3366. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ التَّيْمِيُّ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ أَبَا ذَرٍّ ـ رضى الله عنه ـ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَىُّ مَسْجِدٍ وُضِعَ فِي الأَرْضِ أَوَّلُ قَالَ "" الْمَسْجِدُ الْحَرَامُ "". قَالَ قُلْتُ ثُمَّ أَىٌّ قَالَ "" الْمَسْجِدُ الأَقْصَى "". قُلْتُ كَمْ كَانَ بَيْنَهُمَا قَالَ "" أَرْبَعُونَ سَنَةً، ثُمَّ أَيْنَمَا أَدْرَكَتْكَ الصَّلاَةُ بَعْدُ فَصَلِّهْ، فَإِنَّ الْفَضْلَ فِيهِ "".
பாடம் : 10
3366. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘அல் மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா நகரிலுள்ள புனித கஅபா அமைந்திருக்கும்) இறை யில்லம்” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘பிறகு எது?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘(ஜெரூஸலத்தில் உள்ள) அல்மஸ்ஜிதுல் அக்ஸா” என்று பதிலளித்தார்கள்.

நான், ‘‘அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘நாற்பதாண்டுகள்” (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப் பட்டது).40

பிறகு, ‘‘நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில்தான் சிறப்பு உள்ளது” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 60
3367. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، مَوْلَى الْمُطَّلِبِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم طَلَعَ لَهُ أُحُدٌ فَقَالَ "" هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ، اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ، وَإِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ لاَبَتَيْهَا "". رَوَاهُ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 10
3367. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஒரு போரிலிருந்து திரும்பி வரும்போது) உஹுத் மலை தென்பட்டது. அப்போது ‘‘இந்த மலை நம்மை நேசிக் கின்றது; நாம் இதை நேசிக்கின்றோம். இறைவா! இப்ராஹீம் அவர்கள் மக்கா நகரைப் புனிதமானது என்று அறிவித் தார்கள். நான் மதீனாவின் இரு மலைகளுக் கிடையே உள்ளவற்றைப் புனிதமானவை என்று அறிவிக்கிறேன்” என்று சொன் னார்கள்.41


அத்தியாயம் : 60
3368. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ أَبِي بَكْرٍ، أَخْبَرَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنهم ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" أَلَمْ تَرَىْ أَنَّ قَوْمَكِ بَنَوُا الْكَعْبَةَ اقْتَصَرُوا عَنْ قَوَاعِدِ إِبْرَاهِيمَ "". فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَلاَ تَرُدُّهَا عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ. فَقَالَ "" لَوْلاَ حِدْثَانُ قَوْمِكِ بِالْكُفْرِ "". فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ لَئِنْ كَانَتْ عَائِشَةُ سَمِعَتْ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا أُرَى أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَرَكَ اسْتِلاَمَ الرُّكْنَيْنِ اللَّذَيْنِ يَلِيَانِ الْحِجْرَ إِلاَّ أَنَّ الْبَيْتَ لَمْ يُتَمَّمْ عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ. وَقَالَ إِسْمَاعِيلُ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ.
பாடம் : 10
3368. நபி (ஸல்) அவர்களின் துணைவி யாராகிய ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்) கஅபாவை (புதுப்பித்துக்) கட்டியபொழுது இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களைவிடச் சுருக்கி (சற்று உள்ளடக்கி) கட்டியிருப்பதை நீ பார்க்கவில்லையா?” என்று கேட்டார்கள்.

நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களின் மீது அதைத் தாங்கள் மீண்டும் கட்டக் கூடாதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘உன் சமுதாயத்தார் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாக இல்லாதிருந்தால் (அவ்வாறே நான் செய்திருப்பேன்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இதை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கக் கேட்ட) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ‘‘ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இதைக் கேட்டிருந்தால் அது சரியே! ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் (எனும்) வளைந்த பகுதியை அடுத்துள்ள (கஅபா வின்) இரு மூலைகளையும் தொட்டு முத்த மிடாததற்குக் காரணம் இறையில்லமான கஅபா, இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் முழுமையாக அமைக்கப்படாமல் (கொஞ்சம் விட்டு அமைக்கப்பட்டு) இருப்பதே ஆகும் என்றே நான் கருதுகிறேன்” எனக் கூறினார்கள்.42


அத்தியாயம் : 60
3369. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، أَخْبَرَنِي أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ ـ رضى الله عنه ـ أَنَّهُمْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ نُصَلِّي عَلَيْكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ "".
பாடம் : 10
3369. அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்கள்மீது நாங்கள் எப்படி ‘ஸலவாத்’ சொல்வது?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அஸ்வாஜிஹி வ துர்ரியத்திஹி கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம வ பாரிக் அலா முஹம்மதின் வ அஸ்வாஜிஹி வ துர்ரிய்யத்திஹி கமா பாரக்த்த அலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத்” (பொருள்: இறைவா! இப்ராஹீம் அவர்களுடைய குடும்பத்தார்மீது நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல் அவர்கள்மீதும் அவர்களுடைய துணைவியர் மற்றும் அவர்களுடைய சந்ததிகள்மீதும் கருணை புரிவாயாக! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தார்மீது நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும் அவர்களுடைய துணைவியர் மற்றும் அவர்களுடைய சந்ததிகள்மீதும் உன் அருள் வளத்தைப் பொழிவாயாக! நிச்சயம், நீயே புகழுக் குரியவனும் கண்ணியம் நிறைந்தவனும் ஆவாய்) என்று சொல்லுங்கள்” எனப் பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 60
3370. حَدَّثَنَا قَيْسُ بْنُ حَفْصٍ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا أَبُو قُرَّةَ، مُسْلِمُ بْنُ سَالِمٍ الْهَمْدَانِيُّ قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عِيسَى، سَمِعَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى، قَالَ لَقِيَنِي كَعْبُ بْنُ عُجْرَةَ فَقَالَ أَلاَ أُهْدِي لَكَ هَدِيَّةً سَمِعْتُهَا مِنَ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَقُلْتُ بَلَى، فَأَهْدِهَا لِي. فَقَالَ سَأَلْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ الصَّلاَةُ عَلَيْكُمْ أَهْلَ الْبَيْتِ فَإِنَّ اللَّهَ قَدْ عَلَّمَنَا كَيْفَ نُسَلِّمُ. قَالَ "" قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ "".
பாடம் : 10
3370. அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னை கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் சந்தித்து, ‘‘நபி (ஸல்) அவர் களிடமிருந்து நான் செவியுற்ற ஓர் அன்பளிப்பை உனக்கு நான் வழங்கட் டுமா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம், அதை எனக்கு வழங்குங்கள்” என்று பதில் சொன்னேன். உடனே அவர்கள், ‘‘நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், யிதங்கள்மீதும் தங்கள் குடும்பத்தார்மீதும் ஸலவாத் சொல்வது எப்படி? (என்று எங்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.) ஏனெனில், தங்க ளுக்கு நாங்கள் சலாம் சொல்வது எப்படி என்பதை அல்லாஹ் எங்களுக்கு (அத்தஹிய்யாத்தில்) கற்றுக்கொடுத்திருக் கின்றான்” என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹும்ம! ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம் இன்ன(க்)க ஹமீதும் மஜீத்; அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதும் மஜீத்” என்று சொல்லுங்கள் என்று பதிலளித்தார்கள்.

(பொருள்: ‘‘இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள்மீதும் இப்ராஹீம் அவர்களுடைய குடும்பத்தார்மீதும் நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும் முஹம்மதின் குடும்பத்தார்மீதும் கருணை புரிந்திடுவாயாக! நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள்மீதும் இப்ராஹீம் அவர்களுடைய குடும்பத்தார்மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும் முஹம்மதின் குடும்பத்தார்மீதும் உன் அருள்வளத்தைப் பொழிந்திடுவாயாக! நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் மிக்கவனும் ஆவாய்.)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 60
3371. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْمِنْهَالِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعَوِّذُ الْحَسَنَ وَالْحُسَيْنَ وَيَقُولُ "" إِنَّ أَبَاكُمَا كَانَ يُعَوِّذُ بِهَا إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ، أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ "".
பாடம் : 10
3371. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ஹசன் (ரலி) மற்றும் ஹுசைன் (ரலி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். ‘‘அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் குல்லி ஷைத்தானின் வ ஹாம்மத்தின் வ மின் குல்லி ஐனின் லாம்மத்தின்” (பொருள்: ‘‘அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்” எனும் இந்தச் சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தை(யான இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல் (அலை) மற்றும் இஸ்ஹாக் (அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரிவந்தார்கள் என்று கூறுவார்கள்.

அத்தியாயம் : 60
3372. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" نَحْنُ أَحَقُّ مِنْ إِبْرَاهِيمَ إِذْ قَالَ {رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي} وَيَرْحَمُ اللَّهُ لُوطًا، لَقَدْ كَانَ يَأْوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ وَلَوْ لَبِثْتُ فِي السِّجْنِ طُولَ مَا لَبِثَ يُوسُفُ لأَجَبْتُ الدَّاعِيَ "".
பாடம்: 11 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) இப்ராஹீமின் விருந்தினர்கள் பற்றி அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவர்கள் அவரிடம் வந்ததும், ‘‘சாந்தி உண்டாகட்டும்!” என்று (முகமன்) கூறினார்கள். (அதற்கு) அவர், ‘‘உங்களைக் குறித்து நாம் அச்சமடைகிறோம்” என்றார். ‘‘நீர் அஞ்சாதீர். நிச்சயமாக நாங்கள், உமக்கு அறிவார்ந்த ஆண் குழந்தை (பிறக்கப் போவது) குறித்து நற்செய்தி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறினர். (15:51லி53) இப்ராஹீம், ‘‘என் இறைவா! இறந் தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” என்று கேட்டபோது, ‘‘(அதை) நீர் நம்ப வில்லையா?” என (அல்லாஹ்) கேட்டான். (அதற்கு) அவர் ‘‘அவ்வாறன்று (நம்பி யிருக்கிறேன்) எனினும் எனது உள்ளம் நிம்மதியடைவதற்காகவே (கேட்கிறேன்)” என்று கூறினார். (2:260)
3372. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறந்தவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால்) நாமே இப்ராஹீம் (அலை) அவர்களை விடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். (ஆகவே, சந்தேகப்பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை. குர்ஆனின்படி,) இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘என் இறைவா! இறந்தவர்களை நீ எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்பதை எனக்குக் காட்டு” என்று கேட்டபோது அல்லாஹ், ‘‘நீர் நம்பவில்லையா?” என்று கேட்டான். அவர்கள், ‘‘ஆம்; (நம்பிக்கை கொண் டுள்ளேன்.) ஆனாலும், என் உள்ளம் நிம்மதியடைவதற்காக இப்படிக் கேட்டேன்” என்று பதிலளித்தார்கள்.

லூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! அவர்கள் வலுவான ஓர் ஆதரவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள்.43

யூசுஃப் (அலை) அவர்கள் சிறையில் கழித்த அளவுக்கு நீண்ட காலத்தை நான் கழிக்க நேர்ந்திருந்தால் (விடுதலை யளிக்க) அழைத்தவரிடம் (அவரது அழைப்பை ஏற்று விடுதலையாகிச் செல்ல) ஒப்புக்கொண்டிருப்பேன்.44

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 60
3373. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى نَفَرٍ مِنْ أَسْلَمَ يَنْتَضِلُونَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" ارْمُوا بَنِي إِسْمَاعِيلَ، فَإِنَّ أَبَاكُمْ كَانَ رَامِيًا، وَأَنَا مَعَ بَنِي فُلاَنٍ "". قَالَ فَأَمْسَكَ أَحَدُ الْفَرِيقَيْنِ بِأَيْدِيهِمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا لَكُمْ لاَ تَرْمُونَ "". فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، نَرْمِي وَأَنْتَ مَعَهُمْ قَالَ "" ارْمُوا وَأَنَا مَعَكُمْ كُلِّكُمْ "".
பாடம் : 12 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இந்த வேதத்தில் (நம் அடியாரும் தூதருமான) இஸ்மாயீலைப் பற்றி நினை வூட்டுவீராக! அவர் தமது வாக்குறுதியில் உண்மையாளராய் இருந்தார். (19:54)
3373. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அம்பெறியும் விளையாட்டில் ஈடுபட்டிருந்த, பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த சிலரைக் கடந்து சென்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இஸ்மாயீலின் மக்களே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல் (அலை) அவர்களும்) அம்பெய்யும் கலையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள்.45 நீங்கள் அம்பெறியுங்கள். நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்” என்று சொன்னார்கள்.

அப்போது அம்பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்த இரு சாராரில் ஒரு சாரார் தம் கைகளை (அம்பெய்யாமல்) தடுத்து நிறுத்திக்கொண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் அம் பெய்யாமல் இருக்கிறீர்கள்?” என்று கேட் டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ் வின் தூதரே! தாங்கள் அவர்களுடன் (எதிர் தரப்பினருடன்) இருக்க, நாங்கள் அம்பெய்வோமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், (மீண்டும்) ‘‘நீங்கள் அம்பெய்யுங்கள். நான் உங்கள் அனைவருடனும் இருக்கின்றேன்” என்று பதிலளித்தார்கள்.46

அத்தியாயம் : 60
3374. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ الْمُعْتَمِرَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قِيلَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم مَنْ أَكْرَمُ النَّاسِ قَالَ "" أَكْرَمُهُمْ أَتْقَاهُمْ "". قَالُوا يَا نَبِيَّ اللَّهِ، لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ. قَالَ "" فَأَكْرَمُ النَّاسِ يُوسُفُ نَبِيُّ اللَّهِ ابْنُ نَبِيِّ اللَّهِ ابْنِ نَبِيِّ اللَّهِ ابْنِ خَلِيلِ اللَّهِ "". قَالُوا لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ. قَالَ "" فَعَنْ مَعَادِنِ الْعَرَبِ تَسْأَلُونِي "". قَالُوا نَعَمْ. قَالَ "" فَخِيَارُكُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُكُمْ فِي الإِسْلاَمِ إِذَا فَقِهُوا "".
பாடம் : 13 இப்ராஹீம் (அலை) அவர்களுடைய புதல்வர் இஸ்ஹாக் (அலை) அவர்களின் நிகழ்ச்சி47 இது குறித்து இப்னு உமர் (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள் ளார்கள்.48 பாடம் : 14 (அல்லாஹ் கூறுகின்றான்:) யஅகூபுக்கு இறப்பு நெருங்கியபோது நீங்கள் (அவரருகில்) இருந்தீர்களா? அவர் தம் மக்களிடம், ‘‘எனக்குப் பின்னர் எதை வழிபடுவீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘‘உங்கள் இறைவனும் உங்கள் தந்தையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய (அந்த) ஓரிறைவனையே வழிபடுவோம். நாங்கள் அவனுக்கு (முற்றிலும்) அடிபணிந்தவர்கள் ஆவோம்” என்று கூறினார்கள். (2:133)49
3374. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களிடம்) ‘‘அல்லாஹ்வின் தூதரே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘‘மனிதர்களிலேயே (அல்லாஹ்வுக்கு) அதிகமாக அஞ்சுபவர்” என்று பதிலளித் தார்கள். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் (யஅகூப்) உடைய மகனான அல்லாஹ் வின் தூதர் யூசுஃப் அவர்கள்தான்!” என்று பதிலளித்தார்கள்.

அதற்கு மக்கள், ‘‘நாங்கள் தங்களிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘அரபியரின் மூலகங்கள் (எனப்படும் அரபியர் பரம்பரைகள்) குறித்தா என்னிடம் கேட்கிறீர்கள்? அவர்களில் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) சிறந்தவர்களாயிருந்தவர்கள், இஸ்லாத்தை ஏற்ற பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றுக் கொண்டால்” என்று பதிலளித்தார்கள்.50

அத்தியாயம் : 60
3375. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ {يَغْفِرُ اللَّهُ لِلُوطٍ إِنْ كَانَ لَيَأْوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ}.
பாடம் : 15 (அல்லாஹ் கூறுகின்றான்:) மேலும், லூத்தை நாம் அனுப்பினோம். அவர் தம் சமூகத்தாரிடம், ‘‘நீங்கள் உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டே ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்கிறீர் களா? பெண்களை விட்டுவிட்டு, காம உணர்வைத் தீர்த்துக்கொள்ள ஆண் களையா தேடியலைகிறீர்கள்? உண்மையில் நீங்கள் மிக அறிவீனமான செயல் புரியும் மக்கள் ஆவீர்” என்று சொன்னார். ஆயினும், அவருடைய சமூகத்தாரின் பதில், ‘‘லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரைவிட்டு வெளியேற்றுங்கள். இவர்கள் பெரிய பரிசுத்தவான்கள்” என்பதாகவே இருந்தது. இறுதியில் லூத்தையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம்; அவருடைய மனைவியைத் தவிர! அவளை நாம் பின்தங்கியவர் களில் ஒருத்தியாக முடிவுசெய்து விட்டிருந்தோம். மேலும், அந்த மக்களின் மீது ஒரு மழையைப் பொழியச்செய்தோம். அது எச்சரிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் கெட்ட மழையாய் இருந்தது. (27:54லி58)
3375. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லூத் (அலை) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! அவர்கள் பலமான ஓர் ஆதரவாளனிடமே புகலிடம் தேடுபவர் களாயிருந்தார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.51

அத்தியாயம் : 60
3376. حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَرَأَ النَّبِيُّ صلى الله عليه وسلم {فَهَلْ مِنْ مُدَّكِر }.
பாடம் : 16 (அல்லாஹ் கூறுகின்றான்:) அந்தத் தூதர்கள் லூத்தின் குடும்பத் தாரிடம் வந்தபோது, அவர், ‘‘நீங்கள் புதிரானவர்களாக இருக்கிறீர்களே!” என்றார். (15:61லி62) அல்லாஹ் கூறுகின்றான்: மூசாவைத் தெளிவான சான்றுடன் ஃபிர்அவ்னிடம் நாம் அனுப்பினோம்; அவன் தனது பலத்தால் (ருக்ன்) புறக் கணித்தான் (51:38,39). பலம் (ருக்ன்) என்பது, அவனுடன் இருந்த கூட்டத்தைக் குறிக்கும். அவனுடைய கூட்டத்தாரே அவனது பலமாக இருந்தனர். அநீதியிழைத்தோர் பக்கம் நீங்கள் சாய்ந்துவிடாதீர்கள். (லா தர்கனூ). (11:113) அவர்களின் கைகள் அதை நோக்கி நீளாததை அவர் கண்டபோது, அவர்களைப் புதிராகப் பார்த்தார் (11:70). யிபுதிராகப் பார்த்தார்’ என்பதைக் குறிக்க யிநகிர’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. நகிர, அன்கர, இஸ்தன்கர லி அனைத்துக்கும் பொருள் ஒன்றே. அப்போது அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி (யுஹ்ரஊன) வந்தனர். (11:78) அந்த முடிவை, (அதாவது) விடியும் நேரத்தில் இவர்கள் அனைவரும் வேரறுக்கப்படுவார்கள் என்பதை அவருக்கு நாம் (முன்பே) அறிவித்துவிட்டோம் (15:66). யிமுடிவு’ (தாபிர்) என்றால், அவர்களின் யிஇறுதி நிலை’ என்பது பொருள். ஒரே ஒரு பெரும் சப்தம் தவிர வேறெதுவும் இல்லை (36:53). யிசப்தம்’ (ஸைஹத்) என்றால் ‘அழிவு’ என்பது பொருள். உண்மையைக் கண்டறிவோருக்கு நிச்சயமாக இதில் பல சான்றுகள் உள்ளன (15:75). யிகண்டறிவோர்’ (முத்தவஸ்ஸிமீன்) என்றால், யிஆய்வு செய்வோர்’ என்பது பொருள். நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் சென்று வரும்) நிலையான சாலையிலேயே (சபீல்) அமைந்துள்ளது. (15:76)
3376. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘அறிவுரை பெறுபவர் எவரேனும் உண்டா?” எனும் (54ஆவது அத்தியாயத்தில் இடம்பெற் றுள்ள) இறைவசனத்தை ஓதினார்கள்.52

அத்தியாயம் : 60
3377. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنَ زَمْعَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم. وَذَكَرَ الَّذِي عَقَرَ النَّاقَةَ قَالَ "" انْتَدَبَ لَهَا رَجُلٌ ذُو عِزٍّ وَمَنَعَةٍ فِي قُوَّةٍ كَأَبِي زَمْعَةَ "".
பாடம் : 17 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘ஸமூத்’ சமூகத்தாருக்கு, அவர்களின் சகோதரர் ஸாலிஹை நாம் (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். (7:73)53 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: (‘ஸமூத்’ சமூகத்தாரான) யிஹிஜ்ர்’வாசிகள் இறைத்தூதர்களைப் பொய்யர்களெனக் கூறினார்கள். (15:80) ‘அல்ஹிஜ்ர்’ என்பது ‘ஸமூத்’ சமூகத்தார் வாழ்ந்த இடத்தின் பெயராகும். அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘இவை (எங்கள் தெய்வங்களுக்காகத்) தடுத்து வைக்கப்பட்டுள்ள கால்நடைகளும் பயிர்களும் ஆகும்...” என்று அவர்கள் கூறுகின்றனர். (6:138) யிதடுத்து வைக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிக்க யிஹிஜ்ர்’ எனும் சொல் ஆளப் பட்டுள்ளது. இதற்கு யிவிலக்கப்பட்டுள்ளது’ என்பது பொருள். தடுக்கப்படும் ஒவ்வொன் றும் யிஹிஜ்ர்’ எனப்படும். யிஹிஜ்ரும் மஹ்ஜூர்’ (வலுவான தடுப்பு) என்பதும் இதில் அடங்கும். பூமியில் ஒரு பகுதியைத் தடுத்து எழுப்பப்படும் கட்டடம் ஒவ்வொன்றும் யிஹிஜ்ர்’ எனப்படும். கஅபாவை ஒட்டி யுள்ள வளைந்த சுவரான ஹத்தீமுக்கு யிஹிஜ்ர்’ என்ற பெயரும் உண்டு. யிஹத்தீம்’ என்பதற்கு யிஇடிக்கப்பட்டது’ (மஹ்த்தூம்) என்று பொருள். யிகொல்லப்பட்டவர்’ (மக்த்தூல்) என்பதை யிகத்தீல்’ என்று குறிப்பிடுவதைப்போல். பெண் குதிரைக்கும் யிஹிஜ்ர்’ என்பர். அறிவுக்கும் யிஹிஜ்ர்’, யிஹிஜா’ எனப்படுவதுண்டு. ‘அல்யமாமா’வில் உள்ள யிஹஜ்ர்’தான் (‘ஸமூத்’ கூட்டத்தாரின்) குடியிருப்புப் பகுதியாகும்.
3377. அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஸாலிஹ் (அலை) அவர்களின் தூதுத்துவத்திற்குச் சான்றாக வந்த) ஒட்டகத்தை (அதன் கால் நரம்புகளை) வெட்டிக் கொன்றவனை நினைவு கூர்ந்தபடி நபி (ஸல்) அவர்கள், ‘‘ஸாலிஹ் உடைய சமுதாயத்தில் அபூஸம்ஆவைப் போல் மதிப்பும் வலிமையும் வாய்ந்த ஒரு மனிதன் அதைக் கொல்ல ஒப்புக்கொண்டு முன் வந்தான்” என்று சொன்னார்கள்.54


அத்தியாயம் : 60
3378. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِسْكِينٍ أَبُو الْحَسَنِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ بْنِ حَيَّانَ أَبُو زَكَرِيَّاءَ، حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا نَزَلَ الْحِجْرَ فِي غَزْوَةِ تَبُوكَ أَمَرَهُمْ أَنْ لاَ يَشْرَبُوا مِنْ بِئْرِهَا، وَلاَ يَسْتَقُوا مِنْهَا فَقَالُوا قَدْ عَجَنَّا مِنْهَا، وَاسْتَقَيْنَا. فَأَمَرَهُمْ أَنْ يَطْرَحُوا ذَلِكَ الْعَجِينَ وَيُهَرِيقُوا ذَلِكَ الْمَاءَ. وَيُرْوَى عَنْ سَبْرَةَ بْنِ مَعْبَدٍ وَأَبِي الشُّمُوسِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ بِإِلْقَاءِ الطَّعَامِ. وَقَالَ أَبُو ذَرٍّ عَنِ النَّبِيَّ صلى الله عليه وسلم "" مَنِ اعْتَجَنَ بِمَائِهِ "".
பாடம் : 17 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘ஸமூத்’ சமூகத்தாருக்கு, அவர்களின் சகோதரர் ஸாலிஹை நாம் (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். (7:73)53 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: (‘ஸமூத்’ சமூகத்தாரான) யிஹிஜ்ர்’வாசிகள் இறைத்தூதர்களைப் பொய்யர்களெனக் கூறினார்கள். (15:80) ‘அல்ஹிஜ்ர்’ என்பது ‘ஸமூத்’ சமூகத்தார் வாழ்ந்த இடத்தின் பெயராகும். அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘இவை (எங்கள் தெய்வங்களுக்காகத்) தடுத்து வைக்கப்பட்டுள்ள கால்நடைகளும் பயிர்களும் ஆகும்...” என்று அவர்கள் கூறுகின்றனர். (6:138) யிதடுத்து வைக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிக்க யிஹிஜ்ர்’ எனும் சொல் ஆளப் பட்டுள்ளது. இதற்கு யிவிலக்கப்பட்டுள்ளது’ என்பது பொருள். தடுக்கப்படும் ஒவ்வொன் றும் யிஹிஜ்ர்’ எனப்படும். யிஹிஜ்ரும் மஹ்ஜூர்’ (வலுவான தடுப்பு) என்பதும் இதில் அடங்கும். பூமியில் ஒரு பகுதியைத் தடுத்து எழுப்பப்படும் கட்டடம் ஒவ்வொன்றும் யிஹிஜ்ர்’ எனப்படும். கஅபாவை ஒட்டி யுள்ள வளைந்த சுவரான ஹத்தீமுக்கு யிஹிஜ்ர்’ என்ற பெயரும் உண்டு. யிஹத்தீம்’ என்பதற்கு யிஇடிக்கப்பட்டது’ (மஹ்த்தூம்) என்று பொருள். யிகொல்லப்பட்டவர்’ (மக்த்தூல்) என்பதை யிகத்தீல்’ என்று குறிப்பிடுவதைப்போல். பெண் குதிரைக்கும் யிஹிஜ்ர்’ என்பர். அறிவுக்கும் யிஹிஜ்ர்’, யிஹிஜா’ எனப்படுவதுண்டு. ‘அல்யமாமா’வில் உள்ள யிஹஜ்ர்’தான் (‘ஸமூத்’ கூட்டத்தாரின்) குடியிருப்புப் பகுதியாகும்.
3378. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போரின்போது (ஸமூத் குலத்தார் வாழ்ந்த) யிஹிஜ்ர்’ என்னும் இடத்தில் தங்கிய சமயம் அதன் கிணற்றிலிருந்து (தண்ணீர்) அருந்த வேண்டாம் என்றும் அதிலிருந்து தண்ணீர் எடுக்க வேண்டாம் என்றும் தம் தோழர்களுக்கு உத்தர விட்டார்கள். தோழர்கள், ‘‘நாங்கள் அதிலிருந்து (எடுத்த தண்ணீரால் ஏற்கெனவே) மாவு பிசைந்துவிட்டோமே! (என்ன செய்வது?)” என்று கேட்டனர். அதற்கு அவர்கள் அந்த மாவை (சாப்பிடாமல்) வீசியெறிந்துவிடுமாறும் அந்தத் தண் ணீரைக் கொட்டிவிடுமாறும் உத்தரவிட்டார்கள்.

(ஸமூத் குலத்தாரின் கிணற்றிலிருந்து எடுத்த தண்ணீரால் தயாரித்த) உணவை எறிந்துவிடும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்” என்று சப்ரா பின் மஅபத் (ரஹ்) அவர்களும் அபுஷ் ஷமூஸ் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள். ‘‘அதன் தண்ணீரால் மாவு தயாரித்தவர் அதை எறிந்துவிடட்டும்” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 60
3379. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ النَّاسَ نَزَلُوا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَرْضَ ثَمُودَ الْحِجْرَ، فَاسْتَقَوْا مِنْ بِئْرِهَا، وَاعْتَجَنُوا بِهِ، فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُهَرِيقُوا مَا اسْتَقَوْا مِنْ بِئْرِهَا، وَأَنْ يَعْلِفُوا الإِبِلَ الْعَجِينَ، وَأَمَرَهُمْ أَنْ يَسْتَقُوا مِنَ الْبِئْرِ الَّتِي كَانَ تَرِدُهَا النَّاقَةُ. تَابَعَهُ أُسَامَةُ عَنْ نَافِعٍ.
பாடம் : 17 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘ஸமூத்’ சமூகத்தாருக்கு, அவர்களின் சகோதரர் ஸாலிஹை நாம் (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். (7:73)53 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: (‘ஸமூத்’ சமூகத்தாரான) யிஹிஜ்ர்’வாசிகள் இறைத்தூதர்களைப் பொய்யர்களெனக் கூறினார்கள். (15:80) ‘அல்ஹிஜ்ர்’ என்பது ‘ஸமூத்’ சமூகத்தார் வாழ்ந்த இடத்தின் பெயராகும். அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘இவை (எங்கள் தெய்வங்களுக்காகத்) தடுத்து வைக்கப்பட்டுள்ள கால்நடைகளும் பயிர்களும் ஆகும்...” என்று அவர்கள் கூறுகின்றனர். (6:138) யிதடுத்து வைக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிக்க யிஹிஜ்ர்’ எனும் சொல் ஆளப் பட்டுள்ளது. இதற்கு யிவிலக்கப்பட்டுள்ளது’ என்பது பொருள். தடுக்கப்படும் ஒவ்வொன் றும் யிஹிஜ்ர்’ எனப்படும். யிஹிஜ்ரும் மஹ்ஜூர்’ (வலுவான தடுப்பு) என்பதும் இதில் அடங்கும். பூமியில் ஒரு பகுதியைத் தடுத்து எழுப்பப்படும் கட்டடம் ஒவ்வொன்றும் யிஹிஜ்ர்’ எனப்படும். கஅபாவை ஒட்டி யுள்ள வளைந்த சுவரான ஹத்தீமுக்கு யிஹிஜ்ர்’ என்ற பெயரும் உண்டு. யிஹத்தீம்’ என்பதற்கு யிஇடிக்கப்பட்டது’ (மஹ்த்தூம்) என்று பொருள். யிகொல்லப்பட்டவர்’ (மக்த்தூல்) என்பதை யிகத்தீல்’ என்று குறிப்பிடுவதைப்போல். பெண் குதிரைக்கும் யிஹிஜ்ர்’ என்பர். அறிவுக்கும் யிஹிஜ்ர்’, யிஹிஜா’ எனப்படுவதுண்டு. ‘அல்யமாமா’வில் உள்ள யிஹஜ்ர்’தான் (‘ஸமூத்’ கூட்டத்தாரின்) குடியிருப்புப் பகுதியாகும்.
3379. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் (தபூக் போரின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஸமூத் கூட்டத்தார் வசித்த பூமியான யிஹிஜ்ர்’ என்னும் பகுதியில் தங்கினார்கள். அதன் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதனால் மாவு பிசைந்தார்கள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பகுதியின் கிணற்றிலிருந்து அவர்கள் இறைத்த தண்ணீரைக் கொட்டிவிடுமாறும் (அதனால் பிசைந்த) அந்த மாவை ஒட்டகங்களுக்குத் தீனியாகப் போட்டுவிடுமாறும் கட்டளை யிட்டார்கள்.

மேலும், (ஸாலிஹ் (அலை) அவர் களின்) ஒட்டகம் (தண்ணீர் குடிப்பதற்காக) வந்துகொண்டிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளுமாறும் உத்தர விட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 60
3380. حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنهم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا مَرَّ بِالْحِجْرِ قَالَ "" لاَ تَدْخُلُوا مَسَاكِنَ الَّذِينَ ظَلَمُوا إِلاَّ أَنْ تَكُونُوا بَاكِينَ، أَنْ يُصِيبَكُمْ مَا أَصَابَهُمْ "". ثُمَّ تَقَنَّعَ بِرِدَائِهِ، وَهْوَ عَلَى الرَّحْلِ.
பாடம் : 17 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘ஸமூத்’ சமூகத்தாருக்கு, அவர்களின் சகோதரர் ஸாலிஹை நாம் (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். (7:73)53 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: (‘ஸமூத்’ சமூகத்தாரான) யிஹிஜ்ர்’வாசிகள் இறைத்தூதர்களைப் பொய்யர்களெனக் கூறினார்கள். (15:80) ‘அல்ஹிஜ்ர்’ என்பது ‘ஸமூத்’ சமூகத்தார் வாழ்ந்த இடத்தின் பெயராகும். அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘இவை (எங்கள் தெய்வங்களுக்காகத்) தடுத்து வைக்கப்பட்டுள்ள கால்நடைகளும் பயிர்களும் ஆகும்...” என்று அவர்கள் கூறுகின்றனர். (6:138) யிதடுத்து வைக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிக்க யிஹிஜ்ர்’ எனும் சொல் ஆளப் பட்டுள்ளது. இதற்கு யிவிலக்கப்பட்டுள்ளது’ என்பது பொருள். தடுக்கப்படும் ஒவ்வொன் றும் யிஹிஜ்ர்’ எனப்படும். யிஹிஜ்ரும் மஹ்ஜூர்’ (வலுவான தடுப்பு) என்பதும் இதில் அடங்கும். பூமியில் ஒரு பகுதியைத் தடுத்து எழுப்பப்படும் கட்டடம் ஒவ்வொன்றும் யிஹிஜ்ர்’ எனப்படும். கஅபாவை ஒட்டி யுள்ள வளைந்த சுவரான ஹத்தீமுக்கு யிஹிஜ்ர்’ என்ற பெயரும் உண்டு. யிஹத்தீம்’ என்பதற்கு யிஇடிக்கப்பட்டது’ (மஹ்த்தூம்) என்று பொருள். யிகொல்லப்பட்டவர்’ (மக்த்தூல்) என்பதை யிகத்தீல்’ என்று குறிப்பிடுவதைப்போல். பெண் குதிரைக்கும் யிஹிஜ்ர்’ என்பர். அறிவுக்கும் யிஹிஜ்ர்’, யிஹிஜா’ எனப்படுவதுண்டு. ‘அல்யமாமா’வில் உள்ள யிஹஜ்ர்’தான் (‘ஸமூத்’ கூட்டத்தாரின்) குடியிருப்புப் பகுதியாகும்.
3380. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் பகுதியைக் கடந்து சென்றபோது, ‘‘அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்த அதே தண்டனை உங்களுக்கும் கிடைத்துவிடுமோ என்று அஞ்சி அழுதபடியே தவிர நுழையாதீர்கள்” என்று சொன்னார்கள். பிறகு அவர்கள் சேண இருக்கையின் மீது இருந்தபடியே தமது போர்வையால் (தம்மை) மறைத்துக் கொண்டார்கள்.


அத்தியாயம் : 60
3381. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا وَهْبٌ، حَدَّثَنَا أَبِي، سَمِعْتُ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَدْخُلُوا مَسَاكِنَ الَّذِينَ ظَلَمُوا أَنْفُسَهُمْ إِلاَّ أَنْ تَكُونُوا بَاكِينَ، أَنْ يُصِيبَكُمْ مِثْلُ مَا أَصَابَهُمْ "".
பாடம் : 17 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘ஸமூத்’ சமூகத்தாருக்கு, அவர்களின் சகோதரர் ஸாலிஹை நாம் (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். (7:73)53 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: (‘ஸமூத்’ சமூகத்தாரான) யிஹிஜ்ர்’வாசிகள் இறைத்தூதர்களைப் பொய்யர்களெனக் கூறினார்கள். (15:80) ‘அல்ஹிஜ்ர்’ என்பது ‘ஸமூத்’ சமூகத்தார் வாழ்ந்த இடத்தின் பெயராகும். அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘இவை (எங்கள் தெய்வங்களுக்காகத்) தடுத்து வைக்கப்பட்டுள்ள கால்நடைகளும் பயிர்களும் ஆகும்...” என்று அவர்கள் கூறுகின்றனர். (6:138) யிதடுத்து வைக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிக்க யிஹிஜ்ர்’ எனும் சொல் ஆளப் பட்டுள்ளது. இதற்கு யிவிலக்கப்பட்டுள்ளது’ என்பது பொருள். தடுக்கப்படும் ஒவ்வொன் றும் யிஹிஜ்ர்’ எனப்படும். யிஹிஜ்ரும் மஹ்ஜூர்’ (வலுவான தடுப்பு) என்பதும் இதில் அடங்கும். பூமியில் ஒரு பகுதியைத் தடுத்து எழுப்பப்படும் கட்டடம் ஒவ்வொன்றும் யிஹிஜ்ர்’ எனப்படும். கஅபாவை ஒட்டி யுள்ள வளைந்த சுவரான ஹத்தீமுக்கு யிஹிஜ்ர்’ என்ற பெயரும் உண்டு. யிஹத்தீம்’ என்பதற்கு யிஇடிக்கப்பட்டது’ (மஹ்த்தூம்) என்று பொருள். யிகொல்லப்பட்டவர்’ (மக்த்தூல்) என்பதை யிகத்தீல்’ என்று குறிப்பிடுவதைப்போல். பெண் குதிரைக்கும் யிஹிஜ்ர்’ என்பர். அறிவுக்கும் யிஹிஜ்ர்’, யிஹிஜா’ எனப்படுவதுண்டு. ‘அல்யமாமா’வில் உள்ள யிஹஜ்ர்’தான் (‘ஸமூத்’ கூட்டத்தாரின்) குடியிருப்புப் பகுதியாகும்.
3381. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தமக்குத்தாமே அநீதியிழைத்துக் கொண்டவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்ததைப் போன்ற தண்டனை உங்களுக்கும் கிடைத்துவிடுமோ என்று அஞ்சி அழுதபடியே தவிர நுழை யாதீர்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.55

அத்தியாயம் : 60
3382. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ "" الْكَرِيمُ ابْنُ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ يُوسُفُ ابْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ ـ عَلَيْهِمُ السَّلاَمُ "".
பாடம் : 18 அல்லாஹ் கூறுகின்றான்: யஅகூபுக்கு இறப்பு நெருங்கியபோது நீங்கள் (அவரருகில்) இருந்தீர்களா? அவர் தம் மக்களிடம், ‘‘எனக்குப் பின்னர் எதை வழிபடுவீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘‘உங்கள் இறைவனும் உங்கள் தந்தையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய (அந்த) ஓரிறைவனையே வழிபடுவோம். நாங்கள் அவனுக்கு (முற்றிலும்) அடி பணிந்தவர்கள் ஆவோம்” என்று கூறினார்கள். (2:133)56
3382. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகன்தான் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக் (அலை) அவர்களின் புதல்வரான யஅகூப் (அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப் (அலை) அவர்களேயாவார்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 60
3383. حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ أَكْرَمُ النَّاسِ قَالَ "" أَتْقَاهُمْ لِلَّهِ "". قَالُوا لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ. قَالَ "" فَأَكْرَمُ النَّاسِ يُوسُفُ نَبِيُّ اللَّهِ ابْنُ نَبِيِّ اللَّهِ ابْنِ نَبِيِّ اللَّهِ ابْنِ خَلِيلِ اللَّهِ "". قَالُوا لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ. قَالَ "" فَعَنْ مَعَادِنِ الْعَرَبِ تَسْأَلُونِي، النَّاسُ مَعَادِنُ خِيَارُهُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الإِسْلاَمِ إِذَا فَقِهُوا "". حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلَامٍ أَخْبَرَنَا عَبْدَةُ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا
பாடம் : 19 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நிச்சயமாக (நம் தூதர்) யூசுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களி(ன் வரலாற்றி)ல் (அது குறித்து) வினவுகின்றவர்களுக் குப் பல படிப்பினைகள் உள்ளன. (12:7)57
3383. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘மனிதர்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘மனிதர்களில் அல்லாஹ்வுக்கு அதிகமாக அஞ்சுபவர்தான்” என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘‘இதைப் பற்றி உங்களிடம் நாங்கள் கேட்கவில்லை” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படி யென்றால் மக்களிலேயே மிகவும் கண்ணியத்திற்குரியவர் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் (யஅகூப்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் யூசுஃப் (அலை) அவர்கள்தான்” என்று கூறினார்கள்.

மக்கள், ‘‘நாங்கள் இதைப் பற்றியும் உங்களிடம் கேட்கவில்லை” என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், அரபியரின் மூலகங்கள் (எனப்படும் அரபியரின் பரம்பரை) பற்றி நீங்கள் என்னிடம் கேட்கிறீர்களா? மக்கள் மூலகங்கள் ஆவர். அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிவிடும்போதும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றுக்கொண்டால்” என்று பதிலளித்தார்கள்.58

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 60
3384. حَدَّثَنَا بَدَلُ بْنُ الْمُحَبَّرِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهَا "" مُرِي أَبَا بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ "". قَالَتْ إِنَّهُ رَجُلٌ أَسِيفٌ، مَتَى يَقُمْ مَقَامَكَ رَقَّ. فَعَادَ فَعَادَتْ، قَالَ شُعْبَةُ فَقَالَ فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ "" إِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ "".
பாடம் : 19 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நிச்சயமாக (நம் தூதர்) யூசுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களி(ன் வரலாற்றி)ல் (அது குறித்து) வினவுகின்றவர்களுக் குப் பல படிப்பினைகள் உள்ளன. (12:7)57
3384. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட் களில்) என்னிடம், ‘‘அபூபக்ர் அவர்களை மக்களுக்குத் தொழுவிக்கும்படி சொல்” என்று சொன்னார்கள். நான், ‘‘அவர்கள் (அதிகமாகத் துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர்கள். நீங்கள் தொழுகைக் காக நிற்குமிடத்தில் அவர்கள் நிற்க நேரும்போது மனம் நெகிழ்ந்துபோய் (அழுது)விடுவார்கள்” என்று சொன்னேன். அவர்கள் முன்பு சொன்னதைப் போன்றே மீண்டும் சொன்னார்கள். நானும் முன்பு சொன்ன பதிலையே மீண்டும் சொன்னேன்.

அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது முறையில் லிஅல்லது நான்காவது முறையில்லி ‘‘(பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள். அபூபக்ருக்குச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.59


அத்தியாயம் : 60
3385. حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ يَحْيَى الْبَصْرِيُّ، حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، قَالَ مَرِضَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ "". فَقَالَتْ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ. فَقَالَ مِثْلَهُ فَقَالَتْ مِثْلَهُ. فَقَالَ "" مُرُوهُ فَإِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ "". فَأَمَّ أَبُو بَكْرٍ فِي حَيَاةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَقَالَ حُسَيْنٌ عَنْ زَائِدَةَ رَجُلٌ رَقِيقٌ.
பாடம் : 19 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நிச்சயமாக (நம் தூதர்) யூசுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களி(ன் வரலாற்றி)ல் (அது குறித்து) வினவுகின்றவர்களுக் குப் பல படிப்பினைகள் உள்ளன. (12:7)57
3385. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோயுற்றார்கள். அப்போது, ‘‘அபூபக்ரிடம் மக்களுக்குத் தொழுவிக்கும்படி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘அபூபக்ர் (ரலி) அவர்கள் இத்தகைய (இளகிய மனமுடைய)வராயிற்றே!” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்பு போலவே (மீண்டும்) சொல்ல, ஆயிஷாவும் அதையே சொன்னார்கள். பின்னர், நபி (ஸல்) அவர்கள் ‘‘அபூபக்ருக் குச் சொல்லுங்கள். அவர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும். (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழி கள் போன்(று உள்நோக்கத்துடன் பேசு கின்)றவர்கள்” என்று கூறினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளிலேயே அபூபக்ர் (ரலி) அவர்கள் (மக்களுக்குத்) தொழுவித் தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹுசைன் பின் அலீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் காணப்படுவதாவது:

ஸாயிதா பின் குதாமா (ரஹ்) அவர்கள், (‘அபூபக்ர் (ரலி) அவர்கள் இத்தகைய மனிதராயிற்றே’ என்னும் ஆயிஷா (ரலி) அவர்களின் சொல்லுக்குப் பதிலாக,) யிஇளகிய மனமுடைய மனிதராயிற்றே’ என்று சொன்னதாக அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 60