1366. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنِي اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنهم ـ أَنَّهُ قَالَ لَمَّا مَاتَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ ابْنُ سَلُولَ دُعِيَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِيُصَلِّيَ عَلَيْهِ، فَلَمَّا قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَثَبْتُ إِلَيْهِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَتُصَلِّي عَلَى ابْنِ أُبَىٍّ وَقَدْ قَالَ يَوْمَ كَذَا وَكَذَا كَذَا وَكَذَا ـ أُعَدِّدُ عَلَيْهِ قَوْلَهُ ـ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ "" أَخِّرْ عَنِّي يَا عُمَرُ "". فَلَمَّا أَكْثَرْتُ عَلَيْهِ قَالَ "" إِنِّي خُيِّرْتُ فَاخْتَرْتُ، لَوْ أَعْلَمُ أَنِّي إِنْ زِدْتُ عَلَى السَّبْعِينَ فَغُفِرَ لَهُ لَزِدْتُ عَلَيْهَا "". قَالَ فَصَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ انْصَرَفَ، فَلَمْ يَمْكُثْ إِلاَّ يَسِيرًا حَتَّى نَزَلَتِ الآيَتَانِ مِنْ {بَرَاءَةٌ} {وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا} إِلَى {وَهُمْ فَاسِقُونَ} قَالَ فَعَجِبْتُ بَعْدُ مِنْ جُرْأَتِي عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَئِذٍ، وَاللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ.
பாடம் : 84
நயவஞ்சகர்களுக்கு இறுதித் தொழுகை நடத்துவதும் இணைவைப்போருக்குப் பாவமன்னிப்புக் கோருவதும் வெறுக்கப்பட்டவையே.
இக்கருத்தை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
1366. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் மரணித்ததும் அவருக்கு (இறுதி)த் தொழுகை நடத்துவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவிக்கத் தயாரானபோது நான் குதித்தெழுந்து அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! அப்துல்லாஹ் பின் உபைக்கு (இறுதித்) தொழுகை நடத்தப்போகிறீர்களா? அவர் இன் னின்ன நாட்களில் இன்னின்னவாறெல் லாம் பேசியுள்ளார்” என, அவர் பேசிய வற்றை நபியவர்களிடம் எடுத்துக் கூறி னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள்.
பிறகு, “உமரே! என்னைவிட்டு விலகி நிற்பீராக!” எனக் கூறினார்கள். நான் மேலும் அதிகமாக வலியுறுத்திய தும் அவர்கள், “(பாவமன்னிப்புக் கோரல், கோராமல் இருத்தல் ஆகிய இரண்டில் ஒன்றைச் செய்ய) எனக்கு விருப்ப உரிமை அளிக்கப்பட்டுள்ளது. எழுபது தடவை களுக்கும் அதிகமாக நான் பாவமன்னிப் புக் கோரினால் அவருக்கு மன்னிப்பு கிடைக்கும் என நான் அறிந்தால், அவ்வாறே நான் அதிகமாகப் பாவ மன்னிப்புக் கோருவேன்” என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் அவருக்கு (இறுதித் தொழுகை) தொழுவித்துவிட்டுத் திரும்பிச் சென்று சற்று நேரமாவதற்குள், ‘பராஅத்’ (9ஆவது) அத்தியாத்தில், “(நபியே!) அவர்களில் இறந்துவிட்ட யாருக்காகவும் நீர் ஒருபோதும் (இறுதித்) தொழுகை நடத்த வேண்டாம்” (9:84) என்று தொடங்கி இறுதிவரையிலான வசனம், அதற்கு முன்னுள்ள (9:80ஆவது) வசனம் ஆகிய இரு வசனங்கள் அருளப்பெற்றன.
பிறகுதான் அன்றைய தினம் நபி (ஸல்) அவர்களிடம் நான் காட்டிய துணிச்சலை எண்ணி வியந்துபோனேன். அல்லாஹ்வும் அவன் தூதரும் நன்கு அறிந்தவர்கள்.
அத்தியாயம் : 23

1368. حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الْفُرَاتِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِي الأَسْوَدِ، قَالَ قَدِمْتُ الْمَدِينَةَ وَقَدْ وَقَعَ بِهَا مَرَضٌ، فَجَلَسْتُ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ فَمَرَّتْ بِهِمْ جَنَازَةٌ فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا خَيْرًا فَقَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ وَجَبَتْ. ثُمَّ مُرَّ بِأُخْرَى فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا خَيْرًا، فَقَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ وَجَبَتْ. ثُمَّ مُرَّ بِالثَّالِثَةِ، فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا شَرًّا فَقَالَ وَجَبَتْ. فَقَالَ أَبُو الأَسْوَدِ فَقُلْتُ وَمَا وَجَبَتْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ قَالَ قُلْتُ كَمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَيُّمَا مُسْلِمٍ شَهِدَ لَهُ أَرْبَعَةٌ بِخَيْرٍ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ "". فَقُلْنَا وَثَلاَثَةٌ قَالَ "" وَثَلاَثَةٌ "". فَقُلْنَا وَاثْنَانِ قَالَ "" وَاثْنَانِ "". ثُمَّ لَمْ نَسْأَلْهُ عَنِ الْوَاحِدِ.
பாடம் : 85
இறந்தவரைப் பற்றி மக்கள் புகழ்ந்துரைத்தல்
1367அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு முறை, மக்கள் ஒரு பிரேதத் தைக் கடந்து சென்றபோது, இறந்த வரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உறுதியாகிவிட்டது” என்றார் கள். மற்றொரு முறை வேறொரு பிரேதத்தைக் கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “உறுதியாகி விட்டது” எனக் கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள், “எது உறுதி யாகிவிட்டது?” எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள், “அவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே, அவருக்குச் சொர்க்கம் உறுதியாகி விட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள்; எனவே, இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக, நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர் கள்” எனக் கூறினார்கள்.
1368. அபுல்அஸ்வத் அத்துஅலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது
நான் மதீனாவில் (கொள்ளை) நோய் பரவியிருந்தபோது மதீனாவுக்கு வந்து உமர் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந் தேன். அப்போது ஒரு பிரேதம் (ஜனாஸா) மக்களைக் கடந்து சென்றது. அவருடைய நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்துரைக்கப்பட்டது. அப்போது உமர் (ரலி) அவர்கள், “உறுதியாகிவிட்டது” என்றார்கள். பிறகு இன்னொரு பிரேதம் கடந்து சென்றது. அப்போது அவருடைய நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்து பேசப்பட்டது. உடனே உமர் (ரலி) அவர்கள், “உறுதியாகிவிட்டது” என்றார்கள்.
பிறகு மூன்றாவது பிரேதம் கடந்து சென்றது. அவருடைய தீய பண்புகளைக் கூறி இகழ்ந்து பேசப்பட்டது. அப்போதும் உமர் (ரலி) அவர்கள், “உறுதியாகி விட்டது” எனக் கூறினார்கள்.
நான் “இûறைநம்பிக்கையாளர் களின் தலைவரே! எது உறுதியாகி விட்டது?” எனக் கேட்டேன்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள் கூறி னார்கள்: “எந்த முஸ்லிமுக்காவது அவர் நல்லவர் என நான்கு பேர் சாட்சியம் கூறினால், அவரை அல்லாஹ் சொர்க் கத்தில் அனுமதிப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நாங்கள், லி“மூவர் சாட்சியாயிருந் தால்...?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள் “மூன்று பேர் சாட்சியம் கூறினாலும்தான்” என்றார்கள். மீண்டும் “இருவர் சாட்சியாக இருந்தால்...?” என நாங்கள் கேட்டதற்கு, “இரண்டு பேர் சாட்சியம் கூறினாலும்தான்” என்றார்கள். பிறகு நாங்கள் ஒரு நபர் பற்றிக் கேட்கவில்லை.
எனவே, நபி (ஸல்) அவர்கள் கூறியதன் அடிப்படையிலேயே நான் இவ்வாறு கூறினேன்.

1369. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا أُقْعِدَ الْمُؤْمِنُ فِي قَبْرِهِ أُتِيَ، ثُمَّ شَهِدَ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَذَلِكَ قَوْلُهُ {يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ} "". حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ بِهَذَا وَزَادَ {يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا} نَزَلَتْ فِي عَذَابِ الْقَبْرِ.
பாடம் : 86
அடக்கத் தலத்தின் (கப்று) வேதனை தொடர்பாக வந் துள்ளவை
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
(இத்தகைய) அநீதியாளர்கள் மரண வேதனையில் இருக்கும்போது அவர்களை நோக்கி வானவர்கள் தம் கரங்களை நீட்டி, “உங்கள் உயிரை நீங்களே வெளியேற்றுங்கள்; இன்று உங்களுக்கு இழிவு தரும் வேதனையே வழங்கப்படும்...” என்று கூறுவதை (நபியே!) நீர் கண்டால் (அவர்களின் கதி என்ன என்பது தெரியும்.) (6:93)
இவ்வசனத்(தின் மூலத்)தில் ‘இழிவு என்பதைக் குறிக்க ‘அல்ஹூன்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. ‘அல்ஹவ்ன்’ என்பதற்கு ‘மென்மை’ என்பது பொருள்.
புகழோங்கிய அல்லாஹ் கூறு கின்றான்:
நாம் அவர்களை விரைவில் இரு முறை வேதனை செய்வோம். பின்னர் அவர்கள் பெரும் வேதனையின்பால் கொண்டு செல்லப்படுவர். (9:101)
உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்:
மேலும் வேதனையின் கேடு ஃபிர் அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது. காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின்முன் காட்டப் படுவார்கள்; மேலும், உலக அழிவு ஏற்படும் நாளில் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனை யில் புகுத்துங்கள் (என்று கூறப்படும்). (40:45,46)
1369. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:
அடக்கத் தலத்தில் ஓர் இறைநம்பிக்கை யாளர் (அடக்கம் செய்யப்பட்டபின்) எழுப்பி அமரவைக்கப்படுவார்; (அவரிடம் இரு வானவர்கள்) கொண்டுவரப்(படுவர். கேள்வி கேட்கப்)படும். பிறகு (அவர்களிடத்தில்) அந்த இறைநம்பிக்கையாளர், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் ஆவார்கள்” என உறுதி கூறுவார்.
இதையே அல்லாஹ், “இறைநம்பிக்கை கொண்டோரை உறுதியான சொல்மூலம் இம்மை வாழ்க்கையிலும் மறுமை (வாழ்க்கை)யிலும் அல்லாஹ் நிலை கொள்ளச்செய்வான்” (14:27) எனக் குறிப்பிடுகின்றான்.
இதை பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “இந்த வசனம் சவக்குழி (கப்று) வேதனை தொடர்பாகவே அருளப்பட்டது” என ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூடுதலாக அறிவித்துள்ளார்கள்.

1370. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحٍ، حَدَّثَنِي نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ قَالَ اطَّلَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى أَهْلِ الْقَلِيبِ فَقَالَ "" وَجَدْتُمْ مَا وَعَدَ رَبُّكُمْ حَقًّا "". فَقِيلَ لَهُ تَدْعُو أَمْوَاتًا فَقَالَ "" مَا أَنْتُمْ بِأَسْمَعَ مِنْهُمْ وَلَكِنْ لاَ يُجِيبُونَ "".
பாடம் : 86
அடக்கத் தலத்தின் (கப்று) வேதனை தொடர்பாக வந் துள்ளவை
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
(இத்தகைய) அநீதியாளர்கள் மரண வேதனையில் இருக்கும்போது அவர்களை நோக்கி வானவர்கள் தம் கரங்களை நீட்டி, “உங்கள் உயிரை நீங்களே வெளியேற்றுங்கள்; இன்று உங்களுக்கு இழிவு தரும் வேதனையே வழங்கப்படும்...” என்று கூறுவதை (நபியே!) நீர் கண்டால் (அவர்களின் கதி என்ன என்பது தெரியும்.) (6:93)
இவ்வசனத்(தின் மூலத்)தில் ‘இழிவு என்பதைக் குறிக்க ‘அல்ஹூன்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. ‘அல்ஹவ்ன்’ என்பதற்கு ‘மென்மை’ என்பது பொருள்.
புகழோங்கிய அல்லாஹ் கூறு கின்றான்:
நாம் அவர்களை விரைவில் இரு முறை வேதனை செய்வோம். பின்னர் அவர்கள் பெரும் வேதனையின்பால் கொண்டு செல்லப்படுவர். (9:101)
உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்:
மேலும் வேதனையின் கேடு ஃபிர் அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது. காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின்முன் காட்டப் படுவார்கள்; மேலும், உலக அழிவு ஏற்படும் நாளில் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனை யில் புகுத்துங்கள் (என்று கூறப்படும்). (40:45,46)
1370. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பத்ர் போரில் கொல்லப்பட்ட எதிரி களின் உடல்கள் ஒரு பாழுங்கிணற்றில் போடப்பட்டிருந்தன. அந்தக்) கிணற்றில் கிடந்தவர்களைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், “உங்கள் இறைவன் உண்மை யாகவே வாக்களித்தவற்றை நீங்கள் அடைந்துகொண்டீர்களா?” எனக் கேட்டார்கள்.
“இறந்துவிட்டவர்களை அழைக்கின் றீர்களே?” என அவர்களிடம் கேட்கப் பட்டது. அதற்கு “அவர்களைவிட நீங்கள் அதிகம் செவியுறுபவர்களல்லர்; ஆயினும், அவர்கள் பதிலளிக்கமாட் டார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

1371. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ إِنَّمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّهُمْ لَيَعْلَمُونَ الآنَ أَنَّ مَا كُنْتُ أَقُولُ حَقٌّ وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى {إِنَّكَ لاَ تُسْمِعُ الْمَوْتَى}""
பாடம் : 86
அடக்கத் தலத்தின் (கப்று) வேதனை தொடர்பாக வந் துள்ளவை
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
(இத்தகைய) அநீதியாளர்கள் மரண வேதனையில் இருக்கும்போது அவர்களை நோக்கி வானவர்கள் தம் கரங்களை நீட்டி, “உங்கள் உயிரை நீங்களே வெளியேற்றுங்கள்; இன்று உங்களுக்கு இழிவு தரும் வேதனையே வழங்கப்படும்...” என்று கூறுவதை (நபியே!) நீர் கண்டால் (அவர்களின் கதி என்ன என்பது தெரியும்.) (6:93)
இவ்வசனத்(தின் மூலத்)தில் ‘இழிவு என்பதைக் குறிக்க ‘அல்ஹூன்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. ‘அல்ஹவ்ன்’ என்பதற்கு ‘மென்மை’ என்பது பொருள்.
புகழோங்கிய அல்லாஹ் கூறு கின்றான்:
நாம் அவர்களை விரைவில் இரு முறை வேதனை செய்வோம். பின்னர் அவர்கள் பெரும் வேதனையின்பால் கொண்டு செல்லப்படுவர். (9:101)
உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்:
மேலும் வேதனையின் கேடு ஃபிர் அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது. காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின்முன் காட்டப் படுவார்கள்; மேலும், உலக அழிவு ஏற்படும் நாளில் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனை யில் புகுத்துங்கள் (என்று கூறப்படும்). (40:45,46)
1371. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (இறந்தவர் களின் விஷயத்தில்), “நான் சொல்லிக் கொண்டிருந்தது உண்மைதான் என் பதை இப்போது அவர்கள் அறிகிறார் கள்” என்றுதான் கூறினார்கள். (செவி யுறுகிறார்கள் என்று கூறவில்லை; ஏனெனில்) “நிச்சயமாக நீர் மரித் தோரைக் கேட்கச்செய்ய முடியாது” (27:80) என அல்லாஹ் கூறுகின்றான்.

1372. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، سَمِعْتُ الأَشْعَثَ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ يَهُودِيَّةً، دَخَلَتْ عَلَيْهَا، فَذَكَرَتْ عَذَابَ الْقَبْرِ، فَقَالَتْ لَهَا أَعَاذَكِ اللَّهُ مِنْ عَذَابِ الْقَبْرِ. فَسَأَلَتْ عَائِشَةُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ عَذَابِ الْقَبْرِ فَقَالَ "" نَعَمْ عَذَابُ الْقَبْرِ "". قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدُ صَلَّى صَلاَةً إِلاَّ تَعَوَّذَ مِنْ عَذَابِ الْقَبْرِ. زَادَ غُنْدَرٌ "" عَذَابُ الْقَبْرِ حَقٌّ "".
பாடம் : 86
அடக்கத் தலத்தின் (கப்று) வேதனை தொடர்பாக வந் துள்ளவை
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
(இத்தகைய) அநீதியாளர்கள் மரண வேதனையில் இருக்கும்போது அவர்களை நோக்கி வானவர்கள் தம் கரங்களை நீட்டி, “உங்கள் உயிரை நீங்களே வெளியேற்றுங்கள்; இன்று உங்களுக்கு இழிவு தரும் வேதனையே வழங்கப்படும்...” என்று கூறுவதை (நபியே!) நீர் கண்டால் (அவர்களின் கதி என்ன என்பது தெரியும்.) (6:93)
இவ்வசனத்(தின் மூலத்)தில் ‘இழிவு என்பதைக் குறிக்க ‘அல்ஹூன்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. ‘அல்ஹவ்ன்’ என்பதற்கு ‘மென்மை’ என்பது பொருள்.
புகழோங்கிய அல்லாஹ் கூறு கின்றான்:
நாம் அவர்களை விரைவில் இரு முறை வேதனை செய்வோம். பின்னர் அவர்கள் பெரும் வேதனையின்பால் கொண்டு செல்லப்படுவர். (9:101)
உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்:
மேலும் வேதனையின் கேடு ஃபிர் அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது. காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின்முன் காட்டப் படுவார்கள்; மேலும், உலக அழிவு ஏற்படும் நாளில் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனை யில் புகுத்துங்கள் (என்று கூறப்படும்). (40:45,46)
1372. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு யூதப் பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து அடக்கத் தலத்தின் (கப்று) வேதனை பற்றிக் கூறிவிட்டு, “அல்லாஹ் உங்களை மண்ணறை வேதனையை விட்டுப் பாதுகாப்பானாக” என்றும் கூறினாள். பிறகு அடக்கத் தலத்தின் (கப்று) வேதனை குறித்து ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஆம். அடக்கத் தலத்தின் (கப்று) வேதனை உண்டு” எனக் கூறினார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்: அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் தாம் தொழுகின்ற எந்தத் தொழுகையிலும் அடக்கத் தலத்தின் (கப்று) வேதனையிலிருந்து (அல்லாஹ் விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததேயில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “மண்ணறை வேதனை உண்மை தான்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

1373. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ أَسْمَاءَ بِنْتَ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ تَقُولُ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَطِيبًا فَذَكَرَ فِتْنَةَ الْقَبْرِ الَّتِي يَفْتَتِنُ فِيهَا الْمَرْءُ، فَلَمَّا ذَكَرَ ذَلِكَ ضَجَّ الْمُسْلِمُونَ ضَجَّةً.
பாடம் : 86
அடக்கத் தலத்தின் (கப்று) வேதனை தொடர்பாக வந் துள்ளவை
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
(இத்தகைய) அநீதியாளர்கள் மரண வேதனையில் இருக்கும்போது அவர்களை நோக்கி வானவர்கள் தம் கரங்களை நீட்டி, “உங்கள் உயிரை நீங்களே வெளியேற்றுங்கள்; இன்று உங்களுக்கு இழிவு தரும் வேதனையே வழங்கப்படும்...” என்று கூறுவதை (நபியே!) நீர் கண்டால் (அவர்களின் கதி என்ன என்பது தெரியும்.) (6:93)
இவ்வசனத்(தின் மூலத்)தில் ‘இழிவு என்பதைக் குறிக்க ‘அல்ஹூன்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. ‘அல்ஹவ்ன்’ என்பதற்கு ‘மென்மை’ என்பது பொருள்.
புகழோங்கிய அல்லாஹ் கூறு கின்றான்:
நாம் அவர்களை விரைவில் இரு முறை வேதனை செய்வோம். பின்னர் அவர்கள் பெரும் வேதனையின்பால் கொண்டு செல்லப்படுவர். (9:101)
உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்:
மேலும் வேதனையின் கேடு ஃபிர் அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது. காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின்முன் காட்டப் படுவார்கள்; மேலும், உலக அழிவு ஏற்படும் நாளில் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனை யில் புகுத்துங்கள் (என்று கூறப்படும்). (40:45,46)
1373. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு தடவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று உரையாற்றி னார்கள். அப்போது அடக்கத் தலத்தில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அவர்கள் அதைச் சொல்லிக்கொண்டிருந்தபோது, (அங்கிருந்த) முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறிவிட்டார்கள்.

1374. حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ حَدَّثَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ الْعَبْدَ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ، وَتَوَلَّى عَنْهُ أَصْحَابُهُ، وَإِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ، أَتَاهُ مَلَكَانِ فَيُقْعِدَانِهِ فَيَقُولاَنِ مَا كُنْتَ تَقُولُ فِي الرَّجُلِ لِمُحَمَّدٍ صلى الله عليه وسلم. فَأَمَّا الْمُؤْمِنُ فَيَقُولُ أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ. فَيُقَالُ لَهُ انْظُرْ إِلَى مَقْعَدِكَ مِنَ النَّارِ، قَدْ أَبْدَلَكَ اللَّهُ بِهِ مَقْعَدًا مِنَ الْجَنَّةِ، فَيَرَاهُمَا جَمِيعًا "". قَالَ قَتَادَةُ وَذُكِرَ لَنَا أَنَّهُ يُفْسَحُ فِي قَبْرِهِ. ثُمَّ رَجَعَ إِلَى حَدِيثِ أَنَسٍ قَالَ "" وَأَمَّا الْمُنَافِقُ وَالْكَافِرُ فَيُقَالُ لَهُ مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ فَيَقُولُ لاَ أَدْرِي، كُنْتُ أَقُولُ مَا يَقُولُ النَّاسُ. فَيُقَالُ لاَ دَرَيْتَ وَلاَ تَلَيْتَ. وَيُضْرَبُ بِمَطَارِقَ مِنْ حَدِيدٍ ضَرْبَةً، فَيَصِيحُ صَيْحَةً يَسْمَعُهَا مَنْ يَلِيهِ، غَيْرَ الثَّقَلَيْنِ "".
பாடம் : 86
அடக்கத் தலத்தின் (கப்று) வேதனை தொடர்பாக வந் துள்ளவை
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
(இத்தகைய) அநீதியாளர்கள் மரண வேதனையில் இருக்கும்போது அவர்களை நோக்கி வானவர்கள் தம் கரங்களை நீட்டி, “உங்கள் உயிரை நீங்களே வெளியேற்றுங்கள்; இன்று உங்களுக்கு இழிவு தரும் வேதனையே வழங்கப்படும்...” என்று கூறுவதை (நபியே!) நீர் கண்டால் (அவர்களின் கதி என்ன என்பது தெரியும்.) (6:93)
இவ்வசனத்(தின் மூலத்)தில் ‘இழிவு என்பதைக் குறிக்க ‘அல்ஹூன்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. ‘அல்ஹவ்ன்’ என்பதற்கு ‘மென்மை’ என்பது பொருள்.
புகழோங்கிய அல்லாஹ் கூறு கின்றான்:
நாம் அவர்களை விரைவில் இரு முறை வேதனை செய்வோம். பின்னர் அவர்கள் பெரும் வேதனையின்பால் கொண்டு செல்லப்படுவர். (9:101)
உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்:
மேலும் வேதனையின் கேடு ஃபிர் அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது. காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின்முன் காட்டப் படுவார்கள்; மேலும், உலக அழிவு ஏற்படும் நாளில் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனை யில் புகுத்துங்கள் (என்று கூறப்படும்). (40:45,46)
1374. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் மண்ணறையில் அடக் கம் செய்யப்பட்டு அவருடைய தோழர் கள் திரும்பிச் செல்லும்போது, அந்த அடியார் அவர்களின் காலணிகள் எழுப்பும் ஓசையைச் செவியுறுவார். அப்போது அவரிடம் இரு வானவர்கள் வந்து அவரை எழுப்பி உட்காரவைத்து, “இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?” என்று முஹம்மத் (ஸல்) குறித்துக் கேட்பர்.
இறைநம்பிக்கையாளர், “இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார் என நான் உறுதிகூறுகிறேன்” என்பார். அவரிடம் “(நீர் கெட்டவராய் இருந்திருந் தால் உமக்குக் கிடைக்கவிருந்த) நரகத்தில் உள்ள உமது இருப்பிடத்தைப் பார்ப்பீராக! (நீர் நல்லவராக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உமக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தி யுள்ளான்” எனக் கூறப்படும். இரண்டை யும் அவர் ஒரே நேரத்தில் பார்ப்பார்.
அவருக்கு அடக்கத் தலம் (கப்று) விசாலமாக்கப்படும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இதன் அறிவிப் பாளர்களில் ஒருவரான கத்தாதா (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தொடர்ந்து இந்த ஹதீஸின் அறிவிப் பாளரான அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:)
நயவஞ்சகர் மற்றும் இறைமறுப்பாளரி டம், “இந்த மனிதர் விஷயத்தில் நீர் என்ன கருதிக்கொண்டிருந்தீர்?” என்று கேட்கப்படும். அதற்கு “எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக்கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்” என அவர் விடையளிப்பார். உடனே “நீர் அறிந்திருக்கவு மில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை” என்று கூறப்படும்.
மேலும் இரும்பு சுத்திகளால் அவர் கடுமையாக அடிக்கப்படுவார். அப்போது அவரை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவர் அலறுவார்.

1375. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، عَنْ أَبِي أَيُّوبَ ـ رضى الله عنهم ـ قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَدْ وَجَبَتِ الشَّمْسُ، فَسَمِعَ صَوْتًا فَقَالَ "" يَهُودُ تُعَذَّبُ فِي قُبُورِهَا "". وَقَالَ النَّضْرُ أَخْبَرَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَوْنٌ، سَمِعْتُ أَبِي، سَمِعْتُ الْبَرَاءَ، عَنْ أَبِي أَيُّوبَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 87
அடக்கத் தலத்தின் (கப்று) வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோரல்
1375. அபூஅய்யூப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்துவிட்டிருந்தபோது வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு, “யூதர் கள் அவர்களின் கப்றுகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்” எனக் கூறி னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1376. حَدَّثَنَا مُعَلًّى، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، قَالَ حَدَّثَتْنِي ابْنَةُ خَالِدِ بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ يَتَعَوَّذُ مِنْ عَذَابِ الْقَبْرِ.
பாடம் : 87
அடக்கத் தலத்தின் (கப்று) வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோரல்
1376. மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அடக்கத் தலத்தின் (கப்று) வேதனையைவிட்டுப் பாதுகாப்புக் கோரியதைத் தாம் செவியுற்றதாக காலித் பின் சயீத் (ரலி) அவர்களுடைய புதல்வியார் (உம்மு காலித்) கூறுகிறார்.

1377. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْعُو "" اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ عَذَابِ النَّارِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ "".
பாடம் : 87
அடக்கத் தலத்தின் (கப்று) வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோரல்
1377. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! நான் அடக்கத் தலத்தின் வேதனை, நரக வேதனை, வாழ்வின் சோதனை, மரணத்தின் சோதனை, மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனை ஆகிய வற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” எனப் பிரார்த்திப்பவர் களாக இருந்தார்கள்.

1378. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى قَبْرَيْنِ فَقَالَ "" إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ مِنْ كَبِيرٍ ـ ثُمَّ قَالَ ـ بَلَى أَمَّا أَحَدُهُمَا فَكَانَ يَسْعَى بِالنَّمِيمَةِ، وَأَمَّا أَحَدُهُمَا فَكَانَ لاَ يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ "". قَالَ ثُمَّ أَخَذَ عُودًا رَطْبًا فَكَسَرَهُ بِاثْنَتَيْنِ ثُمَّ غَرَزَ كُلَّ وَاحِدٍ مِنْهُمَا عَلَى قَبْرٍ، ثُمَّ قَالَ "" لَعَلَّهُ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا "".
பாடம் : 88
புறம் பேசுவதாலும் சிறுநீரின் காரணத்தாலும் ஏற்படும் மண்ணறை வேதனை
1378. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரு மண்ணறைகளைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். அப்போது “இவ்விருவரும் வேதனை செய்யப்படு கிறார்கள்; ஆனால், ஒரு பெரிய பாவத்திற்காக வேதனை செய்யப்பட வில்லை. ஒருவர் கோள்சொல்லித் திரிந்தவர்; மற்றொருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைத்துக்கொள்ளாத வர்” என்று கூறினார்கள்.
பிறகு ஈரமான ஒரு மட்டையை இரண்டாகப் பிளந்து இரு மண்ணறை களிலும் ஒவ்வொன்றாக நட்டார்கள். “இவ்விரண்டின் ஈரம் காயாத வரை இவர்களின் வேதனை குறைக்கப்படக் கூடும்” எனக் கூறினார்கள்.30

1379. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ أَحَدَكُمْ إِذَا مَاتَ عُرِضَ عَلَيْهِ مَقْعَدُهُ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ، إِنْ كَانَ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَمِنْ أَهْلِ الْجَنَّةِ، وَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَمِنْ أَهْلِ النَّارِ، فَيُقَالُ هَذَا مَقْعَدُكَ حَتَّى يَبْعَثَكَ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ "".
பாடம் : 89
இறந்தவருக்கு அவர் தங்கு மிடம் (சொர்க்கம் அல்லது நரகம்) காலையிலும் மாலை யிலும் எடுத்துக்காட்டப்படு வது
1379. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் (மறுமையில்) அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக்காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்தில் இருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்தில் இருப்பதாகவும் (எடுத்துக்காட்டப்படும்). மேலும், “இதுதான் உன் இருப்பிடம். இறுதியில் அல்லாஹ் உன்னை மறுமை நாளில் எழுப்பி இங்குதான் அனுப்புவான்” என்றும் கூறப்படும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1380. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا وُضِعَتِ الْجَنَازَةُ فَاحْتَمَلَهَا الرِّجَالُ عَلَى أَعْنَاقِهِمْ، فَإِنْ كَانَتْ صَالِحَةً قَالَتْ قَدِّمُونِي قَدِّمُونِي. وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ قَالَتْ يَا وَيْلَهَا أَيْنَ يَذْهَبُونَ بِهَا. يَسْمَعُ صَوْتَهَا كُلُّ شَىْءٍ إِلاَّ الإِنْسَانَ، وَلَوْ سَمِعَهَا الإِنْسَانُ لَصَعِقَ "".
பாடம் : 90
(சவப்) பெட்டியில் உள்ள பிரேதம் கூறுவது
1380. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தம் தோள்களில் தூக்கிச் செல்லும்போது அந்தப் பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருந்தால், “என்னை விரைந்து கொண்டுசெல்லுங் கள்; என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்” என்று கூறும்; அது நல்லறங்கள் புரியாததாக இருந்தால், “நாசமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்” என்று கூறும்.
இவ்வாறு கூறும் அதன் சப்தத்தை, மனிதனைத் தவிர அனைத்துப் பொருட் களும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மூர்ச்சையாகிவிடுவான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1381. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا مِنَ النَّاسِ مُسْلِمٌ يَمُوتُ لَهُ ثَلاَثَةٌ مِنَ الْوَلَدِ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ إِلاَّ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ بِفَضْلِ رَحْمَتِهِ إِيَّاهُمْ "".
பாடம் : 91
முஸ்லிம்களின் குழந்தைகள் தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவை
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“ஒருவருக்கு பருவமெய்தாத மூன்று குழந்தைகள் இறந்துபோனால், அவை அவருக்கு நரகத்தைவிட்டுப் பாதுகாக்கும் திரையாகும்; அல்லது அவர் சொர்க்கத்தில் நுழையக் காரணமாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1381. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களில் முஸ்லிமான ஒருவருக் குப் பருவமடையாத மூன்று குழந்தை கள் இறந்துவிட்டால், அக்குழந்தை களின் மீது அல்லாஹ் கொண்டுள்ள கருணையின் புண்ணியத்தால், அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்யாமல் இருப்பதில்லை.31
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1382. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، أَنَّهُ سَمِعَ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا تُوُفِّيَ إِبْرَاهِيمُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ لَهُ مُرْضِعًا فِي الْجَنَّةِ "".
பாடம் : 91
முஸ்லிம்களின் குழந்தைகள் தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவை
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“ஒருவருக்கு பருவமெய்தாத மூன்று குழந்தைகள் இறந்துபோனால், அவை அவருக்கு நரகத்தைவிட்டுப் பாதுகாக்கும் திரையாகும்; அல்லது அவர் சொர்க்கத்தில் நுழையக் காரணமாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1382. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களின் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) இறந்தபோது நபி (ஸல்) அவர்கள், “இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு” எனக் கூறினார்கள்.

1383. حَدَّثَنَا حِبَّانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهم ـ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَوْلاَدِ الْمُشْرِكِينَ فَقَالَ "" اللَّهُ إِذْ خَلَقَهُمْ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ "".
பாடம் : 92
இணைவைப்போரின் குழந்தை கள் தொடர்பாகக் கூறப்பட்டுள் ளவை
1383. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இணைவைப்பாளர்களின் குழந்தைகள் (இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது? என்பது) பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது.
அதற்கு அவர்கள், “அவர்களை அல்லாஹ் படைத்தபோதே, அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை நன்கறிவான்” எனக் கூறினார்கள்.

1384. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ ذَرَارِيِّ الْمُشْرِكِينَ فَقَالَ "" اللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ "".
பாடம் : 92
இணைவைப்போரின் குழந்தை கள் தொடர்பாகக் கூறப்பட்டுள் ளவை
1384. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இணைவைப்பாளர்களின் குழந்தை கள் (இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது என்பது) பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “இவர்கள் (உயிருடன் இருந்திருந்தால்) என்ன செய்திருப்பார் கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்” எனக் கூறினார்கள்.

1385. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الْفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ، كَمَثَلِ الْبَهِيمَةِ تُنْتَجُ الْبَهِيمَةَ، هَلْ تَرَى فِيهَا جَدْعَاءَ "".
பாடம் : 92
இணைவைப்போரின் குழந்தை கள் தொடர்பாகக் கூறப்பட்டுள் ளவை
1385. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:
ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அவ்வாறே, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில்தான் பிறக் கின்றன. விலங்குகள் அங்கக் குறைவு டன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக் கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதைப் போன்று) பெற்றோர்கள்தான் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர் களாகவோ அக்னி ஆராதனையாளர் களாகவோ ஆக்கிவிடுகின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.