிறகு உமர் (ரலி) அவர்களையும் அவர்களுக்குப் பிறகு உஸ்மான் (ரலி) அவர்களையும் (சிறந்தவர்களாகக் கருதிவந்தோம்.) பிறகு (மீதமுள்ள) நபி (ஸல்) அவர்களின் தோழர்களிடையே ஏற்றத்தாழ்வு பாராட்டாமல் விட்டுவிட்டோம்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 62
3699. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسًا ـ رضى الله عنه ـ حَدَّثَهُمْ قَالَ صَعِدَ النَّبِيُّ صلى الله عليه وسلم أُحُدًا، وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ، فَرَجَفَ وَقَالَ "" اسْكُنْ أُحُدُ ـ أَظُنُّهُ ضَرَبَهُ بِرِجْلِهِ ـ فَلَيْسَ عَلَيْكَ إِلاَّ نَبِيٌّ وَصِدِّيقٌ وَشَهِيدَانِ "".
பாடம் : 7 அபூஅம்ர் உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ (ரலி) அவர்களின் சிறப்புகள்56 “ரூமா (என்னும் மதீனாவில் உள்ள சுவை நீர்) கிணற்றை (தூர் வாரி) எவர் தோண்டுகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல உஸ்மான் (ரலி) அவர்கள் அதைத் தோண்டினார்கள். “எவர் வசதியற்ற (தபூக் போருக்கான) படைக்கு வேண்டிய வசதிகளைச் செய்து (தயார்படுத்தித்) தருகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல, உஸ்மான் (ரலி) அவர்கள் அப்படைக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுத்தார்கள்.57
3699. உஸ்மான் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எகிப்துவாசியான ஒரு மனிதர் வந்து, (கஅபா) இறையில்லத்தில் ஹஜ் செய்தார். அப்போது ஒரு கூட்டம் (அங்கே) அமர்ந்திருப்பதைக் கண்டு, “இந்தக் கூட்டத்தார் யார்?” என்று கேட்டார். மக்கள், “இவர்கள் குறைஷியர்” என்று கூறினர். அவர், “இவர்களில் முதிர்ந்த அறிஞர் யார்?” என்று கேட்டார். மக்கள், “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்” என்று பதிலளித்தனர்.

உடனே அவர், (அங்கிருந்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர் களை நோக்கி) “இப்னு உமர் அவர்களே! நான் உங்களிடம் ஒரு விஷயம் பற்றிக் கேட்கிறேன். நீங்கள் எனக்கு அதைப் பற்றி (பதில்) சொல்லுங்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் உஹுத் போரின்போது (போர்க்களத்திலிருந்து) வெருண் டோடியதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (அறிவேன்)” என்று பதிலளித்தார்கள். அவர், “உஸ்மான் அவர்கள், பத்ர் போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (தெரியும்)” என்று பதிலளித்தார்கள்.

அந்த மனிதர், “அவர் ஹுதைபியாவில் நடந்த “பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாணத்திலும் கலந்துகொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?”62 என்று கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (தெரியும்)” என்று பதிலளித்தார்கள். (இவற்றைக் கேட்டுவிட்டு) அந்த மனிதர், (உஸ்மான் (ரலி) அவர்கள், தாம் நினைத்திருந்ததைப் போன்றே இவ்வளவு குறைகளையும் கொண்டவர்கள்தான் என்று தொனிக்கும் படி) “அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னார்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், “வா! (இவற்றிலெல்லாம் உஸ்மான் (ரலி) அவர்கள் ஏன் பங்கு பெறவில்லை யென்று) உமக்கு நான் விளக்குகிறேன். அவர்கள் உஹுத் போரின்போது வெருண்டோடிய சம்பவம் சம்பந்தமாக அல்லாஹ் அவரது பிழையைப் பொறுத்து அவருக்கு மன்னிப்பளித்து விட்டான் என்று நானே சாட்சியம் கூறுகின்றேன்.63

பத்ர் போரில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகள் (ருகய்யா-ரலி) உஸ்மான் அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (அவர்கள்) நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களிடம், “பத்ர்' போரில் கலந்துகொண்ட ஒரு மனிதருக்குரிய (மறுமைப்) பலனும் (போர்ச் செல்வத்தில்) அவரது பங்கும் உங்களுக்குக் கிடைக்கும் (நீங்கள் உங்கள் மனைவியைக் கவனியுங்கள்)' என்று சொன்னார்கள். (எனவேதான், அவர்கள் அதில் கலந்துகொள்ள முடியவில்லை.)

“பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், உஸ்மான் (ரலி) அவர்களைவிடக் கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) இருந்திருந்தால் உஸ்மான் (ரலி) அவர்களுக்குப் பதிலாக அவரை நபி (ஸல்) அவர்கள் (குறைஷியரிடம் பேச மக்காவிற்குத் தம் தூதுவராக) அனுப்பியிருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை;)

எனவேதான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸ்மானை அனுப்பினார்கள். மேலும், இந்தச் சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான் (ரலி) அவர்கள் மக்காவிற்குப் போன பின்புதான் நடைபெற்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வலக் கையைச் சுட்டிக்காட்டி, “இது உஸ்மானுடைய கை' என்று சொல்லி அதைத் தம் (இடக்) கையின் மீது தட்டி னார்கள்.

பிறகு “(இப்போது நான் செய்த) இந்த சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்' என்று சொன்னார்கள்' என (இப்னு உமர் (ரலி) அவர்கள்) கூறிவிட்டு, (உஸ்மான் (ரலி) அவர்களைப் பற்றித் தாழ்வாக எண்ணிவைத்திருந்த) அந்த மனிதரிடம், “நான் சொன்ன இந்தப் பதில்களை எடுத்துக்கொண்டு இப்போது நீர் போகலாம்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 62