6083. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا عَاصِمٌ، قَالَ قُلْتُ لأَنَسِ بْنِ مَالِكٍ أَبَلَغَكَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ حِلْفَ فِي الإِسْلاَمِ "". فَقَالَ قَدْ حَالَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ قُرَيْشٍ وَالأَنْصَارِ فِي دَارِي.
பாடம்: 67 (ஒப்பந்த அடிப்படையில் இரு வருக்கிடையே) சகோதரத்துவத் தையும் (குலங்களுக்கிடையே) நட்புறவையும் ஏற்படுத்துவது அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் சல்மான் அல் ஃபார்சீ (ரலி) அவர்களுக்கும் அபுத்தர்தா (ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்.96 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் மதீனா வந்தபோது எனக்கும் சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்களுக்கும் இடையே நபி (ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்.97
6083. ஆஸிம் பின் சுலைமான் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “இஸ்லாத்தில் (மனிதர்களாக எற்படுத்திக்கொள்கிற ஒப்பந்த) நட்புறவுமுறை இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தங்களுக்குச் செய்தி கிடைத்ததா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் எனது வீட்டில் வைத்து குறைஷி (முஹாஜிர்)களுக்கும் (மதீனா) அன்சாரிகளுக்கும் இடையே நட்புறவு முறையை ஏற்படுத்தியிருந்தார்களே!” என்றார்கள்.99

அத்தியாயம் : 78
6084. حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رِفَاعَةَ، الْقُرَظِيَّ طَلَّقَ امْرَأَتَهُ فَبَتَّ طَلاَقَهَا، فَتَزَوَّجَهَا بَعْدَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الزَّبِيرِ، فَجَاءَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا كَانَتْ عِنْدَ رِفَاعَةَ فَطَلَّقَهَا آخِرَ ثَلاَثِ تَطْلِيقَاتٍ، فَتَزَوَّجَهَا بَعْدَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الزَّبِيرِ، وَإِنَّهُ وَاللَّهِ مَا مَعَهُ يَا رَسُولَ اللَّهِ إِلاَّ مِثْلُ هَذِهِ الْهُدْبَةِ، لِهُدْبَةٍ أَخَذَتْهَا مِنْ جِلْبَابِهَا. قَالَ وَأَبُو بَكْرٍ جَالِسٌ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَابْنُ سَعِيدِ بْنِ الْعَاصِ جَالِسٌ بِبَابِ الْحُجْرَةِ لِيُؤْذَنَ لَهُ، فَطَفِقَ خَالِدٌ يُنَادِي أَبَا بَكْرٍ، يَا أَبَا بَكْرٍ أَلاَ تَزْجُرُ هَذِهِ عَمَّا تَجْهَرُ بِهِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمَا يَزِيدُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى التَّبَسُّمِ ثُمَّ قَالَ "" لَعَلَّكِ تُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ، لاَ، حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ، وَيَذُوقَ عُسَيْلَتَكِ "".
பாடம்: 68 புன்னகையும் சிரிப்பும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக (ஒன்றை)ச் சொன்னார்கள். உடனே நான் சிரித்தேன்.100 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக அல்லாஹ்வே சிரிக்கவைக்கின்றான்; அழவைக்கின் றான்.101
6084. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.:

ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்கள் தம் துணைவியாரை ஒட்டுமொத்த மணவிலக்குச் செய்துவிட்டார்கள். அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் (ரலி) அவர்கள் அவரை மணமுடித்துக்கொண்டார்கள்.

அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் ரிஃபாஆ அவர்களிடம் (மனைவியாக) இருந்தேன். என்னை அவர் மூன்று தலாக்குகளில் இறுதி தலாக் சொல்லிவிட்டார். அவருக்குப் பிறகு என்னை அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் மணந்துகொண்டார். அல்லாஹ்வின் மீதாணையாக! (இரண்டாம் கணவரான) இவருக்கு (இன உறுப்பு என்று) இருப்பதெல்லாம் இதோ இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றுதான்” என்று கூறி தமது முகத்திரையின் குஞ்சத்தைப் பிடித்துக் காட்டினார்.

(அப்போது) அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள். காலித் பின் சயீத் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அந்த அறையின் வாசலில் அனுமதிக்காக (காத்துக்கொண்டு) அமர்ந்திருந்தார்கள். காலித் அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை அழைத்து, “அபூபக்ரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையில் பகிரங்கமாக இப்படிப் பேசக் கூடாதென இவரை நீங்கள் கண்டிக்கக் கூடாதா?” என்று கேட்கலானார்கள். (ஆனால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ புன்னகை செய்ததைவிடக் கூடுதலாக (வேறேதும்) செய்யவில்லை.

பிறகு நபி (ஸல்) அவர்கள் (அப் பெண்ணிடம்), “நீ (முதல் கணவர்) ரிஃபாஆவிடமே திரும்பிச் செல்ல விரும்புகிறாய் போலும். நீ (உன் இரண் டாம் கணவரான) இவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரையிலும், இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன் பத்தை அனுபவிக்காத வரையிலும் அது முடியாது” என்று சொன்னார்கள்.102


அத்தியாயம் : 78
6085. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدِ بْنِ الْخَطَّابِ، عَنْ مُحَمَّدِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ اسْتَأْذَنَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدَهُ نِسْوَةٌ مِنْ قُرَيْشٍ يَسْأَلْنَهُ وَيَسْتَكْثِرْنَهُ، عَالِيَةً أَصْوَاتُهُنَّ عَلَى صَوْتِهِ، فَلَمَّا اسْتَأْذَنَ عُمَرُ تَبَادَرْنَ الْحِجَابَ، فَأَذِنَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَدَخَلَ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَضْحَكُ فَقَالَ أَضْحَكَ اللَّهُ سِنَّكَ يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي فَقَالَ "" عَجِبْتُ مِنْ هَؤُلاَءِ اللاَّتِي كُنَّ عِنْدِي، لَمَّا سَمِعْنَ صَوْتَكَ تَبَادَرْنَ الْحِجَابَ "". فَقَالَ أَنْتَ أَحَقُّ أَنْ يَهَبْنَ يَا رَسُولَ اللَّهِ. ثُمَّ أَقْبَلَ عَلَيْهِنَّ فَقَالَ يَا عَدُوَّاتِ أَنْفُسِهِنَّ أَتَهَبْنَنِي وَلَمْ تَهَبْنَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْنَ إِنَّكَ أَفَظُّ وَأَغْلَظُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِيهٍ يَا ابْنَ الْخَطَّابِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا لَقِيَكَ الشَّيْطَانُ سَالِكًا فَجًّا إِلاَّ سَلَكَ فَجًّا غَيْرَ فَجِّكَ "".
பாடம்: 68 புன்னகையும் சிரிப்பும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக (ஒன்றை)ச் சொன்னார்கள். உடனே நான் சிரித்தேன்.100 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக அல்லாஹ்வே சிரிக்கவைக்கின்றான்; அழவைக்கின் றான்.101
6085. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அவர்களின் வீட்டுக்குள் வர) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அப்போது நபியவர்களிடம் (அவர் களுடைய துணைவியரான) குறைஷிப் பெண்கள் (குடும்பச் செலவுத் தொகையை) அதிகமாக்கித் தரும்படி குரலை உயர்த்திக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்(தபடி எழுந்)துகொண்டனர். நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்த உடன் உமர் (ரலி) அவர்கள் உள்ளே வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! தங்களை அல்லாஹ் (வாழ்நாள் முழுதும்) சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச்செய்வானாக! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்த இவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவசர அவசரமாக பர்தா அணிந்துகொண்(டு உள்ளே சென்றுவிட்)டார்களே!” என்று சொன்னார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “இவர்கள் (எனக்கு அஞ்சுவதைவிட) அதிகமாக அஞ்சத் தாங்கள்தான் தகுதியுடையவர்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டுப் பிறகு அப்பெண்களை நோக்கி, “தமக்குத் தாமே பகைவர்களாகிவிட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அந்தப் பெண்கள், “அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடினசித்தம் உடையவராகவும் கடுமை காட்டக்கூடியவராகவும் இருக்கி றீர்கள்” என்று பதிலளித்தார்கள்.

(அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது இருக்கட்டும் கத்தாபின் புதல்வரே! என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் ஓர் அகன்ற பாதையில் சென்றுகொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் எதிர்கொண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறு பாதையில்தான் அவன் செல்வான்” என்று கூறினார்கள்.103


அத்தியாயம் : 78
6086. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي الْعَبَّاسِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ لَمَّا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالطَّائِفِ قَالَ "" إِنَّا قَافِلُونَ غَدًا إِنْ شَاءَ اللَّهُ "". فَقَالَ نَاسٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لاَ نَبْرَحُ أَوْ نَفْتَحَهَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" فَاغْدُوا عَلَى الْقِتَالِ "". قَالَ فَغَدَوْا فَقَاتَلُوهُمْ قِتَالاً شَدِيدًا وَكَثُرَ فِيهِمُ الْجِرَاحَاتُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّا قَافِلُونَ غَدًا إِنْ شَاءَ اللَّهُ "". قَالَ فَسَكَتُوا فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ بِالْخَبَرِ كُلَّهُ.
பாடம்: 68 புன்னகையும் சிரிப்பும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக (ஒன்றை)ச் சொன்னார்கள். உடனே நான் சிரித்தேன்.100 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக அல்லாஹ்வே சிரிக்கவைக்கின்றான்; அழவைக்கின் றான்.101
6086. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃபில் (அதை முற்றுகையிட்டபடி) இருந்துகொண்டிருந்தபோது, “இறைவன் நாடினால், நாம் நாளை (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்” என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர், “தாயிஃபை வெற்றிகொள்ளும் வரை நாங்கள் (திரும்பிச்செல்லமாட்டோம்) இங்கேயே இருப்போம்” என்று கூறினார்கள். (அவர்களின் தயக்கத்தைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள், “முற்பகóலேயே போர் புரியுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே எதிரிகளுடன் அவர்கள் கடுமையாகப் போர் புரிந்ததில் அவர்களுக்கு அதிகமான காயங்கள் ஏற்பட்டன.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவன் நாடினால், நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்” என்று சொன்னார்கள். நபித்தோழர்கள் இப்போது (ஏதும் பதிலளிக்காமல் அதை ஆதரிக்கும் வகையில்) அமைதியாக இருந்தார்கள். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.104

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் முழுத்தகவல் இடம்பெறுகிறது.


அத்தியாயம் : 78
6087. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أَتَى رَجُلٌ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ هَلَكْتُ وَقَعْتُ عَلَى أَهْلِي فِي رَمَضَانَ. قَالَ "" أَعْتِقْ رَقَبَةً "". قَالَ لَيْسَ لِي. قَالَ "" فَصُمْ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ "". قَالَ لاَ أَسْتَطِيعُ. قَالَ "" فَأَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا "". قَالَ لاَ أَجِدُ. فَأُتِيَ بِعَرَقٍ فِيهِ تَمْرٌ ـ قَالَ إِبْرَاهِيمُ الْعَرَقُ الْمِكْتَلُ فَقَالَ "" أَيْنَ السَّائِلُ تَصَدَّقْ بِهَا "". قَالَ عَلَى أَفْقَرَ مِنِّي وَاللَّهِ مَا بَيْنَ لاَبَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنَّا. فَضَحِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ. قَالَ "" فَأَنْتُمْ إِذًا "".
பாடம்: 68 புன்னகையும் சிரிப்பும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக (ஒன்றை)ச் சொன்னார்கள். உடனே நான் சிரித்தேன்.100 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக அல்லாஹ்வே சிரிக்கவைக்கின்றான்; அழவைக்கின் றான்.101
6087. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “நான் அழிந்துவிட்டேன்; நான் ரமளான் மாதத்தில் (நோன்பு நோற்றுக்கொண்டு) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “(இதற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்வீராக” என்று சொன்னார்கள். அவர், “என்னிடம் அடிமை இல்லை” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின் தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்பீராக” என்று சொன்னார்கள். அவர், “எனக்குச் சக்தியில்லை” என்று சொன்னார்.

நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின் அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக” என்று கூறினார்கள். அவர், “என்னிடம் ஏதுமில்லை” என்று சொன்னார். அப்போது (நபி (ஸல்) அவர்களிடம்) ‘அரக்’ கொண்டுவரப்பட்டது. அதில் பேரீச்சம்பழம் இருந்தது.

-அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘அரக்’ என்பது (பதினைந்து ‘ஸாஉ’ பிடிக்கும்) ஒரு முகத்தலளவை ஆகும்-

அப்போது நபி (ஸல்) அவர்கள், “கேள்வி கேட்டவர் எங்கே?” (என்று கேட்க, அவர் வந்தார். அவரிடம்) “இதை(ப் பெற்று) தர்மம் செய்வீராக!” என்று சொன் னார்கள். அந்த மனிதர் “என்னைவிட ஏழையாக இருப்போருக்கா நான் தர்மம் செய்வது? கருங்கற்கள் நிறைந்த (மதீனாவின்) இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் எங்களைவிடப் பரம ஏழையான குடும்பத்தார் யாருமில்லை” என்று சொன்னார்.

(இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப்பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள். (பிறகு) “அவ்வாறாயின் நீங்களே (அதற்கு உரியவர்கள்)” என்று சொன்னார்கள்.105


அத்தியாயம் : 78
6088. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الأُوَيْسِيُّ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعَلَيْهِ بُرْدٌ نَجْرَانِيٌّ غَلِيظُ الْحَاشِيَةِ، فَأَدْرَكَهُ أَعْرَابِيٌّ فَجَبَذَ بِرِدَائِهِ جَبْذَةً شَدِيدَةً ـ قَالَ أَنَسٌ فَنَظَرْتُ إِلَى صَفْحَةِ عَاتِقِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَدْ أَثَّرَتْ بِهَا حَاشِيَةُ الرِّدَاءِ مِنْ شِدَّةِ جَبْذَتِهِ ـ ثُمَّ قَالَ يَا مُحَمَّدُ مُرْ لِي مِنْ مَالِ اللَّهِ الَّذِي عِنْدَكَ. فَالْتَفَتَ إِلَيْهِ فَضَحِكَ، ثُمَّ أَمَرَ لَهُ بِعَطَاءٍ.
பாடம்: 68 புன்னகையும் சிரிப்பும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக (ஒன்றை)ச் சொன்னார்கள். உடனே நான் சிரித்தேன்.100 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக அல்லாஹ்வே சிரிக்கவைக்கின்றான்; அழவைக்கின் றான்.101
6088. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தடித்த கரை கொண்ட நஜ்ரான் நாட்டு சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களை நெருங்கி அந்தச் சால்வையால் (அவர்களை) வேகமாக இழுத்தார்.

அந்தக் கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப் பகுதி நபி (ஸல்) அவர்களின் தோள்பட்டையில் அடையாளம் பதித்துவிட்டிருந்ததை நான் கண்டேன். பிறகு அவர், “முஹம்மதே! உங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்” என்று சொன்னார்.

உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டுப் பிறகு அவருக்குக் கொடுக்கும்படி ஆணையிட்டார்கள்.106


அத்தியாயம் : 78
6089. حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ، قَالَ مَا حَجَبَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم مُنْذُ أَسْلَمْتُ، وَلاَ رَآنِي إِلاَّ تَبَسَّمَ فِي وَجْهِي.
பாடம்: 68 புன்னகையும் சிரிப்பும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக (ஒன்றை)ச் சொன்னார்கள். உடனே நான் சிரித்தேன்.100 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக அல்லாஹ்வே சிரிக்கவைக்கின்றான்; அழவைக்கின் றான்.101
6089. ஜரீர் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (நான் நபியவர்களைச் சந்திக்க அனுமதி கேட்ட எந்தச் சமயத்திலும்) நபி (ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை; புன்முறுவலுடன் (சிரித்தவர்களாகவே) அல்லாமல் வேறுவிதமாக அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை.

இதை கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.107


அத்தியாயம் : 78
6090. وَلَقَدْ شَكَوْتُ إِلَيْهِ أَنِّي لاَ أَثْبُتُ عَلَى الْخَيْلِ، فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي وَقَالَ " اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا ".
பாடம்: 68 புன்னகையும் சிரிப்பும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக (ஒன்றை)ச் சொன்னார்கள். உடனே நான் சிரித்தேன்.100 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக அல்லாஹ்வே சிரிக்கவைக்கின்றான்; அழவைக்கின் றான்.101
6090. “என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை” என நபி (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அவர்கள் என் நெஞ்சில் தமது கரத்தால் அடித்து, “இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக. இவரை நல்வழி காட்டுபவராகவும் நல்வழியில் செலுத்தப்பெற்றவராகவும் ஆக்குவாயாக” என்று பிரார்த்தனை செய்தார்கள்.108


அத்தியாயம் : 78
6091. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ أُمَّ سُلَيْمٍ، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لاَ يَسْتَحِي مِنَ الْحَقِّ، هَلْ عَلَى الْمَرْأَةِ غُسْلٌ إِذَا احْتَلَمَتْ قَالَ "" نَعَمْ إِذَا رَأَتِ الْمَاءَ "". فَضَحِكَتْ أُمُّ سَلَمَةَ فَقَالَتْ أَتَحْتَلِمُ الْمَرْأَةُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" فَبِمَ شَبَهُ الْوَلَدِ "".
பாடம்: 68 புன்னகையும் சிரிப்பும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக (ஒன்றை)ச் சொன்னார்கள். உடனே நான் சிரித்தேன்.100 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக அல்லாஹ்வே சிரிக்கவைக்கின்றான்; அழவைக்கின் றான்.101
6091. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உம்மு சுலைம் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் மீது குளியல் கடமையாகுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்; அவள் (மதன) நீரைப் பார்த்தால் (குளியல் அவள்மீது கடமைதான்.)” என்று பதிலளித்தார்கள்.

இதைக் கேட்டு நான் சிரித்தவாறு, “பெண்ணுக்குக் கூடவா தூக்க ஸ்கலிதம் ஏற்படும்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பிறகு எவ்வாறு குழந்தை (தாயின்) சாயலில் பிறக்கிறது?” என்று கேட்டார்கள்.109


அத்தியாயம் : 78
6092. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرٌو، أَنَّ أَبَا النَّضْرِ، حَدَّثَهُ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم مُسْتَجْمِعًا قَطُّ ضَاحِكًا حَتَّى أَرَى مِنْهُ لَهَوَاتِهِ، إِنَّمَا كَانَ يَتَبَسَّمُ.
பாடம்: 68 புன்னகையும் சிரிப்பும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக (ஒன்றை)ச் சொன்னார்கள். உடனே நான் சிரித்தேன்.100 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக அல்லாஹ்வே சிரிக்கவைக்கின்றான்; அழவைக்கின் றான்.101
6092. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களை நான் ஒருபோதும் ஒரேயடியாகத் தமது உள்நாக்குத் தெரியும் அளவுக்குச் சிரிக்கக் கண்டதில்லை. அவர்கள் (பெரும்பாலும்) புன்னகைப்பவர்களா கவே இருந்தார்கள்.110


அத்தியாயம் : 78
6093. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ،. وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه أَنَّ رَجُلاً، جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ الْجُمُعَةِ وَهْوَ يَخْطُبُ بِالْمَدِينَةِ فَقَالَ قَحَطَ الْمَطَرُ فَاسْتَسْقِ رَبَّكَ، فَنَظَرَ إِلَى السَّمَاءِ وَمَا نَرَى مِنْ سَحَابٍ، فَاسْتَسْقَى فَنَشَأَ السَّحَابُ بَعْضُهُ إِلَى بَعْضٍ، ثُمَّ مُطِرُوا حَتَّى سَالَتْ مَثَاعِبُ الْمَدِينَةِ، فَمَا زَالَتْ إِلَى الْجُمُعَةِ الْمُقْبِلَةِ مَا تُقْلِعُ، ثُمَّ قَامَ ذَلِكَ الرَّجُلُ أَوْ غَيْرُهُ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ فَقَالَ غَرِقْنَا فَادْعُ رَبَّكَ يَحْبِسْهَا عَنَّا. فَضَحِكَ ثُمَّ قَالَ "" اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا "". مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا. فَجَعَلَ السَّحَابُ يَتَصَدَّعُ عَنِ الْمَدِينَةِ يَمِينًا وَشِمَالاً، يُمْطَرُ مَا حَوَالَيْنَا، وَلاَ يُمْطِرُ مِنْهَا شَىْءٌ، يُرِيهِمُ اللَّهُ كَرَامَةَ نَبِيِّهِ صلى الله عليه وسلم وَإِجَابَةَ دَعْوَتِهِ.
பாடம்: 68 புன்னகையும் சிரிப்பும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக (ஒன்றை)ச் சொன்னார்கள். உடனே நான் சிரித்தேன்.100 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக அல்லாஹ்வே சிரிக்கவைக்கின்றான்; அழவைக்கின் றான்.101
6093. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாளில்) உரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது (கிராமவாசி) ஒருவர் வந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) மழை பொய்த்துவிட்டது. (எங்களுக்கு) மழை வேண்டி உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை புரியுங்கள்” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் வானத்தை (அண்ணாந்து) பார்த்தார்கள். (அதில் மழை) மேகம் ஏதும் இருக்கவில்லை.

அப்போது நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். உடனே மேகம் ஒன்றோடொன்று திரள ஆரம்பித்தது. பிறகு மழை பொழிந்தது. இதையடுத்து மதீனாவின் நீர்வழிகள் (எல்லாம் நிரம்பி) வழிந்தோடின. இடையறாமல் அடுத்த ஜுமுஆவரை அம்மழை நீடித்தது.

பிறகு ‘அந்த மனிதர்’ அல்லது ‘வேறொரு மனிதர்’ எழுந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஜுமுஆ) உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். அவர், “(தொடர்) மழையினால் நாங்கள் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். எங்களைவிட்டு மழையை நிறுத்துமாறு உங்கள் இறைவனிடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே! எங்கள் சுற்றுப்புறங்களில் (உள்ள மானாவாரி நிலங்கள், நீர்நிலைகள் ஆகியவற்றுக்கு இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே!” என்று இரண்டு அல்லது மூன்று முறை பிரார்த்தித்தார்கள்.

அந்த(த் திரண்ட) மேகம் மதீனாவிலிருந்து (விலகி) வலப் பக்கமாகவும் இடப் பக்கமாகவும் பிரிந்து சென்றது. மதீனாவைச் சுற்றி மழை பொழிகிறது; ஆனால் மதீனாவுக்குள் சிறிதும் பெய்யவில்லை. தன்னுடைய தூதரின் மதிப்பையும் அவர்களின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் அல்லாஹ் மக்களுக்கு (நேரடியாகக்) காட்டினான்.111

அத்தியாயம் : 78
6094. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ، وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ، وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا، وَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ، وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ، حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا "".
பாடம்: 69 “இறைநம்பிக்கை கொண்டவர் களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்; மேலும், வாய்மையாளர்களுடன் இருங்கள்” எனும் (9:119ஆவது) இறைவசனமும், பொய் தடை செய்யப்பட்டிருப்பதும்
6094. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக்- எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக்கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப் பட்டுவிடுவார்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 78
6095. حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ أَبِي سُهَيْلٍ، نَافِعِ بْنِ مَالِكِ بْنِ أَبِي عَامِرٍ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ "".
பாடம்: 69 “இறைநம்பிக்கை கொண்டவர் களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்; மேலும், வாய்மையாளர்களுடன் இருங்கள்” எனும் (9:119ஆவது) இறைவசனமும், பொய் தடை செய்யப்பட்டிருப்பதும்
6095. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று. பேசினால் பொய் சொல்வான்; வாக்களித்தால் மாறு செய்வான்; அவனை நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.112


அத்தியாயம் : 78
6096. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جَرِيرٌ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" رَأَيْتُ رَجُلَيْنِ أَتَيَانِي قَالاَ الَّذِي رَأَيْتَهُ يُشَقُّ شِدْقُهُ فَكَذَّابٌ يَكْذِبُ بِالْكَذْبَةِ تُحْمَلُ عَنْهُ حَتَّى تَبْلُغَ الآفَاقَ فَيُصْنَعُ بِهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ "".
பாடம்: 69 “இறைநம்பிக்கை கொண்டவர் களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்; மேலும், வாய்மையாளர்களுடன் இருங்கள்” எனும் (9:119ஆவது) இறைவசனமும், பொய் தடை செய்யப்பட்டிருப்பதும்
6096. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் இன்றிரவு (கனவில்) இருவரைப் பார்த்தேன். அவர்கள் என்னிடம் வந்து (என்னைப் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று பல காட்சிகளைக் காட்டினார்கள். அவற்றில் ஒன்றுக்கு விளக்கமளிக்கையில்,) “தாடை சிதைக்கப்பட்ட நிலையில் நீங்கள் பார்த்தீர்களே அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச, அது அவரிடமிருந்து பரவி உலகம் முழுவதையும் அடையும். ஆகவே, (நீங்கள் பார்த்த) அந்தத் தண்டனை அவருக்கு மறுமை நாள்வரை கொடுக்கப்படும்” என்று கூறினார்கள்.

இதை சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.113

அத்தியாயம் : 78
6097. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ قُلْتُ لأَبِي أُسَامَةَ حَدَّثَكُمُ الأَعْمَشُ، سَمِعْتُ شَقِيقًا، قَالَ سَمِعْتُ حُذَيْفَةَ، يَقُولُ إِنَّ أَشْبَهَ النَّاسِ دَلاًّ وَسَمْتًا وَهَدْيًا بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لاَبْنُ أُمِّ عَبْدٍ، مِنْ حِينَ يَخْرُجُ مِنْ بَيْتِهِ إِلَى أَنْ يَرْجِعَ إِلَيْهِ، لاَ نَدْرِي مَا يَصْنَعُ فِي أَهْلِهِ إِذَا خَلاَ.
பாடம்: 70 நன்னடத்தை
6097. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அசைவு (நடை), தோற்றம் (உடை), நடத்தை (பாவனை) ஆகிய அனைத்திலும் மக்களிலேயே மிகவும் ஒப்பானவர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்தான். (இப்னு உம்மி அப்த் எனப்படும் அவர்கள்) தமது இல்லத்திலிருந்து புறப்பட்டது முதல் வீடு திரும்பும்வரை (அவ்வாறு இருப்பார்கள்.) தம் வீட்டாருடன் தனியாக இருக்கும்போது அவர்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது.114

(அறிவிப்பாளர்) இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நான் அபூஉசாமா (ரஹ்) அவர்களிடம், “இந்த ஹதீஸை அஃமஷ் (ரஹ்) அவர்கள் தங்களுக்கு அறிவித்தார்களா?” என்று கேட்டேன். (அதற்கு அவர்கள் ‘ஆம்’ என்றார்கள்.)


அத்தியாயம் : 78
6098. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُخَارِقٍ، سَمِعْتُ طَارِقًا، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ إِنَّ أَحْسَنَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْىِ هَدْىُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم.
பாடம்: 70 நன்னடத்தை
6098. தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “உரையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். நடத்தையில் சிறந்தது முஹம்மத் (ஸல்) அவர்களின் நடத்தையாகும்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 78
6099. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي الأَعْمَشُ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَيْسَ أَحَدٌ ـ أَوْ لَيْسَ شَىْءٌ ـ أَصْبَرَ عَلَى أَذًى سَمِعَهُ مِنَ اللَّهِ، إِنَّهُمْ لَيَدْعُونَ لَهُ وَلَدًا، وَإِنَّهُ لَيُعَافِيهِمْ وَيَرْزُقُهُمْ "".
பாடம்: 71 மனவேதனையின்போது பொறுமை காப்பது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: பொறுமையாளர்கள் தங்களின் பிரதிபலனை கணக்கின்றியே பெறுவார்கள். (39:10)
6099. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனவேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வைவிட வேறு ‘யாருமில்லை’ அல்லது ‘ஏதுமில்லை’. மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். (இது மன்னிக்க முடியாத குற்றமாக இருந்தும்) அவனோ அவர்களுக்கு உடல்நலத்தையும் உணவு வளத்தையும் வழங்கிக்கொண்டிருக்கிறான்.

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 78
6100. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ سَمِعْتُ شَقِيقًا، يَقُولُ قَالَ عَبْدُ اللَّهِ قَسَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم قِسْمَةً كَبَعْضِ مَا كَانَ يَقْسِمُ، فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ وَاللَّهِ إِنَّهَا لَقِسْمَةٌ مَا أُرِيدَ بِهَا وَجْهُ اللَّهِ. قُلْتُ أَمَّا أَنَا لأَقُولَنَّ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَأَتَيْتُهُ وَهْوَ فِي أَصْحَابِهِ فَسَارَرْتُهُ فَشَقَّ ذَلِكَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَتَغَيَّرَ وَجْهُهُ وَغَضِبَ، حَتَّى وَدِدْتُ أَنِّي لَمْ أَكُنْ أَخْبَرْتُهُ ثُمَّ قَالَ "" قَدْ أُوذِيَ مُوسَى بِأَكْثَرَ مِنْ ذَلِكَ فَصَبَرَ "".
பாடம்: 71 மனவேதனையின்போது பொறுமை காப்பது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: பொறுமையாளர்கள் தங்களின் பிரதிபலனை கணக்கின்றியே பெறுவார்கள். (39:10)
6100. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை) வழக்க மாகப் பங்கிடுவதைப் போன்று பங்கிட் டுக்கொண்டிருந்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்” என்று (அதிருப்தியுடன்) கூறினார்.

நான், “நிச்சயம் (இதைப் பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் சொல்வேன்” என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடையே இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம் அதை இரகசியமாகச் சொன்னேன். அது நபி (ஸல்) அவர்களுக்கு மனவருத்தத்தை அளித்தது. அவர்களின் முகமே (நிறம்) மாறிவிட்டது. (அந்த அளவுக்கு) அவர்கள் கோபமடைந்தார்கள்.

இதையடுத்து நான் அவர்களிடம் (அது பற்றித்) தெரிவிக்காமல் இருந்திருக்கலாமே என்று நினைத்தேன்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் “(இறைத் தூதர்) மூசா இதைவிட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார். இருப்பினும் (பொறுமையுடன்) அவர் சகித்துக்கொண்டார்” என்று சொன்னார்கள்.115

அத்தியாயம் : 78
6101. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا مُسْلِمٌ، عَنْ مَسْرُوقٍ، قَالَتْ عَائِشَةُ صَنَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم شَيْئًا فَرَخَّصَ فِيهِ فَتَنَزَّهَ عَنْهُ قَوْمٌ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَخَطَبَ فَحَمِدَ اللَّهَ ثُمَّ قَالَ "" مَا بَالُ أَقْوَامٍ يَتَنَزَّهُونَ عَنِ الشَّىْءِ أَصْنَعُهُ، فَوَاللَّهِ إِنِّي لأَعْلَمُهُمْ بِاللَّهِ وَأَشَدُّهُمْ لَهُ خَشْيَةً "".
பாடம்: 72 மக்களை நேருக்குநேர் கண்டிக்(கத் தயங்கி முகத்தை முறிக்)காம óருப்பது
6101. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்தார்கள். (மற்றவர்களுக்கும்) அதைச் செய்ய அனுமதி அளித்தார்கள். அப்போது ஒரு கூட்டத்தார் அதைச் செய்வதிலிருந்து தவிர்ந்துகொண்டனர். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (மக்களிடையே) உரையாற்றினார்கள்.

அப்போது அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, “சிலருக்கு என்ன நேர்ந்தது? நான் செய்கின்ற ஒன்றைச் செய்வதிலிருந்து தவிர்ந்துகொள்கிறார்களாமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களைவிட அல்லாஹ்வை மிகவும் அறிந்தவன்; அவனை மிகவும் அஞ்சி நடப்பவன் ஆவேன்” என்று சொன்னார்கள்.

(சம்பந்தப்பட்டவர்களை நேரடியாகக் கண்டிக்கவில்லை.)


அத்தியாயம் : 78
6102. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ ـ هُوَ ابْنُ أَبِي عُتْبَةَ مَوْلَى أَنَسٍ ـ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَشَدَّ حَيَاءً مِنَ الْعَذْرَاءِ فِي خِدْرِهَا، فَإِذَا رَأَى شَيْئًا يَكْرَهُهُ عَرَفْنَاهُ فِي وَجْهِهِ.
பாடம்: 72 மக்களை நேருக்குநேர் கண்டிக்(கத் தயங்கி முகத்தை முறிக்)காம óருப்பது
6102. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தார்கள். தாம் விரும்பாத ஒன்றை அவர்கள் பார்த்து விட்டால், அந்த வெறுப்பை அவர்களின் முகத்திலிருந்தே நாங்கள் அறிந்து விடுவோம்.116

அத்தியாயம் : 78