1481. حَدَّثَنَا سَهْلُ بْنُ بَكَّارٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ عَبَّاسٍ السَّاعِدِيِّ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ، قَالَ غَزَوْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم غَزْوَةَ تَبُوكَ فَلَمَّا جَاءَ وَادِيَ الْقُرَى إِذَا امْرَأَةٌ فِي حَدِيقَةٍ لَهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَصْحَابِهِ " اخْرُصُوا ". وَخَرَصَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَشَرَةَ أَوْسُقٍ فَقَالَ لَهَا " أَحْصِي مَا يَخْرُجُ مِنْهَا ". فَلَمَّا أَتَيْنَا تَبُوكَ قَالَ " أَمَا إِنَّهَا سَتَهُبُّ اللَّيْلَةَ رِيحٌ شَدِيدَةٌ فَلاَ يَقُومَنَّ أَحَدٌ، وَمَنْ كَانَ مَعَهُ بَعِيرٌ فَلْيَعْقِلْهُ ". فَعَقَلْنَاهَا وَهَبَّتْ رِيحٌ شَدِيدَةٌ فَقَامَ رَجُلٌ فَأَلْقَتْهُ بِجَبَلِ طَيِّئٍ ـ وَأَهْدَى مَلِكُ أَيْلَةَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم بَغْلَةً بَيْضَاءَ، وَكَسَاهُ بُرْدًا وَكَتَبَ لَهُ بِبَحْرِهِمْ ـ فَلَمَّا أَتَى وَادِيَ الْقُرَى قَالَ لِلْمَرْأَةِ " كَمْ جَاءَ حَدِيقَتُكِ ". قَالَتْ عَشَرَةَ أَوْسُقٍ خَرْصَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنِّي مُتَعَجِّلٌ إِلَى الْمَدِينَةِ، فَمَنْ أَرَادَ مِنْكُمْ أَنْ يَتَعَجَّلَ مَعِي فَلْيَتَعَجَّلْ ". فَلَمَّا ـ قَالَ ابْنُ بَكَّارٍ كَلِمَةً مَعْنَاهَا ـ أَشْرَفَ عَلَى الْمَدِينَةِ قَالَ " هَذِهِ طَابَةُ ". فَلَمَّا رَأَى أُحُدًا قَالَ " هَذَا جُبَيْلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ، أَلاَ أُخْبِرُكُمْ بِخَيْرِ دُورِ الأَنْصَارِ ". قَالُوا بَلَى. قَالَ " دُورُ بَنِي النَّجَّارِ، ثُمَّ دُورُ بَنِي عَبْدِ الأَشْهَلِ، ثُمَّ دُورُ بَنِي سَاعِدَةَ، أَوْ دُورُ بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ، وَفِي كُلِّ دُورِ الأَنْصَارِ ـ يَعْنِي ـ خَيْرًا ". وَقَالَ سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ حَدَّثَنِي عَمْرٌو، " ثُمَّ دَارُ بَنِي الْحَارِثِ، ثُمَّ بَنِي سَاعِدَةَ ". وَقَالَ سُلَيْمَانُ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ عَبَّاسٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أُحُدٌ جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ ". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ كُلُّ بُسْتَانٍ عَلَيْهِ حَائِطٌ فَهْوَ حَدِيقَةٌ، وَمَا لَمْ يَكُنْ عَلَيْهِ حَائِطٌ لَمْ يَقُلْ حَدِيقَةٌ.
பாடம் : 54
(மரத்திலிருக்கும்) பேரீச்சம் பழத்தை மதிப்பிடுவது
1481. 1482 அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தபூக் போருக்குச் சென்றோம். அப்பயணத் தில் நபியவர்கள் ‘வாதில் குரா’ எனும் இடத்தை அடைந்தபோது, ஒரு பெண் தன் தோட்டத்தில் இருந்தாள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “(இத்தோட்டத்தில்) எவ்வளவு பழங்கள் தேறும், கணித்துக் கூறுங்கள்” என்றார்கள். (தோழர்கள் மதிப்பிட்டார்கள்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பத்து ‘வஸ்க்’ அளவு (தேறும்) எனக் கணித்தார்கள். பின்பு அப்பெண்ணிடம் “இதில் கிடைப்பதைக் கணக்கிட்டுவை” எனக் கூறினார்கள்.
நாங்கள் தபூக்கை அடைந்தபோது “இன்றிரவு கடும் காற்று வீசும்; எனவே, யாரும் எழுந்திருக்க வேண்டாம். ஒட்டகம் வைத்திருப்பவர் அதை நன்கு கட்டிவைக்கட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கட்டளை யிட்டார்கள். நாங்களும் ஒட்டகங்களைக் கட்டிப்போட்டோம். கடும் காற்று வீசத் தொடங்கிற்று. (நபி (ஸல்) அவர்களின் கட்டளையை மீறியவராக) ஒரு மனிதர் எழுந்து வந்தார். உடனே காற்று அவரை ‘தய்யி’ என்ற மலையில் கொண்டுபோய் போட்டது.
(வழியில்,) ‘அய்லா’ என்ற ஊரின் மன்னர் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை அன்பளிப்பாகக் கொடுத்த(னுப்பின)ôர். நபியவர்கள் அவருக்கு சால்வையொன் றைக் கொடுத்த(னுப்பின)ôர்கள். மேலும், (காப்புவரி கட்டுவதாக அரசர் எழுதி யிருந்த கடிதத்திற்கு) அக்கடற்கரைவாசி களைக் கொண்டே (பதில்) எழுதினார்கள்.
(போரிலிருந்து) திரும்பி, ‘வாதில் குராவை’ அடைந்தபோது நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணிடம், “உனது தோட்டத்தில் எவ்வளவு தேறியது?” எனக் கேட்டார்கள். அதற்கு அப்பெண், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கணித்த பத்து ‘வஸ்க்’தான் எனக் கூறினார். பின்பு நபி (ஸல்) அவர்கள், “நான் விரைவாக மதீனா செல்ல வேண்டும். எனவே, உங்களில் யாரேனும் என்னோடு விரைவாக மதீனா வர நாடினால் உடனே புறப்படுங்கள்” என்றார்கள்.
மதீனா நெருங்கியபோது, “இது ‘தாபா’ (தூய நகரம்)” என்றார்கள். பின்பு உஹுத் மலையைப் பார்த்தபோது, “இது (அழகிய) குட்டி மலை; இது நம்மை நேசிக்கிறது; நாம் அதை நேசிக்கிறோம்” என்று கூறிவிட்டு, “அன்சாரிகளின் சிறந்த கிளைக் குடும்பங்களை நான் அறிவிக்கட்டுமா?” எனக் கேட்க, தோழர்களும் ‘ஆம்’ என்றனர். நபி (ஸல்) அவர்கள், “பனுந் நஜ்ஜார் குடும்பம்; பின்பு பனூ அப்தில் அஷ்ஹல், பிறகு பனூ சாஇதா அல்லது பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குடும்பம்; இன்னும் அன்சாரிகளின் ஒவ்வொரு கிளைக் குடும்பங்களிலும் நன்மை உண்டு” என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், பனுல் ஹாரிஸ் குடும்பத்தார், அடுத்து பனு சாஇதா குடும்பத்தார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் காணப்படுகிறது.
இதே ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கப்பட்டுள் ளது. அதில், “உஹுத் மலை நம்மை நேசிக்கிறது; அதை நாம் நேசிக்கிறோம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (இங்கு மூலத்தில் ‘தோட்டம்’ என்பதைக் குறிக்க ‘ஹதீகா’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.) சுற்றுச் சுவர் உள்ள தோட்டத்திற்கே ‘ஹதீகா’ என்பர். சுற்றுச் சுவர் இல்லாத தோட்டத் திற்கு ‘ஹதீகா’ எனப்படுவதில்லை.
அத்தியாயம் : 24

1483. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" فِيمَا سَقَتِ السَّمَاءُ وَالْعُيُونُ أَوْ كَانَ عَثَرِيًّا الْعُشْرُ، وَمَا سُقِيَ بِالنَّضْحِ نِصْفُ الْعُشْرِ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ هَذَا تَفْسِيرُ الأَوَّلِ لأَنَّهُ لَمْ يُوَقِّتْ فِي الأَوَّلِ ـ يَعْنِي حَدِيثَ ابْنِ عُمَرَ ـ وَفِيمَا سَقَتِ السَّمَاءُ الْعُشْرُ وَبَيَّنَ فِي هَذَا وَوَقَّتَ، وَالزِّيَادَةُ مَقْبُولَةٌ، وَالْمُفَسَّرُ يَقْضِي عَلَى الْمُبْهَمِ إِذَا رَوَاهُ أَهْلُ الثَّبَتِ، كَمَا رَوَى الْفَضْلُ بْنُ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يُصَلِّ فِي الْكَعْبَةِ. وَقَالَ بِلاَلٌ قَدْ صَلَّى. فَأُخِذَ بِقَوْلِ بِلاَلٍ وَتُرِكَ قَوْلُ الْفَضْلِ.
பாடம் : 55
மழைநீர், வாய்க்கால் நீர் பாய்ச் சப்படும் நிலங்களின் விளைச்ச லுக்கு, பத்தில் ஒரு பாகம் (10%) ஸகாத் உண்டு.
தேனுக்கு (ஸகாத்) எதுவும் கொடுக்கத் தேவையில்லை என்பது உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களின் கருத்து.
1483. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மழையாலும் ஊற்றுகளாலும் விளைந்தவை, அல்லது நிலத்தடி நீரை உறிஞ்சி முளைத்தவை ஆகியவற்றில் பத்து சதவீதம் ஸகாத் உண்டு. ஒட்டகம் (போன்ற வற்றின்) இறவை மூலம் விளைவிக்கப்பட்டவற்றில் ஐந்து சதவீதம் ஸகாத் உண்டு.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:
இந்த ஹதீஸ், விளைபொருட்களில் வழங்கப்பட வேண்டிய ஸகாத்தின் அளவை மட்டும் கூறிவிட்டு, எந்த அளவுள்ள விளைபொருட்களுக்கு ஸகாத் வழங்கப்பட வேண்டும் என்பதை விவரிக்கவில்லை. எந்த அளவுள்ள விளை பொருட்களில் ஸகாத் கடமை யாகும் என்பதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் அடுத்த ஹதீஸ் விவரிக்கின்றது.
(அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக் கும்) கூடுதல் தகவல் ஏற்கப்படும். நம்பக மானவர்கள் அறிவிக்கும் விளக்கம் பூடக மான அறிவிப்புக்கு ஒரு தீர்வாக அமையும்.
எடுத்துக்காட்டாக, “நபி (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழவில்லை” என்று ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆனால், (சம்பவ இடத்தில் இருந்த) பிலால் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழுதார்கள்” என்று அறிவிக்கிறார்கள். எனவே, பிலால் (ரலி) அவர்களின் சொல்லே எடுத்துக்கொள்ளப்படும். ஃபள்ல் (ரலி) அவர்களின் சொல் கைவிடப்படும்.

1484. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا مَالِكٌ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَيْسَ فِيمَا أَقَلُّ مِنْ خَمْسَةِ أَوْسُقٍ صَدَقَةٌ، وَلاَ فِي أَقَلَّ مِنْ خَمْسَةٍ مِنَ الإِبِلِ الذَّوْدِ صَدَقَةٌ، وَلاَ فِي أَقَلَّ مِنْ خَمْسِ أَوَاقٍ مِنَ الْوَرِقِ صَدَقَةٌ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ هَذَا تَفْسِيرُ الأَوَّلِ إِذَا قَالَ "" لَيْسَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ صَدَقَةٌ "". وَيُؤْخَذُ أَبَدًا فِي الْعِلْمِ بِمَا زَادَ أَهْلُ الثَّبَتِ أَوْ بَيَّنُوا.
பாடம் : 56
(விளைபொருட்களில்) ஐந்து ‘வஸ்க்’ அளவிற்கும் குறைவான பொருட்களில் ஸகாத் இல்லை.
1484. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(விளைபொருட்களில்) ஐந்து ‘வஸ்க்’குகளைவிடக் குறைவானதில் ஸகாத் கிடையாது. ஐந்து ஒட்டகங்களைவிடக் குறைவாக உள்ளதில் ஸகாத் கிடையாது. ஐந்து ‘ஊக்கியா’க்களைவிடக் குறைவாக உள்ள வெள்ளிக்கும் ஸகாத் கிடையாது.20
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: ஐந்து ‘வஸ்க்’குகளைவிடக் குறைந்ததற்கு ஸகாத் இல்லை எனும் இந்த ஹதீஸ், முந்தைய ஹதீஸிற்கு விளக்கமாக அமைந்துள்ளது. முந்தைய ஹதீஸில் இந்த விளக்கம் இல்லை. பொதுவாக, நம்பக மானவர்கள் கூறும் கூடுதல் தகவல், அல்லது விளக்கம் நபிமொழிக் கலையில் ஏற்கப்படும்.

1485. حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ الأَسَدِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُؤْتَى بِالتَّمْرِ عِنْدَ صِرَامِ النَّخْلِ فَيَجِيءُ هَذَا بِتَمْرِهِ وَهَذَا مِنْ تَمْرِهِ حَتَّى يَصِيرَ عِنْدَهُ كَوْمًا مِنْ تَمْرٍ، فَجَعَلَ الْحَسَنُ وَالْحُسَيْنُ ـ رضى الله عنهما ـ يَلْعَبَانِ بِذَلِكَ التَّمْرِ، فَأَخَذَ أَحَدُهُمَا تَمْرَةً، فَجَعَلَهَا فِي فِيهِ، فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْرَجَهَا مِنْ فِيهِ فَقَالَ "" أَمَا عَلِمْتَ أَنَّ آلَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم لاَ يَأْكُلُونَ الصَّدَقَةَ "".
பாடம் : 57
பேரீச்ச மரத்தில் கனிகளைப் பறிக்கும்போதே அதன் ஸகாத் தைப் பெறுவதும், ஸகாத்தின் பேரீச்சம் பழத்தைத் தொடும் சிறுவரை (தடுக்காமல்) விட்டு விடலாமா? என்பதும்
1485. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பேரீச்ச மரத்திலிருந்து கனிகளைப் பறிக்கும்போதே, அதன் (ஸகாத்) பழங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்படும். ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களைக் கொண்டுவருவார்கள். இறுதியில் அவை பேரீச்சம் பழங்களின் குவியலாக நபியவர்களிடம் மாறிவிடும். (சிறுவர்களான) ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) ஆகிய இருவரும் அக்குவியலுக்கருகே விளையாடுவார்கள்.
(ஒரு நாள்) அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தமது வாயில் போட்டார். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்துவிட்டார்கள். உடனே அதை அவரது வாயிலிருந்து வெளியே எடுத்துவிட்டு, “முஹம்மதின் குடும்பத்தார் தர்மப் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?” எனக் கேட்டார்கள்.

1486. حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا. وَكَانَ إِذَا سُئِلَ عَنْ صَلاَحِهَا قَالَ حَتَّى تَذْهَبَ عَاهَتُهُ.
பாடம் : 58
பத்து சதவீதமோ வேறு அளவோ ஸகாத் கடமையாகி யுள்ள பேரீச்சங் கனிகளையோ மரங்களையோ நிலத்தையோ பயிரையோ ஒருவர் விற்று விட்டு அவை அல்லாத வேறு பொருட்களை ஸகாத்தாக வழங்குவதும், ஸகாத் கடமை யாகாத கனிகளை விற்பதும்
“பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை கனிகளை விற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள் ளார்கள்.
எனினும், பலன் உறுதிப்படுத்தப்பட்ட பின் விற்பதை யாருக்கும் அவர்கள் தடை செய்யவில்லை. இதில் ஸகாத் கடமை யானவர், ஸகாத் கடமையாகாதவர் என்று அவர்கள் வித்தியாசப்படுத்தவில்லை.
1486. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை (மரத்திலுள்ள) பழங்களை விற்பதைத் தடுத்தார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ‘பலன் உறுதிப்படுவது’ என்றால் என்ன என்று கேட்கப்பட்டால், (அப்பழங்கள்) பாழாகும் நிலையைக் கடந்துவிடுவதாகும் என்று பதிலளிப்பார்கள்.

1487. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنِي خَالِدُ بْنُ يَزِيدَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ. نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا.
பாடம் : 58
பத்து சதவீதமோ வேறு அளவோ ஸகாத் கடமையாகி யுள்ள பேரீச்சங் கனிகளையோ மரங்களையோ நிலத்தையோ பயிரையோ ஒருவர் விற்று விட்டு அவை அல்லாத வேறு பொருட்களை ஸகாத்தாக வழங்குவதும், ஸகாத் கடமை யாகாத கனிகளை விற்பதும்
“பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை கனிகளை விற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள் ளார்கள்.
எனினும், பலன் உறுதிப்படுத்தப்பட்ட பின் விற்பதை யாருக்கும் அவர்கள் தடை செய்யவில்லை. இதில் ஸகாத் கடமை யானவர், ஸகாத் கடமையாகாதவர் என்று அவர்கள் வித்தியாசப்படுத்தவில்லை.
1487. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பலன் உறுதிப்படுவதற்கு முன்னால் (மரத்திலுள்ள) கனிகளை விற்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

1488. حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى تُزْهِيَ، قَالَ حَتَّى تَحْمَارَّ.
பாடம் : 58
பத்து சதவீதமோ வேறு அளவோ ஸகாத் கடமையாகி யுள்ள பேரீச்சங் கனிகளையோ மரங்களையோ நிலத்தையோ பயிரையோ ஒருவர் விற்று விட்டு அவை அல்லாத வேறு பொருட்களை ஸகாத்தாக வழங்குவதும், ஸகாத் கடமை யாகாத கனிகளை விற்பதும்
“பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை கனிகளை விற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள் ளார்கள்.
எனினும், பலன் உறுதிப்படுத்தப்பட்ட பின் விற்பதை யாருக்கும் அவர்கள் தடை செய்யவில்லை. இதில் ஸகாத் கடமை யானவர், ஸகாத் கடமையாகாதவர் என்று அவர்கள் வித்தியாசப்படுத்தவில்லை.
1488. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மரத்திலுள்ள) பழங்கள் பக்குவம் அடையாத வரை -அதாவது சிவக்காத வரை- அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

1489. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ يُحَدِّثُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ تَصَدَّقَ بِفَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ فَوَجَدَهُ يُبَاعُ، فَأَرَادَ أَنْ يَشْتَرِيَهُ، ثُمَّ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَاسْتَأْمَرَهُ فَقَالَ "" لاَ تَعُدْ فِي صَدَقَتِكَ "" فَبِذَلِكَ كَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ لاَ يَتْرُكُ أَنْ يَبْتَاعَ شَيْئًا تَصَدَّقَ بِهِ إِلاَّ جَعَلَهُ صَدَقَةً.
பாடம் : 59
தாம் தர்மம் செய்த பொருளைத் தாமே விலைக்கு வாங்கலாமா?
ஒருவருக்குப் பிறர் கொடுத்த தர்மப் பொருளை மற்றவர் விலைக்கு வாங்குவது தவறாகாது. ஏனெனில், தர்மம் கொடுத்த வரே அப்பொருளை விலைக்கு வாங்கு வதைத்தான் நபி (ஸல்) அவர்கள் தடுத் தார்கள்; மற்றவர்களைத் தடுக்கவில்லை.
1489. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஒரு குதிரை யைத் தர்மம் செய்தார்கள். பின்பு அது விற்கப்படுவதைக் கண்டு, அதைத் தாமே விலைக்கு வாங்கிட நினைத்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் வந்து அனுமதி கேட்டார்கள். அப்போது “நீர் தர்மம் செய்ததைத் திரும்பப் பெற வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதனால்தான், இப்னு உமர் (ரலி) அவர்கள் தாம் தர்மம் செய்த பொருளை விலைக்கு வாங்கிவிட்டிருந்தால் அதை மீண்டும் தர்மம் செய்யாமல் இருக்க மாட்டார்கள் என்று சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

1490. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ عُمَرَ ـ رضى الله عنه ـ يَقُولُ حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ، فَأَضَاعَهُ الَّذِي كَانَ عِنْدَهُ، فَأَرَدْتُ أَنْ أَشْتَرِيَهُ، وَظَنَنْتُ أَنَّهُ يَبِيعُهُ بِرُخْصٍ، فَسَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" لاَ تَشْتَرِ وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ، وَإِنْ أَعْطَاكَهُ بِدِرْهَمٍ، فَإِنَّ الْعَائِدَ فِي صَدَقَتِهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ "".
பாடம் : 59
தாம் தர்மம் செய்த பொருளைத் தாமே விலைக்கு வாங்கலாமா?
ஒருவருக்குப் பிறர் கொடுத்த தர்மப் பொருளை மற்றவர் விலைக்கு வாங்குவது தவறாகாது. ஏனெனில், தர்மம் கொடுத்த வரே அப்பொருளை விலைக்கு வாங்கு வதைத்தான் நபி (ஸல்) அவர்கள் தடுத் தார்கள்; மற்றவர்களைத் தடுக்கவில்லை.
1490. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் பாதையில் பயணம் செய்வதற்காக நான் ஒருவருக்குக் குதிரை யொன்றை (தர்மமாக)க் கொடுத்தேன். ஆனால், அவர் அதை (சரியாகப் பராமரிக் காமல்) வீணாக்கிவிட்டார். எனவே, நான் அதை விலைக்கு வாங்க நாடினேன். அதை அவர் மலிவான விலைக்கே விற்று விடுவார் என்றும் நான் எண்ணினேன். எனவே, (இதைப் பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன்.
அதற்கு அவர்கள், “அதை விலைக்கு வாங்காதீர்! உமது தர்மத்தை நீர் திரும்பப் பெற்றுக்கொள்ளாதீர்! அதை அவர் உமக்கு ஒரு வெள்ளிக் காசுக்குக் கொடுத்தாலும் சரியே. ஏனெனில், தர்மத்தைத் திரும்பப் பெறுபவன், தான் எடுத்த வாந்தியைத் தானே உண்பவனைப் போன்றவன் ஆவான்” என்றார்கள்.

1491. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أَخَذَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ ـ رضى الله عنهما ـ تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ، فَجَعَلَهَا فِي فِيهِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" كِخٍ كِخٍ ـ لِيَطْرَحَهَا ثُمَّ قَالَ ـ أَمَا شَعَرْتَ أَنَّا لاَ نَأْكُلُ الصَّدَقَةَ "".
பாடம் : 60
நபி (ஸல்) அவர்கள் தர்மம் பெறுவது தொடர்பாகக் கூறப் பட்டுள்ளவை
1491. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் (சிறுவராக இருந்தபோது), தர்மமாக வந்த பேரீச்சம் பழங்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டார்கள். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “சீ; சீ” எனக் கூறித் துப்பச் செய்துவிட்டு, “நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா?” என்றார்கள்.

1492. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبِّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ وَجَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم شَاةً مَيِّتَةً أُعْطِيَتْهَا مَوْلاَةٌ لِمَيْمُونَةَ مِنَ الصَّدَقَةِ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" هَلاَّ انْتَفَعْتُمْ بِجِلْدِهَا "". قَالُوا إِنَّهَا مَيْتَةٌ. قَالَ "" إِنَّمَا حَرُمَ أَكْلُهَا "".
பாடம் : 61
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் அடிமைகளுக் குத் தர்மம் செய்தல்
1492. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) மைமூனா (ரலி) அவர்களுடைய ஓர் அடிமைப் பெண்ணுக்குத் தர்மமாக வழங் கப்பட்ட ஓர் ஆடு செத்துக் கிடந்ததை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது “இதன் தோலை நீங்கள் பயன்படுத்தியிருக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள். “இது செத்ததாயிற்றே!” எனத் தோழர்கள் கூறியதும், “இதை உண்பது தான் தடுக்கப்பட்டுள்ளது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

1493. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الْحَكَمُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ بَرِيرَةَ لِلْعِتْقِ، وَأَرَادَ مَوَالِيهَا أَنْ يَشْتَرِطُوا وَلاَءَهَا، فَذَكَرَتْ عَائِشَةُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم "" اشْتَرِيهَا، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "". قَالَتْ وَأُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِلَحْمٍ فَقُلْتُ هَذَا مَا تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ فَقَالَ "" هُوَ لَهَا صَدَقَةٌ، وَلَنَا هَدِيَّةٌ "".
பாடம் : 61
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் அடிமைகளுக் குத் தர்மம் செய்தல்
1493. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பரீரா எனும் (அடிமைப்) பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினேன். ஆனால், அப்பெண்ணின் உரிமையாளர்கள், (பரீராவை நாங்கள் உங்களுக்கு விற்றுவிட்டாலும்) அவரின் ‘வாரிசுரிமை’ எங்களுக்கு வேண்டும் என்று நிபந்தனையிட விரும்பினார்கள்.
நான் இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “நீ பரீராவை விலைக்கு வாங்கி (விடுதலை செய்து)விடு; வாரிசுரிமை விடுதலை செய்பவருக்குத்தான்” என்றார்கள்.21
பிறகு நபி (ஸல்) அவர்களுக்கு இறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது நான், “இது பரீராவுக்குத் தர்மமாக வழங்கப் பட்ட பொருள்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இது பரீராவுக்குத் தர்ம மாகும்; நமக்கு அன்பளிப்பாகும்” என் றார்கள்.

1494. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ الأَنْصَارِيَّةِ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ فَقَالَ "" هَلْ عِنْدَكُمْ شَىْءٌ "". فَقَالَتْ لاَ. إِلاَّ شَىْءٌ بَعَثَتْ بِهِ إِلَيْنَا نُسَيْبَةُ مِنَ الشَّاةِ الَّتِي بَعَثْتَ بِهَا مِنَ الصَّدَقَةِ. فَقَالَ "" إِنَّهَا قَدْ بَلَغَتْ مَحِلَّهَا "".
பாடம் : 62
தர்மம் (அன்பளிப்பாக) மாறி னால்..?
1494. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று “(உண்பதற்கு) ஏதேனும் உள்ளதா?” எனக் கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நீங்கள் நுசைபாவுக்கு (உம்மு அத்தியாவுக்கு) தர்மமாக அனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் நமக்கு அனுப்பி வைத் துள்ளார். அதைத் தவிர வேறொன்றும் நம்மிடம் இல்லை” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், “அப்படியெனில், அது தனது இடத்தை (அன்பளிப்பின் தகுதியை) அடைந்துவிட்டது” என்றார்கள்.

1495. حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِلَحْمٍ تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ فَقَالَ "" هُوَ عَلَيْهَا صَدَقَةٌ، وَهُوَ لَنَا هَدِيَّةٌ "". وَقَالَ أَبُو دَاوُدَ أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعَ أَنَسًا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 62
தர்மம் (அன்பளிப்பாக) மாறி னால்..?
1495. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஆயிஷா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட) பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டது. அப்போது அவர்கள், “இது பரீராவுக்குத் தர்மமாகும்; ஆனால், நமக்கு அன்பளிப்பாகும்“ என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1496. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ، عَنْ أَبِي مَعْبَدٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِمُعَاذِ بْنِ جَبَلٍ حِينَ بَعَثَهُ إِلَى الْيَمَنِ "" إِنَّكَ سَتَأْتِي قَوْمًا أَهْلَ كِتَابٍ، فَإِذَا جِئْتَهُمْ فَادْعُهُمْ إِلَى أَنْ يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ، فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ، فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَإِيَّاكَ وَكَرَائِمَ أَمْوَالِهِمْ، وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ، فَإِنَّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ اللَّهِ حِجَابٌ "".
பாடம் : 63
செல்வர்களிடமிருந்து ஸகாத் வசூலிக்கப்பட்டு ஏழைகளுக்கு -அவர்கள் எங்கிருந்தாலும்- விநியோகிக்கப்படும்.
1496. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது, அவரிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:
நீர் வேதக்கார மக்களிடம் செல்கிறீர். அவர்களிடம் நீர் போய்ச்சேர்ந்ததும், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்றும், “முஹம்மத் அல்லாஹ் வின் தூதர் ஆவார்கள்” என்றும் உறுதி மொழியும்படி அவர்களை அழைப்பீராக!
இதற்கு அவர்கள் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டுவிட்டால், ‘அல்லாஹ் தினமும் ஐவேளை தொழுகைகளை அவர்கள்மீது கடமையாக்கியுள்ளான்’ என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற் கும் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டு விட்டால் ‘நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மீது ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளான்; அது அவர்களில் செல்வர்களிடமிருந்து பெறப்பட்டு, அவர்களிலுள்ள ஏழை களுக்கு விநியோகிக்கப்படவேண்டும். என அவர்களுக்கு அறிவிப்பீராக!
அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால், அவர்களின் செல்வங்களில் உயர்தரமானவற்றை வசூலிப்பது குறித்து உம்மை எச்சரிக்கிறேன். அநீதி இழைக்கப்பட்டவரின் பிரார்த்த னைக்குப் பயந்துகொள்ளும்! ஏனெனில், அவருக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை.

1497. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَتَاهُ قَوْمٌ بِصَدَقَتِهِمْ قَالَ "" اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ فُلاَنٍ "". فَأَتَاهُ أَبِي بِصَدَقَتِهِ، فَقَالَ "" اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى "".
பாடம் : 64
ஸகாத் கொடுப்பவர்களுக்காகத் தலைவர் பிரார்த்திப்பது
அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே!) அவர்களின் செல்வங்களி லிருந்து தர்மத்தைப் பெற்று அவர்களைத் தூய்மைப்படுத்துவீராக; அதன் மூலம் அவர்களை மேம்படுத்துவீராக; அவர் களுக்காகப் பிரார்த்தனை புரிவீராக. நிச்சயமாக உமது பிரார்த்தனை அவர்களுக்கு நிம்மதி அளிக்கும். அல்லாஹ் நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான். (9:103)
1497. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் யாரேனும் ஒரு கூட்டத்தார் தமது ஸகாத் பொருட் களைக் கொண்டுவந்தால், “இறைவா! இன்னாரின் குடும்பத்தாருக்கு நீ அருள் புரிவாயாக!” என்று பிரார்த்திப்பவராக நபியவர்கள் இருந்தார்கள். என் தந்தை (அபூஅவ்ஃபா) தமது ஸகாத்தைக் கொண்டுவந்தார். அப்போது “இறைவா! அபூஅவ்ஃபாவின் குடும்பத்தார்க்கு அருள் புரிவாயாக” என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

1498. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" أَنَّ رَجُلاً مِنْ بَنِي إِسْرَائِيلَ سَأَلَ بَعْضَ بَنِي إِسْرَائِيلَ بِأَنْ يُسْلِفَهُ أَلْفَ دِينَارٍ، فَدَفَعَهَا إِلَيْهِ، فَخَرَجَ فِي الْبَحْرِ، فَلَمْ يَجِدْ مَرْكَبًا، فَأَخَذَ خَشَبَةً فَنَقَرَهَا فَأَدْخَلَ فِيهَا أَلْفَ دِينَارٍ، فَرَمَى بِهَا فِي الْبَحْرِ، فَخَرَجَ الرَّجُلُ الَّذِي كَانَ أَسْلَفَهُ، فَإِذَا بِالْخَشَبَةِ فَأَخَذَهَا لأَهْلِهِ حَطَبًا ـ فَذَكَرَ الْحَدِيثَ ـ فَلَمَّا نَشَرَهَا وَجَدَ الْمَالَ "".
பாடம் : 65
கடலிலிருந்து கிடைப்பவை
‘அம்பர்’ எனும் வாசனைத் திரவியம் (மீனம்பர்) புதையலில் சேராது. ஏனெனில், அது கடலலைகள் ஒதுக்கும் ஒரு பொருளாகும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.22
அம்பரிலும் முத்துகளிலும் ஐந்தில் ஒரு பகுதி ஸகாத் (குமுஸ்) உள்ளது என ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறி யுள்ளார்கள். (இது தவறாகும். ஏனெனில்,) நபி (ஸல்) அவர்கள் புதையலுக்குத்தான் ஐந்தில் ஒரு பகுதி ஸகாத் என்றார்கள்; தண்ணீரில் கிடைப்பவற்றுக்கு அல்ல.
1498. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்ரவேலர்களில் ஒருவர் தம் சமூகத் தைச் சேர்ந்த சிலரிடம் ஆயிரம் பொற் காசுகள் (தீனார்) கடன் கேட்டார். (அதற்கு ஒருவர் இசைந்து) அவருக்குப் பணத்தைக் கொடுத்தார். கடன் வாங்கியவர் (பின்னர் கடனைச் செலுத்துவதற்காக) கடல் வழியாகச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், கடலில் செல்ல எந்த வாகனமும் அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே, ஒரு மரக்கட்டையை எடுத்து அதில் துளையிட்டு ஆயிரம் பொற்காசுகளையும் அதில் வைத்து அடைத்து கடலில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றுவிட்டார்.
ஒரு நாள் அவருக்குக் கடன் கொடுத்த மனிதர் புறப்பட்டு (அவ்வழியே) வந்த போது மரக்கட்டை ஒன்று கிடப்பதைக் கண்டு, அதைத் தம் வீட்டாருக்கு விறகுக்காக எடுத்துச்சென்றார். அதை(க் கோடரியால்) பிளந்தபோது தமது பொருளைப் பெற்றுக்கொண்டார்.23
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1499. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَعَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الْعَجْمَاءُ جُبَارٌ، وَالْبِئْرُ جُبَارٌ، وَالْمَعْدِنُ جُبَارٌ، وَفِي الرِّكَازِ الْخُمُسُ "".
பாடம் : 66
புதையல்களில் ஐந்தில் ஒரு பாகம் (ஸகாத்) உண்டு.
இமாம் மாலிக் (ரஹ்), இப்னு இத்ரீஸ் (ரஹ்) ஆகியோர் கூறினார்கள்:
புதையல் என்பது அறியாமைக் காலத் தில் புதைத்து வைக்கப்பட்ட பொருளாகும். அது குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் ஐந்தில் ஒரு பாகம் (ஸகாத்) கொடுக்க வேண்டும்.
கனிமச் சுரங்கம் புதையலில் சேராது. ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் “சுரங்கத் தில் ஏற்படும் இழப்புகளுக்கு நஷ்ட ஈடு தரத் தேவையில்லை. புதையலில் ஐந்தில் ஒரு பாகம் உள்ளது” எனக் கூறினார்கள்.
ஆனால், சுரங்கத்திலிருந்து வரும் ஒவ்வோர் இருநூறு (திர்ஹங்)களில் ஐந்து (திரஹங்)களை (இரண்டரை சதவீதம்) ஸகாத்தாக உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் வசூலித்தார்கள்.
ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
அந்நியர் ஆட்சிக்கு உட்பட்ட பூமியில் கிடைக்கும் புதையலுக்கு ஐந்தில் ஒரு பாகம் (தீர்வை) உண்டு. சமாதான (ஒப்பந்தம் செய்துகொண்ட) பூமியில் கிடைக்கும் புதையலில் (இரண்டரை சதவீதம்) ஸகாத் உண்டு. எதிரிகளின் பூமியில் பிறர் தவறவிட்ட பொருளை எடுத்தால், அதைப் பிறருக்கு அறிவித்துவிடுங்கள். அது எதிரிகளின் பூமியிலிருந்து எடுக்கப்பட்டால் அதில் ஐந்தில் ஒரு பாகம் (தீர்வை) உண்டு.
அறிஞர்களில் சிலர், சுரங்கம், அறியாமைக் காலத்தில் புதைக்கப்பட்ட புதையலைப் போன்றதுதான். (அதிலும் ஐந்தில் ஒரு பாகம் உண்டு.) ஏனெனில், சுரங்கத்திலிருந்து ஏதேனும் கிடைத்தாலும், (புதையலைக் குறிக்கும் ‘ரிகாஸ்’ எனும் சொல்லில் இருந்து பிறந்த) ‘அர்கஸ’ எனும் சொல்லே பயன்படுத்தப்படுகிறது என்று சொல்கின் றனர்.
ஆனால், ஒருவருக்கு அன்பளிப்பாக ஏதேனும் கிடைத்தாலோ, ஒருவர் அதிக மான இலாபம் ஈட்டினாலோ, ஒருவரின் விளைச்சல் அதிகமானாலோகூட அப்போ தும் ‘அர்கஸ்(த்)த’ எனும் இச்சொல்லே ஆளப்படுகிறது. (ஆனால், இவற்றி லெல்லாம் ஐந்தில் ஒரு பங்கு கிடையாதே!)
இவ்வாறு (சுரங்கமும் புதையல்தான் என்று) செல்பவர்கள், கனிமப் பொருளை மறைப்பது குற்றமாகாது என்றும், (அவ்வாறு மறைக்கும்போது) ஐந்தில் ஒரு பாகம் செலுத்த வேண்டியதில்லை என்றும் கூறி முரண்படுகின்றனர்.24
1499. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வாயில்லாப் பிராணி(களால் ஏற்படும் இழப்பு)களுக்கு இழப்பீடு கிடையாது. கிணற்று (விபத்து)க்கும் இழப்பீடு கிடையாது. சுரங்க (விப)த்துக்கும் இழப்பீடு கிடையாது. புதையலில் ஐந்தில் ஒரு பாகம் (ஸகாத்) உண்டு.25
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1499. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வாயில்லாப் பிராணி(களால் ஏற்படும் இழப்பு)களுக்கு இழப்பீடு கிடையாது. கிணற்று (விபத்து)க்கும் இழப்பீடு கிடையாது. சுரங்க (விப)த்துக்கும் இழப்பீடு கிடையாது. புதையலில் ஐந்தில் ஒரு பாகம் (ஸகாத்) உண்டு.25
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1500. حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ ـ رضى الله عنه ـ قَالَ اسْتَعْمَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلاً مِنَ الأَسْدِ عَلَى صَدَقَاتِ بَنِي سُلَيْمٍ يُدْعَى ابْنَ اللُّتْبِيَّةِ، فَلَمَّا جَاءَ حَاسَبَهُ.
பாடம் : 67
“ஸகாத்தின் பணியாளர்களுக் கும் (ஸகாத் நிதி வழங்கலாம்)” (9:60) எனும் இறைவசனமும், ஸகாத் வசூலகர்களிடம் தலைவர் கணக்குக் கேட்பதும்
1500. அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இப்னு லுத்பிய்யா என்றழைக்கப்படும் ‘அஸ்த்’ கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை, பனூ சுலைம் எனும் கோத்திரத்தாரிடம் ஸகாத் வசூலிப்பதற்காக நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்து) வந்ததும் அவரிடத்தில் கணக்குக் கேட்டார்கள்.