1080. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَاصِمٍ، وَحُصَيْنٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم تِسْعَةَ عَشَرَ يَقْصُرُ، فَنَحْنُ إِذَا سَافَرْنَا تِسْعَةَ عَشَرَ قَصَرْنَا، وَإِنْ زِدْنَا أَتْمَمْنَا.
பாடம் : 1 பயணத்தில் தொழுகைகளை சுருக்கித் தொழுவது பற்றியும், எத்தனை நாட்கள் வெளியூரில் தங்கினால் சுருக்கித் தொழலாம் என்பது பற்றியும் வந்துள்ளவை2
1080. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி ஆண்டில் மக்காவில்) தங்கியிருந்தபோது, பத்தொன்பது நாட்கள் சுருக்கித் தொழு தார்கள். ஆகவே, நாங்களும் பத்தொன்பது நாட்களுக்குப் பயணம் மேற்கொண்டால், சுருக்கி (கஸ்ர் செய்து) தொழுவோம். (அதைவிட) அதிகமாகத் தங்கினால், (சுருக்காமல் வழக்கப்படி) முழுமையாகத் தொழுவோம்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 18
1081. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ، فَكَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ حَتَّى رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ. قُلْتُ أَقَمْتُمْ بِمَكَّةَ شَيْئًا قَالَ أَقَمْنَا بِهَا عَشْرًا.
பாடம் : 1 பயணத்தில் தொழுகைகளை சுருக்கித் தொழுவது பற்றியும், எத்தனை நாட்கள் வெளியூரில் தங்கினால் சுருக்கித் தொழலாம் என்பது பற்றியும் வந்துள்ளவை2
1081. யஹ்யா பின் அபீஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கள், “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவிலிருந்து (ஹஜ்ஜுக்காக) மக்காவை நோக்கிச் சென்றோம். நாங்கள் மதீனா திரும்பும்வரை நபி (ஸல்) அவர்கள் (கடமையான நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டிரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள்” என்று கூறினார்கள்.

உடனே நான், “நீங்கள் மக்காவில் எத்தனை நாட்கள் தங்கினீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “பத்து நாட்கள் தங்கியிருந்தோம்” என்று பதிலளித்தார்கள்.3

அத்தியாயம் : 18
1082. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِنًى رَكْعَتَيْنِ، وَأَبِي بَكْرٍ وَعُمَرَ، وَمَعَ عُثْمَانَ صَدْرًا مِنْ إِمَارَتِهِ ثُمَّ أَتَمَّهَا.
பாடம் : 2 மினாவில் சுருக்கித் தொழுதல்4
1082. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோருட னும் உஸ்மான் (ரலி) அவர்களது ஆட்சி யின் ஆரம்பக் கட்டத்தில் உஸ்மான் (ரலி) அவர்களுடனும் ‘மினா’வில் (கடமையான நான்கு ரக்அத்களைச் சுருக்கி) இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். உஸ்மான் (ரலி) அவர்கள் பின்னர் (சுருக்கித் தொழா மல்) முழுமையாகவே தொழுதார்கள்.


அத்தியாயம் : 18
1083. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، أَنْبَأَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ حَارِثَةَ بْنَ وَهْبٍ، قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم آمَنَ مَا كَانَ بِمِنًى رَكْعَتَيْنِ.
பாடம் : 2 மினாவில் சுருக்கித் தொழுதல்4
1083. ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மினாவில் எங்களுக்கு (கடமையான நான்கு ரக்அத் களைச் சுருக்கி) இரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். அந்நாளில் அவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அச்சமின்றி பாதுகாப்போடுதான் இருந்தார்கள்.


அத்தியாயம் : 18
1084. حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنِ الأَعْمَشِ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ، يَقُولُ صَلَّى بِنَا عُثْمَانُ بْنُ عَفَّانَ ـ رضى الله عنه ـ بِمِنًى أَرْبَعَ رَكَعَاتٍ، فَقِيلَ ذَلِكَ لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ فَاسْتَرْجَعَ ثُمَّ قَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمِنًى رَكْعَتَيْنِ، وَصَلَّيْتُ مَعَ أَبِي بَكْرٍ ـ رضى الله عنه ـ بِمِنًى رَكْعَتَيْنِ، وَصَلَّيْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ بِمِنًى رَكْعَتَيْنِ، فَلَيْتَ حَظِّي مِنْ أَرْبَعِ رَكَعَاتٍ رَكْعَتَانِ مُتَقَبَّلَتَانِ.
பாடம் : 2 மினாவில் சுருக்கித் தொழுதல்4
1084. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள் மினாவில் எங்களுக்கு (இரண்டாகச் சுருக்காமல்) நான்கு ரக்அத்களாகவே தொழுவித்தார்கள். இதுபற்றி (அத்தொழுகையில் கலந்தகொண்ட) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வினப்பட்ட போது, ‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’ என்று கூறினார்கள்.

பின்னர் “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். அபூபக்ர் (ரலி) அவர்களுடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். மினாவில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுட னும் இரண்டு ரக்அத்களாகவே தொழு தேன். (இப்போது நான் தொழுத) நான்கு ரக்அத்களிலிருந்து ஒப்புக்கொள்ளப்பட்ட இரண்டு ரக்அத்கள் என் பங்காகக் கிடைத் தால் போதுமே!” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 18
1085. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي الْعَالِيَةِ الْبَرَّاءِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ لِصُبْحِ رَابِعَةٍ يُلَبُّونَ بِالْحَجِّ، فَأَمَرَهُمْ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً إِلاَّ مَنْ مَعَهُ الْهَدْىُ. تَابَعَهُ عَطَاءٌ عَنْ جَابِرٍ.
பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ் ஜின்போது எத்தனை நாட்கள் (மக்காவில்) தங்கினார்கள்?
1085. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காம் நாள் காலையில் ஹஜ்ஜுக்கு ‘இஹ்ராம்’ கட்டியவர்களாக (மக்காவுக்கு) வந்து சேர்ந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “தம்முடன் குர்பானி பிராணியைக் கொண்டுவந்திருப்பவர்களைத் தவிர மற்றவர்கள் தமது இஹ்ராமை ‘உம்ரா’விற் குரியதாக மாற்றிக்கொள்ள வேண்டும்” எனக் கட்டளையிட்டார்கள்.5

இந்த ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அத்தியாயம் : 18
1086. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ قُلْتُ لأَبِي أُسَامَةَ حَدَّثَكُمْ عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تُسَافِرِ الْمَرْأَةُ ثَلاَثَةَ أَيَّامٍ إِلاَّ مَعَ ذِي مَحْرَمٍ "".
பாடம் : 4 எவ்வளவு தொலைவு பயணம் செய்யும்போது சுருக்கித் தொழலாம்? நபி (ஸல்) அவர்கள் (குறைந்தபட்சம்) ஒரு பகல் ஒரு இரவு (தொலைவை) ‘பயணம்’ (சஃபர்) என்று குறிப்பிட்டுள் ளார்கள். இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் நான்கு ‘பரீத்’ அதாவது பதினாறு ‘ஃபர்சக்’ தொலைவுக்குப் பயணம் செய்யும்போது, சுருக்கி (கஸ்ர் செய்து) தொழுவார்கள்; நோன்பை விட்டுவிடு வார்கள்.6
1086. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாக) மூன்று நாட்களுக்கான பயணம் மேற்கொள்ள வேண்டாம்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 18
1087. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تُسَافِرِ الْمَرْأَةُ ثَلاَثًا إِلاَّ مَعَ ذِي مَحْرَمٍ "". تَابَعَهُ أَحْمَدُ عَنِ ابْنِ الْمُبَارَكِ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 4 எவ்வளவு தொலைவு பயணம் செய்யும்போது சுருக்கித் தொழலாம்? நபி (ஸல்) அவர்கள் (குறைந்தபட்சம்) ஒரு பகல் ஒரு இரவு (தொலைவை) ‘பயணம்’ (சஃபர்) என்று குறிப்பிட்டுள் ளார்கள். இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் நான்கு ‘பரீத்’ அதாவது பதினாறு ‘ஃபர்சக்’ தொலைவுக்குப் பயணம் செய்யும்போது, சுருக்கி (கஸ்ர் செய்து) தொழுவார்கள்; நோன்பை விட்டுவிடு வார்கள்.6
1087. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாக) மூன்று நாட்களுக் கான பயணம் மேற்கொள்ள வேண்டாம்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 18
1088. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، قَالَ حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُسَافِرَ مَسِيرَةَ يَوْمٍ وَلَيْلَةٍ لَيْسَ مَعَهَا حُرْمَةٌ "". تَابَعَهُ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ وَسُهَيْلٌ وَمَالِكٌ عَنِ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه.
பாடம் : 4 எவ்வளவு தொலைவு பயணம் செய்யும்போது சுருக்கித் தொழலாம்? நபி (ஸல்) அவர்கள் (குறைந்தபட்சம்) ஒரு பகல் ஒரு இரவு (தொலைவை) ‘பயணம்’ (சஃபர்) என்று குறிப்பிட்டுள் ளார்கள். இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் நான்கு ‘பரீத்’ அதாவது பதினாறு ‘ஃபர்சக்’ தொலைவுக்குப் பயணம் செய்யும்போது, சுருக்கி (கஸ்ர் செய்து) தொழுவார்கள்; நோன்பை விட்டுவிடு வார்கள்.6
1088. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாக) மேற்கொள்ள வேண்டாம்.7

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 18
1089. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، وَإِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّيْتُ الظُّهْرَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَبِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ.
பாடம் : 5 (பயணத் திட்டத்துடன்) ஒருவர் தமது இருப்பிடத்தைவிட்டுப் புறப்பட்டுவிட்டாலே கஸ்ர் செய்து தொழலாம்.8 அலீ (ரலி) அவர்கள் (கூஃபா நகரி லிருந்து பயணம்) புறப்பட்டுச் செல்லும் போது, (உள்ளூரிலுள்ள) வீடுகள் கண்களுக்குத் தெரியும்போதே சுருக்கி (கஸ்ர் செய்து) தொழுதார்கள். திரும்பி வந்தபோது, “இதோ கூஃபா (தெரிகிறது. இனி தொழுகையை சுருக்குவீர்களா? அலலது முழுமையாக்குவீர்களா?)” என்று அவர்களிடம் வினவப்பட்டது. அப்போது அவர்கள் “இல்லை! நாம் ஊருக்குள் நுழையும்வரை (சுருக்கியே தொழுவோம்)” என்று பதிலளித்தார்கள்.
1089. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் (மக்கா நோக்கிப் புறப்பட்டபோது) லுஹ்ர் தொழுகையை மதீனாவில் நான்கு ரக்அத் களாகத் தொழுதேன். (மதீனாவுக்கு அருகிலுள்ள) ‘துல்ஹுலைஃபா’வில் (அஸ்ர் தொழுகையை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கி)த் தொழுதேன்.9

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 18
1090. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ الصَّلاَةُ أَوَّلُ مَا فُرِضَتْ رَكْعَتَيْنِ فَأُقِرَّتْ صَلاَةُ السَّفَرِ، وَأُتِمَّتْ صَلاَةُ الْحَضَرِ. قَالَ الزُّهْرِيُّ فَقُلْتُ لِعُرْوَةَ مَا بَالُ عَائِشَةَ تُتِمُّ قَالَ تَأَوَّلَتْ مَا تَأَوَّلَ عُثْمَانُ.
பாடம் : 5 (பயணத் திட்டத்துடன்) ஒருவர் தமது இருப்பிடத்தைவிட்டுப் புறப்பட்டுவிட்டாலே கஸ்ர் செய்து தொழலாம்.8 அலீ (ரலி) அவர்கள் (கூஃபா நகரி லிருந்து பயணம்) புறப்பட்டுச் செல்லும் போது, (உள்ளூரிலுள்ள) வீடுகள் கண்களுக்குத் தெரியும்போதே சுருக்கி (கஸ்ர் செய்து) தொழுதார்கள். திரும்பி வந்தபோது, “இதோ கூஃபா (தெரிகிறது. இனி தொழுகையை சுருக்குவீர்களா? அலலது முழுமையாக்குவீர்களா?)” என்று அவர்களிடம் வினவப்பட்டது. அப்போது அவர்கள் “இல்லை! நாம் ஊருக்குள் நுழையும்வரை (சுருக்கியே தொழுவோம்)” என்று பதிலளித்தார்கள்.
1090. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆரம்பத்தில் தொழுகை இரண்டு ரக்அத்களாகத்தான் கடமையாக்கப்பட்டது. பயணத் தொழுகை அவ்வாறே (இரண்டிரண்டு ரக்அத்களாகவே) நீடித்தது; சொந்த ஊரில் (தொழும் லுஹ்ர், அஸ்ர், இஷா ஆகிய தொழுகைகள் நான்கு ரக்அத்களாக) முழுமைப்படுத்தப்பட்டன.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) உர்வா (ரஹ்) அவர்களிடம் ஆயிஷா (ரலி) அவர்களின் நிலைப்பாடு என்ன (அவர்கள் ஏன் பயணத்தில் சுருக் கித் தொழாமல்) முழுமையாகத் தொழுதார் கள்?” என்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், “உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கம் கூறியதைப் போன்று ஆயிஷா (ரலி) அவர்களும் விளக்கம் கூறிவந்தார் கள் என்று பதிலளித்தார்கள்.10

அத்தியாயம் : 18
1091. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَعْجَلَهُ السَّيْرُ فِي السَّفَرِ يُؤَخِّرُ الْمَغْرِبَ حَتَّى يَجْمَعَ بَيْنَهَا وَبَيْنَ الْعِشَاءِ. قَالَ سَالِمٌ وَكَانَ عَبْدُ اللَّهِ يَفْعَلُهُ إِذَا أَعْجَلَهُ السَّيْرُ.
பாடம் : 6 மஃக்ரிப் தொழுகையைப் பய ணத்திலும் மூன்று ரக்அத் களாகவே தொழ வேண்டும்.
1091. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் புறப்படுவதாக இருந்தால், மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து (மஃக்ரிபின் கடைசி நேரத்தில்) தொழுவார்கள்.

சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் அவசரமாகப் பயணம் புறப்படுவதாக இருந்தால் இவ்வாறே செய்வார்கள்.


அத்தியாயம் : 18
1092. وَزَادَ اللَّيْثُ قَالَ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ سَالِمٌ كَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَجْمَعُ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِالْمُزْدَلِفَةِ. قَالَ سَالِمٌ وَأَخَّرَ ابْنُ عُمَرَ الْمَغْرِبَ، وَكَانَ اسْتُصْرِخَ عَلَى امْرَأَتِهِ صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ فَقُلْتُ لَهُ الصَّلاَةُ. فَقَالَ سِرْ. فَقُلْتُ الصَّلاَةُ. فَقَالَ سِرْ. حَتَّى سَارَ مِيلَيْنِ أَوْ ثَلاَثَةً ثُمَّ نَزَلَ فَصَلَّى ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي إِذَا أَعْجَلَهُ السَّيْرُ. وَقَالَ عَبْدُ اللَّهِ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم إِذَا أَعْجَلَهُ السَّيْرُ يُؤَخِّرُ الْمَغْرِبَ، فَيُصَلِّيهَا ثَلاَثًا ثُمَّ يُسَلِّمُ، ثُمَّ قَلَّمَا يَلْبَثُ حَتَّى يُقِيمَ الْعِشَاءَ فَيُصَلِّيَهَا رَكْعَتَيْنِ ثُمَّ يُسَلِّمُ، وَلاَ يُسَبِّحُ بَعْدَ الْعِشَاءِ حَتَّى يَقُومَ مِنْ جَوْفِ اللَّيْلِ.
பாடம் : 6 மஃக்ரிப் தொழுகையைப் பய ணத்திலும் மூன்று ரக்அத் களாகவே தொழ வேண்டும்.
1092. சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ‘முஸ்தலிஃபா’வில் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து (இஷாவில்) தொழுவார்கள்.

(ஒரு முறை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் துணைவியார் ஸஃபிய்யா பின்த் அபீஉபைதின் (உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக) செய்தி வந்ததையொட்டி (அவசரமாகப் பயணம் புறப்பட்டார்கள். அதனால்) மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி னார்கள். அப்போது அவர்களிடம் நான் ‘தொழுகை’ என்று நினைவூட்டினேன். அப்போது ‘பயணத்தைத் தொடரு!’ என்று சொன்னார்கள். பிறகு (மீண்டும்) ‘தொழுகை’ என அவர்களிடம் சொன்னேன். அப்போதும் “பயணத்தைத் தொடரு” என்றார்கள்.

இரண்டு அல்லது மூன்று மைல்கள் சென்றதும் வாகனத்தில் இருந்து இறங்கி (மஃக்ரிப் தொழுகையைச் செம்மேகம் மறைந்தபின்) தொழுதார்கள். பிறகு “நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் செய்ய நேரிட்டால் இவ்வாறே செய்வார்கள்” என்று சொன்னார்கள்.

“நபி (ஸல்) அவர்கள் விரைவாகப் பயணம் புறப்பட நேரிட்டால் மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்துவார்கள். (மஃக்ரிபைச் சுருக்கித் தொழாமல்) மூன்று ரக்அத்களாகவே தொழுது ‘சலாம்’ கொடுப்பார்கள். பின்னர் சிறிதே இடைவெளி விட்டு இஷா தொழுகைக்கு இகாமத் சொல்லி, இரண்டு ரக்அத்களாக அதை(ச் சுருக்கி)த் தொழுவார்கள். பின்னர் ‘சலாம்’ கொடுப்பார்கள். இஷா தொழுகைக்குப் பிறகிலிருந்து நடு இரவில் அவர்கள் (தஹஜ்ஜுத் தொழுகைக்காக) எழும்வரை கூடுதலான தொழுகைகள் எதையும் தொழமாட்டார்கள்” என்றும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 18
1093. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، قَالَ حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ حَيْثُ تَوَجَّهَتْ بِهِ.
பாடம் : 7 வாகனம் எத்திசையில் சென்றா லும் அதன் மீதமர்ந்து கூடுதல் தொழுகைகளைத் தொழுதல்11
1093. ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டக ஊர்தியில் அமர்ந்து, அது செல்லும் திசை நோக்கி (கூடுதலான தொழுகைகளை) தொழுவதை நான் பார்த்திருக்கிறேன்.


அத்தியாயம் : 18
1094. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي التَّطَوُّعَ وَهْوَ رَاكِبٌ فِي غَيْرِ الْقِبْلَةِ.
பாடம் : 7 வாகனம் எத்திசையில் சென்றா லும் அதன் மீதமர்ந்து கூடுதல் தொழுகைகளைத் தொழுதல்11
1094. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வாகனத்தில் செல்லும்போது, ‘கிப்லா’ அல்லாத திசை நோக்கி கூடுதலான தொழுகைகளைத் தொழுதிருக்கிறார்கள்.


அத்தியாயம் : 18
1095. حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، قَالَ وَكَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ وَيُوتِرُ عَلَيْهَا، وَيُخْبِرُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَفْعَلُهُ.
பாடம் : 7 வாகனம் எத்திசையில் சென்றா லும் அதன் மீதமர்ந்து கூடுதல் தொழுகைகளைத் தொழுதல்11
1095. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது ஊர்தி ஒட்டகத்தில் அமர்ந்து கூடுதலான தொழுகைகளையும் ‘வித்ர்’ தொழுகையையும் தொழுவார்கள். “நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்வார்கள்” என்றும் குறிப்பிடுவார்கள்.

அத்தியாயம் : 18
1096. حَدَّثَنَا مُوسَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ كَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يُصَلِّي فِي السَّفَرِ عَلَى رَاحِلَتِهِ، أَيْنَمَا تَوَجَّهَتْ يُومِئُ. وَذَكَرَ عَبْدُ اللَّهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَفْعَلُهُ.
பாடம் : 8 வாகனத்தில் அமர்ந்து சைகை செய்து தொழுதல்
1096. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் பயணத்தின்போது ஊர்தி ஒட்டகத்தில் அமர்ந்து, அது செல்லும் திசை நோக்கி (கூடுதலான தொழுகை களை) சைகை செய்து தொழுவார்கள். மேலும், “நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே செய்வார்கள்” என்றும் குறிப்பிடுவார்கள்.

அத்தியாயம் : 18
1097. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ، أَنَّ عَامِرَ بْنَ رَبِيعَةَ، أَخْبَرَهُ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ عَلَى الرَّاحِلَةِ يُسَبِّحُ، يُومِئُ بِرَأْسِهِ قِبَلَ أَىِّ وَجْهٍ تَوَجَّهَ، وَلَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصْنَعُ ذَلِكَ فِي الصَّلاَةِ الْمَكْتُوبَةِ.
பாடம் : 9 கடமையான தொழுகைகளைத் தொழும்போது வாகனத்தில் இருந்து இறங்க வேண்டும்.
1097. ஆமிர் பின் ரபிஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஊர்தி ஒட்டகத்தில் அமர்ந்து, தாம் செல்ல வேண்டிய திசை நோக்கித் தமது தலையால் சைகை செய்து தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். கடமையான (ஃபர்ள்) தொழுகையில் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.


அத்தியாயம் : 18
1098. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ قَالَ سَالِمٌ كَانَ عَبْدُ اللَّهِ يُصَلِّي عَلَى دَابَّتِهِ مِنَ اللَّيْلِ وَهْوَ مُسَافِرٌ، مَا يُبَالِي حَيْثُ مَا كَانَ وَجْهُهُ. قَالَ ابْنُ عُمَرَ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُسَبِّحُ عَلَى الرَّاحِلَةِ قِبَلَ أَىِّ وَجْهٍ تَوَجَّهَ، وَيُوتِرُ عَلَيْهَا، غَيْرَ أَنَّهُ لاَ يُصَلِّي عَلَيْهَا الْمَكْتُوبَةَ.
பாடம் : 9 கடமையான தொழுகைகளைத் தொழும்போது வாகனத்தில் இருந்து இறங்க வேண்டும்.
1098. சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இரவில் பயணம் செய்யும் போது தமது ஊர்தி ஒட்டகத்தின் மீதமர்ந்து தொழுவார்கள். தமது முகம் எத்திசையில் இருக்கிறதென்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள்.

மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எத்திசை நோக்கிச் சென்றாலும் ஊர்தி ஒட்டகத்தின்மீது அமர்ந்து கூடுதலான தொழுகைகளையும் ‘வித்ர்’ தொழுகையையும் தொழுவார்கள். எனினும், கடமையான தொழுகைகளை வாகனத்தின் மீதமர்ந்து தொழமாட்டார்கள் (வாகனத்திலிருந்து இறங்கித்தான் தொழு வார்கள்)” என்றும் குறிப்பிட்டார்கள்.


அத்தியாயம் : 18
1099. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ، قَالَ حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ نَحْوَ الْمَشْرِقِ فَإِذَا أَرَادَ أَنْ يُصَلِّيَ الْمَكْتُوبَةَ نَزَلَ فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ.
பாடம் : 9 கடமையான தொழுகைகளைத் தொழும்போது வாகனத்தில் இருந்து இறங்க வேண்டும்.
1099. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவாகள் தமது ஊர்தி ஒட்டகத்தில் அமர்ந்து கிழக்கு நோக்கித் தொழுவார்கள். கடமையான தொழுகை யைத் தொழ விரும்பும்போது (ஊர்தி யிலிருந்து) இறங்கி ‘கிப்லா’வை முன் னோக்குவார்கள்.

அத்தியாயம் : 18