1890. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ ـ رضى الله عنه ـ قَالَ اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ، وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ صلى الله عليه وسلم. وَقَالَ ابْنُ زُرَيْعٍ عَنْ رَوْحِ بْنِ الْقَاسِمِ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أُمِّهِ، عَنْ حَفْصَةَ بِنْتِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَتْ سَمِعْتُ عُمَرَ، نَحْوَهُ. وَقَالَ هِشَامٌ عَنْ زَيْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ حَفْصَةَ، سَمِعْتُ عُمَرَ، رضى الله عنه.
பாடம் : 12
1890. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைவா! உன் பாதையில் வீர மரணம் அடையும் பாக்கியத்தை எனக்கு வழங்கு வாயாக! எனது மரணத்தை உன் தூதருடைய ஊரில் ஏற்படுத்துவாயாக!

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 29

1891. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ أَبِي سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، أَنَّ أَعْرَابِيًّا، جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثَائِرَ الرَّأْسِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي مَاذَا فَرَضَ اللَّهُ عَلَىَّ مِنَ الصَّلاَةِ فَقَالَ "" الصَّلَوَاتِ الْخَمْسَ، إِلاَّ أَنْ تَطَّوَّعَ شَيْئًا "". فَقَالَ أَخْبِرْنِي مَا فَرَضَ اللَّهُ عَلَىَّ مِنَ الصِّيَامِ فَقَالَ "" شَهْرَ رَمَضَانَ، إِلاَّ أَنْ تَطَّوَّعَ شَيْئًا "". فَقَالَ أَخْبِرْنِي بِمَا فَرَضَ اللَّهُ عَلَىَّ مِنَ الزَّكَاةِ فَقَالَ فَأَخْبَرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَرَائِعَ الإِسْلاَمِ. قَالَ وَالَّذِي أَكْرَمَكَ لاَ أَتَطَوَّعُ شَيْئًا، وَلاَ أَنْقُصُ مِمَّا فَرَضَ اللَّهُ عَلَىَّ شَيْئًا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَفْلَحَ إِنْ صَدَقَ، أَوْ دَخَلَ الْجَنَّةَ إِنْ صَدَقَ "".
பாடம் : 1 ரமளான் நோன்பு கடமையாக்கப்படல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தோர்மீது கடமையாக்கப்பட்டதைப் போன்றே உங்கள்மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது; (இதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். (2 : 183)
1891. தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கிராமவாசி தலைவிரி கோலத்துடன் (பயணம் முடித்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்; ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்மீது கடமையாக்கியுள்ள தொழுகை எது என்று சொல்லுங்கள்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஐந்து நேரத் தொழுகைகள்; (அவற்றைத் தவிர, கடமையான தொழுகை வேறெதுவுமில்லை; கூடுதலாக) எதையும் நீயாக விரும்பித் தொழுவதைத் தவிர!” என்று பதிலளித் தார்கள்.

அவர், ‘‘அல்லாஹ் என்மீது கடமையாக்கியுள்ள நோன்பைப் பற்றி எனக்குக் கூறுங்கள்!” என்றார். ‘‘ரமளான் மாத நோன்பு; (அதைத் தவிர கடமையான நோன்பு வேறெதுவுமில்லை; கூடுதலாக) ஏதேனும் நீயாக விரும்பி நோற்பதைத் தவிர!” என்று பதிலளித்தார்கள்.

அவர், ‘‘அல்லாஹ் என்மீது கடமையாக்கியுள்ள ஸகாத் எது என்று எனக்குக் கூறுங்கள்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாத்தின் சட்டவிதிகளை அவருக்குக் கூறினார்கள். அப்போது அவர், ‘‘சத்தியத்தைக் கொண்டு உங்களைக் கண்ணியப்படுத்திய இறைவன் மீதாணையாக! நான் கூடுதலாக எதையும் செய்யமாட்டேன்; அல்லாஹ் என்மீது கடமையாக்கியதில் எதையும் குறைக்கவும்மாட்டேன்” என்றார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர் (தாம் கூறுவதில்) உண்மையாளராக இருந்தால் வெற்றியடைந்துவிட்டார்” என்றோ, ‘‘இவர் (தாம் கூறுவதில்) உண்மையாளராக இருந்தால் சொர்க்கத்தில் நுழைவார்” என்றோ கூறினார்கள்.


அத்தியாயம் : 30
1892. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ صَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَاشُورَاءَ، وَأَمَرَ بِصِيَامِهِ. فَلَمَّا فُرِضَ رَمَضَانُ تُرِكَ. وَكَانَ عَبْدُ اللَّهِ لاَ يَصُومُهُ، إِلاَّ أَنْ يُوَافِقَ صَوْمَهُ.
பாடம் : 1 ரமளான் நோன்பு கடமையாக்கப்படல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தோர்மீது கடமையாக்கப்பட்டதைப் போன்றே உங்கள்மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது; (இதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். (2 : 183)
1892. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள்) நோன்பு நோற்றார்கள். அதில் நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளை யிட்டார்கள். ரமளான் நோன்பு கடமை யாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பு (கட்டாயம் என்பது) கைவிடப்பட்டது.

‘‘தம்முடைய வேறு நோன்பு (ஏதாவது) அந்நாளில் தற்செயலாக அமைந்தால் தவிர, இப்னு உமர் (ரலி) அவர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்க மாட்டார்கள்” என்று நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


அத்தியாயம் : 30
1893. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّ عِرَاكَ بْنَ مَالِكٍ، حَدَّثَهُ أَنَّ عُرْوَةَ أَخْبَرَهُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ قُرَيْشًا، كَانَتْ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فِي الْجَاهِلِيَّةِ، ثُمَّ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِصِيَامِهِ حَتَّى فُرِضَ رَمَضَانُ وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ شَاءَ فَلْيَصُمْهُ، وَمَنْ شَاءَ أَفْطَرَ "".
பாடம் : 1 ரமளான் நோன்பு கடமையாக்கப்படல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தோர்மீது கடமையாக்கப்பட்டதைப் போன்றே உங்கள்மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது; (இதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். (2 : 183)
1893. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஆஷூரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்; (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் ‘‘(ஆஷூரா நாளின் நோன்பை) நோற்க விரும்புபவர் அதை நோற்கட்டும்! விட்டுவிட விரும்புபவர் அதை விட்டுவிடட்டும்!” எனக் கூறினார்கள்.

அத்தியாயம் : 30
1894. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الصِّيَامُ جُنَّةٌ، فَلاَ يَرْفُثْ وَلاَ يَجْهَلْ، وَإِنِ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ. مَرَّتَيْنِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ تَعَالَى مِنْ رِيحِ الْمِسْكِ، يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي، الصِّيَامُ لِي، وَأَنَا أَجْزِي بِهِ، وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا "".
பாடம் : 2 நோன்பின் சிறப்பு
1894. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேச வேண்டாம்! அறிவீனமாக நடந்துகொள்ள வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி' என்று இரு முறை கூறட்டும்! என் உயிர் எவன் கையில் உள்ளதோ அ(ந்த இறை)வன்மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும்.

(மேலும்) ‘‘எனக்காகவே நோன்பாளி தமது உணவையும் பானத்தையும் ஆசையையும் கைவிடுகிறார்; நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்” (என்று அல்லாஹ் கூறுகின்றான்). ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்கு களாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2

அத்தியாயம் : 30
1895. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا جَامِعٌ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ قَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ مَنْ يَحْفَظُ حَدِيثًا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْفِتْنَةِ قَالَ حُذَيْفَةُ أَنَا سَمِعْتُهُ يَقُولُ "" فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَمَالِهِ وَجَارِهِ تُكَفِّرُهَا الصَّلاَةُ وَالصِّيَامُ وَالصَّدَقَةُ "". قَالَ لَيْسَ أَسْأَلُ عَنْ ذِهِ، إِنَّمَا أَسْأَلُ عَنِ الَّتِي تَمُوجُ كَمَا يَمُوجُ الْبَحْرُ. قَالَ وَإِنَّ دُونَ ذَلِكَ بَابًا مُغْلَقًا. قَالَ فَيُفْتَحُ أَوْ يُكْسَرُ قَالَ يُكْسَرُ. قَالَ ذَاكَ أَجْدَرُ أَنْ لاَ يُغْلَقَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ. فَقُلْنَا لِمَسْرُوقٍ سَلْهُ أَكَانَ عُمَرُ يَعْلَمُ مَنِ الْبَابُ فَسَأَلَهُ فَقَالَ نَعَمْ، كَمَا يَعْلَمُ أَنَّ دُونَ غَدٍ اللَّيْلَةَ.
பாடம் : 3 நோன்பு குற்றங்களுக்குப் பரிகாரமாகும்.
1895. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கலீஃபா) உமர் (ரலி) அவர்கள், ‘‘குழப்பங்கள் (ஃபித்னா) பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை யார் நினைவில் வைத்திருக்கிறார்?” என்று கேட்டார்கள். ‘‘நான் அதைச் செவியுற்றிருக்கிறேன்: ஒருவர் தம் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்கள்மீது அளவு கடந்த பாசம் வைப்பதன் மூலமும்), தமது செல்வம் விஷயத்தில் (அதைத் திரட்டு வதில் ஈடுபடுவதன் மூலமும்), அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) சோதனையில் (ஃபித்னாவில்) ஆழ்த்தப் படும்போது தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவை அதற்கான பரிகாரமாக அமையும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்றேன்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘நான் (சோதனை எனும் பொருளில் அமைந்த) இந்த ஃபித்னாவைப் பற்றிக் கேட்கவில்லை; கடலலை போன்று அடுக்கடுக்காக வரக் கூடிய (குழப்பம் எனும் பொருளிலமைந்த) ஃபித்னாவைப் பற்றியே கேட்கிறேன்” என்றார்கள். அதற்கு நான், ‘‘உங்களுக்கும் அவற்றுக்கும் இடையே மூடப்பட்ட கதவு இருக்கிறது” என்று கூறினேன். ‘‘அது திறக்கப்படுமா, உடைக்கப்படுமா?” என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நான் ‘‘உடைக்கப்படும்” என்று பதிலளித்தேன். ‘‘அப்படியானால் மறுமை நாள்வரை அது மூடப்படாது” என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

‘‘அந்தக் கதவு எது என்று உமர் (ரலி) அவர்கள் அறிந்திருந்தார்களா என்று ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேளுங்கள்” என்று மஸ்ரூக் (ரஹ்) அவர்களிடம் நாங்கள் கூறினோம். அவ்வாறே அவர் கேட்டார். அதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள் ‘‘ஆம்! பகலுக்குமுன் இரவு உண்டு என்பதை அறிவதைப் போன்று அதை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்று பதிலளித்தார்” என அறிவிப்பாளர் அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.3

அத்தியாயம் : 30
1896. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ، يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ، لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَقُومُونَ، لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ، فَإِذَا دَخَلُوا أُغْلِقَ، فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ "".
பாடம் : 4 ‘ரய்யான்' எனும் (சொர்க்க) வாசல் நோன்பாளிகளுக்குரியது.
1896. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் ‘ரய்யான்' எனப்படும் ஒரு நுழைவாயில் இருக்கிறது. மறுமை நாளில், அதன் வழியாக நோன்பாளிகளே நுழைவார்கள்; அவர்களைத் தவிர வேறு யாரும் அதன் வழியாக நுழையமாட்டார் கள். நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும்; உடனே அவர்கள் எழுவார் கள்; அவர்களைத் தவிர வேறு யாரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள்; அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும்; அதன் வழியாக வேறு யாரும் நுழையமாட்டார்கள்.4

இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 30
1897. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنِي مَعْنٌ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ نُودِيَ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ يَا عَبْدَ اللَّهِ، هَذَا خَيْرٌ. فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلاَةِ دُعِيَ مِنْ باب الصَّلاَةِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَادِ دُعِيَ مِنْ باب الْجِهَادِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ باب الرَّيَّانِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ باب الصَّدَقَةِ "". فَقَالَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، مَا عَلَى مَنْ دُعِيَ مِنْ تِلْكَ الأَبْوَابِ مِنْ ضَرُورَةٍ، فَهَلْ يُدْعَى أَحَدٌ مِنْ تِلْكَ الأَبْوَابِ كُلِّهَا قَالَ "" نَعَمْ. وَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ "".
பாடம் : 4 ‘ரய்யான்' எனும் (சொர்க்க) வாசல் நோன்பாளிகளுக்குரியது.
1897. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய் தாரோ அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து, ‘அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்ததாகும். (இதன் வழியாக நுழையுங்கள்!)› என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளியாய் இருந்தவர் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவார்; அறப்போர் புரிந்தவர் அறப்போருக்கான வாசல் வழியாக அழைக்கப்படுவார்; நோன்பாளியாய் இருந்தவர் ‘ரய்யான்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவார்; தர்மம் செய்தவர் தர்மத்திற்குரிய வாசல் வழியாக அழைக்கப்படுவார்” என்று கூறினார்கள்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்களிலிருந்து அழைக்கப்படும் ஒருவருக்கு (வேறு வாசல் வழியாகச் செல்ல வேண்டிய) அவசியம் இராது. (ஏனெனில், எந்த வழியிலாவது அவர் சொர்க்கம் சென்றுவிடுவார். இருந்தாலும்,) அந்த வாசல்கள் ஒவ்வொன்றிலிருந்தும் யாராவது அழைக்கப்படுவாரா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘ஆம்! அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்கள்.

அத்தியாயம் : 30
1898. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ أَبِي سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا جَاءَ رَمَضَانُ فُتِحَتْ أَبْوَابُ الْجَنَّةِ "".
பாடம் : 5 ‘ரமளான்' என்று கூற வேண்டுமா? அல்லது ‘ஷஹ்ரு ரமளான்' (ரமளான் மாதம்) என்றுதான் கூற வேண்டுமா என்பதும், ‘எப்படியும் கூறலாம்' என்ற கருத்தும்5 நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவர் ரமளானில் நோன்பு நோற்றால்' என்றும் ‘ரமளானுக்கு முந்தி' என்றும் (‘மாதம்' என்பதைச் சேர்க்காமல்) குறிப்பிட்டுள் ளார்கள்.
1898. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 30
1899. حَدَّثَنِي يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي أَنَسٍ، مَوْلَى التَّيْمِيِّينَ أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا دَخَلَ شَهْرُ رَمَضَانَ فُتِّحَتْ أَبْوَابُ السَّمَاءِ، وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ، وَسُلْسِلَتِ الشَّيَاطِينُ "".
பாடம் : 5 ‘ரமளான்' என்று கூற வேண்டுமா? அல்லது ‘ஷஹ்ரு ரமளான்' (ரமளான் மாதம்) என்றுதான் கூற வேண்டுமா என்பதும், ‘எப்படியும் கூறலாம்' என்ற கருத்தும்5 நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவர் ரமளானில் நோன்பு நோற்றால்' என்றும் ‘ரமளானுக்கு முந்தி' என்றும் (‘மாதம்' என்பதைச் சேர்க்காமல்) குறிப்பிட்டுள் ளார்கள்.
1899. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படு கின்றன; ஷைத்தான்கள் விலங்கிடப்படு கின்றனர்.6

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 30
1900. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَالِمٌ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" إِذَا رَأَيْتُمُوهُ فَصُومُوا، وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ "". وَقَالَ غَيْرُهُ عَنِ اللَّيْثِ حَدَّثَنِي عُقَيْلٌ وَيُونُسُ لِهِلاَلِ رَمَضَانَ.
பாடம் : 5 ‘ரமளான்' என்று கூற வேண்டுமா? அல்லது ‘ஷஹ்ரு ரமளான்' (ரமளான் மாதம்) என்றுதான் கூற வேண்டுமா என்பதும், ‘எப்படியும் கூறலாம்' என்ற கருத்தும்5 நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவர் ரமளானில் நோன்பு நோற்றால்' என்றும் ‘ரமளானுக்கு முந்தி' என்றும் (‘மாதம்' என்பதைச் சேர்க்காமல்) குறிப்பிட்டுள் ளார்கள்.
1900. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ரமளான் பிறை கண்டதும் நோன்பு நோறுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானில்) மேகமூட்டம் தென்பட்டால் அதை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 30
1901. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ، وَمَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "".
பாடம் : 6 ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நல்ல எண்ணத்துடனும் நோன்பு நோற்றல் நபி (ஸல்) அவர்கள், ‘‘மக்கள் தங்களின் எண்ணங்களுக்கேற்பவே எழுப்பப் படுவார்கள்” என்று கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
1901. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ‘லைலத்துல் கத்ர்' எனும் மகத்துவ மிக்க இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வழிபடுகிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும். யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.7

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 30
1902. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَجْوَدَ النَّاسِ بِالْخَيْرِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ، حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ جِبْرِيلُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ يَلْقَاهُ كُلَّ لَيْلَةٍ فِي رَمَضَانَ حَتَّى يَنْسَلِخَ، يَعْرِضُ عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم الْقُرْآنَ، فَإِذَا لَقِيَهُ جِبْرِيلُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ كَانَ أَجْوَدَ بِالْخَيْرِ مِنَ الرِّيحِ الْمُرْسَلَةِ.
பாடம் : 7 (மற்ற நாட்களைவிட) ரமளானில் நபி (ஸல்) அவர்கள் அதிகமாக வாரிவழங்கியது
1902. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே செல்வங்களை அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ரமளானில் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி (ஸல்) அவர்கள் மேன்மேலும் அதிகமாக வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானில் ஒவ்வோர் இரவும் லிஅம்மாதம் முடியும்வரைலி நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். அவ்வாறு ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மைச் சந்திக்கும்போது (மழைக்)காற்றைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்கள் செல்வங்களை வாரி வழங்கு வார்கள்.

அத்தியாயம் : 30
1903. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ "".
பாடம் : 8 நோன்பு நோற்றுக்கொண்டு பொய் யையும் அதன் செயல்களையும் கைவிடாதவர்
1903. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் (நோன்பு நோற்றுக்கொண்டு) பொய்யான பேச்சையும் அதன்படி செயல்படுவதையும் கைவிடவில்லையோ அவர் (வெறுமனே) தமது உணவையும் பானத்தையும் கைவிடுவதில் அல்லாஹ் வுக்கு எந்தத் தேவையுமில்லை.8

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 30
1904. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ أَبِي صَالِحٍ الزَّيَّاتِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قَالَ اللَّهُ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلاَّ الصِّيَامَ، فَإِنَّهُ لِي، وَأَنَا أَجْزِي بِهِ. وَالصِّيَامُ جُنَّةٌ، وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ، فَلاَ يَرْفُثْ وَلاَ يَصْخَبْ، فَإِنْ سَابَّهُ أَحَدٌ، أَوْ قَاتَلَهُ فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ. وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ، لِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا إِذَا أَفْطَرَ فَرِحَ، وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ "".
பாடம் : 9 நோன்பாளி ஏசப்படும்போது ‘‘நான் நோன்பாளி” என்று சொல்ல லாமா?
1904. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘‘ஆதமுடைய மகனின் (மனிதனின்) ஒவ்வொரு செயலும் அவனுக்கே உரியதாகும். ஆனால், நோன்பைத் தவிர! நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே நற்பலன் அளிப்பேன்” என்று அல்லாஹ் கூறுகின் றான்.

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும். எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால், அல்லது அவருடன் சண்டையிட்டால் ‘‘நான் நோன்பாளி” என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ் விடத்தில் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது அவர் மகிழ்ச்சியடைகிறார்; தம் இறைவனைச் சந்திக்கும்போது நோன்பின் காரணமாக அவர் மகிழ்ச்சி யடைகிறார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 30
1905. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ بَيْنَا أَنَا أَمْشِي، مَعَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ فَقَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" مَنِ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ، فَإِنَّهُ لَهُ وِجَاءٌ "".
பாடம் : 10 தவறான பாலுறவில் விழுந்து விடுவோம் என்று அஞ்சுபவர் நோன்பு நோற்றல்
1905. அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் நடந்துகொண்டிருந் தேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

நாங்கள் (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், ‘‘யார் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்துகொள்ளட்டும்; ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்.

அத்தியாயம் : 30
1906. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ذَكَرَ رَمَضَانَ فَقَالَ "" لاَ تَصُومُوا حَتَّى تَرَوُا الْهِلاَلَ، وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ "".
பாடம் : 11 ‘‘நீங்கள் பிறை பார்த்து நோன்பு நோறுங்கள்; (மறு) பிறை பார்த்து நோன்பை விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ‘‘யார் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காசிம் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார் என்று அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.9
1906. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் (நோன்பு) பற்றிக் குறிப்பிடுகையில், ‘‘ரமளான் பிறையை நீங்கள் காணாத வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணாத வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் (முப்பது நாட்களாக) அதைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 30
1907. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً، فَلاَ تَصُومُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلاَثِينَ "".
பாடம் : 11 ‘‘நீங்கள் பிறை பார்த்து நோன்பு நோறுங்கள்; (மறு) பிறை பார்த்து நோன்பை விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ‘‘யார் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காசிம் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார் என்று அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.9
1907. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாக(வும் இகும். எனவே, பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், முப்பது நாட்களாக எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 30
1908. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَبَلَةَ بْنِ سُحَيْمٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا "". وَخَنَسَ الإِبْهَامَ فِي الثَّالِثَةِ.
பாடம் : 11 ‘‘நீங்கள் பிறை பார்த்து நோன்பு நோறுங்கள்; (மறு) பிறை பார்த்து நோன்பை விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ‘‘யார் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காசிம் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார் என்று அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.9
1908. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ரமளான் பற்றிக் கூறுகையில், இரு கை விரல்களையும் மூன்று முறை விரித்து) ‘‘மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்” என்று கூறினார்கள். மூன்றாம் தடவை பெருவிரலை மடக்கிக்கொண்டார்கள்.10


அத்தியாயம் : 30
1909. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوْ قَالَ قَالَ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم "" صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاَثِينَ "".
பாடம் : 11 ‘‘நீங்கள் பிறை பார்த்து நோன்பு நோறுங்கள்; (மறு) பிறை பார்த்து நோன்பை விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ‘‘யார் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காசிம் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார் என்று அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.9
1909. அபுல்காசிம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிறையைப் பார்த்து நோன்பு நோறுங் கள்; பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 30