1221. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا عُمَرُ ـ هُوَ ابْنُ سَعِيدٍ ـ قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الْعَصْرَ، فَلَمَّا سَلَّمَ قَامَ سَرِيعًا دَخَلَ عَلَى بَعْضِ نِسَائِهِ، ثُمَّ خَرَجَ وَرَأَى مَا فِي وُجُوهِ الْقَوْمِ مِنْ تَعَجُّبِهِمْ لِسُرْعَتِهِ فَقَالَ "" ذَكَرْتُ وَأَنَا فِي الصَّلاَةِ تِبْرًا عِنْدَنَا، فَكَرِهْتُ أَنْ يُمْسِيَ أَوْ يَبِيتَ عِنْدَنَا فَأَمَرْتُ بِقِسْمَتِهِ "".
பாடம் : 18
தொழுகையில் எதைப் பற்றி யாவது ஒருவர் யோசித்தல்
நான் தொழுதுகொண்டிருக்கும் போதே படைகளை (போருக்கு) தயார் படுத்து(வதற்கான வழிமுறைகளைப் பற்றி யோசிக்)கிறேன் என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1221. உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் அஸ்ர் தொழுதேன். அவர்கள் ‘சலாம்’ கொடுத்ததும் வேகமாக எழுந்து தம் துணைவியரில் ஒருவரது இல்லத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பினார்கள். தமது விரைவைக் கண்டு மக்கள் வியப்படை வதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “நான் தொழுதுகொண்டிருக்கும்போது எங்களிடம் இருந்த தங்கக்கட்டி ஒன்று என் நினைவுக்கு வந்தது. அது எங்களி டம் ‘ஒரு மாலைப்பொழுதோ’ அல்லது ‘ஓர் இரவுப் பொழுதோ’ இருப்பதைக் கூட நான் விரும்பவில்லை. எனவே, அதைப் பகிர்ந்து வழங்குமாறு கட்டளை யிட்டேன்” என விளக்கினார்கள்.
அத்தியாயம் : 21

1222. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ جَعْفَرٍ، عَنِ الأَعْرَجِ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا أُذِّنَ بِالصَّلاَةِ أَدْبَرَ الشَّيْطَانُ لَهُ ضُرَاطٌ حَتَّى لاَ يَسْمَعَ التَّأْذِينَ، فَإِذَا سَكَتَ الْمُؤَذِّنُ أَقْبَلَ، فَإِذَا ثُوِّبَ أَدْبَرَ فَإِذَا سَكَتَ أَقْبَلَ، فَلاَ يَزَالُ بِالْمَرْءِ يَقُولُ لَهُ اذْكُرْ مَا لَمْ يَكُنْ يَذْكُرُ حَتَّى لاَ يَدْرِي كَمْ صَلَّى "". قَالَ أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ إِذَا فَعَلَ أَحَدُكُمْ ذَلِكَ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ قَاعِدٌ. وَسَمِعَهُ أَبُو سَلَمَةَ مِنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه.
பாடம் : 18
தொழுகையில் எதைப் பற்றி யாவது ஒருவர் யோசித்தல்
நான் தொழுதுகொண்டிருக்கும் போதே படைகளை (போருக்கு) தயார் படுத்து(வதற்கான வழிமுறைகளைப் பற்றி யோசிக்)கிறேன் என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1222. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்கு ‘பாங்கு’ (தொழுகை அறிவிப்பு) சொல்லப்பட்டதும் பாங்கைக் கேட்கக் கூடாது என்பதற்காக ஷைத்தான் காற்று விட்டவனாக ஓடுகிறான். பாங்கு முடிந்ததும் முன்னே வருகிறான். இகாமத் சொல்லப்பட்டதும் திரும்பி ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் முன்னே வருகிறான்.
தொழுதுகொண்டிருக்கும் மனிதரி டம் “நீ இதுவரை நினைத்திராதவற்றை யெல்லாம் நினைத்துப்பார்” என்று கூறுவான். முடிவில் அம்மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதையே அறியாதவராகிவிடுவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “இவ்வாறு உங்களில் ஒருவருக்கு (மறதி) ஏற்பட்டால், அமர்ந்த நிலையில் இரண்டு சஜ்தாக்கள் செய்ய வேண்டும்” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

1223. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ النَّاسُ أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ، فَلَقِيتُ رَجُلاً فَقُلْتُ بِمَ قَرَأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْبَارِحَةَ فِي الْعَتَمَةِ فَقَالَ لاَ أَدْرِي. فَقُلْتُ لَمْ تَشْهَدْهَا قَالَ بَلَى. قُلْتُ لَكِنْ أَنَا أَدْرِي، قَرَأَ سُورَةَ كَذَا وَكَذَا.
பாடம் : 18
தொழுகையில் எதைப் பற்றி யாவது ஒருவர் யோசித்தல்
நான் தொழுதுகொண்டிருக்கும் போதே படைகளை (போருக்கு) தயார் படுத்து(வதற்கான வழிமுறைகளைப் பற்றி யோசிக்)கிறேன் என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1223. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா அதிகம் (ஹதீஸ்களை) அறிவிப்பதாக மக்கள் (குறை) கூறுகின்றனர். நான் ஒரு மனிதரைச் சந்தித்து “நேற்றிரவு இஷாவில் நபி (ஸல்) அவர்கள் எந்த அத்தியாயத்தை ஓதினார்கள்?” என்று கேட்டேன்.
அவர் ‘தெரியாது’ என்றார். “நீர் அத்தொழுகையில் கலந்துகொள்ள வில்லையா?” என்று நான் கேட்டேன். அவர் “கலந்துகொண்டேன்” என்றார். அவரிடம் நான், “அதை நான் அறிவேன். இன்னின்ன அத்தியாயங்களைத்தான் நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்” என்றேன்.14

தொழுகையில் ஏற்படும் மறதி
1224. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ مِنْ بَعْضِ الصَّلَوَاتِ ثُمَّ قَامَ فَلَمْ يَجْلِسْ، فَقَامَ النَّاسُ مَعَهُ، فَلَمَّا قَضَى صَلاَتَهُ وَنَظَرْنَا تَسْلِيمَهُ كَبَّرَ قَبْلَ التَّسْلِيمِ فَسَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ ثُمَّ سَلَّمَ.
பாடம் : 1
கடமையான தொழுகையின் இரண்டு ரக்அத்களுக்குப்பின் (அத்தஹிய்யாத்தில் அமராமல்) மறதியாக எழுந்துவிட் டால்...?
1224. அப்துல்லாஹ் இப்னு புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏதோ ஒரு தொழுகையைத் தொழுவித்தார்கள். (அத்தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்து ‘சலாம்’ கொடுப் பதை நாங்கள் எதிர்பார்த்திருந்தபோது, ‘சலாம்’ கொடுப்பதற்குமுன் அமர்ந்தவாறே (மறதிக்காக) இரு சஜ்தாக்கள் செய்தார்கள். பிறகு ‘சலாம்’ கொடுத்தார்கள்..2
அத்தியாயம் : 22

1225. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ مِنِ اثْنَتَيْنِ مِنَ الظُّهْرِ لَمْ يَجْلِسْ بَيْنَهُمَا، فَلَمَّا قَضَى صَلاَتَهُ سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ بَعْدَ ذَلِكَ.
பாடம் : 1
கடமையான தொழுகையின் இரண்டு ரக்அத்களுக்குப்பின் (அத்தஹிய்யாத்தில் அமராமல்) மறதியாக எழுந்துவிட் டால்...?
1225. அப்துல்லாஹ் இப்னு புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
லுஹ்ர் தொழுவித்த நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது ரக்அத்தில் அமராமல் எழுந்துவிட்டார்கள். தொழுகையை முடிக்கும்போது (மறதிக்காக) இரண்டு சஜ்தா செய்தார்கள். அதன்பின் சலாம் கொடுத்தார்கள்.3

1226. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ خَمْسًا فَقِيلَ لَهُ أَزِيدَ فِي الصَّلاَةِ فَقَالَ "" وَمَا ذَاكَ "". قَالَ صَلَّيْتَ خَمْسًا. فَسَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَ مَا سَلَّمَ.
பாடம் : 2
(மறதியாக) ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டால்...
1226. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் லுஹ்ரில் ஐந்து ரக்அத்கள் தொழு தார்கள். உடனே அவர்களிடத்தில், “இத்தொழுகை(யின் ரக்அத்) அதிகமாக்கப் பட்டுவிட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “என்ன விஷயம்?” எனக் கேட்டார்கள். “நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தீர்கள்” என ஒருவர் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள். (இது தொழுகைக்கான) ‘சலாம்’ கொடுத்தபிறகு (நடந்தது).

1227. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم الظُّهْرَ أَوِ الْعَصْرَ فَسَلَّمَ، فَقَالَ لَهُ ذُو الْيَدَيْنِ الصَّلاَةُ يَا رَسُولَ اللَّهَ أَنَقَصَتْ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَصْحَابِهِ "" أَحَقٌّ مَا يَقُولُ "". قَالُوا نَعَمْ. فَصَلَّى رَكْعَتَيْنِ أُخْرَيَيْنِ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ. قَالَ سَعْدٌ وَرَأَيْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ صَلَّى مِنَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ فَسَلَّمَ وَتَكَلَّمَ ثُمَّ صَلَّى مَا بَقِيَ وَسَجَدَ سَجْدَتَيْنِ وَقَالَ هَكَذَا فَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம் : 3
(நான்கு ரக்அத் தொழுகையில்) இரண்டாவது அல்லது மூன்றா வது ரக்அத்தில் (மறதியாக) சலாம் கொடுத்துவிட்டால், வழக்கமான சஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட சற்று நீளமாகவோ இரண்டு சஜ்தாக்கள் செய்வது
1227. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹ்ரையோ அஸ்ரையோ (இரு ரக்அத் கள் மட்டும்) தொழுவித்துவிட்டு சலாம் கொடுத்தார்கள். அப்போது ‘துல்யதைன்’ (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா?” எனக் கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “இவர் கூறுவது உண்மைதானா?” எனக் கேட்டபோது அவர்களும் ‘ஆம்’ என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுவித்துவிட்டு (மறதிக்காக) இரண்டு சஜ்தாக்களும் செய்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சஅத் பின் இப்றாஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள், மஃக்ரிப் தொழுவித்தபோது இரண்டு ரக்அத்திலேயே சலாம் கொடுத்துவிட்டுப் பேசியும்விட்டார்கள். பின்பு (நினைவு வந்ததும்) மீதி உள்ளதைத் தொழுதார்கள். பின்னர் இரண்டு சஜ்தாக்கள் செய்துவிட்டு, “இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள்” எனக் கூறினார்கள்.

1228. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ أَيُّوبَ بْنِ أَبِي تَمِيمَةَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ. أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم انْصَرَفَ مِنِ اثْنَتَيْنِ فَقَالَ لَهُ ذُو الْيَدَيْنِ أَقُصِرَتِ الصَّلاَةُ أَمْ نَسِيتَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَصَدَقَ ذُو الْيَدَيْنِ "". فَقَالَ النَّاسُ نَعَمْ. فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّى اثْنَتَيْنِ أُخْرَيَيْنِ ثُمَّ سَلَّمَ ثُمَّ كَبَّرَ فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ ثُمَّ رَفَعَ. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ سَلَمَةَ بْنِ عَلْقَمَةَ، قَالَ قُلْتُ لِمُحَمَّدٍ فِي سَجْدَتَىِ السَّهْوِ تَشَهُّدٌ قَالَ لَيْسَ فِي حَدِيثِ أَبِي هُرَيْرَةَ.
பாடம் : 4
மறதிக்கான சஜ்தாவின்போது ‘அத்தஹிய்யாத்’ ஓதாமல் இருப்பது
அனஸ் (ரலி), ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) ஆகியோர் (மறதிக்குரிய சஜ்தா செய்துவிட்டு) சலாம் கொடுத்தார்கள்; ‘அத்தஹிய்யாத்’ ஓதவில்லை.
(அதில்) ‘அத்தஹிய்யாத்’ ஓத வேண்டியதில்லை என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
1228. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் (நான்கு ரக்அத் தொழுகையில்) இரண்டு ரக்அத்துடன் தொழுகையை முடித்துக் கொண்டபோது துல்யதைன் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா? அல்லது நீங்கள் மறந்துவிட்டீர்களா?” எனக் கேட்டார். “துல்யதைன் கூறுவது உண்மைதானா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்க, மக்களும் ‘ஆம்’ என்றார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள் பிந்தைய இரண்டு ரக்அத்களைத் தொழுதுவிட்டு சலாம் கொடுத்தார்கள். பின்பு தக்பீர் கூறித் தமது வழக்கமான சஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட சற்று நீண்டதாகவோ சஜ்தா செய்து, பின் (அதிலிருந்து) எழுந்தார்கள். (அத்தஹிய்யாத் ஓதவில்லை).
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் சலமா பின் அல்கமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம் “(மறதிக்குரிய சிரவணக்க மான) ‘சஜ்தா சஹ்வி’ல் ‘அத்தஹிய்யாத்’ உண்டா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பில் அது இல்லை தான்” என்றார்கள்.

1229. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم إِحْدَى صَلاَتَىِ الْعَشِيِّ ـ قَالَ مُحَمَّدٌ وَأَكْثَرُ ظَنِّي الْعَصْرَ ـ رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ ثُمَّ قَامَ إِلَى خَشَبَةٍ فِي مُقَدَّمِ الْمَسْجِدِ فَوَضَعَ يَدَهُ عَلَيْهَا وَفِيهِمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ ـ رضى الله عنهما ـ فَهَابَا أَنْ يُكَلِّمَاهُ وَخَرَجَ سَرَعَانُ النَّاسِ فَقَالُوا أَقَصُرَتِ الصَّلاَةُ وَرَجُلٌ يَدْعُوهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ذُو الْيَدَيْنِ فَقَالَ أَنَسِيتَ أَمْ قَصُرَتْ فَقَالَ "" لَمْ أَنْسَ وَلَمْ تُقْصَرْ "". قَالَ بَلَى قَدْ نَسِيتَ. فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ ثُمَّ كَبَّرَ فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَكَبَّرَ، ثُمَّ وَضَعَ رَأْسَهُ فَكَبَّرَ فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ.
பாடம் : 5
மறதிக்கான இரு சஜ்தாக்களின் போது தக்பீர் கூறுவது
1229. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மாலை நேர இரு தொழுகைகளில் ஒன்றைத் தொழுவித்த நபி (ஸல்) அவர்கள், இரண்டு ரக்அத்களிலேயே சலாம் கொடுத்துவிட்டார்கள். (அநேக மாக அது அஸ்ர் தொழுகை என்றே நினைக்கிறேன் என அறிவிப்பாளர் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.) பின்பு எழுந்து பள்ளி வாசலின் முற்பகுதியிலிருக்கும் மரக் கட்டையை நோக்கிச் சென்று அதன் மேல் தமது கையை ஊன்றிக்கொண்டு நின்றார்கள்.
அங்கே இருந்தவர்களில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) இருவரும் நபி (ஸல்) அவர்களிடத்தில் அது பற்றிப் பேசப் பயந்துகொண்டிருந்தபோது, பள்ளிவாசலில் இருந்து வேகமாக வெளியேறிய மக்கள், தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதோ எனப் பேசிக்கொண்டார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்களால் ‘துல்யதைன்’ என அழைக்கப்படும் ஒருவர், “நீங்கள் மறந்துவிட்டீர்களா? அல்லது தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா?” எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் மறக்கவும் இல்லை; (தொழுகை) குறைக்கப்படவும் இல்லை” என்றவுடன், “இல்லை நீங்கள் மறந்துவிட்டீர்கள்” என அவர் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவித்துவிட்டுப் பிறகு சலாம் கொடுத்தார்கள்.
பின்பு தக்பீர் கூறித் தமது வழக்கமான சஜ்தாவைப் போன்றோ, அல்லது அதைவிட நீண்டதாகவோ சஜ்தா செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி தக்பீர் கூறினார்கள். மீண்டும் தலையை (பூமியில்) வைத்து தக்பீர் கூறினார்கள். தமது வழக்கமான சஜ்தாவைப் போன்றோ, அல்லது அதைவிட நீண்ட தாகவோ சஜ்தா செய்து, பிறகு தமது தலையை உயர்த்தியவாறே தக்பீர் கூறினார்கள்.

1230. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ الأَسْدِيِّ، حَلِيفِ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ فِي صَلاَةِ الظُّهْرِ وَعَلَيْهِ جُلُوسٌ، فَلَمَّا أَتَمَّ صَلاَتَهُ سَجَدَ سَجْدَتَيْنِ فَكَبَّرَ فِي كُلِّ سَجْدَةٍ وَهُوَ جَالِسٌ قَبْلَ أَنْ يُسَلِّمَ، وَسَجَدَهُمَا النَّاسُ مَعَهُ مَكَانَ مَا نَسِيَ مِنَ الْجُلُوسِ. تَابَعَهُ ابْنُ جُرَيْجٍ عَنِ ابْنِ شِهَابٍ فِي التَّكْبِيرِ.
பாடம் : 5
மறதிக்கான இரு சஜ்தாக்களின் போது தக்பீர் கூறுவது
1230. அப்துல்லாஹ் இப்னு புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழு கையில் (இரண்டாவது ரக்அத்தில்) அமர வேண்டியதிருக்க எழுந்துவிட்டார்கள். தொழுகையை நிறைவு செய்தபோது சலாம் கொடுப்பதற்கு முன்னால், முதல் அமர்வில் உட்கார மறந்ததற்குப் பதிலாக இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள். ஒவ்வொரு சஜ்தாவிலும் அமர்ந்து கொண்டே தக்பீர் சொன்னார்கள். மக்களும் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து அந்த இரண்டு சஜ்தாக்களை யும் செய்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1231. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللَّهِ الدَّسْتَوَائِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا نُودِيَ بِالصَّلاَةِ أَدْبَرَ الشَّيْطَانُ وَلَهُ ضُرَاطٌ حَتَّى لاَ يَسْمَعَ الأَذَانَ، فَإِذَا قُضِيَ الأَذَانُ أَقْبَلَ، فَإِذَا ثُوِّبَ بِهَا أَدْبَرَ فَإِذَا قُضِيَ التَّثْوِيبُ أَقْبَلَ حَتَّى يَخْطِرَ بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ يَقُولُ اذْكُرْ كَذَا وَكَذَا مَا لَمْ يَكُنْ يَذْكُرُ حَتَّى يَظَلَّ الرَّجُلُ إِنْ يَدْرِي كَمْ صَلَّى، فَإِذَا لَمْ يَدْرِ أَحَدُكُمْ كَمْ صَلَّى ثَلاَثًا أَوْ أَرْبَعًا فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهْوَ جَالِسٌ "".
பாடம் : 6
தொழுத ரக்அத்கள் மூன்றா, அல்லது நான்கா எனத் தெரியாதபோது, இறுதி அமர்வில் இரண்டு சஜ்தாக்கள் செய்வது
1231. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்காக ‘பாங்கு’ (அறிவிப்பு) சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் காற்று விட்டவனாக ஓடி விடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பி வருகிறான்; இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான்.
இகாமத் முடிந்ததும் மீண்டும் வந்து தொழுபவரின் உள்ளத்தில் ஊடுருவி, “இதை இதையெல்லாம் நினைத்துப்பார்” எனக் கூறி, அவர் இதுவரை நினைத் துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டுகிறான். இறுதியில் அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதைக்கூட அறியாதவராகிவிடுகிறார். உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்கள் மூன்றா, அல்லது நான்கா என்று தெரியாவிட்டால் (கடைசி) அமர்வில் இரண்டு சஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்.

1232. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ يُصَلِّي جَاءَ الشَّيْطَانُ فَلَبَسَ عَلَيْهِ حَتَّى لاَ يَدْرِيَ كَمْ صَلَّى، فَإِذَا وَجَدَ ذَلِكَ أَحَدُكُمْ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ "".
பாடம் : 7
கடமையான தொழுகையிலும் கூடுதலான தொழுகையிலும் மறதிக்கான சிரவணக்கம் செய்தல்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வித்ர் தொழுத(போது மறதி ஏற்பட்ட மைக்காக) பின்னர் இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள்.
1232. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழத் தயாராகும்போது, அவரிடம் ஷைத்தான் ஊடுருவி, அவர் எத்தனை ரக்அத் தொழுதார் என்பதையே அறியாத அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறான். எனவே, உங்களில் ஒருவருக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டால், (கடைசி) அமர்வில் இருந்தவாறே அவர் இரண்டு சஜ்தாக்கள் செய்யட்டும்.”
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
1232. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழத் தயாராகும்போது, அவரிடம் ஷைத்தான் ஊடுருவி, அவர் எத்தனை ரக்அத் தொழுதார் என்பதையே அறியாத அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறான். எனவே, உங்களில் ஒருவருக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டால், (கடைசி) அமர்வில் இருந்தவாறே அவர் இரண்டு சஜ்தாக்கள் செய்யட்டும்.”
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
1233. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ بُكَيْرٍ، عَنْ كُرَيْبٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ أَزْهَرَ ـ رضى الله عنهم ـ أَرْسَلُوهُ إِلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ فَقَالُوا اقْرَأْ عَلَيْهَا السَّلاَمَ مِنَّا جَمِيعًا وَسَلْهَا عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ صَلاَةِ الْعَصْرِ وَقُلْ لَهَا إِنَّا أُخْبِرْنَا أَنَّكِ تُصَلِّينَهُمَا وَقَدْ بَلَغَنَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْهَا. وَقَالَ ابْنُ عَبَّاسٍ وَكُنْتُ أَضْرِبُ النَّاسَ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ عَنْهُمَا. فَقَالَ كُرَيْبٌ فَدَخَلْتُ عَلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ فَبَلَّغْتُهَا مَا أَرْسَلُونِي. فَقَالَتْ سَلْ أُمَّ سَلَمَةَ. فَخَرَجْتُ إِلَيْهِمْ فَأَخْبَرْتُهُمْ بِقَوْلِهَا فَرَدُّونِي إِلَى أُمِّ سَلَمَةَ بِمِثْلِ مَا أَرْسَلُونِي بِهِ إِلَى عَائِشَةَ. فَقَالَتْ أُمُّ سَلَمَةَ ـ رضى الله عنها ـ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَنْهَى عَنْهَا ثُمَّ رَأَيْتُهُ يُصَلِّيهِمَا حِينَ صَلَّى الْعَصْرَ، ثُمَّ دَخَلَ عَلَىَّ وَعِنْدِي نِسْوَةٌ مِنْ بَنِي حَرَامٍ مِنَ الأَنْصَارِ فَأَرْسَلْتُ إِلَيْهِ الْجَارِيَةَ فَقُلْتُ قُومِي بِجَنْبِهِ قُولِي لَهُ تَقُولُ لَكَ أُمُّ سَلَمَةَ يَا رَسُولَ اللَّهِ سَمِعْتُكَ تَنْهَى عَنْ هَاتَيْنِ وَأَرَاكَ تُصَلِّيهِمَا. فَإِنْ أَشَارَ بِيَدِهِ فَاسْتَأْخِرِي عَنْهُ. فَفَعَلَتِ الْجَارِيَةُ فَأَشَارَ بِيَدِهِ فَاسْتَأْخَرَتْ عَنْهُ فَلَمَّا انْصَرَفَ قَالَ "" يَا بِنْتَ أَبِي أُمَيَّةَ سَأَلْتِ عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ وَإِنَّهُ أَتَانِي نَاسٌ مِنْ عَبْدِ الْقَيْسِ فَشَغَلُونِي عَنِ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ بَعْدَ الظُّهْرِ فَهُمَا هَاتَانِ "".
பாடம் : 8
தொழுதுகொண்டிருப்பவரிடம் யாரேனும் பேச்சுக் கொடுத் தால் அதைச் செவியுறுவதும் கையால் சைகை செய்வதும்
1233. குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரலி) ஆகியோர் என்னிடம், “ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று எங்கள் அனைவரின் சலாமையும் அவருக்குக் கூறுவீராக! அஸ்ருக்குப் பின் இரண்டு ரக்அத் தொழுவது பற்றி அவரிடம் கேட்பீராக! நபி (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க, அத்தொழுகையை (ஆயிஷாவே!) நீங்கள் தொழுவதாகக் கேள்விப்படு கிறோம் என்று கேட்பீராக!” என்றார்கள். (மேலும்) இப்னு அப்பாஸ் (ரலி), தாமும் உமர் (ரலி) அவர்களும், இவ்வாறு (அஸ்ருக்குப்பின்) தொழுபவர்களை அடிப்பவர்களாக இருந்ததையும் தெரிவிக்கச் சொன்னார்கள்.
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, நான் அனுப்பப்பட்ட விஷயத் தைக் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நீர் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் கேளும்!” என்று கூறினார்கள். நானும் இம்மூவரிடம் திரும்பி வந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதைச் சொன்னேன். உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்ட கேள்வியைக் கேட்குமாறு மீண்டும் என்னை அம்மூவரும் அனுப்பினார்கள்.
(உடனே நான் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் வந்து விஷயத்தைக் கூறியபோது) “நபி (ஸல்) அவர்கள் இவ்விரு ரக்அத்களைத் தடை செய்ததை நான் கேட்டுள்ளேன். பிறகு அவர்கள் அஸ்ர் தொழுதுவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுததை நான் பார்த்தேன். தொழுதுவிட்டு எனது வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என்னுடன் அன்சாரிகளில் பனூ ஹராம் எனும் குலத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர்.
அவர்களில் ஒரு பெண்ணை, தொழுதுகொண்டிருக்கும் நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி, “நீ அவர்களுக்கு அருகில் சென்று அல்லாஹ் வின் தூதரே! நீங்கள் இந்த இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடுத்ததை நான் கேட்டிருக்கிறேன். ஆனால், இப்போது தாங்களே அதைத் தொழு வதை நான் பார்க்கிறேனே? என நான் கேட்டதாக அவர்களிடம் நீ கூறு. அவர்கள் தமது கையால் சைகை செய்தால் நீ பின்வாங்கிவிடு!’ எனக் கூறி அனுப்பினேன்.
அப்பெண்ணும் கூறப்பட்டதைப் போன்றே செய்தார். நபி (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்தபோது, அப்பெண்மணி திரும்பி வந்துவிட்டார். தொழுகையை முடித்த நபி (ஸல்) அவர்கள், ‘அபூஉமய்யாவின் மகளே! அஸ்ருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்கள் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கிளையைச் சேர்ந்தவர்கள் வந்ததால் லுஹ்ருக்குப் பின்னால் உள்ள இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழ முடியவில்லை; அத்தொழுகையே இந்த இரண்டு ரக்அத்களாகும்’ என்றார்கள்” என உம்மு சலமா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.

1234. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَلَغَهُ أَنَّ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ كَانَ بَيْنَهُمْ شَىْءٌ فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصْلِحُ بَيْنَهُمْ فِي أُنَاسٍ مَعَهُ، فَحُبِسَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَحَانَتِ الصَّلاَةُ فَجَاءَ بِلاَلٌ إِلَى أَبِي بَكْرٍ ـ رضى الله عنه ـ فَقَالَ يَا أَبَا بَكْرٍ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ حُبِسَ وَقَدْ حَانَتِ الصَّلاَةُ فَهَلْ لَكَ أَنْ تَؤُمَّ النَّاسَ قَالَ نَعَمْ إِنْ شِئْتَ. فَأَقَامَ بِلاَلٌ وَتَقَدَّمَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ فَكَبَّرَ لِلنَّاسِ وَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَمْشِي فِي الصُّفُوفِ حَتَّى قَامَ فِي الصَّفِّ، فَأَخَذَ النَّاسُ فِي التَّصْفِيقِ، وَكَانَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ لاَ يَلْتَفِتُ فِي صَلاَتِهِ، فَلَمَّا أَكْثَرَ النَّاسُ الْتَفَتَ فَإِذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُهُ أَنْ يُصَلِّيَ، فَرَفَعَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ يَدَيْهِ فَحَمِدَ اللَّهَ وَرَجَعَ الْقَهْقَرَى وَرَاءَهُ حَتَّى قَامَ فِي الصَّفِّ، فَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّى لِلنَّاسِ فَلَمَّا فَرَغَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ "" يَا أَيُّهَا النَّاسُ مَا لَكُمْ حِينَ نَابَكُمْ شَىْءٌ فِي الصَّلاَةِ أَخَذْتُمْ فِي التَّصْفِيقِ، إِنَّمَا التَّصْفِيقُ لِلنِّسَاءِ، مَنْ نَابَهُ شَىْءٌ فِي صَلاَتِهِ فَلْيَقُلْ سُبْحَانَ اللَّهِ. فَإِنَّهُ لاَ يَسْمَعُهُ أَحَدٌ حِينَ يَقُولُ سُبْحَانَ اللَّهِ إِلاَّ الْتَفَتَ، يَا أَبَا بَكْرٍ مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ لِلنَّاسِ حِينَ أَشَرْتُ إِلَيْكَ "". فَقَالَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ مَا كَانَ يَنْبَغِي لاِبْنِ أَبِي قُحَافَةَ أَنْ يُصَلِّيَ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 9
தொழுகையில் சைகை செய்வது
இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவித்ததாக, குறைப் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1234. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அம்ர் பின் அவ்ஃப் குலத்தாரி டையே ஏதோ பிரச்சினை ஏற்பட்டு இருப்பதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. எனவே, அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அங்கு சென்று அக்குலத்தாரிடையே சமாதானம் செய்வதில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் (திரும்பி) வருவதில் தாமதம் ஏற்பட் டது. தொழுகையின் நேரம் நெருங்கி விட்டது. அப்போது பிலால் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, “அபூபக்ர் அவர்களே! நபி (ஸல்) அவர்கள் (தமது பணியின் நிமித்தமாக நேரத்தோடு வந்து சேர்வதிலிருந்து) தடுக்கப்பட்டிருக்கிறார்கள். தொழுகை யின் நேரமும் நெருங்கிவிட்டது. எனவே, தாங்கள் மக்களுக்குத் தொழு விக்கிறீர்களா?” எனக் கேட்டார்கள்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “நீர் விரும்பினால் செய்கிறேன்” என்றவுடன் பிலால் (ரலி) அவர்கள் இகாமத் கூற, அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னின்று மக்களுக்குத் தொழுவிக்க தக்பீர் (தஹ்ரீமா) கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் வரிசைகளினூடே வந்து (முதல்) வரிசை யில் நின்றார்கள். (இதைக் கண்ட) மக்கள் கைதட்டலானார்கள். தொழும்போது திரும்பும் வழக்கமில்லாத அபூபக்ர் (ரலி) அவர்கள், மக்கள் கைத்தட்டலை அதிகரித்தபோது திரும்பி (முதல் வரிசையில்) நபி (ஸல்) அவர்கள் நிற்பதைக் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரைப் பார்த்துத் தொழுகையைத் தொடரும்படி சைகை செய்தார்கள். எனினும், அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் கைகளை உயர்த்தி இறைவனைப் புகழ்ந்து, திரும்பாமல் பின்வாக்கில் நகர்ந்து (முதல்) வரிசை யில் நின்றார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் முன்சென்று மக்களுக்குத் தொழுவித் தார்கள். தொழுகையை முடித்ததும் மக்களை முன்னோக்கி, “மக்களே! தொழுகையில் (இதைப் போன்று) ஏதாவது நிகழ்ந்துவிட்டால் நீங்கள் ஏன் கைதட்டுகிறீர்கள்? கைதட்டுதல் பெண் களுக்குரிய செயலாகும். எனவே, யாருக்கேனும் தமது தொழுகையில் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் ‘சுப்ஹானல் லாஹ்’ எனக் கூறட்டும். ஏனெனில், யார் சுப்ஹானல்லாஹ்வைக் கேட்கிறாரோ அவர் இந்தப் பக்கம் தமது கவனத்தைச் செலுத்தாமல் இருக்கமாட்டார்” எனக் கூறினார்கள்.
பிறகு (அபூபக்ர் (ரலி) அவர்களிடம்) “அபூபக்ரே! நான் உம்மை நோக்கிச் சைகை செய்தபோது நீங்கள் ஏன் தொடர்ந்து மக்களுக்குத் தொழுவிக்க வில்லை?” எனக் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ் வின் தூதர் முன்னிலையில் தொழுவிப் பது அபூகுஹாஃபாவின் மகனுக்குத் தகுதியாகாது” எனக் கூறினார்கள்.

1235. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا الثَّوْرِيُّ، عَنْ هِشَامٍ، عَنْ فَاطِمَةَ، عَنْ أَسْمَاءَ، قَالَتْ دَخَلْتُ عَلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ وَهِيَ تُصَلِّي قَائِمَةً وَالنَّاسُ قِيَامٌ فَقُلْتُ مَا شَأْنُ النَّاسِ فَأَشَارَتْ بِرَأْسِهَا إِلَى السَّمَاءِ. فَقُلْتُ آيَةٌ. فَقَالَتْ بِرَأْسِهَا أَىْ نَعَمْ.
பாடம் : 9
தொழுகையில் சைகை செய்வது
இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவித்ததாக, குறைப் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1235. அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றபோது மக்களோடு அவர் நின்று (கிரகணத் தொழுகையைத்) தொழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் அவரிடம் “மக்களுக்கு என்னவாயிற்று?” எனக் கேட்டேன்.
ஆயிஷா (ரலி) அவர்கள் தம் தலையால் வானத்தின் பக்கம் சைகை செய்தார்கள். நான் “(இறை) அத்தாட் சியா?” எனக் கேட்டதற்கு ‘ஆம்’ எனத் தம் தலையால் சைகை செய்தார்கள்.4

1236. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَيْتِهِ وَهُوَ شَاكٍ جَالِسًا، وَصَلَّى وَرَاءَهُ قَوْمٌ قِيَامًا فَأَشَارَ إِلَيْهِمْ أَنِ اجْلِسُوا فَلَمَّا انْصَرَفَ قَالَ "" إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَإِذَا رَفَعَ فَارْفَعُوا "".
பாடம் : 9
தொழுகையில் சைகை செய்வது
இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவித்ததாக, குறைப் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1236. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடல் நலிவுற்றிருந்தபோது, தம் வீட்டில் உட்கார்ந்தவாறு தொழுவித்தார் கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் நின்றுகொண்டு தொழுதார்கள். எனவே, நபியவர்கள் மக்களை நோக்கி உட்காரு மாறு சைகை செய்தார்கள்.
தொழுகையை முடித்துவிட்டு “இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பது பின்பற்றப்படுவதற்காகவே! எனவே, அவர் ருகூஉ செய்தால் நீங்களும் ருகூஉ செய்யுங்கள்; அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் உயர்த்துங்கள்” என்று கூறினார்கள்.

ஜனாஸாவின் சட்டங்கள்
1237. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنَا وَاصِلٌ الأَحْدَبُ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ، عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَتَانِي آتٍ مِنْ رَبِّي فَأَخْبَرَنِي ـ أَوْ قَالَ بَشَّرَنِي ـ أَنَّهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ "". قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ "" وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ "".
பாடம் : 1
இறுதிக் கடன்களும் இறுதிக் கட்டத்தில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ கூறுபவரின் நிலையும்
“சொர்க்கத்தின் திறவுகோல் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று கூறுவது)தானே!” என வஹ்ப் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்களிடம் வினவப்பட்டது.
அதற்கு அவர்கள், “ஆம், ஆயினும் பற்கள் இல்லாத திறவுகோல் உண்டா? எனவே, உன்னிடம் பற்களுள்ள திறவு கோல் இருந்தால்தான் அதன் மூலம் உனக்காக அ(ந்தச் சொர்க்கமான)து திறக்கப்படும்; இல்லையேல் அது உனக்குத் திறக்கப்படாது” எனக் கூறினார்கள்.2
1237. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனது இரட்சகனிடமிருந்து ஒரு (வான)வர் என்னிடம் வந்து ‘ஒரு செய்தியை’ அல்லது ‘ஒரு நற்செய்தியை’ எனக்கு அறிவித்தார். அதாவது ‘என் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறக்கின் றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் என்று கூறினார் என்றார்கள்.
உடனே நான், “அவர் விபசாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?” எனக் கேட்டேன். “அவர் விபசாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும்தான்” என்று நபியவர்கள் பதிலளித்தார்கள்.3
அத்தியாயம் : 23

1238. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا شَقِيقٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ مَاتَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ النَّارَ "". وَقُلْتُ أَنَا مَنْ مَاتَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ.
பாடம் : 1
இறுதிக் கடன்களும் இறுதிக் கட்டத்தில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ கூறுபவரின் நிலையும்
“சொர்க்கத்தின் திறவுகோல் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று கூறுவது)தானே!” என வஹ்ப் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்களிடம் வினவப்பட்டது.
அதற்கு அவர்கள், “ஆம், ஆயினும் பற்கள் இல்லாத திறவுகோல் உண்டா? எனவே, உன்னிடம் பற்களுள்ள திறவு கோல் இருந்தால்தான் அதன் மூலம் உனக்காக அ(ந்தச் சொர்க்கமான)து திறக்கப்படும்; இல்லையேல் அது உனக்குத் திறக்கப்படாது” எனக் கூறினார்கள்.2
1238. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறியதாவது:
“யார் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவராக இறக்கிறாரோ அவர் நிச்சயமாக நரகத்தில் நுழைவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்படியாயின்) “யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் மரணிக்கிறாரோ அவர் நிச்சயமாகச் சொர்க்கத்தில் நுழைவார்” என நான் கூறுகிறேன்.

1239. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَشْعَثِ، قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِسَبْعٍ، وَنَهَانَا عَنْ سَبْعٍ أَمَرَنَا بِاتِّبَاعِ الْجَنَائِزِ، وَعِيَادَةِ الْمَرِيضِ، وَإِجَابَةِ الدَّاعِي، وَنَصْرِ الْمَظْلُومِ، وَإِبْرَارِ الْقَسَمِ، وَرَدِّ السَّلاَمِ، وَتَشْمِيتِ الْعَاطِسِ. وَنَهَانَا عَنْ آنِيَةِ الْفِضَّةِ، وَخَاتَمِ الذَّهَبِ، وَالْحَرِيرِ، وَالدِّيبَاجِ، وَالْقَسِّيِّ، وَالإِسْتَبْرَقِ.
பாடம் : 2
ஜனாஸாவைப் பின்தொடரு மாறு வந்துள்ள கட்டளை
1239. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை(ச் செய்யும்படி) கட்டளையிட்டு, ஏழு விஷயங்களைத் தடை செய்தார்கள்.
ஜனாஸாவைப் பின்தொடரும்படியும், நோயாளியை நலம் விசாரிக்கும் படியும். விருந்துக்கு அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படியும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவும்படியும், சலாமுக்குப் பதில் கூறும்படியும், தும்மியவ(ர் ‘அல்ஹம்து லில்லாஹ்’ எனக் கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ்- இறைவன் உங்களுக்குக் கருணை புரிவானாக! என) மறுமொழி கூறும்படியும் கட்டளையிட்டார்கள்.
வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், (ஆண்கள்) தங்க மோதிரம் அணிவதிலிருந்தும் (கலப்படமில்லாத) பட்டு, அலங்காரப் பட்டு, ‘கஸ்’ எனும் பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, தடித்த பட்டு ஆகியவற்றை அணிவதிலிருந்தும் எங்களைத் தடை செய்தார்கள்.4

1240. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، عَنِ الأَوْزَاعِيِّ، قَالَ أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ رَدُّ السَّلاَمِ، وَعِيَادَةُ الْمَرِيضِ، وَاتِّبَاعُ الْجَنَائِزِ، وَإِجَابَةُ الدَّعْوَةِ، وَتَشْمِيتُ الْعَاطِسِ "". تَابَعَهُ عَبْدُ الرَّزَّاقِ قَالَ أَخْبَرَنَا مَعْمَرٌ. وَرَوَاهُ سَلاَمَةُ عَنْ عُقَيْلٍ.
பாடம் : 2
ஜனாஸாவைப் பின்தொடரு மாறு வந்துள்ள கட்டளை
1240. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக் குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை: சலாமுக்குப் பதிலுரைப் பது, நோயாளியை நலம் விசாரிப்பது, ஜனாஸாவைப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக்கொள்வது, தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.