2287. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ، فَإِذَا أُتْبِعَ أَحَدُكُمْ عَلَى مَلِيٍّ فَلْيَتْبَعْ "".
பாடம் : 1 கடன் மாற்றிவிடப்பட்ட பின், கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவரிடம் சென்று கேட்கலாமா?2 ‘‘கடன் பொறுப்பை ஏற்றவர் கடன் மாற்றப்பட்ட நாளில் செல்வராக இருந் திருந்தால், கடன் மாற்றல் செல்லுபடியாகி விடும் (இனி, கடன் வாங்கியவரிடம் கேட்கலாகாது)” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்), கத்தாதா (ரஹ்) ஆகியோர் கூறு கின்றனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இரு பங்காளிகள், அல்லது வாரிசு காரர்கள் ஒவ்வொருவரும் (தத்தமது பங்கைப் பெற்றுக்கொண்டு அடுத்தவரின் பங்கிலிருந்து) விலகிக்கொள்ள வேண்டும். ஒருவர் இருப்பை எடுத்துக்கொண்டார்; மற்றொருவர் வரவேண்டிய கடனை எடுத்துக்கொண்டார். (சம்மதத்தின்பேரில் இது நடந்தபின்) இருவரில் ஒருவருக்கு இழப்பு நேர்ந்தால், மற்றவரிடம் சென்று எதையும் கேட்கக் கூடாது.3
2287. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

செல்வந்தர் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும். உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தர்மீது மாற்றிவிடப்பட்டால், அதை அவர் ஏற்கட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 38
2288. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ ذَكْوَانَ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ، وَمَنْ أُتْبِعَ عَلَى مَلِيٍّ فَلْيَتَّبِعْ "".
பாடம் : 2 ஒருவர் தாம் செலுத்த வேண்டிய கடனை (தமக்குக் கடன் கொடுக்க வேண்டிய) வசதியானவர்மீது மாற்றிவிட்டால், அதை அவர் மறுக் கக் கூடாது.
2288. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

செல்வந்தர் (தாம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும். உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தர்மீது மாற்றிவிடப்பட்டால் அவர் ஒப்புக் கொள்ளட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 38
2289. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ أُتِيَ بِجَنَازَةٍ، فَقَالُوا صَلِّ عَلَيْهَا. فَقَالَ "" هَلْ عَلَيْهِ دَيْنٌ "". قَالُوا لاَ. قَالَ "" فَهَلْ تَرَكَ شَيْئًا "". قَالُوا لاَ. فَصَلَّى عَلَيْهِ ثُمَّ أُتِيَ بِجَنَازَةٍ أُخْرَى، فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، صَلِّ عَلَيْهَا. قَالَ "" هَلْ عَلَيْهِ دَيْنٌ "". قِيلَ نَعَمْ. قَالَ "" فَهَلْ تَرَكَ شَيْئًا "". قَالُوا ثَلاَثَةَ دَنَانِيرَ. فَصَلَّى عَلَيْهَا، ثُمَّ أُتِيَ بِالثَّالِثَةِ، فَقَالُوا صَلِّ عَلَيْهَا. قَالَ "" هَلْ تَرَكَ شَيْئًا "". قَالُوا لاَ. قَالَ "" فَهَلْ عَلَيْهِ دَيْنٌ "". قَالُوا ثَلاَثَةُ دَنَانِيرَ. قَالَ "" صَلُّوا عَلَى صَاحِبِكُمْ "". قَالَ أَبُو قَتَادَةَ صَلِّ عَلَيْهِ يَا رَسُولَ اللَّهِ، وَعَلَىَّ دَيْنُهُ. فَصَلَّى عَلَيْهِ.
பாடம் : 3 இறந்தவர் கொடுக்க வேண்டிய கடனுக்கு மற்றொருவர் பொறுப் பேற்றால் அது செல்லும்.
2289. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டுவரப்பட்டது. நபித்தோழர்கள், ‘‘நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்” என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் கடனாளியா?” என்று கேட்டார்கள். நபித்தோழர்கள், யிஇல்லை’ என்றனர். ‘‘ஏதேனும் (சொத்தை) இவர் விட்டுச்சென்றிருக்கிறாரா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, யிஇல்லை’ என்றனர். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.

பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. அப்போது ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்” என்று நபித்தோழர்கள் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘இவர் கடனாளியா?” என்று கேட்டபோது யிஆம்’ எனக் கூறப்பட்டது. ‘‘இவர் ஏதேனும் விட்டுச்சென்றிருக்கிறாரா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது யிமூன்று பொற்காசுகளை விட்டுச் சென்றிருக்கிறார்’ என்றனர். அவருக்கும் தொழுகை நடத்தினார்கள்.

பிறகு மூன்றாவது ஜனாஸா கொண்டு வரப்பட்டது. ‘‘நீங்கள் தொழுகை நடத்துங் கள்” என்று நபித்தோழர்கள் கூறினர். ‘‘இவர் எதையேனும் விட்டுச்சென்றிருக்கி றாரா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது யிஇல்லை’ என்றனர். ‘‘இவர் கடனாளியா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதற்கு, ‘‘மூன்று தங்கக் காசுகள் கடன் வைத்திருக்கிறார்” என்று நபித்தோழர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்” என்று கூறிவிட்டார்கள்.

அப்போது அபூக(த்)தாதா (ரலி) அவர்கள் ‘‘இவரது கடனுக்கு நான் பொறுப்பு; அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்” என்று கூறியதும், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.

அத்தியாயம் : 38

2290. وَقَالَ أَبُو الزِّنَادِ عَنْ مُحَمَّدِ بْنِ حَمْزَةَ بْنِ عَمْرٍو الأَسْلَمِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ ـ رضى الله عنه ـ بَعَثَهُ مُصَدِّقًا، فَوَقَعَ رَجُلٌ عَلَى جَارِيَةِ امْرَأَتِهِ، فَأَخَذَ حَمْزَةُ مِنَ الرَّجُلِ كَفِيلاً حَتَّى قَدِمَ عَلَى عُمَرَ، وَكَانَ عُمَرُ قَدْ جَلَدَهُ مِائَةَ جَلْدَةٍ، فَصَدَّقَهُمْ، وَعَذَرَهُ بِالْجَهَالَةِ. وَقَالَ جَرِيرٌ وَالأَشْعَثُ لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ فِي الْمُرْتَدِّينَ اسْتَتِبْهُمْ، وَكَفِّلْهُمْ. فَتَابُوا وَكَفَلَهُمْ عَشَائِرُهُمْ. وَقَالَ حَمَّادٌ إِذَا تَكَفَّلَ بِنَفْسٍ فَمَاتَ فَلاَ شَىْءَ عَلَيْهِ. وَقَالَ الْحَكَمُ يَضْمَنُ.
பாடம் : 1 பணக் கடன் உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல் கடன்களில் மனிதர் களையோ பொருட்களையோ கொணர்வதாகப் பிணையேற்றல்2
2290. ஹம்ஸா பின் அம்ர் அல் அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் என்னை ஸகாத் வசூலகராக அனுப்பினார்கள். (நான் சென்ற ஊரில்) ஒருவர் தம் மனைவியின் அடிமைப் பெண்ணுடன் விபசாரம் செய்து விட்டார். உடனே நான் அந்த மனிதருக் காகச் சில பிணையாட்களைப் பிடித்து வைத்துக்கொண்டு உமர் (ரலி) அவர்களிடம் சென்றேன்.

பிணையாட்கள் கூறியதை உமர் (ரலி) அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், அவருக்கு (குற்றவாளிக்கு) உமர் (ரலி) அவர்கள் அதற்கு முன்பே நூறு சாட்டையடி வழங்கியிருந்தார்கள். (மனைவியின் அடிமைப் பெண்ணை கணவன் உடலுறவு கொள்ளலாகாது என்ற சட்டத்தை) அறியாமல் அவர் குற்றம் செய்த காரணத்தை ஏற்று, (கல்லெறியும் தண்டனை வழங்காமல்) அவரை விட்டுவிட்டார்கள்.3

(முசைலிமா என்பவனை இறைத்தூதராக ஏற்று) இஸ்லாத்தைவிட்டு வெளியேறியவர்கள் தொடர்பாக ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) ஆகிய இருவரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், ‘‘இஸ்லாத்தை விட்டுச் சென்றவர் களை பாவமன்னிப்புக் கோரச் சொல்லுங் கள். அவர்களுக்காகப் பிணையாட்களை ஏற்படுத்துங்கள்” என்று கூறினர். அவ்வாறே அவர்கள், பாவமன்னிப்புக் கோரினர். அவர்களின் உறவினர்கள் அவர்களுக்குப் பிணையேற்றனர்.

‘‘ஓர் ஆளுக்குப் பிணையேற்ற ஒருவர் இறந்துவிட்டால், அவர்மீது பொறுப்பில்லை (அவருடைய வாரிசிடம் எதுவும் கேட்க முடியாது)” என்று ஹம்மாத் பின் அபீ சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்.

பிணையேற்றவர் இறந்துவிட்டாலும் அவரது பொறுப்பு நீங்காது என்று ஹகம் பின் உ(த்)தைபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


அத்தியாயம் : 39
2291. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم "" أَنَّهُ ذَكَرَ رَجُلاً مِنْ بَنِي إِسْرَائِيلَ سَأَلَ بَعْضَ بَنِي إِسْرَائِيلَ أَنْ يُسْلِفَهُ أَلْفَ دِينَارٍ، فَقَالَ ائْتِنِي بِالشُّهَدَاءِ أُشْهِدُهُمْ. فَقَالَ كَفَى بِاللَّهِ شَهِيدًا. قَالَ فَأْتِنِي بِالْكَفِيلِ. قَالَ كَفَى بِاللَّهِ كَفِيلاً. قَالَ صَدَقْتَ. فَدَفَعَهَا إِلَيْهِ إِلَى أَجَلٍ مُسَمًّى، فَخَرَجَ فِي الْبَحْرِ، فَقَضَى حَاجَتَهُ، ثُمَّ الْتَمَسَ مَرْكَبًا يَرْكَبُهَا، يَقْدَمُ عَلَيْهِ لِلأَجَلِ الَّذِي أَجَّلَهُ، فَلَمْ يَجِدْ مَرْكَبًا، فَأَخَذَ خَشَبَةً، فَنَقَرَهَا فَأَدْخَلَ فِيهَا أَلْفَ دِينَارٍ، وَصَحِيفَةً مِنْهُ إِلَى صَاحِبِهِ، ثُمَّ زَجَّجَ مَوْضِعَهَا، ثُمَّ أَتَى بِهَا إِلَى الْبَحْرِ، فَقَالَ اللَّهُمَّ إِنَّكَ تَعْلَمُ أَنِّي كُنْتُ تَسَلَّفْتُ فُلاَنًا أَلْفَ دِينَارٍ، فَسَأَلَنِي كَفِيلاً، فَقُلْتُ كَفَى بِاللَّهِ كَفِيلاً، فَرَضِيَ بِكَ، وَسَأَلَنِي شَهِيدًا، فَقُلْتُ كَفَى بِاللَّهِ شَهِيدًا، فَرَضِيَ بِكَ، وَأَنِّي جَهَدْتُ أَنْ أَجِدَ مَرْكَبًا، أَبْعَثُ إِلَيْهِ الَّذِي لَهُ فَلَمْ أَقْدِرْ، وَإِنِّي أَسْتَوْدِعُكَهَا. فَرَمَى بِهَا فِي الْبَحْرِ حَتَّى وَلَجَتْ فِيهِ، ثُمَّ انْصَرَفَ، وَهْوَ فِي ذَلِكَ يَلْتَمِسُ مَرْكَبًا، يَخْرُجُ إِلَى بَلَدِهِ، فَخَرَجَ الرَّجُلُ الَّذِي كَانَ أَسْلَفَهُ، يَنْظُرُ لَعَلَّ مَرْكَبًا قَدْ جَاءَ بِمَالِهِ، فَإِذَا بِالْخَشَبَةِ الَّتِي فِيهَا الْمَالُ، فَأَخَذَهَا لأَهْلِهِ حَطَبًا، فَلَمَّا نَشَرَهَا وَجَدَ الْمَالَ وَالصَّحِيفَةَ، ثُمَّ قَدِمَ الَّذِي كَانَ أَسْلَفَهُ، فَأَتَى بِالأَلْفِ دِينَارٍ، فَقَالَ وَاللَّهِ مَا زِلْتُ جَاهِدًا فِي طَلَبِ مَرْكَبٍ لآتِيَكَ بِمَالِكَ، فَمَا وَجَدْتُ مَرْكَبًا قَبْلَ الَّذِي أَتَيْتُ فِيهِ. قَالَ هَلْ كُنْتَ بَعَثْتَ إِلَىَّ بِشَىْءٍ قَالَ أُخْبِرُكَ أَنِّي لَمْ أَجِدْ مَرْكَبًا قَبْلَ الَّذِي جِئْتُ فِيهِ. قَالَ فَإِنَّ اللَّهَ قَدْ أَدَّى عَنْكَ الَّذِي بَعَثْتَ فِي الْخَشَبَةِ فَانْصَرِفْ بِالأَلْفِ الدِّينَارِ رَاشِدًا "".
பாடம் : 1 பணக் கடன் உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல் கடன்களில் மனிதர் களையோ பொருட்களையோ கொணர்வதாகப் பிணையேற்றல்2
2291. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் பொற்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர், ‘‘சாட்சிகளை என்னிடம் கொண்டுவா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்”என்றார். கடன் கேட்டவர், யிசாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்’ என்றார். ‘‘அப்படியானால் பிணையேற்கும் ஒருவரை என்னிடம் கொண்டுவா” என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்கு கடன் கேட்டவர், யிபிணையேற்க அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர், ‘நீர் கூறுவதும் உண்மைதான்’ என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஆயிரம் பொற்காசுகளை அவருக்குக் கொடுத்தார்.

கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு, தம் வேலைகளை முடித்துக் கொண்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினார். எந்த வாகனமும் அவருக்குக் கிடைக்க வில்லை. உடனே ஒரு மரக்கட்டையை எடுத்து, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் பொற்காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார்.

பிறகு கடலுக்கு வந்து, ‘‘இறைவா! இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன்; அவர் என்னிடம் பிணையேற்பவர் வேண்டும் என்றார்; நான் ‘அல்லாஹ்வே பிணையேற்கப் போதுமானவன்’ என்றேன்; அவர் உன்னை(ப் பிணையாளியாக) ஏற்றுக்கொண்டார். என்னிடம் சாட்சியைக் கொண்டுவரும்படி கேட்டார்; யிசாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறினேன்; அவர் உன்னை சாட்சியாக ஏற்றுக்கொண்டார்; அவருக்குரிய (பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பிவிடு வதற்காக ஒரு வாகனத்திற்கு நான் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என்பதை யெல்லாம் நீ அறிவாய். எனவே, இதை உரியவரிடத்தில் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்” என்று கூறி அதைக் கடலில் வீசினார். அது கடலுக்குள் சென்றது.

பிறகு அவர் திரும்பிவிட்டார். அத்துடன் தமது ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக்கொண்டிருந்தார். அவருக்குக் கடன் கொடுத்த மனிதர், தமது செல்வத்துடன் ஏதேனும் வாகனம் வரக்கூடும் என்று நோட்டமிட்டவாறு புறப்பட்டார். அப்போது, பணம் உள்ள அந்த மரக்கட்டையைக் கண்டார். தமது குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்பதற்காக அதை எடுத்தார். அதைப் பிளந்து பார்த்தபோது பணத்தையும் கடிதத்தையும் கண்டார். பிறகு, (ஒரு நாள்) கடன் வாங்கியவர் ஆயிரம் பொற்காசுகளை எடுத்துக்கொண்டு இவரிடம் வந்து சேர்ந்தார். ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! உமது பணத்தை உமக்குத் தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன்; சற்று முன்புதான் வாகனம் கிடைத்து வந்திருக்கிறேன்” என்று கூறினார்.

அதற்கு கடன் கொடுத்தவர், ‘‘எனக்கு எதையேனும் அனுப்பிவைத்தீரா?” என்று கேட்டார். கடன் வாங்கியவர், ‘‘வாகனம் கிடைக்காமல் சற்று முன்புதான் வந்திருக்கி றேன் என்று உமக்கு நான் தெரிவித்தேனே!” என்று கூறினார். கடன் கொடுத்தவர், ‘‘நீர் மரக் கட்டையில் வைத்து அனுப்பியதை உமது சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்த்துவிட்டான்; எனவே, இந்த ஆயிரம் பொற்காசுகளை எடுத்துக்கொண்டு (சரியான) வழியறிந்து செல்வீராக!” என்று கூறினார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 39
2292. حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ إِدْرِيسَ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما – {وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِيَ} قَالَ وَرَثَةً {وَالَّذِينَ عَقَدَتْ أَيْمَانُكُمْ} قَالَ كَانَ الْمُهَاجِرُونَ لَمَّا قَدِمُوا الْمَدِينَةَ يَرِثُ الْمُهَاجِرُ الأَنْصَارِيَّ دُونَ ذَوِي رَحِمِهِ لِلأُخُوَّةِ الَّتِي آخَى النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَهُمْ، فَلَمَّا نَزَلَتْ {وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِيَ} نَسَخَتْ، ثُمَّ قَالَ {وَالَّذِينَ عَقَدَتْ أَيْمَانُكُمْ } إِلاَّ النَّصْرَ وَالرِّفَادَةَ وَالنَّصِيحَةَ، وَقَدْ ذَهَبَ الْمِيرَاثُ وَيُوصِي لَهُ.
பாடம் : 2 ‘‘உங்கள் வலக் கரங்கள் யாருடன் ஒப்பந்தம் செய்துகொண்டனவோ அவர்களுக்கு, அவர்களின் பங்கை அளித்துவிடுங்கள்” (4:33) எனும் இறைவசனம்
2292. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹாஜிர்கள் மதீனாவிற்கு வந்தபோது, அன்சாரி (ஒருவர் இறந்துவிட்டால் அவரு)க்கு, அவருடைய இரத்த உறவினர்கள் அன்றி முஹாஜிர் (நண்பரே) வாரிசாகிவந்தார். முஹாஜிர்லிஅன்சாரிக்கிடையே நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய (இஸ்லாமிய) சகோதரத்துவமே இதற்குக் காரணம்.

பிறகு ‘‘பெற்றோரும் உறவினர்களும் விட்டுச்சென்ற (சொத்)துக்கு (உரிய) வாரிசுகளை ஒவ்வொருவருக்கும் நாம் ஏற்படுத்தியுள்ளோம். உங்கள் வலக் கரங்கள் யாருடன் ஒப்பந்தம் செய்து கொண்டனவோ அவர்களுக்கு, அவர் களின் பங்கை அளித்துவிடுங்கள்” (4:33) எனும் இறைவசனம் அருளப்பெற்றபோது இது மாற்றப்பட்டது.

உடன்படிக்கை செய்துகொண்டவர் களுக்கிடையே வாரிசுரிமை போய், உதவி புரிதல், ஒத்துழைப்பு நல்கல், அறிவுரை கூறல் ஆகியவைதான் எஞ்சியுள்ளன. உடன்படிக்கை செய்துகொண்டவருக்காக மரண சாசனம் (வேண்டுமானால்) செய்யலாம்.


அத்தியாயம் : 39
2293. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَدِمَ عَلَيْنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ فَآخَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَهُ وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ.
பாடம் : 2 ‘‘உங்கள் வலக் கரங்கள் யாருடன் ஒப்பந்தம் செய்துகொண்டனவோ அவர்களுக்கு, அவர்களின் பங்கை அளித்துவிடுங்கள்” (4:33) எனும் இறைவசனம்
2293. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், (புலம்பெயர்ந்து மக்காவிலிருந்து மதீனாவுக்கு) எங்களிடம் வந்தபோது, அவருக்கும் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்கும் இடையே நபி (ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தை ஏற்படுத்தி னார்கள்.4


அத்தியாயம் : 39
2294. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا عَاصِمٌ، قَالَ قُلْتُ لأَنَسٍ رضى الله عنه أَبَلَغَكَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ حِلْفَ فِي الإِسْلاَمِ "". فَقَالَ قَدْ حَالَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ قُرَيْشٍ وَالأَنْصَارِ فِي دَارِي.
பாடம் : 2 ‘‘உங்கள் வலக் கரங்கள் யாருடன் ஒப்பந்தம் செய்துகொண்டனவோ அவர்களுக்கு, அவர்களின் பங்கை அளித்துவிடுங்கள்” (4:33) எனும் இறைவசனம்
2294. ஆஸிம் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களி டம், ‘‘இஸ்லாத்தில் (மனிதர்களாக எற்படுத்திக்கொள்கிற வாரிசாகிக்கொள்ளும் ஒப்பந்த) நட்புறவு முறை இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி உங்களுக்குச் கிடைத்ததா?” என்று நான் கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘‘எனது வீட்டில்வைத்து முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்குமிடையே நபி (ஸல்) அவர்கள் நட்புறவு முறையை ஏற்படுத்தி னார்களே!” என்று பதிலளித்தார்கள்.5

அத்தியாயம் : 39
2295. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِجَنَازَةٍ، لِيُصَلِّيَ عَلَيْهَا، فَقَالَ "" هَلْ عَلَيْهِ مِنْ دَيْنٍ "". قَالُوا لاَ. فَصَلَّى عَلَيْهِ، ثُمَّ أُتِيَ بِجَنَازَةٍ أُخْرَى، فَقَالَ "" هَلْ عَلَيْهِ مَنْ دَيْنٍ "". قَالُوا نَعَمْ. قَالَ "" صَلُّوا عَلَى صَاحِبِكُمْ "". قَالَ أَبُو قَتَادَةَ عَلَىَّ دَيْنُهُ يَا رَسُولَ اللَّهِ. فَصَلَّى عَلَيْهِ.
பாடம் : 3 இறந்தவரின் கடனுக்குப் பொறுப் பேற்றுக்கொண்டவர் அந்தப் பொறுப்பில் இருந்து பிறழக் கூடாது. ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.
2295. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறுதித்தொழுகை நடத்துவதற்காக ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டு வரப்பட்டது. ‘‘இவருக்குக் கடன் உண்டா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் யிஇல்லை’ என்ற னர். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. அப்போது ‘‘இவருக்குக் கடன் உண்டா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் யிஆம்!› என்றனர்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுது கொள்ளுங்கள்!” என்றார்கள். அப்போது அபூகத்தாதா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் வின் தூதரே! இவரது கடனுக்கு நான் பொறுப்பு” என்று கூறியதும், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தி னார்கள்.6


அத்தியாயம் : 39
2296. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، سَمِعَ مُحَمَّدَ بْنَ عَلِيٍّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهم ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَوْ قَدْ جَاءَ مَالُ الْبَحْرَيْنِ، قَدْ أَعْطَيْتُكَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا "". فَلَمْ يَجِئْ مَالُ الْبَحْرَيْنِ حَتَّى قُبِضَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمَّا جَاءَ مَالُ الْبَحْرَيْنِ أَمَرَ أَبُو بَكْرٍ فَنَادَى مَنْ كَانَ لَهُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم عِدَةٌ أَوْ دَيْنٌ فَلْيَأْتِنَا. فَأَتَيْتُهُ، فَقُلْتُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِي كَذَا وَكَذَا، فَحَثَى لِي حَثْيَةً فَعَدَدْتُهَا فَإِذَا هِيَ خَمْسُمِائَةٍ، وَقَالَ خُذْ مِثْلَيْهَا.
பாடம் : 3 இறந்தவரின் கடனுக்குப் பொறுப் பேற்றுக்கொண்டவர் அந்தப் பொறுப்பில் இருந்து பிறழக் கூடாது. ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.
2296. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருட்கள் வந்தால் உமக்கு இன்னின்ன பொருட்களைத் தருவேன்” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார் கள். அவர்கள் இறக்கும்வரை பஹ்ரைன் நிதி வரவில்லை.

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைன் நிதி வந்தபோது, ‘‘நபி (ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால், அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்!” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

நான் அவர்களிடம் சென்று, ‘‘நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இவ்வாறெல்லாம் கூறியிருந்தார்கள்” என்றேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு இரு கை நிறைய (நாணயங்களை) ஒரு தடவை அள்ளிக்கொடுத்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்தபோது ஐநூறு (நாணயங்கள்) இருந்தன.

‘‘இதைப் போன்று இன்னும் இரண்டு மடங்குகளை எடுத்துக்கொள்வீராக” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 39
2297. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ لَمْ أَعْقِلْ أَبَوَىَّ إِلاَّ وَهُمَا يَدِينَانِ الدِّينَ. وَقَالَ أَبُو صَالِحٍ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ عَنْ يُونُسَ عَنِ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمْ أَعْقِلْ أَبَوَىَّ قَطُّ، إِلاَّ وَهُمَا يَدِينَانِ الدِّينَ، وَلَمْ يَمُرَّ عَلَيْنَا يَوْمٌ إِلاَّ يَأْتِينَا فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم طَرَفَىِ النَّهَارِ بُكْرَةً وَعَشِيَّةً، فَلَمَّا ابْتُلِيَ الْمُسْلِمُونَ خَرَجَ أَبُو بَكْرٍ مُهَاجِرًا قِبَلَ الْحَبَشَةِ، حَتَّى إِذَا بَلَغَ بَرْكَ الْغِمَادِ لَقِيَهُ ابْنُ الدَّغِنَةِ ـ وَهْوَ سَيِّدُ الْقَارَةِ ـ فَقَالَ أَيْنَ تُرِيدُ يَا أَبَا بَكْرٍ فَقَالَ أَبُو بَكْرٍ أَخْرَجَنِي قَوْمِي فَأَنَا أُرِيدُ أَنْ أَسِيحَ فِي الأَرْضِ فَأَعْبُدَ رَبِّي. قَالَ ابْنُ الدَّغِنَةِ إِنَّ مِثْلَكَ لاَ يَخْرُجُ وَلاَ يُخْرَجُ، فَإِنَّكَ تَكْسِبُ الْمَعْدُومَ، وَتَصِلُ الرَّحِمَ، وَتَحْمِلُ الْكَلَّ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ، وَأَنَا لَكَ جَارٌ فَارْجِعْ فَاعْبُدْ رَبَّكَ بِبِلاَدِكَ. فَارْتَحَلَ ابْنُ الدَّغِنَةِ، فَرَجَعَ مَعَ أَبِي بَكْرٍ، فَطَافَ فِي أَشْرَافِ كُفَّارِ قُرَيْشٍ، فَقَالَ لَهُمْ إِنَّ أَبَا بَكْرٍ لاَ يَخْرُجُ مِثْلُهُ، وَلاَ يُخْرَجُ، أَتُخْرِجُونَ رَجُلاً يُكْسِبُ الْمَعْدُومَ، وَيَصِلُ الرَّحِمَ، وَيَحْمِلُ الْكَلَّ، وَيَقْرِي الضَّيْفَ، وَيُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ. فَأَنْفَذَتْ قُرَيْشٌ جِوَارَ ابْنِ الدَّغِنَةِ وَآمَنُوا أَبَا بَكْرٍ وَقَالُوا لاِبْنِ الدَّغِنَةِ مُرْ أَبَا بَكْرٍ فَلْيَعْبُدْ رَبَّهُ فِي دَارِهِ، فَلْيُصَلِّ وَلْيَقْرَأْ مَا شَاءَ، وَلاَ يُؤْذِينَا بِذَلِكَ، وَلاَ يَسْتَعْلِنْ بِهِ، فَإِنَّا قَدْ خَشِينَا أَنْ يَفْتِنَ أَبْنَاءَنَا وَنِسَاءَنَا. قَالَ ذَلِكَ ابْنُ الدَّغِنَةِ لأَبِي بَكْرٍ، فَطَفِقَ أَبُو بَكْرٍ يَعْبُدُ رَبَّهُ فِي دَارِهِ، وَلاَ يَسْتَعْلِنُ بِالصَّلاَةِ وَلاَ الْقِرَاءَةِ فِي غَيْرِ دَارِهِ، ثُمَّ بَدَا لأَبِي بَكْرٍ فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ، وَبَرَزَ فَكَانَ يُصَلِّي فِيهِ، وَيَقْرَأُ الْقُرْآنَ، فَيَتَقَصَّفُ عَلَيْهِ نِسَاءُ الْمُشْرِكِينَ وَأَبْنَاؤُهُمْ، يَعْجَبُونَ وَيَنْظُرُونَ إِلَيْهِ، وَكَانَ أَبُو بَكْرٍ رَجُلاً بَكَّاءً لاَ يَمْلِكُ دَمْعَهُ حِينَ يَقْرَأُ الْقُرْآنَ، فَأَفْزَعَ ذَلِكَ أَشْرَافَ قُرَيْشٍ مِنَ الْمُشْرِكِينَ، فَأَرْسَلُوا إِلَى ابْنِ الدَّغِنَةِ فَقَدِمَ عَلَيْهِمْ، فَقَالُوا لَهُ إِنَّا كُنَّا أَجَرْنَا أَبَا بَكْرٍ عَلَى أَنْ يَعْبُدَ رَبَّهُ فِي دَارِهِ، وَإِنَّهُ جَاوَزَ ذَلِكَ، فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ، وَأَعْلَنَ الصَّلاَةَ وَالْقِرَاءَةَ، وَقَدْ خَشِينَا أَنْ يَفْتِنَ أَبْنَاءَنَا وَنِسَاءَنَا، فَأْتِهِ فَإِنْ أَحَبَّ أَنْ يَقْتَصِرَ عَلَى أَنْ يَعْبُدَ رَبَّهُ فِي دَارِهِ فَعَلَ، وَإِنْ أَبَى إِلاَّ أَنْ يُعْلِنَ ذَلِكَ فَسَلْهُ أَنْ يَرُدَّ إِلَيْكَ ذِمَّتَكَ، فَإِنَّا كَرِهْنَا أَنْ نُخْفِرَكَ، وَلَسْنَا مُقِرِّينَ لأَبِي بَكْرٍ الاِسْتِعْلاَنَ. قَالَتْ عَائِشَةُ فَأَتَى ابْنُ الدَّغِنَةِ أَبَا بَكْرٍ، فَقَالَ قَدْ عَلِمْتَ الَّذِي عَقَدْتُ لَكَ عَلَيْهِ، فَإِمَّا أَنْ تَقْتَصِرَ عَلَى ذَلِكَ وَإِمَّا أَنْ تَرُدَّ إِلَىَّ ذِمَّتِي، فَإِنِّي لاَ أُحِبُّ أَنْ تَسْمَعَ الْعَرَبُ أَنِّي أُخْفِرْتُ فِي رَجُلٍ عَقَدْتُ لَهُ. قَالَ أَبُو بَكْرٍ إِنِّي أَرُدُّ إِلَيْكَ جِوَارَكَ، وَأَرْضَى بِجِوَارِ اللَّهِ. وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَئِذٍ بِمَكَّةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قَدْ أُرِيتُ دَارَ هِجْرَتِكُمْ، رَأَيْتُ سَبْخَةً ذَاتَ نَخْلٍ بَيْنَ لاَبَتَيْنِ "". وَهُمَا الْحَرَّتَانِ، فَهَاجَرَ مَنْ هَاجَرَ قِبَلَ الْمَدِينَةِ حِينَ ذَكَرَ ذَلِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، وَرَجَعَ إِلَى الْمَدِينَةِ بَعْضُ مَنْ كَانَ هَاجَرَ إِلَى أَرْضِ الْحَبَشَةِ، وَتَجَهَّزَ أَبُو بَكْرٍ مُهَاجِرًا، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" عَلَى رِسْلِكَ فَإِنِّي أَرْجُو أَنْ يُؤْذَنَ لِي "". قَالَ أَبُو بَكْرٍ هَلْ تَرْجُو ذَلِكَ بِأَبِي أَنْتَ قَالَ "" نَعَمْ "". فَحَبَسَ أَبُو بَكْرٍ نَفْسَهُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِيَصْحَبَهُ وَعَلَفَ رَاحِلَتَيْنِ كَانَتَا عِنْدَهُ وَرَقَ السَّمُرِ أَرْبَعَةَ أَشْهُرٍ.
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களது காலத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அளிக்கப்பட்ட அடைக்கலமும் உறுதிமொழியும்
2297. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலாகவே என் பெற்றோர் (அபூபக்ர், உம்மு ரூமான்) (இஸ்லாம்) மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களாகவே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பகலின் இரு ஓரங்களான காலையிலும் மாலையிலும் எங்களிடம் வராமல் ஒரு நாளும் கழிந்தது இல்லை. (மக்காவில்) முஸ்லிம்கள் (இணைவைப்பாளர்களால்) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டபோது, அபூபக்ர் (ரலி) அவர்கள் புலம்பெயர்ந்து அபிசீனியாவை நோக்கிச் சென்றார்கள். யிபர்குல் ஃகிமாத்’ எனும் இடத்தை அவர்கள் அடைந்தபோது இப்னு தஃகினா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் ‘அல்காரா’ எனும் குலத்தின் தலைவராவார். அவர் அவர்களிடம், ‘‘அபூபக்ரே! எங்கே செல்கிறீர்?” என்று கேட்டார்.

அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘என் சமுதாயத்தார் என்னை வெளியேற்றி விட்டனர்; எனவே, பூமியில் பயணம் (செய்து வேறுபகுதிக்குச்) சென்று என் இறைவனை வழிபடப்போகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு இப்னு தஃகினா, ‘‘உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது; வெளியேற்றப்படவும் கூடாது! ஏனெனில், நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர்; உறவைப் பேணுகிறீர்; (சிரமப்படு வோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்; விருந்தினர் களை உபசரிக்கிறீர்; சத்திய சோதனைகளில் ஆட்பட்டோருக்கு உதவுகிறீர். எனவே, நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன். ஆகவே, திரும்பிச் சென்று உமது ஊரிலேயே உம்முடைய இறையை வழிபடுவீராக!” எனக் கூறினார்.

இப்னு தஃகினா, தம்முடன் அபூபக்ர் (ரலி) அவர்களை அழைத்துக்கொண்டு குறைஷி இறைமறுப்பாளர்களின் பிரமுகர் களைச் சந்தித்தார். அவர்களிடம், ‘‘அபூபக் ரைப் போன்றவர்கள் வெளியேறவும் கூடாது; வெளியேற்றப்படவும் கூடாது. ஏழைகளுக்காக உழைக்கின்ற, உறவைப் பேணுகின்ற, விருந்தினரை உபசரிக்கின்ற, (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கின்ற, சத்திய சோதனைகளில் ஆட்பட்டோருக்கு உதவுகின்ற ஒரு மனிதரையா நீங்கள் வெளியேற்றுகிறீர்கள்?” என்று கேட்டார்.

ஆகவே, குறைஷியர் இப்னு தஃகினா அளித்த அடைக்கலத்தை ஏற்று அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்த னர். ஆனால், இப்னு தஃகினாவிடம், ‘‘தமது வீட்டில் தம் இறைவனைத் தொழுது வருமாறும், விரும்பியதை ஓதுமாறும், அதனால் எங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறும், அதை பகிரங்கமாகச் செய்யாதிருக்கும்படியும் அபூபக்ருக்கு நீர் கூறுவீராக! ஏனெனில், எங்களுடைய மனைவி மக்களை அவர் குழப்பிவிடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம்” என்றனர்.

இதை இப்னு தஃகினா, அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது வீட்டுக்குள்ளேயே தம் இறையை வழிபடலானார்கள்; தமது தொழுகை, ஓதுதல் ஆகியவற்றை வீட்டுக்கு வெளியே பகிரங்கப் படுத்தவில்லை.

பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஏதோ தோன்ற, தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி, வெளிப் படையாக அந்த இடத்தில் தொழுது கொண்டும் குர்ஆனை ஓதிக்கொண்டும் இருக்கலானார்கள். இணைவைப்பாளர் களின் மனைவி மக்கள் திரண்டு வந்து ஆச்சரியத்துடன் அபூபக்ரைக் கவனிக்க லாயினர். அபூபக்ர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதும்போது (மனம் உருகி வெளிப்படும்) தமது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகம் அழுபவ ராக இருந்தார்கள். இணைவைப்போரான குறைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தியது.

உடனே இப்னு தஃகினாவை அழைத்து வரச் செய்தார்கள். அவர்களிடம் அவர் வந்தார். அவரிடம், ‘‘அபூபக்ர் அவர்கள், தமது வீட்டில்தான் தம் இறையை வழிபடவேண்டும் என்ற அடிப்படை யிலேயே நாங்கள் அவருக்குப் பாதுகாப்ப ளித்திருந்தோம். அவர் அதை மீறித் தமது வீட்டின் முற்றத்தில் தொழுமிடத்தை உருவாக்கி, பகிரங்கமாக தொழவும் ஓதவும் தொடங்கிவிட்டார். அவர் எங்கள் மனைவி மக்களைக் குழப்பிவிடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம். எனவே, அவர் தம் இறைவனைத் தமது வீட்டில் மட்டும் வழிபடுவதாக இருந்தால் செய்யட்டும்; அதை அவர் மறுத்து, பகிரங்கமாகத்தான் செய்வேன் என்று அவர் கூறினால், நீர் கொடுத்த அடைக்கலத்தைத் திரும்பத் தருமாறு அவரிடம் கோரும்! ஏனெனில், உம்மிடம் செய்த ஒப்பந்தத்தை முறிக்கவும் நாங்கள் விரும்பவில்லை; அதே சமயம் அபூபக்ர் பகிரங்கமாகச் செயல்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் (தயாராக) இல்லை” என்று குறைஷியர் கூறினர்.

உடனே இப்னு தஃகினா, அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, ‘‘எந்த அடிப்படையில் உம்மிடம் நான் ஒப்பந்தம் செய்தேன் என்பதை நீர் அறிவீர். எனவே, நீர் அதன்படி மட்டுமே நடக்க வேண்டும். இல்லையென்றால் எனது அடைக்கலத்தை என்னிடமே திருப்பித் தந்துவிட வேண்டும். ஒரு மனிதரிடம் இப்னு தஃகினா செய்த உடன்படிக்கை முறிக்கப்பட்டது என்று (பிற்காலத்தில்) அரபியர் கேள்விப்படுவதை நான் விரும்பமாட்டேன்” எனக் கூறினார்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் ‘‘உமது அடைக்கலத்தை உம்மிடமே நான் திரும்பத் தந்துவிடுகிறேன். அல்லாஹ்வின் அடைக்கலத்தில் நான் திருப்புதியுறுகிறேன்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தார்கள். ‘‘நீங்கள் புலம்பெயர்ந்து செல்லும் நாடு எனக்குக் காட்டப்பட்டது. அது இரு கருங்கல் மலைகளுக்கிடையே பேரீச்ச மரங்கள் நிறைந்த உவர் நிலமாகும். அந்த இருமலைகள்தான் (மதீனாவின்) இரு கருங்கல் பூமிகளாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது மதீனாவை நோக்கிப் புலம்பெயர்ந்து சென்றவர்கள் சென்றார்கள். அபிசீனியாவுக்குப் புலம் பெயர்ந்தவர்களில் சிலர் மதீனாவுக்குத் திரும்பி வந்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள் புலம்பெயரத் தயாரானபோது, அவர்களிடம், ‘‘சற்றுப் பொறுப்பீராக! எனக்கு அனுமதி அளிக்கப்படுவதை நான் எதிர்பார்க்கிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நீங்கள் அனுமதியைத்தான் எதிர்பார்க்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஆம்!” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து செல்வதற்காகவே அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது பயணத்தை நிறுத்திவைத்தார்கள். தம்மிடமிருந்த இரண்டு ஊர்தி ஒட்டகங்களுக்கும் கருவேல மரத்திலிருந்த இலைகளை நான்கு மாதங்கள் தீனியாகப் போட்டு (வளர்த்து)வந்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 39
2298. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُؤْتَى بِالرَّجُلِ الْمُتَوَفَّى عَلَيْهِ الدَّيْنُ فَيَسْأَلُ "" هَلْ تَرَكَ لِدَيْنِهِ فَضْلاً "". فَإِنْ حُدِّثَ أَنَّهُ تَرَكَ لِدَيْنِهِ وَفَاءً صَلَّى، وَإِلاَّ قَالَ لِلْمُسْلِمِينَ "" صَلُّوا عَلَى صَاحِبِكُمْ "". فَلَمَّا فَتَحَ اللَّهُ عَلَيْهِ الْفُتُوحَ قَالَ "" أَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ، فَمَنْ تُوُفِّيَ مِنَ الْمُؤْمِنِينَ فَتَرَكَ دَيْنًا فَعَلَىَّ قَضَاؤُهُ، وَمَنْ تَرَكَ مَالاً فَلِوَرَثَتِهِ "".
பாடம் : 5 கடன்
2298. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கடன்பட்ட நிலையில் இறந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இறுதித் தொழுகைக்காகக்) கொண்டுவரப் படுவார்; அப்போது ‘‘இவர் தம்மீதுள்ள கடனை அடைக்க ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா?” என்று கேட்பார்கள். ‘‘கடனை அடைப்பதற்குப் போதுமானதை விட்டுச்சென்றிருக்கிறார்” என்று கூறப் பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்து வார்கள்.

இல்லையென்றால், ‘‘உங்கள் தோழருக்கு நீங்களே தொழுதுகொள்ளுங்கள்” என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள்.

அவர்களுக்கு அல்லாஹ் பல வெற்றிகளை அளித்தபோது (அதன் மூலம் அரசு நிதி குவிந்ததால்), ‘‘இறைநம்பிக்கையாளர்களுக்கு, அவர்களைவிட நானே நெருக்கமான (உரிமை உடைய)வன் ஆவேன். எனவே, இறைநம்பிக்கையாளர்களில் யார் கடனை (அடைக்காமல்) விட்டுச்செல்கிறாரோ அதை அடைப்பது என் பொறுப்பாகும்; யார் செல்வத்தை விட்டுச்செல்கிறாரோ அது அவர்களின் வாரிசுகளுக்கு உரியதாகும்!” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 39

2299. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أَتَصَدَّقَ بِجِلاَلِ الْبُدْنِ الَّتِي نُحِرَتْ وَبِجُلُودِهَا.
பாடம் : 1 விநியோகம் உள்ளிட்டவற்றில் பங்காளிகளில் ஒருவர் மற்றவருக்குச் செயலுரிமை வழங்கல் நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானிப் பிராணிகளில் அலீ (ரலி) அவர்களையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டார்கள். பிறகு அதைப் பங்கிடும் பொறுப்பை அலீ (ரலி) அவர்களிடமே ஒப்படைத்தார்கள்.
2299. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறுக்கப்பட்ட பலி ஒட்டகங்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த சேணங்களையும் அதன் தோல்களையும் தர்மம் செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.


அத்தியாயம் : 40
2300. حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَعْطَاهُ غَنَمًا يَقْسِمُهَا عَلَى صَحَابَتِهِ، فَبَقِيَ عَتُودٌ فَذَكَرَهُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ""ضَحِّ بِهِ أَنْتَ.""
பாடம் : 1 விநியோகம் உள்ளிட்டவற்றில் பங்காளிகளில் ஒருவர் மற்றவருக்குச் செயலுரிமை வழங்கல் நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானிப் பிராணிகளில் அலீ (ரலி) அவர்களையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டார்கள். பிறகு அதைப் பங்கிடும் பொறுப்பை அலீ (ரலி) அவர்களிடமே ஒப்படைத்தார்கள்.
2300. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சில ஆடு களைத் தம் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு என்னிடம் கொடுத்தார்கள்; (அவ்வாறே நான் பங்கிட்டு முடித்தபின்) ஒரு வெள்ளாட்டுக் குட்டி எஞ்சியது. அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, ‘‘அதை நீரே (அறுத்து) குர்பானி கொடுப்பீராக!” எனக் கூறி னார்கள்.

அத்தியாயம் : 40
2301. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي يُوسُفُ بْنُ الْمَاجِشُونِ، عَنْ صَالِحِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ـ رضى الله عنه ـ قَالَ كَاتَبْتُ أُمَيَّةَ بْنَ خَلَفٍ كِتَابًا بِأَنْ يَحْفَظَنِي فِي صَاغِيَتِي بِمَكَّةَ، وَأَحْفَظَهُ فِي صَاغِيَتِهِ بِالْمَدِينَةِ، فَلَمَّا ذَكَرْتُ الرَّحْمَنَ قَالَ لاَ أَعْرِفُ الرَّحْمَنَ، كَاتِبْنِي بِاسْمِكَ الَّذِي كَانَ فِي الْجَاهِلِيَّةِ. فَكَاتَبْتُهُ عَبْدُ عَمْرٍو فَلَمَّا كَانَ فِي يَوْمِ بَدْرٍ خَرَجْتُ إِلَى جَبَلٍ لأُحْرِزَهُ حِينَ نَامَ النَّاسُ فَأَبْصَرَهُ بِلاَلٌ فَخَرَجَ حَتَّى وَقَفَ عَلَى مَجْلِسٍ مِنَ الأَنْصَارِ فَقَالَ أُمَيَّةُ بْنُ خَلَفٍ، لاَ نَجَوْتُ إِنْ نَجَا أُمَيَّةُ. فَخَرَجَ مَعَهُ فَرِيقٌ مِنَ الأَنْصَارِ فِي آثَارِنَا، فَلَمَّا خَشِيتُ أَنْ يَلْحَقُونَا خَلَّفْتُ لَهُمُ ابْنَهُ، لأَشْغَلَهُمْ فَقَتَلُوهُ ثُمَّ أَبَوْا حَتَّى يَتْبَعُونَا، وَكَانَ رَجُلاً ثَقِيلاً، فَلَمَّا أَدْرَكُونَا قُلْتُ لَهُ ابْرُكْ. فَبَرَكَ، فَأَلْقَيْتُ عَلَيْهِ نَفْسِي لأَمْنَعَهُ، فَتَخَلَّلُوهُ بِالسُّيُوفِ مِنْ تَحْتِي، حَتَّى قَتَلُوهُ، وَأَصَابَ أَحَدُهُمْ رِجْلِي بِسَيْفِهِ، وَكَانَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ يُرِينَا ذَلِكَ الأَثَرَ فِي ظَهْرِ قَدَمِهِ. قَالَ أَبُو عَبْد اللَّهِ سَمِعَ يُوسُفُ صَالِحًا وَإِبْرَاهِيمُ أَبَاهُ
பாடம் : 2 பகை நாட்டில் உள்ள, அல்லது இஸ்லாமிய நாட்டில் (அடைக்கலம் பெற்று) உள்ள (முஸ்லிமல்லாத) பகை நாட்டவருக்கு ஒரு முஸ்லிம் செயலுரிமை வழங்கல்
2301. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவிலுள்ள என் குடும்பத்தாரை யும் சொத்துகளையும் உமய்யா பின் கலஃப் (என்ற இறைமறுப்பாளர்) பாதுகாக்க வேண்டும் என்றும் மதீனாவிலுள்ள அவருடைய குடும்பத்தாரையும் சொத்து களையும் நான் பாதுகாப்பேன் என்றும் அவருடன் எழுத்துபூர்வமாக ஒப்பந்தம் செய்துகொண்டேன். (ஒப்பந்தப் படிவத்தில்) ‘அப்துர் ரஹ்மான்’ (ரஹ்மானின் அடிமை) என்று என் பெயரை எழுதியபோது, ‘‘ரஹ்மானை நான் அறியமாட்டேன்; அறியாமைக் காலத்தில் இருந்த உமது பெயரை எழுதும்” என்று அவர் கூறினார். நான் அப்து அம்ர் என்று (என் பழைய பெயரை) எழுதினேன்.

பத்ர் போர் நடந்த நாளில் மக்களெல் லாரும் உறங்கியபோது அவரைப் பாதுகாப்பதற்காக மலையை நோக்கி நான் சென்றேன். அவரை பிலால் (ரலி) அவர்கள் பார்த்துவிட்டார். பிலால் உடனே வந்து அன்சாரிகள் குழுமியிருந்த இடத்தில், ‘‘இதோ உமய்யா பின் கலஃப்! இவன் தப்பித்துவிட்டால் நான் தப்பிக்க முடியாது” எனக் கூறினார்.2

பிலாலுடன் அன்சாரிகளில் ஒரு குழுவினர் எங்களைத் தொடர்ந்து வந்தனர். அவர்கள் எங்களைப் பிடித்துவிடுவார்கள் என்று நான் அஞ்சியபோது, உமய்யாவின் மகனை முன்னிறுத்தி அவர்களின் கவனத்தைத் திருப்ப முயன்றேன். அவனை அன்சாரிகள் கொன்றுவிட்டனர்.

பிறகும் விடாமல் எங்களைத் தொடர்ந்து வந்தனர். உமய்யா உடல் கனத்தவராக இருந்தார். (அதனால் ஓட இயலவில்லை.) அவர்கள் எங்களை அடைந்ததும் உமய்யாவிடம், ‘குப்புறப் படுப்பீராக!’ என்று கூறினேன். அவர் குப்புற விழுந்ததும் அவரைக் காப்பாற்றுவதற்காக அவர்மேல் நான் விழுந்தேன். அன்சாரிகள் எனக்குக் கீழ்ப்புறம் வாளைச் செலுத்தி அவரைக் கொன்றுவிட்டனர். அவர்களில் ஒருவர் என் காலையும் தமது வாளால் வெட்டினார்.

‘‘அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், தமது பாதத்தின் மேல்பகுதியில் அந்த வெட்டுக் காயத்(தின் வடு இருப்ப)தை எங்களுக்குக் காட்டினார்” என்று அவருடைய மகன் கூறுகிறார்.3

அத்தியாயம் : 40
2302. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الْمَجِيدِ بْنِ سُهَيْلِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَأَبِي، هُرَيْرَةَ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اسْتَعْمَلَ رَجُلاً عَلَى خَيْبَرَ، فَجَاءَهُمْ بِتَمْرٍ جَنِيبٍ فَقَالَ " أَكُلُّ تَمْرِ خَيْبَرَ هَكَذَا ". فَقَالَ إِنَّا لَنَأْخُذُ الصَّاعَ مِنْ هَذَا بِالصَّاعَيْنِ، وَالصَّاعَيْنِ بِالثَّلاَثَةِ. فَقَالَ " لاَ تَفْعَلْ، بِعِ الْجَمْعَ بِالدَّرَاهِمِ، ثُمَّ ابْتَعْ بِالدَّرَاهِمِ جَنِيبًا ". وَقَالَ فِي الْمِيزَانِ مِثْلَ ذَلِكَ.
பாடம் : 3 நாணயமாற்று வணிகம், எடை போடுதல் ஆகியவற்றில் செயலு ரிமை வழங்கல் நாணயமாற்றுச் செய்வதற்கு உமர் (ரலி) அவர்களும் இப்னு உமர் (ரலி) அவர்களும் (பிறருக்கு) செயலுரிமை வழங்கியுள்ளனர்.
2302. 2303 அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் பகுதிக்கு ஒரு மனிதரை அதிகாரியாக நியமித்தார்கள். அவர் (அங்கு சென்றுவிட்டு) உயர் ரகப் பேரீச்சம் பழங்களை மக்களிடம் கொண்டுவந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கைபரில் உள்ள எல்லாப் பேரீச்சம் பழங்களும் இப்படித்தான் (உயர்ரக மானவையாக) இருக்குமா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், ‘‘இரண்டு ‘ஸாஉ’கள் சாதாரண வகைப் பேரீச்சம்பழங்களைக் கொடுத்து இதில் ஒரு ‘ஸாஉ’வையும், மூன்று ‘ஸாஉ’கள் சாதாரண வகைப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து இதில் இரண்டு ‘ஸாஉ’களையும் நாங்கள் வாங்குவோம்” எனக் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவ்வாறு செய்யாதீர்! சாதாரண வகைப் பேரீச்சம்பழங்களை வெள்ளிக் காசுகளுக்கு விற்றுவிட்டு, அந்தக் காசுகளுக்குப் பதிலாக உயர்ந்த பேரீச்சம்பழங்களை வாங்குவீராக!” என்றார்கள்.

நிறுத்தலளவையிலும் இதைப் போன்றே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.4

அத்தியாயம் : 40
2304. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ الْمُعْتَمِرَ، أَنْبَأَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ كَعْبِ بْنِ مَالِكٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، أَنَّهُ كَانَتْ لَهُمْ غَنَمٌ تَرْعَى بِسَلْعٍ، فَأَبْصَرَتْ جَارِيَةٌ لَنَا بِشَاةٍ مِنْ غَنَمِنَا مَوْتًا، فَكَسَرَتْ حَجَرًا فَذَبَحَتْهَا بِهِ، فَقَالَ لَهُمْ لاَ تَأْكُلُوا حَتَّى أَسْأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم، أَوْ أُرْسِلَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم مَنْ يَسْأَلُهُ. وَأَنَّهُ سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ ذَاكَ، أَوْ أَرْسَلَ، فَأَمَرَهُ بِأَكْلِهَا. قَالَ عُبَيْدُ اللَّهِ فَيُعْجِبُنِي أَنَّهَا أَمَةٌ، وَأَنَّهَا ذَبَحَتْ. تَابَعَهُ عَبْدَةُ عَنْ عُبَيْدِ اللَّهِ.
பாடம் : 4 ஆடு மேய்ப்பவர், சாகும் தறுவாயி லுள்ள ஓர் ஆட்டைக் கண்டால் அதை அறுக்கலாம்; செயலுரிமை வழங்கப்பட்டவர், அழிந்துவிடும் நிலையிலுள்ள ஒரு பொருளைக் கண்டால் அப்பொருளைச் சீராக் கலாம்.
2304. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களுக்குச் சில ஆடுகள் இருந்தன. அவை ‘சல்உ’ எனும் மலைப் பகுதியில் மேய்ந்துவந்தன. (ஒருநாள்) அந்த ஆடுகளில் ஒன்று சாகும் தறுவாயில் இருப்பதை எங்கள் அடிமைப் பெண் ஒருத்தி பார்த்துவிட்டு, ஒரு கல்லை (கூர்மையாக) உடைத்து, அதைக் கொண்டு அந்த ஆட்டை அறுத்தாள். ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதுபற்றி நான் கேட்காத வரை சாப்பிடாதீர்கள்!” என்று என்னுடன் இருந்தவர்களுக்கு நான் கூறினேன். அல்லது ‘நபி (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி இதைப் பற்றிக் கேட்காத வரை சாப்பிடாதீர்கள்’ என்று சொன்னார்.

நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அதை உண்ணுமாறு கூறினார்கள்.

‘‘அவரோ ஓர் அடிமைப்பெண்; அவரே இவ்வாறு ஆட்டை அறுத்திருப்பது எனக்கு வியப்பை அளிக்கிறது” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 40
2305. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ لِرَجُلٍ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم سِنٌّ مِنَ الإِبِلِ فَجَاءَهُ يَتَقَاضَاهُ فَقَالَ "" أَعْطُوهُ "". فَطَلَبُوا سِنَّهُ فَلَمْ يَجِدُوا لَهُ إِلاَّ سِنًّا فَوْقَهَا. فَقَالَ "" أَعْطُوهُ "". فَقَالَ أَوْفَيْتَنِي أَوْفَى اللَّهُ بِكَ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ خِيَارَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً "".
பாடம் : 5 ஊரில் இருப்பவருக்கும், வெளியில் இருப்பவருக்கும் செயலுரிமை வழங்குவது செல்லும். அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், வெளியூரிலிருந்த தம் காசாளருக்குக் கடிதம் எழுதி, தமது குடும்பத்திலுள்ள சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் சார்பாக நோன்புப் பெருநாள் தர்மம் (ஸதக்கத்துல் ஃபித்ர்) கொடுக்கச் சொன்னார்கள்.
2305. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு, (தாம் கடனாக வாங்கியிருந்த) குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகம் ஒன்றைக் கொடுக்க வேண்டியிருந்தது. அதை அவர் (திருப்பிச் செலுத்தும்படி) கேட்டு வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), ‘‘அவருக்கு அதைக் கொடுத்துவிடுங்கள்” என்றார்கள். அந்த வயதுடைய ஒட்டகத்தைத் தேடியபோது, அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத்தான் தோழர்கள் கண்டார்கள். ‘‘அதை அவருக்குக் கொடுத்துவிடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அதற்கு அம்மனிதர், ‘‘எனக்கு நீங்கள் நிறைவாகத் தந்துவிட்டீர்கள்; அல்லாஹ்வும் உங்களுக்கு நிறைவாகத் தருவான்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்” என்றார்கள்.5

அத்தியாயம் : 40
2306. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، سَمِعْتُ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَقَاضَاهُ، فَأَغْلَظَ، فَهَمَّ بِهِ أَصْحَابُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" دَعُوهُ فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً "". ثُمَّ قَالَ "" أَعْطُوهُ سِنًّا مِثْلَ سِنِّهِ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ لاَ نَجِدُ إِلاَّ أَمْثَلَ مِنْ سِنِّهِ. فَقَالَ "" أَعْطُوهُ فَإِنَّ مِنْ خَيْرِكُمْ أَحْسَنَكُمْ قَضَاءً "".
பாடம் : 6 கடனை நிறைவேற்ற செயலுரிமை வழங்கல்
2306. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினார். நபித் தோழர்கள் அவரை(ப் பிடித்து)க் கண்டிக்கத் தயாராயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவரை விட்டு விடுங்கள்; கடன் கொடுத்தவருக்கு (இவ்வாறு) பேச உரிமையுள்ளது” என்று கூறிவிட்டு, அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஒட்டக மொன்றைக் கொடுங்கள் என்றார்கள்.

நபித்தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை” என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அதையே கொடுங்கள்; அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்” என்றார்கள்.

அத்தியாயம் : 40