5251.
பாடம்: 1 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நபியே! (மக்களிடம் கூறுக:) நீங்கள் பெண்களுக்கு மணவிலக்கு அளிப்பீர் களானால், அவர்களுடைய ‘இத்தா’விற்கேற்ற நேரத்தில் மணவிலக்கு அளித்து, ‘இத்தா’வைக் கணக்கிட்டுவாருங்கள் (65:1) (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள ‘அஹ்ஸூ’ எனும் சொல்லின் வினைச் சொல்லான) ‘அஹ்ஸய்னாஹு’ எனும் சொல்லுக்கு ‘அதை நாம் கணக்கிட்டு மனனமிட்டோம்’ என்பது பொருள். ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளாமல் (மாதவிடாய் போன்றவற்றிலிருந்து) அவள் தூய்மையானவளாய் இருக்கும் சமயத்தில் இரு சாட்சிகளின் முன்னிலையில் அளிக்கின்ற மணவிலக்கு (நபிவழியில் அமைந்த) ‘தலாக்குஸ் ஸுன்னா’ ஆகும்.2
5251. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். அப்போது அவள் மாதவிடாய்ப் பருவத்தில் இருந்தாள்.

ஆகவே, (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையாரிடம், ‘‘உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்: அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து அவள் தூய்மையடையும்வரை அவளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும்.

பிறகு அவர் நாடினால், (இரண்டாம் மாதவிடாயிலிருந்து தூய்மையான) பின்னர் (தொடர்ந்து அவளை) தம்மிடமே (தம் மனைவியாக) வைத்திருக்கட்டும். அவர் நாடினால் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன்பாக அவளை மணவிலக்குச் செய்யட்டும்.

(மாதவிடாயிலிருந்து தூய்மையான) இந்தக் காலகட்டமே மனைவியரை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் (2:228ஆவது வசனத்தில்) அனுமதித்துள்ள (‘இத்தா’ காலத்தைக் கணக்கிட்டுக்கொள்வ தற்கு ஏற்ற) காலகட்டமாகும்” என்று சொன்னார்கள்.3

அத்தியாயம் :
5252. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، قَالَ طَلَّقَ ابْنُ عُمَرَ امْرَأَتَهُ وَهْىَ حَائِضٌ، فَذَكَرَ عُمَرُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" لِيُرَاجِعْهَا "". قُلْتُ تُحْتَسَبُ قَالَ "" فَمَهْ "". وَعَنْ قَتَادَةَ عَنْ يُونُسَ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ "" مُرْهُ فَلْيُرَاجِعْهَا "". قُلْتُ تُحْتَسَبُ قَالَ أَرَأَيْتَ إِنْ عَجَزَ وَاسْتَحْمَقَ.
பாடம்: 2 மாதவிடாயிலிருக்கும் பெண்ணுக்கு மணவிலக்கு அளிக்கப்பட்டாலும் அந்த மணவிலக்கு நிகழ்ந்ததாகவே கருதப்படும்.4
5252. அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

மாதவிடாயிலிருந்த என் மனைவியை நான் மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, இது குறித்து (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘(உங்கள் புதல்வர்) தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார் கள்:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், ‘‘(மாதவிடாயின்போது சொல்லப்பட்ட இந்த தலாக்) ஒரு தலாக்காகக் கருதப்படுமா?” என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘‘(தலாக்காகக் கருதப்படாமல்) வேறென்ன?” என்று கேட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள தகவலில் (பின்வருமாறு) காணப்படுகிறது:

நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், ‘‘(உங்கள் புதல்வர்) தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு அவருக்கு நீங்கள் கட்டளையிடுங்கள்” என்று கூறினார்கள்.

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ‘‘(மாதவிடாய்ப் பருவத்தில்) செய்யப்பட்ட இந்த மணவிலக்கு) மணவிலக்காகக் கருதப்படுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அவன் (தன் கடமையை நிறைவேற்ற) இயலாமலும் (அதை) அறிந்துகொள்ளாமலும் இருந்துவிட்டால் (மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா) என்ன?” என்று கேட்டார்கள்.

அத்தியாயம் : 68
5253. وَقَالَ أَبُو مَعْمَرٍ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ حُسِبَتْ عَلَىَّ بِتَطْلِيقَةٍ.
பாடம்: 2 மாதவிடாயிலிருக்கும் பெண்ணுக்கு மணவிலக்கு அளிக்கப்பட்டாலும் அந்த மணவிலக்கு நிகழ்ந்ததாகவே கருதப்படும்.4
5253. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் மனைவி மாதவிடாய்ப் பருவத்தில் இருந்தபோது நான் அளித்த) அந்த மணவிலக்கை, நான் சொன்ன ‘ஒரு தலாக்’ என்றே கணிக்கப்பட்டது.

அத்தியாயம் : 68
5254. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ سَأَلْتُ الزُّهْرِيَّ أَىُّ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم اسْتَعَاذَتْ مِنْهُ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ ابْنَةَ الْجَوْنِ لَمَّا أُدْخِلَتْ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَدَنَا مِنْهَا قَالَتْ أَعُوذُ بِاللَّهِ مِنْكَ. فَقَالَ لَهَا "" لَقَدْ عُذْتِ بِعَظِيمٍ، الْحَقِي بِأَهْلِكِ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ رَوَاهُ حَجَّاجُ بْنُ أَبِي مَنِيعٍ عَنْ جَدِّهِ عَنِ الزُّهْرِيِّ أَنَّ عُرْوَةَ أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ قَالَتْ.
பாடம்: 3 தம் மனைவியை மணவிலக்குச் செய்யும் ஒருவர், அதை மனைவி யிடமே நேரடியாகத் தெரிவிக்கலாமா?
5254. அப்துர் ரஹ்மான் பின் அல்அவ்ஸாயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், ‘‘(நபி (ஸல்) அவர்களிடம்) ‘நான் தங்களிடமிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புக் கோருகி றேன்’ என்று அவர்களுடைய துணைவியரில் யார் கூறியது?” எனக் கேட்டேன். அதற்கு ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துரைத்தபடி உர்வா (ரஹ்) அவர்கள் அறிவித்த (பின்வரும்) ஹதீஸைக் கூறினார்கள்:

‘அல்ஜவ்ன்’ குலத்துப் பெண் ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (திருமணத்திற்குப்பின் தாம்பத்திய உறவிற்காக) உள்ளே அனுப்பியபோது அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நெருங்கினார்கள். அப்போது அவர், ‘‘உங்களிடத்திலிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரு கிறேன்” என்று கூறினார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘மகத்துவ மிக்க (இறை)வனிடம் நீ பாதுகாப்புக் கோரிவிட்டாய்! உன் குடும்பத் தாரிடம் நீ சென்றுவிடு!” என்று கூறி விட்டார்கள்.5

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 68

5255. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ غَسِيلٍ، عَنْ حَمْزَةَ بْنِ أَبِي أُسَيْدٍ، عَنْ أَبِي أُسَيْدٍ ـ رضى الله عنه ـ قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَتَّى انْطَلَقْنَا إِلَى حَائِطٍ يُقَالُ لَهُ الشَّوْطُ، حَتَّى انْتَهَيْنَا إِلَى حَائِطَيْنِ فَجَلَسْنَا بَيْنَهُمَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اجْلِسُوا هَا هُنَا "". وَدَخَلَ وَقَدْ أُتِيَ بِالْجَوْنِيَّةِ، فَأُنْزِلَتْ فِي بَيْتٍ فِي نَخْلٍ فِي بَيْتٍ أُمَيْمَةُ بِنْتُ النُّعْمَانِ بْنِ شَرَاحِيلَ وَمَعَهَا دَايَتُهَا حَاضِنَةٌ لَهَا، فَلَمَّا دَخَلَ عَلَيْهَا النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ "" هَبِي نَفْسَكِ لِي "". قَالَتْ وَهَلْ تَهَبُ الْمَلِكَةُ نَفْسَهَا لِلسُّوقَةِ. قَالَ فَأَهْوَى بِيَدِهِ يَضَعُ يَدَهُ عَلَيْهَا لِتَسْكُنَ فَقَالَتْ أَعُوذُ بِاللَّهِ مِنْكَ. فَقَالَ "" قَدْ عُذْتِ بِمَعَاذٍ "". ثُمَّ خَرَجَ عَلَيْنَا، فَقَالَ "" يَا أَبَا أُسَيْدٍ اكْسُهَا رَازِقِيَّتَيْنِ وَأَلْحِقْهَا بِأَهْلِهَا"".
பாடம்: 3 தம் மனைவியை மணவிலக்குச் செய்யும் ஒருவர், அதை மனைவி யிடமே நேரடியாகத் தெரிவிக்கலாமா?
5255. அபூஉசைத் மாலிக் பின் ரபீஆ அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) ‘அஷ்ஷவ்த்’ (அல்லது ‘அஷ்ஷவ்ழ்’) என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதன் அருகில் இருந்த வேறு) இரு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இங்கேயே அமர்ந்திருங்கள்” என்று சொல்லிவிட்டுத் தோட்டத்திற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்துவரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத் திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப் பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் பின் ஷராஹீல் (என்பதாகும்).

அவருடன் அவரை வளர்த்த செவிóத்தாயும் இருந்தார். (அப்பெண்ணுக் கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி (ஸல்) அவர்கள் நுழைந்து ‘‘உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!” என்று கூறினார்கள்.

அந்தப் பெண் ‘‘ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?” என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தை அவர்மீது வைக்கப்போனார்கள். உடனே அவர் ‘‘உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று சொன்னார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கி ‘‘கண்ணியமான (இறை)வனிடம்தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், ‘‘அபூஉசைதே! இரு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய் விட்டுவிடு” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 68
5256. وَقَالَ الْحُسَيْنُ بْنُ الْوَلِيدِ النَّيْسَابُورِيُّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبَّاسِ بْنِ سَهْلٍ، عَنْ أَبِيهِ، وَأَبِي، أُسَيْدٍ قَالاَ تَزَوَّجَ النَّبِيُّ صلى الله عليه وسلم أُمَيْمَةَ بِنْتَ شَرَاحِيلَ، فَلَمَّا أُدْخِلَتْ عَلَيْهِ بَسَطَ يَدَهُ إِلَيْهَا فَكَأَنَّهَا كَرِهَتْ ذَلِكَ فَأَمَرَ أَبَا أُسَيْدٍ أَنْ يُجَهِّزَهَا وَيَكْسُوَهَا ثَوْبَيْنِ رَازِقِيَّيْنِ.
பாடம்: 3 தம் மனைவியை மணவிலக்குச் செய்யும் ஒருவர், அதை மனைவி யிடமே நேரடியாகத் தெரிவிக்கலாமா?
5256. சஹ்ல் பின் சஅத் (ரலி), அபூஉசைத் (ரலி) ஆகியோர் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள். (தாம்பத்திய உறவைத் தொடங்குவதற்காக) அப்பெண் நபியவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது, அவரை நோக்கித் தமது கரத்தை நபி (ஸல்) அவர்கள் நீட்டினார்கள். அதை அப்பெண் விரும்பவில்லைபோலும். ஆகவே, அப்பெண்ணை (அவளுடைய குடும்பத்தாரிடம்) அனுப்பி வைத்திடுமாறும், அவளுக்கு இரு வெண்ணிறச் சணல் ஆடைகளை அளித்திடுமாறும் அபூஉசைத் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 68
5258. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي غَلاَّبٍ، يُونُسَ بْنِ جُبَيْرٍ قَالَ قُلْتُ لاِبْنِ عُمَرَ رَجُلٌ طَلَّقَ امْرَأَتَهُ وَهْىَ حَائِضٌ. فَقَالَ تَعْرِفُ ابْنَ عُمَرَ إِنَّ ابْنَ عُمَرَ طَلَّقَ امْرَأَتَهُ وَهْىَ حَائِضٌ فَأَتَى عُمَرُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ فَأَمَرَهُ أَنْ يُرَاجِعَهَا فَإِذَا طَهُرَتْ فَأَرَادَ أَنْ يُطَلِّقَهَا فَلْيُطَلِّقْهَا، قُلْتُ فَهَلْ عَدَّ ذَلِكَ طَلاَقًا قَالَ أَرَأَيْتَ إِنْ عَجَزَ وَاسْتَحْمَقَ.
பாடம்: 3 தம் மனைவியை மணவிலக்குச் செய்யும் ஒருவர், அதை மனைவி யிடமே நேரடியாகத் தெரிவிக்கலாமா?
5258. யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ‘‘ஒருவர் மாதவிடாயிலிருக்கும் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டார். (அது குறித்து மார்க்கம் என்ன தீர்ப்புச் செய்கிறது?)” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘‘இப்னு உமர் (அதாவது நான்) யார் என்று உங்களுக்குத் தெரியும். நான் மாதவிடாய்ப் பருவத்திலிருந்த என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் சென்று இது குறித்துத் தெரிவித்தார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘உங்கள் புதல்வர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்; அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையான பிறகு அவளை மணவிலக்குச் செய்ய விரும்பினால் அவளை அவர் மணவிலக்குச் செய்துகொள்ளட்டும்’ என உத்தரவிடுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் கூறுகிறார்:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், ‘‘(மனைவி மாதவிடாயிலிருந்தபோது தாங்கள் அளித்த மணவிலக்கை) நபி (ஸல்) அவர்கள் ‘தலாக்’ என்றே கருதினார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘‘அவன் (தன் கடமையை நிறைவேற்ற) இயலாமலும் (அதை) அறிந்துகொள்ளாமலும் இருந்துவிட்டால் (மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா) என்ன?” என்று கேட்டார்கள்.6

அத்தியாயம் : 68
5259. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، أَخْبَرَهُ أَنَّ عُوَيْمِرًا الْعَجْلاَنِيَّ جَاءَ إِلَى عَاصِمِ بْنِ عَدِيٍّ الأَنْصَارِيِّ، فَقَالَ لَهُ يَا عَاصِمُ أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً، أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ، أَمْ كَيْفَ يَفْعَلُ سَلْ لِي يَا عَاصِمُ عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلَ عَاصِمٌ عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَكَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسَائِلَ وَعَابَهَا حَتَّى كَبُرَ عَلَى عَاصِمٍ مَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا رَجَعَ عَاصِمٌ إِلَى أَهْلِهِ جَاءَ عُوَيْمِرٌ فَقَالَ يَا عَاصِمُ مَاذَا قَالَ لَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ عَاصِمٌ لَمْ تَأْتِنِي بِخَيْرٍ، قَدْ كَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسْأَلَةَ الَّتِي سَأَلْتُهُ عَنْهَا. قَالَ عُوَيْمِرٌ وَاللَّهِ لاَ أَنْتَهِي حَتَّى أَسْأَلَهُ عَنْهَا فَأَقْبَلَ عُوَيْمِرٌ حَتَّى أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَسَطَ النَّاسِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً، أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ، أَمْ كَيْفَ يَفْعَلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قَدْ أَنْزَلَ اللَّهُ فِيكَ وَفِي صَاحِبَتِكَ فَاذْهَبْ فَأْتِ بِهَا "". قَالَ سَهْلٌ فَتَلاَعَنَا وَأَنَا مَعَ النَّاسِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا فَرَغَا قَالَ عُوَيْمِرٌ كَذَبْتُ عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ، إِنْ أَمْسَكْتُهَا، فَطَلَّقَهَا ثَلاَثًا قَبْلَ أَنْ يَأْمُرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ ابْنُ شِهَابٍ فَكَانَتْ تِلْكَ سُنَّةُ الْمُتَلاَعِنَيْنِ.
பாடம்: 4 ‘முத்தலாக்’ செல்லும் என்று கூறுவோர் (பின்வரும் வசனத்தை ஆதாரமாகக் கொள்கிறார்கள்:)7 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (திரும்ப அழைக்கும் உரிமையுள்ள) ‘தலாக்’ இரண்டேதான். பின்னர் முறைப் படி (அவர்களை மனைவியராகத் தம்முடன்) வைத்துக்கொள்ளலாம். அல்லது நன்முறையில் அவர்களை விடுவித்து விடலாம். (2:229).8 அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மரணப் படுக்கையில் உள்ள) நோயாளி ஒருவர் தம் மனைவியை (‘அல்பத்தா’ எனும்) ஒட்டுமொத்த தலாக் சொல்லிவிட்டால், (அவரது மறைவுக்குப்பிறகு அவருடைய சொத்துக்கு) அவள் வாரிசு ஆவாள் என நான் கருதவில்லை.9 ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள், ‘‘அவள் தன் கணவனுக்கு வாரிசாவாள்” என்று கூறினார்கள். ‘‘இந்தப் பெண் ‘இத்தா’ காலம் முடிந்தபின் வேறொருவரை மணமுடித்துக் கொள்ளலாமா?” என்று இப்னு ஷுப்ருமா (ரஹ்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு ‘அபீ (ரஹ்) அவர்கள், ‘‘ஆம். (மண முடித்துக்கொள்ளலாம்)” என்று பதிலளித் தார்கள். உடனே இப்னு ஷுப்ருமா (ரஹ்) அவர்கள், ‘‘இரண்டாம் கணவரும் இறந்துவிட்டால் (ஒரே நேரத்தில் அவள் இரு கணவர்களின் சொத்திலிருந்தும் பங்கு பெறுவாளே?”) என்று கேட்டார்கள். அப்போது ‘அபீ (ரஹ்) அவர்கள் தமது கருத்தினை திரும்பப் பெற்றுக்கொண் டார்கள்.10
5259. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அஜ்லான் குலத்தைச் சேர்ந்த உவைமிர் (ரலி) அவர்கள் (தமது குலத்தின் தலைவரான) ஆஸிம் பின் அதீ அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம் வந்து, ‘‘ஆஸிம் அவர்களே! தம் மனைவியுடன் மற்றோர் அந்நிய ஆடவன் (தகாத உறவு கொண்டபடி) இருக்கக் கண்ட ஒரு மனிதனின் விஷயத்தில் என்ன கூறுகின்றீர்கள்? அவன் அந்த (அந்நிய) ஆடவனைக் கொன்றுவிடலாமா? அவ்வாறு கொன்றுவிட்டால் (பழிவாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? எனக்காக இந்த விவகாரம் குறித்து ஆஸிமே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்” என்று கூறினார்.

ஆகவே, (ஆஸிம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று கேட்கத் தொடங்க) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை. அவற்றை அநாகரிகமாகக் கருதலானார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட (கண்டன) வார்த்தைகள் ஆஸிம் (ரலி) அவர்களுக்குக் கடினமாயிற்று. ஆஸிம் (ரலி) அவர்கள் தம் வீட்டாரிடம் திரும்பி வந்தபோது உவைமிர் வந்து, ‘‘ஆஸிம் அவர்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு ஆஸிம் (ரலி) அவர்கள், ‘‘நீ எனக்கு நன்மை செய்யவில்லை. (சிக்கலில் என்னைச் சிக்கவைத்துவிட்டாய்;) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நான் கேட்ட இந்தக் கேள்வி பிடிக்கவில்லை” என்று பதிலளித்தார்கள்.

அதற்கு உவைமிர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நானே (நேரடியாக) இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்காமல் ஓயமாட்டேன்” என்று கூறியபடி மக்களிடையேயிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார். பிறகு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அந்நிய ஆடவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால் அவன் அந்த ஆடவனைக் கொல்லலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால் பழிக்குப்பழியாக) நீங்கள் அம்மனிதனைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ் உமது விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் (குர்ஆன் வசனத்தை) அருளிவிட்டான். ஆகவே, நீர் சென்று, உம்முடைய மனைவியை அழைத்து வாரும்!” என்று சொன்னார்கள்.

பிறகு அவர்கள் இருவரும் (‘லிஆன்’ எனும்)சாப அழைப்புப் பிரமாணம் செய்தனர். அப்போது மக்களுடன் நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன். (தம்பதியர்) இருவரும் (லிஆன் செய்து) முடித்தபோது (கணவரான) உவைமிர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் இவளை (மணவிலக்குச் செய்யாமல் மனைவியாகவே இனியும்) வைத்திருந்தால் இவள்மீது நான் பொய்(யான குற்றச்சாட்டு) சொன்னவனாக ஆகிவிடுவேன்” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு ஆணையிடுவதற்கு முன்பே அவளை முத்தலாக் சொல்லிவிட்டார்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

பிறகு இந்த வழிமுறையே (அவர்களுக்குப்பின்) ‘லிஆன்’ செய்யும் தம்பதியருக்கு முன்மாதிரி ஆகிவிட்டது.11

அத்தியாயம் : 68
5260. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ أَنَّ امْرَأَةَ رِفَاعَةَ الْقُرَظِيِّ جَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ رِفَاعَةَ طَلَّقَنِي فَبَتَّ طَلاَقِي، وَإِنِّي نَكَحْتُ بَعْدَهُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزَّبِيرِ الْقُرَظِيَّ، وَإِنَّمَا مَعَهُ مِثْلُ الْهُدْبَةِ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَعَلَّكِ تُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ، لاَ، حَتَّى يَذُوقَ عُسَيْلَتَكِ وَتَذُوقِي عُسَيْلَتَهُ "".
பாடம்: 4 ‘முத்தலாக்’ செல்லும் என்று கூறுவோர் (பின்வரும் வசனத்தை ஆதாரமாகக் கொள்கிறார்கள்:)7 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (திரும்ப அழைக்கும் உரிமையுள்ள) ‘தலாக்’ இரண்டேதான். பின்னர் முறைப் படி (அவர்களை மனைவியராகத் தம்முடன்) வைத்துக்கொள்ளலாம். அல்லது நன்முறையில் அவர்களை விடுவித்து விடலாம். (2:229).8 அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மரணப் படுக்கையில் உள்ள) நோயாளி ஒருவர் தம் மனைவியை (‘அல்பத்தா’ எனும்) ஒட்டுமொத்த தலாக் சொல்லிவிட்டால், (அவரது மறைவுக்குப்பிறகு அவருடைய சொத்துக்கு) அவள் வாரிசு ஆவாள் என நான் கருதவில்லை.9 ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள், ‘‘அவள் தன் கணவனுக்கு வாரிசாவாள்” என்று கூறினார்கள். ‘‘இந்தப் பெண் ‘இத்தா’ காலம் முடிந்தபின் வேறொருவரை மணமுடித்துக் கொள்ளலாமா?” என்று இப்னு ஷுப்ருமா (ரஹ்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு ‘அபீ (ரஹ்) அவர்கள், ‘‘ஆம். (மண முடித்துக்கொள்ளலாம்)” என்று பதிலளித் தார்கள். உடனே இப்னு ஷுப்ருமா (ரஹ்) அவர்கள், ‘‘இரண்டாம் கணவரும் இறந்துவிட்டால் (ஒரே நேரத்தில் அவள் இரு கணவர்களின் சொத்திலிருந்தும் பங்கு பெறுவாளே?”) என்று கேட்டார்கள். அப்போது ‘அபீ (ரஹ்) அவர்கள் தமது கருத்தினை திரும்பப் பெற்றுக்கொண் டார்கள்.10
5260. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்களின் துணைவியார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ரிஃபாஆ என்னை நோக்கி ஒட்டுமொத்தத் தலாக்கையும் கூறிவிட்டார். நான் அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் அல்குறழீ அவர்களை மணமுடித்துக் கொண்டேன். ஆனால், அவருக்கு (இனஉறுப்பு என்று) இருப்பதெல்லாம் இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றதுதான்” என்று கூறினார். (ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அப்துர் ரஹ்மான் மறுத்தார். முதல் மனைவி மூலம் தமக்குப் பிறந்த குழந்தைகளையும் காட்டினார்.)

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீ (உன் பழைய கணவர்) ‘ரிஃபாஆ’விடமே திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? இல்லை! (அவ்வாறு பழைய கணவரை மீண்டும் மணந்து கொள்ள முடியாது; உன்னுடைய இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும், நீ அவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும்வரையிலும் (முன்னாள் கணவரான ரிஃபாஆவை மணக்க முடியாது)” என்று கூறினார்கள்.12

அத்தியாயம் : 68
5261. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَجُلاً، طَلَّقَ امْرَأَتَهُ ثَلاَثًا، فَتَزَوَّجَتْ فَطَلَّقَ فَسُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَتَحِلُّ لِلأَوَّلِ قَالَ "" لاَ، حَتَّى يَذُوقَ عُسَيْلَتَهَا كَمَا ذَاقَ الأَوَّلُ "".
பாடம்: 4 ‘முத்தலாக்’ செல்லும் என்று கூறுவோர் (பின்வரும் வசனத்தை ஆதாரமாகக் கொள்கிறார்கள்:)7 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (திரும்ப அழைக்கும் உரிமையுள்ள) ‘தலாக்’ இரண்டேதான். பின்னர் முறைப் படி (அவர்களை மனைவியராகத் தம்முடன்) வைத்துக்கொள்ளலாம். அல்லது நன்முறையில் அவர்களை விடுவித்து விடலாம். (2:229).8 அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மரணப் படுக்கையில் உள்ள) நோயாளி ஒருவர் தம் மனைவியை (‘அல்பத்தா’ எனும்) ஒட்டுமொத்த தலாக் சொல்லிவிட்டால், (அவரது மறைவுக்குப்பிறகு அவருடைய சொத்துக்கு) அவள் வாரிசு ஆவாள் என நான் கருதவில்லை.9 ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள், ‘‘அவள் தன் கணவனுக்கு வாரிசாவாள்” என்று கூறினார்கள். ‘‘இந்தப் பெண் ‘இத்தா’ காலம் முடிந்தபின் வேறொருவரை மணமுடித்துக் கொள்ளலாமா?” என்று இப்னு ஷுப்ருமா (ரஹ்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு ‘அபீ (ரஹ்) அவர்கள், ‘‘ஆம். (மண முடித்துக்கொள்ளலாம்)” என்று பதிலளித் தார்கள். உடனே இப்னு ஷுப்ருமா (ரஹ்) அவர்கள், ‘‘இரண்டாம் கணவரும் இறந்துவிட்டால் (ஒரே நேரத்தில் அவள் இரு கணவர்களின் சொத்திலிருந்தும் பங்கு பெறுவாளே?”) என்று கேட்டார்கள். அப்போது ‘அபீ (ரஹ்) அவர்கள் தமது கருத்தினை திரும்பப் பெற்றுக்கொண் டார்கள்.10
5261. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் தம் மனைவியை மூன்று தலாக் சொல்லிவிட்டார். ஆகவே, அவள் இன்னொருவரை மணந்துகொண்டாள். அவரும் தலாக் சொல்லிவிட்டார். ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம் (இது குறித்து) ‘‘முந்திய கணவருக்கு அவள் (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்டவளா?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘இல்லை; முந்தைய கணவர் (தாம்பத்திய) இன்பம் அனுபவித்ததைப் போன்றே (அவளுடைய இரண்டாம் கணவரான) இவரும் அவளிடம் இன்பம் அனுபவிக்கும்வரையில் முடியாது” என்று கூறி விட்டார்கள்.13

அத்தியாயம் : 68
5262. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا مُسْلِمٌ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ خَيَّرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَاخْتَرْنَا اللَّهَ وَرَسُولَهُ، فَلَمْ يَعُدَّ ذَلِكَ عَلَيْنَا شَيْئًا.
பாடம்: 5 ஒருவர் தம் துணைவியருக்கு (தம் மிடமிருந்து பிரிந்துவிட) உரிமை அளிப்பது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நபியே! உம்முடைய துணைவியரிடம் கூறுவீராக: நீங்கள் இவ்வுலக வாழ்க்கையை யும் அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துவிடுகிறேன். (33:28)
5262. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியரான) எங்களுக்கு (விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமை அளித்தார்கள். அப்போது நாங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் தேர்ந்தெடுத்தோம். இ(வ்வாறு உரிமை அளித்த)தை அவர்கள் தலாக் எனக் கருதவில்லை.14

அத்தியாயம் : 68
5263. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَامِرٌ، عَنْ مَسْرُوقٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنِ الْخِيَرَةِ،، فَقَالَتْ خَيَّرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَفَكَانَ طَلاَقًا قَالَ مَسْرُوقٌ لاَ أُبَالِي أَخَيَّرْتُهَا وَاحِدَةً أَوْ مِائَةً بَعْدَ أَنْ تَخْتَارَنِي.
பாடம்: 5 ஒருவர் தம் துணைவியருக்கு (தம் மிடமிருந்து பிரிந்துவிட) உரிமை அளிப்பது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நபியே! உம்முடைய துணைவியரிடம் கூறுவீராக: நீங்கள் இவ்வுலக வாழ்க்கையை யும் அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துவிடுகிறேன். (33:28)
5263. மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், (ஒருவர் தமது மணபந்தத்திலிருந்து விலகிக்கொள்ள தம் மனைவிக்கு) உரிமை அளிப்பது (‘கியார்’) குறித்துக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ‘‘(தம் துணைவியரான) எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் (தமது மணபந்தத்திலிருந்து விலகிக்கொள்ள) உரிமை அளித்தார்கள்; அது என்ன தலாக்காகவா ஆகிவிட்டது?” என்று கேட்டார்கள்.

(தொடர்ந்து அறிவிப்பாளர்) மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

(இவ்வாறு நான் என் மனைவிக்கு உரிமையளித்து) அவள் என்னையே தேர்ந்தெடுத்துக்கொண்டுவிட்டால், நான் அவளுக்கு (ஆரம்பத்தில்) ஒன்றென்ன! நூறு (தலாக்கு)க்கு உரிமை அளித்திருந் தாலும் அதை நான் பொருட்படுத்த மாட்டேன்.15

அத்தியாயம் : 68
5264. وَقَالَ اللَّيْثُ عَنْ نَافِعٍ، كَانَ ابْنُ عُمَرَ إِذَا سُئِلَ عَمَّنْ طَلَّقَ ثَلاَثًا قَالَ لَوْ طَلَّقْتَ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَنِي بِهَذَا، فَإِنْ طَلَّقْتَهَا ثَلاَثًا حَرُمَتْ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَكَ.
பாடம்: 6 ஒருவர் தம் மனைவியிடம் ‘உன்னை நான் பிரிந்துவிட்டேன்’ என்றோ ‘உன்னை நான் விடுவித்துவிட்டேன்’ என்றோ அல்லது ‘நீங்கிவிட்டேன்’ என்றோ அல்லது தலாக்கின் கருத்தில் அமைந்த ஒரு சொல்லையோ கூறினால், அது அவரது எண்ணப்படியே அமையும்.16 வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் கூறுகின்றான்: நல்ல முறையில் அவர்களை விடுவித்துவிடுங்கள். (33:49) உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துவிடுகிறேன். (33:28) பின்னர் முறைப்படி (அவர்களை மனைவியராகத் தம்முடன்) வைத்துக் கொள்ளலாம். அல்லது நன்முறையில் அவர்களை விடுவித்துவிடலாம். (2:229) ஆகவே, அவர்கள் தங்கள் (இத்தா வின்) தவணையை அடைந்தால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்தி வைத்துக்கொள்ளுங் கள்; அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து (விட்டு)விடுங்கள். (65:2) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவதூறு சம்பவத்தின்போது) நபி (ஸல்) அவர்களிடமிருந்து பிரிந்துவிடுமாறு என் தாய் தந்தையர் எனக்குக் கட்டளை யிடப்போவதில்லை என்பதை நபியவர்கள் அறிந்திருந்தார்கள். பாடம்: 7 ஒருவர் தம் மனைவியிடம் ‘நீ எனக்கு ஹராம் (விலக்கப்பட்டவள்)’ என்று கூறினால்... ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (இவ்வாறு ஒருவர் சொன்னால்) அவரது எண்ணப்படி முடிவு அமையும்.17 ஒருவர் தம் மனைவியை மூன்று தலாக் சொல்லிவிட்டால் அவள் அவருக்கு விலக்கப்பட்டவளாக ஆகிவிடுவாள் என்று அறிஞர்கள் கூறுவதுடன், அதனை ‘ஹராமுன் பித்தலாக்’ என்றும் ‘ஹராமுன் பில்ஃபிராக்’ என்றும் பெயரிட்டு அழைக்கின்றனர். ஆனால், இது உணவை ஒருவர் தம்மீது ஹராமாக்கிக்கொள்வதைப் போன்றதன்று. ஏனெனில், அனுமதிக்கப் பட்ட உணவை (ஒருவர் தமக்கு விலக்கிக் கொள்வதால்) ‘ஹராமான உணவு’ என்று சொல்லப்படாது. ஆனால், மணவிலக்குச் செய்யப்பட்ட பெண்ணை ‘விலக்கப்பட்ட வள்’ என்று சொல்வதுண்டு. மூன்று (கட்ட) தலாக் விஷயத்தில் அல்லாஹ் கூறுகின்றான்: பின்னர் அவன் (மூன்றாவது தவணையில்) அவளை தலாக் சொல்லிவிட்டால், பிறகு அவனல்லாத வேறொரு கணவனை அவள் மணக்கின்ற வரை, அவனுக்கு அவள் அனுமதிக்கப்பட்டவளாகமாட்டாள். (2:230)18
5264. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மூன்று தலாக் சொல்லிவிட்டவர் குறித்து இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டால், ‘‘ஒரு தலாக், அல்லது இரண்டு தலாக் சொல்லியிருந்தால் (திரும்ப அழைத்துக்கொள்ளலாமே!) ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் எனக்குக் கட்டளையிட்டார்கள்.19 ஆனால், அவளை நீ மூன்று தலாக் சொல்லிவிட்டால் வேறொரு கணவரை அவள் மணக்கும்வரை உனக்கு அவள் விலக்கப் பட்டவளாக ஆகிவிடுவாள்” என்று பதிலளிப்பார்கள்.

அத்தியாயம் : 68
5265. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ طَلَّقَ رَجُلٌ امْرَأَتَهُ فَتَزَوَّجَتْ زَوْجًا غَيْرَهُ فَطَلَّقَهَا، وَكَانَتْ مَعَهُ مِثْلُ الْهُدْبَةِ فَلَمْ تَصِلْ مِنْهُ إِلَى شَىْءٍ تُرِيدُهُ، فَلَمْ يَلْبَثْ أَنْ طَلَّقَهَا فَأَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ زَوْجِي طَلَّقَنِي، وَإِنِّي تَزَوَّجْتُ زَوْجًا غَيْرَهُ فَدَخَلَ بِي، وَلَمْ يَكُنْ مَعَهُ إِلاَّ مِثْلُ الْهُدْبَةِ فَلَمْ يَقْرَبْنِي إِلاَّ هَنَةً وَاحِدَةً، لَمْ يَصِلْ مِنِّي إِلَى شَىْءٍ، فَأَحِلُّ لِزَوْجِي الأَوَّلِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَحِلِّينَ لِزَوْجِكِ الأَوَّلِ حَتَّى يَذُوقَ الآخَرُ عُسَيْلَتَكِ، وَتَذُوقِي عُسَيْلَتَهُ "".
பாடம்: 6 ஒருவர் தம் மனைவியிடம் ‘உன்னை நான் பிரிந்துவிட்டேன்’ என்றோ ‘உன்னை நான் விடுவித்துவிட்டேன்’ என்றோ அல்லது ‘நீங்கிவிட்டேன்’ என்றோ அல்லது தலாக்கின் கருத்தில் அமைந்த ஒரு சொல்லையோ கூறினால், அது அவரது எண்ணப்படியே அமையும்.16 வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் கூறுகின்றான்: நல்ல முறையில் அவர்களை விடுவித்துவிடுங்கள். (33:49) உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துவிடுகிறேன். (33:28) பின்னர் முறைப்படி (அவர்களை மனைவியராகத் தம்முடன்) வைத்துக் கொள்ளலாம். அல்லது நன்முறையில் அவர்களை விடுவித்துவிடலாம். (2:229) ஆகவே, அவர்கள் தங்கள் (இத்தா வின்) தவணையை அடைந்தால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்தி வைத்துக்கொள்ளுங் கள்; அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து (விட்டு)விடுங்கள். (65:2) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவதூறு சம்பவத்தின்போது) நபி (ஸல்) அவர்களிடமிருந்து பிரிந்துவிடுமாறு என் தாய் தந்தையர் எனக்குக் கட்டளை யிடப்போவதில்லை என்பதை நபியவர்கள் அறிந்திருந்தார்கள். பாடம்: 7 ஒருவர் தம் மனைவியிடம் ‘நீ எனக்கு ஹராம் (விலக்கப்பட்டவள்)’ என்று கூறினால்... ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (இவ்வாறு ஒருவர் சொன்னால்) அவரது எண்ணப்படி முடிவு அமையும்.17 ஒருவர் தம் மனைவியை மூன்று தலாக் சொல்லிவிட்டால் அவள் அவருக்கு விலக்கப்பட்டவளாக ஆகிவிடுவாள் என்று அறிஞர்கள் கூறுவதுடன், அதனை ‘ஹராமுன் பித்தலாக்’ என்றும் ‘ஹராமுன் பில்ஃபிராக்’ என்றும் பெயரிட்டு அழைக்கின்றனர். ஆனால், இது உணவை ஒருவர் தம்மீது ஹராமாக்கிக்கொள்வதைப் போன்றதன்று. ஏனெனில், அனுமதிக்கப் பட்ட உணவை (ஒருவர் தமக்கு விலக்கிக் கொள்வதால்) ‘ஹராமான உணவு’ என்று சொல்லப்படாது. ஆனால், மணவிலக்குச் செய்யப்பட்ட பெண்ணை ‘விலக்கப்பட்ட வள்’ என்று சொல்வதுண்டு. மூன்று (கட்ட) தலாக் விஷயத்தில் அல்லாஹ் கூறுகின்றான்: பின்னர் அவன் (மூன்றாவது தவணையில்) அவளை தலாக் சொல்லிவிட்டால், பிறகு அவனல்லாத வேறொரு கணவனை அவள் மணக்கின்ற வரை, அவனுக்கு அவள் அனுமதிக்கப்பட்டவளாகமாட்டாள். (2:230)18
5265. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டார். ஆகவே அவள் வேறொருவரை மணந்து கொண்டாள். பிறகு அவரும் மணவிலக்குச் செய்துவிட்டார். (இரண்டாவதாக மணந்த) கணவருக்கு இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றுதான் (இனஉறுப்பு) இருந்தது. அந்தக் கணவரிடமிருந்து தான் விரும்பிய எ(ந்தச் சுகத்)தையும் அவள் அனுபவிக்கவில்லை. வெகு விரைவில் அவளை அவர் மணவிலக்குச் செய்தும் விட்டார்.

ஆகவே, அவள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் கணவர் என்னை மணவிலக்குச் செய்துவிட்டார். பிறகு நான் இன்னொருவரை மணந்துகொண்டேன். அவர் என்னருகில் வந்தார். ஆனால், அவருக்கு இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றுதான் (இன உறுப்பு) இருந்தது. அவர் என்னை ஒரு முறைதான் நெருங்கினார். என்னிடமிருந்து அவர் எ(ந்தச் சுகத்)தையும் அனுபவிக்கவில்லை. ஆகவே, நான் என் முதல் கணவருக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆவேனா?” என்று கேட்டாள். (ஆனால், இந்தக் குற்றச்சாட்டை கணவர் மறுத்தார்.)

எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உன் இரண்டாவது கணவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும்வரையிலும் நீ அவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும் நீ உன் முதல் கணவருக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆகமாட்டாய்” என்று கூறினார்கள்.20

அத்தியாயம் : 68
5266. حَدَّثَنِي الْحَسَنُ بْنُ صَبَّاحٍ، سَمِعَ الرَّبِيعَ بْنَ نَافِعٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ إِذَا حَرَّمَ امْرَأَتَهُ لَيْسَ بِشَىْءٍ. وَقَالَ {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ}
பாடம்: 8 (நபியே!) அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீர் ஏன் விலக்கிக் கொள்கிறீர்? (எனும் 66:1ஆவது இறைவசனம்)
5266. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘ஒருவர் (தம் மனைவியை நோக்கி) ‘அவள் எனக்கு ஹராம் (விலக்கப்பட்டவள்)’ என்று கூறினால் அது (மணவிலக்காகக் கருதப்படும்) ஒரு விஷயமே அல்ல” என்று கூறிவிட்டு, ‘‘உறுதியாக அல்லாஹ்வின் தூதரில் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது” (33:21) என்றும் கூறினார்கள்.21

அத்தியாயம் : 68
5267. حَدَّثَنِي الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ صَبَّاحٍ، حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ زَعَمَ عَطَاءٌ أَنَّهُ سَمِعَ عُبَيْدَ بْنَ عُمَيْرٍ، يَقُولُ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَمْكُثُ عِنْدَ زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ، وَيَشْرَبُ عِنْدَهَا عَسَلاً، فَتَوَاصَيْتُ أَنَا وَحَفْصَةُ أَنَّ أَيَّتَنَا دَخَلَ عَلَيْهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَلْتَقُلْ إِنِّي أَجِدُ مِنْكَ رِيحَ مَغَافِيرَ، أَكَلْتَ مَغَافِيرَ فَدَخَلَ عَلَى إِحْدَاهُمَا فَقَالَتْ لَهُ ذَلِكَ، فَقَالَ "" لاَ بَلْ شَرِبْتُ عَسَلاً عِنْدَ زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ وَلَنْ أَعُودَ لَهُ "". فَنَزَلَتْ {يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ} إِلَى {إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ} لِعَائِشَةَ وَحَفْصَةَ {وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ} لِقَوْلِهِ "" بَلْ شَرِبْتُ عَسَلاً "".
பாடம்: 8 (நபியே!) அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீர் ஏன் விலக்கிக் கொள்கிறீர்? (எனும் 66:1ஆவது இறைவசனம்)
5267. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (அவர்களது அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். ஆகவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள், ‘‘நபி (ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்” எனக் கூடிப்பேசி முடிவு செய்துகொண் டோம். எங்களில் ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசி வைத்திருந்தபடி கூறினோம்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவுதான். சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்” என்று கூறினார்கள்.

ஆகவே, ‘‘நபியே! உம்முடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உமக்கு அனுமதித்த ஒன்றை நீர் ஏன் விலக்கிக்கொள்கிறீர்?” என்று தொடங்கி ‘‘நீங்கள் இருவரும், இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)” என முடியும் (66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான்.22

(இந்த 66:4ஆவது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) ‘நீங்கள் இருவரும்’ என்பது ஆயிஷா (ரலி) அவர்களையும், ஹஃப்ஸா (ரலி) அவர்களையுமே குறிக்கிறது. (66:3ஆவது வசனத்தில்) ‘‘நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார்” என்பது ‘‘இல்லை. நான் தேன்தான் அருந்தினேன். (சத்தியமாக இனி நான் அதை அருந்தமாட்டேன். இது குறித்து யாரிடமும் சொல்லிவிடாதே)” என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதையே குறிக்கின்றது.

அத்தியாயம் : 68
5268. حَدَّثَنَا فَرْوَةُ بْنُ أَبِي الْمَغْرَاءِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُحِبُّ الْعَسَلَ وَالْحَلْوَاءَ، وَكَانَ إِذَا انْصَرَفَ مِنَ الْعَصْرِ دَخَلَ عَلَى نِسَائِهِ، فَيَدْنُو مِنْ إِحْدَاهُنَّ، فَدَخَلَ عَلَى حَفْصَةَ بِنْتِ عُمَرَ، فَاحْتَبَسَ أَكْثَرَ مَا كَانَ يَحْتَبِسُ، فَغِرْتُ فَسَأَلْتُ عَنْ ذَلِكَ فَقِيلَ لِي أَهْدَتْ لَهَا امْرَأَةٌ مِنْ قَوْمِهَا عُكَّةً مِنْ عَسَلٍ، فَسَقَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم مِنْهُ شَرْبَةً، فَقُلْتُ أَمَا وَاللَّهِ لَنَحْتَالَنَّ لَهُ. فَقُلْتُ لِسَوْدَةَ بِنْتِ زَمْعَةَ إِنَّهُ سَيَدْنُو مِنْكِ، فَإِذَا دَنَا مِنْكِ فَقُولِي أَكَلْتَ مَغَافِيرَ فَإِنَّهُ سَيَقُولُ لَكِ لاَ. فَقُولِي لَهُ مَا هَذِهِ الرِّيحُ الَّتِي أَجِدُ مِنْكَ فَإِنَّهُ سَيَقُولُ لَكِ سَقَتْنِي حَفْصَةُ شَرْبَةَ عَسَلٍ فَقُولِي لَهُ جَرَسَتْ نَحْلُهُ الْعُرْفُطَ. وَسَأَقُولُ ذَلِكَ، وَقُولِي أَنْتِ يَا صَفِيَّةُ ذَاكِ. قَالَتْ تَقُولُ سَوْدَةُ فَوَاللَّهِ مَا هُوَ إِلاَّ أَنْ قَامَ عَلَى الْبَابِ، فَأَرَدْتُ أَنْ أُبَادِيَهُ بِمَا أَمَرْتِنِي بِهِ فَرَقًا مِنْكِ، فَلَمَّا دَنَا مِنْهَا قَالَتْ لَهُ سَوْدَةُ يَا رَسُولَ اللَّهِ أَكَلْتَ مَغَافِيرَ قَالَ "" لاَ "". قَالَتْ فَمَا هَذِهِ الرِّيحُ الَّتِي أَجِدُ مِنْكَ. قَالَ "" سَقَتْنِي حَفْصَةُ شَرْبَةَ عَسَلٍ "". فَقَالَتْ جَرَسَتْ نَحْلُهُ الْعُرْفُطَ فَلَمَّا دَارَ إِلَىَّ قُلْتُ لَهُ نَحْوَ ذَلِكَ، فَلَمَّا دَارَ إِلَى صَفِيَّةَ قَالَتْ لَهُ مِثْلَ ذَلِكَ فَلَمَّا دَارَ إِلَى حَفْصَةَ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَلاَ أَسْقِيكَ مِنْهُ. قَالَ "" لاَ حَاجَةَ لِي فِيهِ "". قَالَتْ تَقُولُ سَوْدَةُ وَاللَّهِ لَقَدْ حَرَمْنَاهُ. قُلْتُ لَهَا اسْكُتِي.
பாடம்: 8 (நபியே!) அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீர் ஏன் விலக்கிக் கொள்கிறீர்? (எனும் 66:1ஆவது இறைவசனம்)
5268. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தேனும் இனிப்பும் மிக விருப்பமானவையாக இருந்தன. அஸ்ர் தொழுகையை முடித்ததும் நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் செல்வார்கள்; அவர்களில் சிலருடன் நெருக்கமாகவும் இருப்பார்கள். இவ்வாறு (ஒருமுறை) தம் துணைவியரில் ஒருவரான ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் சென்று வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்துவிட்டார்கள். ஆகவே, நான் ரோஷப்பட்டேன். அது குறித்து நான் விசாரித்தேன்.

அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத் தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகர சுத்த)த்தேன் உள்ள ஒரு தோல் பையை அன்பளிப்பாக வழங்கினாள் என்றும், அதிலிருந்து தயாரித்த பானத்தை நபி (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது.

உடனே நான், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இதை நிறுத்துவதற்காக இதோ ஒரு உபாயம் செய்வோம்” என்று கூறிக்கொண்டு (நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா பின்த் ஸம்ஆவிடம், (ஹஃப்ஸா வீட்டில் தேன் அருந்திவிட்டு) நபி (ஸல்) அவர்கள் உங்கள் அருகில் வருவார்கள். அப்போது கருவேல பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள்! ‘இல்லை’ என்று நபியவர்கள் கூறுவார்கள். உடனே தங்களிடமிருந்து ஏதோ துர்வாடை வருகிறதே அது என்ன? என்று கேளுங்கள்!

அதற்கு நபி அவர்கள் ‘எனக்கு ஹஃப்ஸா தேன் பானம் புகட்டினார்’ என்று கூறுவார்கள். உடனே நீங்கள் ‘இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்துவிட்டு (தேனை உறிஞ்சிக்கொண்டு) வந்திருக்கலாம். (ஆகவேதான் வாடை வருகிறது)’ என்று சொல்லுங்கள்! நானும் இவ்வாறே சொல்கிறேன். ஸஃபிய்யாவே! நீங்களும் இவ்வாறே சொல்லுங்கள் என்று (மற்றொரு துணைவியாரான ஸஃபிய்யாவிடமும்) கூறினேன். (நான் சொன்ன பிரகாரம் செய்துவிட்டு) சவ்தா அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் என் வீட்டு வாசலில் வந்து நின்றவுடன் உங்களுக்குப் பயந்து நீங்கள் என்னிடம் சொன்னபடி நபியவர்களிடம் சொல்ல விரைந்தேன். என்னை நபி (ஸல்) அவர்கள் நெருங்கியதும், ‘அல்லாஹ்வின் தூதரே! கருவேலம் பிசினைச் சாப்பிட்டீர் களா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை’ என்றார்கள். ‘தங்களிட மிருந்து ஏதோ துர்வாடை வருகிறதே அது என்ன?’ என்று கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள் ‘ஹஃப்ஸா எனக்குத் தேன் பானம் புகட்டினார்’ என்றார்கள். உடனே நான் ‘இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேன் உறிஞ்சி)விட்டு வந்திருக்கலாம். (ஆகவேதான், தேனில் வாடை ஏற்பட்டது போலும்)’ என்று சொன்னேன்.

(தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:)

என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது நானும் அவ்வாறே கூறினேன். ஸஃபிய்யாவிடம் நபியவர்கள் சென்றபோதும் அவரும் அவ்வாறே சொன்னார். பிறகு (மறுநாள்) ஹஃப்ஸாவிடம் சென்றபோது ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் அருந்துவதற்குச் சிறிது தேன் தரட்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘அது எனக்குத் தேவையில்லை” என்று சொன்னார்கள். (இது குறித்து) சவ்தா (ரலி) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களை அதைப் பருகவிடாமல் தடுத்துவிட்டோமே’ என்று சொன்னார்கள்.

உடனே அவரிடம் நான், ‘‘சும்மா இருங்கள்! (விஷயம் பரவிவிடப்போகிறது!)” என்று சொன்னேன்.23

அத்தியாயம் : 68
5269. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ اللَّهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي مَا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَتَكَلَّمْ "". قَالَ قَتَادَةُ إِذَا طَلَّقَ فِي نَفْسِهِ فَلَيْسَ بِشَىْءٍ.
பாடம்: 9 மணமுடிப்பதற்கு முன்னால் மணவிலக்கு என்பது கிடையாது. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கையாளர்களே! இறை நம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களைத் தொடுவதற்கு முன்பே மணவிலக்குச் செய்துவிட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக்கூடிய (இத்தா) தவணை உங்களுக்கு ஒன்று மில்லை. ஆகவே, அவர்களுக்கு (ஏற்ற வகையில்) ஏதேனும் அளித்து நல்ல முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள். (33:49) ‘‘(இந்த வசனத்தில்) மணவிலக்கைப் பற்றி திருமணத்திற்குப் பின்னரே அல்லாஹ் கூறியுள்ளான்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். ‘‘(மண முடிப்பதற்கு முன்னால் ஒரு பெண்ணிற்கு மணவிலக்கு அளித்தால்) அவள் மணவிலக்குப் பெற்றவளாக மாட்டாள்” என்று அலீ (ரலி), சயீத் பின் அல்முசய்யப், உர்வா பின் அஸ்ஸுபைர், அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா, அபான் பின் உஸ்மான், அலீ பின் ஹுசைன், ஷுரைஹ், சயீத் பின் ஜுபைர், காசிம், சாலிம், தாவூஸ், ஹசன் அல்பளி, இக்ரிமா, அதாஉ, ஆமிர் பின் சஅத், ஜாபிர் பின் ஸைத், நாஃபிஉ பின் ஜுபைர், முஹம்மத் பின் கஅப், சுலைமான் பின் யசார், முஜாஹித், காசிம் பின் அப்திர் ரஹ்மான், அம்ர் பின் ஹரிம், ‘அபீ (ரஹ்) ஆகியோர் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.24 பாடம்: 10 ஒரு நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘‘இவள் என் சகோதரி” என்று கூறி னால் அது அவரைப் பாதிக்கும் (மணவிலக்கு போன்ற) ஒரு விஷயமே அல்ல. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவியாரான) சாராவைப் பார்த்து ‘‘இவர் என் சகோதரி” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் திருப்திக்காகவே அப்படிச் சொன்னார்கள்.25 பாடம்: 11 நெருக்கடி, நிர்ப்பந்தம், போதை, பைத்தியம், தவறுதல், மறதி ஆகிய நிலைகளில் ஒருவர் மணவிலக்கு அளித்தல், (இறைவனுக்கு) இணைகற்பித்தல் உள்ளிட்ட செயல்களைச் செய்துவிட்டால் (சட்டம் என்ன)? குடிகாரனின் நிலையும் பைத்தியக்காரனின் நிலையும் (ஒன்றா? வேறா?)26 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எண்ணியதே கிடைக்கும்.27 (‘தவறுதலாக அல்லது மறதியாக தலாக் சொன்னால் அது நிகழாது’ என்பதற்கு ஆதாரமாக) ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள், ‘‘எங்கள் இறைவா! நாங்கள் மறந்துபோயிருப்பினும், அல்லது நாங்கள் தவறுதலாகச் செய்திருப்பினும் எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக!” எனும் (2:286 ஆவது) வசனத்தை ஓதிக்காட்டினார்கள். மனபிரமைக்கு உள்ளானவனின் ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது (என்பது பற்றிய விளக்கம்). (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) தமக்குத் தாமே வாக்குமூலம் அளித்த ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் ‘‘உனக்குப் பைத்தியமா? என்று கேட்டார்கள். அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ஹம்ஸா (ரலி) அவர்கள் எனது இரு (கிழ) ஒட்டகங்களின் இடுப்புகளை (குடி போதையில்) பிளந்துவிட்டார். எனவே, நபி (ஸல்) அவர்கள் ஹம்ஸாவைக் கண்டிக்கலானார்கள். அப்போது ஹம்ஸா வின் இரு கண்களும் சிவந்திருக்க அவர் போதையிலிருந்தார். பிறகு ஹம்ஸா (எங்களைப் பார்த்து), ‘‘நீங்கள் எல்லாரும் என் தந்தையின் அடிமைகள்தானே?” என்று கேட்டார். அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, (திரும்பாமல் அப்படியே பின்வாங்கிய வண்ணம் வந்த வழியே) நபி (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம்.28 ‘‘போதையிலுள்ளவன் மற்றும் நிர்ப்பந்திக்கப்பட்டவனின் மணவிலக்கு செல்லாது என உஸ்மான் (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறினார்கள். ‘‘மனபிரமையில் உள்ளவனின் மணவிலக்கு செல்லாது” என உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘ஒருவர் மணவிலக்குச் செய்யும்போது (தாம் விரும்பும்) நிபந்தனைகளைச் சேர்க்க அவருக்கு உரிமையுண்டு” என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர், தம் மனைவி வீட்டைவிட்டு வெளியேறினால் ஒட்டுமொத்த (அல்பத்தா) தலாக் சொல்லப்பட்டவள் ஆவாள் என்று கூறினார். (இது குறித்து நான் வினவியபோது) இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘‘அவ்வாறு அவள் (வீட்டைவிட்டு) வெளியேறினால் அவன் மூலம் ஒட்டுமொத்த தலாக் சொல்லப்பட்டவளாகிவிடுவாள். வெளியேறாவிட்டால் ஒன்றும் நிகழாது” என்று கூறினார்கள். முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர், ‘நான் இப்படி இப்படிச் செய்யாவிட்டால் என் மனைவி மூன்று தலாக் சொல்லப் பட்டவள் ஆகிவிடுவாள்’ என்று கூறினால், அவர் அந்தப் பிரமாணத்தைக் கூறும் போது எப்படிக் கூறினார்? மேலும், எதைக் கருத்தில் கொண்டு சொன்னார்? என்று கேட்கப்படும். அந்தப் பிரமாணத்தைக் கூறும்போது ‘குறிப்பிட்ட ஒரு தவணையை மனத்தில் உறுதி செய்துகொண்டே நான் அவ்வாறு கூறினேன்’ என்று அவர் குறிப்பிட்டால், அது அவரது பொறுப்பிலும் நம்பிக்கையிலும் விடப்படும். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘நீ எனக்குத் தேவையில்லை’ என்று கூறினால், அவர் என்ன எண்ணத் தில் கூறினாரோ அதன்படி அமையும். ஒவ்வொரு சமுதாயத்தாரின் தலாக்கும் அவரவர் மொழிப்படியே அமையும். கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் மனைவியை நோக்கி, ‘‘நீ கர்ப்பமுற்றால் மூன்று தலாக் சொல்லப்பட்டவள் ஆகிவிடுவாய்” என்று கூறியிருந்தால், மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் ஒவ்வொரு நேரத்திலும் ஒரு தடவை அவளுடன் அவர் தாம்பத்திய உறவு கொள்ளலாம். எப்போது அவள் கர்ப்பமடைந்திருப்பது தெரியவருகிறதோ அப்போது அவரிடமிருந்து அவள் பிரிந்துவிடுவாள். ‘‘ஒருவர் தம் மனைவியிடம், ‘நீ உன் தாய் வீட்டிற்குப் போய்விடு’ என்று கூறினால் அவர் என்ன எண்ணத்தில் கூறினாரோ அப்படியே அமையும்” என ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். ‘‘அவசியத்தை முன்னிட்டே தலாக் சொல்லப்பட வேண்டும். (ஆனால்) அடிமை விடுதலை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக (எப்போதும்) நடைபெறலாம்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். ‘‘ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘நீ என் மனைவி அல்லள்’ என்று சொன்னால், அவர் என்ன எண்ணத்தில் கூறினாரோ அப்படியே அமையும். (அதாவது) மண விலக்குச் செய்யும் எண்ணத்தில் அவர் அவ்வாறு கூறியிருந்தால் அவர் எண்ணப் படியே மணவிலக்கு நிகழ்ந்துவிடும்” என ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அலீ (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்களை நோக்கி) ‘‘மூன்று நபர்களிட மிருந்து பேனா உயர்த்தப்பட்டுவிட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா?” எனக் கேட்டார்கள்:29 1. பைத்தியக்காரனிடமிருந்து; அவன் புத்தி சுவாதீனம் அடையும்வரை. 2. சிறுவனிடமிருந்து; அவன் பருவ வயதை அடையும்வரை. 3. தூங்குபவனிடமிருந்து; அவன் கண் விழிக்கும்வரை. மேலும், ‘‘அறிவு குறைந்தவனின் மணவிலக்கைத் தவிர மற்றெல்லா மணவிலக்குகளும் செல்லும்” என்று அலீ (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
5269. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன்படி செயல்படாத வரை, அல்லது அதை (வெளிப்படுத்திப்) பேசாத வரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.30

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஒருவர் மனத்துக்குள்ளேயே தலாக் சொல்லிக்கொண்டால் அதனால் (தலாக்) எதுவும் நிகழப்போவதில்லை.

அத்தியாயம் : 68
5270. حَدَّثَنَا أَصْبَغُ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، عَنْ جَابِرٍ، أَنَّ رَجُلاً، مِنْ أَسْلَمَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ فِي الْمَسْجِدِ فَقَالَ إِنَّهُ قَدْ زَنَى. فَأَعْرَضَ عَنْهُ، فَتَنَحَّى لِشِقِّهِ الَّذِي أَعْرَضَ فَشَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ، فَدَعَاهُ فَقَالَ "" هَلْ بِكَ جُنُونٌ هَلْ أُحْصِنْتَ "". قَالَ نَعَمْ. فَأَمَرَ بِهِ أَنْ يُرْجَمَ بِالْمُصَلَّى، فَلَمَّا أَذْلَقَتْهُ الْحِجَارَةُ جَمَزَ حَتَّى أُدْرِكَ بِالْحَرَّةِ فَقُتِلَ.
பாடம்: 9 மணமுடிப்பதற்கு முன்னால் மணவிலக்கு என்பது கிடையாது. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கையாளர்களே! இறை நம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களைத் தொடுவதற்கு முன்பே மணவிலக்குச் செய்துவிட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக்கூடிய (இத்தா) தவணை உங்களுக்கு ஒன்று மில்லை. ஆகவே, அவர்களுக்கு (ஏற்ற வகையில்) ஏதேனும் அளித்து நல்ல முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள். (33:49) ‘‘(இந்த வசனத்தில்) மணவிலக்கைப் பற்றி திருமணத்திற்குப் பின்னரே அல்லாஹ் கூறியுள்ளான்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். ‘‘(மண முடிப்பதற்கு முன்னால் ஒரு பெண்ணிற்கு மணவிலக்கு அளித்தால்) அவள் மணவிலக்குப் பெற்றவளாக மாட்டாள்” என்று அலீ (ரலி), சயீத் பின் அல்முசய்யப், உர்வா பின் அஸ்ஸுபைர், அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா, அபான் பின் உஸ்மான், அலீ பின் ஹுசைன், ஷுரைஹ், சயீத் பின் ஜுபைர், காசிம், சாலிம், தாவூஸ், ஹசன் அல்பளி, இக்ரிமா, அதாஉ, ஆமிர் பின் சஅத், ஜாபிர் பின் ஸைத், நாஃபிஉ பின் ஜுபைர், முஹம்மத் பின் கஅப், சுலைமான் பின் யசார், முஜாஹித், காசிம் பின் அப்திர் ரஹ்மான், அம்ர் பின் ஹரிம், ‘அபீ (ரஹ்) ஆகியோர் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.24 பாடம்: 10 ஒரு நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘‘இவள் என் சகோதரி” என்று கூறி னால் அது அவரைப் பாதிக்கும் (மணவிலக்கு போன்ற) ஒரு விஷயமே அல்ல. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவியாரான) சாராவைப் பார்த்து ‘‘இவர் என் சகோதரி” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் திருப்திக்காகவே அப்படிச் சொன்னார்கள்.25 பாடம்: 11 நெருக்கடி, நிர்ப்பந்தம், போதை, பைத்தியம், தவறுதல், மறதி ஆகிய நிலைகளில் ஒருவர் மணவிலக்கு அளித்தல், (இறைவனுக்கு) இணைகற்பித்தல் உள்ளிட்ட செயல்களைச் செய்துவிட்டால் (சட்டம் என்ன)? குடிகாரனின் நிலையும் பைத்தியக்காரனின் நிலையும் (ஒன்றா? வேறா?)26 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எண்ணியதே கிடைக்கும்.27 (‘தவறுதலாக அல்லது மறதியாக தலாக் சொன்னால் அது நிகழாது’ என்பதற்கு ஆதாரமாக) ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள், ‘‘எங்கள் இறைவா! நாங்கள் மறந்துபோயிருப்பினும், அல்லது நாங்கள் தவறுதலாகச் செய்திருப்பினும் எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக!” எனும் (2:286 ஆவது) வசனத்தை ஓதிக்காட்டினார்கள். மனபிரமைக்கு உள்ளானவனின் ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது (என்பது பற்றிய விளக்கம்). (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) தமக்குத் தாமே வாக்குமூலம் அளித்த ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் ‘‘உனக்குப் பைத்தியமா? என்று கேட்டார்கள். அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ஹம்ஸா (ரலி) அவர்கள் எனது இரு (கிழ) ஒட்டகங்களின் இடுப்புகளை (குடி போதையில்) பிளந்துவிட்டார். எனவே, நபி (ஸல்) அவர்கள் ஹம்ஸாவைக் கண்டிக்கலானார்கள். அப்போது ஹம்ஸா வின் இரு கண்களும் சிவந்திருக்க அவர் போதையிலிருந்தார். பிறகு ஹம்ஸா (எங்களைப் பார்த்து), ‘‘நீங்கள் எல்லாரும் என் தந்தையின் அடிமைகள்தானே?” என்று கேட்டார். அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, (திரும்பாமல் அப்படியே பின்வாங்கிய வண்ணம் வந்த வழியே) நபி (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம்.28 ‘‘போதையிலுள்ளவன் மற்றும் நிர்ப்பந்திக்கப்பட்டவனின் மணவிலக்கு செல்லாது என உஸ்மான் (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறினார்கள். ‘‘மனபிரமையில் உள்ளவனின் மணவிலக்கு செல்லாது” என உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘ஒருவர் மணவிலக்குச் செய்யும்போது (தாம் விரும்பும்) நிபந்தனைகளைச் சேர்க்க அவருக்கு உரிமையுண்டு” என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர், தம் மனைவி வீட்டைவிட்டு வெளியேறினால் ஒட்டுமொத்த (அல்பத்தா) தலாக் சொல்லப்பட்டவள் ஆவாள் என்று கூறினார். (இது குறித்து நான் வினவியபோது) இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘‘அவ்வாறு அவள் (வீட்டைவிட்டு) வெளியேறினால் அவன் மூலம் ஒட்டுமொத்த தலாக் சொல்லப்பட்டவளாகிவிடுவாள். வெளியேறாவிட்டால் ஒன்றும் நிகழாது” என்று கூறினார்கள். முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர், ‘நான் இப்படி இப்படிச் செய்யாவிட்டால் என் மனைவி மூன்று தலாக் சொல்லப் பட்டவள் ஆகிவிடுவாள்’ என்று கூறினால், அவர் அந்தப் பிரமாணத்தைக் கூறும் போது எப்படிக் கூறினார்? மேலும், எதைக் கருத்தில் கொண்டு சொன்னார்? என்று கேட்கப்படும். அந்தப் பிரமாணத்தைக் கூறும்போது ‘குறிப்பிட்ட ஒரு தவணையை மனத்தில் உறுதி செய்துகொண்டே நான் அவ்வாறு கூறினேன்’ என்று அவர் குறிப்பிட்டால், அது அவரது பொறுப்பிலும் நம்பிக்கையிலும் விடப்படும். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘நீ எனக்குத் தேவையில்லை’ என்று கூறினால், அவர் என்ன எண்ணத் தில் கூறினாரோ அதன்படி அமையும். ஒவ்வொரு சமுதாயத்தாரின் தலாக்கும் அவரவர் மொழிப்படியே அமையும். கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் மனைவியை நோக்கி, ‘‘நீ கர்ப்பமுற்றால் மூன்று தலாக் சொல்லப்பட்டவள் ஆகிவிடுவாய்” என்று கூறியிருந்தால், மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் ஒவ்வொரு நேரத்திலும் ஒரு தடவை அவளுடன் அவர் தாம்பத்திய உறவு கொள்ளலாம். எப்போது அவள் கர்ப்பமடைந்திருப்பது தெரியவருகிறதோ அப்போது அவரிடமிருந்து அவள் பிரிந்துவிடுவாள். ‘‘ஒருவர் தம் மனைவியிடம், ‘நீ உன் தாய் வீட்டிற்குப் போய்விடு’ என்று கூறினால் அவர் என்ன எண்ணத்தில் கூறினாரோ அப்படியே அமையும்” என ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். ‘‘அவசியத்தை முன்னிட்டே தலாக் சொல்லப்பட வேண்டும். (ஆனால்) அடிமை விடுதலை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக (எப்போதும்) நடைபெறலாம்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். ‘‘ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘நீ என் மனைவி அல்லள்’ என்று சொன்னால், அவர் என்ன எண்ணத்தில் கூறினாரோ அப்படியே அமையும். (அதாவது) மண விலக்குச் செய்யும் எண்ணத்தில் அவர் அவ்வாறு கூறியிருந்தால் அவர் எண்ணப் படியே மணவிலக்கு நிகழ்ந்துவிடும்” என ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அலீ (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்களை நோக்கி) ‘‘மூன்று நபர்களிட மிருந்து பேனா உயர்த்தப்பட்டுவிட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா?” எனக் கேட்டார்கள்:29 1. பைத்தியக்காரனிடமிருந்து; அவன் புத்தி சுவாதீனம் அடையும்வரை. 2. சிறுவனிடமிருந்து; அவன் பருவ வயதை அடையும்வரை. 3. தூங்குபவனிடமிருந்து; அவன் கண் விழிக்கும்வரை. மேலும், ‘‘அறிவு குறைந்தவனின் மணவிலக்கைத் தவிர மற்றெல்லா மணவிலக்குகளும் செல்லும்” என்று அலீ (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
5270. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்துகொண்டிருந்தபோது ‘அஸ்லம்’ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அவர்களி டம் வந்து, ‘‘நான் விபசாரம் செய்து விட்டேன்” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். உடனே அவர் நபி (ஸல்) அவர்கள் திரும்பிய திசைக்கே சென்று (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) நான்கு தடவை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து, ‘‘உனக்கு என்ன பைத்தியமா?” என்று கேட்டுவிட்டு, ‘உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?’ என்று கேட்டார்கள். அவர் ‘‘ஆம்” என்றார்.

எனவே, அவரை (பெருநாள்) தொழுகைத் திடலுக்குக் கொண்டுசென்று அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அவ்வாறே அவர் அழைத்துச் செல்லப்பட்டு தண்டனை வழங்கப்பட்டார்.) அவர்மீது கற்கள் விழுந்தபோது அவர் (வலி தாங்க முடியாமல்) வெருண்டோட ஆரம்பித்தார். இறுதியில் (மதீனாவின் புறநகர்ப் பகுதியில்) பாறைகள் நிறைந்த (‘அல்ஹர்ரா’ எனும்) இடத்தில் அவர் பிடிக்கப்பட்டு, மரண தண்டனை வழங்கப்பட்டார்.

அத்தியாயம் : 68