2762. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي يَعْلَى، أَنَّهُ سَمِعَ عِكْرِمَةَ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ يَقُولُ أَنْبَأَنَا ابْنُ عَبَّاسٍ، أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ ـ رضى الله عنهم ـ أَخَا بَنِي سَاعِدَةَ تُوُفِّيَتْ أُمُّهُ وَهْوَ غَائِبٌ، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي تُوُفِّيَتْ وَأَنَا غَائِبٌ عَنْهَا، فَهَلْ يَنْفَعُهَا شَىْءٌ إِنْ تَصَدَّقْتُ بِهِ عَنْهَا قَالَ "" نَعَمْ "". قَالَ فَإِنِّي أُشْهِدُكَ أَنَّ حَائِطِي الْمِخْرَافَ صَدَقَةٌ عَلَيْهَا.
பாடம் : 20 அறக்கொடை மற்றும் தர்மம் செய்யும்போது சாட்சி நிர்ணயிப் பது
2762. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ சாஇதா குலத்தைச் சேர்ந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் ஊரில் இல்லாதபோது அவர்களின் தாயார் இறந்து விட்டார். அவர்கள் நபி (ஸல்) அவர்களி டம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஊரில் இல்லாதபோது என் தாயார் இறந்துவிட்டார். நான் அவர் சார்பாக ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா?” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம் (பலனளிக்கும்)” என்று கூறினார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், ‘‘எனது மிக்ராஃப் (எனும்) தோட்டத்தை அவருக் காகத் தர்மம் செய்துவிடுகிறேன் என்பதற்குத் தங்களை நான் சாட்சியாக்கு கிறேன்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 55
2763. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ كَانَ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ يُحَدِّثُ أَنَّهُ سَأَلَ عَائِشَةَ ـ رضى الله عنها – {وَإِنْ خِفْتُمْ أَنْ لاَ تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ} قَالَتْ هِيَ الْيَتِيمَةُ فِي حَجْرِ وَلِيِّهَا، فَيَرْغَبُ فِي جَمَالِهَا وَمَالِهَا، وَيُرِيدُ أَنْ يَتَزَوَّجَهَا بِأَدْنَى مِنْ سُنَّةِ نِسَائِهَا، فَنُهُوا عَنْ نِكَاحِهِنَّ، إِلاَّ أَنْ يُقْسِطُوا لَهُنَّ فِي إِكْمَالِ الصَّدَاقِ، وَأُمِرُوا بِنِكَاحِ مَنْ سِوَاهُنَّ مِنَ النِّسَاءِ قَالَتْ عَائِشَةُ ثُمَّ اسْتَفْتَى النَّاسُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدُ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {وَيَسْتَفْتُونَكَ فِي النِّسَاءِ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ} قَالَتْ فَبَيَّنَ اللَّهُ فِي هَذِهِ أَنَّ الْيَتِيمَةَ إِذَا كَانَتْ ذَاتَ جَمَالٍ وَمَالٍ رَغِبُوا فِي نِكَاحِهَا، وَلَمْ يُلْحِقُوهَا بِسُنَّتِهَا بِإِكْمَالِ الصَّدَاقِ، فَإِذَا كَانَتْ مَرْغُوبَةً عَنْهَا فِي قِلَّةِ الْمَالِ وَالْجَمَالِ تَرَكُوهَا وَالْتَمَسُوا غَيْرَهَا مِنَ النِّسَاءِ، قَالَ فَكَمَا يَتْرُكُونَهَا حِينَ يَرْغَبُونَ عَنْهَا فَلَيْسَ لَهُمْ أَنْ يَنْكِحُوهَا إِذَا رَغِبُوا فِيهَا إِلاَّ أَنْ يُقْسِطُوا لَهَا الأَوْفَى مِنَ الصَّدَاقِ وَيُعْطُوهَا حَقَّهَا.
பாடம் : 21 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அநாதைகளின் செல்வங்களை அவர்களிடமே கொடுத்துவிடுங்கள். (அவற்றிலுள்ள) நல்லதற்குப் பதிலாகக் கெட்டதை மாற்றி (வைத்து)விடாதீர்கள். அவர்களின் செல்வங்களை உங்களுடைய செல்வங்களுடன் (சேர்த்து) உண்ணாதீர்கள். இது ஒரு பெரும் குற்றமாகும். அநாதை(ப் பெண்)களிடம் நேர்மையாக நடக்க இயலாது என நீங்கள் அஞ்சினால், உங்களுக்குப் பிடித்த பெண்களை... மணந்துகொள்ளுங்கள். (4:2,3)
2763. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘அநாதை(ப் பெண்)களிடம் நேர்மையாக நடக்க இயலாது என நீங்கள் அஞ்சினால், உங்களுக்குப் பிடித்த பெண்களை... மணந்துகொள்ளுங்கள்” (4:3) எனும் வசனம் குறித்துக் கேட்டேன். அப்போது அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:

இந்த வசனத்தில் கூறப்படும் பெண், தன் காப்பாளரின் மடியில் வளரும் அநாதைப் பெண் ஆவாள். அந்தக் காப்பாளர் அவளது அழகுக்கும் சொத்துக் கும் ஆசைப்பட்டு, அவள் போன்ற பெண்களுக்கான மணக்கொடையைவிடக் குறைவானதை அவளுக்குக் கொடுத்து அவணை மணக்க விரும்புகிறார். இத்தகைய காப்பாளர்கள் அப்பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை முழுமை யாகக் கொடுத்து நீதியுடன் நடந்து கொண்டால் தவிர, அவர்களை மணம் புரிந்துகொள்ளக் கூடாது என்று தடை செய்யப்பட்டார்கள்; அவர்களைத் தவிர வுள்ள பிற பெண்களை மணம் புரிந்து கொள்ளும்படி கட்டளையிடப்பட் டார்கள்.

பிறகும் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது தொடர்பாகத் தீர்ப்பு கேட்டு வரவே, அல்லாஹ், ‘‘(நபியே!) பெண்கள் தொடர்பாக அவர்கள் உம்மிடம் தீர்ப்புக் கேட்கின்றனர். அவர்கள் குறித்து அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றான் என்று நீர் கூறுவீராக!” (4:127) எனும் வசனத்தை அருளினான்.

அநாதைப் பெண் அழகும் செல்வமும் உடையவளாக இருந்தால் அவளுடைய காப்பாளர்கள் அவளை மணம் புரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். ஆனால், அவளையொத்த ஒரு பெண்ணுக்குத் தரப்படுவது போன்ற மணக்கொடையை முழுமையாக அவளுக்குத் தருவதில்லை. அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருப்பதால் அவளை மணமுடிக்க விருப்பமில்லாதபோது அவளை விட்டுவிட்டு வேறு பெண்களை (மணமுடிக்க) நாடிச் செல்கிறார்கள்.

ஆகவே ‘அவளை விரும்பாதபோது அவளை அவர்கள் விட்டுவிடுவதைப் போலவே, அவளை விரும்பும்போது, அவளுக்கு உரிய மணக்கொடையை நிறைவாக அவளுக்குத் தந்து, நீதியுடன் நடந்து, அவளது உரிமையை அவளுக்குக் கொடுத்தால் தவிர அவளை அவர்கள் மணமுடிக்கக் கூடாது’ என்று இந்த வசனத்தில் (4:127) அல்லாஹ் விளக்கிக் கூறினான்.20

அத்தியாயம் : 55
2764. حَدَّثَنَا هَارُونُ، حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، مَوْلَى بَنِي هَاشِمٍ حَدَّثَنَا صَخْرُ بْنُ جُوَيْرِيَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ عُمَرَ، تَصَدَّقَ بِمَالٍ لَهُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ يُقَالُ لَهُ ثَمْغٌ، وَكَانَ نَخْلاً، فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي اسْتَفَدْتُ مَالاً وَهُوَ عِنْدِي نَفِيسٌ فَأَرَدْتُ أَنْ أَتَصَدَّقَ بِهِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" تَصَدَّقْ بِأَصْلِهِ، لاَ يُبَاعُ وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ، وَلَكِنْ يُنْفَقُ ثَمَرُهُ "". فَتَصَدَّقَ بِهِ عُمَرُ، فَصَدَقَتُهُ ذَلِكَ فِي سَبِيلِ اللَّهِ وَفِي الرِّقَابِ وَالْمَسَاكِينِ وَالضَّيْفِ وَابْنِ السَّبِيلِ وَلِذِي الْقُرْبَى، وَلاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهُ أَنْ يَأْكُلَ مِنْهُ بِالْمَعْرُوفِ، أَوْ يُوكِلَ صَدِيقَهُ غَيْرَ مُتَمَوِّلٍ بِهِ.
பாடம் : 22 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அநாதைகளைச் சோதி(த்து அறி)யுங்கள். அவர்கள் திருமணத்(திற்கான வய)தை அடைந்த பிறகு, அவர்களிடம் நீங்கள் பக்குவத்தைக் கண்டால் அவர் களின் செல்வங்களை அவர்களிடமே ஒப்படைத்துவிடுங்கள். (அளவு கடந்து) விரயமாகவும் அவர்கள் பெரியவர்களாகி விடுவார்களோ என்ற அச்சத்தில் வேகமாக வும் அவற்றை உண்டுவிடாதீர்கள். (அநாதைகளைப் பராமரிப்பவர்களில்) செல்வராக இருப்பவர், (அவர்களின் செல்வத்தைச் தொடாமல்) நாணயமாக நடந்துகொள்ளட்டும்; ஏழையாக இருப்பவர் நியாயமாக உண்ணட்டும். நீங்கள் அவர்களின் செல்வங்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது, அவர்கள் (வசம் ஒப்படைத்ததன்) மீது சாட்சியை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். கணக்குக் கேட்க அல்லாஹ்வே போதுமானவன். தாய் தந்தையும் உறவினர்களும் விட்டுச்சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பங்கு உண்டு. (அவ்வாறே) தாய் தந்தையும் உறவினர்களும் விட்டுச்சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு. அ(ந்தச் சொத்)து குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தாலும் சரியே. இது (அல்லாஹ்வால்) விதிக்கப்பட்ட பங்காகும். (4:6,7) பாடம் (அநாதையின்) பொறுப்பாளர் (தமது பொறுப்பிலுள்ள) அநாதையின் செல்வத்தைக் கையாள உரிமையுண்டு என்பதும், அதிலிருந்து அவரது உழைப்பிற் கேற்ப உண்ணலாம் என்பதும்
2764. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள், ‘ஸம்ஃக்’ எனப் படும் தமது சொத்து ஒன்றை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் தர்மம் செய்தார்கள். அது ஒரு பேரீச்சந் தோட்டமாக இருந்தது. அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு செல்வத்தைப் பெற்றுள் ளேன். அது என்னிடம் (இருப்பவற்றி லேயே) உயர்தரமானதாகும். அதைத் தர்மம் செய்துவிட விரும்புகிறேன்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘அதன் நிலத்தை, (எவருக்கும்) விற்கக் கூடாது; அன்பளிப் பாகவும் தரக் கூடாது; அதற்கு எவரும் வாரிசாகவும் ஆக முடியாது; அதன் வருவாய் மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அதைத் தர்மம் செய்துவிடுவீராக!” என்று கூறினார்கள்.

ஆகவே, உமர் (ரலி) அவர்கள் அதைத் தர்மம் (வக்ஃப்) செய்துவிட்டார்கள். அவர்களின் இந்தத் தர்மம் (வக்ஃப்) அல்லாஹ்வின் பாதையிலும், அடிமைகளை விடுதலை செய்யவும், ஏழைகளுக்காகவும், விருந்தினர்களுக்காகவும், வழிப் போக்கர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும் வழங்கப்பட்டது. யிநிர்வாகம் செய்பவர் அதிலிருந்து பொது வழக்கப்படி (நியாயமான முறையில்) உண்பதில் அல்லது விரயம் செய்யாமல் தம் நண்பருக்கு உண்ணக்கொடுப்பதில் குற்றமில்லை’ என்றும் (அது தொடர்பான ஆவணத்தில்) அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.21


அத்தியாயம் : 55
2765. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها – {وَمَنْ كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ وَمَنْ كَانَ فَقِيرًا فَلْيَأْكُلْ بِالْمَعْرُوفِ}. قَالَتْ أُنْزِلَتْ فِي وَالِي الْيَتِيمِ أَنْ يُصِيبَ مِنْ مَالِهِ إِذَا كَانَ مُحْتَاجًا بِقَدْرِ مَالِهِ بِالْمَعْرُوفِ.
பாடம் : 22 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அநாதைகளைச் சோதி(த்து அறி)யுங்கள். அவர்கள் திருமணத்(திற்கான வய)தை அடைந்த பிறகு, அவர்களிடம் நீங்கள் பக்குவத்தைக் கண்டால் அவர் களின் செல்வங்களை அவர்களிடமே ஒப்படைத்துவிடுங்கள். (அளவு கடந்து) விரயமாகவும் அவர்கள் பெரியவர்களாகி விடுவார்களோ என்ற அச்சத்தில் வேகமாக வும் அவற்றை உண்டுவிடாதீர்கள். (அநாதைகளைப் பராமரிப்பவர்களில்) செல்வராக இருப்பவர், (அவர்களின் செல்வத்தைச் தொடாமல்) நாணயமாக நடந்துகொள்ளட்டும்; ஏழையாக இருப்பவர் நியாயமாக உண்ணட்டும். நீங்கள் அவர்களின் செல்வங்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது, அவர்கள் (வசம் ஒப்படைத்ததன்) மீது சாட்சியை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். கணக்குக் கேட்க அல்லாஹ்வே போதுமானவன். தாய் தந்தையும் உறவினர்களும் விட்டுச்சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பங்கு உண்டு. (அவ்வாறே) தாய் தந்தையும் உறவினர்களும் விட்டுச்சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு. அ(ந்தச் சொத்)து குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தாலும் சரியே. இது (அல்லாஹ்வால்) விதிக்கப்பட்ட பங்காகும். (4:6,7) பாடம் (அநாதையின்) பொறுப்பாளர் (தமது பொறுப்பிலுள்ள) அநாதையின் செல்வத்தைக் கையாள உரிமையுண்டு என்பதும், அதிலிருந்து அவரது உழைப்பிற் கேற்ப உண்ணலாம் என்பதும்
2765. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘(அநாதைகளைப் பராமரிப்பவர்களில்) செல்வராக இருப்பவர், (அவர்களின் செல்வத்தைத் தொடாமல்) நாணயமாக நடந்துகொள்ளட்டும்; ஏழையாக இருப்பவர் (அதிலிருந்து) நியாயமாக உண்ணட்டும்” (4:6) எனும் இறைவசனம் அநாதையின் பராமரிப்பாளர் தொடர்பாக அருளப் பெற்றது. அவர் தேவையுள்ளவராக இருந்தால் அநாதையின் செல்வத்திலிருந்து, அந்தச் செல்வத்தின் அளவுக்கேற்ப பொது வழக்கப்படி (நியாயமான முறையில்) எடுத்துக்கொள்ளும்படி (அனுமதியளித்து) அருளப்பட்டது.22

அத்தியாயம் : 55
2766. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ الْمَدَنِيِّ، عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ، وَمَا هُنَّ قَالَ "" الشِّرْكُ بِاللَّهِ، وَالسِّحْرُ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلاَتِ "".
பாடம் : 23 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அநாதைகளின் செல்வங்களை முறை கேடாக உண்போர் தங்கள் வயிற்றுக்கு நெருப்பையே உண்கிறார்கள். விரைவில் அவர்கள் கொழுந்துவிட்டெரியும் (நரக) நெருப்பில் நுழைவார்கள். (4:10)
2766. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை?” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் தடை செய்துள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அநாதை களின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும், அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும்தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள்.

அத்தியாயம் : 55
2767. وَقَالَ لَنَا سُلَيْمَانُ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، قَالَ مَا رَدَّ ابْنُ عُمَرَ عَلَى أَحَدٍ وَصِيَّةً. وَكَانَ ابْنُ سِيرِينَ أَحَبَّ الأَشْيَاءِ إِلَيْهِ فِي مَالِ الْيَتِيمِ أَنْ يَجْتَمِعَ إِلَيْهِ نُصَحَاؤُهُ وَأَوْلِيَاؤُهُ فَيَنْظُرُوا الَّذِي هُوَ خَيْرٌ لَهُ. وَكَانَ طَاوُسٌ إِذَا سُئِلَ عَنْ شَىْءٍ مِنْ أَمْرِ الْيَتَامَى قَرَأَ {وَاللَّهُ يَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ}. وَقَالَ عَطَاءٌ فِي يَتَامَى الصَّغِيرُ وَالْكَبِيرُ يُنْفِقُ الْوَلِيُّ عَلَى كُلِّ إِنْسَانٍ بِقَدْرِهِ مِنْ حِصَّتِهِ.
பாடம் : 24 அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) அநாதைகளைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கின்றார்கள். ‘‘அவர்களுக்கு நன்மை நாடுவதே நன்று. அவர்களுடன் நீங்கள் கலந்(து வாழ்ந்)தால், அவர்கள் உங்கள் சகோதரர்களே. நன்மை செய்பவர் யார், தீமை செய்பவர் யார் என்பதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் நாடியிருந்தால், (இதை) உங்களுக்குக் கடினமாக்கியிருப்பான். அல்லாஹ் வல்லமை படைத்தவனும் ஞானம் நிறைந்தவனும் ஆவான்” என்று கூறுவீராக! (2:220) இங்கு (யிகடினமாக்கியிருப்பான்’ என்பதைக் குறிக்க மூலத்தில்) ‘அஃனத்த’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிசிரமத்தை, நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பான்’ என்பது பொருளாகும். ‘அனத்’ (20லி111) எனும் சொல்லுக்கு யிபணிந்தது’ என்பது பொருளாகும்.
2767. ‘‘இப்னு உமர் (ரலி) அவர்கள் எவரேனும் தம்மைப் பொறுப்பாளராக நியமித்(து இறுதி விருப்பம் தெரிவித்)தால் அதை ஒருபோதும் மறுத்ததில்லை” என்று நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஓர் அநாதையின் செல்வம் தொடர்பாக இப்னு சீரீன் (ரஹ்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானது எதுவெனில், அவனுடைய ஆலோசகர்களும் (நலம் நாடுபவர்களும்) காப்பாளர்களும் ஒன்று கூடி அவனுக்கு நன்மை எது என்று முடிவெடுப்பதேயாகும்.

தாவூஸ் (ரஹ்) அவர்களிடம் அநாதை களின் பிரச்சினைகளில் ஒன்றைக் குறித்துக் கேட்கப்பட்டால், ‘‘நன்மை செய்பவர் யார், தீமை செய்பவர் யார் என்பதை அல்லாஹ் அறிவான்” (2:220) எனும் இறைவசனத்தை ஓதுவார்கள்.

அநாதைகளில் சிறியவர், பெரியவர் ஆகியோர் தொடர்பாக அதாஉ (ரஹ்) அவர்கள், ‘‘ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப அவர்களின் பாகத்திலிருந்து காப்பாளர் செலவு செய்வார்” என்று கூறினார்கள்.23

அத்தியாயம் : 55
2768. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ كَثِيرٍ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ لَيْسَ لَهُ خَادِمٌ، فَأَخَذَ أَبُو طَلْحَةَ بِيَدِي، فَانْطَلَقَ بِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَنَسًا غُلاَمٌ كَيِّسٌ، فَلْيَخْدُمْكَ. قَالَ فَخَدَمْتُهُ فِي السَّفَرِ وَالْحَضَرِ، مَا قَالَ لِي لِشَىْءٍ صَنَعْتُهُ لِمَ صَنَعْتَ هَذَا هَكَذَا وَلاَ لِشَىْءٍ لَمْ أَصْنَعْهُ لِمَ لَمْ تَصْنَعْ هَذَا هَكَذَا
பாடம் : 25 பயணத்திலும் உள்ளூரிலும் அநாதை(ச் சிறுவனு)க்கு நன்மை உண்டானால், அவனிடம் வேலை வாங்குவதும், அவனுடைய தாய் அல்லது தாயின் (மறு) கணவன் அவனைக் கவனித்துக்கொள்வ தும்
2768. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பணியாள் எவரும் இல்லாத நிலையில் மதீனாவுக்கு வந்தார்கள். ஆகவே, அபூதல்ஹா (ரலி) அவர்கள்24 என் கையைப் பிடித்துக்கொண்டு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத் துச் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாலியான சிறுவன். அவன் தங்களுக்கு ஊழியம் செய்யட்டும்” என்று கூறினார்கள். ஆகவே, நான் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பயணத் திலும் உள்ளூரிலும் பணிவிடைகள் செய்துவந்தேன். நான் செய்த எந்தச் செய்கைக்காகவும், ‘‘இதை ஏன் இப்படிச் செய்தாய்?” என்றோ, நான் செய்யாத எந்த விஷயத்திற்காகவும், ‘‘ஏன் இதை நீ இப்படிச் செய்யவில்லை?” என்றோ என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டதேயில்லை.

அத்தியாயம் : 55
2769. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ أَنْصَارِيٍّ بِالْمَدِينَةِ مَالاً مِنْ نَخْلٍ، وَكَانَ أَحَبُّ مَالِهِ إِلَيْهِ بَيْرَحَاءَ مُسْتَقْبِلَةَ الْمَسْجِدِ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طَيِّبٍ. قَالَ أَنَسٌ فَلَمَّا نَزَلَتْ {لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} قَامَ أَبُو طَلْحَةَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ يَقُولُ {لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} وَإِنَّ أَحَبَّ أَمْوَالِي إِلَىَّ بِيرُحَاءَ، وَإِنَّهَا صَدَقَةٌ لِلَّهِ أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ اللَّهِ، فَضَعْهَا حَيْثُ أَرَاكَ اللَّهُ. فَقَالَ "" بَخْ، ذَلِكَ مَالٌ رَابِحٌ ـ أَوْ رَايِحٌ ـ شَكَّ ابْنُ مَسْلَمَةَ وَقَدْ سَمِعْتُ مَا قُلْتَ، وَإِنِّي أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ "". قَالَ أَبُو طَلْحَةَ أَفْعَلُ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ. فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَفِي بَنِي عَمِّهِ. وَقَالَ إِسْمَاعِيلُ وَعَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ وَيَحْيَى بْنُ يَحْيَى عَنْ مَالِكٍ "" رَايِحٌ "".
பாடம் : 26 ஒருவர் ஒரு நிலத்தை வக்ஃப் செய்யும்போது அதன் எல்லைகளை விளக்கிக் கூறாவிட்டாலும், அவரது வக்ஃப் செல்லும். தர்மமும் அவ்வாறே (செல்லும்).
2769. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதல்ஹா (ரலி) அவர்கள் மதீனா அன்சாரிகளிலேயே நிறையப் பேரீச்சந் தோட்டங்களைச் சொத்துகளாகப் பெற்றிருந் தார். (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரே அமைந்திருந்த யிபைருஹா’ தோட்டம்தான் அவருடைய சொத்துக்களிலேயே அவருக்கு மிகவும் விருப்பமான தாக இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அ(ந்தத் தோட்டத்)தில் நுழைந்து அதிலிருந்த நல்ல (சுவையான) தண்ணீரைப் பருகுவார்கள்.

‘‘நீங்கள் விரும்புகின்ற (செல்வத்) திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் ஒருபோதும் (நிறைவான) பலனை அடைந்துகொள்ளமாட்டீர்கள்” (3:92) எனும் இறைவசனம் அருளப்பட்டபோது அபூதல்ஹா (ரலி) அவர்கள் எழுந்து நின்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடைந்துவிட முடியாது’ என்று அல்லாஹ் கூறுகின்றான். என் சொத்துகளிலேயே எனக்கு மிகவும் விருப்பமானது யிபைருஹா’ தான். அதை அல்லாஹ்வுக்காக நான் தர்மம் செய்துவிடுகிறேன். அல்லாஹ்விடம் அதன் நன்மையையும் (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக அது இருப்பதையும் நான் விரும்புகிறேன். ஆகவே, அல்லாஹ் தங்களுக்குக் கட்டளையிடுகின்ற இனத்தில் அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘நல்லது! அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வமாகிவிட்டதே! அல்லது அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே! லிஇப்படி அறிவிப்பாளர் இப்னு மஸ்லமா (ரஹ்) அவர்கள் சந்தேகத்துடன் கூறியுள்ளார்லி நீர் கூறியதை நான் கேட்டேன். அதை (உம்முடைய) நெருங்கிய உறவினர்களுக்கிடையே நீர் பங்கிட்டுவிடுவதையே நான் (உசிதமானதாகக்) கருதுகிறேன்” என்று கூறினார்கள்.

அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘அவ்வாறே நான் செய்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டு, தம் நெருங்கிய உறவினர்களுக்கும் தம் தந்தையின் சகோதரருடைய மக்களுக்குமிடையே அதைப் பங்கிட்டு விட்டார்கள்.25

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. பிந்திய மூன்று அறிவிப்புகளிலும் யிநன்மை கிடைத்துவிட்ட’ என்றே இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம் : 55
2770. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، أَخْبَرَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما أَنَّ رَجُلاً، قَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ أُمَّهُ تُوُفِّيَتْ أَيَنْفَعُهَا إِنْ تَصَدَّقْتُ عَنْهَا قَالَ "" نَعَمْ "". قَالَ فَإِنَّ لِي مِخْرَافًا وَأُشْهِدُكَ أَنِّي قَدْ تَصَدَّقْتُ عَنْهَا.
பாடம் : 26 ஒருவர் ஒரு நிலத்தை வக்ஃப் செய்யும்போது அதன் எல்லைகளை விளக்கிக் கூறாவிட்டாலும், அவரது வக்ஃப் செல்லும். தர்மமும் அவ்வாறே (செல்லும்).
2770. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தம் தாயார் இறந்து விட்டதாகக் கூறிவிட்டு, ‘‘அவர் சார்பாக நான் தர்மம் (ஏதும்) செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம் (பலனளிக்கும்)” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், ‘‘என்னிடம் யிமிக்ராஃப்’ எனும் தோட்டம் ஒன்று உள்ளது. அதை நான் அவர் சார்பாகத் தர்மம் செய்துவிட்டேன் என்பதற்குத் தங்களை சாட்சியாக ஆக்கு கிறேன்” என்று கூறினார்.

அத்தியாயம் : 55
2771. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِبِنَاءِ الْمَسْجِدِ فَقَالَ "" يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ هَذَا "". قَالُوا لاَ. وَاللَّهِ لاَ نَطْلُبُ ثَمَنَهُ إِلاَّ إِلَى اللَّهِ.
பாடம் : 27 பலருக்கும் கூட்டான ஒரு நிலத்தை அவர்கள் வக்ஃப் செய்தால் செல்லும்.
2771. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பனூ நஜ்ஜார் குலத்தார் அளித்த இடத்தில்) பள்ளிவாசல் கட்டும்படி உத்தரவிட்டபோது, ‘‘பனூ நஜ்ஜார் குலத்தாரே! உங்களுடைய இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘மாட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக! இதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்கள்.26

அத்தியாயம் : 55
2772. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ أَصَابَ عُمَرُ بِخَيْبَرَ أَرْضًا فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ أَصَبْتُ أَرْضًا لَمْ أُصِبْ مَالاً قَطُّ أَنْفَسَ مِنْهُ، فَكَيْفَ تَأْمُرُنِي بِهِ قَالَ "" إِنْ شِئْتَ حَبَّسْتَ أَصْلَهَا، وَتَصَدَّقْتَ بِهَا "". فَتَصَدَّقَ عُمَرُ أَنَّهُ لاَ يُبَاعُ أَصْلُهَا وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ، فِي الْفُقَرَاءِ وَالْقُرْبَى وَالرِّقَابِ وَفِي سَبِيلِ اللَّهِ وَالضَّيْفِ وَابْنِ السَّبِيلِ، وَلاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهَا أَنْ يَأْكُلَ مِنْهَا بِالْمَعْرُوفِ، أَوْ يُطْعِمَ صَدِيقًا غَيْرَ مُتَمَوِّلٍ فِيهِ.
பாடம் : 28 வக்ஃப் (அறக்கட்டளை ஆவணம்) எவ்வாறு எழுதப்பட வேண்டும்?
2772. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘நான் ஒரு சொத்தைப் பெற்றுள்ளேன். அதைவிட உயர்தரமான ஒரு சொத்தை இதுவரை நான் பெற்றதில்லை. நான் அதை என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் விரும் பினால் அதன் அசலை நீங்களே வைத்துக் கொண்டு, அதன் வருவாயை (மட்டும்) தர்மம் செய்துவிடலாம்” என்று கூறினார்கள். ஆகவே, உமர் (ரலி) அவர்கள், அதன் அடிமனை விற்கப்படக் கூடாது; அன்பளிப்பாகவும் (எவருக்கும்) தரப்படக் கூடாது; அதற்கு எவரும் வாரிசாகவும் முடியாது என்று நிபந்தனைகளிட்டு, ஏழைகளுக்காகவும் உறவினர்களுக்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற் காகவும், அல்லாஹ்வின் பாதையில் (அறப்போருக்குச்) செலவிடுவதற்காகவும், விருந்தினர்களுக்காகவும், வழிப்போக்கர்களுக்காகவும் தர்மம் (வக்ஃப்) செய்து விட்டார்கள்.

அதற்கு நிர்வாகப் பொறுப்பேற்கும் காப்பாளர் அதிலிருந்து நியாயமான முறையில் உண்பதிலும் விரயம் செய்யாமல் நண்பருக்கு உண்ணக் கொடுப்பதிலும் தவறில்லை என்றும் (அது தொடர்பான ஆவணத்தில்) அவர்கள் குறிப்பிட் டார்கள்.27

அத்தியாயம் : 55
2773. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ، رضى الله عنه وَجَدَ مَالاً بِخَيْبَرَ، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ، قَالَ "" إِنْ شِئْتَ تَصَدَّقْتَ بِهَا "". فَتَصَدَّقَ بِهَا فِي الْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَذِي الْقُرْبَى وَالضَّيْفِ.
பாடம் : 29 செல்வர், ஏழை, விருந்தினர் ஆகி யோருக்காக வக்ஃப் செய்தல்
2773. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் கைபரில் ஒரு செல்வத்தைப் பெற்றார்கள். நபி (ஸல்) அவர்களிடம் வந்து அதைத் தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் விரும்பினால் அதை (அதன் வருவாயை) தர்மம் செய்துவிடுங்கள்” என்று ஆலோசனை கூறினார்கள்.

ஆகவே, அதை (அதன் வருவாயை) ஏழை எளியவர்களுக்காகவும், வறியவர் களுக்காகவும், உறவினர்களுக்காகவும், விருந்தினர்களுக்காகவும் செலவிடும்படி தர்மம் (வக்ஃப்) செய்துவிட்டார்கள்.

அத்தியாயம் : 55
2774. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ سَمِعْتُ أَبِي، حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ أَمَرَ بِالْمَسْجِدِ وَقَالَ "" يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ هَذَا "". قَالُوا لاَ وَاللَّهِ لاَ نَطْلُبُ ثَمَنَهُ إِلاَّ إِلَى اللَّهِ.
பாடம் : 30 பள்ளிவாசலுக்காக நிலத்தை வக்ஃப் செய்தல்
2774. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா நகரத்திற்கு வந்தபோது பள்ளிவாசல் கட்டும்படி கட்டளையிட்டார்கள். மேலும், ‘‘பனூ நஜ்ஜார் குலத்தாரே! உங்களுடைய இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அக்குலத்தார், ‘‘நாங்கள் விலை கூறமாட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக! இதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 55
2775. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ عُمَرَ، حَمَلَ عَلَى فَرَسٍ لَهُ فِي سَبِيلِ اللَّهِ أَعْطَاهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِيَحْمِلَ عَلَيْهَا رَجُلاً، فَأُخْبِرَ عُمَرُ أَنَّهُ قَدْ وَقَفَهَا يَبِيعُهَا، فَسَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَبْتَاعَهَا فَقَالَ "" لاَ تَبْتَعْهَا، وَلاَ تَرْجِعَنَّ فِي صَدَقَتِكَ "".
பாடம் : 31 கால்நடைகள், குதிரைகள், பொருட் கள், பணம் ஆகியவற்றை வக்ஃப் செய்வது ‘‘ஒருவர் ஆயிரம் தீனார்களை (பொற் காசுகளை) அல்லாஹ்வின் பாதையில் வக்ஃப் செய்து, அதை வியாபாரியான தன் பணியாள் ஒருவரிடம் தந்து (அதை முதலீடு செய்து) வியாபாரம் செய்யும்படி கூறினார்; அதன் இலாபத்தை ஏழை எளியவர்களுக்கும் உறவினர்களுக்கும் தர்மம் செய்ய ஏற்பாடு செய்தார். இந்த மனிதர், அந்த ஆயிரம் தீனார் களின் வாயிலாகக் கிடைக்கும் இலாபத் திலிருந்து எதையேனும் உண்ணலாமா? அவர் (தர்மத்துக்குரியவர்களைக் குறிப்பிடும்போது) ஏழை எளியவர்களுக்குத் தர்மம் செய்யும்படி குறிப்பிடவில்லை யென்றாலும்கூட அதிலிருந்து உண்ண அவருக்கு அனுமதியுண்டா?” என்று ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் கேட்கப் பட்டது. அவர்கள், ‘‘அதிலிருந்து உண்பதற்கு அவருக்கு அனுமதியில்லை” என்று கூறினார்கள்.
2775. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் தமக்குச் சொந்தமான குதிரை ஒன்றின் மீது ஒரு மனிதரை ஏற்றி அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்காக) அனுப்பிவைத்தார்கள். அந்தக் குதிரையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்திருந்தார்கள். அந்த மனிதர் அதை விற்பதற்காக (சந்தையில்) நிறுத்திவைத்திருப்பதாக உமர் (ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அந்தக் குதிரையைத் தாமே வாங்கிக்கொள்ள (அனுமதி) கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அதை நீங்கள் வாங்க வேண்டாம்; கொடுத்த தர்மத்தை ஒருபோதும் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டாம்” என்று கூறினார்கள்.28



அத்தியாயம் : 55
2776. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَقْتَسِمْ وَرَثَتِي دِينَارًا، مَا تَرَكْتُ بَعْدَ نَفَقَةِ نِسَائِي وَمَئُونَةِ عَامِلِي فَهْوَ صَدَقَةٌ "".
பாடம் : 32 வக்ஃப் சொத்தை நிர்வகிப்பவருக் குரிய ஊதியம்
2776. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் வாரிசுகள் பொற்காசையோ வெள்ளி நாணயத்தையோ பங்கிட்டுக் கொள்ள (வாரிசுரிமையாகப் பெற)மாட்டார் கள்; என் துணைவியரின் செலவுகளையும் என் ஊழியரின் கூலியையும் தவிர நான் விட்டுச்செல்லும் அனைத்தும் தர்மமே யாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 55
2777. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ عُمَرَ، اشْتَرَطَ فِي وَقْفِهِ أَنْ يَأْكُلَ مَنْ وَلِيَهُ وَيُوكِلَ صَدِيقَهُ غَيْرَ مُتَمَوِّلٍ مَالاً.
பாடம் : 32 வக்ஃப் சொத்தை நிர்வகிப்பவருக் குரிய ஊதியம்
2777. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் வக்ஃப் செய்தபோது, அதை நிர்வாகம் செய்பவர் அதிலிருந்து உண்ணலாம் என்றும் அவர் தம் நண்பருக்கு (அதிலிருந்து) பணத்தை விரயம் செய்யாமல் உண்ணக் கொடுக்கலாம் என்றும் நிபந்தனையிட்டார்கள்.29

அத்தியாயம் : 55
2778. وَقَالَ عَبْدَانُ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عُثْمَانَ ـ رضى الله عنه ـ حَيْثُ حُوصِرَ أَشْرَفَ عَلَيْهِمْ وَقَالَ أَنْشُدُكُمْ وَلاَ أَنْشُدُ إِلاَّ أَصْحَابَ النَّبِيِّ صلى الله عليه وسلم، أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ حَفَرَ رُومَةَ فَلَهُ الْجَنَّةُ "". فَحَفَرْتُهَا، أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّهُ قَالَ "" مَنْ جَهَّزَ جَيْشَ الْعُسْرَةِ فَلَهُ الْجَنَّةُ "". فَجَهَّزْتُهُمْ. قَالَ فَصَدَّقُوهُ بِمَا قَالَ. وَقَالَ عُمَرُ فِي وَقْفِهِ لاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهُ أَنْ يَأْكُلَ. وَقَدْ يَلِيهِ الْوَاقِفُ وَغَيْرُهُ فَهْوَ وَاسِعٌ لِكُلٍّ.
பாடம் : 33 ஒருவர் ஒரு நிலத்தையோ கிணற்றையோ (பொதுவாக) வக்ஃப் செய்தாலோ, அல்லது மற்றமுஸ்லிம்கள் அந்தத் கிணற்றின் நீரைப் பயன்படுத்துவதைப் போன்று தமக்கும் அதைப் பயன் படுத்தும் உரிமையுண்டு என்று நிபந்தனையிட்டாலோ (செல்லும்). அனஸ் (ரலி) அவர்கள் ஒரு வீட்டை வக்ஃப் செய்தார்கள். (மதீனாவுக்கு) வரும்போதெல்லாம் அதில் அவர்கள் தங்குவார்கள். ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் தம் வீடுகளைத் தர்மம் செய்தார் கள். தம் பெண்மக்களில் (மணவிலக்கு பெற்று) திருப்பி அனுப்பப்பட்டவரிடம், ‘‘நீ தீங்கிழைக்காமலும் தீங்குக்கு ஆளாகாம லும் இங்கு தங்கிக்கொள்ளலாம்” என்று கூறினார்கள். ஆனால், மறுமணம் செய்து கொண்டு, தன்னிறைவு பெற்றுவிட்டால் அவருக்கு அதில் (தங்க) உரிமையில்லை என்று நிபந்தனையும் விதித்தார்கள். இப்னு உமர் (ரலி) அவர்கள், தம் தந்தை உமர் (ரலி) அவர்களின் வீட்டிலி ருந்து தமக்குக் கிடைத்த பங்கில் தம் குடும்பத்தாரில் தேவையுள்ளவர்கள் வசித்துக்கொள்ள வகை செய்தார்கள்.
2778. அபூஅப்திர் ரஹ்மான் அப்துல்லாஹ் பின் ஹபீப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள் (கலகக்காரர்களால்) முற்றுகையிடப்பட்ட போது அவர்களுக்கு மேலிருந்து (வீட்டுக் கூரை மீதிருந்து) பின்வருமாறு பேசினார்கள்:

அல்லாஹ்வை முன்வைத்து உங்களைக் கேட்கிறேன். நான் நபி (ஸல்) அவர்களின் தோழர்களைத் தவிர வேறுயாரிடமும் கேட்கவில்லை. ‘‘யார் யிரூமா’ எனும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர்வாரி (பொது மக்கள் நலனுக்காக வக்ஃப் செய்து)விடுகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற, நான் அதை (விலைக்கு வாங்கி) தூர் வாரி (வக்ஃபாக ஆக்கி)யது உங்களுக்குத் தெரியாதா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘எவர் பொருளாதார நெருக்கடியிலிருக்கும் (தபூக் போருக்கான) படையை (பொருளு தவி செய்து) தயார்படுத்துகிறாரோ அவருக் குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று கூற, நான் அதைத் தயார்படுத்தியது உங்களுக் குத் தெரியாதா? என்று கேட்டார்கள். அவர்கள் கூறியதை நபித்தோழர்கள் உண்மையென ஏற்றுக்கொண்டனர்.

உமர் (ரலி) அவர்கள் வக்ஃப் செய்த போது, ‘‘இதை நிர்வாகம் செய்பவர் இதிலி ருந்து (எடுத்து) உண்பதில் தவறில்லை” என்று குறிப்பிட்டார்கள். வக்ஃப் செய்த வரேகூட அதை நிர்வாகம் செய்யலாம். மற்றவர்களும் அதற்கு நிர்வாகிகளாக இருக்கலாம். ஆக, (அதை) நிர்வகிக்கும் எவருக்கும் அதிலிருந்து உண்ண அனுமதியுண்டு.

அத்தியாயம் : 55
2779. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ "". قَالُوا لاَ نَطْلُبُ ثَمَنَهُ إِلاَّ إِلَى اللَّهِ.
பாடம் : 34 வக்ஃப் செய்பவர், ‘‘இதற்கான விலையை நாம் அல்லாஹ்விடமே கோருகிறோம்” என்று கூறினால் அது செல்லும்.
2779. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘பனூ நஜ்ஜார் குலத்தாரே! உங்கள் தோட்டத்திற்கு என்னி டம் விலை சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் குலத்தார், ‘‘அதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 55
2780. وَقَالَ لِي عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي الْقَاسِمِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ خَرَجَ رَجُلٌ مِنْ بَنِي سَهْمٍ مَعَ تَمِيمٍ الدَّارِيِّ وَعَدِيِّ بْنِ بَدَّاءٍ فَمَاتَ السَّهْمِيُّ بِأَرْضٍ لَيْسَ بِهَا مُسْلِمٌ، فَلَمَّا قَدِمَا بِتَرِكَتِهِ فَقَدُوا جَامًا مِنْ فِضَّةٍ مُخَوَّصًا مِنْ ذَهَبٍ، فَأَحْلَفَهُمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، ثُمَّ وُجِدَ الْجَامُ بِمَكَّةَ فَقَالُوا ابْتَعْنَاهُ مِنْ تَمِيمٍ وَعَدِيٍّ. فَقَامَ رَجُلاَنِ مِنْ أَوْلِيَائِهِ، فَحَلَفَا لَشَهَادَتُنَا أَحَقُّ مِنْ شَهَادَتِهِمَا، وَإِنَّ الْجَامَ لِصَاحِبِهِمْ. قَالَ وَفِيهِمْ نَزَلَتْ هَذِهِ الآيَةُ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا شَهَادَةُ بَيْنِكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ الْمَوْتُ}
பாடம் : 35 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களில் ஒருவருக்கு இறப்பு நெருங்கும்போது அவர் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்தால், உங்களைச் சேர்ந்த நேர்மையான இருவர் உங்களிடையே சாட்சியம் அளிக்க வேண்டும். அல்லது நீங்கள் பயணம் செய்யும்போது உங்க ளுக்கு இறப்பு எனும் துன்பம் நேர்ந்து விட்டால், உங்களைச் சேராத வேறிருவர் (சாட்சிகளாக) இருக்கலாம். நீங்கள் (சாட்சிகள்மீது) சந்தேகம் கொள்வீர்களாயின், தொழுகைக்குப் பின்னர் அவ்விருவரையும் நிறுத்தி வையுங்கள். அப்போது அவ்விருவரும், ‘‘(எங்கள்) உறவினர்களே ஆனாலும் இ(ந்தச் சாட்சியத்)தை நாங்கள் விலைக்கு விற்கமாட்டோம்; அல்லாஹ்வின் (பெயரால் அளிக்கப்படுகின்ற) சாட்சியத்தை நாங்கள் மறைக்கவுமாட்டோம்; அவ்வாறு செய்தால், நாங்கள் பாவிகளாகிவிடுவோம்” என அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்ய வேண்டும். அவ்விருவரும் (பொய்ச் சாட்சியம் கூறிக்) குற்றத்துக்கு ஆளாகிவிட்டனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டால், யாருக்கு எதிராகக் குற்றம் புரிந்தார்களோ அவர் களில் (இறந்தவருக்கு) மிக நெருக்கமான வேறிருவர் அவ்விருவரின் இடத்தில் நிற்க வேண்டும். இவ்விருவரும், ‘‘எங்களது சாட்சியம் அவ்விருவரின் சாட்சியத்தைவிட மிகவும் வாய்மையானது; (இதில்) நாங்கள் எல்லை மீறவில்லை; அவ்வாறு மீறினால், நாங்கள் அநீதியிழைத்தவர் களாகிவிடுவோம்” என்று அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்ய வேண்டும். இதுதான் அவர்கள் முறைப்படி சாட்சியம் அளிப்பதற்கு, அல்லது தாம் சத்தியம் செய்த பின்னர் சத்தியம் (செய்யும் வாய்ப்பு மற்றவருக்குப்) போய்விடுமோ என அவர்கள் அஞ்சுவதற்கு ஏற்ற வழியாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்; (அவன் கட்டளைகளுக்குச்) செவிசாயுங்கள். பாவம் புரியும் கூட்டத்தாரை அல்லாஹ் நல்வழியில் செலுத்துவதில்லை. (5:106லி108) இங்கு (5:107ஆவது வசனத்தில்) யிகண்டு பிடிக்கப்பட்டால்’ என்பதைக் குறிக்க யிஉஸிர’ எனும் சொல் மூலத்தில் ஆளப்பட் டுள்ளது. (18:21ஆவது வசனத்தில்) யிகண்டு பிடிக்கச் செய்தோம்’ என்பதைச் சுட்ட ‘அஃஸர்னா’ எனும் சொல் ஆளப்பட்டுள் ளது. யிவெளிப்படுத்தப்படல்’ என்பது இதன் பொருளாகும்.
2780. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யிபனூ சஹ்ம்’ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் தமீமுத் தாரீ, அதீ பின் பத்தா ஆகியோருடன் பயணம் புறப்பட்டார்.30 பனூ சஹ்ம் குலத்தைச் சேர்ந்த அவர், ஒரு முஸ்லிம்கூட இல்லாத ஒரு பூமியில் இறந்துவிட்டார். தமீமுத் தாரீயும் அதீயும் அவர் விட்டுச்சென்ற (அவருடைய) சொத்துக்களை எடுத்துக்கொண்டு வந்த போது (அவற்றில்) தங்க வேலைப்பாடு செய்யப்பட்ட வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் காணவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் (தாம் நிரபராதிகள் என்று) சத்தியம் செய்யும்படி கூறினார்கள். பிறகு அந்தப் பாத்திரம் மக்காவில் (சிலரிடம்) காணப் பட்டது. அவர்கள், ‘‘நாங்கள் இதை தமீமிடமிருந்தும் அதீயிடமிருந்தும் வாங்கினோம்” என்று கூறினர்.

அப்போது (இறந்துபோன) சஹ்ம் குலத்தாரின் (நெருங்கிய) உறவினர்களில் இருவர் எழுந்து சத்தியம் செய்து, ‘‘எங்கள் சாட்சியம் அவர்கள் இருவரின் சாட்சியத்தைவிட அதிகத் தகுதி வாய்ந்ததாகும்; அந்தப் பாத்திரம் எங்கள் தோழருடையதே” என்று கூறினர். அவர்கள் தொடர்பாகவே இந்த வசனங்கள் (5:106லி108) அருளப்பெற்றன.

அத்தியாயம் : 55
2781. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ، أَوِ الْفَضْلُ بْنُ يَعْقُوبَ عَنْهُ حَدَّثَنَا شَيْبَانُ أَبُو مُعَاوِيَةَ، عَنْ فِرَاسٍ، قَالَ قَالَ الشَّعْبِيُّ حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ ـ رضى الله عنهما ـ أَنَّ أَبَاهُ اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ، وَتَرَكَ سِتَّ بَنَاتٍ، وَتَرَكَ عَلَيْهِ دَيْنًا، فَلَمَّا حَضَرَ جِدَادُ النَّخْلِ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَدْ عَلِمْتَ أَنَّ وَالِدِي اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ عَلَيْهِ دَيْنًا كَثِيرًا، وَإِنِّي أُحِبُّ أَنْ يَرَاكَ الْغُرَمَاءُ قَالَ "" اذْهَبْ فَبَيْدِرْ كُلَّ تَمْرٍ عَلَى نَاحِيَتِهِ "". فَفَعَلْتُ ثُمَّ دَعَوْتُهُ، فَلَمَّا نَظَرُوا إِلَيْهِ أُغْرُوا بِي تِلْكَ السَّاعَةَ، فَلَمَّا رَأَى مَا يَصْنَعُونَ أَطَافَ حَوْلَ أَعْظَمِهَا بَيْدَرًا ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ جَلَسَ عَلَيْهِ ثُمَّ قَالَ "" ادْعُ أَصْحَابَكَ "". فَمَا زَالَ يَكِيلُ لَهُمْ حَتَّى أَدَّى اللَّهُ أَمَانَةَ وَالِدِي، وَأَنَا وَاللَّهِ رَاضٍ أَنْ يُؤَدِّيَ اللَّهُ أَمَانَةَ وَالِدِي وَلاَ أَرْجِعَ إِلَى أَخَوَاتِي بِتَمْرَةٍ، فَسَلِمَ وَاللَّهِ الْبَيَادِرُ كُلُّهَا حَتَّى أَنِّي أَنْظُرُ إِلَى الْبَيْدَرِ الَّذِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَأَنَّهُ لَمْ يَنْقُصْ تَمْرَةً وَاحِدَةً. قَالَ أَبُو عَبْد اللَّهِ أُغْرُوا بِي يَعْنِي هِيجُوا بِي فَأَغْرَيْنَا بَيْنَهُمْ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ
பாடம் : 36 இறந்தவரின் கடன்களை, வாரிசு கள் வராமலேயே அவரால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் அடைக்கலாம்.
2781. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை உஹுத் போரின்போது கொல்லப்பட்டுவிட்டார்கள். அவர்கள் ஆறு பெண் மக்களை விட்டுச்சென்றார்கள். தம்மீது கடனையும் விட்டுச்சென்றார்கள். பேரீச்சம் பழங்களைப் பறிக்கும் காலம் வந்தபோது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ் வின் தூதரே! என் தந்தை உஹுத் போரின்போது கொல்லப்பட்டுவிட்டதையும் தம்மீது நிறையக் கடன்களை விட்டுச் சென்றிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள். கடன்காரர்கள் தங்களைப் பார்க்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்று கூறினேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ போய், ஒவ்வொரு (வகைப்) பேரீச்சம் பழத்தையும் களத்தில் அதனதன் இடத்தில் குவித்து வை” என்று கூறினார்கள்.

நான் அவ்வாறே செய்தேன்; பிறகு நபியவர்களை அழைத்தேன். கடன்காரர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் அந்த நேரத்தில் என்னிடம் இன்னும் அதிகமாக வற்புறுத்தலாயினர். அவர்கள் (இப்படிச்) செய்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், அவற்றில் மிகவும் பெரிய குவியலை மூன்றுமுறை சுற்றி வந்து அதன் அருகே உட்கார்ந்து கொண்டார்கள்.

பிறகு, ‘‘உன் கடன்காரர்களைக் கூப்பிடு” என்று சொன்னார்கள். (அவர்கள் வந்ததும்) என் தந்தையின் கடனை அல்லாஹ் நிறைவேற்றித்தரும்வரை, அவர்களுக்கு அளந்து கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரேயொரு பேரீச்சம் பழத்தைக்கூட எடுத்துக்கொண்டு என் சகோதரிகளிடம் திரும்பிச் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டாலும் (பரவாயில்லை); என் தந்தையின் கடன் சுமையை அல்லாஹ் தீர்த்து வைத்தால் போதும் என்று நான் இருந்தேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! குவியல் கள் அனைத்தும் அப்படியே (குறையாமல்) இருந்தன; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த குவியலை நான் பார்த்தேன். அதிலிருந்து ஒரேயொரு பேரீச்சம் பழம்கூட குறையாததைப் போன்று அப்படியே இருந்தது.31

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்:

(‘அதிகமாக வற்புறுத்தினார்கள்’ என்பதைக் குறிக்க) இங்கு மூலத்தில் ‘அஃகர்ரூ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. அதாவது என்னைத் திணறடித்துவிட்டார்கள். ‘‘நாம் அவர்களிடையே பகைமையையும் வெறுப்பையும் மூட்டினோம்” (5:14) எனும் வசனத்தொடரில் ‘அஃக்ரைனா’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 55