2446. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْمُؤْمِنُ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا "". وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ.
பாடம் : 5 அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவுதல்
2446. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றோர் இறைநம்பிக்கையாளருக்கு (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர் ஆவார். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகிறது.

(இப்படிக் கூறியபோது) நபி (ஸல்) அவர்கள் தம் கைவிரல்களை ஒன்றோ டொன்று கோத்துக்காட்டினார்கள்.

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 46
2447. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ الْمَاجِشُونُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الظُّلْمُ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ "".
பாடம் : 6 அநீதியாளனைப் பழிவாங்குதல் புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: அநீதி இழைக்கப்பட்டவரைத் தவிர வேறு யாரும் தீய சொற்களை வெளிப்படையாகப் பேசுவதை அல்லாஹ் விரும்புவதில்லை. அல்லாஹ் அனைத்தையும் செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.(4:148) அவர்கள் (இறைநம்பிக்கையாளர்கள்) தங்கள்மீது அநீதியிழைக்கப்படும்போது அதை எதிர்த்துப் போராடுகிறார்கள். (42:39) ‘‘அதாவது அவர்கள் இழிவுபடுத்தப்படுவதை வெறுப்பவர்களாக இருந்தனர். ஆனால், அவர்கள் பழிவாங்கும் சக்தியுடையவர்களாக மாறும்போது மன்னித்து விடுவார்கள்” என்று இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் (இந்த வசனத்திற்கு விளக்கம்) கூறினார்கள். பாடம் : 7 அநீதியிழைக்கப்பட்டவர்கள் (அநீதி யிழைத்தவரை) மன்னித்தல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் ஒரு நன்மையை வெளிப்படை யாகச் செய்தாலும், அல்லது அதை மறைத் துச் செய்தாலும், அல்லது (உங்களுக்கு இழைக்கப்பட்ட) ஒரு குற்றத்தை நீங்கள் மன்னித்தாலும் (அது உங்களுக்கு நன்மையே. ஏனெனில்,) அல்லாஹ் மன்னிப்பவனாகவும் ஆற்றல் மிக்கவ னாகவும் இருக்கின்றான். (4:149) தீமையின் பலன் அதே போன்ற தீமையே ஆகும். (ஆயினும்,) எவர் மன்னித்து, சீர்திருத்தம் செய்கிறாரோ அவருக்குரிய நற்பலன் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. நிச்சயமாக, அல்லாஹ் அநீதியாளர்களை நேசிப்ப தில்லை. எவர் தமக்கு அநீதி இழைக்கப் பட்டபின் பழிவாங்குகிறார்களோ அவர்கள் மீது (ஆட்சேபணை கூற) எந்த வழியும் இல்லை. ஆட்சேபணைக்குரியவர்கள் யாரெனில், இதர மக்கள்மீது அநீதி இழைப்பவர்களும் நியாயமின்றி பூமியில் எல்லை மீறிய செயல் புரிபவர்களும்தான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது. ஆயினும், யார் பொறுமையை மேற்கொண்டு, மன்னித்துவிடவும் செய்கிறார்களோ அவர்களின் இந்தச் செயல் நிச்சயமாக உறுதிமிக்க (வீரச்) செயலைச் சேர்ந்ததாகும். ஒருவரை அல்லாஹ் வழிகேட்டில் ஆழ்த்திவிட்டால் அவரைப் பாதுகாப்பவன் அல்லாஹ்வுக்குப் பிறகு வேறு யாரும் இல்லை. இந்த அநீதியாளர்கள் வேதனையைப் பார்க்கும்போது, ‘‘இனி, (உலக வாழ்விற்குத்) திரும்பிச் செல்வதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா?” என்று கேட்பதை நீர் காண்பீர். (42:40லி44) பாடம் : 8 அநீதி, மறுமை நாளில் பல இருள் களாகக் காட்சி தரும்.
2447. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

அநீதி, மறுமை நாளில் பல இருள் களாகக் காட்சி தரும்.3

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 46
2448. حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ الْمَكِّيُّ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ، عَنْ أَبِي مَعْبَدٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ، فَقَالَ "" اتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ، فَإِنَّهَا لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ "".
பாடம் : 9 அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத் திலிருந்து தவிர்ந்துகொள்வதும் அது குறித்து அஞ்சுவதும்
2448. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். அப்போது ‘‘அநீதி யிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங் கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ் வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 46
2449. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لأَحَدٍ مِنْ عِرْضِهِ أَوْ شَىْءٍ فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ، قَبْلَ أَنْ لاَ يَكُونَ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ، إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ، وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ إِنَّمَا سُمِّيَ الْمَقْبُرِيَّ لأَنَّهُ كَانَ نَزَلَ نَاحِيَةَ الْمَقَابِرِ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَسَعِيدٌ الْمَقْبُرِيُّ هُوَ مَوْلَى بَنِي لَيْثٍ، وَهُوَ سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، وَاسْمُ أَبِي سَعِيدٍ كَيْسَانُ.
பாடம் : 10 தமக்கு அநீதியிழைத்த ஒரு மனிதரின் அநீதியை (மன்னித்து) விமோசனம் அளிப்பவர், அது இன்ன அநீதி என்று விவரிக்க வேண்டுமா?
2449. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், தம் சகோதரனுக்கு, அவனது மானம் தொடர்பாகவோ வேறு பொருள் தொடர்பாகவோ இழைத்த அநீதிக்கு இன்றே லிபொற்காசோ வெள்ளிக்காசோ இல்லாத நாள் வருவதற்கு முன்பேலி (மன்னிப்புப் பெற்று) விமோசனம் காணட்டும்!4

(ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவர் இழைத்த அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு (அநீதியிழைக்கப்பட்டவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு)விடும். அநீதி யிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சயீத் அல்மக்புரீ (ரஹ்) அவர்களுக்கு ‘அல்மக்புரீ’ (கப்றைச் சார்ந்தவர்) எனப் பெயர் வரக் காரணம், அவர் கப்றுகளுக்கு (அடக்கத் தலங்களுக்கு) அருகிலேயே தங்குவார். அவர் யிபனூ லைஸ்’ குலத்தாரின் முன்னாள் அடிமை ஆவார். இவருடைய தந்தை அபூசயீதின் இயற்பெயர் யிகைசான்’ என்பதாகும்.

அத்தியாயம் : 46
2450. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها – {وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا} قَالَتِ الرَّجُلُ تَكُونُ عِنْدَهُ الْمَرْأَةُ، لَيْسَ بِمُسْتَكْثِرٍ مِنْهَا، يُرِيدُ أَنْ يُفَارِقَهَا، فَتَقُولُ أَجْعَلُكَ مِنْ شَأْنِي فِي حِلٍّ. فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ فِي ذَلِكَ.
பாடம் : 11 ஒருவர் தமக்கு இழைக்கப்பட்ட அநீதியை மன்னித்துவிட்ட பிறகு மன்னிப்பைத் திரும்பப் பெறல் கிடையாது.
2450. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘ஒரு பெண் தன் கணவனிடமிருந்து ஏற்படும் பிணக்கை, அல்லது புறக்கணிப் பைப் பற்றி அஞ்சினால், அவ்விருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றைப் பரஸ்பரம் விட்டுக்கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில் தவறேதும் இல்லை” (4:128) என்ற குர்ஆனின் வசனத்தைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

ஒரு மனிதர் தம் மனைவியிடம் அதிக நாட்டம் கொள்ளாமல் அவளைவிட்டுப் பிரிந்துவிட விரும்புகிறார். இந்நிலையில் மனைவி, ‘‘என் (தாம்பத்திய உரிமைகள்) விஷயத்தில் (நான் விட்டுக்கொடுத்து) நடந்துகொள்கிறேன் (என்னை மணவிலக் குச் செய்துவிட வேண்டாம்)” என்று கேட்டுக்கொள்கிறாள். இது தொடர்பாகவே இந்த இறைவசனம் அருளப்பட்டது.

அத்தியாயம் : 46
2451. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُتِيَ بِشَرَابٍ، فَشَرِبَ مِنْهُ وَعَنْ يَمِينِهِ غُلاَمٌ وَعَنْ يَسَارِهِ الأَشْيَاخُ، فَقَالَ لِلْغُلاَمِ "" أَتَأْذَنُ لِي أَنْ أُعْطِيَ هَؤُلاَءِ "". فَقَالَ الْغُلاَمُ لاَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ لاَ أُوثِرُ بِنَصِيبِي مِنْكَ أَحَدًا. قَالَ فَتَلَّهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي يَدِهِ.
பாடம் : 12 ஒருவர் தமக்குக் கிடைக்க வேண்டிய உரிமையை மன்னித்து அனுமதி யளித்தபோது, அந்த உரிமை எவ்வளவு என்று குறிப்பிடவில்லை என்றால்... (செல்லுமா?)
2451. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப் பக்கம் ஒரு சிறுவரும் இடப் பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், ‘‘(இந்தப் பானத்தை) இவர்களிடம் (வயது முதிர்ந்த வர்களிடம்) கொடுக்க நீ எனக்கு அனுமதி தருவாயா?” என்று கேட்டார்கள்.

அந்தச் சிறுவர், ‘‘மாட்டேன், இறைவன் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து (எனக்குக் கிடைக்கக் கூடிய) என் பங்கை எவருக்கும் நான் விட்டுக்கொடுக்கமாட்டேன்” என்று கூறினார். எனவே, அல்லாஹ்வின் தூதர் அச்சிறுவரின் கரத்தில் அந்தப் பானத்தை வைத்தார்கள்.5

அத்தியாயம் : 46
2452. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي طَلْحَةُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَمْرِو بْنِ سَهْلٍ، أَخْبَرَهُ أَنَّ سَعِيدَ بْنَ زَيْدٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ ظَلَمَ مِنَ الأَرْضِ شَيْئًا طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ "".
பாடம் : 13 (பிறரது) நிலத்தில் ஒரு பகுதியை அநியாயமாக எடுத்துக்கொண்ட வனின் பாவம்
2452. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் பிறரது நிலத்தில் ஒரு பகுதியை அநியாயமாகக் கைப்பற்றுகிறாரோ, அவரது கழுத்தில் (மறுமை நாளில்) அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்.

இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 46
2453. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا حُسَيْنٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، أَنَّ أَبَا سَلَمَةَ، حَدَّثَهُ أَنَّهُ، كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أُنَاسٍ خُصُومَةٌ، فَذَكَرَ لِعَائِشَةَ ـ رضى الله عنها ـ فَقَالَتْ يَا أَبَا سَلَمَةَ اجْتَنِبِ الأَرْضَ، فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ مِنَ الأَرْضِ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ "".
பாடம் : 13 (பிறரது) நிலத்தில் ஒரு பகுதியை அநியாயமாக எடுத்துக்கொண்ட வனின் பாவம்
2453. அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எனக்கும் வேறு சிலருக்கும் இடையே (ஒரு நிலம் சம்பந்தமாகத்) தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அப்போது என்னிடம் அவர்கள் சொன்னார்கள்:

அபூசலமாவே! (பிறரது) நிலத்தை (எடுத்துக்கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ‘‘எவர் ஓர்அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாகக் கைப்பற்றிக் கொள்கிறாரோ (மறுமையில்) அவர் கழுத்தில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 46
2454. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ أَخَذَ مِنَ الأَرْضِ شَيْئًا بِغَيْرِ حَقِّهِ خُسِفَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ إِلَى سَبْعِ أَرَضِينَ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ هَذَا الْحَدِيثُ لَيْسَ بِخُرَاسَانَ فِي كِتَابِ ابْنِ الْمُبَارَكِ، أَمْلاَهُ عَلَيْهِمْ بِالْبَصْرَةِ.
பாடம் : 13 (பிறரது) நிலத்தில் ஒரு பகுதியை அநியாயமாக எடுத்துக்கொண்ட வனின் பாவம்
2454. நபி  (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

யார் (அடுத்தவரின்) ஒரு நிலத்திலிருந்து ஒரு பகுதியைத் தமக்கு உரிமையின்றி எடுத்துக்கொண்டாரோ அவர் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அமிழ்த் தப்படுவார்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் குராசானில் தொகுத்த நூலில் இந்த ஹதீஸ் இடம்பெறவில்லை. மாறாக, (இராக்கிலுள்ள) யிபஸ்ரா’வில்தான் இந்த ஹதீஸை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்.6

அத்தியாயம் : 46
2455. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَبَلَةَ، كُنَّا بِالْمَدِينَةِ فِي بَعْضِ أَهْلِ الْعِرَاقِ، فَأَصَابَنَا سَنَةٌ، فَكَانَ ابْنُ الزُّبَيْرِ يَرْزُقُنَا التَّمْرَ، فَكَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَمُرُّ بِنَا فَيَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الإِقْرَانِ، إِلاَّ أَنْ يَسْتَأْذِنَ الرَّجُلُ مِنْكُمْ أَخَاهُ.
பாடம் : 14 ஒருவர் மற்றவருக்கு ஒரு விஷயத்தில் அனுமதி கொடுத்தால் அது செல்லும்.
2455. ஜபலா பின் சுஹைம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இராக்வாசிகள் சிலருடன் மதீனாவில் இருந்தோம். எங்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. ஆகவே, இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பேரீச்சம்பழங்களைக் கொடுத்துவந்தார் கள். (அதை நாங்கள் கூடி அமர்ந்து உண்ணும்போது) இப்னு உமர் (ரலி) அவர்கள் எங்களைக் கடந்து செல்வார்கள்.

அப்போது, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரண்டு பேரீச்சம் பழங்களை ஒரே தடவையில் எடுத்து உண்பதைத் தடை செய்தார்கள்; உங்களில் (அப்படிச் சேர்த்து உண்ண விரும்பும்) அந்த மனிதர் தம் சகோதரரிடம் அனுமதி கேட்டுக்கொண்டால் தவிர” என்று கூறுவார்கள்.


அத்தியாயம் : 46
2456. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، أَنَّ رَجُلاً، مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهُ أَبُو شُعَيْبٍ كَانَ لَهُ غُلاَمٌ لَحَّامٌ فَقَالَ لَهُ أَبُو شُعَيْبٍ اصْنَعْ لِي طَعَامَ خَمْسَةٍ لَعَلِّي أَدْعُو النَّبِيَّ صلى الله عليه وسلم خَامِسَ خَمْسَةٍ. وَأَبْصَرَ فِي وَجْهِ النَّبِيِّ صلى الله عليه وسلم الْجُوعَ ـ فَدَعَاهُ، فَتَبِعَهُمْ رَجُلٌ لَمْ يُدْعَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ هَذَا قَدِ اتَّبَعَنَا أَتَأْذَنُ لَهُ "". قَالَ نَعَمْ.
பாடம் : 14 ஒருவர் மற்றவருக்கு ஒரு விஷயத்தில் அனுமதி கொடுத்தால் அது செல்லும்.
2456. அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘அபூஷுஐப்’ எனப்படும் அன்சாரித் தோழர் ஒருவருக்கு இறைச்சி விற்கும் ஊழியர் ஒருவர் இருந்தார். அவரிடம் அபூஷுஐப் (ரலி) அவர்கள், ‘‘எனக்கு ஐந்து பேருக்கான உணவைத் தயார் செய். நான் ஐவரில் ஒருவராக நபி (ஸல்) அவர்களை அழைக்கக்கூடும்” என்று கூறினார். அவர் நபி (ஸல்) அவர்களின் முகத்தில் பசியைக் கண்டார்.

ஆகவே, அவர்களை விருந்துக்கு அழைத்தார்; நபி (ஸல்) அவர்களுடன் வந்தவர்களோடு விருந்துக்கு அழைக்கப் படாத ஒரு மனிதரும் சேர்ந்துகொண்டார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (அபூஷுஐப் (ரலி) அவர்களிடம்), ‘‘இவர் எங்களைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார். இவருக்கு நீங்கள் அனுமதியளிக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘ஆம் (அனுமதியளிக்கிறேன்)” என்று பதில் கூறினார்.

அத்தியாயம் : 46
2457. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ أَبْغَضَ الرِّجَالِ إِلَى اللَّهِ الأَلَدُّ الْخَصِمُ "".
பாடம் : 15 உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்: அவன் கடுமையான விதண்டாவாதி ஆவான். (2:204)
2457. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக விதண்டாவாதம் புரிபவன்தான்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 46
2458. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ زَيْنَبَ بِنْتَ أُمِّ سَلَمَةَ، أَخْبَرَتْهُ أَنَّ أُمَّهَا أُمَّ سَلَمَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهَا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ سَمِعَ خُصُومَةً بِبَابِ حُجْرَتِهِ، فَخَرَجَ إِلَيْهِمْ، فَقَالَ "" إِنَّمَا أَنَا بَشَرٌ وَإِنَّهُ يَأْتِينِي الْخَصْمُ، فَلَعَلَّ بَعْضَكُمْ أَنْ يَكُونَ أَبْلَغَ مِنْ بَعْضٍ، فَأَحْسِبُ أَنَّهُ صَدَقَ، فَأَقْضِيَ لَهُ بِذَلِكَ، فَمَنْ قَضَيْتُ لَهُ بِحَقِّ مُسْلِمٍ فَإِنَّمَا هِيَ قِطْعَةٌ مِنَ النَّارِ، فَلْيَأْخُذْهَا أَوْ فَلْيَتْرُكْهَا "".
பாடம் : 16 அறிந்துகொண்டே தவறுக்காக வழக்காடுபவனின் பாவம்
2458. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக்கொண்டிருந்ததைச் செவியுற் றார்கள். உடனே அவர்களிடம் சென்று, ‘‘நான் ஒரு மனிதன்தான். வழக்காடுபவர்கள் என்னிடம் வருகிறார்கள். உங்களில் ஒருவர் மற்றவரைவிட வாக்கு சாதுரியம் மிக்கவராக இருக்கலாம். அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி, நான் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்து விடுகிறேன்.

அப்படி ஒரு முஸ்லிமின் உரிமையை வேறொருவருக்கு உரியதென்று (உண்மை தெரியாமல்) நான் தீர்ப்பளித்துவிட்டால், (அது தமக்கு உரிமையான பொருள் என அவர் எண்ணிவிட வேண்டாம். அவருக்கு) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும். அவர் (விரும்பினால்) அதை எடுத்துக்கொள்ளட்டும்; அல்லது அதை (எடுத்துக்கொள்ளாமல்) விட்டு விடட்டும்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 46
2459. حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، أَخْبَرَنَا مُحَمَّدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا، أَوْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْ أَرْبَعَةٍ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ، حَتَّى يَدَعَهَا إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ "".
பாடம் : 17 வழக்காடும்போது நேர்மை தவறுதல்
2459. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு குணங்கள் யாரிடம் உள்ளனவோ அவர் நயவஞ்சகர் ஆவார். அல்லது அந்த நான்கு குணங்களில் ஒரு குணம் அவரிடம் குடிகொண்டிருந்தாலும் அவர் அதை விட்டுவிடும்வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவரிடம் குடியிருக்கும்.

(அந்த நான்கு குணங்களாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; வாக்க ளித்தால் மாறுசெய்வான்; ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான்; வழக்காடினால் நேர்மை தவறி நடந்துகொள்வான் (அவமதிப்பான்).

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 46
2460. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ جَاءَتْ هِنْدُ بِنْتُ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ، فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ مِسِّيكٌ، فَهَلْ عَلَىَّ حَرَجٌ أَنْ أُطْعِمَ مِنَ الَّذِي لَهُ عِيَالَنَا فَقَالَ "" لاَ حَرَجَ عَلَيْكِ أَنْ تُطْعِمِيهِمْ بِالْمَعْرُوفِ "".
பாடம் : 18 பொருளைப் பறிகொடுத்தவர், தமது பொருளுக்குப் பதிலாக அபகரித்தவனின் பொருள் ஏதேனும் கிடைக்கும்போது அதை எடுத்துக்கொள்வது இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள், ‘‘தமது பொருளுக்கு ஈடானதை அவர் எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டு, ‘‘நீங்கள் பழிவாங்கக் கருதினால் உங்கள்மீது எந்த அளவுக்கு அநீதியிழைக்கப்பட்டதோ அதே அளவுக்குப் பழிவாங்குங்கள்” (16:126) எனும் குர்ஆன் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
2460. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹின்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ் வின் தூதரே! (என் கணவர்) அபூசுஃப்யான் மிகவும் கருமியாக இருக்கிறார். அவரது பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் பிள்ளைகளுக்கு உணவளிப்பதால் என்மீது குற்றம் ஏதும் உண்டா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நியாயமான அளவுக்கு (உன் கணவனின் பணத்தை எடுத்து) அவர்களுக்கு உணவளிப்பதால் உன்மீது குற்றம் எதுவும் இல்லை” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 46
2461. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي يَزِيدُ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ قُلْنَا لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّكَ تَبْعَثُنَا فَنَنْزِلُ بِقَوْمٍ لاَ يَقْرُونَا فَمَا تَرَى فِيهِ فَقَالَ لَنَا "" إِنْ نَزَلْتُمْ بِقَوْمٍ، فَأُمِرَ لَكُمْ بِمَا يَنْبَغِي لِلضَّيْفِ فَاقْبَلُوا، فَإِنْ لَمْ يَفْعَلُوا فَخُذُوا مِنْهُمْ حَقَّ الضَّيْفِ "".
பாடம் : 18 பொருளைப் பறிகொடுத்தவர், தமது பொருளுக்குப் பதிலாக அபகரித்தவனின் பொருள் ஏதேனும் கிடைக்கும்போது அதை எடுத்துக்கொள்வது இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள், ‘‘தமது பொருளுக்கு ஈடானதை அவர் எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டு, ‘‘நீங்கள் பழிவாங்கக் கருதினால் உங்கள்மீது எந்த அளவுக்கு அநீதியிழைக்கப்பட்டதோ அதே அளவுக்குப் பழிவாங்குங்கள்” (16:126) எனும் குர்ஆன் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
2461. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘நீங்கள் எங்களை ஒரு சமூகத்தாரிடம் அனுப்பிவைக்கிறீர்கள்; நாங்களும் (உங்கள் கட்டளையை ஏற்று) அங்கு சென்று தங்குகிறோம்; (ஆனால்,) அவர்கள் எங்களை உபசரிக்க மறுக்கிறார்கள். அது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் ஒரு சமூகத்தாரிடம் சென்றபோது விருந் தினர்களுக்குத் தேவையான வசதிகளை உங்களுக்குச் செய்து தர ஏற்பாடு செய்யப் பட்டால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் அப்படிச் செய்யவில்லை யென்றால், அவர்களிடமிருந்து விருந்தின ரின் உரிமையை (நீங்களாகவே) எடுத்துக் கொள்ளுங்கள்” என்று எங்களுக்குப் பதில் அளித்தார்கள்.7

அத்தியாயம் : 46
2462. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ،. وَأَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ عَنْ عُمَرَ ـ رضى الله عنهم ـ قَالَ حِينَ تَوَفَّى اللَّهُ نَبِيَّهُ صلى الله عليه وسلم إِنَّ الأَنْصَارَ اجْتَمَعُوا فِي سَقِيفَةِ بَنِي سَاعِدَةَ، فَقُلْتُ لأَبِي بَكْرٍ انْطَلِقْ بِنَا. فَجِئْنَاهُمْ فِي سَقِيفَةِ بَنِي سَاعِدَةَ.
பாடம் : 19 பொதுச்சாவடிகள் நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் யிபனூ சாயிதா’ குலத்தாரின் சாவடியில் அமர்ந்தார்கள்.
2462. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர் களை மரணிக்கச் செய்தபோது, அன்சாரி கள் யிபனூ சாயிதா’ சாவடியில் ஒன்றுகூடி விட்டார்கள். நான் அபூபக்ர் (ரலி) அவர் களை, ‘‘எங்களுடன் வாருங்கள்” என்று அழைத்தேன். நாங்கள் அன்சாரிகளிடம் பனூ சாயிதா (குலத்தாரின்) சாவடிக்குச் சென்றோம்.8

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 46
2463. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَمْنَعُ جَارٌ جَارَهُ أَنْ يَغْرِزَ خَشَبَهُ فِي جِدَارِهِ "". ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ مَا لِي أَرَاكُمْ عَنْهَا مُعْرِضِينَ وَاللَّهِ لأَرْمِيَنَّ بِهَا بَيْنَ أَكْتَافِكُمْ.
பாடம் : 20 ஒருவர், தமது (வீட்டுச்) சுவரில் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை யைப் பதிப்பதைத் தடுக்கலாகாது.
2463. அப்துர் ரஹ்மான் பின் ஹுர் முஸ் அல்அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஒருவர், தமது (வீட்டுச்) சுவரில், தம் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை (சாரம்) பதிப்பதைத் தடுக்க வேண்டாம்” என்று கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘என்ன இது? (நபியவர்களின்) இ(ந்த உபதேசத்)தைப் புறக்கணிப்பவர்களாகவே உங்களை நான் பார்க்கின்றேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! (உங்களுக் குப் பிடிக்காவிட்டாலும்) இதை நான் உங்களுக்கு வலியுறுத்திக்கொண்டே இருப்பேன்” என்று கூறுவார்கள்.9

அத்தியாயம் : 46
2464. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ أَبُو يَحْيَى، أَخْبَرَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ كُنْتُ سَاقِيَ الْقَوْمِ فِي مَنْزِلِ أَبِي طَلْحَةَ، وَكَانَ خَمْرُهُمْ يَوْمَئِذٍ الْفَضِيخَ، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُنَادِيًا يُنَادِي "" أَلاَ إِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ "". قَالَ فَقَالَ لِي أَبُو طَلْحَةَ اخْرُجْ فَأَهْرِقْهَا، فَخَرَجْتُ فَهَرَقْتُهَا، فَجَرَتْ فِي سِكَكِ الْمَدِينَةِ فَقَالَ بَعْضُ الْقَوْمِ قَدْ قُتِلَ قَوْمٌ وَهْىَ فِي بُطُونِهِمْ. فَأَنْزَلَ اللَّهُ {لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا} الآيَةَ.
பாடம் : 21 சாலையில் மதுவை ஊற்றுவது
2464. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அபூதல்ஹா (ரலி) அவர்கள் வீட்டில் மக்களுக்கு மது பரிமாறுபவனாக இருந்தேன்.10 அந்த நாட்களில் பேரீச்சம் பழ மதுவையே அவர்கள் குடித்துவந்தனர். (மதுவைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பட்டவுடன்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவரை அழைத்து, ‘‘(மக்களே!) மது தடை செய்யப்பட்டுவிட்டது” என்று அறிவிக்கும்படி கட்டளையிட்டார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘வெளியே சென்று இதை ஊற்றிவிடு” என்று கூறினார்கள்.

நான் வெளியே சென்று அதை (சாலையில்) ஊற்றிவிட்டேன். மதீனா நகரின் தெருக்களில் அது ஓடியது. மக்களில் சிலர், ‘‘மது தங்கள் வயிறுகளில் இருக்கும் நிலையில் பல பேர் கொல்லப் பட்டிருக்கிறார்களே! (அவர்களின் நிலை என்ன?)” என்று கேட்டார்கள்.

அப்போதுதான், ‘‘யார் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்கள் (தடை செய்யப்பட்டதை முன்பு) உட்கொண்டதால் அவர்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை” (5:93) எனும் குர்ஆன் வசனம் அருளப்பட்டது.11

அத்தியாயம் : 46
2465. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا أَبُو عُمَرَ، حَفْصُ بْنُ مَيْسَرَةَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِيَّاكُمْ وَالْجُلُوسَ عَلَى الطُّرُقَاتِ "". فَقَالُوا مَا لَنَا بُدٌّ، إِنَّمَا هِيَ مَجَالِسُنَا نَتَحَدَّثُ فِيهَا. قَالَ "" فَإِذَا أَبَيْتُمْ إِلاَّ الْمَجَالِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهَا "" قَالُوا وَمَا حَقُّ الطَّرِيقِ قَالَ "" غَضُّ الْبَصَرِ، وَكَفُّ الأَذَى، وَرَدُّ السَّلاَمِ، وَأَمْرٌ بِالْمَعْرُوفِ، وَنَهْىٌ عَنِ الْمُنْكَرِ "".
பாடம் : 22 வீட்டு முற்றத்தில் அமர்வதும் பாதைகளில் அமர்வதும்12 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் வீட்டின் முற்றத்தில் தொழும் இடத்தை அமைத் துக்கொண்டு, அதில் தொழுதுகொண்டும் குர்ஆன் ஓதிக்கொண்டும் இருந்தார்கள். இணைவைப்பாளர்களின் பெண்களும் அவர்களின் குழந்தைகளும் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சுற்றிலும் திரண்டு நின்று வியப்போடு பார்க்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்போது மக்காவில் வசித்தார்கள்.
2465. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்துவிடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘‘எங்க ளுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. (பல விஷயங்களைப்) பேசிக் கொண்டு நாங்கள் அமரும் இடங்கள் அவைதான்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அந்த இடங்களுக்கு நீங்கள் வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.

மக்கள், ‘‘பாதையின் உரிமை என்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக்கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச்  சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்குப் பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 46