3516. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَعْقُوبَ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ الأَقْرَعَ بْنَ حَابِسٍ، قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّمَا بَايَعَكَ سُرَّاقُ الْحَجِيجِ مِنْ أَسْلَمَ وَغِفَارَ وَمُزَيْنَةَ ـ وَأَحْسِبُهُ وَجُهَيْنَةَ ابْنُ أَبِي يَعْقُوبَ شَكَّ ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَرَأَيْتَ إِنْ كَانَ أَسْلَمُ وَغِفَارُ وَمُزَيْنَةُ ـ وَأَحْسِبُهُ ـ وَجُهَيْنَةُ خَيْرًا مِنْ بَنِي تَمِيمٍ وَبَنِي عَامِرٍ وَأَسَدٍ وَغَطَفَانَ، خَابُوا وَخَسِرُوا "". قَالَ نَعَمْ. قَالَ "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنَّهُمْ لَخَيْرٌ مِنْهُمْ "".
பாடம் : 6
அஸ்லம், ஃகிஃபார், முஸைனா, ஜுஹைனா, அஷ்ஜஉ ஆகிய குலத் தார்24
3516. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “தங்களிடம் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக) உறுதிமொழி கொடுத்தவர்கள் எல்லாம் ஹஜ் செய்ய வருபவர்களிடம் திருடியவர் களான அஸ்லம், ஃகிஃபார் மற்றும் முஸைனா குலங்களைச் சேர்ந்தவர்கள் தான்” என்று கூறினார்கள்.
-றமற்றும் ஜுஹைனா குலத்தைச் சேர்ந்தவர்களும்' என்றும் (நபியவர்கள் கூறியதாக) அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரா அறிவித்தார் என்று மற்றோர் அறிவிப்பாளரான முஹம்மத் பின் அபீயஅகூப் சந்தேகத் துடன் கூறுகிறார்-
நபி (ஸல்) அவர்கள், “பனூ தமீம், பனூ ஆமிர், பனூ அசத், மற்றும் பனூ ஃகத்ஃபான் ஆகிய குலங்களைவிட அஸ்லம், ஃகிஃபார், மற்றும் முஸைனா குலத்தார் சிறந்தவர்கள் அல்லவா? அவர்கள் நஷ்டமும் இழப்பும் அடைந்து விட்டார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள், “என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! (அஸ்லம், ஃகிஃபார், முஸைனா மற்றும் ஜுஹைனா ஆகிய குலத்தாரான) இவர்கள் (பனூ தமீம், பனூ ஆமிர், பனூ அசத் மற்றும் பனூ ஃகத்ஃபான் ஆகிய) அவர்களைவிடச் சிறந்தவர்களே” என்று சொன்னார்கள்.
-(அஸ்லம், ஃகிஃபார், முஸைனா குலத்தாருடன்) ஜுஹைனா குலத்தாரையும் சேர்த்துக் குறிப்பிட்டதாக நினைக்கிறேன் என அறிவிப்பாளர் முஹம்மத் பின் அபீயஅகூப் (ரஹ்) கூறுகிறார்-27
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அஸ்லம், ஃகிஃபார் ஆகிய குலங்களும் முஸைனா, ஜுஹைனா ஆகிய குலங் களில் சிலரும்- அல்லது ஜுஹைனா அல்லது முஸைனா ஆகிய குலங்களில் சிலரும்28 அல்லாஹ்விடத்தில்- அல்லது மறுமை நாளில்-29 அசத், தமீம், ஹவாஸின் மற்றும் ஃகத்ஃபான் ஆகிய குலங்களை விடச் சிறந்தவர்கள்.30
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 61

3517. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ رَجُلٌ مِنْ قَحْطَانَ يَسُوقُ النَّاسَ بِعَصَاهُ "".
பாடம் : 7
யிகஹ்த்தான்' குலத்தார்31
3517. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கஹ்த்தான் குலத்திலிருந்து ஒரு மனிதர் தோன்றி, தமது கைத்தடியால் மக்களை வழிநடத்தாத வரை யுக முடிவு நாள் வராது.32
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 61
3517. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கஹ்த்தான் குலத்திலிருந்து ஒரு மனிதர் தோன்றி, தமது கைத்தடியால் மக்களை வழிநடத்தாத வரை யுக முடிவு நாள் வராது.32
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 61
3518. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ جَابِرًا ـ رضى الله عنه ـ يَقُولُ غَزَوْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَدْ ثَابَ مَعَهُ نَاسٌ مِنَ الْمُهَاجِرِينَ حَتَّى كَثُرُوا، وَكَانَ مِنَ الْمُهَاجِرِينَ رَجُلٌ لَعَّابٌ فَكَسَعَ أَنْصَارِيًّا، فَغَضِبَ الأَنْصَارِيُّ غَضَبًا شَدِيدًا، حَتَّى تَدَاعَوْا، وَقَالَ الأَنْصَارِيُّ يَا لَلأَنْصَارِ. وَقَالَ الْمُهَاجِرِيُّ يَا لَلْمُهَاجِرِينَ. فَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" مَا بَالُ دَعْوَى أَهْلِ الْجَاهِلِيَّةِ "". ثُمَّ قَالَ "" مَا شَأْنُهُمْ "". فَأُخْبِرَ بِكَسْعَةِ الْمُهَاجِرِيِّ الأَنْصَارِيَّ قَالَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" دَعُوهَا فَإِنَّهَا خَبِيثَةٌ "". وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ ابْنُ سَلُولَ أَقَدْ تَدَاعَوْا عَلَيْنَا، لَئِنْ رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ لَيُخْرِجَنَّ الأَعَزُّ مِنْهَا الأَذَلَّ. فَقَالَ عُمَرُ أَلاَ نَقْتُلُ يَا رَسُولَ اللَّهِ هَذَا الْخَبِيثَ لِعَبْدِ اللَّهِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يَتَحَدَّثُ النَّاسُ أَنَّهُ كَانَ يَقْتُلُ أَصْحَابَهُ "".
பாடம் : 8
அறியாமைக் கால (மாச்சரியங் களுக்கு) அழைப்பு விடுப்பது தடை செய்யப்பட்டதாகும்.33
3518. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (பனுல் முஸ்த்தலிக்) அறப்போருக்குச் சென்றோம். நபியவர்களுடன் முஹாஜிர்கள் ஒருவர் இருவராகப் புறப்பட்டு நிறையப் பேராகிவிட்டனர். முஹாஜிர்களிடையே விளையாட்டுக் காட்டும் ஒருவர் இருந்தார். அவர் அன்சாரி ஒருவரின் புட்டத்தில் (விளையாட்டாக) அடித்துவிட்டார்.34
ஆகவே, அந்த அன்சாரி கடுங்கோபம் அடைந்தார். (தகராறு முற்றி) இருவரும் தத்தம் குலத்தாரை உதவிக்கு அழைத்தார்கள். அன்சாரி, “அன்சாரிகளே!” என்றழைத்தார். முஹாஜிர், “முஹாஜிர் களே!” என்றழைத்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து, “அறியாமைக் கால மக்களின் அழைப்பு இங்கே கேட்கிறதே, ஏன்?” என்று கேட்டு விட்டு, “அவ்விருவரின் விவகாரம் என்ன?” என்று கேட்டார்கள். முஹாஜிர், அன்சாரியைப் புட்டத்தில் அடித்தது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்த அறியாமைக் கால அழைப்பைக் கை விடுங்கள். இது அருவருப்பானது” என்று சொன்னார்கள். (நயவஞ்சகர்களின் தலைவரான) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல், “நமக்கெதிராக (இந்த அகதி களான முஹாஜிர்கள் தம் குலத்தாரிடம்) உதவி கேட்டு அழைத்தார்களா? நாம் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால் வலிமையுள்ளவர்கள் நகரத்திலிருந்து இழிந்தவர்களை வெளியேற்றிவிடுவார் கள்” என்று (விஷமமாகச்) சொன்னார்.
உடனே உமர் (ரலி) அவர்கள், “இந்தத் தீயவரை நாம் கொன்றுவிட வேண்டாமா? அல்லாஹ்வின் தூதரே!” என்று அப்துல்லாஹ் பின் உபையைக் குறித்துக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அவரைக்) கொல்ல வேண்டாம். மக்கள், “முஹம்மத் தம் தோழர்களைக்கூட கொல் கிறார்' என்று பேசுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

3519. حَدَّثَنِي ثَابِتُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَعَنْ سُفْيَانَ، عَنْ زُبَيْدٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ، وَشَقَّ الْجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ "".
பாடம் : 8
அறியாமைக் கால (மாச்சரியங் களுக்கு) அழைப்பு விடுப்பது தடை செய்யப்பட்டதாகும்.33
3519. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(துக்கத்தில்) கன்னங்களில் அறைந்துகொள்பவனும் சட்டைப் பைகளைக் கிழித்துக்கொள்பவனும் அறியாமைக் கால அழைப்பு விடுப்பவனும் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்லர்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.35
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

3520. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" عَمْرُو بْنُ لُحَىِّ بْنِ قَمَعَةَ بْنِ خِنْدِفَ أَبُو خُزَاعَةَ "".
பாடம் : 9
யிகுஸாஆ' குலத்தின் சரிதை
3520. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அம்ர் பின் லுஹை பின் கம்ஆ பின் கின்திஃப் என்பார்தான் குஸாஆ குலத்தாரின் தந்தையாவார்.36
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 61
3520. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அம்ர் பின் லுஹை பின் கம்ஆ பின் கின்திஃப் என்பார்தான் குஸாஆ குலத்தாரின் தந்தையாவார்.36
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 61
3521. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، قَالَ الْبَحِيرَةُ الَّتِي يُمْنَعُ دَرُّهَا لِلطَّوَاغِيتِ وَلاَ يَحْلُبُهَا أَحَدٌ مِنَ النَّاسِ، وَالسَّائِبَةُ الَّتِي كَانُوا يُسَيِّبُونَهَا لآلِهَتِهِمْ فَلاَ يُحْمَلُ عَلَيْهَا شَىْءٌ. قَالَ وَقَالَ أَبُو هُرَيْرَةَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" رَأَيْتُ عَمْرَو بْنَ عَامِرِ بْنِ لُحَىٍّ الْخُزَاعِيَّ يَجُرُّ قُصْبَهُ فِي النَّارِ، وَكَانَ أَوَّلَ مَنْ سَيَّبَ السَّوَائِبَ "".
பாடம் : 9
யிகுஸாஆ' குலத்தின் சரிதை
3521. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“அல்பஹீரா' என்பது (ஒட்டகங்களில்) எதனுடைய பாலை(க் கறக்கலாகாது என்று) ஷைத்தான்களுக்காகத் தடை செய்யப்பட்டு விடுமோ அந்த ஒட்டக(த்தின் நாம)மாகும். அதன் பாலை மக்களில் எவருமே கறக்க மாட்டார்கள். “சாயிபா' என்பது அரபியர் தங்கள் கடவுள்களுக்காக (நேர்ச்சை செய்து) மேயவிட்ட ஒட்டகமாகும். ஆகவே, அதன்மீது சுமை எதுவும் ஏற்றப்படாது.
மேலும், நபி (ஸல்) அவர்கள், “குஸாஆ குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் ஆமிர் பின் லுஹை என்பவர், நரகத்தில் தமது குடலை இழுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்ததைக் கண்டேன். அவர்தான் முதன்முதலில் “சாயிபா' ஒட்டகங்களை (சிலைகளுக்காக) நேர்ந்து (மேய்ந்துகொண்டிருக்கும்படி) விட்டவர்” என்று கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

3522. حَدَّثَنَا زَيْدٌ ـ هُوَ ابْنُ أَخْزَمَ ـ قَالَ أَبُو قُتَيْبَةَ سَلْمُ بْنُ قُتَيْبَةَ حَدَّثَنِي مُثَنَّى بْنُ سَعِيدٍ الْقَصِيرُ، قَالَ حَدَّثَنِي أَبُو جَمْرَةَ، قَالَ لَنَا ابْنُ عَبَّاسِ أَلاَ أُخْبِرُكُمْ بِإِسْلاَمِ أَبِي ذَرٍّ، قَالَ قُلْنَا بَلَى. قَالَ قَالَ أَبُو ذَرٍّ كُنْتُ رَجُلاً مِنْ غِفَارٍ، فَبَلَغَنَا أَنَّ رَجُلاً قَدْ خَرَجَ بِمَكَّةَ، يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ، فَقُلْتُ لأَخِي انْطَلِقْ إِلَى هَذَا الرَّجُلِ كَلِّمْهُ وَأْتِنِي بِخَبَرِهِ. فَانْطَلَقَ فَلَقِيَهُ، ثُمَّ رَجَعَ فَقُلْتُ مَا عِنْدَكَ فَقَالَ وَاللَّهِ لَقَدْ رَأَيْتُ رَجُلاً يَأْمُرُ بِالْخَيْرِ وَيَنْهَى عَنِ الشَّرِّ. فَقُلْتُ لَهُ لَمْ تَشْفِنِي مِنَ الْخَبَرِ. فَأَخَذْتُ جِرَابًا وَعَصًا، ثُمَّ أَقْبَلْتُ إِلَى مَكَّةَ فَجَعَلْتُ لاَ أَعْرِفُهُ، وَأَكْرَهُ أَنْ أَسْأَلَ عَنْهُ، وَأَشْرَبُ مِنْ مَاءِ زَمْزَمَ وَأَكُونُ فِي الْمَسْجِدِ. قَالَ فَمَرَّ بِي عَلِيٌّ فَقَالَ كَأَنَّ الرَّجُلَ غَرِيبٌ. قَالَ قُلْتُ نَعَمْ. قَالَ فَانْطَلِقْ إِلَى الْمَنْزِلِ. قَالَ فَانْطَلَقْتُ مَعَهُ لاَ يَسْأَلُنِي عَنْ شَىْءٍ، وَلاَ أُخْبِرُهُ، فَلَمَّا أَصْبَحْتُ غَدَوْتُ إِلَى الْمَسْجِدِ لأَسْأَلَ عَنْهُ، وَلَيْسَ أَحَدٌ يُخْبِرُنِي عَنْهُ بِشَىْءٍ. قَالَ فَمَرَّ بِي عَلِيٌّ فَقَالَ أَمَا نَالَ لِلرَّجُلِ يَعْرِفُ مَنْزِلَهُ بَعْدُ قَالَ قُلْتُ لاَ. قَالَ انْطَلِقْ مَعِي. قَالَ فَقَالَ مَا أَمْرُكَ وَمَا أَقْدَمَكَ هَذِهِ الْبَلْدَةَ قَالَ قُلْتُ لَهُ إِنْ كَتَمْتَ عَلَىَّ أَخْبَرْتُكَ. قَالَ فَإِنِّي أَفْعَلُ. قَالَ قُلْتُ لَهُ بَلَغَنَا أَنَّهُ قَدْ خَرَجَ هَا هُنَا رَجُلٌ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ، فَأَرْسَلْتُ أَخِي لِيُكَلِّمَهُ فَرَجَعَ وَلَمْ يَشْفِنِي مِنَ الْخَبَرِ، فَأَرَدْتُ أَنْ أَلْقَاهُ. فَقَالَ لَهُ أَمَا إِنَّكَ قَدْ رَشَدْتَ، هَذَا وَجْهِي إِلَيْهِ، فَاتَّبِعْنِي، ادْخُلْ حَيْثُ أَدْخُلُ، فَإِنِّي إِنْ رَأَيْتُ أَحَدًا أَخَافُهُ عَلَيْكَ، قُمْتُ إِلَى الْحَائِطِ، كَأَنِّي أُصْلِحُ نَعْلِي، وَامْضِ أَنْتَ، فَمَضَى وَمَضَيْتُ مَعَهُ، حَتَّى دَخَلَ وَدَخَلْتُ مَعَهُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقُلْتُ لَهُ اعْرِضْ عَلَىَّ الإِسْلاَمَ. فَعَرَضَهُ فَأَسْلَمْتُ مَكَانِي، فَقَالَ لِي "" يَا أَبَا ذَرٍّ اكْتُمْ هَذَا الأَمْرَ، وَارْجِعْ إِلَى بَلَدِكَ، فَإِذَا بَلَغَكَ ظُهُورُنَا فَأَقْبِلْ "". فَقُلْتُ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لأَصْرُخَنَّ بِهَا بَيْنَ أَظْهُرِهِمْ. فَجَاءَ إِلَى الْمَسْجِدِ، وَقُرَيْشٌ فِيهِ فَقَالَ يَا مَعْشَرَ قُرَيْشٍ، إِنِّي أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ. فَقَالُوا قُومُوا إِلَى هَذَا الصَّابِئِ. فَقَامُوا فَضُرِبْتُ لأَمُوتَ فَأَدْرَكَنِي الْعَبَّاسُ، فَأَكَبَّ عَلَىَّ ثُمَّ أَقْبَلَ عَلَيْهِمْ، فَقَالَ وَيْلَكُمْ تَقْتُلُونَ رَجُلاً مِنْ غِفَارَ، وَمَتْجَرُكُمْ وَمَمَرُّكُمْ عَلَى غِفَارَ. فَأَقْلَعُوا عَنِّي، فَلَمَّا أَنْ أَصْبَحْتُ الْغَدَ رَجَعْتُ فَقُلْتُ مِثْلَ مَا قُلْتُ بِالأَمْسِ، فَقَالُوا قُومُوا إِلَى هَذَا الصَّابِئِ. فَصُنِعَ {بِي} مِثْلَ مَا صُنِعَ بِالأَمْسِ وَأَدْرَكَنِي الْعَبَّاسُ فَأَكَبَّ عَلَىَّ، وَقَالَ مِثْلَ مَقَالَتِهِ بِالأَمْسِ. قَالَ فَكَانَ هَذَا أَوَّلَ إِسْلاَمِ أَبِي ذَرٍّ رَحِمَهُ اللَّهُ.
பாடம் : 10
அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி37
பாடம் : 11
ஸம்ஸம் (கிணற்றின்) சரிதை
3522. அபூஜம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எங்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அபூதர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய விதம் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்க, நாங்கள், “சரி (அறிவியுங் கள்)” என்றோம். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
அபூதர் (ரலி) அவர்கள் (என்னிடம்) சொன்னார்கள்: நான் ஃகிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாக இருந்தேன். அப்போது “ஒரு மனிதர் தம்மை நபி என்று வாதிட்டபடி மக்கா நகரில் புறப்பட்டிருக்கிறார்' என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. ஆகவே, நான் என் சகோதரர் (அனீஸ்) இடம், “நீ இந்த மனிதரிடம் போய்ப் பேசி அவரது செய்தியை (அறிந்து) என்னிடம் கொண்டுவா” என்று சொன்னேன்.
அவ்வாறே அவர் சென்று அவரைச் சந்தித்துப் பிறகு திரும்பி வந்தார். நான், “உன்னிடம் என்ன செய்தி உண்டு?' என்று கேட்டேன். “நன்மை புரியும்படி கட்டளை யிடவும் தீமையிலிருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கின்ற ஒரு மனிதராக நான் அவரைக் கண்டேன்” என்றார். நான் அவரிடம், “போதிய செய்தியை எனக்கு நீ கொண்டுவரவில்லை' என்று கூறினேன். பிறகு தோலால் ஆன (தண்ணீர்) பையையும் கைத் தடியையும் எடுத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றேன்.
அவரை நான் (தேடி வந்திருப்பதாகக்) காட்டிக்கொள்ளாமலிருக்கத் தொடங்கி னேன். அவரைப் பற்றி விசாரிக்கவும் நான் விரும்பவில்லை. (வேறு உணவு இல்லாத தால்) ஸம்ஸம் தண்ணீரைக் குடித்துக் கொண்டு இறையில்லத்தில் (தங்கி) இருந்தேன். அப்போது அலீ (ரலி) அவர்கள் (கஅபாவில்) என்னைக் கடந்து சென்றார்கள். (என்னைக் கண்டதும்), “ஆள் (ஊருக்குப்) புதியவர் போலத் தெரிகிறதே” என்று கேட்டார்கள். நான், “ஆம்” என்றேன். உடனே அவர்கள், “அப்படியென்றால் (நம்) வீட்டிற்கு நடங்கள் (போகலாம்)” என்று சொன்னார்கள்.
நான் அவர்களுடன் எதைப் பற்றியும் கேட்காமலும் (எதையும்) அவர்களுக்குத் தெரிவிக்காமலும் சென்றேன். காலையானதும் நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றேன். ஆனால், (அங்கு) ஒருவரும் அவர்களைப் பற்றி எதையும் எனக்குத் தெரிவிக்கவில்லை. அப்போது அலீ(ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். “மனிதர் (தாம் தங்க வேண்டிய) தமது வீட்டை அடையாளம் தெரிந்துகொள்ளும் நேரம் இன்னும் வரவில்லையா?” என்று (சாடையாகக்) கேட்டார்கள். நான், “இல்லை” என்றேன்.
உடனே அலீ (ரலி) அவர்கள், “என்னுடன் நடங்கள்” என்று சொல்லிவிட்டு, “உங்கள் விவகாரம் என்ன? இந்த ஊருக்கு எதற்காக வந்தீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, “நான் சொல்வதைப் பிறருக்குத் தெரியாமல் நீங்கள் மறைப்ப தாயிருந்தால் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “அவ்வாறே செய்கிறேன்” என்று சொன்னார்கள். நான் அப்போது “இங்கே தம்மை இறைத்தூதர் என்று வாதிட்டபடி ஒரு மனிதர் புறப்பட்டிருக்கிறார்' என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. ஆகவே, நான் என் சகோதரரை அவரிடம் பேசும்படி அனுப்பி னேன். போதிய பதிலை என்னிடம் அவர் கொண்டுவரவில்லை. ஆகவே, நான் அவரை (நேரடியாகச்) சந்திக்க விரும்பி னேன்” என்று சொன்னேன்.
அதற்கு அவர்கள், “நீங்கள் நேரான வழியை அடைந்துள்ளீர்கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம். ஆகவே, என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்கள் நுழையுங்கள். ஏனெனில், (என்னுடன் வருவதால்) இவனால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் அஞ்சுகின்ற ஒருவனைக் காண்பேனாயின், என் செருப்பைச் சரி செய்வதைப் போல் சுவரோரமாக நான் நின்று கொள்வேன். நீங்கள் போய்க்கொண்டிருங்கள்” என்று சொன்னார்கள்.
இறுதியில் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, நானும் அவர்களுடன் உள்ளே சென்றேன். நான் நபி (ஸல்) அவர்களிடம், “எனக்கு இஸ்லாத்தை எடுத்துரையுங்கள்” என்று சொன்னேன். அவர்கள் அதை எடுத்துரைத்தார்கள். நான் இருந்த அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்.
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அபூதர்ரே! (நீ இஸ்லாத்தை ஏற்ற) இந்த விஷயத்தை மறைத்துவைப்பீராக. உமது ஊருக்குத் திரும்பிச் செல்வீராக. நாங்கள் மேலோங்கிவிட்ட செய்தி உமக்கு எட்டும் போது எங்களை நோக்கி வருவீராக” என்று சொன்னார்கள். அதற்கு நான், “உங்களைச் சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் இதை (ஏகத்துவக் கொள்கையை) அவர்களுக் கிடையே உரக்கச் சொல்வேன்” என்று சொல்லிவிட்டு, இறையில்லத்திற்கு வந்தேன். அப்போது குறைஷியர் அங்கே இருந்தனர்.
நான், “குறைஷி குலத்தாரே! “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை' என்று நான் உறுதி கூறுகின்றேன். “முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும் நான் உறுதி கூறுகின் றேன்” என்று சொன்னேன். உடனே அவர்கள், “இந்த மதம் மாறி(ய துரோகி)யை எழுந்து சென்று கவனியுங்கள்” என்று சொன்னார்கள். அவர்கள் எழுந்து வந்தார்கள். என் உயிர் போவது போல் நான் அடிக்கப்பட்டேன்.
அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னை அடையாளம் புரிந்துகொண்டு என்மீது கவிழ்ந்து (அடிபடாமல் பார்த்துக்)கொண்டார்கள். பிறகு குறைஷியரை நோக்கி, “உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! ஃகிஃபார் குலத்தைச் சேர்ந்த மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும் நீங்கள் (வாணிபத்திற்காகக்) கடந்து செல்ல வேண்டிய பாதையும் ஃகிஃபார் குலத்தார் வசிக்கு மிடத்தையொட்டித்தானே உள்ளது! (அவர்கள் பழிவாங்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?)”38 என்று கேட்டார்கள். உடனே அவர்கள் என்னைவிட்டு விலகிவிட்டார்கள்.
மறுநாள் காலை வந்தவுடன் நான் திரும்பிச் சென்று நேற்று சொன்னதைப் போலவே சொன்னேன். அவர்கள், “இந்த மதம் மாறி(ய துரோகி)யை எழுந்து சென்று கவனியுங்கள்” என்று சொன்னார்கள். நேற்று என்னிடம் நடந்துகொண்டதைப் போலவே நடந்துகொண்டார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னைப் புரிந்துகொண்டு என்மீது கவிழ்ந்து (அடிபடாதவாறு பார்த்துக்)கொண்டார்கள். நேற்று அப்பாஸ் அவர்கள் சொன்னதைப் போலவே (இன்றும்) சொன்னார்கள்.
(இதை அறிவித்தபிறகு) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இது அபூதர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்பக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். அல்லாஹ் அபூதர்ருக்கு கருணை காட்டுவானாக!” என்று சொன்னார்கள்.

3523. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ أَسْلَمُ وَغِفَارُ وَشَىْءٌ مِنْ مُزَيْنَةَ وَجُهَيْنَةَ ـ أَوْ قَالَ شَىْءٌ مِنْ جُهَيْنَةَ أَوْ مُزَيْنَةَ ـ خَيْرٌ عِنْدَ اللَّهِ ـ أَوْ قَالَ ـ يَوْمَ الْقِيَامَةِ مِنْ أَسَدٍ وَتَمِيمٍ وَهَوَازِنَ وَغَطَفَانَ.
பாடம் : 12
யிஸம்ஸம்' கிணறும் அரபியரின் அறியாமையும்39
3523. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அஸ்லம் குலத்தாரும், ஃகிஃபார் குலத் தாரும், முஸைனா மற்றும் ஜுஹைனா குலத்தாரில் சிலரும் அசத், தமீம், ஹவாஸின் மற்றும் ஃகத்ஃபான் ஆகிய குலத்தாரைவிட அல்லாஹ்விடம்- அல்லது மறுமை நாளில்- சிறந்தவர்கள் ஆவர்.
-இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், “முஸைனா மற்றும் ஜுஹைனா குலத்தாரில் சிலரும்” என்றும் கூறியிருக்கலாம்; (அதற்குப் பதிலாக) “ஜுஹைனா குலத்தாரில் சிலரும்” என்று மட்டுமோ “முஸைனா குலத்தாரில் சிலரும்” என்று மட்டுமோ கூறியிருக்கலாம் என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.40

3524. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ إِذَا سَرَّكَ أَنْ تَعْلَمَ جَهْلَ الْعَرَبِ فَاقْرَأْ مَا فَوْقَ الثَّلاَثِينَ وَمِائَةٍ فِي سُورَةِ الأَنْعَامِ {قَدْ خَسِرَ الَّذِينَ قَتَلُوا أَوْلاَدَهُمْ سَفَهًا بِغَيْرِ عِلْمٍ} إِلَى قَوْلِهِ {قَدْ ضَلُّوا وَمَا كَانُوا مُهْتَدِينَ}.
பாடம் : 12
யிஸம்ஸம்' கிணறும் அரபியரின் அறியாமையும்39
3524. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அரபுகளின் அறியாமையை அறிந்து கொள்ள உங்களுக்கு விருப்பமென்றால் “அல்அன்ஆம்' (எனும் 6ஆவது) அத்தியாயத்தில் நூற்று முப்பதாவது வசனத்திற்குமேல் ஓதுங்கள். அந்த வசனம் இதுதான்: எவர் அறியாமையாலும் மூடத்தனத்தாலும் தம் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, அல்லாஹ்வின் மீது பழி சுமத்தித் தங்களுக்கு வழங்கியிருந்த வற்றைத் தாமாகவே தடை செய்து கொண்டார்களோ, அவர்கள் நிச்சயமாகப் பேரிழப்புக்கு ஆளாகிவிட்டார்கள். நிச்சயமாக அவர்கள் வழிதவறிப் போய் விட்டார்கள். அவர்கள் நல்வழி பெற்றவர் களாய் இல்லை. (6:140)41

3525. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا نَزَلَتْ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} جَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُنَادِي "" يَا بَنِي فِهْرٍ، يَا بَنِي عَدِيٍّ لِبُطُونِ قُرَيْشٍ "".
பாடம் : 13
அறியாமைக் காலத்திலும் இஸ்லாத்தை ஏற்ற பின்னரும் தம் முன்னோர்களுடன் தம்மை இணைத்துப் பேசுவது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வர்தான் கண்ணியத்திற்குரியவர். அவர், அல்லாஹ்வின் நண்பர் இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக் (அலை) அவர்களின் புதல்வரான யஅகூப் (அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப் (அலை) அவர்களே ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும் இப்னு உமர் (ரலி) அவர்களும் அறிவிக் கிறார்கள்.42
“நான் அப்துல் முத்தலிபின் மகனா வேன்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன் னார்கள் என பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.43
3525. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“(நபியே!) உங்கள் நெருங்கிய உற வினர்களை எச்சரிப்பீராக!” (26:214) எனும் இறைவசனம் அருளப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள், “பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!” என்று குறைஷி யரின் கிளைக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள்.44

3526. وَقَالَ لَنَا قَبِيصَةُ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَمَّا نَزَلَتْ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} جَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدْعُوهُمْ قَبَائِلَ قَبَائِلَ.
பாடம் : 13
அறியாமைக் காலத்திலும் இஸ்லாத்தை ஏற்ற பின்னரும் தம் முன்னோர்களுடன் தம்மை இணைத்துப் பேசுவது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வர்தான் கண்ணியத்திற்குரியவர். அவர், அல்லாஹ்வின் நண்பர் இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக் (அலை) அவர்களின் புதல்வரான யஅகூப் (அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப் (அலை) அவர்களே ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும் இப்னு உமர் (ரலி) அவர்களும் அறிவிக் கிறார்கள்.42
“நான் அப்துல் முத்தலிபின் மகனா வேன்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன் னார்கள் என பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.43
3526. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“(நபியே!) உங்கள் நெருங்கிய உற வினர்களை எச்சரிப்பீராக!” (26:214) எனும் இறைவசனம் அருளப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் குலங்கள் குலங்களாக (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள்.

3527. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، أَخْبَرَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" يَا بَنِي عَبْدِ مَنَافٍ، اشْتَرُوا أَنْفُسَكُمْ مِنَ اللَّهِ، يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ اشْتَرُوا أَنْفُسَكُمْ مِنَ اللَّهِ، يَا أُمَّ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ عَمَّةَ رَسُولِ اللَّهِ، يَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ، اشْتَرِيَا أَنْفُسَكُمَا مِنَ اللَّهِ، لاَ أَمْلِكُ لَكُمَا مِنَ اللَّهِ شَيْئًا، سَلاَنِي مِنْ مَالِي مَا شِئْتُمَا "".
பாடம் : 13
அறியாமைக் காலத்திலும் இஸ்லாத்தை ஏற்ற பின்னரும் தம் முன்னோர்களுடன் தம்மை இணைத்துப் பேசுவது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வர்தான் கண்ணியத்திற்குரியவர். அவர், அல்லாஹ்வின் நண்பர் இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக் (அலை) அவர்களின் புதல்வரான யஅகூப் (அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப் (அலை) அவர்களே ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும் இப்னு உமர் (ரலி) அவர்களும் அறிவிக் கிறார்கள்.42
“நான் அப்துல் முத்தலிபின் மகனா வேன்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன் னார்கள் என பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.43
3527. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்.45 அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து விலைக்கு வாங்கிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தூதருடைய அத்தையான ஸுபைர் பின் அல்அவ்வாமின் தாயாரே!46 முஹம்மதின் மகளான ஃபாத்திமாவே! நீங்கள் இருவரும் உங்களை அல்லாஹ் விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். நான் உங்கள் இருவருக்கும் அல்லாஹ்விடமிருந்து எதையும் வாங்கித் தர முடியாது. என் செல்வத்திலிருந்து இருவரும் நீங்கள் விரும்பியதைக் கேளுங் கள். (நான் உங்களுக்குத் தருகிறேன்.)47

3528. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ دَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم الأَنْصَارَ فَقَالَ "" هَلْ فِيكُمْ أَحَدٌ مِنْ غَيْرِكُمْ "". قَالُوا لاَ، إِلاَّ ابْنُ أُخْتٍ لَنَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" ابْنُ أُخْتِ الْقَوْمِ مِنْهُمْ "".
பாடம் : 14
ஒரு சமுதாயத்தாரின் சகோதரி மகன் அவர்களைச் சேர்ந்தவரே. ஒரு சமுதாயத்தார் விடுதலை செய்த அடிமையும் அவர்களைச் சேர்ந்தவரே!
3528. அனஸ் (ரலி) அவர்கள் கூறி னார்கள்:
(ஏதோ பேசுவதற்காக ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளை(த் தனியாக) அழைத்தார்கள். (அவர்கள் வந்த) பின்னர், “உங்களிடையே எவரேனும் உங்கள் (கூட்டத்தார்) அல்லாதவர் (இங்கே வந்து) இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள், “எங்கள் சகோதரி ஒருத்தியின் மகனை (நுஅமான் பின் முக்ரினை)த் தவிர வேறெவருமில்லை” என்று பதிலளித்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு சமுதாயத்தாரின் சகோதரி மகன் அவர்களைச் சேர்ந்தவரே” என்று சொன் னார்கள்.

3529. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ فِي أَيَّامِ مِنًى تُدَفِّفَانِ وَتَضْرِبَانِ، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم مُتَغَشٍّ بِثَوْبِهِ، فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ، فَكَشَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ وَجْهِهِ، فَقَالَ " دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ، فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ، وَتِلْكَ الأَيَّامُ أَيَّامُ مِنًى ".
பாடம் : 15
அபிசீனியரின் நிகழ்ச்சியும் நபி (ஸல்) அவர்கள், யிஞீஅர்ஃபிதாவின் மக்களே!” என்று (அபிசீனியரை) அழைத்ததும்48
3529. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர் (ரலி) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் வந்தார்கள். அப்போது இரண்டு சிறுமிகள் என்னிடம் (தஃப் எனப்படும்) சலங்கைகள் இல்லாத கஞ்சிராவைத் தட்டிப் பாடிக்கொண்டிருந்தார்கள். அது, மினாவில் தங்கும் (காலமான துல்ஹிஜ்ஜா 10, 11, 12, 13 ஆகிய) நாட்களில் (ஒன்றாக) இருந்தது. நபி (ஸல்) அவர்கள் (படுக்கை யில் படுத்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டு) தமது துணியால் போர்த்திக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் இரு சிறுமிகளையும் அதட்டினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தமது முகத்திலிருந்து (ஆடையை) நீக்கிவிட்டு, “அவ்விருவரையும் விட்டுவிடுங்கள்; அபூபக்ரே! ஏனெனில், இவை பண்டிகை நாட்கள்” என்று கூறினார்கள். அந்த நாட்கள் மினாவில் தங்கும் நாட்களா யிருந்தன.49

3530. وَقَالَتْ عَائِشَةُ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْتُرُنِي، وَأَنَا أَنْظُرُ إِلَى الْحَبَشَةِ، وَهُمْ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ فَزَجَرَهُمْ {عُمَرُ} فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " دَعْهُمْ أَمْنًا بَنِي أَرْفَدَةَ ". يَعْنِي مِنَ الأَمْنِ.
பாடம் : 15
அபிசீனியரின் நிகழ்ச்சியும் நபி (ஸல்) அவர்கள், யிஞீஅர்ஃபிதாவின் மக்களே!” என்று (அபிசீனியரை) அழைத்ததும்48
3530. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அபிசீனியர், பள்ளிவாசலில் (வீர விளையாட்டுகள்) விளையாடுவதை நான் பார்த்துக்கொண்டிருக்க, நபி (ஸல்) அவர்கள் (அவர்களின் பார்வையிலிருந்து) என்னை மறைப்பதை நான் கண்டேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் அபிசீனியரைக் கண்டித்தார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “உமரே! அவர்களை விட்டுவிடுங்கள்; நீங்கள் அச்சமின்றி இருங்கள், அர்ஃபிதாவின் மக்களே!” என்று சொன்னார்கள்.50

3531. حَدَّثَنِي عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اسْتَأْذَنَ حَسَّانُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي هِجَاءِ الْمُشْرِكِينَ، قَالَ "" كَيْفَ بِنَسَبِي "". فَقَالَ حَسَّانُ لأَسُلَّنَّكَ مِنْهُمْ كَمَا تُسَلُّ الشَّعَرَةُ مِنَ الْعَجِينِ. وَعَنْ أَبِيهِ قَالَ ذَهَبْتُ أَسُبُّ حَسَّانَ عِنْدَ عَائِشَةَ فَقَالَتْ لاَ تَسُبُّهُ فَإِنَّهُ كَانَ يُنَافِحُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 16
ஒருவர், தம்முடைய வமிசம் ஏசப்படக் கூடாது என்று விரும்புவது
3531. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(முஸ்லிம்களுக்கெதிராக இணைவைப்பாளர்கள் வசைக்கவி பாடியபோது) இணைவைப்பாளர்களுக்கெதிராக வசைகவி பாடுவதற்கு நபி (ஸல்) அவர்களிடம் (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் என் வமிசம் (அவர்களு டன் கலந்திருக்க, அவர்களை வசை பாடுவது) எப்படி?” என்று கேட்டார்கள்.
அதற்கு ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், “குழைத்த மாவிலிருந்து முடியை உருவி யெடுப்பதுபோல் தங்களை அவர்களிலிருந்து உருவியெடுத்து (வசையிலிருந்து நீக்கி)விடுவேன்” என்று சொன்னார்கள்.
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நான் ஹஸ்ஸான் (ரலி) அவர்களை ஏசிக்கொண்டே ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன்.51 அவர்கள், “அவரைத் திட்டாதே! ஏனெனில், அவர் (எதிரிகளின் வசைப் பாடல்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து) நபி (ஸல்) அவர்களைப் பாதுகாப்பவராக இருந்தார்” என்று சொன்னார்கள்.

3532. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنِي مَعْنٌ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لِي خَمْسَةُ أَسْمَاءٍ أَنَا مُحَمَّدٌ، وَأَحْمَدُ، وَأَنَا الْمَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِي الْكُفْرَ، وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي، وَأَنَا الْعَاقِبُ "".
பாடம் : 17
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயர்கள் தொடர்பாக வந்துள்ளவை
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் ஆவார். அவருடன் உள்ளோர் இறை மறுப்பாளர்களிடம் கடுமையானவர்களும் தமக்கிடையே கருணை மிக்கவர்களும் ஆவர். (48:29)52
எனக்குப் பின்னர் அஹ்மத் எனும் பெயருடைய (இறைத்தூதர்) ஒருவர் வருவார் (என்று ஈசா கூறினார்). (61:6)53
3532. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் “முஹம்மத்' (புகழப்பட்டவர்) ஆவேன். நான் “அஹ்மத்' (இறைவனை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன். நான் “மாஹீ' (அழிப்பவர்) ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கின்றான். நான் “ஹாஷிர்' (ஒன்று திரட்டுபவர்) ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்றுதிரட்டப்படுவார்கள்.54 நான் “ஆகிப்' (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன்.
இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3533. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَلاَ تَعْجَبُونَ كَيْفَ يَصْرِفُ اللَّهُ عَنِّي شَتْمَ قُرَيْشٍ وَلَعْنَهُمْ يَشْتِمُونَ مُذَمَّمًا وَيَلْعَنُونَ مُذَمَّمًا وَأَنَا مُحَمَّدٌ "".
பாடம் : 17
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயர்கள் தொடர்பாக வந்துள்ளவை
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் ஆவார். அவருடன் உள்ளோர் இறை மறுப்பாளர்களிடம் கடுமையானவர்களும் தமக்கிடையே கருணை மிக்கவர்களும் ஆவர். (48:29)52
எனக்குப் பின்னர் அஹ்மத் எனும் பெயருடைய (இறைத்தூதர்) ஒருவர் வருவார் (என்று ஈசா கூறினார்). (61:6)53
3533. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குறைஷி (இறைமறுப்பாளர்)களின் ஏச்சையும், அவர்களின் சாபத்தையும் என்னைவிட்டு அல்லாஹ் எப்படித் திருப்பிவிடுகிறான் என்பதைக் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? (என்னை) “முதம்மம்' (இகழப்படுவர்)' என்று (சொல்லி) ஏசுகிறார்கள்; “முதம்மம்' என்று (சொல்óயே) சபிக்கிறார்கள். ஆனால், நானோ “முஹம்மத்' (புகழப்படுபவர்) ஆவேன்.55

3534. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا سَلِيمٌ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَثَلِي وَمَثَلُ الأَنْبِيَاءِ كَرَجُلٍ بَنَى دَارًا فَأَكْمَلَهَا وَأَحْسَنَهَا، إِلاَّ مَوْضِعَ لَبِنَةٍ، فَجَعَلَ النَّاسُ يَدْخُلُونَهَا وَيَتَعَجَّبُونَ، وَيَقُولُونَ لَوْلاَ مَوْضِعُ اللَّبِنَةِ "".
பாடம் : 18
நபிமார்களில் இறுதியானவர்56
3534. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது நிலையும் (மற்ற) இறைத்தூதர் களது நிலையும் ஒரு வீட்டைக் கட்டிய மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் அதை, ஒரு செங்கல் அளவுக்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்டு முழுமை யாகவும் அழகாகவும் கட்டி முடித்திருந்தார். மக்கள் அதனுள் நுழைந்து (பார்வையிட்டு விட்டு) வியப்படைந்து, “இந்தச் செங்கல் லின் இடம் மட்டும் (காலியாக) இல்லாதிருந் தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!” என்று கூறலானார்கள்.57
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3535. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ مَثَلِي وَمَثَلَ الأَنْبِيَاءِ مِنْ قَبْلِي كَمَثَلِ رَجُلٍ بَنَى بَيْتًا فَأَحْسَنَهُ وَأَجْمَلَهُ، إِلاَّ مَوْضِعَ لَبِنَةٍ مِنْ زَاوِيَةٍ، فَجَعَلَ النَّاسُ يَطُوفُونَ بِهِ وَيَعْجَبُونَ لَهُ، وَيَقُولُونَ هَلاَّ وُضِعَتْ هَذِهِ اللَّبِنَةُ قَالَ فَأَنَا اللَّبِنَةُ، وَأَنَا خَاتِمُ النَّبِيِّينَ "".
பாடம் : 18
நபிமார்களில் இறுதியானவர்56
3535. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங் கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவுக்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஆச்சரியமடைந்து, “இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?” என்று கேட்கலானார்கள். நான்தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத் தூதர்களில் இறுதி யானவன்.