(இஹ்ராம் அணிந்த நிலையில் தவறுதலாக) வேட்டையாடியதற்குரிய பரிகாரம்
1821. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، قَالَ انْطَلَقَ أَبِي عَامَ الْحُدَيْبِيَةِ فَأَحْرَمَ أَصْحَابُهُ، وَلَمْ يُحْرِمْ، وَحُدِّثَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنَّ عَدُوًّا يَغْزُوهُ، فَانْطَلَقَ النَّبِيُّ صلى الله عليه وسلم، فَبَيْنَمَا أَنَا مَعَ أَصْحَابِهِ يَضْحَكُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ، فَنَظَرْتُ فَإِذَا أَنَا بِحِمَارِ وَحْشٍ، فَحَمَلْتُ عَلَيْهِ، فَطَعَنْتُهُ، فَأَثْبَتُّهُ، وَاسْتَعَنْتُ بِهِمْ، فَأَبَوْا أَنْ يُعِينُونِي، فَأَكَلْنَا مِنْ لَحْمِهِ، وَخَشِينَا أَنْ نُقْتَطَعَ، فَطَلَبْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَرْفَعُ فَرَسِي شَأْوًا، وَأَسِيرُ شَأْوًا، فَلَقِيتُ رَجُلاً مِنْ بَنِي غِفَارٍ فِي جَوْفِ اللَّيْلِ قُلْتُ أَيْنَ تَرَكْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ تَرَكْتُهُ بِتَعْهِنَ، وَهُوَ قَائِلٌ السُّقْيَا. فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَهْلَكَ يَقْرَءُونَ عَلَيْكَ السَّلاَمَ وَرَحْمَةَ اللَّهِ، إِنَّهُمْ قَدْ خَشُوا أَنْ يُقْتَطَعُوا دُونَكَ، فَانْتَظِرْهُمْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَصَبْتُ حِمَارَ وَحْشٍ، وَعِنْدِي مِنْهُ فَاضِلَةٌ. فَقَالَ لِلْقَوْمِ "" كُلُوا "" وَهُمْ مُحْرِمُونَ.
பாடம் : 1
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் ‘இஹ்ராம்’ கட்டியிருக்கும்போது, வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர் கள். உங்களில் ஒருவர் திட்டமிட்டு வேட்டைப் பிராணியைக் கொன்றுவிட்டால், அவர் கொன்ற பிராணியை ஒத்த ஒரு கால்நடை (அதற்கு நஷ்ட)ஈடு ஆகும். அதை உங்களில் இரு நடுநிலையாளர்கள் முடிவு செய்வர். (அது) கஅபாவுக்குப் போய்ச்சேர வேண்டிய காணிக்கை ஆகும். அல்லது ஏழைகளுக்கு உணவளிப்பது (அதற்குப்) பரிகாரம் ஆகும். அல்லது அதற்குச் சமமாக நோன்பு நோற்க வேண்டும். அவர் தமது வினையின் விளைவைச் சுவைக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம். (இதற்கு) முன்னர் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான். ஒருவர் மீண்டும் (அவ்வாறு) செய்தால், அவருக்கு அல்லாஹ் தண்டனை அளிப்பான். அல்லாஹ் வல்லமை மிக்கவனும் தண்டனை அளிப்பவனும் ஆவான்.
(‘இஹ்ராம்’ கட்டிய) உங்களுக்கும் (இதர) பயணிகளுக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காகக் கடலில் வேட்டையாடப்பட்டதும் கடல் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. நீங்கள் ‘இஹ்ராம்’ கட்டியவர்களாக இருக்கும்வரை தரை(வாழ்ப் பிராணிகளை) வேட்டையாடுவது உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சி (நடந்து)கொள்ளுங்கள். அவனி டமே நீங்கள் ஒன்றுதிரட்டப்படுவீர்கள். (5:95, 96)
பாடம் : 2
இஹ்ராம் கட்டாதவர் வேட்டையாடி, இஹ்ராம் கட்டியவருக்கு வேட்டைப் பிராணியை அன்பளிப்பாக வழங்கினால் அவர் அதை உண்ணலாம்.
“இஹ்ராம் கட்டியவர் வேட்டைப் பிராணி அல்லாத ஒட்டகம், ஆடு, மாடு, கோழி, குதிரை போன்றவற்றை அறுப்பதில் தவறு இல்லை” என்று இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் கருதுகிறார்கள்.
மேற்கண்ட வசனத்தில் (5:95) ‘அதற்குச் சமமாக’ என்பதைக் குறிக்க ‘அத்ல்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. ‘போன்றது’ (நிகரானது) என்பது இதன் பொருளாகும். ‘இத்ல்’ என்பதற்கு ‘சமமான அளவு (எடை)’ என்பது பொருளாகும்.
(5:97ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெறும்) ‘கியாம்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருளாகும்.
(6:1ஆவது வசனத்தின் மூலத்தில் உள்ள) ‘யஅதிலூன’ எனும் சொல்லுக்கு ‘இணையாக்குகின்றனர்’ என்பது பொருளாகும்.
1821. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஹுதைபியா ஆண்டில் (மக்கா வுக்குப்) புறப்பட்டேன். என் தோழர்கள் இஹ்ராம் கட்டியிருந்தனர்; நான் இஹ்ராம் கட்டவில்லை. எதிரிகள் நபி (ஸல்) அவர்கள்மீது படையெடுத்து வரவிருக்கிறார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக் கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (அந்தப் படையை எதிர் கொள்ள முன்னே) புறப்பட்டார்கள். நான் மற்ற நபித்தோழர் களுடன் (சென்றுகொண்டு) இருந்தபோது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரிக்கலாயினர்.
அப்போது நான் கூர்ந்து கவனித்தேன். ஒரு காட்டுக் கழுதை எனக்குத் தென் பட்டது. அதைத் தாக்கி ஈட்டியால் குத்தி (ஓடி விடாமல்) நிறுத்திவிட்டேன். என் தோழர்களிடம் உதவி வேண்டினேன். (இஹ்ராம் கட்டியிருந்ததால்) அவர்கள் எனக்கு உதவ மறுத்துவிட்டனர்.
பிறகு அதன் இறைச்சியை நாங்கள் உண்டோம். (எங்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த) நபி (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடுவோமோ என்று நாங்கள் அஞ்சினோம். நபி (ஸல்) அவர்களைத் தேடி என் குதிரையைச் சிறிது நேரம் விரைவாகவும் சிறிது நேரம் மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன்.
நள்ளிரவில் நான் பனூ கிஃபார் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்து, “நபி (ஸல்) அவர்களை எங்கே விட்டுவந்தீர்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அவர்களை ‘தஅஹன்’ எனும் நீர்நிலை அருகே விட்டுவந்தேன். அவர்கள் ‘சுக்யா’ எனும் சிற்றூரில் ஓய்வெடுக்கச் சென்றுகொண்டிருந்தார்கள்” என்று கூறினார்.
(நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து), “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் தோழர்கள் உங்களுக்கு (முகமன் கூறி) சாந்தியும் இறை வளமும் கிடைத்திட பிரார்த்திக்கிறார்கள். உங்களைப் பிரிந்து விடுவோமோ என்று அவர்கள் அஞ்சு கிறார்கள். எனவே, (அவர்கள் வரும்வரை) அவர்களுக்காக நீங்கள் காத்திருங்கள், அல்லாஹ்வின் தூதரே! நான் காட்டுக் கழுதையை வேட்டையாடினேன்: அதில் சிறிதளவு என்னிடம் மீதி உள்ளது!” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் மக்களி டம் “உண்ணுங்கள்” என்றார்கள். (அப் போது) அம்மக்கள் இஹ்ராம் கட்டியிருந் தார்கள்.
அத்தியாயம் : 28

1822. حَدَّثَنَا سَعِيدُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ قَالَ انْطَلَقْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَامَ الْحُدَيْبِيَةِ فَأَحْرَمَ أَصْحَابُهُ، وَلَمْ أُحْرِمْ، فَأُنْبِئْنَا بِعَدُوٍّ بِغَيْقَةَ فَتَوَجَّهْنَا نَحْوَهُمْ، فَبَصُرَ أَصْحَابِي بِحِمَارِ وَحْشٍ، فَجَعَلَ بَعْضُهُمْ يَضْحَكُ إِلَى بَعْضٍ، فَنَظَرْتُ فَرَأَيْتُهُ فَحَمَلْتُ عَلَيْهِ الْفَرَسَ، فَطَعَنْتُهُ، فَأَثْبَتُّهُ، فَاسْتَعَنْتُهُمْ، فَأَبَوْا أَنْ يُعِينُونِي، فَأَكَلْنَا مِنْهُ، ثُمَّ لَحِقْتُ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَخَشِينَا أَنْ نُقْتَطَعَ، أَرْفَعُ فَرَسِي شَأْوًا، وَأَسِيرُ عَلَيْهِ شَأْوًا، فَلَقِيتُ رَجُلاً مِنْ بَنِي غِفَارٍ فِي جَوْفِ اللَّيْلِ فَقُلْتُ أَيْنَ تَرَكْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ تَرَكْتُهُ بِتَعْهِنَ وَهُوَ قَائِلٌ السُّقْيَا. فَلَحِقْتُ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى أَتَيْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَصْحَابَكَ أَرْسَلُوا يَقْرَءُونَ عَلَيْكَ السَّلاَمَ وَرَحْمَةَ اللَّهِ وَبَرَكَاتِهِ، وَإِنَّهُمْ قَدْ خَشُوا أَنْ يَقْتَطِعَهُمُ الْعُدُوُّ دُونَكَ، فَانْظُرْهُمْ، فَفَعَلَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّا اصَّدْنَا حِمَارَ وَحْشٍ، وَإِنَّ عِنْدَنَا فَاضِلَةً. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَصْحَابِهِ "" كُلُوا "". وَهُمْ مُحْرِمُونَ.
பாடம் : 3
இஹ்ராம் கட்டியவர்கள் வேட் டைப் பிராணியைக் கண்டு சிரிக்கும்போது இஹ்ராம் கட்டா தவர் அதைப் புரிந்துகொண்டு வேட்டையாடுதல்
1822. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபியா (ஒப்பந்தம் நடந்த ஹிஜ்ரீ ஆறாவது) ஆண்டில் நபி (ஸல்) அவர் களுடன் நாங்கள் சென்றோம். அவர் களின் தோழர்கள் (உம்ராவுக்காக) இஹ்ராம் கட்டியிருந்தனர். ‘ஃகைகா’ எனும் இடத்தில் எதிரிகள் இருப்பதாக எங்களுக் குத் தகவல் கிடைத்தது. நாங்கள் அவர்களை நோக்கிச் சென்றோம்.
(வழியில்) ஒரு காட்டுக் கழுதையைக் கண்டு என் தோழர்கள் ஒருவரையொருவர் பார்த்து சிரிக்கலாயினர். நான் கூர்ந்து நோக்கியதில் அதைப் பார்த்துவிட்டேன். அதன் மீது குதிரையை ஏவி, ஈட்டியால் அதைக் குத்திவிட்டேன். (அதைத் தாக்குவதற்கு) என் தோழர்களிடம் நான் உதவி கோரியபோது, அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்ததால்) எனக்கு உதவ மறுத்துவிட்டார்கள். பிறகு அதை நாங்கள் உண்டோம்.
பிறகு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போய்ச்சேர்ந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடுவோம் என்று அஞ்சி, என் குதிரையை ஒரு முறை விரைவாகவும் இன்னொரு முறை மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன். நள்ளிரவில் பனூ கிஃபார் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு மனிதரைச் சந்தித்தேன். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எங்கே விட்டுவந்தீர்?” என்று கேட்டேன்.
அதற்கு அவர், “அவர்களை ‘தஅஹன்’ எனும் நீர்நிலை அருகே விட்டுவந்தேன். அப்போது அவர்கள் ‘சுக்யா’ எனும் சிற்றூரில் ஓய்வெடுக்கப் போய்க்கொண்டிருந்தார்கள்” என்று கூறி னார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சென்றடைந்து, “அல்லாஹ் வின் தூதரே! உங்கள் தோழர்கள் உங்க ளுக்கு முகமன் (சலாம்) கூறி அனுப்பி னார்கள்; உங்களிடமிருந்து தங்களை எதிரிகள் பிரித்துவிடுவார்களோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்; எனவே, அவர்களுக்காகக் காத்திருங்கள்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே செய்தார்கள்.
மேலும், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஒரு காட்டுக் கழுதையை வேட்டையாடினோம்; எங்களிடம் (அதில்) சிறிதளவு எஞ்சியுள்ளது” என்று கூறி னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்த தம் தோழர்களிடம் “உண்ணுங்கள்” என்று கூறினார்கள்.

1823. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا صَالِحُ بْنُ كَيْسَانَ، عَنْ أَبِي مُحَمَّدٍ، نَافِعٍ مَوْلَى أَبِي قَتَادَةَ سَمِعَ أَبَا قَتَادَةَ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْقَاحَةِ مِنَ الْمَدِينَةِ عَلَى ثَلاَثٍ ح. وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا صَالِحُ بْنُ كَيْسَانَ عَنْ أَبِي مُحَمَّدٍ عَنْ أَبِي قَتَادَةَ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْقَاحَةِ، وَمِنَّا الْمُحْرِمُ، وَمِنَّا غَيْرُ الْمُحْرِمِ، فَرَأَيْتُ أَصْحَابِي يَتَرَاءَوْنَ شَيْئًا فَنَظَرْتُ، فَإِذَا حِمَارُ وَحْشٍ ـ يَعْنِي وَقَعَ سَوْطُهُ ـ فَقَالُوا لاَ نُعِينُكَ عَلَيْهِ بِشَىْءٍ، إِنَّا مُحْرِمُونَ. فَتَنَاوَلْتُهُ فَأَخَذْتُهُ، ثُمَّ أَتَيْتُ الْحِمَارَ مِنْ وَرَاءِ أَكَمَةٍ، فَعَقَرْتُهُ، فَأَتَيْتُ بِهِ أَصْحَابِي، فَقَالَ بَعْضُهُمْ كُلُوا. وَقَالَ بَعْضُهُمْ لاَ تَأْكُلُوا. فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ أَمَامَنَا، فَسَأَلْتُهُ فَقَالَ "" كُلُوهُ حَلاَلٌ "". قَالَ لَنَا عَمْرٌو اذْهَبُوا إِلَى صَالِحٍ فَسَلُوهُ عَنْ هَذَا وَغَيْرِهِ، وَقَدِمَ عَلَيْنَا هَا هُنَا.
பாடம் : 4
வேட்டையாடுவதில் இஹ்ராம் கட்டாதவருக்கு இஹ்ராம் கட்டி யவர் உதவக் கூடாது.
1823. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மதீனாவுக்கு மூன்று (கல்) தொலைவிலுள்ள ‘அல்காஹா’ எனும் இடத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களில் இஹ்ராம் கட்டியவர்களும் இருந்தனர்; இஹ்ராம் கட்டாதவர்களும் இருந்தனர். என் தோழர்கள் எதையோ உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். நான் கூர்ந்து பார்த்தபோது ஒரு காட்டுக் கழுதை தென்பட்டது. (நான் குதிரையில் ஏறியதும்) எனது சாட்டை கீழே விழுந்தது.
(அதை எடுத்துத் தருமாறு என் தோழர்களிடம் நான் கேட்டபோது) என் தோழர்கள் “நாங்கள் இஹ்ராம் கட்டியிருப் பதால் இந்த விஷயத்தில் உமக்கு எந்த உதவியும் செய்யமாட்டோம்” என்று .கூறிவிட்டனர். எனவே, நானே (இறங்கி) அதை எடுத்தேன். பின்னர் ஒரு பாறாங் கல்லுக்கு அப்பாலிருந்து (மறைந்து) கழுதையின் அருகே சென்று அதை வெட்டினேன். என் தோழர்களிடம் அதைக் கொண்டுவந்தேன்.
சிலர் “உண்ணுங்கள்” என்றனர். வேறுசிலர் “உண்ணாதீர்கள்” என்றனர். எங்களுக்கு முன்னே சென்றுகொண்டிருந்த நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதை உண்ணுங்கள். அது அனுமதிக்கப்பட்டதுதான்” என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
(இதை நமக்கு அறிவித்த) ஸாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் இங்குதான் (மக்காவுக்கு) வந்துள்ளார்கள். அவரிடம் சென்று இதுபோன்ற விஷயங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள் என அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.

1824. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عُثْمَانُ ـ هُوَ ابْنُ مَوْهَبٍ ـ قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي قَتَادَةَ، أَنَّ أَبَاهُ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ حَاجًّا، فَخَرَجُوا مَعَهُ فَصَرَفَ طَائِفَةً مِنْهُمْ، فِيهِمْ أَبُو قَتَادَةَ فَقَالَ خُذُوا سَاحِلَ الْبَحْرِ حَتَّى نَلْتَقِيَ. فَأَخَذُوا سَاحِلَ الْبَحْرِ، فَلَمَّا انْصَرَفُوا أَحْرَمُوا كُلُّهُمْ إِلاَّ أَبُو قَتَادَةَ لَمْ يُحْرِمْ، فَبَيْنَمَا هُمْ يَسِيرُونَ إِذْ رَأَوْا حُمُرَ وَحْشٍ، فَحَمَلَ أَبُو قَتَادَةَ عَلَى الْحُمُرِ، فَعَقَرَ مِنْهَا أَتَانًا، فَنَزَلُوا فَأَكَلُوا مِنْ لَحْمِهَا، وَقَالُوا أَنَأْكُلُ لَحْمَ صَيْدٍ وَنَحْنُ مُحْرِمُونَ فَحَمَلْنَا مَا بَقِيَ مِنْ لَحْمِ الأَتَانِ، فَلَمَّا أَتَوْا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالُوا يَا رَسُولَ اللَّهِ، إِنَّا كُنَّا أَحْرَمْنَا وَقَدْ كَانَ أَبُو قَتَادَةَ لَمْ يُحْرِمْ، فَرَأَيْنَا حُمُرَ وَحْشٍ فَحَمَلَ عَلَيْهَا أَبُو قَتَادَةَ، فَعَقَرَ مِنْهَا أَتَانًا، فَنَزَلْنَا فَأَكَلْنَا مِنْ لَحْمِهَا ثُمَّ قُلْنَا أَنَأْكُلُ لَحْمَ صَيْدٍ وَنَحْنُ مُحْرِمُونَ فَحَمَلْنَا مَا بَقِيَ مِنْ لَحْمِهَا. قَالَ "" مِنْكُمْ أَحَدٌ أَمَرَهُ أَنْ يَحْمِلَ عَلَيْهَا، أَوْ أَشَارَ إِلَيْهَا "". قَالُوا لاَ. قَالَ "" فَكُلُوا مَا بَقِيَ مِنْ لَحْمِهَا "".
பாடம் : 5
இஹ்ராம் கட்டாதவர் வேட்டையாடுவதற்காக இஹ்ராம் கட்டி யவர் வேட்டைப் பிராணியை (அடையாளம் காட்டி) சைகை செய்யலாகாது.
1824. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டார்கள். அவர்களுடன் (மக்களும்) புறப்பட்டனர். அவர்களில் ஒரு சிறு குழுவை, அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் வேறு வழியில் திருப்பிவிட்டார்கள். அவர்களில் நானும் ஒருவன். “நாம் சந்திக்கும்வரை கடலோரமாக நீங்கள் செல்லுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கடலோரமாகச் சென்று திரும்பிய போது, என்னைத் தவிர அனைவரும் இஹ்ராம் கட்டியிருந்தனர்; நான் மட்டும் இஹ்ராம் கட்டியிருக்கவில்லை. இவ்வாறு நாங்கள் சென்றுகொண்டிருக்கும்போது (என் தோழர்கள்) காட்டுக் கழுதைகளைக் கண்டனர்.
நான் அக்கழுதைகளைத் தாக்கி, ஒரு பெட்டைக் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னேன். அனைவரும் (ஓரிடத்தில்) இறங்கி அதன் இறைச்சியைச் சாப்பிட்டனர். “நாம் இஹ்ராம் கட்டியிருக் கும் நிலையில் வேட்டையாடப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்ணலாமா?” என்று தோழர்கள் (ஒருவரையொருவர்) கேட்டுக்கொண்டனர். எஞ்சிய இறைச் சியை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம்.
என் தோழர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இஹ்ராம் கட்டியிருந்தோம்: அபூகத்தாதா இஹ்ராம் கட்டவில்லை; அப்போது காட்டுக் கழுதைகளை நாங்கள் கண்டோம்: அபூகத்தாதா அவற்றைத் தாக்கி ஒரு பெட்டைக் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னார். ஓரிடத்தில் இறங்கி, அதன் இறைச்சியை நாங்கள் சாப்பிட்டோம்; ‘நாம் இஹ்ராம் கட்டியிருக்கும்போது வேட்டையாடப்பட்ட பிராணியின் மாமிசத்தை உண்ணலாமா?’ என்று நாங்கள் (எங்களுக்குள்) பேசிக்கொண்டோம்: பிறகு, எஞ்சிய இறைச்சியை எடுத்துவந்திருக் கிறோம்” என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் எவரேனும் அதைத் தாக்குமாறு அவரைப் பணித்தாரா? அல்லது அதை நோக்கி சைகை செய்தாரா?” என்று கேட்டார்கள். தோழர்கள் “இல்லை” என்றனர். “அப்படி யானால், அதன் எஞ்சிய இறைச்சியை உண்ணுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

1825. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنِ الصَّعْبِ بْنِ جَثَّامَةَ اللَّيْثِيِّ، أَنَّهُ أَهْدَى لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حِمَارًا وَحْشِيًّا، وَهْوَ بِالأَبْوَاءِ أَوْ بِوَدَّانَ فَرَدَّهُ عَلَيْهِ، فَلَمَّا رَأَى مَا فِي وَجْهِهِ قَالَ "" إِنَّا لَمْ نَرُدَّهُ عَلَيْكَ إِلاَّ أَنَّا حُرُمٌ "".
பாடம் : 6
இஹ்ராம் கட்டியவருக்குக் காட்டுக் கழுதை உயிருடன் அன்பளிப்பாகக் கிடைத்தால் அதை அவர் ஏற்கலாகாது.
1825. ஸஅப் பின் ஜஸ்ஸாமா அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா-மதீனா இடையிலுள்ள) ‘அப்வா’ அல்லது ‘வத்தான்’ எனும் இடத்தில் இருந்தபோது, நான் அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினேன்; அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். என் முகத்தில் ஏற்பட்ட (மாற்றத்)தைக் கண்டதும், “நாம் இஹ்ராம் கட்டியிருப்பதால்தான் இதை ஏற்க மறுத்தோம்” என்று கூறினார்கள்.2

1826. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" خَمْسٌ مِنَ الدَّوَابِّ لَيْسَ عَلَى الْمُحْرِمِ فِي قَتْلِهِنَّ جُنَاحٌ "". وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ.
பாடம் : 7
இஹ்ராம் கட்டியவர் கொல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள (தொல்லை தரும்) உயிரினங்கள்3
1826. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(தீங்கிழைக்கும்) ஐந்து உயிரினங்களை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர்மீது குற்றமில்லை.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1827. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ زَيْدِ بْنِ جُبَيْرٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ حَدَّثَتْنِي إِحْدَى، نِسْوَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" يَقْتُلُ الْمُحْرِمُ "".
பாடம் : 7
இஹ்ராம் கட்டியவர் கொல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள (தொல்லை தரும்) உயிரினங்கள்3
1827. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(தீங்கிழைக்கும் ஐந்து உயிரினங்களை) இஹ்ராம் கட்டியவர் கொல்லலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர் (ஹஃப்ஸா) எனக்கு அறிவித்தார்.

1828. حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَتْ حَفْصَةُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" خَمْسٌ مِنَ الدَّوَابِّ لاَ حَرَجَ عَلَى مَنْ قَتَلَهُنَّ الْغُرَابُ وَالْحِدَأَةُ وَالْفَأْرَةُ وَالْعَقْرَبُ وَالْكَلْبُ الْعَقُورُ "".
பாடம் : 7
இஹ்ராம் கட்டியவர் கொல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள (தொல்லை தரும்) உயிரினங்கள்3
1828. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(தீங்கிழைக்கும்) ஐந்து உயிரினங்கள் உள்ளன. அவற்றைக் கொல்பவர்மீது எந்தக் குற்றமும் இல்லை. (நீர்க்)காகம், பருந்து, எலி, தேள், வெறிநாய் ஆகியவை தான் அவை.

1829. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" خَمْسٌ مِنَ الدَّوَابِّ كُلُّهُنَّ فَاسِقٌ، يَقْتُلُهُنَّ فِي الْحَرَمِ الْغُرَابُ وَالْحِدَأَةُ وَالْعَقْرَبُ وَالْفَأْرَةُ وَالْكَلْبُ الْعَقُورُ "".
பாடம் : 7
இஹ்ராம் கட்டியவர் கொல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள (தொல்லை தரும்) உயிரினங்கள்3
1829. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐந்து உயிரினங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தீங்கிழைப்பவை. அவை புனித (ஹரம்) எல்லைக்கு உள்ளேயும் கொல்லப்படும். (நீர்க்)காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியவைதான் அவை
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1830. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَمَا نَحْنُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي غَارٍ بِمِنًى، إِذْ نَزَلَ عَلَيْهِ {وَالْمُرْسَلاَتِ} وَإِنَّهُ لَيَتْلُوهَا، وَإِنِّي لأَتَلَقَّاهَا مِنْ فِيهِ، وَإِنَّ فَاهُ لَرَطْبٌ بِهَا، إِذْ وَثَبَتْ عَلَيْنَا حَيَّةٌ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اقْتُلُوهَا "". فَابْتَدَرْنَاهَا، فَذَهَبَتْ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" وُقِيَتْ شَرَّكُمْ كَمَا وُقِيتُمْ شَرَّهَا "".
பாடம் : 7
இஹ்ராம் கட்டியவர் கொல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள (தொல்லை தரும்) உயிரினங்கள்3
1830. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மினாவிலுள்ள ஒரு குகையில் இருந்தோம். அப்போது ‘வல்முர்ஸலாத்’ (ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவைமீது சத்தியமாக!) என்று தொடங்கும் (77ஆவது) அத்தியாயம் அவர்களுக்கு அருளப் பெற்றது. அதை நான் நபி (ஸல்) அவர் களின் வாயிலிருந்து புத்தம் புதிதாக (ஓதக்) கேட்டுக்கொண்டிருந்தேன். அதை ஓதிய தால் அவர்களின் வாய் ஈரமாக இருந்தது.
அப்போது ஒரு பாம்பு எங்களை நோக்கிச் சீறியது. உடனே நபி (ஸல்) அவர்கள், “அதைக் கொல்லுங்கள்!” என்றார்கள். நாங்கள் அதைக் கொல்ல விரைந்தபோது அது சென்றுவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அதன் தீங்கிலிருந்து நீங்கள் காப்பாற்றப்பட்டதைப் போன்றே, உங்கள் தீங்கிலிருந்து அதுவும் காப்பாற்றப்பட்டுவிட்டது” என்று கூறினார்கள்.

1831. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِلْوَزَغِ "" فُوَيْسِقٌ "". وَلَمْ أَسْمَعْهُ أَمَرَ بِقَتْلِهِ.
பாடம் : 7
இஹ்ராம் கட்டியவர் கொல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள (தொல்லை தரும்) உயிரினங்கள்3
1831. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பல்லி தீங்கிழைக்கக்கூடியது” என்று சொன்னார்கள். (ஆனால்,) அதைக் கொல்லும்படி அவர்கள் உத்தரவிட்டு நான் செவியுற்றதில்லை.4
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இதற்கு) முந்தைய ஹதீஸ், ‘மினா’ புனித (ஹரம்) எல்லையில் அடங்கும் என்பதை யும், அங்கு பாம்பைக் கொல்வது குற்றமாகாது என்றே அவர்கள் கருதினர் என்பதையும் காட்டுகிறது என்போம்.

1832. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي شُرَيْحٍ الْعَدَوِيِّ، أَنَّهُ قَالَ لِعَمْرِو بْنِ سَعِيدٍ، وَهُوَ يَبْعَثُ الْبُعُوثَ إِلَى مَكَّةَ ائْذَنْ لِي أَيُّهَا الأَمِيرُ أُحَدِّثْكَ قَوْلاً قَامَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِلْغَدِ مِنْ يَوْمِ الْفَتْحِ، فَسَمِعَتْهُ أُذُنَاىَ، وَوَعَاهُ قَلْبِي، وَأَبْصَرَتْهُ عَيْنَاىَ حِينَ تَكَلَّمَ بِهِ، إِنَّهُ حَمِدَ اللَّهَ، وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ "" إِنَّ مَكَّةَ حَرَّمَهَا اللَّهُ وَلَمْ يُحَرِّمْهَا النَّاسُ، فَلاَ يَحِلُّ لاِمْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ يَسْفِكَ بِهَا دَمًا وَلاَ يَعْضُدَ بِهَا شَجَرَةً، فَإِنْ أَحَدٌ تَرَخَّصَ لِقِتَالِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقُولُوا لَهُ إِنَّ اللَّهَ أَذِنَ لِرَسُولِهِ صلى الله عليه وسلم وَلَمْ يَأْذَنْ لَكُمْ، وَإِنَّمَا أَذِنَ لِي سَاعَةً مِنْ نَهَارٍ، وَقَدْ عَادَتْ حُرْمَتُهَا الْيَوْمَ كَحُرْمَتِهَا بِالأَمْسِ، وَلْيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ "". فَقِيلَ لأَبِي شُرَيْحٍ مَا قَالَ لَكَ عَمْرٌو قَالَ أَنَا أَعْلَمُ بِذَلِكَ مِنْكَ يَا أَبَا شُرَيْحٍ، إِنَّ الْحَرَمَ لاَ يُعِيذُ عَاصِيًا، وَلاَ فَارًّا بِدَمٍ، وَلاَ فَارًّا بِخَرْبَةٍ. خَرْبَةٌ بَلِيَّةٌ.
பாடம் : 8
புனித (ஹரம்) எல்லைக்குள் இருக்கும் மரங்கள் வெட்டப் படக் கூடாது.
“அதன் முட்களையும் வெட்டக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
1832. சயீத் பின் அபீசயீத் அல்மக்புரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது :
(யஸீதின் ஆட்சியில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அம்ர் பின் சயீத், (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக), மக்காவுக்குப் படைகளை அனுப்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
“தலைவரே! மக்கா வெற்றிக்கு மறுநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியை உமக்கு நான் கூறுகிறேன். என் காதுகள் அதைச் செவியுற்றன; என் உள்ளம் அதை நினைவில் வைத்துள்ளது. அவர்கள் அதைக் கூறியபோது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக் கின்றன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
அல்லாஹ்தான் மக்கா நகருக்குப் புனிதத்தை வழங்கினான். அதற்குப் புனிதம் வழங்கியவர்கள் மனிதர்கள் அல்லர். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகின்ற எவருக்கும் இங்கே (சண்டையிட்டு) இரத்தத்தைச் சிந்து வதற்கோ இங்குள்ள மரத்தை வெட்டு வதற்கோ அனுமதி இல்லை; அல்லாஹ் வின் தூதர் (இங்கு மக்கா வெற்றி நாளில் ஒரு பகல் மட்டும்) போர் செய்ததனால் இதைப் பொது அனுமதி என்று யாரேனும் கருதினால், “அல்லாஹ், தன் தூதருக்குத் தான் அனுமதி வழங்கினான்; உங்களுக்கு அனுமதி வழங்கவில்லை” என்று கூறி விடுங்கள். எனக்குக்கூட பகலில் சிறிது நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப் பட்டது.
இன்று அதன் புனிதத் தன்மை நேற்றைய அதன் புனிதத் தன்மைக்கு மீண்டு வந்துவிட்டது. (இங்கு) வந்திருப்போர் வராதவருக்குச் சொல்லிவிடுங்கள்.
அப்போது அபூஷுரைஹ் (ரலி) அவர்களிடம், “இதற்கு அம்ர் பின் சயீத் என்ன பதில் கூறினார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அபூஷுரைஹே! உம்மைவிட இதைப் பற்றி நான் நன்கு அறிவேன். குற்றவாளிக்கும், கொலை செய்துவிட்டு ஓடிவந்தவனுக்கும், திருடிவிட்டு ஓடிவந்தவனுக்கும் ‘ஹரம்’ புனித எல்லை நிச்சயம் பாதுகாப்புத் தராது” என்று அம்ர் கூறினார் எனப் பதிலளித்தார்கள்.
(இங்கு மூலத்தில் ‘திருட்டு’ என்பதைக் குறிக்க ‘குர்பத்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.) ‘குர்பத்’ என்பதற்கு பொதுவான குற்றம் என்ற பொருளும் உண்டு.

1833. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ اللَّهَ حَرَّمَ مَكَّةَ، فَلَمْ تَحِلَّ لأَحَدٍ قَبْلِي، وَلاَ تَحِلُّ لأَحَدٍ بَعْدِي، وَإِنَّمَا أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ، لاَ يُخْتَلَى خَلاَهَا، وَلاَ يُعْضَدُ شَجَرُهَا، وَلاَ يُنَفَّرُ صَيْدُهَا، وَلاَ تُلْتَقَطُ لُقَطَتُهَا إِلاَّ لِمُعَرِّفٍ "". وَقَالَ الْعَبَّاسُ يَا رَسُولَ اللَّهِ. إِلاَّ الإِذْخِرَ لِصَاغَتِنَا وَقُبُورِنَا. فَقَالَ "" إِلاَّ الإِذْخِرَ "". وَعَنْ خَالِدٍ عَنْ عِكْرِمَةَ قَالَ هَلْ تَدْرِي مَا لاَ يُنَفَّرُ صَيْدُهَا هُوَ أَنْ يُنَحِّيَهُ مِنَ الظِّلِّ، يَنْزِلُ مَكَانَهُ.
பாடம் : 9
புனித (ஹரம்) எல்லைக்குள் வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது.
1833. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“நிச்சயமாக அல்லாஹ் மக்காவைப் புனிதப்படுத்தியிருக்கிறான்; எனக்கு முன்னர் எவருக்கும் (அதில் போர் செய்வது) அனுமதிக்கப்படவில்லை; எனக்குப்பின் எவருக்கும் அனுமதிக்கப் படாது; எனக்குக்கூட பகலில் சிறிது நேரமே அனுமதிக்கப்பட்டது. எனவே, இங்குள்ள புற்பூண்டுகளைப் பறிக்கக் கூடாது; இங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்(து உரியவரிடம் சேர்ப்)பவர் தவிர மற்றவர்கள் எடுக்கக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது (என் தந்தை) அப்பாஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் அடக்கக் குழிகளுக்கும் உலோகத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகின்ற ‘இத்கிர்’ புல்லைத் தவிரவா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இத்கிர் எனும் புல்லைத் தவிர!” என்று கூறினார்கள்.
“வேட்டைப் பிராணியை விரட்டக் கூடாது என்பதன் பொருள் உமக்குத் தெரியுமா? நிழலில் படுத்திருக்கும் பிரா ணியை எழுப்பிவிட்டு அந்த இடத்தில் தங்குவதுதான்” என்று அறிவிப்பாளர் இக்ரிமா (ரஹ்) அவர்கள் காலித் பின் மஹ்ரான் (ரஹ்) அவர்களிடம் கூறினார்கள்.

1834. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ افْتَتَحَ مَكَّةَ "" لاَ هِجْرَةَ وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ، وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا، فَإِنَّ هَذَا بَلَدٌ حَرَّمَ اللَّهُ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ، وَهُوَ حَرَامٌ بِحُرْمَةِ اللَّهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، وَإِنَّهُ لَمْ يَحِلَّ الْقِتَالُ فِيهِ لأَحَدٍ قَبْلِي، وَلَمْ يَحِلَّ لِي إِلاَّ سَاعَةً مِنْ نَهَارٍ، فَهُوَ حَرَامٌ بِحُرْمَةِ اللَّهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، لاَ يُعْضَدُ شَوْكُهُ، وَلاَ يُنَفَّرُ صَيْدُهُ، وَلاَ يَلْتَقِطُ لُقَطَتَهُ إِلاَّ مَنْ عَرَّفَهَا، وَلاَ يُخْتَلَى خَلاَهَا "". قَالَ الْعَبَّاسُ يَا رَسُولَ اللَّهِ. إِلاَّ الإِذْخِرَ، فَإِنَّهُ لِقَيْنِهِمْ وَلِبُيُوتِهِمْ. قَالَ قَالَ "" إِلاَّ الإِذْخِرَ "".
பாடம் : 10
மக்காவில் போர் புரிவதற்கு அனுமதியில்லை.
“மக்காவில் இரத்தத்தைச் சிந்தக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஷுரைஹ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
1834. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கண்ட நாளில், “இனி (மக்காவிலிருந்து) புலம்பெயர்தல் (ஹிஜ்ரத்) என்பது கிடையாது; என்றாலும், அறப்போர் புரிவதும் அதற்காக(வும் மற்ற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும்தான் இருக்கிறது. நீங்கள் போருக்காக அழைக் கப்பட்டால் புறப்படுங்கள். வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ் இந்த ஊரைப் புனிதப்படுத்தி யிருக்கிறான்; அவன் புனிதப்படுத்திய காரணத்தால் மறுமை நாள்வரை இவ்வூர் புனிமானதாகவே இருக்கும். எனக்கு முன்னர் எவருக்கும் இங்கு போர் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை: எனக் குக்கூட பகலில் சிறிது நேரம் (மட்டுமே) அனுமதிக்கப்பட்டது.
அல்லாஹ் புனிதப்படுத்தியிருப்பதால், மறுமை நாள்வரை இவ்வூர் புனிதமான தாகவே விளங்கும். இங்குள்ள முட்கள் வெட்டப்படக் கூடாது; வேட்டைப் பிராணி விரட்டப்படக் கூடாது; இங்கே கீழே விழுந்துகிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்(து உரியவரிடம் சேர்ப்)பவர் தவிர மற்றவர் எடுக்கக் கூடாது; இங்குள்ள புற்பூண்டுகள் பறிக்கப்படக் கூடாது!” என்று கூறினார்கள்.
அப்போது “அல்லாஹ்வின் தூதரே! இத்கிர் எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது வீடுகளுக்கும் உலோகத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகிறது” என்று (என் தந்தை) அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்க, நபி (ஸல்) அவர்கள், “இத்கிரைத் தவிர” என்று பதிலளித்தார்கள்.

1835. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ قَالَ عَمْرٌو أَوَّلُ شَىْءٍ سَمِعْتُ عَطَاءً، يَقُولُ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ احْتَجَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ مُحْرِمٌ. ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ حَدَّثَنِي طَاوُسٌ عَنِ ابْنِ عَبَّاسٍ فَقُلْتُ لَعَلَّهُ سَمِعَهُ مِنْهُمَا.
பாடம் : 11
இஹ்ராம் கட்டியவர் (மருத்துவ சிகிச்சைக்காக) குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்வது5
இப்னு உமர் (ரலி) அவர்கள், தம் புதல்வர் (வாகித் அவர்கள்) இஹ்ராம் கட்டியிருந்தபோது சிகிச்சைக்காகச் சூடு போட்டிருக்கிறார்கள்.
நறுமணம் இல்லாதவற்றை இஹ்ராம் கட்டியவர் மருந்தாகப் பயன்படுத்தலாம்.
1835. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. இவ்விரு அறிவிப்புகளுமே அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடமிருந்து வந்தவைதான். அதாஉ (ரஹ்) அவர்களிடமும், தாவூஸ் (ரஹ்) அவர்களிடமும் அவர் இந்த ஹதீஸைக் கேட்டிருக்கலாம் என்று சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார் கள். அதாஉ (ரஹ்) அவர்களிடம் தாம் கேட்ட முதலாவது ஹதீஸ் இதுதான் என்று அம்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

1836. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ أَبِي عَلْقَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنِ ابْنِ بُحَيْنَةَ ـ رضى الله عنه ـ قَالَ احْتَجَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهْوَ مُحْرِمٌ بِلَحْىِ جَمَلٍ فِي وَسَطِ رَأْسِهِ.
பாடம் : 11
இஹ்ராம் கட்டியவர் (மருத்துவ சிகிச்சைக்காக) குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்வது5
இப்னு உமர் (ரலி) அவர்கள், தம் புதல்வர் (வாகித் அவர்கள்) இஹ்ராம் கட்டியிருந்தபோது சிகிச்சைக்காகச் சூடு போட்டிருக்கிறார்கள்.
நறுமணம் இல்லாதவற்றை இஹ்ராம் கட்டியவர் மருந்தாகப் பயன்படுத்தலாம்.
1836. இப்னு புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்த நிலையில், (மக்கா சாலையில் உள்ள) ‘லஹ்யு ஜமல்’ எனுமிடத்தில் தமது தலையின் நடுப் பகுதியில் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள்.

1837. حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ عَبْدُ الْقُدُّوسِ بْنُ الْحَجَّاجِ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَزَوَّجَ مَيْمُونَةَ وَهُوَ مُحْرِمٌ.
பாடம் : 12
இஹ்ராம் கட்டியவர் மணமுடித்தல்
1837. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டி யிருக்கும்போது அன்னை மைமூனா (ரலி) அவர்களை மணமுடித்துக்கொண்டார்கள்.6

1838. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنَا نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَاذَا تَأْمُرُنَا أَنْ نَلْبَسَ مِنَ الثِّيَابِ فِي الإِحْرَامِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ تَلْبَسُوا الْقَمِيصَ وَلاَ السَّرَاوِيلاَتِ وَلاَ الْعَمَائِمَ، وَلاَ الْبَرَانِسَ إِلاَّ أَنْ يَكُونَ أَحَدٌ لَيْسَتْ لَهُ نَعْلاَنِ، فَلْيَلْبَسِ الْخُفَّيْنِ، وَلْيَقْطَعْ أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ، وَلاَ تَلْبَسُوا شَيْئًا مَسَّهُ زَعْفَرَانٌ، وَلاَ الْوَرْسُ، وَلاَ تَنْتَقِبِ الْمَرْأَةُ الْمُحْرِمَةُ وَلاَ تَلْبَسِ الْقُفَّازَيْنِ "". تَابَعَهُ مُوسَى بْنُ عُقْبَةَ وَإِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ وَجُوَيْرِيَةُ وَابْنُ إِسْحَاقَ فِي النِّقَابِ وَالْقُفَّازَيْنِ. وَقَالَ عُبَيْدُ اللَّهِ وَلاَ وَرْسٌ وَكَانَ يَقُولُ لاَ تَتَنَقَّبِ الْمُحْرِمَةُ، وَلاَ تَلْبَسِ الْقُفَّازَيْنِ. وَقَالَ مَالِكٌ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ لاَ تَتَنَقَّبِ الْمُحْرِمَةُ. وَتَابَعَهُ لَيْثُ بْنُ أَبِي سُلَيْمٍ.
பாடம் : 13
இஹ்ராம் கட்டிய ஆண்களும் பெண்களும் நறுமணப் பொரு ளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டதாகும்.7
“இஹ்ராம் கட்டிய பெண் குங்குமப் பூச் சாயம் மற்றும் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடையை அணியக் கூடாது” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள் ளார்கள்.,
1838. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியிருக்கும்போது எந்த ஆடைகளை நாங்கள் அணிய வேண்டுமென்று நீங்கள் எங்களுக்குக் கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (முழு நீளச்) சட்டைகளையும், முழுக்கால் சட்டைகளையும், தலைப்பாகைகளையும், (முக்காடுள்ள) மேலங்கிகளையும் அணியாதீர்கள். ஒருவரிடம் காலணிகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்து (அணிந்து)கொள்ளட்டும்; குங்குமப்பூச் சாயம், வர்ஸ் எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்ந்த எதனையும் அணியாதீர்கள். இஹ்ராம் கட்டிய பெண் முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது” என்று பதிலளித் தார்கள்.8
இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1839. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْحَكَمِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ وَقَصَتْ بِرَجُلٍ مُحْرِمٍ نَاقَتُهُ، فَقَتَلَتْهُ، فَأُتِيَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" اغْسِلُوهُ، وَكَفِّنُوهُ، وَلاَ تُغَطُّوا رَأْسَهُ، وَلاَ تُقَرِّبُوهُ طِيبًا، فَإِنَّهُ يُبْعَثُ يُهِلُّ "".
பாடம் : 13
இஹ்ராம் கட்டிய ஆண்களும் பெண்களும் நறுமணப் பொரு ளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டதாகும்.7
“இஹ்ராம் கட்டிய பெண் குங்குமப் பூச் சாயம் மற்றும் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடையை அணியக் கூடாது” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள் ளார்கள்.,
1839. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இஹ்ராம் கட்டியிருந்த ஒரு மனிதரை, அவரது ஒட்டகம் கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அவரது உடல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, “அவரை நீராட்டிக் ‘கஃபன்’ இடுங்கள்; அவரது தலையை மூடாதீர்கள்; அவருக்கு நறுமணம் பூசாதீர்கள். ஏனெனில், அவர் (மறுமையில்), ‘தல்பியா’ கூறியவராக எழுப்பப்படுவார்” என்று கூறினார்கள்.

1840. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ الْعَبَّاسِ، وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، اخْتَلَفَا بِالأَبْوَاءِ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ يَغْسِلُ الْمُحْرِمُ رَأْسَهُ. وَقَالَ الْمِسْوَرُ لاَ يَغْسِلُ الْمُحْرِمُ رَأْسَهُ. فَأَرْسَلَنِي عَبْدُ اللَّهِ بْنُ الْعَبَّاسِ إِلَى أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، فَوَجَدْتُهُ يَغْتَسِلُ بَيْنَ الْقَرْنَيْنِ، وَهُوَ يُسْتَرُ بِثَوْبٍ، فَسَلَّمْتُ عَلَيْهِ فَقَالَ مَنْ هَذَا فَقُلْتُ أَنَا عَبْدُ اللَّهِ بْنُ حُنَيْنٍ، أَرْسَلَنِي إِلَيْكَ عَبْدُ اللَّهِ بْنُ الْعَبَّاسِ، أَسْأَلُكَ كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَغْسِلُ رَأْسَهُ، وَهُوَ مُحْرِمٌ، فَوَضَعَ أَبُو أَيُّوبَ يَدَهُ عَلَى الثَّوْبِ، فَطَأْطَأَهُ حَتَّى بَدَا لِي رَأْسُهُ ثُمَّ قَالَ لإِنْسَانٍ يَصُبُّ عَلَيْهِ اصْبُبْ. فَصَبَّ عَلَى رَأْسِهِ، ثُمَّ حَرَّكَ رَأْسَهُ بِيَدَيْهِ فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ وَقَالَ هَكَذَا رَأَيْتُهُ صلى الله عليه وسلم يَفْعَلُ.
பாடம் : 14
இஹ்ராம் கட்டியவர் குளிப்பது
“இஹ்ராம் கட்டியவர் குளியலறைக்குச் செல்லலாம்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
‘இஹ்ராம் கட்டியவர் (தலையைச்) சொறிந்துகொள்வதில் குற்றமில்லை” என்று இப்னு உமர் (ரலி) அவர்களும் (‘மேனி யைச் சொறிந்துகொள்வதில் தவறில்லை!”) என்று ஆயிஷா (ரலி) அவர்களும் கருதுகிறார்கள்.
1840. அப்துல்லாஹ் பின் ஹுனைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
‘அல்அப்வா’ என்ற இடத்தில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகிய இருவரும் (ஒரு விஷயத்தில்) கருத்து வேறுபாடு கொண்டனர். அதாவது “இஹ்ராம் கட்டியவர் தலையைக் கழுவலாம்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.“இஹ்ராம் கட்டியவர் தலையைக் கழுவக் கூடாது” என்று மிஸ்வர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), என்னை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். நான் சென்றபோது, அவர்கள் கிணற்றின்மேல் ஊன்றப்பட்ட இரண்டு மரக்கழிகளுக்கிடையே ஒரு துணியால் திரையிடப்பட்டுக் குளித்துக் கொண்டிருந்தார்கள். “நான் அவர்களுக்கு முகமன் (சலாம்) கூறினேன். “யார் அது?” என்று கேட்டார்கள்.
“நான்தான் அப்துல்லாஹ் பின் ஹுனைன்! ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருக்கும்போது எவ்வாறு தமது தலையைக் கழுவுவார் கள்?’ என்று உங்களிடம் கேட்பதற்காக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னை அனுப்பினார்கள்” என்று நான் கூறினேன்.
அபூஅய்யூப் (ரலி) அவர்கள், தமது கையைத் திரையின் மீது வைத்து, அவர்களின் தலை எனக்குத் தெரியுமளவிற்குத் திரையைக் கீழே இறக்கினார்கள். பிறகு, தண்ணீர் ஊற்றுகின்ற மனிதரிடம், “தண்ணீர் ஊற்றுவீராக!” என்றார்கள். அவர் அவர்களின் தலைமீது தண்ணீர் ஊற்றினார். அபூஅய்யூப் (ரலி) அவர்கள், தமது தலையை இரு கைகளாலும் தேய்த்துவிட்டு, முன்னும் பின்னுமாகக் கைகளைக் கொண்டுசென்றார்கள்; “இப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் செய்ய நான் பார்த்திருக்கிறேன்” என்றும் கூறினார்கள்.