2711. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ مَرْوَانَ، وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، رضى الله عنهما يُخْبِرَانِ عَنْ أَصْحَابِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَمَّا كَاتَبَ سُهَيْلُ بْنُ عَمْرٍو يَوْمَئِذٍ كَانَ فِيمَا اشْتَرَطَ سُهَيْلُ بْنُ عَمْرٍو عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ لاَ يَأْتِيكَ مِنَّا أَحَدٌ وَإِنْ كَانَ عَلَى دِينِكَ إِلاَّ رَدَدْتَهُ إِلَيْنَا، وَخَلَّيْتَ بَيْنَنَا وَبَيْنَهُ. فَكَرِهَ الْمُؤْمِنُونَ ذَلِكَ، وَامْتَعَضُوا مِنْهُ، وَأَبَى سُهَيْلٌ إِلاَّ ذَلِكَ، فَكَاتَبَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى ذَلِكَ، فَرَدَّ يَوْمَئِذٍ أَبَا جَنْدَلٍ عَلَى أَبِيهِ سُهَيْلِ بْنِ عَمْرٍو، وَلَمْ يَأْتِهِ أَحَدٌ مِنَ الرِّجَالِ إِلاَّ رَدَّهُ فِي تِلْكَ الْمُدَّةِ، وَإِنْ كَانَ مُسْلِمًا، وَجَاءَ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ، وَكَانَتْ أُمُّ كُلْثُومٍ بِنْتُ عُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ مِمَّنْ خَرَجَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَئِذٍ وَهْىَ عَاتِقٌ، فَجَاءَ أَهْلُهَا يَسْأَلُونَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنْ يَرْجِعَهَا إِلَيْهِمْ، فَلَمْ يَرْجِعْهَا إِلَيْهِمْ لِمَا أَنْزَلَ اللَّهُ فِيهِنَّ {إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ اللَّهُ أَعْلَمُ بِإِيمَانِهِنَّ} إِلَى قَوْلِهِ {وَلاَ هُمْ يَحِلُّونَ لَهُنَّ}.
பாடம் : 1 இஸ்லாத்தை ஏற்பதிலும் ஒப்பந் தங்கள் உள்ளிட்ட முடிவுகளிலும் விதிக்கப் படுகின்ற செல்லுபடியாகும் நிபந்தனைகள்
2711. மர்வான் பின் அல்ஹகம் அவர்களும் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களும் நபித்தோழர்களிடமிருந்து அறிவித்ததாவது:

சுஹைல் பின் அம்ர் அவர்கள்2 அந்த (ஹுதைபியா உடன்படிக்கையின்) நாளில் ஒப்பந்தப் பத்திரம் எழுதியபோது அவர் நபி (ஸல்) அவர்களுக்கு விதித்த நிபந்தனைகளில், ‘‘எங்களிலிருந்து (மக்காவாசிகளிலிருந்து) ஒருவர் உம்மிடம் வந்தால்லிஅவர் உமது மார்க்கத்திலிருப்ப வராயினும் சரி லி அவரைத் திருப்பியனுப்பி விட வேண்டும்; எங்களுக்கும் அவருக்கு மிடையே நீர் ஒரு தடையாக இராமல் எங்களிடம் (முழுமையாக) அவரை ஒப்படைத்துவிட வேண்டும்” என்பதும் ஒன்றாக இருந்தது.

இதை முஸ்லிம்கள் வெறுத்தார்கள்; இதைக் கண்டு கோபமடைந்தார்கள். ஆனால், இந்த நிபந்தனையை ஏற்றாலன்றி (சமாதான ஒப்பந்தத்தை எழுத) முடியாது என்று சுஹைல் (தீர்மானமாக) மறுத்து விட்டார். நபி (ஸல்) அவர்கள் அதன் படியே ஒப்பந்தத்தை அவரிடம் எழுதி வாங்கினார்கள். ஆகவே, அன்றே அபூஜந்தல் (ரலி) அவர்களை அவருடைய தந்தை சுஹைல் பின் அம்ரிடம் திருப்பி யனுப்பிவிட்டார்கள். அந்த (ஒப்பந்தத்தின்) காலகட்டத்தில் தம்மிடம் (அபயம் தேடி) வந்த ஆண்கள் எவரையும் திருப்பி யனுப்பாமல் நபி (ஸல்) அவர்கள் இருந்ததில்லை; அவர் முஸ்லிமாக இருந்தாலும் சரி. (அவரையும் மக்காவிற்குத் திருப்பியனுப்பிவிடுவார்கள்.) முஸ்லிம் பெண்கள் சிலர் புலம்பெயர்ந்து (மதீனா) வந்தார்கள்.

அன்று (இணைவைப்பாளர்களின் தலைவன்) உக்பா பின் அபீமுஐத்தின் மகள் உம்மு குல்ஸூம் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் (அபயம் தேடி) வந்த பெண்களில் ஒருவராவார். அப்போது அவர்கள் இளம் பெண்ணாக இருந்தார்கள். ஆகவே, அவரது வீட்டார் நபி (ஸல்) அவர்களிடம் அவரைத் தங்களிடம் திருப்பி யனுப்பக் கோரினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை அவர்களிடம் திருப்பியனுப்பவில்லை.

அவர்கள் விஷயத்தில் அல்லாஹ், ‘‘இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் புலம்பெயர்ந்து உங்களிடம் வந்தால் (அவர்கள் இறைநம்பிக்கையாளர்களா என்பதைச்) சோதித்துப்பாருங்கள். அவர் களது இறைநம்பிக்கையை(க் குறித்து) அல்லாஹ்வே நன்கறிந்தவன் ஆவான். அவர்கள் இறைநம்பிக்கையுடையவர்கள் தான் என்று நீங்கள் கருதினால் அவர் களை இறைமறுப்பாளர்களிடம் திருப்பி யனுப்பாதீர்கள். அப்பெண்கள் அவர்களுக்கு (இறைமறுப்பாளர்களான அந்த ஆண்களுக்கு) அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர்; அந்த ஆண்களும் அப்பெண் களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களல்லர்” (60:10) எனும் வசனத்தை அருளியிருந்ததே (அவர்களைத் திருப்பியனுப்பாததற்குக்) காரணமாகும்.


அத்தியாயம் : 54
2713. قَالَ عُرْوَةُ فَأَخْبَرَتْنِي عَائِشَةُ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَمْتَحِنُهُنَّ بِهَذِهِ الآيَةِ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ } إِلَى {غَفُورٌ رَحِيمٌ}. قَالَ عُرْوَةُ قَالَتْ عَائِشَةُ فَمَنْ أَقَرَّ بِهَذَا الشَّرْطِ مِنْهُنَّ قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قَدْ بَايَعْتُكِ "". كَلاَمًا يُكَلِّمُهَا بِهِ، وَاللَّهِ مَا مَسَّتْ يَدُهُ يَدَ امْرَأَةٍ قَطُّ فِي الْمُبَايَعَةِ، وَمَا بَايَعَهُنَّ إِلاَّ بِقَوْلِهِ.
பாடம் : 1 இஸ்லாத்தை ஏற்பதிலும் ஒப்பந் தங்கள் உள்ளிட்ட முடிவுகளிலும் விதிக்கப் படுகின்ற செல்லுபடியாகும் நிபந்தனைகள்
2713. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த) அப்பெண்களை இறைவசனத்தின் (60:10லி12) கட்டளைப்படி சோதனை செய்து வந்தார்கள்.

இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்த னையை அப்பெண்களில் எவர் ஏற்றுக் கொள்கிறாரோ அவரிடம், ‘‘நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். இப்படி, அப்பெண்ணிடம் பேசத்தான் செய்வார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களின் கரம் விசுவாசப் பிரமாணம் பெறும்போது எந்தப் பெண்ணின் கையையும் தொட்டதில்லை. பெண்களிடம் அவர்கள் வாய்மொழியாகவே விசுவாசப் பிரமாணம் வாங்கினார்கள்.


அத்தியாயம் : 54
2714. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، قَالَ سَمِعْتُ جَرِيرًا ـ رضى الله عنه ـ يَقُولُ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَاشْتَرَطَ عَلَىَّ وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ.
பாடம் : 1 இஸ்லாத்தை ஏற்பதிலும் ஒப்பந் தங்கள் உள்ளிட்ட முடிவுகளிலும் விதிக்கப் படுகின்ற செல்லுபடியாகும் நிபந்தனைகள்
2714. ஜரீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தேன். அப்போது அவர்கள், இறைவனுக்குக் கீழ்ப்படிந்து வாழும் (முஸ்லிமான) ஒவ்வொருவருக்கும் நான் நலம் நாட வேண்டுமென்றும் எனக்கு நிபந்தனை விதித்தார்கள்.


அத்தியாயம் : 54
2715. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى إِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ.
பாடம் : 1 இஸ்லாத்தை ஏற்பதிலும் ஒப்பந் தங்கள் உள்ளிட்ட முடிவுகளிலும் விதிக்கப் படுகின்ற செல்லுபடியாகும் நிபந்தனைகள்
2715. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ‘ஸகாத்’ கொடுக்க வேண்டும்; எல்லா முஸ்லிம்களுக்கும் நலம் நாட வேண்டும்” என்ற நிபந்தனைகளை ஏற்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் விசுவாசப் பிரமாணம் செய்தேன்.

அத்தியாயம் : 54
2716. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ بَاعَ نَخْلاً قَدْ أُبِّرَتْ فَثَمَرَتُهَا لِلْبَائِعِ إِلاَّ أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ "".
பாடம் : 2 மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்சந்தோப்பை ஒருவர் விற்றால்...
2716. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட ஒரு பேரீச்ச மரத்தை விற்கிறாரோ அவருக்கே அதன் கனிகள் உரியவை யாகும்; வாங்கியவர் (கனிகள் தமக்கே சேர வேண்டுமென்று) நிபந்தனையிட்டி ருந்தால் தவிர.3

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 54
2717. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةََ،ـ رضى الله عنها ـ أَخْبَرَتْهُ أَنَّ بَرِيرَةَ جَاءَتْ عَائِشَةَ تَسْتَعِينُهَا فِي كِتَابَتِهَا، وَلَمْ تَكُنْ قَضَتْ مِنْ كِتَابَتِهَا شَيْئًا، قَالَتْ لَهَا عَائِشَةُ ارْجِعِي إِلَى أَهْلِكِ، فَإِنْ أَحَبُّوا أَنْ أَقْضِيَ عَنْكِ كِتَابَتَكِ، وَيَكُونَ وَلاَؤُكِ لِي فَعَلْتُ. فَذَكَرَتْ ذَلِكَ بَرِيرَةُ إِلَى أَهْلِهَا فَأَبَوْا وَقَالُوا إِنْ شَاءَتْ أَنْ تَحْتَسِبَ عَلَيْكِ فَلْتَفْعَلْ، وَيَكُونَ لَنَا وَلاَؤُكِ. فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهَا "" ابْتَاعِي فَأَعْتِقِي، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "".
பாடம் : 3 வியாபாரங்களில் விதிக்கப்படும் நிபந்தனைகள்
2717. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமைப் பெண்ணான) பரீரா, தனது விடுதலைப் பத்திரம் தொடர்பாக (அதில் குறிப்பிட்டுள்ள தொகையைக் கொடுப்பதற்காக) உதவி கேட்டு என்னிடம் வந்தார். அதுவரை தன் விடுதலைப் பத்திரத்தில் எழுதப்பட்டிருந்த தொகையில் எதையும் அவர் செலுத்தியிருக்கவில்லை. எனவே நான் அவரிடம், ‘‘நீ உன் உரிமையாளர் களிடம் திரும்பிச் சென்று, உனது விடுதலைப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தொகையை உன் சார்பாக நான் செலுத்தி விடுவதாகவும் உன் வாரிசுரிமை எனக்கே உரியதாய் இருக்க வேண்டுமென்றும் அவர்கள் விரும்பினால் நான் அவ்வாறே செய்கிறேன் என்றும் சொல்” எனக் கூறினேன்.

பரீராவும் இதை அவர்களிடம் சொல்ல அவர்கள் அதை (ஏற்க) மறுத்துவிட்டனர். மேலும், ‘‘ஆயிஷா உன்னை விடுதலை செய்வதன் வாயிலாக (அல்லாஹ்விடம்) நன்மையை நாடியிருந்தால் அவ்வாறே செய்யட்டும். ஆனால், உனது வாரிசுரிமை எங்களுக்கே உரியதாக இருக்கும்” என்று கூறிவிட்டனர். அதை ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்ல அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘நீ (பரீராவை) வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், விடுதலை செய்பவருக்கே வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறினார்கள்.4

அத்தியாயம் : 54
2718. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، قَالَ سَمِعْتُ عَامِرًا، يَقُولُ حَدَّثَنِي جَابِرٌ ـ رضى الله عنه أَنَّهُ كَانَ يَسِيرُ عَلَى جَمَلٍ لَهُ قَدْ أَعْيَا، فَمَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم فَضَرَبَهُ، فَدَعَا لَهُ، فَسَارَ بِسَيْرٍ لَيْسَ يَسِيرُ مِثْلَهُ ثُمَّ قَالَ "" بِعْنِيهِ بِوَقِيَّةٍ "". قُلْتُ لاَ. ثُمَّ قَالَ "" بِعْنِيهِ بِوَقِيَّةٍ "". فَبِعْتُهُ فَاسْتَثْنَيْتُ حُمْلاَنَهُ إِلَى أَهْلِي، فَلَمَّا قَدِمْنَا أَتَيْتُهُ بِالْجَمَلِ، وَنَقَدَنِي ثَمَنَهُ، ثُمَّ انْصَرَفْتُ، فَأَرْسَلَ عَلَى إِثْرِي، قَالَ "" مَا كُنْتُ لآخُذَ جَمَلَكَ، فَخُذْ جَمَلَكَ ذَلِكَ فَهْوَ مَالُكَ "". قَالَ شُعْبَةُ عَنْ مُغِيرَةَ عَنْ عَامِرٍ عَنْ جَابِرٍ أَفْقَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ظَهْرَهُ إِلَىَ الْمَدِينَةِ. وَقَالَ إِسْحَاقُ عَنْ جَرِيرٍ عَنْ مُغِيرَةَ فَبِعْتُهُ عَلَى أَنَّ لِي فَقَارَ ظَهْرِهِ حَتَّى أَبْلُغَ الْمَدِينَةَ. وَقَالَ عَطَاءٌ وَغَيْرُهُ لَكَ ظَهْرُهُ إِلَى الْمَدِينَةِ، وَقَالَ مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ شَرَطَ ظَهْرَهُ إِلَى الْمَدِينَةِ. وَقَالَ زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ جَابِرٍ وَلَكَ ظَهْرُهُ حَتَّى تَرْجِعَ. وَقَالَ أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ أَفْقَرْنَاكَ ظَهْرَهُ إِلَى الْمَدِينَةِ. وَقَالَ الأَعْمَشُ عَنْ سَالِمٍ عَنْ جَابِرٍ تَبَلَّغْ عَلَيْهِ إِلَى أَهْلِكَ. وَقَالَ عُبَيْدُ اللَّهِ وَابْنُ إِسْحَاقَ عَنْ وَهْبٍ عَنْ جَابِرٍ اشْتَرَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِوَقِيَّةٍ. وَتَابَعَهُ زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ جَابِرٍ. وَقَالَ ابْنُ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ وَغَيْرِهِ عَنْ جَابِرٍ أَخَذْتُهُ بِأَرْبَعَةِ دَنَانِيرَ. وَهَذَا يَكُونُ وَقِيَّةً عَلَى حِسَابِ الدِّينَارِ بِعَشَرَةِ دَرَاهِمَ. وَلَمْ يُبَيِّنِ الثَّمَنَ مُغِيرَةُ عَنِ الشَّعْبِيِّ عَنْ جَابِرٍ، وَابْنُ الْمُنْكَدِرِ وَأَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ. وَقَالَ الأَعْمَشُ عَنْ سَالِمٍ عَنْ جَابِرٍ وَقِيَّةُ ذَهَبٍ. وَقَالَ أَبُو إِسْحَاقَ عَنْ سَالِمٍ عَنْ جَابِرٍ بِمِائَتَىْ دِرْهَمٍ. وَقَالَ دَاوُدُ بْنُ قَيْسٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ عَنْ جَابِرٍ اشْتَرَاهُ بِطَرِيقِ تَبُوكَ، أَحْسِبُهُ قَالَ بِأَرْبَعِ أَوَاقٍ. وَقَالَ أَبُو نَضْرَةَ عَنْ جَابِرٍ اشْتَرَاهُ بِعِشْرِينَ دِينَارًا. وَقَوْلُ الشَّعْبِيِّ بِوَقِيَّةٍ أَكْثَرُ. الاِشْتِرَاطُ أَكْثَرُ وَأَصَحُّ عِنْدِي. قَالَهُ أَبُو عَبْدِ اللَّهِ.
பாடம் : 4 வாகனத்தை விற்பவர் அதில் குறிப்பிட்ட தூரம்வரை பயணம் செய்து கொள்வேன் என நிபந்தனையிட்டால் அது செல்லும்.
2718. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு போரிலிருந்து திரும்புகையில்) நான் களைப்படைந்துவிட்ட எனது ஒட்டகம் ஒன்றில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் சென்று அதை அடித்தார்கள். மேலும், அதற்காக துஆ செய்தார்கள். உடனே அது இதற்குமுன் இதுபோல் எப்போதும் ஓடியதில்லை என்னும் அளவுக்கு வேகமாக ஓடத் தொடங்கியது. பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை எனக்கு ஒரு யிஊக்கியா’வுக்கு நீங்கள் விற்றுவிடுங்கள்” என்று கேட்டார்கள்.

அவ்வாறே, என் வீட்டாரிடம் போய்ச் சேரும்வரை அதில் நான் பயணம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் இட்டுவிட்டு அதை அவர்களுக்கு நான் விற்றுவிட்டேன். (அவர்களும் என் நிபந்தனையை ஒப்புக் கொண்டார்கள்.)

நாங்கள் (மதீனாவுக்கு) வந்து சேர்ந்த போது அந்த ஒட்டகத்தை நபி (ஸல்) அவர்களிடம் (ஒப்படைக்க) கொண்டு சென்றேன். அவர்கள் அதன் விலையை எனக்குக் கொடுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் செல்ல, எனக்குப் பின்னாலேயே நபி (ஸல்) அவர்கள் ஆளனுப்பி (என்னை மீண்டும் வரவழைத்து), ‘‘உன் ஒட்டகத்தை நான் எடுத்துக்கொள்ளப்போவதில்லை. உனது அந்த ஒட்டகத்தை நீயே எடுத்துக் கொள். அது உனது செல்வம்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மொத்தம் பதிமூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மதீனாவரை அந்த ஒட்டகத்தில் என்னை ஏற்றியனுப்பினார்கள்” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘நான் மதீனாவை அடையும்வரை அதன் முதுகில் பயணம் செய்துகொள்வேன் என்ற நிபந்தனையின் பேரில் நபி (ஸல்) அவர்களுக்கு அதை நான் விற்றேன்” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

வேறுசில அறிவிப்புகளில் நபி (ஸல்) அவர்களே அந்த அனுமதியை ஜாபிர் (ரலி) அவர்களுக்கு வழங்கினார்கள் என்று காணப்படுகிறது.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகின்றேன்:

இவ்வாறு ஜாபிர் (ரலி) அவர்கள் நிபந்தனையிட்டார்கள் என்ற அறிவிப்பே அதிகமாக வந்துள்ளது; அதுதான் என்னிடம் சரியான அறிவிப்பும் ஆகும்.

சில அறிவிப்புகளில், ஓர் யிஊக்கியா’ வுக்கு நபி (ஸல்) அவர்கள் அதை வாங்கினார்கள் என வந்துள்ளது.

நான்கு பொற்காசுகளுக்கு அதை நான் வாங்கிக்கொள்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாகச் சில அறிவிப்புகளில் காணப்படுகிறது. இது, ஒரு பொற்காசு பத்து வெள்ளிக்காசுகளுக்கு ஈடாகும் என்ற கணக்குப்படி ஓர் யிஊக்கியா’ ஆகும். சிலர் விலையைக் குறிப்பிடவில்லை.

வேறுசில அறிவிப்புகளில், தங்கத்தில் ஓர் யிஊக்கியா’ என்று சொல்லப்பட்டுள்ளது. இருநூறு வெள்ளிக்காசுகள் என்று சிலர் அறிவித்துள்ளனர்.

தபூக் சாலையில் அந்த ஒட்டகத்தை நபி (ஸல்) அவர்கள் விலைக்கு வாங்கினார் கள்; நான்கு யிஊக்கியா’க்களுக்கு வாங்கிய தாகவே நான் கருதுகிறேன் என்று அறிவிப்பாளர்கள் சிலர் அறிவித்துள்ளனர். யிஇருபது பொற்காசுகளுக்கு’ என்றும், ஓர் யிஊக்கியா’வைவிட அதிகமான தொகைக்கு என்றும் அறிவிக்கப்படுகிறது.

அத்தியாயம் : 54
2719. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَتِ الأَنْصَارُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم اقْسِمْ بَيْنَنَا وَبَيْنَ إِخْوَانِنَا النَّخِيلَ. قَالَ "" لاَ "". فَقَالَ تَكْفُونَا الْمَئُونَةَ وَنُشْرِكُكُمْ فِي الثَّمَرَةِ. قَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا.
பாடம் : 5 கொடுக்கல் வாங்கலில் விதிக்கப் படும் நிபந்தனைகள்
2719. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘(எங்கள்) பேரீச்ச மரங்களை எங்களுக்கும் எங்கள் (முஹாஜிர்) சகோதரர்களுக்கு மிடையே பங்கிட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் யிவேண்டாம்’ என்று கூறவே, அன்சாரிகள், ‘‘நீங்கள் எங்களுக்குப் பதிலாக (எங்கள் நிலத்தில்) உழையுங்கள்; நாங்கள் விளைச்சலை உங்களுடன் பங்கிட்டுக் கொள்கிறோம்” என்று (முஹாஜிர்களிடம்) கூறினார்கள். முஹாஜிர்கள், ‘‘செவியேற் றோம்; கட்டுப்பட்டோம் (உங்கள் நிபந் தனையை ஏற்றுக்கொண்டோம்)” என்று சொன்னார்கள்.5


அத்தியாயம் : 54
2720. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ أَعْطَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَيْبَرَ الْيَهُودَ أَنْ يَعْمَلُوهَا وَيَزْرَعُوهَا، وَلَهُمْ شَطْرُ مَا يَخْرُجُ مِنْهَا.
பாடம் : 5 கொடுக்கல் வாங்கலில் விதிக்கப் படும் நிபந்தனைகள்
2720. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிகைபர்’ நிலங்களை (அங்கிருந்த) யூதர் களுக்கு, ‘அவற்றில் அவர்கள் உழைத்து விவசாயம் செய்ய வேண்டும்’ என்றும், ‘அவற்றிலிருந்து வரும் விளைச்சலில் பாதி அவர்களுக்குரியது’ என்றும் நிபந்தனையிட்டுக் கொடுத்தார்கள்.6

அத்தியாயம் : 54
2721. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَحَقُّ الشُّرُوطِ أَنْ تُوفُوا بِهِ مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الْفُرُوجَ "".
பாடம் : 6 திருமண ஒப்பந்தத்தின்போது மணக்கொடையை (மஹ்ர்) நிர்ணயிப்ப தில் விதிக்கப்படும் நிபந்தனைகள் ‘‘நிபந்தனைகள் விதிக்கப்படும்போது உரிமைகள் துண்டிக்கப்படுகின்றன. நீ எதை நிபந்தனையிட்டாயோ அது உனக்குண்டு” என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.7 மிஸ்வர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் மருமகன் ஒருவரை (அபுல்ஆஸ் (ரலி) அவர்களை) நினைவுகூர்ந்து, (அவரது மாமனாரான) தம்(முடன் அவர் வைத்திருந்த) உறவு முறையில் நல்ல விதமாக நடந்துகொண்ட தாக மிகவும் புகழ்ந்துரைத்தார்கள். ‘‘அவர் என்னிடம் பேசியபோது உண்மையே பேசினார். எனக்கு வாக்களித்தபோது, அதை எனக்கு நிறைவேற்றித்தந்தார்” என்று கூறினார்கள்.8
2721. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந் தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நீங்கள் (அவர்களிடமிருந்து) ஏற்றுக்கொண்ட நிபந்தனையே ஆகும்.

இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 54
2722. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ حَنْظَلَةَ الزُّرَقِيَّ، قَالَ سَمِعْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ ـ رضى الله عنه ـ يَقُولُ كُنَّا أَكْثَرَ الأَنْصَارِ حَقْلاً، فَكُنَّا نُكْرِي الأَرْضَ، فَرُبَّمَا أَخْرَجَتْ هَذِهِ وَلَمْ تُخْرِجْ ذِهِ، فَنُهِينَا عَنْ ذَلِكَ، وَلَمْ نُنْهَ عَنِ الْوَرِقِ.
பாடம் : 7 நிலக் குத்தகையில் விதிக்கப்படும் நிபந்தனைகள்
2722. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளிலேயே வயல்கள் அதிகம் உடையவர்களாக நாங்கள் இருந்தோம். ஆகவே, விளைநிலங்களை நாங்கள் குத்தகைக்கு விட்டுவந்தோம். சில வேளை களில் இந்தப் பகுதி விளைச்சலைத் தரும்; அந்தப் பகுதி விளைச்சலைத் தராது. ஆகவே, அவ்விதம் நிபந்தனையிட்டு, குத்தகைக்கு விட வேண்டாம் என்று நாங்கள் தடுக்கப்பட்டோம். (வெள்ளிக் காசுகளான) திர்ஹங்களுக்குப் பகரமாக குத்தகைக்கு விட வேண்டாம் என்று நாங்கள் தடுக்கப்படவில்லை.9

அத்தியாயம் : 54
2723. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ، وَلاَ تَنَاجَشُوا، وَلاَ يَزِيدَنَّ عَلَى بَيْعِ أَخِيهِ، وَلاَ يَخْطُبَنَّ عَلَى خِطْبَتِهِ، وَلاَ تَسْأَلِ الْمَرْأَةُ طَلاَقَ أُخْتِهَا لِتَسْتَكْفِئَ إِنَاءَهَا "".
பாடம் : 8 திருமணத்தில் விதிக்கக் கூடாத நிபந்தனைகள்
2723. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கிராமத்திலிருந்து (விற்பனைக்காகச் சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர் வாசி விற்றுக்கொடுக்க வேண்டாம், வாங்கும் எண்ணமின்றி விலையை ஏற்றி விடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம். தம் சகோதரர் (ஒருவர்) வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிட வேண்டாம். தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக்கொண்டிருக்கும் போது இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம். ஒரு பெண், தனது பாத்திரத்தை நிரப்பிக்கொள்வதற்காக தன் சகோதரியை (சக்களத்தியை) மணவிலக்குச் செய்துவிடுமாறு (தன் கணவனிடம்) கேட்க வேண்டாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.10

அத்தியாயம் : 54
2724. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، رضى الله عنهم أَنَّهُمَا قَالاَ إِنَّ رَجُلاً مِنَ الأَعْرَابِ أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولَ اللَّهِ أَنْشُدُكَ اللَّهَ إِلاَّ قَضَيْتَ لِي بِكِتَابِ اللَّهِ. فَقَالَ الْخَصْمُ الآخَرُ وَهْوَ أَفْقَهُ مِنْهُ نَعَمْ فَاقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ، وَائْذَنْ لِي. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قُلْ "". قَالَ إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا، فَزَنَى بِامْرَأَتِهِ، وَإِنِّي أُخْبِرْتُ أَنَّ عَلَى ابْنِي الرَّجْمَ، فَافْتَدَيْتُ مِنْهُ بِمِائَةِ شَاةٍ وَوَلِيدَةٍ، فَسَأَلْتُ أَهْلَ الْعِلْمِ فَأَخْبَرُونِي أَنَّمَا عَلَى ابْنِي جَلْدُ مِائَةٍ، وَتَغْرِيبُ عَامٍ، وَأَنَّ عَلَى امْرَأَةِ هَذَا الرَّجْمَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ، الْوَلِيدَةُ وَالْغَنَمُ رَدٌّ، وَعَلَى ابْنِكَ جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، اغْدُ يَا أُنَيْسُ إِلَى امْرَأَةِ هَذَا فَإِنِ اعْتَرَفَتْ فَارْجُمْهَا "". قَالَ فَغَدَا عَلَيْهَا فَاعْتَرَفَتْ، فَأَمَرَ بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرُجِمَتْ.
பாடம் : 9 குற்றவியல் தண்டனைகளில் விதிக்கக் கூடாத நிபந்தனைகள்
2724. அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:

கிராமவாசிகளில் ஒருவர் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் சட்டப்படியே நீங்கள் எனக்குத் தீர்ப்ப ளிக்கும்படி நான் அல்லாஹ்வை முன்வைத்துத் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்; அவரைவிட விளக்கமுடையவராக இருந்த அவருடைய எதிரி, ‘‘ஆம், எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். ‘‘என்னை(ப் பேச) அனுமதியுங்கள்” என்று கிராமவாசி கூற நபி (ஸல்) அவர்கள், ‘‘சொல்” என்று கூறினார்கள்.

அவர், ‘‘என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்றுவிட வேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, நான் (இந்தத் தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக) அவனுக் காக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாகத் தந்தேன். பிறகு அறிஞர்களிடம் நான் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும்தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி(ந்து கொல்லும்) தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்றும் என்னிடம் தெரிவித்த னர்” என்று கூறினார்.

இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன். அடிமைப் பெண்ணும் ஆடுகளும் (உம்மிடமே) திருப்பித் தரப்பட வேண்டும். உம்முடைய மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்” (என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ் பின் ளஹ்ஹாக் (ரலி) அவர்களை நோக்கி) ‘‘உனைஸே! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று, அவள் (தன் விபசாரக் குற்றத்தை) ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுங்கள்” என்று கூறினார்கள்.

அவ்வாறே, உனைஸ் (ரலி) அவர்கள் அப்பெண்ணிடம் சென்று விசாரிக்க, அவளும் (தன் குற்றத்தை) ஒப்புக்கொண்டாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளைக் கல்லெறிந்து கொன்றுவிடும்படி உத்தரவிட, அவ்வாறே அவள் கல்லெறிந்து கொல்லப்பட்டாள்.11

அத்தியாயம் : 54
2726. حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ الْمَكِّيُّ، عَنْ أَبِيهِ، قَالَ دَخَلْتُ عَلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلَتْ عَلَىَّ بَرِيرَةُ وَهْىَ مُكَاتَبَةٌ، فَقَالَتْ يَا أُمَّ الْمُؤْمِنِينَ اشْتَرِينِي فَإِنَّ أَهْلِي يَبِيعُونِي فَأَعْتِقِينِي قَالَتْ نَعَمْ. قَالَتْ إِنَّ أَهْلِي لاَ يَبِيعُونِي حَتَّى يَشْتَرِطُوا وَلاَئِي. قَالَتْ لاَ حَاجَةَ لِي فِيكِ. فَسَمِعَ ذَلِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوْ بَلَغَهُ، فَقَالَ "" مَا شَأْنُ بَرِيرَةَ فَقَالَ اشْتَرِيهَا فَأَعْتِقِيهَا وَلْيَشْتَرِطُوا مَا شَاءُوا "". قَالَتْ فَاشْتَرَيْتُهَا فَأَعْتَقْتُهَا، وَاشْتَرَطَ أَهْلُهَا وَلاَءَهَا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ، وَإِنِ اشْتَرَطُوا مِائَةَ شَرْطٍ "".
பாடம் : 10 விடுதலை ஆவணம் அளிக்கப்பட்ட அடிமை (முகாத்தப்), தான் விடுதலை செய்யப்படுவதற்காக விற்கப்படுவதை ஏற்கும்போது விதிக்கும் செல்லத் தக்க நிபந்தனைகள்
2726. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுக் கப்பட்டிருந்த அடிமைப் பெண்ணான பரீரா என்னிடம் வந்து, ‘‘இறைநம்பிக்கை யாளர்களின் அன்னையே! என் உரிமை யாளர்கள் என்னை விற்கப்போகிறார்கள். எனவே, என்னை நீங்கள் (விலைக்கு வாங்கி) விடுதலை செய்துவிடுங்கள்” என்று கூறினார். நான், ‘‘சரி (அப்படியே செய்வோம்)” என்று கூறினேன். அவர், ‘‘என் உரிமையாளர்கள், என் வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனை யிடாமல் என்னை விற்கமாட்டார்கள்” என்றார்.

அதற்கு நான், ‘‘அப்படியென்றால். உன்(னை வாங்க வேண்டிய) தேவை எனக்கில்லை” என்று கூறினேன். இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றபோதுலி அல்லது இந்தச் செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோதுலி அவர்கள், ‘‘பரீராவின் விஷயம் என்ன?” என்று கேட்டுவிட்டு, ‘‘அவர்கள் விரும்பியதையெல்லாம் நிபந்தனையிட்டுக்கொள்ளட்டும். நீ அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு” என்று கூறினார்கள்.

ஆகவே, நான் அவரை வாங்கி விடுதலை செய்துவிட்டேன். அவருடைய உரிமையாளர்கள், ‘‘அவரது வாரிசுரிமை எங்களுக்கே உரியது” என்று நிபந்தனை விதித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘(அடிமையை) விடுதலை செய்தவருக்கே (அவ்வடிமையின்) வாரிசுரிமை உரியதாகும்; அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 54
2727. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ التَّلَقِّي، وَأَنْ يَبْتَاعَ الْمُهَاجِرُ لِلأَعْرَابِيِّ، وَأَنْ تَشْتَرِطَ الْمَرْأَةُ طَلاَقَ أُخْتِهَا، وَأَنْ يَسْتَامَ الرَّجُلُ عَلَى سَوْمِ أَخِيهِ، وَنَهَى عَنِ النَّجْشِ، وَعَنِ التَّصْرِيَةِ. تَابَعَهُ مُعَاذٌ وَعَبْدُ الصَّمَدِ عَنْ شُعْبَةَ. وَقَالَ غُنْدَرٌ وَعَبْدُ الرَّحْمَنِ نُهِيَ. وَقَالَ آدَمُ نُهِينَا. وَقَالَ النَّضْرُ وَحَجَّاجُ بْنُ مِنْهَالٍ نَهَى.
பாடம் : 11 மணவிலக்கில் விதிக்கப்படும் நிபந்தனைகள் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்), ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்), அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) ஆகியோர், ‘‘(ஒருவர் தம் மனைவிக்கு மணவிலக்கு அளிக்கும்போது, ‘நீ மணவிலக்குச் செய்யப்படுவாய்; இவ்வாறு செய்தால்’ என்று) மணவிலக்கை (தலாக்) முதலாவதாக(வும் நிபந்தனையை அடுத்தும்) கூறினாலும், (‘நீ இவ்வாறு செய்தால் மணவிலக்குச் செய்யப்படுவாய்’ என்று நிபந்தனையை முதலிலும்) மண விலக்கை அடுத்து(ம்) கூறினாலும் அவர் தமது நிபந்தனைக்கு உரியவர்தான்” என்று கூறுகின்றனர்.12
2727. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(சந்தைக்கு வருவதற்கு முன்பு மொத்த) வியாபாரிகளை வழியில் எதிர்கொண்டு சரக்குகளை வாங்குவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். உள்ளூர்வாசி கிராமவாசிக்காக வாங்கித் தருவதையும், ஒரு பெண் தன் சகோதரிக்கு (சக்களத்திக்கு) மணவிலக்கு அளிக்கும்படி நிபந்தனையிடுவதை யும், தம் சகோதரன் விலை பேசும் அதே பொருளை, ஒருவர் தாமும் விலை பேசுவதையும், வாங்கும் நோக்கமின்றி (ஒரு பொருளுக்கு) அதிக விலை கேட்டு, (வேண்டுமென்றே) விலை ஏற்றிவிடுவதையும், (ஆடு, மாடுகளின்) மடியை கனக்கச் செய்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.13

இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் சிலவற்றில், யிதடை செய்யப்பட்டது’ என்றும், வேறுசிலவற்றில் யிஎங்களுக்குத் தடை செய்யப்பட்டது’ என்றும், இன்னும் சிலவற்றில் யிதடை செய்தார்கள்’ என்றும் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 54
2728. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُ قَالَ أَخْبَرَنِي يَعْلَى بْنُ مُسْلِمٍ، وَعَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، يَزِيدُ أَحَدُهُمَا عَلَى صَاحِبِهِ وَغَيْرُهُمَا قَدْ سَمِعْتُهُ يُحَدِّثُهُ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ إِنَّا لَعِنْدَ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ حَدَّثَنِي أُبَىُّ بْنُ كَعْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مُوسَى رَسُولُ اللَّهِ "" فَذَكَرَ الْحَدِيثَ {قَالَ أَلَمْ أَقُلْ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا} كَانَتِ الأُولَى نِسْيَانًا، وَالْوُسْطَى شَرْطًا، وَالثَّالِثَةُ عَمْدًا {قَالَ لاَ تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ وَلاَ تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا}. {لَقِيَا غُلاَمًا فَقَتَلَهُ} فَانْطَلَقَا فَوَجَدَا جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ فَأَقَامَهُ. قَرَأَهَا ابْنُ عَبَّاسٍ أَمَامَهُمْ مَلِكٌ.
பாடம் : 12 மக்களிடம் விதிக்கப்படும் வாய்மொழி நிபந்தனைகள்
2728. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்:

உபை பின் கஅப் (ரலி) அவர்கள், ‘‘இறைத்தூதரான மூசா (அலை) அவர்கள்” என்று தொடங்கி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மூசா (அலை) அவர்கள் தொடர்பாகக்) கூறிய முழு ஹதீஸையும் சொல்லத் தொடங்கினார்கள்:

களிர் (அலை) அவர்கள், ‘‘உங்களால் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று உங்களிடம் நான் கூற வில்லையா?” என்று (மூசா (அலை) அவர்களை நோக்கிக்) கேட்டார்கள் (18:72). (மூசா (அலை) அவர்கள் களிர் (அலை) அவர்களின் நடவடிக்கைகளை ஆட்சே பித்து) முதல் முறையாகக் கேட்டது மறதியால் கேட்டதாகும்; நடுவில் சொன்னது அவர் விதித்த நிபந்தனையாகும்; மூன்றாவது முறை கேட்டது, வேண்டுமென்றே செய்ததாகும்.14

(இது தொடர்பான இறைவசனங்கள் வருமாறு:)

நான் மறந்துபோனதற்காக என்னை (திரும்பிப்போகச் சொல்லி)த் தண்டித்து விடாதீர்கள். என் விஷயத்தில் கடுமையாக நடந்துகொள்ளாதீர்கள். (18:73)

பிறகு இருவரும் ஒரு சிறுவனைச் சந்தித்தார்கள்; அப்போது, அவர் (களிர்) அவனைக் கொன்றுவிட்டார். (18:74)

மேலும், அவர்கள் தொடர்ந்து நடந்தார்கள்... அங்கே கீழே விழலாமா என யோசித்துக்கொண்டிருந்த ஒரு சுவரை அவ்விருவரும் கண்டார்கள். உடனே அவர் (களிர்), அதைச் செப்பனிட்டு நிறுத்தி வைத்தார். (18:77)

‘‘அவர்களுக்கப்பால் (வராஅஹும்) ஓர் அரசன் இருந்தான்” (18:79) என்பதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘‘அவர்களுக்கு முன்னால் (அமாமஹும்) ஓர் அரசன் இருந்தான்” என்று வாசித்துள்ளார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 54
2729. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ جَاءَتْنِي بَرِيرَةُ فَقَالَتْ كَاتَبْتُ أَهْلِي عَلَى تِسْعِ أَوَاقٍ فِي كُلِّ عَامٍ أُوقِيَّةٌ، فَأَعِينِينِي. فَقَالَتْ إِنْ أَحَبُّوا أَنْ أَعُدَّهَا لَهُمْ، وَيَكُونَ وَلاَؤُكِ لِي فَعَلْتُ. فَذَهَبَتْ بَرِيرَةُ إِلَى أَهْلِهَا، فَقَالَتْ لَهُمْ، فَأَبَوْا عَلَيْهَا، فَجَاءَتْ مِنْ عِنْدِهِمْ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسٌ، فَقَالَتْ إِنِّي قَدْ عَرَضْتُ ذَلِكَ عَلَيْهِمْ فَأَبَوْا إِلاَّ أَنْ يَكُونَ الْوَلاَءُ لَهُمْ. فَسَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَخْبَرَتْ عَائِشَةُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" خُذِيهَا وَاشْتَرِطِي لَهُمُ الْوَلاَءَ، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "". فَفَعَلَتْ عَائِشَةُ، ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي النَّاسِ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ "" مَا بَالُ رِجَالٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ مَا كَانَ مِنْ شَرْطٍ لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَهْوَ بَاطِلٌ، وَإِنْ كَانَ مِائَةَ شَرْطٍ، قَضَاءُ اللَّهِ أَحَقُّ، وَشَرْطُ اللَّهِ أَوْثَقُ، وَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "".
பாடம் : 13 (அடிமையின்) வாரிசுரிமையில் விதிக்கப்படும் நிபந்தனைகள்
2729. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமைப் பெண்) பரீரா என்னிடம் வந்து, ‘‘நான் என் உரிமையாளர்களிடம் ஒவ்வோர் ஆண்டும் ஓர் யிஊக்கியா’ வீதம் ஒன்பது ஊக்கியாக்கள் தருவதாகக் கூறி விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கியுள் ளேன். ஆகவே, எனக்கு உதவி செய்யுங் கள்” என்று கூறினார். அதற்கு நான், ‘‘அவர்கள் விரும்பினால் (ரொக்கமாக) நான் ஒன்பது ஊக்கியாக்களையும் (எண்ணிக்) கொடுத்துவிடுகிறேன். ஆனால், உன் வாரிசுரிமை எனக்கே சேர வேண்டும்” என்று கூறினேன். பரீரா, அவருடைய உரிமையாளர்களிடம் சென்று அவர்களிடம் இதைக் கூறினார். அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள்.

அவர்களிடமிருந்து (திரும்பி) வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) அமர்ந்திருந்தார்கள். (என்னிடம்) பரீரா, ‘‘நான் நீங்கள் கூறியதை அவர்களிடம் எடுத்துரைத்தேன்; அவர்கள், வாரிசுரிமை தங்களுக்கே வேண்டும் என்று கூறி உங்கள் நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்டார்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் இதைச் செவியுற்றுக் கொண்டிருந்ததால், நான் நபி (ஸல்) அவர்களுக்கு விவரத்தைக் கூறினேன். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘பரீராவை நீ வாங்கிக்கொண்டு, அவரது வாரிசுரிமை அவர்களுக்கே உரியது என்று நிபந்தனையிடு (பின்னர் பார்த்துக்கொள்வோம்). ஏனெனில், வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியதாகும்” என்று கூறினார்கள். நானும் அவ்வாறே செய்தேன்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே (உரையாற்ற) எழுந்து நின்று, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘‘சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளையெல்லாம் அவர்கள் விதிக்கிறார்களே! இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனை எதுவாயினும் அது செல்லாது; அவர்கள் நூறுமுறை நிபந்தனையிட்டாலும் சரியே. அல்லாஹ்வின் தீர்ப்பே பின்பற்றத் தக்கதாகும். அல்லாஹ் வின் நிபந்தனையே உறுதியானதாகும். (அடிமையின்) வாரிசுரிமை (அவனை) விடுதலை செய்தவருக்கே உரியதாகும்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 54
2730. حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى أَبُو غَسَّانَ الْكِنَانِيُّ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا فَدَعَ أَهْلُ خَيْبَرَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَامَ عُمَرُ خَطِيبًا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ عَامَلَ يَهُودَ خَيْبَرَ عَلَى أَمْوَالِهِمْ، وَقَالَ "" نُقِرُّكُمْ مَا أَقَرَّكُمُ اللَّهُ "". وَإِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ خَرَجَ إِلَى مَالِهِ هُنَاكَ فَعُدِيَ عَلَيْهِ مِنَ اللَّيْلِ، فَفُدِعَتْ يَدَاهُ وَرِجْلاَهُ، وَلَيْسَ لَنَا هُنَاكَ عَدُوٌّ غَيْرُهُمْ، هُمْ عَدُوُّنَا وَتُهَمَتُنَا، وَقَدْ رَأَيْتُ إِجْلاَءَهُمْ، فَلَمَّا أَجْمَعَ عُمَرُ عَلَى ذَلِكَ أَتَاهُ أَحَدُ بَنِي أَبِي الْحُقَيْقِ، فَقَالَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أَتُخْرِجُنَا وَقَدْ أَقَرَّنَا مُحَمَّدٌ صلى الله عليه وسلم وَعَامَلَنَا عَلَى الأَمْوَالِ، وَشَرَطَ ذَلِكَ لَنَا فَقَالَ عُمَرُ أَظَنَنْتَ أَنِّي نَسِيتُ قَوْلَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم "" كَيْفَ بِكَ إِذَا أُخْرِجْتَ مِنْ خَيْبَرَ تَعْدُو بِكَ قَلُوصُكَ، لَيْلَةً بَعْدَ لَيْلَةٍ "". فَقَالَ كَانَتْ هَذِهِ هُزَيْلَةً مِنْ أَبِي الْقَاسِمِ. قَالَ كَذَبْتَ يَا عَدُوَّ اللَّهِ. فَأَجْلاَهُمْ عُمَرُ وَأَعْطَاهُمْ قِيمَةَ مَا كَانَ لَهُمْ مِنَ الثَّمَرِ مَالاً وَإِبِلاً وَعُرُوضًا، مِنْ أَقْتَابٍ وَحِبَالٍ وَغَيْرِ ذَلِكَ. رَوَاهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ، أَحْسِبُهُ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، اخْتَصَرَهُ.
பாடம் : 14 நிலக் குத்தகையில், நான் விரும்பும் போது (ஒப்பந்தத்திலிருந்து) உன்னை நான் வெளியேற்றிவிடுவேன் என்று (நில உரிமையாளர்) நிபந்தனை விதித்தால்...
2730. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர்வாசிகள் (யூதர்கள்) என் கை மூட்டுகளைப் பிசகச் செய்துவிட்டபோது என் தந்தை (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் எழுந்து நின்று உரையாற்றினார்கள்.

அவ்வுரையில், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் யூதர்களிடம் அவர்களின் சொத்துகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். அப்போது, ‘அல்லாஹ் உங்களை இங்கு வசிக்கச் செய்யும்வரை நாம் உங்களை வசிக்கவிடுவோம்’ என்று கூறினார்கள். (என் மகன்) அப்துல்லாஹ் பின் உமர் அங்கேயிருந்த தனது சொத்தைப் பார்ப்பதற்காகச் சென்றார். அவர் அன்றிரவு தாக்கப்பட்டார். அதனால் அவருடைய இரு கைகளின் மூட்டுகளும் இரு கால்களின் மூட்டுகளும் பிசகிவிட்டன. அங்கு அவர்களைத் தவிர வேறு பகைவர்கள் எவரும் நமக்கு இல்லை. அவர்கள் நமக்குப் பகைவர்களும் நம் சந்தேகத்திற்குரியவர்களும் ஆவர். அவர்களை நாடு கடத்திவிடுவதே உசிதமென்று நான் கருதுகிறேன்” என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் (யூதர்களை) நாடு கடத்துவதென்று இறுதி முடிவெடுத்து விட்டபோது, (யூதர்களின் தலைவனான) அபுல்ஹுகைக் உடைய மகன்களில் ஒருவர் வந்து, ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எங்களை முஹம்மத் (ஸல்) அவர்கள் (கைபரிலேயே) வசிக்கச் செய்து, எங்கள் சொத்துகள் தொடர்பாக ஒப்பந்த மும் செய்துகொண்டு, அதை (நாங்கள் பேணி வந்தால் அங்கேயே தொடர்ந்து வசிக்கலாம் என்று) நிபந்தனையிட்டிருக்க, நீங்கள் எங்களை (அங்கிருந்து) வெளியேற் றுகிறீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘கைபரி லிருந்து நீ வெளியேற்றப்பட்டு, (நீண்ட கால்களும்) சகிப்புத் தன்மை(யும்) கொண்ட உனது ஒட்டகம் உன்னைச் சுமந்துகொண்டு இரவுக்குப்பின் இரவாக நடந்துசென்று கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட் டால் உனக்கு எப்படி இருக்கும்? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் மறந்துவிட்டேன் என நினைக்கிறீரா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், ‘‘அது அபுல்காசிம் (முஹம்மத் லி ஸல்) அவர்கள் விளையாட் டாகக் கூறியதாகும்” என்று சொன்னார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘நீர் சொன்னது பொய்; அல்லாஹ்வின் பகைவரே!” என்று கூறினார்கள். பிறகு, அந்த யூதர்களை உமர் (ரலி) அவர்கள் நாடு கடத்திவிட்டார்கள். அவர்களுக்குச் சேர வேண்டிய விளைச்சலின் விலையைப் பணமாகவும், ஒட்டகமாகவும், ஒட்டகச் சேணங்கள், கயிறுகள் போன்ற பொருட்களாகவும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரண்டாவது அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் குறித்த தகவல் சுருக்கமாகவே காணப்படுகிறது.

அத்தியாயம் : 54