2617. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ يَهُودِيَّةً، أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم بِشَاةٍ مَسْمُومَةٍ، فَأَكَلَ مِنْهَا فَجِيءَ بِهَا فَقِيلَ أَلاَ نَقْتُلُهَا. قَالَ "" لاَ "". فَمَا زِلْتُ أَعْرِفُهَا فِي لَهَوَاتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 28 இணைவைப்போரின் அன்ப ளிப்பை ஏற்றுக்கொள்வது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் மனைவி) சாராவுடன் புலம்பெயர்ந்து சென்றார்கள். அப்போது அரசன் ஒருவன் அல்லது சர்வாதிகாரி ஒருவன் இருந்த ஓர் ஊருக்கு அவர்கள் சென்றார்கள். அவன், ‘‘சாராவுக்கு ஆஜரை (அன்பளிப்பாக)க் கொடுங்கள்” என்று கட்டளையிட்டான். நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆடு ஒன்று (யூதர்களால்) அன்பளிப்பாகத் தரப்பட்டது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘அய்லா’வின் அரசர் நபி (ஸல்) அவர்களுக்கு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் சால்வையொன்றை (அன்பளிப்பாக அனுப்பி) அணிவித்தார்கள். மேலும், (காப்புவரி கட்டுவதாக அரசர் எழுதியிருந்த கடிதத்திற்கு) அக்கடற்கரைவாசிகளைக் கொண்டே நபி (ஸல்) அவர்கள் (பதில்) எழுதினார்கள்.25
2617. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை (அன்பளிப்பாக)க் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். ‘‘அவளைக் கொன்றுவிடுவோமா?” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், ‘‘வேண்டாம்” என்று கூறிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உள்நாக்குச் சதையில் அ(ந்த விஷத்தின் அடையாளத்)தை நான் தொடர்ந்து பார்த்துவந்தேன்.


அத்தியாயம் : 51
2618. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثَلاَثِينَ وَمِائَةً فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" هَلْ مَعَ أَحَدٍ مِنْكُمْ طَعَامٌ "". فَإِذَا مَعَ رَجُلٍ صَاعٌ مِنْ طَعَامٍ أَوْ نَحْوُهُ، فَعُجِنَ ثُمَّ جَاءَ رَجُلٌ مُشْرِكٌ مُشْعَانٌّ طَوِيلٌ بِغَنَمٍ يَسُوقُهَا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" بَيْعًا أَمْ عَطِيَّةً ـ أَوْ قَالَ ـ أَمْ هِبَةً "". قَالَ لاَ، بَلْ بَيْعٌ. فَاشْتَرَى مِنْهُ شَاةً، فَصُنِعَتْ وَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِسَوَادِ الْبَطْنِ أَنْ يُشْوَى، وَايْمُ اللَّهِ مَا فِي الثَّلاَثِينَ وَالْمِائَةِ إِلاَّ قَدْ حَزَّ النَّبِيُّ صلى الله عليه وسلم لَهُ حُزَّةً مِنْ سَوَادِ بَطْنِهَا، إِنْ كَانَ شَاهِدًا أَعْطَاهَا إِيَّاهُ، وَإِنْ كَانَ غَائِبًا خَبَأَ لَهُ، فَجَعَلَ مِنْهَا قَصْعَتَيْنِ، فَأَكَلُوا أَجْمَعُونَ، وَشَبِعْنَا، فَفَضَلَتِ الْقَصْعَتَانِ، فَحَمَلْنَاهُ عَلَى الْبَعِيرِ. أَوْ كَمَا قَالَ.
பாடம் : 28 இணைவைப்போரின் அன்ப ளிப்பை ஏற்றுக்கொள்வது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் மனைவி) சாராவுடன் புலம்பெயர்ந்து சென்றார்கள். அப்போது அரசன் ஒருவன் அல்லது சர்வாதிகாரி ஒருவன் இருந்த ஓர் ஊருக்கு அவர்கள் சென்றார்கள். அவன், ‘‘சாராவுக்கு ஆஜரை (அன்பளிப்பாக)க் கொடுங்கள்” என்று கட்டளையிட்டான். நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆடு ஒன்று (யூதர்களால்) அன்பளிப்பாகத் தரப்பட்டது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘அய்லா’வின் அரசர் நபி (ஸல்) அவர்களுக்கு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் சால்வையொன்றை (அன்பளிப்பாக அனுப்பி) அணிவித்தார்கள். மேலும், (காப்புவரி கட்டுவதாக அரசர் எழுதியிருந்த கடிதத்திற்கு) அக்கடற்கரைவாசிகளைக் கொண்டே நபி (ஸல்) அவர்கள் (பதில்) எழுதினார்கள்.25
2618. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நூற்று முப்பது பேர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள், ‘‘உங்களில் எவரிடமாவது உணவு இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதரிடம் சுமார் ஒரு ஸாஉ அளவு உணவுதான் இருந்தது. அது தண்ணீர் ஊற்றி குழைக்கப்பட்டது.

பிறகு, மிக உயரமான (முரட்டு சுபாவம் கொண்ட) தலைவிரிகோலமான இணை வைப்பாளரான மனிதர் ஒருவர் ஆடுகளை ஓட்டி வந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ‘‘(இவை) விற்பனைக்கா? அன்பளிக்கவா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘இல்லை. விற்பதற்காகத்தான் (கொண்டுவந்துள்ளேன்)” என்று பதிலளித் தார்.

அவரிடமிருந்து ஓர் ஆட்டை நபி (ஸல்) அவர்கள் விலைக்கு வாங்கினார்கள்; அது அறு(த்து சமை)க்கப்பட்டது. அதன் ஈரலைப் பொறிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் நூற்று முப்பது பேரில் ஒருவர் விடாமல் அனைவருக்குமே அதன் ஈரலில் இருந்து ஒரு துண்டை நபி (ஸல்) அவர்கள் வெட்டித் தந்திருந்தார்கள். அங்கிருந்தவருக்கு (அப்போதே) அதைக் கொடுத்தார்கள்; அங்கில்லாதவருக்கு எடுத்து (பாதுகாத்து) வைத்தார்கள்.

இரு (அகன்ற) தட்டுகளில் அந்த இறைச்சிகளை வைத்தார்கள். அனைவரும் உண்டார்கள். நாங்களும் வயிறு நிரம்ப உண்டோம். அப்படியிருந்தும் இரு தட்டுகளும் அப்படியே மீதமாகிவிட்டன. அவற்றை நாங்கள் ஒட்டகத்தில் ஏற்றிச் சென்றோம்.

அத்தியாயம் : 51
2619. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ رَأَى عُمَرُ حُلَّةً عَلَى رَجُلٍ تُبَاعُ فَقَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم ابْتَعْ هَذِهِ الْحُلَّةَ تَلْبَسْهَا يَوْمَ الْجُمُعَةِ وَإِذَا جَاءَكَ الْوَفْدُ. فَقَالَ "" إِنَّمَا يَلْبَسُ هَذَا مَنْ لاَ خَلاَقَ لَهُ فِي الآخِرَةِ "". فَأُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْهَا بِحُلَلٍ فَأَرْسَلَ إِلَى عُمَرَ مِنْهَا بِحُلَّةٍ. فَقَالَ عُمَرُ كَيْفَ أَلْبَسُهَا وَقَدْ قُلْتَ فِيهَا مَا قُلْتَ قَالَ "" إِنِّي لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا، تَبِيعُهَا أَوْ تَكْسُوهَا "". فَأَرْسَلَ بِهَا عُمَرُ إِلَى أَخٍ لَهُ مِنْ أَهْلِ مَكَّةَ قَبْلَ أَنْ يُسْلِمَ.
பாடம் : 29 இணைவைப்பாளர்களுக்கு அன்பளிப்பு வழங்குவது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாமலும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருப்ப வர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களிடம் நீங்கள் நீதியோடு நடந்து கொள்வதையும் உங்களுக்கு அல்லாஹ் தடை செய்யவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிக்கின்றான். (60:8)
2619. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் ஒரு மனிதரின் (தோள்)மீது, விற்கப்படுகின்ற பட்டு அங்கியைக் கண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்களிடம், ‘‘இந்த அங்கியை வாங்கிக்கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை யன்றும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும்போதும் அணிந்துகொள்வீர்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘எவருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லையோ அவர்தான் இதை அணிவார்” என்று கூறினார்கள்.

பிறகு (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அதே போன்ற) பட்டு அங்கிகள் கொண்டுவரப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றிலிருந்து ஓர் அங்கியை உமர் (ரலி) அவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘இது குறித்துத் தாங்கள் வேறுவிதமாகக் கூறியிருக்க, நான் எப்படி இதை அணிவேன்?” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை நீங்கள் அணிந்துகொள்வதற்காக நான் தரவில்லை. இதை நீங்கள் விற்றுவிடுங்கள்; அல்லது வேறு எவருக்காவது அணிவித்து விடுங்கள்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அதை மக்காவாசிகளில் ஒருவரான தம் (பால்குடி) சகோதரருக்கு, அவர் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்பு அனுப்பிவைத்துவிட்டார்கள்.


அத்தியாயம் : 51
2620. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَتْ قَدِمَتْ عَلَىَّ أُمِّي وَهْىَ مُشْرِكَةٌ، فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَاسْتَفْتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قُلْتُ {إِنَّ أُمِّي قَدِمَتْ} وَهْىَ رَاغِبَةٌ، أَفَأَصِلُ أُمِّي قَالَ "" نَعَمْ صِلِي أُمَّكِ "".
பாடம் : 29 இணைவைப்பாளர்களுக்கு அன்பளிப்பு வழங்குவது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாமலும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருப்ப வர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களிடம் நீங்கள் நீதியோடு நடந்து கொள்வதையும் உங்களுக்கு அல்லாஹ் தடை செய்யவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிக்கின்றான். (60:8)
2620. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் இணைவைப்பாளராக இருந்த என் தாயார் என்னிடம் வந்தார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘என் தாயார் (என்னைக் பார்க்க) என்னிடம் ஆசையோடு வந்துள் ளார். என் தாயுடன் உறவைப் பேணி நான் நடந்துகொள்ளலாமா?” என்று தீர்ப்பு கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம். நீ உன் தாயுடன் உறவைப் பேணி நடந்து கொள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 51
2621. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، وَشُعْبَةُ، قَالاَ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ "".
பாடம் : 30 கொடுத்த அன்பளிப்பையும் தர்மத் தையும் திரும்பப் பெறுவது யாருக் கும் அனுமதிக்கப்பட்டதன்று.
2621. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.27

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 51
2622. حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَيْسَ لَنَا مَثَلُ السَّوْءِ، الَّذِي يَعُودُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَرْجِعُ فِي قَيْئِهِ "".
பாடம் : 30 கொடுத்த அன்பளிப்பையும் தர்மத் தையும் திரும்பப் பெறுவது யாருக் கும் அனுமதிக்கப்பட்டதன்று.
2622. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) கெட்ட உதாரணம் நமக்கு உரியதன்று.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 51
2623. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ يَقُولُ حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ، فَأَضَاعَهُ الَّذِي كَانَ عِنْدَهُ، فَأَرَدْتُ أَنْ أَشْتَرِيَهُ مِنْهُ، وَظَنَنْتُ أَنَّهُ بَائِعُهُ بِرُخْصٍ، فَسَأَلْتُ عَنْ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" لاَ تَشْتَرِهِ، وَإِنْ أَعْطَاكَهُ بِدِرْهَمٍ وَاحِدٍ، فَإِنَّ الْعَائِدَ فِي صَدَقَتِهِ كَالْكَلْبِ يَعُودُ فِي قَيْئِهِ "".
பாடம் : 30 கொடுத்த அன்பளிப்பையும் தர்மத் தையும் திரும்பப் பெறுவது யாருக் கும் அனுமதிக்கப்பட்டதன்று.
2623. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு குதிரையின் மீது ஒருவரை நான் அல்லாஹ்வின் பாதையில் (பயணம் செய்வதற்காக) ஏற்றியனுப்பினேன். (அவருக்கே அதை தர்மமாகக் கொடுத்து விட்டேன்.) ஆனால், அதை வைத்திருந்த வர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) பாழாக்கிவிட்டார். ஆகவே, அந்தக் குதிரையை அவரிடமிருந்து வாங்க விரும் பினேன். அவர் அதை மலிவான விலைக்குகூட விற்றுவிடுவார் என்று எண்ணினேன். ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன்.

அவர்கள், ‘‘நீங்கள் அதை விலைக்கு வாங்காதீர்கள்; அவர் உங்களுக்கு அதை ஒரேயொரு திர்ஹமுக்குக் கொடுத்தாலும் சரியே! ஏனெனில், தன் தர்மத்தைத் திரும்பப் பெறுபவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 51
2624. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، أَنَّ بَنِي صُهَيْبٍ، مَوْلَى ابْنِ جُدْعَانَ ادَّعَوْا بَيْتَيْنِ وَحُجْرَةً، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَعْطَى ذَلِكَ صُهَيْبًا، فَقَالَ مَرْوَانُ مَنْ يَشْهَدُ لَكُمَا عَلَى ذَلِكَ قَالُوا ابْنُ عُمَرَ. فَدَعَاهُ فَشَهِدَ لأَعْطَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صُهَيْبًا بَيْتَيْنِ وَحُجْرَةً. فَقَضَى مَرْوَانُ بِشَهَادَتِهِ لَهُمْ.
பாடம் : 31
2624. அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(அப்துல்லாஹ்) இப்னு ஜுத்ஆன் என்பவரால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான சுஹைப் (ரலி) அவர்களு டைய மக்கள், தங்கள் தந்தையான சுஹைப் (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஆயுட்காலத்தில்) இரண்டு வீடுகளையும் ஓர் அறையையும் (அன்பளிப்பாகக்) கொடுத்ததாகக் கூறினர்.

அப்போது (மதீனாவின் ஆட்சியரான) மர்வான் பின் அல்ஹகம் ‘‘(உங்கள் கூற்று உண்மையானது என்பதற்கு) உங்கள் இருவருக்கும் யார் சாட்சியம் சொல்வார்?” என்று கேட்டார். அவர்கள், ‘‘இப்னு உமர் அவர்கள் (எங்களுக்காகச் சாட்சியம் சொல்வார்கள்)” என்று கூறினர். உடனே மர்வான், இப்னு உமர் (ரலி) அவர்களைக் கூப்பிட்டனுப்பினார்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுஹைப் (ரலி) அவர்களுக்கு இரண்டு வீடுகளையும் ஓர் அறையையும் கொடுத்தது உண்மைதான்” என்று சாட்சியம் அளித்தார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களின் சாட்சியத்தைக் கொண்டு சுஹைப் (ரலி) அவர்களின் மக்களுக்குச் சாதகமாக மர்வான் தீர்ப்பளித்தார்.

அத்தியாயம் : 51
2625. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ قَضَى النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْعُمْرَى أَنَّهَا لِمَنْ وُهِبَتْ لَهُ.
பாடம் : 32 ஆயுட்கால அன்பளிப்பு (உம்றா), எதிர்பார்ப்பு அன்பளிப்பு (ருக்பா) ஆகியவை தொடர்பாகக் கூறப்பட்டவை28 அவருக்கு நான் (என்) வீட்டை ஆயுட்கால அன்பளிப்பாகக் கொடுத்து விட்டேன் லிஅதாவது அவரது ஆயுட் காலத்திற்கு உடைமையாக ஆக்கி விட்டேன்லி என்று ஒருவர் சொன்னால் அதுவே யிஉம்றா’ ஆகும். ‘‘அவன்தான் உங்களைப் பூமியில் குடியமர்த்தினான்” (11:61) எனும் வசனத்தில் யிகுடியமர்த்தல்’ என்பதைக் குறிக்க யிஇஸ்தஅமர’ எனும் சொல் ஆளப்பட்டுள் ளது. அதாவது அதில் குடியிருப்பவர்களாக உங்களை ஆக்கினோம் என்பது அதன் பொருளாகும்.
2625. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கப் பட்ட பொருள் (உம்றா) தொடர்பாக நபி (ஸல்) அவர்கள், அது யாருக்கு அன்பளிப் பாக அளிக்கப்பட்டதோ அவருக்கே உரியதாகும் என்று தீர்ப்பளித்தார்கள்.


அத்தியாயம் : 51
2626. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ حَدَّثَنِي النَّضْرُ بْنُ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْعُمْرَى جَائِزَةٌ "". وَقَالَ عَطَاءٌ حَدَّثَنِي جَابِرٌ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ.
பாடம் : 32 ஆயுட்கால அன்பளிப்பு (உம்றா), எதிர்பார்ப்பு அன்பளிப்பு (ருக்பா) ஆகியவை தொடர்பாகக் கூறப்பட்டவை28 அவருக்கு நான் (என்) வீட்டை ஆயுட்கால அன்பளிப்பாகக் கொடுத்து விட்டேன் லிஅதாவது அவரது ஆயுட் காலத்திற்கு உடைமையாக ஆக்கி விட்டேன்லி என்று ஒருவர் சொன்னால் அதுவே யிஉம்றா’ ஆகும். ‘‘அவன்தான் உங்களைப் பூமியில் குடியமர்த்தினான்” (11:61) எனும் வசனத்தில் யிகுடியமர்த்தல்’ என்பதைக் குறிக்க யிஇஸ்தஅமர’ எனும் சொல் ஆளப்பட்டுள் ளது. அதாவது அதில் குடியிருப்பவர்களாக உங்களை ஆக்கினோம் என்பது அதன் பொருளாகும்.
2626. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆயுட்கால அன்பளிப்பு (உம்றா) செல்லும்.29

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

‘‘ஜாபிர் (ரலி) அவர்களும் இதே போன்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்கள்” என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அத்தியாயம் : 51
2627. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ كَانَ فَزَعٌ بِالْمَدِينَةِ فَاسْتَعَارَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَرَسًا مِنْ أَبِي طَلْحَةَ يُقَالُ لَهُ الْمَنْدُوبُ، فَرَكِبَ فَلَمَّا رَجَعَ قَالَ "" مَا رَأَيْنَا مِنْ شَىْءٍ، وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْرًا "".
பாடம் : 33 மக்களிடமிருந்து குதிரையை இரவல் வாங்குதல்
2627. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனாவில் (எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி மக்களிடையே) பீதி ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களிடமிருந்து யிமன்தூப்’ எனப்படும் குதிரை ஒன்றை இரவல் வாங்கினார்கள். அதில் ஏறிச் சென்றார்கள்.

திரும்பி வந்தபோது, ‘‘(எதிரிகளின் படை எதனையும் அல்லது பீதியூட்டும்) எதனையும் நாம் காணவில்லை. தங்கு தடையின்றி வேகமாக ஓடக்கூடியதாகவே நாம் இந்தக் குதிரையைக் கண்டோம்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 51
2628. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، دَخَلْتُ عَلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ وَعَلَيْهَا دِرْعُ قِطْرٍ ثَمَنُ خَمْسَةِ دَرَاهِمَ، فَقَالَتِ ارْفَعْ بَصَرَكَ إِلَى جَارِيَتِي، انْظُرْ إِلَيْهَا فَإِنَّهَا تُزْهَى أَنْ تَلْبَسَهُ فِي الْبَيْتِ، وَقَدْ كَانَ لِي مِنْهُنَّ دِرْعٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَمَا كَانَتِ امْرَأَةٌ تُقَيَّنُ بِالْمَدِينَةِ إِلاَّ أَرْسَلَتْ إِلَىَّ تَسْتَعِيرُهُ.
பாடம் : 34 மணமக்களுக்காகத் திருமணத்தின்போது இரவல் வாங்குதல்
2628. அய்மன் அல்ஹபஷீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஐந்து திர்ஹங்கள் விலையுடைய கெட்டியான பருத்தி அங்கி ஒன்றை அணிந்திருந்தார்கள்.

அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

‘‘உன் பார்வையை உயர்த்தி என் அடிமைப் பெண்ணைப் பார். அவள்கூட வீட்டில் இ(ந்த அங்கி போன்ற)தை அணிய (பிடிக்காமல் இன்று) தயங்குகிறாள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் இந்த அங்கிகளில் ஒன்று என்னிடம் (மட்டும்தான்) இருந் தது.

அப்போது மதீனாவில் (மணமகனுக்காக) அலங்காரம் செய்யப்படும் எந்த மணப் பெண்ணும் அந்த அங்கியை இரவல் கேட்டு என்னிடம் ஆள் அனுப்பாமல் இருந்ததில்லை.

அத்தியாயம் : 51
2629. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" نِعْمَ الْمَنِيحَةُ اللِّقْحَةُ الصَّفِيُّ مِنْحَةً، وَالشَّاةُ الصَّفِيُّ تَغْدُو بِإِنَاءٍ وَتَرُوحُ بِإِنَاءٍ "". حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ وَإِسْمَاعِيلُ عَنْ مَالِكٍ قَالَ نِعْمَ الصَّدَقَةُ.
பாடம் : 35 பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடையின் சிறப்பு30
2629. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பாலுக்காக இரவல் வழங்கப்பட்ட, அதிகப் பால் தருகின்ற ஒட்டகம்தான் (அன்பளிப்புகளில்) சிறந்ததாகும். அதிகப் பால் தரும் ஆடும் (அன்பளிப்புகளில்) சிறந்தததாகும். அது காலையில் ஒரு பாத்திரம் (நிறையப்) பால் தருகின்றது; மாலையில் ஒரு பாத்திரம் (நிறையப்) பால் தருகின்றது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், யிதர்மங்களில் சிறந்ததாகும்’ என்று காணப்படுகிறது.


அத்தியாயம் : 51
2630. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا قَدِمَ الْمُهَاجِرُونَ الْمَدِينَةَ مِنْ مَكَّةَ وَلَيْسَ بِأَيْدِيهِمْ ـ يَعْنِي شَيْئًا ـ وَكَانَتِ الأَنْصَارُ أَهْلَ الأَرْضِ وَالْعَقَارِ، فَقَاسَمَهُمُ الأَنْصَارُ عَلَى أَنْ يُعْطُوهُمْ ثِمَارَ أَمْوَالِهِمْ كُلَّ عَامٍ وَيَكْفُوهُمُ الْعَمَلَ وَالْمَئُونَةَ، وَكَانَتْ أُمُّهُ أُمُّ أَنَسٍ أُمُّ سُلَيْمٍ كَانَتْ أُمَّ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، فَكَانَتْ أَعْطَتْ أُمُّ أَنَسٍ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عِذَاقًا فَأَعْطَاهُنَّ النَّبِيُّ صلى الله عليه وسلم أُمَّ أَيْمَنَ مَوْلاَتَهُ أُمَّ أُسَامَةَ بْنِ زَيْدِ. قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا فَرَغَ مِنْ قَتْلِ أَهْلِ خَيْبَرَ فَانْصَرَفَ إِلَى الْمَدِينَةِ، رَدَّ الْمُهَاجِرُونَ إِلَى الأَنْصَارِ مَنَائِحَهُمُ الَّتِي كَانُوا مَنَحُوهُمْ مِنْ ثِمَارِهِمْ فَرَدَّ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى أُمِّهِ عِذَاقَهَا، وَأَعْطَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أُمَّ أَيْمَنَ مَكَانَهُنَّ مِنْ حَائِطِهِ. وَقَالَ أَحْمَدُ بْنُ شَبِيبٍ أَخْبَرَنَا أَبِي عَنْ يُونُسَ بِهَذَا، وَقَالَ مَكَانَهُنَّ مِنْ خَالِصِهِ.
பாடம் : 35 பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடையின் சிறப்பு30
2630. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனா வுக்கு வந்தபோது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்கவில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துகளையும் வைத்திருந் தார்கள். எனவே, ஒவ்வோர் ஆண்டும் தம் நிலங்களின் விளைச்சல்களை (ஒரு குறிப்பிட்ட அளவு) தங்களுக்கு முஹாஜிர் கள் கொடுத்துவிட வேண்டும் என்றும், தம் பங்கிற்கு அவர்கள் பாடுபட்டு உழைக்க வேண்டும் என்றும் பேசி, முஹாஜிர்களுக்கு அன்சாரிகள் தம் நிலங்களைப் பிரித்துக் கொடுத்தார்கள்.

என் தாயார் உம்மு சுலைம் அவர்கள் (என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீதல்ஹாவின் தாயாராகவும் இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக்கொள்ளும்படி அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தார்கள். அவற்றை நபி (ஸல்) அவர்கள் தம் அடிமைப் பெண்ணான, உசாமா பின் ஸைதுடைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.

கைபர்வாசிகள்மீது போர் தொடுத்து முடித்து, மதீனாவுக்குத் திரும்பியபோது முஹாஜிர்கள், தங்களுக்கு அன்சாரிகள் இரவலாக வழங்கியிருந்த கனிக(ள் தரும் மரங்க)ளை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவருடைய பேரீச்ச மரங்களைத் திருப்பித் தந்துவிட்டார்கள். அவற்றுக்கு பதிலாக, உம்மு அய்மன் அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘அவற்றுக்குப் பதிலாக தமக்குச் சொந்தமான தோட்டத்திலிருந்து...› என இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம் : 51
2631. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ أَبِي كَبْشَةَ السَّلُولِيِّ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَرْبَعُونَ خَصْلَةً أَعْلاَهُنَّ مَنِيحَةُ الْعَنْزِ، مَا مِنْ عَامِلٍ يَعْمَلُ بِخَصْلَةٍ مِنْهَا رَجَاءَ ثَوَابِهَا وَتَصْدِيقَ مَوْعُودِهَا إِلاَّ أَدْخَلَهُ اللَّهُ بِهَا الْجَنَّةَ "". قَالَ حَسَّانُ فَعَدَدْنَا مَا دُونَ مَنِيحَةِ الْعَنْزِ مِنْ رَدِّ السَّلاَمِ، وَتَشْمِيتِ الْعَاطِسِ، وَإِمَاطَةِ الأَذَى عَنِ الطَّرِيقِ وَنَحْوِهِ، فَمَا اسْتَطَعْنَا أَنْ نَبْلُغَ خَمْسَ عَشْرَةَ خَصْلَةً.
பாடம் : 35 பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடையின் சிறப்பு30
2631. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நற்செயல்கள் நாற்பது உள்ளன. அவற் றில் ஒன்றை, அதன் நன்மையை எதிர் பார்த்தும், அதற்கென வாக்களிக்கப் பட்டுள்ள (சொர்க்கத்)தை உண்மையென நம்பியும் ஒருவர் செய்துவந்தால், அதன் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க் கத்தில் அனுமதிக்காமல் இருப்பதில்லை. அவற்றில் மிக உயர்ந்தது, பெட்டை வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவதாகும்.

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர் ஹஸ்ஸான் பின் அ(த்)திய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

பெட்டை வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவது நீங்கலாக (மற்ற நற்செயல்களை) நாங்கள் கணக்கெடுத்துப் பார்த்ததில், முகமனுக்கு (சலாமுக்கு) பதில் சொல்வது, தும்மியவருக்காகப் பிரார்த்திப்பது, பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருளை அகற்றுவது முதலியவற்றை நாங்கள் கண்டோம். ஆனால், இவ்வாறு பதினைந்து நற்செயல்களைக் கூட எங்களால் கணக்கில் காட்ட முடியவில்லை.


அத்தியாயம் : 51
2632. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي عَطَاءٌ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَتْ لِرِجَالٍ مِنَّا فُضُولُ أَرَضِينَ فَقَالُوا نُؤَاجِرُهَا بِالثُّلُثِ وَالرُّبُعِ وَالنِّصْفِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا أَوْ لِيَمْنَحْهَا أَخَاهُ، فَإِنْ أَبَى فَلْيُمْسِكْ أَرْضَهُ "".
பாடம் : 35 பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடையின் சிறப்பு30
2632. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களில் சிலருக்கு உபரி நிலங்கள் சில இருந்தன. அவர்கள், ‘‘நாம் அவற்றை அவற்றின் விளைச்சலில் மூன்றிலொரு பங்குக்கோ, கால் பங்குக்கோ, அரைப் பங்குக்கோ குத்தகைக்கு விடுவோம்” என்று கூறினார்கள்.

(இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், ‘யிவிளைச்சல் நிலம் வைத்திருப்பவர், அதில் தாமே பயிரிடட்டும்; அல்லது தம் சகோதரருக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்து விடட்டும். அப்படிக் கொடுக்க மறுத்தால் அவர் தமது நிலத்தைத் தம்மிடமே (பயிரிடாமல்) வைத்துக்கொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.31


அத்தியாயம் : 51
2633. وَقَالَ مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي الزُّهْرِيُّ، حَدَّثَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ، حَدَّثَنِي أَبُو سَعِيدٍ، قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَأَلَهُ عَنِ الْهِجْرَةِ، فَقَالَ "" وَيْحَكَ إِنَّ الْهِجْرَةَ شَأْنُهَا شَدِيدٌ فَهَلْ لَكَ مِنْ إِبِلٍ "" قَالَ نَعَمْ. قَالَ "" فَتُعْطِي صَدَقَتَهَا "". قَالَ نَعَمْ. قَالَ "" فَهَلْ تَمْنَحُ مِنْهَا شَيْئًا "". قَالَ نَعَمْ. قَالَ "" فَتَحْلُبُهَا يَوْمَ وِرْدِهَا "". قَالَ نَعَمْ. قَالَ "" فَاعْمَلْ مِنْ وَرَاءِ الْبِحَارِ، فَإِنَّ اللَّهَ لَنْ يَتِرَكَ مِنْ عَمَلِكَ شَيْئًا "".
பாடம் : 35 பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடையின் சிறப்பு30
2633. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் கிராமவாசி ஒருவர் வந்து புலம் பெயர்தல் (ஹிஜ்ரத்) பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘யிஉனக்குக் கேடுதான்! ஹிஜ்ரத் செய்வது ஒரு கடினமான காரியம். உன்னிடம் ஒட்டகம் இருக்கின்றதா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘ஆம்” என்று கூறினார்.

‘‘அதற்கு நீ ஸகாத் கொடுக்கிறாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ‘‘ஆம், (கொடுக்கிறேன்)” என்று பதிலளித்தார். ‘‘(அதன் பாலைப் பிறர் உபயோகித்துக்கொள்ள) அதை இரவலாக (மனீஹாவாக) கொடுக்கிறாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ‘‘ஆம் (கொடுக்கிறேன்)” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அது நீர் அருந்தும் முறைவரும் நாளில் அதனிடம் பால் கற(ந்து ஏழைகளுக்குக் கொடு)க்கின்றாயா?” என்று கேட்க அவர், ‘யிஆம்” என்று பதிலளித்தார். ‘‘அப்படி யாயின், ஊர்களுக்கு அப்பால் சென்று (கூட) நீ நற்செயல் புரியலாம். ஏனெனில், அல்லாஹ் உன் நற்செயல்(களின் பிரதிபலன்)களிலிருந்து எதையும் குறைக்க மாட்டான்” என்று கூறினார்கள்.32


அத்தியாயம் : 51
2634. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ، قَالَ حَدَّثَنِي أَعْلَمُهُمْ، بِذَاكَ ـ يَعْنِي ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ إِلَى أَرْضٍ تَهْتَزُّ زَرْعًا فَقَالَ "" لِمَنْ هَذِهِ "". فَقَالُوا اكْتَرَاهَا فُلاَنٌ. فَقَالَ "" أَمَا إِنَّهُ لَوْ مَنَحَهَا إِيَّاهُ كَانَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهَا أَجْرًا مَعْلُومًا "".
பாடம் : 35 பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடையின் சிறப்பு30
2634. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பயிர்(களின் கதிர்)கள் அசைந்தாடிக்கொண்டிருந்த ஒரு நிலத்திற்குச் சென்றார்கள். ‘‘இது யாருடைய நிலம்?” என்று கேட்டார்கள். அங்கிருந்த மக்கள், ‘‘இன்னார் இதைக் குத்தகைக்குக் கொடுத்திருக்கிறார்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த நிலத்திற்காகக் குறிப்பிட்ட ஒரு வாட கையை (குத்தகையை) அவர் பெற்றுக் கொள்வதைவிட குத்தகைக்கு எடுத்த வருக்கு (அவர் அதை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளும்படி) இரவலாக (மனீஹா) கொடுத்துவிட்டிருந்தால், அவருக்கு (நில உரிமையாளருக்கு) அது நன்மையானதாக இருந்திருக்கும்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 51
2635. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" هَاجَرَ إِبْرَاهِيمُ بِسَارَةَ، فَأَعْطَوْهَا آجَرَ، فَرَجَعَتْ فَقَالَتْ أَشَعَرْتَ أَنَّ اللَّهَ كَبَتَ الْكَافِرَ وَأَخْدَمَ وَلِيدَةً "". وَقَالَ ابْنُ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" فَأَخْدَمَهَا هَاجَرَ "".
பாடம் : 36 ஒருவர் (மற்றவரிடம்) ‘‘இந்த அடிமைப் பெண்ணை உன் பணிவிடைக்காக வழங்குகிறேன்” என்று மக்களின் வழக்கப்படி கூறினால், அது செல்லும். சிலர், இது இரவலாகும் என்பர். ‘‘இந்த ஆடையை உனக்கு அணிவிக்கிறேன்” என்று ஒருவர் சொன்னால் அது அன் பளிப்பாகும்.33
2635. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவியார்) சாரா (அலை) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தார்கள். (எகிப்து நாட்டு மன்னனின்) ஆட்கள், சாராவுக்கு ஆஜரை (பணிப் பெண்ணாகக்) கொடுத்தார்கள். சாரா திரும்பிவந்து, ‘‘அல்லாஹ், அந்த இறைமறுப்பாளனை இழிவுபடுத்தி (எனக்கு) ஓர் அடிமைப் பெண்ணைப் பணிப் பெண்ணாகத் தந்ததை நீங்கள் அறிவீர்களா?” என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் கேட்டார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘‘எகிப்து நாட்டு மன்னன், சாராவுக்கு ஆஜரைப் பணிப் பெண்ணாக அன்பளிப்புச் செய்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.

அத்தியாயம் : 51
2636. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، أَخْبَرَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ مَالِكًا، يَسْأَلُ زَيْدَ بْنَ أَسْلَمَ قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ، قَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ، فَرَأَيْتُهُ يُبَاعُ، فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" لاَ تَشْتَرِ، وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ "".
பாடம் : 37 ஒருவர் (மற்றவரை) குதிரைமீது ஏற்றி அனுப்பினால், அது ஆயுட்கால அன்பளிப்பு மற்றும் தர்மத்தைப் போன்றதாகும்.34 ‘‘அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ள அவருக்கு உரிமையுண்டு” என்று சிலர் கூறுகின்றனர்.
2636. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவதற்காக எனக்குச் சொந்தமான) ஒரு குதிரையின் மீது ஒருவரை ஏற்றி அனுப்பினேன். அந்தக் குதிரை (சந்தையில்) விற்கப்படுவதைக் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (‘‘அதை வாங்கலாமா?” என்று) கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அதை வாங்காதீர்கள். உங்கள் தர்மத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளாதீர்கள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 51