3091. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عَلِيُّ بْنُ الْحُسَيْنِ، أَنَّ حُسَيْنَ بْنَ عَلِيٍّ، عَلَيْهِمَا السَّلاَمُ أَخْبَرَهُ أَنَّ عَلِيًّا قَالَ كَانَتْ لِي شَارِفٌ مِنْ نَصِيبِي مِنَ الْمَغْنَمِ يَوْمَ بَدْرٍ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَعْطَانِي شَارِفًا مِنَ الْخُمُسِ، فَلَمَّا أَرَدْتُ أَنْ أَبْتَنِيَ بِفَاطِمَةَ بِنْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَاعَدْتُ رَجُلاً صَوَّاغًا مِنْ بَنِي قَيْنُقَاعَ، أَنْ يَرْتَحِلَ مَعِيَ فَنَأْتِيَ بِإِذْخِرٍ أَرَدْتُ أَنْ أَبِيعَهُ الصَّوَّاغِينَ، وَأَسْتَعِينَ بِهِ فِي وَلِيمَةِ عُرْسِي، فَبَيْنَا أَنَا أَجْمَعُ لِشَارِفَىَّ مَتَاعًا مِنَ الأَقْتَابِ وَالْغَرَائِرِ وَالْحِبَالِ، وَشَارِفَاىَ مُنَاخَانِ إِلَى جَنْبِ حُجْرَةِ رَجُلٍ مِنَ الأَنْصَارِ، رَجَعْتُ حِينَ جَمَعْتُ مَا جَمَعْتُ، فَإِذَا شَارِفَاىَ قَدِ اجْتُبَّ أَسْنِمَتُهُمَا وَبُقِرَتْ خَوَاصِرُهُمَا، وَأُخِذَ مِنْ أَكْبَادِهِمَا، فَلَمْ أَمْلِكْ عَيْنَىَّ حِينَ رَأَيْتُ ذَلِكَ الْمَنْظَرَ مِنْهُمَا، فَقُلْتُ مَنْ فَعَلَ هَذَا فَقَالُوا فَعَلَ حَمْزَةُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ، وَهْوَ فِي هَذَا الْبَيْتِ فِي شَرْبٍ مِنَ الأَنْصَارِ. فَانْطَلَقْتُ حَتَّى أَدْخُلَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَعِنْدَهُ زَيْدُ بْنُ حَارِثَةَ، فَعَرَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي وَجْهِي الَّذِي لَقِيتُ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَا لَكَ "" فَقُلْتُ يَا رَسُولَ اللَّهَ، مَا رَأَيْتُ كَالْيَوْمِ قَطُّ، عَدَا حَمْزَةُ عَلَى نَاقَتَىَّ، فَأَجَبَّ أَسْنِمَتَهُمَا وَبَقَرَ خَوَاصِرَهُمَا، وَهَا هُوَ ذَا فِي بَيْتٍ مَعَهُ شَرْبٌ. فَدَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِرِدَائِهِ فَارْتَدَى ثُمَّ انْطَلَقَ يَمْشِي، وَاتَّبَعْتُهُ أَنَا وَزَيْدُ بْنُ حَارِثَةَ حَتَّى جَاءَ الْبَيْتَ الَّذِي فِيهِ حَمْزَةُ، فَاسْتَأْذَنَ فَأَذِنُوا لَهُمْ فَإِذَا هُمْ شَرْبٌ، فَطَفِقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَلُومُ حَمْزَةَ فِيمَا فَعَلَ، فَإِذَا حَمْزَةُ قَدْ ثَمِلَ مُحْمَرَّةً عَيْنَاهُ، فَنَظَرَ حَمْزَةُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، ثُمَّ صَعَّدَ النَّظَرَ فَنَظَرَ إِلَى رُكْبَتِهِ، ثُمَّ صَعَّدَ النَّظَرَ فَنَظَرَ إِلَى سُرَّتِهِ، ثُمَّ صَعَّدَ النَّظَرَ فَنَظَرَ إِلَى وَجْهِهِ ثُمَّ قَالَ حَمْزَةُ هَلْ أَنْتُمْ إِلاَّ عَبِيدٌ لأَبِي فَعَرَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَدْ ثَمِلَ، فَنَكَصَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى عَقِبَيْهِ الْقَهْقَرَى وَخَرَجْنَا مَعَهُ.
பாடம் : 1 யிகுமுஸ்' கடமையான விதம்
3091. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

பத்ர் போரின்போது போரில் கிடைத்த செல்வத்திலிருந்து எனது பங்காக வயதான ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்திருந்தது. நபி (ஸல்) அவர்களும் (தமக்குக் கிடைத்த ஐந்தில் ஒரு பாகமான) குமுஸில் இருந்து எனக்கு மற்றொரு கிழட்டு ஒட்டகத்தைத் தந்திருந்தார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமாவுடன் (முதன் முதலாக) தாம்பத்தியம் தொடங்க விரும்பியபோது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரை, என்னு டன் வந்து யிஇத்கிர்’ புல்லைக் கொண்டுவர ஏற்பாடு செய்திருந்தேன். அந்தப் புல்லைப் பொற்கொல்லர்களுக்கு விற்று அந்தப் பணத்தை என் மணவிருந்துக்குப் பயன் படுத்திக்கொள்ள நான் விரும்பினேன்.

நான் என் ஒட்டகங்களுக்கான சேண இருக்கைகளையும் தீனிப் பைகள், மற்றும் கயிறுகளையும் சேகரிக்கலானேன். அப்போது என் இரு ஒட்டகங்களும் அன்சாரி ஒருவருடைய அறையின் அருகே மண்டியிட்டு அமரச்செய்யப் பட்டிருந்தன. நான் சேகரிக்க விரும்பிய வற்றைச் சேகரித்துவிட்டபோது திரும்பி வந்தேன். அப்போது என் இரு ஒட்டகங் களின் திமில்களும் துண்டிக்கப்பட்டிருந்தன. அவற்றின் (அடி வயிற்று) இடுப்புப் பகுதி (கத்தியால்) கிழிக்கப்பட்டிருந்தது. அவற் றின் ஈரல் குலைகள் பிடுங்கப்பட்டி ருந்தன.

அவற்றின் இந்த (அவல)க் காட்சியைக் கண்டபோது என்னால் என் கண்களைக் (கண்ணீர் சிந்த விடாமல்) கட்டுப்படுத்த முடியவில்லை. நான், ‘‘இதையெல்லாம் செய்தவர் யார்?” என்று கேட்டேன். மக்கள், ‘‘ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப்தான் இப்படிச் செய்துவிட்டார். அவர் இந்த வீட்டில் அன்சாரிகளின் மது அருந்தும் குழு ஒன்றில்தான் இருக்கிறார்” என்று பதிலளித்தார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களிடம் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ஹம்ஸா (ரலி) அவர்களுடைய செயலால் நான் அடைந்த வேதனை என் முகத்தில் தென்பட, அதைப் புரிந்துகொண்டார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள்.

நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இன்றைய நாளைப் போன்ற (பயங்கரமான) ஒரு நாளை ஒருபோதும் நான் பார்த்த தில்லை. ஹம்ஸா என் இரு ஒட்டகங்களை யும் தாக்கி அவற்றின் திமில்களை அறுத்துவிட்டார். அவற்றின் (அடிவயிற்று) இடுப்புப் பகுதிகளை (வாளால்) கிழித்து விட்டார். அவர் இப்போது ஒரு வீட்டில் மது அருந்தும் நண்பர்கள் குழுவுடன் இருக்கிறார்” என்று சொன்னேன்.

உடனே நபி (ஸல்) அவர்கள் தமது அங்கி ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை அணிந்துகொண்டு நடந்து செல்ல, அவர்களை நானும் ஸைத் பின் ஹாரிஸா வும் பின்தொடர்ந்து சென்றோம். ஹம்ஸா இருந்த வீட்டிற்கு வந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்டார்கள். அவர்களும் நபிக்கு அனுமதி கொடுத்தார்கள். அங்கே அவர்கள் (அனைவரும்) மது அருந்திக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹம்ஸாவை அவர் செய்த காரியத்திற்காகக் கண்டிக்கத் தொடங்கினார்கள்.

ஹம்ஸாவின் இரு கண்களும் சிவந்திருக்க, அவர் போதையுற்றிருந்தார். ஹம்ஸா, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிப் பார்வையை உயர்த்தி அவர்களின் இரு முழங்கால்களையும் பார்த்தார்; பிறகு பார்வையை உயர்த்தி, அவர்களின் வயிற்றுப் பகுதியைப் பார்த்தார்; பிறகு தலையை உயர்த்தி அவர்களுடைய முகத்தைப் பார்த்தார். பிறகு, ‘‘நீங்கள் என் தந்தையின் அடிமைகள்தானே?” என்று கேட்டார்.2

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, தாம் வந்த வழியே (திரும்பாமல்) அப்படியே பின்வாங்கிச் சென்றார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம்.3


அத்தியாயம் : 57
3092. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ ـ رضى الله عنها ـ أَخْبَرَتْهُ أَنَّ فَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ ابْنَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَأَلَتْ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَقْسِمَ لَهَا مِيرَاثَهَا، مَا تَرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَيْهِ.
பாடம் : 1 யிகுமுஸ்' கடமையான விதம்
3092. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபிறகு, நபியவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தமக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைப் பங்கிட்டுத் தரும்படி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்த, (எதிரி நாட்டிலிருந்து கிடைத்த) செல்வங்களில் நபியவர்கள் விட்டுச்சென்ற சொத்தாகும்.4


அத்தியாயம் : 57
3093. فَقَالَ لَهَا أَبُو بَكْرٍ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ "". فَغَضِبَتْ فَاطِمَةُ بِنْتُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَهَجَرَتْ أَبَا بَكْرٍ، فَلَمْ تَزَلْ مُهَاجِرَتَهُ حَتَّى تُوُفِّيَتْ وَعَاشَتْ بَعْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سِتَّةَ أَشْهُرٍ. قَالَتْ وَكَانَتْ فَاطِمَةُ تَسْأَلُ أَبَا بَكْرٍ نَصِيبَهَا مِمَّا تَرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ خَيْبَرَ وَفَدَكٍ وَصَدَقَتِهِ بِالْمَدِينَةِ، فَأَبَى أَبُو بَكْرٍ عَلَيْهَا ذَلِكَ، وَقَالَ لَسْتُ تَارِكًا شَيْئًا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعْمَلُ بِهِ إِلاَّ عَمِلْتُ بِهِ، فَإِنِّي أَخْشَى إِنْ تَرَكْتُ شَيْئًا مِنْ أَمْرِهِ أَنْ أَزِيغَ. فَأَمَّا صَدَقَتُهُ بِالْمَدِينَةِ فَدَفَعَهَا عُمَرُ إِلَى عَلِيٍّ وَعَبَّاسٍ، فَأَمَّا خَيْبَرُ وَفَدَكٌ فَأَمْسَكَهَا عُمَرُ وَقَالَ هُمَا صَدَقَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَانَتَا لِحُقُوقِهِ الَّتِي تَعْرُوهُ وَنَوَائِبِهِ، وَأَمْرُهُمَا إِلَى مَنْ وَلِيَ الأَمْرَ. قَالَ فَهُمَا عَلَى ذَلِكَ إِلَى الْيَوْمِ. قَالَ أَبُو عَبْد اللَّهِ اعْتَرَاكَ افْتَعَلْتَ مِنْ عَرَوْتُهُ فَأَصَبْتُهُ وَمِنْهُ يَعْرُوهُ وَاعْتَرَانِي
பாடம் : 1 யிகுமுஸ்' கடமையான விதம்
3093. ஃபாத்திமாவுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச்செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்” என்று பதிலளித்தார்கள். ஆனால், இதனால் ஃபாத்திமா கோபமுற்று அபூபக்ர் (ரலி) அவர்களுடன் பேசுவதை விட்டுவிட்டார்கள். அவர்கள் மரணிக்கும்வரை அபூபக்ர் (ரலி) அவர்களுடன் பேசாமலேயே இருந்துவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஆறு மாதங்களே ஃபாத்திமா (ரலி) வாழ்ந்தார் கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தனி நிதியாக) விட்டுச்சென்ற கைபர், ஃபதக் ஆகிய பகுதிகளின் சொத்து களிலிருந்தும் மதீனாவில் இருந்த, அவர்கள் தர்மமாக விட்டுச்சென்ற சொத்தி லிருந்தும் தமக்குப் பங்கு தரும்படியே அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கேட்டுக்கொண்டிருந்தார்.5

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஃபாத்திமா வின் கோரிக்கையை ஏற்க மறுத்து, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்துகொண்டிருந்த எதனையும் நான் செய்யாமல் விடமாட்டேன். ஏனெனில், அவர்களுடைய செயல்களில் எதையாவது நான் விட்டுவிட்டால் நான் வழி தவறி விடுவேனோ என்று அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள். (அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப்பின்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் தர்மமாக விட்டுச்சென்ற சொத்தை உமர் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களுக்கும் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் (அதன் வருமானத்திலிருந்து தமது பங்கின் அளவிற்கு எடுத்துக் கொள்ளும்படி) கொடுத்துவிட்டார்கள்.

கைபர் மற்றும் ஃபதக்கில் இருந்த சொத்துகளை உமர் (ரலி) அவர்கள் (யாருக்கும் கொடுக்காமல்) நிறுத்திவைத்துக்கொண்டு, ‘‘அவ்விரண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்மமாக விட்டுச்சென்றவை. அவை நபி (ஸல்) அவர்களின் உரிமைகளை நிறைவேற்றுவதற்காகவும் அவர்களுக்கு ஏற்படும் (திடீர் பொருளா தாரப்) பிரச்சினை(கள் மற்றும் செலவினங்)களுக்காகவும் (ஒதுக்கப்பட்டு) இருந்தன. அவ்விரண்டின் அதிகாரமும் ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்” என்று சொன்னார்கள்.

இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்தபோது), ‘‘அந்த (கைபர், ஃபதக் ஆகிய பகுதிகளிலிருந்த) இரு சொத்துக்களும் இன்றுவரை அவ்வாறே (ஆட்சியாளரின் பொறுப்பி லேயே) இருந்துவருகின்ற”’ என்று சொன்னார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்:

(இங்கு மூலத்தில் யிபிரச்சினைகள் ஏற்படுதல்’ என்பதைக் குறிக்க) யிஇஃதிராஉ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிதோன்றுதல்’ என்பது பொருளாகும்.


அத்தியாயம் : 57
3094. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُحَمَّدٍ الْفَرْوِيُّ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مَالِكِ بْنِ أَوْسِ بْنِ الْحَدَثَانِ،، وَكَانَ، مُحَمَّدُ بْنُ جُبَيْرٍ ذَكَرَ لِي ذِكْرًا مِنْ حَدِيثِهِ ذَلِكَ، فَانْطَلَقْتُ حَتَّى أَدْخُلَ عَلَى مَالِكِ بْنِ أَوْسٍ، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ الْحَدِيثِ فَقَالَ مَالِكٌ بَيْنَا أَنَا جَالِسٌ فِي أَهْلِي حِينَ مَتَعَ النَّهَارُ، إِذَا رَسُولُ عُمَرَ بْنِ الْخَطَّابِ يَأْتِينِي فَقَالَ أَجِبْ أَمِيرَ الْمُؤْمِنِينَ. فَانْطَلَقْتُ مَعَهُ حَتَّى أَدْخُلَ عَلَى عُمَرَ، فَإِذَا هُوَ جَالِسٌ عَلَى رِمَالِ سَرِيرٍ، لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ فِرَاشٌ مُتَّكِئٌ عَلَى وِسَادَةٍ مِنْ أَدَمٍ، فَسَلَّمْتُ عَلَيْهِ ثُمَّ جَلَسْتُ فَقَالَ يَا مَالِ، إِنَّهُ قَدِمَ عَلَيْنَا مِنْ قَوْمِكَ أَهْلُ أَبْيَاتٍ، وَقَدْ أَمَرْتُ فِيهِمْ بِرَضْخٍ فَاقْبِضْهُ فَاقْسِمْهُ بَيْنَهُمْ. فَقُلْتُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، لَوْ أَمَرْتَ بِهِ غَيْرِي. قَالَ اقْبِضْهُ أَيُّهَا الْمَرْءُ. فَبَيْنَا أَنَا جَالِسٌ عِنْدَهُ أَتَاهُ حَاجِبُهُ يَرْفَا فَقَالَ هَلْ لَكَ فِي عُثْمَانَ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَالزُّبَيْرِ وَسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ يَسْتَأْذِنُونَ قَالَ نَعَمْ. فَأَذِنَ لَهُمْ فَدَخَلُوا فَسَلَّمُوا وَجَلَسُوا، ثُمَّ جَلَسَ يَرْفَا يَسِيرًا ثُمَّ قَالَ هَلْ لَكَ فِي عَلِيٍّ وَعَبَّاسٍ قَالَ نَعَمْ. فَأَذِنَ لَهُمَا، فَدَخَلاَ فَسَلَّمَا فَجَلَسَا، فَقَالَ عَبَّاسٌ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، اقْضِ بَيْنِي وَبَيْنَ هَذَا. وَهُمَا يَخْتَصِمَانِ فِيمَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم مِنْ بَنِي النَّضِيرِ. فَقَالَ الرَّهْطُ عُثْمَانُ وَأَصْحَابُهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، اقْضِ بَيْنَهُمَا وَأَرِحْ أَحَدَهُمَا مِنَ الآخَرِ. قَالَ عُمَرُ تَيْدَكُمْ، أَنْشُدُكُمْ بِاللَّهِ الَّذِي بِإِذْنِهِ تَقُومُ السَّمَاءُ وَالأَرْضُ، هَلْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ "". يُرِيدُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَفْسَهُ. قَالَ الرَّهْطُ قَدْ قَالَ ذَلِكَ. فَأَقْبَلَ عُمَرُ عَلَى عَلِيٍّ وَعَبَّاسٍ فَقَالَ أَنْشُدُكُمَا اللَّهَ، أَتَعْلَمَانِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ قَالَ ذَلِكَ قَالاَ قَدْ قَالَ ذَلِكَ. قَالَ عُمَرُ فَإِنِّي أُحَدِّثُكُمْ عَنْ هَذَا الأَمْرِ، إِنَّ اللَّهَ قَدْ خَصَّ رَسُولَهُ صلى الله عليه وسلم فِي هَذَا الْفَىْءِ بِشَىْءٍ لَمْ يُعْطِهِ أَحَدًا غَيْرَهُ ـ ثُمَّ قَرَأَ {وَمَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ مِنْهُمْ} إِلَى قَوْلِهِ {قَدِيرٌ} ـ فَكَانَتْ هَذِهِ خَالِصَةً لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. وَاللَّهِ مَا احْتَازَهَا دُونَكُمْ، وَلاَ اسْتَأْثَرَ بِهَا عَلَيْكُمْ قَدْ أَعْطَاكُمُوهُ، وَبَثَّهَا فِيكُمْ حَتَّى بَقِيَ مِنْهَا هَذَا الْمَالُ، فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُنْفِقُ عَلَى أَهْلِهِ نَفَقَةَ سَنَتِهِمْ مِنْ هَذَا الْمَالِ، ثُمَّ يَأْخُذُ مَا بَقِيَ فَيَجْعَلُهُ مَجْعَلَ مَالِ اللَّهِ، فَعَمِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِذَلِكَ حَيَاتَهُ، أَنْشُدُكُمْ بِاللَّهِ هَلْ تَعْلَمُونَ ذَلِكَ قَالُوا نَعَمْ. ثُمَّ قَالَ لِعَلِيٍّ وَعَبَّاسٍ أَنْشُدُكُمَا بِاللَّهِ هَلْ تَعْلَمَانِ ذَلِكَ قَالَ عُمَرُ ثُمَّ تَوَفَّى اللَّهُ نَبِيَّهُ صلى الله عليه وسلم فَقَالَ أَبُو بَكْرٍ أَنَا وَلِيُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَقَبَضَهَا أَبُو بَكْرٍ، فَعَمِلَ فِيهَا بِمَا عَمِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، وَاللَّهُ يَعْلَمُ إِنَّهُ فِيهَا لَصَادِقٌ بَارٌّ رَاشِدٌ تَابِعٌ لِلْحَقِّ، ثُمَّ تَوَفَّى اللَّهُ أَبَا بَكْرٍ، فَكُنْتُ أَنَا وَلِيَّ أَبِي بَكْرٍ، فَقَبَضْتُهَا سَنَتَيْنِ مِنْ إِمَارَتِي، أَعْمَلُ فِيهَا بِمَا عَمِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَا عَمِلَ فِيهَا أَبُو بَكْرٍ، وَاللَّهُ يَعْلَمُ إِنِّي فِيهَا لَصَادِقٌ بَارٌّ رَاشِدٌ تَابِعٌ لِلْحَقِّ، ثُمَّ جِئْتُمَانِي تُكَلِّمَانِي وَكَلِمَتُكُمَا وَاحِدَةٌ، وَأَمْرُكُمَا وَاحِدٌ، جِئْتَنِي يَا عَبَّاسُ تَسْأَلُنِي نَصِيبَكَ مِنِ ابْنِ أَخِيكَ، وَجَاءَنِي هَذَا ـ يُرِيدُ عَلِيًّا ـ يُرِيدُ نَصِيبَ امْرَأَتِهِ مِنْ أَبِيهَا، فَقُلْتُ لَكُمَا إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ "". فَلَمَّا بَدَا لِي أَنْ أَدْفَعَهُ إِلَيْكُمَا قُلْتُ إِنْ شِئْتُمَا دَفَعْتُهَا إِلَيْكُمَا عَلَى أَنَّ عَلَيْكُمَا عَهْدَ اللَّهِ وَمِيثَاقَهُ لَتَعْمَلاَنِ فِيهَا بِمَا عَمِلَ فِيهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، وَبِمَا عَمِلَ فِيهَا أَبُو بَكْرٍ، وَبِمَا عَمِلْتُ فِيهَا مُنْذُ وَلِيتُهَا، فَقُلْتُمَا ادْفَعْهَا إِلَيْنَا. فَبِذَلِكَ دَفَعْتُهَا إِلَيْكُمَا، فَأَنْشُدُكُمْ بِاللَّهِ، هَلْ دَفَعْتُهَا إِلَيْهِمَا بِذَلِكَ قَالَ الرَّهْطُ نَعَمْ. ثُمَّ أَقْبَلَ عَلَى عَلِيٍّ وَعَبَّاسٍ فَقَالَ أَنْشُدُكُمَا بِاللَّهِ هَلْ دَفَعْتُهَا إِلَيْكُمَا بِذَلِكَ قَالاَ نَعَمْ. قَالَ فَتَلْتَمِسَانِ مِنِّي قَضَاءً غَيْرَ ذَلِكَ فَوَاللَّهِ الَّذِي بِإِذْنِهِ تَقُومُ السَّمَاءُ وَالأَرْضُ، لاَ أَقْضِي فِيهَا قَضَاءً غَيْرَ ذَلِكَ، فَإِنْ عَجَزْتُمَا عَنْهَا فَادْفَعَاهَا إِلَىَّ، فَإِنِّي أَكْفِيكُمَاهَا.
பாடம் : 1 யிகுமுஸ்' கடமையான விதம்
3094. முஹம்மத் பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் மாலிக் பின் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரஹ்) அவர்களிடம் சென்று அந்த (ஃபதக் தொடர்பான) நிகழ்ச்சி பற்றிக் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்:

நான் என் வீட்டாருடன் ஒரு நீண்ட பகல் வேளையில் அமர்ந்திருந்தபோது (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் தூதர் ஒருவர் என்னிடம் வந்து, ‘‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அழைக்கிறார், வாருங்கள்” என்று சொன்னார். நான் அவருடன் சென்று உமர் (ரலி) அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அவர்கள் அங்கே ஒரு கட்டிலில் ஈச்ச ஓலையாலான மேற்பரப்பில் அதற்கும் தமக்கும் இடையே பாய் எதுவுமில்லாமல் ஒரு தோல் தலையணையின் மீது சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டு அமர்ந்தேன்.

அப்போது அவர்கள், ‘‘மாலிக்கே! உங்கள் குலத்தாரில் சில குடும்பத்தார் நம்மிடம் வந்தனர். அவர்களுக்கு (அளவு குறிப்பிடாமல்) சிறிய ஓர் அன்பளிப்புத் தரும்படி நான் உத்தரவிட்டுள்ளேன். அதை உங்கள் கைவசமாக்கிக் கொண்டு அவர்களிடையே நீங்கள் பங்கிட்டு விடுங்கள்” என்று சொன்னார்கள். நான், ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! வேறெவரிடமாவது இந்தப் பொறுப்பை நீங்கள் ஒப்படைத்தால் நன்றாயிருக்குமே” என்று சொன்னேன்.

அதற்கு, ‘‘நீங்கள் அதைக் கைவச மாக்கிக் கொண்டுசென்று அவர் களிடையே பங்கிடுங்கள்” என்று (மீண்டும்) உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். நான் உமரிடம் அமர்ந்திருந்தபோது, அவர்களிடம் அவர்களுடைய மெய்க்காவலர் யியர்ஃபஉ’ என்பவர் வந்து, ‘‘உஸ்மான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸுபைர் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் தங்களைச் சந்திக்க அனுமதி கேட்கிறார்கள். தாங்கள் அவர்களுக்கு அனுமதியளிக்கிறீர்களா?” என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள், ‘‘ஆம்” என்று அவர்களுக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதியளித்தார்கள். அவர்கள் (அனைவரும்) உள்ளே வந்து சலாம் சொல்லி அமர்ந்தார்கள்.

பிறகு யியர்ஃபஉ’ சற்று நேரம் தாமதித்து வந்து, ‘‘அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் தாங்கள் சந்திக்க விரும்புகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘ஆம்” என்று அவ்விருவருக்கும் (தம்மைச் சந்திப்பதற்கு) அனுமதியளிக்க, அவ்விருவரும் உள்ளே நுழைந்தனர். இருவரும் சலாம் சொல்லி அமர்ந்தனர்.

அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள்” என்று சொன்னார்கள் லிஅல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு பனூ நளீர் குலத்தாரின் செல்வத்திலிருந்து (யிஃபய்உ’ நிதியாகக்) கொடுத்த சொத்துகள் தொடர்பாக இருவரும் சச்சரவிட்டு வந்தனர்லி அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் மற்றும் அவர்களுடைய தோழர்களின் குழு, ‘‘இறைநம்பிக்கையாளர் களின் தலைவரே! அவர்களுக்கிடையே தீர்ப்பளித்து, ஒருவரை மற்றவரின் பிடியிலிருந்து விடுவித்துவிடுங்கள்” என்று கூறியது.

உமர் (ரலி) அவர்கள், ‘‘பொறுங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்ற னவோ அவன் பொருட்டால் கேட்கின் றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(நபிமார்களான எங்களுக்கு) எவரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே” என்று தம்மைக் குறித்துக் கூறியதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் குழுவினர், ‘‘அவர்கள் அவ்வாறு சொல்லத்தான் செய்தார்கள்” என்று பதிலளித்தனர்.

உடனே உமர் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, ‘‘அல்லாஹ்வின் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கின்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அவ்விருவரும், ‘‘ஆம், அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்” என்று பதிலளித்தனர்.

உமர் (ரலி) அவர்கள், ‘‘அவ்வாறெனில், உங்களிடம் இந்த விஷயத்தைக் குறித்துப் பேசுகிறேன். (போரிடாமல் கிடைத்த) இந்தச் செல்வத்திலிருந்து சிறிதைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதைக் கொடுக்கவில்லை...” (என்று கூறிவிட்டு,) ‘‘அல்லாஹ் எந்தச் செல்வத்தை அவர்களின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பிக்கொடுத்தானோ அந்தச் செல்வம் உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போர் புரிவதற்காக) நீங்கள் ஓட்டிச்சென்றதால் கிடைத்ததல்ல. மாறாக அல்லாஹ், தான் நாடுகின்றவர்களின் மீது தன் தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றான்” எனும் (இந்த 59:6) இறைவசனத்தை ஓதினார் கள்.6

தொடர்ந்து, ‘‘எனவே, இது இறைத் தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட்டுவிட்டு அதை அவர்கள் தமக்காகச் சேகரித்துக்கொள்ளவில்லை; அதை உங்களைவிடப் பெரிதாகக் கருதவுமில்லை. உங்களுக்கு அதைக் கொடுத்தார்கள்; உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட்டார்கள்.

இறுதியில், அதிலிருந்து இந்தச் செல்வம் மட்டுமே மீதமாயிற்று. அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தச் செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் ஆண்டுச் செலவுக்காக அவர்களுக்குக் கொடுத்துவந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு மீதமுள்ளதை எடுத்து அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் செலவிடுவார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் செயல்பட்டுவந்தார்கள்.” (இவ்வளவும் சொல்லிவிட்டு,) ‘‘அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை நான் கேட்கின்றேன். இதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘ஆம் (அறிவோம்)” என்று பதிலளித்தார்கள்.

பிறகு, அலீ (ரலி) அவர்களிடமும் அப்பாஸ் (ரலி) அவர்களிடமும், ‘‘உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கின்றேன். நீங்கள் இதை அறிவீர் களா?” என்று கேட்டுவிட்டு (தொடர்ந்து), ‘‘பிறகு அல்லாஹ் தன் தூதரை அழைத் துக்கொண்டான். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், யிநான் அல்லாஹ்வின் தூதருடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்’ என்று கூறி அ(ந்தச் செல்வத்)தைத் தம் கைவசம் எடுத்துக்கொண்டார்கள். அது விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செயல்பட்டதைப்போல் செயல்பட்டார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் அது விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டார்கள்; நல்ல விதமாக நடந்துகொண்டார்கள்; நேரான முறையில் நடந்து, உண்மையையே பின்பற்றினார்கள்.

பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக்கொண்டான். அப்போது நான் அபூபக்ர் (ரலி) அவர் களின் பிரதிநிதியாக ஆனேன். அதை என் ஆட்சிக் காலத்தில் இரண்டு வருடங் களுக்கு என் கைவசம் எடுத்துக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில் நடந்துகொண்ட முறைப்படியும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நடந்துகொண்ட முறைப்படியும் நானும் செயல்பட்டு வந்தேன். நான் அது விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டேன்; நல்ல விதமாக நடந்துகொண்டேன்; நேரான முறையில் நடந்துகொண்டேன்; உண்மை யையே பின்பற்றினேன் என்பதை அல்லாஹ் அறிவான்.

பிறகு, நீங்கள் இருவரும் என்னிடம் வந்து பேசினீர்கள்; நான் உங்களிடம் ஒருமுறை பேசினேன். உங்கள் இருவரின் விஷயமும் (கோரிக்கையும்) ஒன்றாகவே இருந்தது. அப்பாஸே! நீங்கள் என்னிடம் உங்கள் சகோதரர் மகனிடமிருந்து உங்களுக்குச் சேர வேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்டபடி வந்தீர்கள்.7 இவரும் என்னிடம் தம் மனைவிக்கு அவரது தந்தையிடமிருந்து கிடைக்க வேண்டிய (வாரிசுப்) பங்கை (பெற) விரும்பியபடி வந்தார் லிஅலீ (ரலி) அவர்களைத்தான் அப்படிச் சொன்னார்கள்8லி நான் உங்கள் இருவரிடமும், ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(நபிமார்களான நாங்கள் விட்டுச்செல்லும் சொத்துக்களில்) எங்களுக்கு எவரும் வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே’ என்று சொன்னார்கள்’ என்றேன்.

எனினும், ‘அதை உங்கள் இருவரிடமே கொடுத்துவிடுவதுதான் உசிதமானது’ என்று எனக்குத் தோன்றியபோது நான், ‘நீங்கள் இருவரும் விரும்பினால் அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்தமும் அவனுக் களித்த உறுதிமொழியும் உங்கள் பொறுப் பாக இருக்க, ‘நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, அபூபக்ர் (ரலி) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, நான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதன் விஷயத்தில் எப்படிச் செயல்பட்டேனோ அதன்படியே நீங்கள் இருவரும் செயல்படுவீர்கள்’ என்னும் நிபந்தனையின் அடிப்படையில் உங்கள் இருவரிடமும் கொடுத்துவிடுகிறேன்’ என்று சொன்னேன். அதற்கு நீங்கள் இருவரும், யிஎங்களிடம் அதைக் கொடுத்துவிடுங்கள்’ என்று சொன்னீர்கள். அதன்படியே அதை உங்கள் இருவரிடமும் கொடுத்துவிட்டேன்” என்று சொன்னார்கள்.

பிறகு (குழுவினரை நோக்கி), ‘‘ஆகவே, நான் உங்களிடம் அல்லாஹ்வின் பெயரால் கேட்கின்றேன். நான் இவ்விருவரிடமும் அந்த நிபந்தனையின்படி அந்தச் சொத்தைக் கொடுத்துவிட்டேனா?” என்று கேட்டார்கள். குழுவினர், ‘‘ஆம் (கொடுத்துவிட்டீர்கள்)” என்று பதிலளித்தனர். பிறகு அலீ (ரலி) மற்றும் அப்பாஸ் (ரலி) ஆகியோரை நோக்கி, ‘‘நான் உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பெயரால் கேட்கின்றேன். நான் அதை உங்கள் இருவரிடமும் அந்த நிபந்தனையின்படியே கொடுத்துவிட்டேனா?” என்று கேட்க, அவ்விருவரும், யிஆம்’ என்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள், ‘‘இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிட மிருந்து கோருகின்றீர்களா? எவனது அனுமதியுடன் வானமும் பூமியும் நிலைபெற் றுள்ளனவோ அவன்மீது சத்தியமாக! நான் அந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் தரமாட்டேன். உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியவில்லை என்றால் என்னிடம் அதைக் கொடுத்துவிடுங்கள். அதை உங்களுக்குப் பதிலாக நானே பராமரித்துக் கொள்வேன்” என்று சொன்னார்கள்.9

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 57
3095. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَبِي حَمْزَةَ الضُّبَعِيِّ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، إِنَّا هَذَا الْحَىَّ مِنْ رَبِيعَةَ، بَيْنَنَا وَبَيْنَكَ كُفَّارُ مُضَرَ، فَلَسْنَا نَصِلُ إِلَيْكَ إِلاَّ فِي الشَّهْرِ الْحَرَامِ، فَمُرْنَا بِأَمْرٍ نَأْخُذُ مِنْهُ وَنَدْعُو إِلَيْهِ مَنْ وَرَاءَنَا. قَالَ "" آمُرُكُمْ بِأَرْبَعٍ، وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ، الإِيمَانِ بِاللَّهِ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ـ وَعَقَدَ بِيَدِهِ ـ وَإِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَصِيَامِ رَمَضَانَ، وَأَنْ تُؤَدُّوا لِلَّهِ خُمُسَ مَا غَنِمْتُمْ، وَأَنْهَاكُمْ عَنِ الدُّبَّاءِ وَالنَّقِيرِ وَالْحَنْتَمِ وَالْمُزَفَّتِ "".
பாடம் : 2 ஐந்தில் ஒரு பாகத்தை ஒப்படைப்பது மார்க்கத்தின் ஓர் அம்சமாகும்.
3095. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (எங்களது) இந்தக் கிளை யிரபீஆ’ குலத்தைச் சேர்ந்ததாகும். எங்களுக்கும் உங்களுக்குமிடையே யிமுளர்’ குலத்து நிராகரிப்பாளர்கள் (நாம் ஒருவரையொருவர் சந்திக்கத்) தடையாக உள்ளனர். ஆகவே, (போர் செய்வதும் கொள்ளையும் வழிப்பறியும் அனைவராலும் தடை செய்யப்பட்ட) புனித மாதங்களில் தவிர (வேறு மாதங்களில்) நாங்கள் தங்களிடம் வந்துசேர முடியாதவர்களாயிருக்கின்றோம்.

எனவே, நாங்கள் எடுத்து நடக்கவும் எங்களுக்குப் பின்னால் உள்ள (இங்கு வர முடியாமல் தங்கி விட்ட)வர்களுக்கு எடுத்துச்சொல்லவும் ஏற்ற ஒரு விஷயத்தை எங்களுக்குக் கட்டளையிடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நான்கு விஷயங்களை உங்களுக்குக் கட்டளை யிட்டு நான்கு பொருட்களை உங்களுக்குத் தடை செய்கிறேன். நான் கட்டளையிடு பவை: அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது; ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை’ என்று சாட்சியம் மொழிவது லி(இதைச் சொல்லியபடி) நபி (ஸல்) அவர்கள் தம் கையால் (எண்ணிக்) கணக்கிட்டார்கள்லி தொழுகையைக் கடைப்பிடிப்பது, ஸகாத் கொடுப்பது, ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது, உங்களுக்குக் கிடைக்கும் போர்ச் செல்வங் களிலிருந்து ஐந்திலொரு பங்கை அல்லாஹ்வுக்காகச் செலுத்திவிடுவது ஆகியன.

மேலும், (மது வைத்திருக்கப் பயன்படுகின்ற) சுரைக்காய்க் குடுவைகள்; மற்றும் பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த மரப்பீப்பாய்கள், தார் பூசப்பட்ட பாத்திரங்கள், மண் சாடிகள் ஆகியவற்றை (பயன்படுத்த வேண்டாமென்று) உங்களுக்குத் தடை செய்கின்றேன்” என்று கூறினார்கள்.10

அத்தியாயம் : 57
3096. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَقْتَسِمُ وَرَثَتِي دِينَارًا، مَا تَرَكْتُ بَعْدَ نَفَقَةِ نِسَائِي وَمَئُونَةِ عَامِلِي فَهْوَ صَدَقَةٌ "".
பாடம் : 3 நபி (ஸல்) அவர்களின் இறப்புக்குப்பின் அவர்களுடைய துணைவியரின் வாழ்க்கைச் செலவு
3096. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் வாரிசுகள் ஒரு பொற்காசைக்கூட (வாரிசுப்) பங்காகப் பெறமாட்டார்கள். என் துணைவியருக்குச் சேரவேண்டிய வாழ்க்கைச் செலவும் என் பிரதிநிதியின் ஊதியமும்போக நான் விட்டுச்செல்பவை யெல்லாம் தர்மமேயாகும்.11

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.12


அத்தியாயம் : 57
3097. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَا فِي بَيْتِي مِنْ شَىْءٍ يَأْكُلُهُ ذُو كَبِدٍ، إِلاَّ شَطْرُ شَعِيرٍ فِي رَفٍّ لِي، فَأَكَلْتُ مِنْهُ حَتَّى طَالَ عَلَىَّ، فَكِلْتُهُ فَفَنِيَ.
பாடம் : 3 நபி (ஸல்) அவர்களின் இறப்புக்குப்பின் அவர்களுடைய துணைவியரின் வாழ்க்கைச் செலவு
3097. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் நிலைப்பேழையிலிருந்த சிறிதளவு தொலி நீக்கப்பட்ட கோதுமையைத் தவிர, உயிருள்ளவர் உண்ணக்கூடிய பொருள் எதுவும் என் வீட்டில் இல்லாத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு, அதை நான் அளந்தேன். (அதனால், சிறிது காலத் திற்குப்பின்) அது தீர்ந்துபோய்விட்டது.


அத்தியாயம் : 57
3098. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ عَمْرَو بْنَ الْحَارِثِ، قَالَ مَا تَرَكَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلاَّ سِلاَحَهُ وَبَغْلَتَهُ الْبَيْضَاءَ، وَأَرْضًا تَرَكَهَا صَدَقَةً.
பாடம் : 3 நபி (ஸல்) அவர்களின் இறப்புக்குப்பின் அவர்களுடைய துணைவியரின் வாழ்க்கைச் செலவு
3098. அம்ர் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் ஆயுதத்தை யும் வெள்ளைக் கோவேறுக் கழுதை யையும் தவிர வேறெதையும் (தாம் இறந்தபோது) விட்டுச்செல்லவில்லை. மேலும், அவர்கள் ஒரேயொரு நிலத்தை (மட்டும்) தர்மமாக விட்டுச்சென்றார்கள்.13

அத்தியாயம் : 57
3099. حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، وَمُحَمَّدٌ، قَالاَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، وَيُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم اسْتَأْذَنَ أَزْوَاجَهُ أَنْ يُمَرَّضَ فِي بَيْتِي فَأَذِنَّ لَهُ.
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் இல்லங்கள் தொடர்பாக வந்துள்ளவையும் அவர்களின் பெயரால் அழைக்கப்பட்டுவந்த இல்லங்களும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியின் துணைவியரே!) உங்கள் வீடுகளில் நீங்கள் தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக் காலத்தைப் போன்று (திரையின்றி) வெளியே நடமாடாதீர்கள். (33:33) இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டால் தவிர, நுழையாதீர்கள். (33:53)
3099. நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நோயின் கடுமை அதிகரித்து விட்டபோது என் வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற்றிட தம் மற்ற மனைவிமார்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள்.14

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 57
3100. حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا نَافِعٌ، سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ، قَالَ قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها تُوُفِّيَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي بَيْتِي، وَفِي نَوْبَتِي، وَبَيْنَ سَحْرِي وَنَحْرِي، وَجَمَعَ اللَّهُ بَيْنَ رِيقِي وَرِيقِهِ. قَالَتْ دَخَلَ عَبْدُ الرَّحْمَنِ بِسِوَاكٍ، فَضَعُفَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْهُ، فَأَخَذْتُهُ فَمَضَغْتُهُ ثُمَّ سَنَنْتُهُ بِهِ.
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் இல்லங்கள் தொடர்பாக வந்துள்ளவையும் அவர்களின் பெயரால் அழைக்கப்பட்டுவந்த இல்லங்களும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியின் துணைவியரே!) உங்கள் வீடுகளில் நீங்கள் தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக் காலத்தைப் போன்று (திரையின்றி) வெளியே நடமாடாதீர்கள். (33:33) இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டால் தவிர, நுழையாதீர்கள். (33:53)
3100. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் வீட்டில் எனது முறைக்குரிய நாளில் (வந்திருந்தபோது) என் தொண்டைக்கும் என் மார்புக்குமிடையே (சாய்ந்திருந்த நிலையில்) நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள். அல்லாஹ் எனது எச்சிலையும் அவர்களுடைய எச்சிலையும் ஒன்றுசேர்த்திருந்தான்.

(எப்படியெனில்) நபி (ஸல்) அவர்கள் (கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் என் சகோதரர்) அப்துர் ரஹ்மான், பல் துலக்கும் குச்சியைக் கொண்டுவந்தார். நபி (ஸல்) அவர்கள் அதைப் பயன்படுத்த முடியாத அளவுக்குப் பலவீனமாக இருந்தார்கள். ஆகவே, நான் அந்தக் குச்சியை எடுத்து மென்று பிறகு அதனால் நபி (ஸல்) அவர்களுக்குப் பல் துலக்கிவிட்டேன்.15


அத்தியாயம் : 57
3101. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، أَنَّ صَفِيَّةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّهَا جَاءَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَزُورُهُ، وَهْوَ مُعْتَكِفٌ فِي الْمَسْجِدِ فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ فَقَامَ مَعَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى إِذَا بَلَغَ قَرِيبًا مِنْ باب الْمَسْجِدِ عِنْدَ باب أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَرَّ بِهِمَا رَجُلاَنِ مِنَ الأَنْصَارِ، فَسَلَّمَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، ثُمَّ نَفَذَا فَقَالَ لَهُمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" عَلَى رِسْلِكُمَا "". قَالاَ سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ. وَكَبُرَ عَلَيْهِمَا ذَلِكَ. فَقَالَ "" إِنَّ الشَّيْطَانَ يَبْلُغُ مِنَ الإِنْسَانِ مَبْلَغَ الدَّمِ، وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا "".
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் இல்லங்கள் தொடர்பாக வந்துள்ளவையும் அவர்களின் பெயரால் அழைக்கப்பட்டுவந்த இல்லங்களும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியின் துணைவியரே!) உங்கள் வீடுகளில் நீங்கள் தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக் காலத்தைப் போன்று (திரையின்றி) வெளியே நடமாடாதீர்கள். (33:33) இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டால் தவிர, நுழையாதீர்கள். (33:53)
3101. நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ரமளான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்துகொண்டிருந்தபோது நான் அவர் களைச் சந்திக்கச் சென்றேன்; (சந்தித்து முடித்த) பின்பு திரும்பிச் செல்ல எழுந்தேன். என்னுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் எழுந்தார்கள். தமது (மற்றொரு) மனைவி உம்மு சலமா (ரலி) அவர்களின் வீட்டு வாசலை ஒட்டியுள்ள பள்ளிவாசல் கதவுக்கு அருகே வந்து சேர்ந்தபோது எங்கள் இருவரையும் இரண்டு அன்சாரிகள் கடந்துசென்றனர்.

அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி சலாம் கூறி விட்டுச் சென்றுவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ‘‘அவசரப்படாதீர்கள். (இவர் என் மனைவிதான்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் இப்படித் தங்களிடம் சொன்னது அவர்களுக்கு மன வருத்தத்தை அளித்தது. அதற்கு அவ்விருவரும், ‘‘அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களை நாங்கள் சந்தேகிப்போமா?)” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘மனிதனின் இரத்தம் சென்றடை யும் இடங்களில் எல்லாம் ஷைத்தானும் சென்றடைகின்றான். உங்கள் உள்ளங்களில் அவன் சந்தேகம் எதையேனும் போட்டு விடுவானோ என்று நான் அஞ்சினேன்” என்று பதிலளித்தார்கள்.16


அத்தியாயம் : 57
3102. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ ارْتَقَيْتُ فَوْقَ بَيْتِ حَفْصَةَ، فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْضِي حَاجَتَهُ، مُسْتَدْبِرَ الْقِبْلَةِ، مُسْتَقْبِلَ الشَّأْمِ.
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் இல்லங்கள் தொடர்பாக வந்துள்ளவையும் அவர்களின் பெயரால் அழைக்கப்பட்டுவந்த இல்லங்களும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியின் துணைவியரே!) உங்கள் வீடுகளில் நீங்கள் தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக் காலத்தைப் போன்று (திரையின்றி) வெளியே நடமாடாதீர்கள். (33:33) இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டால் தவிர, நுழையாதீர்கள். (33:53)
3102. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டிற்குமேலே (ஒரு வேலையாக) நான் ஏறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் கிப்லாவுக்கு முதுகைக் காட்டியபடியும் ‘ஷாம்’ (சிரியா) திசையை நோக்கியபடியும் (கழிப்பிடத்தில்) இயற்கைக் கடனை நிறைவேற்றிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன்.17


அத்தியாயம் : 57
3103. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ لَمْ تَخْرُجْ مِنْ حُجْرَتِهَا.
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் இல்லங்கள் தொடர்பாக வந்துள்ளவையும் அவர்களின் பெயரால் அழைக்கப்பட்டுவந்த இல்லங்களும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியின் துணைவியரே!) உங்கள் வீடுகளில் நீங்கள் தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக் காலத்தைப் போன்று (திரையின்றி) வெளியே நடமாடாதீர்கள். (33:33) இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டால் தவிர, நுழையாதீர்கள். (33:53)
3103. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் அறை’லிருந்து சூரிய வெளிச்சம் விலகாத நிலையில் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்.18


அத்தியாயம் : 57
3104. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَطِيبًا فَأَشَارَ نَحْوَ مَسْكَنِ عَائِشَةَ فَقَالَ "" هُنَا الْفِتْنَةُ ـ ثَلاَثًا ـ مِنْ حَيْثُ يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ "".
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் இல்லங்கள் தொடர்பாக வந்துள்ளவையும் அவர்களின் பெயரால் அழைக்கப்பட்டுவந்த இல்லங்களும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியின் துணைவியரே!) உங்கள் வீடுகளில் நீங்கள் தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக் காலத்தைப் போன்று (திரையின்றி) வெளியே நடமாடாதீர்கள். (33:33) இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டால் தவிர, நுழையாதீர்கள். (33:53)
3104. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, ஆயிஷா (ரலி) அவர்களின் உறைவிடத்தை (இராக் நாடு அமைந்துள்ள கிழக்குத் திசையை) நோக்கிச் சைகை செய்து, ‘‘இங்கிருந்துதான் குழப்பம் ஏற்படும்” என்று மூன்று முறை கூறிவிட்டு, ‘‘ஷைத்தானின் கொம்பு எங்கிருந்து உதயமாகின்றதோ அங்கி ருந்து....” என்று கூறினார்கள்.19


அத்தியாயம் : 57
3105. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ ابْنَةِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ عِنْدَهَا، وَأَنَّهَا سَمِعَتْ صَوْتَ إِنْسَانٍ يَسْتَأْذِنُ فِي بَيْتِ حَفْصَةَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، هَذَا رَجُلٌ يَسْتَأْذِنُ فِي بَيْتِكَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أُرَاهُ فُلاَنًا، لِعَمِّ حَفْصَةَ مِنَ الرَّضَاعَةِ، الرَّضَاعَةُ تُحَرِّمُ مَا تُحَرِّمُ الْوِلاَدَةُ "".
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் இல்லங்கள் தொடர்பாக வந்துள்ளவையும் அவர்களின் பெயரால் அழைக்கப்பட்டுவந்த இல்லங்களும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியின் துணைவியரே!) உங்கள் வீடுகளில் நீங்கள் தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக் காலத்தைப் போன்று (திரையின்றி) வெளியே நடமாடாதீர்கள். (33:33) இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டால் தவிர, நுழையாதீர்கள். (33:53)
3105. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டிற்குள் செல்ல அனுமதி கேட்டுக்கொண்டிருக்கும் குரலை நான் செவியுற்றேன். உடனே நான், ‘‘அல்லாஹ் வின் தூதரே! இதோ, ஒரு மனிதர் தங்கள் வீட்டினுள் நுழைய அனுமதி கேட்கின்றார்” என்று கூறினேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவரை இன்னார்லி ஹஃப்ஸாவின் தந்தைக்குப் பால்குடிச் சகோதரர்லி என்று நான் கருதுகின்றேன்; (ஒருவருடைய வயிற்றில்) பிறப்பது எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவுகளாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் (ஒருவரிடம்) பால்குடிப்பதும் நெருங்கிய உறவுகளாக்கிவிடும்” என்று கூறினார்கள்.20

அத்தியாயம் : 57
3106. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ لَمَّا اسْتُخْلِفَ بَعَثَهُ إِلَى الْبَحْرَيْنِ، وَكَتَبَ لَهُ هَذَا الْكِتَابَ وَخَتَمَهُ، وَكَانَ نَقْشُ الْخَاتَمِ ثَلاَثَةَ أَسْطُرٍ مُحَمَّدٌ سَطْرٌ، وَرَسُولُ سَطْرٌ، وَاللَّهِ سَطْرٌ.
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் கவச உடை, கைத்தடி, வாள், குவளை, மோதிரம் ஆகியவை தொடர்பாகக் கூறப் பட்டவை இவற்றில் நபியவர்களுக்குப்பின் அவர்களுடைய பிரதிநிதிகள் (கலீஃபாக்கள்) பயன்படுத்திய யிபங்கிடப்பட வேண்டியவை’ என்று அறிவிக்கப்படாதவையும், நபியவர் கள் இறந்தபின் அவர்களின் தோழர்களும் மற்றவர்களும் வளம் (பரக்கத்) உள்ளவை என்று கருதிய நபியவர்களின் முடி, காலணி, பாத்திரம் ஆகியவையும்
3106. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக (கலீஃபா) ஆக்கப்பட்ட பொழுது, என்னை பஹ்ரைனுக்கு (ஆளுந ராக) அனுப்பிவைத்தார்கள். எனக்கு ஓர் ஆணையை எழுதி, அதில் நபி (ஸல்) அவர்களுடைய மோதிரத்தால் முத்திரை யிட்டார்கள்.21

அந்த மோதிரத்தில் மூன்று வரிகள் பொறிக்கப்பட்டிருந்தன. யிமுஹம்மத்’ (எனும் சொல்) ஒரு வரியிலும் யிரசூல்’ (யிதூதர்’ எனும் சொல்) ஒரு வரியிலும் ‘அல்லாஹ்’ (‘அல்லாஹ்வின்’ எனும் சொல்) ஒரு வரியிலும் (யிமுஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ லி ‘அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்’ என்று) பொறிக்கப்பட்டிருந்தது.


அத்தியாயம் : 57
3107. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَسَدِيُّ، حَدَّثَنَا عِيسَى بْنُ طَهْمَانَ، قَالَ أَخْرَجَ إِلَيْنَا أَنَسٌ نَعْلَيْنِ جَرْدَاوَيْنِ لَهُمَا قِبَالاَنِ، فَحَدَّثَنِي ثَابِتٌ الْبُنَانِيُّ بَعْدُ عَنْ أَنَسٍ أَنَّهُمَا نَعْلاَ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் கவச உடை, கைத்தடி, வாள், குவளை, மோதிரம் ஆகியவை தொடர்பாகக் கூறப் பட்டவை இவற்றில் நபியவர்களுக்குப்பின் அவர்களுடைய பிரதிநிதிகள் (கலீஃபாக்கள்) பயன்படுத்திய யிபங்கிடப்பட வேண்டியவை’ என்று அறிவிக்கப்படாதவையும், நபியவர் கள் இறந்தபின் அவர்களின் தோழர்களும் மற்றவர்களும் வளம் (பரக்கத்) உள்ளவை என்று கருதிய நபியவர்களின் முடி, காலணி, பாத்திரம் ஆகியவையும்
3107. ஈசா பின் தஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கள் எங்களிடம் இரண்டு தோல்வார்கள் கொண்ட, (அணிந்து) நைந்துபோன இரு காலணிகளைக் காட்டினார்கள். பின்னர், ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள், ‘‘அவ்விரண் டும் நபி (ஸல்) அவர்களின் காலணிகள்” என்று அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்கள்.


அத்தியாயம் : 57
3108. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ ـ رضى الله عنها ـ كِسَاءً مُلَبَّدًا وَقَالَتْ فِي هَذَا نُزِعَ رُوحُ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَزَادَ سُلَيْمَانُ عَنْ حُمَيْدٍ عَنْ أَبِي بُرْدَةَ قَالَ أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ إِزَارًا غَلِيظًا مِمَّا يُصْنَعُ بِالْيَمَنِ، وَكِسَاءً مِنْ هَذِهِ الَّتِي يَدْعُونَهَا الْمُلَبَّدَةَ.
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் கவச உடை, கைத்தடி, வாள், குவளை, மோதிரம் ஆகியவை தொடர்பாகக் கூறப் பட்டவை இவற்றில் நபியவர்களுக்குப்பின் அவர்களுடைய பிரதிநிதிகள் (கலீஃபாக்கள்) பயன்படுத்திய யிபங்கிடப்பட வேண்டியவை’ என்று அறிவிக்கப்படாதவையும், நபியவர் கள் இறந்தபின் அவர்களின் தோழர்களும் மற்றவர்களும் வளம் (பரக்கத்) உள்ளவை என்று கருதிய நபியவர்களின் முடி, காலணி, பாத்திரம் ஆகியவையும்
3108. அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் எங்களிடம் ஒட்டுப்போட்ட (கம்பளி) ஆடை ஒன்றை எடுத்துக்காட்டி, ‘‘இதை உடுத்திக்கொண்டி ருந்தபோதுதான் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சுலைமான் பின் அல்முஃகீரா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு காணப்படுகிறது:

ஆயிஷா (ரலி) அவர்கள் யமன் நாட்டில் தயாரிக்கப்படுகின்ற கெட்டியான கீழங்கி ஒன்றையும் நீங்கள் ‘அல்முலப்பதா’ (ஒட்டுப்போட்டது) என்றழைக்கின்ற வகையிலிருந்து ஒரு போர்வையையும் (நபி (ஸல்) அவர்களுடையவை என்று) எடுத்துக்காட்டினார்கள்.


அத்தியாயம் : 57
3109. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنْ عَاصِمٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ قَدَحَ، النَّبِيِّ صلى الله عليه وسلم انْكَسَرَ، فَاتَّخَذَ مَكَانَ الشَّعْبِ سِلْسِلَةً مِنْ فِضَّةٍ. قَالَ عَاصِمٌ رَأَيْتُ الْقَدَحَ وَشَرِبْتُ فِيهِ.
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் கவச உடை, கைத்தடி, வாள், குவளை, மோதிரம் ஆகியவை தொடர்பாகக் கூறப் பட்டவை இவற்றில் நபியவர்களுக்குப்பின் அவர்களுடைய பிரதிநிதிகள் (கலீஃபாக்கள்) பயன்படுத்திய யிபங்கிடப்பட வேண்டியவை’ என்று அறிவிக்கப்படாதவையும், நபியவர் கள் இறந்தபின் அவர்களின் தோழர்களும் மற்றவர்களும் வளம் (பரக்கத்) உள்ளவை என்று கருதிய நபியவர்களின் முடி, காலணி, பாத்திரம் ஆகியவையும்
3109. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் (மரத்தாலான) குவளை உடைந்துவிட்டது. (உடைந்து போய்) ஓட்டை (ஏற்பட்ட) பகுதியை நபி (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளிச் சங்கிலியால் அடைத்துவிட்டார்கள்.

அறிவிப்பாளர் ஆஸிம் (ரஹ்) அவர்கள், ‘‘நான் அந்தக் குவளையைக் கண்டேன். அதில் தண்ணீர் குடித்தேன்” என்று கூறுகிறார்கள்.


அத்தியாயம் : 57
3110. حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُحَمَّدٍ الْجَرْمِيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي أَنَّ الْوَلِيدَ بْنَ كَثِيرٍ، حَدَّثَهُ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ الدُّؤَلِيِّ، حَدَّثَهُ أَنَّ ابْنَ شِهَابٍ حَدَّثَهُ أَنَّ عَلِيَّ بْنَ حُسَيْنٍ حَدَّثَهُ أَنَّهُمْ، حِينَ قَدِمُوا الْمَدِينَةَ مِنْ عِنْدِ يَزِيدَ بْنِ مُعَاوِيَةَ مَقْتَلَ حُسَيْنِ بْنِ عَلِيٍّ رَحْمَةُ اللَّهِ عَلَيْهِ لَقِيَهُ الْمِسْوَرُ بْنُ مَخْرَمَةَ فَقَالَ لَهُ هَلْ لَكَ إِلَىَّ مِنْ حَاجَةٍ تَأْمُرُنِي بِهَا فَقُلْتُ لَهُ لاَ. فَقَالَ لَهُ فَهَلْ أَنْتَ مُعْطِيَّ سَيْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِنِّي أَخَافُ أَنْ يَغْلِبَكَ الْقَوْمُ عَلَيْهِ، وَايْمُ اللَّهِ، لَئِنْ أَعْطَيْتَنِيهِ لاَ يُخْلَصُ إِلَيْهِمْ أَبَدًا حَتَّى تُبْلَغَ نَفْسِي، إِنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ خَطَبَ ابْنَةَ أَبِي جَهْلٍ عَلَى فَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُ النَّاسَ فِي ذَلِكَ عَلَى مِنْبَرِهِ هَذَا وَأَنَا يَوْمَئِذٍ مُحْتَلِمٌ فَقَالَ "" إِنَّ فَاطِمَةَ مِنِّي، وَأَنَا أَتَخَوَّفُ أَنْ تُفْتَنَ فِي دِينِهَا "". ثُمَّ ذَكَرَ صِهْرًا لَهُ مِنْ بَنِي عَبْدِ شَمْسٍ، فَأَثْنَى عَلَيْهِ فِي مُصَاهَرَتِهِ إِيَّاهُ قَالَ "" حَدَّثَنِي فَصَدَقَنِي، وَوَعَدَنِي فَوَفَى لِي، وَإِنِّي لَسْتُ أُحَرِّمُ حَلاَلاً وَلاَ أُحِلُّ حَرَامًا، وَلَكِنْ وَاللَّهِ لاَ تَجْتَمِعُ بِنْتُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبِنْتُ عَدُوِّ اللَّهِ أَبَدًا "".
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் கவச உடை, கைத்தடி, வாள், குவளை, மோதிரம் ஆகியவை தொடர்பாகக் கூறப் பட்டவை இவற்றில் நபியவர்களுக்குப்பின் அவர்களுடைய பிரதிநிதிகள் (கலீஃபாக்கள்) பயன்படுத்திய யிபங்கிடப்பட வேண்டியவை’ என்று அறிவிக்கப்படாதவையும், நபியவர் கள் இறந்தபின் அவர்களின் தோழர்களும் மற்றவர்களும் வளம் (பரக்கத்) உள்ளவை என்று கருதிய நபியவர்களின் முடி, காலணி, பாத்திரம் ஆகியவையும்
3110. அலீ பின் ஹுசைன் (ஸைனுல் ஆபிதீன்) (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஹுசைன் பின் அலீ (ரலி) அவர்கள் லிஅவர்கள்மீது அல்லாஹ் கருணை புரிவானாக!லி கொல்லப்பட்ட காலகட்டத்தில் யஸீத் பின் முஆவியா வைச் சந்தித்துவிட்டு மதீனாவுக்கு வந்தேன்.22

என்னை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் சந்தித்தார்கள். அப்போது அவர்கள், ‘‘என்னிடம் தங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதா? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுகி றீர்களா? (நான் நிறைவேற்றித் தரத் தயாராக இருக்கின்றேன்)” என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு ‘‘அப்படி எதுவுமில்லை” என்று பதிலளித்தேன். மிஸ்வர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாளை எனக்குக் கொடுக்கிறீர்களா? ஏனெனில், அந்த (பனூ உமய்யா) குலத்தார் உங்களிடமிருந்து தமது அதிகாரத்தின் மூலமாக அதைப் பிடுங்கிக்கொள்வார்கள் என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணை யாக! நீங்கள் அதை எனக்குக் கொடுத்தால் என் உயிர் போகும்வரை அது அவர்களிடம் சென்றுசேராது” என்று கூறினார்.23

(பிறகு பின்வரும் சம்பவத்தை விவரிக்கலானார்:) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்கள் (உயிரோடு தம் மணபந்தத்தில்) இருக்கும் போதே அபூஜஹ்லுடைய மகளை (மணந்துகொள்ள)ப் பெண்பேசினார்கள். (அந்த நேரத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அது குறித்து மக்களிடம் தமது இந்தச் சொற்பொழிவு மேடையில் (நின்ற படி) உரையாற்றியதை நான் செவியுற் றேன்.

லிஅப்போது நான் பருவவயதை அடைந்துவிட்டிருந்தேன்லி நபி (ஸல்) அவர்கள், ‘‘ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தமது மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படு வார் என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம் மருமகனை லி(அபுல்ஆஸ் பின் ரபீஉவை)லி அவர் தம்மிடம் நல்ல மருமகனாக நடந்துகொண்டதைக் குறித்து (நினைவுகூர்ந்து) புகழ்ந்தார்கள்.

‘‘அவர் என்னிடம் பேசியபோது உண்மையே சொன்னார். எனக்கு வாக்கு றுதியளித்து அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார்.24 மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக்கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதென்று அறிவிக்கவும் மாட்டேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்றுசேர முடியாது” என்று கூறினார்கள்.25


அத்தியாயம் : 57