1521. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا سَيَّارٌ أَبُو الْحَكَمِ، قَالَ سَمِعْتُ أَبَا حَازِمٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ "".
பாடம் : 4 பாவச் செயல் கலவாத ஹஜ்ஜின் சிறப்பு2
1521. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தீய பேச்சு, பாவச் செயல் ஆகியவற்றில் ஈடுபடாமல் அல்லாஹ்வி(ன் அன்பைப் பெறுவத)ற்காகவே ஹஜ் செய்கிறாரோ அவர், தம்மைத் தம்முடைய தாய் ஈன்ற நாளில் இருந்ததைப் போன்று (பாவமில்லாதவராகத்) திரும்புவார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 25
1522. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ جُبَيْرٍ، أَنَّهُ أَتَى عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ فِي مَنْزِلِهِ وَلَهُ فُسْطَاطٌ وَسُرَادِقٌ، فَسَأَلْتُهُ مِنْ أَيْنَ يَجُوزُ أَنْ أَعْتَمِرَ قَالَ فَرَضَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَهْلِ نَجْدٍ قَرْنًا، وَلأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ، وَلأَهْلِ الشَّأْمِ الْجُحْفَةَ.
பாடம் : 5 ஹஜ், உம்ரா ஆகியவற்றுக்காக ‘இஹ்ராம்’ கட்டுவதற்கான குறிப்பிட்ட எல்லைகள்3
1522. ஸைத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களது வீட்டிற்கு வந்தேன். ஒரு கூடாரம்தான் அவர்களின் வீடாக இருந்தது. நான் அவர்களிடம், “உம்ராவுக் காக எந்த இடத்திலிருந்து நான் இஹ்ராம் கட்டலாம்?” எனக் கேட்டேன்.

அதற்கு, “நஜ்த்வாசிகள் ‘கர்ன்’ எனும் இடத்திலிருந்தும் மதீனாவாசிகள் ‘துல் ஹுலைஃபா’விலிருந்தும் ஷாம் (சிரியா) வாசிகள் ‘அல்ஜுஹ்ஃபா’விலிருந்தும் இஹ்ராம் கட்ட வேண்டுமென அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எல்லைகள் நிர்ணயித்தார்கள்” என இப்னு உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 25
1523. حَدَّثَنَا يَحْيَى بْنُ بِشْرٍ، حَدَّثَنَا شَبَابَةُ، عَنْ وَرْقَاءَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ أَهْلُ الْيَمَنِ يَحُجُّونَ وَلاَ يَتَزَوَّدُونَ وَيَقُولُونَ نَحْنُ الْمُتَوَكِّلُونَ، فَإِذَا قَدِمُوا مَكَّةَ سَأَلُوا النَّاسَ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى}. رَوَاهُ ابْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرٍو عَنْ عِكْرِمَةَ مُرْسَلاً.
பாடம் : 6 உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்: (ஹஜ்ஜுக்குத்) தேவைப்படும் உணவுப் பொருட்களைத் தயார்படுத்திக்கொள்ளுங் கள். தயார்செய்ய வேண்டிய பொருளில் தலைசிறந்தது நிச்சயமாக இறையச்சமாகும். (2:197)
1523. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யமன் வாசிகள் (ஹஜ்ஜுக்குத் தேவை யான) பொருள்களைத் தயாரிக்காமல் ஹஜ்ஜுக்கு வருவார்கள்; “நாங்கள் இறைவன்மீது நம்பிக்கைவைத்துள்ளோம்” என்றும் கூறுவார்கள். மக்கா வந்ததும் மக்களிடம் யாசகம் கேட்பார்கள்.

இது தொடர்பாகவே அல்லாஹ் “(ஹஜ்ஜுக்குத்) தேவையான பொருட்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள். தயார்செய்ய வேண்டிய பொருளில் தலைசிறந்தது நிச்சயமாக இறையச்சமாகும்” (2:197) எனும் வசனத்தை அருளினான்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பில் இக்ரிமா (ரஹ்) அவர்களின் கூற்றாக (மவ்கூஃப்) அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 25
1524. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَقَّتَ لأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ، وَلأَهْلِ الشَّأْمِ الْجُحْفَةَ، وَلأَهْلِ نَجْدٍ قَرْنَ الْمَنَازِلِ، وَلأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ، هُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِهِنَّ، مِمَّنْ أَرَادَ الْحَجَّ وَالْعُمْرَةَ، وَمَنْ كَانَ دُونَ ذَلِكَ فَمِنْ حَيْثُ أَنْشَأَ، حَتَّى أَهْلُ مَكَّةَ مِنْ مَكَّةَ.
பாடம் : 7 மக்காவாசிகள் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டும் இடம்
1524. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், மதீனாவாசி களுக்கு ‘துல்ஹுலைஃபா’வையும் ஷாம் (சிரியா)வாசிகளுக்கு ‘அல்ஜுஹ்ஃபா’வை யும் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்னுல் மனா ஸிலை’யும் யமன்வாசிகளுக்கு ‘யலம் லமை’யும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இந்த எல்லைகள் இப் பகுதியினருக்கும் ஹஜ் மற்றும் உம்ராவுக் காக வேறு பகுதியிலிருந்து இவ்வழிகளில் வருபவர்களுக்கும் உரியனவாகும்.

இந்த (வரையறுக்கப்பட்ட) எல்லைக்கு உள்ளே இருப்பவர்கள், தாம் வசிக்கும் இடத்திலேயே இஹ்ராம் கட்டிக்கொள்ள லாம்; மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம் என்று கூறினார்கள்.

இதை தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 25
1525. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" يُهِلُّ أَهْلُ الْمَدِينَةِ مِنْ ذِي الْحُلَيْفَةِ، وَأَهْلُ الشَّأْمِ مِنَ الْجُحْفَةِ، وَأَهْلُ نَجْدٍ مِنْ قَرْنٍ "". قَالَ عَبْدُ اللَّهِ وَبَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" وَيُهِلُّ أَهْلُ الْيَمَنِ مِنْ يَلَمْلَمَ "".
பாடம் : 8 மதீனாவாசிகள் இஹ்ராம் கட்டும் எல்லையும், மதீனாவாசிகள் ‘துல்ஹுலைஃபா’வுக்கு முன்னால் இஹ்ராம் கட்டக் கூடாது என்பதும்
1525. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மதீனாவாசிகள் ‘துல்ஹுலைஃபா’விலிருந்தும், ஷாம் (சிரியா)வாசிகள் ‘அல்ஜுஹ்ஃபா’விலிருந்தும் நஜ்த்வாசிகள் ‘கர்னி’லிருந்தும் இஹ்ராம் கட்டுவார்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

“யமன்வாசிகள் ‘யலம்லம்’ எனுமிடத் திலிருந்து இஹ்ராம் கட்டுவார்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக எனக்குச் செய்தி கிடைத்தது” எனவும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 25
1526. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ وَقَّتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ، وَلأَهْلِ الشَّأْمِ الْجُحْفَةَ، وَلأَهْلِ نَجْدٍ قَرْنَ الْمَنَازِلِ، وَلأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ، فَهُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ، لِمَنْ كَانَ يُرِيدُ الْحَجَّ وَالْعُمْرَةَ، فَمَنْ كَانَ دُونَهُنَّ فَمُهَلُّهُ مِنْ أَهْلِهِ، وَكَذَاكَ حَتَّى أَهْلُ مَكَّةَ يُهِلُّونَ مِنْهَا.
பாடம் : 9 ஷாம் (சிரியா)வாசிகள் இஹ்ராம் கட்டும் இடம்
1526. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மதீனாவாசிகளுக்கு ‘துல்ஹுலைஃபா’வை யும் ஷாம் (சிரியா)வாசிகளுக்கு ‘அல் ஜுஹ்ஃபா’வையும் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்னுல் மனாஸிலை’யும் யமன்வாசி களுக்கு ‘யலம்லமை’யும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இந்த எல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக இவ்வழிகளில் வருபவர் களுக்கும் உரியனவாகும்.

“இந்த (வரையறுக்கப்பட்ட) எல்லை களுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்கு மிடத்திலேயே (எங்கேனும்) இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம்; மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம்” என்றும் கூறினார்கள்.

அத்தியாயம் : 25
1527. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَفِظْنَاهُ مِنَ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، وَقَّتَ النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம் : 10 நஜ்த்வாசிகள் இஹ்ராம் கட்டும் இடம்
1527. 1528 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மதீனாவாசிகள் ‘துல்ஹுலைஃபா’விலிருந்தும் ஷாம் (சிரியா)வாசிகள் ‘மஹ்யஆ’ எனும் ‘அல்ஜுஹ்ஃபா’விலிருந்தும் நஜ்த் வாசிகள் ‘கர்னி’லிருந்தும் இஹ்ராம் கட்டுவார்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

“யமன்வாசிகள் ‘யலம்லம்’ எனுமிடத்தி லிருந்து இஹ்ராம் கட்டுவார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நபித்தோழர் கள் கூறுகிறார்கள். ஆனால், நான் (நேரடியாக) நபி (ஸல்) அவர்களிடம் இதைக் கேட்கவில்லை என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 25
1529. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَقَّتَ لأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ، وَلأَهْلِ الشَّأْمِ الْجُحْفَةَ، وَلأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ، وَلأَهْلِ نَجْدٍ قَرْنًا، فَهُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ، مِمَّنْ كَانَ يُرِيدُ الْحَجَّ وَالْعُمْرَةَ فَمَنْ كَانَ دُونَهُنَّ فَمِنْ أَهْلِهِ حَتَّى إِنَّ أَهْلَ مَكَّةَ يُهِلُّونَ مِنْهَا.
பாடம் : 11 இஹ்ராம் எல்லைகளுக்குட் பட்ட பகுதியில் வசிப்போர் இஹ்ராம் கட்டும் இடம்
1529. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவாசி களுக்கு ‘துல்ஹுலைஃபா’வையும் ஷாம் (சிரியா)வாசிகளுக்கு ‘அல்ஜுஹ்ஃபா’வை யும் யமன்வாசிகளுக்கு ‘யலம்லமை’யும் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்னை’யும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இந்த எல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக இவ்வழிகளில் வருபவர்களுக்கும் உரியனவாகும்.

இந்த (வரையறுக்கப்பட்ட) எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்கும் இடத்திலேயே (எங்கேனும்) இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம்; மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.

அத்தியாயம் : 25
1530. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رضى الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَقَّتَ لأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ، وَلأَهْلِ الشَّأْمِ الْجُحْفَةَ، وَلأَهْلِ نَجْدٍ قَرْنَ الْمَنَازِلِ، وَلأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ، هُنَّ لأَهْلِهِنَّ وَلِكُلِّ آتٍ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِهِمْ مِمَّنْ أَرَادَ الْحَجَّ وَالْعُمْرَةَ فَمَنْ كَانَ دُونَ ذَلِكَ، فَمِنْ حَيْثُ أَنْشَأَ حَتَّى أَهْلُ مَكَّةَ مِنْ مَكَّةَ.
பாடம் : 12 யமன்வாசிகள் இஹ்ராம் கட்டும் இடம்
1530. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், மதீனாவாசி களுக்கு ‘துல்ஹுலைஃபா’வையும் ஷாம் (சிரியா)வாசிகளுக்கு ‘அல்ஜுஹ்ஃபா’வை யும் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்னுல் மனா ஸிலை’யும் யமன்வாசிகளுக்கு ‘யலம் லமை’யும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இந்த எல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக இவ்வழிகளில் வருபவர்களுக்கும் உரியனவாகும்; இந்த (வரையறுக்கப்பட்ட) எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே (எங்கேனும்) இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம்; மக்கா வாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.

அத்தியாயம் : 25
1531. حَدَّثَنِي عَلِيُّ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا فُتِحَ هَذَانِ الْمِصْرَانِ أَتَوْا عُمَرَ فَقَالُوا يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَدَّ لأَهْلِ نَجْدٍ قَرْنًا، وَهُوَ جَوْرٌ عَنْ طَرِيقِنَا، وَإِنَّا إِنْ أَرَدْنَا قَرْنًا شَقَّ عَلَيْنَا. قَالَ فَانْظُرُوا حَذْوَهَا مِنْ طَرِيقِكُمْ. فَحَدَّ لَهُمْ ذَاتَ عِرْقٍ.
பாடம் : 13 இராக்வாசிகளின் எல்லை ‘தாத்து இர்க்’ ஆகும்.
1531. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கூஃபா, பஸ்ரா எனும்) இந்த இரு (இராக்) நகரங்கள் வெற்றி கொள்ளப்பட்ட போது, அங்குள்ளோர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, “இறைநம்பிக்கை யாளர்களின் தலைவரே! நபி (ஸல்) அவர்கள் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்ன்’ எனும் இடத்தை (இஹ்ராம் கட்டும் எல்லையாக) நிர்ணயித்துள்ளார்கள். அது, நாங்கள் (மக்கா விற்கு) செல்லும் பாதையிலிருந்து விலகியுள்ளது. நாங்கள் ‘கர்ன்’ வழியாகச் செல்வதானால் அது மிகவும் சிரமமாகும்” என்றனர்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அதற்கு எதிரில் உள்ள ஓரிடத்தை உங்களது பாதையிலேயே கூறுங்கள்” என்றார்கள். பின்பு ‘தாத்து இர்க்’ என அவர்களுக்கு எல்லை நிர்ணயித்தார்கள்.

அத்தியாயம் : 25
1532. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنَاخَ بِالْبَطْحَاءِ بِذِي الْحُلَيْفَةِ فَصَلَّى بِهَا. وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَفْعَلُ ذَلِكَ.
பாடம் : 14
1532. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘துல்ஹுலைஃபா’வில் கற்கள் நிறைந்த இடத்தில் (அல்பத்ஹா) தமது ஒட்டகத்தை அமர வைத்து, அங்கேயே (இரண்டு ரக்அத்கள்) தொழுதார்கள்.

இப்னு உமர் (ரலி), இவ்வாறே செய் வார்கள் என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 25
1533. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَخْرُجُ مِنْ طَرِيقِ الشَّجَرَةِ، وَيَدْخُلُ مِنْ طَرِيقِ الْمُعَرَّسِ، وَأَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا خَرَجَ إِلَى مَكَّةَ يُصَلِّي فِي مَسْجِدِ الشَّجَرَةِ، وَإِذَا رَجَعَ صَلَّى بِذِي الْحُلَيْفَةِ بِبَطْنِ الْوَادِي، وَبَاتَ حَتَّى يُصْبِحَ.
பாடம் : 15 ‘அஷ்ஷஜரா’ எனும் பாதை வழியாக நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்குச்) சென்றது
1533. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அஷ்ஷஜரா’ எனும் இடத்தின் வழியாக (மதீனாவிலிருந்து) வெளியேறுவார்கள். திரும்பும்போது ‘அல்முஅர்ரஸ்’ எனும் இடத்தின் வழியாக (மதீனாவினுள்) நுழைவார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்குச் செல்லும்போது ‘அஷ்ஷஜரா’விலுள்ள பள்ளிவாசலில் தொழுவார்கள். அங்கிருந்து திரும்பும்போது ‘பத்னுல்வாதி’யிலுள்ள துல்ஹுலைஃபாவில் தொழுது விட்டு, விடியும்வரை அங்கேயே தங்குவார்கள்.4

அத்தியாயம் : 25
1534. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ، وَبِشْرُ بْنُ بَكْرٍ التِّنِّيسِيُّ، قَالاَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى، قَالَ حَدَّثَنِي عِكْرِمَةُ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ إِنَّهُ سَمِعَ عُمَرَ ـ رضى الله عنه ـ يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِوَادِي الْعَقِيقِ يَقُولُ "" أَتَانِي اللَّيْلَةَ آتٍ مِنْ رَبِّي فَقَالَ صَلِّ فِي هَذَا الْوَادِي الْمُبَارَكِ وَقُلْ عُمْرَةً فِي حَجَّةٍ "".
பாடம் : 16 ‘அல்அகீக்’ (எனும் பள்ளத் தாக்கு) வளமிக்க பள்ளத்தாக்கு என நபி (ஸல்) அவர்கள் கூறியது
1534. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘அல்அகீக்’ பள்ளத்தாக்கில் இருந்தபோது, “என் இறைவனிடமிருந்து ஒரு (வான)வர் இன்றிரவும் என்னிடம் வந்தார். அவர், ‘இந்த வளமிக்க பள்ளத்தாக்கில் தொழுங் கள்; ஹஜ்ஜுடன் உம்ரா என்று கூறுங்கள்’ என்றார்” எனக் கூறியதை நான் கேட்டேன்.5

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 25
1535. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ رُئِيَ وَهُوَ فِي مُعَرَّسٍ بِذِي الْحُلَيْفَةِ بِبَطْنِ الْوَادِي قِيلَ لَهُ إِنَّكَ بِبَطْحَاءَ مُبَارَكَةٍ. وَقَدْ أَنَاخَ بِنَا سَالِمٌ، يَتَوَخَّى بِالْمُنَاخِ الَّذِي كَانَ عَبْدُ اللَّهِ يُنِيخُ، يَتَحَرَّى مُعَرَّسَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ أَسْفَلُ مِنَ الْمَسْجِدِ الَّذِي بِبَطْنِ الْوَادِي، بَيْنَهُمْ وَبَيْنَ الطَّرِيقِ وَسَطٌ مِنْ ذَلِكَ.
பாடம் : 16 ‘அல்அகீக்’ (எனும் பள்ளத் தாக்கு) வளமிக்க பள்ளத்தாக்கு என நபி (ஸல்) அவர்கள் கூறியது
1535. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பத்னுல்வாதியில் உள்ள துல்ஹுலை ஃபாவில் (இரவின் இறுதியில்) ஓய்வெடுக் கும் இடத்தில் நபி (ஸல்) அவர்கள் இருந்தபோது கனவு கண்டார்கள்; (அக்கனவில்) “நீங்கள் வளமிக்க அழகிய பள்ளத்தாக்கில் இருக்கின்றீர்கள்” என்று (வானவரால்) கூறப்பட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓய்வெடுத்த இடத்தைத் தேர்வு செய்ததைப் போன்று இப்னு உமர் (ரலி) அவர்களும் அங்கேயே தமது ஒட்டகத்தைப் படுக்கவைப்பார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களின் புதல்வர் சாலிமும் அவ்வாறே செய்வார்கள்.

முஅர்ரஸ் எனுமிடம் பத்னுல்வாதியில் உள்ள பள்ளிவாசலின் கீழ்ப் புறத்தில் இருந்த சாலைக்கும் மக்கள் தங்குமிடத்திற் கும் நடுவில் உள்ளது என்று மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அத்தியாயம் : 25
1536. قَالَ أَبُو عَاصِمٍ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّ صَفْوَانَ بْنَ يَعْلَى، أَخْبَرَهُ أَنَّ يَعْلَى قَالَ لِعُمَرَ ـ رضى الله عنه ـ أَرِنِي النَّبِيَّ صلى الله عليه وسلم حِينَ يُوحَى إِلَيْهِ قَالَ فَبَيْنَمَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْجِعْرَانَةِ، وَمَعَهُ نَفَرٌ مِنْ أَصْحَابِهِ، جَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَرَى فِي رَجُلٍ أَحْرَمَ بِعُمْرَةٍ، وَهْوَ مُتَضَمِّخٌ بِطِيبٍ فَسَكَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَاعَةً فَجَاءَهُ الْوَحْىُ، فَأَشَارَ عُمَرُ ـ رضى الله عنه ـ إِلَى يَعْلَى، فَجَاءَ يَعْلَى، وَعَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثَوْبٌ قَدْ أُظِلَّ بِهِ فَأَدْخَلَ رَأْسَهُ، فَإِذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُحْمَرُّ الْوَجْهِ، وَهُوَ يَغِطُّ ثُمَّ سُرِّيَ عَنْهُ فَقَالَ "" أَيْنَ الَّذِي سَأَلَ عَنِ الْعُمْرَةِ "" فَأُتِيَ بِرَجُلٍ فَقَالَ "" اغْسِلِ الطِّيبَ الَّذِي بِكَ ثَلاَثَ مَرَّاتٍ، وَانْزِعْ عَنْكَ الْجُبَّةَ، وَاصْنَعْ فِي عُمْرَتِكَ كَمَا تَصْنَعُ فِي حَجَّتِكَ "". قُلْتُ لِعَطَاءٍ أَرَادَ الإِنْقَاءَ حِينَ أَمَرَهُ أَنْ يَغْسِلَ ثَلاَثَ مَرَّاتٍ قَالَ نَعَمْ.
பாடம் : 17 (இஹ்ராம் கட்டும்) ஆடையில் (முன்னர் பூசப்பட்ட) குங்குமம் கலந்த நறுமணப் பொருள் இருந்தால் மூன்று முறை கழுவுதல்
1536. யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உமர் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களுக்கு இறை அறிவிப்பு (வஹீ) வரும்போது அவர்களை எனக்குக் காட்டுங்கள்” என்று சொல்லியிருந்தேன். நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களில் சிலரும் ‘ஜிஇர்ரானா’ எனுமிடத்தில் இருந்தபோது ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நறுமணம் பூசிய நிலையில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர் பற்றி என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு இறை அறிவிப்பு (வஹீ) வந்தது. உமர் (ரலி) அவர்கள் என்னை சைகை செய்து அழைத்ததும் நான் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நிழல் தருவதற்காக ஒரு துணி கட்டப்பட்டிருந்தது. அத்துணிக்குள் நான் தலையை நுழைத்தேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் குறட்டை விட்டுக்கொண்டிருந்தார்கள். பிறகு (சிறிது சிறிதாக) அந்த நிலை மாறியது.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்றார்கள். கேட்ட மனிதர் அழைத்து வரப்பட் டார். அவரிடம் “உம் மீதுள்ள நறு மணத்தை மூன்று முறை கழுவுவீராக! (தைக்கப்பட்ட) உமது நீளங்கியைக் களைவீராக! உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்வீராக!” என்று கூறினார்கள்.

“மும்முறை கழுவச் சொன்னது நன்கு தூய்மைப்படுத்தவா?” என்று (அறிவிப்பாள ரான) அதாஉ (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அவர் ‘ஆம்’ என்றார்.

அத்தியாயம் : 25
1537. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَدَّهِنُ بِالزَّيْتِ. فَذَكَرْتُهُ لإِبْرَاهِيمَ قَالَ مَا تَصْنَعُ بِقَوْلِهِ حَدَّثَنِي الأَسْوَدُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ الطِّيبِ فِي مَفَارِقِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ مُحْرِمٌ.
பாடம் : 18 இஹ்ராம் கட்டும்போது (உடலில்) நறுமணம் பூசுவதும், இஹ்ராம் கட்ட நாடும்போது அணிய வேண்டிய ஆடையும், தலைக்கு எண்ணெய் தடவு வதும் தலை வாருவதும் இஹ்ராம் கட்டியவர் நறுமணத்தை முகரலாம்; கண்ணாடி பார்க்கலாம்; உட் கொள்ளும் ஆலிவ் எண்ணெய், நெய் போன்றவற்றை மருந்தாகப் பயன்படுத்த லாம் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். மோதிரம் அணியலாம், பணப் பையுள்ள இடுப்புவாரை அணியலாம் என அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இப்னு உமர் (ரலி) அவர்கள், இஹ்ராம் கட்டிய நிலையில் தமது வயிற்றில் துணியைக் கட்டிக்கொண்டு இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், தமது ஒட்டகச் சிவிகையை இழுத்துச்செல்வோர் (இஹ்ராம் கட்டிய நிலையில்) சிறிய கால்சட்டை அணிவதைக் குற்றமாகக் கருதியதில்லை.6
1537. 1538 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்த நிலையில், நறுமண எண்ணெய் பூசாமல் நறுமணமற்ற) ஆலிவ் எண்ணெய்யைப் பூசியதாக இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் நான் கூறினேன்.

அப்போது, “இப்னு உமரின் கூற்றை வைத்து நீர் என்ன செய்யப்போகிறீர்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தபோது, தமது தலை வகிட்டில் பூசியிருந்த நறுமணத்தின் ஒளியை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்” என இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.


அத்தியாயம் : 25
1539. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ كُنْتُ أُطَيِّبُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لإِحْرَامِهِ حِينَ يُحْرِمُ، وَلِحِلِّهِ قَبْلَ أَنْ يَطُوفَ بِالْبَيْتِ.
பாடம் : 18 இஹ்ராம் கட்டும்போது (உடலில்) நறுமணம் பூசுவதும், இஹ்ராம் கட்ட நாடும்போது அணிய வேண்டிய ஆடையும், தலைக்கு எண்ணெய் தடவு வதும் தலை வாருவதும் இஹ்ராம் கட்டியவர் நறுமணத்தை முகரலாம்; கண்ணாடி பார்க்கலாம்; உட் கொள்ளும் ஆலிவ் எண்ணெய், நெய் போன்றவற்றை மருந்தாகப் பயன்படுத்த லாம் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். மோதிரம் அணியலாம், பணப் பையுள்ள இடுப்புவாரை அணியலாம் என அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இப்னு உமர் (ரலி) அவர்கள், இஹ்ராம் கட்டிய நிலையில் தமது வயிற்றில் துணியைக் கட்டிக்கொண்டு இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், தமது ஒட்டகச் சிவிகையை இழுத்துச்செல்வோர் (இஹ்ராம் கட்டிய நிலையில்) சிறிய கால்சட்டை அணிவதைக் குற்றமாகக் கருதியதில்லை.6
1539. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இஹ்ராம் கட்டும் நேரத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்காக நான் நறுமணம் பூசினேன். அவ்வாறே, இஹ்ராமிலிருந்து விடுபடும் போதும் கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் இஃபாளா) வருவதற்கு முன்னாலும் நறுமணம் பூசுவேன்.

அத்தியாயம் : 25
1540. حَدَّثَنَا أَصْبَغُ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُهِلُّ مُلَبِّدًا.
பாடம் : 19 (தலைமுடியில்) களிம்பு தடவிக் கொண்டு இஹ்ராம் கட்டி ‘தல்பியா’ சொல்வது7
1540. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலைமுடியில் களிம்பு தடவி படிய வைத்திருந்த நிலையில் ‘தல்பியா’ கூறியதைச் செவியுற்றேன்.

அத்தியாயம் : 25