5983. حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا ابْنُ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، وَأَبُوهُ، عُثْمَانُ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّهُمَا سَمِعَا مُوسَى بْنَ طَلْحَةَ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ ـ رضى الله عنه أَنَّ رَجُلاً قَالَ يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ. فَقَالَ الْقَوْمُ مَالَهُ مَالَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَرَبٌ مَالَهُ "". فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" تَعْبُدُ اللَّهَ لاَ تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلاَةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصِلُ الرَّحِمَ، ذَرْهَا "". قَالَ كَأَنَّهُ كَانَ عَلَى رَاحِلَتِهِ.
பாடம்: 10
உறவைப் பேணிவாழ்வதன் சிறப்பு
5983. அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்” என்று (அவசரமாகக்) கேட்டார். அப்போது மக்கள், “இவருக்கென்ன நேர்ந்தது? இவருக்கென்ன நேர்ந்தது?” என்று கூறினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவருக்கு ஏதேனும் (அவசரத்) தேவை இருக்கலாம்” என்று (மக்களை நோக்கிச்) சொல்லிவிட்டு (அந்த மனிதரை நோக்கி), “நீர் அல்லாஹ்வை வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையையும் (கடமையான) ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும். உறவைப் பேணிவாழ வேண்டும்” என்று கூறிவிட்டு, “(என்) ஒட்டகத்தை விட்டுவிடுவீராக!” என்று சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (அப்போது) தமது வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள் போலும்.15
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 78

5984. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ إِنَّ جُبَيْرَ بْنَ مُطْعِمٍ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ "".
பாடம்: 11
உறவை முறிக்கும் பாவத்திற்கான தண்டனை.
5984. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.
இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16

5985. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْنٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ، وَأَنْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ "".
பாடம்: 12
உறவைப் பேணிவாழ்வதால் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசால மாக்கித் தரப்படும்.
5985. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தமது உறவைப் பேணிவாழட்டும்.17
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

5986. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ، وَيُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ "".
பாடம்: 12
உறவைப் பேணிவாழ்வதால் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசால மாக்கித் தரப்படும்.
5986. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் யார் விரும்புகின் றாரோ அவர் தமது உறவைப் பேணி வாழட்டும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

5987. حَدَّثَنِي بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مُعَاوِيَةُ بْنُ أَبِي مُزَرِّدٍ، قَالَ سَمِعْتُ عَمِّي، سَعِيدَ بْنَ يَسَارٍ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ اللَّهَ خَلَقَ الْخَلْقَ حَتَّى إِذَا فَرَغَ مِنْ خَلْقِهِ، قَالَتِ الرَّحِمُ هَذَا مَقَامُ الْعَائِذِ بِكَ مِنَ الْقَطِيعَةِ. قَالَ نَعَمْ أَمَا تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ. وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ. قَالَتْ بَلَى يَا رَبِّ. قَالَ فَهْوَ لَكِ "". قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ {فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ}"".
பாடம்: 13
உறவைப் பேணிவாழ்பவருடன் அல்லாஹ்வும் உறவு பாராட்டு கிறான்.
5987. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் படைப்பினங்களை படைத்து முடித்தபோது உறவானது (எழுந்து இறைவனின் அரியணையின் கால்களைப் பற்றிக்கொண்டு), “உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்” என்று கூறி (மன்றாடி)யது.
அல்லாஹ், “ஆம். உன்னை (உறவை)ப் பேணி நடந்துகொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்துவிடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?” என்று கேட்டான். அதற்கு உறவு, “ஆம் (திருப்தியே) என் இறைவா!” என்று கூறியது. அல்லாஹ், “இது உனக்காக நடக்கும்” என்று சொன்னான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் விரும்பினால் ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக்கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டித்துவிடவும் முனைகிறீர்களா?’ எனும் (47:22ஆவது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.17ஆ

5988. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ الرَّحِمَ سُجْنَةٌ مِنَ الرَّحْمَنِ، فَقَالَ اللَّهُ مَنْ وَصَلَكِ وَصَلْتُهُ، وَمَنْ قَطَعَكِ قَطَعْتُهُ "".
பாடம்: 13
உறவைப் பேணிவாழ்பவருடன் அல்லாஹ்வும் உறவு பாராட்டு கிறான்.
5988. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உறவு (ரஹிம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும்.18 ஆகவே, இறைவன் (உறவை நோக்கி) “உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக்கொள்பவனை நானும் முறித்துக் கொள்வேன்” என்று கூறினான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 78
5988. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உறவு (ரஹிம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும்.18 ஆகவே, இறைவன் (உறவை நோக்கி) “உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக்கொள்பவனை நானும் முறித்துக் கொள்வேன்” என்று கூறினான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 78
5989. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ أَبِي مُزَرِّدٍ، عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الرَّحِمُ شِجْنَةٌ، فَمَنْ وَصَلَهَا وَصَلْتُهُ، وَمَنْ قَطَعَهَا قَطَعْتُهُ "".
பாடம்: 13
உறவைப் பேணிவாழ்பவருடன் அல்லாஹ்வும் உறவு பாராட்டு கிறான்.
5989. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உறவு (இறையருளின்) ஒரு கிளை யாகும். ஆகவே, “அதனுடன் யார் ஒட்டி வாழ்கின்றாரோ அவருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை யார் முறித்துக்கொள்கிறாரோ அவரை நானும் முறித்துக்கொள்வேன்” (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்).
இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

5990. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، أَنَّ عَمْرَو بْنَ الْعَاصِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم جِهَارًا غَيْرَ سِرٍّ يَقُولُ "" إِنَّ آلَ أَبِي "" ـ قَالَ عَمْرٌو فِي كِتَابِ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ بَيَاضٌ ـ لَيْسُوا بِأَوْلِيَائِي، إِنَّمَا وَلِيِّيَ اللَّهُ وَصَالِحُ الْمُؤْمِنِينَ. زَادَ عَنْبَسَةُ بْنُ عَبْدِ الْوَاحِدِ عَنْ بَيَانٍ عَنْ قَيْسٍ عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم "" وَلَكِنْ لَهُمْ رَحِمٌ أَبُلُّهَا بِبَلاَلِهَا "". يَعْنِي أَصِلُهَا بِصِلَتِهَا.
பாடம்: 14
உறவைப் பசுமையாக்க வேண்டும்.
5990. அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இன்னாரின் தந்தையின் குடும்பத்தார் என் நேசர்கள் அல்லர்; என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும் நல்ல இறைநம்பிக்கையாளர்களும்தான்” என நபி (ஸல்) அவர்கள் ஒளிவு மறைவின்றி பகிரங்கமாகவே கூறினார்கள்.
“முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களின் (மூலநூல்) பிரதியொன்றில் ‘இன்னார்’ எனும் (சொல் உள்ள) இடம் (நிரப்பப்படாமல்) வெற்றிடமாக உள்ளது” என அறிவிப்பாளர் அம்ர் பின் அப்பாஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களின் வழியாக வரும் அன்பசா பின் அப்தில் வாஹித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள், “ஆயினும் அவர்களுடன் எனக்கு இரத்த உறவு உண்டு. அதை நான் (காய்ந்து போகவிடாமல்) பசுமையாக்குவேன்” என்று கூறினார்கள் எனும் கூடுதல் தகவல் இடம்பெற்றுள்ளது. அதாவது, “அவர்களின் உறவைப் பேணி நடந்து கொள்வேன்” என்றார்கள்.

5991. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، وَالْحَسَنِ بْنِ عَمْرٍو، وَفِطْرٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ وَقَالَ سُفْيَانُ لَمْ يَرْفَعْهُ الأَعْمَشُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَرَفَعَهُ حَسَنٌ وَفِطْرٌ ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ، وَلَكِنِ الْوَاصِلُ الَّذِي إِذَا قَطَعَتْ رَحِمُهُ وَصَلَهَا "".
பாடம்: 15
பதிலுக்குப் பதில் உறவு கொண் டாடுபவர் உறவைப் பேணுகின்றவர் அல்லர்.
5991. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகின்றவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார்.19
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் சிலர் இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களின் பொன்மொழி என்றும், வேறுசிலர் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழி என்றும் கூறுகிறார்கள்.

5992. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ، أَخْبَرَهُ أَنَّهُ، قَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ أُمُورًا كُنْتُ أَتَحَنَّثُ بِهَا فِي الْجَاهِلِيَّةِ مِنْ صِلَةٍ وَعَتَاقَةٍ وَصَدَقَةٍ، هَلْ لِي فِيهَا مِنْ أَجْرٍ. قَالَ حَكِيمٌ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَسْلَمْتَ عَلَى مَا سَلَفَ مِنْ خَيْرٍ "". وَيُقَالُ أَيْضًا عَنْ أَبِي الْيَمَانِ أَتَحَنَّثُ. وَقَالَ مَعْمَرٌ وَصَالِحٌ وَابْنُ الْمُسَافِرِ أَتَحَنَّثُ. وَقَالَ ابْنُ إِسْحَاقَ التَّحَنُّثُ التَّبَرُّرُ، وَتَابَعَهُمْ هِشَامٌ عَنْ أَبِيهِ.
பாடம்: 16
(இறைவனுக்கு) இணைவைப்ப வராக இருந்தபோது உறவைப் பேணிய ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் (அதற்கான நன்மை இப்போது கிடைக்குமா)?
5992. ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) அறியாமைக் காலத்தில் உறவைப் பேணுதல், அடிமைகளை விடுதலை செய்தல், தானதர்மம் செய்தல் ஆகிய நற்செயல்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) எனக்கு நற்பலன் ஏதும் உண்டா? கூறுங்கள்!” என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்பலன்)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்” என்று பதிலளித்தார்கள்.20
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சிலவற்றில் ‘நற்செயல்’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘தஹன்னுஸ்’ என்றும், வேறுசிலவற்றில் ‘தஹன்னுத்’ என்றும் வந்துள்ளது.

5993. حَدَّثَنَا حِبَّانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ خَالِدِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ خَالِدٍ بِنْتِ خَالِدِ بْنِ سَعِيدٍ، قَالَتْ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَعَ أَبِي وَعَلَىَّ قَمِيصٌ أَصْفَرُ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" سَنَهْ سَنَهْ "". قَالَ عَبْدُ اللَّهِ وَهْىَ بِالْحَبَشِيَّةِ حَسَنَةٌ. قَالَتْ فَذَهَبْتُ أَلْعَبُ بِخَاتَمِ النُّبُوَّةِ، فَزَجَرَنِي أَبِي. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" دَعْهَا "". ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَبْلِي وَأَخْلِقِي، ثُمَّ أَبْلِي وَأَخْلِقِي، ثُمَّ أَبْلِي وَأَخْلِقِي "". قَالَ عَبْدُ اللَّهِ فَبَقِيَتْ حَتَّى ذَكَرَ. يَعْنِي مِنْ بَقَائِهَا.
பாடம்: 17
பிறருடைய பெண் குழந்தை தம்முடன் விளையாட ஒருவர் அனுமதிப்பதும் அவளை முத்தமிடுவதும் அவளுடன் நகைச்சுவையாகப் பேசுவதும்
5993. உம்மு காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் என் தந்தையுடன் மஞ்சள்நிறச் சட்டை ஒன்றை அணிந்து கொண்டு சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இது) நன்றாயிருக்கிறதே! (இது) நன்றாயிருக்கிறதே!” என்று (என் சட்டை குறித்துச்) சொன்னார்கள். நான் (நபி (ஸல்) அவர்களின் இரு புஜங்களுக்கிடையே இருந்த) நபித்துவ முத்திரையில் விளையாடத் தொடங்கி னேன். உடனே, என் தந்தை என்னை அதட்டினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(குழந்தைதானே!) அவளை (விளையாட) விடுவீராக!” என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இந்தச் சட்டையை) நீ (பழையதாக்கிக்) கிழித்து நைந்துபோகச் செய்துவிடு. பிறகும் (அதைக்) கிழித்து நைந்துபோகச் செய்துவிடு. மீண்டும் அதை (பழையதாக்கிக்) கிழித்து நைந்துபோகச் செய்துவிடு” என்று (எனது நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்தித்துக்) கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள், “(அந்தச் சட்டை நிறம் மாறி பழுப்பேறி மக்கள்) பேசும் அளவுக்கு உம்மு காலித் (ரலி) அவர்கள் நெடுங்காலம் வாழ்ந்தார்கள்” என்று கூறுகிறார்கள்.21

5994. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا مَهْدِيٌّ، حَدَّثَنَا ابْنُ أَبِي يَعْقُوبَ، عَنِ ابْنِ أَبِي نُعْمٍ، قَالَ كُنْتُ شَاهِدًا لاِبْنِ عُمَرَ وَسَأَلَهُ رَجُلٌ عَنْ دَمِ الْبَعُوضِ. فَقَالَ مِمَّنْ أَنْتَ فَقَالَ مِنْ أَهْلِ الْعِرَاقِ. قَالَ انْظُرُوا إِلَى هَذَا، يَسْأَلُنِي عَنْ دَمِ الْبَعُوضِ وَقَدْ قَتَلُوا ابْنَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَسَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" هُمَا رَيْحَانَتَاىَ مِنَ الدُّنْيَا "".
பாடம்: 18
(ஒருவர் தம்) குழந்தைகள்மீது அன்பு காட்டுவதும் அவர்களை முத்தமிட்டு அணைத்துக் கொள்வதும்
நபி (ஸல்) அவர்கள் (தம் குழந்தை) இப்ராஹீமைத் தூக்கி (உச்சி) முகர்ந்து முத்தமிட்டார்கள்.
இதை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22
5994. அப்துர் ரஹ்மான் பின் அபீநுஅம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர், “(இஹ்ராம் கட்டியவர்) கொசுக்களைக் கொன்றுவிட்டால் பரிகாரம் என்ன?” என்று கேட்டார். அப்போது அப்துல் லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?” என்று கேட்டார்கள். அவர், “நான் இராக்வாசி” என்று பதிலளித்தார்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (தம்மருகில் இருந்தவர்களிடம்), “இவரைப் பாருங்கள். கொசுக்களைக் கொன்றால் பரிகாரம் என்ன என்று இவர் என்னிடம் கேட்கிறார். ஆனால், (இராக்வாசிகளான) இவர்களோ நபி (ஸல்) அவர்களுடைய (புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்களுடைய) புதல்வரைக் கொன்றுவிட்டார்கள். (ஆனால்) நபி (ஸல்) அவர்கள், “(ஹசன், ஹுசைன் ஆகிய) அவர்கள் இருவரும் உலகின் இரு துளசி மலர்கள் ஆவர்” என்று (பாராட்டிக்) கூறக் கேட்டேன்” என்று சொன்னார்கள்.23

5995. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَدَّثَتْهُ قَالَتْ جَاءَتْنِي امْرَأَةٌ مَعَهَا ابْنَتَانِ تَسْأَلُنِي، فَلَمْ تَجِدْ عِنْدِي غَيْرَ تَمْرَةٍ وَاحِدَةٍ، فَأَعْطَيْتُهَا، فَقَسَمَتْهَا بَيْنَ ابْنَتَيْهَا، ثُمَّ قَامَتْ فَخَرَجَتْ، فَدَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَحَدَّثْتُهُ فَقَالَ "" مَنْ يَلِي مِنْ هَذِهِ الْبَنَاتِ شَيْئًا فَأَحْسَنَ إِلَيْهِنَّ كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ "".
பாடம்: 18
(ஒருவர் தம்) குழந்தைகள்மீது அன்பு காட்டுவதும் அவர்களை முத்தமிட்டு அணைத்துக் கொள்வதும்
நபி (ஸல்) அவர்கள் (தம் குழந்தை) இப்ராஹீமைத் தூக்கி (உச்சி) முகர்ந்து முத்தமிட்டார்கள்.
இதை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22
5995. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் ஏதேனும் (தரும்படி) கேட்டு ஒரு பெண்மணி வந்தார். அவருடன் இரு பெண் குழந்தைகள் இருந்தனர். அப்போது ஒரே ஒரு பேரீச்சம்பழத்தை தவிர வேறெதுவும் அவருக்கு என்னிடம் கிடைக்கவில்லை. ஆகவே, நான் அதை அவருக்குக் கொடுத்தேன். உடனே அதனை அவர் இரண்டாகப் பிட்டு குழந்தைகள் இருவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார். பிறகு அப்பெண்மணி எழுந்து சென்றுவிட்டார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் இதுபற்றி நான் சென்னேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “யார் இந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள்” என்றார்கள்.

5996. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ سُلَيْمٍ، حَدَّثَنَا أَبُو قَتَادَةَ، قَالَ خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَأُمَامَةُ بِنْتُ أَبِي الْعَاصِ عَلَى عَاتِقِهِ، فَصَلَّى فَإِذَا رَكَعَ وَضَعَهَا، وَإِذَا رَفَعَ رَفَعَهَا.
பாடம்: 18
(ஒருவர் தம்) குழந்தைகள்மீது அன்பு காட்டுவதும் அவர்களை முத்தமிட்டு அணைத்துக் கொள்வதும்
நபி (ஸல்) அவர்கள் (தம் குழந்தை) இப்ராஹீமைத் தூக்கி (உச்சி) முகர்ந்து முத்தமிட்டார்கள்.
இதை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22
5996. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது தோளின் மீது (சிறுமி) உமாமா பின்த் அபில் ஆஸை அமர்த்தியவாறு எங்களிடையே வந்து அப்படியே (எங்களுக்கு இமாமாக நின்று) தொழுவித்தார்கள். அவர்கள் ருகூஉ செய்யும்போது உமாமாவைக் கீழிறக்கிவிட்டார்கள். (சஜ்தாவிலிருந்து நிலைக்கு) உயரும்போது அவரை மீண்டும் (தோளில்) ஏற்றிக்கொண்டார்கள்.24

5997. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَبَّلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْحَسَنَ بْنَ عَلِيٍّ وَعِنْدَهُ الأَقْرَعُ بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ جَالِسًا. فَقَالَ الأَقْرَعُ إِنَّ لِي عَشَرَةً مِنَ الْوَلَدِ مَا قَبَّلْتُ مِنْهُمْ أَحَدًا. فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ "" مَنْ لاَ يَرْحَمُ لاَ يُرْحَمُ "".
பாடம்: 18
(ஒருவர் தம்) குழந்தைகள்மீது அன்பு காட்டுவதும் அவர்களை முத்தமிட்டு அணைத்துக் கொள்வதும்
நபி (ஸல்) அவர்கள் (தம் குழந்தை) இப்ராஹீமைத் தூக்கி (உச்சி) முகர்ந்து முத்தமிட்டார்கள்.
இதை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22
5997. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹசன் பின் அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ பின் ஹாபிஸ் அத்தமீமீ (ரலி) அவர்கள், “எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை” என்றார்.
அவரை ஏறெடுத்துப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்” என்று கூறினார்கள்.

5998. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ تُقَبِّلُونَ الصِّبْيَانَ فَمَا نُقَبِّلُهُمْ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَوَ أَمْلِكُ لَكَ أَنْ نَزَعَ اللَّهُ مِنْ قَلْبِكَ الرَّحْمَةَ "".
பாடம்: 18
(ஒருவர் தம்) குழந்தைகள்மீது அன்பு காட்டுவதும் அவர்களை முத்தமிட்டு அணைத்துக் கொள்வதும்
நபி (ஸல்) அவர்கள் (தம் குழந்தை) இப்ராஹீமைத் தூக்கி (உச்சி) முகர்ந்து முத்தமிட்டார்கள்.
இதை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22
5998. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பைக் கழற்றிவிட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்கள்.

5999. حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ قَدِمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم سَبْىٌ، فَإِذَا امْرَأَةٌ مِنَ السَّبْىِ قَدْ تَحْلُبُ ثَدْيَهَا تَسْقِي، إِذَا وَجَدَتْ صَبِيًّا فِي السَّبْىِ أَخَذَتْهُ فَأَلْصَقَتْهُ بِبَطْنِهَا وَأَرْضَعَتْهُ، فَقَالَ لَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَتَرَوْنَ هَذِهِ طَارِحَةً وَلَدَهَا فِي النَّارِ "". قُلْنَا لاَ وَهْىَ تَقْدِرُ عَلَى أَنْ لاَ تَطْرَحَهُ. فَقَالَ "" اللَّهُ أَرْحَمُ بِعِبَادِهِ مِنْ هَذِهِ بِوَلَدِهَا "".
பாடம்: 18
(ஒருவர் தம்) குழந்தைகள்மீது அன்பு காட்டுவதும் அவர்களை முத்தமிட்டு அணைத்துக் கொள்வதும்
நபி (ஸல்) அவர்கள் (தம் குழந்தை) இப்ராஹீமைத் தூக்கி (உச்சி) முகர்ந்து முத்தமிட்டார்கள்.
இதை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22
5999. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள். குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள்.
அப்போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், “இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!” என்றார்கள். நாங்கள், “இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது” என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்கள்மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்” என்று சொன்னார்கள்.

6000. حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" جَعَلَ اللَّهُ الرَّحْمَةَ مِائَةَ جُزْءٍ، فَأَمْسَكَ عِنْدَهُ تِسْعَةً وَتِسْعِينَ جُزْءًا، وَأَنْزَلَ فِي الأَرْضِ جُزْءًا وَاحِدًا، فَمِنْ ذَلِكَ الْجُزْءِ يَتَرَاحَمُ الْخَلْقُ، حَتَّى تَرْفَعَ الْفَرَسُ حَافِرَهَا عَنْ وَلَدِهَا خَشْيَةَ أَنْ تُصِيبَهُ "".
பாடம்: 19
அல்லாஹ் அன்பை நூறு பாகங் களாகப் பங்கிட்டான்.
6000. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக் கொண்டான். (மீதியிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம்காட்டுகின்றன. எந்த அளவுக்கென்றால், மிதித்துவிடுவோமோ என்ற அச்சத்தால் குதிரை தனது குட்டியைவிட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 78
6000. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக் கொண்டான். (மீதியிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம்காட்டுகின்றன. எந்த அளவுக்கென்றால், மிதித்துவிடுவோமோ என்ற அச்சத்தால் குதிரை தனது குட்டியைவிட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 78
6001. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الذَّنْبِ أَعْظَمُ قَالَ "" أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهْوَ خَلَقَكَ "". ثُمَّ قَالَ أَىُّ قَالَ "" أَنْ تَقْتُلَ وَلَدَكَ خَشْيَةَ أَنْ يَأْكُلَ مَعَكَ "". قَالَ ثُمَّ أَىُّ قَالَ "" أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ "". وَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم {وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ}.
பாடம்: 20
உணவளிக்க வேண்டுமே என அஞ்சி ஒருவர் தம் குழந்தையையே கொலை செய்வது (கொடிய பாவமாகும்).
6001. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், “அல்லாஹ்வின் தூதரே! பாவங்களிலேயே மிகப் பெரியது எது?” என்று கேட்டேன். “உன்னைப் படைத்த இறைவனுக்கே நீ இணைகற்பிப்பது ஆகும்” என்று பதிலளித்தார்கள். “பிறகு எது?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீயே கொலை செய்வது” என்று சொன்னார்கள். நான், “பிறகு எது?” என்றேன். “உன் அண்டை வீட்டுக்காரனின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவது” என்றார்கள்.
நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், “அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள்” என்று தொடங்கும் (25:68 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.25

6002. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَضَعَ صَبِيًّا فِي حِجْرِهِ يُحَنِّكُهُ، فَبَالَ عَلَيْهِ، فَدَعَا بِمَاءٍ فَأَتْبَعَهُ.
பாடம்: 21
சிறு குழந்தையை மடியில் வைத்தல்
6002. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு சிறு குழந்தையைத் தமது மடியில் வைத்து இனிப்புப் பொருளை மென்று அதன் வாயிலிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள்மீது அந்தக் குழந்தை சிறுநீர் கழித்துவிட்டது. ஆகவே, அவர்கள் தண்ணீர் கொண்டுவரச்சொல்லி அதன்மீது ஊற்றச்செய்தார்கள்.26