1696. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا أَفْلَحُ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ فَتَلْتُ قَلاَئِدَ بُدْنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِيَدَىَّ، ثُمَّ قَلَّدَهَا وَأَشْعَرَهَا وَأَهْدَاهَا، فَمَا حَرُمَ عَلَيْهِ شَىْءٌ كَانَ أُحِلَّ لَهُ.
பாடம் : 106 (மதீனாவாசிகளின் எல்லையான) ‘துல்ஹுலைஃபா’வில் குர்பானி பிராணிக்கு அடையாள மாலை தொங்கவிட்ட பின்னர் இஹ்ராம் கட்டுதல் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மதீனாவிலிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள், குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்தால், துல்ஹுலைஃபாவில் அடையாள மாலை தொங்கவிடுவார்கள்; குர்பானி பிராணியை கிப்லாவை நோக்கிப் படுக்கவைத்து அதன் வலப்புற திமிலின் ஓரத்தில் கத்தியால் கீறி அடையாளமிடுவார்கள்.
1696. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களின் குர்பானி ஒட்டகங்களுக்கு நான் என் கைகளால் அடையாள மாலைகள் திரித்தேன். பிறகு அவற்றை நபி (ஸல்) அவர்கள் அந்த ஒட்டகங்களின் கழுத்தில் தொங்கவிட்டு, அவற்றுக்கு அடையாளமிட்டார்கள். (பிறகு மக்காவில்) குர்பானி கொடு(ப்பதற்காக அனுப்பிவை)த்தார்கள்.

ஆனால், (அதற்குமுன்) அவர்களுக்கு அனுமதிக்கப்படடிருந்த எதுவும் (அப்போது மதீனாவிலிருந்த) அவர்கள்மீது (இஹ்ராம் கட்டியவருக்குப் போன்று) தடை செய்யப்பட்டதாக ஆகவில்லை.55

அத்தியாயம் : 25
1697. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ، رضى الله عنهم قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا شَأْنُ النَّاسِ حَلُّوا وَلَمْ تَحْلِلْ أَنْتَ قَالَ "" إِنِّي لَبَّدْتُ رَأْسِي، وَقَلَّدْتُ هَدْيِي، فَلاَ أَحِلُّ حَتَّى أَحِلَّ مِنَ الْحَجِّ "".
பாடம் : 107 குர்பானி ஒட்டகங்களுக்காகவும் மாடுகளுக்காகவும் மாலைகள் திரித்தல்
1697. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! மக்களுக்கென்ன நேர்ந்தது? அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்களே! ஆனால், நீங்கள் இஹ்ராவிலிருந்து விடுபடவில்லையே!?” எனக் கேட்டேன்.

அதற்கு அவர்கள் “நான் தலைமுடி யில் களிம்பு தடவிப் படியவைத்து விட்டேன்; எனது குர்பானிப் பிராணியின் கழுத்தில் அடையாள மாலை தொங்க விட்டுள்ளேன்; எனவே, நான் ஹஜ்ஜை நிறைவேற்றாத வரை இஹ்ராமிலிருந்து விடுபடமாட்டேன்” எனக் கூறினார்கள்.


அத்தியாயம் : 25
1698. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، وَعَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُهْدِي مِنَ الْمَدِينَةِ، فَأَفْتِلُ قَلاَئِدَ هَدْيِهِ، ثُمَّ لاَ يَجْتَنِبُ شَيْئًا مِمَّا يَجْتَنِبُهُ الْمُحْرِمُ.
பாடம் : 107 குர்பானி ஒட்டகங்களுக்காகவும் மாடுகளுக்காகவும் மாலைகள் திரித்தல்
1698. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து குர்பானிப் பிராணியை அனுப்பிவைப்பவர்களாக இருந்தார்கள். எனவே, நான் அவர்களது குர்பானி பிராணியின் கழுத்தில் தொங்கவிடப்படும் மாலையைத் திரிப்பேன். (குர்பானி பிராணியை அனுப்பிய) பிறகு அவர்கள், இஹ்ராம் கட்டியவர் தவிர்த்துக்கொள்ளும் எதையும் தவிர்த்துக்கொள்ளமாட்டார்கள்.

அத்தியாயம் : 25
1699. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا أَفْلَحُ بْنُ حُمَيْدٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ فَتَلْتُ قَلاَئِدَ هَدْىِ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ أَشْعَرَهَا وَقَلَّدَهَا ـ أَوْ قَلَّدْتُهَا ـ ثُمَّ بَعَثَ بِهَا إِلَى الْبَيْتِ، وَأَقَامَ بِالْمَدِينَةِ، فَمَا حَرُمَ عَلَيْهِ شَىْءٌ كَانَ لَهُ حِلٌّ.
பாடம் : 108 குர்பானி பிராணிக்கு அடையாளமிடல் “நபி (ஸல்) அவர்கள் குர்பானிப் பிராணியின் கழுத்தில் மாலைகளைத் தொங்கவிட்டு, அதற்கு அடையாளமிட்டுவிட்டு உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினார்கள்” என மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1699. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் குர்பானி பிராணிக்கு நான் அடையாள மாலைகள் திரித்தேன். பிறகு அவர்கள் அதற்கு அடையாளமிட்டு மாலைகளைத் தொங்க விட்டார்கள் -அல்லது நான் தொங்க விட்டேன்.

பிறகு அதை இறையில்லம் கஅபா வுக்கு அனுப்பி வைத்துவிட்டு, மதீனாவில் தங்கியிருந்தார்கள். அப்போது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட எதுவும் விலக்கப்பட்டதாக ஆகவில்லை.

அத்தியாயம் : 25
1700. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّ زِيَادَ بْنَ أَبِي سُفْيَانَ كَتَبَ إِلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ إِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ مَنْ أَهْدَى هَدْيًا حَرُمَ عَلَيْهِ مَا يَحْرُمُ عَلَى الْحَاجِّ حَتَّى يُنْحَرَ هَدْيُهُ. قَالَتْ عَمْرَةُ فَقَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ لَيْسَ كَمَا قَالَ ابْنُ عَبَّاسٍ، أَنَا فَتَلْتُ قَلاَئِدَ هَدْىِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدَىَّ، ثُمَّ قَلَّدَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدَيْهِ، ثُمَّ بَعَثَ بِهَا مَعَ أَبِي فَلَمْ يَحْرُمْ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم شَىْءٌ أَحَلَّهُ اللَّهُ حَتَّى نُحِرَ الْهَدْىُ.
பாடம் : 109 ஒருவர் தமது கையாலேயே குர்பானி பிராணிகளுக்கு மாலைகளைத் தொங்கவிடுதல்
1700. அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸியாத் பின் அபீசுஃப்யான் அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, “(மக்காவுக்கு) குர்பானி பிராணியை அனுப்பிவைப்பவருக்கும், அப்பிராணி அறுக்கப்படும்வரை ஹாஜிகளுக்குத் தடை செய்யப்படும் அனைத்தும் தடை செய்யப் படும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறாரே! (இது சரியா?) எனக் கேட்டார்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொல்வது போலில்லை; நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குர்பானி பிராணிக்கான அடையாள மாலைகளை எனது கையாலேயே திரித்திருக்கிறேன்; பிறகு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அம்மாலைகளைத் தம் கரங்களால் அதன் கழுத்தில் தொங்கவிட்டார்கள்; பிறகு, பிராணியை என் தந்தையுடன் (மக்காவுக்கு) அனுப்பிவைத் தார்கள்; ஆனால், அந்த குர்பானிப் பிராணி பலியிடப்படும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்த எதுவும் தடை செய்யப்பட வில்லை” எனக் கூறினார்கள்.

அத்தியாயம் : 25
1701. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أَهْدَى النَّبِيُّ صلى الله عليه وسلم مَرَّةً غَنَمًا.
பாடம் : 110 ஆட்டுக்கு அடையாள மாலை தொங்கவிடல்
1701. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை ஆட்டை குர்பானி கொடுத்தார்கள்.


அத்தியாயம் : 25
1702. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كُنْتُ أَفْتِلُ الْقَلاَئِدَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَيُقَلِّدُ الْغَنَمَ، وَيُقِيمُ فِي أَهْلِهِ حَلاَلاً.
பாடம் : 110 ஆட்டுக்கு அடையாள மாலை தொங்கவிடல்
1702. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுக்காக குர்பானி பிராணிகளின் அடையாள மாலைகளைத் திரிப்பேன். நபி (ஸல்) அவர்கள் ஆட்டுக்கு அவற்றைத் தொங்க விடுவார்கள். (பிராணியை மக்காவுக்கு அனுப்பிவிட்டுத்) தம் குடும்பத்தாருடன் இஹ்ராம் கட்டாத நிலையில் (மதீனாவில்) தங்குவார்கள்.


அத்தியாயம் : 25
1703. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا مَنْصُورُ بْنُ الْمُعْتَمِرِ،. وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كُنْتُ أَفْتِلُ قَلاَئِدَ الْغَنَمِ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَيَبْعَثُ بِهَا، ثُمَّ يَمْكُثُ حَلاَلاً.
பாடம் : 110 ஆட்டுக்கு அடையாள மாலை தொங்கவிடல்
1703. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுக்காக (குர்பானி) ஆடுகளின் அடையாள மாலை களைத் தொடுப்பேன். நபி (ஸல்) அவர்கள் அந்த ஆடுகளை (மக்காவுக்கு) அனுப்பி விட்டு, அவர்கள் இஹ்ராமில்லாத நிலை யில் (தமது வீட்டில்) தங்குவார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 25
1704. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ فَتَلْتُ لِهَدْىِ النَّبِيِّ صلى الله عليه وسلم ـ تَعْنِي الْقَلاَئِدَ ـ قَبْلَ أَنْ يُحْرِمَ.
பாடம் : 110 ஆட்டுக்கு அடையாள மாலை தொங்கவிடல்
1704. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன்பாக, அவர்களின் குர்பானிப் பிராணிக்கு -அடையான மாலைகளை- நான் தொடுத்தேன்.

அத்தியாயம் : 25
1705. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ أُمِّ الْمُؤْمِنِينَ ـ رضى الله عنها ـ قَالَتْ فَتَلْتُ قَلاَئِدَهَا مِنْ عِهْنٍ كَانَ عِنْدِي.
பாடம் : 111 கம்பளியாலான அடையாள மாலைகள்
1705. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை (ஆயிஷா (ரலி) அவர்கள்) கூறியதாவது:

நான் குர்பானி பிராணிகளின் அடையாள மாலைகளை என்னிடமிருந்த கம்பளியால் திரித்தேன்.

அத்தியாயம் : 25
1706. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ الأَعْلَى بْنُ عَبْدِ الأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً، قَالَ "" ارْكَبْهَا "". قَالَ إِنَّهَا بَدَنَةٌ. قَالَ "" ارْكَبْهَا "". قَالَ فَلَقَدْ رَأَيْتُهُ رَاكِبَهَا يُسَايِرُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَالنَّعْلُ فِي عُنُقِهَا. تَابَعَهُ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 112 காலணியை அடையாளமாகத் தொங்கவிடல்
1706. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

குர்பானி பிராணியை இழுத்துக் கொண்டு (நடந்து) சென்ற ஒருவரைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், “அதில் ஏறிக்கொள்ளும்” என்றார்கள். அதற்கு அவர், “இது குர்பானி பிராணி” என்றதும், “அதில் ஏறுவீராக!” என்று மீண்டும் கூறினார்கள்.

பிறகு அவர் அதில் ஏறிச் சென்றதை நான் பார்த்தேன். அவர் நபி (ஸல்) அவர்களுடன் பயணித்துக்கொண்டிருந் தார். அப்போது அந்த ஒட்டகத்தின் கழுத்தில் காலணி கிடந்தது.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 25
1707. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أَتَصَدَّقَ بِجِلاَلِ الْبُدْنِ الَّتِي نَحَرْتُ وَبِجُلُودِهَا.
பாடம் : 113 குர்பானி ஒட்டகங்களுக்குச் சேணம் பூட்டல் இப்னு உமர் (ரலி) அவர்கள், (ஒட்டகத்தின்) திமில் உள்ள அளவுக்கு மட்டுமே சேணத்தை வெட்டித் தயாரிப்பார்கள். குர்பானி பிராணியை அறுத்ததும் சேணத்தில் இரத்தம் பட்டுவிடும் என்று அஞ்சி அதை உடனேயே கழற்றிவிடுவார்கள். பிறகு சேணத்தைக் கொடுத்து தர்மம் செய்து விடுவார்கள்.
1707. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அறுக்கும் குர்பானி பிராணியின் சேணத்தையும் அதன் தோலையும் தர்மம் செய்துவிட வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

அத்தியாயம் : 25
1708. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، قَالَ أَرَادَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ الْحَجَّ عَامَ حَجَّةِ الْحَرُورِيَّةِ فِي عَهْدِ ابْنِ الزُّبَيْرِ ـ رضى الله عنهما ـ فَقِيلَ لَهُ إِنَّ النَّاسَ كَائِنٌ بَيْنَهُمْ قِتَالٌ، وَنَخَافُ أَنْ يَصُدُّوكَ. فَقَالَ {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ} إِذًا أَصْنَعَ كَمَا صَنَعَ، أُشْهِدُكُمْ أَنِّي أَوْجَبْتُ عُمْرَةً. حَتَّى كَانَ بِظَاهِرِ الْبَيْدَاءِ قَالَ مَا شَأْنُ الْحَجِّ وَالْعُمْرَةِ إِلاَّ وَاحِدٌ، أُشْهِدُكُمْ أَنِّي جَمَعْتُ حَجَّةً مَعَ عُمْرَةٍ. وَأَهْدَى هَدْيًا مُقَلَّدًا اشْتَرَاهُ حَتَّى قَدِمَ، فَطَافَ بِالْبَيْتِ وَبِالصَّفَا، وَلَمْ يَزِدْ عَلَى ذَلِكَ، وَلَمْ يَحْلِلْ مِنْ شَىْءٍ حَرُمَ مِنْهُ حَتَّى يَوْمِ النَّحْرِ، فَحَلَقَ وَنَحَرَ وَرَأَى أَنْ قَدْ قَضَى طَوَافَهُ الْحَجَّ وَالْعُمْرَةَ بِطَوَافِهِ الأَوَّلِ، ثُمَّ قَالَ كَذَلِكَ صَنَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம் : 114 செல்லும் வழியில் குர்பானி பிராணியை விலைக்கு வாங்கி அதில் அடையாள மாலை தொங்கவிடல்
1708. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களின் காலத்தில் ‘ஹரூரிய்யா’க்கள் (காரிஜிய்யா) ஹஜ் செய்த ஆண்டில் இப்னு உமர் (ரலி) அவர்களும் ஹஜ் செய்ய விரும்பினார்கள்.56

அப்போது அவர்களிடம், “மக்களிடையே போர் மூண்டுள்ளது; எனவே, உங்களை ஹஜ் செய்ய விடாமல் அவர்கள் தடுப்பார் கள் என நாங்கள் அஞ்சுகின்றோம்” எனக் கூறப்பட்டது.

உடனே அவர்கள், “அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி உள்ளது. எனவே, அந்த நேரத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று நானும் செய்வேன். நான் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிவிட்டேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக்கு கின்றேன்” என்றார்கள்.

பிறகு புறப்பட்டு ‘அல்பைதாஉ’ எனுமிடத்திற்கு வந்ததும் “ஹஜ்ஜின் நிலையும் உம்ராவின் நிலையும் ஒன்றே தான்; (எனவே) நான் உம்ராவுடன் ஹஜ்ஜுக்கும் சேர்த்தே இஹ்ராம் கட்டியுள்ளேன் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” எனக் கூறினார்கள். மேலும், அடையாள மாலையிடப்பட்ட குர்பானி பிராணியை விலைக்கு வாங்கிக் கொண்டுசென்றார்கள். மக்கா வந்து கஅபாவை தவாஃப் செய்துவிட்டு, ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடி ‘சயீ’ செய்தார்கள். இதைவிட வேறெதுவும் அதிகமாகச் செய்யவில்லை.

துல்ஹஜ் பத்தாம் நாளில்தான் குர்பானி பிராணியைப் பலியிட்டுவிட்டுத் தலைமுடியை மழித்தார்கள். அதுவரை, இஹ்ராம் கட்டிய நிலையில் விலக்கப்பட்ட எதையும் செய்யவில்லை. முதலில் தாம் நிறைவேற்றிவிட்ட தவாஃபே ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டிற்கும் போதும் என்றும் கருதினார்கள். மேலும், “இப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 25
1709. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِخَمْسٍ بَقِينَ مِنْ ذِي الْقَعْدَةِ، لاَ نُرَى إِلاَّ الْحَجَّ، فَلَمَّا دَنَوْنَا مِنْ مَكَّةَ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْىٌ، إِذَا طَافَ وَسَعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ أَنْ يَحِلَّ، قَالَتْ فَدُخِلَ عَلَيْنَا يَوْمَ النَّحْرِ بِلَحْمِ بَقَرٍ. فَقُلْتُ مَا هَذَا قَالَ نَحَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَزْوَاجِهِ. قَالَ يَحْيَى فَذَكَرْتُهُ لِلْقَاسِمِ، فَقَالَ أَتَتْكَ بِالْحَدِيثِ عَلَى وَجْهِهِ.
பாடம் : 115 ஒருவர் தம் துணைவியர் சொல் லாமலேயே அவர்கள் சார்பாக மாட்டை அறுத்துக் குர்பானி கொடுப்பது
1709. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்தில் துல்கஅதா மாதத்தின் இருபத்தைந்தாம் நாள், நாங்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப் பட்டோம். மக்காவை நாங்கள் நெருங்கிய தும், “குர்பானிப் பிராணியைக் கொண்டு வராதவர்கள் தவாஃப் செய்துவிட்டு, ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடி முடித்த வுடன், இஹ்ராமைக் களைந்துவிட வேண்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

பிறகு துல்ஹஜ் பத்தாம் நாள் மாட்டி றைச்சி எங்களிடம் கொண்டுவரப்பட்டது. “இது என்ன?” என நான் கேட்டேன். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியர் சார்பாக குர்பானி கொடுத்தார் கள்” என்று (வந்தவர்) சொன்னார்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் இந்த ஹதீஸை, காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், “உமக்கு இந்த ஹதீஸை அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) சரியாகவே அறிவித்துள்ளார்” என்றார்கள்.

அத்தியாயம் : 25
1710. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ خَالِدَ بْنَ الْحَارِثِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ ـ رضى الله عنه ـ كَانَ يَنْحَرُ فِي الْمَنْحَرِ. قَالَ عُبَيْدُ اللَّهِ مَنْحَرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 116 மினாவில் நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த இடத்தில் குர்பானி கொடுப்பது
1710. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வழக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த இடத்திலேயே குர்பானி கொடுப்பார்கள்.


அத்தியாயம் : 25
1711. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ يَبْعَثُ بِهَدْيِهِ مِنْ جَمْعٍ مِنْ آخِرِ اللَّيْلِ، حَتَّى يُدْخَلَ بِهِ مَنْحَرُ النَّبِيِّ صلى الله عليه وسلم مَعَ حُجَّاجٍ فِيهِمُ الْحُرُّ وَالْمَمْلُوكُ.
பாடம் : 116 மினாவில் நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த இடத்தில் குர்பானி கொடுப்பது
1711. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் முஸ்தலி ஃபாவிலிருந்து இரவின் கடைசிப் பகுதி யில் தமது குர்பானிப் பிராணியை ஹாஜிகளுடன் அனுப்புவார்கள். நபி (ஸல்) அவர்கள் பலியிட்ட இடத்தில் சேர்ப்பதற் காக இவ்வாறு அனுப்புவார்கள். அந்த ஹாஜிகளில் அடிமைகளும் சுதந்திர மானவர்களும் இருந்தனர்.57

அத்தியாயம் : 25
1712. حَدَّثَنَا سَهْلُ بْنُ بَكَّارٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ وَذَكَرَ الْحَدِيثَ ـ قَالَ وَنَحَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ سَبْعَ بُدْنٍ قِيَامًا، وَضَحَّى بِالْمَدِينَةِ كَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ. مُخْتَصَرًا.
பாடம் : 117 ஒருவர் தமது கையாலேயே குர்பானி பிராணியை அறுப்பது
1712. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின்போது) ஏழு ஒட்டகங்களை நிற்கவைத்துத் தமது கையாலேயே அறுத்தார்கள், மேலும், அவர்கள் மதீனாவில், பெரிய கொம்புகளை உடைய, கறுப்பு நிறம் கலந்த வெள்ளை நிற செம்மறி ஆடுகள் இரண்டையும் குர்பானி கொடுத்தார்கள்.

அத்தியாயம் : 25
1713. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ يُونُسَ، عَنِ زِيَادِ بْنِ جُبَيْرٍ، قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَتَى عَلَى رَجُلٍ، قَدْ أَنَاخَ بَدَنَتَهُ يَنْحَرُهَا، قَالَ ابْعَثْهَا قِيَامًا مُقَيَّدَةً، سُنَّةَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم. وَقَالَ شُعْبَةُ عَنْ يُونُسَ أَخْبَرَنِي زِيَادٌ.
பாடம் : 118 ஒட்டகத்தைக் கட்டிப்போட்டு அறுத்தல்
1713. ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அறுப்பதற்காகத் தமது ஒட்டகத்தைப் படுக்கவைத்திருந்த ஒருவரிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள் வந்து, “அதை எழுப்பி நிற்கவைத்து (இடது காலை மட்டும்) கட்டிப்போட்டு அறுப்பீராக! அதுவே முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை ஆகும்” என்று கூறியதை நான் பார்த்தேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது

அத்தியாயம் : 25
1714. حَدَّثَنَا سَهْلُ بْنُ بَكَّارٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَالْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، فَبَاتَ بِهَا، فَلَمَّا أَصْبَحَ رَكِبَ رَاحِلَتَهُ، فَجَعَلَ يُهَلِّلُ وَيُسَبِّحُ، فَلَمَّا عَلاَ عَلَى الْبَيْدَاءِ لَبَّى بِهِمَا جَمِيعًا، فَلَمَّا دَخَلَ مَكَّةَ أَمَرَهُمْ أَنْ يَحِلُّوا. وَنَحَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ سَبْعَ بُدْنٍ قِيَامًا، وَضَحَّى بِالْمَدِينَةِ كَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ.
பாடம் : 119 ஒட்டகங்களை நிற்கவைத்து அறுத்தல் இப்னு உமர் (ரலி) அவர்கள், “அதுவே (ஒட்டகத்தை நிற்கவைத்து அறுப்பதே) முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை” என்று கூறுகிறார்கள். “(குர்ஆனில் 22:36ஆவது வசனத்திலுள்ள) ‘ஸவாஃப்ப’ எனும் வார்த்தைக்கு ‘நிற்கவைக்கப்பட்ட நிலையில்’ என்றுதான் பொருள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1714. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணத்தைத் தொடங்கியபோது) மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ர் தொழு(வித்)தார்கள். ‘துல்ஹுலைஃபா’வில் இரண்டு ரக்அத்கள் அஸ்ர் தொழுதுவிட்டு அங்கேயே இரவில் தங்கினார்கள். காலை விடிந்ததும் தமது ஊர்தி ஒட்டகத்தில் ஏறிக்கொண்டு ‘லா இலாஹ இல்லல்லாஹ்’வும் ‘சுப்ஹானல்லாஹ்’ வும் கூறிக்கொண்டே சென்றார்கள். ‘அல்பைதாஉ’ எனுமிடத்தைச் சென்றடைந்ததும் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி தல்பியா கூறலானார்கள்.

மக்காவை அடைந்ததும் இஹ்ராமி லிருந்து விடுபடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் தமது கையாலேயே ஏழு ஒட்டகங்களை நிற்கவைத்து அறுத்துப் பலியிட்டார்கள். (பெருநாளன்று) பெரிய கொம்புகளை உடைய, கறுப்பு நிறம் கலந்த வெள்ளை நிற செம்மறி ஆடுகள் இரண்டை மதீனாவில் குர்பானி கொடுத் தார்கள்.


அத்தியாயம் : 25