6861. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الذَّنْبِ أَكْبَرُ عِنْدَ اللَّهِ قَالَ "" أَنْ تَدْعُوَ لِلَّهِ نِدًّا، وَهْوَ خَلَقَكَ "". قَالَ ثُمَّ أَىٌّ قَالَ "" ثُمَّ أَنْ تَقْتُلَ وَلَدَكَ، أَنْ يَطْعَمَ مَعَكَ "". قَالَ ثُمَّ أَىٌّ قَالَ "" ثُمَّ أَنْ تُزَانِيَ بِحَلِيلَةِ جَارِكَ "". فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ تَصْدِيقَهَا {وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلاَ يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ وَلاَ يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا} الآيَةَ.
பாடம்: 1 “ஓர் இறைநம்பிக்கையாளரைத் திட்டமிட்டே கொலை செய்த வனுக்கு நரகம்தான் தண்டனை” எனும் (4:93 ஆவது) இறை வசனம்2
6861. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (நபியவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகவும் பெரியது?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பதாகும்” என்று கூறினார்கள். அந்த மனிதர், “பிறகு எது (மிகப் பெரும் பாவம்)?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அடுத்து உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உனது உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொலை செய்வதாகும்” என்று சொன் னார்கள். அந்த மனிதர், “பிறகு எது?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உன் அண்டை வீட்டானின் மனைவி யுடன் நீ விபசாரம் புரிவதாகும்” என்று கூறினார்கள்.

அப்போது இதை மெய்ப்பிக்கும் வகையில் வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ், “அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்த தெய்வத்தையும் அழைக்க மாட்டார்கள்; மேலும், அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்யமாட்டார்கள்; விபசாரமும் செய்ய மாட்டார்கள். யாரேனும் இச்செயல்களைப் புரிந்தால் அவன் (தன் பாவத்திற்கான) தண்டனையை அடைந்தே தீருவான்” எனும் (25:68ஆவது) வசனத்தை அருளினான்.3


அத்தியாயம் : 87
6862. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سَعِيدِ بْنِ عَمْرِو بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَنْ يَزَالَ الْمُؤْمِنُ فِي فُسْحَةٍ مِنْ دِينِهِ، مَا لَمْ يُصِبْ دَمًا حَرَامًا "".
பாடம்: 1 “ஓர் இறைநம்பிக்கையாளரைத் திட்டமிட்டே கொலை செய்த வனுக்கு நரகம்தான் தண்டனை” எனும் (4:93 ஆவது) இறை வசனம்2
6862. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படும் (மனித) உயிர் எதையும் கொலை செய்யாமல் இருக்கும்வரை ஓர் இறைநம்பிக்கையாளர் தமது மார்க்கத்தின் தாராள குணத்தைக் கண்டவண்ணமிருப்பார்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 87
6863. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ يَعْقُوبَ، حَدَّثَنَا إِسْحَاقُ، سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ إِنَّ مِنْ وَرْطَاتِ الأُمُورِ الَّتِي لاَ مَخْرَجَ لِمَنْ أَوْقَعَ نَفْسَهُ فِيهَا، سَفْكَ الدَّمِ الْحَرَامِ بِغَيْرِ حِلِّهِ.
பாடம்: 1 “ஓர் இறைநம்பிக்கையாளரைத் திட்டமிட்டே கொலை செய்த வனுக்கு நரகம்தான் தண்டனை” எனும் (4:93 ஆவது) இறை வசனம்2
6863. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

புனிதமிக்கதாகக் கருதப்படும் (மனித) உயிரை (மார்க்க ரீதியான) அனுமதியின்றி கொலை செய்வதானது, விழுந்தால் வெளிவர முடியாத நாசப்படுகுழிகளில் ஒன்றாகும்.

இதை சயீத் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 87
6864. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ فِي الدِّمَاءِ "".
பாடம்: 1 “ஓர் இறைநம்பிக்கையாளரைத் திட்டமிட்டே கொலை செய்த வனுக்கு நரகம்தான் தண்டனை” எனும் (4:93 ஆவது) இறை வசனம்2
6864. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதன்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, கொலைகள் தொடர்பானதாகத்தான் இருக்கும்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 87
6865. حَدَّثَنَا عَبْدَانُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ يَزِيدَ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَدِيٍّ، حَدَّثَهُ أَنَّ الْمِقْدَادَ بْنَ عَمْرٍو الْكِنْدِيَّ حَلِيفَ بَنِي زُهْرَةَ حَدَّثَهُ وَكَانَ، شَهِدَ بَدْرًا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنْ لَقِيتُ كَافِرًا فَاقْتَتَلْنَا، فَضَرَبَ يَدِي بِالسَّيْفِ فَقَطَعَهَا، ثُمَّ لاَذَ بِشَجَرَةٍ وَقَالَ أَسْلَمْتُ لِلَّهِ. آقْتُلُهُ بَعْدَ أَنْ قَالَهَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَقْتُلْهُ ". قَالَ يَا رَسُولَ اللَّهِ فَإِنَّهُ طَرَحَ إِحْدَى يَدَىَّ، ثُمَّ قَالَ بَعْدَ مَا قَطَعَهَا، آقْتُلُهُ قَالَ " لاَ تَقْتُلْهُ، فَإِنْ قَتَلْتَهُ فَإِنَّهُ بِمَنْزِلَتِكَ قَبْلَ أَنْ تَقْتُلَهُ، وَأَنْتَ بِمَنْزِلَتِهِ قَبْلَ أَنْ يَقُولَ كَلِمَتَهُ الَّتِي قَالَ ".
பாடம்: 1 “ஓர் இறைநம்பிக்கையாளரைத் திட்டமிட்டே கொலை செய்த வனுக்கு நரகம்தான் தண்டனை” எனும் (4:93 ஆவது) இறை வசனம்2
6865. உபைதுல்லாஹ் பின் அதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பனூ ஸுஹ்ரா குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் நபி (ஸல்) அவர்களுடன் பத்ர் போரில் கலந்துகொண்டவருமான மிக்தாத் பின் அம்ர் அல்கிந்தீ (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இறைமறுப்பாளன் ஒருவனை நான் சந்தித்து நாங்கள் இருவரும் சண்டையிட்டோம். அப்போது அவன் எனது கை ஒன்றை வாளால் வெட்டித் துண்டித்துவிட்டான். பிறகு அவன் (என்னை விட்டுப் போய்) ஒரு மரத்தில் அபயம் தேடி (ஒளிந்து)கொண்டு ‘அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன்’ என்று சொன்னான். அவன் இதைச் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(வேண்டாம்) அவனைக் கொல்லாதே” என்று பதிலளித்தார்கள். மிக்தாத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவன் எனது கை ஒன்றைத் துண்டித்துவிட்டிருக்கின்றானே? அதைத் துண்டித்த பிறகுதானே இதைச் சொன்னான். நான் அவனைக் கொல்லலாம் அல்லவா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவனை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவனைக் கொன்றுவிட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவன் வந்துவிடுவான். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன்பு அவனிருந்த (குற்றவாளி எனும்) நிலைக்கு நீ சென்றுவிடுவாய்” என்று கூறினார்கள்.4


அத்தியாயம் : 87
6866. وَقَالَ حَبِيبُ بْنُ أَبِي عَمْرَةَ عَنْ سَعِيدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِلْمِقْدَادِ " إِذَا كَانَ رَجُلٌ مُؤْمِنٌ يُخْفِي إِيمَانَهُ مَعَ قَوْمٍ كُفَّارٍ، فَأَظْهَرَ إِيمَانَهُ، فَقَتَلْتَهُ، فَكَذَلِكَ كُنْتَ أَنْتَ تُخْفِي إِيمَانَكَ بِمَكَّةَ مِنْ قَبْلُ ".
பாடம்: 1 “ஓர் இறைநம்பிக்கையாளரைத் திட்டமிட்டே கொலை செய்த வனுக்கு நரகம்தான் தண்டனை” எனும் (4:93 ஆவது) இறை வசனம்2
6866. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மிக்தாத் (ரலி) அவர்களிடம், “இறைமறுப்பாளர்களான சமூகத்தாரிடையே தமது இறைநம்பிக் கையை (மனத்திற்குள்) மறைத்து வைத்துக்கொண்டிருந்த ஒரு மனிதர் தமது இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் தறுவாயில் அவரை நீர் கொன்றுவிட்டீரே! அவ்வாறாயின், இதற்கு முன்னர் நீரும் இவ்வாறுதானே மக்காவில் உமது இறைநம்பிக்கையை (மனத்தில்) மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர்?” என்று கேட்டார்கள்.5

அத்தியாயம் : 87
6867. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تُقْتَلُ نَفْسٌ إِلاَّ كَانَ عَلَى ابْنِ آدَمَ الأَوَّلِ كِفْلٌ مِنْهَا "".
பாடம்: 2 “ஓர் உயிரை வாழவைப்பவர் மக்கள் அனைவரையும் வாழ வைப்பவரைப் போன்றவர் ஆவார்” எனும் (5:32ஆவது) இறைவசனம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அதாவது) தகுந்த காரணமின்றி ஓர் உயிரைக் கொலை செய்வதிலிருந்து யார் விலகிக்கொள்கிறாரோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவரைப் போன்றவர் ஆவார்.
6867. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உலகில் அநியாயமாக ஒரு கொலை நடைபெறும்போது அந்தக் கொலையின் பாவத்தில் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களுடைய முதலாவது மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6


அத்தியாயம் : 87
6868. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ وَاقِدُ بْنُ عَبْدِ اللَّهِ أَخْبَرَنِي عَنْ أَبِيهِ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ "".
பாடம்: 2 “ஓர் உயிரை வாழவைப்பவர் மக்கள் அனைவரையும் வாழ வைப்பவரைப் போன்றவர் ஆவார்” எனும் (5:32ஆவது) இறைவசனம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அதாவது) தகுந்த காரணமின்றி ஓர் உயிரைக் கொலை செய்வதிலிருந்து யார் விலகிக்கொள்கிறாரோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவரைப் போன்றவர் ஆவார்.
6868. (‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடாதீர்கள்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.7


அத்தியாயம் : 87
6869. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَلِيِّ بْنِ مُدْرِكٍ، قَالَ سَمِعْتُ أَبَا زُرْعَةَ بْنَ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ جَرِيرٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ "" اسْتَنْصِتِ النَّاسَ، لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ "". رَوَاهُ أَبُو بَكْرَةَ وَابْنُ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 2 “ஓர் உயிரை வாழவைப்பவர் மக்கள் அனைவரையும் வாழ வைப்பவரைப் போன்றவர் ஆவார்” எனும் (5:32ஆவது) இறைவசனம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அதாவது) தகுந்த காரணமின்றி ஓர் உயிரைக் கொலை செய்வதிலிருந்து யார் விலகிக்கொள்கிறாரோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவரைப் போன்றவர் ஆவார்.
6869. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றுகை யில்) என்னிடம், “மக்களை மௌனமாக இருக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். (அமைதி திரும்பிய பின்னர்) “எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் இறை மறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள் (ஒற்றுமையுடன் இருங்கள்)” என்று சொன்னார்கள்.8

இந்த ஹதீஸை, நபி (ஸல்) அவர் களிடமிருந்து அபூபக்ரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரும் அறிவித் துள்ளார்கள்.


அத்தியாயம் : 87
6870. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ فِرَاسٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْكَبَائِرُ الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ "". أَوْ قَالَ "" الْيَمِينُ الْغَمُوسُ "". شَكَّ شُعْبَةُ. وَقَالَ مُعَاذٌ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ "" الْكَبَائِرُ الإِشْرَاكُ بِاللَّهِ، وَالْيَمِينُ الْغَمُوسُ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ "". أَوْ قَالَ "" وَقَتْلُ النَّفْسِ "".
பாடம்: 2 “ஓர் உயிரை வாழவைப்பவர் மக்கள் அனைவரையும் வாழ வைப்பவரைப் போன்றவர் ஆவார்” எனும் (5:32ஆவது) இறைவசனம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அதாவது) தகுந்த காரணமின்றி ஓர் உயிரைக் கொலை செய்வதிலிருந்து யார் விலகிக்கொள்கிறாரோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவரைப் போன்றவர் ஆவார்.
6870. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைவனுக்கு இணைகற்பிப்பதும் ‘தாய் தந்தையரைப் புண்படுத்துவதும்’ அல்லது ‘பொய்ச் சத்தியம் செய்வதும்’ பெரும் பாவங்களாகும்.

மற்றோர் அறிவிப்பில், “இறைவ னுக்கு இணைகற்பிப்பதும் பொய்ச் சத்தியம் செய்வதும் ‘தாய் தந்தையரைப் புண்படுத்துவதும்’ அல்லது ‘மனிதனைக் கொலை செய்வதும் ‘பெரும் பாவங்களா கும்” என்று வந்துள்ளது.

இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.9

(மேற்காணும் இரு அறிவிப்புகளிலும் இவற்றின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா (ரஹ்) அவர்களே ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 87
6871. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، سَمِعَ أَنَسًا ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْكَبَائِرُ "". وَحَدَّثَنَا عَمْرٌو حَدَّثَنَا شُعْبَةُ عَنِ ابْنِ أَبِي بَكْرٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَكْبَرُ الْكَبَائِرِ الإِشْرَاكُ بِاللَّهِ وَقَتْلُ النَّفْسِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ، وَقَوْلُ الزُّورِ "". أَوْ قَالَ "" وَشَهَادَةُ الزُّورِ "".
பாடம்: 2 “ஓர் உயிரை வாழவைப்பவர் மக்கள் அனைவரையும் வாழ வைப்பவரைப் போன்றவர் ஆவார்” எனும் (5:32ஆவது) இறைவசனம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அதாவது) தகுந்த காரணமின்றி ஓர் உயிரைக் கொலை செய்வதிலிருந்து யார் விலகிக்கொள்கிறாரோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவரைப் போன்றவர் ஆவார்.
6871. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைவனுக்கு இணை கற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், ‘பொய் கூறுவதும்’ அல்லது ‘பொய் சாட்சியம் சொல்வதும்’ பாவங்களிலேயே மிகப்பெரும் பாவங்களாகும்.

இதன் அறிவிப்பாளரான அனஸ் (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் ‘பெரும் பாவங்கள்’ என்று வந்துள்ளது.


அத்தியாயம் : 87
6872. حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، حَدَّثَنَا هُشَيْمٌ، حَدَّثَنَا حُصَيْنٌ، حَدَّثَنَا أَبُو ظَبْيَانَ، قَالَ سَمِعْتُ أُسَامَةَ بْنَ زَيْدِ بْنِ حَارِثَةَ ـ رضى الله عنهما ـ يُحَدِّثُ قَالَ بَعَثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الْحُرَقَةِ مِنْ جُهَيْنَةَ ـ قَالَ ـ فَصَبَّحْنَا الْقَوْمَ فَهَزَمْنَاهُمْ ـ قَالَ ـ وَلَحِقْتُ أَنَا وَرَجُلٌ مِنَ الأَنْصَارِ رَجُلاً مِنْهُمْ ـ قَالَ ـ فَلَمَّا غَشِينَاهُ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ـ قَالَ ـ فَكَفَّ عَنْهُ الأَنْصَارِيُّ، فَطَعَنْتُهُ بِرُمْحِي حَتَّى قَتَلْتُهُ ـ قَالَ ـ فَلَمَّا قَدِمْنَا بَلَغَ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ فَقَالَ لِي "" يَا أُسَامَةُ أَقَتَلْتَهُ بَعْدَ مَا قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ "". قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا كَانَ مُتَعَوِّذًا. قَالَ "" أَقَتَلْتَهُ بَعْدَ أَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ "". قَالَ فَمَا زَالَ يُكَرِّرُهَا عَلَىَّ حَتَّى تَمَنَّيْتُ أَنِّي لَمْ أَكُنْ أَسْلَمْتُ قَبْلَ ذَلِكَ الْيَوْمِ.
பாடம்: 2 “ஓர் உயிரை வாழவைப்பவர் மக்கள் அனைவரையும் வாழ வைப்பவரைப் போன்றவர் ஆவார்” எனும் (5:32ஆவது) இறைவசனம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அதாவது) தகுந்த காரணமின்றி ஓர் உயிரைக் கொலை செய்வதிலிருந்து யார் விலகிக்கொள்கிறாரோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவரைப் போன்றவர் ஆவார்.
6872. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஜுஹைனா’ குலத்தைச் சேர்ந்த ‘ஹுரக்கா’ எனும் கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்தார்கள். அதிகாலைப் பொழுதில் அவர்களிடம் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களை நாங்கள் தோற்கடித்தோம்.

அப்போது நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு மனிதரிடம் போய்ச்சேர்ந்து அவரை நாங்கள் சுற்றி வளைத்துக்கொண்டோம். அப்போது அவர் “லா இலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொன்னார். ஆகவே, அவரைவிட்டு அந்த அன்சாரி (நண்பர்) ஒதுங்கிக்கொண்டார். ஆனால், நான் என் ஈட்டியை அவர்மீது பாய்ச்சி அவரைக் கொன்றுவிட்டேன்.

நாங்கள் (மதீனா) வந்து சேர்ந்தபோது இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “உசாமா! ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று அவர் சொன்னதற்குப் பிறகுமா அவரை நீ கொன்றாய்?” என்று கேட்டார்கள். நான், “அவர் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளத்தான் (அவ்வாறு கூறினார்)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “லா இலாஹ இல்லல்லாஹ் என்று அவர் சொன்னதற்குப் பிறகுமா அவரை நீ கொன்றாய்?” என்று திரும்பத்திரும்ப (அதிருப்தியுடன்) என்னிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். எந்த அளவுக் கென்றால், அதற்கு முன்னால் நான் இஸ்லாத்தைத் தழுவாமல் (இந்நிகழ்ச்சி நடந்த பின்னால் இஸ்லாத்தைத் தழுவி) இருந்தால் நன்றாயிருந்திருக்குமே! என்று ஆசைப்பட்டேன்.10


அத்தியாயம் : 87
6873. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنَا يَزِيدُ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنِ الصُّنَابِحِيِّ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ـ رضى الله عنه ـ قَالَ إِنِّي مِنَ النُّقَبَاءِ الَّذِينَ بَايَعُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَايَعْنَاهُ عَلَى أَنْ لاَ نُشْرِكَ بِاللَّهِ شَيْئًا، وَلاَ نَسْرِقَ وَلاَ نَزْنِيَ، وَلاَ نَقْتُلَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ، وَلاَ نَنْتَهِبَ، وَلاَ نَعْصِيَ، بِالْجَنَّةِ إِنْ فَعَلْنَا ذَلِكَ، فَإِنْ غَشِينَا مِنْ ذَلِكَ شَيْئًا كَانَ قَضَاءُ ذَلِكَ إِلَى اللَّهِ.
பாடம்: 2 “ஓர் உயிரை வாழவைப்பவர் மக்கள் அனைவரையும் வாழ வைப்பவரைப் போன்றவர் ஆவார்” எனும் (5:32ஆவது) இறைவசனம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அதாவது) தகுந்த காரணமின்றி ஓர் உயிரைக் கொலை செய்வதிலிருந்து யார் விலகிக்கொள்கிறாரோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவரைப் போன்றவர் ஆவார்.
6873. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்விற்கு நாங்கள் எதனை யும் இணைகற்பிக்கமாட்டோம்: திருட மாட்டோம்; விபசாரம் செய்யமாட்டோம்; அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ள எந்த உயிரையும் கொலை செய்ய மாட்டோம்; கொள்ளையடிக்கமாட்டோம்; (எந்த நற்செயலிலும் உங்களுக்கு) மாறு செய்யமாட்டோம்; (இவற்றை நாங்கள் செய்யாமல் விட்டுவிட்டால்) எங்களுக்குச் சொர்க்கம் உண்டு. இவற்றில் ஏதேனும் ஒன்றை நாங்கள் செய்தால் அதன் முடிவு அல்லாஹ்விடம் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் செய்துகொடுத்த தலைவர்களில் நானும் ஒருவனாவேன்.11


அத்தியாயம் : 87
6874. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا "". رَوَاهُ أَبُو مُوسَى عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 2 “ஓர் உயிரை வாழவைப்பவர் மக்கள் அனைவரையும் வாழ வைப்பவரைப் போன்றவர் ஆவார்” எனும் (5:32ஆவது) இறைவசனம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அதாவது) தகுந்த காரணமின்றி ஓர் உயிரைக் கொலை செய்வதிலிருந்து யார் விலகிக்கொள்கிறாரோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவரைப் போன்றவர் ஆவார்.
6874. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நமக்கெதிராக எவன் ஆயுதம் ஏந்துகிறானோ அவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூமூசா (ரலி) அவர்களும் இதை அறிவித்துள்ளார்கள்.


அத்தியாயம் : 87
6875. حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، وَيُونُسُ، عَنِ الْحَسَنِ، عَنِ الأَحْنَفِ بْنِ قَيْسٍ، قَالَ ذَهَبْتُ لأَنْصُرَ هَذَا الرَّجُلَ، فَلَقِيَنِي أَبُو بَكْرَةَ فَقَالَ أَيْنَ تُرِيدُ قُلْتُ أَنْصُرُ هَذَا الرَّجُلَ. قَالَ ارْجِعْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا فَالْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا الْقَاتِلُ فَمَا بَالُ الْمَقْتُولِ قَالَ "" إِنَّهُ كَانَ حَرِيصًا عَلَى قَتْلِ صَاحِبِهِ "".
பாடம்: 2 “ஓர் உயிரை வாழவைப்பவர் மக்கள் அனைவரையும் வாழ வைப்பவரைப் போன்றவர் ஆவார்” எனும் (5:32ஆவது) இறைவசனம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அதாவது) தகுந்த காரணமின்றி ஓர் உயிரைக் கொலை செய்வதிலிருந்து யார் விலகிக்கொள்கிறாரோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவரைப் போன்றவர் ஆவார்.
6875. அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (ஜமல் போரில்) இந்த மனிதருக்கு (அலீ (ரலி) அவர்களுக்கு) உதவி செய்வதற்காக (காலதாமதமாக)ப் போய்க்கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ரா (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, “எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். “நான் இந்த மனிதருக்கு உதவி செய்யச் செல்கிறேன்” என்றேன்.

அதற்கு அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் திரும்பிச் சென்றுவிடுங்கள். ஏனெனில், (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள், ‘இரண்டு முஸ்லிம்கள் தமது வாட்களால் சண்டையிட்டுக்கொண்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் ஆகிய இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்’ என்று சொன்னார்கள்.

அப்போது நான், ‘அல்லாஹ்வின் தூதரே! இவரோ கொலை செய்தவர். (நரகத்திற்குச் செல்வது சரி!) கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்?)’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அவரைக் கொல்ல வேண்டுமென்று இவர் பேராசை கொண்டிருந்தாரே!’ என்று கூறினார்கள்.12

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 87
6876. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ يَهُودِيًّا، رَضَّ رَأْسَ جَارِيَةٍ بَيْنَ حَجَرَيْنِ، فَقِيلَ لَهَا مَنْ فَعَلَ بِكِ هَذَا أَفُلاَنٌ أَوْ فُلاَنٌ حَتَّى سُمِّيَ الْيَهُودِيُّ، فَأُتِيَ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمْ يَزَلْ بِهِ حَتَّى أَقَرَّ بِهِ، فَرُضَّ رَأْسُهُ بِالْحِجَارَةِ.
பாடம்: 3 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! கொல்லப்பட்டோருக்காகப் பழிவாங்கும்போது நேர்மையோடு நடந்துகொள்)வது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. ஆகவே, (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்குப் பதிலாக ஒரு சுதந்திரமானவனும், ஓர் அடிமைக்குப் பதிலாக அடிமையும், ஒரு பெண்ணுக்குப் பதிலாக பெண்ணுமே (பழிவாங்கப்படுவர்). ஆனால், (கொலை செய்த) ஒருவருக்கு (கொலையுண்ட) அவருடைய சகோதர(ரின் உறவின)ரால் மன்னிப்பு ஏதேனும் வழங்கப்பட்டால், (கொலையுண்ட வரின் உறவினர்) முறையோடு நடந்துகொள்வதும், அவருக்கு (மன்னிக்கப்பட்டவர்) சரியாக (இழப்பீட்டை)ச் செலுத்துவதும் கடமையாகும். இது உங்கள் இறை வனிடமிருந்து (கிடைத்து)ள்ளசலுகையும் அருளும் ஆகும். இதற்குப் பிறகும் ஒருவர் வரம்பு மீறினால் அவருக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும். (2:178) பாடம்: 4 ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்வரை கொலையாளியிடம் (ஆட்சித் தலைவர்) விசாரணை செய்வதும், குற்றவியல் தண்டனைகளில் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதும்13
6876. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு யூதன் ஒரு சிறுமியின் தலையை இரு கற்களுக்குடையே வைத்து நசுக்கி விட்டான். அச்சிறுமியிடம், “உன்னை இப்படிச் செய்தவர் யார்? இன்னாரா? இன்னாரா?” என்று (ஒவ்வொரு பெயராகச் சொல்லிக்) கேட்கப்பட்டது. இறுதியில் அந்த யூதனுடைய பெயர் சொல்லப்பட்டது. (அச்சிறுமி ‘ஆம்’ என்று ஒப்புக்கொண்டாள்.)

ஆகவே, அந்த யூதன் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டான். அவன் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளும்வரை அவனிடம் விசாரித்துக்கொண்டே இருந்தார்கள். (அவன் ஒப்புக்கொண்டவுடன்) அவனது தலை கல்லால் நசுக்கப்பட்டது.14

அத்தியாயம் : 87
6877. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ شُعْبَةَ، عَنْ هِشَامِ بْنِ زَيْدِ بْنِ أَنَسٍ، عَنْ جَدِّهِ، أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ خَرَجَتْ جَارِيَةٌ عَلَيْهَا أَوْضَاحٌ بِالْمَدِينَةِ ـ قَالَ ـ فَرَمَاهَا يَهُودِيٌّ بِحَجَرٍ ـ قَالَ ـ فَجِيءَ بِهَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَبِهَا رَمَقٌ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فُلاَنٌ قَتَلَكِ "". فَرَفَعَتْ رَأْسَهَا، فَأَعَادَ عَلَيْهَا قَالَ "" فُلاَنٌ قَتَلَكِ "". فَرَفَعَتْ رَأْسَهَا، فَقَالَ لَهَا فِي الثَّالِثَةِ "" فُلاَنٌ قَتَلَكِ "". فَخَفَضَتْ رَأْسَهَا، فَدَعَا بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَتَلَهُ بَيْنَ الْحَجَرَيْنِ.
பாடம்: 5 கல் அல்லது தடியால் (தாக்கிக்) கொலை செய்தால்...?15
6877. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனாவில் வெள்ளி நகை அணிந்துகொண்டு ஒரு சிறுமி (வீட்டிலிருந்து) புறப்பட்டாள். அப்போது அவள்மீது யூதன் ஒருவன் கல் எறிந்தான். உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அவளிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்னார் உன்னைத் தாக்கினாரா?” என்று கேட்டார்கள். அவள் (இல்லை என்று) தலையால் சைகை செய்தாள். மீண்டும் அவர்கள், “இன்னார் உன்னைத் தாக்கினாரா?” என்று கேட்டார்கள். அவள் அப்போதும் (இல்லை என்று) சைகை செய்தாள்.

தொடர்ந்து (மூன்றாம் முறையாக) அவளிடம் அவர்கள் “இன்னாரா உன்னைத் தாக்கினார்?” என்று கேட்ட போது அவள் (ஆம் என்று கூறும் விதமாக) தலையைக் கீழ் நோக்கித் தாழ்த்திசைகை செய்தாள். ஆகவே, அந்த யூதனை அழைத்து வருமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அவனை அழைத்துவந்து விசாரித்தபோது அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான்.) ஆகவே, இரு கற்களுக்கிடையில் வைத்து அவ(னது தலையி)னை நசுக்கிக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அத்தியாயம் : 87
6878. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ يَحِلُّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ إِلاَّ بِإِحْدَى ثَلاَثٍ النَّفْسُ بِالنَّفْسِ وَالثَّيِّبُ الزَّانِي، وَالْمَارِقُ مِنَ الدِّينِ التَّارِكُ الْجَمَاعَةَ "".
பாடம்: 6 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்கும் பழிவாங்கல் (அனுமதிக்கப்பட்டு) உள்ளது என அ(வர்களது வேதமான தவ்ராத்)தில் அவர்களுக்கு நாம் விதியாக்கினோம். ஆனால், யார் அவரை(ப் பழிவாங்காமல்) மன்னித்து விட்டுவிடுகிறாரோ அவரு(டைய பாவங்களு)க்கு அது பரிகாரமாகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்காதவர்களே அநீதி இழைத்தவர்கள் ஆவர். (5:45)
6878. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்’ என உறுதிமொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை.

(அவை:) 1. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்குப் பதிலாகக் கொலை செய்வது. 2. திருமணமானவன் விபசாரம் செய்வது. 3. ‘ஜமாஅத்’ எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத் திலிருந்தே வெளியேறிவிடுவது.

அத்தியாயம் : 87
6879. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ يَهُودِيًّا، قَتَلَ جَارِيَةً عَلَى أَوْضَاحٍ لَهَا، فَقَتَلَهَا بِحَجَرٍ، فَجِيءَ بِهَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَبِهَا رَمَقٌ فَقَالَ "" أَقَتَلَكِ فُلاَنٌ "". فَأَشَارَتْ بِرَأْسِهَا أَنْ لاَ، ثُمَّ قَالَ الثَّانِيَةَ، فَأَشَارَتْ بِرَأْسِهَا أَنْ لاَ، ثُمَّ سَأَلَهَا الثَّالِثَةَ فَأَشَارَتْ بِرَأْسِهَا أَنْ نَعَمْ، فَقَتَلَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِحَجَرَيْنِ.
பாடம்: 7 (கல்லால் அடித்துக் கொலை செய்தவனுக்குக்) கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றுவது
6879. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு யூதன் ஒரு சிறுமியின் வெள்ளி நகைக்காக அந்தச் சிறுமியைக் கல்லால் (நசுக்கித்) தாக்கினான். அவளது உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் அச்சிறுமி கொண்டுவரப்பட்டாள். அப்போது (அவளிடம்) நபி (ஸல்) அவர்கள், “இன்னாரா உன்னைத் தாக்கினார்?” என்று கேட்டார்கள். அவள் ‘இல்லை’ என்று தலையால் சைகை செய்தாள். பிறகு இரண்டாவது முறை (வேறொரு நபர் குறித்து) நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது அப்போதும் ‘இல்லை’ என்று தலையால் சைகை செய்தாள்.

மூன்றாம் முறை நபி (ஸல்) அவர்கள் (கொலையாளியின் பெயர் கூறி) அவளிடம் கேட்டபோது அவள் ‘ஆம்’ என்று தலையால் சைகை செய்தாள். ஆகவே, இரு கற்களுக்குகிடையில் (அவன் தலையை வைத்து நசுக்கி) அவனைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.16

அத்தியாயம் : 87
6880. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ خُزَاعَةَ، قَتَلُوا رَجُلاً. وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ حَدَّثَنَا حَرْبٌ عَنْ يَحْيَى حَدَّثَنَا أَبُو سَلَمَةَ حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ أَنَّهُ عَامَ فَتْحِ مَكَّةَ قَتَلَتْ خُزَاعَةُ رَجُلاً مِنْ بَنِي لَيْثٍ بِقَتِيلٍ لَهُمْ فِي الْجَاهِلِيَّةِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" إِنَّ اللَّهَ حَبَسَ عَنْ مَكَّةَ الْفِيلَ وَسَلَّطَ عَلَيْهِمْ رَسُولَهُ وَالْمُؤْمِنِينَ، أَلاَ وَإِنَّهَا لَمْ تَحِلَّ لأَحَدٍ قَبْلِي، وَلاَ تَحِلُّ لأَحَدٍ بَعْدِي، أَلاَ وَإِنَّمَا أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ، أَلاَ وَإِنَّهَا سَاعَتِي هَذِهِ حَرَامٌ لاَ يُخْتَلَى شَوْكُهَا، وَلاَ يُعْضَدُ شَجَرُهَا، وَلاَ يَلْتَقِطُ سَاقِطَتَهَا إِلاَّ مُنْشِدٌ، وَمَنْ قُتِلَ لَهُ قَتِيلٌ فَهْوَ بِخَيْرِ النَّظَرَيْنِ إِمَّا يُودَى وَإِمَّا يُقَادُ "". فَقَامَ رَجُلٌ مِنْ أَهْلِ الْيَمَنِ يُقَالُ لَهُ أَبُو شَاهٍ فَقَالَ اكْتُبْ لِي يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اكْتُبُوا لأَبِي شَاهٍ "". ثُمَّ قَامَ رَجُلٌ مِنْ قُرَيْشٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِلاَّ الإِذْخِرَ، فَإِنَّمَا نَجْعَلُهُ فِي بُيُوتِنَا وَقُبُورِنَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِلاَّ الإِذْخِرَ "". وَتَابَعَهُ عُبَيْدُ اللَّهِ عَنْ شَيْبَانَ فِي الْفِيلِ، قَالَ بَعْضُهُمْ عَنْ أَبِي نُعَيْمٍ الْقَتْلَ. وَقَالَ عُبَيْدُ اللَّهِ إِمَّا أَنْ يُقَادَ أَهْلُ الْقَتِيلِ.
பாடம்: 8 கொல்லப்பட்டவரின் உறவினர்களுக்கு, (இழப்பீடு பெறுதல், அல்லது பழிவாங்குதல் ஆகிய) இரண்டு யோசனைகளில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு.
6880. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் தங்கள் குலத்தாரில் ஒருவரைக் கொலை செய்ததற்குப் பதிலாக மக்கா வெற்றி ஆண்டில் ‘பனூ லைஸ்’ குலத்தாரில் ஒருவரை குஸாஆ குலத்தார் கொலை செய்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து (உரையாற்றுகையில் பின்வருமாறு) கூறினார்கள்:

இந்த(ப் புனித) மக்கா நகரைவிட்டு யானைப் படையை அல்லாஹ் தடுத்து நிறுத்தினான். மேலும், மக்காவாசிகள் மீது அல்லாஹ் தன் தூதருக்கும் நம்பிக்கையாளருக்கும் ஆதிக்கம் அளித்தான். எச்சரிக்கை! மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை. எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப்போவதில்லை. நினைவில் கொள்க! எனக்குக்கூட பகலில் சிறிது நேரம் யுத்தம் புரியவே அனுமதிக்கப்பட்டிருந்தது.

எச்சரிக்கை! சந்தேகத்திற்கிடமின்றி (இங்கு) போர் புரிவது இந்த நிமிடத்திலிருந்து (முற்றாகத்) தடை செய்யப்பட்டுவிட்டது. எனவே, இந்நகரின் முட்செடி பிடுங்கப்படக்கூடாது. இதன் மரம் வெட்டப்படக் கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை (அவற்றைப் பற்றி) மக்களுக்கு அறிவிப்புச் செய்பவரைத் தவிர (பொருளுக்கு உரிமையற்றவர் யாரும்) எடுக்கக் கூடாது. ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டால் அவருடைய உறவினர்கள் இழப்பீடு பெறுதல், அல்லது பழிவாங்குதல் ஆகிய இரண்டு யோசனைகளில் சிறந்ததை அவர்கள் தேர்வு செய்யலாம்” என்று கூறினார்கள்.

அப்போது யமன்வாசிகளில் ‘அபூஷாத்’ என்றழைக்கப்பட்ட ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! (இந்த உரையை) எனக்கு எழுதித் தரச் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவருக்கு (என் உரையை) எழுதிக்கொடுங்கள்” என்று சொன்னார்கள்.

அப்போது குறைஷியரில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! (மக்காவின் செடிகொடிகளை வெட்டக் கூடாது என்பதிலிருந்து வாசனைத் தாவரமான) ‘இத்கிர்’ புல்லிற்கு விலக்கு அளியுங்கள். ஏனென்றால், நாங்கள் அதை எங்கள் வீடுகளி(ன் கூரைகளி)லும் எங்கள் மண்ணறைகளிலும்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இத்கிர் புல்லைத் தவிர!” என்று சொன்னார்கள்.17

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூநுஐம் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘யானைப் படை’ என்பதற்குப் பதிலாக, ‘கொலை செய்வதை’ என்று இடம்பெற்றுள்ளது எனச் சிலர் அறிவித்துள்ளனர்.

உபைதுல்லாஹ் பின் மூசா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘கொலையுண்ட வரின் குடும்பத்தார் (சார்பாக) பழிவாங்கல்’ என்று இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம் : 87